ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ-கிஷ்கிந்தா -1-71-/பத்ம சௌகந்தி கவஹம்-கிஷ்கிந்தா -1-115-/த்வம் -அப்ரமேயச்ச -துராச தச்ச-கிஷ்கிந்தா -24-31-/நாந் ருக்வேத விநீதஸ்ய -கிஷ்கிந்தா -3-28- – —

பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்வாச இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர –கிஷ்கிந்தா -1-71-

பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ -தாமரைப் பூவின் தாதுக்களோடு கலந்ததாய்
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத -மரங்களின் நடுவே இருந்து வெளிவருவதாய்
நிச்வாச இவ -மூச்சுக் காற்று போலே
ஸீதாயா-ஸீதா தேவி யினுடைய
வாதி -வீசுகிறது
வாயுர் -காற்று
மநோ ஹர -மனசை அபஹரிப்பதாய்-

அவதாரிகை –
சர்வ பிராணிகளுக்கும் பிராணந ஹேதுவான காற்றுத் தானே
நம்மை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணா நின்றதீ -என்கிறார் –

1-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இக்காற்றின் கார்யம் தூளி எழுந்து செல்லா நின்றது –
2-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
தாமரையாள் கை விட்ட படியாலே தாமரைத் தாதுவும் பிரதி கூலித்தது-
3-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
பாதா ருந்தத மேவ பங்கஜ ரஜ-ஸ்ரீ குணரத்ன -42-என்று
அவள் தனக்கும் அகப்பட பாதகமானது நமக்கு பாதகமாகச் சொல்ல வேண்டா வி றே-
4-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இதனுடைய ராஜசம்-ரஜோ குணம் -தாமரை உடன் கூடியது -இரண்டு பொருளில் -இருக்கிறபடி என்-நம்மையும் மதிக்கிறது இல்லையே –
5-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இதுக்கடி கண்டகிகளோட்டை சம்சர்க்கம் இ றே -துன்புருத்துவதான -முள் நிரம்புஇயதான -இரண்டு பொருளில் –
6-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
இத்தைக்காற்று என்று இருந்தோம்
இது கேசரியாய் இருந்ததீ-சிம்ஹமாய் -கேசரங்களோடு கூடியதாய்
7-பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ –
தனக்கு மேலே கூட்டுப் படையும் தேடி வாரா நின்றது
ரூபவான்கள் இ றே அசஹாய சூரராய் இருப்பர்
இது ரூபஹீனம் ஆகையாலே துணை தேடும் இ றே –

இப்படி பாதகமாய் வந்ததாகில் அறிந்து ஏற்கவே பரிஹரிக்க தட்டென்-என்ன –
1-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
தூரத்திலே கண்டு பரிஹரிக்க ஒண்ணாதபடி
குன்றூடு பொழில் நுழைந்து -பெரியாழ்வார் -4-8-9-என்கிறபடியே
மரங்களிலே வந்து பதி கிடந்து நடுவே புறப்படக் கண்டது இத்தனை –
2-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
செல்வப் பிள்ளைகள் வெய்யில் பொறாமல் நிழலிலே வருமா போலே இதுவும் மரத்தின் நிழலிலே வாரா நின்றது –
3-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
கீழே -பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட -என்று சௌ ரப்யம்-நறு மணம் -சொல்லிற்று
மரத்திலே தங்கி இடைவெளியாலே ஒழுகப் புறப்படுகையாலே மாந்த்யம் -மென்மை-சொல்லிற்று –
மரத்தின் நிழலில் வருகையாலும்
தாமரையில் உள்ள தேனை அளாவி வருகையாலும் -சைத்யம் -குளிர்ச்சி -சொல்லிற்று
ஆக
சௌ ரப்யமும்
மாந்த்யமும்
சைத்யமும்
சொல்லிற்று
4-வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத-
விடாய்த்த நம்மை மரத்தடியில் ஒதுங்க ஒட்டுகிறது இல்லை –

இப்படி  பாதகமாய் வந்தால் தம்மைக் கொண்டு அகலும் இத்தனை யன்றோ என்ன –
1-நிச்வாச இவ ஸீதாயா –
முகம் பழகினால் போலே இருக்கையாலே அதுவும் செய்யப் போகிறது இல்லை –
2-நிச்வாச இவ ஸீதாயா –
மைதிலியினுடைய மூச்சுக் காற்று போலே இருக்கையாலே
அவள் தான் மரத்தடியிலே ஒளிந்து நின்று வருகிறாளோ
என்கிற நசையினால் போகப் போகிறது இல்லை –
3–நிச்வாச இவ ஸீதாயா –
ஆமோத முபஜிக் ரந்தௌ ஸ்வ நிச்வாஸா நு  காரிணம்-ரகுவம்சம் -1-43- என்று
நிச்வாசத்துக்கு பரிமளம் உண்டாகச் சொல்லக் கடவது   இ றே-
4–நிச்வாச இவ ஸீதாயா –
ஸ்பார்ச நமாய் நலிகிறதுக்கு மேலே ஸ்மாரகமாயும் நலியா நின்றது-

இப்படிக்கு ஒத்த காற்று தோன்றின அளவோ -என்னில்
1-வாதி –
வீசுகிறது -காடுதான் பரப்பும் தானாம் படி உலவா நின்றது
அன்றியிலே
2- வாதி –
என்று பாதகம் என்று கொண்டு போக ஒண்ணாத படி தான் சம்பாதித்த கந்தத்தாலே துவக்கா நின்றது
இதுதான் கந்த வாஹம் இ றே-

இப்படி பாதகமாக வந்து தோற்றி உலாவுகிறது தான் எது என்னில்
1-வாயு –
சர்வ உஜ்ஜீவன ஹேதுவான காற்று கிடீர் இப்படி பாதகம் ஆகிறது
2- வாயு –
பீஷாஸ் மாத் வாத பவதே -என்று இவருக்கு அஞ்சித் திரிகிற காற்று இ ரே இவர் தம்மை அஞ்சப் பண்ணித் திரிகிறது-

இப்படி அஞ்சப் பண்ணுகிற படி என் என்னில்
1-மநோஹர –
மேல் எழுந்தது அன்றியிலே உள்ளுள்ள பதார்த்தம் அகப்பட அபஹரியா நின்றது
2- மநோஹர –
இனியாரைப் போலே இன்னாப்புச் செய்யா நின்றது-

இது லோகத்திலே ஒரு வழி பறிக்காரர்  சமாதியாய் நடக்கிறது –
பத்ம கோசர சம்ஸ்ருஷ்ட -என்கையாலே -தங்களை இன்னார் என்று அறியாமைக்கும்
கண்டால் பயப்படுகைக்காகவும்  –
அவர்கள் உத்தூளனம் பண்ணி வருகிறாப் போலே இருக்கிறது
வ்ருஷாந்தர விநிஸ்சருத-என்கையாலே -அவர்கள் வழிப் போகிறவர்கள் வரும்தனையும் மரத்தடியில் பத்தி கிடந்தது
அவர்கள் அணுக வந்தவாறே புறப்படுமா போலே இருக்கிறது
நிச்வாச இவ ஸீதா யா -என்கையாலே -அவர்கள் கை கழியப் போகாமே துவக்கும்படி -பண்டு கண்டு அறியுமா போலே இருந்தது
உம்முடைய ஊர் சொல்லீர் -பேர் சொல்லீர் -என்றால் போலே முகம் அறிவு சொல்லி உகப்பிக்குமா போலே இருக்கிறது –
வாதி -என்கையாலே கார்யம் கை புகுரும் தனையும் அவர்கள் நின்ற இடத்திலே நிலவாதே
பரகு பரகு என்று சஞ்சரிக்குமா போலே இருக்கிறது –
வாய்-என்கையாலே -யாரேனும் தொடர்ந்து பிடிக்கப் புக்கால் உடம்போடு உடம்பு தாக்கா நிற்கச் செய்தேயும்
கைக்குப் பிடி கொடாதே இருக்கும் படியைச் சொல்லுகிறது
மநோஹர -என்கையாலே மேல் எழுந்த கிழிச் சீரை அன்றியிலே உள்ளுள்ளது அடைய அபஹரிக்கும் படியைச் சொல்லுகிறது –

————————————————————————————————————————————————————————-

பத்ம சௌகந்தி கவஹம் சிவம் சோக விநாசநம்
தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ   பவன மாருதம் -கிஷ்கிந்தா -1-115-

பத்ம சௌகந்தி கவஹம் -தாமரை ஆம்பல் ஆகிய புஷ்பங்களின் மணத்தை தரித்து நிற்பதும்
சிவம் -பரிசுத்தம் ஆனதும்
சோக விநாசநம் -துன்பத்தை துடிப்பதையும்
தன்யா -பாக்யவான்களே
லஷ்மண-லஷ்மணா
சேவந்தே -அனுபவிக்கிறார்கள்
பாம்போ   பவன மாருதம் -பம்பா சரஸ்சின் கரையில் உள்ள தோட்டத்தில் இருந்து வீசுகிற காற்றை-

பத்ம சௌகந்தி கவஹம் –
கலம்பகன் சூடுவாரைப் போலே
சிவம்
இதன் அத்தனை நன்மை யுடையார் ஒருவரும் இல்லை
சோக விநாசநம்
நம்மைசித்ரவதம் பண்ணாது
சோகம் மறுவலிடாத படி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா
தனமுடையார் ஷாமத்துக்கு பஞ்சத்துக்கு அஞ்சார்கள்  இ றே
லஷ்மண
சேவந்தே
அஞ்சாமை அன்றிக்கே
இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பர்கள்
பாம்போ   பவன மாருதம்
ஆகாரத்தில் நெருப்பு என்னுமாப் போலே -நெருப்புச் சட்டியில் நெருப்பு என்னுமா போலே-

————————————————————————————————————————————————————

த்வம் -அப்ரமேயச்ச -துராச தச்ச-ஜிதேந்த்ரியச்ச உத்தமதார்மிகச்ச –
அஷய்ய கீர்த்திச்ச -விசஷணச்ச -ஷிதி ஷமாவான் -ஷத ஜோபமாஷ-கிஷ்கிந்தா -24-31-

த்வம் -நீர்
அப்ரமேயச்ச -அளவிட ஒண்ணாத வராயும்
துராச தச்ச-கிட்ட ஒண்ணாத வராயும்
ஜிதேந்த்ரியச்ச -ஜெயிக்கப் பட்ட இந்த்ரியங்களை யுடையவராயும்
உத்தமதார்மிகச்ச -சிறந்த தர்மத்தை யுடைவராயும் –
அஷய்ய கீர்த்திச்ச -அழிவற்ற புகழை யுடையவராயும்
விசஷணச்ச -அதி சமர்த்தராகவும்
ஷிதி ஷமாவான் -பூமியைப் போன்ற பொறுமை யுடையவராயும்
ஷத ஜோபமாஷ-ரத்தம் போலே சிவந்த கண்களை யுடைய  ஸ்ரீ ராம பிரானே -இருக்கின்றீர்-

அவதாரிகை –
தத சரேணாபி ஹதோ ராமேண ரண கர்க்கச –
பபாத சஹஸா வாலீ நிக்ருத்த இவ பாதப -கிஷ்கிந்தா -17-1-என்கிறபடியே
பெருமாள் திருக்கையில் அம்பாலே-
நினைவன்றியிலே மறுபாடுருவ ஏவுண்டு தரைப்பட்ட வாலியானவன் குபிகனாய் –
ஜானே பாப சமாசாரம் த்ருணை கூப மிவாபரம் சதாம வேஷகரம் பாபம் பிரச்சனன மிவ பாவகம் – கிஷ்கிந்தா -17-1–என்று
கிட்டினாரை விழப் பண்ணுகைக்கு புல்மூடு கிணறாய் இருந்தீர்
அணுகினாரை முடிக்கைக்கு பொடிமூடு தணலாய் இருந்தீர் –
இப்படி பிரசன்ன பாபரான நீர் -பரம பாவனமாய் ஜடா வல்கல ரூபமான இத் தாபச வேஷத்தை என் செய்யக் கட்டி யுடுத்தீர் -என்று தொடங்கி
விஷயே வா புரே வா தே யதா நாப கரோ மயஹம் -கிஷ்கிந்தா -17-22-என்று
உம்மோடு எங்களுக்குக் காணித்தாயம்-சிறு நிலத்  தகராறு -பூமித் தாயம் -பெரு நிலத் தகராறு -எல்லை மயக்கம் இல்லை
மந்திர வழக்காட்டமும்  -வீட்டைப் பற்றின வழக்கும் இல்லை
வான்பகை வழிப்பகை-நீண்ட கால விரோதமோ நடுவில் வந்த விரோதமோ -ஏற்பட்டது  இல்லை –
ஜ்ஞாதிப் பகை-குடிப்பகை -தாயாதிக் காய்ச்சலோ -பாம்பு கீரி போல குல விரோதமோ -இல்லை
பசு மறித்தல்-நிரை சாய்த்தல் -செய்தது இல்லை
ஊர்ப் பிணக்கு நீர்ப் பிணக்கு இல்லை
பெண் பிணக்கு மண் பிணக்கும் இல்லை
ந ச த்வாம் -பிரதிஜா நே அஹம் கஸ்மான்மாம் ஹம்ச்ய கில்பிஷம்  -கிஷ்கிந்தா -17-23- என்று
நான் தான் உம்மை இன்னார் என்று அறியேன்
இப்படி இருக்க நிரபரா தரான நாங்கள் இருக்கிற இடத்திலே நீர் தாமே இடறிக் கொண்டு வந்து என் செய்யக் கொன்றீர் –
மாமிஹாப்ரதியுத் யந்த மன்யேன ச சமாகதம் –தர்ம லிங்க பிரதிச் சன்ன க்ரூரம்   கர்ம சமாசரேத்-கிஷ்கிந்தா -17-24/25-என்று
உம்மோடு பொர வந்தேன் அல்லேன்
வேறு ஒருவனோடு போருகிரவன்
இப்படி இருக்கிற என்னைச் சடுதியிலே புகுந்து கொன்று கொடும் தொழில் செய்தீர் –
வயம் வநசரா ராம ம்ருகா மூலபலாச நா ஏஷா பிரகிருதி ரஸ்மாகம் புருஷ சத்வம் நரேச்வர -கிஷ்கிந்தா -17-28- என்று
நாங்கள் காடர் -நீங்கள் நாடார்
நாங்கள் மிருகங்கள் நீங்கள் மனுஷ்யர்
நாங்கள் தின்பது காயும் கிழங்கும் நீங்கள் தின்பது செந்நெல் சோறு
நாங்கள் குடிமக்கள் நீங்கள் ராஜாக்கள் -என்றும்
அதார்யமா சர்ம மே சத்பீ ரோமாண யஸ்தி விவர்ஜிதம் -அபஷ்யாணி சமாம்சானி த்வத் விதிர் தர்ம சாரிபி -கிஷ்கிந்தா -17-37-என்று
வேட்டையாட வந்தீர்கள் ஆகில் கலைத்தோல் புலித்தோல் போலே எங்கள் தோல் யஜ்வாக்களுக்கு உறுப்பு தோலுக்கு உறுப்பு ஆகிறது அல்ல –
எங்களுடைய ரோமாச்திகள் சவாரி சாமரங்கள் போலவும்
யானைக் கொம்பு புலியுகிர் போலவும் விநியோக யோக்கியம் அல்ல
எங்களுடைய மாம்சம் முட்பன்றி மான் உடும்பு ஆமை இவற்றின் மாம்சங்கள் போலே போஜ்யங்கள் அல்ல -நிஷித்தம்
ராஜ ஹா பரஹ்மஹா கோக்ந  சோர ப்ராணிவதே ரத நாஸ்திக பரிவேத்தா ச சர்வே நிரயகாமி ந -கிஷ்கிந்தா -17-35-என்று
ராஜ வதாதிகள் பண்ணினார்க்கு நரகமே காணும் கதி என்றால் போலே
இப்புடைகளிலே ஒரு கோடி பருஷங்களைச் சொல்லி
அதி ஷிப்த ச்ததா ராம பச்சாத் வாலி நமப்ரவீத்
தர்மமர்த்தஞ்ச காமஞ்ச சமயஞ்சாபி லௌகிகம்
அவிஜ்ஞாய கதம் பாலான் மாமிஹாத்ய விகர்ஹசே -கிஷ்க்ந்தா -18-4-என்று
இப்படிப் பாராமல் சொல்லப்பட்ட பெருமாளும் -நீ ஒரு விவேகியாய் வைதிக புருஷார்த்தம் அறிகிறாய் இல்லை –
லௌகிகமான வழக்கும் அறிகிறாய் இல்லை
உன் அறிவு கேட்டால் நியாய அனுஷ்டானம் பண்ணின நம்மைப் பழிக்கிறாய் இத்தனை –
காணித்தாயம் பூமித்தாயம் இல்லை என்றாய் –
இஷ்வாகூ ணாமியம் பூமி ச சைல வந காநநா -கிஷ்கிந்தா -18-6- என்று மலை முழைஞ்சில் களோடு  -சிறு காட்டோடு -பெரும் காட்டோடு -வாசி அற இந்த பூமி அடைய எங்களதன்றோ-
பூமி ஷேதாம கள தரஞ்ச  -என்று எங்கள் காணியூராகிறது இது வன்றோ
எல்லை மயக்கமில்லை மந்திர வழக்காட்டம் இல்லை -என்றாய்
தவம் வயஸ்யச்ச ஹ்ருத்யோ மே ஹ்யேகம்துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா -5-18- என்று
சமான ஸூ க துக்க ராம்படி மகாராஜரோடே சகயம் பண்ணினோம்
ஆனபின்பு -தே நா ஹம பிரதி ஷித்தச்ச ஹ்ருதராஜ்யச்ச -கிஷ்கிந்தா -10-27-என்னும்படி
எல்லை மாறாட்ட மாத்ரம் அன்றிக்கே  நேராக ராஜ்யத்தை பறித்தும்
பரிகரத்தை நாலு பேர் ஒழியச் சேர்த்துக் கொண்டும் செய்தாய்
வான் பகை வழிப் பகை இல்லை என்றாய் –
யதா வச்சாப்ய வாதயம் உக்தாச்ச நா சிஷஸ் தே ந -கிஷ்கிந்தா -9-23- என்று
அவன் காலிலே குனிந்த அளவிலும் அங்கீ கரியாதே-
வஸ்த்ரே ணை கே ந வானர ததா வித்ரா வ்யாமாச வாலீ -கிஷ்கிந்தா -10-26-என்று
ஒற்றை யுடையோடே ஓட அடித்திலையோ –
ஜ்ஞாதிப் பகை குடிப்பகை இல்லை -என்றாய்
அயம் ப்ராதா ஸூ தாருண–கிஷ்கிந்தா -10-25-என்று நீயே சொன்னாயே
அப்படிக்கு ஒத்த தம்பியோடு வெறுத்தி அல்லையோ
பசு மறித்தல் நிரை சாய்த்தல் செய்தது இல்லை ஊர்ப் பிணக்கு இல்லை -என்றாய் –
அவன் க்ருஷி கோ ரஷண  வாணிஜ்ய முகத்தாலே அர்த்தார்ஜனம் பண்ணுகிற ஸூ ரபி முத்திறமும் -பசு ஆடு எருமை –
பட்டமாக எழுகிற குடிக் காடுகளும் குளங்களும் வாங்கிக் கொண்டே அல்லையோ
பெண் பிணக்கு மண் பிணக்கும் இல்லை -என்றாய்
ப்ராதுர் வர்த்தசி பார்யாயாம் -கிஷ்கிந்தா -18-18-என்று அனுஜ பார்யாபஹாரமும் கிஷ்கிந்தாபஹாரமும் பண்ணிற்று இலையோ –
நான் தான் உம்மை இன்னார் என்று அறியேன் -இப்படி இருக்க நிர பராதரான  எங்களை இருந்த இடத்திலே நீர் தாமே இடறிக் கொண்டு வந்து என் செய்யக் கொன்றீர் -என்றாய் –
தாம் பாலயதி தர்மாத்மா பரதஸ் சத்தியவாக்ருஜூ
தஸ்ய தர்ம க்ருதாதே ஸாத் வயமன்யே ச பார்த்தி வா
சராமோ வஸூ தாம  க்ருத்ச்நாம்-கிஷ்கிந்தா -18-7/9- என்றும்
த்வாஞ்ச தர்மாததி க்ராந்தம் கதம் சக்யம் உபேஷிதும்-கிஷ்கிந்தா -18-24- என்றும்
நாங்கள் ராஜா பரதனுடைய தர்ம நிதேசகாரிகளாய்-துஷ்ட நிக்ரஹம் பண்ணித் திரிகிறவர்கள்
நீ குற்றம் செய்தவாறே நீ இருந்த இடம் தேடி வந்து உன்னை தண்டித்தோம்
உம்மோடு பொர வந்தவன் அல்ல -வேறு ஒருவனோடு பொருகிறவன் -இப்படி இருக்கிற என்னைக் கொன்றீர் -என்றாய்
வத் யந்தி விமுகாம்ச்சாபி ந ச தோஷாத்ர வித்யதே அயுத்யன் பிரதியுத் யனவா யச்மாச்சாகா ம்ருகோ ஹ்யசி -கிஷ்கிந்தா -18-40/42/என்று
நம்மோடு பொராது ஒழியவுமாம்-கெட்டே ஓடவுமாம் – உன்னைக் கொன்றால் ஒரு தோஷமும் இல்லை
நீயோ ஒரு குரங்கு அன்றோ ராஜாக்கள் சொல்லுமாப் போலே சொன்னாய்
நாங்கள்   காடர் நீங்கள் நாடார்-நாங்கள் மிருகங்கள் நீங்கள் மனுஷ்யர்கள்
நாங்கள் பலமூலாசிகள் நீஞ்சல் ராஜான்ன போக்தாக்கள்
நாங்கள் குடிமக்கள் நீங்கள் ராஜாக்கள் என்றால் போலே அப்ரயோஜகமாகச் சொன்னாய்
பாரத காம வருத்தா நாம நிக்ரஹே  பர்யா வச்தித-கிஷ்கிந்தா -18-25-என்றும்
ம்ருக பஷி மனுஷ்யாணாம் நிக்ரஹப்ரக் ரஹாவபி -கிஷ்கிந்தா -18-6- என்றும்
எங்கேனும் திரியிலுமாம் -ஏதேனும் சாதியாகிலுமாம்- ஏதேனும் தின்னிலுமாம்-
இப்படி பவ்யராகிலுமாம்-துஷ்ட நிக்ரஹம் ராஜாக்களுக்கு அடுத்தது காண்
எங்களுடைய ரோமாஸ்தி மாம்சங்கள் நிஷித்தங்கள்-இப்படியிருக்க நிஷ் பிரயோஜன வ்யாபாத நம் பண்ணினீர் -என்றாய் –
வாகு ராபிச்ச பாசைச்ச கூடைச்ச விவிதைர் நரா
பிரதிச்ச ந்நாச்ச த்ருச்யாச்ச நிக் நந்தி ஸ்ம பஹூன் ம்ருகான்-கிஷ்கிந்தா -18-39-என்று
ராஜாக்கள் ஆனவர்கள் ரோமாஸ்தி மாம்சாதிகள் ஆகிற பிரயோஜனங்களை   ஒழியவும்
ம்ருகங்களாலே நாடு அழியப் புக்கால் ஜனபத ஹிதார்த்தமாகவும் வேட்டையாடுவதாயும்
வலைகட்டி வளைத்தும் -கன்னி கட்டிப் பிடித்தும் ஊட்டிச் சதித்தும்
பார்வை மாள வைத்தும் ஒழித்து நின்றும் கொல்லக் கடவர்களாய்க் காண் இருப்பது
ராஜாவதம் பண்ணினார்க்கு நரகமே காணும் கதி -என்றாய்-
ஔ ரசீமா பகி நீம் வாபி பார்யாஞ்சாப்ய நுஜச்ய யா
பிரசரேத் வானர காமாத் தஸ்ய தண்டோ வாத ஸ்ம்ருத-கிஷ்கிந்தா -18-23- என்று
ராஜாவதம் பண்ணினால் அன்றோ குற்றம் உள்ளது
நீ ஒரு குரங்கு
அனுஜ பார்யாபஹாரம் பண்ணினாய் ஆகையால் தண்ட்யன்
ராஜா த்வாச நாத் பாபம் தத வாப் நொதி கில்பிஷம் -கிஷ்கிந்தா -18-33- என்று
உன்னை தண்டியாத போது நமக்குப் பாபம் வரும் இத்தனை -என்று
இப்புடைகளிலே திருத்தமாக சில வார்த்தைகளை அருளிச் செய்ய
வாலியும் -பிரத்யுவாச ததோ வாசிம ப்ராஜ்ஞலிர் வானரேச்வர
யத்த்வமாத்த நரஸ்ரேஷ்ட ததே தந் நாதார சம்சய -லிஷ்கிந்தா -18-47-என்று உடன்பட்டு வாந்தனாக
இப்படி பூஜை பலத்தாலும் வாக்யுத்தத்தாலும் வாலியைச் சென்று கொன்று வென்றி கொண்டு பெருமாள் நிற்கிறவளவிலே
பர்த்ருவத ஜநிதமான சோகக் ரோதங்களாலே விக்ருதையாய்
என் ஆண் மகனைக் கொன்றவனை வாயார வைய வேணும்
என்று கட்டி யுடுத்து வந்த தாரையானவள்
சா தம சமா சாத்ய வி ஸூ த்த சத்வா -கிஷ்கிந்தா -24-30-என்று
பெருமாளைக் கண்டு தத் சந்நிதி மகாத்ம்யத்தாலே கோபம் தணிந்து சத்வம் தலை எடுத்து
சத்வாத் சஞ்ஜாயதே ஜ்ஞானம் -ஸ்ரீ கீதை -14-17-என்று சத்வ கார்யமான ஜ்ஞானம் பிறந்து
தெளிவுற்ற சிந்தையள்   ஆகையாலும் -அவ்வஸ்துவை ஒரு போகியாக சாஷாத் கரித்து நிர்ணயம் பண்ணி
வையப் புக்க வாயாலே வாழ்த்துகிறாள்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே பித்யதே ஹ்ருதயக் ரந்திச் சித் யந்தே சர்வ சம்சயா -ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி -முண்டக -2-2-9-என்று
பகவத் சாஷாத் காரம் பிறந்தால் ப்ரதிபந்தகம் போய் தத்வ அனுபவம் பண்ணக் குறையில்லை இ றே-

ஸ்ரீ வால்மீகி பகவான் -அல்லாத ரிஷிகளையும் வேதங்களையும் போலே
ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணிவிசார்யா ச புன புன
இதமேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயோ நாராயணஸ் சதா -பார-ஆநு -178-11- என்றும்
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -நாராதீய புராணம் -18-33- என்றும்
நாஸ்தி நாராயண சமோ  ந பூதோ ந பவிஷ்யதி -ஹரி வம்சம் -3-32- என்றும்
ந த்வத் சமோச்த்ய ப்யதிக குதோன்ய-ஸ்ரிகீதை -11-43- என்றும்
அக்னிர்வை தேவா நாம வமோ விஷ்ணு பரம –தை சம்-5-1- என்றும்
ந தத சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே -சவே -6-என்றும்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -தை நா -10-20- என்றும் –
ந தச்யேச கச்ச ந -தை நா -1-9- என்றும்
இத்யாதிகளாலே தாம் தாம்பகவத்  பரத்வ உபபாதனம் பண்ணத் தொடங்கி
நமோ ஹிரண்ய கர்பாய ஹரயே சங்கராய ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-2-என்றும்
ருத்ராணாம் சங்கரச்சாஸ் மி -ஸ்ரீ கீதை -10-23- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ்ஸ் சேந்திர-தை ணா -11- என்றும்
வாச நாந்தரங்களாலே சாம்ய சங்கை பண்ணும்படி யாவது
விச்வாதிகம் ருத்ரம் ப்ரஹ்ம காரணகாரணம் -என்றும்
விச்வாதி கோ ருத்ரோ மகாஷி -தை ணா -10-19-என்றும்
ந கிரிந்திர த்வதுத்தரோ ந ஜ்யாயோ அஸ்திவ்ருத்ரஹந -ருக்சம் அச்-3- என்றும்
ஆகாச  யேப்யோ ஜ்யாயான் ஆகாஸ் பராயணம் -சாந்தோக்யம் -1-9-1- என்றும்
சிவா ஏகோ த்யேய சிவங்கர -அதர்வசிகை -2-20-என்றும் இத்யாதிகளாலே
தேவதாந்த்ரங்கள் உடைய ஆதிக்ய சங்கை பண்ணும்படி யாவது இதுக்கு பூர்வா பரங்களும்
தரமி க்ராஹக பிரமாணமும் கொண்டும்
சமா நாதி கரண வாக்யங்களுக்கு அந்தர்யாமி பர்யந்த அனுசந்தானத்தாலே என்றும்
அவ்வோ தேவதைகளைச் சொல்லுகிற பிரதேசங்கள் தானும்
க்ரய்யேயம் கௌ பஹூ ஷீரா ஸாத் வீச -என்று விலைபசுவை போரப் பொலியச் சொல்லுமா போலே தத்வ பரமன்று -பிரசம்சா பரம் என்றும்
ஆகாச பிராண வாம தேவந்திர ப்ரஹ்லாதி களுக்குப்  பரத்வம் வரில் யாயிற்று ருத்ராதிகளுக்கு பரத்வம் வருவது என்கிற
துல்ய நியாயத்தாலும் உபபாதிக்க வேண்டி க்லேச பஹுளமாய் இராதபடி
சர்வாணி ஹ வா இமானி பூதானி பிராண மேவாபி சம்வி சாந்தி -சாந்தோக்யம்-1-11-5–பிராண பரம் -என்றும்
அஹம் மநூபவம் ஸூ ர்யச்ச -ப்ருஹ-3-4-10-வாம தேவ ரிஷி பரம் -என்றும்
மாம் உபாஸ் ஸ்வ –மாமேவ விசா நீஹி -கௌஷீதகீ -இந்திர பரம் -என்றும்
மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-89- ப்ரஹ்லாத பரம் -என்றும்
கடல் ஞாலம் செய்தேனும் யானே -திருவாய் மொழி -5-6-1- என்றும் ஸ்ருதி வாக்யங்கள் உண்டே –

ஆஸ்த்ரீபாலம் பிரசித்தவைபவர் பெருமாள்  என்று அறிவிக்கைக்காக தார அங்கதாதிகளை இட்டுத் தத்வ நிர்ணயம் பண்ணுகிறான் –

இதில் –
ஸூ சம்வருதம் பார்த்திவ லஷணைச் சதம் சாரு நேத்ரம் ம்ருக சாப நேத்ரா
அதருஷ்ட பூர்வம் புருஷம் ப்ரதா நமயம் ச காகுத்ச்த இதி ப்ரஜஜ்ஞே -கிஷ்கிந்தா -24-28-என்று
இற்றைக்கு முன்பு கண்டு அறியாது இருக்கச் செய்தேயும்
திருமேனியில் ஸ்வயம் வரித்துக் கிடக்கிற ராஜ லஷணங்களாலும்
ராம கமல பத்ராஷ-சுந்தர -35-8- என்று அசாதாரணமான கண் அழகாலும்
என்னுடைய பர்த்தாவைக் கொன்ற பெருமாள் இவர் என்று அறிந்தாள்-என்று சௌலப்யத்தில் ஒரு யோஜனையும்
ஸூ சம்வருதம் பார்த்திவ லஷணைச் -கிஷ்கிந்தா -24-28-என்று சௌலப்ய சிஹ்னங்களாலே மறைந்து இருக்கச் செய்தேயும்
சகார -உம்மைத் தொகையால் -ஸூ சிதமான பரத்வ குணங்களாலும்
யதா புண்டரீக மேவமஷிணீ-சாந்தோக்யம் -2-6-7-என்று பரத்வ ஸூ சகமான திருக் கண்களாலும்
கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் -திருவாய் -4-5-10-என்று
நிழல் எழுகிற புருஷ பிரதான்யத்தாலும்
அயம் ச காகுத்ச்த இதி பிரஜாஜ்ஞே -கிஷ்கிந்தா -24-28-என்று
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -பெரியாழ்வார்-1-1-7- என்று
இச் சக்ரவர்த்தி திருமகனார் அப்பர வஸ்து தான் என்று அறிந்தாள் என்று பரத்வத்திலே ஒரு யோஜனையும் இ றே –
அவ்விரண்டையும் சேர்த்து யோஜிக்கிறது-

வியாக்யானம் –
1-த்வம் –
இவளுடைய பர்த்ரு பக்தி இருக்கிறபடி
ராஜாக்களையும் அகப்பட த்வங்கரிக்கிறாள்
-தெய்வம்  தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் -அரசனையும் நீ என்கிறாள்
2-த்வம் –
மேலே அப்ரமேயச்ச என்று தொடங்கி ஏறப் புகுகிற குணபாரத்துக்கு அதிஷ்டானம் யுன்டாம்படி ஆச்ராயம் தன்னைப் பாரிக்கிறாள்
3-த்வம்  –
குணா நாமாகரோ மஹான்-கிஷ்கிந்தா -15-21- என்கிறபடியே
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணகணங்கள் அடைய ஒரு சிறாங்கை யாம்படியான ஸ்வரூபத்தின் கனம் இருந்தபடி  என்-
4- த்வம் –
ராவண துந்துபி ப்ரப்ருதிகளை அகப்பட தலை அழித்த வாலியைக் கொன்று வென்றி கொண்டு ஒன்றும் செய்யாதாரைப் போலே நின்ற நிலை என் தான் –
5- த்வம் –
வாலிக்கு அஞ்சிக் கிடம் கடைந்து கிடந்த மகா ராஹருக்கு அகப்பட வெற்றி  கொடுத்து சரணாகத வத்சலரான நீர்
6- த்வம் –
ஸ்திரீ பாலர்களான நாங்களும் அகப்பட மதியாதே வந்து கிட்டும்படியான நீர்
7- த்வம் –
வஸ்துவை வஸ்த்வந்தரம் ஆக்குமா போலே வாயார வைய வந்த என்னை வாழ்த்தும்படி பண்ணி வைத்த நீர்-

நீ வாழ்த்துகைக்கு ஒருப்பட்டாய் ஆகில் அது தன்னைத் தொடங்கல் ஆகாதோ -என்ன –
1-அப்ரமேய –
உம்மையும் அறியாதே என்னையும் அறியாதே முகம் கொள்ளலாமோ என்று பார்த்தேன்
அது முகம் கொள்ள ஒண்ணா தாய் இருந்தது
2-அப்ரமேய –
நானே அன்று
வேதாஹம் -புருஷ ஸூ க்தம்-என்று தொடங்கின வேதம் அகப்பட மஹாந்தம் -என்றும்
க இத்தா வேத -கடக்க -2-25- என்றும் மீளும் படி அன்றோ உம்முடைய அபரிச்சேத்யத்வம் –
3- அப்ரமேய –
ப்ரமா விஷயம் பிரமேயம் -இ ரே
ப்ரமேயம் ஆகிறது தான் சமயக நுபவம் இ றே
அதாவது -ப்ரத்யஷ அநு மான ஆகம ஜன்ய ஜ்ஞானம் இ றே –
அவை மூன்றுக்கும் விஷயம் அல்லீராய் இருந்தீர்
ந சந்தருசே   திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யதி கச்ச நை நம-தை நா -1-10- என்றும்
கட்கிலீ -என்றும் சொல்லுகிறபடியே ப்ரத்யஷ ஜ்ஞான விஷயம் அல்லீராய் இருந்தீர்
த்ருஷ்ட அநு மானத்தில் வ்யாப்தி க்ரஹணத்துக்கு ப்ரத்யஷ யோக்கியம் அல்லாமையாலும்
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யேதே-என்றும்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா -என்றும்
திருஷ்டாந்தம் இல்லாமையாலும்
சாமான்யதோ த்ருஷ்ட அநு மானத்தில் வ்யாப்தி க்ரஹண தசையில்
சர்வ கர்தரநுகதமாகக்  கர்ம வச்யத்வ துக்கித்வ ஆயாசித்வ அப்ரயோஜன த்வ கின்னத்வாதியான
அபுருஷார்த்தங்கள் வ்யாப்தி பலம் தன்னால் வருகையாலும்
பஷதர்மதா பலத்துக்கு நித்ய நிர்த் தோஷ தர்மி க்ராஹக சுருதி பலத்தாலே த்ரிவித காரணமுமாய்
சகல இதர விலஷணமுமாக அந்ய தைவ சித்திக்கையாலும்  அனுமான ஜ்ஞான விஷயம் அல்லீர்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -தை ஆனா -9- என்றும்
நேதி நேதி -என்றும் யதோ ந வேத மநஸா  சஹை நம நு ப்ர விஸநதி  ததைவ மௌ நம -என்றும்
வேதங்கள் பரிச்சேதிக்க மாட்டாமையாலே ஆகம ஜன்ய  ஜ்ஞானத்துக்கும் விஷயம் அல்லீர் –
4-அப்ரமேய –
பிரமாணங்களுக்கு விஷயம் அல்லீர் என்னும் இடம் சொல்ல வேணுமோ
அப்ரமேயச்ச -சோ அங்க வேத யதி வா ந வேத -என்றும்
தனக்கும் தன் தன்மை அறிவரியானை -என்றும்
ஸ்வதஸ் சர்வஜ்ஞரான தேவர் தமக்குத் தான் பரிச்சேதிக்க விஷயமோ –
5-அப்ரமேயச்ச  –
நித்யத்வாத் கால பரிச்சேதம் இல்லை
விபுத்வாத் தேச பரிச்சேதம் இல்லை
கார்யந்தராபாவாத் வஸ்து பரிச்சேதம்-த்ரிவித சேதனர்க்கும்-த்ரிவித கரணங்களாலும் -த்ரிகாலத்திலும் பரிச்சேதிக்க ஒன்னாதவர் அன்றோ –
6-தவம் அப்ரமேய –
முன்னே வந்து நிற்கும் என் கைக்கும் எய்தா நின் கழல் -திருவாய் -2-9-2-என்கிறபடியே
என் கண் முகப்பே நிற்கச் செய்தேயும் எட்டப் போகிறது இல்லை
7- தவம் அப்ரமேய –
அயம் -என்னும்படி சந்நிஹித தேச வர்த்தமான கால சம்பந்தியாய் இருக்கச் செய்தேயும் -ச -அவன் என்னும்படி விப்ரக்ருஷ்ட தேச காலாந்திர வர்த்திகளைப் போலே அளவிடப் போகிறது இல்லை
8-தவம் அப்ரமேய –
கண்ணிட்டுப் பார்த்த வாறே எளியீராய் இருந்தீர்
நெஞ்சிட்டுப் பார்த்த வாறே அரியீராய் இருந்தீர்
ந சஷூஷா க்ருஹ்யதே  மநஸா து விஸூத்தேந -வியாச ஸ்ருதி-என்கிற பிரமாணம் பொய்யாய் இருந்தது –
9- தவம் அப்ரமேய –
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தனுரூர்ஜிதம் -கிஷ்கிந்தா -19-25- என்று
கையும் வில்லுமாய் எளியீராய் இருக்கிற நீர்
தம்ஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-15-என்று
கையும் சங்க சக்கரங்களுமான பர வஸ்துவாய் இருந்தீர் –
10-தவம் அப்ரமேய –
பரத்வம் எட்ட ஒண்ணாதது   என்று இருந்தோம் –
சௌ  லப்யம் தானும் எட்டப் போகிறது இல்லை
11- தவம் அப்ரமேய –
ஒரு பரிகரமும் இன்றிக்கே தனிமை பட்டால் போலே இருக்கிற நீர்
அநு பாவ விசேஷாத் து சேனா பரிவ்ருதாவிவ -ரகு வம்சம் -1-37-என்கிறபடியே
அபரிமித பரிகரரைப் போலே உட்கொள்ள ஒண்ணாத படியாய் இருந்தீர்
12-தவம் அப்ரமேய –
பித்ரு நியோகத்தாலே தாபசராய் வன வாசம் பண்ணப் போந்தீர்
விராத கர கபந்த வாலி ப்ரப்ருதிகளைக் கொன்று திரியா நின்றீர்
உம்முடைய நினைவும் செயலும் அறுதி இடப் போகிறது இல்லை-

அந்த கரணத்துக்கு எட்ட ஒண்ணாது என்று ஒழிந்தால் பாஹ்ய கரணம் தனக்கு எட்டலாமோ என்று இருந்தோம் –
1- துராசதச்ச –
அதுவும் செய்ய ஒண்ணாத படியாய் இருந்தது
மனசால் கிட்ட ஒண்ணாததையோ சரீரத்தால் கிட்டலாவது
2- துராசத –
விஷ்ணு ராராத்யதே பந்தா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-9- என்றும்
மகா ஜனோ யேன கதஸ் ச பந்தா -பார ஆற -314-19-என்றும் சொல்லுகிற நல் வழியே போவார்க்கு கிட்டலாம் அத்தனை போக்கி
பதஸ் கலிதம் -சம்சார மழை இருளில் வழி தவறின என்னால் -ஸ்தோத்ர ரஹ்னம் -49-என்றும்
பாவியேன் பலகாலம் வழி திகைத்து அலமருகின்றேன்-திருவாய்-3-2-9-என்றும்
வழி கெட்டு நின்றவர்களுக்கு ஒரு காலும் கிட்ட ஒண்ணாததாய் இரா நின்றது
3- துராசத –
ஷத்லு விசாரண கத்ய வசாத நே ஷூ -தாது பாடம் படி
ஸூ ஸூஷ்மம் -முண்ட -1-1-6-என்று ஸூ ஷ்ம த்ரவ்யம் ஆகையாலே ஸ்தூல பதார்த்தம் போலே பொடியாக்க ஒண்ணாது
கதியாய் -நின்ற இடத்திலும் கடக்க வடிக்க என்று பார்த்தால்
விபும் என்று எங்கும் பரந்து உஅன் ஆகையாலே கடக்க வடிக்கப் போகாது
அவசாதனமாய் முடிக்க என்று பார்த்தால்  நித்யம் என்று சர்வ கால சத்தாகையாலே காதா சித்கமான நாசம் பண்ண ஒணாது
ஆக நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூ ஷ்மம் -என்று இருக்கையாலே
இவை மூன்றும் -போடியாக்குவது -தூரத்தில் தள்ளுவது -அளிப்பதோ -செய்ய முடியாது என்றுமாம் –
வாலிவத குபிதரானவர்களும் வந்து அடர்த்து பிரதிக்ரியை பண்ணலாமோ என்று இருந்தோம்
4-துராசத –
அப்படி வருவார்க்கு அணுகவும் கூட ஒண்ணாத படியாய் இருந்தீர் என்றுமாம் –
பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய குதர்க்கங்களாலே தூஷிக்கலாமோ என்னில்
5- துராசத –
தரக்கோ அப்ரதிஷ்ட ஸ்ருதயோ விபின் நா ந சான்ருஷேர் தர்ச நமஸ்தி கிஞ்சித்  தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம் -பார ஆர -314-19- என்றும்
உளன் சுடர் மிகு சுருதியுள் -திருவாய் -1-1-7- என்றும்
வேத குஹையில் ஸூ ரஷிதமாகையாலே
தர்க்காபா சங்களாலே யாதல்
ஒருதலை மாற்றமான சுருதி ஸ்ம்ருதி களாலே யாதல்
அவிசால்யராய் இருந்தீர் -என்றுமாம் –

இப்படி அப்ரமேயத்வ துர்த்தர்ஷத் வங்களாலே த்ருப்தராய்
பரதா ராஜ்யங்களைப் பறித்து ஆளுவதாகக் கொன்றீர் என்று இருந்தோம் –
1- ஜிதேந்த்ரியச்ச –
அப்படி அன்றியிலே மகா ராஜார்க்கு கொடுத்த படியாலே விஷய சபாலர் அன்றியிலே இருந்தீர் –
2- ஜிதேந்த்ரிய –
இந்த்ரியங்களும் அடங்காதே கண்ட விஷயங்களிலே சபலங்களாகை அன்றிக்கே
அவை உம்முடைய கீழே அடங்கும்படி அமுக்கி ஆள வல்லீராய் இருந்தீர்
3-ஜிதேந்த்ரிய –
யாதேனும் ஒரு புருஷனும் ஏதேனும் ஒரு ஸ்திரீயைக் கிட்டினால் ஏறிட்டுப் பார்க்கக் கடவதாய் இ re இருப்பது
அப்படி இருக்க
ந ராம பரதா ராமச்ச சஷூர்ப் யாமபி பச்யதி -அயோத்யா -72-49-என்கிறபடியே
இத்தனைப் போது நான் நிற்கிற விடத்தில் முகம் எடுத்துப் பாராதே நிற்பதே -என்ன விரக்தியோ இவர் -என்கிறாள்
4-ஜிதேந்த்ரியச்ச –
பச்யத்ய சஷூஸ் ஸ்ருணேத்ய கர்ண -அயோத்யா -72-49- என்றும்
அபாணி பாதோ ஜவனோ க்ருஹீதா -சவே -3-19- என்றும்
சர்வேந்த்ரியை ரபி வினா சர்வத்ர பச்யதி -என்றும்
நாட்டோபாதிக்கு அவை படைத்தீர் அத்தனை போக்கி நாட்டாரைப் போலே இந்த்ரியாதீ நப்ரவ்ருத்தி இன்றியிலே இருந்தீர் என்றுமாம்
துர்க்ரஹம் மநசாப் யந்தைரிந்த்ரியைரபி துர்ஜயம் -என்றும்
மனன் உணர்வளவிலன் பொறி யுணர்வவையிலன்-திருவாய் -1-1-2- என்றும் சொல்லுகிறபடியே
நாட்டாருடைய பாஹ்யாந்தர கரணங்களுக்கு  எட்ட ஒண்ணாத படியாய் இருந்தீர் -என்னவுமாம் –
5-தவம் ஜிதேந்த்ரிய –
அஹல்யாயை ஜாரஸ் ஸூ ரபதிர பூதாத்மத நயாம் பிரஜா நாதோயா சீத பஜத குரோ ரிந்துரபலாம் -பிரபோத சந்த்ரோதய நாடகம் -இத்யாதிப் படியே
எங்கள் மாமனாரான இந்த்ரன் அஹல்யா ஜாரனானான்
அவனுக்கு மேலான ப்ரஹ்மா ஸூ தாபி லாஷம் பண்ணினான்
பிரகாசகனான சந்தரன் குரு தாரத் ரோஹியானான்
ஆதித்ய புத்ரரான மஹா ராஜரும் இந்திர புத்ரரான வாலியும் என்னளவில் பட்ட பாடு இது –
விஸ்வாமித்திரன் மேனகா சபலனானான்
இப்படியே நாடு இருந்ததே குடியாக அகப்படா நிற்க -நீர் ஒருவருமே காணும் விரக்தராய் இருந்தீர் –
இந்த்ரியை காமவ்ருத்த சண் க்ருஷ்யசே மனுஜேச்வர-கிஷ்கிந்தா -17-33-என்கிறபடியே
ராஜ்ய தாரங்களை விட்டிருக்கிற நீர் அந்த நசையாலே வந்தீரோ என்று இருந்தோம்
6- ஜிதேந்த்ரிய
அவற்றில் நேராக   நிஸ் ப்ருஹராய் இருந்தீர் –

இப்படி விரக்தராய் இருக்கிறவர் நம்மை நலிவான்   என்-அதார்மிகரோ என்றிருந்தோம் –
1-உத்தம தார்மிக
இந்த வியாபாரம் எல்லாம் பரார்த்தமாக உபகரிக்கை யாய் இருந்தது –
2- உத்தம தார்மிக –
தனக்கு என்று செய்யுமவன் அதார்மிகன் –
தனக்கும் பிறர்க்கும் என்று செய்யுமவன் மத்யமதார்மிகன்
பிறர்க்கு என்று செய்யுமவன் உத்தம தார்மிகன் –
அன்றிக்கே
தார்மிக -உத்தார்மிக -உத்தர தார்மிக -உத்தம தார்மிக
தார்மிகர் ஆகிறார் -தர்ம சம்பந்திகள் -அதாவது
வர்ணாச்ரமா சாரவதா -ஆராத்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-9-என்று வர்ணாஸ்ரம தர்ம சமாராத்யர் ஆகை-
உத்தார்மிகர் ஆகையாவது -தமேவம் வித்வான் அம்ருத இஹ   பவதி நான்ய பந்தா -புருஷ ஸூகதம் -என்கிறபடியே
பக்தி மார்க்கத்தாலே பஜ நீயராய் இருக்கை
உத்தர தார்மிகர் ஆகையாவது -சரணமஹம் ப்ரபத்யே -ச்வே-6-18- என்கிறபடியே சர்வ லோக சரண்யர் ஆகை
உத்தம தார்ம்கர் ஆகையாவது
தே நா நுக்ரு ஹீதோ பர்மா லோகம் கச்சதி -என்றும்
உபாயோ குருரேவ ஸ்யாத்-என்றும் புருஷகார வசீயராகை
தார்மிகத்வம் ஆவது சாமான்ய தர்ம நிஷ்டத்வம்
உத்தம தார்மிகத்வம் ஆவது -அசாதாரண நிஷ்டத்வம்
சாமான்ய தர்மம் ஆவது -ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -சுந்தர -38-14-என்று நொந்தாரைக் கண்டால் ஐயோ என்று இருக்கை
அசாதாரண தர்மம் ஆவது -குலோசிதமிதி ஷாத்ரம் தர்மம் ஸ்வம் பஹூ மந்யதே -அயோத்யா -1-16- என்றும்
வதச்ச தர்ம யுத்தேன ஸ்வ ராஜ்ய பரி பந்தி நாம் -ஷத்ரியாணாமயம் தரமோ யத் பிரஜா பரிபாலநம் -என்ற
தன்னை அடைந்தவர்களுக்கு ஓர் ஆபத்து யுன்டானால் மார்பிலே அம்பேற்று பரிஹரித்துக் கொடுக்கை
ஆகையாலே வாலியோடு பொருது மகா ராஜரை ரஷிக்கையாலே தர்மிகர் ஆனவளவன்றிக்கே
உத்தம தார்மிகராய் இருந்தீர் -என்றுமாம்
3-உத்தம தார்மிக –
ஆர்த்தரான மகா ராஜரை ரஷித்து
ராஜபிர்த் ருதண்டாச்து க்ருத்வா பாபா நி மானவா -கிஷ்கிந்தா -18-32- என்றும்
தஸ்ய தண்டோ வத ஸ்ம்ருத -கிஷ்கிந்தா -13-23-என்று
வத தண்டத்தால் பூதனாக்கின படியாலே உத்தம தார்மிகராய் இருந்தீர் -என்றுமாம் –

ஒரு ஸ்ரேயஸ் சாதனமான தர்மமேயாய் பல பர்யந்தம் அன்றோ -என்று இருந்தோம்
1-அஷய்ய கீர்திச்ச –
தஸ்ய நாம மஹத்யச-தை ணா -1-9- என்றும்
நிகரில் புகழாய் -திருவாய் -6-10-10- என்றும் சொல்லுகிறபடியே மன்னு பெரும் புகழாய் இருந்தீர்
2- அஷய்ய கீர்திச்ச –
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத புகழை யுடையீராய் இருந்தீர்
அதாவது  பிரபலனான வாலியைக் கொன்று தேடித் படைத்த புகழுக்கு மறைந்து நின்று கொன்றீர் -என்றும்
நிரபராத திரியக் வதம் பண்ணினீர் -என்றும்
நிஷ் பிரயோஜன வ்யாபாதனம் பண்ணினீர் என்றும்
இப்புடைகளில் அநேகம் கண்ணழிவும் சொல்லி அழிக்க லாமோ என்று பார்த்தோம்
ராஜாக்களுக்கு வேட்டையும் மறைந்து  நின்று கொல்லுகையும் நீதி என்றும்
ஸூ ஹ்ருத்துமாய் சரணாகதனானவன் பக்கலிலே குற்றம் செய்கையாலே சாபராத வதம் பண்ணினோம் என்றும்
ஜனபத ஹிதார்த்தமாக துஷ்ட மிருக வதம் பண்ணுகையாலே சப்ரயோஜன வ்யாபாதனம் பண்ணினோம் என்றும்
இத்திக்கு களிலே நிருத்தரமாக உத்தரம் சொல்லிப் பரிஹரித்த படியாலே எங்களாலும் அழிக்க ஒண்ணாத புகழை யுடையீராய் இருந்தீர்-

இப்படி மாறாத புகழ் படைக்கைக்கு அடியென்-என்று இருந்தோம் –
1-விசஷணச்ச -அதி சமர்த்தர் –
அதுக்கடியான கார்யங்களில் முன்னடி பார்த்துச் செய்யும்படியான நிரூபகருமாய் இருந்தீர் –
2- விசஷணச்ச –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -முண்ட -1-1-10- என்றும்
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பால க்ரியா ச  -ச்வே -6-என்று
சஹஜ சர்வஜ்ஞரான உமக்கு இது ஏற்றமோ –
3- விசஷணச்ச –
நீர் சொன்னவற்றுக்கு நாங்கள் குற்றம் சொன்னால்
உத்தரோத் தர யுக்தௌச வக்தா வாசஸ்பதிர் யதா -அயோத்யா -1-17-என்கிறபடியே
அவை ஒழிய மேலே மேலே வார்த்தை சொல்லும்படியான பேர் அறிவாளராய் இருந்தீர்
4- விஷஷண-
சஹஜ சாத்ருச்யத்தாலே இலக்கு மாறாடி ஆஸ்ரித வதம் பிரவாதபடி கழுத்திலே மாலை கட்டி விடுவதே -இது என்ன கூர்மை தான் –
5-விஷஷண–
நீர் தாம் அப்ரமேயராய் அறிய ஒண்ணாதபடி இருந்தீர் ஆகிலும் நீர் தாம் எல்லாம் அறிவீராய் இருந்தீர் –
6-விஷஷண–
ஏகாரிமைத்ரியாகையாலே மஹா ராஜர்  நமக்குத் துணையாவார் என்றும்
ராவண மைத்ரியாலே வாலி துணை யாகான் என்றும் நிச்சயித்து
இவரைக் கூட்டி -அவனை அழித்த படியினாலே
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் இவ்வுலகத்து எல்லாம் அறிவீராய் இருந்தீர்  -பெரிய திருமொழி -4-9-6-

இப்படி விசஷணர் ஆனால்
சத்ரோ சேஷம் ந சேஷயேத்-என்றும்
சபுத்ர பௌத்ரம் சாமாத்யம் சமித்ரஜ்ஞாதி பாந்தவம் ஹத்வா -பால -15-27-என்றும் சொல்லுகிறபடியே
வசநா நு ரோதம் பண்ணி ஒட்டின அங்கதாதிகளும்  நிரந்வயமாக முடிப்பிக்கிறீரோ என்று இருந்தோம்
1-ஷிதி ஷமாவான் – புவிப் பொறை யாளர் –
பொறுமையிலும் பூமியாய் இருந்தீர்
வாலியைக் கொன்ற  சீற்றம் மாறாதே நிற்கிற நிலையிலே நானும் அங்கதனும் நெற்றியில் பேன் போலே
முன் வந்து நின்றால் குடிக் கொலையாக அறுக்க ப்ராப்தமாய் இருக்க
எங்களைப் பொறுப்பதே
2-ஷிதி ஷமாவான் –
ஷமயா ப்ருதிவீ சம -பால -1-18/சுந்தர -35-90-என்கிறபடியே
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமிப் பரப்பில் உள்ள பொறை எத்தனையும் உம ஒருவர் பக்கலிலுமாய் இருந்தது
3- ஷிதி ஷமாவான் –
முற்பட நெஞ்சில் குற்றம் கிடந்தது பின்பு பொறுத்த தாகை யன்றிக்கே
பொறுமையே நிரூபகையான பூமியின் போரையே இருந்தது
4- ஷிதி ஷமாவான் –
பூமிப் பரப்புக்காகப் பண்ணக் கடவ பொறுமையை என் ஒருத்தி அளவிலும் பண்ணுவதே என்றுமாம் –
5- ஷிதி ஷமாவான் –
பூமார்த்தத்திலே மதுப்பாய் என் ஒருத்தி அளவிலே பண்ணின பொறுமை பூமிக்காகப் பொறுமை இருந்தது என்றாகவுமாம்-

என்னளவில் இப்படி பொறுமை பண்ணுகைக்கு அடி என்-என்று இருந்தோம் –
1-ஷத ஜோபமாஷா  -ரத்தத்தில் சிவந்த கண்கள் –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திரு -7-2-9-என்று
சர்வ ரஷகத்வ ஸூ சகமான இக்கண்ணின் வை லஷண்யம் இருந்த படி என் தான் –
2-ஷத ஜோபமாஷா-
வாலியைக் கொன்ற பொது சீற்றத்தால் பிறந்த சிவப்பு இன்னமும் மாறாதே இருக்க -என்னை முனியாதே பொறுப்பதே -என்கிறாள் –
சர  ஏணைகேந -பால -1-69-என்று வாலியை ஓர் அம்பாலே கொன்றீர் என்று கேட்டோம் –
அங்கன் அன்றியிலே-
ராமோ ரக்தாந்த லோசந -யுத்த -21-13- என்று -கடைக் கண் சிவந்து இத்தனையாய் இருந்தீர் –
3- ஷத ஜோபமாஷா-
ரக்தாஸ்ய நேத்ர பாணி -என்றும் -த்ரிதாம்ர-சுந்தர 35-17- என்றும்
கண்ணில் சிவப்பும் சாமுத்ரிக லஷணமாய் இருந்தபடியால்
இன்னமும் மேல் சார்வ பௌம ராய் ஆள்வீர் என்று தோற்றி இரா நின்றது –
4-ஷத ஜோபமாஷா-ஷதத்தாலே -ஆயுதத்தாலே -பிறந்தது இ றே ஷதஜம் ஆகிறது
அப்படியே யதா கப்யாசம் புண்டரீகமேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-7-என்று
ஸூ ப்ரசன்னதா வளமான உம்முடைய கண்ணுக்கு சிவப்பு ஸ்வா பாவிகம் அல்ல
கோபத்தாலே வந்தேறி என்று தோற்றி இருந்தது -என்றுமாம் –
5-ஷத ஜோபமாஷா-
இக்கண் பிராட்டி பிரிவாலே வந்த சோகச்ருபத நத்தாலே சிவந்ததோ
மஹா ராஜர் பக்கல் வாத்சல்யத்தாலே சிவந்ததோ
இத்தனை யாலும் சிவந்ததோ -தெரிகிறது இல்லை –

இதிலே
அப்ரமேயச்ச -துராசதச்ச -ஜிதேந்த்ரியச்ச -என்று தொடங்கி
பதம் தோறும் சகாரம் இட்டாள்-அது என் என்னில் –
இவற்றில் ஓர் ஒரு குணங்களே இவருடைய பெருமைக்குப் போந்திருக்க
இத்தனை குணங்களும் சேர்ந்து இருந்தால் சொல்ல வேணுமோ என்கைக்காக –
அன்றிக்கே
இச் சகாரங்களால் புறம்பு ஓர் ஒரு குணம் ஓர் ஆஸ்ரயம் தனக்குக் கிடையாதே இருக்க
இத்தனை குணங்களும் இவ் வாஸ்ரயத்திலே சேரக் கிடப்பதே -என்கிறாள் ஆகவுமாம் –

ஆனால் –
அநேக பதங்களிலே சகாரம் இட்டாள் –
ஷிதி  ஷமாவான் -ஷதஜோபமாஷ-என்கிற பதங்களிலும் சகாரம் இட வேண்டாவோ
இடாத போது ரீதி  பங்கம் என்று குற்றம் ஆகாதோ என்னில் ஆகாது –
கீழ்ப் பதங்களிலே அப்ரமேயத்வாதி குண ததாஸ்ரய சம்பந்த மாத்ர விவஷையாலே சொன்னாள்-
ஷிதி  ஷமாவான்-என்கிற பதத்தில் பஞ்சாசத் கோடி விச்தீரணை யான பூமிப் பரப்பில் யுள்ள ஷமா குணம் அடைய இது ஒரு ஆஸ்ரயத்தில் அடங்கிற்று என்றும்
மதுப்பிலே பூமார்த்தத்தாலும் ஆஸ்ரயத்தில் அடங்காத படியான குண ப்ராசுர்யத்தை அநு சந்தித்த படியாலே –
இனி இவ் வாஸ்ரயத்தில் குணாந்தரங்களுக்கும் இடம் இல்லை என்று அறுதி இட்டு பூர்வோத்தர குணங்களை மறந்த படியாலே சமுச்சயித்தில் இளல் என்றாககவுமாம்-
அன்றியிலே
ஷமாவான் -என்று பெருமாளுடைய பொறையுடைமையை அநு சந்தித்த வாறே நாட்டார் பொறுப்பார்கள் என்று நிர்ப்பந்தி யாதே போனால் ஆகவுமாம் –

இது அப்படி ஆகிறது
-ஷதஜோபமாஷ-இதில் சகாரா ஹானிக்கு செய்யும் படி என் என்னில்
-ஷதஜோபமாஷ–என்று
சரீர குணமாய் பிந்நாதி கரணமாகையாலே சமுச்சயிக்க வேண்டுவது இல்லை என்று பரிஹாரம் ஆககவுமாம் –
அன்றிக்கே
த்வம் அப்ரமேயச்ச -துராசதச்ச -ஜிதேந்த்ரியச்ச -உத்தம தார்மிகச்ச -அஷய்ய கீர்த்திச்ச -விசஷணச்ச-என்று பிரதமா விபக்தியாய் -முதல் வேற்றுமையாய்
பரோஷ  நிர்தேசமாய் -படர்க்கையாய் –
ஏக ரீதியாகையாலே ஒருபடிப்பட்டு இருக்கையாலே சகாரா பேஷை உண்டு
இங்கு
த்வம் -ஒபாதி ஷத ஜோபமாஷை -என்று சம்புத்த் யந்தமாய் முன்னிலையாலே ரீத் யந்திரம் ஆகையாலே சமுச்சய அபேஷை இல்லை என்றாகவுமாம் –

த்வம் அப்ரமேயச்சேத்யாதி –
ஸ்ரீ வால்மீகி பகவான் ஜ்ஞான சக்தி பலைச் வர்ய வீர்ய தேஜாம் ஸ்யசேஷதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-என்று
பரத்வ அநு பந்தியான ஷட் குண்யத்துக்கு எதிர் தட்டாக கீழே
ஆன்ரு சம்சயம நுக்ரோசா ஸ்ருதம் சீலம் தம சம ராகவம் சோபா யந்த்யே தே ஷட்  குணா புருஷோத்தமம் –அயோத்யா -33-12-என்று
சௌ லப்ய அநு பந்தியாக ஒரு ஷட் குண்யம் காட்டினான் –
பிறரை ஹிம்சிக்காமை -இரக்கம் -ஆர்த்த  நாதம் கேட்கை-சௌசீல்யம்-வெளி இந்த்ரியங்கள் அடக்குகை-மனத்தை அடக்குகை -என்ற ஆறும் -காட்டினான் –
இப்போது அபஹத பாப்மத்வாதி குணா ஷட்கத்துக்கு எதிர் தட்டாக அப்ரமேயத்வாதியாலே ஒரு குணாஷ்டகம் காட்டுகிறான் –
அபஹத பாப்மா–விஜரோ–விம்ருதயு -விசோக-விஜிகத்ச -அபிபாச -சத்யகாம -சத்ய சங்கல்ப -ஆகிய எட்டு குணங்களுக்கு எதிர் தட்டான எட்டும் காட்டுகிறான் –

———————————————————————————————————————————————————————————————-

நாந் ருக்வேத விநீதஸ்ய நாயஜூர்வேத தாரிண
நா சாமவேத விதுஷ சக்யமேவம் ப்ரபாஷிதும் –கிஷ்கிந்தா -3-28-

அந் ருக்வேதவி நீ தஸ்ய-ருக் வேதத்தில் சிஷிதன் ஆகாதவனுக்கு
அயஜூர் வேத தாரிண-யஜூர் வேதத்தை தரித்து நில்லாதவனுக்கும்
ந -முடியாது
அ சாமவேத விதுஷா-சாம வேதத்தை அறியாதவனுக்கும்
ந -இப்படி பேச முடியாது
ந  சக்யம் -முடியாது
ஏவம் -இப்படி
ப்ரபாஷிதும் -பேசுவதற்கு-

நாந் ருக்வேத விநீதஸ்ய –
அனுஷ்டேயார்த்த ப்ரகாசகமான ருக்வேதம் சிஷிதன் ஆனவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல ஒண்ணாது-

நாயஜூர்வேத தாரிண-
யஜூர் வேதம் பாடதாரணம் தானே அரிது
அத்தை அறிந்தவனுக்கு அல்லது இவ்வார்த்தை சொல்ல ஒண்ணாது –

நா சாமவேத விதுஷ-
சாமவேதம் காந விசேஷங்கள் அறிய வரிது-
அது அறிந்தவனுக்கு அல்லது இப்படி வார்த்தை சொல்ல முடியாது

சக்யமேவம் ப்ரபாஷிதும் –
இத்தை எல்லா வற்றையும் அதிகரித்தவனுக்கு அல்லது
நம் முன்னே இப்படி வார்த்தை சொல்லல் ஆமோ
என்றார் இ றே பெருமாள் –

—————————————————————————————————————————————————————————

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

One Response to “ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ-கிஷ்கிந்தா -1-71-/பத்ம சௌகந்தி கவஹம்-கிஷ்கிந்தா -1-115-/த்வம் -அப்ரமேயச்ச -துராச தச்ச-கிஷ்கிந்தா -24-31-/நாந் ருக்வேத விநீதஸ்ய -கிஷ்கிந்தா -3-28- – —”

  1. Hema B Says:

    hi, I’m not able to understand he manipravala tamil. Can I help you me in understanding these in normal tamil? How can I contact you. my email id is bhema30@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: