Archive for January, 2015

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம்-ஆரண்ய -30-39-/அஸ்மின் மயா சார்த்த முதார-ஆரண்ய -63-12–

January 20, 2015

தம் த்ருஷ்ட்வா ஸத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஆரண்ய -30-39-

தம் த்ருஷ்ட்வா -அவ்விராமனைப் பார்த்து
ஸத்ரு ஹந்தாரம் -எதிரிகளை அழித்தவரும்
மஹர்ஷீணாம்  ஸூகாவஹம் -மகார்ஷிகளுக்கு ஸூ கம் அளிப்பவருமான
பபூவ -சத்தை பெற்றாள்
ஹ்ருஷ்ட்வா -ப்ரீதி அடைந்தாள்
வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே-ஸீதா பிராட்டி கணவனான அவரை நன்கு தழுவினாள்-

அவதாரிகை –
சதுர்தச சஹஸ்ராணி ரஷசாம்  பீமா கர்மாணாம் ஹதான் ஏகேன மாநுஷேண பதாதி நா-ஆரண்ய -26-35-இதி பிரக்ரியையாலே
ராஷச வேட்டை யாடின பெருமாளுடைய யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியில்
ராஷச சர வ்ராத வ்ரணாரோபண திவ்ய ஔஷதமான காடா லிங்கனத்தைப் பண்ணி
பிராட்டி சத்தை பெற்றாள் -என்கிறது –

1-தம்-
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்படி
ராஷச பூயிஷ்ட மான தேசத்தில் உன்னைக் கொண்டு போக அஞ்சுவேன் -என்றவரை –
2-தம் –
ஸ்தரியம் புருஷ விக்ரஹம் -அயோத்யா -30-3- என்று பிராட்டி வாயாலே அநநுமதமாக ஆண்ட அன்று துடங்கி திரு உள்ளத்திலே கருவி இருந்தது –
பதினாலாயிரம் ராஷசரையும் முடியும் உடலுமாகத் தறித்து
உதிர வெள்ளத்திலே  மிதக்க விட்டுப்
பிராட்டியைக் கையைப் பிடித்துக் கொண்டு காட்டினவரை
3-தம் –
ஆதித்ய இவ தேஜஸ –சுந்தர -34-28-இத்யாதிப்படியே
வீரப்பாட்டுக்கு சிறு விரல் முடக்கும் படி அவதீர்ணரானவரை
4-தம் –
படுக்கைத் தலையிலே விடு பூ விழுந்து திரு மேனி சிவக்கும் சௌகுமார்ய அதிசயத்தை யுடையவரை
5-தம்-
உகப்பாலே அடுத்துப் பார்க்கில் நாயனமான தேஜஸ் ஸூ க்கும் அசதானமான திரு மேனியை யுடையவரை –
6- தம் –
ரிஷிகளுக்குபண்ணின பிரதிஜ்ஞ்ஞையை கடலோசை யாகாத படி தலைக் கட்டுகையாலே
பூர்ண மநோ ரதரானவரை
7- தம் –
ரத்ன கசிதமான பொன்னரி மா மலை போலே சத்ரு சர வ்ராத வ்ரஹாங்கிதமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவராய் உள்ளவரை –

1-த்ருஷ்ட்வா –
கருமுகை மாலையைப் பன்னீரிலே தோய்த்து எடுப்பாரைப் போலே
யுத்தாயாச பரிஸ் விந்னமான திரு மேனியைத் தன பார்வை யான பன்னீராலே வழிய வார்த்து –
2- த்ருஷ்ட்வா –
ஆதாபிபூதருடைய சீத தடாகப் பிரவேசம் போலே
ராஷசாச நிகராபி பூதமான திருமேனியைத் தன் பார்வை யாகிற
பூர்ண தடாகத்திலே தோய்த்து எடுத்து –

ஸத்ரு ஹந்தாரம் –
ப்ரதிபஷ நிரசனத்தாலே வந்த புகருடைமை
சமோஹம் சர்வ பூதேஷு -ஸ்ரீ கீதை -9-29-என்கிற பெருமாளுக்கு சத்ருக்கள் உண்டோ என்னில்
ஜ்ஞாநீ த்வாத்மைவ -ஸ்ரீ கீதை -7-18-
த்விஷ தன்னம் ந போக்தவ்யம் த்விஷ நதம்நைவ போஜயேத் பாண்டவான்
த்விஷசே ராஜன்  மம ப்ராணா ஹி பாண்டவா -பாரத -உத் 74-27-இத்யாதிகளாலே
ஆ ஸ்ரீ த விரோதிகள் தனக்கு விரோதிகளாம் அத்தனை இ றே-

1-மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்-
யுத்த ப்ராரம்பம் துடங்கி கிம் பவிஷ்யதி -என்று வயிறு பிடித்து
துக்கிதராய் இருந்த மஹா ரிஷிகளுடைய பயம் தீர
சத்ருக்கள் அடங்கக் கொன்று
அவர்களுக்கு ஸூ காவஹராய் இருப்பவரை –
2-மஹர்ஷீணாம்  ஸூகாவஹம்–
தம்முடைய போஷ்ய குடும்பத்துக்கு ஸூ கத்தைப் பண்ணி
தம்முடைய -பிராட்டியையும் சேர்த்து –
சத்திக்கு ஆபாதகரனவரை-

பபூவ –
மாலையும் மனமும் போலே அத்யந்தம் ஸூ குமாரரான விக்ரஹத்தையும்
ஸ்வபாவத்தையும் யுடைய பெருமாள் –
கடிந காத்ர ஸ்வ பாவரான முரட்டு ராஷசரோடேயுத்தம் ப்ராரம்பித்த போது துடங்கி –
பிரேம அதிசயத்தாலே மாண்டு கிடந்த பிராட்டி
திரு மேனியிலே தீங்கு இன்றியிலே நின்ற பெருமாளைக் கண்டு சத்தை பெற்றாள் -என்கிறது-

-ஹ்ருஷ்ட்வா-
தர்மி யுண்டானால் தர்மம்  பிறக்கக் கடவது இ றே
ராம சௌந்த்ர்யத்தைமுழுக்கக் கண்டு திரு உள்ளம் ஈடுபட்ட படி –

1-வைதேஹீ –
ஐயர் வயற்றிலே பிறந்திலேன் ஆகில் எனக்கு இப் பேறு இல்லையே
2-வைதேஹீ –
இக்குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப்பிடியாரே –
3-வைதேஹீ –
இந்நிலத்தில் பிறந்திலேன் ஆகில் இவ்வில்லோட்டை சௌ ப்ராத்ரம் கிடையாதே –
அவில்லோட்டை சௌ பிரார்த்ரம் இல்லையாகில் வீர்ய ஸூ ல்கையாக -இவ்விவாஹம் -இவ்வாகாரம் -கூடாதே
4-வைதேஹீ –
தநுர் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்த ஐயர்
இந்த ஆகாரம் கண்டால் என்ன படுவரோ –
5- வைதேஹீ –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்றபடியே
சர்வ லோக ஆகர்ஷகமான இந்நிலையை ஐயரை ஒழிய நான் காண்பதோ என்று பித்ரு ஸ்ம்ருதி பண்ணுகிறாள்-

பர்த்தாரம் –
பாணிக்ரஹண வேளை துடங்கி பதித்வ பிரதிபத்தி பண்ணிப் போந்தாள்-
இப்போது இ றே தாத்வர்த்தம் ஜீவித்தது-

பரிஷஸ்வஜே-
சஸ் வஜே -ஆலிங்கனம் பண்ணினாள்-
1-பரிஷஸ்வஜே–பரி பூரணமாகத் தழுவினாள்
2-பரிஷஸ்வஜே–பர்யாப்தமாகத் தழுவினாள்
தழும்பு மாறும் அளவும் தழுவினாள்
சரவ் ரணங்களாலே வந்த தழும்பு எல்லாம் மாறும் அளவும் திரு முலைத் தடத்தாலே வேது கொண்டாள் –
தான் கை கண்ட மருந்து இ றே
சர வ்ரணங்களுக்கு ஆலிங்கனமாம் இடத்தில் ஐந்தோடு ஐநூறோடு வாசி இல்லையே –
அந்தரங்கர் உள்ளுற எய்த புண்ணுக்கு மருந்தான இது .
தோல் புரை எய்த புண்ணுக்கு மருந்தாகச் சொல்ல வேணுமோ -என்று இருந்தாள்-
ஒரு கொடியாகில் கொள் கொம்பைத் தழுவி அல்லது நில்லாதிறே-

பர்த்தாரம் பரிஷஸ்வஜே –
நித்ய சம்யோக ஸ்திதி ரூபமான பர்த்ருத்வாகாரம் ஒரு கொள் கொம்புக்கு உண்டானால் –
கோல் தேடி யோடும் கொழுந்து -இரண்டாம் திரு -27-
ததாதாரமாய்க் கொண்டு கொள் கொம்பை மூட்டப் படர்ந்து அத்தைச் சிறப்பித்துக் கொண்டல்லது
ஸ்வரூபம் இல்லையே பார்யாத்வா காரமான கொடிக்கு-
பர்த்தாரமவ லம்ப்யைவ பார்யாயா ஸ்திதி ரிஷ்யதே
அவலமப்யதருமம் வல்லி ஸ்தீயதே ந வினா த்ருமம்-என்னுமா போலே –

தம் -என்கிற பதம் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் காட்டுகிறது
த்ருஷ்ட்வா -என்கிற பதத்தால் பெருமாளுடைய சர்வாகாரங்களையும் நோக்கிக் காணக் கண்ணுடையாள் பிராட்டி -என்கிறது –
சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ கவாஹம் -என்கிற பதங்களாலே
தன்னோடு குடல் துவக்கு யுண்டான சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தியையும்
இஷ்ட பிராப்தியையும் பண்ணின போது அல்லது இவரைக் -இவனைக் -இவளைக் -காண கண்ணில்லை -என்கிறது
பபூவ -அத்தலைக்கு அதிசய அவஹையாய் சத்தை பெற்ற படி
ஹ்ருஷ்டா -ஸதிதர்மிணி தரமாச் சிந்தயந்தே -தர்மியான தான் சத்தை பெற்ற பின்பு தர்மமான உகப்பு தானாகவே யுண்டாயிற்று
பர்த்தாரம் -தன் கார்யம் சுமந்து நடத்தினார் என்கிறாள்
தன் கார்யம் சுமந்து நடத்துகை யாவது
பிதுர் தச குணம் மாதா -என்கையாலே -தன் புத்திர ரஷணம் பண்ணுகை இ றே
பரிஷஸ்வஜே -ஆ ஸ்ரீ த ரஷணத்தால் வந்த களிப்புக்கு போக்கு வீடு
ஆலிங்கனம் போலே இருந்தது
அவருக்கும் பிரயோஜனம் அது போலே காணும் –

————————————————————————————————————————————————————————–

அஸ்மின் மயா சார்த்த முதார  ஸீலா-சிலாதலே பூர்வமுபோப விஷ்டா
காந்தஸ்மிதா லஷ்மண ஜாதஹாசா த்வாமாஹா ஸீ தா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய -63-12-

அஸ்மின் -இந்த
மயா சார்த்த -என்னோடு கூட
முதார  ஸீலா-உடம்பு கொடுப்பதில் உதாரத் தன்மையை உடையவளாய்
சிலாதலே -பாறையின் மேலே
பூர்வமுபோப விஷ்டா–பூர்வம் உபோபவிஷ்டா முன்னதாகவே -நாலா புறமும் மாறி மாறி உட்காருமவளாய்
காந்தஸ்மிதா -இனியபுன்சிரிப்பை யுடையவளான
லஷ்மண-லஷ்மணனே
ஜாதஹாசா -பெரிய சிரிப்பை யுடையவளாகி
த்வாமாஹா -உன்னை நோக்கி
ஸீ தா -ஸீ தா தேவி
பஹூ வாக்ய ஜாதம் -பலவிதமான வசன சமூகங்களைச் சொன்னாள் –

அவதாரிகை –
முன்பு தாமும் பிராட்டியும் ஜல  க்ரீடாடிகள் பண்ணி சரசமாகப் பரிமாரிற்றோர் இடத்திலே
பிராட்டியைப் பிரிந்து தாமும் இளைய பெருமாளுமாய் தேடிக் கொண்டு வாரா நிற்கச் செய்தே
அவ்விடத்தைக் கண்டு இளைய பெருமாளைப் பார்த்து அருளிச் செய்கிறார் –

அஸ்மின் –
இப்படி வெறும் தரையாய் இருக்கிற இடத்திலே காண் அன்று நாம் எடுப்பு எடுத்தது
மயா சார்த்தம் –
ப்ரணய தாரையில் தம்மைத் தாமே சால மதித்து இ றே இருப்பது
நாமும் கூட காண வந்த சோழரோ பாதியாகக்  கடக்க நிற்கும்படி
அவளுடைய அளவுடைமையும் விதக்தமாக பரிமாறின படியும் காண் –
உதார  ஸீலா-படை வீட்டில் இருந்த நாள் மாமனார் மாமியார்க்கு கூசிப்
படி விடுவாரோபாதி அளவுபட வாயிற்று போகம் செல்லுவது
இப்போது அவ்வளவு அன்றிக்கே ஏகாந்த ஸ்தலம் ஆகையாலே
தன்னை முற்றூட்டாக சர்வ ஸ்வ தானம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள் ஆயிற்று
சிலாதலே பூர்வம் -ஜலக்ரீடை பண்ணுகிற தோர் இடத்திலே சிலா தலமாய்
இளைத்த இடத்திலே ஏறுவதாகப் பெருமாள் முற்கோலிக் கணிசிக்க
ப்ரேஷி தாஜ்ஞாச்து கோசலா -என்கிற அதிலேயும் ஒரு சம்பந்தம் உண்டு இ றே இவளுக்கு
அத்தை இவருடைய இங்கிதாதிகளை கொண்டு அறிந்து
இவரை இளைப்பிக்க வேணும் என்று பார்த்து பெருமாள் ஏறுவதாகக் கணிசித்த  துறையை அடைத்துக் கொண்டு இருந்தாள்
உபோப விஷ்டா-அப்படியே இருக்கும் இறே ஏற்றம் –

காந்தஸ்மிதா –
வெறும் புறத்திலே தானே துவக்க வல்லவள் –
முறுவலைச் சேர்த்தால் போலே யாயிற்று முகம் தான் இருப்பது
அதுக்கு மேலே பிறந்த வெற்றியாலே ஜாதஹாசை யானாள் ஆயிற்று –

த்வாமாஹ-
இதுக்கு முன்பு தொடங்கினவற்றில் தலைக் கட்டாதே  மீளுமதில்லை இ றே
அத்தாலே லஜ்ஜித்து கவிழ்  தலை இட்டார் பெருமாள்
அவரை விடா -அவரைப் போரப் பொலியச் சொல்லிக் கொண்டாடும் இளைய பெருமாள் முகத்தைப் பார்த்தாள்-
பாரீரோ தம்பியீர் நீங்கள் நினைத்தது எல்லாம் தலைக் கட்டினி கோள் இ றே
நீங்கள் வல்ல வலிய ஆண் பிள்ளைகள்
நாங்கள் பெண் பெண்டுகள்
நீங்கள் வேட்டைக்கும் வினைக்கும் போய் வியாபாரிக்குமவர்கள் –
நாங்கள் வீடு விட்டுப் புறப்பட்டு அறியோம் தலைக்  கட்டலாம் இ றே
உங்கள் தமையனார் வென்றார் இ றே
என்று பஹூ முகமாகக் கொண்டு இவ்வார்த்தை அருளிச் செய்தாள் ஆயிற்று-

——————————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந தர்மஜ்ஞேந-ஆரண்ய -16-29-/தருனௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ-ஆரண்ய -19-14–

January 19, 2015

பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந  தர்மஜ்ஞேந  ஸ லஷ்மண
த்வயா புத்ரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம–ஆரண்ய -16-29-

பாவஜ்ஞேந -நினைவை அறிந்தவனாய்
க்ருதஜ்ஞேந  -தந்தை ராமனுக்குச் செய்தவற்றை அறிந்தவனாய்
தர்மஜ்ஞேந –
சேஷத்வ தர்மத்தை அறிந்தவனாய்
ஸ லஷ்மண-
த்வயா -உன்னாலே
புத்ரேண -நரகத்தில் இருந்து ரஷிக்கும் புத்ரனான
தர்மாத்மா -மஹா தார்மிகரான
ந சம்வ்ருத்த பிதா மம–எனக்கு தந்தையார் இறந்து போக வில்லை –

அவதாரிகை –

ஸ்வயம் து ருசிரே தே சே க்ரியதாம் இதி மாம் வத-ஆரண்ய -15-7-என்று சொல்லுகிறவர் இ றே இளைய பெருமாள்
இப்படிச் செய்ய வல்ல நீர் நம்மைக் கேட்டது என் -என்கிறார்
பர்ண சாலையைச் சமைத்த அநந்தரம் சொல்லுகிற வார்த்தை இ றே –

பாவஜ்ஞேந –
அல்லாதவை சொன்னாலும்
தாமும் பிராட்டியுமாய் ஏகாந்தமாய் இருக்கும் இடங்கள்
சமைக்கும் படி இளைய பெருமாளுக்கு பெருமாள் அருளிச் செய்யார் இ றே
நெஞ்சாலே நினைக்கும் அத்தனை இ றே
இந்நினைவு அறிந்து செய்தார் –

க்ருதஜ்ஞேந  –
அதுவே அன்றிக்கே -செய்து போரும்படி அறிந்து செய்தார்
அறுபதினாயிரம் ஆண்டு ஜீவித்த சக்ரவர்த்தி நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவன் ஆகையாலே
இவர் என் நினைத்து இருக்கிறாரோ என்று நினைவை ஆராய்ந்தும்
இவர்க்கு எத்தாலே என்ன குறை வருகிறதோ என்று பொருந்தும் இடங்கள் பார்த்தும்
அவன் செய்து போரும் அடைவு அறிவார் ஆயிற்று –
தர்மஜ்ஞேந  –
நினைவு அறிந்தாலும்
செய்து போரும் அடைவு அறிந்தாலும்
தானும் ராஜ புத்ரனான பின்பு -எனக்கும் ஓர் இருப்பிடம் வேண்டாவோ -என்று இருக்குமவனுக்கு
இது செய்ய ஒண்ணாது  இ றே
அங்கன் அன்றிக்கே
அத்தலையிலே தாதர்யத்தமே நமக்கு ஸ்வ ரூபமான பின்பு
பின்னை அத்தலைக்கு உறுப்பாக செய்து போருமதே நமக்கு வகுத்தது என்று
அத்தலைக்கு செய்யும் அத்தையே தமக்கு கர்த்தவ்யம் என்று இருப்பர்-
ஸ லஷ்மண த்வயா –
தாம் உள்ளவன்று தாம் உளராய்
தாம் போன வந்ற்றைக்கும் உம்மை வைத்துப் போனாரே -என்கிறார் –

புத்ரேண –
புத-என்று ஒரு நரக விசேஷமாய் அதில் புகாதபடி நோக்கும் என்று ஆயிற்று புத்ரன் என்று பேராகிறது-
ஐயருக்கு நம்முடைய அபிமதி சித்தி இன்றிக்கே ஒழிகை –
தனக்கு மேற்பட நிரயம் இல்லை இ றே
அவர்க்கு அது வாராதபடி நோக்குகிறீர் நீர் இ றே-

தர்மாத்மா –
சக்ரவர்த்தி பிரச்துதன் ஆனவாறே நம் ஐயரை ஒப்பார் உண்டோ
அவரும் ஒருவரே
தாம் இருந்த நாள் நாம் வேண்டுவன எனக்குச் செய்து
தாம் போன அன்று நமக்கு வேண்டுவன செய்கைக்கு உம்மைப் பெற்றுத் தண்ணீர் பந்தல் வைத்துப் போவதே –

மம-
இருவருக்கும் பிதாவானமாய் ஒத்து இருக்கச் செய்தே
மம -என்கிறார் ஆயிற்று
அவர் நமக்குச் செய்யுமத்தை நீர் இருந்து செய்கையாலே நாம் அவரை இழந்திலோம்-நீர் இழந்தீர் ஆகில் இத்தனை இ றே –

——————————————————————————————————————————————————————-

தருனௌ ரூபசம்பன்னௌ ஸூகுமாரௌ மஹாபலௌ
புண்டரீக விசாலாஷௌ சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ–ஆரண்ய -19-14-

தருனௌ -வாலிபர்களாய்
ரூப சம்பன்னௌ -அழகு நிறைந்தவர்களாய்
ஸூகுமாரௌ -மிகவும் மிருதுவான தன்மையை யுடையவர்களாய்
மஹாபலௌ-பெரிய பலத்தை யுடையவர்களாய்
புண்டரீக விசாலாஷௌ-தாமரை போல் பரந்த கண்களை யுடையவர்களாய்
சீரக்ருஷ்ணாஜிநாம் பரௌ-மரவுரியையும் மான் தோலையும் உடுப்பாக யுடையவர்களாய் –
ராம லஷ்மணர்கள் இருக்கிறார்கள் –

அவதாரிகை –

ஸ ஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி
-அர்த்திதோ மா நுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸ நாதன-அயோத்யா -1-7-என்கிறபடியே
தச கண்ட குண்டித சக்திகளான தேவர்கள் ராஷசர்கள் உடைய ரஜஸ் ஸைப் போக்கும்படி
ரஜோ தூஸரமான வடிவுகளும்
ராஷச ஸ்திரீகள் மாங்கல்யங்கள் வாங்கும்படி கழுத்திலே கட்டின கப்படங்களும் -தோற்றவர்கள் கழுத்தில் அணியும் சக்கரங்கள் –
ராவண பந்தி க்ருதைகளான தங்கள் ஸ்திரீகளுடைய விரித்த தலை
விமுக்த்த கேச்யோ துக்கார்த்தா -யுத்த -115-2-என்று ராஷசிகள் தலையிலே யாம்படி தாங்கள் விரித்த தலை மயிரும்
ஹா புத்ரேதி ஸ வாதிந்யோ ஹா நாதேதி ஸ சர்வச -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் முகங்களிலே விலாபாஷாரங்களாம்படி தங்கள் முகங்களிலே ஸ் புரிச்கிற சரணஷா ரங்களும்
உத்த்ருத்ய சபு ஜௌகாசித் -யுத்த -113-9-என்கிறபடியே
அவர்கள் கையெடுத்துக் கூப்பிடும்படி தாங்கள் கொடுத்த அஞ்சலி புடங்களும்
ஸ்நாபயந்தீ முகம் பாஷ்பைஸ் துஷாரைரிவ பங்கஜம் -யுத்த 113-10-என்கிறபடியே
அவர்கள் கண்களிலே கண்ணீர் பாயும்படி தாங்கள் கண்ணும் கண்ணீருமாய்
தஸ்மின் நவசரே தேவா பௌலச்த்யோ பப்லுதா ஹரிம்
அபி ஜக்மூர் நிதாகார்த்தா சாயா வ்ருஷமிவாத் வகா -ரகுவம்சம் -10-5-என்றும்
சகோரா இவ சீதாம் ஸூம் சாதகா இவ தோயதம்
அத நா இவ தாதாரம தேவா ஜக்மூர் சனார்த்த நம – என்றும் சொல்லுகிறபடியே
அஸ்வத் ராந்தர் ஆனவர்கள் சாயா வ்ருஷத்தை சென்று சேருமா போலேயும்
சகோரங்கள் ஆனவை சரச் சந்த்ரனை அணுகுமா போலேயும்
சாதகங்கள் ஆனவை வர்ஷூக வலா ஹகங்களை சென்று கிட்டுமா போலேயும்
தரித்ரரானவர்கள் தாத்தாவைச் சென்று கிட்டுமா போலேயும்
ஸ்ரீ யபதியைச் சென்று கிட்டி
தம ப்ருவன் ஸூ ரா சர்வே சமபிஷ்டூய சநநதா-பால -15-17-என்று
ஸ்தவ ப்ரியனானவனை ஸ்தோத்ரம் பண்ணுவார்களாக தொடங்கி
சதைக ரூப ரூபாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1- என்று அவிக்ருதரான தேவர்
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா -திருவாய் -7-5-2- என்கிறபடியே
அழிவுக்கிட்டு
த்ரிபாத் விபூதியிலே இருக்கக் கடவ தேவர்
சதுஷபாத்தாய் ஹிரண்யா ஷஷபணம் பண்ணிற்றும்
கேவலம் த்ரியக்த்வத்தாலே போராது என்று நரம் கலந்த சிங்கமாய் ஹிரண்ய நிரசனம் பண்ணிற்றும்
மஹதோ  மஹீயான் -என்கிற வடிவைக் குறள் உருவாக்கி
அல்லி மலர் மகள் போக மயக்குகளை -திருவாய் -3-10-8-மறந்து ப்ரஹ்ம சாரியாய்
தத் யாந்ந ப்ரதிக்ருஹ்ணீயாத்  ந ப்ரூயாத் கிஞ்சித ப்ரியம்
அபி ஜீவித ஹேதோர் வா ராம சத்ய பராக்ரம -சுந்தர -33-26-என்றும்
கோ சஹச்ர ப்ரதாதாரம் -யுத்த -21-8- என்றும்
அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப் புள் தனிப்பாகன் -திரு நெடு -6- என்றும் சொல்லுகிறபடியே
ப்ரஹ்மாத் யனேகா பதப்ரதரான தேவர்
மகாபலி பக்கலிலே பதத்ரயத்தை அர்த்தித்தும்
ப்ராஹ்மாணோஸ்ய முகம் ஆஸீத் பாஹூ ராஜன்ய க்ருத-புருஷ ஸூ க்தம் -என்று
ப்ரஹ்ம ஷத்ரங்களுக்கு உத்பாதகரான தேவர்
பித்ர்யமம் சமுபவீத லஷணம் மாத்ரு  கஞ்ச தநு ரூர்ஜிதம் தத்த -ரகுவம்சம் -11-64- என்கிறபடியே
ஜமதக்நி ரேணுகைகள் பக்கலிலே ப்ரஹ்ம ஷத்ரியராய் வந்து தோன்றி இருப்பத்தொரு கால் துஷ்ட ஷத்ரியரைப் பரசுவுக்கு ப்ராதரசநம் ஆக்கிற்றும்
பக்தாநாம் -ஜிதேந்தே -என்றும்
வரத சகல   மேதத் சமச்ரிதார்த்தம சகரத்த -ஸ்ரீ வர ஸ்தவம் -68-என்றும்
அடியோங்களுக்காக அன்றோ என்று ஸ்தோத்ரம் பண்ணி
சாபமா நய -யுத்த -21-22-என்று கையிலே ஆயுதம் எடுக்கும் படி
தங்களுடைய வஜ்ர பரசு தண்ட பாசாத்யா யுதங்களை பொகட்டும்
அவன் சாகரம் ஷோஷயாமி -யுத்த -21-22- என்னும்படி கண்ணீரைக் காட்டியும்
ஸூ கிரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -4-19-என்றும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -19-30-என்றும்
அவன் சரணம் புகும்படி தாங்கள் சரணம் புக்கும்
அஞ்ஜலிம் ப்ராங்முக க்ருத்வா -யுத்த -21-1-என்று அவன் அஞ்சலி பண்ணும்படி தாங்கள் அஞ்சலி பண்ணியும்
ப்ரஸீ தந்து பவந்தோ மே-ஆரண்ய -10-9- என்று அவன் ஸ்தோத்ரம் பண்ணும் படி தாங்கள் ஸ்தோத்ரம் பண்ணியும்
சர்வே சந்நதா-பால -15-17-என்று தமையனான இந்த்ரனும் முர்பாடநாம் படி திருவடிகளிலே நம்ரராய்
ந நமேயம் -யுத்த -36-11-என்று இருக்கிறவர்களை தலை அழித்துத் தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
பரமகாருணிகனான சர்வேஸ்வரனும்-நித்ய அநபாயிநியான பிராட்டியும்
பிதரம் ரோசசயாமாச ததா தசரதம் ந்ருபம்-பால -15-21- என்றும்
ஜன்கச்ய குலே ஜாதா-பால -1-27- என்றும் சொல்லுகிறபடியே
தாம் தாசரதியாயும் அவள் ஜனககுல ஸூ ந்தரியாயும் திருவவதரித்து
இருவரும் இரண்டு இடத்திலுமாக வளர்ந்து அருளுகிற காலத்திலேயே
இம்மிதுனம் இப்படி அகல விருக்கப் பெறாது
இப்படி அகல விருந்த போது ரஷகர் ஆகாமை அன்றிக்கே
புரேவ மே சாருத தீம நிந்திதாம் திசந்தி ஸீதாம யதி நாதா மைதிலீம்
சதேவ கந்தர்வ மநுஷ்ய பன்னகம் ஜகத் சசைலம் பரிவர்த்தயாம் யஹம் -ஆரண்ய -64-78-என்றும்
குசலீ யதி காகுத்ஸ்த கிம் நு சாகர மேகலாம்
மஹீம் தஹதி காகுத்ஸ்த க்ருத்தஸ் தீவ்ரேண சஷூஷா-சுந்தர -36-13-என்றும்
உவர்கள் தங்களாலே ஜகத்துக்கு அழிவு வரும் என்றும் சேர்ந்த போது
ஆவாபயாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயித வ்யா-என்றும்
உபேதம் சீதயா பூயச்  சித்ரா சசினம் யதா  -அயோத்ய -16-8- என்றும்
ஜகத்துக்கு மங்கள வஹமாய் இருக்கையாலும்
இம்மிதுனத்தை சேர்க்க வேணும் என்கிற அபிசந்தியாலும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் -ஸ்ரீ கீதை -4-8-என்றும்
சம்பவாமி யுகே  யுகே -ஸ்ரீ கீதை -4-6- என்றும்
யஜ்ஞ விக் நகரம் ஹன்யாம்-என்றும்
அவருடைய அவதார ரஹஸ்ய சங்கல்பத்தை  அடி ஒற்றினவன் ஆகையாலும்
விச்வாமித்ர பகவான் ஆனவன் தசரத ரத்னாகரத்தைக் கிட்டி ராம ரத்னத்தை அபெஷிக்க
அவனும் வாத்சல்யத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி -திருவாய் -1-4-3- பெருமாளை உள்ளபடி அறியாதே
ஊந ஷொடச வர்ஷோ மே -பால -20-2- என்று இன்னம் பதினாறு பிராயம் நிரம்பிற்று இல்லை –
பால ஆஷோட சாத் வர்ஷாத் பௌ  கண்டச்சேதி கீர்த்யதே -என்கிறபடியே
அப்ராப்த வ்யவஹாரராகையாலே தனித்து ஒரு கார்யத்துக்கு ஆள் அல்லர்
சதுரங்க பலைர்யுக்தம மயா ஸ சஹிதம் நய-பால -20-10- என்கிறபடியே
முது கண்ணாக என்னையும் கூட்டிப் போ -என்ன
விச்வாமித்ரனும்
இவர் பருவத்தின் சிறுமை கண்டோ நீ வார்த்தை சொல்லுகிறது –
சிருமையுன் வார்த்தையை மாவலி இடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று முறித்தாய் ஆகில்
வசிஷ்டோபி மஹா தேஜோ யே செமே தபசி ஸ்திதா -பால -19-15-என்று
அறியுமவர்களாய் சந்நிஹிதருமாய் பலருமான இவர்களைக் கேட்க மாட்டாயோ என்று
ஈடேற்றி இசைவிக்க -இவனும் இசைந்து
ஸ புத்ரம் மூர்த ந்யுபாக்ராய ராஜா தசரத ப்ரியம்
ததௌ குசிக புத்ராயா ஸூ ப்ரீதே நாந்த ராதம நா -பால -22-3-என்று
இவனுக்கு இஷ்ட விநியோக அற்ஹமாய்
பிள்ளைகள் இருவரையும் கொடுக்க
அவனும் ராம லஷ்மனர்களைக் கொண்டு போய்க் கர்ம ஞானங்களாலே அவித்யையை நிரசிக்குமா போலே
அவர்களை இடுவித்து தாடகையை நிரசிப்பித்து
அநந்தரம்
அவித்யா சஞ்சிதமாய் புண்ய பாப ரூபமான உபயவித கர்மங்களையும் போலே
தாடக ஜநிதர்களான ஸூ பாஹூ மாரீசர்களையும் அளித்து
அது தன்னில்
உத்தர பூர்வாக யோராச லேஷ விநா சௌ -ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம் -4-1-13-என்னுமா போலே
ஒருத்தனைக் கொன்று ஒருத்தனை அக
ஸ்ரீ யம் இச்சேத ஹூதாச நாத் -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் -என்றும்
ஜாத வேதோ மமாவஹா லஷ்மீம் -ஸ்ரீ ஸூ க்தம்-1- என்று
லஷ்மியைப் பெரும் போது அக்னி புரச்சரமாகப் பெற வேண்டுகையாலே
விச்வாமிதரேண சஹிதோ யஜ்ஞம் த்ரஷ்டும் சமாகத -அயோத்யா -118-44- என்று
ஜனகனுடைய யஜ்ஞ சமயத்திலே சென்று
அக்னி த்ரவ்யங்களைப் பாவித்து
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -திரு நெடு -13-என்று சொல்லுகிறபடியே
ரௌ த்ரமான வில்லை அழைப்பித்து தேவதாந்திர ஸ்பர்சத்தாலே வண்ட அதினுடைய தோஷம் போம்படி திருக்கையிலே வாங்கி
குணாரோபணம் பண்ணி -நாண் ஏற்றி –
பங்க ஸூ ல்கையான பிராட்டியையும் கைப் பிடித்து மீண்டு வருகிற அளவில்
ராமத்வம் ஈரசு பட்டதோ என்று அதி குபிதனாய் வந்த பரசுராமனைக் கண்டு
புத்திர வத்சலனான சக்ரவர்த்தி சகிதனாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி -யுத்த -18-34- எண்ணக் கடவ பெருமாள் தமக்கு அதி சங்கை பண்ணி
பாலா நாம் மம புத்ராணாம் அபயம் தாதும் அர்ஹசி-பால -75-6- என்று
பேர் வாசிக்கு பிணங்கி வந்தவன் ஆகையாலே பெருமாள் திரு நாமம் சொல்ல அஞ்சி சாதாரணமாக என் பிள்ளைகளுக்கு
அபார பிரதானம் பண்ண வேணும் என்று இரக்க
இவ்வார்த்தையைக் கேட்டு ப்ரவர்க்யம் போலே கிளர்ந்து எரிகிற இவனைக் கண்டு தனிய விடுவோம் என்று பார்த்து
வசிஷ்டாதி ரிஷிகளும்
தம் த்ருஷ்ட்வா பீமா சங்கா சம ஜ்வலந்தம் இவ பாவகம்
ருஷயோ ராம ராமேதி வசோ மதுரம ப்ருவன் -பால -74-21/22-என்கிறபடியே
உன்னை ஒழிய ராமாந்தரம்   உண்டோ என்றுபெருமாளுடைய ராமத்வத்தையும் அவன் தலையிலே இரட்டிக்க மாட்டெறிந்து
நெருப்பிலே நீரைச் சொரிவாரைப் போலே குளிர வார்த்தை சொன்ன இடத்திலும்
அவன் ஜானதக்நி யாகையாலே -ஜமதக்னி புத்திரன் -ஆறாத நெருப்பு -இரண்டு அர்த்தங்கள் -ஆறாமையாலே-
பெருமாளும் இவன் கையிலே இந்தக் காஷ்டம் -கட்டை -வில் குச்சி -விறகு -இரண்டு அர்த்தங்கள் –
இருக்கை யாலே இ றே இவன் எரிகிறது என்று பார்த்து
மேல் எழுந்த ஷத்ர தேஜஸ்ஸோடே -உயரக் கிளம்பின -வந்தேறியான -அத்தை வாங்கி
சஹஜமான ப்ராஹ்மாண்யமே சேஷிக்கும் படி பண்ணி
அஷயம் மது ஹந்தாரம் ஜா நாமி த்வாம் ஸூ ரோத்தமம்
தநுஷோ அஸ்ய பராமர்சாத் ஸ்வ ஸ்திதே அஸ்து பரந்தப-பால -76-17- என்று
அவனும் தன் ஸ்வாபாவிகமான ப்ராஹ்மண்யத்துக்கு ஈடாக ஸ்வஸதி சொல்ல -மங்களா சாசனம் பண்ண
தன்னுடைய வைஷ்ணவமான வில்லை வாங்குகையாலே
பெருமாளுடைய வைபவம் சர்வ லோக சித்தமாம் படி மழு ஏந்திப் -ஆணை இட்டு -மழு ஆயுதம் ஏந்தி -போக
பெருமாளும் -ப்ராஹ்மணோ  சீதி பூஜ்யோ மே -பால -76-6-என்று இவன் ஸ்வ ஸ்தி சொல்லுகையாலே
பிராமணன் என்று அறுதி இட்டு
அறுகும்-தர்ப்பம் -தாளியையும் -கொடியையும் -பறித்து
இவன் காலிலே போகத்துக் கும்பிட்டு
மாரில் நூலே கடகாக விட்டு ரஷித்து
மீண்டு திரு அயோத்யையிலே புக்கு
இச்சரக்கு பெறுகைக்கு பட்ட வருத்தம் அறியுமவர் ஆகையால் இவள் சீர்மையை அறிந்து
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26-என்கிறபடியே
பெருமாளும் பிராட்டியும் இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கக் கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள்
லோக பாலோப மம நாத மகாமயத மேதி நீ -அயோத்யா -1-34/2-48-என்று தானும் நாச்சியாரோபாதி அம்ச பாகிநி யாகையாலும்

யதா து பார்க்கவோ ராமச் ததா  சீத் தரணீ த்வியம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-143-என்று
தனக்கு வகுத்த பரசுராமாவதாரத்தின் உடைய தேஜஸ்ஸூம் இங்கே சங்க்ரமிக்கையாலும்
தன் கூற்றுக்கு ஒக்கப் பெருமாளை ஸ்வயம் வரமாக வரிக்க
ராஜாவும்
இது காந்தர்வமான விவாஹமாக ஒண்ணாது
சமந்தரமாகக் கரக் க்ரஹணம் பண்ணி வைக்க வேணும் -என்று பார்த்து
பௌரஜாநபத மந்த்ரி புரோஹிதர்களைத் திரட்டி மந்தரித்து
மந்திர யித்வா ததச்சக்ரே நிச்ச யஜ்ஞ ஸூ நிச்சயம்
ச்வ ஏவ புஷ்யோ பவிதா ச்வோ அபி ஷிஞ்சாமி நே ஸூ தம்
ராமம் ராஜீவதாம் ராஷம் யௌவராஜ்ய இதி பிரபு -அயோத்யா -4-3–என்கிறபடி
சம்பன்ன நஷத்ரமான பூசத்திலே பெருமாளை அபிஷேகம் பண்ணக் கடவது என்று நிச்சயித்து  பண்ண –
ஸோ அஹம் விச்ரம் இச்சாமி -அயோத்யா -2-10- என்றும்
யௌராஜ்யேன சமயோக்து மைச்சத்-பால -1-21- என்றும்
நாட்டாரோடு ராஜாவோடு பண்ணின ஆசைப்பாடுகள் தாங்கள் பண்ணினது ஆகையாலே -எண்ணின   வாறாக இக்கருமங்கள் -திருவாய் -10-6-3-என்கிற படியே –
அசத்ய சங்கல்பமாய்
ஆவாஹம் த்வஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ  கா நநே -ஆரண்ய -5-34/7-14-என்றும்
தபஸ்வி நாம் ரணே சத்ருன் ஹந்தும் இச்சாமி ராஷசான் -ஆரண்ய -6-25-என்றும்
சத்யா சங்கல்பரானவர் தம்முடைய சங்கல்பமே சங்கல்பமாம் படி
கைகேயி மந்த்ர அந்தர்யாமியாய் நின்று கலக்கி
காட்டிலே எழுந்து அருளி தண்ட காரண்ய வாசிகளான பரம ரிஷிகளைக் காணும் போது
ரிக்த ஹஸ்தேன நோபேயாத் -என்கிறபடியே வெறும் கைக் கொண்டு காணலாகாது என்று பார்த்து
விராத வத புரஸ் சரமாகச் சென்று காண
அவர்களும் மகா ராஜரைப் போலே பெருமாளுடைய வீர்யத்திலே அதி சங்கை பண்ணிப் பரீஷித்துத் தெளிய வேண்டாதபடி விராதவதத்திலே த்ருஷ்ட உதாஹரணர் ஆகையாலே விநீதராய் வந்து
பரி பாலய நோ ராம வதயமா நான் நிசாசரை-ஆரண்ய -6-19-என்று எங்களை ரஷிக்க வேணும் என்று சரணம் புக –
பவதா மாத்த சித்த்யர்த்தமாக தோஹம்யத்ருச்சயா -ஆரண்ய -7-24- என்று ஓம் கொடுத்து
ஜாகாம சாஸ்ரமாம் ஸ்தேஷாம் பர்யாயேண தபஸ்வி நாம் -ஆரண்ய -11-24-என்கிறபடியே
சரபங்க  ஸூ தீஷ்ண அகஸ்த்ய தத் பிராத்ரு பிரமுகரான ரிஷிகள் ஆஸ்ரமத்திலே பர்யாயேண எழுந்து அருளி இருக்கிற
பெருமாள் அகஸ்த்யர் உபதேசத்தாலே கோதாவரீ தீரமான  பஞ்சவடி பரிசரத்திலே பர்ணசாலையும் சமைத்து
ச ராம பர்ணசாலா யாமாஸீநஸ் சஹ சீதயா
விரராஜ மஹாபா ஹூ ச்சித்ரயா சந்த்ரமா இவ –
லஷ்மணேன சஹ ப்ராதரா -ஆரண்ய -17-4-என்று
நாச்சியாரோடும் இளைய பெருமாளோடும்கூட இனிது அமர்ந்து எழுந்து அருளி இருக்கிற அளவிலே
தமதேசம் ராஷசீ காசிதா ஜகாம யத்ருச்சயா -சா து ஸூர்ப்பணகா நாம -ஆரண்ய -17-5-என்று
சூர்பணகை யாய் இருக்கிற ராஷசி யானவள் யாத்ருச்சிக ஸூ க்ருதம் அடியாக வந்து கிட்டி
ப்ராப்த விஷயமாய் இருக்கச் செய்தேயும் கடகனான ஓர் ஆச்சார்யன் அடியாக
விசேஷ ஜ்ஞானம் பிறவாமையாலே
புருஷகாரம் முன்னாக பற்றாத அளவன்றிக்கே அவ்விஷயத்திலே அசஹ்ய அபசாரத்தைப் பண்ணி
ந ஷமாமி  -க்கு இலக்காக
இத யுக்தோ லஷ்மணஸ் தஸ்யா கருத்தோ ராமஸ்ய பசித
உத்த்ருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம் மஹா பல-ஆரண்யம் -18-21- என்றும்
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காதிரண்டும் ஈரா விடுத்து -சிறிய திருமடல் -39-என்றும்
காதோடு கொடி மூக்கன்று உடன் அறுத்த கைத்தலத்தா -பெரிய திருமொழி -7-4-3- என்றும் சொல்லுகிறபடியே
தஷிண பாஹூ வான இளைய பெருமாளாலே தாம் கை தொடராய் வைரூப்யத்தை விளைப்பிக்க
விரூபணஞ்சாத்மநி சோணி தோஷிதா சசம்ச சர்வம் பகி நீ கரஸ்யசா -ஆரண்ய -18-26- என்று
வார்ந்த மூக்கும் வடிகிற உதிரமுமாய் தன் ப்ராதாவான காரனுக்கு அறிவிக்க அவனும் குபிதனாய்
வ்யக்தமாக்யாஹி கேன த்வமே வம்ரூபா விரூபிதா -ஆரண்ய -19-2-என்று
உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெளியச் சொல் என்று கேட்க
அவர்களை இன்னார் என்று அடையாளம் தெரியச் சொல்லுகிறாள்
தருனௌ-என்று தொடங்கி-
புத்ரௌ தசரதஸ் யாஸ்தாம் ப்ராதரௌ ராம லஷ்மனு-ஆரண்ய -19-15-என்று
இன்னார் மகன் என்றும் இன்ன பேரை யுடையவன் என்றும் சொல்ல ப்ராப்தமாய் இருக்க
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று பருவத்தை இட்டுச் சொல்லுவது
வடிவு அழகை இட்டுச் சொல்லுவது என் என்னில்
இவளுக்கு வைரூப்யம் பிறந்தது அத்தனை போக்கி வைராக்கியம் பிறந்தது இல்லைஇ றே-
ஆகையாலே காம மோஹிதா -ஆரண்ய -17-9- என்கிற தன் அபி நிவேசம் வடிவிட்டு ப்ராதாக்கள் முன்னென்று பாராதே தன்னுடைய ஹ்ருதகதத்தைச் சொல்லுகிறாள்
அனுகூலர் ஆகிலுமாம் பிரதிகூலர் ஆகிலுமாம் இவ்விஷயத்தில் அகப்பட்டவர்களுக்கு பணி இ றே இது –
யானி ராமஸ்ய சிஹ் நாநி -சுந்தர -35-3- என்று அடையாளம் தெரியச் சொல் -என்று பிராட்டி திருவடியைக் கேட்க
த்ரிஸ்  ஸ்திரஸ் த்ரிப்ரலமபச்ச -சுந்தர -35-27- என்று சொல்லுவதற்கு முன்னே
ராம கமல பத்ராஷ சர்வ சத்வ மநோ ஹர -சுந்தர -35-8-என்று சொன்னான் இ றே –
இவை தனக்கு பிரயோஜக ரூப நாமங்கள் சொல்ல வென்றும் உண்டு இ றே
அதிலே ரூபாணி விசிதய தீர நாமா நி க்ருத்வா -புருஷ ஸூக்தம் -என்கிற கிராமத்திலே பிரதமபாவியான ரூபத்தை முற்படச் சொல்லுகிறாள் ஆகவுமாம்
அன்றியிலே
ஸூ ப்த ப்ரமத்த குபிதா நாம பாவ ஜ்ஞானம் த்ருஷ்டம் -என்று குபிதை யாகையாலே ஹ்ருத்கதார்த்தத்தை
அவசமாக தன்னையும் அறியாமல் வெளியிடுகிறாள் ஆகவுமாம்
இதிலே -ராமமிந்தீ வரச்யாமம கந்தர்ப்ப சத்ரு சப்ரபம்
ப்பூ வேந்த்ரோபமம் த்ருஷ்ட்வா ராஷசீ காம மோஹிதா -என்கிறபடியே
தான் அவரைக் கண்டு காமுகையாவதற்கு அடியாய் இருப்பதொரு ஆகர்ஷகமான ஆகாரமும்
தன் பரிபவத்தால் உண்டான கோபாதி சயத்தாலே
தயோஸ் தச்யாச்ச ருதிரம் பிபேயமஹம்-ஆரண்யம் -19-20-என்றும் சொல்லுகிறவள் ஆகையாலே
கோயமேவம் மஹா வீர்ய -ஆரண்ய -19-6-என்று இவர்களை அளவிட மாட்டாதே அருகிருக்கிற ப்ராதாவான கரனுக்கு
பலமூலா ஸி நௌ தாந்தௌ தாபசௌ தர்ம சாரினௌ-ஆரண்ய -19-15-என்று
அவர்கள் எளிமை சொல்லுகிறதோர் ஆகாரமும்
ராமஸ்ய ச மஹத் கர்ம மஹாம் சதரா ஸோ அபவந்மம-ஆரண்ய -21-10-என்று இவர்களுக்கு
அஞ்சினவள் ஆகையாலும் அவன் நெஞ்சில் எரிச்சல் பிறக்கைக்காகவும்
புத்த்யாஹ  மநு பச்யாமி ந த்வம ராமஸ்ய சமப்ரதி
ஸ்தாதும் பரதிமுகே   சக்தஸ் சசாபசைய மஹா ரணே -ஆரண்ய -21-16-என்று
கையும் வில்லுமாய் அவ்வாண் பிள்ளை புறப்பட்டால் நீயோ அவர் முன்னே நிற்கிறாய் என்று
அவர்களுடைய ஆண்மை சொல்லுவது ஆகாரமும்
ஆக ஆகாரத்ரயமும் விவஷிதம் –

வியாக்யானம் –
அதில் முற்பட ஆகர்ஷக ஆகாரத்தில் யோஜனை இருக்கிறபடி –
தருனௌ ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ மஹா பலௌ
புண்டரீக விசாலா ஷௌ சீரச்ருஷிணாஜிநாம்பரௌ-
அவர்களுடைய
பருவம் இருக்கிறபடியும்
வடிவு அழகு இருக்கிறபடியும்
செயலிருக்கிறபடியும்
மிடுக்கு இருக்கிறபடியும்
கண் அழகு இருக்கிற படியும்
ஒப்பனை அழகு இருக்கிறபடியும்
அவர்கள் இருவருக்கும் உண்டு இத்தனை போக்கி -வேறு ஒருவருக்கும் இல்லை கான் -என்கிறாள் –
என்னை இது விளைத்த ஈரிடண்டு மால் வரைத் தோள் மன்னன் -பெரிய திரு மடல் -என்று
என்னை அகப்பட இப்படி யாக்கிற்று அந்த குண சமுதாயம் அன்றோ –
1-தருனௌ –
யுவா குமார -ருக் -2-8-25-என்றும்
ய பூர்வ்யாய வேதசே நவீயசே ஸூ மஜ்ஜா நயே விஷ்ணவே ததாசதி யவீயசே -யஜூ ஆ -2-4-3-29-என்றும்
அரும்பினை அலரை-பெரிய திருமொழி -7-10-1-என்றும்
வேத சித்தமான அர்த்தத்தை இவளொரு ராஷசி கையாட்சியாகச் சொல்ல்லுகிறாள் இ றே-
இது தான் ராஷசிகளுக்கு பணியாய்இருந்தது இ றே –
வ்யகதமேஷ மஹா யோகீ பரமாத்மா சநாதன
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-14-என்றாள் இ றே  மண்டோதரியும்
2-தருனௌ –
முக்தரானவர்களோடு பத்தரானவர்களோடு தசரத  வாமதேவாதிகளோடு வாசி அற
கரியான் ஒரு காளை–பெரிய திருமொழி -3-7-1-என்றும்
கோவிந்தன் என்பானோர் காளை புகுதக் கனாக் கண்டேன் -நாச் திரு -6-2-என்றும்
பிரணயிநிகளை அகப்படுத்திக் கொள்ளுவது பருவத்தை இட்டே இ றே
அப்பருவத்தில் ஆயிற்று இவளும் ஈடுபட்டது
3-தருனௌ –
இவள் பத்த பாவை யாயிற்று பெருமாள் பக்கலிலே யாகில் வைரூப்யம் விளைந்தது இளைய பெருமாள் பக்கலிலே யாகில்
இரண்டு பஷத்திலும் ஒருத்தரே அமைந்திருக்க த்வி வசனமாக சொல்லுவான் என் என்னில்
அந்யோந்ய சதருசௌ வீரௌ-கிஷ்கிந்தா -3-12- என்று அழகுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் ஒருவருக்கு ஒருவர் குறையாமையாலும்
க்ருததா ரோஸ்மிபவதி பார்யேயம் தயிதா மம-ஆரண்ய -18-2-என்றும்
ஸ்ரீ மா நக்ருத தாரச்ச லஷ்மணோ நாம வீர்ய வான்
அபூர்வ பார்யா ப்ரார்த்தீ ச தருண பிரிய தர்சன
ஏனம் பஜ விசாலாஷி பாத்தாரம-என்றும்
நான் க்ருத விவாஹனுமாய் ஸ்நிகத பார்யனுமாகையாலே உனக்கு யோக்யன் அல்லன்
இவன் அக்ருத விவாஹனுமாய் விவாஹம் பண வேணும் என்கிற ஆசையை யுடையனுமாய் இருக்கிறான்
ஆனபின்பு இவனை பர்த்தாவாக வரி -என்று பெருமாள் திரு உள்ளமாக
அவ்வழியாலே இளைய பெருமாள் பக்கலிலே இவள் பத்த பாவையாக
கதம் தாஸ ஸய மே தாஸீ பார்யா பவிது மர்ஹசி
ஆர்யச்ய த்வம் விசாலாஷி பார்யா பவ யவீ யஸீ-என்று
அவர் அடிமையான எனக்கு ஸ்திரீ யானால் நீயும் அடிமையாவாய் இத்தனை
அது ந நமேயம் து கஸ்ய சித் -வணங்கல் இலி வரக்கரான உங்களுக்கு சேராது
நாச்சியாராக வாழலாம் படி அவர் தமக்கு இளைய நங்கையாராகப் பாராய்  -என்று இளைய பெருமாள் சொல்ல பெருமாள் பக்கலிலும் துவக்குண்டு இப்படி பத்த பாவை யாகையாலும்
வைரூப்ய கரணத்திலும் -விரூபயிதும் அர்ஹசி-ஆரண்ய -18-20-என்று பிரயோஜன கர்த்தாவாயும்
உத்தருத்ய கட்கம் சிச்சேத கர்ண நாசம மஹா பல-ஆரண்ய -18-21-என்று
இருவரையும் கூட்டாகச் சொல்லுகிறாள் ஆகையாலும்
இங்கு இருவரையும் ஒக்கச் சொல்லுகிறாள்
4-தருனௌ-
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்  -என்னுமா போலே ஒருவர் இருவராய் வந்து அன்றோ என்னை ஈடழித்தது-
5- தருனௌ –
தம்பி தமயனானால் பர்வத்திலேயும் சிறிது வேறுபாடு காணலாம் இ றே
அப்படி அன்றியிலே ஒரு படியாய்க் காண்இருக்கிறது
புனர்பூசம் பூசமாய் பின்னாளும் முன்னாளும் ஆனால் அத்தனை வாசி தெரியாது இ றே –

இப்படி பருவத்தை யிட்டு மயக்கும் இத்தனையாய் வடிவு தன்னைப் பார்த்தால் போலியாய் இருக்குமோ என்னில்
1- ரூப சம்பன்னௌ-
ரூபத்தைப் பார்த்தால் அழகு வேண்டி இருப்பார்க்கு அவர்கள் பக்கலிலே இரந்து கொண்டு போக வேண்டும்படியாய்க் காண் கூடு பூரித்துக் கிடந்தபடி
2- ரூப சம்பன்னௌ –
காமனார் தாதை -பெரிய திருமொழி -1-1-3-என்று அந்த காமன் அகப்பட
அங்கா தங்காத் சம்பவசி -மந்திர பிரச்னம் -2-11-33-என்று இவர் திரு மேனியில்
ஏக தேசத்தில் உத்பன்னன் ஆகையால் அன்றோ  அவ் வழகு தான் யுண்டாயிற்று
3- ரூப சம்பன்னௌ –
உத்பன்னம் த்ரவ்யம் ஷணம்நிர்க்குணம் திஷ்டதி -என்கிறபடியே முற்பட ஆஸ்ரயம் யுண்டாய் -அதிலே குணங்கள் யுண்டாகை அன்றிக்கே
ரூப தாஷிண்ய சம்பன்ன ப்ர ஸூதா -சுந்தர -35-8-என்கிறபடியே
ரூபத தாஸ்ரயங்கள் சஹ உத்பன்னங்களாய் காண் அவர்கள் பக்கல் இருக்கிறது –
4-ரூப சம்பன்னௌ-
வடிவுடை வானோர் தலைவனே -திருவாய் -7-2-10- என்றும்
அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -பெரிய திருமொழி -9-2-என்றும்
என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாய்  -பெரிய திருமொழி -3-6-9-
காரார் திருமேனி கண்டதுவே காரணமா பேராப் பிதற்றாத் திரி தருவான் -சிறிய திருமடல் -என்றும்
ராமேதி ராமேதி சதைவ புத்த்யா விசிந்த்யா வாசா ப்ருவதீ -சுந்தர -32-11-என்று
பெண் பிறந்தாரைப் பிச்சேற்றி வாய் வெருவப் பண்ணும் வடிவு காண் அவரது
இவர்கள் இருவருடையவும் வடிவு அழகிலே காண் நான் உழலுகிறது –

இவ் வழகேயாய்-அணைத்துப் பார்த்தால்  உறைத்து இருக்குமோ என்னில்
1- ஸூ குமாரௌ
முரட்டு ராஷசரான உங்களைப் போலே அன்று காண்-அவர்கள் மார்த்வம் இருக்கிறபடி –
பூவிலே அணைந்தால் போலே காண் இருப்பது –
திருஷ்டாந்தம் சொல்லுமவர்களும்
அதஸீ புஷ்ப சங்கா சம -பாரதம்-சாந்தி -46-118- என்றும்
ராமம் இந்தீவரச் யாமம் -ஆரண்யம் -17-9-என்றும்
பூவைப் பூ வண்ணா -என்றும்
காயம் பூ வண்ணா -என்றும் புஷ்பத்தை இட்டு இ ரே சொல்லிற்று
2- ஸூ குமாரௌ –
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-என்று பூவில் பரிமளத்தையும்
மண்ணில் பரிமளத்தையும் உபாதாநமாக யுடைய பிராட்டிமாரும் அகப்பட அணைக்கை அன்றிக்கே
அடுத்து அடுத்து பார்க்கவும் போராத -பொறாத -படியாய்க் காண் அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
3- ஸூ குமாரௌ –
நடந்த கால்கள் நொந்தவோ -திருச் சந்த -61- என்றும்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ -என்றும்
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-என்றும்
ஸ்வா பாவிகமான வியாபாரமாகப் படத் திரு மேனிக்குப் பொறாது என்று அனுகூலர் வயிறு பிடிக்கும் படியாய்க் காண அவர்கள் மார்த்த்வம் இருக்கும் படி –
4- ஸூ குமாரௌ –
திவ்யனான காமன் ஒருவன் இ றே
இவர்கள் பௌ மராய் இருப்பார் இரண்டு காமராய்க் காண தோற்றுகிறது-
5- ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ –
அவன் அனங்க னாய் இ றே இருப்பது
கந்தர்ப்ப இவ மூர்த்தி மான் -சுந்தர -34-30- என்கிறபடியே
ரூபவான்களாய் காண இந்தக் காமர்கள் இருப்பது
ராம மன்மத சரேண தாடிதா துஸ் ஸ்ஹேந ஹ்ருதயே நிசாசரீ-ரகுவம்சம் -11-20-என்று
காமனாகவே பரிக்ரஹித்துச் சொன்னான் இ றே –

இப்படி எழிலும் அழகுமாய் தூரத்திலே அகப்படுத்தும் அளவேயாய்-கிட்டி அனுபவிக்கப் பார்த்தால்
உடல் கொடுக்க -ஆடல் கொடுக்க-சம்ச்லேஷிக்க – மாட்டாத துர்ப்பலராயோ இருப்பது -என்னில்
1-மஹா பலௌ-
வையாத்யத்தில் வந்தால் தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7–என்றும்
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை-பெரிய திருமொழி -8-3-1-என்றும்
பெண் பிறந்தோர் தோற்று எழுதிக் கொடுக்கும் படியாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ-
ராமஸ்து சீதயா சார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் -பால -77-26- என்றும்
மைந்தனை மலராள் மணவாளனை -திருவாய் -1-10-4- என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ருங்கா ரத்தில்   வந்தால் அநேக ருதுக்களை ஒருபடிப்பட நடத்தா நின்றாலும்
எதிர்த்தலை அப்ரதானமாம் படி  காண் அவர்கள் பிராபல்யம் இருக்கும் படி –
அன்றிக்கே
3- மஹா பலௌ –
காதல் கடல் புரையவிளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழி கடியனே -திருவாய் -5-3-4-என்கிறபடி
பருவத்தையும் வடிவு அழகையும் செவ்வியையும் இட்டுப்
பிறரை படுகுலைப் படுத்தித் துடிக்கும் படி பண்ணி பின்னை அவர்கள் நினைவில் ஓரடியும்
புகுராத படியாய்க் காண் அவர்கள் அத்யவசாய பிராபல்யம் இருக்கும் படி என்னவுமாம் –

ஆக இப்படி சமுதாய சோபையிலும்-அவயவ சோபை மட்டமாய் இருக்குமோ என்னில் –
1- புண்டரீக விசாலாஷௌ-
அது கண் அழகைத் தப்பினால் அன்றோ வேறொரு அவயவத்தில் இழிய ஓட்டுவது –
2- புண்டரீக விசாலாஷௌ-
அவை -யௌவனம் -வடிவழகு -மென்மை-பலம் – எல்லாம் கிட்டினால் அழிக்குமவை-
இனி இது அங்கன் அன்றிக்கே தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி -திருவாய் -9-9-9-என்றும்
தாமரைக் கண்கள் கொண்டீர்தியாலோ -திருவாய் -10-3-1-என்றும்
தூரத்திலே தோற்றின போதே அழிக்கும் படியாய்க் காண் கண்கள் இருப்பது
3-  புண்டரீக விசாலாஷௌ-
புண்டரீகம் சிதாம்போஜம் -அமர -1-10-41- இ ரே
சம்ரக்த நய நா கோரா -ஆரண்ய -20-12- என்று உங்களைப் போலே எரி விழியாய் இருக்கை அன்றிக்கே
ஸூ பிரசன்னத வளமான அக்கண்கள் இருந்தபடி காண்
4-  புண்டரீக விசாலாஷௌ-
ரஷண உபயோகியான கரு விழியும் செவ்விழியும் கண் பரப்பும் –
தமோ குண உத்ரேகத்தால் நித்ராகஷாயிதம் ஆதல்
ரஜோ குண உத்ரேகத்தாலே கோப சம்ரக்தமாதல் அன்றிக்கே
சத்வ பிரசுரர் ஆகையாலே அவர்களுடைய த்ருஷ்டி பிரசாதமும் இருந்த படி காண் –
5-புண்டரீக விசாலாஷௌ-
அவர் தாம் ஆத்மானம் மானுஷம் மன்யே -யுத்தம் -120-11-என்று தம்மை மறந்தார் ஆகிலும்
யதா கப்யாசம் புண்டரீகமேவ மஷி ணீ-சாந்தோக்யம் -1-7- என்கிறபடியே
அகவாயில் கிடந்த பரத்வத்தைக் கோட் சொல்லித் தாரா நின்றது ஆய்த்தும் கண்கள் தான் –
6-புண்டரீக விசாலாஷௌ-
பாற் கடல் போலே அக்கண்களுக்கு உள்ள அகலம் ஒருவரால் கரை காண ஒண்ணாத படியாய்க் காண் கண்கள் இருப்பது –
7-புண்டரீக விசாலாஷௌ-
கண்ணில் யுண்டான தெளிவுக்கு புண்டரீகத்தை ஒரு போலி சொன்னோம் இத்தனை போக்கி
அகலத்தைப் பார்த்தால் கடலில் புக்கார் கரை காண மாட்டாதே மயங்குமா போலே
புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -என்னும் இத்தனை போக்கி வேறொரு பாசுரம் இட ஒண்ணாது காண் –
8-புண்டரீக விசாலாஷௌ-
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9- என்றும்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து–இடம் கொள் மூவுலகும் தொழ இருந்து அருளாய் -திருவாய் -9-2-3- என்றும் சொல்லுகிறபடியே
பத்த முக்த நித்யாத்மகமாய்
த்ரிவித கோடியானஉபய விபூதியும் ஏக உத்தியோகத்திலே கடாஷிக்க வற்றாய் காண் கண்கள் இருப்பது
9-மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
பலத்தைக் காட்டி அவர்களைத் தோற்பித்து-அவர்களை ஜிதந்தே புண்டரீகாஷா -ஜிதந்தே -1-1-என்றும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் கலைமகனை -திருவாய் -2-7-3-என்றும்
எழுதிக் கொள்வது கண் அழகை இட்டு இ றே-
10- மஹா பலௌ புண்டரீக விசாலாஷௌ-
அவர்கள் அளவிலே ஈடுபட்டவர்கள் நேராகக் கை வாங்க மாட்டாதே
அவலோக நாதா நேந பூயோ மாம் பாலய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-16- என்றும்
தாமரைக் கண்களால் நோக்காய் -திருவாய் -9-2-1-என்றும்
தெரிய நசை பண்ணிக் கால் கட்டும்படி பண்ணுவது இக்கண் களில் தண்ணளி காண் –
11- புண்டரீக விசாலாஷௌ-
ஸூ குமாரௌ -என்கிற பதத்தாலே காமர்கள் என்று சொல்லிற்று இ றே
ஆனால் புஷ்ப பாண ராக வேணுமே
அப்படிக்குக் கண்டது என் என்னில் -கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையம் தளர்ந்து நைவேனை -நாச் திரு -13-3-என்னும்படி -என்னை நிலை குலைத்த புஷ்ப பாணங்கள் இருக்கிறபடி காண் –

அவ்வவய சோபை மாத்ரத்தாலேயோ அகப்படுத்துவது -என்னில்
1-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
ஒப்பனை அழகாலும் அழிப்பார்கள் காண் அவர்கள் என்கிறாள்
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
செவ்வரத்த வுடையாடை அதன் மேல் ஓர் சிவளிக்கைக் கச்சு -பெரிய திரு -8-1-7-என்கிறபடியே
உள்ளுடுப்பது மரவுரி -மேல் சாத்துவது கலைத் தோலுமாயிற்று-இருப்பது
3-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
தாருண்யாதியான  குண சமுதாயத்தை -யௌவனம் -வடிவழகு -மென்மை -பலம் -கண்ணழகு -என்னும்
சமுதாயத்தை பொதிந்த ஒரு கிழிச் சீரை இருந்த படி காண் –
4-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ -மஹா பலௌ-புண்டரீக விசாலாஷௌ    சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
கிமவ ஹி மதுராணாம்மண்ட நம நாக்ருதீ நாம் -சாகுந்தலம் -1-19-என்கிறபடியே
வறை முறுகலான  ரிஷிகளும் அகப்பட விக்ருதராம் படி இருக்கக் கடவ
அம்மரவுரியும் தோலும் அவர்கள் வடிவிலே சேர்ந்த படியாலே அழகு பெற்று இருந்தபடி -காண் –
5- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ
ஏதேனுமாக அங்கே சாத்த அமையும் இ றே -ஆகர்ஷகமாகைக்கு
தாஸாமா விர பூச் சௌரி ஸ்மயமா நமுகாம்புஜ பீதாம் பரதர ச்ரக்வீ சாஷான் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32-2- என்கிறபடியே
பீதக வாடை யுடை தாழ விருந்தாவனத்தே கண்டோமே -நாச் திரு -14-5-என்றும்
செய்யவுடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -பெருமாள் திரு -6-7-என்றும்
பெண் பிறந்தார் வாய் புலர்த்தும் படியாய்க் காண் உடை அழகு இருப்பது
6-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு -திருப்பல்லாண்டு -9-என்று
ச்வரூபஜ்ஞர்ஆசைப்படுவதும்
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே-நாச் திரு -13-1-என்று
போகபரர் ஆசைப்படுவதும் பரிவட்டத்தை இ றே –
7-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
ரூப சம்ஹ நநம் லஷ்மீம் சௌகுமார்யம் ஸூ வேஷதாம் தத்ரு ஸூர் விஸ்மிதாகாரா-ஆரண்ய -1-13- என்று
ஸ்வரூப த்யானபரரான ரிஷிகள் அகப்பட இவிக்ரஹ குணத்திலே உடை குலைப்படா நின்றார்கள்
கன்யா காமயதே ரூபம் -என்றும்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ -பெரிய திரு -8-1-8-என்றும்
உடம்பை உகக்கக் கடவ ஸ்திரீகள் ஆழம் கால் படச் சொல்ல வேணுமோ –

எளிமை சொல்லுகிற யோஜனையில்
1-தருனௌ –
அவர்கள் பக்கலிலே சரக்குண்டாக நினைத்து இருக்க வேண்டா காண்-
ந யுத்த யோக்யதாமச்ய பச்யாமி -பால -20-2-என்கிறபடியே
பூசலுக்கு ஆளாகாதார் சில பாலராய்க் காண் இருப்பது
நானேயோ இது சொன்னேன் –
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச ந ச வேத்தி பலாபலம்
ந சாஸ்திர பல சம்பன்னோ ந ச யுத்த விசாரத -பால -20-7-என்று பெற்ற தகப்பன் அகப்பட நெஞ்சாறல் பட்டிலனோ –
2- தருனௌ –
யௌவனே விஷயை ஷிணாம்-ரகுவம்சம் -1-8-என்கிறபடியே அந்ய பரராய் திரிகிரவர்களுக்கும் ஒரு பூசல் உண்டோ பொருவது

பாலரான இவ்வளவும் அன்று காண் –
1-ரூப சம்பன்னௌ-
கன்யா காமயதே ரூபம் -ஸூ பாஷிதம் -என்றும்
ரூபேண வநிதா ஜனம் -என்றும் ஸ்திரீகள் அகப்படுகைக்கு
மேனி மினுக்கி திரியும் அத்தனை போக்கி
புருஷர்கள் அகப்ப்படும்படியான ஆண்மை யுடையவர்கள் அல்ல காண்
2- ரூப சம்பன்னௌ –
மூங்கில் பொந்து போலே தொழில் பச்சை இத்தனை போக்கி அகவாயில் உள்ளீடு இல்லை காண் –

அதுக்கடி என் எனில்
1-ஸூ குமாரௌ-
ஸ்ரீ மத் புத்ரர்கள் ஆகையால் செல்வப் பிள்ளைகளாய்க் காண் இருப்பது
2- ஸூ குமாரௌ –
பரஸ்வத ஹதச்யாத்ய மந்த பிராணச்ய பூதலே -ஆரண்ய -22-5-என்கிறபடியே
கடைக் கண் சிவந்து நீ பார்க்கும் பார்வையிலே மாயும்படி இருக்கிறவர்களோ
உன்னுடைய அத்யுக்ரமான ஆயுதங்களைப் பொறுக்கப் புகுகிறார்கள்

வடிவைப் பார்த்தால் திறவியர் அல்லராகிலும்  கார்யத்தில் வந்தால் திறவியராய் இரார்களோ என்னில்
1- மஹா பலௌ-
பல ஹீனர் ஆனவளவே அன்று காண் –
க்ரமாகதமான ராஜ்யத்தை கொடுக்கச் செய்தேயும் அகப்பட ஆள்மாட்டாதே ஒதுங்கி
பெண்டாட்டிக்கு அஞ்சி பொகட்டுப் போரும்படி அந்ய நதா பலராய்க் காண் இருப்பது
அன்றியிலே
2- மஹா பலௌ-
பலவான்கள் தான் ஆனாலும் இவர்கள் இருவரும் இத்தனை போக்கி
இவைகளுக்கு பலமாய் வரப் புகுகிறார்கள் உண்டோ
த்ருஷ்ட்வா தத்ர மயா நாரீதயோர் மத்யே ஸூ மத்யமா -ஆரண்ய -20-17-என்கிறபடியே
கால் கட்டாம் படி குழைச் சரக்கை இருப்பாள் ஒரு பெண்டாட்டியையும் முதுகிலே கொண்டு
திரிகிறவர்களோ பூசல் ஆடப் புகுகிறார்கள் –

பூசலாட மாட்டார்கள் அறிந்தபடி என் என்னில்
1-புண்டரீக விசாலாஷௌ-
விளைவது அறியாமையாலே -இவளுக்கு வைரூப்யம் விளைத்தோம்
மேல் என்னாகப் புகுகிறதோ என்று அவர்கள் வெளுக்க வெளுக்க விழிக்கிறது விழியிலே கண்டேன் காண் –
2- புண்டரீக விசாலாஷௌ-
நீரில் தாமரையை வறளிலே இழுப்பாரைப் போலே தன்ன்லமான நாட்டுக்கு அவர்கள் ஆளித்தனை போக்கி
வேற்று -வெற்று-நிலமான -காட்டுக்கு அவர்கள் ஆளல்லர்
என்னும் இடம் அவர்கள் கண்கள் தானே சொல்லித் தருகிறன காண் –

அவர் தாங்கள் அசக்தர் ஆனால் ஐச்வர்யத்தாலே படை யாண்டு போரத்  தட்டென்-என்று இருக்க வேண்டா –
1-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கைக்கு ஒரு புடவை அகப்படல் அன்றியிலே காட்டில்
மரத் தோலையும் மான் தோலையும் உடுத்தித் திரிகிறவர்களோ காசு நேர்ந்து படையாளப் புகுகிறார்கள் –
2-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
உடுக்கிற புடைவை இரண்டும் ஏக ஜாதீயமாகப் பெற்றதோ –
உள்ளுடை ஒன்றும் மேலுடை ஒன்றுமாய் அன்றோ இருக்கிறது –
3-சீர கிருஷ்ணாஜிநாம்பரௌ-
ஸ்தாவரம் ஓன்று கொடுக்க
ஜங்கமம் ஓன்று கொடுக்க
இப்படி பலர் பக்கலாக  இரந்து அன்றோ இது தானும் உடுக்கிறது –

பௌருஷ உபபாதன யோஜனையில்
1- தருனௌ-
ஊந ஷோடஸ வர்ஷ -பால -20-2–எண்ணும்படியான பிள்ளைப் பருவமும் அன்றியிலே
அநேக வர்ஷசாஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ -அயோத்ய -2-21-என்னும்படி முதிர்ந்த பருவமும் அன்றியிலே
பூசல் என்றால் காட்டு காட்டு என்று வரும்படியான நல்ல பருவம் காண்-
2- தருனௌ –
யௌவநே விஷயை ஷிணாம்-ரக்வம்சம்-1-8-என்றும்
ராஜ்ய காம விஷயா விபேதிரே-என்றும்
பவத் விஷய வாஸிந -என்றும்
விஷய சப்தம் ராஜ்ய வாஸி யாகையாலே
இன்னம் ராஜ்ஜியம் கொள்ள வேணும் என்று மேலே விஜிகீ ஷூ க்களாம் பருவம் காண் –
3- தருனௌ –
இப்பருவம் யுடையார் ஒருவர் அமைந்து இருக்க இருவர் கூடினால் இயலாதது உண்டோ –

இப்பருவமும் யோக்யதையுமாய் வடிவு பார்த்தால் இவர்கள் என்ன பூசல் பொருவது என்னும்படி ஆபாசமாய் இருக்குமோ -என்னில்
1-ரூப சம்பன்னௌ-
சிம்ஹோ ரச்கம் மஹா பாஹூம் -ஆரண்யம் -17-7-என்கிறபடியே
வேறொரு ஆயுதம் வேண்டாதபடி அவர்கள் தோளையும் மார்பையும் கண்ட போதே எதிரிகள் கால்
வாங்கும் படியாய்க் காண் இருப்பது
2- ரூப சம்பன்னௌ –
ரூபம் என்று மதிப்பாய் இப்பருவம் கொண்டு அநுமிக்கை  அன்றிக்கே
கதவா சௌமிதரி  சஹி தோ நா விஜித்ய நிவர்த்ததே -அயோத்யா -2-37-என்றும்
யசச சசைக பா ஜனம்-கிஷ்கிந்தா -15-19- என்றும் சொல்லுகிறபடியே
அயோத்யா பரிசாரம் துடங்கி ஸூ பாகூ மாரீசாதி வதம் பண்ணினத்தாலே
பெ ரு மதிப்பராய் இருக்கிறவர்கள் அல்லவோ -என்றாகவுமாம் –

இப்படி விரோதி வதம் பண்ணும் இடத்தில் வருத்தத்தோடு க்லேசித்தோ பண்ணுவது -என்னில்
1-  ஸூகுமாரௌ-
அவர்கள் ஆண்மைத் தனத்தில் வந்தால் ஒரு வகைக்கு சிறிது சொல்லலாம் இத்தனை போக்கி
வடிவு அழகைப் பார்த்தால் பஹூ முகமாய் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே
அத்யந்தம் அபி ரூபமாய்க் காண் இருப்பது -ஸூ -மிகவும் பொருளில்
2- ஸூ குமாரௌ-
அவர்க்களுமாய்ச் சீறிப் புறப்பட்டார்கள் ஆகில் முன்னே வந்த நாலிரண்டு பேரைக் கொன்று விடும் அளவேயோ
கு -சப்தம் பூமியில் உள்ளார் என்னும் பொருளில் –
சதேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம் ஜகத் ச சைலம் பரிவர்த்தயாமி -ஆரண்யம் -64-78-என்றும்
சாகர மேகலாம் மஹீம் தஹதி கோபே ந -சுந்தர -36-13-என்றும் பூமியை இருந்ததே குடியாக நசிப்பியார்களோ –

இப்படி நசிப்பிப்பது எது கைம்முதலாக-என்னில்
1- மஹா பலௌ-
தோள் வலியே கைம்முதலாய்க் காண் இருப்பது
2- மஹா பலௌ –
மஹச் சப்தத்தாலே கேவலம் பாஹூ பலமே யன்று
மநோ பலம் யுடையவர்கள் –
கேவலம் மநோ பலமே அன்று
பஹூ பலமும் யுடையவர்கள் -என்று இரண்டையும் நினைத்துச் சொல்லுகிறாள்
3- மஹா பலௌ –
உன்னுடைய சதுரங்க பலமும் அசத் கல்பமாம் படி காண் அவர்கள் பலத்தின் மிகுதி இருக்கும் படி
4-மஹா பலௌ –
நெடும் போது யுத்தம் பண்ணினாலும் ஸ்ரமம் தட்டாத படி பலாதி பலைகள் என்கிற வித்யைகள் உடையராய்க் காண் இருப்பது
விஸ்வாமித்ரர் இடம் பலை அதிபலை என்னும் வித்யைகள் கற்றவர்கள் அன்றோ-

இப்படி ஸ்ராந்தி தட்டாது என்று அறிந்த படி என் என்னில் –
1-புண்டரீக விசாலா ஷௌ-
வேற்று -வெற்று-நிலமான இக்காட்டிலே திரியச் செய்தேயும் தன்னிலத்திலே நின்ற
தாமரைப் போலே அக்கண்ணில் செவ்வி தானே சொல்லா நின்றது காண்
2-புண்டரீக விசாலா ஷௌ–எதிரிகள் என்றால் அவர்கள் பக்கலிலே ஒரு கௌ ரவத்தைப் பண்ணிச் சிறுத்தல் பெருத்தல் செய்கை அன்றிக்கே
அவிக்ருதமாய்க் காண் கண்கள் இருப்பது
3-புண்டரீக விசாலா ஷௌ–
ப்ரீதி விஸ் பாரிதே ஷணம்-என்று எதிரிகளைக் கண்டால் உறாவுகை அன்றிக்கே
மேனாணிப்பாலே ஒரு காலைக்கு ஒரு கால் விஸ்த்ருதங்களாய்க்  காண் கண்கள் இருப்பது –

எதிரிகள் என்றால் இப்படி முகம் மலருகைக்கு அடி என்ன –
பூசலுக்கு என்று கட்டி யுடுத்து
சன்னத்தரானால் அன்றோ அப்படியே இருக்கலாவது
அனவசரத்தில் வந்து தோற்றினார் யுன்டாகில் செய்யுமது என் என்னில்
1- சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ-
சன்னத் தௌ விசரிஷ்யத -என்கிறபடியே உள்ளுடையும் இறுக்கி
உடும்புக்கீடும் இட்டு சந்னத்தராய்க் காண் அவர்கள் இருப்பது
2-சீர க்ருஷ்ணாஜிநாம்பரௌ–
காட்டிலே சர்வவித சத்வங்களையும் வேட்டையாடித் திரிகிறவர்கள் ஆகையால்
உடைத் தோலும் மரச் சட்டையுமாயக் காண் அவர்கள் இருப்பது –

ஆக இப்படி –
சத்யேன லோகன் ஜயதி தீநான்  தாநேந ராகவ
குரூன் ஸூ ச்ரூஷ்யா வீரோ தநுஷா யுத்தி சாத்ரவான் -அயோத்யா -12-29-என்கிறபடியே
அபலைகளை -அழகாலே அழித்தும்-தருனௌ-ரூப சம்பன்னௌ-ஸூ குமாரௌ-என்பதாலே
அரிகளை பலத்தாலே அழித்தும் -மஹா பலௌ-என்பதாலே
அகதிகளை அருளாலே அழித்தும் -புண்டரீக விசால ஷௌ-என்பதாலே –
தக்கார்க்குத் தக்க கருவிகளை உடையவராய்க் காண் அவர்கள்  இருப்பது –
ஆனபின்பு –
வல்லாளன் தோளும் வாளரக்கன்  முடியும் தனை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் -பெரியாழ்வார் -4-2-2- என்கிறபடியே
நான் மூக்கு அறுப்புண்டு போமித்தனை போக்கி
அவர்களோடு புக்கால் பலியாது காண் என்று பரிபவித்துச் சொல்லுகிறாள் -கரனை அவமதித்துச் சொல்லுகிறாள் –

———————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ந ச ஸீதா த்வயா- அயோத்யா -53-31/ விஷயே தே மஹாராஜ –அயோத்யா -59-4-/-ஆசசஷே அத சத்பாவம் லஷ்மணஸ்ய-அயோத்யா -86-1-/ஸூபகச் சித்ரகூடோ அசௌ–அயோத்யா -91-12–

January 18, 2015

ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-அயோத்யா -53-31-

ந ச ஸீதா-உம்மைப் பிரிந்த ஸீதா  தேவி பிழைக்க மாட்டாள்
த்வயா -உம்மோடு
ஹீநா -கூடி இருக்கப் பெறாதே
ந சாஹமபி-உம்மைப் பிரிந்த நானும் பிழைக்க மாட்டேன்
ராகவ -ரகு குலத்து உதித்தவரே
முஹூர்த்தம-சிறிது நேரமே உயிர் வாழ்வோம்
அபி ஜீவாவோ -ஒரு கால் பிழைத்தோம் ஆகில்
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ–ஜலான் மத்ஸ்யௌ  இவ உத்த்ருதௌ- ஜலத்தில் இருந்து எடுக்கப் பட்ட மீன்கள் போலே

தேவரை ஒழிந்த வன்று பிராட்டியும் உளள் ஆகாள் –
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலிலே ஜீவிக்குமது தான் இல்லை
அபி ஜீவாவா -யதி ஜீவாவா -ஒருகால் ஜீவித்தோம் ஆகில்
முஹூர்த்தம் -ஒரு ஷண  காலம்
ஜலான் மத்ஸ்யா இவ -ஜலத்தைப் பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவிறே-
அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை
உம்முடைய திரு உள்ளத்திலும் உண்டு என்று அறியும் அளவும் கான் நாங்கள் ஜீவிப்பது –

——————————————————————————————————————————————————————–

விஷயே தே மஹாராஜ ராமவ்யசந கர்சிதா
அபி வருஷா பரிமலா நாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா-அயோத்யா -59-4-

விஷயே தே மஹாராஜ -மகா ராஜரே உம்முடைய தேசத்தில்
ராமவ்யசந கர்சிதா -ராமனுக்கு நேர்ந்த துன்பத்தாலே வருந்துகின்ற
அபி வருஷா -பரிமலா நாஸ் ஸ புஷ்பாங்குர கோரகா-பூவோடும் முளையோடும் மொட்டோடும் கூடிய
மரங்களும் மிகவும் வாடின –

அவதாரிகை –

கங்கா பரிசரத்திலே பெருமாளை விட்டுத் தேறும் கொண்டு மீண்ட ஸூ மந்தரன்
சக்ரவர்த்தியைக் கிட்டிப் பெருமாள் உடைய விச்லேஷத்தில் பிறந்த விசேஷங்கள் பலவும் சொல்லி
உன் எல்லைக்கு உள் உண்டான ஸ்தாவரங்கள் அகப்பட பட்ட பாடு இது காண் -என்கிறான் –

1-விஷயே தே –
நாட்டாருடைய ராஜ்யத்துக்கும்
உன்னுடைய ராஜ்யத்துக்கும் உள்ள வாசி கேளாய்
1- விஷயே  தே-
தஷிண கோசலமும் உத்தர கோசலமுமாய்
உன்னுடைய ரஷணத்திலே ஒதுங்கி எல்லாத் தோரணத்துக்கு உட்பட்ட நாடடங்க
3- விஷயே  தே –
இஷ்வாகூ ணா மியம் பூமிஸ் ஸ சைல வன கா ந நா-கிஷ்கிந்தா -18-6- என்று
விளை நிலத்தோடும் -மலை நிலத்தோடும் -மாற நிலத்தோடும் வாசி அற-எனது -என்று -அபிமானித்து இருக்கும் படி உன் அபிமான விஷயமான இப்பரப்பில்
4- விஷயே –
நாடு நகரமும் -திருப் பல்லாண்டு -என்கிறபடியே
விசேஷஜ்ஞராயும் அவிசேஷஜ்ஞராயும்-
கர்ஷகராயும் பல போக்தாக்களாயும்-
உள்ள நாடு -இருந்ததே குடியாக –
யாருடைய நாடு என்னில்
5- தே -ப்ரஜாநாம் விநாயாதா நாத் ரஷணாத் பரணாத் அபி ஸ பிதா -ரகுவம்சம் -1-24- என்றும்
ஸ பிதா யஸ்து போஷக-என்றும் சொல்லுகிறபடியே பெற்ற பிதா பிரஜைகளை ரஷிக்குமா போலே
உன் வயிற்றிலே வைத்து ரசிக்கிற உன்னுடைய
6-தே-
ஸ்தாவரங்கள் அகப்பட க்ருதஜ்ஞராய் பஷபாதம் பண்ணும் படி புண்ய வானாய் இருக்கிற உன்னுடைய
7-தே –
ஹரி பாஹ்யாஸ்து பாஹ்லிகா-என்று பகவத் விமுகமான பாப தேசம் அன்றியிலே
பகவத் அபி முகமாம் படியான இத்தேசத்தை யுடைய உன்னுடைய –

இப்படி விஷயமாம் காட்டில் இப்படியாகைக்கு அடி என் என்னில்
1- மஹா ராஜா –
ராஜா வா ராஜமாத்ரோ வா -யுத்த -63-10 என்று சூத்திர வன்னியமாதல்
சாமந்தராதல்  ஷத்ரிய ஜென்மமாய் வைத்துப் பெட்டைக் குடியாதல் ஆகை அன்றியிலே
தஸ்யேயம் ப்ருதிவீ சர்வா -என்றும்
ஏகாத பத்ரம் ஜகாத பிரபுத்வம் -ரகு வம்சம் -என்றும்
வார்யா பலக பர்யந்தாம புங்க்தமஹதீம் மஹீம் -பால -70-3- என்றும்
ஒரு முள் குத்து நிலம் ஆளுமா போலே இப்பரப்பு அடங்க ஈரக் கையாலே தடவி யடக்கி  யாளுகிற
உன் மதிப்பான பெருமையாலே என்கிறது
2- மஹா ராஜா –
ரஞ்ஜ  நாத் ராஜா -என்றும்
அநு ரக்த பிரஜா பிச்ச பிரஜாச்சா ப்யநு ரஞ்ஜதே -அயோத்யா -1-14- என்றும்
நாடு இருந்ததே குடியாக உமக்கு நற்படும்படி நீர் தான் நல்லீராய்
இப்படி உபய அநு ராகம் உண்டாம்படி நடத்துகிறவர் அல்லீரோ
ஆகையாலே என்கிறது –

அது என் பக்கல் க்ருதஜ்ஞதையாலே யாய் பெருமாள் பக்கல் பிராகாரம் இல்லையோ -என்னில்
1-ராம வ்யசந கர்சிதா –
பிரசச்ய து பிரச்ச தவ்யாம் சீதாம் தாம் ஹரி புங்கவ  குணாபிராமம் ராமஞ்ச புனஸ் சிந்தா பரோ பவத் -சுந்தர -16-1-என்றும்
வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -திருவாய் -8-1-8-என்றும் சொல்லுகிறபடியே
பெருமாளிடைய குணங்களில் அகப் பாட்டாலே -என்கிறது
2-ராம வ்யசந கர்சிதா –
எல்லாரோடும் வரையாதே பொருந்தும்படியான பெருமாளுக்கு இப்ப்ரவாசம் வருவதே என்று க்லேசித்தார்கள் –
3- ராம வ்யசந கர்சிதா –
எல்லோரையும் வாழ்விக்கிற பெருமாளுக்கு இதொரு வ்யசனம் வருவதே என்று
க்லேசத்தால் க்ருசங்கள் ஆயின-

இப்படி க்லேசித்தவர்கள் தான் யார் என்னில்
1-அபி வ்ருஷா-
அறிவுடைய சேதனர் அல்ல –
அறிவில்லாத மரங்கள் அகப்பட
2- அபி வ்ருஷா –
வ்ருஷா   அபி வருஷங்களும் என்கிற உங்கார த்தாலே
தேவ திர்யக் மனுஷ்யர்களே யல்ல
ஸ்தாவரம் அகப்பட க்லேசித்தன -என்கிறது-

அவர்கள் தான் க்லேசித்த படி யுண்டோ என்னில்
சுக்ருசா வன நே வதா -என்று வன தேவதைகள் கூப்பிட்டன
அத்ய ஜன் கப்லான் நாகா -அயோத்யா -41-10-என்றும்
மருக்யச்ச தர்ப்பான்குற நர்வ்யபேஷா-ரகுவம்சம் -3-25-என்றும்
யானைகளும் மிருகங்களும் கவ்வின புல்லு கடைவாய் சோர நின்றன வென்று சொல்லிற்று இ ரே
இஹைவ நிதநம் யாமோ மகாப்ர ஸ்தான மேவ வா
ராமேண ரஹிதா நாம் து கிமர்த்தம் ஜீவிதம் ஹி ந-அயோத்யா -47-7- என்றும்
மனுஷ்யர்கள் க்லேசித்தார்கள்
அவ்வளவே அல்ல
மரங்களும் க்லேசித்தன -என்கிறது
கோடை தட்டி உலருதல்
பாரிலே தட்டி உலருதல்
செய்த மரங்கள் அன்றியிலே
தளிரும் முரியுமான பசு மரங்கள் அகப்பட உலர்ந்தன-
நீர் இல்லாமல் உலர்ந்தனவோ என்னில்
1-வ்ருஷா அபி பரிம்லாநா-
வ்ருஷ சேஸநே -வ்ருஷ தாது நீர் தெளித்தல் பெயரால்
ஆகையாலே சிக்தங்களாய் பத்தியிலே நிரம்ப நீர் நிற்கச் செய்தே உலர்ந்தன –
2-பரிம்லாநா-
தறிகை இட்டு வெட்டுண்ட மரங்கள் அடி அற்றால் வாடுமா போலே வாடின
3- பரிம்லாநா–
இப்போது இவ் விஸ்லேஷ க்லேசத்தால் செருக்கு வாடிற்று அத்தனை  போக்கி
ஏதி ஜீவநதமா நந்தோ நரம் வர்ஷச தாதபி -சுந்தர -34-6/யுத்த 129-2-என்று
உயிர் கிடந்தால் என்று கூடியும் நன்மை வரும் என்கிற பிரசித்தியாலே
பெருமாள் பதினாலு ஆண்டு கழிந்தால் வருவர் என்னும் நசையாலே கருகிற்றன இல்லை
4-பரிம்லாநா-
சாகைகளிலே அக்ர பிரதேசமாய் இளசாம் கொழுந்துகள்  வாடுகை அன்றிலே
5-பரிதோம் லா  நா –
மரங்களில் அடிப் பணை யோடு –
தலைப் பணை யோடு -கொம்புகளில் அடியோடு தலையோடு
முத்தல் இலையோடு இளசிலையோடு வாசி அற எங்கும் உலர்ந்தன –

வெறும் இலைகளேயோ வாடிற்று என் என்னில்
1-ஸ புஷ் பாங்குர கோரகா-
பூக்களோடு குருத்துக்களோடு அரும்புகளோடு வாசி அற எல்லாம் சோர்ந்தன –
2-ஸ புஷ் பாங்குர கோரகா-
புஷ்பம் ஆகிறது மலர்ந்த பூ
அங்குரம் ஆகிறது முகிழ்
கோரகம் ஆகிறது கரு மொட்டு
இவை அடங்க உலர்ந்தன
3-ஸ புஷ் பாங்குர கோரகா-வ்ருஷா அபி ராம வ்யசந கர்சிதா பரிம்லாநா
ஸ புத்ர பௌத்ரரான  மனிதர் உடம்பு மெலிந்து முகம் வாடினால் போலே
மரம்களோடு பூக்களோடு செருந்துகளோடு சாகைகளோடு சாகிகளோடு வாசி அற
கொழுவியவாய்ப் பருத்துச் செய்வீசுமான மரங்கள் அடைய நோகி உலறுவதும் செய்தன
விஷயே வ்ருஷா பரிம்லா நா –
உன் எல்லைக்குள் பிரமதாவ நோத்யா நா ராம ரூபமாய்
இறைத்து வளர்த்த படை வீடு சூழ்ந்த மரங்களோடு
பறட்டைகளாய் காட்டிலே தானே முளைத்து வளர்ந்த எல்லை நிலத்தில் மரங்களோடு வாசி அற எங்கும் உலர்ந்தன -என்றாகவுமாம்-

———————————————————————————————————————————————————————–

ஆசசஷே அத சத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மந
பரதாயா ப்ரமேயாய குஹோ கஹ ந கோசர -அயோத்யா -86-1-

ஆசசஷே அத -அத ஆசசஷே -அதற்குப் பின் சொன்னார்
சத்பாவம் லஷ்மணஸ்ய மஹாத்மந-மஹா புருஷனான லஷ்மணன் உடைய நன்னடத்தையை
பரதாயா ப்ரமேயாய -அப்ரமேயாய பரதாய -அளவிட ஒண்ணாதவரான  பரதனுக்கு
குஹோ கஹ ந கோசர-காட்டில் வசிக்கிற குஹன்-
அவதாரிகை –

ஸ்ரீ பரத ஆழ்வான் வாரா நின்றான் என்று ஸ்ரீ குஹப் பெருமாள் கேட்ட அநந்தரம்
இளைய பெருமாள் செய்தததை எல்லாம் சொல்லத் தொடங்கினார் –
வந்த போது செய்யும் படி சொல்லுகிறது என்-ஓடம் நின்றதே கோல் இருந்ததே  –
தானும் தன பரிகரமும் அக்கரைப் படும்படி காண்கிறேன் -என்று ஆக்ரஹ சித்தனாய் இருந்தான்
அநந்தரம் ஸூ மந்தரன் உள்ளிட்டார் வந்து -இளைய பெருமாள் ஸ்வ பாவம் போலே காண் பரத ஆழ்வான் உடைய ஸ்வ பாவம் இருப்பது
அவனை நீ காண வேணும் காண் -என்ன -இவனும் போய் கண்ட அநந்தரம்
இவனுடைய ஸ்வ பாவம் இருந்தபடி என் என்று ஆச்சர்யப் பட்டு
இவனுக்கு நம்மால் கொடுக்கலாம் உபஹாரம் என் என்று பார்த்து
இவனுக்கு சத்ருசமான உபஹாரம் இளைய பெருமாள் ஸ்வ பாவங்களாம் இத்தனை -என்று அவற்றைச் சொல்லத் தொடங்கினான் –

ஆசசஷே அத சத்பாவம் –
சத்பாவம் ஆகிறது சத்துக்களுடைய ஆசாரம் –
சச்சப்தஸ் சாது வாசக -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-11-3-என்றும்
சாதவ ஷீண தோஷாஸ்து-ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-11-3-என்றும் சொல்லுகிறபடியே
சத்துக்கள் ஆவார் ஷீண தோஷர் இ றே-பாவம் -ஆசாரம் –
ஒருவன் அர்த்தாவான் அபிஜாதன் வித்வான் என்று அறிவது அவர்கள் அனுஷ்டானம் கொண்டு இ றே
அப்படியே இ றே இவனுடைய அனுஷ்டானமும்
பெருமாள் கண் வளர்ந்து அருளுகைக்கு பூக்கள் அறுப்பது படுக்கை படுப்பது
தாமரை இலையைப் பறித்துத் தண்ணீரை முகந்து திருவடி விளக்குவது
பின்னையும் தண்ணீரை முகந்து அமுது செய்யப் பண்ணுவது
சேஷித்தத்தை பிராட்டியை அமுது செய்யப் பண்ணுவது
கண் வளர்ந்து அருளப் பண்ணிக் கையும் வில்லுமாய்க் கொண்டு
நம்மையும் கூட அசிர்த்து நோக்குவதாய்காணும் அவருடைய ஆசாரம் இருந்தபடி -என்று வ்ருத்தாந்தத்தைச் சொல்லத் துடங்கினார்-
1-லஷ்மணஸ்ய மஹாத்மந
கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினார்
2-லஷ்மணஸ்ய மஹாத்மந சத்பாவம் அப்ரமேயாய பரதாய ஆசசசேஷ-
கழியின் பெருமையை கடலுக்குச் சொல்லத் தொடங்கினார்
பரதாயா ப்ரமேயாய குஹோ கஹ ந கோசர –
3-  பரதாய அப்ரமேயாய ஆசசசேஷ-
சேஷ பூதனால் -நான் பணி செய்யக் கடவேன் -என்று சொல்லியோ பணி செய்வது –
அது கிடக்க
அஹம் சர்வம் கரிஷ்யாமி -சொல்லிற்று எல்லாம் செய்யக் கடவேன் என்று பிரதிஜ்ஞை பண்ணி
ராஜ்யத்தில் இரீர் என்ன
மாட்டேன் என்று பின் போகை சேஷத்வ க்ருத்யமோ –
நெருப்பிலே புகச் சொன்னார் ஆகில் அத்தைச் செய்தல்
அதில் நன்றாம்படி யான ராஜ்யத்தில் இருக்கச் சொன்னார் ஆகில் அத்தைச் செய்தல்
பின் போகச் சொன்னார் ஆகில் அத்தைச் செய்தல்
இப்படி சொல்லிற்று செய்கை அன்றோ சேஷத்வ க்ருத்யம் –

———————————————————————————————————————————————————————————

ஸூபகச் சித்ரகூடோ அசௌ கிரி ராஜோபமோ கிரி
யஸ்மின் வஸதி காகுத்ஸ்த குபேர இவ நந்த நே –அயோத்யா -91-12-

ஸூபகச் -பெருமை பெற்றதாய் உள்ளது
சித்ரகூடோ அசௌ கிரி -சித்ரா கூடம் என்னும் இந்த மலை
ராஜோபமோ கிரி-திருமால் இரும் சோலை மலையை உபமானமாகக் கொண்டதாய்
யஸ்மின் வஸதி -எந்தப் பர்வதத்தில் வாழ்கின்றாரோ
காகுத்ஸ்த -ககுஸ்த வம்சத்தில் உதித்த ஸ்ரீ ராமன்
குபேர இவ நந்த நே-நந்தனம் என்கிற இந்த்ரன் உடைய உத்தியான வனத்திலே குபேரன் வாழ்வது போலே-

அவதாரிகை –

இஷ்வாகூ ணாம் இயம் பூமி ஸ சைல வன காநநா -கிஷ்கிந்தா -18-6-என்று
நாடு நகரமும் காடும் மலையுமான இஷ்வாக்குகள் உடைய
ராஜ்யத்துக்குள் பெருமாள் எழுந்து அருளி இருக்கையால் வீறு பெற்றது திருச் சித்ரா கூடம் -என்கிறது –

ஸூபகச் –
அல்லாத இடங்களைப் பற்ற வீறுடைத்தாய் இருக்கை-
எல்லாரும் விரும்பும்படியாய் இருக்கை
அப்படிக்குப் பெருமாள் எழுந்து அருளி இருக்கையாலே
படைவீடு இருந்ததே குடியாக வந்து படுகாடு கிடந்தது இ றே-

எழுந்து அருளி இருக்கையால் உண்டான வைலஷ்ண்யம் ஒன்றுமேயோ உள்ளது என்ன –
1-சித்ரகூட –
தேச ஸ்வ பாவம் தன்னால் விலஷணம் -என்கிறது
2- சித்ரகூட –
ரமணீயோ ஹ்யயம் தேச -என்று திரு அயோத்யையில் நின்றும் இலங்கை ஏற எழுந்து அருளுகிற பெரிய பெருமாள்
ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்தின் உடைய போக்யதையாலே அங்கே பதி கொண்டால் போலே –
திரு அயோத்யையில் நின்றும் இலங்கை ஏற எழுந்து அருளுவதாக
ஜகாம சாஸ்ரமாம் ஸ்தேஷாம் பர்யாயேண தபஸ்வி நாம்-ஆரண்ய -11-24- என்று
வளைய வளைய ஆஸ்ரமங்கள் தோறும் தட்டித் திரிகிற பெருமாளும்
இவ்விடத்திலே பிராட்டியும் தாமும் இனிது அமரும்படி இ றே இத் தேசத்தின் உடைய போக்யதை –
3- சித்ரகூட –
நாநா விதமான தாதுக்களாலும்
நாநா விதமான ரத்னங்களாலும்
நாநா விதமான கொடி முடிகளாலும்
திரு உள்ளம் பிணிப்பு உண்ணும்   படி ஆச்சர்யமாய் இருக்கை –

இப்படி விசித்ரமான வர்ண கூட சாலைகளை உடைத்தாய் அன்றோ திரு அயோத்யையும் இருப்பது –
அத்தையோ சொல்லுகிறது என்ன –
அசௌ கிரி –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்-பெரிய திருவந்தாதி -68-என்று
கை விட்டுப் போந்தவை போலேயோ
உகந்து இனிதுறை  கோயில் -பெரிய திருமொழி -3-9-7-என்கிறபடியே அவன் உகந்து வர்த்திக்கிற இம்மலை –

என்போலே என்னில்
ராஜோபமோ கிரி-கிரி ராஜோபம-
பெருமாளும் பிராட்டியும் சேர எழுந்து அருளி இருக்கையாலே -திருமால் இரும் சோலை என்று
அழகரும் நாச்சியாரும் எழுந்து அருளி இருக்கிற திருமலையோடு ஒப்புச் சொலலாய் இருந்தது –

இப்படி இம்மலைக்கு ஏற்றம் என் என்ன
யஸ்மின் வஸதி காகுத்ஸ்த –
பிறந்து படைத்துப் பொகட்டுப் போன மதுரை போலும் அன்றியிலே
யாதொரு மலையிலே -திருமால் இரும் சோலை நாங்கள் குன்றம் கை விடான் -திருவாய் -10-8-4-என்கிறபடியே
விடாதே எழுந்து அருளி இருக்கிறார்
இப்படி இருக்கிறவர் தாம் யார் என்னில்
2- காகுத்ஸ்த-
இக்குலமாக உத்தரிக்கும் படியான பெருமையை உடைய பெருமாள் -என்கிறது –
3- காகுத்ஸ்த யஸ்மின் வஸதி-
ககுத்ஸ்த வம்சத்தில் பிறந்து
திரு அயோத்யையிலே எழுந்து அருளி இருக்கிற பெருமாள்
யாதொரு மலையிலே எழுந்து அருளி இருக்கிறார் –
4- காகுத்ஸ்த யஸ்மின் வஸதி-
இம்மலையின் மீதே எழுந்து அருளி இருக்கிற போதே
இககுலத்துக்கு கூடஸ்தனாய் இருப்பான் ஒருராஜா வானவன்
இந்த்ரன் ருஷபமாய் இருக்க அதின் கழுத்திலே நின்றாப்  போலே இருந்தது –
5-  காகுத்ஸ்த யஸ்மின் வஸதி-
பரன் சென்று சேர் திருவேங்கடம் -திருவாய் -3-3-8-என்கிறபடியே
சர்வாதிக வஸ்து இனிது அமர்ந்து அருளுகிற இடம் இ றே-

இப்படி இம்மலையிலே எழுந்து அருளி இருக்கிற இது
வனவாச மர்யாதை யாலேயாய் க்லேசாத்மகமாய் இருக்குமோ என்னில்
குபேர இவ நந்த நே –
தநபதியான வைஸ்ரவணன் தன் செருக்காலே  ஸ்வர்க்க லோகத்தில் இந்திர உத்யோனமான நந்தவனத்திலே இருந்தாப் போலே இருந்தது –
குபேரனுடைய தோப்பு சைத்ரரதம் அன்றோ
நந்தவனத்தை சொல்லுவான் என் என்னில்
அயோத்யா பரிசரமான தோப்புக்களை விட்டுச் சித்ரகூட பரிசரமான
தேனமரும் பொழில் சாரலிலே எழுந்து அருளி இருந்த போது
வைஸ்ரவணன் ஸ்வ அசாதாரணமான சைத்ரதத்தை விட்டு
இந்திர உத்யானமான நந்தவனத்திலே இருந்தாப் போலே இருந்தது –

இத்தால்
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமிப் பரப்புக்குள்
அவன் உகந்து அருளின திவ்ய தேசமே
உத்தேச்யம் -என்கிறது –

—————————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -யே து ராமஸ்ய ஸூஹ்ருதஸ்-அயோத்யா -41-20-/ராமம் மே அநு கதா த்ருஷ்டி-அயோத்யா -42-34-/

January 17, 2015

யே து ராமஸ்ய ஸூஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச
சோக பாரேண சாக்ராந்தாச் சயனம் ந ஐ ஹூஸ் ததா –அயோத்யா -41-20-

யே து -எவர்களோ
ராமஸ்ய -ராமனுக்கு
ஸூ ஹ்ருதஸ் -தோழர்கள்
சர்வே தே-அனைவரும்
மூட சேதச-அறிவற்ற மனத்தை யுடையவர்களுமாய்
சோக பாரேண-துன்பப் பளுவினால்
சாக்ராந்தாச் -ஆக்ராந்தா -அமுக்கப் பட்டவர்களுமாய்
சயனம் ந ஐ ஹூஸ் ததா -அப்போதே விட்டார்கள் இல்லை –

யே து –
சக்ரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் –
ஸ்ரீ கௌசலையார் மங்களா சாசனம் பண்ணி விட்டாள்-
அவ்வளவு அன்றிக்கே பத்தொன்பதாம்   பாஷையாய் ஆயிற்று தோழன்மார் படி –

ராமஸ்ய ஸூஹ்ருதஸ் –
தாய் தகப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உட்புக்கவர்கள்  இ றே தோழன்மார் ஆகிறார்
தங்களைப் பேணாதே அவனுக்கே நன்மையை எண்ணிப் போந்தவர்கள் படுகுலைப் பட்டவர்கள் -என்கிறது –

சர்வே தே –
ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே –

மூட சேதச-
ஸூ ஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்து இருந்து காலைக் கட்டி மீளாது ஒழிவான் என் என்னில்
அறிவி கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் செறிப்பில்லாத போதும் செய்யப் போகாது இ றே –

அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தாச் –
மலை அமுக்கினால் போலே சோகம் அமுக்க அமுக்கா நிற்கச் செய்வது என் –

சயனம் ந ஐ ஹூஸ் ததா-
படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்கள் ஆகில் மீட்டுக் கொண்டு புகுந்த வாசி அன்றோ
தாம்தாமே படிக்கையில் கிடந்து போந்தவர்கள்  அன்றே-

——————————————————————————————————————————————————————————–

ராமம்  மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே
ந த்வா பஸ்யாமி கௌசல்யே  ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ-அயோத்யா -42-34-

அவதாரிகை –

முடியானே  யில் கரணங்கள் போலே சக்ரவர்த்தியினுடைய கரணங்களும் பெருமாள் பக்கல் தனித் தனியே அனந்யார்ஹ சேஷமான படியைச் சொல்லுகிறது –

கடல் கொண்ட வஸ்து மீளப் புகுகிறதோ -என்கிறான்
சமுத்திர இவ காம்பீர்யே -பால -1-17-என்றும்
குணா நாமா கரோ மஹான்-ஸ்தோத்ர ரத்னம் -18-அமுதக் கடல் -என்றும்
தம்மைக் கடலாகச் சொல்லக் கடவது இ றே-

1-ராமம்  மே அநு கதா த்ருஷ்டி –
ராமோ ராமயதாம் வர -அயோத்யா -61-1-என்கிறபடியே சேதன அசேதன விபாகம் அறத் துவக்குகிற அவர் மினுக்கிக் கொடு போக்கியது குற்றமோ –
2-ராமம்  மே அநு கதா த்ருஷ்டி-
சஷூர் இந்த்ரியம் தான் ரூபவான்களை க்ரஹிக்குமது ஒழிய ரூபவான்கள் சஷூஸ் சை க்ரஹித்துக் கொண்டு போம்படியாவதே –
ரூபரூபி ரூபைகார்த்த சமவேத க்ராஹியாய் இ ரே சஷூஸ் இருப்பது-

1- அநுகதா –
பதார்த்த தர்சனத்துக்கே கண்ட கரணம் பாதக்ருத்யமான கமனத்தை அனுஷ்டிப்பதே
2- ராமம் மே அநுகதா த்ருஷ்டி-
யேன யேன தாத்தா கச்சதி மூல சம்ஹிதை -என்றும்
காம ரூப்ய நு சஞ்சரன் -தைத் ப்ரு-10-5- என்றும்
அவ்வஸ்துவைப் பின் செல்லுகை ஒரு சேதன க்ருத்யமாய் இருக்க அசேதனமான இந்த்ரியம் அனுஷ்டிப்பதே –
3- ராமம் மே அநு கதா –
அது தான்செய்யும் இடத்தில் ஒரு தேச விசேஷத்திலே போனால் ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கல் பண்ணும் அநு தாவநத்தை
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் -என்கிறபடியே இஸ் சம்சாரத்திலே ராம விஷயத்திலே பண்ணப் பெறுவதே –
4-த்ருஷ்டி ராமம் அநுகதா –
சஷூர் தேவா நா முத மர்த்யா நாம் -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்றும்
ஜகத் பிரதானமான கண் முன்னே போகத் துடங்கின வாறே
நீக்கி நின்ற கண்ணும் அதின் பின்னே போகத் துடங்கிற்று –
5- த்ருஷ்டி-
த்ருசில் ப்ரேஷணே -என்கிற தாத்வர்த்தத்தின் படியே சார அசார விவேகம் பண்ணி விசேஷ க்ரஹண  சக்தமாகை இ றே அதற்க்கு அடி என்கிறான்
6-த்ருஷ்டி –
நமக்கப் பட நன்மை தீமைகளை அறிவிக்குமது தனக்கு அறியாது இராதிரே
7- மே த்ருஷ்டி
எனக்கு சேஷமாய் வைத்ததன்றோ தன கார்யம் செய்கிறது
சேஷம் ஆவார்க்குப் பரகத அதிசயா தானம் பண்ண வேண்டாவோ
8- மே த்ருஷ்டி
அழகியதாய் நெடும் காலம் பழகிப் போந்தோம் –
9- மே த்ருஷ்டீ ராமம் அநுகதா –
சிரபரிசிதனான நான் இருக்க அங்கெ இதொரு கண்ணின் நாட்டம் இருந்த படி ஏன்
10-மே த்ருஷ்டி
இது தான் ஸ்வ தந்த்ரமாயிற்று ஆகிலும் இப்படிச் செய்யலாம் இ றே
11- மே த்ருஷ்டி
கைகேயி   மந்த்ரைகள் உடைய கண்ணாகில் இப்படிச் செய்யாது இ றே-
நந்தாமி   பஸ்யன் நபி தர்சநே–அயோத்யா  12-104-என்று இதுக்கு வழி காட்டிக் கொடுத்தேன் நானே கிடீர் –
12- மே த்ருஷ்டி-
அவ்விஷயத்தில் பிரவணன் ஆனபடியாலே அது தான் விட்டுப் போகச் செய்தேயும்
இவன் அத்தோடு தனக்கு சம்பந்தத்தை எடுத்துக் காட்டுகிறான்
பெற்ற தாயாரை விட்டகன்று -பெரிய திருமொழி -3-7-1-என்று பெண் பிள்ளை தானே விட்டுப் போகச் செய்தே இ றே
திருத் தாயார் -வள்ளி மருங்குல் எந்தன் மடமான் –பெரிய திருமொழி -3-7-1-என்று சம்பந்தம் சொல்லுகிறது
13 மே த்ருஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய இந்த்ரியமானால் என் நெஞ்சைப் பின் செல்லும் அத்தனை போக்கி ராமனைப் பின் செல்லுவதே –

அதற்கு உறுவது என் -தனக்கு விஷயம் ஆகிறவளவும் பின் செல்லுகிறது -அனந்தரம் மீளாதோ என்னில்
1-அத்யாபி நிவர்த்ததே —
அதிக்ராந்தேபி ராகவே -அயோத்யா -17-1-என்று- ஸ்வ விஷயத்தைக் கை கழிந்த இப்போதும் மீளக் காண்கிறிலோம்
2-த்ருஷ்டிரத்யாபி  ந நிவர்த்ததே –
இங்கே வரில் இன்னமும் கைகேயி முகத்தில் விழிக்க வேண்டில் செய்வது என் -என்கிற பயத்தாலே இன்னமும் வருகிறது இல்லை
3- மே த்ருஷ்டிரத்யாபி ந நிவர்த்ததே –
ஒருவனுக்கு ஒரு கிலேசம் பிறந்தால் பரிகர பூதர் ஆனவர்கள் அடைய வந்து உதவக் கடவதே இ றே இருப்பது
ஆயிருக்க நான் ராம விரஹத்தாலே க்லேசிதனான இவ்வளவிலும் வந்து உதவுகிறது இல்லை
4- மே த்ருஷ்டிரத்யாபி ந நிவர்த்ததே –
நெடும்காலம் பண்ணின வாசனை எல்லாம் கிடக்க
நோ பஜனம் ஸ்மரன் நிதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
நம்மை  மறந்து வராது ஒழிவதே
5- த்ருஷ்டிரத்யாபி ந நிவர்த்ததே
போன பெருமாளை மீட்க மாட்டாதாகிலும் தான் மீளத் தட்டென்ன-
6- ராமம் அநு கதா த்ருஷ்டிர் ந நிவர்த்ததே
ஏதேனுமாக அவ்வஸ்துவை பின் சென்றார்க்கு ந ச புநரா வர்த்ததே –சாந்தோக்யம் -8-15-1-
என்கிறபடியே மீட்சி இல்லையே இருந்தது இ றே-

மீட்சி இல்லை யாவது என் -அது உம்மை விட்டுப் போயிற்றோ மீளுகைக்கு -என்ன –
7-ந த்வா பச்யாமி
கெடுவாய் -தோற்றுகிற கோளம் அன்று காண் சஷூர் இந்த்ரியமாவது –
அதீந்த்ரியம் ஆகையாலே கார்ய கல்ப்யம்
ஆனபின்பு புரோ வர்த்தியான உன்னைக் காணாமையாலே போயிற்று -என்கிறான்
8- ந த்வா பச்யாமி –
உன்னைக் காணாத போதே கண் தோற்றாதேயும்
உன்னைக் கண்ட போதே கண் விழித்தும் போரக் கடவனான நான்
நீ முன்னே நிற்கச் செய்தே காணாது ஒழிகிறேன்
த்வா -என்று
என்னை சந்நிஹிதையாக சொல்லா நிற்கச் செய்தே
ந த்வா பச்யாமி -என்கிறபடி என் என்னில்
9- ந த்வா பச்யாமி –
அபி துச் ரு ணோமி -என்றும்
வச்சா ஜ்ஞாத ஸ்வரேண உக்த-என்றும்
வார்த்தை சொல்லுகையாலே சந்நிஹிதை என்று அநுமித்தேன் இத்தனை –
சஷூர் இந்த்ரியம் குடி போகையாலே பிரத்யஷிக்கப் பெற்றிலேன் -என்கிறான்
10- ந த்வா பச்யாமி –
அவர் முகத்தில் விழிக்கப் பெறாது ஒழிந்தால் அவரைப் பெற்ற உன் முகத்திலே யாகிலும்
விழிக்கலாம் என்று இருந்தேன் -அதுவும் கிடையாது ஒழிவதே –
11- ராமம் மே அநு கதா த்ருஷ்டி ந த்வா பச்யாமி –
பிரதான பரிகரமான கண் தானே அவர் பின்னே போகையாலே அசந்நிஹிதம் ஆயிற்று
சந்நிஹிதையான உன்னையோ காணப் பெறுகிறிலேன்
நான் என்ன செய்வேன் -என்கிறான்
12- ராமம் மே அநு கதா த்ருஷ்டி ந த்வா பச்யாமி –
அண்டர்கோன் அணி யரங்கன் அமுதனைக் கண்ட கண்கள் மற்று யொன்றினைக் காணாவே -என்னுமா போலே
அவ்விஷயத்தில் ஆழம் கால் பட்டது இனி வேறு ஒன்றைக் காண வற்றோ -என்கிறான் –

இப்படி சஷூர் இந்த்ரியம் தனக்கு உதவாமையாலே வாக் இந்த்ரியத்தைக் கொண்டாகிலும்
ஆஸ்வசிப்போம் என்று பார்த்து அவள் பேரைச் சொல்லி ஆறுகிறான்-
1- கௌசல்யே-
ஏஷ மே ஜீவிதஸ் யாந்தோ ராமோ யத்யபிஷிச்யதே -அயோத்யா -9-59- என்று
தென்றல் பகையாய் பெருமாளுடைய அந்வயத்தில் முடியத் தேடுகிற கைகேயியும் ஒருத்தி
கிம் புன ப்ரோஷிதே தாதத்ருவம் மரணமேவ மே -அயோத்யா -19-14- என்று
அவர் வ்யதிரேகத்தில் முடியத் தேடுகிற நீயும் ஒருத்தி –
2- கௌசல்யே-
கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூஷூவே யம மனஸ்வி நீ -சுந்தர -48-56-என்று
நீ நாடு வாழ மநோ ரதித்து பிள்ளை பெற்ற படியும்
அது எல்லாம் கிடக்க நாடோடு என்னோடு வாசி அறக் கெடும்படி யாவதே
3- கௌசல்யே த்வா  ந பச்யாமி
அனர்த்தகரையான கைகேயியை இத்தனை போதும் கண்ட கண்கள்
ஆச்வாசகரையான உன்னைக் காணாது ஒழிவதே-

இவன் இப்படி தன் தளர்த்தி தோற்றக் கௌசல்யே -என்று அழைத்தவாறே
தொங்கின இவனையும் இழக்க வாகாதே புகுகிறோம் என்று
துணுக்கோடே கிட்ட வந்து செய்ய வேண்டுவது என் -என்று கேட்க –
1- சாது மா பாணிநா ஸ்ப்ருஸ-
என்னுடைய கிலேசம் எல்லாம் போம்படி உன்னுடைய ஈரக் கையாலே தடவி ஆஸ்வசிப்பாய்-என்கிறான் –
2- பாணிநா ஸ்ப்ருஸ-
புரோ வர்த்தினியான உன்னைக் காணாமையாலே சஷூர் இந்த்ரியம் குடி போயிற்று என்று அறிந்தோம்
உன்னுடைய வாக் ச்ரவணம் பண்ணின படியாலே ஸ்ரவண இந்த்ரியம் கிடந்தது என்று அறிந்தோம் –
கௌச்ல்யே- என்று நாம கரஹணம் பண்ணின படியால் வாக் இந்த்ரியம் கிடந்தது என்று அறிந்தோம்
கந்த க்ரஹணம் பண்ணாமையாலே அவரை உச்சி மோந்த க்ராண  இந்த்ரியம் போயிற்று என்று அறிந்தோம்
ஸ்பர்ச இந்த்ரியம் செய்தபடி -என் என்று அறியலாம் படி என்னை அணைத்துக் காணாய்
கள்ளர் புகுந்து போன அகத்திலே கிடந்ததும் கிடவாததும் ஆராய்வாரைப் போலே –
வந்து போனவர் தாம் வஞ்சக் கள்வன்-திருவாய் -10-7-1-இ றே –
என்னைப் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருனல் எழுந்து அருளிப் போன புனிதர் -பெரிய திருமொழி -7-5-9-என்றார் இ றே-

3-சாது ஸ்ப்ருஸ-நன்றாகத் தொடு-
இத்தனை போதும் கைகேயியோடே ஒரு மிடறாய்-அவனைக் காடேறப் போக விட்டு
இப்போதாக நின்று ஆரோதம் அடியா நின்றான் -வெளி வேஷக் கூத்து -என்று நினைத்து இராதே
அவித்யா ஸ்பர்சத்தாலே இக்கலக்கம் இவனுக்கு வந்தேறி
இப்பாவி என் செய்வான் என்று நெஞ்சு இரக்கத்தோடு தொட வேணும் –
4- பாணி நா  ஸ்ப்ருஸ–
அன்றிஅக்னி சாஷிகமாக மங்கள முஹூர்த்தத்திலே ஸ கௌதுகமாகப் பிடித்த அக்கையாலே அந்நினைவோடே தொட வேணும்
5- பாணி நா  வாஹி வாத யத காந்தா  தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாம்பி ஸ்ப்ருச
த்வயி மே காத்திர ஸம்ஸ்பர்ச்ச சந்த்ரே திருஷ்டி சமா கம -யுத்தம் -5-6-என்று
அவர் தாமும் இத்தலை யைப் பெறாத போது இப்பாடு பட்டார் இ றே
9-பாணி நா ஸ்ப்ருஸ–
சர்வ அங்கங்களாலும் என்னை அணைத்து வெள்ளக் கேடாகாமே சாத்மிக்கும் படி ஏக அவயவத்தாலே ஸ்பர்சிக்க வேணும்
6- சாது மா பாணி நா  ஸ்ப்ருஸ-
பெருமாளை எடுப்பது ஒப்பிப்பதாய் அவருடைய அங்க ஸ்பர்சத்தாலே பரிமளிதமான அக்கையால் தொட வேணும்
7- மா  ஸ்ப்ருஸ-
ராம ஸ்பர்சம் பெரில் உஜ்ஜீவித்தும்
பெறாத போது முடியும்படியாய் இருக்கிற என்னை
அவரைப் பெற்ற உன்னுடைய அக்கையாலே அணைக்க வேணும்
பகவத் ஸ்பர்சம் நேர் கொடு நேர் கிடையாது ஒழிந்தால்
அவருடைய சம்பந்தி சம்பந்திகள் உடைய ஸ்பர்சம் கொண்டு உஜ்ஜீவிக்கக் கடவதே இ றே இருப்பது
8- வாஹி வாத யத காந்தா  தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாம்பி ஸ்ப்ருச
த்வயி மே காத்திர ஸம்ஸ்பர்ச்ச சந்த்ரே திருஷ்டி சமா கம -யுத்தம் -5-6-என்று
அவர் தாமும் இத்தலை யைப் பெறாத போது இப்பாடு பட்டார் இ றே
9-பாணி நா ஸ்ப்ருஸ-
அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -திருவாய் -10-5-5-என்று
அவ்விஷயத்திலே சொல்லக் கடவ பாசுரத்தை
அது கிடையாமையாலே
ததீய விஷயத்திலே சொல்லுகிறான் இ றே

1-அண்டர் கோன்-
இதர விஷயங்களில் போகாதபடி கால் தாழப் பண்ணுகிற விஷயத்தில் வைலஷ்ண்யம் இருக்கிறபடி –
2-அண்டர் கோன் –
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா -புருஷ ஸூ கதம் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -திருவாய் -1-1-1-என்றும் சொல்லுகிற படியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகளுக்கு நிருபாதிக நிர்வாஹகனான மேன்மையை உடையவன்
3- அண்டர் கோன் –
தனித் தனியே முடியுடை வானவராய் -திருவாய் -10-9-8-நிரபேஷமான பெரும் திரளுக்கு நியாமகனானவன்
4- அண்டர் கோன் –
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5- என்றும்
பர பராணாம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-என்றும் சொல்லுகிறபடியே
மனுஷ்யாதிகளில் அத்யந்த விலஷணரான நித்ய சூரிகளுக்கு மேலானவன் –

இப்படி நெட்டேணி யிட்டு ஏற வேண்டும் படி மிசை கொம்பாய் -எட்டாக்  கொம்பாய் – எட்டா நிலத்திலே இருக்குமோ என்னில்
1- அணியரங்கன் –
அக்குறை தீரத் தன்னைக் கொண்டு வந்து ஸூ லவன் ஆக்கினவன்
2- அணியரங்கன் –
அரங்கத் தரவணைப் பள்ளியான் -பெரியாழ்வார் -4-10-1-என்னுமா போலே
போக்குவரத் தற ஸ்தாவர ப்ரதிஷ்டையாக வந்து சாய்ந்தவன்-
சேஷ்யே புரஸ்தா ச்சாலாயாம் யாவநமே ந ப்ரசீததி-அயோத்யா -111-14 என்று
அவர் பக்கல் நாம் பண்ணுமத்தைத் தாம் இங்கே வந்து வளைப்புக் கிடக்கிறவன்
பயிர்த் தலையிலே குடில் கட்டிக் கிடப்பாரைப் போலே
ஜீவா சம்ரஷண அர்த்தமாக வந்து படுகாடு கிடக்கிறவன் –
3- அணியரங்கன்
அண்டர் கோன்-என்கிற இடத்தில் அவர்களுக்கும் அணுக ஒண்ணாத படி பெரிய மதிப்போடு
தஹ பச என்று நியாமகனாய்
அது நிரூபகமாம்படி இருந்தான்
இவ்விடத்தில் தேசிகரில் தானும் ஒருவனாய்க் கலந்து பரிமாறி
புனலரங்கமூர் என்று போயினாரே -திரு நெடும் -25-என்று அடையாளம் சொல்லிப் போயிற்று –
4- அணியரங்கன் –
அப்ராக்ருதமான தேசத்தை விட்டு பற்ற வேண்டும்படி சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலை உகந்தவன்
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் -திருமாலை -14- இ றே-
5- அணியரங்கன் –
நாள் தோறும் சேஷ வஸ்துவைப் பெருகையாலே நித்யோத்ஸவமாய்
சிக்த ராஜபதாம் க்ருத்ஸ் நாம் பிரகீர்ண கமலோத்பலாம் -அயோத்யா -7-2- என்றும்
பதாகாத் வஜமாளி நீம் -அயோத்யா -7-6-என்றும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -திருவாய் -7-2-3-என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அலங்க்ருதமான கோயிலிலே வாழ்கிறவன்
6- அணியரங்கன் –
தேசோயம் சர்வ காமைதுக் -காருடம்-11- என்கிறபடியே
பரம ப்ராப்யமான அவனை அகப்பட இங்கே அழைத்து
தன பக்கல் ஏக ராத்ர வாசத்தாலே இஸ் சம்சாரிகள் உடைய பிரதி பந்தகங்களையும் போக்கி
சேர்த்து ரஷிக்கக் கடவோம்  என்று அதிலே ஒருப்பட்டு இருக்கிற கோயிலிலே இருக்கிறவன் –
7-அணியரங்கன் –
ரங்கம் ச்யான் நர்த்தன ஸ்தானம் -ஸ்ரீ ரெங்க மகாத்மியம் -என்று சொல்லுகிறபடியே
அவர் மநோ ரத லாபத்தாலே உகந்து வர்த்திக்கிற தேசம்
நித்ய விபூதியிலே இருக்கும் பொது அங்கு குறைவாளர் இல்லாத படியினாலே தான் குறைவாளனாய் யாயிற்று இருப்பது
இங்கே வந்த பின்பாயிற்று ரஷ்ய வர்க்கம் பெற்றுப் பரி பூரணராய் திருவரங்கச் செல்வர் ஆயிற்று –
நமக்குப் பரமபதம் உத்தேச்யமாப் போலே யாயிற்று அவருக்கு கோயில் உத்தேச்யமாய் இருக்கும் படி –

ஸூ லபனான இத்தால் உமக்குப் பேறு என் என்னில்
1- என்னமுதனை –
எனக்குத் தாரகனான என்னமுதனை –
தேவர்கள் அம்ருதத்தில் வ்யாவ்ருத்தி -அதாவது
தான் உப்பு நீராய் அசேதனமாய் உடம்பு நோவக் கடைய வேண்டி சரீரத்தைப் பூண் கட்டக் கடவதே
இத்தனை பட்டாலும் மாளும்படியாய் இருக்கும்
இது சர்வ ரசமுமாய் -பரம சேதனமுமாய்-அயத்ன சித்தமுமாய் -ஆத்மாவைப் பூண் கட்டக் கடவதே -நித்யமுமாய் -இருக்கும் –
2- அமுதனை
அசௌ வா ஆதித்யோ தேவமது -சாந்தோக்யம் -3-1-1- என்றும்
ஆத்மாவை புருஷஸ்ய மது -என்றும்
ரசோ வை ஸ -என்றும்
சர்வ ராசா -சாந்தோக்யம் -3-14-2- என்றும்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -யஜூ -2-4-6- என்றும்
தூய வமுதை -திருவாய் -1-7-3- என்றும்
ஆராவமுதே -திருவாய் -5-8-1- என்றும் சொல்லுகிறபடியே
ஒருகாலும் தேக்கிடாத அமுதம் ஆயிற்று
3- அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதனை
உபய விபூதி ஒரு தட்டும் நான் ஒரு தட்டுமே அன்றோ விஷயீ கரித்தது –

அண்டர் கோன் என்கையாலே நித்யவிபூதி யோகம் சொல்லிற்று
அணியரங்கன் என்கையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று
அவ்வோபாதி தன்னையும் ஒரு விபூதியாக நினைத்து என்னமுதனை -என்கிறார்
திருமால் வைகுந்தமே திருப் பாற் கடலே என் தலையே -திருவாய்-10-8-8-என்னுமா போலே –

அண்டர் கோன் என்கையாலே ஸ்வாமித்வம் சொல்லிற்று
அணியரங்கன் என்கையாலே சௌலப்யம்  சொல்லிற்று
என்னமுதனை என்கையாலே சௌசீல்ய வாத்சல்யம் சொல்லிற்று –

அண்டர்கோன் அணியரங்கன் -என்கையாலே அகில ஜகத் ஸ்வாமின் என்கிறார்
என்னமுதனை  என்கையாலே அசமத் ஸ்வாமின் -என்கிறார்

என்னமுதனை –
தமேவ விதித்வா அதிமருத யுமேதி -என்று அவனைப் பெற்று இவன் அம்ருதனானாப் போலே யாயிற்று
இவரைப் பெற்று அவர் அம்ருதரானபடி-

இப்படி நிரதிசய போக்யரான இவரைப் பெற்று செய்தது என் என்னில்
1- கண்ட கண்கள் –
காணாத கண் என்றும் கண் அல்ல -பெரிய திருமொழி -11-7-1-என்றபடி
என்றும் பாழ் போகாத படி அனுபவிக்கப் பெற்றவன -யாயிற்று
2- கண்ட கண்கள் –
காண வாராய் -திருவாய் -8-5-2- என்றும்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா-ஸ்தோத்ர ரத்னம் -என்றும்
காண ஆசைப் பட்டுப் போகை அன்றிக்கே
யதா மநோ ரதம் காணப் பெற்றன வாயிற்று –
3- அமுதினைக் கண்ட கண்கள் –
ரச இந்த்ரிய விஷயமான அம்ருதத்தை சஷூஸ் ஸூ விஷயீ கரிப்பதே
4- அமுதனைக் கண்ட கண்கள்
பர்ஹாயிதே தே நயனே நராணாம் விஷ்ணோர்  ந லிங்காநி  நிரீஷ   தோயே -ஸ்ரீ பாகவதம் -2-3-22- என்கிறபடியே
பீலிக் கண்களான கண்கள் அன்றிக்கே பெற்ற கண்கள் –
ந மாம்ஸ சஷூ ரபி வீஷதே தம் -ருக்வேதம் -என்றும்
ந சஷூ ஷா பச்யதி கச்ச நை நம் -என்றும்
கட்கிலீ -திருவாய் -7-2-3- என்றும்
பிரமாணங்கள் நிஷேதிக்கச் செய்தேயும் முற்பட இன்று காணப் பெற்ற கண்கள் –

5-அமுதனைக் கண்ட கண்கள் –
நாட்டாரைப் போலே மாளும்படியாகப் பானம் பண்ணி அனுபவிக்கை அன்றிக்கே
நாச்சந்தி ந பிபந்தி  ஏததேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் -3-6-என்கிறபடியே
முதலில் சிதையாத படி காட்சியாலே பருகிக் களித்தன வாயிற்று இவை
6- கண்கள் –
அன்யோன்ய சத்ருசம் என்னுமா போலே ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி
வேறு உபமானம் இல்லாதவை –

1-மற்று ஒன்றினைக் காணாவே –
பாதி வ்ரத்ய தர்மத்திலே தீஷித்து ஆயிற்று இருப்பது
மற்று ஒன்றை எடுத்துக் கழிக்கைக்குப் பாத்தம் போறாதே இருக்கிறபடி
2- காணாவே –
பச்யந்தி ஸூரய -ருக்வேதம் -என்றும்
சதா பச்யந்தி -ருக்வேதம் -என்றும்
த்ரிபாத் விபூதியாக இமை கொட்டுவதும் செய்யாதே அனுபவிக்கிற வடிவழகு
இது ஒன்றுமே அனுபவிக்கப் புக்கால் வேறு ஒன்றில் புகுரலாயோ இருப்பது
3- அணியரங்கனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
சாஸ்த்ராத வேத்மி ஜனார்த்தனம் – என்றும்
சாஸ்திர த்ருஷ்டே ந வர்தமநா -விஷ்வக்சேன சம்ஹிதை -என்றும் சொல்லுகிறபடியே
ஓலைப் புரத்திலே கண்டு போகை அன்றிக்கே இக்கண்ணாலே இங்கு காணப் பெற்றது
வேறு இன்று காண வற்றோ –
4- என்னமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
கண்ட போதே முகத்தை மாற வைக்க வேண்டும் படி
செந்தீ -திரு நெடும் -2- யாய் எரிந்து இருக்கை அன்றிக்கே
கண்கள் குளிர்ந்து இருக்கும்படி நிரதிசய போக்யமான அத்தை
விட்டு புறம்பே கால் வாங்கப் போயோ இருப்பது
5- கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
காணாத படி அடியிலே விலக்கினோம் ஆகில் மீட்கலாம் அத்தனை போக்கி கண்ட பின்பு மீட்கலாமோ –
6- அண்டர் கோன் அணி யரங்கன் என்னமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
உபய விபூதி விசிஷ்டனாய்
சர்வாத்மகனான இவனைக் கண்டால்
ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இதம் சர்வம் த்ருஷ்டும் பவதி -ப்ருஹ-6-5-6- என்றும்
நான்யத் பச்யதி நாந்யச் ச்ருணோதி -சாந்தோக்யம்  -1-2-4-என்றும் சொல்லுகிறபடியே
சர்வமும் ததாத் மகமாய்த் தோற்றும் அத்தனை ஒழிய
தத் வ்யதிரிக்தமாக ஒன்றும் தோற்றாது என்றாகவுமாம்
7- மற்று ஒன்றினைக் காணாவே –
என்று அவனையே உருவக் காணும் என்னும்படி யாயிற்று –
அதாவது உகந்து அருளின திரு மேனியில் சாஷாத்காரம்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -முண்ட -2-2-9- என்றும்
ஆத்மா வா அரேத் த்ரஷ்டவ்ய -ப்ருஹ -6-5-6- என்றும் சொல்லுகிற
உபாய தசையில் சாஷாத் காரத்தில் கொண்டு போய் மூட்ட
அது சதா பச்யந்தி -ருக்வேதம் -என்கிற பல தசையில் சாஷாத் காரத்தோடு மூட்ட
அது யாவதாத்மபாவி யாகையாலே உருவ இப்படி நடக்கும் என்று கருத்து –

அத்தை இ றே
ராமம் மே அநு கதா திருஷ்டி ந தவா பச்யாமி -என்று ரிஷி சொல்லுகிறது –

———————————————————————————————————————————————————————–

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது -ஸ ப்ராதுச் சரனௌ-அயோத்யா -31-2-/பவாம்ஸ்து ஸ ஹ வைதேஹ்யா-அயோத்யா -31-25-/ராமம் தசரதம் வித்தி -அயோத்யா -40-8/

January 17, 2015

ஸ ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன
ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்–அயோத்யா -31-2-

ஸ-அந்த லஷ்மணன்-

ப்ராதுச் சரனௌ -தமையினார் உடைய திருவடிகளை
காடம் நிபீத்யா -நன்றாக பிடித்துக் கொண்டு
ரகு நந்தன -ரகு குலத்தை ஆனந்திப்பவராய்
ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்–ஸீதா பிராட்டியையும் பெரிய விரதத்தையும் யுடைய ஸ்ரீ ராமனையும் பார்த்து சொன்னார் –

அவதாரிகை –

சக்ரவர்த்தித் திருமகன் வனவாச உன்முகநான தசையிலே –
திரு அயோத்யையில் உள்ளார்க்கு ரஷகராயும்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்குத் துணையாயும்
நில் என்று இளைய பெருமாளை அருளிச் செய்ய
காட்டிலும் கூடப் போய் அடிமை செய்கையில் யுண்டான ருசியாலே –
அருளிச் செய்த வார்த்தை அசஹ்யமாய்
கூடப் போக வேணும் என்று பிராட்டி முன்னிலாகப் பெருமாள் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

ஸ –
அவதரித்த இடத்திலும்
அடிமை செய்ய வேணும் என்று பரமபதத்தில் நின்று துடர்ந்து போந்து
கூடத் திருவவதரித்த பின்பு
பால்யாத் ப்ரப்ருதி ஸூ ஸ் நிக்த-பால -18-27-என்கிறபடியே
எல்லா அவச்தைகளிலும் பிரியாதே போந்து
ந  ச ஸீதா   த்வயா ஹீ நா ந சாஹம் அபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ  ஜலான் மத்ஸ்யா விவோத்தருதௌ-அயோத்யா 53=31-என்று அன்வயத்திலே தரித்து
வ்யதிரேகத்தில் முடியும்படியான இளைய பெருமாள்-

1-ப்ராதுச் –
இவருடைய அநு வ்ருத்தியைக் கொண்டு அவ்வழியிலே அவரை பரித்துக்-ரஷித்துக்-  கொண்டு போந்தவர் –
2- பிராது –
ப்ராதிவினுடைய –
நாராயணனுடைய என்றபடி -த்வயம் பூர்வ வாக்கியம் நாராயணன் என்றது ஆறாம் வேற்றுமை உருபுடன் -நாராயண்ஸ்ய -நாராயணனுடைய என்னுமா போலே
மாதா பிதா ப்ராதா  நிவாசஸ்  சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண-ஸூ பாக்க உபநிஷத்-

1-சரனௌ
நாராயணஸ்ய சரனௌ -என்றபடி
2- சரனௌ -என்கிற தாதுவிலே
ப்ராப்யமுமாய் ப்ராபகமுமாய்  இருக்கும் என்கைக்காக
சரனௌ சரணம் பிரபத்யே -என்கையாலே கதிப் பொருளான மோஷ சாதனத்வத்தையும்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்கையாலே பஷண அர்த்தமான மோஷ ப்ராப்யத்வமும்
இத் திருவடிகளுக்குச் சொல்லப் பட்டன அன்றோ
3- சரனௌ –
கையைப் பிடித்து  அபேஷித்தால் மறுக்கலாம்
மறுக்க ஒண்ணாத படி திருவடிகளைப் பிடித்து அடிமை செய்ய இழியும் துறை  இ றே ஆஸ்ரயிக்கும் துறை –

1-காடம் நிபீட்ய –
வ்யதி ரேகத்தில் தரிக்க மாட்டாத தம்முடைய அபி நிவேசம் எல்லாம் தோற்றும்படி பிடித்து
2-காடம் –
காடம் என்கிறது இவை யதார்த்தம் -என்கிறது மனபூர்வமாக -சொல்லும் உண்மை வார்த்தைகள்
சரணம் ப்ரபத்யே -என்கிற உபாய ச்வீகாரத்தை சொல்லுகிறது –

ரகு நந்தன-
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தியை உகந்து போரும் ரகு குலத்தார் எல்லாரையும்
தம்முடைய அநு வ்ருத்தியாலே உகப்பித்தவர் –

ஸீதா முவாசாதியஸா ராகவஞ்ச மஹாவ்ரதம்
பிராட்டியையும் பார்த்து வார்த்தை சொன்னார் –
திருவடிகளைப் பிடித்து   செவியிலே வார்த்தை சொல்லுவாரைப் போலே
திரு முகத்தாலே இ றே ஆஸ்ரயனண உன்முகரான சேதனருடைய வார்த்தை  கேட்டு அருளுவது
ச்ருணோதி  ஸ்ராவயதீதி ஸ்ரீ
சாடுக்தி -தன முகத்தாலே அன்றோ சேதனருடைய வார்த்தை கேட்பது
பிராட்டியின் மூலமாக அன்றோ வார்த்தை கேட்பது

அதியஸா –
மிக்க யசசை யுடையவர்  –
தானும் ராஜ குமாரராய் இருக்க இழி தொழில் என்று பாராதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று ஒருவன் ஜ்யேஷ்ட அநு வர்த்தனம் பண்ணின  படியே என்று
லோகம் அடங்க ஆச்சர்யப் படும்படியான வார்த்தைப் பாடுடையவர் –

1-ராகவஞ்ச மஹா வரதம்
மஹா வரதரான பெருமாளைப் பார்த்து வார்த்தை சொன்னார்
2- ராகவஞ்ச –
சரணாகத விஷயத்தில் புருஷகாரம் வேண்டாத படியான குடிப் பிறப்பை யுடையவரை
3- மஹா வ்ரதம்-
குடிப் பிறப்பு தான் மிகுதி என்னும் படி
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-33- என்று
சர்வ லோக பூஜ்யமான சங்கல்பத்தை உடையவர் அன்றோ தேவர்
சர்வ பூதங்களும் என்றால் உம்மால் வரும் பயம் பரிஹரிக்க வேண்டாவோ -என்று கருத்து –

அதி யஸா ரகு நந்தன ஸ  ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ஸீதா முவாச –

——————————————————————————————————————————————————————————-

பவாம்ஸ்து ஸ ஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச்ச தே -அயோத்யா -31-25-

பவாம்ஸ்து –
ஸ்ரீ ராமனே -தேவரீரோ
ஸ ஹ வைதேஹ்யா -ஸீதா பிராட்டியாரோடு கூட
கிரிஸா நுஷூ -மலைத் தாழ் வரைகளிலே
ரம்ஸ் யதே-விளையாடுவீர்
அஹம்  ஜாக்ரத ஸ்வ பத –
அடியேன் விழித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் இருக்கிற உமக்கு
சர்வம் கரிஷ்யாமி-எல்லா அடிமைகளையும் செய்வேன் –

அவதாரிகை –

ஸ ப்ராது-என்கிற முன் ஸ்லோஹத்தாலே சரணம் புக்கால்
அந்த சரணா கதிக்குப் பலம் கைங்கர்யம் என்று
ஸ பிரகாரமாக பலத்தைச் சொல்லுகிறது இஸ் ஸ்லோகத்தாலே-
திரு அயோத்யையிலே வர்த்திக்கிற காலத்தில் அடிமை பூண்ட என்னோபாதி
அங்கு உள்ளாறும்  அடிமை செய்ய –
நானும் விழுக்காட்டிலே அடிமை செய்யப் போந்த என்னை
வனவாசத்துக்கு கூடப் போவேனாக இசைந்த உபகார ச்ம்ருதியாலே
காட்டிலும் சர்வ அவஸ்தையிலும்
சர்வ சேஷ வ்ருத்திகளும் பண்ணக் கடவேன் –
என்னைக் கொண்டு எழுந்து அருளீர் என்கிறார் -என்றுமாம் –

பவாம்ஸ்து –
அடிமை செய்யப்  பெறாது ஒழிந்த என்னைப் போல் அன்றியிலே
பூரணன் ஆகையாலே உமக்கு அடிமை கொள்ளா விடினும் செல்லும் –
ஆகிலும் என்னிடம் அடிமை கண்டால்  விசேஷம் இ றே-
ஆனாலும் என்னுடைய ஸ்வரூப சித்யர்த்தமாக அடிமை கொண்டு அருள வேணும் –

ஸ ஹ வைதேஹ்யா –
அடிமை செய்யும் இடத்தில்
மிருக வதார்த்தமாக போகுமிடத்தில் சஹகரிக்குமது ஒழிய
பிராட்டியும் தேவரும் கூட எழுந்து அருளி இருக்கும் இருப்பிலே அடிமை செய்யக் கடவேன்-

கிரிஸா நுஷூ ரம்ஸ் யதே
அவளோடே கூடே அடிமை செய்யுமிடத்தில்
பர்ண சாலையில் எழுந்து அருளி இருக்கும் அடிமை செய்யும் அளவன்றிக்கே
ஜலக்ரீடை பண்ணி
மலைத் தாழ் வரைகளிலே ஒருவருக்கு ஒருவர் வெற்றி  கொண்டாடி ரசிக்கும் அளவிலும் அடிமை செய்யக் கடவேன் –
த்வாம் அஹ ஸீதா பஹூ வாக்ய ஜாதம் -ஆரண்ய-63-12-என்றால் போலே –

அஹம் –
தாஸ்ய ரசங்களில் யான் ஒருவனாய் அடிமை செய்ய வேணும்
அவ்வவ அவஸ்தைகளில் அதுவே ஸ்வரூபமாக உடையனான நான் –

சர்வம் கரிஷ்யாமி –
மிருக யார்த்தமாகப் போகுமிடத்தில் கையும் வில்லுமாய் அடிமை செய்தும்
காயும் கிழங்கும் கல்லுமிடத்தில் -வெட்டுமிடத்தில் – கநித்ர பிட காதரனாய் -மண் வெட்டியும் கூடையும் சுமந்து –
இதம் மேத்யமிதம் ஸ்வாது -நிஷ்டப்தமித மக் நி நா ஏவ மாஸ்தே ஸ தர்மாத்மா சீதயா சஹ ராகவ -அயோத்யா -96-2-என்னும் இடத்தில்
மாம்ச பசனம் -பக்குவம் -பண்ணியும்
பர்ண சாலா நிர்மாணத்தில்
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத -ஆரண்யம் -15-7-என்று ஆஜ்ஞ்ஞாபித்து
எல்லா அடிமை செய்தும்
மலைத் தாழ் வரைகளிலே ஜலக்ரீடை பண்ணும் இடத்தில்,வல்கலை -மரவுரி -பிழிந்து உலர்த்தியும்
ராஷசர் வேட்டையாடும் இடத்தில் காவலாய் இருந்தும்
சர்வ சேஷ வ்ருத்திகளும் பண்ணக் கடவேன் –

ஜாக்ரத ஸ்வ பதச்ச தே-
தேவரும் பிராட்டியும் கண் வளர்ந்து அருளும் போதும்
காட்டில் துஷ்ட சத்வங்களும் -பிராணிகளும் –
துஷ்ட பிரக்ருதியான ராஷச ஜாதியும் கிட்டாத படி
கையும் வில்லுமாய் நோக்கியும்
உணர்ந்து அருளின போது எல்லா அடிமை செய்தும் போரக் கடவேன் –

———————————————————————————————————————————————————————————–

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத் மஜாம்
அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூ கம் -அயோத்யா -40-8-

ராமம் தசரதம் வித்தி -ஸ்ரீ ராமனை தசரத சக்ரவர்த்தியாக நினைத்திரு
மாம் வித்தி ஜநகாத் மஜாம் -ஸீதா பிராட்டியை நானாக நினைத்திரு
அயோத்யாமடவீம் வித்தி -அடவீம் அயோத்யாம் வித்தி -காட்டை அயோத்யா பட்டணமாக நினைத்திரு
கச்ச தாத யதா ஸூ கம் –தாத யதா ஸூ கம்-கச்ச -குழந்தாய் ஸூ கமாக செல்வாயாக –

அவதாரிகை –

ஸ்ரீ ஸூமித்ரையார் பெருமாள் பக்கல் யுண்டான வாத்சல்யத்தாலும்
இளைய பெருமாள் பக்கல் ஹிதபரதை யாகையாலும்
அஹம் த்வா அநுக மிஷ்யாமி வநமக்ரே தநுர்தர -அயோத்யா -31-3-என்றும்
அநு ஜ்ஞாதச்ச பவதா பூர்வ மேவ எதோ சம்யஹம்
கிமிதா நீம் புநரிதம் க்ரியதே மே நிவாரணம் -அயோத்யா -31-7- என்றும்
மன்றாடிக் கூடப் போக ஒருப்பட்ட இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி
இங்கு படை வீட்டில் உண்டான பந்து போகங்களைக் குவாலாக  நினைத்து கால் தாழாதே –
எல்லா உறவு முறையும் பெருமாளும் பிராட்டியுமாக நினைத்து கூடப் போம் -என்கிறாள்-

1-ராமம் தசரதம் வித்தி –
பெற்றார் பெற்று ஒழிந்தார் -பெரிய திருமொழி -8-9-7-என்ற ஔ பாதிக பந்துக்களான எங்களைக் குவாலாக நினைத்து இராதே
தேவதேவோ ஹரி பிதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயுமாவார் -திருமாலை -37- என்றும் சொல்லுகிறபடியே
நிருபாதிக பிதாவான பெருமாளை தஞ்சமாக நினைத்து போம் –

மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அப்படி ஔ பாதிகமான என்னையும் குவாலாக நினைத்து இராதே
தவம் மாதா சர்வ லோகாநாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-126-என்றும்
அகில ஜகன் மாதரம் -சரணாகதி கத்யம் -என்றும் சொல்லுகிறபடியே பிராட்டியையே தஞ்சமாக நினைத்துப் போம்

அயோத்யாமடவீம் வித்தி-
யத்ர நாஸ்தி ஹரிஸ் தத்ர வஸ்தவ்யம் ந க்ருதாத்மநா
வஸ்தவ்யம் தத்ர தத்ரைவ யதாராஸ்தே மது ஸூ தன-என்று சொல்லுகிறபடியே
பெருமாள் சந்தி இல்லாத படை வீட்டை விரும்பாதே
அவருகந்த காட்டைத் தஞ்சமாக நினைத்துப் போம்-

அன்றியிலே
2-ராமம் தசரதம் வித்தி-
லோக மரியாதையாலே உங்கள் ஐயரைப் பிரிந்தீராக நினைத்து இராதே
ஜ்யேஷ்டோ ப்ராதா பித்ரு சம -என்கிற மரியாதையால் உங்கள் தமையனாரை ஐயர் என்று நினைத்துப் போம்

மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அந்த மரியாதையாலே மதிநியாரை என்னோபாதி தாயாராக நினைத்துப் போம் –

அயோத்யாமடவீம் வித்தி-
காடு என்று நினைத்திராதே பெருமாள் விரும்பிற்று ஆகையாலே அயோத்யையோபாதி ஸ்மரித்துப் போம்-

அன்றியிலே
3-ராமம் தசரதம் வித்தி –
கஷாய பானம் போலே சாஸ்திர வச்யராய் வர்த்திக்கை அன்றிக்கே
பாலே மருந்தாமாப் போலே ரமயதாம் வரரான பெருமாள் ஆகையாலே
அதற்க்கடியான குணவத்தையில் வந்தால் குணைர் தசரதோபமா-அயோத்யா -1-9-என்று
உங்கள் ஐயரோடு ஒப்பர் என்று நினைத்திருக்கும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
நான் உங்கள் ஐயருக்கு அநு குணையாய் இருக்குமா போலே
இவளும் உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை -திருவாய் -10-10-6-என்றும்
துல்ய சீல வையோ வ்ருத்தாம் -சுந்தர -16-5-என்றும் சொல்லுகிறபடியே
பெருமாளுக்கு அநு குணை யான ஆகாரத்தாலே உம்மை உகப்பிக்கும் என்று நினைத்திருக்கும்
அயோத்யாமடவீம் வித்தி-
ராமாபிஷ்டவ சம்யுக்தா -அயோத்யா -6-16-என்
மங்களா நி ப்ரயுஞ்ஜாநா -ஆரண்யம் -1-12-என்று
அக்காடு தானும் அநு கூலமாய் இருக்கும் என்று நினைத்திரும் என்றாகவுமாம் –

அன்றியிலே
4-ராமம் தசரதம் வித்தி –
உங்களைப் பிரிந்த ஐயர் இனி உளராக மாட்டார் .
இனி மேல் எல்லா உறவு முறையும் பெருமாள் என்று நினைத்து இரும் –
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அசத் சமா விதவா -என்கிற மர்யாதையாலே நானும் என்று ஒருத்தி உண்டாக நினைத்து இருக்க வேண்டா –
அந்த உறவும் பிராட்டி என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
இனி படை வீடு என்றும் ஓன்று உண்டாக நினைத்து இருக்க வேண்டா
புல் என்று ஒழிந்தன கொல்-பெரிய திருவந்தாதி -98-என்று படை வீடும் இன்றே காடு எழுந்தது என்று நினைத்து இரும்-
அன்றியிலே
5-ராமம் தசரதம் வித்தி மாம்-
உங்கள் தமையனாரை உங்கள் ஐயரோ   பாதி ஸ்திரீ பரந்தரர் என்று நினைத்து இரும் -அதாவது
கைகேயி வார்த்தையைக் கேட்டு அவர் உங்களைக் காடேறப் போக விடுமா போலே
பிராட்டி வார்த்தையைக் கேட்டு மாயாம்ருகத்தின் பின்னே போகத் தொடங்குவர் கிடீர் –
வித்தி ஜநகாத் மஜாம்-
நான் உம்மை இப்போது போக விடுகிறாப் போலே அவளும் அப்போது தயங்கின உம்மையும் கூட
நிர்பந்தித்துப் போக விடக் கூடும் கிடீர் –
அயோத்யாமடவீம் வித்தி –
இப்படை வீட்டில் நிற்கப் பெறாதே காடேறப் போகிறாப் போலே அக்காடு தன்னிலும் நிற்கப் பெறாதே கடல்கரையில் போகக் கூடும் கிடீர் என்று
அவதானம் பண்ணிக் கொள்ளும் என்கிறார்கள் ஆகவுமாம் –
அங்கன் அன்றியிலே
6-ராமம் தசரதம் வித்தி-
வெறும் வடிவு அழகே என்று இராதே ராஷசரோடே வினையொத்த காலத்தில் உங்கள் ஐயரைப் போலே
தனி வீரம் செய்ய வல்ல ஆண் பிள்ளை கிடீர் என்று நினைத்து இரும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
அப்பூசல் நிமித்தமாக பயப்படுகை அன்றியிலே தேவாசூர சங்க்ராமத்தில் உங்கள் ஐயர் உடைய வீரப்பாடு கண்டால் நாங்கள் உகக்குமா போலே
அவ வாண் பிள்ளைத் தனம் கண்டால் சத்ரு ஹந்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய -30-39-என்று
மதித்துப் பாரி தோஷம் கொடுப்பாள் ஒருத்தி வீர பத்னி என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
அப்போது இவளை பேணுகைக்கு மதிளும் சிறையுமாய்  இருப்பதொரு படை வீடு இல்லை என்று நினைத்து இராதே
காட்டோடு நாட்டோடு வாசியில்லை
புலி நின்ற தூறு என்னுமா போலே நிற்கிறவன் பக்கல் மதிப்பாலே அக்காடு தானே ஒருவராலும்
மேலிட ஒண்ணாதது என்று நினைத்து இரும் -என்றார் ஆகவுமாம் –

அங்கன் அன்றியிலே
7-ராமம் தசரதம் வித்தி –
உங்கள் ஐயர் உங்கள் விச்லேஷத்தில் பாடாற்ற மாட்டாதாப் போலே கிடீர்
உங்கள் தமையனாரும் -ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர -66-10-என்றும்
அத்யைவாஹம் கமிஷ்யாமி லஷ்மணேன கதாம் கதிம் -உத்தர -107-3-என்றும்
உங்கள் விச்லேஷத்தில் பாடாற்ற மாட்டாத படியும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
நான் இப்போது உங்களைப் போக விட்டு -எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -பெரியாழ்வார் -3-2-2-என்று
அனுதபிக்கப் போகிறாப் போலே கிடீர்
இவளும் உங்களைப் பிரிந்தால் க்லேசிக்கும் படியும் –
அயோத்யாமடவீம் வித்தி
அபப்ரஷ்ட மனுஷ்யா ச தீந நாக துரங்க மா ஆர்த்த ஸ்வர பரிக்லாநா – அயோத்யா -59-15-என்று
இத் திரு அயோத்யை இப்போது படப் போகிறாப் போலே கிடீர் உங்களோடு பிரிவு உண்டானால்
பரி ஸூஷ் கப்லா ஸா நி -என்றும்
அபி வருஷா பரிம்லா நா -அயோத்யா 59-4/5-என்றும் அக்காடு தானும் படும்படி என்று ஆகவுமாம் –
அங்கன் அன்றியிலே
8-ராமம் தசரதம் வித்தி –
பெருமாள் என்றும் இப்படி அபஹ்ருத ராஜ்யரேத் தெரியும் இத்தனையோ -என்று நினைத்து இராதே
உங்கள் ஐயரோ பாதி முடியும் சூடிப் பத்து திக்கிலும் ஆணையும் செங்கோலும் நடத்துவார் என்று நினைத்து இரும் –
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
பிராட்டியும் அப்படி உடன் கேடாகத் திரிகை அன்றிக்கே நான் மஹிஷீ பதத்திலே அபிஷேகம் பண்ணி இருந்தால் போலே
க்ருத அபிஷேகையாய் மஹிஷீ பதத்திலே இருந்து நிர்வஹிக்கும் என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
இப்படி திரு அபிஷேகம் பண்ணின அனந்தரமே
அமீ ஜனஸ்தான மபோட விக்நம் லப்த்வா சமாரப்த நாவோட ஜானி
அத்யாசதே சீரப்ருதோ யதாஸ்வம் சிரோஜ்ஜிதான் யாச்ரம மண்டலாநி-ரகுவம்சம் -13-22-என்று
இக்காடு தானும் படை வீடோ பாதி நிறை குடி என்று நினைத்திரும் –

அங்கன் அன்றியிலே –
9-ராமம் தசரதம் வித்தி –
பதாதிம் வர்ஜித தச்சத்ரம் -அயோத்யா -33-5- என்றும்
தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி -பெருமாள் திருமொழி -9-2- என்றும்
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான் -பெரிய திரு மொழி -1-5-1-என்றும்
அனுசந்தித்த வர்கள் வயிறு பிடிக்கும் படி என்றும்
இக்கால் நடையோ  என்று இராதே பத்து திக்கிலும் புஷ்பகம் துடக்கமான தேர்களிலே
ஏறித் திரிவர் என்று நினைத்து இரும்
மாம் வித்தி ஜநகாத் மஜாம்-
துன்னு வெயில் வெறுத்த வெம்பரல் மேல் பஞ்சடியால் மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்து இலளே-பெரிய திருமடல் -50/51/52–என்று
பிராட்டியும் துஸ் சஞ்சாரமான காட்டிலே என்றும் இப்படி நடந்து திரியும் இத்தனையோ என்று நினைத்து இராதே
நான் உங்கள் ஐயர் அருகே தேர்த் தட்டிலே இருக்குமா போலே புஷ்பகாதி களிலே பிராட்டியும் கூட வரவர் என்று நினைத்துஇரும்
அயோத்யாமடவீம் வித்தி-
இக்காட்டிலேயோ உருவற்று இருந்து விடப் புகுகிறது -என்று இராதே
இதிலே இப்போது நித்ய சஞ்சாரம் பண்ணப் புகுகிறாப் போலே கிடீர்
மீண்டு புகுந்து இப்படை வீட்டிலேயும் நித்ய சஞ்சாரம் பண்ணப் புகுகிறது -என்று நினைத்து இரும்-

ஆக இப்படி போகிற இடத்தில் அஸ்வாஸ்யத்தை அநு சந்தித்துப் பிற்காலித்த இளைய பெருமாளோடு
ஏற்ற வார்த்தை சொல்லிற்றாக இ றே ஆபாதத்தில் தோற்றுகிறது
இது  ப்ராகேவது   மஹா பாக்ஸ்  சௌமித்ரிர் மிதர நந்தன பூர்வஜச்யா நுயாதரார்த்தே தருமா சீரை ரலங்க்ருத-சுந்தர -33-28-என்றும்
பாஷ்பபர்யா குலமுச சோகம் வோடுமசக் நுவன் -அயோத்யா -31-1- என்றும்
வ்யதிரேகத்தில் சத்தையே பிடித்து இல்லை யாம் படியாய் –
போகை க்கு முற்கோலி நிற்கிற இளைய பெருமாள் நிலைக்குச் சேராது
இது சேரும் போது இங்கனே பொருளாக வேணும்
10-ராமம் தசரதம் வித்தி-
அஹம் தாவன் மஹா ராஜே பித்ருத்வம் நோப லஷயே -அயோத்யை -58-31-என்று
உங்கள் ஐயர் அளவில் நீர் நெகிழ்ந்து நிற்கிறது ஓன்று உண்டு
அத்தை விட்டுப் பெருமாளைப் பெற்றார் என்னும் ஆகாரத்தாலே யாகிலும்
அவரோபாதி இவரும் ஒருத்தர் உண்டு என்று நினைத்து இருக்க வேணும் –
மாம் வித்தி ஜனகாத்மஜம் –
என்னையும் அவர் கைப்பிடித்தார் என்கிற ஆகாரத்தாலே நெகிழ்ந்து இராதே
பெருமாளோட்டை சம்பந்தத்தால்  பிராட்டியை பிரதிபத்தி பண்ணி இருக்கிற மாத்திரம் அவரோட்டைக் குடல் துவக்காலே
நானும் ஒருத்தி யுண்டு என்று நினைத்து இரும் –
அயோத்யாமடவீம் வித்தி –
வனம் நகரமே வாஸ்து யேன கச்சதி ராகவ -அயோத்யா -33-22-என்று
பெருமாள் விரும்பின காட்டியே படை வீடாக நினைத்து இவ் ஊரை நெகிழ்ந்து இருக்கிறது ஓன்று உண்டு
அத்தை விட்டு அவர் தங்கள் ஐயர் சொல் மாறாமைக்காகக் காட்டை விரும்பினால் போலே
தம்பி சொல் மாறாமைக்காக இப்படை வீட்டையும் விரும்புவர் –
ஆகையாலே இத்தையும் அத்தோபாதி உத்தேச்யம் என்று நினைத்து இருக்க வேணும்
இப்படி இளைய பெருமாள் நினைவு இதுவே யானாலும் ராம வாத்சல்யத்தாலே கலங்கிச் சொல்லுகிறாள்
ஆகையாலே முன்பு சொன்னவையும் அர்த்தமாகக் குறை இல்லை-

1-கச்ச –
ஆகையால் அங்குள்ள குறைகளை நினைத்து நெஞ்சாரல் பட்டிராதே அவ்வோ விடங்களுக்குத் தக்க படியே பேணிக் கொண்டு போகப் பாரும்
கச்ச தாத ய்ச்ய்ஹ்ச்ச் ஸூ கம் -பரம சம்ஹிதை -என்றும்
காம ரூப்ய நு சஞ்சரன் -தை ப்ரு-10-5-என்றும்
ததா யதா தருண வத்ஸா வத்சம் வத்சோ வா மாதரம்  சாயா வா சத்வம் அநு கச்சேத ததா பிரகாரம் -பரம சம்ஹிதை -என்றும்
நிழலும் அடி தாறுமானோம்-என்றும் சொல்லுகிறபடியே
துடர்ந்து குற்றேவல் செய்யப் பாரும் –
2- கச்ச –
ஏதத் சாம காயன் ஆஸ்தே-தை ப்ரு-10-5–என்றும்
அந்தமில் பேரின்பத்தடியாரோடு இருந்தமை -திருவாய் மொழி -10-9-11-

1-தாத -அப்பனே –
பகவத் விஷயத்தில் போராடி ஓரடி புகுர நின்றவர்களை கௌரவித்து வார்த்தை சொல்லக் கடவது -என்கிற மர்யாதையாலே ஐயர் -என்று சொல்லுகிறாள் –
அன்றியிலே
2- தாத –
உம்மைப் பெற்ற நானும் கைகேயி படைத்த பேர் படியாத படி பண்ணப் பாரீர் -என்று உபசரித்து வார்த்தை சொன்னார்கள் ஆகவுமாம்-

1-யதா ஸூ கம் -முடிந்த வரையிலே ஸூ கம் –
யதா சம்பவம் ஸூ கம் -என்றாய்
நன்மைகளும் வந்தது வரக் கண்டு போகப் போரும்
இவர் ஸூ கத்துக்கு வைகல்யமாவது
பவாம்ஸ்து சஹ வைதெஹ்யா கிரிசா நு ஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-25-என்று
அச் சேர்த்தியிலே அடிமை செய்யப் பாரித்தவற்கு அது கிடையாதே
அம் மிதுனம் அக்கரையும் இக்கரையுமாய்ப் பிரிந்து ஏக தேச கைங்கர்யமாகை இ றே
அங்கன் அன்றியிலே –
2-யதா ஸூ கம் –
ராமஸ்ய   யதா ஸூ கம் பவதி ததா கச்ச -என்றாய்
பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந  தர்மஜ்ஞேந  ச லஷ்மண
தவயா புதரேண தர்மாத்மா ந சம்வ்ருத்த பிதா மம-ஆரண்ய -16-29-என்று
அவர் உம்மை உடையவர் ஆகையாலே யாதொரு படியினாலே நெஞ்சில் குறை யற்று உகப்பேயாய் இருப்பார் –
அப்படியே பேணிக் கொண்டு போகப் பாரும் என்றாகவுமாம்
அங்கன் அன்றியிலே
3-யதா ஸூ கம் –
உமக்குப் படைவீட்டிலும் ஸூ க ஹேதுவாய் இருப்பது
ஐஸ்வர்யம் வாபி லோகா நாம காமயே ந த்வயா வி நா -அயோத்யா -31-5-என்று
பெருமாளோட்டை அவிச்லேஷம் இ றே
அது எங்கும் உண்டாகையாலே உம்முடைய ஸூ கத்துக்கு வைகல்யம் இல்லை காணும் என்றாகவுமாம் –

ஆக
இப்படி ஸ்ரீ ஸூமித்ரையார் பெருமாள் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே இளைய பெருமாளை பஹூமுகமாகத் தாம் சிஷித்து வார்த்தை சொன்னார் ஆயிற்று –

—————————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –ப்ரியவாதீ ச பூதா நாம்-அயோத்யா -2-33-/யச்ச ராமம் ந பச்யேத்-அயோத்யா -17-14-/ராஜ்யஞ்ச தவ ரஷேயமஹம்-அயோத்யா -23-29-/கிம் த்வா மன்யத வைதேஹ பிதா-அயோத்யா -30-3-/–

January 16, 2015

ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யவாதீ ச ராகவ
பஹூ ஸ்ருதா நாம வ்ருத்தா நாம் ப்ராஹ்மணா நாம் உபாஸிதா–அயோத்யா -2-33-

ப்ரியவாதீ -இனியதையே  உரைப்பவர்
பூதா நாம் -சத்தையை யுடைய  எல்லாப் பிராணிகளுக்கும்
சத்யவாதீ ச -ஹித மானத்தையே சொல்லுவர்
ராகவ -ரகு குல திலகரான ஸ்ரீ ராமபிரான்
பஹூ ஸ்ருதா நாம -பலர் இடம் பலகால் கேட்டு அறிந்த
வ்ருத்தா நாம் -பெரியோர்களான
ப்ராஹ்மணா நாம் -பிராமணர்களுக்கு
உபாஸிதா–சேவை செய்பவர் –

அவதாரிகை –
ஒருவன் ஒருவனுக்கு கூறு செய்யப் புக்கால் பிரஜைகள் பக்கலிலும் குளிர விழியா நின்றான் ஆயிற்று
அவ்வாசனையும் புறம்பு குடிமகன் ஏனோ நீ பண்ண வேண்டி இருக்கிறதோ என்னும் பயத்தாலே –
அவ்வளவே அன்றிக்கே பூமிப் பரப்புக்காகக் கடவரான பெருமாள் பிரஜைகள் விஷயத்திலே பலிக்கும் படி சொல்லுகிறது-

ப்ரிய வாதீ-
கர்ம காலத்திலே ஒடுக்கமாகப் பிளந்த நிலத்திலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே யாயிற்று
ஒருவனைக் குறித்து வார்த்தை அருளிச் செய்வதாய் இருக்கும் படி –
இப்படிச் செய்வது தான் -திவ்ய அந்தரப்புரத்துக்கு ஆதல் –
திருத் தாய்மார்க்கு ஆதல்
வசிஷ்டாதிகளுக்கு ஆதலோ என்னில்
பூதாநாம் –
சத்தாயோகி சகல பதார்த்தங்களுக்கும் இப்படியே இருப்பர்-
இருந்ததே குடியாக எல்லார்க்கும் ஒக்க ஒரு வார்த்தை சொல்லி விடுமத்தனை யோ என்றால் –
சத்யா வாதீ -ச –
அது தான் பூத ஹிதமுமாய் -சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் –
அத்ருஷ்டார்த்த சாதகமுமாய் இருக்கும் –
கீழ்ச் சொன்ன இரண்டாலும் பிரிய ஹிதங்களைச் சொன்னபடி இ றே-
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத் சத்யமப்ரியம் ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயா தேஷ தர்மஸ் ச நாதன -மனு -4-138-
இவை தான் புறம்பே ஒரு வ்யக்தியிலும் சேராது
இவை இரண்டும் தன பக்கல் சேர்ந்து கொண்டு இருக்கிறது
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையனான ஈஸ்வரனோ என்னில்
ராகவ –
ஈஸ்வரத்வம் கிடக்கட்டும் ரகு குலத்தில் பிறப்பாலாயே இத்தன்மைகள் உண்டாயின -என்கை-

இப்படி இருக்கும்   போது-இப்படிப்பட்ட குணங்களையும் -குடிப் பிறப்பையும் அனுசந்தித்து
இவை நமக்கு உண்டாவதே -என்று மதித்து இருப்பாரோ -என்னில்
நம்மைக் கண்டது பிரஜைகள் உடைய ரஷண அர்த்தமாக -ஆனபின்பு இன்னமும் நமக்கு இதுக்கு ஈடான அளவு போராது என்று  உள்ள அளவும் பார்த்து த்ருப்தர் ஆகாதே
இன்னமும் இதுக்கு ஈடான நன்மைகள் உண்டாக வேணும் என்று
அறிவுடையார் வாசலிலே போய்க் கால் கட்டியிருப்பார்
பஹூ ஸ்ருதா நாம் –
நால் இரண்டும் கற்ற அளவிலே பர்ய வசிக்கை அன்றிக்கே
ஓர் ஓன்று தன்னைப் பலகாலும் கேட்டிருப்பார் ஆயிற்று
பஹூப்ய ஸ்ருதம் -பஹஊதா ஸ்ருதம்
ஜ்ஞான வ்ருத்தா மயா ராஜன் பஹவ பர்யுபாசிதா -என்றால் போலே
பஹூப் யச்ச மஹத் பயச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர சர்வமா தத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத -என்று
பலர் பக்கலிலும் சார க்ரஹணம் பண்ணினதாயிற்று –

வ்ருத்தா நாம் –
த்ரிவித வ்ருத்தா நாம் –
சீல வ்ருத்தைர் வயோ வ்ருத்தைர் ஜ்ஞான வ்ருத்தைர் -அயோத்யா -1-12-என்று
சீலத்தாலும் வயசாலும் ஜ்ஞானத்தாலும் அதிகராய் இருப்பார்கள் –

அது தான் அர்த்த சாஸ்திரம் கற்றால் போலேயோ என்னில்
1-ப்ரஹ்மாணாம்-
ஷத்ரியர் ப்ராஹ்மணரைப் பற்றி –
அவ்வழியாலே தத்வங்களையே அபேஷிதமாக பெறக் கடவதாய் இ றே இருப்பது –
2-ப்ரஹ்மாணாம்–
என்று அவர்கள் பலருமாய்
தாம் இருந்த இடத்தே வந்து கேட்கும்படியான யோக்யதை யுண்டானால்
அவர்களைத் தாம் அழைத்து விட்டோ தர்ம சம்சயம் அறுத்துக் கொள்வது என்றால்  –

உபாஸித-
அவர்கள் இருந்த இடத்தே தாமே சென்று
அவர்கள் சொல்லும்படிக்கு அவர்கள் காலும் தம்முடைய தலையுமாயுமாய் யாயிற்று -தான் அனுவர்த்திப்பது

——————————————————————————————————————————————————————-

யச்ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி
நிந்திதஸ்  ஸ வசேஸ் லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –அயோத்யா -17-14-

யச்ச ராமம் -யவன் ஒருவனும் ராமனை
ந பச்யேத் -காணாது இருப்பானோ
து =மேலும்
யஞ்ச ராமோ ந பச்யதி -யம் ராமச்ச ந பச்யதி -எவனை ஸ்ரீ ராமனும் காணாது இருக்கிறாரோ
நிந்திதஸ்  ஸ வசேஸ்  லோகே –ஸ லோகே நிந்தித்த வசேத் -அவன் உலகினில் நிந்திக்கப் பட்டவனாய்  வாழ்வான்
ஸ்வாத்மாப்யே நம் விகர்ஹதே –ஸ்வா த்மா அபி ஏநம் விகர்ஹதே -தன்னுடைய ஆத்மாவும் இவனை நிந்திக்கிறது –

யச்ச ராமம் ந பச்யேத் து-
ராமம் -என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை –
ய-காணாது இருக்கிறான் யாவன் ஒருவன்
ச-எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்-
து -இது தப்பினாலும்
தப்பாதது தப்பினால் –
வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
யஞ்ச ராமோ ந பச்யதி-
யம் ச ராமோ ந பச்யதி –
எத்தனையேனும் சிறியாரும் இவர் கண் பார்வைக்கு இலக்காதார் இல்லை –
யம் -எத்தனையேனும் சிறியவன் -என்கிறது –
எத்தனையேனும் சிறியார் இ றே இவர் கண்ணில் பார்வைக்கு இலக்காவார் –
யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -திருவாய் -1-3-4-
ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும் –
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்
எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும் பெருமாள் உடைய ஒரு வேளை புறப்பாடு கானான் ஆகில் அவன் பெரியன் அல்லன் –
எத்தனையேனும் சிறியனானவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை –
தப்புகிறான் யாவன் ஒருவன் -அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் பட்டான் –
எண்ணப் படாமையிலே எண்ணப் படும் -முயல் கொம்பு போலே —
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் எண்ணப்படும் –

இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் தொடக்கமனார் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ்  ஸ வசேஸ் லோகே -லோகே நிந்தித-
இவனை நிந்திக்கைக்கு உரியார் அல்லாதார் இல்லை –

விஷய பிரவணனானவன் இப்போது பழியாய்
மேல் நரகமாய் இருக்கச் செய்தே
தான் நல்லது செய்கிறோம் என்று இருக்கும் இ றே
அப்படித் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –
தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும்
திருக் கைத்தலம் இழந்தவன்
இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம்
கருப்பூரமும் எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல்  ஆயிற்று -என்று இருக்கும் இ றே-

—————————————————————————————————————————————————————————–

ராஜ்யஞ்ச தவ ரஷேயமஹம் வேலேவ சாகரம்
ப்ரதிஜா நாமி தி வீர மா பூவம் வீர லோகபாக் –அயோத்யா -23-29-

ராஜ்யஞ்ச தவ – தவ ராஜ்யம் ச –
உம்முடைய ராஜ்யத்தையும்
ரஷேயமஹம் -அஹம் ரஷேயம்
நான் காப்பாற்றுவேன்
வேலேவ சாகரம் -வேலா இவ சாகரம்-
கடலை கரை போலே –
ப்ரதிஜா நாமி தி வீர –
சூரனே பிரதிஜ்ஞ்ஞை செய்கிறேன்
இல்லா விடில் –
மா பூவம் –
உம நாட்டிலும் வாழக் கடவேன் அல்லேன்
வீர லோகபாக் —
வீரரான தசரதர் அடையப் போகும் உலகை அடையக் கடவேன்-

ராஜ்யஞ்ச தவ ரஷேயம் –
ரஷ தர்மேன பலேன-கிஷ்கிந்தா -1-128-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே
உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன் –

எனக்குத் தாதர்த்யம் ஸ்வரூபம் ஆனாலும்
உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
அஹம் வேலேவ சாகரம்-
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும்
கரையை அதிக்ரமிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் என்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும் –

ப்ரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்

தி வீர-தே வீர
ஒரு கோழை முன்னேயோ நான் பிரதிஜ்ஞ்ஞை பண்ணிற்று-
பிரதிஜ்ஞ்ஞை பண்ணினால் அத்தத் தலைக் கட்டித் தர வல்ல ஆண் பிள்ளைத்தனம் உடைய
உம்முடைய முன்னே அன்றோ –

மா பூவம் –
இப்படிச் செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியிலே வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே
உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன் –

வீர லோகபாக்-
உம்மை முடி சூட்டி அனுபவிக்கப் பாரித்து
அது பெறாதே போன சக்ரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் –

———————————————————————————————————————————————————————

அவதாரிகை –

பித்ரு வசன பரிபாலன  அர்த்தமாக -வநவாசோ மஹோதய-அயோத்யா -22-29-என்று
சௌமுக்யத்தோடே வநவாச ஸூ முகர் என்று நாட்டார் அபர திரு நாமம்  சாற்றும்படி வநவாச ஸூ முகராய் –
அப்போது உலகுடைய நாச்சியாரான ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் உடைய ஸூ குமாரமான திரு மேனியிலே மென்மையைத் திரு உள்ளம் பற்றி பிராட்டியை
திரு அயோத்யையில் நாம் மீண்டும் வருமளவும் ச்வச்ருச்வ சுராதி பரிபாலனம் -மாமியார்கள் மாமனார்கள் பரிபாலனம் -பண்ணிக் கொண்டு இரும் -என்று பெருமாள் வேண்டிக் கொள்ள
அவ்வார்த்தை வ்ரண ஷாரம் போலே பிராட்டிக்கு அசஹ்யமாய் -புண்ணில் புளிப் பெய்தால் போலே –
பிரணய அபிமானங்கள் வ்யுத்க்ரமம் ஆகையாலே
பெருமாளைக் குறித்து ஷேபோக்தி பண்ணுகிறாள் இஸ் ஸ்லோஹத்தாலே-

கிம் த்வா மன்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –அயோத்யா -30-3-

கிம் த்வா மன்யத -த்வா கிம்  அமந்யத-உம்மை என்ன நினைத்து இருப்பர்
வைதேஹ-விதே ஹ குலத்தில் பிறந்த
பிதா மே -மே பிதா -என்னுடைய தகப்பனாரான ஜனகர்
மிதிலாதிப -மிதிலைக்கு அரசராய்
ராம-வெளி அழகாலே ரமிக்கச் செய்பவரே
ஜாமாதரம் ப்ராப்ய -மாப்பிள்ளையாக அடைந்து
ஸ்த்ரியம் -பெண்ணான
புருஷ விக்ரஹம் -ஆண் உடம்பை யுடைய –

கிம் –
கிம் என்கிற இது குத்ஸா பரமான அவ்யயம் –
அப்போது கிம் வஷ்யதி -என்று குத்ஸா பாரமாகச் -தாழ்வாகச் -சொல்லுவர் என்றபடி –
அன்றிக்கே
கிம் -என்று பிரசன்னமான போது -என்ன -என் சொல்லுவர் -என்று பொருள் – –

கிம் த்வா வஷ்யதி என்றும் கிம் த்வா அந்யத-என்ற பாட பேதங்கள்
அமந்யத -என்ற பாடமா போது
குத்ஸா விஷயமாக நினைத்து இருப்பர் என்றும்
என் நினைத்து இருப்பர் -என்றும் இரண்டு அர்த்தம் –

1-த்வா-
உளுத்த வில்லை முறித்து
ததாது ஜ்ருமபிதம் சைவம் தநுர் பீம பராக்கிரமம் -பால -75-20-என்றபடி முறித்து
லோகத்தை ஊமத்தங்காய் தீற்றின உம்மை –
2-த்வா –
வசிஷ்ட அநு வர்த்தனம் பண்ணிப் போருகையாலே என்னோபாதி ஸூ சம தர்மஜ்ஞ்ஞர் இல்லை என்று பொய்யே இறுமாந்து இருக்கிற உம்மை
3- த்வா –
எழிலே கோழை யான   உம்மை

கிம் த்வாம் அந்யதே -கிம் வஷ்யதி –
ராஜா அன்று என்ன ஒண்ணாதே
ராஜ தர்மம் அறியீர் என்ன ஒண்ணாதே –
குருகுல வாசம் பண்ணி அறியீர் என்ன ஒண்ணாதே –
குல க்ரம ஆயாதமான ஆசாரம் அறியீர் என்ன ஒண்ணாதே
குல ஸ்திரீகளுக்கு பர்த்ரு சஹ வாசம் ஆவச்யகம் என்னும் இடம் அறியீர் என்ன ஒண்ணாதே
குல ஸ்திரீயை உபேஷியாமைக்கு பிரதம பரிகரமான ஏக தார வ்ரதவ்யம் உமக்கு இல்லை என்ன ஒண்ணாதே
கிம் பஹூ நா-பல சொல்லி என் –
தேவர் அனுஷ்டானம் கண்டால் உம்மைக் கனக்கத் தப்பிதம் என்று இருக்கும் இத்தனை இ றே –

கிம் த்வாம் அந்யத வைதேஹ-
உம்மை ஐயர் என்ன நினைத்து இருப்பார் –
திருமாமனார் தசரத சக்ரவர்த்தி கையிலே யாதல் –
திரு மாமியார் ஸ்ரீ கௌசலையார் கையிலே யாதல் -அன்றே என்னைக் காட்டிக் கொடுத்தது –
1-இயம் ஸீதா-என்று -உம்முடைய கையில் அன்றோ காட்டிக் கொடுத்தது –
ஸ்த்ரீத்வத்தில் கொற்றை யற்ற பெண்களுக்கு பர்த்ரு விரஹத்தில் சத்தா நாசம் பிறக்கும் என்று சொல்லிக் கொடுத்தாரே
2-இயம் –
இவள் அத்யந்த அபிமானி -என்று சொல்லிக் கொடுத்தாரே –
ஆர்த்தார்த்தே முதிதே ஹ்ருஷ்டா ப்ரோஷித மலி நா க்ருஸா
ம்ருதே ம்ரியேத யா நாரீ சா ஸ்திரீ ஜ்ஞேயா  பதிவ்ரதா -இத்யாதி ஸ்லோகங்களாலே மந்வாதி ஸ்மர்த்தாக்கள் பாதி வ்ரத்யத்துக்கு வாயோலையிட்ட பெண்டாட்டி அன்று கிடீர் இவள் என்று சொன்னாரே –
அந்த லஷணங்கள் சொல்லலாவது-பர்த்தாவுக்கவும் தங்களுக்கும் பிரிந்து உடலும் உயிரும்  உள்ளார்க்கு அன்றோ –
இவளுக்கு உடலும் உயிரும்  தேவரீர் என்று அறுதியிட்டுக் கொடுத்தாரே
3-இயம் –
நிழலோடு மல் பொருவார் இல்லை கிடீர் -என்றாரே
4-இயம்
இவள் தலையாலே ஏதேனும் குறை விளைந்தது உண்டாகிலும்  தேவரீரது கிடீர் என்றாரே –

ஸீதா –
பெண்களுக்கு தாய் கூறு மிக்கு இருக்கும் ஆகையாலே மாதரம் அங்க நா -வேறு மணம் கிடீர் –
எடுத்து விநியோகம் கொள்ளும் அத்தனை கிடீர் என்றாரே
ஸீதா
பிறக்கும் போதே கீற்று தப்பாமல் பிறந்தாள் -என்றாரே
மம ஸூதா –
இவளைப் பாராதே என்னைப் பார்க்க வேணும் என்றாரே
சஹ தர்ம சரீதவ
தேவர் உத்தியோகத்துக்கு கூட எழுந்து அருளி இருக்கும் இவள் -என்றாரே
தவ
சஹ தர்ம சரியாம் இடத்தில் சேஷத்வம் கை விடாள்-என்றாரே
ப்ரதீச்ச -அங்கீ கரித்து அருள வேணும்
அத்தலைக்கு அர்ஹமாம் படி திரு உள்ளம் பற்ற வேணும் -என்றாரே
ச -உம்மைத் தொகை
அர்ஹதா ஜ்ஞானம் மாத்ரம் அன்றிக்கே விஷய வைலஷ்ண்ய அநு ரூபமான போகம் கொடுத்து அருள வேணும் -என்றாரே
ஏநாம் –
இப்படி நோற்றுப் பிறந்தவளை
நெடும் காலம் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற தொடும் கால் ஒசியும் இடை இள மான் -திரு விருத்தம் -37
பத்ரம் தே –
நோற்றுப் பிறந்தாள் என்கிறேன் இத்தனை போக்கி
பேறு தேவரீரது  காணும் என்றாரே –
போக்யம் மிக்கதனையும் போக்தாவுக்குப் பேறாம் அத்தனை இ றே-

பாணிம் க்ருஹ்ணீஷ்வ –
கை நீட்ட அறியாள் காணும் -நீரே பிடியீர் -என்றாரே –
கையைப் பிடிப்பது கையாலேயாய் இருக்க
லோகம் எல்லாம் ஒதுங்கினாலும் நிழல் விஞ்சிப் போஷ்யம் சிறுக்கும் படியான
வீரப் பாட்டை உடைத்தான தேவரீர் திருத் தோளிலே கண் வைத்துத் தகுதியாகத் தொழில் செய்ய வல்ல  கையாலே பிடிடீர் என்று விசேஷித்தாரே-
பாணிநா –
என்று கையை விசேஷித்து கவி பாடுகிறது
இங்கன் ஒத்த தசையிலே எடுத்துக் கொண்டு போம் என்றாரே –
இவ்வாகாரங்கள் ஒன்றும் -பிரிவு பொறாமை -சொல் பொறாமை -அத்யந்த பாரதந்த்ர்யம் -தர்ம அனுஷ்டான சஹாகாரித்வம்
நிரந்தர போக அர்ஹத்வம் போக்யதை முதலான ஆகாரங்கள் -தேவரீர் திரு உள்ளம் பற்றிலீரே
உம்முடைய பிரதிபத்தி அந்யதா வி றே இருந்தது-

இயம்
என்று என்னுடைய சௌந்தர்யம் சொல்லுகிறார் என்று இருந்தீர் –
ஸீதா
என்று என்னுடைய மாத்ரு குல ஸூ த்தி சொல்லுகிறார் என்று இருந்தீர்
மம ஸூ தா –
என்று என்னுடைய பித்ரு குல ஸூ த்தி  சொல்லுகிறார் என்று இருந்தீர்
சஹாதர்மசரீ –
என்று என்னுடைய சௌசீல்யம் சொல்லுகிறார் என்று இருந்தீர்
தவ
என்று உம்மைக் கொண்டாடுகிறார் என்று இருந்தீர்
ப்ரதீச்ச
என்று வரில் போகடேன் -கேடில் தேடேன் -என்று இராதே கொள்ளீர் என்கிறார் என்று இருந்தீர்
ச -காரத்தாலே
கண்ணுக்குத் தைத்ததோ என்று கேட்டார் என்று இருந்தீர் -அழகு கண்ணில் பட்டதோ என்று –
ஏ நாம் –
என்று என் தகபனாகையாலே சௌந்தர்யாதிகள் கண்ணிலே பட்டு வாத்சல்யத்தாலே சொல்லுகிறார் என்று இருந்தீர்
பத்ரம் தே –
என் பக்கல் பிரேமத்தால் சத் குணமான ப்ரேமம் உம்முடைய பக்கலிலே விளைந்து
திருஷ்டி தோஷம் வருகிறது என்று அஞ்சி உமக்குக் காப்பிட்டார் என்று இருந்தீர்
பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா
என்று க்ரியா கலாபத்துக்குச் சடங்கம் சொல்லுகிறார் என்று இருந்தீர்
அப்படி சர்வஜ்ஞரான ஐயர் சொன்ன வார்த்தையை நேராகத் திரு உள்ளம் பற்றாதே
இன்று என்னை வைத்துப் போனீர் என்றால்
கிம் த்வாம் அந்யத -உம்மை ஐயர் என்ன நினைத்து இருப்பார் –

1-வைதேஹ –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜானகாதைய -ஸ்ரீ கீதை -3-20-என்று
க்ரியாகலா பாதிகளைக் கை விடாதே மோஷ சித்திக்கு யத்நிக்குமவர் ஆகையாலே
ஒரு முஹூர்த்தமும் பத்நீ வியுக்தராய் இருந்து பழக்கம் இல்லாதவர் –
2- வைதேஹ-
விகத தேஹாபிமானர்  -பழுதற வென்னுமவர்-
3- வைதேஹ-
ஜன்ம ப்ரப்ருதி சோகம் கண்டு அறியாதவர் -தேஹம் அற்றவர் –
என்னைப் பெறுகையாலேஎல்லாம் காண வேண்டா நின்றது இ றே
பாதி சம்யோக   ஸூ லாபம் வயோ த்ருஷ்ட்வா து மே பிதா சிந்தார்ணவகத பாரம் நாஸ ஸாதா ப்லாவோயதா -அயோத்யா -118-34-
அவரை மேலும் கவலைக் கடலில் அமிழ்த்தி விடாதீர் –

பிதா மே –
பிள்ளைகள் சமர்த்தர்கள் ஆனால் கல் நெஞ்சராய்க் காட்டுக்கு விட வல்லாரும் உண்டு
நான் ஏதேனும் அசமர்த்தை யாகிலும் அவருக்கு வயிறு பிடியே இ றே உள்ளது
தனியிருக்கவும் பொறுக்கவும் வல்ல பிள்ளையைப் பெறாதே வகுத்தவன் நிழல் பெறில் பிழைத்து
இலக்கில் சத்தா நாசம் பிறக்கும்படியான என்னைப் பெற்றுக் கெட்டாரே-

1- மிதிலாதிப
ஐயர் திரு உள்ளத்தில் நோவ
அத்தேசம் எல்லாம் நோமே
2- மிதிலாதிப –
ஒரு தேசத்தை தோள் நிழல் கீழ் இட்டுக் கொண்டு இருக்கிறவருக்கு
ஒருவன் ஒருத்தியை தோள் நிழல் கீழ் ஒதுக்க மாட்டிற்று இலன் என்றால் புண்ணாய் இருக்குமே-

1-ராம –
ஐயோ வடிவிலே பசை போலே இருந்ததாகில் உன் அகவாயும்
2-ராம –
அகவாய் கண்டு -கடினமான நெஞ்சைக் கண்டு -சத்ருக்னன் என்று பேரிட்டது அன்றே
அது கடைக் குட்டியான தம்பியார்க்கு ஆயிற்றே –
ராம இத்யபி ராமேண வபுஷா தஸ்ய சோதித நாமதேயம்  குருச்சக்ரே ஜகத் பிரதம மங்களம்-என்று
உம்முடைய அழகு மாத்ரத்துக்கு அன்றோ வசிஷ்டன் பேர் இட்டது
அஜ் ஜகத்தோடும் எனக்கும் உறவு அற்றது இ றே-இவற்றின் புறத்தாள் என்று எண்ணா -திருவிருத்தம் -33-
3-ராம –
சஹஸ்ரநாம தஸ் துல்யம் -என்று ஆயிரம் பேருடைய சக்திக்கு சமாநமாய்
தனித் தனியே எழுந்து இரா நின்றது ஆயிற்று-

நாம் இங்கனே யாக வேணுமோ
1-ஜாமாதரம்
உங்கள் ஐயருக்கு மூத்த பிள்ளை ஆனால் போலே
எங்கள் ஐயருக்கும் மணவாளப் பிள்ளை ஆனீரே –
2- ஜாமாதரம் –
ஜாமாதா தசமோ க்ரஹ -என்று பெண் பிள்ளை பெற்றுக் கொடுத்தார்க்கு க்ரஹம் பத்தாய் இ றே இருப்பது-

ப்ராப்ய –
தாமே உகந்து செய்தது ஆகையாலே ஒருவர் முகம் பார்த்து வெறுக்க விரகு இல்லையே –
1-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –
உம்முடைய முடியும் உடையும் பேதித்த பெண்டாட்டி யானீரே-
2-புருஷ விக்ரஹம் –
அது தனக்கு நிலையுண்டாமாகில் காட்டிலும் துணையாம் இ றே-
3- புருஷ விக்ரஹம் –
புறம் பூச்சான ஆண் தோல்  இ றே படை வடித்தது -ஆயுதம் பிடித்தது –
4- புருஷ விக்ரஹம் –
உடம்பு எரி குத்தாதே -செம்புள்ளிகள் கரும் புள்ளிகள் குத்தாமல் –
நாட்பு வயலுக்கு மிரள் காட்டினால் போல் -பேர் சுமந்தீர் இத்தனை இ றே –
பட்சிகள் தானியங்களை எடுத்துச் செல்லாமல் இருக்க
அவர்களை மிரளச் செய்ய
செம்புள்ளி கரும்புள்ளி குத்தப் பெற்ற மனித உருவம் வயல்களில் நாட்டப் பட்டு இருக்கும் -அவற்றுக்கு மிரள் -என்று பெயர்
5- புருஷ விக்ரஹம் –
அகவாய் ஸ்திரீயும் புறவாய் புருஷனுமான ஸ்திரீ புருஷக் கலப்பை த்ருதீய பிரகிருதி என்பார்கள்  நாட்டார்  –
த்ருதீய பிரகிருதியை நாடு சொல்லும் பேரை நான் சொல்ல அஞ்சினேன்
நாடு தானும் சொல்லாது இ றே
ஆண் பிள்ளைச் சொற்றாழ்வி-என்னும் இத்தனை இ றே –

————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –கச்சதா மாதுல குலம்-அயோத்யா -1-1-/இச்சா மோஹி மஹா பாஹூம் -அயோத்யா -2-22-/

January 14, 2015

அயோத்யா காண்டம் -1-1-

கச்சதா  மாதுல குலம் பரதேன ததா அநக
சத்ருக்நோ நித்ய சத்ருக்நோ நீத ப்ரீதி புரஸ்க்ருத –அயோத -1-1-

அநக -தோஷம் அற்றவரும்
நித்ய சத்ருக்ந-எப்போதும் எதிரிகளான இந்த்ரியங்களையும் ஜெயித்து இருப்பவரும்
சத்ருக்ந -எதிரிகளை மண் உண்ணப் பண்ண வல்லவர் ஆகையாலே சத்ருனன் என்று பெயரிட்டவருமானவர்
ப்ரீதி புரஸ்க்ருத -அன்பினால் முன் உந்தப்பட்டவராய்
ததா -பரதன் சென்ற அப்போதே
மாதுல குலம் -மாமாவின் வீட்டுக்கு
கச்சதா -போகா நிற்கிற
பரதேன -பரதனால்
நீத -அழைத்துச் செல்லப் பட்டார் –

கச்சதா –
போகா நிற்கிற என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே போகிற விடத்தில்
தனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாதல்
இங்கே மாதா பிதாக்களை கேள்வி கொள்ளுதல்
பூர்வஜரான பெருமாளைக் கேள்வி கொள்ளுதல்
இவ்வளவும் அன்றிக்கே அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாத படியாலே போனான் -என்கை-
மாதுல குலம் –
யுதாஜித் அழைத்தது அவனை யாகையாலே போக்கில் உத்தேச்யதையும் அவனுக்கு .
இவனும் அவன் உத்தேச்யனாய் போனான் என்கை –

பரதேன –
சக்ரவர்த்தியும் துஞ்சி
பெருமாளும் ராஜ்யத்தைப் போகட்டுப் போய்
இளைய பெருமாள் அடிமை செய்ய வேணும் என்று தொடர்ந்து போய்
சத்ருந ஆழ்வானும் -ராமனை அல்லாது அறியாத பரதா -நின்னை அல்லது அறியேன் என்று இருக்கும் தசையிலும்
ராஜ்யத்தை பரிக்கக்-தாங்கக் -கடவன் என்று ஆயிற்று ஸ்ரீ வசிஷ்ட பகவான் திரு நாமம் சாத்திற்று –
பரதன் இதி ராஜ்யஸ்ய  பரணாத்-என்றான் இ றே ஸ்ரீ சதா நீகன்-

ததா -அப்போதே
இருவரும் ராஜ புத்ரர்களாய் நஷத்ர பேதம் உண்டானால் பிரித்து முஹூர்த்தம் இட்டுப் போக ப்ராப்தமாய் இருக்க
அவன் போனதுவே முஹூர்த்தமாகப் போனான் -என்கை –
கச்சதா -என்கிறதிலே அர்த்த சித்தம் அன்றோ –
ததா என்றது என் என்னில்
அங்கு மமதா நிவ்ருத்தியைச் சொல்லிற்று -தனக்கே ஒரு பிரயோஜனம் இன்றி சென்றமை சொல்லி –
இங்கு அதுக்கு ஆச்ரயமான அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது -தான் ஒருவன் உளன் என்கிற நினைவும் இல்லாமல் –
ஆகையாலே புநருக்தி தோஷம் இல்லை
சேஷத்வ விரோதி இ றே இரண்டும் –

அநக –
பாபம் அற்றவன்
அகம் இல்லாதது இவனுக்கே இ றே
அகம் -உத்தேச்ய விரோதி
இவ்விடத்தில் அகமாவது ராம பக்தி
இத்தைப் பாபம் என்னப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதி யாகையாலே புண்யமும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம் -சாந்தோக்யம் -8-13-1-என்று பாப சப்த வாஸ்யமாய் ஆயிற்று இ றே –
ஆகையால் பரத அநு வ்ருத்தி யாகிற உத்தேச்யத்துக்கு விரோதி யாகையாலே ராம சௌந்தர்யத்தில் கால் தழுவும் அதுவும் பாபமாம் அத்தனை இ றே –
ராமோ பிரமாத மம கார்ஷீ -என்று ராம அநு வ்ருத்திக்கு இடைச் சுவராக சொல்லிற்று இ றே ராம சௌந்தர்யத்தை –
பரத அநு வ்ருத்திக்கு இடைச் சுவர் என்னும் இடம் சொல்ல வேண்டா வி றே

சத்ருக்ந –
பிள்ளைகள் உடைய சந்நி வேசங்களைப் பார்த்து  திரு நாமம் சாத்துகிற ஸ்ரீ வசிஷ்ட பகவான்
பெருமாள் கண்டாரை அழகாலே துவக்க வல்லராகத் தோற்றுகையாலே ராமன் -என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாகத் தோற்றுகையாலே -லஷ்மணன் -என்றும் திரு நாமம் சாத்தினாப் போலே
இவனுடைய சந்நி வேசததைக் காணவே சத்ருக்கள் மண் உண்ணும்படி இருக்கையாலே-சத்ருக்னன் -என்று திரு நாமம் சாத்தினான் –

நித்ய சத்ருக்ந –
பாஹ்ய சத்ருக்களைப் போலே அன்றிக்கே ஆந்திர சத்ருக்களான இந்த்ரியங்களை ஜெயித்து இருக்கும் -என்கை –
அவ் விந்த்ரிய ஜெயத்தின் எல்லை எவ்வளவோ என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்கிற ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு ஒண்ணாது ஒழிகை –
அதாகிறது
பெருமாளைப் பற்றும் போதும் -தன உகப்பாலே யாதல் –
அவருடைய வை லஷ்ண்யத்தாலே ஆதல் அன்றிக்கே
தனக்கு உத்தேச்யனான இவன் உகந்த விஷயம் என்று பற்றுகை –

நீத –
அழைத்துச் செல்லப் பட்டான் –
ராஜாக்கள் போகும் போது உடைவாள் மற்று ஓன்று கொண்டு போமோபாதி
அவன் கொடுபோகப் போனான் –
த்ரவ்யத்துக்கு த்ரவ்யாந்தரங்களோட்டை சம்யோகம் உபய நிஷ்டமாய் இருக்கும் இ றே
அது போல் அன்றிக்கே  ஜாதி குணங்களோ பாதி -கடமும் கடத்வமும் போலே -போனான் –

ப்ரீதி புரஸ்க்ருத –
அன்பினால் முன் தள்ளப் பட்டான் –
ஜ்யேஷ்ட அநு வ்ருத்தி கர்த்தவ்யம் என்று போனான் அல்லன் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-27- என்று போன இளைய பெருமாளைப் போலே போன இடத்தில்
சர்வ சேஷ வ்ருத்தியும் பண்ணலாம் என்று பாரித்துக் கொண்டு ப்ரீதி பிரேரிக்க போனான் –
படை வீட்டில் இருந்தால் பலர் உண்டாகையாலே விழுக்காட்டோ பாதி இ றே சித்திப்பது

நீத -என்கையாலே
சேஷத்வத்தில் அசித் கல்பனாய் இருக்கக் கடவன் -படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே
அடிமைத்தனத்தில் அசித் சமனாயும் கைங்கர்யம் செய்யும் பொழுது சேதனத்வமும் -பெருமாள் திரு -4-9-
ப்ரீதி புரஸ்க்ருத -என்கையாலே
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சைதன்ய பிரயுக்தமான தர்மங்கள் உண்டாய் இருக்கை-
அநக -என்கையாலே
பாவநத்வத்தாலும்
நித்ய சத்ருக்ந-என்கையாலே
போக்யதையாலும்
அவனையே பற்றினான் -என்னவுமாம் –
அநக நித்ய சத்ருக்ந  -என்கிறதுக்கு பிரயோஜனம்  என் என்னில்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு நல்லனான படி
அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத படியானை -என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் –
இதுவே பிரயோஜனம் ஆனால் பரதனுக்கு பெருமாள் விட சொன்ன மிகை  எல்லாம் பொறுக்கும் இ றே-

————————————————————————————————————————————————————————————-

இச்சா மோஹி மஹா பாஹூம்  ரகுவீரம் மஹா பலம்
கஜேந  மஹதா யாந்தம் ராமம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம்  -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந  மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப்   பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –

அவதாரிகை –
சக்ரவர்த்தி தான் பரிணத வயஸ்தன் ஆகையாலும்
எதிரிகளை நோக்கி எடுத்து விடுகைக்கு அசக்தன் ஆகையாலும்
தான் இருக்கிற போதே பெருமாளைத் திருமுடி சூட்டி ராஜ்யத்தோடு பொருந்தும்படி பண்ண வேணும் என்னும் நினைவுடையான் ஆகையாலும்
களித வயஸாம் இஷ்வாகூணாமிதம் ஹி குலவ்ரதம் -ரகுவம்சம் -3-70-என்று சொல்லுகிறபடியே
இந்தக் குலத்தில் பிறந்தார்க்கு பிள்ளைகள் பருவம் நிரம்பினால் அவர்களை முடி சூட்டித்
தாங்கள் உபசாந்தராய்ப் போருவதொரு முறைமை யுண்டாகையாலும்
பெருமாளை திருமுடி சூட்டி ராஜ்ய துரந்தராக பண்ண வேணும் என்று கருதி
அது செய்யும் இடத்தில்
பாண்டரஸ் யாத பத்ரஸ்ய சாயாயாம்   ஜரிதம் மயா-அயோத்யா -2-7-என்று நாம்
பயணத்தின் மேல் பயணமாய்த் திரிகையாலே நாமும் ரஷித்தோமாய்
நாட்டாரும் ரஷிதர் ஆனார்கள்
ரஷணத்தில் அல்பம் குறை யுண்டாமாகில் இப்போது ஒரு பாலன் கையிலே காட்டிக் கொடுத்து எங்களை உபேஷித்தான்
இவன் என்ன ராஜ்ஜியம் பண்ணிற்று என்று நாட்டார் குறை சொல்வார்கள்
அவர்களையும் இசைவித்துக் கொள்ளுவோம் என்று பார்த்து பௌரஜாந பதங்களை திரட்டி
கதக்லேசா பவிஷ்யாமி புத்ரே அஸ்மின் சந்நிவேச்ய வை -அயோத்தி -2-14-என்றும்
சோ அஹம் விஸ்ரமம் இச்சாமி புத்ரம் க்ருத்வா பிரஜா ஹிதே -அயோத்யா -2-10-என்றும்
நெடும் காலம் உண்டு நான் உங்களை ரஷித்துப் போருகிறது
நம்மை இப்போது வார்த்தகம் வந்து கைக் கொண்டது
இனி உங்களுடைய ரஷணம் நம்மால் துஸ் சகமாய்  இருந்தது
ஆனபின்பு ஆத்மா வை புத்ர நாமா அஸி-மந்திர பிரச்னம் -2-11-33-என்கிறபடியே
என்னோடு நிர்விசேஷரான என் பிள்ளையை உங்களுடைய ரஷணத்தில் நியோகித்து இளைப்பாறுவதாக பாரியா நின்றோம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் -அயோத்யா -2-15-என்று இதற்கு நீங்களும் இசைய வேணும் என்று சொல்ல
அவர்களும் இது கேட்ட ப்ரியத்தாலே
விமா நம் கம்பயன் நிவ -அயோத்யா -2-18-என்று மாளிகை கோப்புக் குலையும் படி பெரிய சம்ப்ரமத்தைப் பண்ணி
ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு
அநேக வரஷ சஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ
ஸ ராமம் யுவராஜாநமபி  ஷிஞ்சஸ்வ பார்த்திவம் -அயோத்யா -2-21- என்று
வ்ருத்தனுமாய் நன்றாக எங்களை ரஷிப்பதும் செய்தாய் –
இவர் பெருமாளைத் திரு அபிஷேகம் பண்ணு என்று இசைந்து
அவன் கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னார்களாகை அன்றிக்கே
தங்கள் நினைவுகளையும் வெளியிட்டுப் பெருமாளுடைய ராஜ்ய பரண யோக்யதையும் சொல்லித் தலைக் கட்டுகிறார்கள் –

1-இச்சாம  –
இட்ட மாலையும் கவித்த அபிஷேகமுமாய் எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் என்று போற ஸ்ரத்தை பண்ணுகிறோம்
2–இச்சாம –
எங்களுக்கு உள்ளது இச்சை இ றே-
முடி வைக்கும் போது நீயே வேணும் இ றே –
இச்சைக்கு காரணம் எங்கள் ஆசை இ றே –
ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி -என்று இப்போது எங்களுக்குக் கிட்டப் புகுகிறதோ
3- இச்சாம –
கிடைப்பது -கிடையாது ஒழிவது –
நல்லது கண்டால் ஆசைப் படக் கடவது இ றே –
4- இச்சாம –
நிரபயமாக எங்களை ரஷித்த உனக்குக் குறையா கிறதோ என்று வாயிட்டுச் சொல்லிற்றிலோம்-
ஆனால் இப்போது தான் சொல்லலாமோ என்னில்
பாவம் விஜ்ஞாய சர்வச-அயோத்யா -2-19-என்று
அவனுடைய நினைவு அறிந்து சொல்லுகிறவர்கள் ஆகையாலே
இப்போது இச்சாம -எண்ணத் தட்டில்லை
இந்த ஆசை சிலர்க்கு உண்டாய்ச் சிலர்க்கு இல்லையாய் இருக்குமோ என்னில்
5-இச்சாம –
நாங்கள் இருந்ததே குடியாக இது தலைக் கட்ட வற்றோ என்று உம்மை இரக்கிறோம்-

உங்கள் நெஞ்சில் கிடந்தது நாம் அறியும் படி என் என்ன –
1-ஹி-அன்றோ –
பிறர் சொல்ல வேண்டி இருந்ததோ -இது எல்லார்க்கும்  ஒக்கும் என்னும் இடம் –
ஜனகோஷோ மஹாந பூத் -என்றும்
விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா 2-19-என்றும்
நாட்டார் பண்ணின ஆரவாரத்தாலே கோப்புக் குலைந்த உன் மாளிகையிலும் விமானங்களிலும் கண்டு கொள்ளும் இத்தனை அன்றோ –
2-ஹி -அன்றோ –
அகாமயத் மேதி நீ -அயோத்யா -2-48-என்றும்
நீயும் நிர்வாஹகனாய் இருக்க
பூமி தானே ஸ்வயம் வரித்து மாலையிட்ட போதே அறிந்திலையோ –
அகாமயத-காதலித்தாள்
நீ காக்ரஹணம் பண்ணிப் போரச் செய்தேயும் -முறை மசக்கி மாலை இட்டதில்லையோ –
காமுகருக்கு முறை தெரியாது இ றே-
லோக பாலோபமம் நாத மகாமையாதா மேதி நீ –
லோகபாலோபமா -லோக பாலனுக்கு ஒப்பானவன்
விஷ்ணு நா சத்ருசா -பால -1-18-என்று
சர்வேஸ்வரனைப் போலே இருக்கையாலே மேல் விழுந்து ஸ்ரத்தை பண்ணினாள்-
அதற்க்கடி என் என்னில் –
மேதி நீ –
மேதி நியான யாலே
எங்கனே என்றால்
மதுகைடபர்களுடைய வஸா விஸ்ர கந்தத்தாலே உபஹதையாய் இருக்கிற தன்னை
சர்வ கந்த -சாந்தோக்யம் -3-14-2-என்கிற அவனுடைய
சௌகந்த்யத்தாலே வாசிதை யாக்குகைக்காக –
வாசிதம் ஆக்க வேணுமத்தை புறம்பேயும் சொன்னார்கள் இ றே
மதுகைடபதாந வேந்த்ரமேத ப்லவ விஸ்ரா விஷமைவ மேதி நீயம அதி வாச்யயதி  –
ஸ்வ கைர்ய சோபிச் சிரமே நாமுப புஞ்சதே நரேந்த்ரா -என்று
முராரி கவியும் அனர்க்க ராகவம் -1-14-என்று சொன்னான் இ றே
இஸ் சௌகந்த்ய மாத்ரத்துக்காக கர்ப்பூர சந்த நாதிகளைப் போலே உபகரநமாய்-சேஷ கோடியிலேயோ அவதரித்தது என்னில்
நாதம-நாதனை –
ஏதாத்ருச கந்தமே பிடித்து இல்லாதபடி ரஷிப்பானாய்
அசௌகந்த்ய சௌகந்த்யன்கள்
தனக்கே அனுபவிக்க வேண்டும்படி நிருபாதிக சேஷியுமாய்-

மெய்ப்படவே உங்கள் எல்லார்க்கும் இச்சை யுண்டாகில் முடி சூட்டுகிறோம் –
அவர் தாம் நாட்டை அடக்கி ஆளவல்ல சாமர்த்தியம் யுடையவரோ என்னில்
1- மஹா பாஹூம் –
அவர் தோள் பரப்புக்கு  நடக்கிற கழஞ்சு மண்ணும் ஒரு சரக்கோ
2- மஹா பாஹூம் –
சக்தஸ் த்ரைலோக்யம் அப்யேஷ போக்தும் கிந்நு  மஹீமிமாம்-அயோத்யா -2-45-என்று
கோசல ராஜ்யம் அன்றிக்கே  லங்கா ராஜ்யமும் கைக் கொள்ளும்படியான தோளை யுடையவர் –
3- மஹா பாஹூம்
ஆயதாச்ச -என்றும்
ஆஜா நுபாஹூம் –அயோத்யா -17-7-என்றும்
அவருடைய சாமுத்ரிக லஷணம் கண்டால் சிலரைக் கேட்க வேணுமோ –
4- மஹா பாஹூம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற-நாச்சியார் -11-3- என்று
உபய விபூதியையும் வஹிக்கிற தோள் இ றே –
5- மஹா பாஹூம் –
அத் தோள் தான் வேணுமோ –
பாஹூச்சாயா ம வஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந -சுந்தர -34-31-என்று
அவருடைய தோள் நிழல் தானே அமையாதோ எங்களை ரஷிக்கைக்கு –

ரஷ தர்மேண பலேந சைவ -கிஷ்கிந்தா -1-128- என்றும்
தர்மத பரி ரஷிதா -யுத்த -1-12- என்றும்
சிலரை சிலர் ரஷிக்கும் இடத்தில் தர்ம பலங்கள் இரண்டும் வேணும் இ றே
இவர் பலம் உண்டு என்று தோள் வலியாலே ரஷிக்கும் இத்தனையோ –
தார்மிகராய் ரஷிக்கும் ஆகாரம் இல்லையோ-என்னில்
1-ரகுவீரம் –
தீ நாந்தா நேந ராகவ -அயோத்யா -12-29-என்று
அவ்வாகாரம் பிறந்து படைத்ததன்றோ -இப்போதாகத் தேட வேணுமோ –
2- ரகுவீரம் –
ஆன்ரு சம்சயம்  பரோ தர்மச் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41-என்று
பிறர்க்கும் கூட உபதேசிக்கும் படியாய் அன்றோ அதிருப்பது –
3- ரகுவீரம் –
தார்மிகத்வம் தன்னில் ரகுகளைக் காட்டில் இவருக்கு உள்ள தன்னேற்றம்
அது எங்கனே என்னில்
ரகுதான் ராஷசன் ஷூதார்த்தனாய்-பசியினால் – ம்ருதனானால் இதனால் வரும் பாபம் உனக்கு உண்டாகாதோ என்ன
மேல் ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே இருந்தான் இ றே
இவரோ -அப்யஹம் ஜீவிதம் ஐஹ்யாம் த்வாம் வா சீதே சா லஷ்மணாம்-ஆரண்யம் -10-19-என்று
பிராணன் ஒரு தலையாகவும்
ப்ராணேப்யோ அபி க்ரிய ஸீ-ஆரண்யம் -10-22-என்று பிராட்டி ஒருதலையாகவும் அழிய மாறி ரஷிக்குமவர் இ றே –

இப்படி இவர் ரஷிக்கும் இடத்தில்
வத்யதாம் பத்யதாம் -அயோத்யா -21-12- என்று விலக்குவார் உண்டானால் அவர்கள் வழியே போய் இள நெஞ்சே மீளுவாரோ என்னில்
மஹா பலம் –
ந து பிரதிஜ்ஞாம சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ  விசேஷத -ஆரண்ய -10-19- என்றும்
ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-34- என்றும்
ந த்யஜேயம் கதஞ்சந -யுத்த 18-3- என்றும்
அவர்கள் தங்களை கை விட்டும் ஆஸ்ரிதரை ரஷிக்கும் படியான வ்யவசாயம் யுடையவர்
பலம் -என்றது இவ்விடத்தில் மநோ பலத்தை –
நாய மாத்மா பல ஹீநேந லப்ய-முண்ட -3-2-4-என்கிறபடியே
துடங்கின கார்யத்தில் அசஞ்சலராய் இருக்கும் இருப்புக்கு
தைர்யேண ஹிமவாநிவ -பால -1-17-என்னக் கடவது இ றே-

உங்களுக்கு ஏற்ற ராஜ்ய பரணத்துக்கு சக்தராகில் நீங்கள் சொன்ன படி செய்கிறோம் –
இப்போது நான் இருந்த இடத்திலே இருக்க நாட்டுக்கு வேண்டுவது எல்லாம் ஆராய்ந்து நடத்தா நின்றார் ஆகில் அமையாதோ என்ன
உன் பிரயோஜனம் தலைக் காட்டிற்று இ றே
அவ்வளவில் விடலாமோ
எங்களுடைய பிரயோஜனமும் பெற வேண்டாவோ என்கிறார்கள் மேல் –
ஆகில் நீங்கள் சொல்லுகிறது என் என்ன
கஜேந மஹதா யாந்தம் –
நீ இசைந்தமையும் முடி சூட்டினமையும் தோற்ற
சத்ருஜ்ஞயன் கழுத்திலே இட்ட மாலையும் கவித்த முடியுமாய்-எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் –
அது செய்யும் இடத்தில் தேரை அலங்கரித்து அதிலே வர அமையாதோ என்ன –
கஜேந-
அங்கன் ஒண்ணாது
மத்த மாதங்க காமிநம்  -அயோத்யா -3-28- என்ற அவருடைய நடைக்குச் சேர்ந்த வாகனமாக வேணும்
அது செய்யும் இடத்தில் ஏதேனும் ஒரு யானை யாக ஒண்ணாதோ என்ன –
கஜேந மஹதா –
சர்வ லஷணோ பேதமாய் பட்டத்துக்கு உரிய யானையாக வேணும் –
மஹதா –
சர்வ சக்தியை வஹிக்க வற்றாக வேணும் இ றே
உங்களுக்கு இப்படி அபீஷ்டமாகில் முடியையும் வைத்து
கஜாதி ரூடராம்படி பண்ணி விடுகிறோம் என்ன
யாந்தம் –
அவ்வளவும் போராது
யானைக் கழுத்திலே ஏறி நெடும் தெருவே நடக்க வேணும் –
அதுவே வேண்டும் போது அடைய இங்கே திரண்டிகோளாகில்
முடி சூட்டி யானைக் கழுத்திலே ஏற்றின அளவே அமையாதோ -என்ன
புதியது உண்பார் தனி உண்பார்களோ-என்கிறார்கள்
யாந்தம் -நனந்துஸ் ஸ பிரஜா பிரஜா -என்று இந்த மஹோத்சவத்தை எங்கள் மித்ராதிகள் உடன்
அங்கே எழுந்து அருளக் காண வேணும் –
யாந்தம் -ஆயாந்தம் –
போகின்றவரை -வருகின்றவரை
முகமும் முறுவலும்
கஸ்தூரி திரு நாமமும்
கருணா கடாஷததோடே
எழுந்து அருள சேவிக்க வேணும் –

இப்படி சேவிக்கிறது தான் யாரை -என்னில்
1-ராமம்
ராமயதீதி ராம -என்கிற வ்யுத்பத்தியாலே சமஸ்த ஜனங்களையும் கல்யாண குணங்களாலே ரஞ்ஜிப்பிக்கிற வரை –
2-ராமம் –என்கிற தாத் வர்த்தத்தின் படியே எல்லாரோடும் கூட விஹரிக்குமவர் ஆகையாலே என்றுமாம்

வெறும் யானைக் கழுத்திலே எழுந்து அருளுகிற மாத்ரம் அமையுமோ -என்ன
சத்ரா வ்ருதா ந நம் –
வெய்யில் படாமல் வெண் கொற்றக் குடை நிழலிலே எழுந்து அருளக் காண வேணும் –
பாண்டரஸ் யாத பத்ரச்ய சாயாயாம் ஜரிதம் மயா -என்று
தசரத சக்ரவர்த்தி முதலான ராஜாக்களாலே இச்சிக்கப் படுமதாய் இருக்கிற
திரு முக மண்டலத்தை சேவிக்க வேணும் என்றுமாம் –

—————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது —த்ரஷ்டும் சக்யமயோத்யாயம்-பால-6-8-/கௌசல்யா ஸூப்ரஜா ராம-பால–3-2-/இயம் ஸீதா மம ஸூதா-பால–17-26–

January 13, 2015

த்ரஷ்டும் சக்யமயோத்யாயம் நா வித்வான் ந ச நாஸ்திக
சர்வே நராச்ச நார்யச்ச தர்ம சீலாஸ் ஸூ சமயதா  –பால -6-8-

அறுபத்தினாயிரம் ஆண்டு வன்னியம் அறுத்து நன்மைகளையும் உண்டாக்கி போந்த சக்ரவர்த்தி-
ஒரு அவித்யானை ஆதல்
வைதிகமான அர்த்தங்களை இல்லை என்பான் ஒரு நாஸ்திகனை யாதல்
உண்டாக்கப் போச்சுதில்லை
அப்படை வீட்டில் உள்ளார் ராஜ புத்ரர்கள் ஆரேனும் ஒருவர் முடி சூட அமையாதோ என்று இருக்குமவர்கள் அலர்
பெருமாளே முடி சூடா விடில்
இஹைவ நிதநம் யாமோ மஹா பிரஸ்தா நமேவ வா
ராமேண ரஹிதா நான்ச கிமர்த்தம் ஜீவிதம் ஹி ந -அயோத்யா -47-7-என்று
பெருமாள் அபிஷேகம் பண்ணாத படை வீட்டில் இருப்பதில்லை
விழுந்த இடமே சுடுகாடாகப் போக வமையும் என்று இருப்பர் புருஷர்கள் .
ஸ்திரீகளும் –ராமமே வாநுகச்சத் வமச்ருதிம் வாபி கச்சத -என்று பெருமாள் வழி மாறிப் போனார் என்று திறக்க வழைத்த பர்த்தாக்கள் முகம் பிளக்க
தள்ளிக் கதவடைத்துக் கொள்ளுவார்கள்
தர்ம சீல-
ராம அநு வ்ருத்தியே பரம தர்மம் என்று இருக்குமவர்கள் இ றே-
ஸ்வ பிரயோஜனத்திலே நெஞ்சு செல்லாதவர்கள் ஆயிற்று –

———————————————————————————————————————————————————————————–

கௌசல்யா ஸூப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் –23-2-
கௌசல்யா -சக்ரவர்த்தியினுடையவும்
ஸ்ரீ கௌசல்யாருடையவும்
தபபலமாய் இருக்க –
கௌசல்யா ஸூ ப்ரஜா ராம -என்று ரிஷி சொன்னதற்கு ஹேது
மாதா புத்ரஷ்ய பூயாம்சி கர்மாணயாரபதே-என்று கர்மமானது புத்திரன் விஷயமாக மாதாவுக்கே அதிகம் என்று சொல்லுகையாலும்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ -தை சீஷா -11-2- -என்கிற ஸ்ருதியானது
மாதாவை பிரதானமாகச் சொல்லுகையாலும்
கைகேய்யா ப்ரிய காரணாத்-பால -1-24- என்று மாத்ரு ச பத்னியான மாதாவுக்கு பிரியமாக துஷ்கரக்ருத்யத்தைப் பண்ணுகையால்.
இவருக்கு மாத்ரு வ்ருத்தி அதிகம் என்னும் நினைவினாலும் .
அறுபதினாராயிரம் மலடு நின்று அருமையாக பெற்ற பிள்ளையைச் சக்ரவர்த்தி விச்வாமித்ராத் வரத்தாரணம் பண்ண அனுப்புவேனோ என்று சம்சயிக்க
மாத்ருத்வ ப்ரயுக்த சம்பந்தத்தை இட்டு நிஷேதிக்கை அன்றிக்கே தம்முடையே பின்னே அனுப்பினாள் என்ற உபகாரத்தாலும்
கௌசல்யையினுடைய நல்ல குமாரனே -என்கிறார் –

ஸூ ப்ரஜா-
மாத்ரு பித்ரு வாக்ய பரிபாலனம் பண்ணுகையும்
அவர்களுக்கு ப்ரிய ஹிதன்களைப் பண்ணுகையும்
சத் புத்ர லஷணம் என்று லோகத்தார் அறியும்படி –
மத்விதா வா பிது புத்ரா – யுத்த  -18-16-என்று
தம்முடைய பிள்ளைத் தனத்தை தாமே கொண்டாடும்படியான பிள்ளைத் தனத்தை அனுஷ்டித்துக் காட்டுகையாலும்
கௌசல்யா ஸூ ஸூ பே தே ந -பால -18-11-என்றும்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை -என்றும்
என்னை நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்-பெரியாழ் -2-2-6- என்றும்
முடியப் புகழும் படியான பிள்ளைத் தனத்தாலே
பெற்ற தாயாரை விளங்கப் பண்ணுகையாலும்-நல்ல குமாரனே -என்கிறார் –

ராம –
ரூப ஔதார்ய குண  சேஷ்டிதங்களாலும் மனத்துக்கு இனியனாய்
சர்வ பிராணிகளையும் வசீகரிக்கிற வடிவு அழகை யுடையவனே -என்கிறார்
தேவோ நாம சஹஸ்ரவான் -என்று ஆயிரம் திரு நாமத்துக்கு சத்ருசமாய் –
சதுர்வித புருஷர்களுக்கும் ஜப்யமாய்
சர்வ அபீஷ்ட பிரதமான திரு நாமத்தைச் சொல்லுகிறார் –

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம -என்று
அனுபாஸ்யமான பரசுராமாதிகளை வ்யாவர்த்திக்கிறார் –

நரசார்த்தூல –
தன்னுடைய வேள்வி காக்க வல்ல ஆண் புலி -என்கிறார்-

பூர்வா சந்த்யா –
அவன் பிரதம கடாஷத்துக்கு யோக்யமாய்
அவனாலே தன விரோதியைப் போக்கிக் கொள்ளவும் யோக்யமாய்
ஜ்ஞானோத் போதகமான காலத்தைச் சொல்லுகிறார்
இவர் ஆச்சார்ய பிரதரானவர் –
சாமான்யமான சகல தர்மங்களையும் அனுஷ்டித்து அருளுவர்
ப்ராதஸ் சந்த்யையை உபாசியாமல் கண் வளர்ந்து அருளலாமோ -என்று கருத்து –

ப்ரவர்த்ததே –
மிகவும் வர்த்தியா நின்றது
இங்கு வர்த்தமானமாகச் சொல்லுகிறது
இந்த நல் விடிவே நித்யமாக வேணும் -என்கிறார்

கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம் –
எம்பெருமானாலே விதிக்கப் பட்ட நித்ய நைமித்திகமாய் இருக்கிற ஆஹ்நிமான சகல தர்மங்களையும் அனுஷ்டித்து அருள வேணும் ஆகையாலே –

உத்திஷ்ட-என்று
திருப் பள்ளி யுனர்த்தினார் ரிஷி –

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார்த்தூல கர்த்தவ்யம் தைவமாஹ் நிகம்-

——————————————————————————————————————————————————————————————-

இயம் ஸீதா மம  ஸூதா சஹதர்ம சரீதவ
ப்ரதீச்ச சை நாம பத்ரம் தே பாணிம க்ருஷ்ணீஷ்வ பாணிநா –17-26-

அவதாரிகை –
பெருமாள் வில்லை முறித்துப் பாரதந்த்ர்யத்தோடே விநீதாராய் நிப்ருதராய் நிற்க
ஸ்ரீ ஜனக சக்ரவர்த்தி சிந்தார்ணவத்தில் நின்றும் கரை ஏறின ஹர்ஷாதி சயத்தாலும் –

பதி சம்யோக ஸூ லபம் வயோ த்ருஷ்ட்வா து மே பிதா சிந்தார்ணவ கத பாரம் நாஸ சாதாப்லவோ யதா -அயோத்யா -118-34-என்றபடி –

மிதுனச் சேர்த்தி கண்டு அல்லது நிற்க ஒண்ணாமையாலும்
சேர்க்கை தனக்குப் பரம உத்தேச்யம் ஆகையாலும்
கடக க்ருத்யம் முன்னாகச் செய்ய வேண்டுகையாலும்
பெருமாள் திருக்கையிலே பிராட்டியைக் கொடுத்து க்ருதக்ருத்யன் ஆகிறான்
இவன் புருஷகாரத்துக்கும் புருஷகாரம் ஆகிறான் இ றே –

இயம் ஸீதா –
சந்திர காந்தா நாம் ராம மதீவ ப்ரிய தர்சனம் ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-அயோத்யா -3-29-என்னும்படியான
வடிவு படைத்த நம் பக்கலில் எல்லாரும் வந்து விழுகிறார்கள் என்று உம்மைப் பார்த்து இறுமாந்து இராதே இவளையும் பாரீர் -என்கிறான்
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -சுந்தர -16-5-என்று வேறு விஷயம் இல்லாமையாலே உமக்குத் தருகிறேன் இத்தனை காணும் –
இவளுக்கு ஏற்றம் ஏது என்று திரு உள்ளமாகக் கொண்டு பிறப்பில் ஏற்றம் சொல்லுகிறான்
ஸீதா –
ஆபிஜாத்யத்தையும்
கர்ப்ப வாசம் பண்ணாத ஏற்றத்தையும் காட்டுகிறான் –
ஸீதா லாங்க லபத் ததி-அமரகோசம் –
ஸீதா –
பொற் கொடி போலே –
பொன் முளைப்பது பூமியில் இ றே
இவள் தான் ஹிரண்ய வர்ணை இ றே –

அழகோ நமக்குத் தேட்டம் –
ஆபி ஜாத்யம் வேண்டாவோ என்று கருத்தாகப் பிறப்பில் ஏற்றம் சொல்லுகிறான் –
மம ஸூ தா –
மிதிலாயம் ப்ரதீப்தாயாம ந மே கிஞ்சித் பிரதஹ்யதே -என்றவன் அபிமானிக்கப் பிறந்தவள் –
வள்ளி மருங்குல் என்தன் மடமான் -பெரிய திருமொழி -3-7-1-என்று தாயார் வை லஷண்யம் சொல்லுமா போலே –
பிறவாமையிலும் ஏற்றம் உண்டு
பிறப்பிலும் ஏற்றம் உண்டு
ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிறான்-

ஜநகா நாம் குலே கீர்த்தி மாஹரிஷ்யதி மே ஸூ தா-பால -66-22- என்றவாறே
பெருமாள் இப்படி வைலஷணயத்தில் குறையில்லை யானாலும் அது வன்றே  நமக்குத் தேட்டம்
நாம் அதிகரித்த கார்யத்துக்கு சஹகாரியாக வேணுமே -என்ன
சஹதர்ம சரீதவ –
அதிலும் அனுஷ்டானத்திலும் முற்பாடை என்கிறான் –
மித்ர பாவேன சம்ப்ராபதம் ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-33- என்றும்
அபயம்  சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -யுத்த-18-34-என்று இ  றே தேவர் வ்ரதம்
அதிலும்
பவேயம் சரணம் ஹி வ -சுந்தர -27-53-என்றும்
அலமேஷா பரித்ராதும் ராஷசீர் மஹதோ  பயாத்-சுந்தர 27-36-என்றும்
பாபா நாம் வா சுபா நாம் வா வதாரஹாணாம் ப்லவங்கம் கார்யம் கருணமார்யேண  ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -116-44-என்றும்
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி  ததை வாத்ராபராதாஸ் த்வயா
ரஷ நத்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்திஷ மௌ ரஷத
ஸா நஸ் சாந்தர மஹா கஸ ஸ ஸூ சையது ஷாந்திச தவா கஸ்மி கீ -ஸ்ரீ குணரத்ன கோசம் -50-என்று
உம்மிலும் முற்பாடை -என்கிறான் –

இவர் ஸ்ரீ நந்தகோபர் திரு மகன் -கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் – போல் அன்றே
நாம் இதுக்குக் கடவோமோ
ஐயரும் ஆச்சியரும் வசிஷ்டாதிகளும் அன்றோ -என்ன
1-ப்ரதீச்ச -என்கிறான் –
அங்கீகரியும் -என்கிறான்
நின் தாள் நயந்திருந்த இவளை யுன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2-7-1-என்கிறான்
புருஷார்த்தமாக வேணுமே
துல்ய சீல வயோ வருத்தி யானாலும் பிரயோஜனம் இல்லையே –
2-ப்ரதீச்ச -என்று
வரில் பொகடேன் கேடில் தேடேன் -என்று இராதே கொள்ளீர் –
இவள் இறையும் அகலகில்லேன் -என்று இருக்குமா போலே
நீரும்  ந ஜீவேயம் ஷணமபி -சுந்தர -66-30- என்று இருக்க வேணும் காண் -என்கிறான்-

ஏ நாம –
வரும் திருவைக் காலாலே தள்ளாதே கொள்ளீர் –
பெருமாள் ஐயர் ஆகையோபாதி இசைந்து நின்றார்
இவனுக்கு அவ்வளவு போராதே
நாடு நகரம் அறிய நல்ல பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து -பெரியாழ்வார்-3-7-10-
தக்கவா கைப்பற்ற -பெரியாழ்வார் -3-8-6- ஆசைப் படுகிறான்-

1-பாணிம் க்ருஹ்ணீஷ்வ
வெள்ளி வளைக் கைப்பற்றச் -பெரியாழ்வார் -3-7-1-சொல்லுகிறான்
பாது காவல் வைக்கவும் பரிசற வாழவும் தேடுகிறான்
ஆழியான் என்தன் மகளைப் பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்துப்
பண்டை  மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும் கொலோ -பெரியாழ்வார் -3-8-7-
2- க்ருஹ்ணீஷ்வ –
கையைப் பிடிப்பீர்
யார் பிரயோஜனத்துக்கு யார் காத்து இருக்கிறார்
3- ஏ நாம் பாணிம் க்ருஹ்ணீஷ்வ –
இவ்வேப்பம் குடி நீரை இ றே நான் உம்மைக் குடிக்கச் சொல்லுகிறது
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டுவதே
பால் மொழியாள் -பெரியாழ்வார் -3-10-5-இ றே இவள் தான்
மதுரா மதுரா லாபா -சுந்தர -66-15-என்று சொல்லப் பட்டவள் அன்றோ-

பத்ரம் தே –
சேர்த்தி தான் கண்டவாறே மங்களா சாசனம் பண்ணுகிறான்
இவ்விஷயத்துக்கு பெண் பெற்றுக் கொடுத்தார் எல்லாருக்கும் திருப் பல்லாண்டு பாட வேண்டும் போலே காணும்
நன்று நன்று ந றையூரர்க்கே-பெரிய திருமொழி -8-2-2- பரகால நாயகி தாயாரும் பல்லாண்டு பாடினாரே –

இப்போது செய்ய வேண்டுவது என் என்ன
பாணிம்  க்ருஹ்ணீஷ்வ பாணிநா
கையாலே கையைப் பிடியீர்
பிரணயாப ராதத்திலே -ப்ரணய கலஹத்தில்- தலையாலே காலை நெருக்குகிறீர்
இப்போது கையாலே கையைப் பிடியீர் என்கிறான் –
அஸ்மா ரோபண  சமயத்தில் அம்மி மிதிக்கும் பொது -கையாலே காலைப் பிடிக்கிறீர்
இப்போது கையாலே கையைப் பிடியீர் என்கிறான் –
கைத்தலம் பற்றின அனந்தரம் கைப்பற்றித் தீ  வலம் செய்யும் போது இ றே திருக்கையால் தாள் பற்றி அம்மி  மிதிப்பது
2- பாணி நா பாணிம் –
கையால் கையைப் பிடியீர் என்னாமல்
கையைக் கையால் பிடியீர் -என்றது
செம்மை யுடைய திருக் கைக்கு மேலே என் கை வைத்து என்னும்படி -நாச்சியார் -6-8/6-9-
போக்யதை கை விஞ்சி இருக்கையாலே .
உபய விபூதியும் ஒரு மூலையிலே அடங்கும்படி பெருத்த பஹூ ச்சாயை யுடைய தயரதன் பெற்ற மரகத மணித் தடமும் -திருவாய் -10-1-8-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -திரு நெடும் தாண்டகம் -13-என்கிறபடியே
ஸ்ரமஹரமாக அவகாஹிக்கும் படி நீர்மையும் போக்யதையும் விஞ்சி இ றே இருப்பது
சத்ரு ஹந்தாரம் பரிஷச்வஜே -ஆரண்ய -30-39-என்று
கரசாராக்னியால் உண்டான வெம்மையும் தணிந்து
பகவத் ச்வா தந்த்ர்யா ரூபமான வெம்மையும் தணிந்து
இப்படி சேதன ஈஸ்வரர் இருவருக்கும் ஒதுங்க நிழலாய் இ றே
வேய் போலும் எழில் தோளி-பெருமாள் திரு -9-4- யுடைய தோள் அழகு விஞ்சி இருப்பது
பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா –
திருக்கையால் கைத்தலம் பற்றக் கனாக் கண்டு இருக்குமே இவளும்-

————————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது —ஊந ஷோடஸ வர்ஷோ–பால 20-2-

January 13, 2015

அவதாரிகை –
விச்வாமித்ரா பகவானானவன் –
யஜ்ஞ  விக்ன கரம் ஹன்யாம் -என்கிற பெருமாளுடைய சங்கல்ப்பத்தை அடி ஒற்றினவர் ஆகையாலே
தன்னுடைய யஜ்ஞ  விக்னத்தையும் அவரைக் கொண்டு போக்குவோம் என்று பார்த்து
பெருமாளைப் போர விட வேணும் என்று சக்கரவர்த்தியை இரக்க
அவனும் பெருமாள் பக்கல் வாத்சல்யத்தாலே மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -திருவாய் -1-4-3-என்று
பிரேம ஆனந்தனாய்க் கலங்கி
அஹம் வேத்மி  மகாத்மானாம் -என்று ரிஷி ஈடேற்றி சொன்ன பாசுரம் நெஞ்சில் படாதே
பருவத்தில் இளமையைப் பார்த்து -விடாமைக்கு மன்றாடுகிறான் இந்த ஸ்லோஹத்தாலே-

ஊந  ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந
ந யுத்த யோக்யதாமஸ்ய பஸ்யாமி சஹ ராஷசை–பால -20-2-

1-ஊந  ஷோடஸ வர்ஷோ-
இன்னமும் பதினாறு பிராயம் நிரம்பிற்று இல்லை
ஷீர கண்டச் ச ராமபத்ர-என்கிறபடியே பால் மாறாத பருவத்திலேயே ஒரு பூசலும் பொருமோ -என்கிறான்

2-ஊந  ஷோடஸ வர்ஷோ-
பால ஆஷோடசாத் வர்ஷாத் பௌகண்டச் சேதி கீர்தயதே -என்கிற மன்வாதி வசனப்படியே
பதினாறு பிராயத்துக்கு கீழ் பாலகனாய் அப்ராப்த வ்யவஹாரன் ஆகையாலே ஒருவன் முது கண் பட வேண்டும் –
சதுரங்க சமாயுக்தம் மயா  ச சஹிதம நய -பால -20-10-என்று என்னையும் சதுரங்க பலத்தையும் கூட்டிக் கொண்டு
போம் இத்தனை போக்கி இவரைத் தனியே கொண்டு போனால் பிரயோஜனம் உண்டோ –

3-ஊந  ஷோடஸ வர்ஷோ-
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச ந ச வேத்தி பலாபலம்
ந சாஸ்திர பல சம்பன்னோ ந ச யுத்த விசாரத -என்று பருவம் இதுவே இருந்தது
இன்னமும் தனுர் வேதம் அதிகரித்திலர்
படையில் மிகுதி குறை அறியார்
இவர் தாமான படியாகத் தன்னடையே கார்யகரமாம்படியான அஸ்த்ரங்களிலும் உபதேசம் இல்லை
பூசலாடியும் படை பொருந்தியும் பழக்கம் இல்லை
இவரையா பூசலுக்கு கொடு போகத் தேடுகிறது
இது என்ன சேராச் சேர்த்தி தான் –

4-ஊந  ஷோடஸ வர்ஷோ-
பதினாறு பிராயம் நிரம்புகைக்கு சிறு நாளாயிற்று வேண்டுவது
இந்நாள் இத்தனையும் கழிய வந்தான் ஆகில் கண் அழிக்க ஒண்ணாது
அவரையும் அசக்தர் என்ன ஒண்ணாது -கொண்டு போவான் இ றே-
இவ்வளவிலே வந்து பிழைத்தோம் இ றே –
5-ஊந  ஷோடஸ வர்ஷோ-
ஊன சப்தம் அந்த சங்கையாலே சிறிது குறை யாயிற்று காட்டுவது
ஆகையால் பதினைந்தரை ஆதல் பதினைந்தே முக்கால் ஆதல் பதினாறாம் பிராயம்
இது ஒரு பதினாறும்
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசனே -சுந்தர -33-17-என்று விவாஹம் பண்ணின பின்பு பன்னிரண்டுமாய்
இருபத்தெட்டாம் பிராயமாக தொடரா நின்றது காட்டுக்குப் போகிற போது
பர்த்தா மம மஹா தேஜோ வயஸா பஞ்ச விம்சக -ஆரண்ய -47-10-என்றும்
அஷ்டா தச ஹி வர்ஷாணி மம ஜன்மனி கண்யதே-ஆரண்ய -47-10-என்றும் பிராட்டி பாசுரமாய் இருந்தது
சப்த ச வர்ஷாணி தவ ஜாதச்ய புத்ரக-ஆஸி தானி பிரகாங்ஷந்த்யா மயா துக்க பரிஷயம் -அயோத்யா -20-15-என்று
நீ பிறந்த அன்று தொடங்கிபதினேழு ஆண்டு நீ முடி சூடின நாள் வரை க்லே சம் தீரப் பார்த்து இருக்கிறது
ஸ்ரீ கௌ சல்யார்பாசுரமாய் இருந்தது
இருபத்தெட்டுக்கும் இருபத்து ஐந்துக்கும் பதினேழுக்கும் சேர்த்தி என் என்னில்
பதினேழுக்கு சிலர் இங்கனே பரிஹரித்தார்கள்
ஏகா தசே ஷூ ராஜந்யம்-ஆபஸ்தம்பம் -1-11-19-என்று பதினொன்றிலே உபநயனம் ஆகையாலே
ராஜாக்களுக்கு தவி ஜத்வமாய்-அதுவும் ஒரு ஜன்மம் ஆகையாலே
கீழ் பத்தைக் கழித்து பதினேழு என்று நிர்வஹிப்பார்கள்
இது புத்திர பிரவாச ஜனித துக்கத்தாலே நிர் விண்ணையான ஸ்திரீ வார்த்தை யாகையாலே
படுபாடாக பிறந்த அன்று தொடங்கி என்று பிரதம ஜன்மமமேயாம் அத்தனை போக்கி சோக தசையிலே ஒரு பெண்டாட்டி அவஹிதையாய் தர்ம சாஸ்திரம் அனுசந்தித்து
பத்துக் கழித்து த்வதீய ஜென்மத்தை விவஷிக்கை அனுசிதம் ஆகையாலும்
இது ஒரு ஆறும் பன்னிரண்டும் பதினெட்டாய் பதினேழுக்கு விஞ்சி இருக்கையாலும் சேராது
பதினாறும் பன்னிரண்டும் இருபத்து எட்டாய்
பதினொன்று தொடங்கி ஆறும் பன்னிரண்டும் கீழ் பத்தும் ஆக இருபத்து எட்டுக்கு இரண்டும் சேர்ந்தது ஆகில்
இருபத்து ஐந்தை கண் அழித்தாலோ என்னில்
ஊந சப்தம் சாமான்யமாய் விசேஷ வசனத்தாலே பதினாறுக்கு அபவாதம் உண்டாகையாலே அந்யதா சித்தி உண்டாகையாலும்
சந்நியாசி பிரதிபத்தியாலே கௌ ரவ்யனாக நினைத்து அவஹிதையாய் பிராட்டி வாக்கியம் ஆகையால் பஞ்ச விம்சக என்கிற ஸ்ருதிக்கு தௌர்பல்யம்  இல்லாமையாலும்
தச சப்த ச என்கிற வாக்கியம் தன்னோடும் விரோதிக்கையாலும்
இருபத்து எட்டை த்ருடமாக்கி இருபத்து ஐந்தை கண் அழிக்க ஒண்ணாது-

பின்பு எங்கனே யாகக்   கடவது என்னில்
இருபத்து ஐந்தை ப்ராமாணிகமாய்-ஊந ஷோடசத்தையும் தச சப்த ச வையும் இதுக்கு ஏற்க யோஜிக்கக் கடவோம்  -எங்கனே என்னில்
ஊந சப்தம் ஷோடஸ சங்க்யா வைகல்யத்தை காட்டுமத்தனை போக்கி விகல சங்க்யை இன்னது என்று விசேஷிக்க மாட்டாத சாமான்ய சப்தம் ஆகையாலே –
விசேஷா காங்ஷை யுண்டாக ராவணனுக்கு ஹிதம் சொல்லுகிற மாரீசன் பெருமாள் பலம் சொல்லுகிற பிரகரணத்தில்
விச்வாமித்ராத்வர பங்கம் பண்ணின அன்று தத் ரஷண அர்த்தமாக தசரதன் பக்கலிலே ராம லஷ்மணாளை வேண்டிச் செல்ல
பிள்ளைகள் பருவம் நிரம்பாமை சொல்லுகிற சக்கரவர்த்தி
பாலோ த்வாதச வர்ஷோயம் க்ருதாஸ் த்ரச்சராகவ -ஆரணய  -38-6  -என்று சொன்னான்
அப்பருவத்திலே என் தம்பி ஸூபா ஹூ வைக் கொன்று என்னையும் கடலில் அழுத்தினான்
என்று சொல்லுகையாலே
ஊனமான வருஷம் நாலாய்-பன்னிரண்டு பிராயமாய் அப்போது விவாஹமாய்
சமா த்வாதச -என்று பன்னிரண்டு நடந்தது
ஆக இருபத்து நாலாய் இப்போது இருபத்து ஐந்து ஆகிறது
தச சப்த ச வும் தச -என்று பத்தும் சப்த என்ற ஏழும் ச என்று இன்னும் ஒரு ஏழும்
ஈரேழு பதினாலாய் பத்தும் பதினாலும் இருபத்தி நாலும் கழிந்து
இருபத்து ஐந்து ஆகிறது என்று சப்தார்த்தம் ஆகிறது
ஆகையால் வ்யாஹதம் போலே தோற்றின மூன்று பிரதேசமும் இவ்வோ பிரமாண யுக்திகளாலே அவ்யாஹதமாய்ச் சேரக் கிடக்கிறது –
ஆனால் நெடுமேடு நெடும் பள்ளமுமாக ஊந ஷோடஸ வர்ஷ -என்று ஷோடஸ வர்ஷ பிரசங்கம் என்
பாலோ த்வாதச வர்ஷோயம் -ஆரண்ய -38-6-என்றும்
பாலோ ஹ்யக்ருத வித்யச்ச -பால -20-10-என்றும்
காக பஷதரம் பாலம் -பால -19-9-என்றும் பல இடங்களிலும் சொன்னானே என்னில்
ந யுத்த யோக்ய தாமச்ய பச்யாமி -என்ற பூசலுக்கு யோக்யர் அன்று என்கைக்காக
பால ஆஷோட சாத் வர்ஷாத் பௌ கண்டச் சேதி கீர்த்யதே -என்கிற மனு வசனத்தை ரிஷி ஸ்மரித்து-
பதினாறாம் பிராயம் நிரம்பினால் ஆயிற்று ப்ராப்தவ்யஹாரனாய்
இன்னானுக்கு இன்னான்  என்று பிரமாணம் பண்ணின படியே அறிவதும்
இன்னான் கீழ் இன்னான் என்று அறிவதும்
தனித்து ஒரு ஊருக்குப் போகவும்
தனித்து பூசல் பொரவுமாவது
பதினாறும் நிரம்பாது ஒழிந்தால் இன்னாரை முது கண்ணாக உடைய இன்னார் என்றும்
இன்னார் மகன் இன்னார் என்றும் முது கண் படப் பேச வேண்டும்
ஆனபின்பு சதுரங்க சமாயுக்தம் மயா ச -என்று என்னை முது கண்ணாகக் கூடக் கொண்டு போ என்கைக்காக
ஸ்வதந்திர வியாபார ஷமமான காலம் நிறைந்தது இல்லை -என்கிறான் -ஆகையாலே உசிதம் –

6-ஊந  ஷோடஸ வர்ஷோ
இக் குறட்டிலே தெறித்தால் அக் குறட்டிலே பால் தெறிக்கும் பருவம் -என்கிறான் –
இது தன்னை கருத்தும் தத் ஷீர கண்டே ந-என்று பால ராமாயணத்திலும் சொல்லிற்று இ றே
ஷீர கண்டச்ச ராம பத்ர -என்றான் இ றே முராரிகாரனும் அனர்க்க ராகவத்தில்
7-ஊந  ஷோடஸ வர்ஷோ
ஆண்களுக்கு யௌ வன ஆரம்ப ஸூ சகமான ச்மச்ரூரேகைகள் இனும் குறித்ததில்லை-மயிர் முடித்திலர்
மொய் பூங்குழல் குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும்–இவள் பரமோ -திருவிருத்தம்-60 என்றால் போலே-

காகாபஷதரம்  வீரம் -பால  -19-9- என்று நீ தான் சொன்னால் போலே அலைந்த குடுமியும் சுற்றின பூவுமாய் இருக்கிற இவரையோ
பூசலுக்குக் கொடு போகத் தேடுகிறது -என்ற விடத்திலும்
தேஜாசாம் ஹி ந வயஸ் சமீஷ்யதே -ரகு வம்சம் -11-1–என்றும்
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் பெரியாழ் -1-4-8-என்றும் சொல்லுகிறபடியே
பருவத்தைக் கொண்டு அவர் அசக்தர் என்று எண்ண வேண்டா காண்-
சிறு நெருப்பு சுடாதோ
சக்தோ ஹ்யேஷா மயா குப்தா திவ்யேன ஸ்வேன தேஜஸா -பால் -19-9-என்றும்
அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே ஸ்வா பாவிகமான தேஜஸ் ஸைத் தாழ விட்டாரே ஆகிலும்
அத்தசையிலே நான் ஸ ச்நேஹமாக மங்களா சாசனம் பண்ணிக் காட்டிக் கொடுக்கில்
தேஜ ப்ரபாவத்தாலே தாமஸ நிரசனத்தில் சக்தராய்க் காண் இருப்பது என்ன
1-மே ராம –
கையும் கோடாலி யுமாய் மூவேழு இருப்பத்தொரு படி கால் ஷத்ரிய சிரச்சேதம் பண்ணித் திரிந்த முரட்டுப் பரசுராமனாக நினைத்தான் இ றே-
2- மே ராம –
பெரிய பசியோடு உண்ணப் புக்கவனை கையைப் பிடிப்பாரைப் போலே
துக்கே நோத்பாதி தச்சாயம் -பால -20-11-என்றும்
நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற -திரு விருத்தம் -37-என்றும் சொல்லுகிறபடியே
64000 ஆண்டு கூடி ஒரு பிள்ளை பெற்று ஸூதமுக கமலா வலோகனம் பண்ணி வருகிற
என் பக்கல் நின்றும் இவரைப் பிரித்துக் கொண்டு போகை தர்மமோ
3-மே ராம
அனுபஹ தாம வ்ருத்திம் சரேத்-என்று அன்றோ ரிஷிகளுக்குச் சொல்லுகிறது -தோஷம் அற்றவற்றைக் கொண்டு வயிறு வளர்க்க –
ஆனபின்பு என் மமகாரத்தாலே தூஷிதமான வஸ்து உனக்காமோ –
4-ராம – ரமிக்கச் செய்பவன்
சூடக் கண்ட கருமுகை மாலையைப் பிசக்கி வெய்யிலிலே வைப்பாரைப் போலே
ஏததே வாம்ருதம்  த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம்   -3-10-என்றும்
நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந -அயோத்ய -13-104-என்றும்
கண்ணுக்கு இனிதாகக் கண்டு கொண்டு இருக்கும் அத்தனை போக்கி
இவ்வ்வஸ்துவைப் பூசலுக்கு இலக்காக்குவார் உண்டோ –

குறையில்லை காண் –
ரஞ்ச நீயச்ய விக்ரமை -யுத்த -106-6-என்றும்
ராமம் அக்லிஷ்ட கர்மாணம் -சுத்தர -30-41-என்றும்
அவர் பூசல் செய்யும் போது தான் மயிரில் வைத்த பூ வாடாத படியாகவும்
முகத்தில் குருவேர் பரம்பாத படியாகவும் எதிரிகள் கை வாங்கும் படியாகவும் வடிவு அழகு தன்னாலே ஓரடி எறிந்து காண் அவர் பொருவது என்ன
1-ராஜீவ லோசன
வெய்யில் காணவே வெடித்து -முகிழ் விரிந்து அலர்ந்து கிடக்கிற கண்களைக் கொண்டு வெய்யிலிலே நிற்கவும் போரவும் வல்லரோ -என்கிறான் –
2-ராஜீவ லோசன -என்று நீ தானே சொன்னாயே
வெய்யில் காண தாமரை விகசிக்குமா போலே படை கண்டால் பெருமாளும் உல்லசிதராய்காணும் இருப்பது என்றான் ரிஷி
3-ராஜீவ லோசன –
ராஜீவம் ரக்த பத மம ஸ்யாத்-என்று செந்தாமரை தான் கன்றிச் சிவக்கும் காண் -என்கிறான் ராஜா
அச் சிவப்போ –
ராமோ ரக்தாந்த லோசன -யுத்த -21-13-என்றும்
கிஞ்சித ப்ரூபங்க லீலா நியமித்த ஜலதிம் -என்றும்
கடல் திடர் படக் கடைக் கண் சிவந்து
எதிரிகள் முடியும்படியான சிவப்புக் காண் என்கிறான் ரிஷி
அதற்க்கு ராஜா -ஊந  ஷோடஸ வர்ஷோ மே ராமோ ராஜீவ  லோசன -என்று அவை எல்லாம் பருவம் நிரம்பினால் ஆயிற்று
இப்போது போராது என்றான்
போராது ஆகில் வெய்யில் ஆனவாறே இராப் பூசல் ஆக்குகிறோம் என்றான் ரிஷி
3-ராஜீவ லோசன –
பொழுது புகப் பெறாது காண் செம்புளிக்கும்
இவர் பிள்ளைத் தனத்தாலே உறங்கவும் அவர்கள் நிசாசரர் ஆகையால் தன்னில் மாயை மேலிடவும் தேடினாய் இ றே
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கன் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ என்று
நித்ராகஷாய ரூஷிதமான இக்கண் களுக்கு தம்தாமை இலக்காகத் தேடும் அத்தனை போக்கி
கண்ணுடைய இவரைப் பூசலுக்கு இலக்காக்குவார் உண்டோ –
4-ராஜீவ லோசன –
நீரைப் பிரிந்த தாமரை உலருமா போலே என் அருகுக்கு விட்டுப் புறப்பட்டால் அவர் முகம் செவ்வி அழியும்படியாய்க் காண் இருப்பது –
ஜிதந்தே புண்டரீகாஷ-என்றும்
தாமரைக் கண்கள் கொண்டீர்தியாலோ -என்றும் சொல்லுகிறபடியே
எதிரிகளைத் தோற்பிக்கைக்கும் பரிகரம் அங்கே உண்டாய் இருந்ததே என்ன
ந யுத்த யோக்யதாமச்ய பஸ்யாமி-
அக்கண் அழகில் அனுகூல வர்க்கம் ஆழம் கால் படும் அத்தனை போக்கி ஆசூர வர்க்கமும் ஈடு  படுமோ  ஆசூர பிரக்ருதியான சூர்பணகை  -புண்டரீக விசாலாஷௌ-ஆரணய -19-14-என்று ஈடுபட்டிலளோ-
அது தவிரக் கூடவே இ றே பரிகரம் கொண்டு உதவத் தட்டு என் என்னில்
அஸ்ய யுத்த யோக்யதாம ந பஸ்யாமி –
ஆச்ராயம் தான் உண்டாய் பரிகரம் தேட வேண்டாவோ
1-அஸ்ய –
பருவத்தில் இளமை இது -வடிவில் சௌகுமார்யம் இது
இப்படி இருக்கிற இவருக்கும் பூசலுக்கும் என்ன சேர்த்தி கண்டாய்
2- அஸ்ய –
சந்நிஹித தேச வர்த்தமான கால சம்பந்தியை இ றே இதம் சப்தம் காட்டுகிறது
அவர் தேசாந்தரத்திலே இருக்க நான் இங்கே பொய்யே கண் அழிக்கிறேன் என்று நினைத்து இராதே
உள்ளே  சந்நிஹிதர் அழைத்துக் காண மாட்டாயோ
3-அஸ்ய யுத்த யோக்யதாம் ந பச்யாமி
ஸ்வ புத்ரம் மூர்த்ன்யு பாக்ராய-என்கிறபடியே மடியிலே வைத்து உச்சி மோந்து உகக்கும் அத்தனை போக்கி பூசலுக்கு யோக்யரோ –
4-ந யுத்த யோக்யதாம் பஸ்யாமி  –
பால கிரீட ந காய -என்றும்
பால கிரீட ந கைரிவ-என்றும் -லீலா பரிகரம்கொண்டு விளையாடப் பருவம் அத்தனை போக்கி பூசலுக்குப் பருவமோ
5-ந பஸ்யாமி
அபிநிவேச வசீக்ருத சேதஸாம் பஹூ விதாமபி சமபவதி பிரம -ஆளவந்தார்-ஆகம ப்ராமாண்யம் -தொடக்கம்-3-என்று
ஸ்வ கார்ய பரனாகையாலே உனக்குத் தோற்றாது-
என் கண்ணாலே பார்க்க மாட்டாயோ -என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் –

யுத்த யோக்யதாம் ந பஸ்யாமி -என்று யுத்த யோக்யதையே பிடித்து இல்லை என்று அசத்யம் சொல்லா நின்றாய் –
ராமோ  வ்ரஜதி சங்க்ராமம் க்ராமார்த்தே நகரச்ய வா கதவா சௌமித்ரி சாஹிதோ நா விஜித்ய நிவர்த்ததே -அயோத்யா -2-36-
சங்க்ராமாத்  புனராகம்யா-அயோத்யா -2-37-என்றும் அவர் பொராத பூசல் உண்டோ என்ன
1-சஹ ராஷசை –
விசேஷ நிஷேதம் பண்ணினேன் இத்தனை போக்கி சாமான்ய நிஷேதம் பண்ணினேனோ
2- ராஷசை –
கூடயுத்தா ஹி ராஷசா -என்கிறபடியே அவர்கள் களவு பூசல் அல்லது பொரார் காண் –
இவர் தர்மப் பூசல் அல்லது பொர வறியார்-
ஆகையாலே கடைப்படாது என்றேன் அத்தனை –
3- அஸ்ய ராஷசை  –
இவர் மனுஷ்யர்
அவர்கள் ராஷசர்கள்
இவர் ஒருவர்
அவர்கள் அநேகர்கள்
ஆகையாலும் யோக்யதை இல்லை –

——————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

ஸ்ரீ பாஷ்யம்—அதாதோ ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –1-1-1- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

January 13, 2015

அதாதோ ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –

முதல் நான்கு அதிகரணங்கள்-நான்கு சூத்ரங்கள் –
விஜ்ஞ்ஞாச அதிகரணம்
ஜென்மாதி அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத் அதிகரணம்
சமன்வய அதிகரணம்

சாஸ்திரம் ஆரம்பிக்க –
அனுபந்த சதுஷ்டயம்
விஷயம்–பிரயோஜனம் –அதிகாரி –சம்பந்தம் –நான்கும் சொல்லி
மங்கள ஸ்லோகங்கள் இரண்டும் -இவற்றை சொல்லி
போதாயனர் -ஆபஸ்தம்பர் -சிஷ்யர் –
ஜகத் காரணனான பகவான் -இரண்டு அத்யாயம்
அவனை பற்றி  மோஷம் -சாதனா -பல அத்யாயம்

அதிகரணம் ஆறு உண்டே பார்த்தோம்
விஷயம் –
சங்கை –
பூர்வ பஷம்
உத்தர பஷம் –
அதில் ஆட்சேபம்
சமாதானம் –
அதிகரண ஸ்வரூபம் இவை ஆறும் –

சங்கர பகவத் பாதருக்குப் பின்பு அத்வைதம் இருவேறு கிளையாக பிரிந்தது.
ஒன்று வாசஸ்பதி மிஸ்ரருடைய ஜீவ அஜ்ஞான வாதம் . மற்றோன்று பிரகாசாத்மா வினுடைய பிரஹ்ம அஜ்ஞான வாதம்.
உத்தமாதிகாரிக்கு ”சதுஸ் சூத்ரி ” எனப்படும் வியாஸ பிரஹ்ம சூத்திரத்தில் உள்ள
அதாதோ பிரஹ்ம ஜிக்ஞாஸா
பிரஹ்மாயக்ஷ யத :
ஸாத்திர யோநித்வாத்
தத்து ஸமன்வயாத்
என்கிற இந்த நான்கு சூத்திர விவரண ஞானமே போதுமானது.
அதிகப் படியாக ”பஞ்ச பாதிகா ” எனப்படும் முதல் அத்யாயத்தின் முதல் 4 பாதங்கள் + இரண்டாவது அத்தியாயத்தின் 1 வது பாதம் சேர
இந்த ஐந்து பாதங்களின் விவரண ஞானமே போதுமானது என்று நம்பினர்.
”பஞ்ச பாதிகா ” விவரணத்தை எழுதியவர் பிரகாசாத்ம யதி. இவருடையது பிரஹ்ம அஜ்ஞான வாதம்.
வாசஸ்பதி மிஸ்ரருடைய ”பாமதி ” சூதிர பாஷ்யம் , அதற்கு ஏற்பட்ட ”பாமதி கல்பதரு ”, பாமதி கல்பதரு பரிமளம் ”
இத்யாதி கிரந்தங்கள் ஜீவ அஜ்ஞான வாதத்தை முன்வைத்தனர்.

ஜிக்ஞாசாதிகரணம் :

முதல் அத்யாயம் முதல் பாதம் முதல் நான்கு சூத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு அதிகரணம்.
நாலுமாக சேர்ந்து சாஸ்திர ஆரம்ப சமர்த்தன அதிகரணம் என்று பெயர்.
இந்த அனுபந்த சதுஷ்டயம் சாஸ்திரத்தைப் படிப்பதற்கான காரணத்தை சொல்ல வந்தது.
அதிகரணம் என்றால் 1. விஷயம்; 2. சம்ஸயம் ; 3. பூர்வபக்ஷம்; 4. சித்தாந்தம்; 5. ஆக்ஷேபம்; 6. சமாதானம்
என்ற ஆறு விஷயங்களைக் கொண்டது.
1. சொல்ல வந்த விஷயம்; 2. சொல்வதற்கான நோக்கம்; 3. அதிகாரி நியமம்;
4. கிரந்த கர்த்தாவுக்கும் சாஸ்திரத்துக்குமான சம்பந்தம் இவைகளை விளக்குவது அனுபந்தமாகும்.

அதிகார: பலே ஸ்வாம்யம் . பாலாபிஸந்தியை வைத்து அதிகாரியினுடைய நிர்த்தாரணம்.
பிரஹ்ம சூத்திரங்களை எழுதியவர். பாதராயண மஹரிஷி . இவருக்கு வியாசர் என்று இன்னொரு பெயரும் உண்டு.
கர்மா மீமாம்ஸா சூத்திரங்களை எழுதிய ஜைமினி இவருடைய சீடர். அஷ்டாதச புராணங்களையும், பாகவதம் எழுதிய வியாசரும்
இவரும் ஒன்றா என்பதில் விசம்வாதம் உண்டு.

பகவத் ராமானுஜர் எடுத்தாள்கிற அத்வைத சித்தாந்த பூ.ப. உல்லேகனங்கள் பெரும்பாலும் பஞ்ச பாதிகா விவரணகாரர்,
மற்றும் பாமதி கிரந்தங்களில் இருந்து எடுக்கப் பட்டவை என்பதை ” கூடார்த்த சங்கிரகம் ” என்கிற ஸ்ருதப் பிரகாசிகா டீகையில்
அபிநவ ரங்கநாத பரகால ஸ்வாமி காட்டியுள்ளார்.
மேற்படி விவரண காரர்களுடைய கிரந்தங்களில் சொல்லப் பட்ட விஷயங்களின் சுருக்கமாவது ,
அவித்யா என்பது ஜீவாத்மாவிடம் இருப்பது, மாயை என்பது பரமாத்மாவிடம் இருப்பது என்பதாகும்.

பிரபாகர மீமாம்சை
கிரியா பதம் இல்லாத வாக்கியம் -ஆகாங்ஷை-பூர்வ பஷம்-

வேத வாக்கியம்
1-அஜ்ஞ்ஞாப விதி -ஜ்யோதிஷ்ட ஹோமம்  ஸ்வர்க்கம் விதி வாக்கியம் -பிரதானம் -அப்ரவர்த்த பிரவர்த்தகம் தூண்டும்
2-ந்த்ரதேயம் -பிரயோகம் விநியோகம்
3-நாமதேயம்
4-விஷேத வாக்கியம்  -நிஷேத அன்னம் கார்யம்
5-அர்த்த வாதம் -கதைகள் உதாரணம் சொல்லி
பஞ்ச விபக்தி

விதி சேஷ அர்த்தவாதம்
சத்ரு -சேனை யாகம் -அதிகார கருத்தியம்
பூதம் பவ்யாத-நடந்ததை கொண்டு நடக்க வேண்டியவை சொல்ல
சித்தம் சாத்யாய-
கார்ய புத்தி ரேவ ப்ரவ்ருத்தி -வேத வேத்ய தாத்பர்யம்
விதி -இஷ்ட சித்திக்கு -சாத்யத்வம் –பகவத் அனுமதி -தோஷம் இல்லாமல் பிரவ்ருத்தி செய்ய மூன்றும் வேண்டும்

அத -கர்ம விசாரம் அனந்தரம்
அஷயம் -கர்ம பலம் அல்பம் அஸ்திரம்
ப்ரஹ்ம ஞானம் அநந்தம் -ஸ்திரம்-

லஷ்மண சூரி மேக நாத ஹரி சாஸ்தராம்ப அதிகரணங்கள் நான்கு இல்லை முதல் மட்டும் என்பர்
சோமாசி ஆண்டான் வம்சம்
அதிகரண சாராவளி தேசிகன் -இப்படியும் சொல்வார் உண்டு அப்படியும் சொல்வார் உண்டு
அஹம் ஆத்மா ப்ரஹ்ம-விதி நிஷேதம் இல்லாமல் சித்த ப்ரஹ்ம பத வாக்யங்கள் இவை போல்வன
பிராமாண்யம் கிடையாது என்பர் பூர்வ பஷிகள்-கிரியா பதம் இல்லாததால்
வேதத்தில் 3000 கதைகள் உண்டு
மாடுகள் தபஸ் செய்து கொம்பு பெற்றன
அக்னி கண்ணீர் ஸ்வர்ணம் தங்கம் ஆனது -பிரமாண்யம் கிடையாது
அக்னி தேவதையாக இருக்கும் யாகம் முக்கியம் சொல்ல வந்தவை
கர்மத்தால் சாஸ்வத பதம் கிட்டாது அல்ப அஸ்திரம் பலம் தான் கிட்டும்
அஷயம் என்றதே வேதம் இதுவும் பூர்வ பஷ வாதம்
அத்ர  அதிதீயதே -சித்தாந்தம் -மேலே
சர்வ சப்தானாம் -பிரபாகர மீமாம்ச -பிரமாணிகர் ஸ்தானம் கொடுக்காமல் -துச்சம் மந்தம் அசத்-சப்தம் சொல்லாமல்
பிரமாணிகர் மதக்க மாட்டார்கள் –
ஆத்மா யாதாம்ய ஞானம் உள்ளவர் அநாதரிப்பார் முன்பே சொன்னதுபோலே

சர்வ சப்தம் -சக்தி க்ரஹம் -சப்தம் பொருள் -சம்பந்தம்
எட்டு வழிகளில்  அறிகிறோம்
1-வியாகரணம் -பூ தாது சத்தியை குறிக்கும் -தாசரதி -பெருமாள் –
2- உபமானம் -கவயம் -கோ சத்ருசம் -இந்த்ர்யாணி-இந்த்ரன் மனைவி சாத்ருசம்
3-கோசகம்-பர்யாய சப்தங்கள் -அமரகோசம்
4-ஆப்த வாக்கியம்
5-வ்யவஹாரம் -அஸ்வம் -குதிரை ஆனயா -மாடு கொண்டு வா சொல்லி கண்டு அறிதல் -வ்ருத்த வ்யவஹாரம்
6-வாக்யச்ய -context கொண்டு அறிதல் -கோகுல பஷி -இனிமையாக பாடும் -மா மரத்தில் இருக்கும்
7- விவரணம் -சமாரார்த்த -சப்தம் கொண்டு
8-பிரசித்தம் -வார்த்தை கொண்டு அறிதல் -யானை –
எட்டு வித பிரமாணம்

மீமாம்சகாரர்   வ்யவஹாரம் கொண்டே அறிய முடியும் என்பர்
nice  book  read  it  சொன்னதும் அறிகிறோம்
ப்ரஹ்மம் அர்த்தம் புரியாமல் ப்ரஹ்ம விசார சாஸ்திரம் வேண்டாமே என்பர்
அம்மா சொல்ல குழந்தை அறிகிறதே –

வேத வாக்யங்கள் பொதுவாக விதி / நிஷேத வாக்கியங்களாக அமையும். இதை செய் / இதை செய்யாதே – சத்யம் வத / தர்மம் சர /
ஸ்நாத்வா புஞ்சீத இத்யாதி படியாக இருக்கும். ஆக வேத வாக்கியங்களை 5 வகையாகப் பிரிக்கலாம் என்பது மீமாம்ஸகர் பக்ஷம்.

1. விதி – அஜ்ஞாதார்த்த ஜ்ஞாபக, அபிரவர்த்த பிரவர்த்தகஹா விதிஹி .
உ.ம். ஜ்யோதிஷ்ட்ட ஹோமேன ஸ்வர்க காமோ யஜேதா . சித்ர யாக: பசு காமேந . யஜேதா = என்பது விதி .
இதிலுள்ள ஆகியாத +”லிங் ” லகார பிரத்யயம் பிரவிருத்தி ஆதேசத்தோடு ஆணை இடுவதாகவும் உள்ளது.

2. மந்திரம் – பிரயோக சமவேத அர்த்த ஸ்மாரகஹ . விநியோக விதி. எந்த சமயத்தில் எப்படிப் பிரயோகிக்க வேண்டும்,
எந்த ஸாமக்ரி கொண்டு யஜிக்க வேண்டும் என்பனவற்றை க்ஞாபகப் படுத்துவது மந்திரம்.

3. நாமதேயம் – யாகத்தின் பெயரைக் குறிக்க வந்த வாக்கியங்கள். உ.ம். உத்பித் யாகம் .

4. நிஷேத வாக்கியம் – Prohibition. உ.ம். மா ஹிம்சா ஸர்வா பூதாநி . ந கலஞ்சம் பக்ஷயேத் .

5. அர்த்த வாதம். – கதா பாகம். Story aspect to stress a point. அது விதி சேஷ அர்த்த வாதமாக அல்லது
நிஷேத சேஷ அர்த்த வாதமாக இருக்கும்.
உ.ம். அக்நிதேவதா யாத யாகம் ; சேனேந அபிசரந் யாஜேத – சத்ரு வத காம: சேனேந யாகம் குர்யாத் என்பன சில.

வேத வாக்கியங்களின் முக்கியார்த்த பயன் விதியாகும்.
அப்படிப்பட்ட வாக்கியங்களில் லக்ஷணையால் குறிக்கப் பட்ட அர்த்தமே (implied meaning) பிரதானம். Literal meaning should not be taken.
உ.ம். பரான்னம் – விரோதி வீட்டில் பூஜிக்கை நிஷேதம். த்விஷதன்னம் ந போக்த்வயம் த்விஷதம் நைவ போஜயேத் என்று இருக்கிற படியால்.
அப்படி ஒருவன் பூஜித்தால் ‘விக்ஷம் புங்ச்வா ‘ தின்றதோடு ஒக்கும் என்றால்
‘சத்ரு கிருகம் ந கச்சா ‘ என்பதே அர்த்தமாகும். விஷத்தை சாப்பிட்டான் என்பது அர்த்தம் அல்ல.

இதனால் வ்யவாஹர்ரம் மட்டும் பிரமாணம் இல்லை
சந்தரன் பசு போல்வன பாலர்கள் அறிந்து கொள்வது போலே
நாம ரூபேண வியாகரணம் செய்தவனும் அவனே
ஆகாரம் இப்படி தான் இருக்க வேண்டும் -நிர்ணயித்து அருளினவனும் அவனே
அனுமானத்தால் சாதிக்கிறோம்
ப்ரஹ்ம சப்தம் -ப்ருஹி விருத்தோ -விஸ்தாரமாக ஆக்கிக் கொள்ளும் வ்யாக்ராணம் ஜகத் ரூபமாக தன்னை ஆக்கிக் கொள்ளும் புரிகிறோம்
சைகையாலே காட்டியும் தெரிவிக்கிறோம் சிலவற்றை –
அத வேதாந்த -சித்த உபாயம் அபரிமித பதம் கிடைக்க உபாசனம் செய்ய சொல்லும்
ப்ரஹ்ம விசார ரூபம் மூலம் கிடைக்கும் என்று சொல்லி நியமிக்கிறார் சித்தாந்தம்

-விதி நிஷேதம் -பிரதாந்யம்-என்பதை நிரசித்து
கார்யார்த்த -ஞான ஸ்வரூபம் ஞான ஆஸ்ரய -குணா குணி பாவம் -விளக்கு போலே ச்வத ஸூ பிரகாசக
வேதம் பரம பிரமாணிகம் -சாஸ்த்ரைகக-சித்தம்
த்ரஷ்டவ்ய -மந்தவ்ய –  நிதித்யாசத்வ்ய -அந்தர்யாமி ப்ரஹ்மம் -பார்க்க -கேட்டு -நினைத்து ஆலோசித்து
சரவணம் மனனம் –
உபாசனம் சாஷாத்காரம்
கேட்டு -சுருதி வாக்யங்களை -திராவிட வேதம் இதிகாச புராணங்கள் ஆச்சார்யா வசனங்கள்
மந்தவ்ய -ஆலோசனை
விச்சேதம் இல்லாமல் -சரீர அவசானம் வரை –
ப்ரஹ்ம ஸ்வரூபம் அறிய  -விதிக்கும் சுருதி வாக்கியம் உண்டே -பூர்வ பஷம் படியே -பார்த்தாலும் –

தகராசாகம் –
ஆசூர பிரக்ருதிகளுக்கு முடியாது
பரமாத்மாவை அடைய உபாசானம் விதித்து -கார்ய விதி

கேவல கர்ம -சாதன அனுகுணம் பலம் –
கர்மானுஷ்டானங்கள் -அஸ்திரம் அல்ப பலம்
ப்ரஹ்ம உபாசனம் இல்லாத கர்மாநுஷ்டானம் அஷயம் அமிருத பலம் கிட்டாதே
கர்மங்கள் தானே பலம் கொடுக்காதே
சித்திர குப்தன் -எழுதி –
பகவத் ப்ரீதியும் அப்ரீதியும் புண்யமும் பாபமும்

குப்த சித்திரம் -embedded  in  us
அநாதி கால கர்ம பலன்கள் –
யஞ்ஞம் தேவதா த்ரவ்யம் -சோம ரசம் -இந்திர அக்னி சோம அஸ்வினி தேவதா
பரஸ்பரம் பாவயந்த –
வேத வித் ஹிருதயத்தில் உள்ளான்
அந்தரிஷா  லோகம் -பாதாள லோகம் -வட்டவடிவான பூமி –
துக்காவஹா -ஸூ கம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்
ஸ்திதி ஸ்வர்க்கம் -சரீர அவசானே பலம் -கார்ய காரண பாவம்
ஷிண புண்யேன
அதிசயம் -abstract -மீமாம்சை -அத்ர்ஷ்டம் -அபூர்வம் –
அங்கா பூர்வம்
மகா பூர்வம் –

வேதவித் என்று பிரபாகரர் மதம் கொண்டாடுவார் –
இருந்தும் இந்த பூர்வ பஷம் நிரசித்து அருளுகிறார்

அசேதன வஸ்து பலம் கொடுக்காதே -நம் சித்தாந்தம் -பரமாத்மா ஏவ பல ப்ரதா
சாப்பாடு அந்தர்யாமி திருப்தி அடைவது போல
ஜீவாத்மா
விஹித கர்ம அனுஷ்டானம் -சுருதி ஸ்ம்ருதி -பகவத் ஆஞ்ஞை
தர்மம் -அதர்மம் -பர்யாய சப்தங்கள் புண்ணியம் பாபம்
ஆராதனை தேவதை அந்தர்யாமியைக்   குறிக்கும் -சப்தைதா தேவதா இல்லை
பகவத் கைங்கர்ய ரூபம் ப்ரீத்யார்த்தம் –
அதாக –பாரமாத்வாலே கர்ம பலம் -அகார வாச்யன் என்னவுமாம் –

”அதாதோ ” என்பதன் பொருள்
கர்ம மீமாம்ஸாவில் சொல்லப் பட்ட கர்ம ஸ்வரூபம் தெரியாமல் ஞான ஸ்வரூபம் தெரிய வழி இல்லை என்பதும்,
கர்ம விசாரம் முடித்தே பிரஹ்ம விசாரத்துக்கு வர வேண்டும் என்பதையுமே இது காட்டுகிறது.

கர்ம விசாரம் என்பது அவசியம் செய்யப் படவேண்டியது.
ஆகில் கேவல கர்மத்தால் கிடைக்கிற பலன் அல்பம் அஸ்திரம் என்பதும்
பிரஹ்ம உபாசனா ரூபமான கர்மத்தால் கிடைக்கிற பலன் அனந்த ஸ்திர பலம் என்பதான ஆபாத பிரதீதி ஏற்பட்டு
பிரஹ்ம ஞான – விசாரத்துக்கு வரவேண்டும்.

அதா = கர்ம விசாரானந்தரம்
அத: = தஸ்மாதேவ காரணாத்
பிரஹ்ம ஜிக்ஞாஸ = பிரஹ்ம விசாரம் பண்ண வேண்டும்.
இதி மஹா சித்தாந்த :

——————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-