Archive for March, 2015

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-4-கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை-

March 29, 2015

ஸ்ரீ சார நாத பெருமாள் -திருச்சேறை திருப்பதி மங்களா சாசன திருப்பதிகம் –
இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை —
பாகவத சேஷத்வம் -பகவத் சேஷத்வத்தின் காஷ்டை -எம்பெருமான் இடம் அளவிறந்த பக்திப் பெரும் காதலை வெளியிட்டு அருளுகிறார்   –
கீழே -நண்ணாத வாளவுணர் -திருப்பதிகம் போலே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு   அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

—————————————–

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

பூதனையை முடித்த அமரர்கள் அதிபதியே -என்று பரத்வ  சௌலப்யங்களை போற்றி உருகும்
பாகவதர்கள் என் தலைமேலே  வீற்று இருக்க உரியார்-என்கிறார் –

வெந்தழல் போல் கூந்தலாளை-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த  கரு நிறச் செம்மயிர் பேயை -பெரியாழ்வார்
அரக்கி யாதலால் செம்பட்ட மயிரை யுடையவள்
மா மதலாய் -பிள்ளைத் தனத்தில் குறை அற்றவன்
பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே மா மதலைப்  பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய
பசைந்த வளையத்திலே கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –

——————————————-

அம்புருவ வரி நெடுங்கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்யப் பெற்ற திரு மார்பன் –
ஸ்ரீ கிருஷ்ணன் போல விரோதி நிரசனம் செய்யும் திருச் சேறை எம்பெருமான் திருவடிகளை
சேவிப்பார்கள் என்நெஞ்சை விட்டு பிரியார்
நிதித்யாசிதவ்ய -என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன்   –
சிந்தைக்கு இனியானுக்கும் அங்கு இடம் இல்லையாம் -வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகளின் போக்யம்
அம்புருவ வரி  நெடுங்கண் -அம்பு உருவம் -கண்ணுக்கு விசேஷணம் –
அம் புருவம் -அம்பன்ன கண்ணாள் அசோதை –

———————————————

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-

பாற் கடல் பாம்பணி மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம்
முன் விலகும் உருவினாள்-முன்னே சஞ்சரிக்கிற -என்றும் விட்டு
விலக வேண்டும்படி பயங்கர ரூபத்தை உடையவள் என்றுமாம் –

———————————————

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-

திருச்சேறை எம்பெருமானுடைய திரு நாமங்களை வாயாரப் பாடும் பெருமை யுடைய பாகவதர்களைப் பிரிந்து
ஒரு நொடிப் பொழுதும் தரித்து இருக்க கில்லேன்
ஸ்ரீ கீதையில் -ஸ மகாத்மா -மகாத்மானா -என்று சொல்பவர்கள்-

——————————————–

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

பாகவத பக்தி தமக்கு இருப்பதால் பகவத் பக்தியிலும் குறை அற்று இருக்கிறேன் என்கிறார்
முழு முதல் கடவுளான எம்பெருமானுக்கே அனன்யார்ஹ சேஷ பூதன் ஆவேன் என்கிறார்
பாகவதர்களை நினைத்த மாத்ரத்திலே உள்ளத்திலே தேனூருகிறதே
வந்திக்கும் மற்றவர் -பௌத்தர்கள் ஸ்தோத்ரம் -வந்தே வந்தே -மிகையாக இருப்பதால் வந்திக்குமவர் என்று பௌத்தர்கள் –
மாசுடம்பின் வல்லமணர் -உடம்பில் அழுக்கை கழற்றல் ஆகாது என்று இருக்கும் ஜைனர்கள் –

——————————————-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நீர்மையிலே தோற்று உன் திருவடிக்கே அடிமை யானேன்
உன் திருவடிகளே எனக்குத் தஞ்சம் -வேறு ஒரு புகலை யுடையேன் அல்லேன் -ஆணை இட்டுச் சொல்லுவேன்
இப்படி திண்ணமாக சொல்லுவது எதனால் என்றால்
அடியார்களை சேவித்த மாத்ரத்திலே கண்ணும் நெஞ்சும் களிக்கின்றனவே –
இவ்வளவு பரிபாகம் பெற்றேன்- ஆன பின்பு அந்த அத்யவசாயம் திடமாக இருக்கத் தட்டுண்டோ –

—————————————-

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7-

பகவத் அடியார்கள் என்பதால் பாகவதர்கள் உத்தேச்யம்
பாகவதர்கள் பற்றும் தெய்வம் என்பதால் எம்பெருமானும் உத்தேச்யம்
திரி தந்தாகிலும் தேவ பிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பான் நான்
பெரிய வண்  குருகூர் நகர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
சிந்தித்தேற்கு -சிந்தித்த எனக்கு என்ற பொருள் இல்லை -சிந்தித்த என்ற விசேஷணம் மாத்ரம்
திருமாலை -மழைக்கு அன்று  வரை முனேந்தும் பாசுரத்தில் -உழைக்கின்றேற்கு என்னை-என்ற  பிரயோகம் போலே-

——————————————

உண்ணாது வெங்கூற்றம்  ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே –7-4-8-

எம்பெருமானைக் கண்ணாரக் கண்டும் கையாரத் தொழும் பரவசப் படும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
நெஞ்சால் நினைத்த மாத்ரத்திலே
மிருத்யு பயத்துக்கும் பாப பயத்துக்கு பிரசக்தி இல்லை யாகும்
உண்ணாது  வெங்கூற்றம்–சாவு இல்லை என்ற பொருளில் இல்லை -யம தண்டனைக்கு ஆளாக மாட்டார்கள்
அன்றிக்கே
பாகவதர்கள் மரணத்தை பற்றிய வருத்தத்தினால் கரைய மாட்டார்கள் என்றபடி
மரண துக்கம் பெரிய துக்கம் -சரீரம் புத்து இந்திரியங்கள் சுவாதீனத்தில்   இல்லாமல் போகலாம்
பகவத் பாகவதர்கள் ஆத்மாபற்றிய சிந்தனையே கொண்டு ஆத்மானந்ததிலே ஆழ்ந்து
மரணத்தை உத்சவமாகவே கொண்டு இருப்பார்கள்
ஈஸ்வரன் நியமனத்தால் பிராப்த போகம் முடிந்து பிதாவான ஈஸ்வரன் சந்நிதானத்துக்கு
மீண்டு போவதால் மகத்தான ஆனந்தத்தை அடைகிறான் –

அந்த பேர் ஆனந்தத்தை எதற்கும் ஒப்பாக சொல்ல முடியாதே-

——————————————

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும்  தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

ஆத்மா அபஹாரனான எனக்கும் இப்படி பாகவதர்களைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் எப்படி உண்டானதோ
வஞ்சக் கள்வன் மா மாயன் எம்பெருமானையும் வஞ்சித்தேன்
எனக்கு பாகவதர்களைக் கண்டால் நீர்ப்பண்டமாக உருகும் நெஞ்சம் ஏற்பட்டதே-

யோன்யதா சந்த மாத்மானம் அன்யதா ப்ரதிபத்யதே கிம் தேன ந க்ருதம் பாபம் சோரேணாத்மாபஹாரிணா-
போதொருகால் -தப்பான பாடம் -போதருகால் -நுகளும் காலம் என்ற படி -சரியான பாடம் –

———————————————————-

பூ மாண் சேர் கருங்கழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

மேல் ஒன்பது பாசுரங்களிலும் பாகவத நிஷ்டையை பேசினாலும் -நிகம பாசுரத்தில் –
தண் சேறை அம்மான் தன்னை -என்றது பாகவதர்களுக்கு உத்தேச்யன் என்பதால் –
இத் திருமொழியை திருச் சேறை எம்பெருமானுடைய திருவடிகளில் உங்கள் கையால் சூட்டுமின் –
ஸ்வயம் போக்யம் இதுவே பலன் என்கிறார்
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி போன்றவை தேட வேண்டா
இத்தையே பூ இட்டதுக்கும் மேலாக எம்பெருமான் திரு உள்ளம் உகக்கும் —

வா மான் தேர் பரகாலன்-வாம் -வாவும் என்றபடி -தாவுதல் -மான் -குதிரைக்கும் பெயர் –
ஆடல் மா -குதிரை யுடைய ஆழ்வார் என்றபடி —

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-3-சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்-

March 29, 2015

திரு நறையூர் திருப்பதி  பத்தாவது மங்களா சாசன திருப்பதிகம்-

சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனம் உட் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை  மரம் ஏழ்   எய்த மைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே –7-3-1-

சினவில் செங்கண் அரக்கர்-சினம் இல் -கோபத்துக்கு இருப்பிடமாய் -செங்கண் அரக்கர் என்றபடி
ராவணாதி ராஷசர்களை அழியச் செய்து
ஆஸ்ரிதர்க்கு ஒன்றும் செய்ய வில்லையே இன்னும் என்ன செய்வோம் என்று மனனம் செய்யும் மா முனி
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திருவந்தாதி
அரியன செய்தும் ஆஸ்ரிதர்கள் நம்பிக்கையை வளரச் செய்பவன் -மரம் ஏழும் எய்த மைந்தன் -மிடுக்கன்
நனவு -கனவுக்கு எதிர்தட்டு -தெளிவைச் சொன்னபடி
தெளிந்த சனகாதிகளுக்கும் ஸ்வ யத்னத்தால் காண முடியாதவன்
கனவில் கண்டேன்-ஸ்வப்னத்தை சொன்னது அன்று -தெளிவற்ற மன நிலைமை
தெளிந்தவர்களாலும் காண முடியாத அவனை தெளிவற்ற இவர் அவன் காட்டக் கண்டார்
முந்துற நெஞ்சு கண்டது –பின்னைக் கண்களும் கண்டன -அதனால் களிப்படைந்தேன் –

———————————————————

தாயை நினைந்த கன்றே ஒக்க வென்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்
காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழை காதனை  மைந்தனை மதிள் கோவல் இடைகழி
யாயினை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே —7-3-2-

உலகுக்கு எல்லாம் தாயான உன்னையே நினைத்து இருக்கும் படி அருள் செய்தாய்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக
நீ நினைக்க வேண்டும் -திருச் சந்த விருத்தம்  -101-
என்னையும் தன்னையே நினைக்கச் செய்து அருளினார் என்கிறார்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -நம்மை நினைத்து இருந்து அருள் செய்வன் –
தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
எங்கே கண்டோம் -அபேஷா நிரபேஷமாக ரஷித்து அருளிய -அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை –
அருளாமல் உபேஷித்தாலும் விட ஒண்ணாத அழகன் – மகரக் குழைக் காதன் –
மின்னு மணி மகரக் குண்டலங்கள் வில் வீச நிற்கும் அழகுக்குத் தோற்றுப் பேசுகிறபடி
பிரளயத்தில் தள்ளிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
மைந்தன் -எப்போதும் யௌவனமாகவே இருப்பவன் –
மதிள் கோவல் இடை கழி யாயனை –
பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின் மூவரு நெருக்கி மொழி
விளக்கேற்றி முகுந்தனைத் தொழுத நன்னாடு
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து பாயும் பனி மறுத்த பண்பாளா
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூம் கோவல் இடை கழியே பற்றி இனி -முதல் திரு -86-
உகந்தார் நடுவே புகுந்து நெருக்குமவன்
தேஹளீ -வடமொழி – ரேழி -தேஹளீசன்

—————————————————-

வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தையாய் வந்து தென் புலர்க்கு என்னைச் சேர் கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்துலாம் பொழில் சூழக் குடந்தைத்  தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

தானாகவே தன் பேறாகவே வந்து சேரக் கண்டவர் ஆதலால் -வந்த நாள் வந்து  -என்கிறார்
பிரதம ஸ்வீகாரத்துக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சை உண்டாய்
அதுக்கு உபகரித்தான் ஆகில் இறே இந்நாள் என்னல் ஆவது –
அங்கன் ஓன்று இல்லாமையாலே
பிரதம ஸ்வீகாரத்தை -வந்த நாள் -என்னும்
இத்தனை யாய்த்து சொல்லல் ஆவது –
நிர்ஹேதுகமாக திருவருள் அடியாக கிடைத்தது ஆகையால் விச்சேதம் இல்லை
எத்தால் மறக்கேன் -உபகாரம் ஸ்வல்பம் இல்லை -பெற்ற உபகாரத்துக்கு கைம்மாறு செய்து இருந்தாலும் மறக்கலாம்
ஒன்றும் இல்லையாய் இருக்க எங்கனே மறப்பது

———————————————————

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவர்க்காய்ச்   சென்று
இரங்கி யூர்ந்தவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை வம்பார் புனல் காவிரி
அரங்கமாளி என்னாளி விண்ணாளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே –7-3-4-

சரங்கள் ஆண்ட -வில்லாண்ட போலே -சத்ருக்களை காட்டு காட்டு என்று விம்மிக் கிளம்பும் அம்புகள்
சரங்களாண்ட தண் தாமரைக் கண்ணன் -சேர்க்கையாலே கடாஷத்துக்கு இலக்கு ஆகாமல் அம்புக்கு இலக்காகி மாண்டனர்
-ந நமேயம்  -என்று மார்பு நெரித்து மாண்டு ஒழிந்தனர்
என் மனம் அங்கனம் இன்றி தாழ்ந்து போய் உய்ந்து போம்-

————————————————————–

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல்  என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு  உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே  —7-3-5-

உம்பர் மேல் உலகங்களுக்கும் உலகத்தாருக்கும்
உரலிடை கட்டுண்டவன் கண்ணன் இல்லை ஒரு தீம் கரும்பு என்கிறார்
சௌசீல்ய சௌலப்ய திருக் குணங்களில் ஈடுபட்டமை –

—————————————————————–

எட்டனைப் பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கின் தாழ் பொழில் திருமால் இரும் சோலை அம்
கட்டியைக் கரும்பு ஈன்ற இன்சாற்றைக் காதலால் மறை நான்கு முன்னோதிய
பட்டனைப் பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யனே -7-3-6-

எள் தனை எட்டனை
தட்டலர்த்த பொன்னே யலர் கோங்கு
கோங்கு நின்று பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிரும் சோலை யதே -பெரியாழ்வார்
கோங்கு அலரும் பொழில்  மாலிரும் சோலை -நாச்சியார்
கோங்கு மரங்கள் விசேஷமாய் உள்ளதை அருளிச் செய்து
கோங்கு பொன் போன்ற நிறம் உடையது -மலர்ந்தால் பொன் தட்டு போலே இருக்கும்-

மறை நான்கும் முன் ஓதிய பட்டனை -பிரமனுக்கு ஓதுவித்த என்றபடி
பரவைத் துயில் ஏற்றை  -பரந்து இருப்பது பரவை- கடல் திருப் பாற் கடல் –

———————————————

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே -7-3-7-

பாலை ஆகி -பாலை ஆகிய இனிய பான் போலே இனியனாய்-
யாழ் பயில் நாத ரூபியை பாலை யாக்கி என்று விசேஷிக்கையாலே -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி
என் கண்ணையும் நெஞ்சையும் வாயையும் இடம் கொண்டான் ஆதலால் என் வாயானது -கொண்ட பின் –
எம் அண்ணல் வண்ணமே அன்றி மற்று ஒன்றை சுவையாது –
மனம் தன்னுள் -மனம் -வைதிகர் திரு உள்ளத்தை – -தனக்கு உரிய -உள்-உள்ளாக கொண்டவன் –

வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் -லாவண்யம் நிரம்பப் பெற்றவன் -மீன் போன்று திருக் கண்கள் திகழப் பெற்றவன் -என்றவாறு

———————————–

இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள் பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து  இன்பமே தருகின்றதோர் தோற்றத் தொன் நெறியை வையம் தொழப் படும்
முனியை வானவரால் வணங்கப் படும் முத்தினைப் பத்தர் தாம் நுகர்கின்றதோர்
கனியைக் காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டு கொண்டேனே –7-3-8-

பெற வேண்டிய பேறு இம்மையே பெற்றேன் -இனி எப்பாவம் வந்து எய்தும் சொல்லீர் –
கம்பீரமாக தொடங்கும் மிடுக்கு
அடும் துனியைத் தீர்த்து -துனி -துன்பம் -இங்கே மூல காரணம் -கருமம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி –
தன்னை அடைய தானே நெறி-

——————————-

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கென்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனைத்
தழலே புரை விஞ்ச வாள் அரக்கன்  நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை  யன்றி என் மனம் போற்றி என்னாதே –7-3-9-

செய்து அருளிய உபகாரத்துக்கு கைம்மாறு செய்யலாவது ஒன்றும் இல்லையே –
என் செய்கேன் அடியேன் உரையீர்
கைம்முதல் இல்லாமல் ஸ்வரூபமே பிடித்து பரதந்த்ரனான நான் எத்தைச் செய்வேன் என்கிறார்
சம்சாரியான நான் நித்ய சூரிகள் பெரும் பேற்றைப் பெற்றேன்-

———————————————-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10-

நாச்சியார் கோயில் என்பதால் ஆழ்வார் தம்முடைய திருப் புகழை முற்கொண்டு பேசி –
தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்-என்று தொடங்கி
பலன் சொல்லி நிகமிக்கிறார்
பக்தர்களுக்கு அமிருதமாக அருளிச் செய்யப் பட்ட இத் திரு மொழி கற்பவர்கள் பக்கலில் பாவம் ஒன்றும் நில்லாது –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-2-புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட-

March 28, 2015

திரு நறையூர் திருப்பதி ஒன்பதாம் மங்களா சாசன திருப்பதிகம் —

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும்  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-1-

உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா -பசு பஷி யோனிகளிலும் பிறக்க வேணுமோ
என்று  சிந்தித்து நெஞ்சு உருகி கண்கள் பனி மல்கவும் பெற்றேன் –

மனம் உவந்து பிறந்து அருளும் திருக் கல்யாண குணங்களை பிரகாசித்து கொண்டு இங்கே சேவை சாதித்து அருளும்
இருப்பிலே என்னை அடிமை கொண்டாயே -என் நெஞ்சை எனக்குத் தெரியாமல் அபஹரித்து கொண்டாயே
வாய் விட்டுச் சொல்லி ஆனந்த பாஷ்பம் அருவி சோரத் தொடங்கிற்று-

——————————————————

ஓடா வாளரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர் தம்மைக் கவிதை பனுவல் கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-5-

பனுவல் கவிதை கொண்டு -சாஸ்திர உக்தமான இலக்கணம் வழுவாத கவிகள்
தொண்டர் தம்மை -நீசர்களை -கூழாட்பட்டு இருப்பவர்கள்-

ஓடா வாளரியின் உருவாய் –
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து -என்றார் கீழே –
தாழ்ந்த ஜன்மத்தில் வேணுமாகில் பிறக்கிறாய் –
நாட்டார் பிறக்கும் பிறவிகளில் பிறக்கல் ஆகாதோ –
நாட்டில் நடையாடாத படியான நரசிம்ஹ ரூபத்தை யுடையையாய் –

அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா-கல் நெஞ்சனான என்னுடைய நெஞ்சையும்
கொள்ளை கொண்டதே உனக்கு பெரிய மிடுக்கு காண் –

————————————————————

எம்மானும் எம் அம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே –7-2-3-

சகல வித பந்துவும் நீயே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி  யாவாரே –
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை —-
எத்தால் யான் மறக்கேன் இது சொல்லேன் ஏழை நெஞ்சே -என்பர் மேல் எட்டாம் பத்தில்-

நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ-இப்படி விலஷணமான அளவிறந்த ஒள்ளிய சுடரே –
பரமபதத்தில் இருக்கும் இருப்பை இங்கே காட்டி அருளுபவனே –

————————————————–

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் யுலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான்
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறைவாரும் பொழில் சூழ்  நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-

ஆலிலை போலே என் நெஞ்சையும் உரிய இடமாகக் கொண்டாய்-
ஆலிலையை இகழ்ந்திட்டு என் நெஞ்சில் இடமாக கொண்டாய் என்றுமாம்
இதை அறிந்து -இந்த பெரிய அருளை சிந்தியாமல் இல்லை
பரம போக்யமான திரு நறையூர் இருப்பிடமாக இருக்க இப்படி என் நெஞ்சில் நித்ய வாஸம் செய்து அருளி –
சால க்ருதஜ்ஞனனாய் இரா நின்றேன் –

———————————————————————————————-

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன்
நாண்தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-5-

நீண்டாய் -நெடுமாலே -உனது ஸ்வரூபாதிகளை யாவராலும் அறிய முடியாதே
ப்ரஹ்மாதிகள் ஆண்டாய் ஸ்வாமின் என்று மட்டும் சொல்லிப் போவார்கள்
இப்படிப் பட்ட உனக்கு நித்ய கைங்கர்யம் செய்ய ஒருப்பட்டேன்
அத்தை அறிந்து என் நெஞ்சில் புகுந்தாய்
இனி நீயே பெயர்ந்து போகப் பார்த்தாலும் திரு வாணை நின் ஆணை கண்டாய் என்னுமா போலே ஆணை இட்டாகிலும் தடுப்பேன்
இப்படி அருளிய ஆழ்வாரை -அடியேன் என்கிறீர் ஆண்டான் சொல் படி நடக்க வேண்டாவோ- நிர்பந்திக்கலாமோ என்ன
நாண் தான் உனக்கு ஒழிந்தேன் –
மடல் எடுக்கப் பார்ப்பார் இது ஆம் இது ஆகாது என்று பார்த்தோ கார்யம் செய்வது
நம்பி நறை யூரர் என் நிலைமை கண்டு இரங்காரரே  யாமாகில் மன்னு மடலூர்வன் வந்து -பெரிய திருமடல் தனியன்
நாண் என்ன அடைவிலே நிற்க முடியும் என்றவாறே –

——————————————

எந்தாதை தாதை அப்பால் எழுவார் பழ வடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ என் ஆர் உயிரே  அரசே அருள் எனக்கு
நந்தாமைத் தந்த வெந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-6-

எம் தாதை தாதை அப்பால் எழுவர் -நானும் -என் தகப்பனும் -அவன் தகப்பனும் –
அவனுக்கு முன்புண்டான சப்த புருஷர்களும் -ஆக பத்து தலை முறையாக
ஏழாட்  காலும் பழிப்பிலோம் நாங்கள் –
எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் –
அடிமைச் சுவடு நன்கு ஆரியப் பெற்ற நான்-என் நெஞ்சுள்ளே வந்து சேர்ந்த தேவரீரை போகல் விடுவேனோ
இப்படி சொன்ன பின்பும் போக பார்த்தானாம் அந்தோ -என்கிறார்-
உனது கிடைக்கப் பெறாப் பேறான சொத்தை இழக்கப் பார்க்கிறாய்
என் ஆருயிரே -உன்னை ஒழிய ஜீவியாதபடி என்னுடைய சத்தையை நிர்வஹித்துக்  கொண்டு  போகிறவனே-

——————————————————–

மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
எந்நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இனிப் போய் பிறர் ஒருவர்
வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ-7-2-7-

நெஞ்சை விட்டு போக உறுப்பாக மிடுக்கைக் காட்ட -அந்த மிடுக்கை நான் அறிவேன் -என்கிறார்
அந்த மிடுக்கை விதேயனான அடியேன் இடத்திலே உபயோகிக்க வேண்டா-

பிறர் ஒருவர் வன்னெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்-ஆழ்வார் மற்றவர்கள் நெஞ்சு எல்லாம் வல் நெஞ்சு என்று இருக்கிறார்
இவர் போன்ற மென்மை இல்லையே -பரத ஆழ்வான் சித்ர கூடம் ஏற போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டால் போலே
நன்னெஞ்சம் அன்னம் மன்னும் நறையூர் -அன்ன நடைய அணங்காய பெரிய பிராட்டியார்
ந கச்சின் ந அபராதயாதி என்பவள் நித்ய வாஸம் செய்து இருக்க
பெரிய திரு மடலில் –
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா ம மலை போல் பொன்னியலும் மாடக்
கவாடம் கடந்து புக்கு –என்னுடைய கண் களிப்ப நோக்கினேன்  –
என்ற பின் நாச்சியாரைப் பற்றி பேசும் கால்
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் –அன்ன திரு யுருவம் நின்றது
என்று பிராட்டியை அன்னமாய் அருளிச் செய்தது காண்க –

———————————————–

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப் போது கொண்டு இறைஞ்சிக் கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல  ஒட்டேன்
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-

இமையோர்களையும் விட்டு என் நெஞ்சிலே புகுந்து அருளிற்று -இனி நான் போகல் ஒட்டேன்
பொன் மலர் -பொன் போலே விரும்பத் தக்க மலர்
தொழுது இறைஞ்சி வணங்க -ஒரு பொருள் பன்மொழிகள்
மனம் மொழி மெய்கள் ஆகிற த்ரி கரணங்களின் வ்ருத்தியை சொல்லுகின்றன
கைப்போது கொள்ளுதல் -புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்சலி செய்தல்-

————————————————-

ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யானாய் என் தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீன் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்
நானே எய்தப் பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-9-

யான் ஆய் -எனக்கு அந்தராத்மாவாய்
என் தனக்கு ஆய் -எனக்கு விதேயனாகக் கொண்டு
கீழ் கழிந்த காலம் எல்லாம் பாழே கழிந்தன -இந்த உடலைக் கொண்டு ஒரு பயனும் பெறாது ஒழிந்தேன் முன்பு எல்லாம்
ஊனேர் ஆக்கை தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் நானே எய்தப் பெற்றேன் -என்று அந்வயம்
சரீரமாத்யம் கலு தர்ம சாதனம் -என்கிறபடியே தர்ம அனுஷ்டானத்துக்கு இன்றியமையாத சரீரத்தை போஷிக்க வேண்டியது அவசியமே-

———————————————-

நன்னீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன்
சொன்னீர் சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நன்னீர்மையால் மகிழ்ந்து   நெடும் காலம் வாழ்வாரே –7-2-10-

கல் நீர் மால் வரைத் தோள் -ஒலிக்கின்ற அருவி நீரை யுடைய பெரிய மலை போன்ற திருத் தோள்கள்
சொல் நீர சொல் மாலை -கொண்டாடிச் சொல்ல வேண்டியதையே ஸ்வ பாவமாக யுடைய இச் சொல் மாலைகளை
இத்தை அனுசந்தித்தாருக்கு இது ஒரு சப்தமே என்று கொண்டாடும் இதுவே ஸ்வ பாவமாம் படி இருக்கிற சொல் தொடையை –
நல் நீர்மையால் -நித்ய கைங்கர்யம் ஆகிற சிறந்த ஸ்வ பாவத்தோடு
நித்ய விபூதியில் சென்று நித்ய கைங்கர்யம் செய்து நித்ய ஆனந்த அனுபவம் பெறுவார்கள் –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -7-1-கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்–

March 28, 2015

திரு நறையூர் திருப்பதி எட்டாவது மங்களா சாசன திருப்பதிகம்-

கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-

நாகின் ஸ்தானத்திலே ஆழ்வாரான தம்மையும் கன்றின் ஸ்தானத்திலே எம்பெருமானையும் கொள்ள முடியாமல்
பிள்ளை அமுதனார் மிடி பட
பட்டர் -நாகை தன் கன்று உள்ளினால் போலே என்று கொண்டு
நாகுதன் -நாகினுடைய
கன்றானது
தாயையே நினைத்து கத்துமா போலே
பால் சுரவாத பசுவின் ஸ்தானத்திலே -அருள் புரியாத எம்பெருமான்
கத்துகின்ற கன்றின் ஸ்தானத்திலே தம்மை வைத்துக் கொண்டு -பட்டர் நிர்வாஹம் –
உன்னை மறப்பதற்கு ஹேதுவான இந்நிலத்திலே பிறந்து வைத்தும் மறவாதே இயற்கையான
அடிமையை உணர்ந்து உன்னையே அழைக்கின்றேன்
நறவு -தேனுக்கும் வாசனைக்கும் பெயர்
பிறவாமை என்னைப் பணி-பிறப்பது -என்பதும் எம்பெருமானை மறப்பதும் என்பதும் பர்யாயம்
இனி ஒரு காலும் உன் திருவடிகளை மறவாமல் இருக்கும்படி அருள் புரிய வேணும் –

————————————————————

வற்றா முதுநீரொடு மால்வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே –7-1-2-

துற்றாக -ஒரு கபளமாக-
அண்டம் எல்லாம் உண்டை என்பர் அறியாதார் ஆங்கவை நீ
உண்டு அருளும் காலத்தில் ஒரு துற்றுக்கு ஆற்றாவால் -திருவரங்கக் கலம்பகம்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் என்பதும் மிகை அன்றோ
பிரளய காலத்தில் ஆர் கூப்பிட்டு ரஷித்து அருளினாய்
பிரஜைகளின் நோயை அறிந்து பரிஹரிக்கும் மாதாவைப் போலே அன்றோ நீயே ரஷித்தாய்
உன் பேறாகக் காத்து அருள வேண்டி இருந்தும் நான் உன்னை நோக்கி கூப்பாடு போடுவதைக் கேட்டாகிலும் இரங்கி  அருளல் ஆகாதோ
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் விண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வாயிற்று அடக்கி ஆலின் மேலோர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன்-

தொல் புகழோனே-இப்படி பல காலும் ஆஸ்ரித ரஷணம் பண்ணிப் படைத்த புகழ் எல்லை அற்றது என்கை
ஆற்றேன் -வேறு ஒருவருக்கும் உரியேன் ஆகாதபடி உனக்கே அற்றுத் தீர்ந்தவன் –

—————————————————-

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே –7-1-3-

உன்னையே கூப்பிடும்படி அருள் புரிந்து வைத்து இருக்கிறாயே
உன்னுடைய கிருபையையே அனுபவித்து பர்யாப்தி பிறவாமல் அபி நிவேசம் உடையேனாய்
அதையே அனுபவித்து செருக்குற்று யமாதிகள் தலையிலே அடி இட்டுத் திரியும்படி ஆனேன் –
சௌபரி பல வடிவு கொண்டால் போலே அநேக வடிவம் கொண்டு அவ்வோ இடங்கள் தோறும்
இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி வர்த்தியா நின்றான்  –
அஸ்மாதாதிகளை அனுபவிப்பதற்காக பல திவ்ய தேசங்களில் திவ்ய மங்கள விக்ரஹங்களை பரிஹரித்து சந்நிதி பண்ணி அருளுகிறான்
தாரேன் -என்றது -தர ஒட்டேன் -என்றபடி-

——————————————————

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே–7-1-4-

புள் வாய் பிளந்த புனிதா என்றதும் என் உள்ளத்திலே வந்து ஸ்தாவர பிரதிஷ்டியாக நிலைத்து
சகல தாபங்களையும் ஆற்றி குளிர்ச்சியை உண்டாக்கினாய்
தானே கை தொட்டு விரோதிகளை களைந்த பரி சுத்தி -புனிதா
கள்வா -இராமடம் ஊட்டுவாரைப் போலே உள்ளேயே பதி கிடந்து சத்தையையே பிடித்து  நோக்கிக் கொண்டு
போருமவன் என்கையால் கள்வா
உலகம் ஏத்தும் காரகத்தாய் கார் வானத்துள்ளாய் கள்வா -திரு நெடும் தாண்டகம்
பண்டே உன் தொண்டாம் பழ வுயிரை என்னது என்று கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே
மண்டலத்தோர் புள் வாய்ந்த பிளந்த புயலே உன்னைக் கச்சிக் கள்வா என்று
ஓதுவது என் கொண்டு -திருப்பதி அந்தாதி -85-

கடல் மல்லைக் கிடந்த கரும்பே -இப்படி ஸ்ரீ ஸூக்திகள் ஆழ்வார் திருவாக்கிலே நின்று தான் வெளி வரும்
கரும்பே -கை தொட்டு நெருக்குதலால் வரும் செவ்வி அழிகை இன்றிக்கே இருக்கை
வள்ளால் -வள்ளல் -ஆஸ்ரிதர்க்கு தன்னை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்குமவனே
மகா உபாகாரகனான உன்னை -உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான் -ஒருபடியாலும் மறக்க முடியாது –

——————————————————

வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-

உனக்கு ஆகர்ஷகமான சௌகுமார்யத்தை யுடைய சீதா பிராட்டியும்
அவளும் கூட துணுக் துணுக் என்னும்படியான சௌகுமார்யத்தை யுடைய நீயும்
துஷ்ட ஜந்துக்கள் நிறைந்த காட்டிலே ஒரு மத யானை பிடியோடு கூடக் களித்து உலாவுமா போலே  உலாவினவனே
அவனுடைய வள்ளல்தனத்தை விவரித்த படி -நித்ய சூரிகள் மட்டும் அனுபவிக்கும் தங்கள் திரு மேனியை
எல்லா பிராணிகளும் கண்டு அனுபவிக்க சர்வ ஸ்வ தானம் பண்ணிணவனே -என்றவாறு
நல்லாய் -ஆஸ்ரித வத்சலனே
நர நாரணனே -நர நாராயணனாய் யுலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -என்பர் மேல் பத்தாம் பத்தில்
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து
இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே சம்சாரம் ஆகிற பெரும் கடலில் விழுந்து நோவு பட
சர்வேஸ்வரன் தன கிருபையாலே இவர்கள் தன்னை அறிந்து கரை மரம் சேரும் படி
தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான் –
சிஷ்யனாய் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக -முமுஷுப்படி
சொல்லாய் -தேர் தட்டில் சோதி வாய் திறந்து அருளினால் போலே அடியேனுக்கும் ஓன்று அருளிச் செய்ய வேண்டும் —

————————————————————

பனியேய் பரங்குன்றின்   பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-

திருப் பிரிதியில் எல்லாரும் விரும்பும் படி நித்ய  சந்நிதி பண்ணி அருளி –
ஆஸ்ரிதர் ஹிதத்தை   அநவரதம் சிந்தனை பண்ணி அருளும் முனியே –
திரு மூழிக் களத்திலே உன்னுடைய ஸ்வரூபாதிகளை பிரகாசிப்படுத்துக் கொண்டு நித்ய சந்நிதி பண்ணி அருளுபவனே
இனியாய்  -சரியான பாடம்- இனியாய தொண்டரோம்-பாட பேதம் -வ்யாக்யானத்துச் சேராது-

———————————————————————-

கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே -7-1-7-

எனக்கு வைத்த மா நிதியும் நீயே
திவ்ய தேசங்களே யாத்ரையாக போது போக்கித் திரியும் என்னோடு ஒத்த பக்தர்களுக்கு கதியும் நீயே
உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
எல்லா திவ்ய தேச எம்பெருமான்களும் இவனுக்கு தங்களைக் காட்டித் தந்து ஆஸ்வாசப் படுத்தி  அருளுகிறார்கள்
நித்திலம் -நிஸ்தலம் வடமொழி சொல் -முத்து பொருளில் –
அதிவித்ரும மஸ்த நிஸ்தலா ளீருசம்-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்
திரு நீர் மலை நித்திலத்தொத்தே –
திரு நீர் மலையிலே வந்து
முத்து மாலையை உடம்பிலே அள்ளி ஏறிட்டுக் கொள்ளுமா போலே -நித்திலம் -பனி ஸ்தலம் -முத்து
தொத்து -மாலை –
குளிர உடம்பிலே எறட்டு அணைத்துக்  கொள்ளலாம் படி இருக்கிறவனே –
பதியே –பதியே பரவித் தொழும் என்று சேர்க்காமல் -தனியாகவும் கொண்டு
ஆஸ்ரிதற்கு வாசஸ் ஸ்தானமாய் உள்ளவனே என்னும் விளிச் சொல் -என்றுமாம்-

——————————————————–

அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-

உண்டியே உடையே என்னாமல் அத்தா ஸ்வாமியே அரியே விரோதி நிரசன சீலனே-
முளைக்கின்ற வித்தே -ஜகத் காரண பூதனே – என்று சொல்லிக் கொண்டு கால ஷேபம் செய்கின்றேன்
திகம்பர ஜனே க்ராமே ஹாஸ்யே கௌபீ ந வான் நர -போலே
பரிகாசத்துக்கு அஞ்சி -விட முடியாமல் அன்றோ உன்னுடைய போக்யதையில் ஈடுபட்டு
பேயரே எனக்கி யாவரும் யானும் ஓர் பேயனே –அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே -பெருமாள் திரு மொழி-

————————————————–

தூயாய் சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா வலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ -7-1-9-

தூயா -எல்லார் திறத்திலும் நன்மையே சிந்திக்கும் உள்ளத் தூய்மை
விளக்கில் விட்டில் பூச்சிகள் போலே அசுரர்கள் விழுந்து முடிவர் –
அவர்களையும் நல் வழிப் படுத்த பழ கிருஷிகளை பண்ணி அருளுவான் இவன்
சுடர் மா மதி போல் -திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம்  இழிந்தேலோர் எம்பாவாய்
ஆயா -உன்னுடைய  விபூதியில் ஒருவர் இவன் நம் பிள்ளை என்று அபிமாநிக்கலாம் படி இடைப்பிள்ளையாய் வந்து அவதரித்து அருளினவனே
அலை நீர்-ஆபத் பந்துவான உன்னை அடியேன் எங்கனம் மறக்க வல்லேன் —

——————————————————-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ்  மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு  இல்லை துயரே -7-1-10-

சமஸ்த கல்யாண பரிபூர்ணனான பெருமானுக்கு அடிமைப் பட்ட திரு மங்கை ஆழ்வார்
திருவாய் மலர்ந்து அருளின இத் திரு மொழியை தொண்டர்களே வாயாரப் பாடுங்கோள்-பாடி ஆடுங்கோள் –
இங்கனே யாகில் சகல சம்சார தாபங்கள் தொலைந்து பரமபத பிராப்தி யுண்டாகும் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-10-கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை-

March 28, 2015

திருநறையூர் திருப்பதி ஏழாவது மங்களா சாசன திருப்பதிகம் –

திரு நாமப் பாட்டு ஒழிய ஒன்பது பாசுரங்களும் நமோ நாராயணமே-என்ற மகுடத்தாலே முடியும்
இவ்வாழ்வார் திரு நறையூர் நம்பி பக்கல் திரு இலச்சினை  பெற்றார் என்று பிரசித்தம் இறே
இம்முகத்தாலே நம்பி இவருக்கு ஆச்சார்யர் ஆகிறார்
ஆச்சார்யர் திரு நாமமே அனுசந்தேயம் ஆதலால் பெரிய திருமந்தரம் ஆகிற அத் திரு நாமத்தை
தாமும் அனுசந்தித்து பிறருக்கும் கற்பிக்கிறார் இத் திரு மொழியில்
இதில் பெரிய திரு மந்த்ரத்தில் ஆதி அந்தங்களை விட்டு இருந்தாலும் அவையும் சேர்ந்த திரு அஷ்டாஷரமே இங்கே விவஷிதம்
கீழே -பேசுமின் -திரு நாமம் எட்டு எழுத்தும் -1-8-9-பாசுரத்திலும் இவ்விஷயத்தின் விவரணங்கள் பார்த்தோம் –

—————————————–

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-

எறிஞர் -சத்ருக்கள்
இவனே ஸ்ரீ வராஹ மூர்த்தி -சக்ரவர்த்தி திருமகன் -ஓங்கு உலகளந்த  அளந்த உத்தமன்
தாளால் உலகளந்த ஆயாசம் தீர திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனும் இவனே
இந்த நம்பியுடைய திரு நாமத்தை அனுசந்தித்து வாழ்வோம்
ஒன்பது பாசுரங்களிலும் திருநறையூர் பிரஸ்தாபமே இல்லை யாயினும்
மேல் திரு நாமப் பாட்டில் -நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை -என்று
தலைக் கட்டி அருளுவதால்
எல்லா பாசுரங்களுக்கும் திரு நறையூர் நம்பியே இலக்கு எனபது விளங்கும் –

————————————-

விடந்தான் உடைய வரவம் வெருவச் செருவில் முன நாள் முன்
தடந்தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

விடம் தான் உடைய அரவம் வெருவ -விடம் உடைய அரவம் தான் வெருவ -என்று அந்வயம்
மிக்க தாளாளன் -காளியன் தலையிலே திருவடிகளை இட்டு நர்த்தனம் ஆடினவன்
பொய்கையிலே போய்ப் புக்கு அவனைத் துரத்தின ஏற்றத்தை யுடையவன் –
ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ வராஹன் -ஸ்ரீ திரிவிக்ரமன்  -திரு நாமம் திரு அஷ்டாஷரம்-

———————————————————————-

பூணாது அனலும் தறு கண் வேழம்  மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா  வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

ஸ்ரீ கிருஷ்ணனும்
அமுதினில் வரும் பெண்ணமுது தனக்காக்கிக் கொண்டவனும்
திரு நாமம் திரு அஷ்டாஷரம்
தறு கண் வேழம் -ஜாதி பிரயுக்தமான வட்டணித்த கண்ணை யுடைத்த குவலயாபீடம் –
தறுகண்மை -அஞ்சாது இருக்கும் தன்மை
அமுதம் கொண்ட பெருமான் –
கடலைக் கடைந்து அமுதம் வாங்கி அது புஜித்தார்க்கு வரக் கடவ ப்ரீதிதனக்கு உண்டாம்படி இருந்தான் -வியாக்யானம் கொண்டு
அமுதம் கொண்டு உகந்த பெருமான் என்று சிலர் பாடம் கொள்வார் -யாப்பு இலக்கணத்துக்கு ஒவ்வாது
நீணாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ்  கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டுகந்த பெம்மானை -11-7-1- என்பார் மேல்
பாணா வண்டு முரலும் கூந்தல் யாய்ச்சி -பூ மாலை சூடிய கூந்தலாள்
நாணாது உண்டான் -பரிபவங்களை போக்யமாகக் கொண்டு உண்டான்-

————————————————————————–

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை  விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -6-10-4-

ஸ்ரீ  ராமபிரான் -ஸ்ரீ பாடகத்து எம்பெருமான் திரு நாமமும் திரு அஷ்டாஷரம்
பாடு அகம் -பெருமை உள்ள சந்நிதி பாடகம்
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவ
பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-

———————————————————————————

குடையா வரையால் நிரை முன் காத்த  பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென்னிலங்கை
அடையா வரக்கர் வீயப் பொருது மேவி  வெங்கூற்றம்
நடையா யுண்ணக் கண்டான் நாமம் நமோ நாராயணமே –6-10-5-

ஸ்ரீ கிருஷ்ணனாகவும் ஸ்ரீ ராம பிரானாகவும் திருவவதரித்து சேஷ்டிதங்கள் செய்து அருளிய பெருமைகள் எல்லாம் தோன்றும்படி
திருக் கோவலூரிலே உலகளந்த பெருமானாக சேவை சாதித்து அருளும் பெருமான் திரு நாமம் திரு அஷ்டாஷரம்-

———————————————————————

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே –6-10-6-

கானம் எண்கும் -காட்டுக் கரடிகளையும்
ராவணாதி ராஷசர்களை அடக்கி வெற்றி பெற்ற பெருமான் திரு நாமம்
தேனும் பாலும் அமுதமும் போலே பரம போக்யமானது
நான் அத்தை அனுசந்தித்து ஆனந்திப்பது போலே ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் உள்ளீர் எல்லாரும்
அனுசந்தித்து ஆனந்திக்க வேண்டுகிறேன் –
இதர விஷயங்களின் உடைய பேரைச் சொல்லிப் போந்த நானும் அன்றோ சொன்னேன்  –
இனி இது கண்டால் எல்லார்க்கும் சொல்லத் தட்டில்லை இறே
என்னோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் இத்தையே சொல்லிப்  போருங்கோள் –
நமோ நாராயணமே –
நமக்கு வகுத்ததையே சொல்லிப் போருங்கோள-
ஆழ்வார்கள் கோஷ்டியில் இது ஒழிய வேறு ஒரு திரு நாமம் உண்டாக நினைத்து இருப்பார் இல்லை –
உண்டாகில் ஆயிரம் -என்று திரளாக சொல்லும் இத்தனை
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையான் –
தேவோ நாம சஹஸ்ரவான் –
பல பசு உடையவன் -என்னுமா போலே
ஸ்ருதி வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லும் அன்று ஆய்த்து
இவர்கள் வேறு ஒரு திரு நாமம் உண்டாகச் சொல்லுவது –
அந்தர்யாமி ப்ராஹ்மணத்தோடு
காரண வாக்யங்களோடு–
இது ஒழிந்தவை ஞான சக்த்யாதிகளைப் போலே –
இது ஞான ஆனந்த அமலத் வாதிகளைப் போலே
ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் –

—————————————————

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

சங்கல்பத்தாலே மேன் மேலும் சிருஷ்டித்து அருளும் பெருமான் திரு நாமம் திருஷ்டாஷரம்
நான் சொல்லி ஆனந்தித்தேன் நீங்களும் சொலி ஆனந்திப்பீர்

——————————————-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

நெடுகால் குன்றம் ஓன்று -சுற்று மலைகளை யுடைத்தான ஒரு கோவர்த்தன மலையை
பயத்துக்கு அவகாசம் இன்றி உடனே மலையை குடையாகத் தரித்து காத்து அருளின பெருமான் திரு நாமம் திரு அஷ்டாஷரம்
தான் அறிந்த ஆபத்தும்
விலக்காமையும்- இறே வேண்டுவது -ரஷிக்கைக்கு
ஸ்வ பாவிக சம்பந்தத்தில் கண் அழிவு இல்லையே –

——————————————

பொங்கு புணரிக் கடல் சூழாடை நில மா  மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகராய
எங்கள் அடிகள் இமையோர் தலைவர் உடைய திரு நாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோ நாராயணமே -6-10-9-

உபய விபூதி நாதனின் திரு நாமம் திரு அஷ்டாஷரம்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் என்று
முதல் திருமொழியில் அருளிச் செய்ததது போலே நங்கள் வினைகள் தவிர யுரைமின் நமோ நாராயனமே -என்கிறார்-

—————————————————–

வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தைக்
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே —-6-10-10-

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை –
முன்பு எனக்கு ஏற்றமாக நினைத்து இருப்பது இது –
இப்போது எனக்கு பிறந்த செவ்வியும் கண்டி கோளே-
இப்போது மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும்
இதுவும் விஷயமான படி கண்டி கோளே –

ஓத வல்லவர்கள் சர்வ பாப விநிர்முக்தராய் நித்ய அனுபவம் பெறப் பெறுவார்கள்-

—————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-9-பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்-

March 28, 2015

திரு நறையூர் திருப்பதி -ஆறாவது-மங்களா சாசன திருப் பதிகம்-

பாசுரம் தோறும் நெஞ்சை விளித்து திரு நறையூர் நம்பியின் திருவடிகளை வணங்க உபதேசிக்கிறார் –

பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர்கெடுத திருவாளன் இணை யடியே  யடை நெஞ்சே –6-9-1-

பெடை அடர்த்த மட வன்னம் -நெருங்கி இருத்தலும் -சண்டை செய்தாலும் -பிரணய கலஹம் சொன்னவாறு
முடையடர்த்த -துர்நாற்றம் உடைய என்றபடி
பலி -பிச்சை

——————————————————

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று  வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

சக்ரவர்த்தி திருமகனே இவன்-

—————————————————

சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாயக் கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலைத் திரு நறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே –6-9-3-

வளை  கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -சங்கு போல் வெளுத்த நிறமுடைய பலராமனுடைய தம்பியாயும் –
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக்குட்டன் மொடு மொடு விரைந்தோடப்
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக்  குட்டன் – பெரியாழ்வார் -1-7-5-

—————————————————

துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்றார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூர்
மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே–6-9-4-

செல்வம் மிகுந்த திரு நறையூரில் குடக் கூத்தாடின ஸ்ரமமும்
கோவர்த்தன் கிரியை குடையாகத் தூக்கி அருளின ஸ்ரமமும்  தீர
இங்கே எழுந்துஅருளி இருக்கிறான் -அவனது நூபுர அலங்க்ருதமான திருவடிகளை தொழுவாய்
குரை கழல்  -குரை கழலை யுடைய கழல் -கழல் -ஆபரணத்துக்கும் காலுக்கும் பெயர்-

—————————————————

அகில் குறடும் சந்தனமும் பொன்னு மணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
பகல் கரந்த சுடராழிப் படையான்  இவ் உலகு எழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்னடியே   அடை நெஞ்சே–6-9-5-

பகல் கரந்த சுடராழிப் படையான்  –
நிரவதிக தேஜஸ்ஸாலே தேஜோ பதார்த்தத்தை மறைத்தான் ஆயத்து
ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே முகக்கலாம்
திரு ஆழி ஆழ்வான் உடைய தேஜஸ்ஸூ கண் கொண்டு முகக்க ஒண்ணாத படி
இருக்கையாலே இருண்டு காட்டிற்று ஆயிற்று –

————————————————

பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கைம்மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை  யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்லியலைத் திரு மார்பில்
மன்னத் தான் வைத்து உகந்தான் மலரடியே அடை நெஞ்சே –6-9-6-

சிங்கங்கள் யானைகளோடு பொருது கும்ப ஸ்தலங்களைக் கிழித்து உதிர்த்த முத்துக்களையும்
மலைகளில் உண்டான பொன்களையும்
சிங்க நகங்களையும்
யானைக் கொம்புகளையும்
நீர் வாக்கிலே கொணர்ந்து  தள்ளி  பெறுகின்ற பொன்னி யாறு பெருகும் திரு நறையூரிலே
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன் வாழ்கின்றான்
அவனுடைய பொன்னடியே அடை நெஞ்சே-

————————————–

சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங்கமலத் திடையிடை
பார் தழைத்துக் கரும்போங்கிப் பயன் விளைக்கும்  திரு  நறையூர்
கார் தழைத்த திருவுருவன் கண்ண பிரான் விண்ணவர் கோதியாதே
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே –6-9-7-

கரும்பு விளையும் நிலத்தில் கருப்பங்கட்டைகளை   வெட்டி செந்நெலை நடுவார்கள்
இடையில் தாமரை களையாக விளையும்
பழைய வாசனையாலே கருப்பங்கட்டைகளும்   விளையும்
நிலவளம் சொன்ன படி
காள மேகத் திரு உருவன் -நித்ய ஸூரி நாதன் -திருத் துழாய் முடியன் -பாத பல்லவங்களை பணி நெஞ்சே-

————————————————–

குலையார்ந்த பழுக் காயும் பசும் காயும்  பாளை முத்தும்
தலையார்ந்த விளங்கனியின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணி மாடம் மிக மன்னி
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே –6-9-8-

சோலை வளம் வாய்ந்த திரு நறையூரிலே
ஒரு மலை போன்று விலங்கா நின்ற மணி மாடக் கோயில்
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நின்று அருளும் எம்பெருமானுடைய நீள் கழலே அடை நெஞ்சே
மலை யார்ந்த கோலம் சேர் மணி மாடம் போலே
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை மேல்
பொன்னியலும் மாடம் –பெரிய திருமடல் அருளிச் செயல் –

————————————–

மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறையார வான் மூடும்  நீள் செல்வத் திரு நறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறையாகி நின்றான் தன் இணை அடியே அடை நெஞ்சே –6-9-9-

யஞ்ஞ யாகங்கள் அனுஷ்டிக்கும் வைதிக பிராமணர்கள் வாழும் இடம்
மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான் புகைப் போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர் -திருவாய் -8-9-8-
ப்ரஹ்மாதிகள் பணிந்து வந்து போற்றும் ஸ்வாமி நம்பியின் இணை திருவடிகளை அடை நெஞ்சே  –

————————————-

திண் களக மதிள் புடை சூழ்  திருநறையூர் நின்றானை
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண் களகதது இமையவராய் வீற்று இருந்து வாழ்வாரே–6-9-10-

திண் களக மதிள் -திண்ணியதாக சுண்ணாம்பு சாந்து இடப் பெற்ற திரு மதிள்
வண் களகம் -அழகிய அன்னப் பறவைகள் –
களகம் -நெல் கதிர் -கம் நீரை -களம் இடமாகக் கொண்டது என்றுமாம் -மருத நிலம்
பண்கள் அகம் பயின்ற -பண்களிலே சாரமான பண்ணிலே
விண்கள் அகத்து -மேல் உலகங்களுள் முக்கியமான பரம பதத்திலே
இப்பதிகம் கற்றார் நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாக எம்பெருமானை நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள் —

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-8-மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்-

March 28, 2015

ஐந்தாவது திரு நறையூர் திருப் பதி மங்களா சாசன திருப் பதிகம்-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல்  திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

கிருஷ்ணா ஜினத்தாலே திரு மார்பை மறைத்து -பிராட்டி கடாஷம் தவிர்த்தான் -ப்ரஹ்மசார்யத்துக்கு அணி கலன்-
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர்  திரு வேங்கட மா மலை -அடி ஒற்றி
தாளால் அளந்த பெருமானைத் திரு வேங்கடத்தானை -என்கிறார்
நான் சென்று நாடி –
என்னைப் பெற வேண்டி அவதாரங்கள் பல செய்து தேடித் திரிந்தான்
அக்காலங்களிலே விமுகனாய் இருந்து விட்டேன்
இன்று நான் அவனைத் தேடித் திரிய வேண்டிற்று
அறுகாதப் பயணம் போய் திருமலை யுச்சியில் காண வேண்டாமல்
விடாய்த்த இடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமா போலே திரு நறையூரிலே காணப் பெற்றேன்-

————————————————

முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானைத்
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல் சூழ் நறையூரில்  கண்டேனே –6-8-2-

முந்நீர் -பழைய நீர்
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர்
முத் தொழில்கள் -மண்ணைப் படைத்து காத்து அழித்தல் –

மீனாய் அந்நீரை அமைத்த -மத்ஸ்ய ரூபியாய் அந்தப் பிரளய கடல் நீரை அடக்கின
தென்னாலி -மேய –அழகிய திரு வாலி திவ்ய தேசத்திலே நித்ய வாஸம் செய்து அருளும்

————————————

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுளானை  நறையூரில் கண்டேனே –6-8-3-

தூ ஆய-வேத ஸ்வரூபி
ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு அருளிய தேவாதி தேவனே பரம பதம் விட்டு திரு நாவாயில் சேவை சாதிக்க
அதுவும் பரம பதம் போலே தூரஸ்தமாய் இருக்கையாலே அணித்தாக திரு நறையூரிலே சேவை சாதிக்கிறான்-

—————————————

ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே–6-8-4-

ஓடாத -போரில் பின்வாங்காத -நாட்டில் நடையாடாத –
இரணியனை நிரசித்த விடாய் தீர திரு நீர் மலையிலே சந்நிதி பண்ணி
ஜகத் ரஷணத்துக்கு தனி மாலை இட்டு சேவை சாதிக்கிறான் –
நாடொறும் தேடித் திரிந்து இன்று இங்கே காணப் பெற்றேன்-

————————————-

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே–6-8-5-

அந்தரிஷகத ஸ்ரீ மான் -லஷ்மி சம்பன்ன -ச து நாகவர ஸ்ரீ மான் –
வேறாக நல்லான் -முதலிகள் தடுத்தும் அன்று ஈன்ற கன்றாக கைக் கொண்டு அருளினான்-

———————————————-

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே -6-8-6-

சங்கல்பத்தாலே சிருஷ்டிப்பவன் மெய்யே வந்து திருவவதரித்து அருளிய பெருமானே இவன்-

———————————————————–

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே  –6-8-7-

கட்டேறு நீள் சோலை -காவல் மிக்க நீண்ட சோலைகள் –
மண்ணின் பாரம் நீக்கவே அவதரித்த கண்ணன் காண்டவனம் தகனம் –
மிடைந்த நால்வகை மகீருகங்களு நெடு வேல் பினங்களுந்துன்றி
அடைந்த தானவரக்கர் பேருர கருக்காலயங்களு மாகிக்
குடைந்து சோரி கொள் வாளுகிரரி முதல்கோடு விலங்கினமிக்கு
கடைந்த கூர்யேயிற்றால தக்கனும் வாழ் கானனமது கண்டீர் -வில்லி புத்தூரார் பாரதம்
பாரிஜாத வ்ருஷத்தை வேரோடு பிடுங்கி த்வாரகையில் நட்டு அருளினவனும் இவனே
இந்த சர்வ சக்தனே திரு மெய்யத்தில் சேவை சாதிக்கிறான்
இன்று இங்கே சேவிக்கப் பெற்றேன்

——————————————————–

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேற விசயன் தேரூர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே -6-8-8-

சர்வம் சஹா -பொறுமை மிக்க பூமிப் பிராட்டி கூட பொறுக்க ஒண்ணாத துர்ஜன பாரம் நீக்கி அருள
கையும் அணியும் வகுத்து வீர ஸ்வர்க்கம் அடையும் படி அருளிய ஸ்ரீ கிருஷ்ணனை இன்று இங்கே சேவிக்கப் பெற்றேன் –

——————————————————-

பொங்கேறு நீள் சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கை பெருமானைக்
கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-

பொங்கேறு  நீள் சோலை -மென்மேலும் அதிசயத்து வருகிற அளவற்ற தேஜஸ்
திரு ஆழி திரு பாஞ்சசன்ய ஆழ்வார்களை தரித்து திருக் குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனை
இங்கே இன்று சேவிக்கப் பெற்றேன்

—————————————————

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்  தார்க்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே–6-8-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் ஒரு நாளும் மாறாத -வடமதுரை
புத்தேளிர்  ஆகுவர் -பூஜ்யர் ஆகுவார் -நான்முகப் புத்தேள் -திருவாசிரியம்
நித்ய சூரிகளுக்கு தெய்வங்கள் ஆகப் பெறுவர்-

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-7-ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை-

March 27, 2015

நான்காவது திரு நறையூர் மங்களா சாசன திருப் பதிகம் —

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி யோவா நறையூர் நின்ற நம்பியே—6-7-1-

ஆளும் பணியும் கொண்டான் -சேஷ பூதனாயும் -கிங்கரனாயும் திரு உள்ளம் கொண்டான் –
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும் தந்து அருளினவன் என்றது ஆயிற்று
வேளும் சேயும் அனையாரும் -மன்மதனோடும் சுப்பிரமணியனோடும் ஒத்த அழகிய புருஷர்கள்
விண்ட -பொருந்தி வராமல் எதிர் அம்பு கோத்த -அப்படிப் பட்ட நிசாசரரை தோளும் தலையும்
துணிவெய்த சுடு வெஞ்சிலைவாய் சரம் துரந்தான்
இன்னமும் அடியார்களை ஆளும் பணியும் கொள்ளவும்
ஆசூர பிரக்ருதிகளை தொலைப்பதற்கும் நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்   இங்கே –

———————————————-

முனியாய் வந்து மூ வெழு கால் முடி சேர் மன்னர் உடல் துணியத்
தனிவாய் மழுவின் படை யாண்ட  தாரார் தோளான்  வார் புறவில்
பனி சேர் முல்லை பல்லரும்ப பானல் ஒரு பால் கண் காட்ட
நனி சேர் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே-6-7-2-

துஷ்டர்களை அழித்து-சிஷ்டர்களை ரஷிக்கக் கடவேன் என்று தனி மாலை இட்டவன் -தாரார் தோளான் –
அழகிய மாதர்கள் வாழும் திவ்ய தேசம் -முல்லை அரும்பு போன்ற பல் அழகும் –
கரும் குவளை பூ போன்ற கண் அழகும் -செந்தாமரைப் பூ போன்ற முகத்தின் அழகும் –
நனி சேர் வயலுள் முத்தலைக்கும்-என்ற பாடமே சிறக்கும்-

———————————————————

தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து
துள்ளா வருமான்  வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட
நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே-6-7-3-

திரு வநந்த ஆழ்வான் அதி சங்கித்து விஷத்தை உமிழா நிற்கும் திருப் பாற் கடல்   -விடவாய சின வாளரவில்-
அங்கு இருந்து தேவர்கள் கூக்குரல் கேட்டு திரு வவதரித்து செய்து அருளிய ஒரு கார்யம் -துள்ளா வருமான் விழ வாளி துரந்தான்

———————————————-

ஒளியா வெண்ணெய்  உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒள் கயிற்றால்
விளியா வார்க்க வாப்புண்டு விம்மி யழுதான்   மென்மலர் மேல்
கழியா வண்டு கள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-

தாம்பினால் கட்டுண்டு விம்மி அழுத பரம ஸூலபன்
வங்கிபுரத்து நம்பி பலகாலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று  போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஆழ்வானுக்கும் நம்பி   ஸ்ரீ ஹனுமத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று  அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே   சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால்  இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் —–அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்–
ஆப்புண்டு விம்மி அழுதான் -தாம்பினால் கட்டி  வருத்துகின்றாள்-துன்பம் பொறுக்காமல் விம்மி அழுதான் அல்லன்
தயிர் பால் வெண்ணெய் பெண்கள் களவு செய்து திரிய வேண்டிய காலம் பாழாய் போகிறதே
கட்டுண்டு இருக்கும் அளவும் அந்த தொழில்களைத் தவிர்ந்து இருக்க வேண்டியதாயிற்றே -என்று விம்மி அழுதான் –

மென்மலர் மேல் கழியா வண்டுகள் உண்ணக்  காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்-இதில் ஒரு அர்த்த விசேஷம் ஸ்புரிக்கும்
வண்டு -ஸ்ரீ வைஷ்ணவனை சொன்னதாய் -விதி வசத்தால் மது பானம் பண்ணி விட்டான்
நாட்டிலே அலர் தூற்ற -பழி தூற்ற -அலர் -புஷ்பமும் பழியும் -புறப்பட்டான் என்றும்
இவை இரண்டையும் கண்ட ஒரு சாத்விகன் -ஏதோ விதி வசத்தால் மது பானம் பண்ணினால் இதை தூற்ற வேணுமோ –
இது  சஹஜம் என்று வாளா இருத்தல்  ஆகாதோ
வாய் விட்டு சிரிக்காமல் இவை என்ன உலகு இயற்க்கை என்று புன்சிரிப்பு செய்கிறான் –
லௌகிக சந்நிவேசம் உணர்த்தியவாறு-

——————————————-

வில்லார் விழவில் வட மதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்துக்
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே–6-7-5-

பகவத் கதைகளை அனுசந்திப்பதில் ஆழ்வார்கட்கு ஒரு அடைவு இல்லை -பக்தி பிரகர்ஷம் பேசுகிறபடி எல்லாம் பேசுவார்கள்
வேத அத்யயன நிஷ்டர்களையும் யஞ்ஞ சீலர்களாயும் உள்ள அந்தணர்களை வாழ்விக்க இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்-

———————————————————–

வள்ளி கொழு நன் முதலாய மக்களோடு முக் கணான்
வெள்கியோடே விறல் வாணன்  வியன் தோள் வனத்தைத் துணிந்து உகுந்தான்
பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே—-6-7-6-

பள்ளி கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி நள்ளி யூடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே-
பட்டர் அருளிச் செய்ய குறிப்பாக கேட்டு இருப்பதொரு பாட்டு -என்று அருளிச் செய்வர் –
பகுவாய் அலவன் கமலத்தின் இடைப் பள்ளி பட்டது –
நள்ளியானது கர்ப்ப தாரனத்தாலே கேதித்து இருக்க
அதுக்கு இனியது தேட வேணும் -என்று மதுவுக்காக  போந்த அலவன் ஆனது  தாமரைப் பூவில் வந்து இழிய கொள்ள
போது அஸ்தமிக்கையாலே
உடம்பைக் கொண்டு அங்கே இங்கே கொண்டு ராத்திரி அதிலே தங்கி –
அதிலே தாதும் சுண்ணமும் உடம்பிலே நிழல் இட்டு தோற்ற
போது விடிந்த வாறே வந்தது –
இது போன போதே தொடங்கி-கதவைத் திறந்து வரவு பார்த்து கொடு நின்ற நள்ளி யானது
இத்தைக் கண்டு
ராத்திரி தங்கின படியாலும்
உடம்பிலே சுவடு இருந்த படியாலும்
இது வெருமன் அல்ல என்று முகம் மாறி கதவை அடைத்து உள்ளே போய்ப் புக்கது
இத்தை பட்டர் அருளிச் செய்த அநந்தரம்
பிள்ளை திரு நறையூர் அரையர்
ஆராய்ந்து குற்றம் நிரம்பினால் பின்னை அன்றோ தண்டிப்பது -என்ன
என் செய்வோம் கேள்வி இல்லாத படி   பெண்ணரசு நாடாய்த்து -என்று அருளிச் செய்வர்  –

—————————————

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக்
குடையா வரை யொன்று எடுத்த ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழிப்
படையான் வேத நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ நறையூர் நின்ற நம்பியே —6-7-7-

குடையாய் வரை ஓன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் -என்ற உடனே கூராழிப் படையான் -என்றது
இந்த்ரனை திரு ஆழி கொண்டு தலை அறுத்து ஒழிக்கலாம்
ஆயினும் அது செய்திலன்
அவனுடைய உணவைக் கொண்ட நாம் உயிரையும் கவரலாகாது
பசிக் கோபத்தாலே நலிகிறான் -நலியட்டும் -கை சலித்த வாறே தானே ஓய்கிறான்
என்று பொறுத்து இருந்து ரஷ்ய வர்க்கங்களை நோக்கிக் கொண்டான் -என்பதைக் காட்டி அருள –

————————————————————-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே  –6-7-8-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க வைத்தது த்ரௌபதியினுடைய மங்கள ஸூத்ரத்துக்காக –
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் இவளுக்காக -ஸ்ரீ வசன பூஷணம்
கோஷோ தார்த்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -ஸ்ரீ கீதை
கந்தார் களிறு -கந்து கட்டுத் தறி -அதையும் முறித்துக் கொண்டு திரியும் மத்த கஜம்-

——————————————————

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா  வாச நீர்  வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே -6-7-9-

என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்க முத நீர் திரு மார்பில் தந்தான் -1-5-8-என்றும்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் -5-9-4-என்றும் இவரே அருளிச் செய்து
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை ஊறு செங்குருதியால் நிறைத்த -திருச் சந்த விருத்தம் -42– என்றும் உண்டே-

—————————————————–

நன்மை யுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
பண்ணி யுலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள்
மன்னி யுலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே –6-7-10-

அநந்ய பிரயோஜனராய் பல்லாண்டு பாடுவதையே யாத்ரையாக கொண்டவர்கள் வாழும் திரு நறையூர்
இத் திரு மொழியை ஆராய்ந்து கற்பார் எவரோ அவர்கள் அருகில் பாபங்கள் அணுக மாட்டா
அவர்கள் இவ் விபூதியிலே நெடு நாள் வாழ்ந்து இருந்து இஹ லோக போகங்களை எல்லாம் புஜித்து
பின்னை பரம பதத்தே போய் நித்ய ஸூ ரிகள் ஆதரிக்க நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-6-அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்-

March 27, 2015

இது மூன்றாவது திரு நறையூர் திருப்பதி மங்களா சாசன திருப் பதிகம் –

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பமரும் வட மரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூட கிற்பீர்
வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-

கொம்பு அமரும் -கிளைகள் பொருந்திய
வம்பு -புதுமையும் பரிமளமும் –
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் -துர் மாநியுமாய்-ஸ்நேஹமும் இன்றிக்கே-இருக்கிற ராஜா தான்-
ஸ்ரீ மார்கண்டேய பகவானைப் போலே
தேவதாந்திர பஜனம் பண்ணி-அங்கு தன்னுடைய அபிமதம் தலைக் கட்டிக் கொள்ளப் பெறாமையாலே
இங்கே வந்து பக்ன அபிமானனாய்-திருவடிகளிலே விழுந்து ஆஸ்ரயித்து
ஐஹிக  ஆமுஷ்மிகங்கள் இரண்டையும் பெற்றுப் போனான் –
நம்பி ஒரு வாள் கொடுத்து அருள அத்தைக் கொண்டு பூமியை அடைய தன் காலின் கீழே இட்டுக் கொண்டான் –
என்று ஒரு பிரசித்தி உண்டாய்த்து –

திரு நறையூர் மணிமாடம் –
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடம் -என்றும் –
தென் நறையூர் மன்னு மணி மாடக் கோயில் மணாளனை -என்றும்
பெரிய திரு மடலில் அருளிச் செய்து இருத்தலால் –
நம்பி சந்நிதிக்கு மணி மாடக் கோயில் என்ற திரு நாமம் வழங்கி வந்தது என்று அறியலாம்
திரு நாங்கூர் மணி மாடக் கோயில் வேறே-

———————————————————–

கொழுங்கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத் தப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் இன வண்டாலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி   வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

நைமித்திக பிரளயத்தில் ஹயக்ரீவன் என்னும் அரசன் வேதங்களை அபஹரித்துப் போக மத்ஸ்ய அவதாரம் –
தவத்தின் பெருமையால் கிருதமாலா நதிக் கரையில் சத்யவ்ரதன் ராஜ ரிஷி -ஏழு நாள்களில் பிரளயம் வருவதை சொல்லி
லஷம் யோஜனை நீளமும் -பதினாயிரம் யோஜனை பருமனும் -ஒற்றைக் கொம்பும் -ஸ்வர்ண வர்ணமும் –
சகல லோக மநோ ஹர ரூபமும் கொண்ட மத்ஸ்ய –
அண்டகடாத்தளவும் சென்று மீட்டுக் கொண்டு வேதங்களை உபகரித்து அருளினான் –
வானோரளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்து 
உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -8-8-1-

—————————————–

பவ்வ நீருடை யாடையாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம் மெய்யா
செவ்வி மாதிரமெட்டும்  தோளா வண்டம் திரு முடியா நின்றான் பால் செல்ல கிற்பீர்
கவ்வை மா களிருந்தி விண்ணி ஏற்றிக் கழல்  மன்னர் மணி முடி மேல் காகமேறத்
தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்  சேர்ந்த திரு நறையூர் மணி மாடம், சேர்மின்களே –6-6-3-

செவ்வி மாதரம் எட்டும் தோள் ஆ -அழகிய திசைகள் எட்டையும் புஜங்களாகக் கொண்டு –
எம்பெருமான் ஜகத் ஸ்வரூபியாய்  இருக்கும் நிலைமையை உருவகத்தால் அனுபவிக்கிறார் –
கடல் நீர் -அரையில் உடுக்கும் ஆடை
பூமிப் பரப்பு திருவடி
வாயு ராசி திருமேனி
திசைகள் எட்டும் திருத் தோள்கள்
அண்ட கடாஹம் திரு அபிஷேகம்
கவ்வை மா களிறு -ஆரவாரத்தை யுடையனவாய் -பெரியவையான யானைகளை
தெய்வம் வாள் வலம் கொண்ட  சோழன் -திவ்யமான வாள் படையைக் கொண்ட சோழ ராஜன்
வெண்ணி ஏற்ற -விண்ணி ஏற்ற பாட பேதம் -கோயில் வெண்ணி -கோயில் உண்ணி – என வழங்கும் சோணாட்டூர்
படை எடுத்து வந்த மாற்றரசர் போர் செய்த இடம் இது
மேல் பாட்டிலும் இங்கனே
முடி மேல் காகம் ஏற -என்றது பிணம் ஆக்கின படி
இவ்வரசன் திரு நறையூர் நம்பி பக்கல் வாள் பெற்று வெற்றி பெற்றான் என்பர்-

———————————————————–

பைங்கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கிப் பருவரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி  பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெங்கண் மா களிருந்தி விண்ணியேற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே—6-6-4-

பைங்கண்  ஆள் அரி யுருவாய் -பசுமையான திருக் கண்களை யுடைய நரசிம்ஹ ரூபியாகி
சிங்கத்துக்கு கண்ணில் பசுமை ஜாதி ஸ்வ பாவம் ஆதலால் பைங்கண் -எனப் பட்டது
வரம் பரு தோள் இரணியன் -பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களை யுடைய இரணியனை –
அன்றிக்கே –
பருவரைத் தோள் -பருத்த மலை போன்ற தோள் என்றுமாம்-

—————————————————————

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-5-

காவேரி சஹ்ய பர்வத்தில் நின்று பெருகும் போது வருமிடையே தடையாக நிற்கும்
மலைகளை யுடைத்து கொண்டு பெருகுகின்றமை -விலங்கல் பாய்ந்து -என்கிறார்

——————————————————————

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளி சேர் மூவுலகும் தானாய் வானாய்
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய் தானாயன் ஆயினான்  சரண் என்று உய்வீர்
மின்னாடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத்  தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-6-

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்-
ஸ்வ இச்சையாலே
தனது திவ்ய மங்கள விக்ரஹத்தை
உண்டு பண்ணிக் கொண்ட
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை யுடையனாய் –
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்-
தன்னுடைய சங்கல்பத்தாலே
ஸ்வ ஸ்வ ரூபத்தை மூன்று வகுப்பாக வகுத்துக் கொண்டவன்
தானான நிலைமையில் சம் ரஷித்தும் ப்ரஹ்மாதிகள் அந்தர்யாமியாய் சிருஷ்டி சம்ஹாரங்களை நடத்தியும்
தான் ஆயன் ஆயினான் –
இடையர்களில் ஒருவன் இவன் என் மகன் என்று அபிமாநிக்கும் படி கிருஷ்ணனாய்  வந்து திரு வவதரித்து அருளி
விளந்தை வேளை-சரியான பாடம் -ஊருக்கு விளந்தை என்னும் பெயர் என்பர்-
விளைந்தை வேளை விண் ஏற -விளைந்தை வேள் என்னும் ஓர் அரசனை வீர ஸ்வர்க்கம் அடையும்படி

—————————————–

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி  முது துவரைக் குலபதியாக் காலிப்  பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே-6-6-7-

முது துவரை -பிராசீனமான ஸ்ரீ துவாராபதிக்கு
இலை குழல் -இலையாலே செய்யப் பட்ட குழலை
கண்ணபிரான் திருவடிகளில் சேர வேண்டி இருப்பீர் ஆகில் இங்கே வந்து சேர்மின்கள்-

———————————————

முருக்கிலங்கு கனித்துவர்வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக்களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே —6-6-8-

முருக்கம் பூ போலவும்
விளங்குகின்ற கோவைப் பழம் போலவும்
சிவந்து இருக்கும் அதரத்தை  யுடைய நப்பின்னை பிராட்டிக்கு நாயகன்
இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு-புருஷ ஸூ க்தம் முதலிய பாகங்களை
வாயிலே யுடைய எட்டு புஜங்களை யுடைய ருத்ரன்
இந்த சோழன் சிவபக்தனாய் இருந்து வைத்து பிறகு பகவத் பக்தனாய் –
இச் சோழன் பல சிவாலயம் செய்ததாக சேக்கிழார்
செங்கணான் அந்தமில் சீர் சோணாட்டில் அகனாடுதொரு மணியார்
சந்தரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தான் -பெரிய புராணம்
முடிவில் திரு நறையூர் திரு மாலுக்கு அடியனாய்ச் சிறப்புற்றான் –
தர்ச நீயமான மாடங்கள் எழுபதும் சமைத்து
பின்னையும் தம்முடைய அபிமதம் கிடையாமையாலே
அவ் வபிமத சித்யார்த்தமாக -அவன் வந்து ஆஸ்ரயிக்கிற தேசம் -பெரியவாச்சான் பிள்ளை -ஸ்ரீ ஸூக்திகள் –

——————————————————-

தாராளன்  தண்ணரங்க வாளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்
பாராளர் அவரிவர் என்று அழுந்தை ஏற்றப் படைமன்னர் உடல் துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-9-

தேர் அழுந்தூரில் வந்து எதிர்ந்த மன்னரை வென்ற வீரம் சொல்லுகிறது-

————————————————–

செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி  யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே–6-6-10-

வியாச பதம் செலுத்த  வல்லவர்கள் வாழும் திவ்ய தேசம் -வேத வாணர் -வேத வாழ் நர்-வேதங்களைக் கொண்டு வாழ்பவர்
இத் திரு மொழியை உண்டியே உடையே உகந்தோடும் இம் மண்டலத்திலே அதிகரிக்குமவர்கள்
யமபடர்கள் கடும் சொற்களைக் கேட்டு வருந்த அவகாசம் இல்லாமல்
திரு நாட்டிலே புகுந்து -சூழ் விசும்பு அணி முகில் திருவாய் மொழிப் படியே
நித்யசூரிகள் தாழ இருந்து திருவடி விளக்கி   கொண்டாடும்படியான பெருமையைப் பெறுவார்கள்-

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -6-5-கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்-

March 27, 2015

இரண்டாவது திரு நறையூர் மங்களா சாசன திருப்பதிகம் —

கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடராய
வலங்கை யாழி இடங்கைச் சங்கம்    உடையானூர்
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே -6-5-1-

ஆஸ்ரித விரோதிகள் அஞ்சுவதற்கு உறுப்பாகவும்
ஆஸ்ரிதர்கள் பல்லாண்டு பாடுவதற்கு உறுப்பாகவும்
திருவாழி திரு சங்கு ஆழ்வார்களை ஏந்தி சேவை சாதிக்கிறான்
தனது பள்ளியான கடலையும் கடைந்து அமுதம் அளித்த மகா குணம் -முந்நீர் கலங்க கடந்து
நல்கு சோதிச் சுடராய் -அவன் திருமேனியில் பெற்ற புகர்-அமுதம் அளித்ததால் -தேவர்கள் துயரம் நீங்கப் பெற்றதால்
நலம் கொள் வாய்மை அந்தணர் -சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் -நன்மையாகவே
தலைக் கட்டும் சத்தியமே சொல்பவர்கள் –
அன்றிக்கே
உண்மை உரையான வேதத்தை சொன்னபடி -வேதம் வல்ல அந்தணர் வாழும் இடம் –

—————————————————————-

முனையார் சீயமாகி யவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட  வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே –6-5-2-

திரு நகங்களால் விரோதியைத் தொலைத்த புனிதன் வாழும் இடம்
செந்தளிர்களை குயில்கள் கொந்து கூவுதல் செய்யப் பெற்ற பூ மொட்டுக்கள் நிரந்த சோலைகளால் சூழப் பட்ட தேசம்
ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் அவகாஹித்து – -அனுபவித்து -அர்த்தங்களை உபன்யாசம் செய்யும் -உள்ளுறை பொருள்-

——————————————————-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே —6-5-3-

மள்ளர்க்கு -உழவர்களுக்கு
நானம் புதலில் -மஞ்சள்
வயல் வளத்தை யுடைய திரு நறையூர்-சேனைத் திரளை எல்லாம் பொடி பொடியாக்கி இலங்கா புரியைப் பாழ் படுத்தன பெருமாள் வாழும் இடம் –

——————————————————-

உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

பரத்வ சௌலப்யங்களை  வெளியிட்டுக்  கொண்டு சேவை சாதிக்கும் திவ்ய தேசம்

——————————————————

விடை ஏழ்  வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்ந்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி யொளிக்கும் நறையூரே-6-5-5-

தவழுகிற நடையினாலே நிலைத்து நின்ற இரட்டை மருத மரங்களை விழத் தள்ளினவன்
எருதுகளை வலி யடக்கி நப்பின்னை பிராட்டியை திரு மணம் செய்து அருளினவன் இவன்-

—————————————————-

பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல்  பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6-

பகுவாய் -பெரிய வாய்-

—————————————————-

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை யன்நான்று அளித்தானூர்
பொந்தில் வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி
நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே —6-5-7-

முந்து நூல் -அநாதியான வேத அஷர ராசி
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே   கொடுத்தான்
ஷத்ரிய ஜாதி என்பதால் வேதம் ஓத வேண்டுமே -பிராமணர் ஷத்ரியர் வைசியர் -த்விஜர்
முப்புரி நூல் ஈந்த -உப நயனம் செய்வித்த-

————————————————–

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம்
விள்ளச் சிந்துக் கோன் விழ ஊர்ந்த  விமலனூர்
கொள்ளைக் கொழு மீன்  உண் குருகோடிப் பெடையொடும்
நள்ளக் கமலத் தேறல் உகக்கும் நறையூரே –6-5-8-

சிந்து கோன் -சிந்து தேசத் தலைவன் ஜயத்ரதன்
அர்ஜுனன் தேர் குதிரைகள் வெண்ணிறம்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை  முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டு அருளர் -பெரியாழ்வார் -4-1-7

————————————————–

பாரையூரும் பாரந்தீரப் பார்த்தன் தன
தேரையூரும் தேவதேவன் சேருமூர்
தாரையூரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரையூரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே –6-5-9-

திருவவதரித்து பார்த்த சாரதியாய் இருந்து பூமி பாரங்களை எல்லாம் போக்கி  அருளினவன்
தாரையூரும் -பூவைத் தோற்கடிக்கும் தளிர்களை யுடைத்தான வேலியாலே சூழப் பட்டும்
தேன் ஒழுகு கின்ற வேலி என்றதாகவுமாம்-

——————————————–

தாமத் துளப நீண் முடி மாயன் தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை
சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே –6-5-10-

சகல சரா சரங்களையும் நிர்வஹிக்க வல்லவன் என்று திருத் துழாய் மாலை அணிந்த திரு அபிஷேகத்தை யுடையவன்
ஓதவல்லவர் களுக்கு   எம்பெருமான் எஞ்சான்றும் உடன் இருந்து வேண்டிய நன்மைகளை எல்லாம் செய்து அருளுவான் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-