ஸ்ரீ-பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத தனியன் –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

ஸ்ரீ பட்டர் திருக் கோஷ்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
நஞ்சீயர் புருஷகாரம் பிறக்க
அவர்க்காக ஆழ்வார்களை அனுசந்தித்ததாய் இருக்கும் இஸ் ஸ்லோகம் –
ஆண்டாளை -நீளா-என்று தனித்து சரணம் புகுகிறதாய் இருக்கும் அஸ் ஸ்லோகம்
ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி இ றே அவள் வைபவம் இருப்பது

நிரவதிக பகவத் பிரேம யுக்தரான ஆழ்வார்கள் பதின்மரையும்
அவர்களுக்கு சேஷபூதரான மதுரகவி யதிவரர்கள் இருவரையும் தாம் நித்ய சேவை பண்ணும் படியை அருளிச் செய்கிறார்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே -என்னுமவர் ஆகையாலே ஆழ்வாரைச் சொன்ன போதே அதிலே அவரும் அந்தர்பூதர் –

—————————————————————————————————————————————–

பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்-

பூதம் –
பூதர் ஆகிறார் –மாதவன் பூதம் -என்று நிரூபிக்கும் படியான மஹத்தையை யுடையராய்
மா மல்லையில் -மாதவி கு ஸூ மத்தில் அவதரிக்கையாலே
கடல் மலை பூதத்தார் -என்று நிரூபகம் ஆனவர் -என்கை –

சரஸ்ய –
மல்லையாய் மதிட் கச்சி ஊராய் -என்கிறபடி மல்லைக்கு அனந்தரபாவியாக எடுப்பதான
கச்சி வெக்காவில் பொய்கையிலே
பூவில் நான் முகனைப் படைத்த -என்கிறபடி பொற்றாமரைப் பூவில் அவதரித்த பொய்கையார் -என்றபடி –

மஹதாஹ்வய –
மகாதாஹ்வயர்-ஆகிறார் -மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -என்னும்படியான அத்தேசத்துக்கு சமமாய் இருந்துள்ள
மாட மா மயிலையில் –
மா வல்லிக் கேணியில்
செவ்வல்லிப் பூவிலே அவதரித்து
யானுமோர் பேயன் –
பித்தர் என்றே பிறர் கூர
என்று பேசும்படியான பெயர் –
இவர்கள் மூவரும் பர விஷயத்தில் பர பக்தி பர ஞான பரம பக்திகளை யுடையராய் இ றே இருப்பது
அதில் சரம தசையான பரம பக்தியை இ றே இவர் ப்ராப்தர் ஆனது –

பட்ட நாத –
பட்ட நாதர் ஆகிறார் –வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனன் –என்கிறபடியே
வித்துவக் கோஷ்டியிலே சென்று
அவர்களை வென்று பரத்வ நிர்ணய முகேன பட்டர் பிரான் என்று பேர் பெற்றவர் என்கை –
இவரும்-சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் –என்னும்படி
நிரவதிக பகவத் பிரேம யுக்தராய் இ றே இருப்பது

ஸ்ரீ –
பட்ட நாத -ஸ்ரீ -என்று பின்ன பதமாய்
லஷ்மி துல்யையான ஆண்டாள் என்னுதல்-
அன்றிக்கே
பட்ட நாத ஸ்ரீ -பெரியாழ்வாருக்கு ஸ்ரீ யான ஆண்டாள் -என்று அனுசந்திக்க்கவுமாம்
திரு மகள் போல் வளர்த்தேன் என்றார் இ றே –
பக்தி சார
பக்தி சாரர் –
அன்றிக்கே ஸ்ரீ பக்தி சாரர் –
பெறர்க்கு அரிய நின்னபாதியான பத்தியான பாசனம்
பிறர்க்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டும் -என்று பிரார்த்தித்து பக்தியைப் பெற்று
பக்திசாரர் -என்று நிரூபகமாவர் என்கை யைப் பற்ற வாயிற்று –
பொன்னி சூழ் அரங்க மேய பூவை வண்ண -என்று இ றே இவருடைய முடிந்த அவாவுக்கு விஷயம் இருப்பது –

குலசேகர –
குலசேகரர் ஆகிறார் –அங்கை யாழி அரங்கன் அடி இணைத் தங்கு சிந்தை தனிப் பெரும் பித்தன் -என்னும்படி
பெரிய பெருமாள் விஷயத்தில் நிரவதிக பிரேமத்தை யுடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –
மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் இ றே –
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுத மதியோமன்றே -என்று இ றே
பெருமாள் விஷயத்திலும் இவர் ப்ரேமம் இருப்பது-
யோகி வாஹான்-
யோகி வாஹர் ஆகிறார் முனி வாஹரான பாண் பெருமாள்
இவரும் –இலங்கைக்கிறைவன் தலை பத்துதிர ஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓத வண்ணன் அரங்கத் தம்மான் -என்றும்
அணி அரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –என்றும்
அவ்விஷயத்தில் அஸ்மித அந்ய பாவராய் இருக்கும்படி யாயிற்று இவர் பக்தியும்-
பக்தாங்க்ரி ரேணு –
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனனாம் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் -என்றும் சொல்லுகிறபடியே
ததீய சேஷத்வமே நிலை நின்ற ஸ்வரூபம் என்று அறுதியிட்டு
அதுவே நிரூபகமான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -என்கை –
துளவத் தொண்டாய தொல் சீர் தொண்டர் அடிப்பொடி –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி -என்றும்
தாமே அருளிச் செய்தார் இ றே
இவர் தாம் –தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் –என்று பேசுகையாலே பகவத் பிரசாதயத்த பக்தியை யுடையவர் என்னுமது தோற்றுகிறது –
பரகால-
பரகாலர் ஆகிறார் –மருவலர் தமுடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்கிறபடியே
பகவத்விட்டுக்களான பாஹ்யர்கள் கேளார்கள் ஆகையால்
அவர்களை தோள் வலியாலும் நிரசித்து
அதுக்கும் மேலே சாஸ்த்ரிய மார்க்க பிரவர்த்தகராய் வந்த சத்ருக்களை ஸ்வ உக்தி சஸ்த்ரங்களாலும் நிரசித்து
ரங்க புரே மணி மண்டப வப்ரகணான் விதனே பரகால கவி -என்னும்படி காயிக கைங்கர்யங்களையும்
அரங்க மாலைச் சொல்லினேன் தொல்லை நாமம்
என்னுடைச் சொற்கள் என்னும் தூய மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேன் -என்று
வாசிக கைங்கர்யங்களையும் செய்து போந்தவர் என்கை –
காம்பினார் திரு வேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு -என்று பிரார்த்தித்து
பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய் எந்தாய் -என்னும்படி ஆசை தான் பெரிதாய் ஆயிற்று
அரங்கம் என்பது இவள் தனக்கு ஆசை -என்னக் கடவது இ றே –
ததீய சேஷத்வத்திலும்-நின் திரு எட்டு எழுத்தும் நன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று இ றே இருப்பது –
யதீந்திர மிஸ்ரான் –
சம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா -என்னும்படி யதிகளாலே சேவிக்கப்படும்-எதித்தலை நாதனான எம்பெருமானார் என்கை –
மிஸ்ர சப்தம் –பூஜ்ய வாசி –ராமானுஜாச்சார்யார் என்னுமா போலே
மிஸ்ரான் -என்கிற பஹூ வசனம் எல்லாரையும் சொல்லுகிறதாய்
இதிலே அனுக்தரான மதுரகவிகளையும் கூட்டி அனுசந்திக்கிறதாகவுமாம் –
மதுரகவி யாழ்வார் எதிராசராம் இவர்கள் -என்று இ றே சேர்த்தி இருப்பது
அன்றிக்கே
மிஸ்ர சப்தம் பெரியோரைச் சொல்லுகிறதாய் -அத்தாலே
சடகோபனை சிந்தை யுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவரான ம்துரகவிகளை சொல்லுகிறது என்னுதல்
அன்றிக்கே
இவரும் பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசனாய் ரங்கேச கைங்கர்ய துரந்தரராய் இ றே இருப்பது
அச்யுத பதாம் புஜ யுகம ருக்ம வ்யாமோஹம் இவருக்கும் உண்டு இ றே-
ஸ்ரீ மத் பராங்குச முநிம் –
யதீந்திர மிஸ்ரான் -என்று கீழ் உக்தமானவர்கள் எல்லாம் ஒரு தட்டும்
ஸ்ரீ மத் பராங்குச முனி -என்கையாலே ஆழ்வார் ஒருவரும் ஒரு தட்டு என்னுமது தோற்றுகிறது
எல்லாரையும் அவயவ பூதராய் உடையராய் இ றே ஆழ்வார் தாம் இருப்பது –
ஸ்ரீ மத் -என்கையாலே -ஒழிவில் காலம் எல்லாம் -பிரார்த்த கைங்கர்ய சம்பத்தை யுடையவர் -என்கை –
பராங்குசர் -என்கையாலே -மதாவலிப்தர்க அங்குசம் இட்டு -என்னும்படி இருக்கை –
வித்யா மதோ தன மத ச்த்ருதீயோ அபி ஜனான் மத -என்று சொல்லப் படுகிற முக்குறும்பை அறுக்கும் அங்குசமாய் இ றே இவர் இருப்பது
ஓதி யுணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசர் -என்றும்
தத் ராஹித்யம் யுடையவர்களை முழுதுணர் நீர்மையினார் –என்றும்
கொள்ளென்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக கொள்ளென்று தமம் மூடும் -என்றும்
பெரும் செல்வமும் அவரே -என்றும்
பரமனைப் பயிலும் திரு யுடையார் எவரேலும் -என்றும்
சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார்
அடியார் தம் அடியார் எம்மடிகள் -என்றும்
இப்படி ஸ்வ ஸூகத அங்குசத்தாலே அஜ்ஞ்ஞருடைய மும்மதங்களை
அருள் என்னும் தண்டால் தமித்து ஒட்டின படி
அன்றிக்கே
பராங்குசர் என்று
நிரந்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை ஸ்வ ஸூ கதி அங்குசத்தாலே வசீகரிக்க வல்லவர் -என்னவுமாம்
வலக்கை யாழி இடக்கைச் சங்கம் இவை யுடைய மால் வண்ணனை மலக்கு நா யுடை யேற்கு-என்று தாமும் அருளிச் செய்தார்
சக்ர ஹச்தேப சக்ரம் -என்று பின்புள்ளாரும் பேசினார்கள்-

முனி -சப்தத்தால்
மனன சீலர் -என்கிறது
எண்ணாதன்கள் எண்ணும் நன் முனிவர் இ றே
பர ரஷணமே யாயிற்று இவர் சிந்தா மூலத்திலே சிந்தித்து இருப்பது
சர்வேஸ்வரன் யுடையவும் சம்சாரிகள் யுடையவும் சம்ரஷணத்திலே யாயிற்று இவர் திரு உள்ளம் உற்று இருப்பது
ஆளுமாளார்
தனிமையும் பெரிது யுனக்கு
அவத்தங்கள் விளையும் என் சொற்கொள்
உலகினது இயலவே
இவை என்ன உலகு இயற்க்கை –என்றும்
இவர்கள் துர்கதியைக் கண்டு
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ்வுயிர்க்கும் -என்றும் உபதேசித்து திருத்திப் போருமவர் இ றே
இவரும் –மதிநலம் அருளப் பெற்று ஆராத காதலை யுடையராய் இ றே இருப்பது
பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முனி என்கையாலே
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஆழ்வாரேலே இருவரும் ஸூ சிதர் என்னுமதுவும்
பராங்குச பரகால யதிவராதிகள் -என்கிற பிரபன்ன ஜன கூடஸ்தவமும் தோற்றுகிறது
திருவிக்ரமன் அடி இணை மிசை -என்றும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரை -என்றும் நிர்தேசித்து
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்
லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபு என்றும் இ றே இவர்கள் பிரபத்தி பண்ணும் க்ரமம் இருப்பது
இந்த க்ரமம் ஆழ்வார்கள் எல்லாருக்கும் ஒக்கும் இ றே
த்ரிவிக்ரம க்ரமாக்ராந்த –
இவர்கள் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தாங்கள் கற்றதை இ றே பேசி ஓதச் சொல்கிறது
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும்
மனமுடையீர் மாதவன் என்று ஓதுமின்
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹச தைவம் வக்தா -என்று
உடையவரும் பெரிய பெருமாள் இடம் கேட்டு உபதேசித்தும்
பாருலகில் ஆசை யுடையீர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் –என்று பேசியும் வரம்பு அறுத்து செய்து அருளினார் இ றே
உடையவர் தாம் த்வயத்தை ஞானாதிகர்க்கு ப்ரீத்தி அதிசயத்தாலே புன புன உபதேசிக்கையும்
அஜ்ஞ்ஞர்க்கு அவர்கள் அனர்த்த தர்சனத்தாலே அருள் விஞ்சி பிரசாதிக்கையும் ஆகிற ஆகார த்வயமும் உண்டு இ றே
எட்டும் இரண்டும் அறிவித்த எம்பெருமானார் இ றே-

யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத பராங்குச முநிம்-என்கையாலே
திருவாய் மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களாலும்
ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூ க்தியாலும் தர்சனத்தை நடத்திப் போருமவர்களாய்
ஆழ்வாருக்கு சரணவத் பரதந்த்ரராய்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் –என்றும் –
சடகோபத் தே மலர் தாட்கு ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை -என்றும்
ஆழ்வார் திருவடிகளுக்கு அத்யந்தம் அந்தரங்கமான ஆகாரத்தை பற்ற அண்மையாக அருளிச் செய்தது –
ஆழ்வானும்-ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே -என்று அருளிச் செய்து அடுத்த ஸ்லோகத்திலே
தத் சம்சரயேம வகுளாபரண அங்க்ரி யுக்ம-என்று ஆழ்வாரை அனுசந்தித்து அருளினார் –
யதீந்த்ராய சடத்விஷே -என்று இ றே சேர்த்தி இருப்பது –

பூதம் சரஸ்ய -என்று தொடங்கி-ஆழ்வார்களோடு அவர்களையும் –யதீந்திர மிஸ்ராம் ஸ்ரீ மத பராங்குச முநிம் -என்று சஹபடித்தது -இவர்கள் பாரதந்த்ர்யம் தோற்ற –
யோ நித்யம் -மாதா -என்று இரண்டு தனியனாலும் விசேஷித்து ஆச்சார்யர்களை அனுசந்தித்தார்கள்
குரு பரம்பரையிலும் த்வயத்திலும் எம்பெருமானை அனுசந்திக்குமா போலே –
அதிலும் உடையவர் பிரதான்யத்தாலே -யோ நித்யம் -முற்பட இருக்கும்
ஆகையால் யதிவரசரமராய் அவரோடும் தசமரான தேசிகர்களையும் தேசிக குல கூடஸ்தரான சடரிபு சரணங்களையும் பிரணாதோச்மி நித்யம் என்று
நித்ய சேவை பண்ணும்படி சொல்லுகிறது
உபகாரத்துக்காகில் –தஸ்மை நம-என்று ஒரு கால் அனுசந்திக்குமதே உள்ளது –
ப்ராப்ய புத்த்யா சதா வி றே –
பராங்கு சாத்யைர் பக்தை ரப்யாசார்யைஸ் ஸமுப ஸ்திதம்
அத்ர பத்ரசாபி –என்று அங்கும் அநு வர்த்தகம் உண்டாக இ றே அருளிச் செய்தது –
பிரணதோஸ்மி -என்று ததீய விஷயத்தில்
நிப்ருத ப்ரணத ப்ரஹ்வ-என்கிறபடியே த்ரிவித கரண ப்ரவணதையாலே ப்ரணாமம் பண்ணுகிறேன் -என்கிறார்
இத்தால்
பக்தி பாரவச்ய பிரபன்னரான ஆழ்வார்களும்
அவர்களோடு விகல்ப்பிக்கும் படியான ஸ்ரீ பாஷ்ய காரரும்
சர்வதா பஜ நீயர் என்றது ஆயிற்று –
சடரிபு கலிஜித் சரோ பூத வேதாள கோதா குரூன் முனி வஹ குலசேகரௌ பக்த பத்ரேணு பக்த்யர்ணவௌ
மதுரகவி மாதோ யதீந்த்ரம் ததா அன்யான சேஷான் குரூன் ஸ்ரீ யம்பி வஸூ தாஞ்ச நீளாஞ்ச வைகுண்ட நாதம் ஸ்ரேயே-
என்று இ றே ஆழ்வார்களை தொடங்கி சேவிக்கும் க்ரமம் இருப்பது –

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: