Archive for December, 2014

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –2-2-அரவணையாய் ஆயரேறே யம்ம முண்ணத் துயில் எழாயே-

December 14, 2014

அரவணை பிரவேசம் –

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-என்று அல்வழக்கு ஒன்றும் இல்லாதே அறுதியிட்டது தேசமாக்கி
தத் தேசிகனை (நரகநாசன் -கோஷ்ட்டிபுரம் )அவதார கந்தமாக வஸ்து நிர்த்தேசம் செய்து
நாவ கார்யம் சொல் இல்லாதவர்களை தேசிகராக்கி
கார்ய பூதனானவன் அவதரித்த ஊரில் கொண்டாட்டம் ஒக்க நின்று கண்டால் போலே
மிகவும் உகந்து மங்களா சாசனம் செய்து

அவதரித்தவனுடைய திவ்ய அவயவங்களை பாதாதி கேசாந்தமாக நிரவத்யமான வளவன்றிக்கே
இதுவே பரம புருஷார்த்தம் என்று வஸ்து நிர்த்தேசம் செய்து
தாமும் மிகவும் உகந்து
தம் போல்வார்க்கும் காணீர் –காணீர் -என்று -காட்டி அருளி

இவனுக்கு ஆஞ்ஞா ரூபமாகவும் அனுஜ்ஞ்ஞா ரூபமாகவும்
ப்ராப்தி நிபந்தனமான அபிமான ரூபமாகவும்
உபய விபூதியில் உள்ளாரும் உபகரித்த பிரகாரங்களை அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற
அவர்கள் வரவிட்ட வற்றையும்
அவர்கள் கொடுவந்த வற்றையும்
மேன்மையும் நீர்மையுமான  மெய்ப்பாடு தோன்ற அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து-

அவன் அங்கீ கரித்த பின்பு
தொட்டிலேற்றித்
தாலாட்டி

ஜ்ஞானத்துக்கு ஆஸ்ரயத்தில் காட்டிலும் ஜஞேய ப்ராதான்யத்தைக் கற்ப்பித்து
(ஞான ஆஸ்ரயம் -ஆத்மா
ஞானத்துக்கு விஷயம் -ஜேயம் -பரமாத்மா
மதி மா மதி )
அவற்றுக்கு ஜஞேய சீமை   இவ்விஷயமாக்கி
விஷயீ கரித்த ஜ்ஞானத்தை –
விஜ்ஞ்ஞானம் யஜ்ஞம் தநுதே-என்கிற ந்யாயத்தாலே ஞானத்தை ஜ்ஞாதாக்கள் ஆக்கி
இள மா மதீ -1-5-1-என்றும் –
விண்டனில் மன்னிய மா மதீ -1-5-6-என்றும்
உபய விபூதியில் உள்ளாரையும் உப லஷண நியாயத்தாலே இவன்
புழுதி அளைவது தொடக்கமான வ்யாபாரங்களைக் கண்டு
தாமும் மிகவும் உகந்து
தம் போல்வாரையும் அழைத்துக் காட்டி
நோக்கின கண் கொண்டு போக வல்லீர்கள் ஆகில் போங்கோள்-என்று
முன்பு பச்சை வரவிட்டுத்

தாங்கள் வாராதவர்களையும் வந்து கண்டு போங்கோள் -என்று
உய்ய உலகு படைத்து -என்று ஜகத் காரண பிரகாசகமான பரம பதம் முதலாக கீழே அருளிச் செய்த திவ்ய தேசங்களையும்
இதில் அருளிச் செய்த திருக் குறுங்குடி முதலான திவ்ய தேசங்களிலும் சந்நிஹிதனாய் நின்றவனும்
நாநாவான அவதாரங்களும்
அபதாநங்களுமாக பிரகாசித்தவனும்
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -கீதை -15-15-என்கிறபடியே
சகல வேத சாஸ்திர இதிஹாச புராணாதிகளாலும் அறியப்படுமவன் நான் -என்றவனை -கீழே
நாராயணா அழேல் அழேல் -என்றவர் ஆகையால் –
நான் மறையின் பொருளே -1-6-3-
ஏலு மறைப் பொருளே -1-6-9-
எங்கள் குடிக்கு அரசே -1-6-10-என்று வாசகத்துக்கு வாச்யமும் -வாச்யத்துக்கு வாசகமுமாக அறுதியிட்டு அவனை
செய்யவள் நின்னகலம் சேமம் எனக் கருதி –ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை -1-6-1- என்கையாலே
லோகத்தில் உள்ளாருக்கு பீதி பக்தி பிராப்தி மூலமான ஆசாரங்கள்
பிரமாண அனுகுனமாகத் தோன்றும்படி யாகவும்
சொல் வழுவாத ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தோன்றும்படியாகவும்

செங்கீரை என்கிற வ்யாஜ்யம் முதலாக
சப்பாணி
தளர் நடை
அச்சோ அச்சோ
புறம் புல்கல்
அப் பூச்சி என்கிற வியாபார விசேஷங்களைப் பிரார்த்தித்து

அவன் இவை செய்யச் செய்ய அவற்றுக்குத் திருவடிகள் நோம் -என்றும்
தளர் நடையில் விழுந்து எழுந்து இருக்கையாலே திரு மேனி நோம் -என்றும்
அச்சோ புறம் புல்குகளாலே தம்முடைய திரு மேனியை வன்மை என்று நினைத்து
அத்தாலும் திரு மார்பு நோம் என்று அஞ்சி

நாம் பிரார்த்தித்து என்ன கார்யம் செய்தோம் -என்று அனுதபிக்கிற அளவில்
தன் நிவ்ருத்த   அர்த்தமாக
தன் திருத் தோள்களையும்
ஆழ்வார்களையும் காட்ட

அவையும் பய அபய ஹேது வாகையாலே
அவற்றை அமைத்து திரு மேனியில் வாட்டத்தை நினைத்து
படுக்கை வாய்ப்பாலே உறங்குகிறான் இத்தனை என்று உறங்குகிறவனை எழுப்பி
அநச்னன்-என்கிற பிரதிஜ்ஞ்ஞையைக் குலைத்து
அஸ்நாமி -என்கிறபடியே –(பத்ரம் பலம் தோயம் அஸ்நாமி )
அமுது செய்ய வேணும் -என்கிறார் –

(அது உபநிஷத் வாக்கியம்
இது கீதாச்சார்யன் வாக்கியம்
உண்ணும் குலத்தில் பிறந்த நீ உண்ண வேண்டுமே )

————————————————————————————

அரவணையாய் ஆயரேறே யம்ம முண்ணத் துயில் எழாயே
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத்
திருவுடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப்  பருகிடாயே –2-2-1-

பதவுரை

அரவு அணையாய்–சேஷசாயி யானவனே!
ஆயர் ஏறே–இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத–நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்–உறங்கிப் போய் விட
இன்றும்–இப் போதும்
உச்சி கொண்டது–(பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது;
ஆல்–ஆதலால்
அம்மம் உண்ண–முலை யுண்பதற்கு
துயில் எழாய்–(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்–(நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!
(உனக்குப் பசியில்லை யென்போமென்றா)
வயிறு அசைத்தாய்–வயிறுந்தளர்ந்து நின்றாய்;
வன முலைகள்–(எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய–பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய–அழகை உடைய
வாய் மடுத்து–(உன்) வாயை வைத்து
திளைத்து–செருக்கி
உதைத்து–கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்-முலையுண்பாய்.

அரவணையாய் ஆயரேறே யம்ம முண்ணத் துயில் எழாயே –
திரு வநந்த ஆழ்வான் படுக்கை வாய்ப்ப்பாலே கண் வளர்ந்த வாசனையோ
ஆயர்  ஏறான இடத்திலும் பள்ளி கொள்ள வேண்டுகிறது
சோறு -என்றாலும்
பிரசாதம் -என்றாலும்
அறியான் என்று நினைத்து -அம்மம் உண்ணத் துயில் எழாயே என்கிறார் –

இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ –
பகல் யுண்டத்தை மறந்தார் போலே காணும்
பகல் உண்ணாதார் இரவும் உண்ணார்களோ
எழுப்பின அளவிலும் எழுந்து இராமையாலே -கன்ற எழுப்ப ஒண்ணாது -என்று விட்டேன்
இன்றும் போய் உச்சிப் பட்டது என்கிறார் விடிந்த மாத்ரத்தையே கொண்டு –

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாயத் –
உண்ண வேண்டா -என்னும் போதும் எழுந்து இருந்து வந்து
வேண்டா என்ன வேண்டாவோ -என்ற அளவிலே
எழுந்து இருந்து வருகிறவனைக் கண்டு
வயிறு தளர்ந்து முகம் வாடிற்று -என்று எடுத்து அணைத்துக் கொண்ட அளவிலே
அழகிய முலைகள் நெறித்துப் பாயத் தொடங்கிற்று  –
வனப்பு -அழகும் பெருமையும்-

திருவுடைய வாய் மடுத்துத் –
பிராட்டிக்கு அசாதரணமான வாய் என்னுதல்-
திருவாய்ப்பாடியில் சுருட்டார் மென் குழல் -3-1-7-என்கிறபடியே குழல் அழகு படைத்தார்க்கு எல்லாம்
அம்ருத பானம் பண்ணும்படி சாதாரணமான வாய் -என்னுதல்
அழகிய வாய் -என்னுதல்
திரு-அழகு

திளைத்து உதைத்துப்  பருகிடாயே –
முலையிலே வாய் வைத்து
முழுசி
வயிற்றிலே உதைத்து
அமுது செய்ய வேணும் என்று பிரார்த்திக்கிறார்-

————————————————————————————-

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே –2-2-2-

பதவுரை

எம் பிரான்–எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்–உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்–(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்–(உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்–மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்–(ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை–நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்–கண்டதில்லை;
எத்தனையும்–(நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்–நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்–(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே–நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து–முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி–மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்–முலை உண்பாயாக.

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
நறு வெண்ணெய்-பழுதற உருக்கி வைத்த நெய்யும்
செறிவுறக் காய்ந்த பாலும்
பனி நீர் அறும்படி நன்றாகத் தோய்த்த தயிரும் -சாய்த்தால் வடிவத்தை இருக்கிற தயிர் என்னவுமாம் –
நறு வெண்ணெயும் -செவ்வி குன்றாமல் கடையும் பக்வம் அறிந்து கடைந்து வைத்த நறு வெண்ணெயும்-

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
ஒன்றும் பெற்று அறியேன் -என்னுதல்
இவை வைத்த பாத்ரங்களில் சிறிதும் பெற்று அறியேன் என்னுதல்

ஆரோ கொண்டு போனார் -என்று
அறிகிலேன் -என்றவாறே –
எம்பிரான் -என்ற போதை முக விகாரத்தாலும்
நீ பிறந்த பின்னைப் பெற்று அறியேன் -என்றதாலும்
என்னைக் குறித்து அன்றோ நீ இவை இவை எல்லாம் சொல்லுகிறது -என்று கோபத்தோடு போகப் புக்கவனை
வா -என்று அழைத்த வாறே
என்னைப் பிடித்து அடித்தல் செய்ய வன்றோ நீ அழைக்கிறாய்
நான் எது செய்தேன் -என்ன –

எத்தனையும் செய்யப் பெற்றாய்-
உனக்கு வேண்டினது எல்லாம் செய்யக் கடவை -என்ன
இப்போது சொல்லுகிறாய் உன் வார்த்தை அன்றோ -என்ன

ஏதும் செய்யேன் கதம் படாதே –
நான் யுன்னை அடித்தல் கோபித்தல் செய்யேன்
நீ கோபியாதே வா -என்ன -என்றவாறே-

முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே
முத்துப் போலே இருக்கிற திரு முத்து தோன்ற மந்த ஸ்மிதம் செய்து நின்ற அளவிலே
சென்று எடுத்துக் கொண்டு
இவனை சிஷிப்பதாக நினைத்தவை எல்லாம் மறந்து
அந்த முறுவலோடு வந்து
மூக்காலே முழுசி
முலை மார்புகளிலே முகத்தாலும் மூக்காலும் உரோசி முலை யுண்ணாய் -என்கிறார்-

இத்தால்
வைத்த நெய்யால் -சாஷாத் முக்தரையும்

காய்ந்த பாலால் -சொல்லுவதே ஓத்தின் சுருக்கு -என்றும்
நாம நிஷ்டோசம் யஹம் ஹரே -என்றும் இருக்கிறவர்களையும்

வடி தயிரால் -சதுர்த்தி உகாரங்களிலே தெளிந்து –
தந் நிஷ்டராய் –
மகாரத்திலே ப்ர்க்ருத்யாத்ம விவேக யோக்யரானவர்களையும் –

நறு வெண்ணெயால் -செவ்வி குன்றாமல் இவ்வடைவிலே ப்ரக்ருத்யாத்ம விவேகம் பிறந்து
அஹங்கார மமகார நிவ்ருத்தமான ஆத்ம குணங்களால் பூரணராய்
மோஷ சாபேஷராய்-இருக்கிறவர்களையும் சொல்லுகிறது  –

—————————————————————————-

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தரல்லர்  உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன்
நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –2-2-3-

பதவுரை

தம் தம் மக்கள்–தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது–அழுது கொண்டு
சென்றால்–(தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்–(அக் குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்–பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து–(தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய–உன் மேல் பிணங்க
வாழ வல்ல–(அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா–கண்ண பிரானே!
உந்தையார்–உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்–உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்–(அபலையான) நானும்
உன்னை–(தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்–சிறிதும அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
(இவை யெல்லாங் கிடக்க)
நந்த கோபன்–நந்த கோபருடைய
அணி சிறுவா–அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை–எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்–உண்பாயாக

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் வந்து நின் மேல் பூசல் செய்ய –
தெருவிலே விளையாடுகிற பிள்ளைகள் முதலானோர் பலரும் -உன் மகன் எங்களை அடித்தான் -என்று முறைப்படுவதாக
பிள்ளைகளையும் கொண்டு வந்து தீம்பேற்றிக் காட்டின அளவிலே

ஆய்ச்சி நான் ஒன்றும் செய்திலேன்
இவர்கள் தாங்களாக்கும் இவை எல்லாம் செய்தார்கள் -என்று இவர் பீதனாய் அழப் புகுந்தவாறே

இவள் அழுது கொடு வந்தவர்களை அழுகை மாற்றுதல்
இவனை சிஷித்தல்
செய்யாதே
தன்னைத் தானே நலிந்து கொள்ளப் புக்கவாறே

அவர்கள் தாய்மார் வந்தவர்கள் -இது என் என்று விலக்கப் புக்கவாறே
இந் நேரிலே தம் தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ -என்றது கேட்டு
அவர்கள் போனவாறே

இவனைப் பிடித்து நலிவதாகத் தேடி –
இவன் அழுகையைக் கண்டு
உன் மேல் எல்லாரும் தீம்பேற்றி அலர் தூற்ற –
அதுவே யாத்ரையாக –

வாழ வல்ல வாசுதேவா –
பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ-என்று கோபித்து –
அத்தை மறந்து

உந்தையார் உன் திறத்தரல்லர்-
உந்தையரான ஸ்ரீ நந்தகோபர் உன் திறத்தல்லர் -உன்னை சிஷித்து வளர்க்க மாட்டார்-

உன்னை நான் ஓன்று உரப்ப மாட்டேன் –
நானும் உன்னை அதிரக் கோபித்து -நியமிக்க மாட்டேன் –

நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –
நந்த கோபனுக்கு என்றே வாய்த்த பிள்ளாய் -என்று கோபித்து
அத்தையும் மறைத்து –

இவனை எடுத்து
சுரந்த முலையை -நான் தர -நீ உண்ணாய்-என்று பிரார்த்திக்க வேண்டி
நில்லா நின்றது இறே-

—————————————————————————-

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழியப்
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே யாயர் கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே –2-2-4-

பதவுரை

அமரர் கோவே–தேவர்களுக்குத் தலைவனே! (நீ)
கஞ்சன் தன்னால்–கம்ஸனாலே
புணர்க்கப்பட்ட–(உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட
கள்ளச் சகடு–க்ருத்ரிம சகடமானது
கலக்கு அழிய–கட்டு (க்குலைந்து உருமாறி) -சந்தி பந்துகள் குலைந்து -அழிந்து போம்படி
பஞ்சி அன்ன மெல் அடியால்–பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால்
பாய்ந்த போது–உதைத்த போது
நொந்திடும் என்று–(உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று
அஞ்சினேன் காண்–பயப்பட்டேன் காண்;
(என்னுடைய அச்சம்)
ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்–இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அளவல்ல காண்;
கஞ்சனை–(உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை
உன் வஞ்சனையால்–உன்னுடைய வஞ்சனையினாலே
வலைப் படுத்தாய்–(உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே!
முலை உணாய்.

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு-
பிறப்பதற்கு முன்னே கொலை கருதிப் பார்த்து இருக்கிறவன்
திருவாய்ப்பாடியிலே வளருகிறான் -என்று கேட்டால் கொலை கருதி விடாது இரான் இறே

இனி -இதுக்காவான் இவன் -என்று தன் நெஞ்சில் தோன்றின க்ருத்ரிம வியாபாரங்கள் எல்லாத்துக்கும் தானே
சப்தமிட்டுப் புணர்ந்து சகடாசூரனைக் கற்பித்து வர விட வருகையாலே –
கள்ளச் சகடு -என்கிறார் –
பூதனையிலும் களவு மிகுத்து இருக்கும் காணும் -ஆவேசம் ஆகையாலே சகடாசுரனுக்கு-
(கள்ளச் சகடு கலைக்கழிய காலோச்சி இவர் திருமகளாரும் )

கலக்கழியப் பஞ்சி யன்ன மெல்லடியால் பாய்ந்த போது -நொந்திடும் என்று-அஞ்சினேன் காண்
சாடு கட்டுக் குலைந்து அச்சு தெறித்து போம்படி பஞ்சிலும் காட்டிலும் அதி மார்த்வமான
திருவடிகளால் பாய்ந்த போது நொந்திடும் என்று அஞ்சினேன் காண்-

அமரர் கோவே –
அமரருடைய பாக்யத்தாலே இறே நீ பிழைத்தது -என்னுதல்-

அன்றிக்கே
பிரதிகூலித்து கிட்டினார் முடியும் படியான முஹூர்த்த விசேஷத்திலே நீ பிறக்கையாலே -என்னுதல் –
இப்படி பய நிவர்த்தகங்களைக் கண்டாலும் பயம் மாறாது இறே இவருக்கு –

யாயர் கூட்டத் தளவன்றாலோ-கஞ்சனை யுன் வஞ்சனையால் வலைப் படுத்தாய் முலை யுணாயே-
பஞ்ச லஷம் குடி இருப்பிலும் திரண்ட பிள்ளைகள் அளவன்றாகில்
ஒ ஒ உன்னை எங்கனே நியமித்து வளர்ப்பேன்

இங்கனே இவர் ஈடுபட புகுந்தவாறே –
நம் கையில் கம்சன் பட்டது அறியீரோ -என்ன

கம்சன் பட்டது உன் பக்கல் பண்ணின வஞ்சனை ஆகிய பாப வலை சூழ்ந்து அன்றோ பட்டது
நீ வலைப்படுத்தாய் -என்கிறது வ்யாஜம் மாத்ரம் அன்றோ –
அன்றைக்கு நீ பிழைத்தது என் பாக்கியம் அன்றோ -என்னுதல் –

அன்றிக்கே
நீ வஞ்சனை செய்து சிறைப்படுத்திக் கொல்ல-அவன் பிராணன் இழந்த படியால் –
நான் பிராணன் பெற்றேன்
என்று தேறி முலை யுண்ணாய் என்கிறார்-

—————————————————————————–

தீய புந்திக் கஞ்சனுன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து என் முலை யுணாயே –2-2-5-

பதவுரை

வாசுதேவா–கண்ண பிரானே!
தீய புந்தி–துஷ்ட புத்தியை யுடைய
கஞ்சன்–கம்ஸனானவன்
உன் மேல்–உன் பக்கலிலே
சினம் உடையவன்–கோபங்கொண்டவனா யிரா நின்றான்;
சோர்வு பார்த்து–(நீ) தனியா யிருக்கும் ஸமயம் பார்த்து
மாயம் தன்னால்–வஞ்சனையால்
வலைப் படுக்கில்–(உன்னை) அகப் படுத்திக் கொண்டால்
வாழகில்லேன்–(நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்;
தாயர்–தாய்மார்களுடைய
வாய் சொல்–வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்–அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்–வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா–(நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா;
ஆயர் பாடிக்கு–திருவாய்ப் பாடிக்கு
அணி விளக்கே–மங்கள தீபமானவனே!
அமர்ந்து வந்து–பொருந்தி வந்து
என் முலை உணாய்

தீய புந்திக் கஞ்சனுன் மேல் சினமுடையன் –
ஜன்மாந்தர வாசனையாலும்
அசத் சஹ வாசங்களாலும்
துஷ்ட மந்த்ரிகள் வார்த்தை கேட்கையாலும்
சாதுவான அக்ரூரர் வார்த்தை கேளாமையாலும்
ராஜ குலத்தில் பிறந்து இருக்கச் செய்தேயும் தனக்கு என்று ஓர் அறிவு இல்லாமையாலும்
ப்ரத்யக்ஷ தரிசன அபாவத்தாலும் (சிசுபாலன் தர்சனம் பெற்றானே)
சகல பிராணி விருத்தமான அசன் மார்க்க நிரூபகன் ஆகையாலும்
இவை எல்லாத்துக்கும் ஹேதுவான கர்ப்ப தோஷத்தாலும் –
தீய புந்திக் கஞ்சன் -என்கிறார் –

தீய புந்தியாவது –
அஹங்கார மமகார நிபந்தனமாக
தன்னைத் தானே முடிக்க விசாரித்து அத்யவசித்து இருக்கை-

இப்படிப்பட்ட புத்தியை யுடையவன் நிர் நிபந்தனமாக உன் மேல் அதி குபித சலித ஹ்ருதயனாய்
விபரீத தர்மங்களான மாயா ரூபிகளை பரிகரமாக யுடையவனாய்
எப்போதோ இடம் -என்று சோர்வு பார்த்து- மாயா ரூபிகளை வர விட்டு
அவர்களுடைய சூட்சி யாகிற வலையிலே அகப் படில் நான் உயிர் வாழ்ந்து இரேன்-முடிவன் –

சோர்வு பார்த்து-மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா-
தனியே புறப்படுகை –
உன்னாலே இறே சாதுவான வாசுதேவன் முதலானாரையும் அவன் நலிகிறது
உன்னைக் கண்டால் அவன் வர விட்ட மாயா ரூபிகள் விடுவார்களோ –

தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா-
கீழே -தேவகி சிங்கமே -என்று சொல்லி வைத்து
இப்போது தன்னை மாதாவாக சொல்லும் போது

பித்ருத்வம் நோபலஷயே -அயோத்யா -58-31-
(சுமந்திரன் -கொண்டு வந்த செய்தி -தந்தையாக மதிக்க வில்லையே -இளைய பெருமாள் –
அனைத்தும் ராகவனே
அதே போல் இங்கும் யசோதை இளம் சிங்கம் )

உந்தை யாவன் என்று உரைப்ப -பெருமாள் திரு மொழி -7-3-
நந்த கோபன் மைந்தன்-
நந்த கோபன் பெற்றனன் –
எங்கு இங்கிதத்தாலே காட்டினானாக வேணும் இறே

பிறந்த அன்றே மாத்ரு வசனம் கார்யம் -என்று கொண்ட யுனக்கு
என் வார்த்தையும் கார்யம் என்று கைக் கொள்ள வேணும் காண்-
பலரும் அறியும்படி பல காலும் சொன்னேன்
லீலா ரசத்தை நச்சியும் போகாதே கொள்-

ஆயர் பாடிக்கு அணி விளக்கே –
என் அளவேயோ
இவ் ஊரில் உள்ள எல்லாரும் உன்னையே காணும்படி அழகிதான தீபம் போலேயான
சௌந்த்ர்யாதி குணங்களாலே பிரகாசிதன் ஆனவனே –
(ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கே இவர் திருமகளார் )

விளக்குக்கு அழகு தூண்டாமையும் நந்தாமையும் –
இப்படி இருப்பதொரு விளக்கு யுண்டோ என்னில்
ப்ரதீதியில் ப்ரத்யஷ மாத்ரத்தாலே யுண்டு என்னவுமாம் –
அனுமானம் ப்ரத்யஷ சாபேஷம் ஆனாலும்
ப்ரத்யஷம் அனுமானம் சாபேஷம் ஆகாது
ஆயிருக்க இரண்டும் ஸ்மாரக தர்சனத்தாலே ஏக ஆஸ்ரயத்திலே காண்கையாலே
இவை நிரூபியாமல் கண்ட மாத்ரமே கொண்டு –
அணி விளக்கு -என்னுதல்

அன்றியிலே
அபூதம்  என்னுதல்   –
(இல் பொருள் உவமை அணி )

யமர்ந்து என் முலை யுணாயே —
உன் இஷ்டத்திலே போக்குவரத்து சீக்ர கதி யானாலும்
அழைக்க வரும் போது மந்த கதியாக வேணும் காண் –

இனி இவர்க்கு முலைப் பால் ஆவது
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமாய் –
மங்களா சாசன பர்யந்தமான
பக்தி ரூபா பன்ன ஜ்ஞான ப்ரவாஹம் இறே
பக்தி உழவன் ஆனவனுக்கு
தாரகாதிகள் எல்லாம் இது தானே இறே-

————————————————————————–

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் யுன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீ கேசா முலை யுணாயே–2-2-6-

பதவுரை

மின் அனைய–மின்னலை யொத்த
நுண்–ஸூக்ஷ்மமான
இடையார்–இடையை யுடைய பெண்களின்
விரி குழல் மேல்–விரிந்த (பரந்த) கூந்தலின் மேல்
நுழைந்த–(தேனை உண்ணப்) புகுந்த
வண்டு–வண்டுகள்
(தேனை யுண்டு களித்து)
இன் இசைக்கும்–இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது–போக்யமாக
அமர்ந்தாய்–எழுந்தருளி யிருப்பவனே!
உன்னை கண்டார்–உன்னைப் பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்–இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ–என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்–என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை–வார்த்தையை
எய்துவித்த–(எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா–ஹ்ருஷீகேசனே!
முலை உணாய்.

மின்னனைய நுண்ணிடையார் –
மின் கொடி ஒரு வகை ஒப்பாயிற்று ஆகிலும் –
அது போராமை இறே நுண்ணிடையார் என்கிறது –

விரி குழல் மேல் நுழைந்த வண்டு –
விரி குழல் -என்கையால் –
நீண்டு பரந்து இருண்டு சுருண்டு நெய்தது-என்றால் போலே
சொல்லுகிற எல்லா வற்றுக்கும் உப லஷணம்
(நீண்டு பரந்து –சுருண்டு நெய்த்து –ஈண்டு சடையாயினவே -கம்பர் )

குழல் மேல் வந்து படிந்து உள்ளே முழுகின வண்டுகள்
மது பானம் செய்த செருக்கால் –

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதான இசைகளைப் பாடா நிற்கிற ஸ்ரீ வில்லிபுத்தூரை-

இனிது அமர்ந்தாய் –
பரம பதத்திலும் காட்டிலும் மிகவும் விரும்பி அந்த இசையைக் கேட்டு
இனிது அமர்ந்து இறே- வட பெரும் கோயில் யுடையான் கண் வளர்ந்து அருளுகிறது –

நித்ய நிர்தோஷ
ஸ்வயம் பிரகாச
அபௌருஷேய
ஏகாரத்த நிர்ணயமான
சகல வேதங்களையும் மங்களா சாசன பர்யந்தமாக நிர்ணயித்து
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் -என்று பிரசித்தரான இவர்
வேறு ஒரு வ்யக்தியில் சேர்க்கவும் அரிதாய்
அசாதாரணங்களான-
விஷ்ணு- வாசு தேவன் -நாராயணன் -என்னும் திரு நாமங்கள் யுண்டாய் இருக்க
வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் -என்று வஸ்து நிர்த்தேசம் செய்தார் இறே
இது இறே  பிரமாணிகருக்கும் சாஷாத் கர பரருக்கும் உத்தேச்யம் –
(இது அன்றோ அவன் உகந்த திரு நாமம் –
சக்கரவர்த்தி திருமகன் நந்தகோபன் குமாரன் என்னும் போது உகப்பது போல் )

யுன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த –
உன்னைக் கண்ட பாக்யாதிகர் -ஸூக தாதம் -என்னும்படி யான வ்யாசாதிகள் உடைய உபாசன மாத்ரங்கள் அன்றிக்கே
இதுவே இறே ஒரு படியாய் இரா நின்றதீ -என்று விஸ்மிதராய்-
இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-என்ன நோன்பு நோற்றாள் கொலோ-என்று
பல காலும் சொல்லும் படியான வார்த்தையால் வந்த பிரசித்தியை யுன்டாக்கித் தந்த –

இருடீ கேசா முலை யுணாயே-
இந்த்ரியங்கள் வ்யக்தி அந்தரங்களிலே செல்லாதபடி சௌந்தர்யாதிகளாலே அபஹரிக்க வல்லவனே –

இடையாலே
ஒன்றையும் பொறாத வைராக்யமும் –

இடை நோக்குவது
முலைகள் விம்மி பெருத்தல் ஆகையாலே மிக்க பக்தியையும்

விரி குழல் -என்கையாலே –
நாநா வானப் பிரபத்திகளை  ஏகாஸ்ரயத்தில் சேர்த்து முடித்து நிஷ்டனாய் –
ஸூ மநாவுமாய் உபதேசிக்க வல்ல ஆச்சார்யனையும்

மேல் நுழைந்த வண்டு -என்கையாலே இவற்றுக்கு பாத்ரமான பிரபன்னனையும்

இன்னிசை -என்கையாலே
ஆச்சார்யனுடைய ஜ்ஞான பக்தி வைராக்ய வைபவங்களை இனிதாகப் பேசி
அனுபவிக்கிற வாக்மித்வங்களையும்

இவை எல்லாம் காணவும் கேட்க்கவுமாவது
திரு மாளிகையிலே ஆகையாலே
இத்தை உகந்து அருளி
இனிது அமர்ந்த வில்லி புத்தூர் உறைவாரையும் காட்டுகிறது-

——————————————————————————

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே -2-2-7-

பதவுரை

கண்டவர்கள்–(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்–(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நின் ஒப்பாரை–உன்னைப் போன்ற குழந்தைகளை
பெறுதும்–பெறுவோம் (பெற வேணும்)
என்னும்–என்கிற
ஆசையாலே–ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்–(உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்–வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ–புஷ்பங்களை யணிந்த
குழலினார்–கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால்–(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி–(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்–உன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
உண்ண வேண்டி–பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்–(உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு
வந்து நின்றார்–வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ முலை உணாய்.

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
புத்ர சாபேஷராய் வர்த்திக்கிற ஸ்திரீகள் உன்னைக் கண்டால்
அபஹ்ருத சித்தைகளாய்-
நாம் இப்படி ஒரு பிள்ளை பெறப் பெறுகிறோம் இல்லையே நமக்கு இது கூடுமோ
என்கிற ஆசையோடு –

கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
தம் தாமுடைய உத்தியோகங்களை மறந்து நில்லா நின்றார்கள் –

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார்-
வேறு யுவதிகளாய் இருப்பார்
வண்டு முழுகி முழுசும்படியான செவ்வி மாறாத மாலைகளாலே
அலங்க்ருதமான குழல்களையும் யுடையார் சிலர்
தம் தாமுடைய அபிமதங்களாலே ஸ்பர்சிப்பதாக நினைத்து
தங்கள் கண்களாலே சமுதாய சோப தர்சனம் செய்து
அணைத்து
எடுத்து
வாக் அம்ருத சாபேஷைகளாய் கொண்டு போவதாக வந்து நில்லா நின்றார்கள் –
நீயும் அவர்களோடு போவதாக பார்த்து ஒருப்படா நின்றாய் –

கோவிந்தா நீ முலை யுணாயே –
நீ கோவிந்தன் ஆகையாலே அவர்களோடு போகவும் வேணும்
போம் போது-
யுண்டு போகவும் வேணும் காண்-என்று பிரார்த்திக்கிறார் –

————————————————————————-

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய் யுன்
திரு மலிந்து திகழ் மார்வு தேக்க என்னல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே –2-2-8-

பதவுரை

இரு மலை போல்–இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த–எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்–(சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்–உடம்பை
எரி செய்தாய்–(பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து–(நீ) வந்து
என் அல்குல் ஏறி–என் மடிமீது ஏறிக் கொண்டு
உன்–உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு–அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க–(முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை–ஒரு முலையை
வாய் மடுத்து–வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை–மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு–(கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
(மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்)
ஏங்கி ஏங்கி–இளைத்திளைத்து
(இப்படி)
இரு முலையும்–இரண்டு முலையையும்
முறை முறை ஆய்
மாறி மாறி
இருந்து–பொருந்தி யிருந்து
உணாய்–உண்பாயாக.

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய்-
ஷீராப்தியில் வந்து நலிவதாகக் கோலி
இரண்டு பெரிய மலை போலே கிளர்ந்து  வந்த
மது கைடபர்கள் என்கிற இரண்டு மல்லரை
திரு வநந்த ஆழ்வானாலே உரு மாயும் படி எரித்துப் பொகட்டாய்-என்னுதல்-
(திரு மெய்யம் இந்த சேவை இன்றும் சேவிக்கிறோம் )

கம்சனுடைய மல்லர் உன்னைக் கண்ட பய அக்னியாலே
எரித்து விழும்படி செய்தாய் -என்னுதல்   –

யுன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க –
திரு மலிந்து தேர்க்கும் உன் மார்வு திகழ –

மலிகை யாவது –
க்ராம நிர்வாஹன் முதலாக
பஞ்சாசத் கோடி விச்தீர்ண அண்டாதிபதி பர்யந்தமான அளவன்றிக்கே
த்ரிபாத் விபூதியில் யுள்ளாரிலும் வ்யாவ்ருத்தையாய்
சர்வ பூதாநாம் ஈஸ்வரி -என்கிற சர்வாதிக்யத்தை யுடைய
பெரிய பிராட்டியாராலே நிரூபிக்கப் பட்ட உன் மார்பு திகழ –

இத்தால் -அவன் ஸ்ரீ யபதி -என்ன வேணுமே
மலிதல் -கிளப்பும்
தேக்க—தேர்க்க-தேர்க்கை -நிரூபகம்
திகழ்தல் -ஸ்ரீ யபதி -என்னும் விளக்கம்

அன்றிக்கே
தேக்க -என்ற பாடம் ஆயிற்றாகில் –
உன் மார்பில் முலைப்பால் தேங்க -என்கிறது –

என்னல்குல் ஏறி-
என் ஒக்கலையிலே வந்து ஏறி –

ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே-
ஒரு முலையைத் திருப் பவளத்திலே வைத்து
ஒரு முலையை திருக் கையிலே பற்றி நெருடி
இரண்டு முலையையும் மாறி மாறி பால் வரவின் மிகுதி திருப் பவளத்தில் அடங்காமையாலே-விட்டு விட்டு என்னுதல்-
உடலை முறுக்கி ஏங்கி ஏங்கி என்னுதல்
அமர விருந்து யுண்ண வேணும் –

———————————————————————–

புழுதி அளைந்த ஆயாசத்தாலே வந்த வேர்ப்பு முகத்திலே காண
வந்து அமுது செய்ய வேணும் -என்கிறார் –

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா வம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே -2-2-9-

பதவுரை

அம்ம–தலைவனே!
(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த)
அங்கு–அக் காலத்திலே
விம்ம–(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு–(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த–(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே–தேவாதி ராஜனே!
அம் கமலம் போது அகத்தில்–அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்–அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்–செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப–வியர்த்துப் போக
இ முற்றத்தூடே–இந்த முற்றத்திலேயே
தீமை செய்து–தீம்பைச் செய்து கொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக–உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா–புழுதி யளையாதே;
முலை உணாய்–முலை யுண்ண வாராய்.

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் செங்கமல முகம் வியர்ப்பத் –
அழகிதாக மலர்ந்த தாமரைப் பூவினுள்ளே
செவ்வி மாறாத  மது வெள்ளத்தை வண்டுகள் யுண்டு களித்து சிதறின மது திவலை முத்து போலே –
அச் செங்கமலம் போலே இருக்கிற திரு முகத்திலே வேர்ப்பு துளிகள் அரும்ப -என்னுதல்-

அங்கமலச் செங்கமல முகத்தில் ஒளியை யுடைத்தான முத்துக்கள் சிந்தினால் போலே வேர்ப்ப அரும்ப -என்னுதல்
அப்போது -கமலம் -என்று ஜலத்துக்கு பேராம்
அம் -என்று அழகு-

தீமை செய்து இம் முற்றத்தூடே அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா-
இப்போது முற்றத்தோடு அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா –
இப்போது திரு மேனி எல்லாம் புழுதியாக முற்றத்தின் நடுவே இருந்து அளைய வேண்டா-

வம்ம-
ஆச்சர்யம் -என்னுதல்
ஸ்வாமி -என்னுதல் –

விம்ம அங்கு  அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை  யுணாயே
அங்கு அமரர்க்கு விம்ம அமுதம் அளித்த அமரர் கோவானவனே
விம்மல் -நிறைதல் –

—————————————————————————-

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடியாடி அசைந்து யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –2-2-10-

பதவுரை

ஓடஓட–(குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்
ஒலிக்கும்–சப்திக்கின்ற
கிண் கிணிகள்–பாதச் சதங்கைகளினுடைய
ஓசைப் பாணியாலே–ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–இடைவிடாது பாடிக் கொண்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை–அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை
அசைந்து அசைந்திட்டு–வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து
ஆடி ஆடி–ஆடிக் கொண்டு
வருகின்றாயை–வருகின்ற உன்னை
பற்பநாபன் என்று இருந்தேன்–(வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்;
நீ–நீ
ஆடி–ஆடிக்கொண்டே
ஓடி ஓடி போய் விடாதே–(என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே
முலை உணாய்.

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே பாடிப் பாடி –
ஓசைக் கிண்கிணிகள் ஓடவோட ஆட ஒலிக்கும் பாணியாலே
பாணி -த்வனி –
கிண்கிணி ஒலிக்கும் பாணி தாளமாகப் பாடிப் பாடி –
அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து அசைந்து ஆடி –

வருகின்றாயைப்
வருகிற யுன்னை –

பற்பநாபன் என்று இருந்தேன் –
கீழே பற்பநாபா சப்பாணி -1-7-5-என்றத்தை நினைத்து
பற்ப நாபன் என்று இருந்தேன் -என்கிறார் –
ஜகத் காரண வஸ்துவான மேன்மையை நினைந்து இருந்தேன் –

அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றும்படி பிள்ளைத் தனத்தால் வந்த நீர்மை மாத்ரம் அன்றிக்கே
அதி மாத்ரமான இந்த லீலா ரசம் எல்லாம் வேணுமோ –
வாராய் -என்ன –

ஆடி யாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி ஓடி யோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –
ஒடப் புகுந்தான் –
தாமும் அடிப்பதாக செல்ல ஓடி ஓடி போகிறதைக் கண்டு
போகாதே கொள்ளாய்-நீ உத்தமன் அன்றோ -முலை யுண்ண வாராய்  -என்கிறார் –

புருஷோத்தமத்வம் ஆவது –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம் போலே காணும்

இத்தால்
அப்ராப்ய மனசா சஹ -என்று வேதங்களுக்கு எட்டாமல் போனால் போலே
பரம வைதிக அக்ரேசரராய் இருக்கிற இவர்க்கும் எட்டாமல் போகலாமோ என்று தோற்றுகிறது-

ஓசை கிண் கிணிகள் ஓடவோட ஆடி யாடி ஒலிக்கும் பாணியாலே
பாடிப் பாடி அதனுக்கு ஏற்ற கூத்தை யசைந்து யசைந்திட்டு
ஆடி யாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஓடி யோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே -என்று அந்வயம் –

———————————————————————–

நிகமத்தில் -இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வாரணிந்த கொங்கை யாச்சி மாதவா யுண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே –2-2-11-

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை–ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி–யசோதை
மாதவா–மாதவனே!
உண்–முலையை (உண்பாயாக)
என்ற–என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்–வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின்
வாசம்–நல்ல வாசனை
நிகழ் நாறும்–ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும்
பார் அணிந்த–பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்–பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர்பிரான்–பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்–பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்
சீர் அணிந்த–குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில்
சென்ற–பதிந்த
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–அடைவார்கள்

வாரணிந்த கொங்கை யாச்சி –
ராஜாக்களுக்கு அபிமதமான த்ரவ்யங்களை
பரிசாரகர் ஆனவர்கள் கட்டி இலச்சினை இட்டு கொண்டு திரிவாரைப் போலே இறே
கிருஷ்ணனுக்கு அபிமதமான முலைகள் கச்சிட்டு சேமித்து வைத்து -என்னும் இடம் தோன்ற
வாரணிந்த கொங்கை யாச்சி -என்கிறார்
புத்ரவத் ஸ்நேஹம் நடக்கும் போது ராஜவத் உபசாரமும் வேணும் இறே
வார் -கச்சு –

மாதவா யுண் என்ற மாற்றம் –
பெரிய பிராட்டியாராலே அவாப்த சமஸ்த காமன் ஆனவனை இறே
முலை யுண்ண வா -என்று ஆச்சி அழைத்ததும் –
அவள் அழைத்த பிரகாரங்களை-

நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர் –
நீருக்கு அலங்காரமாக மலர்ந்த செங்கழு நீரில் மிக்க பரிமளம் ஒருபடிப்பட தோன்றுகிற
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகராய்-

பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் –
பூமியில் யுண்டான ராஜாக்களுக்கு  எல்லாம் பிரதானனான ஸ்ரீ வல்லபன் –
செல்வ நம்பி -முதலானோர் கொண்டாடும் படியுமாய்
அநாதி சித்தமான மங்களா சாசன பிரசித்தியையும் யுடையவர் –

பட்டர் பிரான் –
சத்ய வாதிகளான ப்ராஹ்மன உத்தமர்க்கு உபகாரகர் ஆனவர்

பாடல் வல்லார் –
இவருடைய பாவ பந்தம் இல்லை யாகிலும்
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே பாட வல்லார்-

சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே —
பாட வல்லார் தாமே சென்ற சிந்தை பெறுவார்

சீர் –
ஆஸ்ரித பாரதந்த்ர்யம்

செங்கண் –
உபய விபூதி நாதத்வத்தால் வந்த ஐஸ்வர்யம் -ஆதல்
பெருமை யாதல்
வ்யாமோஹம் ஆதல் –

ஜல சம்ருதி மாறாத செங்கழு நீரைச் சொல்லுகையாலே
மங்களாசாசன குணத்திலே ஒருப்பட்ட ஸூமநாக்களையும்-

நிகழ்  நாறும் -என்கையாலே  –
அவர்களுடைய பிரசித்தியையும் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –2-1-மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி-

December 14, 2014

மெச்சூது -பிரவேசம் –

ஆழ்வார்களில் சிலர் தாங்களும் யுவதிகளாய்-
பிராட்டிமார் அவஸ்தையும் பாவித்து
அவனையும் பஞ்ச விம்சதி வார்ஷிகனான யுவா குமாரனாக பாவித்தால்
பிறக்கக் கடவ சர்வாங்க சம்ஸ்லேஷத்தை –

தம்மை மாதாவாகப் பாவித்து
அவனுடைய நீர்மையை ஸ்வரூபம் ஆக்கி
அத்தாலே அவனை தமக்கு புத்ரனாக்கி
அவனுடைய மேன்மையை குண பாவமாக்கி
அவனுடைய அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்ற நின்ற ஸைசவ அவஸ்தையை
யசோதா பிராட்டியார் முதலான அனுபவித்த பிரகாரங்களை வ்யாஜமாக்கி
வண்ண மாடம் தொடங்கி-
அனுபவித்துக் கொண்டு போந்து –

அச்சோ என்றும்
புறம் புல்குவான் -என்றும்
இரண்டு திருமொழி யாலும் சர்வாங்க சம்ஸ்லேஷத்தை பெற்றாராய் நின்றார் கீழ் –

இதில்
அவன் திரு வாய்ப்பாடியில் யுள்ளார் உடன் அப் பூச்சி காட்டி விளையாடி ரசிப்பித்த
நிஷ் பிரயோஜன வியாபாரத்தை தமக்கும் அவன் காட்டக் கண்டு அனுபவித்தார் -என்னுதல் –

அன்றிக்கே –
பண்டு அவன் செய்த கிரீடை -என்கிறபடியே
அக் காலத்திலே தாமும் ஒக்க நின்று கண்டால் போலே அனுசந்தித்தார் -என்னுதல் –

———————————————————————

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய்ச் சூதில் தோற்றி பொறை யுடை மன்னர்க்கார்ய்ப்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

பதவுரை

மெச்ச–(அனைவரும்) கொண்டாடும்படி
ஊது–ஊதுகின்ற
சங்கம்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை
மிடத்தான்–இடக் கையில் ஏந்தியுள்ளவனும்
நல்வேய்–நல்ல வேய்ங்குழலை
ஊதி–ஊதுபவனும்
பொய் சூதில்–க்ருத்ரிமமான சூதிலே
தோற்ற–(தம்முடைய சொத்துக்களை யெல்லாம்) இழந்தவர்களாய்
பொறை உடை–பொறுமை சாலிகளான
மன்னர்க்கு–பாண்டவர்கட்கு
ஆய்–(தான் எல்லா வகைத்) துணையுமாயிருந்து
(துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்)
பத்து ஊர்–பத்து ஊரையும்
பெறாது–அடைய முடியாமல்
அன்று–அக் காலத்திலே
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்த–அணி வகுத்துச் செய்து
அத் தூதன்–அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
அப் பூச்சி காட்டுகின்றான்–அப்படிப் பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்;
அம்மனே–அம்மா!
அப் பூச்சி காட்டுகின்றான்-.
(தலை கேசம் வைத்து மறைத்து -கண்ணை புரட்டி -சங்கு சக்கரம் காட்டி -அப்பூச்சி காட்டுதல் )

மெச் சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி –
ஆஸ்ரித பாரதந்த்ரன் –
பாண்டவ பஷ பாதி -என்று
இரண்டு திறத்தில் யுள்ளாரும் விஸ்வசிக்கும் படி யாக முன்னே தெளிவித்து ஊதுகிற
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கு இடத் திருக் கையை நிரூபகம் ஆக்கினவன்   –

திருக் கைக்கு ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் நிரூபகமாகை அன்றிக்கே
திருக் கை நிரூபகம் ஆகையால் விசேஷண நிரூபகம் குண பரமாகையால் மாறி அருளிச் செய்யுமாம் இறே –
(இடது கையில் பிடித்த சங்கம் -சங்கத்துக்கு முக்யத்வம்
அடைமொழி -அடையாளம் -சங்கம் இடத்தான் -)

நல்வே யூதி –
பிராமணர்க்கு சிக யஞ்ஞோபவீதாதிகளும்  சந்த்யா வந்த நாதிகளும் விசேஷண நிரூபகம் ஆகுமா போலே
கோப குலத்துக்கு குழலும்
குழலூதுகையும்
நிரூபகமாய் இறே இருப்பது
ஸ்வரூப நிரூபகத்திலும் விசேஷண நிரூபகம் பிரதானம் ஆகையால் -நல் வேய் -என்கிறார்-

பொய்ச் சூதில் தோற்றி பொறை யுடை மன்னர்க்கார்ய்ப்
சூது போதுகை லீலா ரசம் மாத்ரம் அன்றிக்கே
அதுவே வ்யாஜ்யமாகக் கொண்டு துர்யோ நாதிகள் பர அநர்த்த சிந்தனை செய்கையாலே –
பொய்ச் சூது -என்கிறார் –

துர்யோ நாதிகள் இவர்கள் சர்வ ஸ்வமும் அபஹரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
இவர்கள் ஷமை ஒன்றும் அபஹரித்து கொள்ள மாட்டாது இருந்தது
தர்ம புத்ராதிகளுக்கு இத்தனையும் யுடைமையுமாய்க் கிடைக்கையால் பொறை யுடை மன்னர் -என்று
இவர்களுக்கு நிரூபகமாய்க் கிடக்கறது

இது ஒழிந்த  சர்வ ஸ்வமமும் க்ருத்ரிமத்தாலே அபஹரித்துக் கொள்ளுமது ஒழிய
இந்த பொறையை இவர்கள் பிரார்த்திக் கொடுத்தாலும்  
இந்த சரீரத்தோடு அவர்கள் கைக் கொள்ள மாட்டார்கள் இறே அவர்கள் –
இந்த பொறை தான் இந்த தர்ம புத்ராதிகளுக்கு உடைமை யாயிற்றதும் இவர்கள் அத்வேஷத்தோடே  போகையாலே இறே –

திருதராஷ்ட்ரன் இவர்கள் பக்கல் பொறையை பரிஷிப்பனாக -தர்ம புத்ராதிகள் போகிற அளவில் விக்ருதராய் போனார்களோ -என்று கேட்க
ஹர்ஷத்தால் வந்த விக்ருதி ஒழிய அவர்கள் பக்கல் க்ரோத விக்ருதி கண்டிலோம் -என்ன
என் பிள்ளைகளிலும் ஒருவராகிலும் சேஷிக்கும் படியாக அழன்று வாய் விட்டுப் போய்த்திலனே மகா பாபி -என்றான் இறே

புறக் கண்ணும் கெட்டால் போலே உட்  கண்ணும் மறைந்த படியாலே –
துர்யோத நாதிகளுக்கு ராஜ்ய ப்ராப்தியில் தாய விபாகத்தால் உடைமையான தேசமும்
இவர்கள் பக்கல் அபஹரித்த தேசமும்
அவர்கள் கொடுத்தாலும் இவர்கள் க்ருத்ரித்ம தோல்வி நியாயத்தாலே அனுவர்த்தித்தாலும் கொள்ளார்கள் இறே
இது என் -அவரோடு விபாகித்து வர்த்திக்கை அரிது என்று போனார்கள் ஆனாலோ என்னில்
அது கந்தர்வ பரிபவத்தில் காணலாம் இறே
ஆகையால் உடைமை கண்ட விடத்தே எல்லாரும் சேர்வர்கள் இறே
உடைமை யாவது பொறை இறே
அத்தாலே இறே ஈஸ்வரன் தானும் சேர்ந்தது –

பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த அத் தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் –
இவர்களுக்காக ஸ்ரீ தூது எழுந்து அருளி –
எல்லார்க்கும் உள்ளார்க்கும் உள்ள ப்ராப்திகள் அம்சித்து நீங்களும் உங்களுக்கு அம்சமானதும் கொண்டு ஜீவிக்கப் பார்க்கில்
தீர்க்க ஜீவிகள் ஆகலாம் -என்று அருளிச்  செய்த அளவில்
அவர்கள் இசையாத படியாலே
சிறிது குறைத்தாலும் கொடுத்து பொருந்தப் பாருங்கோள்-
நான் அவர்களைப் பொருத்துகிறேன் -என்ற அளவிலும் அவர்கள் இசையாமையால்
ஆளுக்கு இரண்டூராக ஐவர்க்கும் பத்தூர் கொடுங்கோள் -என்ன
அவர்கள் அதுக்கும் இசையாமல் –
வீர போக்யை அன்றோ வஸூந்தரை -ராஜாக்களுக்கு யுத்தம் அன்றோ கர்த்தவ்யம் -என்ன
ஆனால் அந்த தர்மத்தை செய்யுங்கோள் -என்று இசைந்து போந்து இவர்களையும் இசைவித்து –

பாரதம் கை செய்த –
மகா பாரதத்திலே கையும் அணியும் வகுத்து சாரதியாய் நின்ற அத் தூதன் -என்னுதல் –
பத்தூர் பெறாத அத் தூதன் -என்னுதல் –
தூதனாய் சமனாய் இருக்கச் செய்தேயும்
தன்னுடைய ஆஸ்ரித பஷ பாதித்வம் அவர்கள் நெஞ்சிலும் பட வேண்டும் என்று
மம ப்ராணா ஹி பாண்டவ -என்று மேல் விளையும் கார்யம் ஏற்கவே அறிவித்த அத் தூதன் -என்னுதல்

அப் பூச்சி காட்டுகின்றான் –
அந்த ஆஸ்ரித பஷ பாதம் தோற்ற அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –

இவ் விடத்தே ஸ்ரீ உஞ்சப்பிள்ளை பாடா நிற்கச் செய்தே -திரு ஓலககத்திலே –
அத் தூதன் -என்று பெருமாளைக் காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்துக் கொண்டு வருவதாய் அபி நயிக்க-
உடையவர் பின்னே  சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார்
திருக் கைகளை திருத் தோளோடு சேர்த்துக் காட்ட
அவரும் அப்படியே அபி நயித்துக் கொண்டு வர –
இதுக்கடி என்-என்று விசாரித்து ஸ்ரீ உடையவர் புரிந்து பார்த்து
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார் என்று அருளிச் செய்வர் –

அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -என்று கை நெறித்து இறே அவர் மீண்டும் அபி நயித்தது-
அப் பூச்சி என்றது இரண்டு திருக் கையில் ஆழ்வார்களையும்
நீர்மையாலே வஸ்து நிர்தேசமானால் மேன்மையை அப் பூச்சி என்னலாம் இறே
மாம் வ்ரஜ என்கிற மேன்மை போல் அன்று இறே-

————————————————————————-

(மாயன் அன்று ஓதிய வாக்கு -ஸ்ரீ கீதாச்சார்யன் -உபநிஷத் பசுவைக் கறந்து
அருளிச் செய்த ஸ்ரீ கீதாம்ருதம் -அலைவலை-பஹு ஜல்பிகம் -சொல்லலாமோ )

அதிகார அனு குணமாக வார்த்தை சொல்லாதவன்
அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண்
அலை வலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-2-

பதவுரை

மலை புரை–மலையை ஒத்த
தோள்–தோள்களை யுடைய
மன்னவர்–அரசர்களான
மாரதரும்–மஹா ரதரும்-(பீஷ்மாதிகள்- ஆத்மாநம் -அஸ்வங்களை ரக்ஷித்து போர் செய்வார் )
மற்றும் பலரும்–மற்றும் பலவகை அரசர்களும்
குலைய–அழியவும்
நூற்றுவரும்–(துர்யோதநாதிகள்) நூறு பேரும்
பட்டு–மரணமடைந்து
அழிய–வேர் அற்ற மரம் போல் உருவமழிந்து போகவும்
பார்த்தன்–அர்ஜுனனுடைய
சிலை–(காண்டீவமென்னும்) வில்
வளைய–வளையவும்
(நூற்றுவரை வெல்வதை விட ஐவரை வேள்வித்ததே பெரிய விஷயம் )
திண் தேர் மேல்–(அந்த அர்ஜுனனுடைய) வலிய தேரின் மேல்
(பார்த்த சாரதி இருப்பதாலேயே வந்த திண்மை உண்டே )
முன் நின்ற–(ஸாரதியாய்) முன் புறத்தில் நின்ற
செம் கண்–(வாத்ஸல்ய ஸூசகமாகச்) சிவந்த கண்களை யுடையனாய்
அல வலை–(அர்ஜுநனுடைய வெற்றியைப்) புகழ்பவனான கண்ணன்
(பிதற்றுவது போல் -ஜயத்தையே சொல்லி புகழுமவன்
வெல்ல வைக்க ஸ்ரீ கீதையை வெளியிட்டு அருளினவன் )
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் –
மஹத்தான பர்வதங்கள் சலித்தாலும் நம்முடைய தோளுக்கு சலனம் யுண்டோ -என்று
இருக்கிற ராஜாக்களும்
யுத்த உன்முகரான-பெரிய தேராளிகளும் –

மற்றும் பலர் குலைய
அது ஒழிய பரிகரிக்க ஒண்ணாத -ஆனை-குதிரை -காலாள் -என்று சொல்லப்பட்ட பரிகரத்தில் உள்ளவர்களும்
குலைய -நடுங்க
அவர் இவர் என்றால் போலே சில வ்யக்தி நிரூபணம் பண்ணலாம் அது ஒழிய
நடுக்கம் எல்லாருக்கும் ஒத்து தோற்றுகையாலே ஒரு சொல்லாலே குலைய -என்கிறார் –
இந்த நடுக்கத்துக்கு ஹேது முன்பே மிகை விருதூதுவது வீரக் கழல் இடுவதானது இறே –

நூற்றுவரும் பட்டழியப் –
பலர் குலைய என்றதிலே இவர்களும் அந்தர்கதம் இறே
ஆயிருக்கச் செய்தே இவர்களைப் பிரித்து -பட்டழிய -என்றது –

அஹங்கார அக்னி ப்ராசுர்யத்தாலே –
மகா வ்ருஷங்கள் ஆனவை பசுமை குலைய வற்றி வரண்டு கோடரகதமான அக்னியாலே வெந்து விழுமா போலே
இறே நூற்றுவரும் பட்டழிந்த  படி-

பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற -செங்கண் அலைவலை வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் —
இது போலேயோ அவன் சிலை வலையைப் பட்ட பாடு –
விஸ்ருஜ்ய ச சரம் சாபம் -கீதை -1-47-என்றவனை –
கரிஷ்யே வசனம் தவ -கீதை -18-73-என்னப் பண்ணின-அருமை – பெருமை

அதாவது
பெரிய வ்யவசாயத்தோடே யுத்த உன்முகனாய் தேரிலே ஏறினவன் –
யுத்த உன்முகரான பந்துக்களை ரஷிக்கை தர்மம் என்றும்
வைதமானத்தை அதர்மம் என்றும்
சிநேக காருண்ய வத பீதிகளாலே  –
கினனோ ராஜ்யேன கோவிந்த –
கிம் போகைர் ஜீவிதே நவா -(கீதை -1-35-)-என்று இவன் நிற்கையாலும்

அவள் -விரித்த குழல் முடியேன் -என்று தனக்கு சரணாகதி திரு நாம பிரபாவ மாத்ரத்தாலே பலித்த கர்வத்தாலே –
நாம் நினைத்தது எல்லாம் பலிக்கும் -என்று பிரதிஞ்ஞை பண்ணி நின்றாள்-

இனி இவனைத் தெளிவித்து
சிலையை வளைத்து
மயிரை முடிப்பிக்க வேணும் -என்று திரு உள்ளம் பற்றி அருளி
இவனுக்கு சில அர்த்த விசேஷங்களை உபதேசிக்கக் கோலி

தர்மத்தை அதர்மம் என்ற பிரமம் மீளாமையாலே
அதர்மத்தை தர்மத்தை என்றால் அத்தை தர்மம் என்று கைக் கொள்ளுமாகில்
இவன் அதர்மம் என்று நீக்கின தர்மத்தை இவன் இசைந்த தர்மத்துக்கு
யோக்யதா பாதகம் ஆக்குவிப்போம் -என்று பார்த்த அளவிலும் அது கூட்ட இவன் இசையாமையாலும்
அது ஒழிய இது தர்மம் ஆக மாட்டாமையாலும் வெறுத்து அருளி

இனி அதி குஹ்ய ரஹஸ்யம் ஒழிய  சொல்லலாவது இல்லை என்று திரு உள்ளம் பற்றி அருளி
தர்மங்கள் எல்லா வற்றையும் ஓன்று ஒழியாமல் விடு என்கையாலே –
அலவலை -என்கிறார் –

(நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் –ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -189-)

இவன் கை விட்ட தர்மம் கூடாத போது –
தான் இது தர்மம் என்ன இசைந்தானோ என்னில் -இசைந்தான் –
இசைந்த பிரகாரம் தான் என் என்னில்
இது தர்மம் –
துஷ்கரத்வாதி தோஷ தர்சனத்தாலும்
கீழே பார தந்த்ர்யத்தை கேட்கையாலே அந்த பாரதந்த்ர்யத்துக்கு விரோதமாய் தோற்றுகையாலும்
என்னால் செய்யப் போகாது –
மற்றொரு கதி அறிகிலேன்  -என்று இவன் சோகித்த பின்பு
இவன் சோக நிவ்ருத்தி யர்த்தமாக த்யஜிக்க சொல்லும் போதும்
இது அசக்தி யோக த்யகமாம் போதும் அவனுடைய பிரமத்தாலே தர்ம சப்த வாச்யமாம் இத்தனை

இவற்றினுடைய துஷ்கரத்வாதி தோஷ தர்சனம் பண்ணினவன் பிரமித்தானோ என்னில்
இதுக்கு யோக்யதா பாதக தர்மத்தை கூட்டப் பெறாமையாலும் பிரமித்தான் –

சக்த்யா அனுகுணமாக செய்யவுமாய்-
தேக தர்ம-(ஷத்ரிய தர்ம ) மாத்ர விஹிதமுமாய் தான் செய்யக் கடவோம் என்று உபக்ரமித்து ஒருப்பட்டதுமாய்
முன்பு ஊர்வசி  முதலானார் அளவிலும் தவறாமல் செய்து போந்ததுமாய்
ஸ்ரேயான் ஸ்வ தர்மோ வி குண-(கீதை -3-35-)என்ற
கீத உபநிஷத் ஆச்சார்ய வசனத்தாலும் செய்ய வேண்டுவதான ஸ்வ தர்மத்தை
பந்துக்கள் பக்கல் ஸ்நேஹாதிகளால் பிரமித்து தானே விடுகையால்
இதுவும் அசக்தி யோக த்யாகத்தாலும் தர்ம சப்த வாச்யமாக கூடாமையாலும்
இனி ஒரு திவ்ய தேச வாசம் -திரு நாம சங்கீர்த்தனம் -தீப மாலாதிகளில் இவனுக்கு அந்வயம் இல்லாமையாலும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற பிரகாரம் தான் எங்கனே என்று நிரூபிக்க வேண்டி வரும் இறே-

தன் சௌந்த்ர்யாதிகளால் அலவலைமை தவிர்த்தவன் (ஐயப்பாட்டு அறுக்க -அழகன் அன்றோ )
இவனுடைய அலவலைமை தவிர்க்க வேண்டி இறே அலவலை யானான் –
இவனுக்காக இவ் வர்த்தம் எல்லாம் வெளியிட வேணுமோ –எருக்கிலைக்காக –
என்று அலைவலை -என்கிறார் –

இங்கன் வெளியிட்டான் ஆகில்
அவள் பிரதிஞ்ஞை நோக்கும் படி என்
இவன் வில் வளையும் படி என் என்னில்
இவன் பின்பு சொன்னத்தை-(கரிஷ்யே வசனம் தவ-18-73-) முன்பே செய்தான் ஆகில்
பிரதிஞ்ஞையும் தலைக் காட்டி வில்லும் வளையும் இறே

பின்பு தானும் -ப்ராமயன் -18-61-என்ற போதே
செய்து முடித்தான் ஆகில் –
சர்வ தர்மான் -என்ன வேண்டா இறே –

இவை எல்லாத்தாலும் இவள் பிரதிஞ்ஞை தலைக் கட்டலாய் இருக்க
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று லோக சாஸ்த்ரமாக உபகரிக்கலும்
அவள் சங்கல்பம் வ்யாஜ மாத்ரமோ பாதி  –
இவன் பக்கலிலும் ஒன்றைக் கண்டு வ்யாஜ மாத்ரம் ஆக்கக் கொள்ள வேணும் இறே

அது தானும் இவனுக்கு உண்டோ என்னில் –
கார்ப்பண்ய தோஷோ பஹத ஸ்வ பாவ -கீதை 2-7-என்றும்
தர்ம சம்மூட   சேத -என்றும் சொன்ன போதே
தர்ம அதர்மங்கள் அறிந்திலேன் -என்று அனுதபித்து

ப்ருச்சாமி த்வாம் -என்று அபேஷித்து
யச் ஸ்ரேயஸ் ச்யான் நிச்சிதம் ப்ருஹி -என்று
உனக்கு நான் சிஷ்யன் நியாமகன் பிரபன்னன்-என்று தன் அதிகாரத்தைச் சொல்லி
நிச்சிதம் ப்ருஹி என்ற போதே ப்ராப்தமான அர்த்த வ்யாஜ்யமும் தோன்றும் இறே

இவன் தானும் சக்தி யோக தர்மத்தை அசக்தி யோகத்தா லன்றே விட்டதும் –
நடுவு பரந்தது எல்லாம்
இவன் சொன்னது சத்தியமோ என்று இவன் நெஞ்சை சோதிக்கைக்காகவும் இறே –

ஆகையால் ஈஸ்வரன் அலைவலை  வல்லவாய் இருக்க
இவர் அவனை அலவலை என்னும் போது
தம்முடைய அபிப்ப்ராயத்தால் அருளிச் செய்தாராம் இத்தனை  இறே-

(நெறி எல்லாம் எடுத்து உரைத்த
மாயன் அன்றோ ஓதிய -இவையே அலைவலை )

இவர் அபிப்ராயம் தான் என் என்னில்
வாழாள்-என்றும்
கூழாள்-என்றும் வகை யிட்டு
பகவச் சரணார்த்திகள்-கைவல்யார்திகள் -என்று பாராதே இவர்களை இசைவித்து

தம்மோடு கூட மங்களா சாசன பரராக்கி ப்ராப்தி தசையிலும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று இதுவே யாத்ரையாக ஆக்கி
வேதப் பயன் கொள்ள வல்லவர்க்கு
இது அலைவலைத் தனமாய் தோற்றாது  இராது இறே

தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார் -என்று அவர் நாக்கு வளைத்து இருப்பார் –
இப்போது என்னளவில் பண்ணுகிற தீம்பு திருச் செவி சாத்தில்-என்று ஆண்டாளும் அருளிச் செய்தாள் இறே   –
(மெய்ம்மைப் பெரு வார்த்தை-கொண்டாட்டம் -அங்கு
இங்கு அலைவலை )

பிராட்டியும் -ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்று எங்கள் ஐயர் கேட்கில்
பெண்ணுக்கு பெண்ணைக் கொடுத்தோம் -என்று
என்னை நிருத்திப் போகில் போர வெறுத்துச் சொல்லுவர்
அது என்னால் கேட்கப் போகாது என்று கிடீர் எனக்கு கிலேசம் -என்றார் இறே

நீர் நிறுத்திப் போனால் நிற்கும் பாபம் எனக்கும் இல்லை
நீர் தாமும் நிறுத்திப் போகிறவரும் இல்லை
ஆயிருக்க இந்த நெஞ்சு ஒழிந்த பல வார்த்தை  சொல்லி அலவலையாக வேணுமோ -என்றாள் இறே   –

குறும்பறுத்த நம்பியும் திருவேங்கடமுடையான் ஆகிற அலைவலை வெளியிட்டானோ -என்றார் இறே-

த்யஜ்ய -வ்ரஜ -மாஸூச – என்னக் கேட்டு
அவனும் ஸ்திதோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -18-73-என்ற பின்பு இறே
நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளைத்ததும் –

ரதிக்கு திண்மை குலைந்து விஸ்ருஜ்ய ச சரம் சாபம்
ரதோபஸ்த உபாவிசத் -1-47- என்று இவன் இருக்கும் படி
ரதம் திண்மை குலையாது இருந்தது இறே -இவர் தேர் மேல் முன் நிற்கையாலே

மேல் நின்ற பார்த்தனுக்கு முன்பே
தாழ நின்று  –
உரஸா பிரதி ஜக்ராஹா -என்று மார்பிலே அம்பேற்ற அலவலை வந்து
(சொல்லாலும் செயலாலும் அலை வலை )
அப்பூச்சி காட்டுகின்றான் என்கிறார் –

செங்கண்-
பலகாலும் -அர்ஜுனன் தேரில்  நின்றும்  குதித்து ஓடிப் போகிறானோ என்று பார்த்து சிவந்தது -என்னுதல்
சத்ருக்கள் அளவில் சீறிச் சிவந்தது என்னுதல்
ஸ்வா பாவிகமான ஐஸ்வர்ய ஸூசகமான சிவப்பு என்னுதல் –

——————————————————————————————

ஆயர் குலத்துக்கு காரணன் ஆனவன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –

காயுநீர் புக்குக் கடம்பேறிக் காளியன்
தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் யம்மானே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-3-

பதவுரை

காயும்–(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்–மடுவின் ஜலத்திலே
புக்கு–புகுந்து (கலக்கி)
(அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
கடம்பு ஏறி–(அம் மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்–அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்–கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க–(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து–குதித்து
ஆடி-கூத்தாடி
(இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)
வேயின் குழல் ஊதி–மூங்கினாலானாகிய குழலை ஊதி
(இப்படி)
வித்தகன் ஆய் நின்ற–விஸ்மயநீயனாயிருந்த
ஆயன்–கண்ண பிரான்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

காயுநீர் புக்குக் கடம்பேறிக் காளியன்
காளியன் புக்கு -காயு நீர் கடம்பேறி –
முன்பு அம்ருத ஜலமாய் இறே அந்த மடு தான் இருப்பது –
காளியன் பீதி மூலமாக வந்து புகுந்த பின்பு காயு நீர் ஆயிற்று –
(ரிஷி சாபம் -பெரிய திருவடிக்குப் பயந்து இந்த பொய்கையில் புக்கான் )

பண்டு நீர்க் கடம்பாய் குளிர்ந்து நின்ற பாதபம் பட்டது விஷ ஜலத்தாலே இறே
ஆனால் அது இவன் ஏற பொறுத்த படி என் -என்று நஞ்சீயர்  கேட்க
ஏறுகிறவன் பார்த்து (கடாக்ஷித்து ) ஏறுகையாலே விஷத்தால் வந்த தோஷம் அவன் பார்வையாலே தீர்ந்து
பிராணன் பெற்று பச்சிலைப் பூம் கடம்பாயிற்று -என்று பட்டர் அருளிச் செய்தார்
நெறுஞ்சியைப் புல்லாக்கினவன் கடாஷத்துக்கு கூடாதது இல்லை இறே

அன்றிக்கே
நம்பிள்ளை அருளிச் செய்தாராக ஆச்சான் பிள்ளை அருளிச் செய்யும்படி
வெந்து போன உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட திருவடிகள் இறே
அந்தத் திருவடிகளால் மிதித்து  ஏறினால் பச்சிலை பூம் கடம்பாகாதோ -என்று
திருவடிகளாலே கல்லைப் பெண் ஆக்கினான் என்றதும் ஓர் ஆச்சர்யமோ இதுக்கு
அந்தக் கடம்பில் ஏறி அந்த விஷத்துக்கு ஆஸ்ரயமாய் –

(அம்ருத கலச துளி விழுந்து என்று முன் சொல்லி –
ஆரா அமுதம் கடாக்ஷம் -திருவடி ஸ்பர்சம் இருக்க அப்படி சொல்ல வேணுமோ -என்றும் அருளிச் செய்வர் )

தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி
தீயதான பணத்தில் மேலே இறே சிலம்பார்க்க பாய்ந்து ச சம்பிரம ந்ருத்தம் செய்தது
அந்த ந்ருத்தம் தான் பாரத சாஸ்தரத்துக்கு ஹேது என்னலாம் இறே  –

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
கரையில் ஏறி இனிதான வேயின் குழலூத
அந்த த்வனியின் தெளிவு கண்டு இறே
அந்த காளியனுக்கு பிழைத்தான் -என்று ஆய்ச்சிமார் ஆயர்கள் தெளிந்த அளவு அன்றிக்கே
இவரே இறே தெளிந்தாரும்
இன்னமும் -இவன் இறே -என்று வயிறு மறுகினாரும்

வித்தகனாய் நின்ற -ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-யம்மானே அப்பூச்சி காட்டுகின்றான் —
ஆயர் குலத்துக்கு காரண பூதன் என்னுதல்   –
பசுக்களும் கன்றுகளும் இடையரும் இடைச்சியும் பயம் கெட்டு தங்கள் இஷ்டத்திலே
தண்ணீர் குடிக்கலாம் படி காளியனை   ஒட்டி விட்ட சாமர்ர்த்யத்தை யுடையவன் என்னுதல் –

ஆயன் –
எல்லாம் செய்தாலும் ஜாதி உசிதமான இடைத் தனத்தில் குலையாமையாலே இறே
வ்யக்தி பேர் கிடக்க (கண்ணன் ) ஜாதிப் பேர் (ஆயன் )அருளிச் செய்தது

அன்றிக்கே
வாயன் –
குழலூதின ஆயன் என்னவுமாம்-

———————————————————————–

தீம்பன் ஆனவன் வந்து அப் பூச்சி காட்டுகிறான் -என்கிறார்

இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்
புரட்டி யந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான்  அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-4-

பதவுரை

இருட்டில்–இருள் நிறைந்த நடு நிசியில்
பிறந்த–(மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்–(அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப்) போய்
ஏழை–அவிவேகிகளான
வல்–(கிருஷ்ண ஆஸ்ரயத்தால் -தன்னைப் பற்றி யிருக்கும்) மன வலிமையை யுடைய
ஆயர்–இடையர்களின்
(கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற)
மருட்டை–மருள் வார்த்தைகளை
தவிர்ப்பித்து–போக்கினவனாயும்
வல் கஞ்சன்–கொடிய கம்ஸன்
மாள–மாண்டு போம்படி
புரட்டி–(அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அந் நாள்–(நாங்கள் யமுனையில் நீராடிய) அக் காலத்திலே
எங்கள்–எங்களுடைய
பூம் பட்டு–அழகிய பட்டுப் புடவைகளை
கொண்ட–வாரிக் கொண்டு போன
அரட்டன்–தீம்பனாயுமுள்ள கண்ணன்
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

இருட்டில் பிறந்து போய்
அவன் தான் பிறக்கப் புகுகிறான் என்று ஏற்கவே உருவின வாளும் கையுமாய் நிற்கிற
விரோதிகள் கண்ணில் தோற்றாமைக்காக இறே
இருட்டிலே திரு வவதரித்தது
இருட்டிலே யாகிலும் தாய் முலைப் பாலைக் குடித்துக் கிடக்கலாம் இறே
இதுக்கு விரோதிப்பார்கள் என்று இறே வழியிலே மிருக்யமும் பாராமல் இருட்டிலே
திருவாய்ப்பாடி ஏற எழுந்து அருள வேண்டிற்று –

பிறந்து போய் –
திருவவதரித்து எழுந்து அருளி-

ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து –
வல்லாயர் ஏழை மருட்டைத் தவிர்ப்பித்து-

வல்லாயர் –
ஆயர்க்கு வலிமையாவது –
அறிவு கேட்டில் வலியராகை இறே-

புது மழைத் தண்ணீரையும் குடுவையில் சோற்றையும் ஜீவித்து இடையர் கோலாடி விளையாடும் போதுகளிலே
நாம் இத்தனை பேர் யுண்டாய் இருக்க நம்முடைய கையிலே இந்த பசு மேய்க்கிற கோல்கள் இருக்க
கம்சனுக்கு நாம் திறை இடுகையாவது என்-
இந்த கோல்களாலே கம்சனையும் சாகவடித்து இழுத்துப் பொகடக் கடவோம் -என்று இவர்கள் சம்மதித்த அளவிலே

நீங்கள் எல்லாரும் வேணுமோ
நான் ஒருவனுமே அவனை சாகடித்து இழுத்துப் பொடேனோ-என்று இவன் எழுந்து இருந்த அளவில்

ஆயர் பலரும் எழுந்து இருக்க
நீங்கள் இங்கன் சொல்லிச் செய்ய வல்லாரைப் போலே மருட்டாதே ஒழியுங்கோள்-என்று
அவர்களையும் நீக்கி
அண்ணரும் நாமும் அமையும் -என்று ஸ்ரீ மதுரைக்கு புறப்பட்ட அளவிலே-

அக்ரூரன் -எழுந்து அருள வேணும் -என்று தேரும் கொண்டு உறவு பேசி வர –
அவனுடன் எழுந்து அருளுகிற அளவிலே
வல்லாயர் ஏழைகளாய் -இவனுடன் மருவின பெண்கள் எல்லாரும் திரண்டு வந்து
அக்ரூர க்ரூர ஹிருதய -என்று இவரை நிஷேதித்து 
தேரைத் தகைந்து –
நீங்கள் போகில் நாங்கள் இத்தனை பேரும் இப்போதே முடிவோம் -என்ன

மாற்று வாயாகில் இப்படி சொல்லுகிறது ஒழிய நீங்கள் நினைத்த போதே முடியலாய் இருக்குமோ –
முடிக்கிறோம் என்று என்னை மருட்டாதே கொள்ளுங்கோள் -என்று
இவர்கள் மருட்டையும்
நம்பி மூத்த பிரானையும் கொண்டு தவிர்ப்பித்தான் இறே
அவர்களுடைய ஸ்நேஹத்தை இறே மருட்டு என்கிறது –

அத்தைத் தவிர்த்த பிரகாரம் தான் ஏது என்னில்
நாங்கள் போய் மாமடியோடே உறவு செய்து
மீண்டு வருகிறோம் என்ன –

அது கூடுமோ –
நகர ஸ்திரீகளைக் கண்டால் கொச்சைகளாய் இருக்கிற எங்களை நினைத்து
நீங்கள் வரக் கூடுமோ -என்று அவர்கள் சோகிக்க

அவர்கள் அளவில் கிருஷ்ணனுக்கு கிருபை பிறக்கக் கூடும் என்று இவர்கள் மருட்டிலே முடிய
அகப்படாதே அவர்கள் ஆசை அறும்படியாக-
நாம் தாம் ராஜ புத்ரர்கள் அன்றோ
நமக்கு அவர்களோடு பரிய உறவாய்க் கிடந்ததோ  -போரீர் என்று கொண்டு –

வன் கஞ்சன் மாளப் புரட்டி –
போயன்றோ மதுரையில் புக்கு அவன் செய்த வஞ்சனைகளை காண்கையாலே அவற்றையும் முடித்து
அவன் தான் இருந்த உயரத்திலே பாய்ந்து
அவனை தலை கீழாக புரட்டித் தள்ளி
அவன் மேலே குதித்த அளவிலும் -வன் கஞ்சன் -என்னும்படி -பிராணன் போகாமையாலே
மீண்டும் புரட்டிக் குஞ்சி புடித்து மாளும்படி அடித்துப் பொகட்டான் -என்கிறார்-

அதுக்கு பின்போ பூம் பட்டு அபகரித்தது
விரோதி போனால் அன்றோ
அனுபவம் ஆகையால் இப்பொழுது இவர் கண்டு அனுபவிக்கிறார்
எங்கள் -அவர்களில் தாமும் ஒருவராக பெரியாழ்வார் அனுபவிக்கிறார்

யந் நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான்  அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்-
நம்பி மூத்த பிரான் இல்லாத போதுகளிலே -இந்த அடிக் கழிவுக்கே ஒண்ணாது -என்று
நியமிக்கைகாக தாமும் (பெரியாழ்வாரும் ) அங்கே சென்று
அவர்கள் எங்களது -என்ன –
இவன் -உங்களது அன்று -என்ன
அவர்கள் எங்களது -என்ற வார்த்தையை அனுகரித்து தாமும் எங்களது என்று வாங்கி
அவர்கள் கையிலே கொடுத்து அடிக் கழிவு பரிஹரிக்கலாம் இறே-

ஆனால் இவர் அவர்கள் திரளில் சென்றால் அவர்கள் குத்சியார்களோ
நம்பி மூத்த பிரானைப் பொறுப்பார்கள் ஆகிலும் இவரைப் பொறுப்பார்களோ என்னில்
ஸ்ரீ வேத வியாச பகவானைக் கண்டு நீரிலே குதித்த பெண்கள் ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம ரிஷியைக் கண்ட பின்
கரையிலே ஏறித் தங்களைப் பேணாமல் எதிரா நின்றார்கள் இறே
அந்த ருஷியும் இவரும் ஸ்ரீ கிருஷ்ண கிரீடை இறே கொண்டாடுவது
அவ்வளவல்ல  இறே   இவருடைய அவகாஹனம்
சேற்றுக்கும் புழுதிக்கும் பூர்வ பாவியில் வாங் நியதியும் கூட அறியாதவர் இறே இவர் –
(சொட்டு சொட்டு எனது துளிக்க துளிக்க -இவர் அன்றோ அனுபவித்தார்
நீர் ஆகாரம் -அவதார மெய்ப்பாடு -திருமேனி கழிவு பட்டு புழுதி பார்த்தோமே
ப்ரஹ்ம ஞானி -வாக்கு நியமம் பார்க்காமல் அருளிச் செய்தார் அன்றோ )

அன்றிக்கே
எங்கள் பூப் பட்டு -என்று
தாமும் அவர்களில் ஒருவராய் நின்று
அவன் கன்றாமை நோக்கி
அவனை உளனாகப் பரிய வேண்டி
அவன் க்ரீடையிலே ஒருப்பட்டு -எங்கள் பூம் பட்டு -என்கிறார் ஆகவுமாம்-

அவனோடு எல்லா முறைமையும் யுண்டு இறே இவருக்கு  –
சென்றால் குடையாம் -முதல் திருவந்தாதி -52
யதா யதா ஹி கௌசல்யா -அயோத்யா -12-68-
தாசஸ் சகா ஆசனம் வாஹனம் த்ரயீ மய -ஸ்தோத்ர ரத்னம் -61-
நின்ற நின்ற நிலைகளிலே பரிகை இறே யுள்ளது

அரட்டு -தீம்பாதல் -பலமாதல் –

அந் நாள் அவனை மாளப் புரட்டி –
இந் நாள் எங்களை பூம் பட்டு கொண்ட அரட்டன்-என்று
அவர்கள் -எங்கள் -என்ற பாசுரமும்
தம் பேறாகையாலே அனுகரிக்கிறார் –

யுகே யுகே சம்பவாமி -(கீதைப்) படி யாகவுமாம் –

——————————————————————————

மாதாவால் கட்டுண்டவன் அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார்-

சேப்பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்
காப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-5-

பதவுரை

சேபூண்ட–எருதுகள் கட்டுதற்கு உரிய
காடு–சகடம்
(அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலே தன் திருவடியைத் தூக்கி அச் சகடத்தை)
சிதறி–உருக்குலையும்படி உதைத்து
நெய்க்கு–நெய்க்கு ஆசைப்பட்டு
திருடி–களவு செய்து
ஆப்பூண்டு–(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு
(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க)
நந்தன் மனைவி–நந்தகோபன் தேவியான அவ் யசோதை
கடை தாம்பால்–(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க)
துள்ளித் துடிக்க –துடிக்க துடிக்க
சோப்பூண்டு–அள்ளி மிகவும் துடிக்கும் படி அடி யுண்டு
(அதனோடு நில்லாமல்)
அன்று–அக்காலத்தில்
ஆப்பூண்டாள்–(எங்கும் சலிக்க முடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன்
அப்பூச்சி காட்டுகின்றான்

சேப்பூண்ட சாடு சிதறித்-
கொடிச் சேக்களைப் பூட்டினாலும் சேக்களால் சலிப்பிக்க ஒண்ணாத சாட்டின் கீழே இறே
பிள்ளையை வளர்த்திப் போச்சுது –
முஹூர்த்த விசேஷம் தான் ப்ரதிகூலித்துக் கிட்டினால்  முடியும் வேளை யாகையாலே
கட்டுக் குலைந்து சிந்தி பிந்தியாய் போயிற்று இறே

சலிப்பிக்க ஒண்ணாத மாத்ரமே அன்றிக்கே
நிலை மரத்திலே சேர்ந்தால் போலே இருக்கிற பெரிய சாடு
தளிர் புரையும் திருவடிகளை  முலை வரவு தாழ்த்துச் சீறி நிளிர்த்த அளவிலே சிந்தி பிந்தியாய்ப் போயிற்று இறே-

திருடி நெய்க் காப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க வன் றாப்பூண்டான்
ஊரில் நெய்க் களவு போகா நின்றது -என்று பலரும் வந்து யசோதைக்கு முறைப்பட்ட படியாலே
இப் பிள்ளையையோ நீங்கள் இது எல்லாம் சொல்லுகிறது –
நீங்கள் கண்டி கோளாகில் இவன் கழுத்திலே கட்டிக் கொண்டு வாருங்கோள்-என்று இவள் போர வெறுத்து
நீங்களும் எல்லாம் இவனை ஒக்கும் பிள்ளைகளைப் பெற்று வளர்க்கிறி கோள் இறே -என்று –
இவள் சொன்ன வார்த்தையைக் கேட்டுப் போய்

ஒற்றி இருந்து
இவன் நெய்க்கு ஆசைப்பட்டு களவிலே வந்து அமுது செய்கிற அளவிலே கண்டு பிடித்து
இவர்கள் இடைச்சிகள் ஆகையால் யசோதை சொல்லி விட்ட வார்த்தையின் கருத்து அறியாமல்
ராஜ புத்திரன் என்றும் மதியாமல் இவனைப் பாத்ரத்தோடே கட்டி
கள்ளனைக் கண்டோம் -என்று ஊரிலே வார்த்தை யாக்கி

இவனாலே புண்பட்ட பெண்கள் பண்ணின பாக்யத்தாலே
இவன் முகத்திலே விழிக்கப் பெற்றோம் -என்னும்படி
தெருவிலே கொண்டு வந்து
யசோதைக்கு காட்டின அளவிலும்

இவள் இவர்கள் முன்னே இவனை ஒரு கடைத் தாம்பை எடுத்து
நந்தன் மனைவி பிள்ளை வளர்த்த படி என்-என்று கோபியா
துள்ளித்  துடிக்க துடிக்க அவர்கள் காண அடித்து
உரலோடு கட்டி
உங்கள் தமப்பனார் காணும் படி அவர் வரும் அளவும் பதையாமல் இரு -என்ன
இருந்தவன்
அங்கே இராமல்
இங்கே இருந்து அப் பூச்சி காட்டுகின்றான்

ஆப்பூண்கை-கட்டுண்கை

நெய் திருடினதுக்கு ஆப் பூண்டு -என்று பத அந்வயம்-

—————————————————————————

சர்வ ரஷகனானவன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -என்கிறார்

செப்பிள மென் முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த
நெய்யும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-6-

பதவுரை

செப்பு–ஸ்வர்ண கலசங்கள் போன்ற
இள மெல் முலை–இளமையையும் மென்மையையுமுடைய முலைகளை யுடைய
தேவகி நங்கைக்கு–தேவகிப் பிராட்டிக்கு (மகனாக)
சொப்பட தோன்றி–நன்றாகப் பிறந்து
தொறுப்பாடியோம்–ஆய்ப்பாடியிலுள் ளவர்களாகிய நாங்கள்-(தொறு – பசு)
வைத்த–சேமித்து வைத்த
துப்பமும்–நெய்யையும்
பாலும்–பாலையும்
தயிரும்–தயிரையும்
விழுங்கிய–உட் கொண்ட
அப்பன்–ஸ்வாமி (உபகாரகன்)
வந்து அப் பூச்சி காட்டுகின்றான்-.

செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்குச் சொப்படத் தோன்றித்-
இப்போது இவள் முலையை வர்ணிக்கிறது அவன் அமுது செய்த முலை யாகையாலே இறே

செப்பு என்று
உபமானம் ஆக்கி
முது முலைப் பாலில் வீர்யம் இல்லாமையால்
பிள்ளைக்கு தாரகாதிகள் ஆகவேணும் என்று இள முலை -என்கிறார்
அவன் முலை பிடித்து அமுது செய்த போது நைந்து குழைந்து இருக்கையாலே மென் முலை -என்கிறார்

தேவகி நங்கைக்கு –
ஒழுகு பேர் எழில் -பெருமாள் திருமொழி -7-7-என்று முலை கொடுக்கப் பெறாமல் இழவு படா நிற்கச் செய்தேயும்
எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-7-5- என்று
அவள் பேறு தன் பேறாக அநுசந்திக்க வல்ல குண பூர்த்தியாலே-
தேவகி நங்கை -என்கிறார் ஆதல்

தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றி -என்கையாலே
அவன் அவதரித்த போது
சர்வ ஸ்மாத் பரத்வம் தோன்ற  நாலு திருத் தோள்களோடும் திவ்ய ஆயுதங்களோடும் அவதரிக்கக் கண்டு
நாயந்தே -நாங்கள் கம்சன் கோபுர நிழல் கீழே இருக்கிறோம் –
பூ ஸூரர் ரிஷிகள் தேவர்கள் -என்கிற சப்தமும் கூடப் பொறாதவன் உம்மை இப்படிக் காணில் விடான்
அறுவரிலும் எழுவராவாரிலும் காட்டில் எப்போதோ என்று கறுவிப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்

இந்த வடிவையும் உப சம்ஹரித்து
ப்ராப்தமான குழந்தை வடிவையும் என்னருகு கிடவாமல்
ஏதேனும் ஒரு பிரகாரங்களால் மறைத்து அருள வேணும் என்று
இவள் பிரார்த்தித்த படியாலே

இத்தையும் பிறந்த நாளையும் விகல்பித்து
மறைத்தத்தை தம் பேறாக்கி மங்களா சாசனத்தில் கூட்டிக் கொண்டு
நங்கை -என்கிறார் ஆதல் –

சொப்பட -நன்றாக
தன் படிகளில் ஒன்றும் நழுவாமல் -என்றபடி
ஆதி யம் சோதி யுருவை -திருவாய் -3-5-5-மாத்ரு வசன பரிபாலன அர்த்தமாக விறே
மறைத்துப் போந்ததும் –

தொறுப்பாடியோம் வைத்த –
தொறுப்பாடி –
தொறு -பசு
தொறுவர் -இடையரும் இடைச்சிகளும்
பாடி -அவர்களூர்
தொறுப்பாடியோம்-நாங்கள் -என்றபடி

நெய்யும்  பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் —
அப்பன் -உபகாரகன்
இப்படி விழுங்கி வாழ்வித்தவன் -என்று ஷேபம் ஆகவுமாம்

———————————————————————

கோளரியான மிடுக்குத் தோன்ற அப்பூச்சி காட்டுகின்றான் –

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்த மனையாள் யசோதை இளம் சிங்கம்
கொத்தார் கரும் குழல் கோபால கோளரி
அத்தன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1-7-

பதவுரை

(இந்தப் பிள்ளையை யசோதை)
தத்து கொண்டாள் கொல் ஓ–தத்த-ஸ்வீ க்ருத – புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ!
(அல்லது)
தானே பெற்றாள் கொலோ–ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
சித்தம் அனையாள்–(கண்ணனுடைய) மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
அசோதை–யசோதையினுடைய
இளஞ்சிங்கம்–சிங்கக்குட்டி போன்றவனும்
நந்தகோபன் குமாரன் யசோதை இளம் சிங்கம் -திருப்பாவை
கொத்து ஆர் கருங்குழல்–பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
கோபாலர் கோன் அரி–இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
மீண்டும் சிங்கம் இங்கு
அத்தன்–ஸ்வாமியான இவன்
வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
அசோதை இளம் சிங்கம் என்னா-
இவள் தத்த ஸ்வீ காரம் செய்யக் கண்டிலோம் –
இவள் பெறுகிற போது இவளைப் பார்த்து பேணிக் கொண்டு இருந்த நாம் எல்லாம் இவள் பெறக் கண்டிலோம் –
அயர்த்து உறங்கி விட்டோம் –
இவள் தான் -நான் பெற்றேன் -என்று சொல்லக் கேட்டோம் இத்தனை இறே-

தத்த ஸ்வீ காரம் முன்னாகவும் ஔரசம் பின்னாகவும் இவர்கள் சொன்ன அடைவை
வேதப் பயன் கொள்ள வல்ல -2-2-8-இவர் அங்கீ கரிக்கையாலும்
ஔரசம் முன்னான அடைவே தர்ம சாஸ்த்ராதி பிரவர்த்தகர் அங்கீ கரிக்கையாலும்
இரண்டும் உத்தேச்யமாக வேண்டி வரிலும்
அது இதிலே சேருமத்தனை போக்கி இது அதிலே சேர்க்கை போர அரிது இறே –

(சாதாரண சாஸ்ரஞ்ஞர் பெற்றதை-ஔரசம்- முன்னதாகவும் ஸ்வீ காரம் பின்னாகவும் சொல்லுவார்கள்
இது சாமான்ய சாஸ்திரம்
இங்கு விசேஷ சாஸ்திரம் -தத்து முன்னாக -)

அரிதான படி என் என்னில் –
அவர்கள் இத்தை முஹூர்த்த விசேஷ தோஷத்தால் அந்ய பரம் ஆக்குகையாலும்
இதில் அத் தோஷங்கள் ஒன்றும் இல்லாமையாலும்
பித்ராதிகளால் வந்த தோஷம் ஒழிய கர்பாதானத்தில் கேவல மோஹ ஜாதத்வ பரிஹாரம் ஔரசனுக்கும் வேண்டுகையாலும்
சங்கர ஜாதத்வாதிகள் தரிக்க வேண்டுகையாலும்
உக்த லஷணத்திலே இவை பரிஹரியாத போது இந்த மாதா பிதாக்களுக்கும் இந்த வாசனையாலே
அநாசார துராசாரங்கள் மேலும் பிரவர்த்தமாகாமல்  அனுதபித்து பிராயச்சித்தம் பண்ண வேண்டுகையாலும்
அல்லாத போது அனுபவ விநாஸ்யமாகையும் கூட  அரிதாகையாலும்
இன்னமும் இவன்  ஜாதனான அளவில் சாஸ்திர சித்தமான ஸ்நேஹம் ஒழிய அத்யந்த ப்ராவண்யம் நடக்கக் கூடும் இறே-

ஔரச புத்ரனான இவனுக்கும் யுண்டோ தோஷம் என்னில்
ஆத்மாவை -புத்ர நாமா அஸி-(மந்திர பிரசனம் )-என்கிற நியாயத்தால் உபாதான தோஷம் யுண்டாம் –
அத்தாலே ருசி வாசனைகள் யுண்டாம்

அந்த ருசி வாசனைகள் உபாதானம் தொடங்கி வருகையாலே
இவை உத்தர பாக சம்ஸ்கார விசேஷங்களாலும்
சத் சஹ வாச விசேஷங்களாலும்
நீக்கும் போதும் அரிதாய் இறே இருப்பது

ஆனால் அந்த உபாதான தோஷம் இங்குக் கூடாதோ என்னில் –
உபாதானம் கூடும்
தத் கதமான தோஷம் ஜாத கர்ம சங்கல்பம் வேறிடுகையாலே கூடாது –

ஆனாலும் ஸ்வீ கரிக்கிறவனுடைய தோஷங்களும் கூடாதோ புத்ரனுக்கு என்னில் -கூடும்
அது கூடினாலும் முன்பு சொன்ன சம்ஸ்கார சஹ வாசங்களாலே நீக்கி
மங்களா சாசனத்தில் -வாழாள்-என்று இவர் மூட்டும் போது அருமைப் பட்டு இராது

ஆகையால் ஒன்றுக்கு ஓன்று அத்தனை வாசி யுண்டு –

இந்த வாசிகள் தான் என்-
புத்ரான் பந்தூன் சகீன் குரோன் -என்றும்
பிதரம் மாதரம் தாரான் -என்றும்
நீக்கும் காலத்து இந்த தார தம்யம் தான் ஜீவிக்கை யாகாது இறே

புத்திரன் முன்னாக சொல்ல வேண்டிற்று  -புத்திரன் யுண்டாய் பிதா யுண்டாக வேண்டுகையாலே –
ஆனால் பிதரம் மாதரம் என்னும் போதும் -இன்னானுடைய பிதா மாதா -என்ன வேணும் இறே
(புத்ரன் இல்லாத ஒருவன் இருக்கலாம் -பிதா இல்லாத புத்ரன் இருக்க முடியாதே
பிள்ளை இருந்தால் தான் அப்பா பட்டம் கிடைக்கும் )
இவற்றினுடைய அநாதாரம் தோன்றும்படி இறே -பிதரம் மாதரம் -என்று அருளிச் செய்ததும் –
ஆகை இறே ஔரசத்துக்கு முன்னே தத் கத ஸ்வீ காரத்தை அங்கீ கரித்ததும் –

இவை தான் எல்லாம் என்
தான் பெற்றாள் என்னுமது அறியாதவளும்
பெற்றாளாக பாவித்து அத்யந்த சிநேக பஹூ மானங்கள் பண்ணா நின்றால்
ஸ்வீ கரித்தவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் அஞானத்த்தாலே வருகிற
சிநேக தாரதம்ய பஹூ மானம் சொல்ல வேணுமோ-

சித்தம் இத்யாதி –
பிள்ளை யுடைய நினைவே தனக்கு நினைவாய்
அஞ்ச யுரப்பாதே ஆணாட விட்டு இருக்கையாலே -அசோதை இளம் சிங்கம் என்கிறது
தத்துக் கொள்ளுதல் -தானே பெறுதல் -செய்தாள் ஆகில் –
இப்படி சிம்ஹக் கன்று போலே வேண்டிற்று செய்ய விடுமோ –

கொத்தார் கரும் குழல் –
திருவாய்ப்பாடியில் பெண்கள் பலரும் ஒரொரு கொத்தாக சூட்டுகையாலே
கரும் குழல் -பூம் கொத்து மாறாமல் செல்லும் இறே –

கோபால கோளரி-
தாய்க்கு அடங்காதானோ ஊருக்கு அடங்கப் புகுகிறான்-
கோபாலர்க்கு மிடுக்கு யுடைத்தான சிம்ஹ புங்கவம் போலே அடங்காமல் திரிகிறவன் –
அத்தன் -ஸ்வாமி –

——————————————————————————-

(ராமன் -கமல பத்ராஜன் -கண் அழகு உடையவன் -கண்ணன் என்னலாமே )

ஸூ லபனானவன் அப்பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –

கொங்கை வன் கூனி சொற்கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-

பதவுரை

கொங்கை–(முதுகில்) முலை யெழும்பினாற் போன்ற
வல்–பலிஷ்டமான
கூனி–கூனை யுடையளான மந்தரையினுடைய
சொல்–சொல்லை
கொண்டு–அங்கீகரித்து
எங்கும்–எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்–இப் பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
கரியும்–யானைகளையும்
பரியும்–(அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்–ராஜ்யத்தையும்
பரதற்கு–பரதாழ்வானுக்கு
அருளி–கொடுத்துவிடல்
வல் கான் அடை–கொடிய காட்டை அடைந்த
அம் கண்ணன்–அழகிய கண்ணையுடையனான இவன்
அப்பூச்சி காட்டுகின்றான்

கொங்கை வன் கூனி சொற்கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்

இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர  நியாயத்தாலே-

குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கருளி –
பூமியில் யுண்டான ஆனைகளில் விஞ்சின சத்ருஞ்ஜயன் முதலான ஆனைகளும்
உச்சைஸ்ரவஸூ  போலே  இருக்கிற குதிரைகளும்
அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -தாம் எழுந்து அருளுகிற காடு தானும் –

தாம் எழுந்து அருளுகிற காடும் பரதற்கு கொடுத்தாரோ என்னில்
வாலி ராம சரத்தை பிடித்து வைத்து -என்னைக் கொன்றத்தால் உனக்கு என்ன லாபம் யுண்டு
என்று நாநா வான விகல்ப விசேஷங்களைச் சொல்ல
அவன் சொன்னதுக்கு எல்லாம் போரும்படி
பரத ராஜ்யத்தில் நீ பிரதாவினுடைய ஸ்திரீயை ஸ்வீ கரிக்கக் கடவையோ என்ன
அந்த தோஷம் அவனுக்கும் இல்லையோ என்ன
அப்படிச் சொல்லுவுதியாகில் கண்டவிடம் எல்லாம் கழுமலை யாக்குவேன் என்றார் இறே
ஆகையால் காடும் பரத ராஜ்ஜியம் -என்னுதல்

(தனி ஸ்லோக வியாக்யானம் -ஆறு கேள்விகள் ஆறு பதில்கள் விவரணம் உண்டே )

அன்றிக்கே
தர்மத்தாலும் சௌர்யத்தாலும் நீ எறிந்து கொள்ள வல்லது எல்லாம் உனக்குத் தந்தோம் என்னுதல்
பெருமாள் நாம் தந்தோம் என்னாரே -ஐயர் தந்தார் -என்னும் இத்தனை ஒழியவாய்  இருக்க
பெருமாள் தந்தார் என்பான் என் என்னில்
சக்கரவர்த்தி கொடுத்தாலும் பெருமாள் அனுமதி வேணும் இறே
அப்ரதிஷித்தம் அனுமதம் பவதி இறே –

வன் கானிடை அங்கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –
துன்னு வெய்யில் வறுத்த வெம் பரலாய்
புகும் வழி தெரியும் இத்தனை ஒழிய புறப்படும் வழி தெரியாது இறே
அப்படி இருக்கிற காட்டிலே திருவடிகள் நோவ எழுந்து அருளுகையாலே
அழகிய ஸூலபன் என்கிறார் –

—————————————————————————————–

பெரு மிடுக்கன் அப்பூச்சி காட்டுகின்றான் -என்கிறார் –

பதக முதலை வாய்ப் பட்ட கயிறு
கதறிக் கை கூப்பி  என் கண்ணா கண்ணா வென்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த
அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி  காட்டுகின்றான் –2-1-9-

பதவுரை

பதகம்–பாதிக்குந் தன்மையை யுடைய
முதலை–முதலையின்
வாய்–வாயிலே
பட்ட–அகப்பட்ட
களிறு–ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி–(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி–கையைக் குவித்துக் கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன–என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
(முக் கரண வியாபாரங்கள் )
அங்கு–அப்போதே
உதவ–(அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து–பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறு துயர்–(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த–போக்கின
அதகன்–(ஆஸ்ரித ரக்ஷணத்தில்) மிடுக்கை யுடையவன்
வந்து – அப் பூச்சி காட்டுகின்றான்-.

பதக முதலை வாய்ப் பட்ட கயிறு
பதக முதலையின் வாயிலே அகப்பட்ட பகவத் பக்தனான ஸ்ரீ கஜேந்த்திரன் –
கஜ ஆகர்ஷே தே தீர க்ரஹா ஆகர்ஷே தே ஜல -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-46-என்று
நெடும் காலம் நீருக்கு இழுக்க -கரைக்கு இழுக்க

பகவத் பக்தனான கஜேந்த்ரனை விரோதித்தது பாதகமோ
இதுக்கு ஹேதுவானது பாதகமோ என்னும் விகல்பம் தோன்றினால்
சாப உபஹதனாய்க் செய்ததுமாய்-சாப விமோசன சாபேஷனுமாய்ச் செய்ததும் ஆகையால்
இதுக்கு ஹேதுவான பூர்வ பாவமே பாதகமாம் இத்தனை இறே
ஆனாலும் பதக முதலை -என்று முதலையின் மேலே பாதகத்தை  வைத்தாரே –

கதறிக் கை கூப்பி  என் கண்ணா கண்ணா வென்ன -உதவப் புள்ளூர்ந்து
நாராயணா ஒ மணி வண்ணா -என்றால் போலே இறே கண்ணா கண்ணா என்றதும்

கதறி என்பான் என் என்னில் –
அதிகாரத்துக்கு தகுதி அல்லாததைச் சொல்லுகையாலே

தகுதி தான் என் என்னில்
நெஞ்சுக்கு விஷயமான தேவாத அந்தர்யாமி -என்னுதல் –
ஸ்வ அந்தர்யாமி -என்னுதல்

இந்த ஆபத்து
மழுங்காத ஞானமே படையாக நீங்கும் -என்று நெடும் காலம் சென்ற அளவிலும்
நீங்காமை யாலே
திக் பலம் ஷத்ரிய பலம் என்ற விசவா மித்ரனைப் போலே
பக்தி மார்க்கத்தை திக்கரித்து
பிரபக்தி மார்க்கத்திலே போந்து
சக்ரவர்த்தி சப்த வேதியாய் எய்தாப் போலே இறே
கண்ணா கண்ணா என்ற சொல் முடிவதற்கு முன்னே அவன் கண்ணிலே தோன்றும்படி
(ஸப்த ஸஹன் அன்றோ )
அந்தபுர கை நெரிக்க சத்ர சாமரங்கள் பிற்பட
வெறும்  தரையிலே நாலிரண்டு அடி யிட்டு
பெரிய திருவடியை பண் செய்யப் பெறாமல் ஊர்ந்து சென்று நின்று
பூர்வ பக்தி தன்னையே சாத்தியம் ஆக்கினான் இறே-

அங்கு உறு துயர் தீர்த்த
அங்கு என்றது -முதலை கவ்வின இடத்திலே
உறு துயர் -ஆனையின் துயர் ஆனைக்கும் தனக்கும் தக்கது உண்டு இறே

அன்றிக்கே
அங்கு -என்றது துதிக்கை முழுத்தும்படியான   ஆபத்தாய்
களகள சப்தம் தோன்ற கிலேசிக்கிற அளவிலும்
நின்று ஆழி தொட்டான் -என்னும்படி நின்றது

இன்னமும் பூர்வ உபாசன வாசனையாலே புரியுமோ வென்று இறே
அந்த பிரபத்தி ஸ்வீ காரத்திலும் உபாய புத்தி கழியாத போது இத்தனை அருமை யுண்டு போலே காணும்
இத்தனை காலமும் இவனுக்கு நடந்த சக்தி இன்று குலைய வேண்டிற்று இறே
இந்த ஸ்வீ கார பிரபத்தி தனக்கும் இந்த பிரபத்தி தனக்கும் பல பிரதானம் செய்ய வேண்டிற்று ஆகில்
சங்கல்ப சஹஸ்ர ஏக தேசமே போரும் இறே
இத்தைப் பற்ற இறே பட்டர் -பகவதஸ் த்வராய நம -என்று அருளிச் செய்ததும் –
அங்கன் இன்றிக்கே இப்படி த்வரித்திலன் ஆகில் -மறையும் மறையும் -என்றார் இறே சிற்றாட் கொண்டார் –

உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி  காட்டுகின்றான் —
நல் விரகு அறிந்து உறு துயர் தீர்த்த பெரு மிடுக்கன்

அன்றியே
க்ருபா பிரேரகனாய்
சங்கல்ப நிபந்தனமான ஸ்வா தந்த்ர்யம் பின் செல்லும் படியான
சக்திமான் என்னவுமாம்

வந்து அப் பூச்சி காட்டுகின்றான் -அதகன் -மிடுக்கன் –

——————————————————————————-

நிகமத்தில் இத் திரு  மொழி கற்றாற்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வல்லாள் இலங்கை மலங்கச் சரம் துரந்த
வில்லாளனை விட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சி பாடலிவை பத்தும்
வல்லார் பொய் வைகுந்தம் மன்னி இருப்பரே –2-1-10-

பதவுரை

வல்லாள்–பலசாலிகளான வீரர்களை யுடைய
இலங்கை–லங்கையானது
மலங்க–பாழாம்படி
சரம் துரந்த–அம்பைச் செலுத்திய
வில் ஆளனை–வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–பரக்க கூறிய
சொல் ஆர்ந்த–சொல் நிரம்பிய
அப் பூச்சி பாடல் இவை பத்தும்–அப் பூச்சி காட்டுதலைப் பற்றிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்
போய்–(அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்–நித்ய வாஸம் பண்ணப் பெறுவர்.

1-பாரதம்  கை செய்த அத்தூதன் -என்கிற இடத்தில் என் வருகிறதோ என்ற பயமும்
2-நூற்றுவர் தம் பட்டழியத் திண் தேர் மேல் முன்னின்ற அலவலையான பயமும்
3-காயு நீர் கடம்பேறித் தீய பணத்தில்   பாய்ந்த பயமும்
4-இருட்டில் பிறந்து போன விடத்தில் வந்த பயங்களும்
5-அனுகூல பிரதிகூலரால் வந்த பயங்களும்
6-விழுங்கின துப்பமும் பாலும் தயிரும் தன் பருவத்துக்கு சாத்மியாதோ என்கிற பயமும்
7-அசோதை இளம் சிங்கம் -கோபால கோளரி-என்னும்படி கர்வோத்தரமான வியாபாரங்களால் வந்த பயமும் –
8-அவதாரத்துக்கும் ஹேதுவாய் அவன் கானிடை  நடந்த  பயமும் –
9-ஆனைக்கு அருள் செய்து உதவ புள்ளூர்ந்த பயமும்
10-வல்லாள் இலங்கை மலங்கச் சரம் துரந்த காலத்து ராஷசரால் வந்த பயமும்
எல்லாம் நிவ்ருத்தமாகைக்காக

திருக் கையிலே ஆழ்வார்களைக் காட்டி அருள
பூதனா  சகட யமளார்ஜுனர்களால் வந்த விரோதத்துக்கு பயப்பட்ட
திருவாய்பாடியிலே பெண்களுக்கும்
இவர் தமக்கும் அவை பய வர்த்தகங்களாய்  இருக்கை யாலே இறே
அப்பூச்சி  -என்றது

ஆழ்வார்களைக் காட்டினவாறே பெண்கள் அப்பூச்சி என்று அருளக் கூடும் –
அவர்களுடைய ஸ்நேஹமும் பய பாவனை  ஆகையாலே –
நெய்த்தலை நேமி -1-2-12-என்றது முதலாக
பல இடங்களிலும் கண்டார்களே யாகிலும்
மறக்கவும்
இப்போது கண்டோமே -என்று நினைக்கவும் கூடுமாகையாலே –
இவர் வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று தொடங்கி பல இடங்களிலும் ஆழ்வார்களோடு
பழகிப் போந்தவர் அப் பூச்சி என்பான் என் என்னில்
இவருக்கு ஸ்வரூபம் இது தானே யாய்ச் சொல்லுகையாலே என்னுதல்-
பெண்கள் பாசுரத்தை வியாஜ்யம் ஆக்கினாலும் இது தானே இறே இவருக்கு ஸ்வரூபம்

ஆகிலும் அப் பூச்சி என்கிற பாசுரம் இல்லை யாகிலும்
என் செய்ய என் வயிறு மறுக்கினாய்-(3-3)
அப் பூச்சி
என்கிற இவை தானே இறே இவர்க்கு யாத்ரை
இவர்  அருளிச் செய்த இடங்களிலும் திரு உள்ளத்தில் கிடப்பது இது தானே இறே –

வல்லாள் இலங்கை மலங்கச் சரம் துரந்த-
வலிமையால் பறித்துக் கொண்டதாகையாலே -வல்லாள் இலங்கை -என்கிறார் –

மலங்க –
செருப்பும் தேவாரமும் ஒக்கக் கட்டும் படியாக –
இலங்கையில் தேவாரமும் யுண்டோ என்னில்
அக்னி ஹோத்ராச்ச வேதாச்ச ராஷசானாம் க்ருஹே க்ருஹே -என்கிறபடியே
அவையும் யுண்டாதல்
(தேவாரம் -ராஷஸர் ஆராதிக்கும் தெய்வங்கள் -ராவணன் ப்ராஹ்மண ராக்ஷஸன் தானே )

அன்றியிலே
அவர்கள் விரும்பினவை அவர்களுக்கு தேவாரம் இறே
சரம் திறந்த வில்லாளன் -ராம சரம் பிரசித்தம் இறே
மாறு நிரைத் திரைக்கும் சரங்கள் -திருவாய்மொழி -7-4-7- இறே
ஒருவர் இருவர் ஓர் மூவர் -திருவாய் மொழி -8-6-3-என்னக் கடவது இறே-

தொடங்கும் போதே திருப் பல்லாண்டிலும் ராம வ்ருத்தாந்தம் உண்டே

சொல்லார்ந்த அப் பூச்சி பாடல் –
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் எல்லா வற்றுக்கும் சொல் நிரப்பும் யுண்டாவதும்
இப் அப் பூச்சி பாடலாலே இறே

இது தான் காட்டுகிறவன் நிர் பயனாய் –
கண்டவன் பயப்படுமது இறே
அப் பூச்சி

வல்லார் –
இத்தை சாபிப்ப்ரயமாக வல்லார் என்னுதல்

அன்றிக்கே
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இச் சப்த மாதரத்தையே உத்தேச்யமாக
ஓதி
ஒதுவித்துப் போருமிதே
யாத்ரையாக வல்லார் -என்னுதல்

போய் வைகுந்தம் போய் மன்னி இருப்பரே –
இவ் வாழ்வார் அபிமானமே வழியாக போய்
த்ரிபாத் விபூதியிலே சென்று பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து
பல்லாண்டு பல்லாண்டு -என்று கால தத்வம் உள்ளதனையும் ஏத்துகை பலமாகப் பெறுவார் -என்கிறார் –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-9-

December 14, 2014

கீழே அச்சோ அச்சோ வியாஜத்தாலே
யஸ்ய ராமம் ந பஸ்யேத் -யார் ராமனைப் பார்க்க வில்லையோ –
யாரை ராமன் பார்க்க வில்லையோ –
இரண்டுமே இல்லாதவர் –

எட்டாம் பதிகம் -தான் ஆசைப்பட்டு கூப்பிட
குறை தீர
தம்முடைய அபி நிவேசமும்
அவனுடைய ஸுசீல்யமும் கீழே கூப்பிட

இனிமேல்
அவன் யாரைக் காணவில்லையே
புறம் புல்குவான் -அவனே வந்து அணைத்துக் கொள்வது
அவனுடைய அபி நிவேசமும் –
ஆஸ்ரித பாரதந்தர்யம்
தான் விஷயமாகும் படியை அருளிச் செய்கிறார்

ஆனந்தமயன் அறிந்து அடைந்து
தாய் குழவிக்கு பால் ஊட்டுமா போல் ஆனந்தப்பிக்கிறான் -மகிழ்ச்சி அடையச் செய்கிறான்
இரண்டும் உபநிஷத் வாக்கியங்கள்

அதே போல் இரண்டு பதிகம்
தூமணி மாடம் -நோற்றுச் சுவர்க்கம் பாசுரங்கள் போல் இவை இரண்டும் –

ஸூவ கத பகவத் சமாஸ்ரயணம் -தூ மணி மாடம்
பர கத பகவத் சமாஸ்ரயணம்-நோற்றுச் சுவர்க்கம்
ஸூவ கத பாகவத் சமாஸ்ரயணம் -கற்றுக் கறவை
பர கத பாகவத் சமாஸ்ரயணம்–கனைத்து இளம்

———

புறம் புல்க பிரார்திக்கிறார் –

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையின் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச்  சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

பதவுரை

என் குட்டன்–என் பிள்ளை
வட்டு நிடுவே–(இரண்டு நீல ரத்ந) வட்டுகளின் நிடுவே
வளர்கின்ற–வளர்த்துக் கொண்டிருப்பதான
மாணிக்கம் மொட்டு–இந்திர நீலமயமான அரும்பினுடைய
நுனையில்-நுனியில்
முளைக்கின்ற–உண்டாகின்ற
முத்தே போல்–முத்தைப் போல
சொட்டு சொட்டு என்ன–சொட்டுச் சொட்டென்ற ஓசை யுண்டாகும்படி
(அம்மாணிக்க மொட்டு)
துளிர்க்க துளிர்க்க–பல தரம் துளியா நிற்க
வந்து–ஓடி வந்து
என்னை-என்னுடைய
புறம்–முதுகை
புல்குவான்–கட்டிக் கொள்வான்;
கோவிந்தன் என்னை புறம்புல்குவான்

சொட்டு சொட்டு இத்யாதி
மாணிக்க மொட்டின் நுனியில் மஹார்க்கமான முத்துக்கள் அரும்பித் தோற்ற
முறிந்து விழுமா போல் ‘
பொன் அரையில் -மாணிக்கம் பிரதி பிம்பம்
நீல ரத்னம் பிறப்பித்த மாணிக்கம் மொட்டு

வட்டு -நீல கழல்
கரு மாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அரு மாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-
திருப்புலியூர் நாயனார் -கரு மாணிக்க மலை மேல் -திரு மேனிக்கு உப மானம்
அதே போல் இங்கும் நீல மாணிக்க மொட்டு

சொட்டு சொட்டு -அநு காரம்

ஆச்சான் பிள்ளை சாதிப்பார்
ராஜ கோஷ்ட்டியில் இப்பாசுரம் ப்ரஸ்துதமானவாறே
கொண்டாட –
அறியாதான் ஒருத்தன் -இது இளம் சொல்லு -கொண்டாடத் தக்கதோ என்று சொல்ல

கைங்கர்ய பரர் -கண்டம் என்னும் கடி நகர் -பாசுரம் –
அதிர் முகம் உடைய வலம் புரி -பாசுரமும் இவர் அருளிச் செய்தது அன்றோ –

அதிர்முக முடைய வலம் புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழி கொண் டெறிந்து அங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம் புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணி கொண்டிழி புனல் கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-3-ராஜா கொண்டாடினான்

என் குட்டன்
கட்டிக் கொள்கிறான் -என்கிறார்

இவன் இவர் திரு மார்பை விரும்பினால் போல் முதுகையும் விரும்பினால் அன்றோ
இவ்வுடம்புடன் மங்களா சாஸனம் செய்வது
அல்லாத போது -உடம்பினால் குறைவிலமே -பாடுவார்கள் -அவனால் விரும்பாத ஒன்றுமே வேண்டாமே –
ஆகவே முன்னும் பின்னும் புல்குவான் —

மாறாளன் கவராத மணி மாமை குறை இலமே–4-8-1-
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே–4-8-2-
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே–4-8-3-
கடையாவின் கழி கோல் கைச் சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறையிலமே–4-8-4-
கடல் ஞாலத்து அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே–4-8-5-
நிலங் கொண்ட கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறை யிலமே–4-8-6-
மணி நீல வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறையிலமே–4-8-7-
அமரர்கோன் பணிந்து ஏத்தும் விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே–4-8-8-
உலகெல்லாம் நன்கொடுங்க யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே–4-8-9-
சடை முடியன் தனிஒருகூ றமர்ந்துறையும் உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே–4-8-10-

கோவிந்தன்
கன்றுகளின் பின்ன போகும் ஸூலபன்

——-

நானா வான ஆபரணங்களுடன் வந்து புறம் புல்குகிறான் என்கிறார்

கிண் கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர்  கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் -1 9-2-

பதவுரை

என் கண்ணன்–என் கண்ணபிரான்
கிண்கிணி–அரைச் சதங்கையை
கட்டி–கட்டிக் கொண்டும்
கிறி–சிறுப் பவள வடத்தை
கையினிலே–கையிலே
கட்டி–கட்டிக் கொண்டும்
கங்கணம்–தோள் வளையை
இட்டு–(தோள்களில்) சாத்திக் கொண்டும்
கழுத்தில்–திருக் கழுத்திலே
தொடர்–சங்கிலியை
கட்டி–அணிந்து கொண்டும்
தம் கணத்தாலே–(இன்னுமணிந்து கொண்டுள்ள) திருவாபரணங்களின் திரளோடுங்கூட
சதிர் ஆ நடந்து வந்து–அழகாக நடந்து வந்து
என்னை புறம் புல்குவான்-;–எம்பிரான் என்னை புறம் புல்குவான் –

கிண் கிணி இத்யாதி –
திரு வரையிலே கிண் கிணியை கட்டி –
திரு முன் கையிலே கிறியைக் கட்டி –
கிறி -சிறுப் பவள வடம் –

கங்கணம் இத்யாதி –
திருத் தோள் வளை இட்டு திருக் கழுத்திலே சங்கிலியாகிற ஆபரணத்தை சாத்தி –

தன் கணத்தாலே –
திரு ஆபரணம் தன்னுடைய திரளோடே-திரு ஆபரண பிரகரணம் ஆகையாலே –
அனுக்தமான திரு ஆபரணங்களையும் கூட்டி -கணம் -என்கிறது –

அன்றிக்கே –
தன் கண்ணாலே என்னைக் கடாஷித்து கொண்டு என்னுதல்-
அத்து -சாரியை

ஸ்வாமி என்னை புறம் புல்குவான்

——–

கத்தக் கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொதிந்து கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்னைப் புறம் புல்குவான் -1 9-3 –

பதவுரை

கத்தக் கதித்து கிடந்த–மிகவும் கொழுத்து (உனக்கு எனக்கென்று பிணங்கும்படி) இருந்த
பெருஞ்செல்வம்–மிகுந்த ஐச்வர்யத்தை
ஒத்து–(தன் பந்துக்களான பாண்டவர்களோடு) ஒத்து
பொதிந்து கொண்டு–மனம் பொருந்தி யிருக்க
உடலால் ஒத்து- மனசால் ஏற்றுக் கொண்டு -என்றபடி
உண்ணாது–அநுபவியாமல்
மண்–பூமியை
ஆள்வான்–(தான் அத்விதீயனாய்) ஆள வேணுமென்று நினைத்தவனான
கொத்து தலைவன்–(தம்பிமார்களும் பந்துக்களும் ஸேனைகளுமாகிய) திரளுக்குத் தலைவனாகிய துர்யோதநன்
குடி கெட–(தன்) குடும்பத்தோடு பாழாம்படி
தோன்றிய–திருவவதரித்த
அத்தன்–ஸ்வாமி
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆயர்கள் ஏறு–இடையர்களுக்குள் சிறந்த கண்ண பிரான்
என் புறம் புல்குவான்-.

அஹம் மமதைகளால்-உனக்கு எனக்கு என்று பிணக்கும் படி-கொழுத்துக் கிடந்த
மகத் ஐஸ்வர்யத்தை –
அஹம் உனக்கு எனக்கு என்று பிணங்கும் படி
மிகவும் கொழுத்து கிடந்த செல்வத்தை

தனக்கு
நூறு ராஜாக்கள் பிரதா
இங்குத்தைக்கு நானே தலைவன்
இவற்றை நானே ஆழ வேணும் என்று பாரித்த
குடி எல்லாம் கெடும்படி
பார்த்த சாரதி என்று பிரசித்தமாம் படி
தோன்றிய என்னுடைய
ஸ்வாமி இடையர்களுக்கு நியன்த்ருதவத்தாலே -நியாம்யனான மேனானிப்பை உடையவன்
கத்த – கோபம் -பொறாமை –

———

மேன்மை தோன்ற வர வேணும் என்கிறார் –

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயற்காகித் தரணியில்
வேந்தர்களுட்கா விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் –1-9-4-

பதவுரை

நாந்தகம்–நந்தகம் என்னும் வாளை
ஏந்திய–கையிலணிந்துள்ள
நம்பி–பெரியோனே!
ஆஸ்ரித விளம்ப அஸஹிஷ்ணுத்வத்தாலே
சரண்–(நீ எனக்கு) ரக்ஷகன்
என்று–என்று சொல்லி
தாழ்ந்த–(தன்னை) வணங்கிய
தனஞ்சயற்கு ஆகி–அர்ஜுநனுக்குப் பக்ஷபாதி யாயிருந்து
தரணியில்-இப் பூமியிலே
வேந்தர்கள்–(எதிரிகளான) ராஜாக்கள்
உட்க–அஞ்சிக் கலங்கும்படி
விசயன்-அந்த அர்ஜுநனது
மணி திண் தேர்–அழகிய வலிய தேரை
ஊர்ந்தவன்–(ஸாரதியாயிருந்து) செலுத்தின இவன்
என்னை புறம்புல்குவான்-;
உம்பர்–நித்ய ஸூரிகளுக்கு
கோன்–நிர்வாஹகனான இவன்
என்னை புறம் புல்குவான்-.

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகித்-
நாந்தகம் என்று -திருக் குற்றுடைய வாள்-
சார்ங்க வில் -என்னுமா போல் -நாந்தகம் -அசாதாராண வாள்
பூ வேந்தியவன் போலே

நம்பி சரண் –
சௌர்யாதி குண பூர்த்தியை யுடையவனே ரஷிக்க வேணும் என்று
பிர பதனம் செய்த அர்ஜுன பஷபாதியாய் –

தரணியில் வேந்தர்களுட்கா –
பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாம் துர்யோதன பஷ பாதிகளாய் நின்றவர்கள் உளைந்திடும்படியாக –
விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்

அந்த அர்ஜுனனுடைய அழகியதாய் திண்ணியதான தேரை ஓட்டம் கண்ட அளவிலே
பிரதிபஷத்தை  நிரஸ்தமாக்கினவன்-

உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் –
அது தன்னாலே இறே  உம்பர் கோன் ஆனதும்-

———————————————————————————

வாமன வேஷம் தோன்ற வர வேணும் என்கிறார் –

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல பெய்த கரும் தழைக் காவின் கீழ்ப்
பண் பல பாடிப் பல்லாண்டிசைப்பப் பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான் –1-9-5-

பதவுரை

பண்டு–முன்னொரு காலத்திலே
வெண்கலம் பத்திரம்–வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி–(அரையிற்) கட்டிக் கொண்டு
விளையாடி–விளையாடி
பல கண் செய்த–பல பீலிக் கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை–பெரிய குடையாகிற
காவின் கீழ்–சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி–(அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக் கொண்டு
பல்லாண்டு இசைப்ப–மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்–பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்
புறம் புல்குவான்-;
வாமனன் என்னை புறம் புல்குவான்-.

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்
திருவரையில் ஜாதி உசிதமாக வெண்கலப் பத்திரத்தை சாத்தி  இறே விளையாடுவது –

கண் பல பெய்த கரும் தழைக் காவின் கீழ்ப் –
திரு முடியிலே பீலிகளைச் சாத்தி
கரும் தழை-பீலிப் பிச்சம் –

அன்றிக்கே
பீலிக் கண்ணும் ஸ்நேகிகளாயும் இருப்பார் கண்களும் இறே சாத்துவது –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி இறே -அயோத் -3-29-
கண் -பீலிக் கண்

அன்றிக்கே
கரும் தழைக்கா -என்று சோலையிலே கூட்டவுமாம்
அப்போது
பெரிய தழைக்கா -என்னுதல்
கரிய தழைக்கா -என்னுதல்
இப்படி இருக்கிற காவின் கீழே விளையாடி-

பண் பல பாடிப் -பல்லாண்டிசைப்ப –
பண்கள் பலகாலும் மேல் எடுத்த திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடிச் சாத்த –
சூட்டினேன் சொல் மாலை -முதல் திருவந்தாதி -1–என்னுமா போலே –
சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ்தை-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-33
திசை வாழி எழ -திருவாய்மொழி -7-4-1-

பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் -வாமனன் என்னைப் புறம் புல்குவான்-
மகா பலி பக்கலிலே வாமன ரூபியாய் அபேஷித்த காலத்திலே
பதினாலு லோகங்களையும் அளந்து கொண்டவன் –
த்ரிவிக்ரம அபதானம் தோன்றா நிற்கச் செய்தேயும்
வாமன வேஷத்திலே இறே திரு வுள்ளம் உற்று  இருந்தது  –

——————————————————————————-

வாமனாவதாரம் கண்டு இருக்கச் செய்தேயும்
பாரளந்தான் என்று திரிவிக்கிரம அவதாரம் பின் நாட்டின படி –

சத்திரமேந்தித் தனி யொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற வொருவனைக்
கத்திரிவர் காணக்  காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான் -1-9-6-

பதவுரை

உத்தர வேதியில் நின்ற–உத்தர வேதியிலிருந்த
ஒருவனை–(ஔதார்யத்தில்) அத்விதீயனான மஹாபலியினிடத்திலே
சத்திரம்–குடையை
ஏந்தி–(கையில்) பிடித்துக் கொண்டு
தனி–ஒப்பற்ற
ஒரு மாணி ஆய்–ஒரு ப்ரஹ்மசாரி வாமனனாய் (போய்)
தனி ஒரு -அஸாஹயா -அத்விதீயம்
கத்திரியர்–(அவனுக்குக் கீழ்ப்பட்ட) க்ஷத்ரியர்கள்
காண–பார்த்துக் கொண்டிருக்கையில்
காணி முற்றும்–உலகம் முழுவதையும்
கொண்ட–(நீரேற்றளந்து) தன்னதாக்கிக் கொண்ட
பத்திரம்–விலக்ஷணமான-மங்களகரமான
ஆகாரன்–வடிவை யுடையனான இவன்
புறம் புல்குவான்-;
பார்–பூமியை
அளந்தான்–(திரிவிக்கிரமனாய்) அளந்த இவன்
என் புறம் புல்குவான்-.

சத்திரமேந்தித் தனி யொரு மாணியாய் –
மௌஜ்ஞியும் கிருஷ்ணாஜிநமும் திருக் கையிலே பிடித்த சிறு குடையும்
அத்விதீயமான வாமன வேஷத்தையும் கொண்டு இறே
மகா பலியுடைய யஞ்ஞவாடத்திலே சென்று புக்கது –

உத்தர வேதியில் நின்ற வொருவனைக் கத்திரிவர் காணக்  காணி முற்றும் கொண்ட –
அத்விதீயமான ஔதார்ய குணத்தை யுடையனாய்
உத்தர வேதியில் நின்ற மகா பலியும் ராஜாக்கள் பலரும் காண
தனக்கு ஸ்வம்மான பூமியை அபேஷித்து நின்றான் இறே –
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றவன் -திருவாய் -4-5-10-

பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான் –
நன்றான வடிவை யுடையவன் –
புலன் கொள் மாணாய் இறே -திருவாய் -1-8-6- நிலம் கொண்டது
(மண் கொண்டது பின் புலன்களைக் கொண்டது முன்னே )

திருக் கையிலே உதகம் விழுந்த போதே
அவன் திரு உள்ளத்திலே கோட்பாடு அறிந்து அளப்பதற்கு முன்னே
இனி காணி முற்றும் கொண்டான் அன்றோ -என்று உகக்கிறார் –

இவ் உகப்பு விளை நீராக விளைந்து இறே பாரளந்தது-
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றோம் என்று போந்தான் –
மகாபலி ஔதார்யம் பெற்றுப் போனான்
இதுக்கு உகப்பார் இவர் ஒருத்தரும் இறே  –

————————————————————————-

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் –1-9-7-

பதவுரை

பொத்த உரலை–(அடியில்) ஓட்டையாய் விட்டதொரு உரலை (கொண்டு வந்து)
கவிழ்த்து–தலை கவிழ்த்துப் போட்டு
அதன் மேல் ஏறி–அவ் வுரவின் மேலேறி
தடாவினில்–மிடாக்களிலே உள்ள
தித்தித்த பாலும்–மதுரமான பாலையும்-திரட்டுப் பாலையும் –
வெண்ணெயும்–வெண்ணெயையும்
திரு வயிறு ஆர்–வயிறு நிரம்ப
மெத்த விழுங்கிய–மிகுதியாக விழுங்கின
அத்தன்-தலைவன்
வந்து என்னை புறம் புல்குவான்-;
ஆழியான்–(இப்படிக் களவு கண்டு உண்கையில்) ஆழ்ந்து தேறியவன்
என்னை புறம் புல்குவான்-.

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் –
திரு ஆய்ப்பாடி எல்லாம் நவநீத சௌர்ய ஷோபமானவாறே
யசோதை -சிறு பிள்ளையைக் களவு சொல்லாதே உம் தாம் பண்டங்களை உறிகளிலே வையும்கோள்-
இவனுக்கு எட்டாத படி -என்ன –
அவர்களும் அப்படியே செய்து
அனுமானத்தாலே உரலை இட்டு ஏறவும் கூடும் -என்று
அவற்றை மறைய வைக்க –

நிரபிமாநமாய் ஏறப் பெறாமல் சுற்றும் விரிந்து பொத்த உரல் என்று
இவன் பாக்யத்தாலே தேடிக் கொண்டு வாரா நிற்கச் செய்தே அது கையிலே தட்ட
அத்தை எடுத்து உறியின் கீழே கவிழ விட்டு –
அதன் மேலே திருவடிகளை வைத்து ஏறி –
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் –

மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்-
திரு வயிறு நிறைய அமுது செய்து
திரு உள்ளம் பிரசன்னமான
என்னுடைய ஸ்வாமி-

ஆழியான் என்னைப் புறம் புல்குவான் —
க்ருத்ரிமத்தில் அவகாஹா நத்தைச் சொல்லுதல்
திரு வாழியை யுடையவன் என்னுதல் –

பொத்த -என்று
கிட்டுதல் –
பொருந்துதல் -என்னுமாம் –

இத்தால் –
ஸூஷியுடையருமாய் -இதர அபிமானம் அற்றவர்களுக்கு
(ப்ரபன்னர் -அநந்ய சேஷ பூதர்களுக்கு)
அபேஷா நிரபேஷமாக திருவடிகள் சேரும் என்று காட்டுகிறது

பொத்த யுரலால் –
இதர அபிமானம் சிறிது கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போக்ய பூதராவார் என்கிறது-

தித்தித்த பாலும் –
காய்ச்சி உறி ஏற்றி உறைதல் வாய்ப்பாலும் அவனுக்கு போக்யமாய் இருக்கும் இறே-

இத்தால் –
ஒருவனை நாம் திருத்தி ஆந்தராளிகன் ஆக்கினோம் என்னும் அபிமானம் கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போக்யர் ஆவார்கள் இறே

நாழிவளோ-திரு விருத்தம் -71-என்றும்
செய்த சூழ்ச்சியை யாருக்கு உரைக்கேன் -பெரியாழ்வார் திருமொழி -3-7-4-என்றும்
இவ் வபிமானம் இறே அவனுக்கு அங்கீகார ஹேது
ஸ்வ அபிமானம் அற்ற அளவன்றிக்கே –
வைகுண்ட பிரிய தர்சிகளாய் இருப்பாரை -வெண்ணெய்-என்கிறது –

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே – – -71 –எங்கனேயோ அன்னைமீர்காள் -5-5-

ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண் மகளை யெள்கி
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறியாத தென்னும் மூதுரையு மிலளே–3-7-4-

எல்லா உலகுமோர் துற்றாற்றா-திருவாய் -2-8-8-என்கிற திரு வயிறு நிறைவதும்
திரு உள்ளம் பிரசன்னம் ஆவதும் இவ்வதிகாரம் கண்டால் இறே –

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-

சதுர்த்தியில் ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தமான பார தந்த்ர்யம் தோன்றா நிற்கச் செய்தேயும்
அந்ய சேஷ பூதரை இறே சேஷம் என்கிறது –

சேஷ பூதனை -முமுஷூ வானவனை இறே
வெண்ணெய் என்னாலாவது –

தித்தித்த பால் -என்கிறது
ஸ்வ அபிமானமும் இதர அபிமானமும் அற்ற பிரபன்னரை இறே –

பொத்த உரல் என்றது –
பிரபன்னன் தன்னை –
அசித் என்று இறே இருப்பது –

———————————————————————–

மங்களா சாசன பரராய் இருப்பார் எல்லாரும் கண்டு களிக்கும் படி வர வேணும் -என்கிறார் –

மூத்தவை காண முது மணல் குன்றேறிக்
கூத்து வந்தாடிக் குழலால் இசைபாடி
வாய்த்த மறையோர் வணங்க விமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் –1-9-8-

பதவுரை

மூத்தவை–வயசு சென்ற இடைச் சனங்கள்- வ்ருத்த ஜன ஸபை -ஆச்சார்யம் வயசு ஞானம் இவற்றால் மூத்தவை
காண–காணும் படியாக
முது மணல் குன்று ஏறி–நெடு நாளாய் குவிந்து மேடாயிருந்த மணற்குன்றின் மேலேறி யிருந்து
வாய்த்த–தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும் படி கிட்டின
மறையோர்–ப்ரஹ்ம ரிஷிகள்
வணங்க–தன்னைக் கண்டு வணங்கவும்
இமையவர்–தேவர்கள்
ஏத்த–ஸ்தோத்ரஞ்செய்யவும்
குழலால் இசைபாடி–வேய்ங்குழலினால் ராகம் பாடிக் கொண்டும்
உவந்து–ஸந்தோஷித்து
கூத்து ஆடி–கூத்தாடியும் நின்று
வந்து என்னை புறம் புல்குவான்-;
எம்பிரான் என்னை புறம்புல்குமான்-.

மூத்தவை காண முது மணல் குன்றேறிக் கூத்து வந்தாடிக்-
ஜாதி உசிதமான அறிவிலே மூத்தவை –
இளையவர்களை கிருஷ்ணன் முகத்தில் விழிக்க ஒண்ணாத படி நிலவறை கற்பிக்கையாலே
அவை -என்று அநாதரிக்கிறது-

அவர்களையும் சித்த அபஹாரம் பண்ணும்படி இறே இடமுடைத்தாய் பெரிதான மணல் குன்றிலே ஏறிற்று –
அவை -என்று திரளாகவுமாம்

மணல் குன்றிலே வந்தேறி ஆடி என்னுதல்
உவந்தேறி ஆடி என்னுதல்

உவந்தேறி ஆடி -என்றது –
இளையவர்கள் நிலவறை திறந்து வரக் காண்கையாலே-
கூத்து -என்றால் எல்லாரும் வரலாம் இறே –

குழலால் இசை பாடி-
குழலில் த்வனி வாய்ப்பு இறே மூத்தவை அறிவது

குழல் மீது வைத்தூதும் நல் விரகுகளும்
தாழ்த்த மாத்ரத்துக்கு அனுதபித்து அவர்களை காலும் தலையும் பொருத்தி ஷமை கொள்ளுவதும்
இளையவர்கள் அறியும் இத்தனை இறே –

வாய்த்த மறையோர் வணங்க விமையவர் ஏத்த –
மங்களா சாசன பரராய் இளையவர்கள் -திருவடிகளில் மார்த்வம் அறிந்து –
வாழி-வாழி -என்று அமைக்க-
நிலவறை களிலே மறைந்து கிடைக்கையாலே -மறையவர் -என்னலாம் இறே

ஆட்டிலும் பாட்டிலும் சித்தபஹ்ருதராய் –
அநிமிஷராய்   – பார்த்துக் கொண்டு இருந்து
அக்ரமாக மூத்தவை ஸ்துதிக்க –

அன்றிக்கே
ஸ்ரீ கிருஷ்ண கிரீடை காண்கைக்கு வந்து மறைந்து நிற்க யோக்யரான
இங்குத்தை தேவர்களும் ரிஷிகளும் –
வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் ருசிகளும் என்னவுமாம் –

இத்தால் –
அவதரித்து ஜாதி உசிதமாக பரிக்ரஹித்த வேஷத்துக்கு ஈடாக நடித்து
திருக் குழலாலேயும் பாடினவை எல்லாம்
இங்குள்ள பிராணிகளுக்கும்
அங்குண்டான ஸூரிகளுக்கும் உத்தேச்யம் -என்கிறது –

மூத்தவர்கள் என்று –
ஜ்ஞாத்ருத்வ பூர்த்தியாலே அங்குள்ளவர்

முது மணல் என்கையாலே –
இந்த்ரியங்களின் வழி ஒழுகாமல் தான் அவற்றை வசமாக்கி மேல் கொண்டமை தோற்றுகிறது-

வாய்த்த மறையோர் வணங்க -இமையவர்   ஏத்த -குழலால் இசை பாடி -என்றத்தாலே
ஆச்சார்ய வசன பாரதந்த்ர்யமே வாய்த்த மறையாக –
மங்களா சாசன பர்யந்தமாக கைங்கர்யம் செய்யுமவர்கள் –

இமையவர் ஏத்த -என்கையாலே
அநிமிஷராய்
குண அனுபவத்திலே ஊன்றி
விக்ரஹ தர்சனமே தாரகமாய் இருக்குமவர்கள் -என்கிறது

எம்பிரான் –
எங்களக்கு மகா உபகாரகன் ஆனவன் –

—————————————————————————————

பிராட்டிமார்க்கு அபிமத பரதந்த்ரமான பிரகாரம் தோன்ற வர வேணும் -என்கிறார் –

கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுதுதீவன்   என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9-

பதவுரை

இந்திரன் காவினில்–இந்த்ரனுடைய உத்யாநவநத்திலிருந்த
கற்பகம் காவு–கற்பகச் சோலையை
கருதிய–(தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று) விரும்பிய
காதலிக்கு–தனக்கு ப்ரியையான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
இப்பொழுது–இப்பொழுதே
ஈவன்–கொணர்ந்து தருவேன்
என்று–என்று சொல்லி
நிலா திகழ்–நிலா விளங்குகின்ற
முற்றத்துள்–அவள் வீட்டு முற்றத்தில்
நிற்பன செய்து–இருப்பனவாகச் செய்து
உய்த்தவன் என்னை–தழைக்கும்படி செய்தவன்
என்னை புறம் புல்குவான்-;
உம்பர் கோன்–(அன்று தன் பராக்ரமத்தை காட்டிய) தேவாதி தேவன்
என்னை புறம் புல்குவான்-.

கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன்  என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் –
தேவ லோகத்தில் ஒழிய நில்லாத கற்பகக் காவையும்
பூ லோகத்தில் கொடு வந்து தன்னகத்தில்
நிலா முற்றத்திலே  நட்டுத் தர வேணும் என்று ஆசைப்பட்ட
ஸ்ரீ சத்யபாமைப் பிராட்டிக்கு நாளை என்னாதே பின்னை என்னாதே

அவள் திரு உள்ளம் பிசகும் என்று நாளை என்ன மாட்டான்
தன்னுடைய த்வரையாலே பின்னை என்ன மாட்டான்
பிரதி நியத சங்கல்பம் பாராதே -நீர் ஏவின கார்யம் இப்போதே செய்து தரக் கடவேன் -என்று
தன்னிலத்த்லே இந்த்ரன் மதர்தமாக ரஷிக்கக் கடவேன் என்று
பஹூ மானம் பண்ணி ரஷிக்கிற கற்பகக் காவை கொடு போரா நிற்கச் செய்தே

முற்பட ஆதரித்த இந்த்ரன் தன் புழைக் கடையிலே ஒரு பூண்டைப் பிடுங்கக் கொண்டு போரப் பொறாமையாலே
கோபித்து வஜ்ரத்தை வாங்கி  தொடர்ந்து யுத்த கார்யம் செய்வானாக வந்து
வந்த கார்யம் பலியாமையாலே ஸ்தோத்ரம் செய்ய

அங்கே நிற்கவும் கடவது என்று சங்கல்பம் செய்து
நிலாத் திகழ் முற்றத்திலே கொண்டு வந்து
வண் துவரை நட்டானை -(நறையூரில் கண்டேனே ) -என்கிறபடியே நட்ட பின்பு
அங்குத்தையிலும் இங்கு தழையும் பூவும் கொழுந்துமாய்க் கொண்டு இளகிப் பதித்து செல்லா நின்றது இறே
இப்படி அரியன செய்த அபிமதத்தோடே புறம் புல்குவான் –

உம்பர் கோமான்
இப்படி செய்கையாலே நித்ய ஸூரிகளுக்கு முன்னிலையிலே நிர்வாஹகன்
என்னுமதுவும் தோன்ற வர வேணும் என்கிறார் –

————————————————————————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம் புல்கிய
வேய்த் தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே –1-9-10-

பதவுரை

வேய்–மூங்கில் போன்ற
தடந்–பெரிய
தோளி–தோள்களை யுடையனான
ஆய்ச்சி–யசோதை யானவன்
ஆழிப் பிரான்–சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன்
அன்று–அக் காலத்திலே
புறம் புல்கிய–புறம் புல்குவதைக் கூறிய
சொல்–சொல்லை
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
மகிழ்ந்து–(தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து
ஈந்த–(உலகத்தார்க்கு) உபகரித்த
தமிழ் இவை ஈர் ஐந்தும்–தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்-ஓத வல்லவர்கள்
வாய்த்த–(மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி
நல் மக்களை–நல்ல புத்திரர்களை-(ஸத் சிஷ்யர்களையும் )
பெற்று–அடைந்து
மகிழ்வர்–ஆநந்திப்பர்கள்.

ஆய்ச்சி அன்று ஆழிப்பிரான் புறம் புல்கிய வேய்த் தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
வேய்த் தடம் தோளியான வாய்ச்சி –

ஆழிப்பிரான் -புறம் புல்குவான் -என்று அவன் புறம் புல்கிய சொல்லை

விட்டு சித்தன் -அவள் சொல்லிய சொல்லை
அவள் சொன்ன அன்று கூட நின்றால் போலே
தாமும்  புல்குவான் என்று பிரார்த்தித்து –
அவன் கடாஷத்துக்கு விஷயமாய் தாமும் பெற்று மகிழ்ந்த பிரகாரத்தை –

ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே —
விட்டு சித்தன் பரோபகாரமாக வுபகரித்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
வாய்த்த மக்களையும்
நன் மக்களையும் பெற்று
அவர்கள் மங்களா சாசனம் பண்ணக் கண்டு மகிழ்வர் -என்கிறார்
(மக்கள் -நல் மக்கள் -வாய்த்த நல் மக்கள் )

விஷ்ணு சித்தன் என்றது –
அரவத் தமளிப் படியே

வல்லவர் -என்றது –
சாபிப்ப்ராயமாக -என்றபடி

வாய்த்த மக்கள் -என்றது –
புத்ரர்களை

நன் மக்கள் என்றது –
சிஷ்யர்களை –

பிரத்யயத்திலே சிஷ்யர்களுக்கு ப்ராப்தி யுண்டானவோபாதி
பிரக்ருதியிலே புத்ரர்களுக்கும் பிராப்தி யுண்டு இறே

(ஓம் பிரணவம்
அகாரம் -அவ ரக்ஷண -தாது -பிரகிருதி-அகாரம் ரக்ஷகத்வம் சொல்லும்
லுப்த சதுர்த்தி –ஆய –அகார -மகார -தொடர்பு -அநந்யார்ஹ சேஷத்வம் —
பரமாத்வாவுக்கு -நான்காம் வேற்றுமை -ஜீவாத்மா -சேஷ பூதன்
ஆய -ப்ரத்யயம் –
ஆச்சார்யனுக்கு சிஷ்யர் ப்ரத்யயம் -பிராப்தி சொல்லும்
ரஷிக்கிறான் பார்த்தால் புத்ரர்களுக்கும் சிஷ்யர்களுக்கு -உண்டே )

புத்ரன் -சந்த்யஞ்ய -(நன்கு விட்டு )-என்றது
காரண கார்ய பாவ சம்பந்தத்தாலே இறே
அது தான் அறிந்த மாத்ரம் இறே
இங்கு கார்ய காரண பாவ சம்பந்தம் ஆகையாலே இறே உபாதேயமாம்  இறே
தாத்வர்த்தத்தால் வந்த ரஷ்யத்வம் சதுர்த்தி தோற்றினால் இறே தோற்றுவது –

(அவ ரக்ஷண தாது -இந்த அர்த்தத்தால் வந்த அவனால் ரக்ஷிக்கப் படுபவர்
இத்தை அறிவது -சதுர்த்தி -நான்காம் வேற்றுமை அறிந்தால் தானே –
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வர் -நாச்சியாரும்
நவவித சம்பந்தம் அறிந்து விட ஒண்ணாதது -கர்ம பந்தம் இல்லையே –
ஆத்ம பந்து -அப்ராக்ருத சம்பந்தம் – )

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-8-பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி-

December 14, 2014

பொன்னியல் பிரவேசம் –

கீழே இவருடைய அபிமானத்திலே ஒதுங்கி
அதிகாரியானவன் நல் வழி நடக்கவே
அனுகூல ப்ரீதியும் பிரதிகூல நிரசனமும் சித்திக்கும் -என்கிறார் –

பிரதிகூல நிரசனம் தான் –
தேஜோவதமும் -பிராண வதமுமாயும் இறே இருப்பது

(தேஜோவதமும் -பிராண வதமுமாயும்–ஒளியைத் தடுப்பதும் -விளக்கையே உடைப்பதும்
இன்று போய் நாளை வா என்றது அவனது தேஜஸ் வதம்
அவனை இறுதியில் அழித்தது பிராண வாதம் )

சாஷாத் பிரதிகூலமாவது –
தேக இந்த்ரியங்களும் தானும் இறே
(தன்னைக் கண்டால் பாம்பைக் கண்டால் போல் இருக்க வேண்டுமே )

தேக இந்த்ரியங்களை தேஜோ வதம் பண்ணுகையாவது-
அதிகார அனுகுணமாக நியமித்து சிறைப்படுத்தி
நியாம்யம் ஆக்குகை –

(இந்த்ரியங்களை )நிரசிக்கையாவது –
எம்பாரை போலே இறே –
(இல்லறம் நாட்டம் இல்லாமல் -இருளையே காண வில்லையே -எங்கும் ஒளி வெள்ளம் –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -கோடி ஸூர்யன் போல் பிரகாசிக்க
இவர் இந்திரியங்களை நிரசித்தவர் அன்றோ -)

தானே தனக்கும் சத்ருவாய் இருக்கும் இறே –
கர்மத்தால் அன்றிக்கே
காலத்தால் அன்றிக்கே
தேசத்தால் அன்றிக்கே
இந்த்ரியங்களால் அன்றிக்கே
நானே செய்தேன் -என்றான் இறே –

(ப்ரக்ருதியே -அஹங்காரம் -கர்த்ருத்வம் இல்லாதே இருந்தாலும்
நானே செய்கிறேன் என்கிறான் அன்றோ –
கர்த்தா காம் இதி மன்யதே )

இனி மேல்
அச்சோ -என்கிற வ்யாஜத்தாலே
அயோக வ்யச்சேதமும்-
(சம்பந்தம் உடைமை -நித்ய சம்பந்தி -பிரகாரம் -சம்பந்தம் இல்லாமைக்கு இல்லை செய்வது )
அப்ரதிஷேதம் (விலக்காமை )முதலான ஆத்ம குணங்கள் யுண்டாகில் இறே
(அத்வேஷம் ஆபி முக்கியம் சாது சமோஹம் இத்யாதிகள் )
அவனைக் கூடலவாது -என்னும் —
அர்த்தத்தை வெளியிடுகிறார் –

———————————————————————

மின்னொடு ஒரு மேகம் வந்தால் போலே வந்து
என்னோடு அணைய வேணும் என்கிறார் –

பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம் கட்டித்
தன்னியலோசை சலன் சலன் என்றிட
மின்னியல் மேகம் விரைந்து எதிர் வந்தால் போல்
என்னிடைக் கோட்டரா வச்சோ வச்சோ எம்பெருமான் வாரா வச்சோ வச்சோ –1-8-1-

பதவுரை

பொன் இயல்–பொன்னாற்செய்த
கிண்கிணி–அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
சுட்டி–சுட்டியையும்
புறம்–(அதற்கு உரிய) இடங்களிலே
கட்டி–அணிந்து
தன்–சதங்கைக்கு
இயல்–பொருந்திய
இசை–சப்தமானது
சலன் சலன் என்றிட–சலன் சலனென்று ஒலிக்க
மின் இயல்–மின்னலோடு பொருந்திய
மேகம்–மேகமானது
விரைந்து–வேகமாக ஓடி வந்து
எதிர் வந்தால் போல்–எதிரே வந்தாற் போலே
என் இடைக்கு ஒட்டரா–என் இடையிலிருக்க (விரும்பி) ஓடி வந்து
அச்சோ அச்சோ–(என்னை) அணைத்துக் கொள்ள வேணும் அணைத்துக் கொள்ள வேணும்
எம்பெருமான்–எங்களுடைய தலைவனே!
வாரா–வந்து
அச்சோ அச்சோ

பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம் கட்டித் –
பொன் வடத்திலே கோவைப் பட்டு
ஓசையை யுடைத்தான கிண் கிணியை திரு வரையிலே பின்னே சாத்தி
திருச் சுட்டியை முன்னே சாத்தி –

தன்னியலோசை சலன் சலன் என்றிட –
தன்னிஷ்டத்தில் விளையாடா நின்றால்
கிண் கிணி  முதலான ஆபரணம்  த்வனிக்கும் இறே –
சலன் சலன் -அநுகார த்வனி –

மின்னியல் மேகம் விரைந்து எதிர் வந்தால் போல் –
மின்னோடே கூடி ஒரு மேகம் கால் படைத்து
கடுக நடையிட்டு கொடு வருமா போலே
திரு ஆபரண பிரகாசமும் திரு மேனியில் பிரகாசமும் தோன்ற-

என்னிடைக் கோட்டரா வச்சோ வச்சோ எம்பெருமான் வாரா வச்சோ வச்சோ –
உனக்கு ப்ரார்த்த நீயமான என்னிடையில் இருப்புக்கு
எனக்கு பிரார்த நீயமான உன்னுடைய ஓட்டத்தைத் தாரா
நான் எடுத்து அணைக்கும் படி கூட வேணும் –

இவருடைய ஹஸ்த முத்தரை பரம பக்தி பர்யந்தம் ஆனாலும்
அவனுக்கு வேண்டுவது அப்ரதிஷேதம் இறே

(நம இத்யேதி வாதிநா -அங்கும் அஞ்சலியே -பரம பக்தி வரை வெளிப்படுத்தவும் இதுவே
அவன் விலக்காமை ஒன்றையே எதிர்பார்த்து இருக்கிறான் -)

எம்பெருமான் வாரா -என்றது
ஸ்வாமியாய் –
மகா உபாகாரகனாய் –
எப்போதோ அழைப்பார் -என்று பார்த்து நின்று இருக்கிறவனை –
வாரா -என்றது –
தம்முடைய ஆற்றாமையாம் இத்தனை இறே

அச்சோ அச்சோ -என்றது –
சிறு பிள்ளைகளோடு சம்ஸ்லேஷ அபேஷையாய் இருப்பார் உகந்து சொல்லும் பாசுரம் இறே –

————————————————————————

திருக் குழல் திரு முகத்தே கவியும்படி கடு நடை யிட்டு வரவேண்டும் -என்கிறார்-

செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங் கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ –1-8-2-

பதவுரை

செங்கமலம்–செந்தாமரைப் பூவில்
தேன் உண்ணும்–தேனைக் குடிப்பதற்காக மொய்க்கின்ற
வண்டே போல்–வண்டுகளைப் போல
பங்கிகள் வந்து–(உனது) கூந்தல் மயிர்கள் வந்து
உன் பவளம் வாய்–பவளம்போற் செந்நிறமான உனது வாயில்
மொய்ப்ப–மொய்த்துக் கொள்ளும்படி
வந்து–ஓடி வந்து
சங்கு–ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்
வில்–ஸ்ரீசார்ங்கத்தையும்
வாள்–ஸ்ரீநந்தகத்தையும்
தண்டு–ஸ்ரீகௌமோதகியையும்
சக்கரம்–ஸ்ரீஸூதர்சநாழ்வானையும்
ஏந்திய–(பூவேந்தினாற்போல) தரித்துக் கொண்டுள்ள
அம் கைகளாலே–அழகிய கைகளாலே
அச்சோ அச்சோ
வந்து–ஓடி வந்து
ஆர தழுவா–திருப்தி உண்டாகும்படி நன்றாகத் தழுவி
அச்சோ அச்சோ

செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல் –
தன் நிலத்திலே அலர்ந்த செவ்வித் தாமரையில் வண்டுகள் மொய்த்தால் போலே –

பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப –
சுருண்ட வண்டொத்த திருக் குழல்கள் வந்து
உன் திருப் பவளத்திலே மொய்க்கும் படியாக –

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய அங்கை களால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவா வந்து அச்சோ வச்சோ –
மங்களா சாசன பரரான ஸ்ரீ பஞ்ச ஆயுத ஆழ்வார்களைத் தரிக்கிற அழகிய திருக் கைகளால் வந்து
தழுவா வந்து நிற்கச் செய்தே
அபி நிவேசத்தின் மிகுதியாலே –
ஆரத் தழுவாய்-என்கிறது –

இவருக்கும் இவனோட்டை ஸ்பர்சம்  தான்
யுவதிகளை அபிமத புருஷர்கள் ஸ்தன பரி ரம்பணம் செய்தால்
அவர்கள் அந்த போக அதிசயத்தாலே சொல்லும் பாசுரம் போலே இருக்கிறது காணும் –

—————————————————————————

அரை குலைய தலை குலைய ஓடி வர வேணும் என்றார் கீழ் –
இதில் திருமேனி அலையாமல் வர வேணும்  என்கிறார் –

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே யச்சோ வச்சோ ஆயர் பெருமானே யச்சோ வச்சோ –1-8-3-

பதவுரை

பஞ்சவர்–பாண்டவர்களுக்காக
தூதன் ஆய்–(துர்யோதநாதிகளிடம்) தூதனாய்ப் போய்
(அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்)
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்து–அணி வகுத்துச் செய்து
நஞ்சு–விஷத்தை
உமிழ்–கக்குகின்ற
நாகம்–(கானிய) ஸர்ப்பம்
கிடந்த–இருந்த
நல் பொய்கை–கொடிய மடுவிலே
புக்கு–புகுந்து
அஞ்சு–(ஆய்ச்சிகளும் ஆயரும்) பயப்படும்படி
பணத்தின் மேல்–(அப் பாம்பின்) படத்திலே
பாய்ந்திட்டு–குதித்து
(நட மாடி அக் காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க)
அருள் செய்த–(அப் பாம்பின் ப்ராணனைக்) கருணையால் விட்டிட்ட
அஞ்சனம் வண்ணனே ! அச்சோ அச்சோ-;
ஆயர்–இடையர்களுக்கு
பெருமானே–தலைவனானவனே!
அச்சோ அச்சோ-.

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –
அவனுக்கு பிரார்த்த நீயம் இறே இது தான் –
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அவனே இன்னார் தூதன் என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-என்று
இறே ஜீயருக்கு  பட்டர் அருளிச் செய்தது –

பாண்டவர்கள் தூதனாய் துர்யோத நாதிகள் பக்கலிலே சென்று –
இவர்களையும் சமாதானம் செய்யலாமோ -என்று
மத்யஸ்த புத்தியாலே பார்த்த அளவிலே அவர்கள் நெஞ்சில் ஈரப்பாடு காணாமையாலே
பாரத யுத்தம் கையும் அணியும் வகுத்துச் செய்ய வேண்டிற்று –

நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு –
நல் பொய்கை புக்கு கிடந்த நஞ்சுமிழ் நாகம் அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு –
முன்பு அம்ருத ஜலமான பொய்கை இறே சலம் கலந்த பொய்கை யாயிற்று –

அஞ்சப் பணத்தின் மேலே –
அனுகூல ஜனங்களான திரு வாய்ப் பாடியில் உள்ளாறும்
மற்றும் யுண்டான சாஷாத் கார பரரும்
அதீத காலத்துக்கும் உத்தர காலத்திலே வயிறு மறுகும் இவர் தாமும்
அஞ்ச -என்னுதல் –

காளியன் தான் அஞ்சும்படியாக
அவன் பணத்தின் மேல் பாய்ந்து என்னவுமாம் –

அதனுடைய பணத்தின் மேலே –
பாய்ந்திட்டு அருள் செய்த –
அவன் சரணம் புக்கவாறே அருள் செய்தது தம் பேறாக நினைக்கிறார் –

அஞ்சன வண்ணனே யச்சோ வச்சோ –
அஞ்சினாரை ரஷிக்கப் பெற்றோம்  என்று அஞ்சன வண்ண மேனி புகர் பெற்று செல்லுகையாலே –
அஞ்சன வண்ணனே -என்கிறார் –

ஆயர் பெருமானே யச்சோ வச்சோ —
அஞ்சினார்க்கும் அஞ்சாதார்க்கும் நிர்வாஹகனாய் ரஷித்தவனே -என்கிறார்-

—————————————————————————-

கூனி சாத்தின சாந்தின் நாற்றத்தோடு வர வேணும் -என்கிறார் –
(ஆறு மாத குழந்தையை பத்து வயசில் பூசிக் கொண்ட சந்தனத்துடன் வரச் சொல்லுவது
இவரால் மட்டுமே முடியும் )

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறியவளும் திரு வுடம்பில் பூச
ஊறிய கூனினை யுள்ளே   யொடுங்க வன்
றேற வுருவினாய் அச்சோ அச்சோ எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ –1-8-4-

பதவுரை

நாறிய–‘நல்ல வாசனை வீசுகின்ற
சாந்தம்–சந்தனத்தை
நமக்கு–எங்களுக்கு
இறை–கொஞ்சம்
நல்கு என்ன–கொடு என்று (நீ) கூனியைக் கேட்க
அவளும்–அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)
தேறி–மனம் தெளிந்து
திரு உடம்பில்–(உனது) திருமேனியிலே
பூச–சாத்த
ஊறிய–வெகு நாளா யிருக்கிற
கூனினை–(அவளுடைய) கூனை
உள்ளே–(அவள்) சரீரத்திற்குள்ளே
ஒடுங்க–அடங்கும்படி
அன்று–அக் காலத்திலே
ஏற–நிமிர்த்து
உருவினாய்–உருவினவனே!
அச்சோ அச்சோ-;
எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறியவளும் திரு வுடம்பில் பூச –
கூனியை -சாந்து தா -என்ன
அவள் மட்டமான சாந்துகளைக் காட்ட
இவை ஆகாது -என்று நீக்கி
குளுந்து நாறிய சாந்திலே ஓர் அல்பம் தா -என்று அபேஷிக்க-
அவளும் பிள்ளைகளை -சாந்தில் வாசி அறிந்த படி என்-என்று கொண்டாடி தேறிக் கொடுக்க –

தேறிக் கொடுக்கையாவது –
கம்சனால் வரும் நலிவுக்கு அஞ்சாமல் ஸ்நேஹத்தோடே கொடுக்க வாங்கித் தாம் சாத்திக் கொள்ளுதல் –
அவள் தான் திரு மேனியை பாவ பந்தத்தோடு தொட்டுச் சாத்தினாள் என்னுதல்
பூசக் கொடுத்தாள் என்னுதல்
இப்படி சாத்தின அளவில்

ஊறிய கூனினை யுள்ளே   யொடுங்க வன் றேற வுருவினாய் அச்சோ அச்சோ –
இவள் முதுகில் வேர் விழுந்ததோ என்னும் படி தரித்துப் புறப்பட்ட கூனினை
யுள்ளே ஒடுங்க –
உள்ளே  ஒடுங்கும்படியாக இறே ஏற வுருவிற்று –
(ஸ்ரீ பாகவதம் –10-42-7-)

இப்படி அவன் நிமிர்த்துக் காட்டிற்று
எல்லாரும் நம்மையே அனுவர்த்தித்து
தம் தாமுடைய வக்கிர புத்தியை தவிர்த்துக் கொள்ளுங்கோள் என்றதாயிற்று

அன்று –
அனுவர்த்தித்த அப்போதே -என்றபடி –

எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ —
எங்கள் குலத்துக்கு ஸ்வாமியாய் -உபகாரகனும் ஆனவனே –

—————————————————————————

திருக்கையிலே திரு ஆழியோடே  வர வேணும் -என்கிறார்-

கழல் மன்னர் சூழக் கதிர்  போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
கழலைப் பெரிதுடை துச்சோத நனை
அழல விழித்தானே அச்சோ  யச்சோ ஆழி யங் கையனே யச்சோ யச்சோ –1-8-5-

பதவுரை

கழல்–வீரக் கழலை யணிந்த
மன்னர்–ராஜாக்கள்
சூழ–தன்னைச் சுற்றியிருக்க (அவர்கள் நடுவில்)
கதிர்போல்–ஸூரியன்போல
விளங்கி–ப்ரகாசமாயிருந்து (‘கண்ணனுக்கு எழுந்திருத்தல் குசல ப்ரச்நம் பண்ணுதல் முதலிய மர்யாதை
ஒன்றும் செய்யக்கூடாது’ என்று கட்டளை யிட்டிருந்த தானே தனக்கும் தெரியாமல்)
எழல் உற்று–(முதலில்) எழுந்திருந்து
மீண்டு–மறுபடியும்
இருந்து–(தானெழுந்தது தெரியாதபடி) உட்கார்ந்து கொண்டு
உன்னை–உன்னை
நோக்கும்–(பொய்யாஸநமிடுதல் முதலிய வற்றால் கொல்வதாகப்) பார்த்த
பெரிது சுழலை உடை–மிகவும் (வஞ்சனையான) ஆலோசனையை யுடைய
துச்சோதனனை–துர்யோதநினை (திரு வுள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி)
(துஸ் ஸாஸ தனன் -நல்லது சொல்ல முடியாதவன் -யவ்வ்கிகம் ரூடி பொருள் இரண்டும் உண்டே )
அழல விழித்தானே–உஷ்ணமாகப் பார்த்தவனே!
அச்சோ அச்சோ-;
ஆழி–திருவாழி யாழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தியவனே!
அச்சோ அச்சோ-.

கழல் மன்னர் சூழக் கதிர்  போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ தூது எழுந்து அருளி வருகிறான் என்று கேட்ட அளவிலே
வீரக் கழலிட்டு சமர்த்தராய் இருக்கும் ராஜாக்கள் பலரும் சூழ
அபிஷேகம் முதலான ஆபரணங்கள் உடன் ஆதித்யன் போலே விளங்கா நின்று கொண்டு
சிம்ஹாசனத்தில் இருந்து –
ஸ்ரீ கிருஷ்ணன் வந்தால் ஒருவர் எழுந்து இருத்தல் -குசலப் பிரச்னம் செய்தல் -தவிருங்கோள் –
என்று நியமித்து
பொய்யாசனம் இட்டு துர்யோதனன் இருந்த அளவில்

ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருள
இருந்த ராஜாக்கள் அடங்க –
அவசா பிரதிபேத்ரே- (தங்கள் வசத்தில் இல்லாமல் )என்று எழுந்து இருந்து
அஞ்சன வந்தன  நாதிகளை செய்து
ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருளின அளவில்

அவர்களும் இருக்கக் காண்கையாலும்
அதிகுபித சலித ஹிருதனாய்க் கொண்டு
முன்பு செய்து வைத்த சூழ்ச்சிகளுக்கு காலம் இது -என்று
இங்கிதங்களால் தான் நிறுத்தி வைத்த மல்லரை நியோகிக்க-

கழலைப் பெரிதுடை அழல விழித்தானே அச்சோ  யச்சோ –
ஸ்ரீ கிருஷ்ணனும்  இங்கித ஜ்ஞானன் ஆகையாலே
தன்னையும் அழல நோக்கின துர்யோதனனை-அவன் செய்த சூழ்ச்சி அவன் தனக்கே யாம்படி
அழல விழித்தானோ-என்கிறார் –

ஆழி யங்கையனே யச்சோ யச்சோ —
அப்போது திருக்கையிலே திருவாழியில் அழற்றி தண்ணீராம்படி 
திருக் கண்களால் அழல விழித்தானே-என்கிறார் –

துச்சோதநன் என்கையால் –
அவன் நெஞ்சு ஒருவராலும் சோதிக்க வரியது என்கிறார் –

————————————————————————————

போரொக்கப் பண்ணி இப் பூமி பொறை தீர்ப்பான்
தேரொக்க  ஊர்ந்தாய் செழும் தாற் விசயற்க்காய்
காரொக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ வச்சோ  ஆயர்கள் போரேறே யச்சோ யச்சோ –1-8-6-

பதவுரை

இ பூமி–இந்தப் பூமியினுடைய
பொறை–பாரத்தை
தீர்ப்பான்–தீர்ப்பதற்காக
போர்–யுத்தத்தை
ஒக்க–(துர்யோதநாதிகளோடு) ஸமமாக
பண்ணி–செய்து
செழு–செழுமை தாங்கிய
தார்–மாலையை யுடைய
விசயற்கு ஆய்–அர்ஜுநனுக்காக
தேர்–(அவனுடைய) தேரை
ஒக்க–(எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஒன்றுமே) ஸமமாம்படி
ஊர்ந்தாய்–பாகனாய்ச் செலுத்தினவனே!
கார் ஒக்கும்–மேகத்தோடு ஒத்த
மேனி–திருமேனியில்
கரும் பெருங் கண்ணனே–கரியவாகிப் புடைபரந்து கண்களை யுடையவனே!(காரணாந்தரங்தா விஸ்தாரம் )
வந்து–ஓடி வந்து
ஆர–நின்றாக
தழுவா–தழுவிக் கொண்டு
அச்சோ அச்சோ-;
ஆயர்கள்–இடையர்களுக்கு (அடங்கி நிற்கின்ற)
போர் ஏறே–போர் செய்யுந் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே!
அச்சோ அச்சோ-.

போரொக்கப் பண்ணி இப் பூமி பொறை தீர்ப்பான் –
பாண்டவர்களுடைய ஏழு அஷோஹிணிகளையும் -அஞ்சு ராஜாக்களையும் கொண்டு
பதினொரு அஷோஹிணிகளையும் நூறு  ராஜாக்களையும்
கர்ண பீஷ்ம துரோணாதிகளையும்
சமமாக்கிப் பொருவதாக அத்யவசிக்கையாலே –
அவர்களுடைய ப்ராதிகூல்யமும் –
இவர்களுடைய  ஆனுகூல்யம் மாத்ரமும் அன்று இதுக்கு ஹேது
பூ பார நிரசனம் ஒன்றுமே ஹேது என்கிறார்

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -என்றும்
பூமி தேவி ந பாரம் சப்த சாகரா -என்று
கடல்களும் மலைகளும் எனக்கு ஒரு பாரம் அன்று
கரண பிரதானம் முதலாக அவன் செய்த உபகார பரம்பரைகளைப் பாராதே
அஹம் மமதைகளால் க்ருதக்நராய் இருப்பாரை சுமவேன் என்கையாலே
அந்த க்ருதக்நரை -மண்ணின் பாரம் -என்கிறது

தேரொக்க  ஊர்ந்தாய் செழும் தாற் விசயற்க்காய்-
அந்த பாரம் நீக்குதற்கு அவர்களுடைய அநேகம் தேர்களுக்கும் துல்யமாக
தன்னுடைய தேரை ஊருகையாலே உபய சேனையும் முடிந்தது இறே –

செழும் தாற் விசயற்க்காய்
மது மாறாத கொங்கும் வாகையும் அவன் தோளிலே இட்டு
ஜெயத்தை அவனதாக்கி
தான் அவனது பரிகரமாக இறே முடித்தது  –

காரொக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணனே –
அர்ஜுனன் தலையிலே வெற்றி ஏறிட்ட பின்பு
திரு மேனி கரு முகில் போல் புகர் பெற்ற படி –

தம்மைக் காண்கையாலே திருக் கண்களில் பிறந்த விகாசத்தைக் கண்டு
மிகவும் பெரும் கண்ணனே -என்கிறார்-

ஆரத் தழுவாய் வந்து அச்சோ வச்சோ  –
என்னுடைய அபி நிவேசம் எல்லாம் நிறையும் படி தழுவ வேணும்

ஆயர்கள் போரேறே யச்சோ யச்சோ –
ஆயருக்கு சிம்ஹ புங்கவம் போலே இருக்கிற மேனாணிப்பு தோன்ற வர வேணும் என்கிறார் –

——–

மஹா பாலி லஜ்ஜை வாதத்தில் வாமன வேஷத்துடன் சென்ற திவ்ய ஆயுதங்களுடன் கொண்டு வர வேண்டும்

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விளக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ -1-8-7-

பதவுரை

மிக்க பெரும் புகழ்–(ஔதார்யத்தால்) மிகுந்த கீர்த்தியை யுடைய
மா வலி–மஹா பலி (செய்த)
வேள்வியில்–யாகத்திலே (வாமநனாய்ச் சென்ற உனககு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொடுக்க முயன்ற வளவிலே)
இது-‘நீ கொடுக்கிற விது
தக்கது அன்று–தகுதியானதன்று’
என்று–என்று முறையிட்டு
தானம்–பூமி தானத்தை (அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்)
விலக்கிய–தடுத்த
சுக்கிரன்–(பூச்சி வடிவு கொண்ட )சுக்கிராச்சாரியனுடைய
கண்ணை–ஒரு கண்ணை
துரும்பால்–(உன் கையிலணிந்திருந்த) தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
கிளறிய–கலக்கின
சக்கரம் கையனே–சக்ராயுதமேந்திய கையை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
சங்கம்-பாஞ்ச ஜன்யத்தை
இடத்தானே–இடக்கையிலேந்தினவனே!
அச்சோ அச்சோ-.

ஒவ்தார்யத்தாலே மிகவும் பெரிய புகழை உடையனான மகாபலி
யக்ஜவாடத்திலே இந்திரனுக்காக வாமன வேஷத்தைக் கொண்டு –
சென்று –

கொள்வன் நான்  மாவலி மூவடி -தா -(திருவாய் -3-8-)-என்ன –
புலன் கொள் மாணாய்-என்கிறபடியே
சர்வேந்த்ரிய அபஹார ஷமமான இவனுடைய வடிவு அழகாலும்
அனந்விதமாக சொன்ன -முக்தோக்தியாலும்
மகாபலி அபஹ்ருத சித்தனாய்
இவன் அபேஷித்து கொடுப்பதாக  உத்யோக்கிற அளவில் –

குருவான சுக்ரன் –
இவன் வடிவும் வரத்தும் -சொன்ன வார்த்தையும் -அதி மானுஷமாய் இருக்கையாலே நிரூபித்து –
இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வ ஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் –
ஆன பின்பு நீ தானம் பண்ணுகிற இது  தகுதி அன்று -என்று
தானத்தை நிரோதிக்க-

முக்த ஜல்பத்தாலும்
வடிவு அழகாலும் சித்த அபகாரம்
ஆச்சார்யர் –
இவன் காய் ஏந்தி கேட்பதும் தக்கது அன்று
உனது உதார குணத்தால் தருவதும் தக்கது அன்று
உதாரத்துக்கு தகாதது அன்றோ
என்ன
இது தக்கது அல்ல நிஷேதித்தான் தடுக்க
நியாமியனாகாமல்
அவன் அது கேளாதே
உதகம் பண்ணப் புகுந்த அளவில் –
உதக பாத்திர த்வாரத்திலே சுக்ரன் ப்ரேவேசித்து உதகம் விழாதபடி தகைய –
இதுக்கு அடி என்ன என்று
அந்த த்வார சோதனம் பண்ணுவாரைப் போலே –
இவன் தானத்துக்கு கண் அழிவு செய்தவாறே

துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -என்கையாலே
அந்த பவித்ராக்ரமாய் புகுந்து அவன் கண்ணை கலக்கிற்று –
கருதும் இடம் பொரும் திரு ஆழி -என்று தோற்றுகிறது-
சக்தி உடைத்தாய் கண் அழிவு செய்திற்று

ஸத்பாத்ரத்துக்கு அபீஷ்ட தானம் -குற்றமும் சிறை வாசமும் வந்ததே
இது மாயா ரூபம் என்றவர் கண் அழிவு பெற்றான் -இது நியாயமோ
இவ்விடத்தில் பிள்ளை அருளிச் செய்வதாக ஆச்சான் பிள்ளை –
ஆச்சார்யர் வாக்கியம் மீறியதால் அவனுக்கு தண்டனை
இவனுக்கு தானம் விளக்கிய தோஷம்
கள்ள குறளாய் -கொடும் கோலால் நிலம் கொண்ட
க்ருத்ரிமம் -ஆசரித்து காட்டலாமோ
பொய்யர்க்கே பொய்யனாகும் என்கையாலும் -திருமாலை
மதியினால் –உலகு இரந்த கள்வர்க்கு -இவனுக்கு சேரும் –
பரார்த்தமானால் எது தான் சேராது –

சங்கம் இடத்தானே –
ஒரு காலும் திரு ஆழிக்கும் ஸ்ரீ பாஞ்ச சந்யத்துக்கும் பிரிவு இல்லை இறே –
ஆகையால் அவன் வலம் கையிலே தோன்றும் போது-
இவன் இடம் கையிலே தோன்றும் படியாய் இறே இருப்பது –
ஜல பாத்திரத்தில் ஊதி -சங்கம்
துரும்பு இட வேணுமே –

——

உஜ்ஜ்வலமான திரு அபிஷேகத்துடன் – வர வேண்டும் -மின்னும் முடியனே –

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

பதவுரை

(வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது
அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடிவந்து)
இது–(யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி யளக்கிற) இது
என் மாயம்–என்ன மாயச் செய்கை!;
என் அப்பன்–என் தகப்பன்
அறிந்திலன்–(நீ செய்யும் இந்த மாயத்தை) அறியவில்லை
முன்னைய வண்ணமே கொண்டு–நீ யாசிக்க வந்த போதிருந்த வடிவத்தையே கொண்டு
அளவாய்–அளப்பாயாக
என்ன–என்று சொல்ல
மன்னு–(இப்படி) பிடிவாதமாய் நின்ற
நமுசியை–(அந்த) நமுசி யென்பவனை
வானில்–ஆகாசத்திலே
சுழற்றிய–சுழலச் செய்த
மின்னு முடியனே–விளங்குகின்ற கிரீடத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-;
வேங்கடம்–திருமலையிலே
வாணனே–வாழுமவனே!
அச்சோ அச்சோ-.

சுக்ர சிஷ்யர் தடுக்க -அவற்றை தவிர்த்து விரைவாக
திருவடிகள் விகசிக்க
நமுசி -அவனுக்கு மகன் -இவருக்கு சிஷ்யர் –
அவன் தடுக்க
இருவருக்கும் பேச்சு வார்த்தை
நீ இரப்பது என்
மாயா ரூபம் என்
வேதம் அத்யயத்து இரந்து பெற்ற பின்பு
அளந்து கொள்ள வேண்டாமோ -என்று கேட்க –
இப்படி பேச்சு வார்த்தை –

என் அப்பன் அறிந்திலேன்
பக்வனான என்னை ஒழிய அவன் தானம் செய்வது செல்லுமோ -என்ன
அடா குரு வசனம் கேளாதவன் இத்தைப் பார்ப்போனோ என்ன
தானத்துக்கு விக்னம் உண்டானால் மீளவும் கூடுமே என்ன
நீ என்ன சொன்னாய்
நான் உன்னால் வரும் விக்ந பரிகாரமாக அன்றோ -பத்து நாள் -ஆஷேபம் –வர நாள் கொடுக்காமல் -பேர் இடர் -உடனே –
ஸத்ய -தசா நியாயமாக பரிகிரகித்தது -என்ன

ஆனால் -நீ முன்னைய வண்ணமே அளவாய்-என்ன
சதத பரிணாமமாய் கொண்டு வளர
இப்பொழுது லோகத்தில் வளரும் கிரமத்தில் வளரக் குறை என்ன
வளர்த்தி ஒருபடிப்பட்டு இருக்குமோ என்ன
இனி உனக்கு தானம் கொடுத்த பிதாவை வெறுக்க
தானம் பிரபுவை வெறுக்கவோ

ஆத்மாவை புத்திரனாக பிறக்க -தானத்துக்கு பிரியப்படாத போதே நீ புத்ரன் அல்ல
அறியாதவனாக என் முன்னே தூஷித்தாய்
உனக்கு உத்பாதனாக இருந்தாலும்
வர்ண கலப்பு -உன்னை அங்கீ கரிக்க மாட்டான்

இந்த உத்தர -பிரதி உத்தர -நேரம் உண்டோ
ஒண் தாரை –நிமிர்ந்தனையே -ஆக இருக்கச் செய்தே யும்
வேகமாக நடக்கும் பொழுதும் பேச்சு வார்த்தை நடக்கும்
மைனாக பர்வதம் -உத்தர பிரதி
ஸ்தூல சரீரம் -நாக மாதா -வாய்க்குள்ளே சென்றதும் உண்டே –
அத்யல்ப காலத்தில் -சர்வ சக்தனுக்கு கூடாதது உண்டோ
அர்ச்சிராதி கதி -கலா காஷ்தாதிகளால் பரிகணிக்க முடியாத அங்கும்
இடையில் உபகார –பூர்ண கும்பம் -எமது இடம் புகுக -உண்டே -அங்கும் –
சேராதவற்றை சேர்க்கும் சக்தன்

இப்படி கிட்டு நிஷேதித்த நமுசியை
அன்யா சேஷத்வம்
போக்கி கிரீடம் தேஜஸ்ஸூ -ஜீவித்த இடம் திரு வேங்கடம் –

பல பர்யந்தமாக -நிலை பெற்றது இவரை அணைத்த பின்பு
பூ காய் கனி -அச்சோ கூடிய பின்பே -பக்குவ பலமாயிற்று –

————

கண்ட கடலும் மழையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணாவோ என்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக் கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ மார்வின் மறுவனே அச்சோ அச்சோ – 1-8-9-

பதவுரை

கண்ட–கண்ணாற்கண்ட
கடலும்–ஸமுத்ரங்களும்
மலையும்–மலைகளும்
உலகு ஏழும்–கீழ் ஏழ் மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்களும் (ஆகிய எல்லாவற்றையுமிட்டு நிறைக்கப் பார்த்தாலும்)
முண்டத்துக்கு–(என் கையிலிருக்கிற ப்ரஹ்ம) கபாலத்துக்கு
ஆற்றா–போதாவாம்;
முகில் வண்ணா–மேக வண்ணனே!
ஓஒ!–ஓஒ! (ஹாஹா!)
என்று–என்று கூப்பிட்டு
இண்டை-நெருங்கின
சடை முடி–ஜடா பந்தத்தை யுடைய
ஈசன்–சிவன்
இரக்கொள்ள–பிச்சை யெடுக்க
மண்டை–(அவன் கையிலிருந்த ப்ரஹ்ம) கபாலத்தை
நிறைத்தானே–(மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால்) நிறையச் செய்தவனே!
அச்சோ அச்சோ-;
மார்வில்–திரு மார்பிலே
மறுவனே–ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை யுடையவனே!
அச்சோ அச்சோ-.

முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணா -3-2-1-
உலகு எழும் சுற்றுத் திரியும் பெரியோன் -பெரிய திரு மொழி –
பிச்சைப்பெருமாள்
சாபத்தால்
பிச்சை எடுத்து
ஆற்றாமையால்

முகில் வண்ணா என்று பிரார்த்தித்த அளவில்
கடலையும் -உண்ட முகில் வண்ணன் -மண்டை
தபோ வேஷம் -நெருங்கிய ஜடை -ஈஸ்வரத்வசம் ஏக ஆஸ்ரயத்தில்
இவன் தான் முன்பே துர் -அபிமானத்தால் -வேண்டிய பின்பு
மோஹ சாஸ்திரம் -பேசுவது ஆகமம் செய்ய சொல்லி
அந்த சாஸ்திரம் வாசிக்கும் -சைவ -இவர்களுக்கு ஈசனாய்
சடை நெகிழும் தனையும் ஈஸ்வரத்வம் கூடுமே
ஆற்றாமல் -பிச்சை அன்னம் கொண்டு பாடு ஆற்றாமல் –

கடலும் மலையும் உண்ட காலத்தில் தானும் திரு வயிற்றில் ஒருவன்
சிவனும் உண்டு உமிழ்ந்த எச்சில்
சிவன் என்ற பெயர்
சம்ஹாரத்தால் லஜ்ஜித்து தேக விமோசனம் சா பேஷராய் தோன்ற
‘முகில் வண்ணா
ஆற்றாமை தீர ரக்ஷிக்கா விட்டால் காக்கும் கடவுள் கண்ணன் ஆக மாட்டானே

அது -அத்து என்பது -உண்டதுக்கு -அல்லாமல் உண்டத்துக்கு -சாரிகை -அனுதாபம் –
அருளால் கொடுத்தார்
பிரார்தித்தது உபாயம் இல்லையே
அருளால் அளிப்பார் ஆர் –
இரப்பில் உபாயத்வம் கழியும்
அதிகாரி க்ருத்யம் இரப்பு -அறிவிப்பு தான் இது
குளம் வெட்டுவது -மாரிக்கு உபாயம் இல்லை –

நாராயணா ஓ போல் முகில் வண்ணா ஓ இங்கும் –

——–

என்னை -பெரியாழ்வாரை விஷயீ கரித்த -வேத பிரதானம் பண்ணிய உபகாரம் –
யசோதை சொல்ல மாட்டாளே -ஸ்த்ரீ அன்றோ
பெரியாழ்வார் -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தார்
அந்த வேஷத்தோடே வந்து அருள வேண்டும்

துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ அருமறை தந்தானே அச்சோ அச்சோ -1 8-10 – –

பதவுரை

மன்னிய–நித்ய ஸித்தமான
நால் மறை–சதுர் வேதங்களும்
முற்றும்–முழுவதும்
மறைந்திட–மறைந்து விட (அதனால்)
துன்னிய–நெருங்கிய
பேர் இருள்–பெரிய அஜ்ஞாநாந்தகாரம்
சூழ்ந்து–பரவி
உலகை–லோகங்களை
மூட–மறைத்துக் கொள்ள
பின்–பின்பு
உலகினில்–இந்த லோகங்களில்
பேர் இருள்–(அந்த) மிகுந்த அஜ்ஞாகாந்தகாரமானது
நீங்க–நீங்கும்படி
என்று–அக் காலத்தில்
அன்னம் அது ஆனானே–ஹம்ஸமாய் அவதரித்தவனே!
அரு மறை தந்தானே–(அந்த ரூபத்தோடு) அருமையான வேதங்களை உபகரித்தவனே!
அச்சோ அச்சோ-.

துன்னிய இத்யாதி –
அனந்தாவை வேதா
சகல வேதங்களும் பூர்வ உத்தர பாகம் தோன்றாமல் மறைய –
நித்ய நிர்தோஷ -ஸ்வயம் பிரகாசமான வேதங்கள் மறைந்தால்
தேஜஸ்சினுடைய அசந்நிதானத்தில் திமிரம் வியாப்தம் ஆம் போலே –

துன்னு கை -புற இருள்-பூர்வ பாகம் -கர்ம பாகம்
உத்தர வேதாந்த ப்ரஹ்ம விசாரம் – உத்தர பாக அபாவம் –உள் இருள்
கர்ம ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளுக்கும் கண் காட்டியான வேதம் போகையாலே நெருங்கின
(கர்ம ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளுக்கும்-இவை இரண்டும் அதிருஷ்டம் –
ப்ரத்யக்ஷத்தாலோ அனுமானத்தாலோ காண முடியாதே )
அஞ்ஞான ரூப அந்தகாரமானது வ்யாப்தமாய் கொண்டு லோகத்தை எங்கும் மறைக்கும் படியாக –

சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் பழுது இல்லாமல் நடப்பது –
நடையாடுவது -இவ்வுலகில் -பாரத வருஷம் தானே –
மற்றை இடங்களில் வேறே யுகங்களில் இருந்து இருக்கலாம்
மற்ற லோகங்கள் போக பிரதானம்
இங்கு யோக பிரதானம் –

இப்படி பேர் இருள் நீங்க கடவது என்று திரு உள்ளம்
கூப்பிட்ட அன்று
சார அசார விவேகம் அறியும் ஹம்ஸ ரூபியாய்
முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே –11-4-8-

ஹம்சாவதரமாய் திருவவதரித்து கடலினுள் புகுந்து அசுரர்களைத் தேடித் பிடித்து கொன்று
வேதங்களை மீட்டுக் கொணர்ந்து ஹம்ச ரூபியாய் பிரமனுக்கு உபதேசித்து அருளினான்
அபேஷா நிர்பேஷமாக நல்கியதால் அந்த பரஞ்சோதியே நம்மை அடிமை கொள்ளும் –

அன்னம் அது ஆனாய் -அது அது தான்
அபேக்ஷித்தாலும் அது வியாஜ்யம் மாத்ரமாய் -அது என்னுதல்
ஆனான் -ஆகிறான் சொல்லாமல் -நெஞ்சில் பிரதிஷ்டமாக -ஆச்சார்ய ரூபமாய் –
வித்யா மூர்த்தம் -வித்யா உருவம் -ஹம்ஸாசார்யர் -சாஷாத் நாராயணா தேவா -ஸாஸ்த்ர பாணிநா –
ஆச்சார்ய பதத்தில் குறை இல்லை
அவர்களுக்கு உபகரித்தது தனது பேறாக -கொடுக்கப் பெற்றோமே – என்பதால் அச்சோ என்கிறார் –

அரு மறை இத்யாதி –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தர் ஆகையால்
அது குஹ்ய பரம ரஹஸ்யம் மங்களா சாசனம்

தந்தான் என்கையாலே
பகவானே கொடுத்தான்
சாஸ்த்ர ஜன்ய ஞானத்தால் அல்ல
உபதேச மூலம் அல்ல
சாஷாத்தாக மயர்வற மதி நலம் -தாமே பெற்றது என்கிறார் –

இத்தை நிர்ஹேதுகமாக தந்தவன் யார்
ஹம்ஸ ரூபியில் வியாவருத்தமாய்
பீதாக வடைப் பிரானார் பிரதம குருவாய் –
வில்லி புத்தூரில் இனிது அமர்ந்த வட பெரும் கோயில் உடையான் என்கிறார் –

——–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலைக் கட்டுகிறார் –

நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சணி மாட புதுவை  கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வாரே -1-8-11 – –

பதவுரை

நச்சுவார் முன்–(தன்னை) விரும்பிப் பக்தி பண்ணுமவர்களுடைய முன்னே
நிற்கும்–வந்து நிற்குந் தன்மையுள்ள
நாராயணன் தன்னை–நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
ஆய்ச்சி–இடைக் குலத்தவளான யசோதை
(அணைத்துக் கொள்ளுகையிலுண்டான விருப்பந் தோன்றும்படி)
அச்சோ வருக என்று உரைத்தன–‘அச்சோ வருவாயாக’ என்று சொன்னவற்றை
மச்சு அணி–பல நிலைகளால் அழகிய
மாடம்–மாளிகைகளை யுடைய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–சொன்ன இப் பத்துப் பாசுரங்களையும்
பாடுவார்–பாடுபவர்கள்
நிச்சலும்–எப்போதும்
நீள் விசும்பு–பரமாகாசமாகிற பரம பதத்திற்கு
ஆள்வர்–நிர்வாஹகராவர்.

நாராயண சப்தத்தில் ரூடி
யவ்கிகம் அர்த்தம் -ரூடிஅர்த்தம் -இரண்டும் உண்டே
பங்கஜ -நாய் குடை -பிரசித்தம் தாமரை ரூடி
நாராணாம் அயனம் -தத் புருஷ பஹு வ்ரூஹி சமாஹம்
யோகம் தோன்றா நிற்க -செய்தாலும் -ஆசைப்பட்டார்க்கு முன் நிற்கும் -இங்கு ரூடி அர்த்தம்
துருவனுக்கு சேவை கிட்டியதே
ப்ரஹ்லாதனுக்கும் கஜேந்த்ரனுக்கும் திரௌபதிக்கு வந்தார்
யவ்கிகம் அல்லாமல் ரூடி பிரசித்த சாதாரணம்

தன்னை -வஸ்து நிர்த்தேசம் -பொருளை சுட்டி
ராமன் தான் வந்தார் போல்
அப்பேற்பட்ட நாராயணன் –

அச்சோ வருக -ப்ராப்ய நிர்த்தேசம்
வந்து அணைத்து கொள்வது
இது தான் ஸித்திப்பது
நச்சுவார் -ஆசை
சாதனம் -அவன் கிருபையே
ஆச்ரித பாரதந்தர்யம்
அடியார்களுக்கு அடங்கி

அச்சோ அச்சோ -அதிகாரி ஸ்வரூபம் -அபி நிவேசம்–பெரும் காதல் -த்வரை -ப்ரபன்னனுக்கு வேண்டுமே
அவனுடைய ஸுசீல்யமும் தோன்றுமே
மேன்மையும் நமது தாழ்ச்சியும் பாராமல்

அவனுடைய மெய்ப்பாடு -யசோதை ஓடி வா சொல்லும் படி –
புத்ரத்வ நிபந்தமான அபிமானமும் உண்டே அவளுக்கு
அந்த பிரகாரத்தை
தம் பேறாகக் கொண்டு அவளைப் போல்
யசோதை பாவனையால் பெரியாழ்வார் பாட
அவள் வார்த்தையை திரும்பச் சொல்வதே தமது பாக்யம் என்று பெரியாழ்வார் ஹஸ்த முத்திரையால்
தடம் தோள்களால் அணைக்க ரூடி -திரு மார்பாலே அணைக்க -பிரார்திக்கிறார்
இதுவே அச்சோ பிரசித்த அர்த்தம்

நீணிலா முற்றம் போல் அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகை
வட பெரும் கோயில் மச்சணி மாடம் தானே -அதுவும்
இவ்விரண்டாலும் பாகவத சீர்மையும் -பரத்வ சீர்மையும் -சொன்னவாறு –

நாள் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர் -என்றது போல் புதுவை
கோன் பட்டன் -திரு மாளிகைக்கு நிர்வாககர் -ஆழ்வார்
சத்ய வாதி
இவர் அபிமானத்தில் ஒதுங்கி
பாவம் இல்லா விட்டாலும்

அந்நிய பரதை அற்று
ஆண்மின்கள் வானகம் -10-9-என்கிறபடி
மேல் கால தத்வம் உள்ளதனையும்
நியமித்து ஆளப் பெறுவர்

ஆய்ச்சி உரைத்த என்றாலும்
அவள் போல் ஆழ்வார் பாடிய -என்பதாலேயே நாம் சொல்கிறோம் –
இவர் தாம் அருளிச் செய்தது ஒழிய -மற்ற எதையும் -பிராப்தி உடன் நியமித்து ஆள மாட்டாரே –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-7-தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்ன-

December 8, 2014

தொடர் சங்கிலி பிரவேசம் –

கீழ் சப்பாணி முகத்தாலே
உபாய
உபேய பாவத்தில்
ஆகிஞ்சன்யத்தை அவனைக் கொண்டு வெளியிட்டார் .

இனி தளர் நடை -என்கிற வ்யாஜத்தாலே
அனுகூல ப்ரீதியும்
பிரதிகூல நிரசனமும் –
இவ் விரண்டும்
அதிகார அனுகுணமாக நடக்கவே சித்திக்கும்
என்னும் இடத்தை அவனைக் கொண்டே வெளியிடுகிறார்

(ப்ரபன்னர் -அதிகாரி போல் நாம் நடக்க -இரண்டும் சித்திக்கும்
ஆசாரம் ஒழுக்கம் -சொன்னபடி
நேர் இழை யும் இளம் கோவும் எவ்வாறு நடந்தனையே -நடையில் ஈடுபடுவோம் )

அவனுடைய ஆசாரம் –
பக்தி மூலமாகவும்
பீதி மூலமாகவும்
அவகாஹாந ஹேதுவாய் இருக்கும் இறே-
பிரமாண அனுகுணமாக ஏதேனுமோர் அதிகாரிக்கும் –

———————————————————————-

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும் மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்
உடன் கூடி கிண் கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-1-

பதவுரை

சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார் பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற் கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மதநீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இள நடையை
நடவானோ–நடக்கமாட்டானோ?
[நடக்கவேணும். ]

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப் –
மத்த கஜம் ஸ்தம்பத்தை முறித்து
சங்கிலி கைத் தொடரோடு இழுத்துக் கொண்டு முதுகிலே கிடக்கிற
பொற் கயிற்றில் தூங்குகிற மணி சப்திக்க –
கயிறு -பொன்னாண்-

படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல் –
மும்மதத்தால் யுண்டான ஜலம் அருவி போல் சோர –
மும்மதம் -இரண்டு கர்ணங்களிலும் தலையிலும் பாய்கிற ஜலம் –
அந்த யானையானது மத விகாரத்தாலே அவசமாக மெள்ள நடந்தால் போலே –

உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத் –
உடை மணியுடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப –
திருவரையில் நின்றும் நழுவின சதங்கை வடம் திருவடிகளிலே விழுந்து இழுப்புண்டு மிகவும் சப்திக்க –
புகுமதமும் உகு மதமுமாய் இருக்கும் இறே இங்கும் –

தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ-
நடை பொறுக்கும்படி சிக்கென்று இருக்கையாலே
தடம் தாள் என்கிறார் –

தடம் தாளிணை
தன்னில் ஒத்து உபமான ரஹிதமாய் இருக்கிற திருவடிகளாலே
ஸ்வ வசமாகவும் அவசமாகவும் நடக்கக் காண வேணும் என்று பிரார்த்திக்கிறார்

சார்ங்க பாணி –
அவதார ரஹஸ்யம் அறிவார் ஆகையாலே சார்ங்க பாணியைப் போலே இவனும்
விரோதி நிரசன சமர்த்தனாக வேணும் என்று பிரார்த்திக்கிறார் –
தளர் நடை நடவானோ-

——————————————————————-

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
நக்க செந் துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ -1-7-2-

பதவுரை

செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறுபிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப் போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
வ்ருஷாக்ரமும் சிவக்கும்படி தோன்றின செக்கரிடையிலே
சிறு பிறை நுனிக் கொம்பு அங்குரித்து தோன்றினால் போலே என்னுதல்-
செக்கராலே சிவந்த வ்ருஷாக்ரத்திலே தோன்றின சிறு பிறை என்னுதல் –

நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
ஸ்மிதம் செய்யும் போது-திருவதரத்துக்கு மேலே அங்குரித்து தோன்றின ஒரு திரு முத்து மிகவும் பிரகாசிக்க –
நளிருகை -ஸ்நிக்ததை-

அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்
வளை மணி வடம் -என்னுதல்
வெள்ளி மணி வடம் என்னுதல்
அக்கு -வெள்ளை
இத்தை திருவரையிலே சாத்தி

ஆமைத்தாலி –
திருக் கழுத்திலே ஜாதி உசிதமாகச் சாத்தின ஆபரணம்

அனந்த சயனன் –
உரக மெல்லணையான்   இறே –

தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ –
மிக்க பிரகாசத்தை யுடைய நீல ரத்னம் தகுதியாம் படியான நிறத்தை யுடையவன்
உபமான உபமேயங்கள் துல்ய விகல்பமாய்த்து என்கிறது

வாசுதேவன் –
வாசுதேவ புத்திரன் வாசுதேவன் என்னுமது ஒழிய
சர்வம் வசதீதி வாசு தேவ -என்ன மாட்டார் இவர் இப்போது
இது தான் இறே அது தானும்-
(எங்கும் வசிக்கும் அவனே வாசுதேவ புத்ரன் -நந்தகோபன் குமாரன் )

————————————————————————–

ஒரு பரி வேஷ சந்தரன் –
ஒரு மேகம் –
இவை உபமானமாக அருளிச் செய்கிறார்

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்
பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னில் பொலிந்த விருடீகேசன் தளர்நடை நடவானோ –1-7-3-

பதவுரை

மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையா யுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திரு வரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காளமேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறை யென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ் வாபரணங்கள் திருமேனிச் சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
தளர்நடை நடவானோ-.

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்-
மின் கொடியோடு சேர்ந்த அத்விதீய சந்திரனும் –
அத்தைச் சூழ்ந்த பரிவேஷமும் போலே
திரு வரையிலே சாத்தின பொன் நாணும்

பின்னல் துலங்கு மரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
அதிலே கோவைப்பட்டு பிரகாசியா நின்ற வெள்ளி அரசிலைப் பணியும்
அவை கீழே தோன்ற அடுக்க மேலே சாத்தின பொன்னின் சிற்றாடையோடும் கூட –

மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னைச் சூழ்ந்த மின்னாலே பிரகாசிக்கப் பட்ட கரிய மேகம் போலே
சாத்தின திருக் கண்டம் காறையாலே பிரகாசிக்கப்பட்ட திருக் கழுத்தோடு

தன்னில் பொலிந்த விருடீகேசன் தளர்நடை நடவானோ
முன்பு சொன்ன உபமானங்களாலே சௌந்த்ரயம் பொலிகை அன்றிக்கே
தானே தனக்குவமன் -மூன்றாம் திருவந்தாதி -38-என்கிறபடியே
தன்னிலே பொலிந்த சௌந்த்ர்யத்தை யுடையரான

இருடீகேசன் –
பொலிவாலே இந்த்ரியங்களை அபஹரிக்கவும்
தன்னாலே இந்த்ரியங்களை நியமிக்கவும் வல்லவன்
தன்னில் தன்னுடைய சௌந்த்ர்யத்தாலே 
திரு ஆபரணங்களுக்கு பொலிவு கொடுத்தவன் என்னுமாம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

அன்றிக்கே –
தன்னில் பொலிந்த –
தன் கோயிலானது முகில் வண்ண வானம் -திருவாய்மொழி -7-2-11-என்கிறாப் போலே
தன்னுடைய சௌந்த்ர்ய சாயையினாலே நிறைந்த என்னுமாம்-
(இல் -இல்லம் -பரம பதம் இவனால் பொலியுமே )

——————————————————————

இந்நடை இவனை உகவாத சத்ருக்கள் தலை மேலே
நடக்குமோ தான் என்கிறார்

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் கணகண சிரித்து  உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ –1-7-4-

பதவுரை

கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–-எனக்கு பவ்யனாய் -எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரிய பிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் எற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் –
கருப்பம் சாற்றுக் குடம் திறந்த இல்லி யூடே ஊறிப் பொசிந்து பாயுமா போலே –

கணகண சிரித்து உவந்து –
கண கண என்றது சிரிப்பை அனுகரித்தாதல்
கணகணப்பென்று -உஷ்ணத்துக்கு பேராய் வெச்சாப்புத் தோன்றச் சிரித்தான் என்னுதல்
உவந்து -பிரியப்பட்டு-

முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
முன்னே வந்து நின்று –
திருப்பவளத்தை உபகரிக்கும் –

நான் என்னுடையவன் என்று அபிமாநிக்கும் படி எனக்கு வசமாய்
கார் முகில் போன்ற திரு நிறத்தை யுடையவன் –
எனக்கு வ்சமாகைக்கு அடி அலர்மேல் மங்கை உறை மார்பன் ஆகை இறே-

தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான் –
தன்னைப் புத்ரனாகப் பெற்ற பாக்யத்தை யுடைய எனக்கு
முன்பே முத்தம் தரும் -என்றும்
இப்போது வாயமுதம் தந்து -என்று அருளிச் செய்கையாலே
முற்பாடு முத்தம் தந்தருளும் என்று பிரார்த்தனையாய்
அது இப்போது சித்தித்தது என்றும் தோன்றுகிறது –

இவ் வாய் அமுதம் விளை நீராக இறே இவருடைய சத்தை வர்த்திப்பது –
ஆகை இறே தளிர்ப்பிக்கின்றான் -என்றது-

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ-
தனக்கு எதிரே வந்து சத்ருக்களாய் நிற்கிறவர்களுடைய தலைகள் மேலே தளர் நடை நடவானோ பிரார்த்திக்கிறார் ஆதல் –
நிர்ணயிக்கிறார் ஆதல் –
பயப்படுகிறார் ஆதல் –
அன்றிக்கே
சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்த -கிஷ்கிந்தா -24-24-
(அனுபவித்து அருளிச் செய்கிறார் என்றபடி )

————————————————————————

ஒரு மலைக் குட்டனை ஒரு மலைக் குட்டன் தொடர்ந்து ஓடுமா போலே
ஸ்ரீ கிருஷ்ணன் நம்பி மூத்த பிரானை தொடர்ந்து ஓடுகிற பிரகாரத்தை அனுபவிக்கிறார்-

முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி யிடுவது போல்
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் பல தேவன் என்னும்
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை  நடவானோ –1-7-5-

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெரு மலை–பெரிய வெள்ளி மலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடு மொடு–திடுதிடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக்கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக் கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர்நடை நடவானோ -.

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
கரு மலைக் குட்டனுக்கு முன்னே நன்றாய்
அத்விதீயமாய்
பெரிதான வெள்ளி மலைக் குட்டன்
மலை ஈன்ற குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோட
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )

பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
அக் குட்டியின் பின்னே
அஞ்சன கிரி ஈன்ற குட்டி தன் செருக்காலே அத்தை தொடர்ந்து ஓடுவது போலே-
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் –
லோகத்தில் உள்ளார் சாஸ்திரங்களையும்  ஸ்தோத்ரங்களையும்  ஆச்சார்ய முகத்தாலே ஆராய்ந்து
இடைவிடாதே ஸ்துதித்திப் போரும் படியான புகழை யுடையனாய் –

பலதேவன் என்னும் தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை  நடவானோ —
தனக்கு அக்ரஜனான நம்பி மூத்த பிரான் வெள்ளி மலைக் குட்டி போலே செருக்காலே முன்னே ஓட
பின்னே அவனைப் பிடிக்க வேணும்  என்று ஓடிச் செல்வான் 
தளர் நடை நடவானோ-

(யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் )

—————————————————————————–

நடந்த இடத்தில் லாஞ்சனை தோன்ற நடந்து அருள வேணும்
என்று பிரார்திக்கிறார் –

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ –1-7-6-

பதவுரை

கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-( காமனைப் பயந்த காளை )
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்ததுபோல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
(கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -அங்கும் ரேகை என்பாரும் உண்டே )
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ -.

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த –
ஒரு காலில் உள்ளடி பொறித்து அமைந்த சங்கு
ஒரு காலில் உள்ளடி பொறித்து அமைந்த சக்கரம்
அத்விதீயமான திருவடியிலே அகவாயிலே சாத்தினால் போலே
அடி தாறு -பெருய திருவந்தாதி -31-என்கிறபடியே -ரேகா ரூபேண பிரகாசிக்கும் படி அமர்ந்த திருவாழி ஆழ்வான்-
இப்படி இருக்கிற மற்றைத் திருவடிகளில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானும்-
(நிழலும் அடி தாறும் ஆனோம் -பாத சாயை பாத ரேகை )

இரு காலும் கொண்டு –
கீழே ஒரு கால் -ஒரு கால் -என்று வைத்து
இரு கால் -என்னும் போது
கீழே உபமான ராஹித்யம் சொல்லிற்றாய்
இப்போது ஒன்றுக்கு ஓன்று ஒப்பான படி சொல்லிற்றாம் இத்தனை –
இரண்டு திருவடிகளையும் கொண்டு நடந்து அருளும் போது நடந்த விடம் –

அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் –
தூலிகையினால் எழுதினால் போலே லாஞ்சனை தோன்றக் கண்டு இன்ப வெள்ளம் பெருக வேணும் –
நம் பெருமாள் கோடைத் திருநாளில் உலாவி அருளின வெளியில்
அழகியதான லாஞ்சனை கண்டு
நம் முதலிகளுக்கும் இன்ப வெள்ளம் பெருகா நின்றது இறே  –

பின்னையும் பெய்து பெய்து –
இன்ப வெள்ளம் பின்னையும் மேன் மேலும் யுண்டாம்படி-

கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ —
கரு கார் -நீர் கொண்டு எழுந்த கார் மேகம் போலேயும்
கடல் போலேயுமாய் இருக்கிற திரு மேனியை யுடையவன்
கரு  கார்க்கடல் வண்ணன் -என்கிறது -கார்க் கடல் வண்ணன் -என்னுமா போலே
கருமை -பெருமையுமாம்

காமர் தாதை –
அவனுக்கு
சௌந்தர்யமும் –
மார்த்தவமும் –
சித்த ஜத்வமும் ( மனதை பறிக்கும் தன்மையும் ) யுண்டாய்த்து-இவன் வயிற்றில் பிறப்பால் இறே
காமனைப் பயந்த காளை இறே
காமனைப் பயந்த பின்பும் கீழ் நோக்கிப் பிராயம் புகா நின்றான் இறே

காமர் தாதை பின்னையும் பெய்து பெய்து தளர் நடை நடவானோ-

—————————————————————————

உடை மணி கண கண என்கிற ஓசையோடு தளர் நடை
நடக்க வேணும் -என்கிறார் –

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக் குரல் போலுடை மணி கண கண எனத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-7-

பதவுரை

படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப் பூ
வாய் நெகிழ–(மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனிபடு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப் போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறிஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலி போலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல் –
சேற்று வாய்ப்பாலே படரா நின்ற
தாமரை இலை யணையப் பூத்த அந்த தாமரை
கட்டவிழ மது ஊறித் துளிக்குமா போலே
பனி -குளிர்ச்சி

இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று
இடம் கொள்கையாவது -வாயில் ஒரு புடைக்குள்ளே இறே வையம் ஏழும் கண்டது –
உலகம் யுண்ட பெரு வாயன் இறே
இடமுடைத்தாய் –
சிவந்த திருப் பவளத்திலே வாக் அமிர்தம் ஊறி ஊறி இற்றிற்று வீழ  நின்று

கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலுடை மணி கண கண எனத்
கடிய சேவின் கழுத்தில் கட்டின மணிகள் கண கண என்று சப்திக்குமா போலே
கண கண ப்பாவது-கணார் கணார்-என்கை-
உடை மணி -திருவரையில் சாத்தின மணி –

தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ —
அழகியதாய் உறைத்த திருவடிகளைக் கொண்டு

சார்ங்க பாணி –
ஓர் அவதாரத்தில் உண்டானவற்றை எல்லா அவதாரங்களிலும்  கொள்ளலாம் இறே-

——————————————————————————–

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர் நடை நடவானோ –1-7-8-

பதவுரை

கரு–கரு நிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடு பள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திரு வரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
கரும் சிறு பாறை பக்கம் மீதே அருவிகள் பகர்ந்து அனைய –
கருமை யுடைய -சிறியதாய் இருக்கிற மலையின் மேலே பார்ஸ்வத்திலே
அருவிகள் நிம் நோந்தமாக சூழ்ந்தால் போலே
பகர் -ஒளி

அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர
அக்குவடம் -திருவரையில் சாத்திய வளை மணி வடம் –
வெள்ளி மணி வடம் –
ஏறித் தாழ – நிம் நோந்தமாக

அணி யல்குல் புடை பெயர
அழகிய திரு மருங்கில் அசைந்து புடை பெயர –

மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்
லோகத்தில் மனுஷ்யர் பெற்று அறியாத அழகிய குழவி யுருவிலே –

தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ —
மா மணி தக்க வண்ணன்
மகத்தான நீல ரத்ன நிறத்தை யுடையவன்
(தக்க -அன்ன -போன்ற என்றபடி )

வாசுதேவன் -அவரும் இப்படி வளர்ந்தார் போலே காணும் –
ஆத்மாவை புத்ர நாமாசி (மந்த்ர ப்ரஸ்னம் ) இறே-
(தானே தான் தனது புத்திரனாக பிறக்கிறான் என்றபடி )

மா மணி தக்க வண்ணன் வாசுதேவன்-
உலகினில் மக்கள்  பெய்தறியா மணிக் குழவி யுருவின்-
கரும் சிறுப் பாறை பக்கம்  மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறித் தாழ
அணி யல்குல் புடை பெயர
தளர் நடை நடவானோ
என்று அந்வயம்-

————————————————————————-

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரி விக்ரமன் சிறு புகர் பட வியர்த்து
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர் நடை நடவானோ  –1-7-9-

பதவுரை

திரி விக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே பொகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டி யானை போல,
தெள் புழுதி–தெளிவான (வெளுத்த )புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ-.

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்-
தூய புழுதியை மேலே ஏறிட்டுக்   கொண்டு
கையாலே அளைந்தும் வருவதாய்
கரிதாய் இருக்கிற இள வானைக் கன்றே போலே –

தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன் –
தெள்ளிய புழுதியை அளைந்து ஏறட்டிக் கொண்டு
வாமன அவதாரத்தை த்ரிவிக்ரமனாகக் கண்டால் போலே
குண சாம்யத்தாலே
இதுவும் அதுவாக விறே இவர் காண்பது –
( உலகமாக தொட்டது அது ஊராகத் தொட்டது இது )

சிறு புகர் பட வியர்த்து-
திரு மேனியிலே புழுதிக்கு நடுவே திருமேனி நிறம் புகர்த்து வேர்ப்போடே தோன்ற –

ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே-
கமல ஒண் போது அலர்ந்தால் போலே இருக்கிற
சிறிய திருவடிகள் மிதித்த இடத்தே உறைத்து நோவாமே –
மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி –திருவாய் -9-2-10- இறே

தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ  –
குளிர்ந்த பூக்களால் அலங்கரித்த திருப் பள்ளி மெத்தை மேலே
தவிசு -படுக்கை –

—————————————————————————————————————————————

சமுத்திர மத்யே தோன்றின பூர்ண சந்தரனைப் போலே
ஒப்பனையோடு நடக்க வேணும் -என்கிறார் –

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ –1-7-10-

பதவுரை

செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தை யுமுடைய
கேசவன்–ப்ரசஸ்த கேசவன் -கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரை யுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதி பிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திரு முகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த நீராடிய -பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர–துளி துளியாகச் சொட்டவும்
தளர் நடை நடவானோ-.

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்
திரைக் கிளப்பத்தை யுடைய
சமுத்திர மத்யே சலித்துத் தோன்றின சந்த்ரனைப் போலே-
(சலனம் -அசைந்து )

திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்-
சந்த்ரனிலும் நீர்மை யுடைத்தாய்
அழகியதான திரு முக மண்டலத்திலே பிரதிபிம்பிக்கிற
திருக் குழல் சுட்டியானது-புடை பெயர்ந்து எங்கும் பிரகாசிக்க –

பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்-
தீர்த்தங்களில் பிரசித்தமாய் –
பிரவாஹ ஜலம் மாறாமல் எப்போதும் அலை எறியக் கடவதாய் இருக்கிற
கங்கையிலும் பிரசித்தமாய்
உபமான ரஹிதமாய்-சகல பிரமாண வேத்ய்மாய்
சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் உடன் கூடி
ரஷ்ய ரஷ்க பாவத்தை மாறாடி மங்களா சாசன பர்யந்தமான பலத்தைத் தரும்

தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ
சிறுச் சண்ண நீர் துள்ளம் சோர-
கங்கையிலும் பெரிது என்றது -பிரபஞ்ச ஆவலம்ப ஹேதுவாக –

——————————————————————————–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித்
தலைக் கட்டுகிறார்

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே –1-7-11-

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கரு நிற முடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர்நடை நடந்தனை–தளர் நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவ ரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை
ராஜ குலத்தில் ஆவிர்பவித்தது-
சாஷாத்கார பரரும் பிரமாணிகரும் அறியும் இத்தனை இறே-
ஆயர் குலத்தினில் தோன்றியது இறே
ஜ்ஞான அஜ்ஞான விபாகம் அற எல்லாரும் அறிந்தது
இப்படித் தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை –

தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை
தாய்மாரான அனுகூல ஜனங்களும்
இவர் தாமும் -மகிழ-

இவரைக் காண உகவாத அளவன்றிக்கே
நடக்கக் கற்றான் என்ற கேட்ட போதே வயிறு எரி கொழுந்தி  வந்து
பூதன சகட யமளார்ஜூனங்கள் ஆகிய இவர்களை வர விட
இவர்கள் முடிந்தமை கேட்டு
கஞ்சன் வயிற்றில் நெருப்பு -என்னும்படி –
அழன்ற சத்ருக்களும் –
ஒன்றில் அவனை ஜெயிக்க பெருகிறிலோம்
அவனை ஜெயிப்பதாக வீர வாதம் பண்ணி போனவர்களை மீண்டும் வரக் காண்கிறிலோம் –
பிறப்பதற்கு முன்னே பிடித்தும் உருவிய வாளோடு நில்லா நின்றோம்
இனி ஒரு போக்கடியும் இல்லை
இனி சாது மந்த்ரியான அக்ரூரனை அழைத்தாகிலும் உறவு செய்து  பார்ப்போம் -என்று அக்ரூரனை அழைத்து
அவர் சொன்ன வார்த்தையாலும் மிகவும் தளர்த்தியாம் இத்தனை இறே –

ப்ரதிகூலித்தாருக்கும் இருந்து தளர்வதில் காட்டிலும்
சாக அமையும் என்றாலும்
சாவு அரிதாய் இருக்கும் இறே –

அனுகூலித்தாரும் மங்களா சாசன ரூபேண-இவனுக்கு என் வருகிறதோ –
என்று கிலேசித்தாலும்
கிலேசிக்கை அரிதாய் மகிழ்ச்சியோடு தலைக்கட்டும் இறே அவன் உகப்பிக்கையாலே

(இருவருக்கும் கிலேசம் உண்டு
இவர்களுக்கு கிலேசம் உத்தேசம் -யுக்தம் )

தளர் நடை நடந்தனை –
அவன் இப்படி நடந்த பிரகாரத்தை  –

வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்
வேயர் என்று பட்டர் பிரான் ஆகையாலே
குடிப் பெரும் சொல்ல வேணும் இறே

அன்றிக்கே
வேயர் என்று
பிராமணருக்கு சந்த்யா வந்தனம் விசேஷண நிரூபகமாய் இருக்குமா போலே
இடையருக்கும் குழல் கோவலர் -என்று நிரூபகமாகையாலும்
இவர் தாம் கோப ஜென்மத்தை ஆஸ்தானம் செய்கையாலும்
அவன் தானும்
ராஜ குலத்திலும் ஆயர் குலத்திலும் ஆவிர்பவித்தால் போலே  இறே
இவரும்
இரண்டு குலத்திலும் ஆவிர்பவித்து மிக்க புகழை யுடையரான படி –

விட்டு சித்தன் –
இவர் வாசுதேவன் என்றால் போலே இறே -விஷ்ணு சித்தன் என்கிறபடியும்
அன்றாகில்
வஸ்து நிர்த்தேசமும் ஆஸ்ரயணீத்வமும் கூடாது இறே
வ்யாபக மந்த்ரங்களுக்கும் பிரணவ நமஸ் ஸூக்களோடு ஒழிய
வ்யதி ரேகத்தால் ஸ்திதி இல்லை இறே

(ஸர்வத்ர வசதி -வாசுதேவன்
விஷ்ணுவை சித்தமாகக் கொண்டவர் -இரண்டுக்கும் சாம்யம் பொருத்தம்
வஸ்துவுக்கு அடையாளமும் சொல்லி -அப்படி இருப்பதால் தான் சர்வருக்கும் ஆஸ்ரயணீத்வம் கூடும்
ஓம் -ஸ்வரூபமும்
நம -எனக்கு நான் அல்லேன் நீயே உபாயம்
ஆஸ்ரயிப்பதே பலம் இத்தகு தான் காட்டும்
வாசுதேவன் மட்டும் இருந்தால் எங்கும் உளன் கண்ணன் என்பதையே தான் காட்டும் )

சீரால் விரித்தன –
சீரால் விரிக்கை யாவது –
குணாஸ்ரய தர்சனமும் –
குண பிரகாச ஹேதுவும்-
குண பிரகாச பிரயோஜனமும் -இறே

(மயர்வற மதி நலம் -ஞானம் தர்சனம் பிராப்தி மூன்றையும் சொன்னவாறு )

உரைக்க வல்லார் –
இவர் விரித்த பிரகாரம் அறியாது இருந்தார்களே யாகிலும்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இவர் அருளிச் செய்த சப்த மாதரத்தையே அனுசந்திக்குமவர்களும்-

மாயன் மணி வண்ணன் தாள் பணியும் –
ஆச்சர்யமான கல்யாண குணங்களையும்
ஆத்ம குண நாநாத்வத்தையும்
நீல ரத்னம் போன்ற வடிவழகையும் யுடையவன் -திருவடிகளிலே பணியும்

பணியும் -என்ற வர்த்தமானம் –
உத்தமனில் வர்த்தமானம் ஆதல் –
உத்தர வாக்யத்தில் பிரார்த்தனை யாதலால் இறே-

(தன்னிலை உத்தமன் –
பணிந்து கொண்டே இருக்கும் நிகழ் காலம் -பணிந்த பணியப்போகும் இல்லையே
த்வய உத்தர வாக்ய பிரார்த்தனை என்றுமாம் – )

மக்களைப் பெறுவர்களே-
புத்ரர்களைப் பெறுவர்கள்-
அவர்கள் ஆகிறார் -சிஷ்யவத் புத்ரர்கள் ஆதல் –
தாசவத் புத்ரர்கள் ஆதல் –
சிஷ்ய தாசர்கள் ஆதல்  –

இது தான் சப்த உச்சாரண மாத்ரத்தால் கூடுமோ என்னில் –
இவர் அபிமானத்திலே ஒதுங்கி –
இவர் அருளிச்  செய்ததை ஓதி –
ஒதுவித்துப்
போருமவர்களுக்கும் -கூடும்

எங்கனே என்னில்
இவர்களாலே திருந்தின சிஷ்யர்கள் யுடைய நினைவாலே –
ஸூக தாதம் -(வியாசர் ஸூக மகரிஷிக்கு தந்தை )
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -பெரியாழ்வார் -2-2-6-
நந்தன் பெற்றனன் -பெருமாள் திருமொழி -7-3-
(பெறாமலே பாக்யம் பெற்றது போல் சிஷ்யர்களாக தாசர்களாக இருந்தாலும்
அவர்கள் நினைவாலே ஆகுமே என்பதற்கு இந்த பிரமாணங்கள் )

கூரத்தாழ்வார் நங்கையார் திருவடி சார்ந்த வாறே பின்பு ஆவர்த்திப்பதாக அறுதியிட்டு
கூடுகிற அளவில் தம்முடைய புத்ரரான ஆழ்வான் யுடைய
ஸ்ரீவைஷ்ணவத்தைக் கண்டு
இதனுடைய எடுப்பு இருந்தமை கண்டோமுக்கு
ஆழ்வானுக்கு அந்ய சேஷத்வம் வர ஒண்ணாது என்று ஆவர்த்திக்கை தவிர்ந்தார் இறே

(கூரத்தாழ்வானை -பணியும் மக்களைப் – பெற்றது கண்டு –
கூரத்தாழ்வார் நடந்த வ்ருத்தாந்தந்தம் பிரமாணம் )

அன்றிக்கே
சாபிப்ரயமாக  வல்லார்க்கு சொல்ல வேண்டா விறே-

(பாசுரம் மட்டும் சொல்வாருக்கே இப்படி பாக்யம் என்றால்
ஆழ்வார் திரு உள்ளம் அறிந்து சொல்வாருக்குச் சொல்ல வேண்டாம் அன்றோ )

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-6-மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் –

December 7, 2014

மாணிக்கக் கிண்கிணி பிரவேசம் –

கீழே -ஆடுக ஆடுக -என்று ஆயாசிப்பித்தார்
இத்தால் பிரயோஜனம் –
அவதாரத்தில் மெய்ப் பாடு தோன்றின ஒழுக்கம் ஆகையால் (பருவத்துக்கு ஏற்ற செயல் )
வர்ணாஸ்ரமாதிகளுக்கும் -சாஸ்திர சித்தமாய் -சக்தி அநுகுணமாய் –
மங்கள பர்யந்தமான -ஸ்வரூப அநு ரூபமான நடப்பு வேணும் என்றது ஆயத்து –

இனி மேல் –
சப்பாணி -என்கிற வ்யாஜத்தாலே ஆகிஞ்சன்யத்தை வெளியிட்டு லோகத்தை ரஷிக்கிறார் –

(சப்பாணி -கை கூட்டி அஞ்சலி -கைம் முதல் ஒன்றும் இல்லாமையைக் காட்டிய படி –
போக்கிடம் இல்லாமல் -கால்களை சேர்த்து
இவற்றைக் காட்டவே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நால்வரைக் கூட்டி வந்தான் )

———————————————————————

மாணிக்கக் கிண் கிணி யார்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னால் செய்த வாய் பொன்னுடை மணி
பேணிப் பவள வாய் முத்திலங்கப் பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி –1-6-1-

பதவுரை

ஆணிப் பொன்னால் செய்த–மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்–(வேலைப் பாட்டிற் குறை வில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி–பொன் மணிக் கோவையை
உடை-உடைய
மருங்கின் மேல்–இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை
ஆர்ப்ப–ஒலி செய்யவும்
பவளம்–பவழம் போன்ற
வாய்–வாயிலே
முத்து–முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கவும்
பண்டு–முற் காலத்திலேயே
காணி–பூமியை
கொண்ட–(மஹாபலிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்–திருக் கைகளாலே
பேணி–விரும்பி
சப்பாணி–சப்பாணி கொட்டி யருள வேணும்;
கரு–கரு நிறமான
குழல்–கூந்தலை யுடைய
குட்டனே–பிள்ளாய்!
சப்பாணி–சப்பாணி கொட்டி யருள வேணும்.

மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன்னால் செய்த வாய் பொன்னுடை மணி
ஆணிப் பொன்னால்
வாய் அழகியதான உடை மணியை யுடைய மருங்கின் மேல்
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப –
பொன் -அழகு
மாணிக்கக் கிண்கிணி சப்திக்குமோ என்னில்
நா-மாணிக்கம் ஆகையாலே -சப்திக்கும் –
கிண்கிணிக்கு மாணிக்கம் புறம்பே பதித்தாலும் சப்தியாது –

பேணிப் பவளவாய் முத்திலங்கப் பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி-
விருப்பத்தோடு திருப் பவளத்தில்
திரு முத்து தோன்றும்படி ஸ்மிதம் செய்து கொண்டு
குடங்கையில் மண் கொண்டு அளந்து -4-3-9-என்கிறபடியே
முன்பு ஒரு காலத்தில்
மகா பலி யஞ்ஞ வாடத்திலே சென்று
தன் குடங்கை நீர் ஏற்றான் -மூன்றாம் திருவந்தாதி -62- என்கிறபடியே
உதக பூர்வகமாகக் கொண்ட கைகளால் சப்பாணி –

கரும் குழல் குட்டனே சப்பாணி –
கருகின திருக் குழலையும்
பிள்ளைத் தனைத்தையும் யுடையவனே -சப்பாணி

சப்பாணி -என்று அஞ்சலியை பிரகாசிப்பிக்கிறது
இரு கால் -சப்பாணி -என்கையாலே
உபாய பாவத்திலும்
உபேய பாவத்திலும்
ஆகிஞ்சன்யம் வேணும் என்று அவனைக் கொண்டு பிரகாசிப்பிக்கிறார் –

காணி -என்கையாலே
பலரும் என்னது என்று தோன்ற அபிமானித்து
பிறருக்கும் வழங்கிக் கொண்டு போரிலும்
இந்த விபூதி -அவனுடைய காணி -என்கிறது –
அது தன்னை இறே இவன் இரந்து கொண்டதும் –

——————————————————————-

பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட
என்னரை மேல் நின்றிழிந்து உங்கள் ஆயர்தம்
மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி –1-6-2-

பதவுரை

பொன்–ஸ்வர்ண மயமான
அரை நாணொடு–அரை நாணோடு கூட
மாணிக்கம் கிண்கிணி–(உள்ளே) மாணிக்கமிட்ட அரைச் சதங்கையும்
தன் அரை–தனக்கு உரிய இடமாகிய அரையிலே
ஆட–அசைந்து ஒலிக்கவும்
தனி–ஒப்பற்ற
சுட்டி–சுட்டியானது
தாழ்ந்து–(திருநெற்றியில்) தொங்கி
ஆட–அசையவும்
என் அரை மேல் நின்று–என்னுடைய மடியிலிருந்து
இழிந்து–இறங்கிப் போய்
உங்கள்–உன்னுடைய (பிதாவான)
ஆயர் தம் மன்–இடையர்கட்கெல்லாம் தலைவரான நந்த கோபருடைய
அரை மேல்–மடியிலிருந்து
சப்பாணி கொட்டாய்-;
மாயவனே–அற்புதமான செயல்களை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-;

பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி தன்னரை யாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட –
தன்னுடைய திருவரையில் சாத்தின பொன்னரை நாணோடு
கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி சப்திக்க
திருக் குழலிலே சாத்தின சுட்டியானது திரு நெற்றியிலே தாழ்ந்து அசைய

என்னரை மேல் நின்றிழிந்து உங்கள் ஆயர்தம் மன்னரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி –
தன்னரை மேல் இருந்து அவர்க்கு உகப்பாமா போலே
தனக்கு அவர் மடியிலே
இவனைக் காண்கை பிரியம் ஆகையாலே -என்னரை மேல் நின்று இழிந்து -என்கிறாள் –

உங்கள் தமப்பனாராய்
ஆயர்க்கு எல்லாம் நிர்வாஹகராய்
இருக்கிறவர் உடைய
மடியிலே இருந்து கொட்டாய் -என்கிறாள்

மாயவன் -ஆச்சர்ய சக்தி யுடையவன் –

——————————————————————–

ஸ்ரீ நந்த கோபர்
யசோதை பிராட்டி மருங்கிலே காண்கை தனக்கு அபிமதம் ஆகையாலே
மீண்டும் உன் மாதாவின் மருங்கிலே இருந்து விளையாடு என்கிறார் –

பன்மணி முத்தின் பவளம் பதித்தன்ன
என் மணி வண்ணன் இலங்கு பொற்றோட்டின் மேல்
நின்மணி வாய் முத்திலங்க நின்னம்மை தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங்கையனே சப்பாணி –1-6-3-

பதவுரை

என்–என்னுடைய
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறமுடையவனே!
பல்–பலவகைப் பட்ட
மணி–சதகங்களையும்
முத்து–முத்துக்களையும்
இன் பவளம்–இனிய பவழத்தையும்
பதித்த–அழுத்திச் செய்யப் பட்டதும்
அன்ன–அப்படிப்பட்டதுமான (அழகியதுமான)
இலங்கு–விளங்குகின்ற
பொன் தோட்டின் மேல்–பொன்னாற் செய்த தோடென்னும் காதணியினழகுக்கு மேலே
நின் மணி வாய் முத்து–உன்னுடைய அழகிய வாயிலே முத்துப் போன்ற பற்கள்
இலங்க–விளங்கும்படி (சிரித்துக் கொண்டு)
நின் அம்மை தன்–உன் தாயினுடைய (நின்னையே மகனாகப் பெற்ற ஏற்றம் கொண்டவள் )
அம்மணி மேல்–இடையிலிருந்து (அம்மணம் -இடை )
சப்பாணி கொட்டாய்-;
ஆழி–திருவாழி மோதிரத்தை
அம் கையனே–அழகிய கையிலுடையவனே!
சப்பாணி-;

பன் மணி முத்தின் பவளம் பதித்தன்ன
பன் மணி யாவது
மாணிக்கம் மரகதம் புஷ்பராகம் வைரம் நீலம் கோமேதகம் வைடூர்யம் -என்கிற மணி வகை ஏழும்
முத்தும்
இனிய பவளுமுமாகிய நவ ரத்னங்கள் பதித்து -(செய்த தோடு )

அன்ன –
நிம்நோந உத்தமம் ஆகாயாமை -ஒத்து
(இவற்றுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் ஒத்து )

என் மணி வண்ணன் இலங்கு பொற்றோட்டின் மேல்
என்னுடையவன் என்று தன்னுடையவனான நான்
அபிமாநிக்கும்படி பவ்யனாய்
நீல ரத்ன நிறத்தை யுடையனான உன்னுடைய திருக் காதிலே சாத்துகையாலே
அதி பிரகாசகமான பொற்றோட்டின் மேல்
ஆழியங்கையனே சப்பாணி –

நின்மணி வாய் முத்திலங்க –
உன்னுடைய அழகியதான திருப் பவளத்தில் திரு முத்தும் பிரகாசிக்க –

நின்னம்மை தன் அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி –
இவனைப் பெற்ற வயிறு யுடையாள் -2-2-4-
ஸூக தாதம்-சஹஸ்ரநாமம் -என்னுமா போலே -நின்னம்மை -என்கிறார்

தன்னுடைய அம்மணி மேல்
அம்மணி -அம்மணம் -என்றும் அரைக்கு பெயர் -ஒக்கலைக்கு பேர்
ஒக்கலையில் இருந்து கொட்டாய் சப்பாணி –

ஆழி அம்கையனே கொட்டாய் சப்பாணி –
இவன் சப்பாணி கொட்டும் போது
இவன் திரு உள்ளத்தில் கருத்தை அறிந்து
திருக் கையில் ஆழ்வார்களுக்கும் நீங்க நின்று
இவர் தம்மைப் போலே உகப்பார்கள் இறே
அருகாழி யாகவுமாம் –

என் மணி வண்ணன் –பன் மணி முத்தின் பவளம் பதித்தன்ன இலங்கு பொற்றோட்டின் மேல் -என்று அந்வயம் –

—————————————————————————-

தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா வம்புலீ சந்த்ரா வா வென்று
நீநிலா  நின் புகழா நின்றாயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே கொட்டாய் சப்பாணி –1-6-4-

பதவுரை

வான்–ஆகாசத்திலே
நிலா–விளங்குகின்ற
அம்புலி–அம்புலியே!
சந்திரா–சந்திரனே!
தூ–வெண்மையான
நிலா–நிலாவை யுடைய
முற்றத்தே–முற்றத்திலே
போந்து–வந்து
நீ–நீ
விளையாட–(நான்) விளையாடும்படி
வா–வருவாயாக
என்று–என்று (சந்திரனை அழைத்து)
நிலா–நின்று கொண்டு
நின்–உன்னை
புகழாநின்ற–புகழ்கின்ற
ஆயர் தம்–இடையர்களுடைய
கோ-தலைவராகிய நந்த கோபர்
நிலாவ–மனம் மகிழும்படி
சப்பாணி கொட்டாய்-;
குடந்தை கிடந்தானே! சப்பாணி-.

தூ நிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா வம்புலீ சந்த்ரா வா வென்று –
யசோதை பிள்ளையை ஒக்கலையில் எடுத்துக் கொண்டு
தூயதான நிலா முற்றத்திலே புறப்பட்டு
ஆகாசத்திலே சஞ்சரிக்கிற அம்புலீ சந்த்ரா என்று
அம்புலீ-என்று பிள்ளை அழைக்கும் பேராலே அழைக்கிறாள்

வா வென்று –
பிள்ளையோடு விளையாட வா என்று நியமித்து

நீ நிலா –
நீ நின்று –

நின் புகழா நின்ற-
உன்னை மேன்மையையும்
பிள்ளைத் தனத்தில் நீர்மையையும்
சொல்லிப் புகழா நிற்பானாய்-

ஆயர் தம் கோ –
அறிவு கேட்டால் தனித் தனியே கர்த்தாக்களாய் இருக்கிற
இடையரையும் தம்முடைய
குண அனுபவத்தாலே நியமித்து
ஆள வல்லவர் ஆகையாலே -ஆயர் தம் கோ -என்கிறார் –

நிலாவக்-
அவன் நிலை பெற –
அவன் சத்தை பெற்று வர்த்திக்க –

கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே கொட்டாய் சப்பாணி –
திகழக் கிடந்தாய் கண்டேனே -திருவாய் -5-8-1-
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு -திருச் சந்த விருத்தம் 61-
என்னவும் கண் வளர்ந்து அருளுகிறவனே-

(அழகும் ஆஸ்ரித பாரதந்தர்யமும் திகழும் படி கிடந்தாய்
உத்யோக சயனம் இன்றும் சேவிக்கிறோமே )

தூ நிலா முற்றத்தே போந்து -வானிலா வம்புலீ சந்த்ரா-விளையாட -வா வென்று
நின் புகழா நின்றாயர் தம் -நீநிலாவக கொட்டாய் –
குடந்தைக் கிடந்தானே
நீ நிலாவக் கொட்டாய் சப்பாணி –
என்று அந்வயம்-

(கிடந்த ஆராவமுதனை நின்று சப்பாணி கொட்ட அழைக்கிறார் )

———————————————————-

புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டயமுக்கி யகம் புக்கறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் யுண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பற்ப நாபா கொட்டாய் சப்பாணி –1-6-5-

பதவுரை

புட்டியில்–திருவரையிற் படிந்த
சேறும்–சேற்றையும்
புழுதியும்–புழுதி மண்ணையும்
கொண்டு வந்து–கொணர்ந்து வந்து
அட்டி–(என் மேல்) இட்டு
அமுக்கி–உறைக்கப் பூசி
அகம் புக்கு–வீட்டினில் புகுந்து
அறியாமே–(எனக்கு நீ) தெரியாதபடி
சட்டி தயிரும்–சட்டியில் வைத்திருக்கும் தயிரையும்
தடாவினில்–மிடாக்களிலிருக்கிற
வெண்ணெயும்–வெண்ணெயையும்
உண்–உண்ணுகின்ற
பட்டி கன்றே–பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே!
சப்பாணி கொட்டாய்-;
பற்ப நாபா–ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக் கொண்ட நாபியை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-.

புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து அட்டயமுக்கி –
மத்யம அங்கத்தில் சேறும் புழுதியும் –
சொட்டுச் சொட்டு -1-9-1- என்று துளியா நின்றால் சேறு தன்னடையே உண்டாம் இறே-
புழுதி அளைந்து விளையாடா நின்றால் -நனைந்த இடம் சேறாய்-நனையாத இடம் புழுதியுமாய் இறே இருப்பது –

மற்றைப் படி யாகிலுமாம் இறே –
(வியர்வை
எச்சில்
மூர்த்தம் -இத்யாதி )

உன்னோடு தங்கள் கருத்தாயின -1-5-8-
புட்டி என்று ஜெகன பார்ச்வத்துக்கு பெயர்-(புற இடுப்பு )
அவதாரத்தில் மெய்ப்பாடு தோன்றும் போது நீஹாரங்களும் வேணும் இறே –
(நீஹாரம்- உடம்பில் இருந்து வெளி வரும் கழிப்பு
கர்மத்தால் இல்லை -இச்சையால் மெய்ப்பாடு -தோன்ற )

அட்டியமுக்கி –
சேற்றையும் புழுதியையும் மேலே கொடு வந்திட்டு கையாலே உறைக்கப் பூசா நின்றால்
நிஷேதிக்கில்
பிள்ளை சீறும் என்று  மந்த ஸ்மிதம் செய்து இருக்கும் இறே –

யகம் புக்கறியாமே-
உள்ளே புக்கு இவன் காணாமை மறைய வைத்து –

சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் யுண்-
பாத்ரங்களில் தயிரும்
வெண்ணெயும் அமுது செய்யா நிற்கும் –

பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி-
பட்டி புகாமல் வேலி அடைத்து வைத்த கர்ஷகன் அறியாமல் பயிர்களைக்
களவிலே போய்த் தின்றுமது இறே பட்டிக் கன்று –
அது போலே அகம் புக்கு
அறியாமே வைத்தவற்றை நான் அறியாதபடி உண்கையாலே பட்டிக் கன்றே -என்கிறார் –

பற்பநாபா கொட்டாய்  சப்பாணி –
சகல ஜகத் காரணமான தாமரையை
திரு நாபியிலே யுடையவன் ஆகையாலே பற்ப நாபன் -என்கிறார்-

—————————————————————————–

தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது
போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்து மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்து கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி –1-6-6-

பதவுரை

தந்தை–(எல்லார்க்கும்) பிதாவாகிய உனது
சொல்–பேச்சை
தாரித்து கொள்ளாது–(மனத்திற்) கொண்டு அங்கீகரியாமல்
போர் உய்த்து வந்து–யுத்தத்தை நடத்துவதாக (க்கருவத்துடன்) வந்து
புகுந்தவர்–(போர்க் களத்தில்) ப்ரவேசித்தவரும்
மண்–ராஜ்யத்தை
ஆள–(தாமே) அரசாளுவதற்கு
பாரித்த–முயற்சி செய்த
மன்னர்–அரசர்களுமாகிய
நூற்றுவர்–நூற்றுக் கணக்காயிருந்த துரியோதநாதிகள்
பட–மாண்டு போகும்படி
அன்று–(பாரத யுத்தம் நிடந்த) அக் காலத்திலே
பஞ்சவர்க்கு–பஞ்ச பாண்டவர்களுக்கு (வெற்றி உண்டாக)
தேர் உய்த்த–(பார்த்த ஸாரதியாய் நின்று) தேரை ஓட்டின
கைகளால்–திருக் கைகளாலே
சப்பாணி-;
தேவகி சிங்கமே–தேவகியின் வயிற்றிற் பிறந்த சிங்கக் குட்டி போன்றவனே!
சப்பாணி-.

தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது –
இவர்களுக்கு ஸ்திதி எங்கே –
அவர்கள் ஐவர் -நாங்கள் நூற்றுவர் என்கிற பஹூ மானத்தாலே
நிருபாதிக பித்ரு பரிபாலனம் செய்யாதே –

போருய்த்து வந்து புகுந்தவர்
ஸ்ரீ கிருஷ்ண பஷபாதிகளோடே போரை நடத்துவதாக
யுத்த பூமியிலே முற்பட அணியும் கையும் வகுத்து புகுந்தவர்

மண்ணாளப் பாரித்து மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்து கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பாணி-
பூமி யெல்லாம் நாங்களே ஆள வேணும் என்று மநோ ரதித்த ராஜாக்கள்
தழைத்த மரங்கள் எல்லாம் நின்றவாறு அறியாமல் பட்டு விழுந்தால் போலே முடிந்து போக –

மன்னர் என்கிற பன்மை –
பட -என்கிற ஒருமையால்
அவர் பட்டார் இவர் பட்டார் -என்கிற பர்வ க்ரமம் இல்லை என்கிறது –
சிலர் பிராணனோடு நின்றார்களாக இவர் காணாமையாலே-

பஞ்சவர்க்கு அன்று தேருய்த்து கைகளால் சப்பாணி –
பாண்டவர்களுக்கு என்னாதே-ஐவர் -என்றது முன்பே நூற்றுவர் -என்று பரிகணிக்கையாலே-
அன்று –
தங்கள் வெறுமை தோன்ற நின்ற அன்று –
ஸ்ரீ பார்த்த சாரதி -என்னும்படி ஆயுதம் எடுக்க ஒண்ணாது என்று விலக்குகையாலே
தேர்க் காலாலே   துகைத்தான் இறே –

உய்த்தல் -நடத்தல் –
தேர் உய்த்த கைகளால் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் அங்கே யுன்டானால் போலே
இங்கும் என் அபேஷைக்கு ஈடாக செய்து அருள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் –

தார் உய்த்து -என்ற பாடமான போது –
தார் -என்று அணி வகுக்கையாய் -அணி வகுத்து என்ற படி

தேவகி சிங்கமே சப்பாணி-
தேவகி பெற்ற
ராஜ குலத்வமான கர்வம் தோன்ற சிம்ஹக் கன்று போலே இருக்கிறவனே-

தந்தை சொற் கொள்ளாது-தாரித்து -மண்ணாளப் பாரித்து மன்னர்
மண்ணாளப் பாரித்து மன்னர் நூற்றுவர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்து கைகளால் சப்பாணி
தேவகி சிங்கமே சப்பாணி-
என்று அந்வயம்

—————————————————————————

பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைமேல் எறி திரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சாரங்க வில் கையனே சப்பாணி –1-6-7-

பதவுரை

பரந்திட்டு நின்ற–(எல்லை காண வொண்ணாதபடி) பரவி யுள்ள
படு கடல்–ஆழமான ஸமுத்ரமானது
தன்னை இரந்திட்ட–(வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த
கை மேல்–கையின் மேலே
எறி திரை–வீசுகின்ற அலைகளினால்
மோத–மோதி யடிக்க
கரந்திட்டு நின்ற–(முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த
கடல்–அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
கலங்க–கலங்கி விடும்படி
சரம்–அம்புகளை
தொட்ட–தொடுத்து விட்ட
கைகளால் சப்பாணி-;
சார்ங்கம் வில்–ஸ்ரீசார்ங்க மென்னும் தநுஸ்ஸை
கையனே–(அப்போது) கையில் தரித்தவனே!
சப்பாணி-;

பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை –
ஆயாம விஸ்தாரங்கள் எல்லை காண ஒண்ணாதபடி யாகப் பரந்து-

இரந்திட்ட கை மேல் எறி திரை மோதக்-
தன்னை ஆஸ்ரயித்து வந்தார்க்கு
தன் பக்கல் யுண்டான ரத்னாதிகளைக் கொடுத்து
வற்றாமல் நின்ற சமுத்ரம் தன்னை

படு -என்று
ஆழ்தல்-ரத்நாகாரம் ஆதல் –

முன்பு இது செய்து போந்த ஔதார்யத்தைக் கணிசித்தும்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -யுத்த -16-31-என்கிற
உபதேசத்தாலே இறே இவர் தாம் சரணம் புக்கது –
அது பலிப்பது குணாதிக விஷயத்திலே இறே
தன்னை இரந்திட்ட கை மேலே திரைகளை எறிந்து கொண்டு மோத விட –

கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச் சரந்தொட்ட –
சரண்யதவத்தை மறைத்து நின்று
சமுத்ரம் ஹிருதயம் கலங்கி வந்து திருவடிகளில் விழும்படியாக
சாபமா நாய சராம்ச் ச -யுத்த -21-22-என்ற
சரம் தொட்ட கைகளால்-

கடல் என்று
நியந்த்ருத்வேன விசேஷ்ய பர்யந்தமாக
அபிமானியான வருணனைக் காட்டுகிறது

சார்ங்க வில் கையனே –
திருக் கையிலே ஸ்ரீ சார்ங்கம் திரு வில்லை வாங்கின போதே
சரம் தொடும் கை மிகையாம்படி இறே

சமுத்ரம் கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக
பீதியாலே கலங்கின படி-

————————————————————————

குரக்கினத்தாலே குரை கடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் இலங்கை
அரக்கர் அவிய  அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங்கையனே சப்பாணி –1-6-8-

பதவுரை

குரை–கோக்ஷியா நின்ற
கடல் தன்னை–ஸமுத்ரத்தை
நெருக்கி–(இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு–குரங்குகளினுடைய
இனத்தாலே–கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி–ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்–பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை–லங்கையிலுள்ள
அரக்கர்–ராக்ஷஸர்களெல்லாம்
அவிய–அழிந்து போம்படி
அடு கணையாலே–கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய–நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;
நேமி–திருவாழி ஆழ்வானை
அம் கையனே–அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.

குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி-
ஸ்ரீ வானர சமூஹத்தாலே
பெரிய முழக்கத்தை யுடைய சமுத்ரத்தை இரண்டு அருகிலும் தேங்கிப் போரும்படி நடுவே அணை கட்டி –
குரங்குகள் வர்த்திப்பது பர்வதாக்ரங்களிலும் வர்ஜஜல பீதியாலே பர்வத குகைகளிலும் இறே-
அவற்றுக்கும் சமுத்ரத்துக்கும் என்ன சேர்த்தி தான் –
அவன் நினைத்தால் சேராதது இல்லை இறே-

நீள் இலங்கை அரக்கர் அவிய  அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி-
கடலை அகழாக யுடைய இலங்கையை இருப்பிடமாக யுடையோம்  என்கிற கர்வத்தை யுடையராய்
போக்த்ருத்வ நிபந்தனமான ஸ்வா தந்த்ர்ய அக்நி தோன்ற வர்த்திக்கிறவர்கள் இறே ராஷசர் –
அந்த அக்னி விளக்குப் பிணம் போலே யுரு மாய்ந்து போம்படி அடு கணையால் அவித்து
அவர்கள் வயிற்றிலே யாம்படி நெருக்கினான்  இறே

குரக்கினத்தால் கடலை நெருக்கி
அடு கணையாலே அரக்கரை நெருக்குகையாலே
அவன் ஏவும் காலத்து குரங்கு அம்பு என்கிற வாசி கண்டிலோம் –

அடு கணை தான் அரக்கர் அவிய என்கையாலே
நெருப்புக்கு நீராய்
சாகரம் சோஷயிஷ்யாமி-யுத்தம் -21-22- என்கையாலே
நீருக்கு நெருப்பாயும்   இருக்கும் இறே

(ஸ்வா தந்தர்யம் ஆகிய நெருப்புக்கு அவன் நீர் போல்
நீர் -கடல் -அபிமானதுடன் வராமல் இருக்க -நீருக்கு நெருப்பு போல் அவன் அம்புகள் )

ஒரு வாலி -ஒரு கர தூஷணாதிகள்-ஒரு மாரீசன்  முதலானாரைக் கொல்லுகையாலே
அடு கணை என்று
நிரூபகம் ஆகிறது என்கிறவுமாம்

நெருக்கிய கைகளால் சப்பாணி –

நேமி யங்கையனே சப்பாணி –
விரோதி நிரசனத்துக்கு அடு கணை அமைந்து இருக்கையாலே
திரு வாழி
அழகுக்கு யுடலாம் இத்தனை இறே
அம் -அழகு

அன்றிக்கே
கருதுமிடம் பொரும் போதைக்கு –
நேமி -அம்பு -குரங்கு -என்று
ஒரு வாசி இல்லை போலே காணும்-

———————————————————————–

அளந்திட்ட தூணை யவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுருவாய்
உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி –1-6-9-

பதவுரை

அளந்திட்ட–(தானே) அளந்து கட்டின
தூணை–கம்பத்தை
அவன்–அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட-புடைக்க
ஆங்கே–(அவன் புடைத்த) அந்த இடத்திலேயே
வாள் உகிர்–கூர்மையான நகங்களை யுடைய
சிங்கம் உரு ஆய்–நரஸிம்ஹ ­மூர்த்தியாய்
வளர்ந்திட்டு–வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
(ஒரு கால் இவ் விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று)
உளம்–(அவ் விரணியனது) மநஸ்ஸு
தொட்டு–பரி சோதித்துப் பார்த்து (பின்பு)
இரணியன்–அவ் விரணியனுடைய
ஒளி–ஒளி பொருந்திய
மார்பு அகலம்–மார்பின் பரப்படங்கலும்
பிளந்திட்ட–(நகத்தாற்) பிளந்த
கைகளால் சப்பாணி
பேய்– பூதனையின்
முலை–முலையை
உண்டானே–உண்டவனே!
சப்பாணி-;

அளந்திட்ட தூணை யவன் தட்ட –
அவன் தோளுக்கு பொருந்தின பரிமாண மாகவும்
புரை யடங்கவும் அளந்திட்ட கல் தூணை –
தன்னை ஒழிய தேவதா சத் பாவம் நாஸ்தி -என்று இருக்கிற அவன் தட்ட

ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச்-
அவன் தட்டின விடத்தே வளருகிற –

சிங்க யுருவாய் –
ஊர்த்த்வ நரசிம்ஹமாய் வளர்ந்திட்டு –

ஸ்ரீ கஜேந்த்திரன் -நாராயணா வாராய் என்றான் இறே
வ்யாப்தியிலும் விசேஷ்ய பர்யந்தமான அஸ்தித்வம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அது பாராமல் –
மணி வண்ணா நாகணையாய் -சிறிய திரு மடல் -50-என்றவோபாதி இறே
இவர் நாராயணா என்றதும்

இங்கே அங்கன் அன்றிக்கே
அஸ்தித்வ நாஸ்தித்வ விகல்பம் தோன்றுகையாலே
எங்கும் உளன் –திருவாய் மொழி -2-8-6-என்று
வ்யாப்தியைக் கணிசித்து 
அதுக்கு ஒரு ஹேது வேண்டுகையாலே
கண்ணன் என்ற பாகவதனைக் காய்ந்த பொறாமையாலே இறே
முன்பு தன்னளவிலே நாஸ்திக்யத்தால் அவன் பண்ணின பிரதிகூல்யம் எல்லாம் பொறுத்துப் போந்தவன்
இப்போது
அவன் புடைத்த அவ்விடம் தன்னிலே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிற்றும்-

இத்தால்
அங்கு -என்கையாலே -தேசாந்திர வ்யாவ்ருத்தியும்
அப்பொழுது -என்கையாலே – காலாந்தர வ்யாவ்ருத்தியும்
அவன் வீய -என்கையாலே – தேகாந்தர வ்யாவ்ருத்தியும்
தோற்றினாப் போலே
அவன் தட்ட ஆங்கே -என்ற போதே அவை எல்லாம் தோற்றிற்று இறே –

திவ்ய ஆயதங்களையும் நிறுத்தித் தோன்றின பிரகாசத்தாலே இறே
வாள் உகிர் -என்கிறது –

உளந்திட்டு இரணியன் ஒண் மார்வகலம்
அவனுடைய ஹிருதய பரிஷை செய்து –
1-இவன் நலிவு ப்ரஹ்லாதனுக்கு தட்டாமையாலே செருக்கு வாடி அனுகூலிக்கவுமாம்-
2-இனியாகிலும் ஒரு அஞ்சலி பண்ணாய் -என்று அவன் உபதேசிக்கையாலே கீழ் நாளைய
அபராதத்தை நினைத்து அனுதபித்து அனுகூலிக்கவுமாம்-
3-நாஸ்தி -என்கிற இடத்தில் -அஸ்தி-என்னும்படி தோன்றுகையாலே
அவன் வ்யாப்தியில் சத் பாவத்தை நினைத்து லஜ்ஜையாலே அனுகூலிக்கவுமாம்
4-உக்ரம் வீரம் -என்கிற கொடிய வடிவைக் காண்கையாலே பீதி மூலமாக அனுகூலிக்கவுமாம் –
5-தன்னுடைய பிரதிஞ்ஞா சக்தி குலைந்த பின்பும் ராவணன்
சசால சபாஞ்ச முமோச வீர -யுத்த -56-140-என்ற பின்னும் வெறும் கை வீரனாய்ச் போக்கு வரத்துச் செய்தான் இறே
அதுவும் இல்லாத அசக்தியாலே அனுகூலிக்கவுமாம்
6-வாய் தகர்த்து -பெரிய திருவந்தாதி -35-என்றும்
உரத்தினில் கரத்தை வைத்து -திருச் சந்த விருத்தம் -25-என்றும்
உகிர்த் தலத்தை ஊன்றினாய்-என்றும்
பர்வ க்ரமம் தோன்றுகையாலே வ்யசன பரம்பரைகளால் அனுகூலிக்கவுமாம்
இன்னமும்
இப் புடைகளிலே இப்போது அனுகூலிக்குமோ என்று பார்த்தது இறே  –

இரணியன் ஒண் மார்வகலம் –
பிறை எயிற்று அனல்  விழி -பெரிய திருமொழி -2-3-8-என்று நெருப்பை உமிழ
நெருப்பின் முகத்திலே பொன் போலே பொன்னுருக்கி நிறம் பெறுகையாலே-
ஒண் மார்பு -என்கிறார்

திரு உகிர்கள்  சேர விழுகைக்கு  இடம் போருகையாலே  –
அகலம் -என்கிறது

பிளந்திட்ட கைகளால் சப்பாணி –
பூம் கோதையாள் வெருவ-முதல் திரு -23-
இவன் முருட்டு எலும்பிலே உறைக்குமாகில் என் வருகிறதோ -என்று  வெருவும்படி இறே பிளந்திட்டது
இவர் பிளந்த பின்பும் திரு விரல்களிலே உளைவு உண்டாகில் தெரியும் என்று இறே
சப்பாணி கொட்டு என்கிறதும் –

பேய் முலை யுண்டானே சப்பாணி —
இங்கு ஒரு உளைவு காணாமையாலே
பேய் முலை யுண்டு பிழைத்தவனுக்கு ஒரு உளைவு வருமோ -என்று தேறுகிறார் –

—————————————————————————

அடைந்திட்ட மரர்கள் ஆழ் கடல் தன்னை
மிடைந்திட்டு மந்த்ரம் மத்தாக நாட்டி
வடம் சுற்று வாசுகி வன் கயிறாகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி –1-6-10-

பதவுரை
(துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக)
அமரர்கள்–தேவர்கள்
அடைந்திட்டு–(உன்னைச்) சரணமடைய (நீ)
ஆழ்கடல் தன்னை–ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்)
விடைந்திட்டு–நெருங்கி
மந்தரம்–மந்தர பர்வதத்தை
மத்து ஆக–(கடைவதற்குரிய) மத்தாகும்படி
கூட்டி–நேராக நிறுத்தி
வாசுகி–வாசுகியென்னும் பாம்பாகிய
வன்வடம்–வலிய கயிற்றை
(அந்த மந்தரமலையாகிற மத்திலே)
கயிறு ஆக சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடைந்திட்ட–கடைந்த
கைகளால் சப்பாணி-;
கார்முகில் வண்ணனே–காளமேகம் போன்ற நிறமுடையவனே!
சப்பாணி-;

அடைந்திட்ட மரர்கள் ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்த்ரம் மத்தாக நாட்டி –
சாபோபஹதரான இந்த்ராதி தேவர்கள் நெருங்கி வந்து
(அமரர்கள் மிடைந்து -நெருங்கி -அடைந்திட்டு என்று இங்கே )
எங்களை ரஷிக்க வேணும் என்று ஆஸ்ரயித்த படியாலே
அவர்களுக்காக அம்ருத மதனம் செய்வதாக
அத்யகாதமான ஷீராப்தியை
ஓஷதி விசேஷத்தாலே தத்த்யவஸ்தமாக்கி-( தயிர் உறை குத்துவது போல் )
அதிலே மந்த்ரத்தை -மலை ஆமை மேல் வைத்து -நான்முகன் திரு -49- என்கிறபடி மத்தாக நாட்டி
இட்டு -கடைவதாக இட்டு
நாட்டி -என்றது
கூர்மாகாரத்தின் உடைய முதுகில் மலை செல்லாதபடி
பாலுறைவு தாங்குகையாலே இறே இட்டு நாட்ட வேண்டிற்று –

வடம் சுற்று வாசுகி வன் கயிறாகக் –
இப்படி ஊன்ற நாட்டின மந்த்ரத்திலே பெரும் தேர் நடத்தும்
வடம் போலே இருக்கிற வாசூகியை வலிய உயிர்க் கயிறாகச் சுற்றி –

கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி —
லோக உபகாரகமாக நீர் கொண்டு எழுந்த கார் மேகம் போலே இருக்கிற திரு மேனியை யுடையவனே –

———————————————————————-

ஆட் கொள்ளத் தோன்றிய வாயர் தம் கோவினை
நாட கமழ்  பூம் பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே –1-6-11-

பதவுரை

ஆள் கொள்ள–(அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய–திருவவதரித்த (திரு ஆய்ப்பாடியிலேயே திரு அவதரித்ததாக அன்றோ இவர் திரு உள்ளம் )
ஆயர் தம் கோவினை–இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால்–ஆசையினால்
நாள்–எந்நாளிலும்
கமழ்–மணம் வீசுகின்ற
பூ–புஷ்பங்கள் வீசுகின்ற
பொழில்–சோலைகளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
பட்டன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சப்பாணி ஈர் ஐந்தும்–சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும்
வேட்கையினால்–இஷ்டத்தோடு
சொல்லுவார்–ஓதுகிறவர்களுடைய
வினை–பாபங்கள்
போம்–(தன்னடையே )அழிந்து போம்.

நிகமத்தில் இத் திரு மொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்

ஆட் கொள்ளத் தோன்றிய வாயர் தம் கோவினை
ஆட்கொள்வானாக விறே அடிமைக்கு இசையாத மண்ணின் பாரங்கள் வர்த்திக்கிற வட மதுரையை விட்டு
திரு வாய்ப்பாடியிலே அவதரித்ததும்-

இங்கு தான் அடிமைக்கு இசைந்தார் யுண்டோ என்னில்
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட மன்னன் –2-5-1-என்றார்களே –

அர்ஜுனனையும் கரிஷ்யே வசனம் தவ -கீதை -18-73-என்ற பின்பு
ஸ்ரீ கிருஷ்ண தாசன் -என்று இறே உடையவர் அருளிச் செய்வது

பாவோ நான்யத்ர கச்சதி -என்ற பின்பு இறே ஸ்ரீ ராம தாசன் என்றதும்

சொன்னது செய்வேன் என்றவனுக்கும்
செய்யேன் என்றவனுக்கும்
தாசஸ்த்வம்  குண பரமாக யுண்டாய்த்து இறே

இவருக்கு ஸ்ரீ ராம குணம் சாத்மியாது இருந்தது ஸ்ரீ ராம பாக்யத்தாலே இறே
நான்யத்ர என்னாதே கூடப் போருவேன் என்றார் ஆகில்
திரு உள்ளத்தை வ்யாகுலிப்பித்தார் ஆவார் இறே
(குணத்தால் இவரை வெல்ல முடிய வில்லையே என்று வ்யாகுலம் )

அடிமை செய்து இறே அடிமை கொள்வதும்
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் ஆகையாலே -பெரிய திருவந்தாதி -32-
(அடிமையாய் இருந்து ஆள வந்த கோ என்னப் பண்ணுபவன் )
அடிமை புக்கவர்களும் –
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு -நான் முகன் திரு -50 என்றார்கள் இறே

ஆயர் தம் கோவினை
ஆயர்களுக்கு நிர்வாஹகன் ஆனவனை

நாட் கமழ்  பூம் பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
நாள் பூக்கள் கமழும்படியான சோலையாலே சூழப் பட்ட  ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அகால பலிநோ வ்ருஷா-யுத்த -127-18-என்கிறபடி
பழம் பூ நாற்றம் தோன்றாமல் செல்லும் இறே
(அகால பூக்களே இல்லையே இங்கு
அங்கு பூக்க வேண்டாத காலத்தில் பூத்தது )

வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
இவர் விஞ்சின விருப்பத்தால் அருளிச் செய்த
ஆகிஞ்சன்ய பிரகாசகமான –

வேட்கையினால் சொல்லுவார் வினை போமே —
இவருடைய பாவ பந்தம் இல்லையாகிலும்
இவர் அபிமானத்திலே ஒதுங்கி
இவர் அருளிச் செய்த சப்த மாத்ரத்தை விருப்பத்தோடு சொல்லுவாருக்கு
இவரைப் போலே மங்களா சாசனம் பண்ணப் பெற்றிலோம்
என்கிற வினை போம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-5-உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா-

December 1, 2014

உய்ய உலகு -பிரவேசம் –

கீழே ப்ரஹ்மா முதலானோர் அழையாது இருக்க –
சிலர் உபஹாரங்களை வர விடுவாரும்
உபஹாரங்களைக் கொண்டு வந்து அங்கீ கரிக்க வேணும் என்று தொழுவாரும் –
அவன் அழைக்கிறான் என்று அழைத்தாலும் வாராதாருமாய் -( மதி சந்திரன் )
நின்றது இவ்விபூதி –

அந்த விபூதியில் உள்ளார்
பிராட்டிமார் கொடுத்த உபஹாரங்களையும் கொண்டு ஆழ்வார் அழைத்தார் என்றால்
மகா மதிகள் ஆகையாலே வருவார்கள் இறே –

பவள வாயீர் வந்து காணீரே என்று
பல காலும் அழைக்கையாலே
த்ருதீய விபூதியில் உள்ள எல்லாரும் வருவார்கள் இறே –

ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தாலும் –
தன்னுடையவர்களுக்கு பரதந்த்ரன் ஆகிறதாலும்
வசவர்த்தியாவன் இவன் ஒருவனும் இறே –

இவ்வர்த்தத்தை –
உய்ய உலகு -தொடங்கி-(1-5 )
மெச்சூது சங்கம் அளவும் -(2-1 )
யசோதை பிராட்டி பாசுரத்தாலே இவர் அனுபவித்து உகக்கிற அவையும் மங்களா சாசனம் இறே –
அவனை நியமிக்கையாலே –

பிள்ளைகளுடைய ந்ருத்த விசேஷங்களில் –
செங்கீரை என்ற ஒரு துறை யுண்டு -தமிழர் சொல்லுவது–அது ஆதல் –
கீர் -என்று ஒரு பாட்டாய்-
அதுக்கு நிறம் சிவப்பாகி
பாட்டுக்குத் தகுதியாக ஆடு -என்று நியமிக்கிறார் ஆதல் –

——————————————————————————-

உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா
ஊழி தோர் ஊழி பல வாலினிலை யதன்மேல்
பைய வ்யோகு துயில் கொண்ட பரம் பரனே
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின்னகலம் சேமம் எனக் கருதிச்
செலவு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய வெனக்கொரு காலாடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-1-

பதவுரை

உய்ய–(ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக
உலகு–லோகங்களை
படைத்து-ஸ்ருஷ்டித்து
(பின்பு ப்ரளயம் வந்த போது அவற்றை)
உண்ட–உள்ளே வைத்து ரக்ஷித்த
மணி வயிறா–அழகிய வயிற்றை யுடையவளே
பல ஊழி ஊழி தொறு–பல கல்பங்கள் தோறும்
ஆலின் இலை அதன் மேல்–ஆலிலையின் மேல்
பைய–மெள்ள
உயோகு துயில் கொண்ட– யோக நித்திரை செய்தருளின
பரம் பரனே–பர ஸ்மாத் பரனானவனே!
பங்கயம்–தாமரை மலர் போன்று
நீள்–நீண்டிருக்கின்ற
நயனம்–திருக் கண்களையும்
அஞ்சனம்–மை போன்ற
மேனியனே ஐய–திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
செய்யவள்–செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான
நின் அகலம்–உன் திரு மார்வானது
(இந் நிர்த்தனத்தால் அசையாமல்)
சேமம் என கருதி–ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு
செல்வு பொலி–ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான
மகரம்–திரு மகரக் குழைகளோடு கூடின
காது–திருக் காதுகளானவை
திகழ்ந்து இலக–மிகவும் விளங்கும்படி
எனக்கு–எனக்காக
ஒரு கால்–ஒரு விசை
செங்கீரை ஆடுக–செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்–இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே–போர் செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!! –

உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா-
அசந்நேவ-என்று மூல பிரக்ருதியிலே கிடந்த ஆத்மாக்களை
போக மோஷ யோக்யராக சிருஷ்டிக்க
ஸ்ருஷ்யரான அளவிலே மீண்டும் அபராதங்களிலே ப்ரவர்த்திக்கையாலே
சம்ஹரிக்க பிராப்தமாய் இருக்கச் செய்தேயும் சம்ஹரியாமல்
அழகிய திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கையாலே -உய்ய வுலகு படைததுண்ட மணி வயிறா-என்கிறார் –

ஊழி தோர் ஊழி பல வாலினிலை யதன் மேல் –
கல்பம் தோறும் கல்பம் தோறும்
பல -என்கையாலே -கல்பங்கள் -அநேகம் -என்றபடி –
ஆலிலை என்று தோற்றுகிற அளவேயாய்
அதன் -என்று விசேஷிக்கையாலே முகிழ் விரிகிற யளவைக் காட்டுகிறது –

பைய வ்யோகு துயில் கொண்ட பரம்பரனே –
பைய -மெள்ள
லோக ரஷண சிந்தையோடு இலை அசையாமல் கண் வளர்ந்த பராத் பரன்
என்கையாலே பரத்வ ஸூசகமாய் இறே –

பங்கய நீள் அயனத்து அஞ்சன மேனியனே -செய்யவள் நின்னகலம் சேமம் எனக் கருதிச் –
பங்கய நீள் அயனமும் -அஞ்சன மேனியும் –
மேனியன் -என்று சம்போதித்து
உன் திரு மார்பைப் பற்றி இருக்குமவள் திருமேனி அசையாமல் பேண வேணும் -என்னும் கருத்தோடு ஆதல் –
அன்றிக்கே –
செம் செம் என்று சுமப்பாரைப் போலே அன்றே
அபிமத விஷயத்தில் அது மிகவும் வேணும் -இறே –

செலவு பொலி மகரக் காது திகழ்ந்து இலக ஐய –
அவருக்கு போக்யமான திரு மகரக் குழைகள் திருக் காதிலே அசைந்து விளங்க –
செல்வாவது-அவளுக்கு மிகவும் போக்யமாகை இறே ( ரஹஸ்யம் பேச காதோடே பேசுவார்கள் )
ஐஸ்வர்யம் மிக்குப் படி சேர்ப்பு வுண்டார்க்கு இறே மகரக் குழை தானாவது –
ஐய -பிள்ளைகளை -ஐயா -அப்பா -என்னக் கடவது இறே –

வெனக்கொரு காலாடுக ஆடுக வாடுகவே-
உன் உகப்பாலும்
அவள் உகப்பாலும்
ஆடின அளவன்றிக்கே
எனக்காகவும் ஒரு கால் ஆட வேணும் -என்கிறார் –

இவர் உகப்பது
அமுது செய்த பதார்த்தங்களை ஜரிப்பைக்கு ஆயாசம் உண்டாக வேணும் என்று இறே –

செங்கீரை –
செங்கீரைக்குத் தகுதியான லஷணத்தோடே-

ஆயர்கள் போரேறே –
திரு வாய்க் குலத்துக்கு ஸிம்ஹ புங்கவம் போலே இருக்கிறவனே-

—————————————————————————–

கோளரி அரியின் உருவம் கொண்ட வுணனுடலம்
குருதி குழம்பு எழக் கூருகிரால் குடைவாய்
மீளவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி
மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வரக்
காள நன் மேகமவை கல்லோடு கால் பொழியக்
கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே
ஆள வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே யாடுக யாடுகவே –1-5-2-

(கால் பொழிய கார் பொழிய பாட பேதம் -காற்று மேகம்
பெரும் காற்றோடு கல் வர்ஷமாக வர்ஷிக்க –
அன்றிக்கே –
கார் -என்ற பாடமான போது-
கல்லோடு கூட வர்ஷத்தை சொரிய என்று பொருளாக கடவது – )

பதவுரை

கோன்–வலிமையை யுடைய
அரியின்–(நா) சிங்கத்தின்
உருவம் கொண்டு–வேஷங்கொண்டு
அவுணன்–ஹிரண்யாஸுரனுடைய
உடலம்–சரீரத்தில்
குருதி–ரத்தமானது
குழம்பி எழ–குழம்பிக் கிளரும் படியாகவும்
அவன்-அவ் வஸுரனானவன்
மீள–மறுபடியும்
மகனை–தன் மகனான ப்ரஹ்லாதனை
மெய்ம்மை கொள கருதி–ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி
கூர் உகிரால்–கூர்மையான நகங்களாலே
குடைவாய்–(அவ் வசுரனுடலைக்) கிழித்தருளினவனே!
மேலை–மேன்மை பொருந்திய
அமரர் பதி–தேவேந்திரன்
மிக்கு வெகுண்டு வா–மிகவும் கோபித்து வா (அதனால்)
காளம்–கறுத்த
நில்–சிறந்த
மேகம் அவை–மேகங்களானவை
கல்லொடு–கல்லோடு கூடின
கார் பொழிய–வர்ஷத்தைச் சொரிய (கால் பொழிய கார் பொழிய பாட பேதம் -காற்று மேகம் )
கருதி–(‘இம் மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து
வரை–(அந்த) கோவர்த்தந கிரியை
குடையா–குடையாகக் கொண்டு
காலிகள்–பசுக்களை
காப்பவனே–ரக்ஷித்தருளினவனே!
ஆள–(இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண் பிள்ளைத் தனமுடையவனே!
எனக்கு. . . . . ஆடுக-.

கோளரி அரியின் உருவம் கொண்ட வுணனுடலம் குருதி குழம்பு எழக் கூருகிரால்
மிடுக்கை யுடைத்தான நரசிம்ஹ வேஷத்தை அங்கீ கரித்து
ஹிரண்யன் பாவ த்ரயங்களாலே ஊட்டுப் பன்றி போலே வளர்த்த சரீரத்தை
நரசிம்ஹ அவதாரமாக நின்று
முஷ்டி ப்ரஹாரங்களைச் செய்து
குருதி குழம்பவும்
வாய் தகர்ந்து ரத்தம் உகளிக்கவும்
ஆயுதம் எடுக்க ஒண்ணாமையாலே முழுக் கூர்மையான
திரு வுகிரை ஆயுதமாகக் கொண்டு
பிளத்தல் கிழித்தல் செய்த அளவன்றிக்கே

குடைவாய்-மீளவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி –
மீளவும் -குடைவாய் -குடைகிறது –
ரத்தங்கள் தேங்கின பிரதேசங்கள் தோறும் திறந்து விடுவதாக விறே –

மெய்ம்மை யாவது –
பாகவத சேஷத்வம் இறே
அது உள்ளது பிரதம ரஹஸ்யத்திலே இறே –
(திருமந்திரம் -நம -பாகவத சேஷத்வ பாரதந்தர்ய பர்யந்தம் -அடியார்க்கு அடியார் )

அது அவன் வாயிலே ஒள்ளியவாகிப் போந்த சப்த மாத்ரத்தையே
அர்த்த சஹிதமாகச் சொன்னானாக
பிரதிபத்தி பண்ணினான் இறே –
தான் கருதினதாகையாலே இறே –

(பிள்ளை நாராயணா மட்டும் சொன்னாலும் -அனைத்தையும் சேர்த்து –
சொல்லையும் மட்டும் இல்லாமல் பொருளையும் -அதிலும் ஆழ்ந்த பொருளையும் -கொண்டு
தான் கருதினதாகையாலே இறே )

இதுக்கு கீழ் அசுரர்களால் வந்த பிராதிகூல்யம் சொல்லிற்று
மேல் -தேவர்களால் ஆஸ்ரிதர்க்கு வந்த பிராதி கூல்யத்தைப் போக்கின படி சொல்லுகிறது –

மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லோடு கால் பொழியக்-
நாலு நாள் மனுஷ்யரைக் காட்டில் இருக்கிறோம் என்கிற மேன்மையை யுடையவர் ஆகையாலே -அமரர் -என்கிறது –
இனி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் கர்த்தாவுமாய்
இவர்களுக்கு பதி யாகையாலே -அமரர் பதி -என்கிறது -இந்த்ரனை –
இவன் எனக்கிட்ட சோற்றை யுண்டவன் ஆர் -என்று பசியாலே மிகவும் கோபித்து வர
கடலை வறளாகப் பருகின நன் மேகங்கள் ஆனவை காற்றோடு கூடி கல் மழையைப் பொழிய

நன் மேகம் -என்றது -இந்த்ரன் சொன்ன விபரீதம் செய்கையாலே
முன்பு நன்மை இறே போந்து செய்தன
அவை இறே இப்போது அவன் கோபத்துக்கு அஞ்சி
பெரும் காற்றோடு கூட கல் மலை பொழிந்து நலிகிறது –
அன்றிக்கே
கார் -என்ற பாடமான போது மழையாகக் கடவது –

கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே –
முன்பே தாம் அமுது செய்யக் கருதி
இந்தரனுக்கு இடுகிற சோற்றை இப் பர்வததுக்கு இடுங்கோள்
இது உங்களுக்கு ஆபத்து காலத்துக்கு ரஷிக்கும்-என்று
தான் அருளிச் செய்ததைக் கருதி இறே
இந்த ஆபத்திலே அவ்வரை தன்னையே குடையாக எடுத்தது
இடையர்களையும் இடைச்சிகளையும் ரஷிப்பவன் என்னாதே-காலிகள் காப்பவனே -என்றது –
ரஷித்தவனை அறிவாரைச் சொல்ல வேணும் இறே –

(ஸ்ரீ மத் பாகவதம் சுரபி கோவிந்த பட்டாபிஷேகம் செய்த ஸ்லோகங்கள்
ஶ்ரீப⁴க³வானுவாச
மயா தே(அ)காரி மக⁴வன் மக²ப⁴ங்கோ³(அ)னுக்³ருʼஹ்ணதா .
மத³னுஸ்ம்ருʼதயே நித்யம்ʼ மத்தஸ்யேந்த்³ரஶ்ரியா ப்⁴ருʼஶம் .. 15..

மாமைஶ்வர்யஶ்ரீமதா³ந்தோ⁴ த³ண்ட³பாணிம்ʼ ந பஶ்யதி .
தம்ʼ ப்⁴ரம்ʼஶயாமி ஸம்பத்³ப்⁴யோ யஸ்ய சேச்சா²ம்யனுக்³ரஹம் .. 16..

க³ம்யதாம்ʼ ஶக்ர ப⁴த்³ரம்ʼ வ꞉ க்ரியதாம்ʼ மே(அ)னுஶாஸனம் .
ஸ்தீ²யதாம்ʼ ஸ்வாதி⁴காரேஷு யுக்தைர்வ꞉ ஸ்தம்ப⁴வர்ஜிதை꞉ .. 17..

அதா²ஹ ஸுரபி⁴꞉ க்ருʼஷ்ணமபி⁴வந்த்³ய மனஸ்வினீ .
ஸ்வஸந்தானைருபாமந்த்ர்ய கோ³பரூபிணமீஶ்வரம் .. 18..

ஸுரபி⁴ருவாச
க்ருʼஷ்ண க்ருʼஷ்ண மஹாயோகி³ன் விஶ்வாத்மன் விஶ்வஸம்ப⁴வ .
ப⁴வதா லோகநாதே²ன ஸநாதா² வயமச்யுத .. 19..

த்வம்ʼ ந꞉ பரமகம்ʼ தை³வம்ʼ த்வம்ʼ ந இந்த்³ரோ ஜக³த்பதே .
ப⁴வாய ப⁴வ கோ³விப்ரதே³வானாம்ʼ யே ச ஸாத⁴வ꞉ .. 20..

இந்த்³ரம்ʼ நஸ்த்வாபி⁴ஷேக்ஷ்யாமோ ப்³ரஹ்மணா நோதி³தா வயம் .
அவதீர்ணோ(அ)ஸி விஶ்வாத்மன் பூ⁴மேர்பா⁴ராபனுத்தயே .. 21..

ஶ்ரீஶுக உவாச
ஏவம்ʼ க்ருʼஷ்ணமுபாமந்த்ர்ய ஸுரபி⁴꞉ பயஸா(ஆ)த்ம ந꞉ .
ஜலைராகாஶக³ங்கா³யா ஐராவதகரோத்³த்⁴ருʼதை꞉ .. 22..

இந்த்³ர꞉ ஸுரர்ஷிபி⁴꞉ ஸாகம்ʼ நோதி³தோ தே³வமாத்ருʼபி⁴꞉ .
அப்⁴யஷிஞ்சத தா³ஶார்ஹம்ʼ கோ³விந்த³ இதி சாப்⁴யதா⁴த் .. 23..

ஸகோ³னாஸங்கோ³கோ³ தத்ராக³தாஸ்தும்பு³ருநாரதா³த³யோ
க³ந்த⁴ர்வவித்³யாத⁴ரஸித்³த⁴சாரணா꞉ .
ஜகு³ர்யஶோ லோகமலாபஹம்ʼ ஹரே꞉
ஸுராங்க³னா꞉ ஸன்னந்ருʼதுர்முதா³ன்விதா꞉ .. 24..

தம்ʼ துஷ்டுவுர்தே³வநிகாயகேதவோ
ஹ்யவாகிரம்ʼஶ்சாத்³பு⁴தபுஷ்பவ்ருʼஷ்டிபி⁴꞉ .
லோகா꞉ பராம்ʼ நிர்வ்ருʼதிமாப்னுவம்ʼஸ்த்ரயோ
கா³வஸ்ததா³ கா³மநயன் பயோத்³ருதாம் .. 25..

நானாரஸௌகா⁴꞉ ஸரிதோ வ்ருʼக்ஷா ஆஸன் மது⁴ஸ்ரவா꞉ .
அக்ருʼஷ்டபச்யௌஷத⁴யோ கி³ரயோ(அ)பி³ப்⁴ரது³ன்மணீன் .. 26..

க்ருʼஷ்ணே(அ)பி⁴ஷிக்த ஏதானி ஸத்த்வானி குருநந்த³ன .
நிர்வைராண்யப⁴வம்ʼஸ்தாத க்ரூராண்யபி நிஸர்க³த꞉ .. 27..

இதி கோ³கோ³குலபதிம்ʼ கோ³விந்த³மபி⁴ஷிச்ய ஸ꞉ .
அனுஜ்ஞாதோ யயௌ ஶக்ரோ வ்ருʼதோ தே³வாதி³பி⁴ர்தி³வம் .. 28..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த³ஶமஸ்கந்தே⁴ பூர்வார்தே⁴ இந்த்³ரஸ்துதிர்நாம ஸப்தவிம்ʼஶோ(அ)த்⁴யாய꞉ .. 27..)

ஆள வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே யாடுக யாடுகவே —
ரஷித்த ஆண்மையை யுடையவன் என்னுதல்
என்னை ஆள வேண்டி இருந்தாய் ஆகில் எனக்கு ஒரு கால் ஆடுக என்னுதல்
நான் யுன்னை நியமித்து ஆள வேண்டில் எனக்கு ஒரு கால் ஆடுக –

செங்கீரை –
தமிழர் யுடைய பிள்ளைக் கவி ந்யாயம் ஆகவுமாம் –

———————————————————————————

நம்முடை நாயகனே நான் மறையின் பொருளே
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒரு கால்
தம்மனை யானவனே தரணி தல முழுதும்
தாரகை யின்னுலகம் தடவி யதன்புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுகவாடுகவே –1-5-3-

பதவுரை

நம்முடை–எங்களுக்கு
நாயகனே–நாதனானவனே!
நால் மறையின்–நாலு வேதங்களுடைய
பொருளே–பொருளாயிருப்பவனே!
நாபியுள்–திரு நாபியில் முளைத்திராநின்ற
நல் கமலம்–நல்ல தாமரை மலரிற் பிறந்த
நான்முகனுக்கு–பிரமனுக்கு
ஒருகால்–அவன் வேதத்தைப் பறி கொடுத்துத் திகைத்த காலத்தில்
தம்மனை ஆனவனே–தாய் போலே பரிந்து அருளினவனே!
தரணி தலம் முழுதும்–பூமி யடங்கலும்
தாரகையின் உலகும்–நக்ஷத்ர லோக மடங்கலும்
தடவி–திருவடிகளால் ஸ்பர்சித்து
அதன் புறமும்–அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
விம்ம–பூர்ணமாம்படி
வளர்ந்தவனே–த்ரி விக்ரமனாய் வளர்ந்தவனே!
வேழமும்–குவலயாபீடமென்ற யானையும்
ஏழ் விடையும்–ஏழு ரிஷபங்களும்
விரவிய–(உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த
வேலைதனுள்–ஸமயத்திலே
வென்று–(அவற்றை) ஜயித்து
வருமவனே–வந்தவனே!
அம்ம–ஸ்வாமி யானவனே!
எனக்கு . . . ஆடுக.

நம்முடை நாயகனே –
என்னுடைய ஸ்வாமி யானவனே

நான் மறையின் பொருளே –
இவருக்கு நாயகனான பின்பு இறே நான்மறையின் பொருளாய்த்ததும்-
(பெரியாழ்வாருக்கு நாயகனாய் ஆன பின்பே நாராயண அநு வாகமும் உள்ளதாயிற்று )
அதாவது –
நாராயண அனுவாகம் தலைப் பெறுகை இறே
நான்மறை -அநந்த வேத உப லஷணம்
வேதைஸ்ஸ சர்வைர் அஹமேவ வேத்ய -விறே –

நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒரு கால் தம்மனை யானவனே –
ஒருகால் நற்கமலம் நான் முகனார் தமக்கும் நாவியுள் தம்மனை யானவனே –
ஒரோ காலங்களிலே திரு நாபி கமலத்திலே விகசிதமான தாமரையிலே உத்பவித்த நான்முகனார் தமக்கும்
தாமரைக்கும் ஜன்ம பூமி யானவனே
அன்றிக்கே
மகர ஒற்று னகர ஒற்றாய்-நான்முகன் தன் அனை-என்று
நான் முகனுக்கு அன்னை என்றுமாம் –

தரணி தல முழுதும் தாரகையின்னுலகம் தடவி –
அந்த ப்ரஹ்மாவும் ஆராத்யன் ஆகைக்காக
அந்ய சேஷ பூதர் வர்த்திக்கிற பூதலம் அடங்கலும்
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய பரர் வர்த்திக்கிற நஷத்ர பதம் முதலான உபரிதன லோகங்களையும்
நிலா தென்றல் போலே ஸ்பர்சித்து-

யதன் புறமும்-
அண்ட பித்திக்கு அப் புறமும் –

விம்ம வளர்ந்தவனே –
இரண்டு திருவடிகளாலே தடவி
கார்யம் பலித்த வாறே பூரித்த படி –

வேழமும் ஏழ் விடையும்
குவலயா பீடமும்
ஏழு ருஷபங்களும் –

விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
நெஞ்சு கலந்த காலத்தில் –
வேலை -அளவும் -பொழுதும் -எல்லையும் செயலும்
எல்லை என்றாலும் ஏலை என்றாலும் -ஏகாரம் குறைந்து எல்லையைக் காட்டும்
வேலவை -என்ற பாடமானாலும் எல்லையைக் காட்டிப் பொருள் ஒக்கும் –

வென்று வருமவனே –
வேழத்தை ஒரு காலத்திலும்
ருஷபங்களை ஒரு காலத்திலேயும் வென்றாலும்
பிராதிகூல்யம் துல்யம் ஆகையாலே சேர அருளிச் செய்கிறார் –

சாது ஜனங்களுக்கும்
அபிமத விஷயத்துக்கும்
பிரதிகூல்ய பிரதிபந்தகங்களை வென்றது
தம் பேறு ஆகையாலே –
அம்ம -என்கிறார்

அம்ம வெனக்கொரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே —

அன்றிக்கே
இவன் ஜெயித்து வந்தது
இவனை இன்னும் ஒன்றிலே மூட்டும் என்று பயப்பட்டு
அம்ம -என்கிறார் ஆதல் –

—————————————————————–

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள
வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது யுண்டவனே
கானக வல் விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற வென் கன்றே
தேனுகனும் முரனும் திண் திரள் வென் நரகன்
என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லும்
ஆனை-எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுகவாடுகவே –1-5-4-

பதவுரை

வானவர் தாம்–தேவர்கள்
மகிழ– மகிழும்படியாகவும்
வல் சகடம்–வலியுள்ள சகடாஸுரன்
உருள–உருண்டு உரு மாய்ந்து போம்படி யாகவும்
வஞ்சம்-வஞ்சனையை உடையளான
பேயின்–பூதனையினுடைய
முலை–முலை மேல் தடவிக் கிடந்த
நஞ்சு–விஷத்தை
அமுது உண்டவனே–அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே!
(நஞ்சு அம்ருதமாகும் முஹூர்த்தத்தில் திரு அவதரித்து அமுது செய் தருளினவனே! )
கானகம்–காட்டிலுள்ளதான
வல்–வலிமை பொருந்திய
விளவின்–விளா மரத்தினுடைய
காய்–காய்களானவை
உதிர–உதிரும்படி
கருதி–திருவுள்ளத்திற் கொண்டு
கன்று அது கொண்டு–கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு
எறியும்–(விளவின் மேல்) எறிந்தவனாய்
கரு நிறம்–கறுத்த நிறத்தை யுடையனாய்
என் கன்றே–என்னுடைய கன்றானவனே!
தேனுகனும்–தேனுகாஸுரனும்
முரனும்–முராஸுரனும்
திண் திறல்–திண்ணிய வலிவை யுடையனாய்
வெம்–கொடுமை யுடையனான
நரகன்–நரகாஸுரனும்
என்பவர் தாம்–என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும்
மடிய–மாளும்படியாக
செரு–யுத்தத்திலே
அதிர–மிடுக்கை உடையயனாய்க் கொண்டு
செல்லும்–எழுந்தருளுமவனான
ஆனை–ஆனை போன்ற கண்ணனே!
எனக்கு . . . ஆடுக-.

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமுது யுண்டவனே-
தேவர்கள் பிரியப்ப்படும்படி சகடாசூரனை நிரசித்து
தாய் போலே வஞ்சித்து வந்த பூதனையின் முலையிலே கொடியதான அந்த நஞ்சை யுண்டவனே

அன்றியிலே
நஞ்சமுது -என்ற சமஸ்த பதமான போது
என் பாக்யத்தால் நஞ்சு அமுதாயிற்றே -என்னுதல்
ஜாதமான முஹூர்த்தத்தாலே யாதல் -என்னுதல்

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டெறியும் கருநிற வென் கன்றே –
காட்டிலே கன்று மேய்க்கிற இடத்திலே பெருத்த விளாவாய் காய்ந்து நின்றும்
கன்றாய் கன்றுகளோடு கலந்து மேய்க்கிற அளவிலே
இவை அசுர மயங்களாய் இருக்கும் -என்று திரு உள்ளம் பற்றி
அந்த கன்றான அசுரனை எடுத்து விளாவின் காயும் கொம்பும் உதிர எறிந்து முடிந்து போகையாலே
திரு மேனி புகர் பெற்றபடி –

என் கன்று இறே கன்றை எடுத்து எறிந்தது –

தேனுகனும் முரனும் திண் திரள் வென் நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் ஆனை-
தேனுகன் முதலாக
சமர்த்தரும் கொடியருமாய் இருக்கிற அசுர வர்க்கம் அடைய
நசிக்கும் படி யுத்தத்திலே ஒரு மத்த கஜம் போலே அதிரச் சென்றபடி –

ஆனை நடையிலே அதிர்ச்சி கூடுமோ என்னில் –
நடந்த கடுமையாலே -அதிர -என்கிறது

ஆனை போலே என்னாதே -ஆனை -என்றது முற்றுவமை –

————————————————————————–

மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார்
வைத்தன நெள் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த விணை மருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன்
முன்ன முகத் தணியார் மொய் குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-5-

பதவுரை

வார் குழல்–நீண்ட மயிர்முடியை யுடையராய்
நல் மடவார்–நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்ரீகள்
வைத்தன–சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து–மத்தாலே
அளவும்–அளாவிக் கடைகைக்கு உரிய
தயிரும்–தயிரையும்
நெய்–நெய்யையும்
களவால்–திருட்டு வழியாலே
வாரி–கைகளால் அள்ளி
விழுங்கி–வயிறார உண்டு
உன்னிய–உன்னை நலிய வேணும் என்னும் நினைவை யுடையராய்
ஒருங்கு–ஒருபடிப்பட
ஒத்த–மனம் ஒத்தவர்களாய்
இணை மருதம்–இரட்டை மருத மரமாய்க் கொண்டு
வந்தவரை–வந்து நின்ற அஸுரர்களை
ஊரு கரத்தினொடும்–துடைகளாலும் கைகளாலும் (ஊரு கரம் -வடமொழி சொற்கள் )
உந்திய–இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
வெம்திறவோய்–வெவ்விய வலிவை யுடையவனே!
அத்த–அப்பனே!
முத்து–திரு முத்துக்கள் தோன்றும்படி
இன்–இனிதான
இள முறுவல்–மந்தஹாஸமானது
முற்ற–பூர்ணமாக
வருவதன் முன்–வெளி வருவதற்கு முன்னே
முன்னம் முகத்து–முன் முகத்திலே
அணி ஆர்–அழகு மிகப் பெற்று
மொய்–நெருங்கி யிரா நின்ற
குழல்கள்–திருக் குழல்களானவை
அலைய–தாழ்ந்து அசையும்படி
எனக்கு . . . . ஆடுக-.

வார் குழல் –
தாழ்ந்த குழல் என்னுதல்
ஒப்பம் செய்த குழல் என்னுதல் –

கடைகைக்கு யோக்யமாக பல பாத்ரங்களில் வைத்த தயிரும் நெய்யையும்
க்ருத்ரிமத்தாலே திருக் கைகளால் ஆர வாரி யமுது செய்து –

ஒருங்க ஒத்த -இத்யாதி
இணை -என்று இரண்டாய்
தன்னில் ஒத்து உன்னிய மருதமாய் வந்தவரை
ஒருங்கே சேர மறிந்து விழும்படி
திருத் துடையாலும் திருத் தோள்களாலும் தள்ளின கடிய சாமர்த்தியத்தை யுடையவனே –

முத்து -இத்யாதி
திரு முத்துக்கள் தோன்றும்படி முறுவல் முதிர வருவதற்கு முன்பே
திரு முக மண்டலத்துக்கு மேலாக திரு நெற்றியிலே கவியும்படி
நெருங்கி அழகியதான திருக் குழல்கள் அலைய

அத்த
அப்பனே –

———————————————————————-

காயா மலர் நிறவா கரு முகில் போல் உருவா
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா
துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே
ஆயமறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை
அந்தரமின்றி யழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-6-

பதவுரை

காய மலர்–காயாம் பூப் போன்ற
நிறவா–நிறத்தை யுடையவனே!
கரு முகில் போல்–காள மேகம் போன்ற
உருவா–ரூபத்தை யுடையவனே
கானகம்–காட்டில்
மா மடுவில்–பெரிய மடுவினுள்ளே கிடந்த
காளியன்–காளிய நாகத்தினுடைய
உச்சியிலே–தலையின் மீது
தூய–மனோஹரமான
நடம்–நர்த்தநத்தை
பயிலும்–செய்தருளின
சுந்தர–அழகை யுடையவனே!
என் சிறுவா–எனக்குப் பிள்ளை யானவனே!
துங்கம்–உன்னதமாய்
மதம்–மதத்தை யுடைத்தான
கரியின்–குவலயாபீடமென்னும் யானையினது
கொம்பு–தந்தங்களை
பறித்தவனே–முறித்தருளினவனே!
ஆயம் அறிந்து–(மல்ல யுத்தம்) செய்யும் வகை யறிந்து
பொருவான்–யுத்தம் செய்வதற்காக
எதிர் வந்த–எதிர்த்து வந்த
மல்லை–மல்லர்களை
அந்தரம் இன்றி–(உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி
அழித்து–த்வம்ஸம்செய்து
ஆடிய–(இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த
தாள் இணையாய்–திருவடிகளை யுடையவனே!
ஆய–ஆயனே!
எனக்கு. . . ஆடுக-.

காயா மலர் நிறவா கருமுகில் போல் உருவா –
அப்போது அலர்ந்த செவ்விக் காயம் பூ போலே
இருக்கிற திரு நிறத்தையும்
கழுத்தே கட்டளையாகப் பருகின மேகம் போலே இருக்கிற
திரு மேனியையும் யுடையவனே –

கானக மா மடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும்
யமுனா தீரச் சோலை நடுவில் பெரிய மடுவிலே கிடக்கிற காளியன் பணம் விரித்தாட
அதனுடைய உச்சியிலே பரத சாஸ்த்ரத்திலே சொல்லுகிற படி தூய நடம் என்னுதல்
பரத சாஸ்தரத்துக்கு ஹேதுவாம் என்னுதல் இறே ந்ருத்தத்துக்கு தூய்மை யாவது
இப்படி இருக்கும் ந்ருத்தத்தை இறே பண்ணிற்று –
(பிருந்தாவன பண்டிதன் -தயிர் கடையும் ஓசையால் கற்ற நாட்டிய சாஸ்திரம் )

சுந்தர வென் சிறுவா –
அழகு விளங்கா நிற்பானாய்
என்னுடையவன் -என்று நான் அபிமாநிக்கும்படி
எனக்கு சிறு பிள்ளை யானவனே –
உனக்கு சிறுக்கனான எனக்கு சிறுக்கனானவனே –
(உனக்கு பரதந்த்ரனான அடியேனுக்கு நீ பரதந்த்ரனாகிறாயே )

துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே –
மிக்க மதத்தை யுடைத்தான கரி என்னுதல்
ஒக்கத்தையும் மதத்தையும் யுடைத்தான கரி என்னுதல்
இப்படி இருக்கிற குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன பிடுங்கினவனே –

ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
மல் பொரும் விகல்பங்களை சாதித்து
அறிந்த பிரகாரம் தோன்ற எதிரே பொருவதாக வந்து அணிந்து நின்ற மல்லரை –

அந்தரமின்றி யழித்து-
அவர்கள் அணிந்து நின்றால்
தானும் எதிரே சென்று நின்று பாஷை கூறி பொருகை அன்றிக்கே
இடைவெளி தோன்றாத படி சீக்கிரமாகச் சென்று
மல் பொரும் கிரமத்திலே திருவடிகளாலே கூட்டி
அவர்களுடைய எலும்புகள் முறிந்து வெண் கலப்பை போல் தூக்கி எடுக்கும் படி நெரித்து

ஆயம் -மல்லில் கூறுபாடு (ஸூஷ்மம் )
அந்தரம் -அவகாசம்

அன்றிக்கே
அந்தரமின்றி யாவது -உடலும் உடலும் இடை வெளி அறப் பொருந்தினபடி

அன்றிக்கே
அந்தரமாவது -பொல்லாங்காய்-தனக்கு பொல்லாங்கு இன்றியிலே என்னவுமாம் –

ஆடிய தாள் இணையாய் –
இன்னும் ஆரேனும் வருவார் உண்டோ -என்று
சஞ்சரித்த படி –

ஆய –
உனக்காய எனக்கு-என்னுதல்
ஆயனே -என்னுதல் –

————————————————————-

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
தூய கரும் குழல் நல் தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை ஏழவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிக சோதி புகத்
தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய வென்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக வாடுகவே –1-5-7-

பதவுரை

துப்பு உடை–நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான
ஆயர்கள் தம்–இடையர்களுடைய
சொல்–வார்த்தையை
வழுவாது–தப்பாமல்
ஒரு கால்–ஒரு காலத்திலே
தூய–அழகியதாய்
கரு–கறுத்திரா நின்றுள்ள
குழல்–கூந்தலை யுடையளாய்,
நல் தோகை–நல்ல தோகையை யுடைய
மயில் அனைய–மயில் போன்ற சாயலை யுடையளான
நப்பின்னை தன் திறமா–நப்பின்னைப் பிராட்டிக்காக
நல்–(கொடுமையில்) நன்றான
விடைஏழ்–ரிஷபங்களேழும்
அவிய–முடியும்படியாக
நல்ல திறல் உடைய–நன்றான மிடுக்கை யுடையனாய்
நாதன் ஆனவனே–அவ் விடையர்களுக்கு ஸ்வாமி யானவனே!
தன்–தன்னுடைய
மிகு சோதி–நிரவதிக தேஜோ ரூபமான் பரம பதத்திலே
புக–செல்லும் படியாக
தனி-தனியே
ஒரு-ஒப்பற்ற
தேர்–தேரை
கடலி–கடத்தி
தப்பின–கை தப்பிப் போன
பிள்ளைகளை–வைதிகன் பிள்ளைகளை
தாயொடு கூட்டிய–தாயோடு கூட்டின
என் அப்ப-என் அப்பனே!
எனக்கு. . . . ஆடுக-.

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒரு கால்
துப்பு -மிடுக்கு

தூய கரும் குழல் நல் தோகை மயிலனைய நப்பினை தன் திறமா நல்விடை ஏழவிய
குழலுக்கு தூய்மை யாவது -கிருஷ்ணன் விரும்புகை
நன்றான தோகையை யுடைய மயில் போன்ற
சாயலை யுடைய நப்பின்னை பிராட்டி ஹேதுவாக
இவளோடு சேரலாமாகில்
ஆர் சொல்லிற்றுச் செய்தால் நல்லது என்று இறே

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவ ஒண்ணாது -என்று ஒரு கால விசேஷத்திலே
கொடிய ரிஷபங்கள் ஏழையும் விளக்குப் பிணம் போலே உருக் காண ஒண்ணாத படி
அவித்த சாமர்த்யத்தைக் கண்டு
இடையர்-எங்கள் குல நாதன் -என்று கொண்டாடும்படி
அவர்களுக்கு நாதனும் ஆனவனே

துப்பு -என்று நெஞ்சில் வலி யாகவுமாம்-உடலில் வலி யாகவுமாம்– அதாவது
ருஷபங்களின் வன்மையும் இவனுடைய திரு மேனியில் மென்மையையும்
பார்க்க அறியாத மிடுக்கு இறே –

நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே –
திறலுக்கு நன்மையாவது -பரார்த்தமாகை இறே –

இவ் வளவேயோ –
உபய விபூதிக்கு நாதனான படியை அருளிச் செய்கிறார் –

தப்பின பிள்ளைகளைத் தன மிக சோதி புகத் தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய வென் –
பிரசவசம் அநந்தரம் மாதா எடுப்பதற்கு முன்னம் காணாமல் போன வைதிகர் பிள்ளைகளை
தன்னதாய் இருக்கிற தன்னுடைச் சோதியிலே செல்லத்
தானே
அத்விதீயமான தேரை நடாத்தி
அங்கே சென்று புக்கு –
பிள்ளைகளைக் கொண்டு வந்து
மாதா வானவள் -என் பிள்ளைகள் -என்று உச்சி மோந்து
அணைக்கும் படி அவளோடு கூட்டின இம் மகா உபகாரத்தை
தமக்குச் செய்ததாகக் கொண்டு

அப்ப –
என்னப்பா -என்கிறார் –

——————————————————————–

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற வெனக்கருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ்
சோலை மலைக் கரசே கண்ணபுரத் தமுதே
என் னவலம் களைவாய் ஆடுக செங்கீரை
ஏழுலகம் யுடையாய் யாடுக வாடுகவே –1-5-8-

பதவுரை

மன்னு–(ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ
குறுங்குடியாய்–திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே!
வெள்ளறையாய்–திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ்–மதிளாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு–திருமாலிருஞ்சோலை மலைக்கு
அரசே–அதிபதி யானவனே!
கண்ணபுரத்து–திருக் கண்ண புரத்திலே நிற்கிற
அமுதே–அம்ருதம் போன்றவனே!
என் அவலம்–என் துன்பங்களை
களைவாய்–நீக்குபவனே!
உன்னை–(மகோ உதாரனான ) உன்னை
ஒக்கலையில்–இடுப்பிலே
கொண்டு–எடுத்துக் கொண்டு
தம் இல்–தங்கள் அகங்களிலே
மருவி–சேர்ந்து
உன்னொடு–உன்னோடு
தங்கள்–தங்களுடைய
கருத்து ஆயின செய்து–நினைவுக்குத் தக்கபடி பரிமாறி
வரும்–மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற
கன்னியரும்-இளம் பெண்களும்
மகிழ–(இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும் படியாகவும்
கண்டவர்–(மற்றும்) பார்த்தவர்களுடைய
கண்–கண்களானவை
குளிர–குளிரும் படியாகவும்
கற்றவர்–(கவி சொல்லக்) கற்றவர்கள்
தெற்றி வர–பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படி யாகவும்
பெற்ற–உன்னை மகனாகப் பெற்ற
எனக்கு–என் விஷயத்திலே
அருளி–கிருபை செய்து
செங்கீரை ஆடுக-;
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமி யானவளே!
ஆடுக ஆடுக-.

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
தர்சன மாத்ரத்திலே
திருஷ்டி சித்த அபஹாரம் பண்ண வல்ல உன்னையும் –
இது என்ன அருமை தான் –
இவன் மத்யம அங்கத்திலே இருக்க
தம் தாம் க்ருஹங்கள் அறிந்த படி என் –

உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் –
ஏவம் பிரகாரனான உன்னோடு
தங்கள் நினைவின் படியே பரிமாறி
மீண்டும் மாதாவின் பக்கலிலே கொண்டு வருகைக்கு உள்ள அருமை
தம் தாம் க்ருஹங்களில் கொண்டு போனதிலும் அரிது இறே

கன்னியரும் மகிழக் –
மாதா மகிழும் அளவன்றிக்கே
அபிமதைகள் ஆனவர்களும் உகக்க –
விட்டுப் போகிறவர்கள் மகிழ்கிறது -விட்டுப் போனால் வரும் வ்யசனம் அறியாத மௌக்த்யம் இறே –

கண்டவர் கண் குளிரக் –
போக்கு வரத்தில் பாவ பந்தம் இன்றியே
கண்டவர்களுக்கும் இள நீர் குழம்பு போலே கண் குளிரும் போலே காணும் –

கற்றவர் தெற்றி வரப் –
நாலு சப்தம் தொடுக்க கற்றவர்கள்
பிள்ளையுடைய ஸ்திதி கமான சயநாதிகளை கண்டு
தங்கள் ப்ரீதியாலே பிள்ளைக் கவி பாடுவார் –

பெற்ற வெனக்கருளி-
இது மேலே அன்வயிக்கக் கடவது –

மன்னு குறுங்குடியாய் –
திருக் குருங்குடியிலே நித்ய வாசம் பண்ணுகிறவனே –
நப்லாவயதி சாகர -என்னா நின்றது இறே –
(கடல் வசுதேவர் திருமாளிகையை அழிக்க வில்லை -புராண ஸ்லோகம் )

வெள்ளறையாய் –
இவர் விசேஷித்து மங்களா சாசனம் பண்ணும் தேசம் இறே திரு வெள்ளறை-

மதிள் சூழ் சோலை மலைக்கரசே –
இவர் நிர்பரராம் படி திரு மதிள் யுண்டாவதே-அத்தேசத்துக்கு
திரு மதிளாலே சூழப் பட்ட திருமலையிலே நித்ய வாசம் செய்து
ஈரரசு தவிர்த்து நின்றவனே –

கண்ணபுரத்தமுதே –
மங்களா சாசனம் பண்ண -கற்றவர்கள் தாம் வாழும் கண்ணபுரம் -இறே –பெருமாள் திருமொழி -8-4-

அமுதே என்னவலம் களைவாய் –
ஜ்ஞான சங்கோசம் பிறவாமல் ரஷகத்வத்தை மாறாடி நடத்துகையாலே
அமுதே -என்னவலம் களைவாய் -என்கிறார்

இவருக்கு அவலம் யுண்டாவது
அவன் நியாமகன் ஆகாது ஒழியில் இறே
இவர் அவனை நியமித்து
இவை முதலான திவ்ய தேசங்களிலே நித்ய சந்நிதி பண்ண வேணும் -என்று
நிறுத்தினார் போலே காணும்
(நான்கு திவ்ய தேசங்களிலும் நின்ற திருக்கோலம் இவர் நியமித்தபடியே )

பெற்ற வெனக்கு அருளி –
பெற்றாரும் தாமே போலே காணும் –

ஆடுக செங்கீரை -ஏழுலகம் யுடையாய் யாடுக வாடுகவே —
இவன் இவருக்கு நியாம்யன் ஆனால் இறே ஏழு யுலகும் யுடையவனாவது
உன் உடைமையை நோக்கிக் கொள்ளாய் -என்கிறார்-

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கரசே கண்ணபுரத்தமுதே
என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகம் யுடையாய்
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும்
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற வெனக்கருளியாடுகவாடுகவே —
என்று அந்வயம் –

——————————————————————

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும்
பங்கயம் நல்ல கற்பூரமும் நாறிவரக்
கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைச்
கோமள வெள்ளி முளைப் போல் சில பல்லிலக
நீல நிறத்தழகார் ஐம் படையின் நடுவே
நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ
ஏலு மறைப் பொருளே யாடுக செங்கீரை
ஏழு யுலகம் யுடையாய் யாடுக யாடுகவே –1-5-9-

பதவுரை

மறை–வேதத்தினுடைய
ஏலும்–தகுதியான
பொருளே–அர்த்தமானவனே!
பாலொடு–பாலோடே கூட
நெய்–நெய்யும்
தயிர்–தயிரும்
ஒண் சாந்தொடு–அழகிய சந்தநமும்
செண்பகமும்–செண்பகம் முதலிய மலர்களும்
பங்கயம்–தாமரைப் பூவும்
நல்ல–உத்தமமான
கருப்பூரமும்–பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை
நாறி வர–கலந்து பரிமளிக்க
கோலம்–அழகிய
நறு பவளம்–நற் பவளம் போல்
செம்–அழகியதாய்
துவர்–சிவந்திருக்கிற
வாயின் இடை–திருவதரத்தினுள்ளே
கோமளம்–இளையதான
வெள்ளி முளை போல்–வெள்ளி முளை போலே
சில பல்–சில திரு முத்துக்கள்
இலக–விளங்க
நீலம் நிறத்து–நீல நிறத்தை யுடைத்தாய்
அழகு ஆர்–அழகு நிறைந்திரா நின்ற
ஐம்படையின் நடுவே–பஞ்சாயுதத்தின் நடுவே
நின்–உன்னுடைய
கனி–கொவ்வைக் கனி போன்ற
வாய்–அதரத்தில் ஊறுகின்ற
அமுதம்–அம்ருத ஜலமானது
இற்று முறிந்து விழ–இற்றிற்று விழ
ஆடுக-.

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும் பங்கயம் நல்ல கற்பூரமும் நாறிவரக்
பால் நெய் தயிர் முதலானவைகளை
களவிலும் வெளியிலும் பல கால் அமுத செய்த முட நாற்றமும்
உகந்தார் உகந்த படி சாத்தின நிறம் அழகியதான சாந்து செண்பகம் முதலானவையும்
குணுங்கு உடன் கலந்து
பரிமளிதமாய் எங்கும் பரந்து தோற்ற –

கோல நறும் பவளச் செந்துவர் வாயினிடைச் கோமள வெள்ளி முளைப் போல் சில பல்லிலக –
தர்ச நீயமாய்
பரிமளிதமான செம் பவளம் போலே
துவர்ந்த திருப் பவளத்து இடையிலே வெள்ளி அரும்பினால் போலே
நன்றான திரு முத்துக்கள் ஒளி விட –

நீல நிறத் தழகார் ஐம் படையின் நடுவே நின் கனி வாயமுதம் இற்று முறிந்து விழ –
அழகார்ந்த நீல நிறத் திரு மார்பிலே
ஸ்ரீ பஞ்சாயுதத்தின் நடுவே பக்வ பலம் போலே கனிந்த
உன்னுடைய திருப்பவளத்தில் அமிர்தமானது
இற்று இற்று விழ –

ஏலு மறைப் பொருளே யாடுக செங்கீரை ஏழு யுலகம் யுடையாய் யாடுக யாடுகவே —
மறை ஏலும் பொருளே -வேதைஸ் ஸ -விறே
ஏல்-பொருத்தம்

மறைக்கு பொருந்தின பொருள் யாதொன்று
அது இறே
ஏழு வுலக்குக்கும் ஸ்வாமி யாவது –

———————————————————————

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக
எங்கள் குடிக்கரசே யாடுக செங்கீரை
ஏழு வுலகு முடையாய் யாடுக வாடுகவே –1-5-10-

பதவுரை

எங்கள் குடிக்கு–எங்கள் வம்சத்துக்கு
அரசே–ராஜாவானவனே!
செம் கமலம்–செந்தாமரைப் பூப் போன்ற
கழலில்–திருவடிகளில்
சிறு இதழ் போல்–(அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற
விரலில்–திரு விரல்களில்
சேர் திகழ்–சேர்ந்து விளங்கா நின்ற
ஆழிகளும்–திருவாழி மோதிரங்களும்
கிண் கிணியும்–திருவடி சதங்கைகளும்
அரையில் தங்கிய–அரையில் சாத்தி யிருந்த
பொன் வடமும்–பொன் அரை நாணும்
(பொன்) தாள–பொன்னால் செய்த காம்பையுடைய
நல்–நல்லதான
மாதுளையின் பூவொடு–மாதுளம் பூக் கோவையும்
பொன் மணியும்–(நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும்
மோதிரமும்–திருக்கை மோதிரங்களும்
சிறியும்–(மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும்
மங்கலம்–மங்களாவஹமான
ஐம்படையும்–பஞ்சாயுதமும்-ஐம்படைத் தாலி
தோள் வளையும்–திருத் தோள் வளைகளும்
குழையும்–காதணிகளும்
மகரமும்–மகர குண்டலங்களும்
வாளிகளும்–(திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும்
சுட்டியும்–திரு நெற்றிச் சுட்டியும்
ஒத்து–அமைந்து
இலக–விளங்கும்படி
ஆடுக. . . ஆடுக. –.

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் –
சிவந்த தாமரை போலே இருக்கிற திருவடிகளில்
பூவின் உள்ளிதழ் போலே இருக்கிற திருவிரல்களிலே
சஹஜம் என்னும்படி சேர்ந்து ஒளி விடா நின்ற அங்குளீயங்களும்

கிண்கிணியும் அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதளையின் பூவொடு பொன்மணியும் –
திருவரையில் கிண்கிணியும்
தங்கிய பொன் திரு வரை நாணும்
கோவை யிட்ட தாளை யுடைத்தாய்
நன்றான மாதளையின் பூவோடு கோக்கப் பட்ட பொன் மணிகளும்

மோதிரமும்
திரு விரல்களிலே சாத்தின மோதிரமும் –

கிறியும் –
திருக் கையில் சாத்தி
திரு மஞ்சனத்திலும் கழற்ற ஒண்ணாத சிறுப் பவள வடமாதல்
பிறை முகப் பணி யாதல் –

மங்கல வைம் படையும் தோள் வளையும் –
திரு மார்விலே பிள்ளைக்கு ரஷகமாக சாத்தின ஸ்ரீ பஞ்சாயுதமும்
தோள் வளையும் –

குழையும்-
திருக் காதுப் பணிகளும் –

மகரமும் –
திரு மகரக் குழையும் –

வாளிகளும் –
திருச் செவி மடல் மேலே சாத்தின வாளிகளும்

சுட்டியும் –
திருக் குழலில் சாத்தின சுட்டியும் –

ஒத்திலக –
பிள்ளைக்குத் தகுதியாக பிரகாசிக்க

எங்கள் குடிக்கரசே யாடுக செங்கீரை ஏழு வுலகுமுடையாய் யாடுக வாடுகவே –
திரு ஆய்க் குலத்துக்கு அரசான அளவன்றிக்கே
விசேஷித்து எங்கள் குடிக்கு அரசானவனே –
(யது குலத்துக்கு அரசாக பிறந்தாலும் உகந்து வந்து வளர்ந்தது இங்கே தானே )

————————————————————-

நிகமத்தில்
இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என்னவலம் களைவாய் யாடுக செங்கீரை
ஏழுலகம் யுடையாய் ஆடுகவாடுக வென்று
அன்ன நடை மடவாள் யசோதை யுகந்த பரிசு
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லாருலகில்
எண்டிசையும் புகழ் மிக்கு இன்பம் எய்துவரே –1-5-11-

பதவுரை

அன்னமும்–ஹம்ஸ ரூபியாயும்
மீன் உருவும்–மத்ஸ்ய ரூபியாயும்
ஆள் அரியும்–நர ஸிம்ஹ ரூபியாயும்
குறளும்–வாமந ரூபியாயும்
ஆமையும்–கூர்ம ரூபியாயும்
ஆனவனே–அவதரித்தவனே!
ஆயர்கள்–இடையர்களுக்கு
நாயகனே–தலைவனானவனே!
என் அவலம்–என் துன்பத்தை
களைவாய்–நீக்கினவனே!
செங்கீரை ஆடுக–செங்கீரை ஆட வேணும்
ஏழ் உலகும்–ஸப்த லோகங்களுக்கும்
உடையாய்–ஸ்வாமி யானவனே!
ஆடுக ஆடுக என்று–பலகாலுமாட வேணும் என்று
அன்னம் நடை–ஹம்ஸ கதியை யுடையனாய்
மடவாள்–நற்குணமுடையளான
அசோதை–யசோதைப் பிராட்டியாலே
உகந்த–உகந்த சொல்லப் பட்ட
பரிசு–ப்ரகாரத்தை
ஆன-பொருந்திய
புகழ்–புகழை யுடையரான
புதுவை பட்டன்–பெரியாழ்வார்
உரைத்த–அருளிச் செய்த
இன் இசை–இனிய இசையை யுடைய
தமிழ் மாலைகள்–தமிழ்த் தொடைகளான
இ பத்து–இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
உலகில்–இந்த லோகத்தில்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலும் (பரந்த)
புகழ்–கீர்த்தியையும்
மிகு இன்பமது–மிக்க இன்பத்தையும்
எய்துவர்–பெறுவார்கள்.

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்ஆமையும் ஆனவனே
அருமறை பயந்து-(அன்னமாய் அரு மறை பயந்து -வேத பிரதானமே நோக்கம் )
மலைகளை மீது கொண்டு-
அங்கோர் ஆளரியாய்
அறியாமைக் குறளாய் (நிலம் மாவலி மூவடி )
கிடந்தது துயிலும் ஆமையும் ஆனவனே –
(ஐந்து அவதாரங்களும் ஆழ்வார்கள் அருளிச் செயல் களைக் கொண்டே வியாக்யானம் )

ஆயர்கள் நாயகனே –
இடையருக்கு ஸ்வாமி யுமானவனே –

என்னவலம் களைவாய் யாடுக செங்கீரை –
இவ் வவதார பரம்பரைகளுக்கு என் வருகிறதோ -என்று இருக்கிற என் கிலேசத்தை
உன்னை நோக்கித் தந்து போக்கினவனே-

ஆடுக செங்கீரை என்று பெரு நிருத்த விசேஷம் –

ஏழுலகம் யுடையாய் ஆடுகவாடுக வென்று
ஏழு என்று சொல்லப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமி யானவனே –
ஆடுக ஆடுக -என்னுதல்
ஆடுக -ஆடுக என்று இளையாமைக்காக -அத்தை அமைக்கவுமாம் –

அன்ன நடை மடவாள் யசோதை யுகந்த பரிசு
அன்னம் போலே நடை அழகையும்
பௌயதையும் யுடைய யசோதை
ஆட வேணும் -என்னா
ஆடக் கண்டு உகந்த பிரகாரத்தை –
(உகந்த -சப்த பிரயோகம் -அவன் ஆடி இருக்க வேண்டுமே )

ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ் இன்னிசை மாலைகள் இப் பத்தும் -வல்லார்
யசோதையிலும் விஞ்சிய புகழை யுடையராய்
புதுவைக்கு ஸ்வாமியான ஆழ்வார் அருளிச் செய்த
இனிய இசையோடு கூடின தமிழ் மாலை இப் பத்தும் வல்லார் –

உலகில் எண்டிசையும் புகழ் மிக்கு இன்பம் எய்துவரே —
இந்த தேகத்தோடு
இந்த லோகத்திலே இருக்கச் செய்தேயும்
எட்டுத் திக்கிலும் அடங்காத புகழை யுடையராய்
உரையா வெந்நோய் -திருவாய் -8-3-11-என்கிற துக்கம் தீர்ந்து
பரம ஸூகிகளாயுமாகப் பெறுவார்கள்

இன்பம் அது எய்துவரே -என்கையாலே –
சூழ்ந்து இருந்து ஏத்துகையும் காட்டும் இறே-
புகழை  எய்து அது இன்பம் பெறுவரே என்றபடி –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.