ஸ்ரீ-யோ நித்யம் அச்யுத பதாம்-தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

ஸ்ரீ ராமாவரஜா முநீந்திர லப்த போதராய் –ஸ்ரீ வத்ஸ சிஹ்னர்-என்ற நிரூபகத்தை உடையரான கூரத் ஆழ்வான்
ஸ்ரீ ராமானுஜ தர்சனத்தை ரஷிக்க வேண்டி ராஜ கோஷ்டியில் சென்று –
நாராயண பரம் ப்ரஹ்மம் -என்றும்
நாராயண பரா வேதா -என்றும்
நாரணனைக் காட்டிய வேதம் -என்றும்
நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக கே -என்றும்
நாரணனே யாவதீது அன்று என்பாறார் -என்றும்
அந்யாயம் அந்யாயம்-என்று அறை கூவி வென்று
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ தான் -என்னும்படி அவர்கள் தர்சனம் அசஹ்யமாய்
அத தர்சனத்தை வேண்டாதே மீண்டு எழுந்து அருளி தர்சன ப்ரவர்தகரான எம்பெருமானார் தர்சனத்தை அபேஷித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்க
அவரும் –இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் –நற்கிரிசை நாரணன் நீ –என்றும்
திரு வில்லா தேவர்க்கும் எல்லாருக்கும் மேலாக மேல் நாட்டிலே திரு நாரணனை ஸ்தாபித்து மீண்டு எழுந்து அருளி
அரங்கன் அல்லால் தெய்வம் இல்லை -என்று அறுதியிட்டு
அரங்கனுக்கு ஆட்செய்து கொண்டு இருக்கிறவர்
ஆழ்வான் கண் அழிவு கண்டு கண் கலங்கி அருளி
பேரருளாளர் நேத்ர புத்ராதிகளான ஐஹிக புருஷார்த்தத்தையும்
பெரிய விசும்பு ஆகிற ஆமுஷ்மிக புருஷார்த்தத்தையும் கொடுக்குமவர் ஆகையாலே
நேத்ர விஷயமாக ஒரு ஸ்தோத்ரத்தை செய்யும் என்று நியமிக்க
அப்படியே -அஸ்தி -என்று சம்மதி பூர்வகமாக ஸ்தவம் பண்ணுகிறவர் –
நேத்ர சாத்குரு க்ரீச சதாமே -என்றும்
க்ரீசே பச்யேம பரச்சதம் சமா -என்றும்
அங்குத்தையில் அனுபவ பரிகரமான அப்ராக்ருத சஷூஸ் சை அபேஷிக்க
அப்படியே பேரருளாளரான பெரிய பெருமாளும்
பஸ்யந்தி ச சதா தேவம் நேத்ரைர் ஜ்ஞாநேனவ அமரா -என்றும்
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி-எண்ணும்படியான இமையாத கண்ணை இவர் பெறும்படி பெரிய வீட்டுக்கு விடை கொடுத்து அருள
அவரும் அதிப்ரீதராய் ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் திரு மாளிகையிலே புறவீடு விட்டு இருக்க
இத்தை எம்பெருமானார் கேட்டருளி -அறப் பதறினார் -என்றவாறு பதறிக் கொண்டு இவர் இருந்த இடத்தே எழுந்து அருள
அவரும் –பரம் தாமம் என்னும் திவம் தருகைக்காக அவருக்கு மறுக்க ஒண்ணாதபடி அவர் விஷயத்திலே பிரபத்தியான இஸ் ஸ்லோகத்தை
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே--என்று விண்ணப்பம் செய்து திருவடிகளில் விழ
அவரும் இவர் அபிப்ராயம் அறிந்து தம்முடைய ஸ்வம்மான ப்ரபத்தியை
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ என்னும்படி
ஸ்ரீ மன்  நாராயண தவ சரணார விந்த யுகளம் சரணமஹம் பிரபத்யே -என்று குறைவற அவர் வலத் திருச் செவியில் பிரசாதித்து அருளினார் இ றே
அதடியாக ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே அவர் பிரார்த்தித்து அருளின பேற்றை இவரும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலே பிரார்த்தித்து பேற்றோடு தலைக் கட்டினார்
அப்பேறு தான் ஆச்சார்யா ஆதீனம் ஆகையால் அவரை அடியிலே சரணம் புகுகிறார் –

———————————————————————————————————————-

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யோமோஹதஸ் ததிதராணி த்ருணாய மே நே
அஸ்மத் குரோர் பகவதோஸ் அஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –கூரத் ஆழ்வான்-

யோ நித்யம் –
இதில் பக்தி விரக்தி ஜ்ஞப்தி குருத்வ அனுகம்பாதிக்ய குணத்தாலே முக்தி ப்ரதித்வ சக்தியை யுடைய உடையவர் திருவடிகளை உபாயமாக பற்றுகிறார் –
யோ நித்யம்
திசை அனைத்தும் ஏறும் குணன் -என்று சொல்லப்படுகிற குணவத்தா ப்ரதையை யுடையராய்
நாள்தோறும் ஆஸ்ரிதரை நழுவுதல் இன்றிக்கே ரஷித்துக் கொண்டு போருகிற சர்வேஸ்வரனுடைய
சரணாரவிந்த யுகள வ்யாமுக்ததையாலே
தத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களையும் த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருப்பவராய்
அடியேனுக்கு அஜ்ஞ்ஞா தஜ் ஞாபனம் பண்ணும் ஆச்சார்யராய்
அதுக்கடியான ஜ்ஞானாதிக்யத்தை யுடையவராய்
அகதிகள் விஷயத்தில் ஐயோ என்று இறங்கும் ஆன்ரு சம்சயத்தை யுடையவருமாய்
ச- ரூபியாய் முன் வந்து நிற்கிற இந்த ராமானுசனுடைய சரணங்களை சரணமாக அடைகிறேன் -என்கிறார் –

யோ நித்யம்
-என்று வைதிகோத்தமர் என்னும் பிரசித்தியைப் பற்றச் சொல்லுகிறது-
அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ் –என்று
சர்வேஷூ தேச காலேஷூ சர்வ அவஸ்தா ஸூ சாச்யுத கிங்கரோச்மி-என்றும்
அச்யுத பக்திதத்வ ஜ்ஞானாம் ருதாப்தி -என்றும் சொல்லுகிறபடியே
பிரணதார்த்தி ஹராச்யுதரான பேரருளாளர் ஸ்ப்ருஹணீயமான திருவடித் தாமரைகளிலே நிரவதிக பிரேமத்தாலே
த்வத் பாத கமலா தன் அந்யமே என்கிறபடியே –திருவடிகளுக்கு அசலான அனைத்தையும் த்ருண சமமாக எண்ணி இருப்பார் என்கிறது
நிரஸ்த இதர போகாசோ வரதம் சரணங்கத -என்றும்
தென் அத்தியூர் கழலிணைக் கீழ் பூண்ட அன்பாளன் இராமானுசன் -என்றும் வரத நாராயணனை யாயிற்று
யோ நித்யம் சத்தம் த்யாயேத் நாராயணம் அந்ய தீ -என்று
நிரவதிக பிரேமத்துடன் நித்ய திருவாராதனமாக நடத்திப் போருவது
அந்த பக்தி ஐஸ்வர் யத்தாலே
த்ருணீ க்ருதா நுத்தம புக்தி முக்திபி –
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பு -என்னும்படி பண்ணி இருப்பார் ஆயிற்று –
கதாஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா சயா நிரஸ்த சமஸ்தே தர போகாச அபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவ –
என்று ஆயிற்று இவர் ஸ்ரீ ஸூ க்தியும் இருப்பது
திக்குற்ற கீர்த்தி இராமானுசன் -என்று பிரசித்தம் ஆனவர்
நித்யம் -நாடொறும்

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ்-
அச்யுதனாகை யாவது
குண விக்ரஹ விபூதிகளை நழுவுதல் இன்றிக்கே இருக்குமவன் என்னுதல் –
ஆஸ்ரிதரை நழுவ விடாதவன் -என்னுதல்
ஆஸ்ரித ரஷணத்தில் நின்றும் நழுவாதவன் என்னுதல் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் -என்றும்
ஆதுமில் காலத்து எந்தை யச்சுதன் அமலன் -என்றும்
அயர்வாங்கு நமன் தனக்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -என்றும்
நத்ய ஜேயம்-என்றும் சொல்லப் படுகிற குணங்களிலே யாயிற்று இவர் ப்ரவணராய் இருப்பது
அந்த அச்யுத பதாம்புஜ யுகம ருக்ம வ்யாமோஹம்-அர்ச்சாவதாரம் தொடங்கிபர பர்யந்தமாக எங்கும் நித்யமாக யுண்டாய் இ றே இவருக்கு இருப்பது
அது எங்கனே என்னில்
அத்திகிரி பச்சை நிறத்தனுடைய பதாப் ஜங்களிலும்
வேங்கடத்து அச்சுதனனுடைய தங்கு தாமரை அன்ன பொன்னார் அடியிலும்
அரங்கமா நகர் அச்சுதன் உலகம் அளந்த பொன்னடியிலும்
நண்ணித் தொழுமவர் நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் அச்சுதன் உடைய துளங்கு சோதித் திருப் பாதத்திலும்
தயரதற்கு மகனான அச்சுதன் காடுறைந்த பொன்னடியிலும்
கோவிந்தன் அச்சுதன் பொற்றாமரை அடி என்று பேசும்படியாய் கானில் கன்றின் பின் போன பொன்னடியிலும்
அச்சுதன் அனந்த சயனன் செம்பொற் திருவடி இணையிலும்
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதனான விண்ணோர் பிரானார் மாசில் மலரடி யிலுமாயிற்றுஇவர் மயல் கொண்டு இருப்பது-

இது தான் -ஆர்வமோடு நிச்சல் நினைவார் என்னும் படி இ றே நித்ய இச்சை நடந்து செல்லுவது
தென்னத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் –என்றும்
அரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் -என்றும்
பஞ்சித் திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா –என்றும்
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற கடலும் உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் -என்னக் கடவது இ றே –
அவர் தாமும்
பிரணதார்த்திஹர -என்றும்
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே -என்றும்
ஸ்ரீ ரெங்க சாயிநம் –என்றும்
ஆத்மா நஞ்ச சாரதிம் -என்றும்
காகுஸ்த -என்றும்
சேஷிணே சேஷ சாயினே என்றும்
ஸ்ரீ வைகுண்ட நாத -என்றும் இ றே அருளிச் செய்தது
ஆகையால்
பூவார் கழல்களிலும்
கண்ணன் கழல் இணையிலும்
காகுத்தன் தன்னடியிலும்
பாற்  கடலுள் பையத் துயின்ற பரமன் அடியிலும்
வைகுந்த சேவடியிலும்
சர்வாந்தர்யாமியான நாராயணன் சரணங்களிலும் ஆயிற்று வ்யாமுக்தராய் இருப்பது
இப்படி பஞ்ச அவஸ்தா வஸ்திதனான சர்வேஸ்வரனுடைய சரணாரவிந்த யுகள மகரந்த ரசாச்வாத மதுவ்ரதமாய் அனுபவித்து
அதிலே மக்னராய் –
ததிதராணி த்ருணாய மே நே –
அத்தாலே தத் இதரங்களாய் –ஆ விரிஞஞாத மங்களமான பாஞ்ச பௌதிக விஷய பஞ்சகத்தையும்
அதுக்கு மேலான ஆத்மாவனுபவத்தையும் த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருப்பார் யாயிற்று
இப்படி பக்தி விரக்தி யுடைய இவர் திருவடிகளை தாமும் அப்படி பரத்வாதிகள் எல்லாமாக அறுதியிட்டு அடையப் பார்க்கிறார்-
அஸ்மத் குரோர் –
கீழ் சொன்ன அச்யுத பக்தியாலே தத் இதரங்களை த்ருணவத் கரிக்கையாலும் யாயிற்று இவரை ஆச்சார்ய வர்ணம் பண்ணுகிறது –
சிதசித் பரதத்வா நாம் தத்வ யாதாம்ய தாயினே -என்னும்படி தத்வ த்ரயத்தையும் உபதேசிக்கையாலே அலகலகாக ஆராய்ந்து –
போகா இமே விதி சிவாதி பதஞ்ச கிஞ்ச ஸ்வாதம அநுபூதிரிதி யா குல முக்திருக்தா
சர்வம் ததூஷ ஜல சோஷ மஹம் ஜூ ஷேய -என்று தத்வத்வய விஷய வைராக்யத்தையும்
தவ தாஸ்ய மகா ரசஜ்ஞ -என்று தத்வ ஏக விஷய பக்தியை
யும் யுடையவர் ஆகையாலே
தமக்கு அநு குணமாக –அஸ்மத் குரோர் -என்கிறார்
ஜ்ஞான தீபப்ரதே குரௌ-என்றும்
அந்தகார நிரோதித்வாத் குருரித்யபி தீயதே -என்றும்
இவர்க்கும் இரண்டுக்கும் அடி எம்பெருமானார் இ றே
ஸ்ரீ மத் ராமானுஜார்யாத் சமதிகத சமஸ்தாத்மா வித்யா -என்று ஆயிற்று இருப்பது
இவரை யாயிற்று பிரதான சிஷ்யராக பிரதமம் பெரிய திரு மந்த்ரம் முதலான ரஹச்யங்களை பிரசாதித்து அபிமானித்து அருளிற்று
நர நாராயண அவதாரம் என்னலாம் படி இ றே ராமானுஜ கூராதிபர்கள் கூட்டர விருப்பது
எல்லாரும் ஒரு தட்டும் இவர் ஒரு தட்டுமாக வி றே எம்பெருமானார் எண்ணி இருப்பது
அத்தைப் பற்ற -ஒரு மகள் தன்னை யுடையேன் -என்றார் இ றே
இப்படி அத்விதீயமாயிற்று இரண்டு விஷயமும் இருப்பது —

கலையறக் கற்ற மாந்தர் -என்னலாம் படியான இவருக்கு சகலார்த்தமும் பிரசாதிக்கும் படியான ஜ்ஞான வைபவத்தை சொல்கிறது
பகவதோஸ் -என்று –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் ஸ்ருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவையும் தெரிந்தவன் –
உண்மை நன் ஞானம் உரைத்து
இராமானுசன் மெய்ம்மதிக் கடல் –என்னும் படி இ றே ஜ்ஞான வைபவம் இருப்பது –
சர்வ கல்யாண சம்பூர்ணம் சர்வ ஜ்ஞான உபப்ரும்ஹிதம்
ஆசார்யம் ஆஸ்ரயேத் தீமான் ஸ்ரேயோர்த்தி ஸூ சமாஹின பூ -என்னக் கடவது இ றே
பகவச் சப்தம் -சர்வ கல்யாண குணங்களையும் பரி பூர்ண ஜ்ஞானத்தையும் சொல்லுகையாலே -அவற்றால் குறைவற்ற விஷயமாய் இருக்கை
இத்தால் தமக்கு அஜ்ஞ்ஞாதஞாபனம் பண்ணுகைக்கு உடலான ஜ்ஞான வைபவத்தை பேசினார்-
இனி தாமுடைய துர்க்கதி கண்டு இரங்கும்படி –தயா பூர்த்தியை அருளிச் செய்கிறார்
அஸ்ய தயைக சிந்தோ-ராமானுஜச்ய –
அஸ்ய தயைக சிந்தோ -அஸ்ய ராமானுஜச்ய -என்று மேலில் பதத்தோடு சேர்த்தி
தயைக சிந்து -கேவல கிருபா மாத்திர பிரசன்னாச்சார்யர் -என்றபடி –
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று இ றே இருப்பது –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்றும்
எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே -என்னுமா போலே
நிகரின்றிநின்ற என்நீசதைக்கு உன் அருளின் கண் இன்றி புகல் ஒன்றும் இல்லை -அருட்கும் அக்தே புகல் -என்றும்
உன் பெரும் கருணை தன்னை -என்றும்
வண்மையினாலும் தன் மாதகவாலும் -என்றும் இ றே இவர் கிருபையின் பெருமை இருப்பது –
அருளாழி யம்மானாய்-
தயா சிந்தோ பந்தே -என்னும்படியான சர்வேஸ்வரன் கிருபை மறுத்த காலத்திலும் ஒதுங்கலாம் படியான கிருபை
அவன் கை விட்ட சம்சாரிகளையும் வ்ருதைவ பவதோ யாதா பூயசீ ஜன்ம சந்ததி
தஸ்யா மன்யதமம் ஜன்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்று உபதேசித்து திருத்துமவர் இ றே-

கீழ்ச் சொன்ன ஜ்ஞான பக்தி வைராக்கியம் நிரவதி கதையாகிற இந்த குணங்கள் எல்லாம் கேட்டே போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
பிரத்யஷமாய் முன் வந்து நிற்கும்வரை -அஸ்ய ராமானுஜச்ய -என்று அனுபவிக்கிறார் -இந்த ராமானுஜனுடைய -என்று
இவர்க்கு ஈடுபாட்டுக்கு விஷயம் இருக்கிறபடி -ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —
நாராயண சரனௌ சரண வர்ணத்தில் காட்டிலும் ராமானுஜ சரனௌ சரண வர்ணம் ஸ்வரூப அநு குணமாய் அமோகமாய் இருக்கையாலே அவர் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறார்
பழுதாகாது ஓன்று அறிந்தேன் -இத்யாதி
மாறாயதானவனை–வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
பாற்கடலும் உன்தனக்கு எத்தனை இன்பம் தரும்
செழும் திரைப் பாற்கடல் கண் துயில் மாறன் திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் இ றே
வளர்ந்த வெங்கோபம் அடங்க லொன்றாய் அன்று வாழ் அவுணன் கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து விளைந்திடும் சிந்தை
இராமானுசனைக் கண்டு இரைஞ்சி மற்றவரைச் சாத்தி இருக்கப் பார்க்கிறார்
எம்பெருமானார் தவம் -தபஸ் சப்த வாச்யையான பிரபத்தி
இவர் தவம் -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்னும் ஆச்சார்யாபிமானம்
ராமாநுஜார்ய விஷயீக்ருதம் -என்றாரே
அவர் தவத்தைக் காட்டிலும் இவர் தவம் வென்றதாயிற்று
அவர்க்கு முன்னே இ றே இவர்க்கு பேறு சித்தித்து
சித்திர் பவதி வா நேதி சம்ராயோ அச்யுத சேவிதாம்
நிஸ் சம்சயமஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மா நாம் –
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னும்படி வைகுண்ட பிரிய தர்சனம் பண்ணினார்-

இந்த ராமானுஜ பிரபத்தியிலே நாராயண பிரபத்தி அர்த்தம் எல்லாம் அனுசந்தேயம் –
கீழ் பக்தி விரக்தி ஜ்ஞப்தி த்ருணிதை யாகிய இவை –முக்தி பரத சக்தி சாதனங்களாய் இருக்கும்
இது இ றே புருஷகார பாவத்துக்கு அநு குணமான ஸ்ரீ மத் பதார்த்தமும்
இவையும் ஈஸ்வர வசீகரண ஹேதுவான குணம் இ றே
புருஷகாராந்தர நிரபேஷமாய் இ றே இவ்விஷயம் இருப்பது
இனி –வாத்சல்ய ஸ்வாமித்ய சௌசீல்ய சௌலப்யாதிகள்
சௌகர்ய ஆபாதகங்களாய் இருக்கும் நாராயண பதத்தில் போலே –
மாதா பிதா ப்ராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்று
இஸ் சம்பந்தத்தாலே வாத்சல்யாதிகள் அனுசந்தேயம் அங்கு
இதத் தாய் இராமானுசன்
எந்தை இராமானுசன்
எம்மையன் இராமானுசன்
ஏலப்புனைந்து என்னைமார் -ஆணுடன் பிறந்தவர்கள் என்னுமா போலே
இங்கு எல்லார் உடன் உண்டான சௌப்ராத்ரம்
கோயில் அண்ணன் இராமானுசன்
அடியேனுக்கு இருப்பிடம்
இராமானுசன் சரண்
இராமானுசன் சரணே கதி –
என்கையாலே தோஷ போக்யத்வம் ஆகிற வாத்சல்யமும்
ஸ்வத்தினுடைய லாபாலாபம் ஸ்வாமியதாம் படியாய்
ஸ்வத்தை நோக்குகிற ஸ்வாமித்வம் ஆகிற இவை ராமானுஜ பதத்தாலும் அனுசந்தேயம் –
தாழ்ந்தவர்களோடே தன் பேறாக கலக்கையாகிற சௌசீல்யமும்
ஆஸ்ரயிப்பார்க்கு திருஷ்டி கோசரமாய் புரோவர்த்தயாய் நிற்கிற சௌலப்யமும்-

ஜ்ஞானமாவது -ஆஸ்ரிதர்க்கு த்யாக ச்வீகாரங்களுக்கு உறுப்பான இஷ்டாநிஷ்டங்களை அறிக்கைக்கு உடலான அறிவு
சக்தியாவது -அநிஷ்டங்களைப் போக்குகைக்கும் இஷ்டங்களைக் கொடுக்கைக்கும் உடலாய் -அசக்தரானவர்களை அக்கரை ஏற்ற வல்ல சக்தி
பூர்த்தியாவது -இவன் இட்டது கொண்டு த்ருதனாக வேண்டாத பூர்த்தி
ப்ராப்தி யாவது -தன் பேறாகச் செய்து தலைக் கட்டுகைக்கு உடலான சம்பந்தம்
காருணிகத்வம் ஆவது -சம்பந்தம் இல்லா விடிலும் -குருடன் குழியிலே விழுந்தால் எடுக்கைக்கு சம்பந்தம் வேண்டாதது போலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்ன வேண்டும்படியான தயை –
அந்த பதன்நபி ச்வப்ரே கேவலந்த்வ நுகம்பவச -என்னக் கடவது இ றே
ஔதார்யம் ஆவது -கொள்வாரைத் தேடிக் கொடாவிடில் தரிக்காமல் கொடுக்கும் கொடை யுடைமை
இந்த சௌகர்ய ஆபாத குண சதுஷ்டயமும்
கார்ய ஆபாதக குண சாதகமும்
இங்கே அனுசந்தேயம் -அது எங்கனே என்னில்
இப்படியைத் தொடரும் இராமானுசன் -என்னும்படி அவர் பின் படரும் குணனாய்
தீம்பன் இவன் என்று நினைத்து என்னை இகழார் எதிராசர் அன்று அறிந்து அங்கீ கரிக்கையால் -என்கிற வாத்சல்யமும்
அண்ணல் இராமானுசன் -என்னும்படி உடையவர் ஆகையால்
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பானாய் விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்து உதித்த படியாலே-
வைத்து இருந்த இடத்தே வந்து வந்து நோக்கும் படியான ஸ்வாமித்வமும்
என்னருவினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை யுள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த சௌசீல்யமும்
என் கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற -தென்று சொல்லும்படி சௌலப்யமும்
மெய்ஞானத்து இராமானுசன் -கதி இராமானுசன் -உண்மை நன்ஞானம் உரைத்த இராமானுசன் -என்று
அறியாதன அறிவிக்கைக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டுமதுவும் தவிர்க்க வேண்டுமதுவும் அறிக்கைக்கும் ஈடான ஜ்ஞானமும்
நிலத்தை செறுத்து யுண்ணும் நீசக்கலியை நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் என் பெய்வினை தென் புலத்தில்
பொறித்தவப் புத்தகச் செம்மை பொறுக்கியும் போருகிற பாப விமோசகத்வ சக்தியும் –
சலியாப் பிறவிப் பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரம் தாமம் என்னும் திவம் தரும் -என்னும்படி
விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் பிராப்தியை உண்டாக்கிக் கொடுக்கும்தான சக்தியும்
பகவத் விஷயத்தை அண்டை கொண்ட பூர்த்தியும்
எந்தை இராமானுசன் வந்து யெடுத்தனன் இன்று என்னை -என்கிற பிராப்தியும்
காரேய் கருணை என்கிற காருணிகத்வமும்-
கொண்டலனைய வண்மைஉன்னுடைய கார் கொண்ட வண்மைஉன் வண்மை என் பால் என் வளர்ந்ததுவே -என்று
அபேஷா நிரபேஷமாக உபகரிக்கும் ஔதார்ய ஸ்வ பாவமும் ஆகிற
ப்ரபத்ய அபேஷித குணங்கள் எல்லாம் –குணம் திகழ்  கொண்டல் இராமானுசன் இடத்திலே  கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இ றே –

இப்படி கோடி த்வய குண யுக்தரான இராமானுஜருடைய சரணங்களை உபாயமாக ச்வீகரிக்கும்படி சொல்லுகிறது
ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்று –
குலம் தரும் நலம் தரும் சொல்லான நாராயணா என்னும் நாலு எழுத்து போலே
சகல புருஷார்த்த சாதனம் அன்றிக்கே கேவலம் மோஷைக ஹேதுவாயாய் யாயிற்று இ றே இந்த சதுர அஷரி இருப்பது
சதுரா சதுர அஷரீ -என்றாரே இவர் தாமே
யதா நாராயணா எதி ஜகதா சதுரஷரம் -நாராயணா ராமானுஜ என்று இ றே விகல்ப்பிக்கலாய் இருப்பது
இத்திரு நாமம் தான் உகம் தோறும் உண்டாய் இருக்குமாயிற்று
இளைய பெருமாள் இடத்திலும் –நம்பி மூத்த பிரானுக்கு தம்பியான கிருஷ்ணன் இடத்திலும் -இப்போது இளையாழ்வாரான இவர் இடத்திலும் பேர் பெற்று இ றே இருப்பது ஏதத் பூர்வ அவதார த்வயமும் சாது பரித்ராணத்துக்கும் துஷ்க்ருத வினாசத்துக்கும் உடலாய் இருக்கும்
இவ்வவதாரமும் வைதிக மார்க்கத்தை ஸ்தாபிக்கைக்கும்
அவைதிக மார்க்கத்தை நிரோதிக்கைக்கும்
பிரபத்தி மார்க்கத்தை பெருக்கி வளர்க்கைக்கும் உடலாய் இருக்கும்
அவ்வவதாரங்களிலும் அப்படியே –
ச ப்ராதுஸ் சரனௌ காடம்
மாமேகம் சரணம் விரஜ
நிரஸ்த இதர போகாசோ வரதம் சரணம்கத –என்று இ றே இவர்கள் பிரபத்தியை வர்த்திப்பது
அவர் ஸ்ரீ நாராயண விஷயத்திலே பிரபத்தியை கத்ய  முகேன வெளியிட்டு அருளினார்
இவர் ராமானுஜ விஷயத்தில் பிரபத்தியை இப்பத்ய முகேன வெளியிடுகிறார்
அங்கு பிரமேய பூதர் வெளியிட்டார்கள்
இங்கு பிரமாதாவனவர் வெளியிட்டார் -ராமானுஜச்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்று -அஸ்ய ராமானுஜச்ய சரனௌ -என்று
இராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் -என்னும்படி திருவடிகளிலே தலையை மடுத்து சிரசா யாசிக்கிறார்
ராம சரணாகதி -சிரசா யாசதஸ் தஸ்ய வசனம் ந க்ருதம் மயா-என்று பலித்ததில்லை
ராமானுஜ சரணாகதி அவ்யபி சரிதமாகப் பலிக்கும் இ றே-

ச ப்ராதுஸ் சரனௌ -என்னும்படி –ராமானுஜச்ய சரனௌ -என்று வேறு த்வயம் வேண்டாதே –அடியே த்வயமாய் இருக்கை –
லோக விக்ராந்த சரணம் போலே மாறி நடப்பன வாய் இ றே இராமானுசன் தன் இணை யடி இருப்பது
நாராயண சரணங்கள் அளவும் செல்ல வேண்டாத பூர்த்தி –
விக்ரஹ ஏக தேசத்தைச் சொன்னது விக்ரஹத்துக்கும் உப லஷணமாக –
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –யென்னும்படியாய் இருக்கும்
சரனௌ சரணம் –இராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே சரணம் என்றால் –என்கிற உபாயத்வ அத்யாவச்யத்தை சொல்லுகிறது
ப்ரபத்யே -என்று உபாய ச்வீகாரம் சொல்லுகிறது
நையும் மனம் யுன் குணங்களை யுன்னி என்னாவிருந்து எம்மையன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன் கையும் தொழும்-
வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் கூராதி நாத -என்னும்படி
த்ரிவித கரணத்தாலும் பற்றுகிறார்
இராமானுசனை உன்னும் திண்மை -என்று எல்லார்க்கும் மானஸ அத்யாவசாயம் ஆகலாம்
இவர் பூர்ண அதிகாரி ஆகையாலே த்ரிவித கரணத்தாலும் பூர்ண பிரபத்தி பண்ணுகிறார்
இந்த ச்வீகாரம் பிராப்யம் ஆகையாலே
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -என்று வர்த்தமானமாய் நடக்கின்றது-

இவர் தீர்க்க பந்து ஆகையாலே எல்லார்க்கும் தாம் பண்ணின பிரபத்தியே தஞ்சமாம் படி கொழுந்து விட்டுப் படரும்படி பண்ணுகிறார்
அத்தைப் பற்ற இ றே –பிரயாண காலே ராமானுஜார்யம் நமத -என்றது
இத்தால் –இவர் சரம காலத்திலே பண்ணின சரம பிரபத்தி யே
இவர் சரண் கூடின சரமபர்வ நிஷ்டர்க்கு எல்லாம்
அவ்யபிசரிதமான உபாயமாக பேற்றோடு தலைக் கட்டும் என்றதாயிற்று
பிரபன்ன ஜன கூடஸ்தரான எம்பெருமானார் தம்முடைய பெருகிப் போருகிற பெரும் கருணையினால்
பெரிய பெருமாள் திரு முன்பே சென்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டு
பிரபன்ன ஜனங்களான பெரியோர்கள் இடத்திலே பேதைகளானவர்கள் செய்யும் பெரும் பிழைக்கும் பிரபத்தியே
இவர் சரண் கூடின சரம பரவ நிஷ்டர்க்கு எல்லாம் பிராயச் சித்தமாக கடவது -என்று பிரார்த்திக்க
புருஷகார பலத்தாலே பொறுத்தோம் என்ன
இந்த பிரார்த்தனா பிரகாரத்தை
இராமானுசனைத் தொழும் பெரியோரான கூரத் தாழ்வான் ஏகாந்தத்திலே சேவித்து அனைவருக்கும் தஞ்சமாக
நசேத் இத்யாதி ஸ்லோகத்தை அருளிச் செய்தார் என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்
வாதிகேசரி அழகிய மணவாள சீயரும்
பகவந்தம் யதிவரம் ப்ரணிபத்திய யதீந்திர அங்கீ கரியான் வயரானார் -அத்தைப் பற்றப் பின்புள்ளாரும்
பிரசாதாத் ஸ்ரீ சஸ்ய-என்றார்கள்
ஈட்டுக்கு பிரவர்த்தகரான ஈயுண்ணி மாதவப் பெருமாள் பிரசிஷ்யரான நாலூர்ப் பிள்ளையும் ராமானுஜ தாசர் இ றே-
யதிவர புனர் அவதாரமாய் யதீந்திர பிரவணரான ஜீயரும் தம் சிஷ்ய புத்ரர்களுக்கு ராமானுஜ நாமத்தை உண்டாக்கி நடத்தியும்
நூற்றந்தாதியை அனுகரித்து அருளிச் செய்த யதிராஜ விம்சதியில் ஸ்ரீ வத்ஸ சிஹ்னர் அடியாக
வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்யா கூராதி நாத –என்றும்
குரூத்தம கூர நாத பட்டாக்ய தேசிகவர –என்றும்
ஸ்ரீ சைல நாதர் இடத்திலே சேகரித்தது
ஏவம்வித சம்பந்த யுக்தராய் குருகுல துல்யரான பெரிய ஜீயர் சம்பந்தம் இ றே பிரபலம்
இத்தால்
விசிஷ்ட பஷத்தில் ஊன்றின சிஷ்டராய் -அத்தாலே ஸ்ரேஷ்டருமாய் சர்வ பிரகாரத்தாலும் அஹங்கார ரஹீதமான ஆச்சார்யர்கள் சம்பந்தமே ஆதரணீயம் என்றது ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: