தமஹம் ஹேதுபிர் வாக்யைர் விவிதைஸ் ஸ ந்யதர்சயம்
சாது நிர்யாத்யதாம் ஸீதா ராமயேதி புந புந -யுத்த -17-12-
தமஹம் -தம் அஹம் -அவனைக் குறித்து நான்
ஹேதுபிர் வாக்யைர் விவிதைஸ் -பலவிதமான வசனங்களாலும் காரணங்களாலும்
ந்யதர்சயம் -அறிவித்தேன்
சாது -நன்றாக
நிர்யாத்யதாம் – கொடுக்கப் படட்டும்
ஸீதா -ஸீதா பிராட்டியானவள்
ராமயேதி புந புந -ராம பிரானிடம் –
அவதாரிகை
இத்தால் உனக்கு என் என்னில்
இவன் பண்ணின அபராதத்தைக் கண்டால் நெருப்புப் பட்ட அகத்தில் நின்றும் புறப்படுமா போலே
அப்போதே புறப்பட பிராப்தமாய் இருக்க
அவனுக்கும் ஹிதம் சொல்லி மீட்டு உஜ்ஜீவிப்பிக்க விருந்த பாபிஷ்டன் நான் -என்கிறான் –
தம் –
முதல் ஸ்லோகத்திலே தச் சேஷத்வத்தால் வந்த தோஷம் இ றே சொல்லிற்று
அவ்வளவன்றே இது சஹஸ்ரந்து பிதுர் மாதா கௌரவேணாதிரிச்யதே -பால -4-30- என்று
சர்வேஸ்வரனில் காட்டில் சஹச்ர குணம் அநு வர்த்த நீயையாய் -சர்வ லோக ஜனனீ யான பிராட்டி திறத்திலும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-9-என்றும்
த்விதீயம் மேந்தராத் மானம் -அயோத்யா -4-43- என்றும்
தம் திரு உள்ளத்தில் நினைத்து இருக்கும் பெரிய யுடையார் திறத்திலும் அபசார பரம்பரைகளை பண்ணினவனை –
அஹம் –
இப்படி பாபிஷ்டன் என்னும் இடத்தை அறிந்து வைத்து
அவனை அநாதரியாதே
ஹிதம் சொல்லி இருந்த நான் –
ஹேதுபிர் வாக்யைர் விவிதைர் –
சாம பேதாதி முகத்தாலே நாநாவித வாக்யங்களாலும்
அர்த்தத்த்க்கு அநு ரூபமாய் இருந்துள்ள
கர தூஷண கபந்த வாலி வத முகமான நாநா நித லிங்கங்களாலும்
ந்யதர்சயம் –
அபோதயம் –
உறங்குமவனை உணர்த்துமா போலே உணர்த்திச் சொன்னேன்
போதிதமான அர்த்தம் இன்னது என்கிறது மேல்
சாது நிர்யாத்யதாம் –
நிர்யாதனம் ஆகிறது பிரதானம்
நிர்யாதனம் விதரணம் ஸ்பர்சனம் பிரதானம் -கொடுத்தல் தொடுதல் ஒப்படைத்தல் -நிகண்டு -எண்ணக் கடவது இ றே
சாது த்வமாவது-அநு தப்தனாய் ஆகிஞ்சன்யத்தைப் புரச்கரித்து-சரணம் புக்குக் கொடுக்கை –
ஸீதா-
அவன் உடைமையை அவனுக்கு கொடுக்க வேண்டுமது ஒழிய நீ ஒன்றைக் கொடுக்க வேண்டியது இல்லை –
தம்முடைமைத் தமக்குக் கொடுத்தாலும் அபஹரித்த அம்சத்தை பொறுத்து
இவனாலே பெற்றோம் என்னும் குணாதிகர் -என்ன
தம்முடைமையை நம்மாலே பெற்றோம் என்று இருந்தாலும் நம்முடைய அபராதத்தைப் பொறுக்கக் கூடுமோ என்ன
ராமாய –
ஸ தம் நிபதிதம் பூமௌ சரண்ய சரணாகதம்
வதார்ஹமபி காகுத்ச்த க்ருபா பர்யபாலயத் -சுந்தர -38-34-
என்கிறபடி காகாபராதத்தைப் பொறுத்து ரஷித்தவர் அன்றோ –
இதி புந புந –
அவனுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவன் செய்யுமே என்கிற நசையால் பலகாலும் அறிவித்தேன்
ஒருவன் சாபராதனுமாய் அபேஷையும் இன்றிக்கே ஜ்யேஷ்டனுமாய் இருக்குமவனுக்கு ஹிதம் சொல்லுகை யுக்தமோ என்ன
ஆகேசக்ர ஹணான் மித்ரம் -என்றும் அபி சந்தேஷ்டும் யுக்தம் -என்றும்
துர்க்கதியைக் கண்டால் ஹிதம் சொல்லுகை யுக்தம்
ஆனால் ஒருகால் சொல்ல அமையும்
பலகால் சொன்ன இடம் அவனைத் திருத்தி உஜ்ஜீவிப்பிக்கையில் யுண்டான நசையாலே இ றே –
———————————————————————————————————————————————————————–
ஸ ஸ ந ப்ரதி ஜக்ராஹ ராவண கால சோதித
உச்யமாநம் ஹிதம் வாக்கியம் விபரீத இவௌஷதம்-யுத்த -17-13-
ஸ -அந்த
ஸ ந ப்ரதி ஜக்ராஹ ராவண -ராவணனும் ஏற்றுக் கொள்ள வில்லை
கால சோதித-யமனால் தூண்டப் பட்டவனாய்
உச்யமாநம் ஹிதம் வாக்கியம்-சொல்லப் பட்ட நன்மையான வாக்யத்தை
விபரீத இவௌஷதம்-சாக இருப்பவன் மருந்தைப் போலே-
அவதாரிகை –
மரண உன்முகனானவன் பிஷக்கின் வார்த்தையைக் கொள்ளாதாப் போலே
சாதாரமாக நான் சொன்ன வார்த்தையை ம்ருத்யு ப்ரேரிதனாய்க் கொண்டு பரிக்ரஹித்தான் அல்லன் -என்கிறான் –
ஸ ஸ ந ப்ரதி ஜக்ராஹ –
கார்யம் செய்திலனே யாகிலும்
சொன்ன வார்த்தைக்குச் செவி தாழ்க்கலாமே -அதுவும் செய்திலன்
ராவண –
ப்ராதாவாய் ஹிதஷையான என் வார்த்தையை கால் கடைக் கொண்டு
புதியனாய் சத்ருவாய் இருந்துள்ள காலன் சொன்ன வழியே போகைக்கு ஹேது
அபதே பிரவ்ருத்தனாய் போந்த துஷ் பிரகிருதி யாகையாலே
கால சோதித-
அதுக்கு ஹேது கால சோதிககனாகையாலே கைக் கொண்டிலன்
உச்யமாநம் வாக்கியம்-
த்வாம் து திக் குல பாம்சனம் -யுத்த -16-15-என்று கால் கடைக் கொள்ளா நிற்கச் செய்தேயும்
ஆத்மானம் சர்வதா இஷா -யுத்தம் -16-25-என்று
அவனுடைய உஜ்ஜீவன மாகச் சொன்ன வார்த்தையை –
ஹிதம் வாக்கியம்-
நான் சொல்லிலும் அஹிதமாகில் விடலாம் இ றே
தன்னுடைய உஜ்ஜீவனத்தில் இது ஒழிய உபாயான்தரம் இல்லை
இந்தப் பரம ஹிதமான வார்த்தையை
எது போலே என்னில்
விபரீத இவௌஷதம்-
முமூர்ஷூ வானவன் சமயக் பிஷக்காலே சொல்லப் பட்ட வார்த்தையை கால் கடைக் கொள்ளுமா போலே
முமூர்ஷவ பரேத கல்பா ஹி கதாயுஷோ ஜ நா-யுத்தம் -16-26-என்றான் இ றே கீழே இவன் –
அபராதம் பண்ணிப் போந்த சமயத்தில் விட்டுப் போந்து ஸ்வரூபம் பெற்றேன் அல்லேன்
நான் சொன்ன வார்த்தைக்கு செவி தாழ்த்து மீளப் பெற்றேன் அல்லேன்
அவனை திருத்தி ஜீவிக்க இருந்த எனக்கு ஸ்வரூப ஹாநியே பலித்தது என்று கருத்து –
—————————————————————————————————————————————————
ஸோ அஹம் பருஷித ஸ்தேந தாஸ வச்சாவ மா நித
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத –யுத்த -17-14-
ஸோ அஹம் -அப்படிப்பட்ட நான்
பருஷித -கடுமையாகப் பேசப்பட்டவனும்
ஸ்தேந தாஸ வச்சாவ மா நித -அவனாலே வேலைக்காரன் போலே அவமதிக்கப் பட்டவனுமான
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ தாராம்ஸ்ஸ -பிள்ளைகளையும் மனைவியையும் விட்டு
ராகவம் சரணம் கத -ஸ்ரீ ராம பிரானை சரணம் அடைந்தேன்-
அவதாரிகை –
நான் சொன்ன வார்த்தையை சவீ கரியாமை அன்றியே
ஹிதம் சொன்னதுவே ஹேதுவாக
தானும் பருஷித்து
தன் பரிகரத்தாலும் அவமானம் பண்ணு விக்கையாலே
மற்றும் உள்ள ஔ பாதிகன்களை விட்டு
பெருமாள் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் -என்கிறான் –
ஸோ அஹம் –
இவன் விமுகனாய் இருக்க
இவன் அனர்த்தத்தையே பார்த்து ஹிதம் சொன்ன நான்
ப ருஷத –
ஹிதம் சொன்னதே ஹேதுவாக வாக் வஜ்ரத்தாலே நெஞ்சு புண் படும்படி பண்ணினான்-
தேந –
நான் சொன்ன ஹிதத்தை அநாதரித்த அளவேயன்றிக்கே
ம்ருத்வின் வார்த்தையை ஹிதம் என்று பரிக்ரஹித்தவனாலே –
தாஸ வச்சாவ மா நித-
நான் சொன்னது அஹிதமானால் ஜ்யேஷ்டனான தான் பரிபவித்து விடும் அளவின்றிக்கே
தன்னடியான ப்ரஹச்தனை இடுவித்தும்
தாத க நிஷ்ட வாக்யம் அனர்த்தகம்-யுத்தம் -15-2-என்று கொண்டு இந்த பிரகாரத்தாலே பாலனான இந்த்ரஜித்தை விடுவித்தும் உச்சிஷ்ட போஜிகளானஅடியாரை அவமானம் பண்ணுமா போலே அவமானம் பண்ணப் பட்டேன்
இத்தால் பாபிஷ்டனான ராவணனுக்கும் ஆகாதான் ஒருத்தன் -என்கை-
பிரத்யாசன்னனான ப்ராதாவினுடைய பந்த விபாகம் இதுவாகையாலே அல்லாதாருடைய அளவும் இவ் விழுக்காடு இ றே என்று சோ பாதிதரான பந்துக்களை விட்டு
நிருபாதிக பந்துவான பெருமாளையே பற்றினேன் என்கிறான் உத்தரார்த்தத்தாலே
த்யக்த்வா புத்ராம்ஸ்ஸ –
நிரய நிஸ்தாரகரான புத்ரர்களையும்
இத்தால் பிரபத்தி பண்ணுமவனுக்கு ப்ராப்ய ஆபாசங்களும் பிராபக ஆபாசங்களும் த்யாஜ்யம் என்னும் இடம் தோற்றுகிறது
த்யக்த்வா –
கதவா பிரத்யயத்தாலே பண்ணுகிற ப்ரபத்திக்கு த்யாகம்அங்கம் என்னும் இடம் சொல்லுகிறது –
தாராம்ஸ்ஸ ராகவம் சரணம் கத-
ப்ராதா ச பந்துச்ச பிதா ச மம ராகவ -அயோத்யா -58-31-என்கிறபடியே
விட்ட உறவு எல்லாம் தாமாக வல்லவரைப் பற்றினேன்
அன்யேபி சந்த்யேவ ந்ருபா ப்ருதிவ்யாம் மாந்தாத ரேஷாம் தனயா பிர ஸூதா
கிந்த்வர்த்தம் நாமர்த்தி ததா நதி ஷா க்ருதவ்ரதம் ஸ்லாக்யமிதம் குலம் தே-ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-2-78-என்கிறபடியே
ஆ ஸ்ரீ தருடைய சர்வ அபேஷிதங்களையும் கொடுக்கும் குடிப் பிறப்பை யுடையவனைப் பற்றினேன் -என்றுமாம் –
———————————————————————————————————————————————————————————
நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே -யுத்த -17-15-
நிவேதயத மாம் ஷிப்ரம்-என்னை விரைவில் அறிவியுங்கோள்
விபீஷணம் -விபீஷணன் என்னும் பெயரை யுடைய
உபஸ்திதம்-அவரை வந்து அடைந்து இருக்கிற
சர்வ லோக சரண்யாய -எல்லா உலகோராலும் சரணம் அடையத் தக்கவராய்
ராகவாய-ஸ்ரீ ராம பிரான் பொருட்டு
மஹாத்மநே -பெரும் குணவாளரான-
அவதாரிகை –
என் துர்க்கதியைக் கண்டு பெருமாள் விஷயீ கரிக்கும் படியாக சடக்கென என்
வரவை விண்ணப்பம் செய்ய வேணும் -என்கிறான் –
நிவேதயத மாம் ஷிப்ரம் –
மாம் உபஸ்திதம் நிவேதயத -என்ன வேண்டி இருக்க
பிரதமத்தில் நிவேதயத-என்கிறது -தன்னுடைய த்வரையாலே –
மாம் –
பிரச்யுதோ வா அஸ்மால் லோகாதாகதோ தேவலோகம் -என்கிறபடியே முன்பு பற்றி நின்ற பரிக்ரஹத்தை விட்டு
உத்தேச்யரான பெருமாள் திருவடியில் புகுரப் பெறாதே
ஆகாஸ ஸ்தானனாய்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து நிற்கிற என்னை -திருவாய் -8-5-2
ஷிப்ரம் –
வந்தவனுடைய குணாகுண நிரூபணம் பண்ணி அறிவிக்க வேண்டாவோ -என்னில்
நீங்கள் நிரூபணத்தில் இழிவதற்கு முன்பே நான் முடிவன் –
உங்களுக்கு பழி வாராதபடி சடக்கென அறியுங்கோள்
நீ ஓர் அதிகாரியாய் அறிவிக்க வேண்டாவோ -என்னில்
ராகவாய –
சர்வ அபாஸ்ரயமான ரகு குலத்தில் பிறந்தவர்களுக்கு ஓர் அநதிகாரிகள் உண்டோ
மஹாத்மநே –
ரகு குலத்தார்க்கு ஒரு அநாதிகாரிகள் யுண்டே யாகிலும்
எதிர்தலையில் சிறுமை பாராதே தம் அளவில் விஷயீ கரிக்கும் பெருமாளுக்கு ஆகாதார் யுண்டோ
ராமோ ராமோ ராம இதி -யுத்த 131-10- என்றும்
திர்யக் யோநிக தாஸ் சான்யே-உத்தர -109-33-என்றும்
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி -பெருமாள் திரு -10-10-என்றும் சொல்லக் கடவது இ றே-
இத்தால்
பர வ்யூஹாத்ய வஸ்தாந்தரங்களில் காட்டில் ராமவதாரத்துக்கு யுண்டான நிரவதிகா கஸ்மிக ஸூஹ்ருத்வத்தைச் சொல்லுகிறது
சர்வ லோக சரண்யாய –
லோக்யந்த இதி லோகா -என்று லோகச்தான புருஷர்களை நினைக்கிறது
இருந்ததே குடியாக எலாருக்கும் சரண வரணார்ர்ஹர் அன்றோ பெருமாள் –
ராவண பந்தத்தாலே த்யாஜ்யனாக நினைத்து இருக்கிற என்னுடைய அளவேயோ
த்விதா பஜ்யேயமப் யவம் ந நமேயம் து கச்யசித் -யுத்த -36-11-என்றவன் வந்தாலும் விடாதவர் அன்றோ –
நீங்கள் என்னை விடில் என்னோபாதி பெருமாளை விடேன் என்று இருக்கத் தட்டுண்டோ
மதம் சபூ தோ ராம -சர்வ சப்தம் தேக வர்ஜிதமாயோ இருப்பது
விபீஷணம்-
நீங்கள் தான் என்னோடு ஒப்புதி கோளோ
புறம்பு ஒருவருக்கும் ஆகாதவனை பெருமாள் விஷயீ கரித்தார் என்கிற ஏற்றம் அவர்க்கு கொடுக்க வந்தேன் அல்லேனோ
உபஸ்திதம்
இலங்கையிலே நின்று சரணம் என்றேனாலும் இலங்கை தான் மதுக்கரை பட்டது பட வேண்டாவோ
நாலடி வந்தவிடம் பெருமாள் கார்யம் செய்தேன் அன்றோ –
————————————————————————————————————————————————————–
தனி ஸ்லோக- வியாக்யானம்-
அவதாரிகை
கீழ் ஸ்லோகத்திலே பெருமாள் திரு உள்ளத்துக்கு பிரியமாகவும் ராவணனுக்கு அநபிமதமாகவும் சில வார்த்தைகளைச் சொன்னேன்
இப்படி சொன்னால்
பிரத்யஷே குரவ ஸ்துத்யா-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8- என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -திருவாய் -2-3-2-என்றும் க்ருதஜ்ஞ்ஞானாய் கீழே ப்ராப்தமாய் இருக்க
அவன் துஷ்ப்ரக்ருதி யாகையாலே த்வாம் திக் குல பாம்சனம் -யுத்தம் -16-15-என்று ப்ருஷித்து
அஸ்மின் முஹூர்த்தே ந ஜீவேத் -என்று தன்னடியார் குற்றம் செய்தால் சொல்லுமா போலே வெட்டி வையாது ஒழிந்தேன் என்று அவமானம் பண்ணுவதாக
ஜ்யேஷ்டன் ஆகையாலே அவன் வேண்டிற்று செய்கிறான்என்று இருந்தேன் –
அவ்வளவே அன்றிக்கே தன வயிற்றிலே பிறந்த சிறு பையலை இட்டு
கிம் நாம தே தாத க நிஷ்ட வாக்கியம் அனர்த்தகம் சைவ ஸூ பீதவச்ச
அஸ்மின் குலே யோ அபி பவென்ன சாதோ சோபீத்ருசம் நைவ வதேன்ன குர்யாத் -யுத்த -15-2-என்று
பரிபவிப்பித்தும் செய்வான்
அத்தாலே அநு கூலரே ஆகிலம் அவன் அடியாக வந்த பந்த பாரா புத்ராதிகளை விட்டு
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் அவரே இனி யாவரே -திருவாய் 5-1-9-என்கிறபடியே
விட்ட உறவு முறை எல்லாம் பெருமாளே யாம்படி திருவடிகளிலே வந்தேன் என்று
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி நின்றான் -திருவாய் -10-6-2- கீழ்
இனி ராஜ நீதி மரியாதையில் ஒரு சத்ருவின் தம்பி பொய்யே சரணம் என்று வரும் காலத்தில் கைக் கொள்ள இருந்தார்களோ போகாய்-என்று உதறி இருந்தார்கள் முதலிகள்
இவர்களைப் பார்த்து நீங்கள் உதறுகிறது ஸ்வாமி காரயமாக அன்றோ
ராஷசரால் நலிவு பட்டு சரணம் என்று வந்தவர்களுக்கு புகலாக ரகு குலத்திலே பிறந்த பெருமாளுக்கு ராவணன் தம்பி விபீஷணன் சரணம் புகுந்தான்
என்று அறிவிக்க தானும் ஒரு ஸ்வாமி கார்யம்
ஆனபின்பு தலைக் காவலிலே நிற்கிறவர்கள் அறிவித்திலர் என்று முனிவதற்கு முன்பே சடக்கென விண்ணப்பம் செய்யுங்கோள்-என்றான்
தர்சன மரியாதையில் விதித ச ஹிதர்மஜ்ஞ சரணாகத வத்சலர் -சுந்தர -21-20-என்னும் இடம் கேட்டறியாயோ-நீரே சொல்ல மாட்டாயோ என்ன
அப்படி வழி கெடப் போவான் ஒருவனோ நான் –
தவ பரோஹமகாரிஷி தார்மிகை -என்றும்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணியுமவன் -திருவாய் -4-6-8- காணும் கோள் நான்
ஆனபின்பு நீங்கள் புருஷகாரமாகப் பெருமாள் திருவடிகளிலே காட்டிக் கொடுங்கோள் என்கிறான் ஆகவுமாம் –
1- நிவேதயத மாம் –
யாம் பிரஜாபதிர் வேத ச புண் யோ பவதி -என்று அவர் திரு உள்ளத்தில் பட்ட போதாயிற்று
இத்தலைக்கு ஸ்வரூபம் ஜீவிப்பது
அத்தனையும் உங்களாலே பெற்றேனாக வேணும்
2- நிவேதயத –
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-8- என்றும்
அவனை எங்களுக்கு அறிவிக்கிற மாதரம் எங்களையும் அவனுக்கு அறிவிக்க வேணும்
எதேனுமாக அறிவிக்கை உங்களுக்கு படி அன்றோ
3- நிவேதயத –
ஸ்வ ரேண மஹதா மஹான்-யுத்த -17-9-என்று நானும் பெரு மிடறு செய்து கூப்பிட்ட போதே பெருமாள் திரு உள்ளம் பற்றுவர் –
நீங்களும் அறிவித்தி கோளாய் ஒரு ஸ்வரூபம் பெறப் பாரும் கோள்
4- நிவேதயத –
அறிவியாதே போதே பாகவத அபசாரம் பண்ணுவாரைப் போலே உங்களுக்கு ஸ்வரூப ஹாநி-
அறிவித்தால் கூவுதல் வருதல் செய்திலராகில் -திருவாய் -9-2-10- சரணாகத பரித்யாகியான அவருக்கு ஸ்வரூப ஹாநி
இரண்டு தலையும் இப்படியான போது-பரக்கத அதிசய ஆதானம் பண்ணுகை சேஷத்வ லஷணம் ஆனால்
அத்தலைக்கு அவத்யவஹனாகையாலே சேஷ பூதனான எனக்கு ஸ்வரூப ஹாநி
இவை இத்தனையும் வாராமல் அறிவித்துச் சேர விடும் கோள்
5- நிவேதயத
வயாக்ர வானர சம்வாதம் கேட்டு அறியீர்களா –
இப்படி சரணாகதி ரஷணம் பண்ணின ஜாதியில் பிறந்த நீங்கள் சரணாகதனை அறிவியுங்கோள்
6- நிவேதயத –
என்னை நிர்வேதிப்பியாதே வருத்தாதே பெருமாளுக்கு அறிவியுங்கோள்
7-நிவேதயதே-
நிப்ருதம் வேதயத-இப்படிக்குஒரு மூர்க்கனோ என்று திரு உள்ளம் பற்றும்படி உத்படமாக பற்றி அறிவியாதே –
அறியச் சென்று உரையாய் -பெரிய திருமொழி -3-6-4-என்னுமா போலே உங்களுடைய சவிநயகதிபிரசக்திகளாலே இப்படிக்கு ஒரு சாத்விகனோ அவன் என்னும்படி நிப்ருதமாக விண்ணப்பம் செய்யுங்கோள்-
8-நிவேதயதே–
நிதராம் வேதயத-அதாவது மந்திர வ்யாபாராதிகளில் பராக்கான பெருமாள் திரு உள்ளத்திலே படும்படியாக ஊன்ற விண்ணப்பம் செய்யுங்கோள்-
9- நிவே தயதே –
ஒரு பெரும் திரளாய் இருந்தால் ஒருவர் இல்லாது ஒருவர் அறிவிக்க லாகாதே –
10- நிவே தயதே –
ப்ரார்த்த நாயாம் லோடாய்-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்-திரு விருத்தம் -30-என்னுமா போலே
நீங்களும் ருஷவா கோலான்கூலங்கள் ஆகிற அநேக ஜாதியாய் இருந்தீர் கோள் –
உங்களை இரக்கிற நான் நிற்கிற நிலையை விண்ணப்பம் செய்ய வேணும்
11- நிவே தயதே –
ஒருவனைக் குறித்துச் சொல்லாதே சமுதாயத்தில் சொல்லுகிறான் –
இத்திரளில் இதற்கு முன் பரிச்சயம் இல்லாமையாலே சாதகர் இன்னான் என்று அறியாமையாலே –
அன்றியிலே –
12- நிவே தயதே –
தாத்ரா பாகவதா சர்வே ச்லாக்யா பூஜ்யாச்ச பாரத -என்று ராம சம்பந்தம் எல்லார்க்கும் ஒக்கும் ஆகையாலே
அடைய நமக்கு கௌரவ்யர் அன்றோ என்று சமுதாயத்தில் சொல்லுகிறான் ஆகவுமாம் –
அன்றிக்கே –
13- நிவே தயதே –
லோகோ பின்ன ருசி -என்றும்
வேறு வேறு ஞானமாகி –திருச் சந்த விருத்தம் -2-என்றும்
மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல -திருவிருத்தம் -96–என்றும் சொல்லுகிறபடியே
பலராய்- பின்ன புத்திகளாய் இருக்கையாலே
ஒட்டேன் என்று ஒருவன் விடேன் என்று ஒருவன் கட்டென் என்று ஒருவன் -கட்டென்னப் புகுரலாகாதோ என்று ஒருவன்
அறிவிக்கிறேன் என்று ஒருவன் ஜீவிக்கலாவது என் என்று ஒருவன் என்னும் சமுதாயத்தில் சொல்லுகிறான் ஆகவுமாம் –
அன்றியிலே
14- நிவே தயதே –
குருஷூ பஹூ வசனம் -இப்படிக்கு எல்லாம் நிர்வாஹகராய் ராஜாவாய் இருக்கிற மஹா ராஜரை நோக்கிச் சொன்னான் ஆகவுமாம் –
அன்றியிலே –
15- நிவே தயதே –
என்று ராவண கோஷ்டியிலே தூத வதம் ஆகாது என்று நல வார்த்தை சொல்லி க்ருத உபகாரகன் ஆகையாலே
திருவடியை ஹ்ருதயீ கரித்து
ப்ரதீகோபாதானம் பண்ணி ஒருவனைச் சொன்னால் மற்றவர்கள் விபரீதம் பண்ணுவார்கள் என்று சாமான்யமாகச் சொன்னான் ஆகவுமாம் –
அன்றியிலே –
16- நிவே தயதே –
பெருமாள் உங்களிடம் என்னிடை யாட்டமாகக் கேட்பார் –
அப்போது பேசாதே -சங்க நீயன் -என்றாகவுமாம் -விஸ்வ நீயன் என்றாகவுமாம்-சங்க்ராஹ்பன் என்றாகவுமாம்- நிக்ராஹ்பன் என்றாகவுமாம்-
எதேனுமாக தோற்றினார் தோற்றினபடி ஸ்வ மதங்களை அறிவியுங்கோள் என்றாகவுமாம்- –
அன்றியிலே –
17- நிவே தயதே –
வித் ல் லாபே -என்கிற தாதுவிலேயாய் -ச மஹாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-என்று நேராக நெஞ்சாரல் பட்டுக் கிடக்கிற பெருமாளுக்கு ஒரு ஆத்மலாபம் பண்ணிக் கொடுங்கோள்-
அன்றியிலே
18 -நிவே தயதே –
வித சத்தாயாம் -என்று சத்தையிலே யாய்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்-ஆரண்ய -10-19-என்று என்னைப் பெறாத போது அழிகிற பெருமாளுக்கு சத்தை யுண்டாக்கி விடுங்கோள் –
அன்றியிலே –
19- நிவே தயதே
வித விசாரேண-என்று விசா ரணத்திலே யாய்
அங்கத சரப ஜாம்பவத் பிரமுகர் அடைய விசாரியுங்கோள்-என்றுமாம் –
இப்படிச் சொன்னவாறே -ஆகிறது -விண்ணப்பம் செய்கிறோம்
சோஹம் ப்ருஷித் தஸ்தேந -யுத்த -17-4- என்றும்
ராகவம் சரணம் கத -யுத்த -17-4- என்றும் இரண்டு அர்த்தத்தைச் சொன்னாயாகில்
ராவணன் ப்ருஷித்த படியை முற்படக் சொல்லவோ
சரணாகதனான உன்னை அறிவிக்கவோ -என்ன
1- மாம் நிவே தயதே –
அவனுடைய பாருஷ்யத்துக்கு பிரதிகிரியை பண்ணுவது நான் அந்தரங்கன் ஆனால் அல்லவோ
ஆனபின்பு முற்பட என்னை விண்ணப்பம் செய்யுங்கோள்-
நீ வைக்கும் பொற்குடம் ஏதோ உன்னை அறிவிக்கைக்கு -என்ன –
2- மாம் –
இங்கு உம்மோடு ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -திருவாய் -8-3-7-என்கிறபடியே
நாக பாச பிரம்மாஸ்த்ரங்களால் நலிந்த அன்றைக்கும் உடன் கேடனாய் விடாதே நிற்கைக்கு ஓர் அடியான் வந்தான் என்று விண்ணப்பம் செய்யுங்கோள் –
இதுக்கு முன் செய்தது அன்றோ மேல் செய்வது என்ன
3- மாம் –
ப்ரதீயதாம் தாசரதர் மைதிலீ-யுத்த -14-3-என்று இங்குற்றைக்கு நல் வார்த்தை சொன்ன என்னை –
நுனி நாக்காலே ஒரு வார்த்தை சொன்னாய் ஆகில் இத்தால் பெற்றது என்
அதுவோ பிராட்டி இங்கே எழுந்து அருளி வந்தது -என்ன
4-மாம் –
யாவந்ன க்ருஹ்ணந்தி சிராம்சி பானா ராமேரிதா ராஷச புங்க வா நாம் -யுத்த -14-4- என்றும்
வித மேச்ச புரீம் லங்காம் -சுந்தர -26-21- என்றும்
ராவணன் முன்னே பெருமாள் பெருமைகளைச் சொல்லி
ருக் சாம சகேஷ்நௌ-சாந்தோக்யம் -1-8- என்று அரசு புலவர்களான வேதங்களோ பாதி பெருமாள் கீர்த்தி படஹமான என்னை –
இதுவும் குருத்வாத் ஹித மிச்சதா -யுத்த -16-24-என்று ராவண ச்நேஹத்தாலே பிரத்யவாய புரச்சரமாக ஹிதம் சொன்ன அச்த்தனை அன்றோ
இப்படி ராவண பக்தனான உன்னையோ அறிவிக்கிறது -என்ன
5- மாம் -பருஷிதஸ் தேந அவமானி தச்ச-யுத்த -17-14-என்று இவ் உத்கர்ஷம் பொறாமையாலே பருஷித்துத் தள்ளி விடப்பட்ட என்னை
ஜ்யேஷ்டோ மான்ய பித்ரு சம -யுத்த -16-17-என்று நீ தான் சொல்லிற்று இல்லையோ –
தமையன் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில் இது என்ன தப்பாக வந்தாய் -என்ன –
6- மாம் –
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச என்று பாருஷ்யம் பொறுக்க மாட்டாமையாலே –
ஆத்மாவை புருஷஸ்ய தாரா -என்றும்
ஆத்மா வை புத்ர நாமாசி -என்றும்
என்னோபாதியான இவர்களை உட்பட விட்டு அவனோடு துவக்கற்ற என்னை –
நீ அவனோடு துவக்கற்றால் லாபம் என் -இத்தலையில் ஒரு பற்றாசு இல்லையோ -என்ன –
7- மாம் –
ராகவம் சரணம் கத -யுத்தம் -17-14-என்று
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -திருவாய் -3-6-8-என்று இருக்கிற என்னை
8- மாம் –
ஆத்மானம் சர்வதா ரஷ புரீம் சேமாம் ச ராஷசாம் -யுத்த -16-25-என்று பருஷிக்கிற
ராவணன் உடனும் அவனோடு சேர்ந்தாரோடும் வாசி அற ஹிதம் சொல்லுகையாலே
ஆநு கூல்யமிதி ப்ரோக்தா சர்வ பூத அநு கூலதா -லஷ்மி தந்த்ரம் -17-66- என்கிற ஆநு கூல்ய சங்கல்ப்பமும்
ஜாதக்ரோதோ விபீஷண-யுத்த -16-17-என்றும்
க்ருத்தோ ஹன்யாத் குரூ நபி -சுந்தர -55-5-என்றும்
ராவணனைக் கொல்ல பிராப்தமாய் இருக்க
உத்பபாத கதா பாணி -யுத்த -16-16-என்று கையிலே கதை இருக்க கொல்லாதே போந்தவன் ஆகையாலே
ப்ராதி கூல் யஞ்ச பூதா நாம் சர்வேஷாம் ந சமா ரேத்-லஷ்மி தந்த்ரம் -17-67- என்கிற ப்ராதி கூல்ய வர்ஜனமும்
ஸூ க்ரீவச்சாபி ஷே சித-யுத்த -17-66-என்று சோதாஹரணமாகக் கண்டு நம்மை ரசிப்பார் என்று அறுதி இடுகையாலே
ரஷிஷ்யத் யநு கூலான் ந இதி யா ஸூ த்ருடா மதி ச விஸ்வாஸே பவேத் -லஷ்மீ தந்த்ரம் -17–71-ப்ரசன சம்ஹிதை -54-26/27 என்கிற ரஷிஷ்யதீதி விஸ்வாசமும்
பவந்தம் சரணம் கத -யுத்த -19-5-என்று உம்மையே ரஷகராகப் பற்றின்னேன் என்கையாலே
கோபாயிதா பவேத்யேவம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச சூ கா நி ச -லஷ்மீ தந்த்ரம் -17-72/73–ப்ரசன சம்ஹிதை -54-28/29 என்கிற கோப்த்ருத்வ வரணமும்
பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூ கா நி ச-யுதட -19-6- என்று பல பர ந்யாசம் பண்ணுகையாலே
பலே ஸ்வாம் யவியுக்ததம் கேசவார்ப்பண பர்யந்தா ஹயாத்ம நிஷேப உச்யதே -லஷ்மி தந்த்ரம் -17-74- ப்ரசன சம்ஹிதை 54-30 என்கிற ஆத்ம நிஷேபமும்
தேந சாஸ்ம்யவமாநித -யுத்த -19-4- என்று பரிபூதனாய்க் கையைத் தூக்கி விடுகையாலே
இதி யா பூர்வ ஹாநிஸ் தத் தைந்யம் கார்ப்பண்யம் உச்யதே -லஷ்மி தந்த்ரம் -17-67/69- ப்ரசன சம்ஹிதை 54-24–26–என்கிற கர்ப்பண்யமும்
ஆக இப்படி சரணாகதியினுடைய ஷட்பிரகாரமும் குறையாதபடி பண்ணின என்னை –
9- மாம் –
அஹம் அஸ்ம யபரா தாநாம் ஆலயோ ஆகிஞ்சன அகதி
தவம் ஏவ உபாய பூதோ மே பவதி பிரார்த்தனா மதி -அஹிர் புத்ன்ய சம்ஹிதை -37-30 என்கிறபடியே
விபீஷணனாய்
துர்வ்ருத்த ராவண ப்ராதா வாகையாலே
அபராதாநாம் ஆலயமாய் -உபாயான்தரம் இல்லாமையாலே அகிஞ்சனனாய்
ராவணனும் அகப்படத் தள்ளி விட்ட படியாலே அநந்ய கதியாய் பெருமாளை உபாயமாகப் பண்ணின படியாலே
த்வம் ஏவ உபாய பூதே மே பவதி பிரார்த்தனா மதியை யுடையனான என்னை –
10-மாம் –
உத்தரம் தீரமா சாத்ய-யுத்த -17-8-என்கையாலே
அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை -பெரியாழ்வார் -5-3-7-என்னை
11- மாம் –
பர்த்யக்தம் மயா லங்காம் இத்ராணி ச தநா நிச -யுத்தம் -19-5-என்று
அங்குள்ள பற்றாசை எல்லாம் போக்கிட்டு
கஸ்ய ஏவ வ்யதிஷ்டத -யுத்த -17-8- என்று ஆகாசத்திலே தடுமாறுகிற என்னை
12- மாம் –
ஸோ அஸ்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கடக்க -1-3-9-என்று வரும் வலி எல்லாம் வந்து
விஷ்ணு பதத்தைப் பற்றின என்னை –
13- மாம் –
பிரச்யுதோ வா அஸ்மால் லோகாதாகதோ தேவ லோகம் -என்றும்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -திருவாய் -5-7-2-என்றும் சொல்லுகிறபடியே
ராவண கோஷ்டியி நின்றும் புறப்பட்டு ராம கோஷ்டியில் புகுரப் பெறாதே
ஆந்தரா ளிகனாய் இருக்கிற என்னை
14- மாம் –
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது -திருவாய் -9-5-10-என்கிறபடியே
நீங்கள் அறிவித்தால் அது யுண்டாய் அறிவியாத பொது இல்லையாம் படியாய் இருக்கிற என்னை –
ஆகிறது உன் அபேஷையை அறிவித்தாய் ஆகில் விண்ணப்பம் செய்கிறோம் -என்ன
1- ஷிப்ரம் –
ஒண்ணாது -இப்போதே வேணும் -இப்படிப் பதறுகிறது என் என்ன –
2- ஷிப்ரம் –
விரையும் கார்யம் தூங்கேல் தூங்கும் கார்யம் விரையேல் -என்னுமது சொல்லக் கேட்டும் அறியீர்களோ
விரையும் கார்யமான படி என் என்ன
3- ஷிப்ரம் –
சஞ்சலம் ஹி மன -ஸ்ரீ கீதை -6-34-என்றும்
சலா ஹி பிராணி நாம் மதி -அயோத்யா -4-20- என்றும்
நின்றவா நில்லா நெஞ்சாய்-பெரிய திரு -1-1-4-அன்றோ எல்லாரும் இருப்பது
ஆனபின்பு எனக்குப் பிறந்த ஆநு கூல்யம் பிரிவதற்கு முன்னே விண்ணப்பம் செய்யுங்கோள்-
4- ஷிப்ரம் –
ஷிப்ரம் ராமாய சம்சத்வம் சீதாம் ஹரதி ராவண -ஆரண்ய -48-30-என்று பிராட்டி சொன்ன போதே
தேவதைகள் அறிவியாமையாலே கண்டீர்களோ ரஜநீசரன் வசத்திலே அகப்பட்டாள் –
அப்படியே நானும் மநோ ரஜ நீசரன் வசத்திலே அகப்படுவதற்கு முன்னே அறிவியுங்கோள் –
5- ஷிப்ரம் –
வந்து ஒல்லைக் கூடுமினோ -திருப் பல்லாண்டு -5-என்றும்
ஒல்லை நீ போதாய் -திருப்பாவை -15-என்றும்
சடக்கென வா என்று நீங்கள் அழைக்க ப்ராப்தமாய் இருக்க நான் அபேஷிக்கும் படியாவதே
6- ஷிப்ரம் நிவே தயதே-
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாயதி கீர்த்தி மான் தத் த்வயா ஹனுமன் வாச்ய -சுந்தர -39-9- என்கிறபடியே
என் சத்தை கிடக்கிற போதே அவர் கைக் காண்டாராய்ப் புகழ் படைக்கும் படி அறிவித்து கொள்ளுங்கோள் –
7- ஷிப்ரம் நிவே தயத் –
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -யுத்த -17-14-என்னும் படி
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப் போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால் ஆதரம் பெருக வைத்தார்
ஆனபின்பு தத் தமஸ் யாயம் -யுத்த -18-35- என்று முற்படுவதற்கு முன்னே நீங்கள் முற்படுங்கோள் –
8- ஷிப்ரம் நிவே தயதே –
என் ஆற்றாமையால் இன்னம் ஒரு கால் சரணாகதி பண்ணி
தத் த்வயம் சக்ருத் உச்சாரோ பவதி -த்வய உபநிஷத் என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -யுத்த -18-33- என்றும்
சக்ருத் பிரயாகமே அமைந்து இருக்கிற பிரபத்தி ஸ்வரூபத்திற்கு ஹாநி வருவதற்கு முன்னே அறிவியுங்கோள் –
9- ஷிப்ரம் நிதே யத் –
உபாயோ சதுர்த்தச்தே ப்ரோக்த சீகர பல ப்ரத-லஷ்மி தந்த்ரம் -17-75-என்றும்
தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா தாவன் மோஹஸ் ததா அவகம் யாவண்ண யாதி சரணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-என்றும் சொல்லுகிற
உபாய ஸ்வ பாவத்தாலே பலித்துக் கொண்டு நிற்கவாயிற்றுப் போகிறது
அதற்கு முன்னே நீங்களும் ஆநு கூல்யம் பண்ணுவார்களாக அறிவியுங்கோ
10- ஷிப்ரம் மாம் நிவேதயத –
பெருமாள் யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-35- என்று ராவணனைத் தேடித் பிடிக்க வாயிற்று புகுகிறது
அதுக்கு முன்னே சடக்கென என்னை அறிவியுங்கோள்-
11- மாம் நிவே தயதே-
தமேவ சரணம் கச்ச -ஸ்ரீ கீதை -18-62-என்று சரண்யனை அறிவிக்கிற நீங்கள் ஒரு சரனாகதனை அறிவியுங்கோள் –
ஆகிறது -இப்படி சடக்கென அறிவிக்கிறது ஆருக்கு –
இலங்கையிலே பரிசிதரான திருவடிக்கோ
படைக்கு எல்லாம் நிர்வாஹகரான மகா ராஜர்க்கோ -என்னில்
1- ராகவாய –
இஷ்வா கூ ணாமியம் பூமிஸ் ச சைல வன கான நா -கிஷ்கிந்தா -18-6-எண்டு
அத்திருவடியோடும் மகாராஜரோடும் மால்யவானோடும் சித்ரா கூடத்தொடும் வாசி அற ரஷகராய்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆளுகிற பெருமாளுக்கு –
2- ராகவாய –
சரணாகத ரஷகரான குடியிலேபிறந்த பெருமாளுக்கு சரணாகதனான என்னைச் சொல்லுகோள் –
3- ராகவாய –
சக்ருதேவ பிரபன்னாய –அபயம் ததாமி –ஏதத் வரதம் மம -யுத்த -18-33-என்று சரணாகத த்ராணத்திலே காப்புக் கட்டின வரிடம் சொல்லுங்கோள் –
4- ராகவாய –
ராக வாணாம யுக்தோயம் குலச்யாச்ய விபர்யய -பால -21-2- என்றும்
அப்ய ஸூ பிரணயி நாம் ரகோ குலே ந வ்ய ஹன்யத கதாதர்த்தி தா -ரகுவம்சம் -11-2- என்றும்
அபேஷித்தார் அபேஷித ப்ரதா -பிறந்து படைத்த தலைவர்க்குச் சொல்லுங்கோள் –
5- ராகவாய –
அப்யஹ ஜீவிதம் ஜஹ்யாம் ஹி பிரதிஜ்ஞாம் சம்சருத்ய -ஆரண்ய -10-19-என்று
தம்மை அளித்தும் ஆஸ்ரீ தரஷணம் பண்ணும் அவருக்கு சொல்ல்லுங்கோள்-
6- ராகவாய மாம் நிவே தயதே –
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்றுகந்த ஏறு சேவகனாருக்கு என்னை அறிவியுங்கோள் –
7-ராகவாய மாம் ஷிப்ரம் நிவே தயதே –
ராகவச்ய யசோ ஹீயோ -சுந்தர -37-57-என்று ஆர்ஷ பரிஷத் ஸூ க்ரீவ காக பிரமுகரை ரசித்து தேடித் படைத்த புகழ் எல்லாம்
என்னை ரஷியாத படியாலே இழக்க வாயிற்றுப் புகுகிறது
அதற்கு முனே சடக்கென அறிவியுங்கோள் –
சதி தர்மிணி தர்மா -என்று அவர் தம்மைப் பெற்றால் அன்றோ புகழ வேண்டுவது –
ப்ராப்த சத்ருரதர்க்கித -யுத்த -17-26–என்று சத்ருவை இருக்கிற உன்னை அறிவிக்கை யாவது என் -என்ன –
விபூதியாக சத்ருக்கள் ஆனாலும் ஒரு பொல்லாங்கு நினைக்க ஒண்ணா தாய்க் காணுங்கோள் அவர் பெருமை இருப்பது –
1- மஹாத்மநே –
மர்த்யா நாம் மரணாத் பயம் -என்கிற உங்களைப் போலே அன்றியிலே
உத்தமா நாந்து மர்த்யா நாமவமா நாத் பரம் பயம் -என்று சரணாகத ரஷணம் பண்ணிற்றிலோம் என்று கர்ஹிக்கில்
செய்வது என் என்று பயப்படும்படியான பெருமையை யுடைய பெருமாளுக்கு அறிவியுங்கோள் –
2- மஹாத்மநே –
ஆத்மன் சப்த வாசியாய் ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யாச் சாபவத் -தை ஆனா -6-என்று தாழ்ந்து வந்தால்
வர ஒண்ணாது என்று ஏற்கவே புகுந்து கலந்து ஜ்ஞான ஸ்வரூபன் என்று அவனைச் சொல்லும் சொல்லாலே தம்மைச் சொல்லலாம் படி ஜீவாந்தர்யாமியாய் இருக்கிறவருக்கு என்னை அறிவியுங்கோள் –
3- மஹாத்மந-
ஆத்மன் சப்தம் -த்ருதி- வாசியாய் –
ஆபத்யபி சவ காரஎஷூ கர்த்தவ்யத் ஸ்திதிர் த்ருதி -என்று சத்ரு தேசம் ஆகையாலே
சாபாயமாய் இருந்ததே யாகிலும் ரஷகனான தம்முடைய க்ருத்யத்தில் நிலையுடையவர் காணுங்கோள் -என்றானாகவுமம்
அன்றியிலே –
4- மஹாத்மந-
ஆத்மன் சப்தம் தேக வாசியாய் -மஹா தேஹாயா -என்கிறபடி -அதாவது
தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத ஹரேர் மஹத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-70- என்றும்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ச மே தாஸ்தி சம்பவா -ஸ்ரீ வராஹ -14-41/வாயு -34-4- என்றும்
நித்யம் நித்யாக்ருதி தரம் -சாஸ்வதம் -என்றும் சொல்லுகிறபடியே யாரேனும் ஏதேனும் செய்யிலும் கல் கடித்து பல் முறித்து தங்களோடு போம்படி அத்ய விலஷண விக்ரஹராய் கானுங்கோள் இருப்பது-
5- மஹாத்மந –
ஆத்மன் சப்தம் ஸ்வ பாவ வாசியாய் ஆ ஸ்ரீ த விஷயத்தில் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகள் பண்ணி இருக்கை அவருக்கு
வந்தேறி அன்றிக்கே
ஸ்வ பாவமாய் யுடையராய்க் காணுங்கோள் இருப்பது –
6- ராகவாய மஹாத்மன் –
ஆத்மன் சப்தம் பரமாத்மா வாசியாய் -ரகுகுல குமாரராய் -தம்மைத் தாழ விட்டாரே ஆகிலும்
அதுக்கு இப்பால் தான் பரமாத்மாவாய்க் காணுங்கோள் இருப்பது
யானுமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமானே ஆகிலும் யாருமோர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமானாய்-திருவாய் -1-3-4-யாயிற்று இருப்பது
வேத புருஷனும் சம் பாஹூப்யாம் நமதி சத்பதத்ரை -தை நா -1-12- என்றும்
வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம் -புருஷ ஸூ க்தம்-என்றும்
இப்படி ஸூ லபனாய் இருக்கிற வஸ்து தான் அபெரிய வஸ்து என்று சொன்னான் இ றே-
வைதிக புருஷனான விஸ்வாமித்பால -19-14-என்று சொன்னான் இ றே
அவனைச் சொல்ல வேணுமோ
அயம் ச காகுத்ச்த இதி பிரஜஜ்ஞே -கிஷ்கிந்தா -24-28-என்றும்
த்வம் அப்ரமேயச்ச -கிஷ்கிந்தா -24-31-என்றும்
தாரை என்னும் ஒரு கிம் பெண்டாட்டி யகப்பட அறிந்ததும் உங்களுக்குத் தெரிகிறது இல்லையா –
7- மஹாத்மந –
ஆத்மன் சப்தம் அர்க்க அக்நி வாசியாய்
ராம திவாகர சத்ரு ரஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதி -சுந்தர -17-18- என்றும்
அபிதபாவ கோபமம் -அயோத்யா -99-26-
முளைக் கதிரை -திரு நெடு -14-என்றும்
கஞ்சன் வயிற்றில் நெருப்பு அன்ன நின்ற நெடுமாலே -திருப்பாவை -25–என்றும்
சத்ருக்களுக்கு தாஹகமாய் அன்றோ அவர் இருப்பது
நீங்கள் அஞ்சாதே அவருக்கு அறிவியுங்கோள் –
8- மஹாத்மந –
ஆத்மன் சப்தம் மதி வாசியாய் நீங்கள் மேல் எழுந்த சாகாசாரிகள் இத்தனை சாகார்த்த விசாரிகள் அல்லீர் கோளே-
தேவோ வை த்வஷ்டார மஜிகாம்சன் ச பத்னீ ப்ராபத்யாத தம ந பிரதி ப்ராயச்சன்
தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந பிரதி பிரயச்சந்தி –யஜூஸ் சம்ஹிதை -6-5-29- என்றும்
சரணாகத அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மாநா -யுத்த -18-28- என்றும் சொல்லுகிறபடியே
வேத வைதிக வசனங்களில் நிலவராய்-சத்ருவே யாகிலும் சரணாகதனைத் தன்னை அழிய மாறியும் ரஷிக்கக் கடவது என்கிற
பேர் அறிவாளராய் இருக்கிரவருக்குச் சொல்லுங்கோள் –
அன்றியிலே
9- மஹாத்மந –
என்று வாத வாசியாய் தஸ்மை வாதாத்மநே நம-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-31-என்றும்
காலாய் தீயாய் -திருவாய் -6-9-1- என்றும்
சொல்லுகிறபடியே
சத்ருக்களுக்கு நாசகராய்
சரணாகதருக்கு ஆஸ்வாச காரராய் இருக்கும் -என்றுமாம் –
அழகியது -நீ தானே -மஹாத்மநே -என்று அவன் பெருமையைச் சொன்னாய் இ றே
அப்படிக்கு-நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் -நாச் -10-11-என்றும்
அம்மான் ஆழிப்பிரான் அவர் எவ்விடத்தான் யானார் -திருவாய் -5-1-7-என்றும் பர்வதத்துக்கும் பரமாணு போலே
இருக்கிற நாம் அவ்வஸ்துவை அணுகவும் சரண வரணம் பண்ணவும் போமோ என்னில்
1- சர்வ லோக சரண்யாய –
பெருமாள் நீர்மைக்கு ஆகாதார் உண்டோ –
2- சர்வ லோக சரண்யாய –
லோக பார்த்தாராம் –சுந்தர -38-56-போலே -அந்த சர்வ லோகத்தில் நானும் ஒருவன் அன்றோ
இவற்றின் புறத்தாள் என்ற எண்ணோ -திருவிருத்தம் -33
3- சர்வ லோக சரண்யாய –
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -திருவாய் -3-3-4-என்று
எத்தனையேனும் தீர அபராதம் பண்ணினாரையும் அங்கீ கருத்து அத்தாலே தேஜஸ் விகளாய் இருக்கிறவருக்கு
4- சர்வ லோக சரண்யாய –
சர்வ லோகைக வீரஸ்ய தச கண்ட குலத் விஷ -என்று
பூர் புவஸ் ஸூ வர் மஹர் ஜனஸ் தபஸ் சத்யம் -என்கிற சப்த லோகத்துக்கும் புகலானவருக்கு
5- சர்வ லோக சரண்யாய
அவ்வளவே அன்றிக்கே பூர்ப் புவராதிகளோடும் அதல விதல ஸூதல தலாதல மகாதல ரசாதல பாதாளங்கள் உடன் வாசி அறச்
சதுர்தச லோகங்களுக்கும் புகலானவர்க்கு
அன்றியிலே –
6- சர்வ லோக சரண்யாய –
என்று பொன்னுலகு ஆளீரோ புவனி முழுதும் ஆளீரோ -என்றும்
புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற -என்றும்
ஹிரண்ய மயே பரெ லோகே -என்றும்
அஸ்மின் சாம் பரதம் லோகே -என்றும் சொல்லுகிறபடியே உபய விபூதிக்கும் ப்ராப்யர் ஆனவருக்கு
7- சர்வ லோக சரண்யாய –
மஞ்சா க்ரோசந்தி போலே லோகாந்த வர்த்தி ஜந்துக்களை லஷிக்கிறது
அன்றியிலே
8- சர்வ லோக சரண்யாய
லோகஸ்து–புவனே ஜானே -என்று ஜன வாசி ஆகவுமா
9- சர்வ லோக சரண்யாய
சர்வ வித லோகம்-அதாவது -தேவ யோநி களாயும் திர்யக் யோநி களாயும் மனுஷ்ய யோநி களாயும் ஸ்தாவர யோநிகளாயும்
தர்மார்த்தி களாயும் அர்த்தார்த்தி களாயும் காமார்த்தி களாயும் மோஷார்த்தி களாயும்
அநு கூலராயும் பிரதி கூலராயும் உத்க்ருஷ்டராயும் அபக்ருஷ்டராயும்
இப்பத் அநேக வித ரானவர்களுக்கு எல்லாம் புகலானவர் அன்றோ
அவனை இப்படி எங்கே கண்டோம் என்னில்
மஹிஷ்ட பல ப்ரதா நை கோநய பிரஜா பஸூபதீ-ஸ்தோத்ர இத் -13-என்று தேவர்களான ப்ரஹ்மாதி களுக்கு இழந்த பதம் கொடுத்தவர் –
விஷ்ணு பக்தி பரோ தேவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -109-74-என்கிறபடியே
பெருமாளுக்கு நல்லேன் ஆகையாலே தேவனான நான் இழந்த ராஜ்ஜியம் தாராரோ
ஸூ க்ரீவம்ஏவ தத் ராஜ்யே ராகவ ப்ரத்ய பாத யத் -பால -1-70-என்று
திர்யக்குகளான ஸூ க்ரீவாதிகளுக்கு இழந்த ராஜ்ஜியம் கொடுத்தவர்
ஜ்ஞா நே ந ஹீன ப ஸூ பிஸ் சமா ந -நரசிம்ஹ புராணம் -16-13-என்று அறிவில்லாமையாலே திர்யக்கான நான் இழந்த ராஜ்ஜியம் தாராரோ –
அத்யசதே சீரப்ருதோ யதாஸ்வம் சிரோஜ்ஜி தான்யாச்ரம மண்டலா நி -ரகு வம்சம் -13-22-என்று
மனுஷ்ய சரீரர்களான ஜன ஸ்தான வாசிகள் இழந்த தேசம் கொடுத்தவர்
மானுஷ்யம் கொண்டாடி உளவாய் வந்த நான் இழந்த தேசம் தாராரோ
சைல ரூபம் பரித்யஜ்ய பிரபேதே ஸ்வகாம் தநும் -என்று ஸ்தாவர ரூபமான அஹல்யையைத் தன பிரகிருதியோடு கூட்டினவர்
கச்த ஏவ வ்யதிஷ்டத -யுத்த -17-8-என்று ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் நிற்கிற என்னை ஏன் பிரக்ருதியோடே கூட்டாரோ –
ரஷி தவ்யா சச்வத் கர்ப்ப பூதாஸ் தபோத நா -ஆரண்யம் -1-21-என்று அனுஷ்டானத்தாலே தர்மார்த்திகளான ரிஷிகளுக்கு புகலானவர் –
விபீஷணஸ்து தர்மாத்மா -ஆரண்ய -17-24-என்ற எனக்குப் புகலாகாதோ –
ருதன் ராஜ் மயா சதா -சுந்தர 33-24- என்று அர்த்த பலமான ராஜ்யத்தை இரந்த சக்கரவர்த்திக்கு கொடுத்தவர்
ராஜ்ய காங்ஷியான எனக்குத்-ராஜ்ய காங்ஷி ச ராஷச -யுத்த -18-13-தாராரோ –
தாரா உமைகளை விரும்பி காம பரவசரான மஹா ராஜர்க்கு தாரங்களைக் கொடுத்தவர்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச -யுத்த -17-14- என்று பிராட்டி பக்கல் ஆனுகூல்யம் பண்ணின தர்ம தாரங்களை இழந்த எனக்குத் தாராரோ –
கச்ச லோகாநா நுத்தமான் -ஆரண்ய -66-30-என்றும்
ஆவஹத் பரமாம் கதிம் -என்றும் ஜடாயு வாலிகளுக்கு மோஷம் கொடுத்தவர் எனக்கு மோஷம் தாராரோ
மங்களாநி பிரயுஜ்ஞாநா-ஆரண்ய -1-12-என்று அநு கூலரான ரிஷிகளுக்கு புகலானவர்
ஆநு கூல்ய சங்கல்பாதிகளைப் பண்ணின எனக்குப் புகலாகாரோ –
கபந்தம் நாம ரூபேண விக்ருதம் கோர தர்சனம் -தம் நிஹத்ய மஹா பா ஹூர் ததாஹ் ஸ்வர்க்க தச்ச-பால -1-55-என்றும்
விததான் ஸ்த நாந்தரே-சுந்தர -8-23- என்றும்
பிரதிபெதே ஸ்வ மாலையம் -சுந்தர -38-38-என்றும்
பிரதி கூலானான கபந்தனுக்கு சாப ஜன்யமான விரோதி சரீரத்தைப் போக்கி ஸ்வ தேசத்தையும் கொடுத்து
பிரதி கூலனான காகத்துக்கு விரோதியைப் போக்கி ஸ்வ தேசத்தைக் கொடுத்தவர்
ப்ராப்த சத்ரு ரதர்க்கித -யுத்த -17-26-என்னும்படி பிரதிகூலனான எனக்கு ஸ்வ தேசம் தாராரோ
தம ப்ருவன் ஸூ ரர சர்வே சமபிஷ்டூய சந்னதா-பால -15-17-என்று உத்க்ருஷ்டரான தேவர்களுக்கு புகலானவர்
பிரபன்னன் ஆகையாலே உத்க்ருஷ்டனான எனக்குப் புகலாகாரோ –
கபித் வஞ்ச பிரதர்சிதம் -சுந்தர -55-16- என்றும்
பாஷாண கௌதம வதூவபுராப்தி ஹேது -என்றும்
அப்க்ருஷ்டங்களான திரைக் ஸ்தாவரங்களுக்கு ஆபன் நிவாரகர் ஆனவர்
ப்ரக்ருத்யா ராஷசோ ஹ்யேஷா -யுத்த -16-23- என்று அபக்ருஷ்ட்னான எனக்கு ஆபன் நிவர்த்தகர் ஆகாரோ
இவ் உதாஹரணங்களிலே கண்டு கொள்வது –
ஆகிறது ஆரை அறிவிக்கிறது -என்ன
1- விபீஷணம்-
பராசர பராங்குசாதி சப்தம் போலே -விரோதி விபீஷணன் என்றாய்
ராவணாதிகளை பயப்படுத்துவேன் என்ற நினைத்து இருங்கோள்
விவிதம் பீஷயதீதி விபீஷண-அவயவ சக்தி தான் ஆகிளுமாம் –
2- விபீஷணம்-
பீஷாஸ்மாத் -பீஷோ தேதி ஸூ ர்ய-என்றும் -பயம் பா நாம்ப ஹாரிணி -என்றும் -பர பயங்கரமாய்
ஆ ஸ்ரீ தா பயங்கரருமான பெருமாள் பரிகரத்த்க்கு வேறு ஒருவருக்கும் பயப்பட வேணுமோ
3- விபீஷணம் –
ஆணையும் செங்கோலையும் நடத்துகைக்கு -கதா பாணி -என்று ஒரு தடிக்காரன் என்று சொல்லுங்கோள்
4- விபீஷணம்-
அநு கூலன் என்று அறிவிக்க மாட்டீர் கோளாகில்-கதா பாணி -என்று கையும் தடியுமாய் ஒருத்தன்
விழும்படி நின்றான் என்றாகிலும் சொல்லுங்கோள் –
5- விபீஷணம் –
நிதா நஜ்ஞனான பிஷக்கின் முன் வியாதி க்ரஸ்தன் தான் பண்ணின அபத்யங்களைச் சொல்லி
அதுக்கு
பரிஹரித்துக் கொள்ளுமா போலே
நிர்வாணம் பேஷஜம் பிஷக் -என்றும்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –பெரியாழ்வார் -5-3-6-என்றும் பேசப்படும் சர்வஜ்ஞன் முன்பு சம்சாரி ஸ்வ தோஷத்தை முன்னிட்டு ரஷித்துக் கொள்ளும் அத்தனை போக்கி
நன்மை முன்னிடுகைக்கு ஒன்றும் இல்லை இ றே-ஆகையாலே
6- விபீஷணம் –
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹாச்ரசோ நே மயா வயதாயி -ஸ்தோத்ர ரத்னம் -25-என்றும்
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஓன்று இலாமையினால் -பெரிய திரு -1-9-3-என்றும்
என்னுடைய வ்ருத்த ஜ்ஞானங்கள் இவை என்னுங்கோள்
7- விபீஷணம் –
சத்ருசம் வ்யசனம் ப்ராப்தம் ப்ராப்தம் ப்ராதரம் யா பரித்யஜேத்-யுத்த -18-5- என்றும்
உவர்த்த நீர் போலே என்தன் உற்றவருக்கு ஒன்றும் இலேன் -திருமாலை -31-என்றும்
சோதரனான ராவணன் அகப்பட வெறுவும்படி பண்ணின தோஷ துஷ்டன் என்னுங்கோள் –
உன்னுடைய வ்ருத்த ஜ்ஞானங்கள் இவை யாகில் பெருமாள் திரு முன்பே அறிவிக்கும் படி என் -என்னில்
1- உபஸ்திதம் -வந்து நிற்பவனை –
துராசரோ அபி சர்வாசீ க்ருதக் நோ நாஸ்திக -சமாஸ்ரயேதாதி தேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
தோஷம் வித்தி தம் ஜந்தும் -என்கிறபடியே அப்படியே யாகிலும் பகவ தாஸ்ரயணம் பண்ணின தோஷனாய் ஆயிற்று இருப்பது
அப்படிக்குத் தூயோமாய் வந்து நின்றோம் என்றும் சொல்லுங்கோள் –
2-விபீஷணம் உபஸ்திதம் –
முன்னே வந்து நிற்றேன் என்னுங்கோள் –
நாலடியும் வந்து பெருமாளுக்கு உபகரித்தேன் என்று சொல்லுங்கோள் –
வாராதே இலங்கையிலே இருந்து சரணம் என்றேன் ஆகில் கடல் கரை மடுவின் கரை பட்டது படும்
அரை குலைய தலை குலைய அவர் வந்து விழ வேண்டா –
3- உபஸ்திதம் –
எல்லைக்கு உள்ளே வந்த பின்பு ஸ்திதோ அஸ்மி கத சந்தேக -ஸ்ரீ கீதை -18-73-என்று நிலை பெற்றேன்
4- உபஸ்திதம் நிவேதயத –
ஏவரி வெஞ்சிலையானுக்கு என் நிலைமை யுரையாய் -பெரிய திரு -3-6-1-என்க்ரபடியே
என்னுடைய வ்யவஸ்திதியை அறிவியுங்கோள்
5- உபஸ்திதம் நிவேதயத –
மதியாத் தனமாக அடுத்துக் கொடு புகுராதே திரு உள்ளம் பார்த்து புகுர வேணுமே என்று உங்கள் அருகே நிற்கிற நிலையைச் சொல்லுங்கோள் –
6- உபஸ்திதம் நிவேதயத –
எதிர் சூழல் புக்குத் திரியாத படி உடுத்தி இருக்கும் -அடுத்து அணியாக வந்தபடி சொல்லுங்கோள் –
7- உபஸ்திதம் நிவேதயத –
தம் தாமைக்கு தேடிக் கொடுக்கச் செய்தேயும்
ஜக்மூர் கிரி தடாத் தஸ்மாத் அநயம் சிகர முத்தமம் -கிஷ்கிந்தா -2-7-என்றும்
ஓடினேன் ஓடி -பெரிய திரு -1-1-1-என்றும்
பிறகிட்டுப் போமவர்களை அறிவித்த நீங்கள் இருந்த இடம் தேடி நானே வந்த என்னை அறிவிக்கலாகாதோ
8- விபீஷணம் உபஸ்தித நிவேதயத-
ராவணன் தம்பியாய் நடுவே ஓர் இடத்திலே இருந்து ஆள் வரவிட்டு
சந்தி விக்ரஹம் பண்ணி செய்யலாம் படிக்குப் பிடியாள் கொண்டு பின்னை வருகை அன்றிக்கே
உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் -பெரிய திரு -6-3-4-என்றும்
பொன்னடியே அடைத்து உய்ந்தேன் -பெரிய திரு மொழி -5-8-9-என்றும்
ஆலின் மேலால் அமர்ந்தான் அடியிணைகளே நண்ணித் தொழுது எழுமினோ -திருவாய் -9-10-1- என்றும் சொல்லுகிறபடியே
பலம் பின்னே பட்டதும் படப் புகுந்து கொடு நின்ற நிலையை விண்ணப்பம் செய்யுங்கோள் –
ஆக -இத்தால் –
பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவார்க்கு பாகவதர் முன்னிலையாகப் பெற வேணும் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆயிற்று –
——————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்