ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-9-

மேன்மை தோன்ற வர வேணும் என்கிறார் –

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயற்காகித் தரணியில்
வேந்தர்களுட்கா விசயன் மணித் திண் தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் –1-9-4-

நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயற்காகித்-
நாந்தகம் என்று -திருக் குற்றுடைய வாள்-சார்ங்க வில் -என்னுமா போல் –
நாந்தகம் -அசாதாராண வாள்
பூ வேந்தியவன் போலே
நம்பி சரண் -சௌர்யாதி குண பூர்த்தியை யுடையவனே ரஷிக்க வேணும் என்று பிரபதனம் செய்த அர்ஜுன பஷபாதியாய் –

தரணியில் வேந்தர்களுட்கா –
பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாம் துர்யோதன பஷபாதிகளாய் நின்றவர்கள் உளைந்திடும்படியாக –
விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்
அந்த அர்ஜுனனுடைய அழகியதாய் திண்ணியதான தேரை ஓட்டம் கண்ட அளவிலே
பிரதிபஷத்தை  நிரஸ்தமாக்கினவன்-

உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் –
அது தன்னாலே இறே  உம்பர் கோன் ஆனதும்-

———————————————————————————

வாமன வேஷம் தோன்ற வர வேணும் என்கிறார் –

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல பெய்த கரும் தழைக் காவின் கீழ்ப்
பண் பல பாடிப் பல்லாண்டிசைப்பப் பண்டு
மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான் –1-9-5-

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்
திருவரையில் ஜாதி உசிதமாக வெண்கலப் பத்திரத்தை சாத்தி  இறே விளையாடுவது –

கண் பல பெய்த கரும் தழைக் காவின் கீழ்ப் –
திரு முடியிலே பீலிகளைச் சாத்தி
கரும் தழை-பீலிப் பிச்சம் –
அன்றிக்கே
பீலிக் கண்ணும் ஸ்நேகிகளாயும் இருப்பார் கண்களும் இறே சாத்துவது –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி இறே -அயோத் -3-29-
கண் -பீலிக் கண்
அன்றிக்கே
கரும் தழைக்கா -என்று சோலையிலே கூட்டவுமாம்
அப்போது
பெரிய தழைக்கா -என்னுதல்
கரிய தழைக்கா -என்னுதல்
இப்படி இருக்கிற காவின் கீழே விளையாடி-

பண் பல பாடிப் -பல்லாண்டிசைப்ப –
பண்கள் பலகாலும் மேல் எடுத்த திருவடிகளுக்கு திருப்பல்லாண்டு பாடிச் சாத்த –
சூட்டினேன் சொல் மாலை -முதல் திருவந்தாதி -என்னுமா போலே –
சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ்தை-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-33
திசை வாழி எழ -திருவாய்மொழி -7-4-1-

பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் -வாமனன் என்னைப் புறம் புல்குவான்-
மகாபலி பக்கலிலே வாமன ரூபியாய் அபேஷித்த காலத்திலே
பதினாலு லோகங்களையும் அளந்து கொண்டவன் –
த்ரிவிக்ரம அபதானம் தோன்றா நிற்கச் செய்தேயும் வாமன வேஷத்திலே இறே திரு வுள்ளம் உற்று  இருந்தது  –

——————————————————————————-

வாமனாவதாரம் கண்டு இருக்கச் செய்தேயும்
பாரளந்தான் என்று திரிவிக்கிரம அவதாரம் பின் நாட்டின படி –

சத்திரமேந்தித் தனி யொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற வொருவனைக்
கத்திரிவர் காணக்  காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான் -1-9-6-

சத்திரமேந்தித் தனி யொரு மாணியாய் –
மௌஜ்ஞியும் கிருஷ்ணாஜிநமும் திருக் கையிலே பிடித்த சிறு குடையும்
அத்விதீயமான வாமன வேஷத்தையும் கொண்டு இறே
மகா பலியுடைய யஞ்ஞவாடத்திலே சென்று புக்கது –

உத்தர வேதியில் நின்ற வொருவனைக் கத்திரிவர் காணக்  காணி முற்றும் கொண்ட –
அத்விதீயமான ஔதார்ய குணத்தை யுடையனாய்
உத்தர வேதியில் நின்ற மகா பலியும் ராஜாக்கள் பலரும் காண தனக்கு ஸ்வம்மான பூமியை அபேஷித்து நின்றான் இறே –
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றவன் -திருவாய் -4-5-10-

பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தான் என் புறம் புல்குவான் –
நன்றான வடிவை யுடையவன் –
புலன் கொள் மாணாய் இறே -திருவாய் -1-8-6- நிலம் கொண்டது
திருக்கையிலே உதகம் விழுந்த போதே
அவன் திரு உள்ளத்திலே கோட்பாடு அறிந்து அளப்பதற்கு முன்னே
இனி காணி முற்றும் கொண்டான் அன்றோ -என்று உகக்கிறார் –
இவ் உகப்பு விளைநீராக விளைந்து இறே பாரளந்தது-
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றோம் என்று போந்தான் –
மகாபலி ஔதார்யம் பெற்றுப் போனான்
இதுக்கு உகப்பார் இவர் ஒருத்தரும் இறே  –

————————————————————————-

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் –1-9-7-

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் –
திரு ஆய்ப்பாடி எல்லாம் நவநீத சௌர்ய ஷோபமானவாறே
யசோதை -சிறு பிள்ளையைக் களவு சொல்லாதே உம்தாம் பண்டங்களை உரிகளிலே வையும்கோள்-
இவனுக்கு எட்டாத படி -என்ன –
அவர்களும் அப்படியே செய்து
அனுமானத்தாலே உரலை இட்டு ஏறவும் கூடும் -என்று அவற்றை மறைய வைக்க –
நிரபிமாநமாய் ஏறப் பெறாமல் சுற்றும் விரிந்து பொத்த உரல் என்று
இவன் பாக்யத்தாலே தேடிக் கொண்டு வாரா நிற்கச் செய்தே அது கையிலே தட்ட
அத்தை எடுத்து உறியின் கீழே கவிழ விட்டு –
அதன் மேலே திருவடிகளை வைத்து ஏறி –
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் –

மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்-
திரு வயிறு நிறைய அமுது செய்து
திரு உள்ளம் பிரசன்னமான
என்னுடைய ஸ்வாமி-

ஆழியான் என்னைப் புறம் புல்குவான் —
க்ருத்ரிமத்தில் அவகாஹா நத்தைச் சொல்லுதல்
திரு வாழியை யுடையவன் என்னுதல் –

பொத்த -என்று கிட்டுதல் -பொருந்துதல் -என்னுமாம் –
இத்தால் ஸூஷியுடையருமாய் -இதர அபிமானம் அற்றவர்களுக்கு
அபேஷா நிரபேஷமாக திருவடிகள் சேரும் என்று காட்டுகிறது
பொத்த யுரலால் -இதர அபிமானம் சிறிது கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போகய பூதராவார் என்கிறது-

தித்தித்த பாலும் –
காய்ச்சி உறி ஏற்றி உறைதல் வாய்ப்பாலும் அவனுக்கு போக்யமாய் இருக்கும் இறே-
இத்தால் -ஒருவனை நாம் திருத்தி ஆந்தராளிகன் ஆக்கினோம் என்னும் அபிமானம் கிடந்தாலும்
ஸ்வ அபிமானம் அற்றவர்கள் அவனுக்கு போக்யர் ஆவார்கள் இறே
நாழிவளோ-திரு விருத்தம் -71-என்றும்
செய்த சூழ்ச்சியை யாருக்கு உரைக்கேன் -பெரிய திருமொழி -3-7-4-என்றும்
இவ் வபிமானம் இறே அவனுக்கு அங்கீகார ஹேது
ஸ்வ அபிமானம் அற்ற அளவன்றிக்கே -வைகுண்ட பிரிய தர்சிகளாய் இருப்பாரை -வெண்ணெய்-என்கிறது –
எல்லா உலகுமோர் துற்றாற்றா-திருவாய் -2-8-8-என்கிற திரு வயிறு நிறைவதும்
திரு உள்ளம் பிரசன்னம் ஆவதும் இவ்வதிகாரம் கண்டால் இறே –
சதுர்த்தியில் ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தமான பார தந்த்ர்யம் தோன்றா நிற்கச் செய்தேயும்
அந்ய சேஷ பூதரை இறே சேஷம் என்கிறது –
சேஷ பூதனை -முமுஷூ வானவனை இறே வெண்ணெய் என்னாலாவது –
தித்தித்தபால் -என்கிறது
ஸ்வ அபிமானமும் இதர அபிமானமும் அற்ற பிரபன்னரை இறே –
பொத்த உரல் என்றது -பிரபன்னன் தன்னை -அசித் என்று இறே இருப்பது –

———————————————————————–

மங்களா சாசன பரராய் இருப்பார் எல்லாரும் கண்டு களிக்கும் படி வர வேணும் -என்கிறார் –

மூத்தவை காண முது மணல் குன்றேறிக்
கூத்து வந்தாடிக் குழலால் இசைபாடி
வாய்த்த மறையோர் வணங்க விமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் –1-9-8-

மூத்தவை காண முது மணல் குன்றேறிக் கூத்து வந்தாடிக்-
ஜாதி உசிதமான அறிவிலே மூத்தவை –
இளையவர்களை கிருஷ்ணன் முகத்தில் விழிக்க ஒண்ணாத படி நிலவறை கற்பிக்கையாலே
அவை -என்று அநாதரிக்கிறது-
அவர்களையும் சித்த அபஹாரம் பண்ணும்படி இறே இடமுடைத்தாய் பெரிதான மணல் குன்றிலே ஏறிற்று –
அவை -என்று திரளாகவுமாம்
மணல் குன்றிலே வந்தேறி ஆடி என்னுதல்
உவந்தேறி ஆடி என்னுதல்
உவந்தேறி ஆடி -என்றது -இளையவர்கள் நிலவறை திறந்து வரக் காண்கையாலே-
கூத்து -என்றால் எல்லாரும் வரலாம் இறே –
குழலால் இசைபாடி-
குழலில் த்வனி வாய்ப்பு இறே மூத்தவை அறிவது
குழல் மீது வைத்தூதும் நல் விரகுகளும்
தாழ்த்த மாத்ரத்துக்கு அனுதபித்து அவர்களை காலும் தலையும் பொருத்தி ஷமை கொள்ளுவதும் இளையவர்கள் அறியும் இத்தனை இறே –

வாய்த்த மறையோர் வணங்க விமையவர் ஏத்த –
மங்களா சாசன பரராய் இளையவர்கள் -திருவடிகளில் மார்த்வம் அறிந்து -வாழி-வாழி -என்று அமைக்க-
நிலவறை களிலே மறைந்து கிடைக்கையாலே -மறையவர் -என்னலாம் இறே
ஆட்டிலும் பாட்டிலும் சித்தபஹ்ருதராய் -அநிமிஷராய்   – பார்த்துக் கொண்டு இருந்து அக்ரமாக மூத்தவை ஸ்துதிக்க –
அன்றிக்கே
ஸ்ரீ கிருஷ்ண கிரீடை காண்கைக்கு வந்து மறைந்து நிற்க யோக்யரான இங்குத்தை தேவர்களும்
வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான் ருசிகளும் என்னவுமாம் –
இத்தால் –
அவதரித்து ஜாதி உசிதமாக பரிக்ரஹித்த வேஷத்துக்கு ஈடாக நடித்து
திருக் குழலாலேயும் பாடினவை எல்லாம் இங்குள்ள பிராணிகளுக்கும்
அங்குண்டான ஸூரிகளுக்கும் உத்தேச்யம் -என்கிறது –
மூத்தவர்கள் என்று -ஜ்ஞாத்ருத்வ பூர்த்தியாலே அங்குள்ளவர்
முது மணல் என்கையாலே –
இந்த்ரியங்களின் வழி ஒழுகாமல் தான் அவற்றை வசமாக்கி நெல் கொண்டமை தோற்றுகிறது-

வாய்த்த மறையோர் வணங்க -இமையவர்   ஏத்த -குழலால் இசை பாடி -என்றத்தாலே
ஆச்சார்ய வசன பாரதந்த்ர்யமே வாய்த்த மறையாக -மங்களா சாசன பர்யந்தமாக கைங்கர்யம் செய்யுமவர்கள் –

இமையவர் ஏத்த -என்கையாலே அநிமிஷராய்
குண அனுபவத்திலே ஊன்றி விக்ரஹ தர்சனமே தாரகமாய் இருக்குமவர்கள் -என்கிறது

எம்பிரான் -எங்களக்கு மகா உபகாரகன் ஆனவன் –

—————————————————————————————

பிராட்டிமார்க்கு அபிமத பரதந்த்ரமான பிரகாரம் தோன்ற வர வேணும் -என்கிறார் –

கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுதுதீவன்   என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான் உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்–1-9-9-

கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுதுதீவன்  என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் –
தேவ லோகத்தில் ஒழிய நில்லாத கற்பகக் காவையும்
பூ லோகத்தில் கொடு வந்து தன்னகத்தில்
நிலா முற்றத்திலே  நட்டுத் தர வேணும் என்று ஆசைப்பட்ட
ஸ்ரீ சத்யபாமைப் பிராட்டிக்கு நாளை என்னாதே பின்னை என்னாதே
அவள் திரு உள்ளம் பிசகும் என்று நாளை என்ன மாட்டான்
தன்னுடைய த்வரையாலே பின்னை என்ன மாட்டான்
பிரதி நியத சங்கல்பம் பாராதே -நீர் ஏவின கார்யம் இப்போதே செய்து தரக் கடவேன் -என்று
தன்னிலத்த்லே இந்த்ரன் மதர்தமாக ரஷிக்கக் கடவேன் என்று
பஹூ மானம் பண்ணி ரஷிக்கிற கற்பகக் காவை கொடு போரா நிற்கச் செய்தே
முற்பட ஆதரித்த இந்த்ரன் தன் புழைக் கடையிலே ஒரு பூண்டைப் பிடுங்கக் கொண்டு போரப் பொறாமையாலே
கோபித்து வஜ்ரத்தை வாங்கி  தொடர்ந்து யுத்த கார்யம் செய்வானாக வந்து
வந்த கார்யம் பலியாமையாலே ஸ்தோத்ரம் செய்ய
அங்கே நிற்கவும் கடவது என்று சங்கல்பம் செய்து நிலாத் திகழ் முற்றத்திலே கொண்டு வந்து
வண் துவரை நட்டான் -என்கிறபடியே நட்ட பின்பு
அங்குத்தையிலும் இங்கு தழையும் பூவும் கொழுந்துமாய்க் கொண்டு இளகிப் பதித்து செல்லா நின்றது இறே
இப்படி அரியன செய்த அபிமதத்தோடே புறம் புல்குவான் –

உம்பர் கோமான்
இப்படி செய்கையாலே நித்ய சூரிகளுக்கு முன்னிலையிலே நிர்வாஹகன் என்னுமதுவும் தோன்ற வர வேணும் என்கிறார் –

————————————————————————————–

நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஆய்ச்சி அன்று ஆழிப்பிரான் புறம் புல்கிய
வேய்த் தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே –1-9-10-

ஆய்ச்சி அன்று ஆழிப்பிரான் புறம் புல்கிய வேய்த் தடம் தோளி சொல் விட்டு சித்தன் மகிழ்ந்து
வேய்த் தடம் தோளியான வாய்ச்சி –
ஆழிப்பிரான் -புறம் புல்குவான் -என்று அவன் புறம் புல்கிய சொல்லை
விட்டு சித்தன் -அவள் சொல்லிய சொல்லை
அவள் சொன்ன அன்று கூட நின்றால் போலே தாமும்  புல்குவான் என்று பிரார்த்தித்து –
அவன் கடாஷத்துக்கு விஷயமாய் தாமும் பெற்று மகிழ்ந்த பிரகாரத்தை –
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே —
விட்டு சித்தன் பரோபகாரமாக வுபகரித்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
வாய்த்த மக்களையும்
நன் மக்களையும் பெற்று
அவர்கள் மங்களா சாசனம் பண்ணக் கண்டு மகிழ்வர் -என்கிறார்
விஷ்ணு சித்தன் என்றது -அரவத்தமளிப்படியே
வல்லவர் -என்றது -சாபிப்ப்ராயமாக -என்றபடி
வாய்த்த மக்கள் -என்றது -புத்ரர்களை
நன் மக்கள் என்றது -சிஷ்யர்களை –
பிரத்யயத்திலே சிஷ்யர்களுக்கு ப்ராப்தி யுண்டானவோபாதி
பிரக்ருதியிலே புத்ரர்களுக்கும் பிராப்தி யுண்டு இறே
புத்ரான் -சந்த்யஞ்ய -என்றது காரண கார்ய பாவ சம்பந்தத்தாலே இறே
அது தான் அறிந்த மாத்ரம் இறே
இங்கு கார்ய காரண பாவ சம்பந்தம் ஆகையாலே இறே உபாதேயமாம்  இறே
தாத்வர்த்தத்தால் வந்த ரஷ்யத்வம் சதுர்த்தி தோற்றினால் இறே தோற்றுவது –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: