ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -கூரத் ஆழ்வான்-
சர்வ ஆத்மா ஹிதைஷியாய் -ஆப்ததமராய் -குரூத்தமரான கூரத் ஆழ்வான்
அனைவருக்கும் குரு பரம்பர அநு சந்தானத்தாலே உஜ்ஜீவனம் உண்டாம் படி அருளிச் செய்ததாய் இருக்கும் –
ஆகையால் இறே சர்வ சிஷ்யர்களும் இத்தை அங்கீகரித்து அனுசந்தித்துக் கொண்டு போருகிறது –
லஷ்மி நாத சமாரம்பாம் –
அதில் முற்பட –ஸ்ரீ ரீதராயாதி குரவே -என்று
ரஹச்ய த்ரய பிரதிபாதகத்வத்தாலே –பிரதம குரு ஸ்ரீயபதியான எம்பெருமான் ஆகையாலே முற்பட அருளிச் செய்கிறார் –
நர நாரணனனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்-என்றும்
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் என்பர் -என்றும்-
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று -என்றும்
பண்டே பரமன் பனித்த பணிவகை என்றும் சொல்லக் கடவது இ றே
குரு ஸ்தவமேவ-
குருரபி
பக்த முக்தக முக்தாஹாரம் மம குரும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து
அறியாதன அறிவித்த அத்தா
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஆயிற்று அனுசந்தித்துப் போருவது
பெரிய பிராட்டியாருக்கு முற்பட வாயிற்று சர்வேஸ்வரன் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் த்வயத்தை அருளிச் செய்தது –
தவத்த ஏக மயா ஸ்ருத -என்றாளே-
அவன்தானும் -புரா மந்திர த்வயம் ப்ரஹ்மன் விஷ்ணு லோகே மகா புரே
தஸ்மின் நந்தபுரே லஷ்ம்யை மயா தத்தம் சனாதனம் -என்று அருளிச் செய்தான் இ றே
அத்தாலும்
கடகத்வத்திலே முற்பாடு உடையவள் ஆகையாலும்
மற்றையார்க்கு கடகத்வம் அவள் அடி ஆகையாலும்
லஷ்மி நாத சமாரம்பாம் -என்று மிதுனச் சேர்த்தியாக அருளிச் செய்தது –
இறையும் அகலகில்லேன் -என்று இருக்கையாலே பிரிந்து நிலை இல்லை
லஷ்மிக்கு லஷ்மிதந்த்ரத்திலே பிரபத்தி பிரவர்த்தகத்வம் உண்டு இறே-
சமாரம்பாம் என்று இவர்கள் தொடக்கமாக குரு பரம்பரையைச் சொல்லுகையாலே
ஸ்ரீ விஷ்வக்சேன சம்ஹிதையிலே பகவானால் பிரபத்தி உபதேசம் பண்ணப் பட்டதாய் சொல்லப் படுமவருமாய்
தத்தத்த வச்தோசித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா-என்று
பூ வளரும் திரு மகளாலே யருள் பெற்று –அத்தாலே
ஸ்ரீ மதி விஷ்வக்சேன -என்னும்படி கைங்கர்ய ஸ்ரீயையுடைய சேனை முதலியாரும்
திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
திரு மா மகளால் அருள் மாரி
என்னும்படியான பிரபன்ன ஜன கூடஸ்தரும் ஸூசிதர்
சேனை முதலியாரும் -விஷ்வக்சேன சம்ஹிதை யாதிகளிலே கஜா நநாதிகளுக்கு ப்ரபத்தியை வெளியிட்டு அருளினார் இ றே
இப்படி வெளியிட்ட பிரகாரத்தை இத்யுக்தவான் ஜகன் நாதோ த்விரதா நனமாம் பிரதி -என்று தாமே அருளிச் செய்தார் -அத்தைப் பற்ற வாயிற்று –
நமஸ் சேநாதிபதயே ஜ்ஞான யாதாம்ய தாயினே -என்று அத்யாத்மசிந்தையிலே அருளிச் செய்தது
அவ்வளவன்றிக்கே ஆழ்வார் அவதார வைபவத்தை சனத்குமாரர் மார்கண்டேய புராணத்தில் ஒரு அத்யாயம் எல்லாம் சேர
அருளிச் செய்தார் ஆகையாலே இவர்கள் அளவும் விவஷிதம் –
நாத யாமுன மத்யமாம் –
இந்த குரு பரம்பரையில் ஆதி மத்ய அவசானங்களை அருளிச் செய்கிறவர் ஆகையாலே
நாத யாமுனர்களை மத்யம பதஸ்தராக அருளிச் செய்கிறார் –
நாத முனிகளும் யாமுன முனிகளும் -அவர்கள் தான் பரம ஹம்சர் இ றே
நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்றும் -என்று இ றே ஆச்சார்யஹிருதயத்தில் அருளிச் செய்தது –
அவனும் அன்னமாய் இ றே அருமறைகளை அருளிச் செய்தது –
ஏவம்விதரான இவர் தான் மதுர கவிகளின் உடைய திவ்ய பிரபந்த அனுசந்தானத்தாலே
ஆழ்வார் உடைய –அருள் பெற்ற நாதமுனி யானார் –
அந்த நாதமுனி அருளாலே இ றே யமுனைத் துறைவர் அவதரித்து-தர்சனத்தை ஆள வந்தார் ஆனது –
நாதோ பஜஞம் ப்ரவ்ருத்தம் பஹூபி ருபசிதம் யாமு நேய பிரபந்தை -என்னக் கடவது இ றே
அவ்வளவு அன்றிக்கே
விஷ்ணு பக்தி பிரதிஷ்டார்த்தம் சேநேசோ அவதரிஷ்யதி -என்று
ஸ்ரீ சேனாபதி ஆழ்வார் அவதாரமாக நம் ஆழ்வாரைச் சொல்லிற்று இ றே
ஆளவந்தாருக்கு பிரபத்தி அர்த்த உபதேசம் பண்ணுகைக்கு அடியான உய்யக் கொண்டாரும்
மணக்கால் நம்பியும் இவர்கள் இடையிலே அடைவு படக் கடவராய் இருப்பார்கள்
நாத யாமுன மத்யமாம் -என்று ஆழ்வான் அனுசந்தான க்ரமமாயிற்று இது
இவரை ஒழிந்த மற்றையார் –அஸ்மத் குரு சமாரம்பாம் யதிசேகர மத்யமாம்
லஷ்மி வல்லப பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் இ றே அனுசந்திக்கப் போருவது-
உடையவர் தான் குருபரம்பரைக்கு நடுநாயகம் இ றே
அவர்தாம் ஆழ்வானுக்கு சதாச்சார்யர் ஆகையால் அஸ்மத்சார்ய பர்யந்தம் என்கிறது –
அஸ்மத் குரோர் பகவதோ அஸ்ய தயைக சிந்தோ ராமானுஜச்ய -என்னக் கடவது இ றே
ராமானுஜாங்க்ரி சரணோ அஸ்மி -என்றும் அனுசந்தித்தார் –
இதிலே யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன் ஆகையாலே
ஆளவந்தாருக்கு சரணத்வயம் என்னலாம்படியான பெரிய நம்பியும் ஸூ சிதர்
இளையாழ்வாரை விஷயீ கரித்த அனந்தரத்திலே-
இளையாழ்வீர் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் போது-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் வானோர் வாழ எழுந்து அருளினாப் போலே
மேலை வானோர் வாழ இவரும் தமக்கு அடியேனான அடியேனை அப்படியும் யுமக்கு வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் -என்று அவர் அருளிச் செய்தார்
அத்தைப் பற்ற யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தார் -என்று
திரு நாராயண புரத்தில் திருவாய்மொழி யாச்சார்யர் அருளிச் செய்தார் –
உடையவரை குரு பங்க்தி ஹார நாயகமாக நடுவே அனுசந்திக்க வேண்டி இருக்க
யதா பாடம் எல்லாம் அனுசந்திக்கிறது –ஆழ்வான் திவ்ய ஸூ க்தி என்னுமது அறிக்கைக்காக —
இதில் ஆச்சார்யா அபிமான யுக்தராய் இவ்வருகிலும் யுண்டான அனைவரும் ஸ்வாச்சார்ய பர்யந்தமாக அனுசந்திக்கும் போது
நாத யாமுனர்களை நடுவாக சொன்னது யதிவரர்க்கும் உப லஷணம் ஆகிறது என்று கண்டு கொள்வது
அஸ்மத் ஆச்சார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் -என்கிற இத்தால்
ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா வர்த்ததாம் அபி வர்த்ததாம் -என்று எம்பெருமானார் திவ்ய சங்கல்ப்பத்தாலே வர்த்தித்துக் கொண்டு போருகிற
ஆச்சார்ய பரம்பரையானது ஸ்வாச்சார்ய பர்யந்தம் சேவிக்கப்படுமது என்கிறது –
எம்பெருமானைக் காட்டிலும் குருபரம்பரை அதிகம் -குரு பரம்பரையில் காட்டிலும் ஸ்வாச்சார்யன் அதிகன் -என்னக் கடவது இ றே
அஸ்மத் தாச்சார்யபர்யாந்தம் -என்கையாலே இவ்வருகுள்ளார்க்கு உத்தேச்யராய் –பிரபத்தி மார்க்க பிரவர்த்தகரான
கூரத் ஆழ்வான் -அவர் செல்வத் திருமகனாரான ஸ்ரீ பட்டர் -நஞ்சீயர் -நம்பிள்ளை -வடக்குத் திருவீதிப் பிள்ளை
பிள்ளை லோகாச்சார்யார் -கூர குலோத்தம தாச நாயன் –
திருவாய்மொழிப் பிள்ளை -பெரிய ஜீயர் -முதலாக –
சர்வ குரூப்ய-என்னும் அவர்கள் எல்லாரும் அனுசந்தேயராம்படி ஸூ சிதர் –
வேதாந்தச்சார்யரான அண்ணாவும்
பத்யு ஸ்ரீய பதாப் ஜாப்யாம் பிரயுஞ்ஜா நாய மங்களம்
ஸ்ரீய க்ருபாமய ஸூ தா சிந்து ஸ்ரோதோவகா ஹி நே
ஆஸ்து மங்கள மார்யாய ரம்ய ஜாமாத்ரு யோகி நே -என்று தொடங்கி
யதீந்திர ப்ரவணா யாஸ் மத்குரவே குணசாலினே
பிரயுஞ்ஜே மங்களம் ம்ய ஜாமாத்ரு வர யோகி நே-என்று நடுவாகவும்
பூர்வா சார்யேஷூ சர்வேஷூ பூர்ணப்ரேமா நுபத்னனே
மங்களம் ரம்ய ஜாமாத்ரு முநீந்தராய தயாளவே
பஸ்ய ஸ்ரீ சைல நாதார்ய பரிபூர்ண க்ருபாஜூஷே
ரம்ய ஜாமாத்ரு முனயே மகாபாகாய மங்களம் –என்று
ஸ்ரீ யபதியைத் தொடங்கி
ஸ்ரீ மத் ராமானுஜார்யர் நடுவாகவும்
ஸ்ரீ சைல தயா பாத்ரரான பெரிய ஜீயர் அளவும் சேகரிக்கையாலே-இதுவே ஸூத்த சம்ப்ரதாயம்
மநு விபரீதம் போலே இதுக்கு புறம்பானது அசம்ப்ரதாயம்
உபாயாந்தர உபதேஷ்டாக்கள் ஸ்வரூப நாசகரான குருக்கள்
ஆகையால் இ றே –குரூன் சர்வ தர்மாம்ச சந்த்யஜ்ய -என்றது
சாஷாத் பலைக லஷ்யத்வ பிரதிபத்தியாலே மந்திர ரத்னத்தை உபதேசிக்குமவர்கள் இ றே -சத் குருக்கள் ஆகிறார் –
த்வயத்தின் உடைய அர்த்தத்தையும் -திருவாய்மொழியின் அர்த்தத்தையும் உபதேசிக்கிறான் யாவன் ஒருவன்
அவனுக்கே இ றே ஆச்சார்யத்வ பூர்த்தி உள்ளது என்று பிரமேய ரத்னத்திலே அருளிச் செய்தார்
ஏவம் விதமான குரு பரம்பரை இ றே சேவ்யம் என்கிறது-
மேலும் குருகுல துல்யரான வரவர முனிவருடைய பரம்பரயா-அச்மதாச்சார்யபர்யந்தாம் -என்று நடந்து செல்லுவது –
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி -என்று தொடங்கி
சௌம்யோ பயந்த்ருமுனிம்-என்று இ றே தலைக் கட்டி அருளினார்
நமஸ் த்வஸ் மத குருப்யச்ச -என்று தொடங்கி
நமோ ராமானுஜா யேதம் பூர்ணாய மஹதே நம-என்று நடுவாகவும்
ஸ்ரீ தராயாதி குரவே நமோ பூயோ நமோ நம -என்று எம்பெருமான் அளவாகவும்
வாக்ய குருபரம்பரா க்ரமத்தாலே வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்தது
இந்த க்ரமத்தை –முந்தை வினையகல முன்னருளும் ஆரியனால் எந்தை எதிராசர் இன்னருள் சேர்ந்து
அந்தமில் சீர் பொற்பாவை தன்னருளால் பொன்னரங்கர் தாள் பணிந்து நற்பால் அடைந்து உய்ந்தேன் நான் -என்றும்
அஸ்மத் குருதயா யாஸ்து யதீந்த்ராங்கி க்ரியான்வய
லபேயே லப்த விஜ்ஞானோ லஷ்மீபதி பதத்வயம் -என்று
விவரண மாலையின் அடியிலும் தத்வதீபாதியிலும் அருளிச் செய்தார்
இந்த க்ரமம் –ஆச்சார்யாணாம் அசாவசாவித்யா பகவந்த ச சாசார்யவம் சோஜ்ஞே –என்கிற ஸ்ருதியையும்
குரு பரம்பரயா பரம குரும் பகவந்தம் ப்ரணம்ய -என்கிற ஸ்ரீ பாஷ்யகாரர் வசனத்தையும் பற்றி இருக்கிறது –
ஆச்சார்யா நச்மதீ யாநபி பரமகுருன் சர்வமாச்சார்யா வர்க்கம் ஸ்ரீ மத ராமானுஜார்யம் முனிம் அகில ஜன உத்தாரண ஆவதீர்ணம்
பூர்ணார்யம் யாமுநேயம் முனி வரம்த தௌ ராம ராஜீவநேத்ரௌ வந்தே நாதம் முநீந்த்ரம் வகுளதரசமூ நாத லஷ்மி முகுந்தன் -என்னக் கடவது இ றே
லஷ்மி நாத சமாரம்பாம் -என்கிற இத்தனியனில் குருபரம்பரா க்ரமத்தையும்
தென் அரங்கனாரும் திரு மகளும் ஆதியா அன்னவயல் பூதூர் மன் ஆங்கிடையா என்னை அருள்
ஆரியனே தானளவா அன்ன குருமுறையின் சீரிய தாள் சேர்ந்து உய்ந்தேனே -என்றும் அவர் தாமே அருளிச் செய்தார்
இந்த க்ரமம் -திருவருள் மால் சேனை முதலி சடகோபன் –
நாதம் பங்கஜ நேத்ர -என்கிற தனியன்களிலும்
ஆதி முதல் மாயன் மலர் மங்கை சேனைத் தலைவன் -என்றும்
சேனைநாதன் அருள் மாறன் நாதமுனி தாமரைக் கண்ணி ராமர் வாழ் சீர் சிறந்த யமுனைத் துறைக்கு இறைவர்-செந்தொடைக்கு அதிபர் அருளினால் தானமர்ந்த எதிராசர் கூரம் வரு தலைவர் நீதி புனை பட்டர்பின்-தலைமைய மாவதச் சீயர் நம்பிள்ளை தழைத்த கண்ணர் இருவகையினர்-ஈனமின்றி அருள் உலகாசிரியன் இனிய கூர குல தாதருக்கு இன்பமேவு திருவாய் மொழிப் பிள்ளை இவர்க்குத்-தான் அடிமையாகவே ஆனவாழ்வு பெற அருளுவர் கோல மணவாள மா முனிவன் –என்று சொல்லிற்று இ றே-
இப்படி ஆரோஹா அவரோஹா க்ரமங்கள் இரண்டாலும் குரு பரம்பரையை அனுசந்திக்கக் குறை இல்லை
ஈச்வரஷ்ய ச சௌஹார்த்தம் -இத்யாதியாலே எம்பெருமான் செய்த ஆச்சார்ய சம்பந்த பர்யந்தமான உபகார பரம்பரையை அனுசந்தித்தால்
குரு பரம்பரைக்கு தலையான எம்பெருமானை முந்துற பற்ற அடுக்கும்
ஆத்மனோ ஹயாதி நீசச்ய -இத்யாதியாலும்
நாராயணன் திரு மால் -இத்யாதியாலும்
ஆச்சார்யன் பண்ணின பகவத் சம்பந்த கௌரவத்தை அனுசந்தித்தால்
அஸ்மத் குருப்யோ நம -என்று ஆச்சார்யனை முந்துற அனுசந்திக்க அடுக்கும்
குரு பரம்பரையை முன்னிடவே சரணாகதன் குறை தீரும்
பிராட்டியை முன்னிடவே சரண்யன் குறை தீரும் -என்று இ றே
ஆச்சான் பிள்ளை மாணிக்க மாலையில் அருளிச் செய்தது
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்று இ றே அருளிச் செய்தது-
குரு பரம்பரா பூர்வகம் அல்லாத த்வய அனுசந்தானமும் நாவ கார்யம் இறே
இப்படி ஆதி மத்ய அவசான சாஹிதையான சத்குரு சந்ததி சர்வ சத்துக்களாலும் சதா அனுசந்தேயம் என்றது ஆயிற்று-
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply