ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —1-3-மாணிக்கம் கட்டி வயிரம் இடைக் கட்டி –

பிரவேசம் –

கீழே -சீதக் கடலிலே திவ்ய அவயவங்களை யசோதை பிராட்டி அனுபவித்த பிரகாரங்களை
தத் காலம் போலே மிகவும் விரும்பி அனுபவித்தாராய் நின்றார்
இனி மேல்
அவள் பிள்ளையை தொட்டிலே வளர்த்தி தாலாட்டின பிரகாரத்தை தத் காலம் போலே மிகவும் விரும்பி அருளிச் செய்கிறார் –
சர்வ ஸ்மாத் பரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் -சர்வ பிரகார நிரபேஷனாய்-நாராயண சப்த வாச்யனான -சர்வேஸ்வரன்
யாதொரு இடத்திலே யாதொரு திரு மேனியோடு அவதரித்தாலும்
அவனுடைய ஸ்திதி கமன சயநாதிகளை கண்டால் மிகவும் விரும்பி
தங்களால் ஆனவளவும் கிஞ்சித் கரித்தன்றி நிற்க ஒண்ணாது இறே ப்ரஹ்ம சனகாதிகளுக்கும் –
இத்தை யசோதை பிராட்டி மநோ ரதித்துக் கொண்டாளாக
அவள் தாலாட்டின பிரகாரத்தை தாமும் பிரத்யஷமாகக் கண்டருளி
மிகவும் விரும்பி -அவனுடைய நீர்மையையும் மேன்மையையும் அருளிச் செய்து தாலாட்டுகிறார் –

————————————————————

ப்ரஹ்ம கிஞ்சித் கரித்த திருப் பள்ளித் தொட்டிலை
அங்கீ கரித்து வர்ணிக்கிறார் –

மாணிக்கம் கட்டி வயிரம் இடைக் கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ –1-3-1-

ஷோடஸ வர்ணியான ஆணிப் பொன்னாலே
நாநா வர்ணமாகவும்
பிள்ளைக்குத் தகுதியாகவும்
சமைத்த தொட்டிலிலே பதித்த
மாணிக்க ஒழுங்குக்கு நடுவே வயிரம் முதலான நவ ரத்னங்களையும் பதித்து
ப்ரஹ்மா வானவன் விரும்பி வர விட்டான் என்கிறார் –
அருளப் பாடிட்டால் அல்லது வரவும் அரிது இறே அவர்களுக்கு –
அவர்கள் -வர விட்டவர்களுக்கு -உபஹாரத்தோடே வரும் போதாகிலும் வரலாம் போலே காணும் –
ஸ்வாதந்த்ர்ய காமரிலும் காட்டிலும் -தத் சேஷ பூதர்களுக்கு உள்ள ஏற்றம் பாரீர் –
விடு தந்தான் -என்றது தன் பக்கலில் நின்றும் அங்குத்தைக்கே ஆகும் என்று நீக்கி விட்டுத் தந்தான் -என்கிறது
மாணி -என்றும் -சிறுமை –
குறள் என்றும் -சிறுமை –
சிறுமை பெரிதாம்படியான குறளாய் இறே மகாபலி யஞ்ஞவாடத்தில் சென்று இரந்தது –
கௌரவம் யாசிதாந்தமாய் இறே இருப்பது

வையம் அளந்தானே -இரப்பு பெற்றவாறே -பூரித்து -திரி விக்ரமன் ஆனானிறே-
அளந்த போதை ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி ஸ்மரணத்தாலே இறே ப்ரஹ்மா வரவிட்டதும் –

———————————————————–

இவ்வளவேயோ
ருஷப வாகனனும் வரவிட்டான் -என்கிறார் –

உடையார் கனமணியோடு ஒண் மாதளம் பூ
இடை விரவிக் கோத்த வெழில் தெழ்கினோடும்
விடையேறு காபாலி ஈசன் விடு தந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ –1-3-2-

உடையார் கனமணியோடு ஒண் மாதளம் பூ
உடையிலே ஆர்ந்த பொன் மணி முதலான ரத்னங்களோடே
அலங்க்ருதமாகவும்
மிக்க பிரகாசத்தையும் யுடைத்தான மாதளம் பூ முதலான பூத் தொழில் களையும் சேர்த்து

இடை விரவிக் கோத்த வெழில் தெழ்கினோடும் –
எழில் தெழ்கு-விலங்கா நின்ற இடைச் சேரி

விடையேறு காபாலி ஈசன் விடு தந்தான் –
ருஷப வாகனனாய்
கபால நிரூபகனாயும்
ஸ்வ கோஷ்டிக்கு நியந்தாவாயும்
இருக்கிற ருத்ரன் விடு தந்தான் –

உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ-
இவை எல்லாம் வர விடுவதற்கு முன்னேயும்
இவர்கள் தங்களையும் யுடையாய் -என்கிறார்

அழேல் அழேல் –
மாரோதீ மாரோதீ -என்று தாலாட்டுகிறார்
தாலாட்டுதல் -நா அசைத்தல்
ஏல் -பொருத்தம்
லோகத்தை அளக்கிற போது-என் தலையிலே மிதியாதே கொள் -என்றார் இல்லை இறே
அறிந்தார்கள் ஆகில் தலை கீழாக நிற்கவும் கூடும் இறே –

———————————————————————–

என் தம்பிரானாய்ண் எழில் திரு மார்வற்குச்
சந்தம் அழகிய தாமரை தாளற்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துவனாய் நின்றான் தாலேலோ தாமரைக் கண்ணனே தாலேலோ –1-3-3-

என் தம்பிரான் ஆனாய் –
எழில் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையவனுக்கு
சந்தம் -இத்யாதி
சமுதாய சோபைக்கு தகுதியாய்
செவ்வித் தாமரை போலே இருக்கிற திருவடிகளை யுடையவனுக்கு
இந்த்ரன் தானும்
அவர்களோடு சமனான தானும் -என்றபடி
எழிலையும் ஓசையையும் யுடைத்தான கிங்கிணியையும் தந்துவனாய் நின்றான்
அதூர விப்ரக்ருஷ்டனாய் வந்து நின்றான் தாலேலோ –

————————————————————————–

இவ்வளவேயோ
தேவர்கள் எல்லாரும் உப ஹார பாணிகளாய் வந்தார்கள் -என்கிறார்
ரிக்த பாணிஸ்து நோபேயாத் ராஜா நாம் தைவதம் குரும் -என்கையாலே
ராஜாவும் தெய்வமும் குருவும் இவனே யாகையாலே
உபஹார பாணிகளாய் கொண்டு வந்தார்கள் -என்கிறார் –

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கட் கரு முகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ –1-3-4-

சங்கின் வலம்புரியும்-
சங்குகளில் வைத்துக் கொண்டு நன்றான வலம்புரியானதும்-

சேவடிக் கிண்கிணியும் –
பாதச் சதங்கைகளும் –

அங்கைச் சரிவளையும் –
அழகிய திருக் கைக்குத் தகுதியான சாரிகளும் -வளைகளும் –

நாணும் அரைத் தொடரும் –
திருவரை நாணும்
அரைவடமும்-

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
அழகியதாய்
இடமுடைத்தான விசும்பில்
அமரர்கள் போக விட்டார்கள் –

செங்கட் கரு முகிலே தாலேலோ –
சிவந்த திருக் கண்களை யுடைய
நீல மேகம் போன்றவனே -தாலேலோ

தேவகி சிங்கமே தாலேலோ–
தேவகி புத்திரன் என்கிற பிரசத்தியாலே -சொல்லுகிறார்
இது தான் ஸ்ருதி சோதிதமுமாயும் இறே இருப்பது –
ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிற இது இறே ஏற்றம் –

———————————————————————-

எழிலார் திரு மார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சிராவணன்
தொழுதுவனாய் நின்றான் தாலேலோ தூ மணி வண்ணனே தாலேலோ –1-3-5-

எழிலார் திரு மார்வுக்கு –
எழில் விளங்கா நின்ற திரு மார்புக்கு

ஏற்கும் இவை என்று –
சேரும் இவை என்று –

அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு –
அழகிய ஸ்ரீ பஞ்சாயுதமும் –
திரு முத்து வடமும் ஆதல் –
திருக் கழுத்துக்கு தகுதியான திரு ஆபரணம் ஆதல் –

வழுவில் கொடையான் வயிச்சிராவணன் –
கொடுத்துக் கொள்ளில் இறே வழு வாவது
வழு வற்ற கொடையான் -வைஸ்வரணன்

தொழுதுவனாய் நின்றான் தாலேலோ –
இத்தை அங்கீ கரிக்க வேணும் என்று பிரபதனம் பண்ணி
அதூர விப்ரக்ருஷ்டனாய் நின்றான்
த்ரவ்ய சாத்யமான வஸ்து வல்ல விறே –
அஞ்சலி சாத்யம் இறே –

தூ மணி வண்ணனே தாலேலோ-
இவன் த்ரவ்ய சாத்யன் அல்லன் என்று அறிந்து
தொழுத பின்பு திரு மேனியில் யுண்டான பிரகாசம் சொல்லுகிறது –
நீல ரத்னம் போன்ற நிறத்தை யுடையவன் –

———————————————————————

ஓதக் கடலில் ஒளி முத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரி வளையும்
மாதக்க வென்று வருணன் விடு தந்தான்
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ –1-3-6-

அத்யந்தம் அகாதமாய்
அலை எறியா நின்றுள்ள சமுத்ரத்தில் நீர்மையை யுடைத்தான முத்துக்களாலே சேர்க்கப் பட்ட ஒளியை யுடைத்தான ஹாரமும் –
முத்தாரம் -என்றபடி –
முத்தின் இடையிலே நிழல் எழும்படி கலந்து கோத்த சாதியான பவளமும்
அழகு விளங்கா நின்றுள்ள சரியும் வளையும்

மாதக்க வென்று-
மகத்துவமும்
தகுதியையும் -இருக்கும் என்று
வருணன் கொண்டு வந்தான்
ஆதி ராஜ்ய ஸூசகமுமாய்-சேஷித்வ பிரகாசகமுமாய் -மிக்க பிரபையை யுடைத்தான
திரு அபிஷேகத்தையும்
அதுக்குத் தகுதியாக அழகு விளங்கா நின்றுள்ள திருத் தோள்களையும் யுடையவனே தாலேலோ

———————————————————–

கானார் நறும் துழாய் கை செய்த கண்ணியம்
வானார் செழும் சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர் மேல் திரு மங்கை போந்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தைக் கிடந்தானே தாலேலோ –1-3-7-

தன் நிலத்திலே வளர்ந்து
தழைத்து-பரிமள பிரசுரமான -திருத் துழாயாலே கட்டப் பட்ட திரு மாலையும்

வானிலே ஆர்த்திருந்த கற்பகம் போலே செழுமை குன்றாமல்
பல மரங்களும் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரு மரமே ஒரு தோப்பாக பணைப்பதான கற்பகப் பூவாலே சமைத்த திரு வாசிகையும்

தேன் மாறாத செந்தாமரை மேலே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பிராட்டியார் வர விட்டாள்
திரு மங்கை -என்கையாலே யுவதிஸ்ஸ குமாரிணீ-என்கிற படி பருவத்தால் இளையவள் இறே –
இவள் இறே வராவிட்டாள்
இவள் வர விடுமது எல்லாம் அப்ராக்ருதமாய் இறே இருப்பது
அப்ராக்ருதர் கையிலே இறே வரவிடுவதும்
கோனே -என்றத் உபய விபூதிக்கும் நிர்வாஹகன் -என்னுதல்
ஆயர் குலத்த்க்கு நிர்வாஹகன் -என்னுதல்
அழலே அழலே -தாலேலே

குடந்தைக் கிடந்தானே
உபய விபூதியையும் நிர்வஹிப்பது திருதிய விபூதியிலே கண் வளர்ந்து போலே காணும் –

———————————————————————–

கச்சொடு பொற் சுரிகைக் காம்பு கனகவளை
உச்சி மணிச் சுட்டி ஒண் தாள் நிறைப் பொற் பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போந்தந்தாள்
நச்சு முலை யுண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ –1-3-8-

சாத்தின சிறுக் காம்பன் சேலையின் மேலே கட்டின கச்சிலே சொருகின பொன்னாலே சமைத்த சிறுச் சுரிகையும்
திருக்கையிலே சாத்த ஸ்ப்ருஹணீயமான வளையும்
உச்சியிலே சாத்த ரத்ன அலங்க்ருதமான சுட்டியும்
அழகிய திருவடிகளிலே ஒழுங்கு படச் சாத்துகைக்கு பொற் பூ
அன்றியே
ஒள்ளிய தாள யுடைத்தான பூ என்னுதல்
ஒண்டார் -என்ற பாடமான போது -ஒழுங்கு பட திரு முடியில் சாத்த
ஒள்ளிய தாரை யுடைத்தான பொற் பூவும்
ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாதவன் -என்னுதல்
தன் படிகளில் ஒன்றும் நழுவ விடாதவன்-என்னுதல்
அவனியாள் -ஸ்ரீ பூமிப் பிராட்டி வர விட்டாள் –
வெறும் புறத்திலே பேய்ச்சி முலை என்ன அமையும் இறே
அதன் மேலே
நஞ்சு ஏற்றின முலையை இறே அமுது செய்தது
நாராயணா என்கையாலே இறே
ப்ரஹ்ம சனகாதிகள் உபஹார பாணிகளாய் வந்ததும் –
அழலே அழலே தாலேலோ –

———————————————————————–

மெய்தி மிரு நானப்பொடியோடு மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழலே அழலே தாலேலோ அரங்கத்து அனையானே தாலேலோ –1-3-9-

திரு மேனியிலே மர்திக்கைக்காக
சந்தன கஸ்தூரி கர்ப்பூரப் பொடி யோடு மஞ்சள் பொடியும்
சிவந்து புடை பரந்து நீண்ட திருக் கண்களுக்கு தகுதியாக சாத்துகைக்கு அஞ்சனமும்
திரு நெற்றி அழகு பெறச் சாத்துகைக்கு சிந்தூரமும்

ஸ்வா தந்த்ர்ய நிபந்தனமான கலைகளை நாவிலே நின்று நடத்துகையாலே -வெய்ய -கலைப்பாகி -என்றது
அன்றியே
வெவ்விய கலையை வாகனமாக யுடைய விஷ்ணு துர்க்கை -என்னவுமாம் –
வெம்மை -அவளுடைய ஸ்வா தந்த்ர்யம் ஆகவுமாம் –
ஐயா அழலே அழலே தாலேலோ
அரங்கத்து அனையானே தாலேலோ –
அவதார கந்தமான -உரக மெல்லணை யானான அரங்கத் தரவணை யான் -இறே
தேனார் திருவரங்கம் தென்கோட்டி -மூன்றாம் திருவந்தாதி -62-என்னக் கடவது இறே –

———————————————————————

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு
பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே –1-3-10-

சன்ன ரூபையான பேய்ச்சி முலையை தாய் முலை போலே யுண்ட
விரோதி போகப் பெற்றோம் என்று திரு மேனி அஞ்சனம் போலே நிறம் பெற்ற படி
யசோதை பிராட்டி தாலாட்டின பிரகாரத்தை
இவர் தத்வ நிர்ணயம் பண்ணின பின்பு
திரு மாளிகையில் உள்ளார்க்கு அத்யந்தம் அதி குஹ்யமாய் இருக்கிற வேத சாஸ்திரம் எல்லாம் செவ்விதாய்த் தோற்றி
இவர் திரு உள்ளத்தோடு அவர்களும் சேர்கையாலே-செஞ்சொல் -மறையவர் -என்கிறது
பட்டன் சொல் -ஆப்த வாக்கியம்
சாபிப்ராயமாக வல்லவர்க்கு
எஞ்சல் -சுருங்கல்
இடர் இல்லை -என்னாதே-இல்லை இடர் -என்கிறார்
த்ருஷ்டா சீதா -என்னுமா போலே
இடராவது -இவர் அபிமானத்திலே ஒதுங்காமை இறே
தானே போகையாலே இல்லை என்கிறார் —

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: