பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-2-தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்-

இத் திரு மொழியும் திருத் தாயார் பாசுரம் –
திருக் கண்னபுரத் தம்மானை நேராக பார்த்து தனது பரிதபாத்தை பேசி -சில பாசுரங்கள் தன்னில் 
தான் நொந்து கொண்டு பேசுவதாக செல்லும் –

ஆழ்வார் யுடைய அளவுகடந்த அபி நிவேசமும் -அவனைப் பிரிந்து மேனி மெலிந்த படியும் அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்-

—————————————–

தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

ஸ்ரீ சௌரிப் பெருமாளை மடி பிடித்து கேட்கிறாள் திருத் தாயார்
தெள்ளியீர் -மகா விவேஹியாய் இருந்து -சர்வஜ்ஞ்ஞராய் இருந்து -அஜ்ஞ்ஞாநியான நான் உணர்த்த வேண்டி உள்ளதே
தேவர்க்கும் தேவா -உமது மேன்மைக்கு தகுமோ
திருத் தக்கீர் -ஒரு பெண்ணை விடாமல் மார்பில் கொண்டு இவள் கை வளையை கொள்ள வேண்டுமோ
வெள்ளியீர்-என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -பரம பவித்ரர் அன்றோ
யோர்த்தே சுசிஸ் சஹி சுசிர் ந ம்ருத்வாரி சுசிச் சுசி -பிறர் பொருளைக் கவராதவனே பரி சுத்தன்
மண்ணையும் நீரையும் கொண்டு பலகால் தேஹத்தை சுத்தி பண்ணுபவன் இல்லையே
வெய்ய -விரும்பத் தக்க -விழு -சிறந்த -வண்ணர் -தன்மை யுடையவர் அன்றோ
ஆசைப் பட்டார் அணைக்க அன்றோ உம்முடைய் திரு மேனி
நிதி அனைவருக்கும் சேம வைப்பு அன்றோ நீர்
தேவரீர் பிறர் உடைமையாய் இருக்க பிறர் உடைமையைக் கைக் கொள்ளலாமோ-ந தே நு ரூபா -ஸ்தோத்ர ரத்னம்

இவள் கள்வியோ -இல்லை இல்லை நீரே-

———————————————————

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-

ஆசார்ய  ஹிருதயம் -நிலா முற்றம் பிரஜ்ஞ்ஞா பிரசாதம் என்னும் எல்லை நிலம் –
மா முனிகள் வியாக்யானம் -நிலா முற்றம் ஆகிறது -உத்துங்கமாக நின்று சர்வத்தையும் தர்சிப்பைக்கு உறுப்பாக சொல்லப் படுவதாய்
அதிலே நின்ற தர்சித்த அளவிலே காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் என்கையாலே
ததீய விஷயமே பரம பிராப்யம் என்று பிறருக்கும் பிரகாசிக்கும்படி சரம அவதியான புருஷார்த்த ஜ்ஞானம் என்கை-
அவனைக் காட்டாமல் அவன் இருந்த தேசத்தைக் காட்டினதால் ததீய விஷயம் -என்றதாயிற்று
இதோ பாருமின் கை எடுத்து கும்பிடுமின் என்று பன்னி உரைக்க மாட்டாமல்
காணுமோ கண்ணபுரம் என்று மட்டும் சொல்லி மற்றதை ஹஸ்த முத்ரையால் பூரிக்கின்றாள்
காணும் ஒ -இது அன்றி கண் படைத்த பயன் இத்தையும் விலக்குவார் உண்டாவதே-

பாணன் -பாடுமவன்-பிரணய ரோஷம் தவிர்த்து சேர்ப்பிக்கும் ஆச்சார்யன்
நன்று நன்று நறையூர்க்கே-மீட்கப் பார்க்கும் நாம் தோற்றோம் -முதலிலே தனது வலையிலே அகப்படுத்திக் கொண்ட
நறையூர் நம்பி கார்யமே வென்றது-

———————————————-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

திரு மலை திரு நீர்மலை திரு மெய்யம் திருக் கண்ணபுரம் என்றே வாய் வெருவிக் கொண்டே இருக்கின்றாள்
பேசினவாறே நீர்ப்பண்டமாய் உருகுகின்றாள்
நெஞ்சு தளர்கின்றாள்
இப்படி இவள் ஆவதற்கு என் பாபமே தவிர வேறு என்ன ஹேது  என்கிறாள் –

—————————————————-

உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லைப்
பெண்மையும் சால நிறைந்திலள்  பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ -8-2-4-

பேதைப் பருவத்திலே உண்ணுவதும் உறங்குவதும் இல்லை
உறக்கமும் தான் இல்லை -என்றது உண்ணாமல் இருந்தாலும் உறங்காமல் இருப்பது அரிது என்பதால்
அஞ்சலி செய்வதே காயிக வியாபாரம்
திருமேநியைச் சிந்திப்பதே மானச வியாபாரம்-

————————————————

கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –8-2-5-

பெண்மை என் தன்னுடை -பாடமே வ்யாக்யானத்துக்கு சேரும்
பெண்மையும் தன்னுடை -பாடம் சேராது
பெண்மை -ஸ்த்ரீத்வம்
அதாகிறது ஏதேனும் ஓர் அவஸ்தை பிறந்தாலும்
உயிர் தோழிக்கும் கூட மறைக்கும் படி இறே இருப்பது –
அவளும் இவளுடைய வ்யாபாரங்களைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிற தசை இதுவாகாதே -என்று அறியும் இத்தனை இறே
ஆயிருக்கப் பெற்ற தாயான எனக்கும் வாய் விடா நின்றாள்
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –
இவள் உண்மை உரைக்கின்றாள் பெண்மை என் -என்று அந்வயம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடம் கொள்வது யாம் என்று பேசினாள் – என்று மேல் பாட்டில் சொல்லுகையாலே –
வெறுப்புக்கு சொல்லிய வார்த்தைகள் எரு போலே ஆனதே
இத்தனை சௌசீல்ய சௌப்லய குணங்களா நன்றாகத்தான் ஆசைப் பட்டோம்
அவனுடன் சம்ஸ்லேஷம் கிடைக்கட்டும் இல்லாமல் போகட்டும் ஆசைப் பட்டதே பாக்கியம் என்று இருக்கிறாள் –
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியனாகப் பெற்றோமே -என்ற
வ்யபதானங்களைக் கேட்ட மாத்ரத்திலே
அவ் உடம்போடு அணைந்தால் பிறக்கும் ஆஸ்வாசங்கள் அடைய பிறந்து சந்துஷ்டை யானாள் –
அவாப்த சமஸ்த காமனானவன்
ஒருத்தி உடைமையை ஆசைப் படுவதாம்
சர்வ சக்தனானவன் களவிலே இழிவதாம்
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியன் ஆவதாம்
இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறாள் –

கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் —பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ –
திவ்ய கீர்த்தி செவிப்பட்ட மாத்ரத்திலே கலவி பெற்றாலே போலே உகக்கிறாள்-

—————————————————–

வடவரை நின்றும் வந்தின்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே -8-2-6-

அனுகாரத்தாலே அருளும் பாசுரம்
இவருக்கு இதுவும் அர்ச்சையிலே நடக்குமே
வடக்குத் திருமலையில் இருந்து கீழை வீடுக்கு வந்து நித்ய சந்நிதி பண்ணிய சௌரி ராஜ பெருமாள்  நானே
மிக சிறுமி -அழகி -இவளை இவன் இப்பாடு படுத்துவது தகுமோ -திருத் தாயார் அநு பாஷித்து பின் அருளுகிறாள்

————————————————-

தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே –8-2-7-

தரங்க நீர் பேசினும் -கடல் கோஷித்தாலும்
தண் மதி காயினும் -நிலா காய்தலும்
விரஹிகளுக்கு இளைப்பை யுண்டாக்குமாயினும் இவள் இளைக்க கில்லள்-எத்தனை நாள் உருண்டது எள்கினாள்
மடவரல் மாதர் என் பேதை என்றாலும் -பல பல ஊழிகள்  ஆயிடும் -ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -போலே –
அன்றிக்கே
இரங்குமோ -இரங்கும் -ஒ -அந்தோ எத்தனை நாள் இருந்து கடல் கோஷத்தாலும் மதி சுடுவதாலும் கஷ்டப் படுகிறாள் என்றுமாம் –
திருவரங்கத்தை வாய் வெருவிக் கொண்டே இருப்பதே இவள் ஆசை -என்கிறாள் திருத் தாயார்-

——————————————-

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -8-2-8-

அப்ராப்த ஸ்தலத்திலே செங்கோல் நடாத்தும் அவன் அன்றோ
கார்க் கடல் வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது  என் கொலோ -என்கையாலே இவள் சிந்தை அவன் பக்கம் என்றும்
கண்ணபுரம் என்று பேசினாள்  உருகினாள் -என்கையாலே பேச்சும் அவன் திறத்திலே-என்றும்
கண்ணபுரம் தொழும் -என்கையாலே காயிக வியாபாரமும்
ஆக -சிந்தையாலும்  சொல்லாலும் செய்கையாலும் அவரையே விஷயீ கரித்து இருக்கின்றாள்
நான்கு வகை அதிகாரிகளும் உபாசித்து பேறு பெற்றதை கண்ட இவள் தானும் தகுதியாக தொழுது உய்யலாம் என்று கண்ணபுரம் தொழுகிறாள்
வண்டுலாம் கோதை என் பேதை -மதுவின் நசையால் வண்டுகள் மலர் சூடிய இவள் கூந்தலில் மொய்க்க அஞ்சும் பருவம் -பேதை
மணி நிறம் கொண்டு தான் -தன்னையே வணங்குவாருக்கு தன்னையே ஒக்க அருள் செய்ய வேண்டி இருக்க இவளது மணி நிறம் கொள்வது தக்கதோ
கோயின்மை செய்வது தக்கதோ -அரசர்களே வழி பறிப்பார்களா
கோயின்மை -கேட்பார் அற்ற அநீதிச் செயல்-

—————————————————-

முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-

தாய்க்கு அன்பு மிகுதியால் இளமையாகவே தோற்றுகிறாள்
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லள்  அல்லள்-பெரியாழ்வார் -3-7-1-
வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்று இலள்–மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே -பெரியாழ்வார் -3-7-2-
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில -பெரியாழ்வார் -3-7-3-
முலையோ முழு முற்றும் போந்தில மொய்ப் பூங்குழல் குறிய கலையோ அரையில்லை நாவோ  குழறும்  -திருவிருத்தம் -60
என் செய்கேன் -நியமிப்பேனோ-அனுவர்த்திப்பேனோ-விண்ணுளாரிலும் சீரியள் -என்று கை கோப்பி வணங்குவேனோ
நியமிக்காமல் அனுவர்த்திப்பதே -கை தொழுவதே என்கிறாள்
விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே -திரு நெடும் தாண்டகம்
கூழை -தலை மயிர்
தெள்ளியள்  -தெளிந்து வார்த்தை சொல்ல வல்லவள்
எண்ணப் பெறுவரே -நெஞ்சாலே நினைத்தாலும் பிராயச் சித்தம் செய்து கொள்ள வேண்டும் -என்றவாறு-

—————————————-

கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே  -8-2-10-

நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே   –
கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள்  –
இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன
பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ
பாவோ  நான்யத்ர கச்சதி -என்று திருவடி ராம குணங்களைக் கேட்டு அத்தாலே பூர்ணனாய் –
அத்தேசத்தே இருந்தால் போலே தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூரணராய் இருக்கப் பெறுவர்கள் –

—————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: