ஸ்ரீ சாரீரக மீமாம்சை –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் – -ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள்–

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -உத்தர மீமாம்சை -சாரீரக மீமாம்சை -நான்கு அத்யாயம் -நான்கு பாதங்கள் ஒவ் ஒன்றிலும் -ஆக 16 அத்யாயங்கள் –
156 அதிகரணங்கள்–545-ஸூ த்தரங்கள் –

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாச அதிகரணம்
முதல் ஸூ த்திரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
அத -கர்ம விசாரம் செய்து முடித்த பின்பு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது-

அத -அதற்குப் பிறகு -சங்கர பாஷ்யம் -சாதன சம்பந்தியின் ஆனந்தர்யமே -அது பொருந்தாது என்று மறுத்து-
ப்ரஹ்ம ஸ்வரூபம் பற்றி மற்றவர் தப்பாக கொள்வதை மறுத்து -லகு மகா பூர்வ பஷம் சித்தாந்தம்-

கர்ம மீமாம்சையில் அர்த்த வாத அதிகரணம் –
ஆம் நாயச்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தா நாம் தஸ்மாத நித்யமுச்யதே  -ஸூத்திரம்
கர்த்தவ்யார்த்தங்களை நியமேந போதிப்பதே வேதங்களின் க்ருத்யம்
அர்த்தவாத ரூபங்கள் -பிராமணியம் சம்பவிக்க மாட்டாது
வாயவ்யம் ச்வேதமால பேத பூதி காம -கர்மம் கர்தவ்யமாக விதிக்கப் பட்டது
அடுத்த வாக்கியம் -வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -வாயு  தேவதையின் பெருமை சொல்லும்
இது அர்த்தவாத வாக்கியம் –
கர்மம் விதிக்க வில்லை -விதி வாக்கியம் இல்லையே
விதி நாது ஏக வாக்யத்வாத் ச்துத்யர்த்தேன விதிநாம ஸ்யு-என்று முன் வாக்யத்துடன் சேர்த்து ஏக வாக்யமாக பிரமாண்யம் -ஜைமினி காட்டி அருளி
கார்யத்தில் அன்வயியாத ப்ரஹ்மம்-சித்த வஸ்துவை ஜிஜ்ஞாச்யமாக
ஸ்திரம் -அஸ்திரம் அறிந்து -அத -அத பதார்த்தம் –

———————————————————————————–

ஜன்மாத் யதிகரணம் –
ஜன்மாத்யச்ய யத -ஸூ த்த்ரம்
ஜந்மாதி -அஸ்ய -யத -மூன்று பதங்கள்
ஜந்மாதி -உத்பத்தி -ஸ்திதி -பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் சேதன மிஸ்ரமான பிரபஞ்சங்கள்
யத -எந்த வஸ்துவின் இடத்தின் நின்றும் ஆகின்றனவோ
அது தான் பர ப்ரஹ்மம்
தைத்ரிய உபநிஷத் ப்ருகு வல்லி-
யதோவா இமானி  பூதானி ஜாயந்தே
யேன ஜாதானி ஜீவநதி
யத் பிரயந்த்ய பி சம்விசந்தி
தத் விஜிஜ்ஞாஸ் ஸ்வ
தத் ப்ரஹ்மேதி-

இங்கே பூர்வ பஷம் –
வ்யாவர்த்தகங்கள் பல -வ்யாவர்த்யமும் பலவாக வேணுமே
தேவ தத்தன் பருத்து கறுத்து யுவாவாய் செந்தாமரைக் கண்ணனாய் இருந்தான் –
அதோ பஷி இருப்பது தேவ தத்தன் கழனி-போலே மூன்றையும் ஜ்ஞாபக லஷணம்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –
அறிந்த தன்மை கொண்டு ப்ரஹ்மம் கட்ட பட முடியாது -பூர்வ பஷம் –

லோ வ்ருஷப
யுவா நீலோ வாமன பங்குச்ச தே
நீல வஸ்த்ர தாரீ ஸ்வேதா வஸ்த்ர தாரீ தேவ தத்த -கால விசேஷத்தால்
உழவன் விதைத்து பயிர் செய்து அறுப்பானே

——————————————————————————-

அடுத்து -சாஸ்திர யோநித்வாத் -அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத் -ஸூத்த்ரம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாக கொண்டபடியால் –
அப்பஷோ வாயு பஷோ-தீர்த்தத்தை குடிப்பவன் -வாயுவை பஷிப்பவன் -சப்த்தார்த்தம்
தீர்த்தத்தை மட்டும் குடிப்பவன் -வாயுவை மட்டுமே பஷிப்பவன்-போல சாஸ்திரம் ஏவ யோனி-பிரமாணம்-

இங்குப் பூர்வ பஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு பிரமாணத்தால் ப்ரஹ்மம் சித்தித்து விட்டால் அங்கெ சாஸ்த்ரம் பிரவர்த்தியாது
பூம் யங்கு ராதிகம்   சகர்த்ருகம் –கார்த்யத்வாத் -கடவத் -அனுமான சரீரம்
வேதாந்த சாஸ்திர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் -செய்யத் தக்கது அன்று-

இங்கு சித்தாந்தம்
விஸ்வா மித்ரர் -தவ வலிமையால் சிருஷ்டி -அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகையால் சாஸ்திரமே பிரபல பிரமாணம்-

——————————————————————————————

நான்காவது -அதிகரணம்
சமன்வயாதி கரணம்-
தத் து சமன்வயாத் -ஸூத்த்ரம்
தத் -கீழ் சொன்ன சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் -புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியால்-

இங்கு பூர்வ பஷம்
தெரிந்து கொள்ள வேணும் -என்கிற விருப்பம் உண்டாகாத வஸ்துவை சாஸ்திரம் பிரவர்த்தனம் பண்ணாதே
இஷ்ட பிராப்தி -யாகம் போல்வன
அநிஷ்ட பரிஹாரம் -மாம்ச பஷணம் நிவ்ருத்தி
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமல் -பிரயோஜனத்வம் கூடாதே-

இங்கு சித்தாந்தம்
இதுவே ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம்
பரமானந்த ஹேது பூதம் -பரமானந்த சந்தோஹஸ்வரூபம்-

—————————————————————————————-

இந்த நான்கும் சதுஸ் ஸூ த்ரி -சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரங்கள் –
சோமாசி ஆண்டான் -முதல் ஸூத்ரம் சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரம் என்பர்

——————————————————————————————-

அடுத்து ஈஷத் அதிகரணம் -இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு சங்கல்ப விசேஷம் -முக்கியம்
அதேனமான பிரதானமாக இருக்க முடியாதே
ஜீவன் ஜகத் காரண வஸ்து இல்லை காட்ட -ஆனந்த மய அதிகரணம்
ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
ஆனந்தமய
அந்ய-சப்தம் மேல் உள்ள ஸூத்ரம் இருந்து வருவித்துக் கொண்டு
அப்யாசாத் -அளவு கடந்த
ஆனந்த வல்லி -துக்க மிஸ்ரமான ஜீவாத்மாவுக்கு சேராதே
தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
ச்ரோத்ரியச்ய சாகா மஹதச்ய-முக்த ஆத்மாவை சொல்லி -அகாமஹத -விஷய விரக்தன்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் செய்து ப்ரஹ்ம உபாசனம் மூலம் பெற்ற -சோபாதிகம் நிருபாதிகம் இல்லை
ச ஏகோப்ரஹ்மண ஆனந்த -இயற்கையான -ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கே-

கோஹ்யவான்யாத் க பிராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ் யேவா நந்தயாதி –
கோ வா அன்யாத்-கீழ் சொன்ன ஆகாசாதி -எந்த ஜந்து தான் ப்ராக்ருத மான ஆனந்தன் அடைய முடியும்
கோ வா பிராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
இப்படி அந்வய முகேன சொன்னதையே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய –
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் அடைகிறான்
அயனாய -அந்த மோஷ ஆனந்தம் பெற
அந்ய பந்தா ந வித்யதே -அந்த பரம புருஷனை தவிர வேறு உபாயம் இல்லை
வ்யதிரேக முகேன  சொல்லிற்று
ச யச்சாயாம் புருஷே யச்சா சா யாதித்யே  ச ஏக -அவனே ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷன்-

இதன் மேல் பூர்வ பஷம்
ஆனந்த வல்லியில் -தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பத்வத்வம் சொல்லி
அகர்ம வச்யனுக்கு சம்பாவிகம் இல்லையே

இங்கு சித்தாந்தம்
சரீரமாக கொண்டவன் -வேத வாக்கியம் உண்டே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கைதான குணம் அவன் ஒருவனுக்கே
தயை குணத்தால் அடியார் துக்கம் கண்டு துக்கிப்பான்
இரண்டாவது ஸூத்த்ரம்
விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோக –

—————————————————————————-

இரண்டாம் அத்யாயம் -சம்ருத்ய அத்யாயம்-
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத் –
கபில -சாங்க்ய மத நிரசனம் -மனு பராசர மக ரிஷிகள் வாக்யங்கள் விரோதிக்கும்

———————————————————————————-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் -க்ருத்ஸ ந ப்ரசக்தி-அதிகரணம்
பூர்வபஷ ஸூத்த்ரம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வாதத்தில் ஜகத்தாக பரிணமிக்க  -ப்ரஹ்மமமோ நிர் வயவம் என்பதால்
ஏக தேச ந பரிணமிக்கிறது என்னும் பொது நிரவயவம் ஸ்ருதி விரோதிக்கும்
ப்ரஹ்மம் முழுவதுமே கார்யப் பொருளாக பரிணமிக்க வேண்டி வரும்
கீழே உபசம்ஹார அதிகரணத்தில் ஷீர திருஷ்டாந்தம் -பொருந்தாது -ஷீரம் சாவயவம் ஆகையாலே  –
மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து சப்தம் பூர்வபஷ வ்யாவர்த்திப்பிக்க வந்தது
ப்ரஹ்மம் நிரவயவம் -கார்யப் பொருளாக பரிணமிக்கும் -இரண்டும் ஸ்ருதி சித்தம்
லௌகிக பதார்த்த திருஷ்டியினால் கொள்ள முடியாது
சப்த பிரமாணம் ஒன்றாலே அறிய முடியும் -அநிர்வச நீயமான சக்தி விசேஷத்தை பொறுத்தது
பர ப்ரஹ்மத்துக்கு ஜகத் ஆத்மநா பரிணாமம் போலே பிரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி சித்தம்-

—————————————————————————————

அடுத்த அதிகரணம் -பிரயோஜனவத்வ அதிகரணம் –
அவாப்த சமஸ்த காமன் –
இதில் முதல் ஸூத்ரம் -பூர்வபஷம்-( ஸ்ருஷ்டே ) ந பிரயோஜனவத்வாத்
மேல் சித்தாந்த ஸூத்திரம் -லோகவத் து லீலா கைவல்யம் –
மன் பல்லுயிர்களுமாய் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு யுடையான் -நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி காண்பதால் பஷபாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க –
சங்கை தீர -அடுத்த ஸூத்திரம்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் ததா ஹி தர்சயதி –
கருமங்களுக்குத் தக்கபடி -சிருஷ்டி-
இதன் மேலும் தோன்றும் சங்கைக்கு அடுத்த ஸூத்த்ரம்

——————————————————————————–

இரண்டாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
சர்வதா அநுபபத்தி அதிகரணம் –
சர்வ ஸூந்யவாதிகள் வாதம் நிரசிக்கப்படுகிறது
உத்பத்தி பாவத்தில் இருந்தா அபாவத்தில் இருந்தா
சர்வம் ஸூந்யம் என்பவர்கள் இந்த அர்த்தம் சாதிக்கும் பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பிரமாண சத்பாவத்தை இசைந்த போதே சர்வ ஸூந்ய  வாதம் தொலையுமே
அஸ்தி நாஸ்தி வாதங்கள் இங்கு இல்லை இப்பொழுது இல்லை
தேச காலங்களை சொல்லவே
சர்வதா -சர்வ பிரகாரத்தாலும்
அநுபபத்தே -சர்வ ஸூந்ய வாதம் உப பன்னம் ஆகாமையினாலே
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடைமையின்
உளன் இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே-பாசுரம் ஆறாயிரப்படி  மொழி பெயர்ப்பே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்து உள்ளார்

———————————————————————————————

முதல் அத்யாயத்தினால்
ஜகஜ் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே என்றும்
நான்முகனாதிகள் லீலைக்காக சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள்
அவன் நித்ய விபூதியில் ஸ்வ இச்சையினால் திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிஹரித்து
நித்ய முக்தர்களினால் அனுபவிக்கப் பட்டு கொண்டு இரா நின்றான் என்கிற முகத்தால்
ஸ்வரூப ஸ்வ பாதிகள் நிரூபிக்கப் பட்டன-

இனி இரண்டாம் அத்யாயத்தில்
பரபஷ பிரதிஷேப பூர்வகமாக சாதித்து கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்று சாதிக்கப் பட்டது-

ஆக இரண்டாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
அடுத்து மிகுந்த ருசி உண்டாக்கி இதர விஷய வைராக்கியம் விளைவிக்க
பின்னிரண்டு அத்யாயங்கள்
ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலே அந்த அர்த்தம் சாதிக்கப் பட்டு விட்டதே
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் ஏற்படும் வைராக்கியம் கர்ம விசாரத்தினால் விளையாதே
அதனால் புன பிரயத்னம்
மூன்றாம் அத்யாயம் -கர்ம பலன்கள் நச்வரம் -நரக துல்யம் -பரமபுருஷ  பிராப்திக்கு உபாயம் தெரிவித்து
நான்காம் அத்யாயம் -உபாய பலமான உபேயத்தை தெரிவிக்கும் –

—————————————————————————————————–

மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -உபய லிங்க அதிகரணம்
ஜீவாத்மா -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான
நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு
சுக துக்கங்களை அனுபவிக்கிறான் -என்று கீழே சொல்லி –
அப்படிப்பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தம் பட்டு இருந்தாலும் சுக துக்கங்கள் ஒட்டாமல்
கல்யாணக் குணக் கடலாய் இருப்பவன் என்று காட்ட இந்த அதிகரணம்
ந ஸ்தான தோபி பரஸ்யோபயலிங்கம் சர்வத்ர ஹி -தலையான ஸூத்த்ரம்
பரஸ்ய -பரம புருஷனுக்கு
அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது
இதுக்கு ஹேது என் என்னில்
சர்வத்ர ஹி உபய லிங்கம் -பரம புருஷன் சர்வ ஸ்ருதி ச்ம்ர்திகளிலும்
ஹேய ப்ரத்ய நீகத்வம்
கல்யாணை கதா நத்வம்
என்கிற இரண்டு அசாதாராண தர்மங்களோடு கூடியவன்
அவன் அபஹத பாப்மா   -ஆனந்தமய அதிகரணத்தில் பார்த்தோம்
அகர்மவச்யன் முதல் அத்யாயம் இரண்டாம் பாதம்
அங்கு பூர்வ பஷ சரீரம் வேறு
இவ்விடத்தில் பூர்வ பஷ சரீரம் வேறு -சூஷ்ம இஷிகையால் உணர வேணும்

———————————————————————————————

மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
சர்வ அன்ன அநு மதி அதிகரணம் –
முந்தின அதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் அவஸ்யகம் என்று சொல்லி
இதில் போஜன நியமம் ஆகிற நியம சம விசேஷம் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு உண்டா -விசாரம்
சர்வ அன்ன அநு மதிச்ச ப்ரணாத்யயே தத் தர்சநாத் -ஸூத்திரம்-

ப்ரஹ்ம வித்யா அதிகாரியின் பிராண ஆபத்து விஷயமாகையாலே -எனபது ஸூ த்ரார்த்தம்
இங்கு பூர்வ பஷம் -ப்ர்ஹ்ம வித்யா நிஷ்டனுக்கு நிஷித்த ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் -உஷச்தன் என்பான்-
யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை பிராண ஆபத் தசையில்-உண்டு உயர் தரிக்கப் பெற்றான்
பிறகு அந்த யானைப் பாகன் கொடுத்த பானம் பருக வில்லை-ஆகார சுத்தி அவஸ்யகம்-

————————————————————————————

நான்காம், அத்யாயம்
மூன்றாம் அத்யாயம் உபாசன பரமாக பெரும்பாலும் செல்ல அதன் பலனை நிரூபிக்க நாலாம் அத்யாயம் அவதாரம் –
இதில் முதல் அதிகரணம் -ஆவ்ருத்த்ய அதிகரணம்
ஆவ்ருத்தி ரசக்ருதுபதேசாத் -முதல் ஸூ த்த்ரம்-

பூர்வ பஷம் -ஸ்வர்க்காதி-சக்ருத்-ஒரே தடவை போலே ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -பகவத் சிந்தன ரூபமான வேதனமும் சக்ருத்
மேலே சித்தாந்தம்

தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
வேதனம்
உபாசனம்
த்ருவா ஸ்ம்ருதி
சாஷாத் காரம்
பக்தி–பர்யாய சப்த்தங்கள் –
பக்த்யா த்வ அந்யயயா சக்யா அஹமேவம் விதோர்ஜூனா-ஸ்ரீ கீதா ஸ்லோஹம் போலே
தைலதாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் என்று அறுதி இட்டு –
மேலே ஆறாவதாக -ஆப்ரயணாதி கரணம்
ஆப்ரயணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸூ த்திரம்
ப்ரஹ்ம உபாசனம் -மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் -என்கிறது –

————————————————————————————————

இனி ததிகமாதி கரணம்
தததிகம உத்தர பூர்வாகயோ ரச் லேஷ விநாசௌ தத் வ்யபதேசாத் -ஸூத்திரம்
பூர்வ பாபங்களுக்கு விநாசமமும் -நசிக்கும்
உத்தர   பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும் -தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாது
இங்கு பூர்வபஷம் –
நாபுக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அனுபவித்தே கருமம் தொலைக்க வேணும்
சித்தாந்தம்
இது சாமான்ய விஷயம்
நெருப்பு சுடும்
தண்ணீர் நெருப்பை அணைக்கும் இரண்டும் உண்மையே-ப்ரஹ்ம வித்யை சக்தியால் கரும சக்தி பிரதிஹதமாய் விடும் –

—————————————————————————————————

நிசாதி கரணம்
நிசி மரணம் இரவில் மரணம் -அதம கதிக்கே ஹேது பூர்வ பஷம்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் யுள்ளவரைக்கும் மட்டுமே
அதனால் பாதகம் ஆகாது
திவா ச சுக்ல பஷச் ச -கீழே காட்டின வசனம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு சேராது

இனி தஷிணாயன அதி கரணம் –
ஒரே ஸூத்திரம்
தஷிணாயன மரணம் – சந்திர பிராப்தி பெற்று புநரா வ்ருத்தியும்
பீஷ்மர் ப்ரஹ்ம வித்து போல்வார் உத்தாராயண ப்ரதீஷை பண்ணினதாக சொல்லி
இதுவும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இல்லை –
ஆக நிசி மரணமோ கிருஷ்ண பஷ மரணமோ தஷிணாயன மரணமோ பரம புருஷார்த்த பிராப்தியில் குறை இல்லை –

———————————————————————————————–

முடிவான அதிகரணம்
ஜகத் வியாபார வர்ஜாதி கரணம்
முக்த பிரஜைக்கு ஜகத் சிருஷ்டிக்கு அதிகாரம் இல்லை
பரமபதத்தில் நின்றும் மீட்சி இல்லை -இரண்டையும் சொல்லும்
பூர்வ பஷம் முக்தனுக்கு பரம புருஷன் சாம்யம் கிட்டும்
சத்யசங்கல்பத்வமும் கிட்டும்
சர்வ லோக சஞ்சாரம் -காமாந்நித்வமும் -காம ரூபித்வமும் –
லோகங்கள் அவனுக்கு ஆதீனம்
மேல் சித்தாந்தம்
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -அசாதாரண தர்மம் லஷணம் ப்ரஹ்மத்துக்கு சொல்லி –
வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல்
பூர்த்தியாக அனுபவிப்பதே பலன்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் செய்யும் பொழுது ஆனந்த சாம்யம் இந்த ஸ்ருதியினால் சித்திக்கும்
ச ஸ்வராட் பவதி -என்பதும் கர்ம வஸ்யம்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி இத்யாதி மூலம் முக்தன் சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம்
பரம புருஷன் அதீநம் –

ஆனால் திரும்பி அவன் அனுப்புவானோ என்னில்
அநா வ்ருத்திச் சப்தாத் அநா வ்ருத்திச் சப்தாத் -சரம ஸூ த்திரம்
சாஸ்த்ரத்தை காட்டி ஸ்தாபித்தார் ஸூ த்த்ரகாரர்
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆனாலும்0
உந்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன் –
சத்யசங்கல்ப்பன் என்ற பேர் பெற்றவன்
கிருஷி பண்ணி பெற்ற சேத்னனை  விடுவானோ
பரமபுருஷம் ஜ்ஞாநினம்  லப்த்வா
யானொட்டி  என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று  என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும்
காட்கரையப்பன் கடியனே -என்றும்
ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளைக்   கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்-

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: