ஸ்ரீ பாலராமானுஜனுக்கும் நம் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜருக்கும் -ஒற்றுமைகள் -ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள்–

1-இருவரும் திருவவதரித்தது சிறைக்கூடத்தில்
அமரவோடு உயரச் சென்று அறுவர் தம் பிறவி யஞ்சிறையே-திருவாய்மொழி -1-3-2-இருள் மலிந்த இருள் தரும் மா ஞாலத்திலே -இருவரும் திருவவதாரம்
இருள் நாள் பிறந்த அம்மான் -திருமங்கை ஆழ்வார்
வேண்டித் தேவர் இரக்க-வீங்கிருள் வாய் வந்து பிறந்ததுவும் -நம் ஆழ்வார் –

3-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -அவதாரம்
ஸ்வாமியும் ஞானச் சுடர் விளக்கத்தைக் காட்டிக் கொண்டு அவைவரும் வியக்க திருவவதரித்தார் –
4-பிறந்த இடம் ஓன்று –வடமதுரையில் –
இளமையில் வளர்ந்த இடமும் ஓன்று –திருவாய்ப்பாடியில்
பின்பு வளர்ந்த இடம் ஓன்று –த்வாரகையில்
நம் ஸ்வாமி யும் ஸ்ரீ பெரும் பூதூரில் பிறந்து
இளமையில் ஸ்ரீ காஞ்சி புரத்தில் வளர்ந்து
பின்பு ஸ்ரீ ரெங்கம் திரு நாராயண புரம் போன்ற திவ்ய தேசங்களில் வளர்ந்து அருளினார்
அன்றிக்கே
திரு மந்த்ரத்திலே பிறந்து -ஸ்வரூப உணர்ச்சி பெற்று
த்வயத்திலே வளர்ந்து  -அனுசந்தானம் -அனுஷ்டானம் -செல்வ வாழ்ச்சி –

5-மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்  சிக்கென வந்து பிறந்து நின்றாய் -பெரியாழ்வார் -5-3-1-
ஸ்வாமி திருவவதரித்த இவ்வுலகிலே பலரும் ஒக்கப் பிறக்கிறார்கள்

6- வாஸூ தேவோ வஹன் க்ருஷ்ணம் ஜாநு மாத்ரோ தகோ யயௌ-பேர் ஆழமான பெரு வெள்ளம்  முழம் தாள் அளவாக வற்றிப் போனது போலே
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -சம்சாரம் வற்ற தொடங்கிற்று ஸ்வாமி தோன்றிய அப்பொழுதே –
7-இடக்கை வலக்கை அறியாத ஆயர்கள் உடன் ஒரு நீராக கலந்து பழகினான்
ஸ்வாமியும் மிகு ஞான சிறு குழவியாய் அறிவிலா மனிசரோடு கலந்து பழகினார்
8-அவன் ஆசூர பிரக்ருதிகள் உடன் வாழ்ந்து இருந்தால் போலே ஸ்வாமியும் யாதவ பிரகாசாதிகள் உடன் வாழ்ந்து இருந்தார்

9-கம்சப்ரயுக்தா கில கபி மாயாபூதனை மாயை என்றார் தேசிகர் யாதவாப்யுதத்தில்
பிரகிருதி மாயை ஸ்வாமி உடைய அளவற்ற பெருமையால் மாய்ந்து ஒழிந்தது

10-கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
நரகம் ஸ்வர்க்கம் செல்வது கள்ளச் சகடம் ஸ்வாமி திருவடி பலத்தால் அது ஒழிந்து அர்ச்சிராதி மார்க்கம் கிட்டுமே

11-யமளார்ஜூன பங்கம்
த்வந்த அதீதோ விமத்சர-த்வந்த மோகன பாரத-த்வைந்தர் விமுக்தாஸ் சுக துக்கம்  சம்ஜ்ஞை
இன்பு துன்பு -அஹங்காரம் மமகாரம் -காம குரோதம் -புண்ய பாபம்-ஆகிய இரட்டைகள் ஸ்வாமி திருவடி சம்பந்தத்தால் போம்-

12-வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஸ்வாமியும் -1-ஸ்ருதிகள் -2–ஸ்ம்ருதிகள் -3–இதிகாசங்கள் -4-புராணங்கள் -5-பாஞ்சராத்ரங்கள் –6-அருளிச் செயல்கள் -7-ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகள்-ஏழும் தம் திருவாக்கில் அன்பர்களுக்கு காட்டினார்

13-காளியன் யமுனை ஆற்றில் கலக்கினது போலே புற மதத்தவர்கள் வேதத்தை கலக்க ஸ்வாமி சத்துக்களுக்கு உப ஜீவனம் ஆக்கின படி
யமுனை ஸ்தானத்தில் வேதம்
காளியன் ஸ்தானத்தில் குதர்க்கவாதிகள்
கண்ணன் ஸ்தானத்தில் ஆச்சார்யர் –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -யமுனை போலே வேதமும் பகவத் சம்பந்தம் மாறாமல் இருக்கும்-

14-ஐந்தலை நாகம் காளியன் போலே
ஈஸ்வரனே இல்லை என்னுதல் ஒரு தலை
ஈஸ்வரன் உண்டு -அவன் அனுமானத்தால் சித்திப்பவன் -சாஸ்த்ரத்தால் சித்திப்பவன் இல்லை -இரண்டாம் தலை
சாஸ்த்ரங்களைக் கொண்டே ஈஸ்வரனை அங்கீ கரித்தாலும் அவனுக்கு குணங்களோ விக்ரஹங்களோ இல்லை -மூன்றாம் தலை
ஈஸ்வரன் ஒருவன் இல்லை பலர் உண்டு என்னுதல் நான்காம் தலை
பிரபஞ்சமே இல்லை சர்வம் ஸூ ந்யம்-எனபது ஐந்தாம் தலை
நாவலிட்டு உழி தருகின்றோம்நமன் தமர் தலைகள் மீதே -கூத்தாடப் பெறுவோம்

15-கேசி -ஹந்தம்– போலே
இந்த்ரியாணி ஹயா நா  ஹூஇந்த்ரியங்கள் குதிரை -ஜிதேந்த்ரியராய்
காமாதி தோஷ ஹர மாத்மபதா ச்ரிதா நாம் -என்றும்
மதன கதநைர் ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-என்றும் சொல்லும்படி வாழ்ந்தவர் ஸ்வாமி-

16-விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே
கன்று கொண்டு விளங்கனி எறிந்து
முள்ளைக் கொண்டு முள்ளை களைவது போலே பரஸ்பர வயாஹதங்களாய் இருப்பதை காட்டி புற மத நிரசனம் பண்ணி அருளினார் ஸ்வாமி –

17-பெருமழையில் நின்றும் கண்ணன் காத்து அருளினது போலே
அவிவேக க நாந்த திங்முகே  பஹுதா சந்தத துக்க வர்ஷிணிபவ துர்த்தி நே –ஸ்தோத்ர ரத்னம் -49-
சம்சார பெரும் மழையில் நின்றும் காத்து அருளினார் நம் ஸ்வாமி
கண்ணன் ஏழு நாள் காத்தனன்
ஸ்வாமி காப்பது ஏழேழ்  பிறவிக்கும் –

18-கண்ணன் நப்பின்னை பிராட்டியை திருமணம் -ஏழு எருதுகள் நிரசனம்
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள ஸூத்திரம் போன்ற திருமந்தரம் -சேதனர்களுக்கு  கட்டி திருமணம் செய்ய
காமம் -குரோதம் -லோபம் -மோஹம் -மதம் -மாத்சர்யம் -அசூயை -ஏழு விரோதிகளையும் தொலைத்து   அருளினார் நம் ஸ்வாமி

19-இரண்டு மல்லர்களை முடித்தது போலே
நீர் நுமது என்றிவை மாய்த்து அருளினார் ஸ்வாமி

20-குவலயா பீடம் முறித்தது போலே -மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ -பொய்கையார் போலே இந்த்ரியங்கள் துஷ்டத் தன்மை ஒழித்து அருளினார் ஸ்வாமி

21-கண்ணன் மாலாகாரர் இடம் புஷ்பம் பெற்று உகந்தால் போலே
ஸ்வாமி யும் அஹிம்சா பிரதமம் புஷ்பம் -புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ -சர்வபூத தயா புஷ்பம்
ஷமா புஷ்பம் விசேஷத-ஜ்ஞானம் புஷ்பம் தப -புஷ்பம் த்யானம் புஷ்பம் தவைதச -சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத் -சிஷ்யர்கள் பக்கல் செழித்து வளரக் காணப் பெற்று களித்தவர் –

22-ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்கராஜம்
தென்னத்தியூர் கழலினைக் கீழ் பூண்ட அன்பாளன் –
அன்னம் வண்டுகள் படிகளும் ஸ்வாமி இடம் உண்டே –சாரப் பொருள்களை விவேகித்து வெளியிடுகிற ஸ்வாமி
துயரறு சுடரடி தொழுது எழு
பல்ல பல்லாஷர்   இரண்டு மகரிஷ்கள் ஹம்ச  பஷிகள் -ஜ்ஞான சுருதி மகா பிரபுவின் கீழ் நிழல் படாமல் –
இவர் ரைக்வரைப் போலே ஞானியா
அன்னமாய் நூல் பயந்தான்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த
சேற்று நீரில் கால் பொருந்தாது போலே
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல்  பொய்ந்நிலத்தே -திருவிருத்தம்
அன்ன நடையான பிராட்டி போலே புருஷகாரம் செய்து அருளுவார் ஸ்வாமி

23-வண்டு -மதுவ்ரதம்
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-என்றும்
தேனை நன்பாலை கன்னலை அமுதை -என்றும்
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -எம்பெருமானையே விரும்பும் நம் ஸ்வாமி

24- வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -குலசேகர ஆழ்வார்
யாழினிசை  வண்டினங்கள்  ஆளம் வைக்கும் -பெரியாழ்வார்
வரிவண்டு தேன தேன என்று இசை பாடும் -திருமங்கை ஆழ்வார்
ஸ்வாமி -யாழினிசை வேதத்தியல் -பண்ணார் பாடல் ஆயிரம் -இதத்தாய் -எங்கள் இராமானுச முனி வேழம் –

25-வண்டு சஞ்சரீகம்
ஸ்வாமி யும் ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ ஸ்ரீ கூர்மம்
புருஷோத்தமம் ச பதரி நாராயணம் நைமிசம் ஸ்ரீ மத் த்வாராவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா
புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி
பதியே பரவித் தொழும் தொண்டர்களில் தலைவர்-

26-வண்டு கர்ப்ப க்ருஹங்கள் எங்கும் புக்கு திரிந்து ரமிக்கும்
ஸ்வாமி யும் மன்னிய தென்னரங்கா புரி   மா  மலை மற்றும்  உவந்திடு  நாள் -அதிகாரச்  செல்வத்துடன் கைங்கர்யம் செய்து வாழ்ந்தார்

27-வண்டு  சோலைகளிலேயே சுழலமிடும்
ஸ்வாமி யும் ஆராமம்  சூழ்ந்த    அரங்கம்-சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -விரையார்  பொழில் வேங்கடம் -சோலைகளில் சுழலமிடுவர்-

28-சமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவபிரகாச  அவரோபிதவான் ஸ்ருதேர   பார்த்தான் நநு ராமாவரஜஸ் ச ஏஷ பூய
யதிராஜ  விம்சதி

சங்கர    கர்வம்   அடக்கிய  சாம்யம்
கோபாலோ  யாதவ வம்சம் மக்னமப்  யுத்தரிஷ்யதி -உடையவரும்    யாத்வபிரகாசரை   உத்தரிப்பித்தவர்
அபார்த்தன் -அர்ஜுன    விரோதிகள்  துரி  யோதநாதிகள்
நேஹ  நாநாஸ்தி கிஞ்சன -இஹ நாநா கிஞ்சன நாஸ்தி
ஏகமேவ  அத்விதீயம் -என்றும்  சுருதி வாக்யங்கள்-இவை போன்ற அபேத ஸ்ருதி வாக்யங்கள்
இனி பேத ஸ்ருதி வாக்யங்கள் –
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நௌ ஈசதே தேவ ஏக -என்றும்
ஜ்ஞாஜ் ஜௌ த்வா வஜா  வீச நீ சௌ-என்றும்
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பரிஷச்வஜாதே தயோரன்ய பிப்பலம் ஸ்வாது அத்தி அனஸ்நன்யோ அபிசாகா சீதி –-என்றும் போன்றவைகள்

வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்று உரைக்கிலே
யஸ்ய பிருதிவி சரீரம் –யஸ்ய ஆத்மா சரீரம் –போன்ற கடக ஸ்ருதிகள் வைத்து சமன்வயப்படுத்தி காட்டி அருளினார் நம் ஸ்வாமிகள்
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
மிதோபேதம் தத்வேஷ் வபிலபதி பேத ஸ்ருதி ரதோ விசிஷ்டைக்யாத்ஐக்ய சுருதி ரபி  ச சார்த்தா   பகவதி
இமா வர்த்தௌ கோப்தும் நிகில ஜக தந்தர் யமயிதா நிரீசோ லஷ்மீச சுருதி பிர பராபி  ப்ரணிததே -என்றும்-சங்கல்ப சூர்யோதயம் -ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்லோக ரத்னம் இது –

யத்யேதம் யதி சார்வ பௌம கதிதம் வித்யாத் அவித்யாதம
ப்ரத் யூஷம் பிரதி தந்திர மந்தி மயுகே கச்சித் விபச்சித்தம
தத்ரை கத்ர ஜடித் யுபைதி விலயம் தத்தன்மத ஸ்தாபநா
ஹேவாக பிரதமான ஹைதுகதா கல்லோல  கோலாஹல -ஸ்ரீ ரகஸ்ய த்ரய சாரம் -ஸ்ரீ தேசிகன்-

எம்பெருமானாரால் விரிவாக நிரூபிக்கப்பட்ட சரீராத்மா பாவம் ஆகிற இந்த பிரதிதந்த்ரத்தை இந்த யுகத்தில்
யாவன் நன்கு தெரிந்து கொள்ளப் பெறுகிறானோ
அப்படிப்பட்ட வித்வான் உடைய முன்னிலையில் மதாந்தரச்தச்தர்கள் எத்தை அட்டஹாசம் செய்தாலும் அவை நொடிப் பொழுதில் தொலைந்து விடும்-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ.P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: