ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72—

எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

மனக்கு இத்யாதி –
மனசுக்கு ஏதங்கள் சாரா -பிரதிகூல நிரசன  ஸ்வ பாவனான எம்பெருமானையே தனக்குத் தஞ்சமாக இச் சேதனன் இசையில்-நிர்ஹேதுகமாக  தானே வந்து விஷயீ கரிக்கும்  –
எம்பெருமானை பொதுவாக நினையாதே எனக்குத் தஞ்சம் என்று தான் இசையில் அவனுக்கு மநோ துக்கங்கள் வாராது -என்றுமாம் –
இங்கனே இருக்க எனக்கே என்று லபித்தது –
சகல லோகங்களையும் தன சாசனத்திலே நடத்துகிற எம்பெருமான் தானே வந்து மேல் விழுந்து விஷயீ கரித்த ஐஸ்வர்யம் எனக்கே தான் –
எனக்கே தான் இன்று ஒன்றி –
மநோ வ்ருத்திக்கு அடியாக  ஏகாஸ்ரயனாக நின்று லோகங்கள் ஏழையும் சாசனத்திலே நடத்துகிற சர்வேஸ்வரன் –

——————————————————————

எம்பெருமானே  ரஷகனாக வல்லான்  என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈச்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62-

திரு நின்ற -இத்யாதி
பெரிய பிராட்டியார் நின்ற பஷம் வலிது என்று அனுசந்தியார்-நஷ்ட ஸ்ரீ கரான தங்களோடு ஒக்க -கர்ம வச்யராய் -கர்ம வாசம் பண்ணி –
சம்சரிக்கிற வற்றை உத்க்ருஷ்டமாக அறிவு கேடரைப் பார்த்து உபதேசியா நிற்பர்கள்
திரு விருந்த -இத்யாதி –
பெரிய பிராட்டியார் எழுந்து அருளித் திரு மார்விலே இருக்கையாலே ஸ்ரீ தரனனானவன் யுடையதாய்-வண்டுகள் இதஸ்தத சஞ்சரியா நின்றுள்ள
ஸ்ரமஹரமான திருத் துழாய் மாலையைச் சூடித் தரித்து –

————————————————————————–

நான் எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

தரித்து இருந்தேன் ஆகவே –
ஆகையாலே நான் தரித்து இருந்தேன் –
நஷத்த்ரங்களின் யுடைய ஸூப அஸூ ப நிமித்தமான பரஸ்பர சஞ்சாரத்தை  ஆஸ்ரிதர் பக்கல் யுண்டான-அனுக்ரஹ அதிசயத்தாலே ஜ்யோதிஸ் சாஸ்திர முகத்தாலே பரக்க அருளிச் செய்த-திரு வநந்த ஆழ்வானுக்கு அந்தராத்மாவான யுன்னை
போதாத் சங்கர்ஷண-அவன் மேல் கண் வளர்ந்து அருளுகிற உன்னை -என்றுமாம் –வென் நாகத்து   யுன்னை –
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –
தெரித்து -இத்யாதி –
அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும்
தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன்
தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –

————————————————————————–

அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

புஷ்பங்களை திருவடிகளிலே இட்டு ஏத்துங்கோள் –
கைக்கு எட்டிய பூக்களானவைகள் எல்லாவற்றையும் பணிமாறி நிர்மமரேத் திருவடிகளிலே விழுந்து புகழுங்கள் –
ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய்  –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப் போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –
சொல்லானை -சப்த மாதரம் –

————————————————————————–

ஸ்மர்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே பரமபத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார்
அன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய
ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

சூது இத்யாதி –
உறுவது என்னுடைய ஹ்ருதயத்திலே ஆராய்ந்தேன் –
சொல்மாலை இத்யாதி -அழகியனாய் ஸ்ரீ யபதியாய் ஆஸ்ரிதர் பக்கல்  வ்யாமுக்தனானவனை ஏதேனும் சொல் மாலைகளை வல்ல வாசித்து இருக்கிற
எனக்கு பரமபதத்தில்  இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –
மாதென்று அழகாய் –மாதாய என்றது அழகு என்றும் -அழகுக்கு ஆஸ்ரயம் என்றும்
இரண்டு இன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் -என்கை-
அன்றிக்கே
மாதாய மாதவனை என்றது -தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –
இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –
தம்முடைய திருவந்தாதி
மாதாய –
மாதாவாய்
மாயவனை என்று பாடமாய்
ஆச்சர்ய குண  சேஷ்டிதங்களை உடையவன் -என்றுமாம்-

————————————————————————–

நான் எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்
அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66-

இடம் இத்யாதி –
இப்போது எல்லாம் இடமாவது என்னுடைய ஹிருதயம்
தன்னோட்டை ஸ்பர்ச  ஸூகத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு-
திடம் இத்யாதி –
கலா மாத்ரமான சந்த்ரனைத் தலையிலே  யுடையனான ருத்ரனோடே கூட ப்ரஹ்மாவை ஒரு சரக்காக மதியேன்  –
வையேன் ஆட்செய்யேன் –
வையேன் என்று கூரியேன் என்றுமாம்
செய்யேன் வலம் –
அனுகூல வ்ருத்திகளும் செய்யேன்-

————————————————————————–

நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை -பஹூ குணனான எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் –
நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இ றே என்கிறார் ஆகவுமாம் –
இங்கனே  என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67-

வலம் இத்யாதி –
வலமாகிலும் ஆகிறது -பல ஹாநி யாகிலும் ஆகிறது
நாள் தோறும் ஆபிஜாத்யம் உண்டாகிலும் உண்டாகிறது –
அன்றியே குற்றமாயிடுக –
நலமாக நாரணனை -இத்யாதி –
சர்வேஸ்வரனாய் நாக்குக்குப் பதியாய் ஞான ஸ்வ ரூபனாய் குணங்களுக்கு ஆச்ரயமாய் இருக்கிறவனை ஏத்தும் பிரகாரம் –
அன்றிக்கே நாரணனை இத்யாதிக்கு
சர்வேஸ்வரனாய் என்னுடைய நாவுக்கு ப்ரவர்த்தகனாய் என்னை ரஷிக்கைக்கு உறுப்பான அறிவால் மிக்கு இருக்கிற ஸ்ரீ தரனை என்று பொருளாகவுமாம் –

————————————————————————–

யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார்

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

திறம்பேல்- இத்யாதி –
சொல்லுகிற வார்த்தையைத் தப்பாதே கொள்ளுங்கோள்  –
ஸ்வாமி யுடைய திரு நாமத்தை ஒருகால் கற்றுப் பின்னை மறந்தார்களே யாகிலும்
இதர தேவதைகளை தொழாத மனுஷ்யர்களை பாபம் பண்ணினாரை தமிக்கக் கடவ யமன்
தன்னுடைய தூதரை அழைத்துச் செவியிலே  -வைஷ்ணவர்களைக் கண்டால் வணங்கி சாதுக்களாய் போருங்கள்-என்கிறான் –
செவியிலே சொல்லுகிறது தன் கோஷ்டியிலும் அகப்பட அவர்களிடையாட்டம் ராஜ தார ப்ராவண்ய நிஷேதம்  போலே சொல்லக் கடவன் அல்லாமையாலே
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம  தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்  ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம்  ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம்  தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே  மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –

————————————————————————–

செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்
பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே  கிடிகோள்-

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

இல்லாதன இட்டுச் சொல்ல வேண்டாதே பூரணமாக என் கவிக்குப் பிரதிபாத்யனானவனைப் பெற்றேன்-ஆராயில் வேதார்த்தமும் அத்தனையே-

————————————————————————–

இஜ் ஜகத்துக்கு எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

தான் இத்யாதி –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக
நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்
இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

————————————————————————–

எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு  கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –

————————————————————————–

ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் –
இவ்வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

இல்லறம் -இத்யாதி
இல்லறம் -கார்ஹச்த்ய தர்மம்
இது கர்ம யோகத்துக்கு உப லஷணம்-
அன்றாகில் ஞான யோகம் ஸ்தானம் என்கிற சொல்லும் மற்றும் உபாயமாகச் சொல்லுகிறவையும் சொல்ல வல்ல
நல்லறம் -இத்யாதி
கர்ம யோகாத் யுபாயங்கள் எல்லாம் சர்வேஸ்வரனே யாம் இத்தனை –
இத்தை அன்று என்ன வல்லார் ஆர் –
அல்லறம் அல்லனவும் சொல் அல்ல –
மற்றும் இதிஹாச புராணங்களாலும் பகவத் சாஸ்த்ராதிகளாலும் சொல்லுகிற உபாயங்களுமாய்த் தலைக் கட்ட மாட்டாது –
நல்லறம் இத்யாதி
நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –
அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
அன்றிக்கே
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத்  -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும்
இவை இ றே அவர்கள் வார்த்தை –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: