திரு எழு கூற்று இருக்கை —தனியன்-ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

ஸ்ரீ யபதியான எம்பெருமானுக்கு திரு மதிள் போல் -அரணாய் -ரஷகமாய் இருப்பவையான
பெரிய திருமொழி
திருக் குறும் தாண்டகம்
திரு வெழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திரு மடல்
திரு நெடும் தாண்டகம்
என்கிற ஆறு பிரபந்தங்கள் அருளிச் செய்த ஆழ்வார் உடைய
திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி
அவருக்கு மங்களா சாசனம் செய்கிறது இத் தனியனிலே –
ஆச்சார்யர்கள் நேரில் ஸ்துதிக்கத் தக்கவர்கள் -என்று பிரமாணம் கூறுகின்றது –
இவ்வாழ்வாரும் அர்ச்சாவதாரமாய் திவ்ய தேசங்களில் பிரத்யஷமாய் எழுந்து அருளி இருக்கிறார் –
அத்தகைய இவருக்கு பல்லாண்டு கூறுகிறது இத்தனியன் –

————————————————————————–

ஸ்ரீ எம்பெருமானார் அருளி செய்த தனியன்–

வாழி பரகாலன் வாழி கலி கன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்
மங்கையர்கோன் தூயோன் சுடர் மான வேல்–

————————————————————————–
வாழி பரகாலன்-
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலனானவன் வாழி

வாழி கலி கன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர்
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக யுடையராய்
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல் –
அங்கே வாழுகிறவர் -என்னுதல்

வாழ் வேந்தன்-சுடர் மான வேல் வாழியரோ
வாழியரோ -என்று-ஆழ்வாரையும்-அவர் திருக்கையில் வேலையும் ஒரு காலே ஆஸாசித்த படி

மாயோனை –
கடி அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே
வாள் வலியால் மந்திரம் கொண்டது-தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாள் இறே –

வாள் வலியால் மந்திரம் கொள்-
கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்தில்
இறே மந்திரப் பொருளைக் கைக் கொண்டது
வாழி சுழி பொறித்த நீர்ப் பொன்னி தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் வாழி-இயல் சாத்து
கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவேரி நீர் செய் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார் -நாச்சியார் திருமொழி -11-6-
மந்திரத்தை -அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரம் -திருநெடும் -4-பற்றி இறே மந்திரம் கொண்டது –

மங்கையர்கோன்-
மங்கை மன்னன் இ றே-திரு மங்கை நாட்டுக்கு மன்னன் அன்றோ இவர்

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப் யந்தர ஸூ த்தியை யுடையவர்
அனன்யார்ஹ சேஷத்வம்
அநந்ய சரண்யத்வம்
அநந்ய போக்யத்வம்
போன்ற அகத்தூய்மைகள்
பஞ்ச சம்ஸ்காரம் புறத்தூய்மை
அங்கமலத் தட வயல் சூழ் ஆலிநாடன் அருள்மாரி யரட்டமுக்கி யடையார்சீயம்
கொங்கு மலர்க் குழலியர் கோன் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -3-4-10-

சுடர் மான வேல்
சுடர் -தேஜோ ரூபமான
மான -பெரிய
பிரகாசத்திலும் பெருமையிலும் மிக்க வேல்-
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

தூயோன் வேல் வாழியரோ
இத்தால் ஆழ்வாரோபாதி ஆயுதமும் ஆசாஸ்யம் -என்றபடி
நின் கையில் வேல் போற்றி -என்னக் கடவது இ றே
இது தான் கொற்ற வேல் -3-4-10-ஆகையாலே வெற்றி வேலாக இருக்கும்
அத்தாலே-பொங்கும் பரிவாலே – இதன் விஜயத்தை வேண்டுகிறது –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: