ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தனியன் -பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யா ஜா மாதரம் முநிம்–

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்-

நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தி நகர ஜன்மனே
பிரசாத லப்த பரமப்ராப்ய கைங்கர்ய சாலினே-என்றும்
பரம ப்ராப்ய பராங்குச சரண பங்கஜ விஷய விவித கைங்கர்ய
கரண சாதுர்ய துர்ய ஸ்ரீ சைல வர தேசிகாதீச -என்றும்
அநந்தன் திருமலை ஆழ்வார் என அவதரித்து -என்றும்
அவதார விசேஷமாய் சொல்லப்படுமவராய்
சரமபர்வமான ஆழ்வார் திருவடிகளிலே கைங்கர்யத்தை அவர் அருளாலே லபித்து வாழுமவராய்
அதிலும் அவர் திருவடிகளான எதிராசர் செம் பொற் பாதம் இரவு பகல் மறவாமல் இறைஞ்சி ஏத்தும் எழிலை உடைய
திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளுக்கு ஏற்ற கலமாய் உள்ளவரைபவ்ய ஸ்ரீ சைல நாதார்ய பரிபூர்ண க்ருபா ஜூஷே-என்னக் கடவது இ றே
ஸ்ரீ சைல பூர்ணர் கிருபையாலும்
ஸ்ரீ சைல தேசிகர் தயை யாலும்
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளமும்
தீர்த்தங்கள் ஆயிரமுமான திருவாய்மொழியும்
யதீந்திர தத் ப்ரவணர் இடங்களிலே குடி கொண்டு தேங்கிற்று-
இவரும் தன் பக்தி என்னும் வீட்டின் கண் வைத்த பின்பு இ றே பெருகி வெள்ளம் யிட்டு விளைந்தது –
ஸ்ரீ இராமாயண துக்த சிந்து –
பாலோடு அமுது அன்ன வாயிரம் –
இராமானுசன் இ றே இவரும்-

தீ பக்தியாதி குணார்ணவம் –
மதி -நலங்கள் இவருக்கு பிள்ளை அருளால் உண்டாயிற்று –
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைக தாமநி -என்றும்
லஷ்மணஸ்ய சதீ மத -என்றும்
ந தேவ லோகா க்ரமணம் -என்று தொடங்கி-த்வயா விநா ந காமயே-என்றும் இ றே ஏதத் பூர்வ அவதாரங்களிலும் ஜ்ஞா பக்திகள் பூரணமாய் இருப்பது –
ஆராவன்பு இளையவன் இ றே –
அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹாதிகள் உண்டு இ றே இங்கே
அவ்வவதாரத்தில் குறைகளும் தீர்க்க அவதரித்த இடத்திலும்
பெரிய பெருமாள் விஷயத்துக்கு அனுரூபமாக
பெரிய ஜீயருடைய அந்த ப்ரேமாதிகள் இரட்டித்து இ றே இருப்பது
நிர்மல குண மணி கண வருணாலய-என்றும்
யதா ரத்நாதி ஜலதே -என்றும்
குணா நாமா கரா -என்றும் சொல்லக் கடவது இ றே
சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ-என்றும்
யதிவர புநர் அவதார -என்றும் சொல்லக் கடவது இ றே-

இனி நம் பெருமாள் இடத்தில் பிராவண்யம் எல்லையான எம்பெருமானார் அளவும் வர்த்தித்த படி சொல்லுகிறது –
சாத்ய விருத்தியாய்க்கொண்டு சரம பர்வம் வரக் கடவதாய் இருக்கும்
யதீந்திர பிரணவம்-
அந்த பிராவண்யம் தான் –யதீந்திர ப்ரவணாய அஸ்மத் குரவே குண சாலினே –என்று
விசேஷ்ஞ்ஞரான வேதாந்தாச்சார்யாரும் விக்ருதராய்ப் பேசி அனுபவிக்கும் படியாய் இருக்கும் –
இவர் தாம் நிஜ தேசிக சந்தர்சித சம்ய மிதுரந்தர நிஹித சகல நிஜ பரவர வரமுனிவர் இ றே –
அவர் பராங்குச பாத பக்தர் –
இவர் யதீந்திர ப்ரவணர் –
அந்த ப்ராவண்யம் இ றே இவரை அனைவரையும் கால் கட்டுகிறது

வந்தே ரம்யா ஜா மாதரம் முநிம்–
வந்தே முகுந்தபிரியாம் -என்கிறது எல்லாம் இவருக்கு இவ்விஷயத்திலே யாயிற்று
ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முனயே விததே நம -என்னுமா போலே திரு நாமத்தை அனுசந்தித்து திருவடிகளில் விழுகிறார் –
இவருடைய அனுசந்தான விஷயமான மந்த்ரமும் ஸ்துதி பிரணாமமும் இருக்கும் படி இதுவாயிற்று –
வந்தே நியதோ முநிம் -என்கிறபடி -சேஷ சேஷிகள் உடைய சத்தா சம்ருதிகள்
இவர் சங்கல்ப அதீனைகளாய் இருக்கும்படியை யைப் பற்ற முனி என்கிறது-

இப்படிகளால் ஏற்றம் உடைய இவர் ஸ்துதி ரூபமான இவர் தனியன் தான்
யத் வேதாதௌ ஸ்வர ப்ரக்தௌ வேதாந்தேச ப்ரதிஷ்டித -என்று
வேதத்துக்கு ஓம் என்னுமா போலே -தராவிட வேத -தத் அங்க -உபாயங்கள் என்ன
ஏதத் வியாக்யான விசேஷங்கள் என்ன
ஏதத் சார பூதமான ரஹச்யங்கள் என்ன
இவற்றின் உடைய ஆதி அந்தங்களிலே
அகில திவ்ய தேச விலஷணராலும் அனுசந்திக்கப் படுமதாய் இருக்கும் –
இவருடைய சகல திவ்ய பிரபந்த பரவர்த்தகத்வம் பண்டு பல இடங்களிலே கண்டு கொள்வது
அதுக்கு மேலே உபய பிரதான பிரணவமான உறை கோயிலிலே இ றே இவர் உதித்து அருளிற்று –
இவருக்கு இவ்வைபவம் ஜன்ம சித்தம் –
இது பிரணவ அர்த்தம் ஆகிறது
பிதா புத்ர -ரஷ்ய ரஷக -சேஷ சேஷி சம்பந்த த்ரயமும் இவர் இடத்திலே தர்சிக்கை யாய் இருக்கையாலே
அகாரஸ் சித் ச்வரூபச்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே
உகாரஸ் சித் ஸ்வரூபாய ஸ்ரியோ வாசீ ததா விது
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம்-என்கையாலே
அகாரம் பகவத் வாசகமாயும் -மகாரம் சேதன வாசகமாயும் உகாரம் உபய சம்பந்த பிரகாசிகையும் சொல்லும் –
அவ்வானவர்க்கு மவ்வானவர் எல்லாம் உவ்வாவனவர் அடிமை என்று உரைத்தார் –என்னக் கடவது இ றே –
விளக்குப் பொன் போலே நடு நிலைத் தீபம் இ றே –
மங்கள தீப ரேகாம்
ஸ்ரியோ கடக பாவத –
ஸ்ரிய கடிகயா-என்று ஏதத் சாபேஷமாய் இ றே இருப்பது –
ஜகதோ ஹித சிந்தையை ஜாக்ரதஸ் சேஷ சாயின
அவதாரேஷ் வன்ய தமம் வித்தி சௌம்ய வரம் முநிம் -என்றும்
ஆத்மா சேஷி பவசி பகவன் நாந்தரஸ் ஸாசிதா த்வம்-என்றும்
தேவீ லஷ்மீ பவசிதயயா வத்சலத்வேன ஸ த்வம் -என்றும்
சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ -என்னக் கடவது இ றே

இப்படி முப்புரி யூட்டி இ றே இவர் அவதார வைபவம் இருப்பது
இன்னம் இஸ் ஸ்லோகத்தில் பதங்கள் தோறும் இவ்வர்த்தம் காணலாய் இ றே இருப்பது -எங்கனே என்னில்
ஸ்ரீ சைலேச -என்கையாலே அகார வாச்யனான சர்வேஸ்வரனைச் சொல்லி
தயா பாத்ரம் என்கையாலே -பகவத் அனன்யார்ஹ சேஷபூதனான சேதனன் அவன் கிருபைக்கு பாத்ரம் என்னுமத்தை சொல்லுகிறது
அடியில் பதத்தில் ஆசார்யனை அவன் தானாக சொல்கிறது விசேஷ அதிஷ்டானத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேசம் போலே –
அஜ்ஞ்ஞானத் வாந்தரோதாத் -இத்யாதி
ஆச்சார்யஸ் ஸ ஹரிஸ் சாஷாத்
தீ பக்த்யாதி குணார்ணவம் -என்கிற இப்பதத் தாலும்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றும்
ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் -என்றும்
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞான பக்தி வைராக்யங்களை பிரதிபாதிக்கையாலே
அகாரோதித பகவத் சேஷத்வத்தை பக்தியாலே சொல்லுகிறது –
ஸ்வரூபமும் உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது இறே –அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அனுபபத்தே –
ஜ்ஞானம் ஆவது -தத் ஜ்ஞானம் இறே -பகவத் ஏக அவலம்பியாய் இறே ஜ்ஞானம் இருப்பது
வைராக்கியம் ஆவது -தேவதாந்திர த்யாக பிரதானமாய் இ றே இருப்பது-

யதீந்திர பிரவணம்
யதீந்த்ரர் ஆகையாவது ஸ்வ ஸ்வரூபத்தை அனுசந்தித்து துரும்பு நறுக்காது இருக்குமவர்களை
திருத்தி -திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அடிமை செய்விக்கை –
தம் அளவிலும் யதி சப்தம் அவிஷ்டம் ஆகையாலே தத் இந்த்ரராகையைப் பற்ற பிரவணர் ஆகிறார்
பகவத் அனன்யார்ஹ சேஷத்வம் ததீய பர்யந்தம் இ றே
அன்றிக்கே
யதீந்திர பிரவணம்
அசாதாரணமான ராமானுஜ சப்த பர்யாய வாசகமாய் இறே இத்திரு நாமம் இருப்பது -அதுவும் பிரணவார்த்தம்-
ராம சப்தத்தாலே அகாரார்த்தமும்
அனுஜ சப்தத்தாலே தச் சந்த அனுவர்த்தியாய் இருக்கிற ஆத்மா ஸ்வரூபம் இ றே சொல்லுகிறது
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்தன -என்று இ றே ப்ராவண்யம் இருப்பது

வந்தே ரம்யஜா மாதரம் முநிம் –
இத்தாலும் உக்தார்த்தமே சொல்கிறது
ரம்யஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனைச் சொல்லி
முனி சப்தத்தாலே தத் அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தை உடைய பரம சேதனனைச் சொல்கிறது
ரம்ய ஜாமாதுர் மனனம் கரோ தீதி -ரம்ய ஜாமாத்ரு முனி
ஆக இவை எல்லாவற்றாலும் பிரணவ அனுசந்திக்கத் தட்டில்லை-

அயோத்யா மதுரா மாயா -என்றும் -வடதிசை மதுரை –அயோத்தி -என்றும் -அவதார ஸ்தலத்தை சொல்லுகிறபடியே
கோயிலுக்கு வடக்காய் இருக்கிற வடதிருவேங்கட நாட்டில் ஏரார் பெரும் பூதூரிலே
எம்பெருமானார் வட மொழியையும் தென் மொழியையும் வெளியிட அவதரித்து அருளினார் –
நாரணனைக் காட்டிய வேதங்கள் களிப்புற்றது தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது -என்னக் கடவது இ றே
அரங்க நகரும் மேவு திருநகரியும் வாழ வந்த மணவாள மா முனி -என்கிறபடியே

தென்னாட்டுத் திலதமான தென் குருகூரிலே பெரிய ஜீயர் தென் மொழியை வெளியிடவே அவதரித்து அருளினார் –
விரவு தமிழ் மறை மொழியும் வட மொழியும் வெளியாய்ச் செல்லும் விசித்ர வியாக்யான சேஷன்-என்னக் கடவது இ றே –
ஆர்யாச் ஸ்ரீ சைல நாதாத் –
இவருக்கும் இரண்டின் உடைய ப்ரவர்த்தகம் உண்டே யாகிலும் ஊற்றத்தைப் பற்ற ஒன்றிலே ஓதுகிறது
உடையவருடைய அவதார விசேஷம் ஆகையாலும்
மற்றும் சர்வதா சாம்யத்தாலும் யதிவர புநர் அவதாரம் ஆகையாலும்
தீர்க்க சரணாகதியை ஈன்ற முதல் தாயினுடைய மாதா பிதா போலே யோ நித்யமும் ஸ்ரீ சைலேசமும் நடந்து செல்கிறது-

இவரும் ஜன்ம பூமியை விட்டு வந்து –காவிரி நடுவு பாட்டிலே கருமணியைக் கண்டு -தன் மத்யஸ்தராய்-
வைஷ்ணவ ஸ்ரீ யோடு வாழ்ந்து கொண்டு இருந்து
ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும்
ஸ்ருதி சாகரத்தையும்
திராவிட வேத சாகரத்தையும்
பெருகப் பண்ணி பெருமாளை நோக்கிப் போந்தார் –
அவர் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தார்
இவர் பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்றும் வீடு அளிப்பான் அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மா முனிவன் என்னும் அர்த்தத்தை அருள் சுரந்தார் –
ஜீயர் அவதரித்து வெளியிடா போது கண்ணோந்தாரகமாய்இ றே உடையவர் வைபவம் இருப்பது
இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபம் இ றே இவர்
நர நாராயண அவதாரம் போலே இ றே இவர்களுடைய அவதாரமும்
நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் -என்றும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம் தநும் -என்றும்
யோ அத்யாபி சாஸ்தே-என்றும்
தஸ்யாம் ஹி ஜாகர்தி -என்றும்
இரண்டுக்கும் உண்டான தர்ம ஐக்யமும் அப்படியே -சம்பந்தமும் அப்படியே
அவர் நாராயண வைபவ பிரகாசகர்
இவர் ராமானுஜ வைபவ பிரகாசகர்
அவ்வதாரத்திலும் இவ்வவதாரத்துக்கு ஏற்றம் உண்டு
பிறப்பாய் ஒளி வரு
நாராயண
ராமானுஜ
என்று இ றே சதுரஷரிகளின் வாசி இருப்பது
இவர் சதுரரிலே தலை யாகையாலே சரம சதுர அஷரியிலே நிலை நின்றார்
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் –
தஸ்மான் மத் பக்த பக்தாஸ்ஸ பூஜா நியா விசேஷத -என்றும்
அடியேன் சதிர்த்தேன் இன்று -என்றும்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்றும் –
ஆழ்வாருக்கு மதுர கவிகளிலும் சரமமான திரு அடிகள் ராமானுஜன் ஆனால் போலே
அந்த ராமானுஜனான இவர்க்கும் ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யரிலும் சரமமான சரணங்கள் யதீந்திர பிரவணர் இ றே
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத்தனியனும் சகல வேத சாரமான பிரபத்தி போலே நிரந்தர அனுசந்தேயமாகக் கடவது

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: