தௌது மேதாவி நௌ த்ருஷ்ட்வா வேதேஷூ பரிநிஷ்டிதௌ
வேத உபப்ரும்ஹணார்த்தாய தாவக் ராஹயாத பிரபு -பால -4-6-என்று
வேத உபப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருத்தமான பிரபந்தம் ஆகையாலே ஜகத் காரண பூத பரவஸ்து பிரதிபாதகமான
அத்ப்யச் சம்பூத ப்ருதிவ்யை ரசாச்ச -புருஷ ஸூ கதம் -உத்தர அநுவாகம் -இத்யாதி வாக்யங்களையும்
அந்த வஸ்துவினுடைய அவதார உபபாதகமான
அஜாயமா நோ பஹஊதா விஜாயதே -புருஷ ஸூ கதம் -உத்தர அநுவாகம் -இத்யாதி வாக்யங்களையும்
அவதார பிரயோஜனமான சாது பரித்ரான துஷ்க்ருத் விநாசங்களைக் சொல்லுகிற
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவா நாம் புரோ ஹித -புருஷ ஸூ கதம் -உத்தர அநுவாகம் –என்னும்
எவமாதி வாக்யங்களையும் உபப்ரும்ஹிக்கிறது ஸ்ரீ ராமாயணம் –
அது தான் என் என்னில்
வ்யக்தமேஷ மஹா யோகி பரமாத்மா ஸநாதநம் -யுத்த -114-14- என்றும்
பவான் நாராயணோ தேவ ஸ்ரீ மான் சக்ராயுதோ விபு -யுத்த -120-13-என்றும்
அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7- என்றும்
பரதத்வம் ராமாத்மநா அவதரித்தது என்னும் இடம் கண்டோம் –
விச்வாமித்ராத் வரத்ராணம்-ஸ்ரீ தண்ட காரண்யவாசிகளான ரிஷிகளுடைய சம்ரஷணம்-
ராவணாதிகள் உடைய வாரபல புஜ பலங்களாலே நோவு பட்ட இந்த்ராதிகளுடைய பரிபாலனம்
இவை தொடக்கமான வற்றாலே சாமான்ய ரஷணத்தையும்
ராமோ ராமோ ராம இதி பிரஜா நாம பவன் கதா ராம பூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி -யுத்த -131-122-என்றும் –
திர்யக் யோநிக தாஸ் சாபி சர்வே ராமம் அநு வ்ரதா-உத்தர -109-22- என்றும்
தம்முடைய அழகாலும் சீலத்தாலும் தம்மை ஒழியச் செல்லாத படி திருத்தி மோஷ பிரதானம் பண்ணினார் என்று சாஷாத் அவதார பிரயோசனமான விசேஷ ரஷணத்தையும் சொல்லுகையாலும்
சாது பரித்ரானம் கண்டோம்
தத் விரோதிகளான தாடகா தாடகேய பிரமுகர் என்ன
கர தூஷண திரிசிரஸ் ஸூ க்கள் என்ன
ராவண கும்பகர்ண ப்ரப்ருதிகள் என்ன இவர்களுடைய வதத்தாலே துஷ்க்ருத் வி நாசமும் கண்டோம்
பித்ரு வசன பரிபாலனமும் ரிஷி தேவதாத்ய அநு வர்த்தனம்
சிறியதை பெரியது நலியாதபடி ரஷித்த ஷாத்ரமான தர்மம் சாமான்யமான தர்மங்களையும்
ஸூ க்ரீவம் சரணம் கதா -கிஷ்கிந்தா -4-19- என்றும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி யுத்தம் -19-31-என்று விசேஷ தர்மத்தையும்
மர்யாதா நாம் லோகஸ்ய கர்த்தா காரயிதா ஸ ஸ -சுந்தர -35-11-என்றும்
ஸ்வே ஸ்வே தரமே நியோஷ்யதி -பால-1-96- என்றும்
பிறரை அனுஷ்டிப்பைக்காக அனுஷ்டித்த படியாலே தர்ம சம்ஸ்தாபனம் பண்ணக் கண்டோம் –
இப்படி வேத இப ப்ரும்ஹணமானஸ்ரீ ராமாயணத்துக்கு பிரதான ப்ரமேயமான
நயாச இத்யாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மணம்-தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -தைத் நா -என்று
தர்மங்களில் பரம தர்மமாகச் சொல்லப் பட்ட சரணாகதி தர்மத்தை உப ப்ரும்ஹிக்கிறான் ஸ்ரீ வால்மினி பகவான் –
இது பிரதான பிரமேய மானபடி என் -என்னில்
இந்த பிரபந்தத்தில் சக்ரவர்த்தி திருமகனைக் குறித்து சொல்லுகிற பரத்வமும்
சம்சாரி சஜாதீயராய் தன மேன்மை பாராதே குஹ சபரீ ஸூக்ரீவ ப்ரப்ருதிகளோடே ஒரு நீராகக் வந்த சீலாதிகளும்
சாது பரித்ராணம் தர்ம சம்ஸ்தாபனம் துஷ்க்ருத் வி நாசனம் என்று
முக பேதன சொல்லப் படுகிற் சர்வ ரஷகத்வமுமாக இவை இ றே சரண்ய ஸ்வ பாவம் ஆவது
ஆகையாலே இப்பிரபந்த க்ரமம் அடைய விபீஷன வ்ருத்தாந்தத்தில் சொல்லுகிற சரணாகதியினுடைய பிரதி சம்பந்தி ஸ்வ பாவ பிரதிபாதகம் ஆகையாலே சரணா கதி பிரதான பிரமேயம் –
இப்பிரகரணத்தில் சரண்யனுக்கு சரணாகத ரஷணத்தில் யுண்டான நிர்ப்பந்தத்தையும்
சரணாகத ரஷண காலத்திலும் ஆஸ்ரீதபராதீ நனாய் இருக்கும் என்னும் இடமும்
தத் விஷயத்தில் ஆ ஸ்ரீ தருடைய பரிவையும்
இந்த சரணாகதிக்கு அவயமான ஸ்வ பாவங்களையும் பிரதி பாதியா நின்று கொண்டு
சரணாகதி வைபவத்தை பிரதிபாதிக்கிறான் –
————————————————————————————————————————————————————————————–
ஸூநிவிஷ்டம் ஹிதம் வாக்ய முக்த வந்தம் விபீஷணம்
அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் ராவண கால சோதித -யுத்த -16-1-
ஸூநிவிஷ்டம் -செவிக்கு இனியதாகவும்
ஹிதம் வாக்ய முக்த வந்தம் -நன்மை பயப்பதான சொல்தொடரை சொன்னவனான
விபீஷணம் -விபீஷண னைக் குறித்து
அப்ரவீத் ப்ருஷம் வாக்யம் -கடுமையான வாக்யத்தை சொன்னான்
ராவண கால சோதித -ராவணன் யமனால் தூண்டப் பட்டவனாய் —
அவதாரிகை –
முதல் ஸ்லோகத்தாலே-ஆண் பிள்ளையான சக்ரவர்த்தி திருமகனோடே வைரம் பிறந்து நின்ற தசையிலே
இத்தை நிஸ்தரிக்கலாம் படி ப்ராதாவானவன் பரம ஹிதத்தை உபதேசிக்க
இத்தைக் கால் கடைக் கொண்டு
நாசகனான காலனுடைய வார்த்தையைக் கேட்டு அவன் பின் போவதே -என்று ரிஷி வெறுக்கிறான்-
ஸூநிவிஷ்டம் –
அர்த்தத்தளவும் செல்ல வேண்டாதே -சம்ஸரவே மதுரம் -ஆம்படி அழகிய சந்நிவேசத்தை யுடைத்தாய் இருக்கும் வார்த்தையை –
அதாகிறது –
அநபிமதம் ஆனாலும் விட ஒண்ணாது இருக்கை –
அன்றிக்கே –
ஸூநிவிஷ்டம் -முக்த வந்தம் -என்று க்ரியா விசேஷணம் ஆகவுமாம் –
வார்த்தை அழகியதானாலும் நெஞ்சில் படா விடில் கால் கடைக் கள்ளலாம் இ றே
அங்கன் அன்றிக்கே நெஞ்சிலே அழகியதாக நிவிஷ்டமாம் படி சொன்னான் -என்கை-
ஹிதம் –
வெறும் செவிக்கு இனிதாய் இருக்கை அன்றிக்கே துர்த்தசையை நிஸ்தரிக்கலாம் படி பத்தியமாய் இருக்கும் வார்த்தையை –
அநபிமதம் ஆனாலும் விட ஒண்ணாது இருக்கும் வாக்ய சந்நிவேசத்தைப் பார்த்தால் –
சரவண கடாரம் ஆனாலும் விட ஒண்ணாது பத்யதையைப் பார்த்தால்
இது ஒருவனுக்கு அசஹ்யம் ஆவதே -என்கை-
வாக்யம்-
சொல்ல வேண்டும் ஹிதம் பரிபூரணமாய் இருக்கை-
வாக்யமாவது அர்த்தத்தைப் பரிபூரணமாகச் சொல்லுமது இ றே
உக்தவந்தம் –
நா சம்வத்சரம் வாசினே ப்ரப்ரூயாத் -என்று அத்யாதரம் பண்ணில் கால் கடையிலே துவளுவார்க்குச் சொல்லும் வார்த்தையை
இவன் துர்க்கதி கண்டு தன செல்லாமையாலே சொன்னவனை –
விபீஷணம்-
தூரஸ்தன் சொன்ன வார்த்தையாகில் ஆப்தாமோ அநாப்தாமோ என்று சந்கித்துக் கை விடலாம் –
ப்ராதா ஸ்வா மூர்த்திராத்மான -மனு -2-226-என்கிறபடியே ஹிதம் சொன்னவன் ப்ரத்யா சன்னன் என்கை-
ப்ருஷம் வாக்யம் அப்ரவீத் –
சரவண சம நந்தரம்-ஸ்திதோ அஸ்மி கத சந்தேக –ஸ்ரீ கீதை -18-73- என்று கலக்கம் தீர்ந்து ஸ்திதனாதல்-
த்வத்தோஹாய் வேதாத்யயனம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-2- என்று உபகார ச்ம்ருதியாலே புகழுதல்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -திருவாய் -2-7-8-என்று பிரத்யுபகாரம் காணாமையாலே தெகடாடுதல் செய்ய வேண்டும் அளவிலே
சத்ருக்களைச் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் –
வாக்யம் –
அவன் சொல்ல வேண்டும் ஹிதங்களை பரக்கச் சொன்னால் போலே ப்ருஷங்களிலும் இனிச் சொல்லலாவது இல்லை என்னும்படி சொன்னான் –
ப்ருஷம் அப்ரவீத்
அவன் ஹிதம் சொன்ன போது ஸூ நிவிஷ்டமாம்படி சொன்னால் போலே இவனும் நெஞ்சிலே புண்படும்படி அவ்யக்தமாக ப்ருஷித்தான்
இதுக்கு ஹேது சொல்லுகிறது மேல் பதத் த்வயம் –
ராவண –
ராவயதி ரோதயாதி -என்று பர ஹிம்சை யாலே நாட்டைக் கூப்பிடப் பண்ணுதல் –
அஸ்தானே காலிட்டுக் கொண்டு தானும் கூப்பிடக் கடவனாய் இருக்கை
இத்தால் தனக்கும் பிறர்க்கும் -ஹிதம் அறியாதவன் -என்கை-
கால சோதித –
ப்ராதா சொன்ன வார்த்தை செவி படாதபடி ப்ரத்யா சன்னனான காலன் பிடரி தள்ள அவன் பின் போனான் –
ப்ராதா -பெருமாள் திருவடிகளில் சரணம் புகு -என்றான் –
காலன் -அது கடவது அல்ல -என் வழியே போ -என்றான் –
ப்ராதாவின் வார்த்தை -த்விதா பஜ்யேய மப் யேவம் ந ந்மேயம் -யுத்த -36-11-என்ற தன பிரக்ருதிக்குச் சேராமையாலே காலன் வழி போனான் -என்கை –
—————————————————————————————————————————————————————————————
இத்யுக்த்வா பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ
ஆஜ காம முஹூர்த்தேன யத்ர ராம ச லஷ்மண -யுத்த -17-1-
இத்யுக்த்வா பருஷம் வாக்யம்-இப்படியாக கடுமையாக சொல் தொடரை சொல்லி
ராவணம் -ராவணனைக் குறித்து
ராவணா நுஜ-ராவணனுக்கு தம்பியான விபீஷணன்
ஆஜ காம முஹூர்த்தேன-விரைவாக வந்தார் –
யத்ர ராம ச லஷ்மண –எவ்விடத்திலே ஸ்ரீ ராம பிரான் லஷ்மணன் உடன் கூடியவராய் எழுந்து அருளி இருக்கிறாரோ -அங்கே-
அவதாரிகை –
ராவணன் அதிக்ரமத்தில் கை வளர்ந்து இருக்கச் செய்தேயும்
நமக்கு கர்த்தவ்யம் ஏது என்று மந்த்ரத்திலே இழிந்த இதுவே அவகாசமாக
இந்த துர்க்கதியை நிஸ்தரிக்கலாம் படியான பரம ஹிதத்தை சொல்லச் செய்தே
இவனுக்கு அசஹ்யமாய் இருக்கக் கண்டவாறே
இவன் இருந்த தேசமும் நமக்கு த்யாஜ்யம்
பரம தார்மிகரான பெருமாள் இருந்த தேசமே நமக்கு பிராப்யம் என்று புறப்பட்டு
வேகிற அகத்தின் நின்றும் துடித்துக் கொண்டு புறப்படுவாரைப் போலே போந்தான் என்று
இவனுடைய தர்ம ருசியைக் கண்டு கொண்டாடுகிறான் ரிஷி –
இத்யுக்த்வா பருஷம் வாக்யம்-
இதி -என்று ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ-யுத்த -14-3-என்று கர்த்தவ்யத்தினுடைய சௌகர்யத்தையும் –
யாவன் நக் ருஹ்ணந்தி சிராம்சி பாணா-யுத்த -14-4- என்று அகரணே பிரத்யவாயத்தையும் சொன்ன பிரகாரத்தை சந்தோஷத்தாலே அநு வதிக்கிறான் ரிஷி
பருஷம் –
சர்வ ஆஸ்வாச கரமான தென்றல் ச்ரு காலத்துக்கு அசஹ்யமாப் போலே
ஆஸ்ரய தோஷத்தால் இந்தப் பரம ஹிதம் ராவணனுக்கு பருஷமாயிற்று
வாக்யம் –
ஹிதோபதேசம் பரிபூரணமாய் இருக்கை
உக்த்வா –
ஹித ஜ்ஞனுமாய் ப்ராதாவாயும் இருக்கிறவன் இந்த துர்க்கதியிலே கை விட்டுப் போனான் என்கிற குறை தீர
சொல்லும் வார்த்தை அடைவே சொல்லி அவன் பக்கல் அவகாசம் இல்லாமையாலே போந்தான்
இவ் வநு பாஷணத்துக்கு பிரயோஜனம் -ராவணனுடைய அதிக்ரமத்தைக் கண்ட போதே கால் வாங்க ப்ராப்தமாய் இருக்க
ஹிதம் சொல்லி மீட்கலாமோ என்று இவனுக்கு உண்டான வழி அடையச் சொல்லுகை –
சொன்ன ஹிதம் பருஷமாகைக்கு ஹேது சொல்லுகிறது
ராவணம் –
வர புஜ பலங்களாலே பிரபலரோடு துர்ப்பலரோடு வாசி அற எல்லோரையும் நலிந்து போந்தவனுக்கு –
எதிரிகளுடைய பலம் சொன்னால் பருஷம் என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ராவணா நுஜ-
அவன் கிடந்த குடலிலே சஹவாசம் பண்ணிப் போந்தவன் கிடீர் சத்வோத்தரன் சொல்லும் ஹிதத்தைச் சொல்லுகிறான்
என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உடைய ஏற்றத்தைச் சொல்லுகிறான் ரிஷி
ஹிதம் சொல்லும் இடத்தில் ஜ்யேஷ்டக நிஷ்ட விபாகம் இல்லை
அறியுமவன் அறியாதவனுக்கு சொல்லும் இத்தனை -என்றுமாம்-
ஆஜ காம-
ஜ காம -என்ன அமைந்து இருக்க ஆஜ காம என்றது
ராவண கோஷ்டியில் தனக்கு சம்பந்தம் இல்லாமையும்
ராம கோஷ்டி தன்னிலமாய் இருக்கிற படியையும் தோற்றச் சொல்ல்லுகிறான் ரிஷி –
முஹூர்த்தேன-ந சௌரி சிந்தா விமுக ஜன வாசவை சசம் வரம் ஹூதவ ஜ்வாலா பஞ்சராந்தம் வ்யவஸ்திதி-காருட பூர்வ -என்கிறபடியே
நெருப்புப் பட்ட அகத்தில் கால் வாங்குமல்லது நிற்க மாட்டாதாப் போலே
ராவண கோஷ்டியில் தரிக்க மாட்டாத படியைச் சொல்லுதல்
கட்டி நின்ற கன்றை விட்டால் தாய் முலையில் வாய் வைத்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே
ராம கோஷ்டியில் புகுந்து அல்லது தரிக்க மாட்டாதானாய்ப் புகுந்தான் -என்னுதல்
வத்சோ காமிவ மாதரம் -என்றும்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும் புரிந்து -முதல் திரு -3-என்றும் சொல்லக் கடவது இ றே-
யத்ர ராம –
ராம சம்பந்தத்தைக் காட்டில் ராம சம்பந்த தேசமே உத்தேச்யம் -என்கை –
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா -புருஷ ஸூ க்தம் -என்றும்
ஸூ பக்ஸ் சித்ர கூடோ அசௌ-அயோத்யா -98-12-என்றும் சொல்லக் கடவது இ றே –
ச லஷ்மண-
இளைய பெருமாள் பெருமாளுக்கு நிரூபகராய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இத்தால் -ஆ ஸ்ரீ தனுக்கு ஆஸ்ரயணீயனை ஒழியச் செல்லாது என்கை –
அபூர்வர் என்று இருக்க வேண்டாதபடி செல்லுகிறவனுக்கு அங்கே புருஷகாரம் உண்டு என்னவுமாம்
மகாராஜர் வத்யதாம் -யுத்த -17-29- என்ன
லஷ்மணம் புண்ய லஷணம்-யுத்த -18-7-பெருமாள் இவனைக் கைக் கொள்ளுவது காண் என்று தன திரு உள்ளத்திலே தண்ணளி தோற்ற இருந்தான் இ றே
தன சொல் ஜீவியாத ராவண கோஷ்டியில் வர்த்தித்த நெஞ்சாறல் தீரத்
தம்பியிட்ட வழக்கான ராம கோஷ்டியில் புகுந்தான் -என்னவுமாம் –
இச் ஸ்லோகத்தாலே
பகவத் ருசி யுடையவனுக்கு
தத் விமுகரிருந்த இடமும் த்யாஜ்யம் என்னும் இடமும்
பகவத் சந்நிதி யுண்டான இடமே ப்ராப்யம் என்னும் இடமும்
சொல்லிற்று ஆயிற்று –
——————————————————————————————————————————————————————————————-
தம் மேரு சிகராகாரம் தீப்தாமிவ சதஹ்ரதாம்
கக நச்தம் மஹீஸ் தாஸ் தே தத் ருஸூர் வாநராதிபா -யுத்த -17-2-
தம் -அவ விபீஷணனை
மேரு சிகராகாரம் -மேரு மலையின் முடி போன்ற தன்மையை யுடையவனாய்
தீப்தாமிவ சதஹ்ரதாம் -பற்றி எரிகின்ற மின்னலைப் போன்று
கக நச்தம் -ஆகாயத்தில் நிற்கிறவனான
மஹீஸ் தாஸ்-பூமியில் நிற்கிற
தே தத் ருஸூர் வாநராதிபா -அவ்வானரர் தலைவர்கள் கண்டனர் –
அவதாரிகை –
ராவண கோஷ்டியில் நின்றும் கிளம்பி ஆகாசஸ் தனான போதே
இவனை முதலிகள் கண்டார்கள் -என்கிறான்-
தம்-
காட்டுத் தீயைத் தப்பினவன் மடுவிலே விழுமா போலே
தன அபி நிவேசம் எல்லாம் தோற்ற வந்தவனை –
மேரு சிகராகாரம் –
பிரதிபஷத்தை விட்டுப் பேரப் பெறுகையாலே ஸ்திரனான படியும்
ஒளி பெற்ற படியும்
பாரதந்த்ர்யம் தோற்ற வந்த படியுமாகிற
இஸ் ஸ்வ பாவன்களாலே மேரு சிகராகாரம் -என்கிறான் –
இத்தலை பிரதான அவயவமான ஸ்ருங்கம் பெற்றது என்றும்
ராவணனுக்கு ஒரு ஸ்ருங்க பங்கம் பிறந்தது என்றும் நினைக்கிறான் –
தீப்தாமிவ சதஹ்ரதாம்-
முதலிகளுடைய பரிவைக் கண்டு பெருமாளை திருவடி தொழ ஒண்ணாது ஒழிகிறதோ என்கிற நடுக்கமும்
புகுந்து அல்லது தரிக்க மாட்டாத தவறையும் தோற்றி இருக்கை –
இவனுடைய ஒளிக்கு மின்னலானது திருஷ்டாந்தம் ஆகப் போராமையாலே தீப்தாம் -என்கிற விசெஷனம் அபூதோபமை-பற்றி எரிகிற மின்னல் இல்லையே –
இத்தால் நேரு சிகராகாரம் என்கிற பதத்தில் ஆர்த்தமாக நினைத்த தீப்தியை இங்கே சாப்தம் ஆக்கினான்
கக நச்தம் –
இலங்கையில் நின்றும் கால் வாங்கின போதே கண்டார்கள் -என்கை
மஹீஸ் தாஸ் –
பூமியில் காவலுக்கு அடைத்தவர்கள் தாம்தாம் அதிகரியாத ககன ரஷணத்திலும் அவஹிதரானார் என்று
அவர்களுடைய காவல் குறிக்கோள் சொல்லுகிறது
தே தத் ருஸூர்-
ஒருத்தர் கண்டுஒருத்தருக்கு சொன்னாலும் எல்லாரும் கண்டாராவார் இ றே
அங்கன் அன்றிக்கே
எல்லாரும் ஒக்க கண்களால் கண்டார்கள் என்கை –
வாநராதிபா –
காவல் அடைப்புண்ட முதலிகளுக்கு முன்பே
காவல் அடைத்த முதலிகள் விட்ட இடத்தே இருந்து கண்டார்கள் என்கிறது –
பெருமாள் பக்கல் இவர்களுக்கு யுண்டான பரிவு ஆளிட்டு அந்து தொழுமது அன்றிக்கே
காவல் தான் இவர்களுக்கு உஜ்ஜீவனமாய் இருக்கிறபடி –
வாநராதிபா —
இவர்கள் பரிவிலே அவஹிதரான படி கண்டு ரிஷி கொண்டாடுகிறான் -என்னவுமாம் –
இஸ் ஸ்லோகத்தாலே
ப்ரதிகூலர் சமூஹத்தில் நின்றும் வரப் பெற்ற லாபத்துக்கு மேலே
அனுகூலர் கடாஷத்துகும் விஷயமானான் -என்று கருத்து-
——————————————————————————————————————————————————————-
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply