தனியன் –
சக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-
——————————————————————————————————-
நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா ஸூ ப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–1
யஸ்யா-எந்த பிராட்டியினுடைய
நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்ய ச்த்ரயீகண்டே யாந்தி மங்கள ஸூ த்திரம் -போலே
நிஸ் சமோத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-
காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –
கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூ க்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூ கதிகள் –
ஸூ ப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூ கதிகள்
சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாமபாங்கை–
இத்தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்
————————————————————————————————
மாதா சேத்துலசி பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா யதி
ஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி சரச ச்தன்யேன சம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி –2-
மாதா சேத்துலசி-
த்வ மாதா துளசி –
மே ஸூ தா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-
பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான் –
ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –
ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –
ஜ்ஞாதார-
தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள் –
ஸ்தனயாஸ்-
உமது மக்கள்
வாய் சொல் அமுதத்தையே தாய்ப்பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்
தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –
ச்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –
சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –
கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ யானதும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீ யை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-
—————————————————————————————————-
கல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–3-
கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்
ஹரிணாஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்
தன காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட
அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –
ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –
ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப்பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப்பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –
ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –
உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப் பாடுவோம்– தொழுது வணங்குவோம்-
—————————————————————————————————-
ஆகூ தஸ்ய பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ
ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத சமேதாத்ம விபதாம் கோதாமுதாராம் ஸ்துமே –4-
ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்
பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –
ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சை
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூ க ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –
சமேதாத்ம விபதாம் கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-
———————————————————————————————-
இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம் –
ச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –
மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம் –
——————————————————————————————–
ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –
அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம்
விரதந்நியதம் விபூதி மிஷ்டாம் ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் –1-
தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர்
விஷயீ பவ ஸ்ரீ ராமானுஜ –
——————————————————————————————–
புவி நோவி ம்தான் த்வதீய ஸூ க்தி குலிசீ பூய குத்ருஷ்டி பிச்சமேதான்
சகலீகுருதே விபச்சிதீட்யா ஜய ராமானுஜ சேஷ சைல ஸ்ருங்கே –2-
தேவரீர் ஸ்ரீ ஸூ க்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற எதிரிகளை பொடி படுத்த –
வேதாந்த சங்க்ரஹம் -தேவரீர் அருளிச் செய்ததால் –
தேவரீர் திரு வேங்கட மா மலை உச்சியில் பல்லாண்டு விஜயீயாக விளங்க வேணும்
விஜயீபவ ஸ்ரீ ராமானுஜ-
——————————————————————————————–
ஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்
க்ருபயா லோக்ய வி ஸூ த்தயாஹி புத்த்யா
அக்ருதாஸ் ச்வத ஏவஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமானுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் –3
ஸ்ருதி ஸ்ம்ருதி ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளி
ஸ்ரீ ஹஸ்தி கிரியில் நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமானுஜ –
———————————————————————————————
ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீ க்ருஸா நோ
ஜய சம்ஸ்ரித சிந்து சீத பாநோ
ஜய ராமானுஜ யாதவாத்ரி ஸ்ருங்கே –4
பாஹ்யர்கள் மதத்தை எரித்து ஒழித்து அருளி
அடியார்கள் மனங்களை குளிரச் செய்து அருளி
யாதவாத்ரியில் நித்ய ஸ்ரீ யை வளரச் செய்து அருள்
ஜய விஜயீ பவ ராமானுஜ –
———————————————————————————————–
ராமானுஜ சதுஸ்லோகீம் யப்படேன் நியதஸ் சதா
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ –
பல ஸ்ருதி
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –
————————————————————————————————
ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply