நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள்
தாமாக வென்னைத் தனித்து அழைத்து நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து
சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே
கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்
பிற்றை நாள் –
மாறன் மறைப் பொருளை கேக்க மணவாள மா முனியை ஏறும் அணை தனில் இருத்தி -ஸ்ரீ சைல அஷ்டகம் -1-
ரங்கீ வத்சரம் ஏகம் ஏவம் அஸ்ருணோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -ஸ்ரீ சைல அஷ்டகம் -2
ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் சௌம்யோ பயந்தூர் முனே
உத்கண்டா அஸ்தி ம்மை நமா நயத தம் தர்ஷயாச்ராயம் மண்டபம்
ஆவிச்யார்ச்சாக மூசிவா நிதி மூதா -ஸ்ரீ சைல அஷ்டகம் -2
நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை
தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-
ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் -அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்
போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்
ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –
சமாப்தௌ கிரந்தச்ய பிரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜீபூதே வரவரமுனே ரங்க்ரிசவிதே
ஹடாத்பால கச்சித்குத இதி நிரஸ்தோப்யுகத
ஐ கௌ ரங்கே சாக்யே பரிணத சதுர்ஹாய ந இதம் –ஸ்ரீ சைகள அஷ்டகம் -5-
ஸ்ரீ சைலே சேதி பத்யம் ககபதி நிலயே மண்டபே தத் சமாப்தௌ
உக்த்வாத் யேதவ்யம் ஏதன் நிகில நிஜக்ரு ஹேஷ்வாதி சத்தத்த தாதௌ -ஸ்ரீ சைல அஷ்டகம் -6
ஸ்ரீ சைலே சேதிபத்யம் ஸ்வயமிதி பகவான் ஆதி சத் ரங்கநாத -ஸ்ரீ சைல அஷ்டகம் -7
தேசம் எங்கும் ஈது திருப்பதிகள் தோறு உரைக்க நேசமுற அரங்கர் நியமித்தார் -ஸ்ரீ சைல வைபவம் -7-
ஸ்ரீ பன்நகாதீச முனே பத்யம் ரெங்கேச பாஷிதம்
அஷ்டோத்தர சதஸ்தா நேஷ்வ நுசந்தான மாசரேத்
இத்யாஞ்ஞா பத்ரிகா விஷ்வக்சேநேன பிரதிபாதிதா
ததாரப்ய மகாத் பிச்ச பட்யதே சந்நிதே புரா
வதரியாச்சிராமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கி
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியோங்கள் தேற வென்ன
சதிராக சீர் சைல மந்த்ரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவிர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –என்றும்
சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியை கேளா நிற்ப
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாத்த நின்ற சமயம் தன்னில்
பொன்னி தன்னில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்ப
சந்நிதியில் நின்று அரங்கர் தாமே அந்தத்
தனியன் உரை செய்து தலைக் கட்டினாரே -சம்ப்ரதாய சந்த்ரிகை -4/5-
வாசி அறிந்த வதரியில் நாரணனார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டுரைத்தான் இவ்வையகம் சீருறவே-கோயில் கந்தாடை அண்ணன் -மணவாள மா முனி கண்ணி நுண் சிறுத் தாம்பு -13-
திருமந்தரம் வெளி இட்டு அருளின ஸ்ரீ பத்ரி நாராயணனே இத்தையும் வெளி இட்டு அருளினார்
ஹடான் தஸ்மின் ஷணே கச்சித் வர்ணே சம்ப்ராப்ய பத்ரிகாம்
வாதூல வரதாச்சார்யா தர்ம பத்ன்யா கரே ததௌ–பஹூ முகமாக இத்தநியனை பிரகாசிப்பித்தது அருளுவதே
———————————————————————————
அழகர் கோயில் அனுபவம்
ஸ்ரீ சைல ஸூந்தரே சச்ய கைங்கர்ய நிரதோயதி
அமன்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய சம்பவ மார்யத
ஜிஹ்வாக் ரேதவ வஷ்யாமி ஸ்த்தித்வா வத ஸூ பாவ நம்
பத்யம் த்வதார்யா விஷயம் முனே ரஸ்ய மமா ஆஜ்ஞ்ஞாய
தன்யோச்மீதி ச சேனே சதே சிகோஸ்வதத ஸ்வயம்
வஹன் சிரசி தேவஸ்ய பாதௌ பரம பாவனௌ
———————————————————–
திருவேங்கடமுடையான் அனுபவம்
உபதிஷ்டம் மயா ஸ்வப்னே திவ்யம் பத்யமிதம் ஸூ பம்
வரயோகி நமாஸ்ரித்ய பவத ஸ்யாத் பரம் பதம்
இத்யுக்த்வா தம் வ்ருஷாத்ரீச ஸ்ரீ பாதாத் ரேணு மேவச
தத்த்வாஸூ பரேஷா யாமாச கச்ச யோகிவரம் ஸூ சிம்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ
த்ரிஷூ பக்திஸ்சதா கார்யா சா ஹி பிரதம சாதனம் -மா முனிகள்
பட்டர்பிரான் முதலாய பதின்மர் கலைப் பழிச்சலிலும்
சிட்டர்களாய் தினம் தோறும் திரு மணிடு வேளையிலும்
இட்டமுற உணும் பொழுதத்து ஒண் கரநீர் ஏற்கையிலும்
அட்ட திக்கும் விளங்குரைத்தார் ஆரியர்கள் அனைவருமே -ஸ்ரீ சைல வைபவம் -3
மணமுடைய மந்த்ரமா மதிக் கொள்ளீர் தனியனையே -பரவஸ்து பிரான் பட்டர் ஜீயர்
த்வயம் -நம் ஆழ்வார் த்வயம் -எம்பெருமானார் த்வயம் -பெரிய ஜீயர் த்வயம்
சடரிபுரேக ஏவ கமலாபதி திவ்ய கவி
மதுரகவிர் யதா ச சட ஜின்முனி முக்யகவி
யதிகுல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூ தாக விராட்
வரவர யோகி நோ வரத ராஜ கவிஸ் ச ததா -எறும்பி அப்பா
கண்ணன் தனக்கு ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன்
தேவில் சிறந்த திருமாற்கு தக்க தெய்வ கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
கண்ணனை பாட நம் ஆழ்வாரே
நம் ஆழ்வாரைப் பாட மதுர கவி ஆழ்வாரே
ராமானுஜரை பாட அமுதனார்
மா முனிகளை பாட எறும்பி அப்பாவே
—————————————————————————————————————————————
Leave a Reply