திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–துவளில் மா மணி மாட–6-5-

ஆழ்வாருக்கு எம்பெருமான் தன்மைகளை விவரிப்பதில் உண்டான குதூஹலம் தன்னைப் பற்றியும் விவரிப்பதில் உண்டு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -போலே
பாகவதர்கள் பெருமையை பேசுவதிலும் பகவத் பெருமை தொக்கி நிற்கும்
ஆனது பற்றியே திருமாலவன் கவி யாகிற திவ்ய பிறந்தத்தில்
பயிலும் சுடரொளி -நெடுமாற்கு அடிமை -போன்ற திருவாய் மொழிகளும் உண்டே
எம்பெருமான் தானே தன் பெருமையை பேசலாகாது என்று
நம் ஆழ்வார் மேவல் ஆவேசித்து
அவர் திரு வாக்காலே தானே தன் பெருமைகளைப் பேசி
குருகூர்ச் சடகோபன் சொன்ன -என்று ஆழ்வார் மேலே ஆரோபணம் செய்தான்
அது போலே ஆழ்வாரும் இத்தை தானே பேசாமல் தோழிமார் பேச்சாலே அருளிச் செய்கிறார்
ஆழ்வார் பகவத் விஷயத்தில் ஈடு பட்டு இருக்கும் பெருமையை வேறு சில பாகவதர்கள் பேசுவதாக உள்ளுறை பொருள்
நாயகி பாசுரம் -17/தாய் பாசுரம் -7/தோழி பாசுரம் -3
தீர்ப்பாரை யாமினி /இத் திருவாய் மொழி -துவளில் /கரு மாணிக்க மலை மேல்
மூன்று வகை திருவாய்மொழியும் நாலாம் பத்திலும் ஆறாம் பத்திலும் உண்டு
இதில் -வைகல் பூங்கழி வாய் -மின்னிடை மடவார் -பொன்னுலகு ஆளீரோ -மூன்று மகள் பாசுரங்கள்
மாலுக்கு வையம் -உண்ணும் சோறு-இரண்டு தாய் பாசுரங்கள்
துவளில் -இத் திருவாய் மொழி -தோழி பாசுரம் –
மூன்று நிலைகளாக சொல்மாலை வழிந்தாலும் குருகூர்ச் சடகோபன் சொல் -என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும் –

இத் திருவாய் மொழிக்கு கீழும் மேலும் எல்லாம் எம்பெருமானைக் கவி பாடினார்
இத் திருவாய் மொழியில் தம்படி சொல்கிறார் —
தமக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தை அன்யாபதேசத்தாலே-
இத் திருவாய் மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது பேசுகிறார் என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார் –தாமே வேணு மாகாதே தம்படி பேசும் போதும் –ஈடு

—————————————————————————————————————————————————————————————————————————————————–

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழு
மிவளை நீரினி யன்னைமீர் உமக்காசையில்லை விடுமினோ
தவள வொண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும்
குவளை யொண் மலர்க்கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே–6-5-1-

ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் -வனவாசம் உண்டாகும் ஜோதிடர்கள் சொன்னது போலே
ஸ்ரீ பராங்குச நாயகியை துலை வில்லி மங்கலம் கொண்டு சென்றால் இழக்க நேரிடும்
இருந்தும் சேவை பண்ணி வைத்தே தீருவதே என்று இருக்கும் குடி யாகையாலே இடுப்பில் வைத்து கூட்டிச் சென்றார்கள்
அங்கே புக்கவாறே -கோல மேனியையும் -திவ்ய பூஷணங்களையும் -திவ்ய ஆயுதங்களையும்
நீர் வள நில வளங்களையும் கண்டு மெய் மறந்து வாய் வெருவத் தொடங்கினாள்
தாய்மார் உடன் உறவு செய்யும்படியான நிலையம் இல்லை யாயிற்று
தோழிகள் இடம் மீட்க வழி உண்டோ என்று கேட்க
இவள் பிரக்ருதியை அறிந்து வைத்தும் நீங்களே ப்ராவண்ய அதிசயத்தை விளைத்திட்டு
மீட்க வழி தேடுவதானால் பலன் உண்டோ –
எம்பெருமான் இடம் ஈடு படுவதில் காட்டிலும் அவன் உகந்து வர்த்திக்கும் சந்நிதியிலும்
அவ்விடத்து விமான கோபுர பிரகார மண்டபாதிகளிலும்
ஈடுபடுவதே பக்தர்களுக்கு உற்றது என்பதால்
முதலடியில்
இந்த திருப்பதி என்னே
இதில் மாடங்கள் ஓங்கி இருக்கும் அழகு என்னே
மணிகள் பதிந்து இருக்கும் அழகு என்னே
அவை துவள் அற்று பரிசுத்தமான அழகு என்னே
இப்படி வாய் வெருவு கின்றமை காட்டப்பட்டது
தவளச் சங்கு -பரபாகமான வெளிய சங்கு
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் -இடைவிடாமல் அனுபவிக்கச் செய்தேயும்
அனுபவ லேசம் இல்லாதான் போலே உடம்பு வெளுக்கப் பெற்றாயே
உன் படியே இதுவானால் என் நிலைமை என்னாகும்
தாமரைத் தடம் கண் என்றும் -இப்படி நிலைமை ஆக்கியது
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் பேதைமை செய்தனவே
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க –
நீர்மையை நினைந்தவாறே கண்களை நீர் மல்க
உள்ளம் சோர வுகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ணா நீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் -என்னும்படி
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புலகீக்ருத காத்ரவான் சதா பரகுணாவிஷ்ட த்ரஷ்டவ்யஸ் சர்வதேஹிபி
இந்த அழகிய நிலைமையை கண்ணாரக் கண்டு களிக்க வேண்டாவோ -உள்ளுறை பொருள்
நின்று நின்று குமுறும்
வாய் விட்டுச் சொலோல மாட்டாதே இன்னாப்பாலே உள்ளே குமுறா நின்றாள்
அன்றிக்கே
நின்று நின்று உகும் இறும்-உகும் -நீர்ப் பண்டம் ஆகா நின்றாள்
இறும் -தளர்ந்து விழுகின்றாள்
இந்த அர்த்தம் சிலர் சொல்ல சுவை அற்றது என்பர்
ராஜ கோஷ்டியில் உகும் இறும் என்று சிலர் பொருள் சொல்ல
விக்கிரம சிங்கன் என்பான் ஒருவன்
அங்கன் அல்ல -கன்றைக் கடக்க கட்டி வைத்தால்
முலைக் கண் கடுத்து பசு அலமந்து படுமா போலே
உள் ஓடுகிற கிலேசம் வாய் விட மாட்டாதே நோய் படுகிற இவளுக்கு இது வார்த்தையோ -என்றான்
பெரு வெள்ளத்தில் சுழிக்குமா போலே
அகவாயில் உள்ளது வெளியிட மாட்டாதே உள்ளே நின்று சுழிக்கிற படி -ஈடு –

——————————————————————————————————————————————————————————————————————————

குமிறும் ஓசை விழ வோலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசையின்றி யகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்குமற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே –5-5-2-

குமிறும் ஓசை விழ வோலி-
தேஷாம் புண்யாக கோஷத கம்பீர மதுரச்வனஅயோத்யாம் பூரயாமாச தூர்ய நாதா நு நாதித-என்று
ஒத்துச் சொல்லுவார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவார் -இயல் விண்ணப்பம் செய்வாராய்
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகிற த்வநியை உடைய

திரு நாளில் ஆரவாரம் பாவியேன் இந்த த்வனி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது
இவ்விடம் பிள்ளை கொல்லி -என்று கூப்பிடுமா போலே காணும் த்வனி இருப்பது
அவ் ஊரும் திரு நாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டு வைத்து
இவளைக் கொண்டு புகுவார் உண்டோ
கொண்டு புக்கு –
இவள் அறியாது இருக்க நீங்களே விஷய ப்ரவணை யாம் படி செய்தீர்களே
இத்தால் பகவத் விஷயத்தில் தானே அவஹாகிப்பதை விட பெரியார் அவஹாகிப்பிக்க அவஹாகிக்க வேணும் சாஸ்தரார்த்தம்
அமுத மென்மொழி யாளை
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன்
அமுதிலும் ஆற்ற இனியன் எம்பெருமானைப் பற்றிய மொழி ஆதலால் இதுவே அமுத மென் மொழி
திமிர் கொண்டால் ஒத்து நிற்குமற்றிவள்-சித்திரத்தில் எழுதின பதுமை போல் ஸ்தம்பித்து இரா நின்றாள்
விரஹ வ்யசனத்தால் சித்தார்ப்பிதை போலே
ஒரு சேஷ்டித ஷமை இன்றியே நின்று -ஆறாயிரப்படி
ஸ்தப்தோசீ உத தாமாதே சமப் ராஷ்ய -ச்வேதகேது பற்றி –
ஸ்தப்தோசீ உத -என்கிறபடியே பரி பூர்ண ஜ்ஞானரைப் போலே இரா நின்றாள் -ஈடு
பிரஹர்ஷேணா வருத்தா சா வ்யாஜஹார ந கிஞ்சன -சீதா பிராட்டி வாய் திறந்து ஒன்றும் சொல்ல வில்லை-என்னும் படி இருந்தும்
பிறகு பலவும் பேசிற்றும் உண்டே -அப்படியே இவளும் வாய் திறந்து தேவ தேவ பிரான் -இத்யாதி நாமங்களைச் சொல்லி
சர்வ பிரகாரத்தாலும் சிதிலையாகா நின்றாள் –
ஆக இப்படிப்பட்டவளை நீங்கள் ஆசைப் படுவதில் பிரயோஜனம் இல்லை -என்கிறார்கள் –

————————————————————————————————————————————————————————————————-

கரைகொள் பைம் பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி யகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி யளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க நிற்குமே –6-5-3-

அத்திருச் சோலையை உங்களுடைய ஹித வசனத்தாலே
பேர்த்துக் கொடு போமன்று அன்றோ
இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது –ஈடு
உரை கொள் இன் மொழியாளை-
உரை -கீர்த்தி -கீர்த்தி வாய்ந்த மொழியாள்
அன்றிக்கே –
அர்த்தத்தின் உள்ளே இழிய வேண்டாதே சப்தம் தானே இனிமையாய் இருக்கை
அன்றிக்கே
வ்யாக்யானங்கள் பல உண்டானாலும் ஏற்கும் மொழியை உடையவள்
ஆர்த்தர்களின் கூக்குரல் கேட்கைக்காக -திருப்பாற் கடலிலே
அவதார கந்தமாக சாய்ந்து அருளின படியை ஆச்சர்யமாக பேசுகின்றாள்
மாவலி இடத்தே மாண் உருவாய் சென்று அடியை மூன்று இரந்து-அங்கே நின்று
ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட படியை அற்புதமாகப் பேசுகின்றாள்
இப்படியிலே பராத்பரனாய் இருக்குமவன் இடையனாய் பிறந்து பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்து திரிந்த படி என்னே
என்று அந்த சௌலப்ய சௌசீல்யங்களை வாய் வெருவுகின்றாள்
அவ்வளவோடு நில்லாமல் தாரை தாரையாக கண்ணநீர் பெருகா நிற்கின்றாள்
இங்கனம் அவ்விஷயத்தில் அவஹாகித்த அவளை மீட்க வழி யுண்டோ –

—————————————————————————————————————————————————————————————————–

நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்ட பின்
அற்கம் ஒன்றும் அற வுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே-6-5-4- –

அற்கம் -அடக்கம் -மலிந்தாள் -இருக்க வேண்டிய மரியாதையை மீர் நின்றாள்
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் -திருமங்கை ஆழ்வார்
ஒற்கம் -ஒடுக்கம் -எவ்வளவு நாழிகை பகவத் திரு நாமங்களை பேசினாலும்
இளைப்போ லஜ்ஜையோ இல்லாதவள்
வேத பாராயண வைபவங்களையும் கேட்ப்பிக்க வேணுமோ
வேதங்களை ஆதியில் நான் முகனுக்கு உபதேசித்து அருளினவன் என்று அவன் இடம் காதல் கொண்டாள்
அவன் கட்டளைப்படி ஒதும்பரம பாகவதர்கள் மேல் ஆசை வழிந்து பெருகிற்று
கற்கும் கல்வி எல்லாம்-தோழியின் பேச்சாக கொண்டால் பராங்குச நாயகி பேசும் பேச்செல்லாம் எம்பெருமான் திரு நாமமாயே யாய் இருக்கும்
பராங்குச நாயகி பேச்சாக கொண்டால்
உலகில் யார் எந்த கல்வி கற்றாலும் அக்கல்வி எல்லாம் எம்பெருமான் பரமே ஒழிய
இவன் அளவில் சென்று நில்லாத கல்வி ஒன்றும் இல்லை -என்கிறாள்
உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே–திரு நாமம் வழியாக சௌந்தர்யம் சீலம் போன்ற வற்றை சிந்தித்து
மேன்மேலும் விளைகின்ற பாஹ்ய ஆப்யந்தர ஹர்ஷத்தாலே சிதிலை யாகா நின்றாள்-

————————————————————————————————————————————————————————————————————–

குழையும் வான் முகத்து ஏழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைக்கொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினோடு அன்று தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசையுற்று நோக்கியே –6-5-5-

மையாந்து -வ்யாமோஹித்து
குழையும் -பகவத் விஷயம் என்றால் ஊற்றின் கண் நுண் மணல் போலே உருகா நிற்பவள்
வான் முகத்து –
ரூபமே வாஸ்யை தன் மஹிமானம் வ்யா சஷ்டே -அகத்தில் உள்ள வை லஷண்யம் எல்லாம் முகத்தில் தெரியும்படி இருப்பவள்
ஏழையை
கிடையாது என்றாலும் மீள மாட்டாத சாபல்யத்தை உடையவளை -ஈடு
நுண் உணர்வின்மை வறுமை அக்துடமை பண்ணப் பணித்த பெரும் செல்வம் -அறிவின்மை -ஏழைமை பொருளில் –
ஆபரனத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்
ஆபரணமும் வேண்டாதே இயற்கையான அழகையும்
செந்தாமரை போன்ற திருக் கண்களையும் கொண்டு
வீற்று இருக்கும் அழகை பார் பார் என்று காட்டிக் கொடுத்ததனால் வந்த அனர்த்தம்
கண்ணநீர் மழை போலே தாரை தாரையாக பெருக
மயக்கம் குடி புகுந்து
சிறிது தெளிந்தவாறே திருக் குணங்களில் நெஞ்சு உட்புகுந்து
அத்திக்கையே உற்றுப் பார்த்து அஞ்சலி செய்கிறாள் –

————————————————————————————————————————————————————————————————————–

நோக்கும் பக்கம் எல்லாம் கரும்போடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேலத் திசை யல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே யிவள் அன்னைமீர் –6-5-6-

அத்திருப்பதி இருக்கும் இடம் ஒழிய வேறு திக்கு பார்க்கிறாள் இல்லை
வாயிலும் அவன் திருநாமமே
கரும் செந்நெல் செந்தாமரை -அங்குத்தை -ஸ்ரீ வைஷ்ணவர்களின் வி லஷணம் பிரகிருதி -ஸ்வாபதேசம் –
கரும்பு -மதுர வாக்யர்
செந்நெல் -வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே -வித்யை நிரம்பி யவர்களாய் இருந்தும் விநயமே வடிவெடுத்து
செந்தாமரை -சார க்ராஹிகளால் சேவிக்கப் படும் தன்மை
இப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவ சிராமனிகள் நிரந்த திவ்ய தேசம் –

———————————————————————————————————————————————————————————————————————-

அன்னைமீர் அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ அவன்
சின்னமும் திரு நாமமும் இவள் வாயகனகள் திருந்தவே –6-5-7-

ஆஸ்ரய பலத்தாலே வஸ்துக்கள் மேன்மை பெரும்
தன்யானி சகல வைபவேன கதிசித் வஸ்தூநி -என்றால் போலே
எம்பெருமான் உடைய லஷணங்களும் திரு நாமங்களும் இவள் வாயில் நுழைந்து அழகு பெற்றன
மயில் தோகை போன்ற கூந்தல் மான் போன்ற அழகிய கண்கள்
என் சிறகின் கீழே அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இவள் பெருமை -முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ
ஜன்மாந்தர சஹச்ர சஞ்சிதமான ஸூ க்ருத விசேஷங்கள் அடியாகவோ
எம்பெருமான் உடைய வி லஷண சங்கல்பம் அடியாகவோ
அசேதன கிரியைக்கு இவ்வளவு பலம் கிட்டாதே என்பதால் சங்கை
எம்பெருமான் உடைய சங்கல்பம் இதற்கு முன்பு வேறு எந்த வ்யக்தியிலும் பலிக்க காணாமையால் சங்கை

———————————————————————————————————————————————————————————————————————–

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கரும் தடம் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே நைந்து இரங்குமே–6-5-8-

திருக்கண் அழகிலே ஈடு பட்டு –
வேத பாராயணங்கள் -யஞ்ஞ யாகங்கள் -ஸ்ரீ தேவி பூதேவிகள் உடன் எழுந்து அருளி –
திருந்து வேதம் -ஸ்வர வர்ண க்ரமங்கள் பிறழாமல் ஒழுங்கு பட உள்ள வேதம்
திருந்து வேதமும் வேள்வியும் மலிந்து வாழும்
திரு மா மகளிரும் இருந்து வாழும் –
கரும் தடம் கண்ணி-வெளிக் கண்ணின் அழகு சொன்ன இது உட்கண்ணின் அழகு ஸ்வா பதேசத்தில் சொன்னபடி
கரிய கோலப் பிரானை விஷயீ கரிக்கின்ற விசாலமான ஞானக் கண் படைத்தவர் என்றபடி
இருந்து இருந்து அரவிந்த லோசன என்று என்றே-ஒரு கால் அரவிந்த லோசன என்னும் போது
நடுவே பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேணும் -ஈடு
நைந்து உள் கரைந்து உருகுகிற படியால் நெடுகச் செல்லாதே இடையிடையே தளர்கின்றமை -சொன்னவாறு-

——————————————————————————————————————————————————————————————————-

இரங்கி நாடொறும் வாய் வெரீ இ இவள் கண்ணநீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமால்
துரங்கம் வாய் பிறந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ ஊர்த் திரு நாமம் கற்றதர் பின்னையே –6-5-9-

அக்றிணை பொருள்களும் கூட கரையும்படி மஹத்தான- ஒ மணிவண்ணா -கூக்குரல்
மரங்களும் இரங்கக் கூடுமோ -என்று எம்பாரைக் கேட்க –
இத் திருவாய் மொழி அவதரித்த அன்று தொடங்கி
பாவ சுத்தி இல்லாத எத்தனையோ பேர்கள் உடைய
வாயிலே இது புகுந்தது என்று தெரியாது
இங்கன் இருக்கச் செய்தே யம நியமாதி க்ரமத்தாலே
பதம் செய்யப் பார்த்தாலும்
சுக்கான் பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும்
இன்று அழிகிற படி கண்டால்
சம காலத்தில் மரங்கள் இரங்க சொல்ல வேணுமோ -என்றாராம்
அசேதன ப்ராயர்களான அறிவிலிகளும் கூட ஈடுபடும்படி யாயிற்று -என்கை
கண்ணபிரான் வேணுகானம் கேட்டு
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்-என்னும்படி யானதெல்லாம்
ஆழ்வார் உடைய ஆர்த்த நாதத்திலும் ஆகச் சொல்ல வேணுமோ
துரங்கம் -குதிரை -கேசி அரக்கன்-

————————————————————————————————————————————————————————————————————

பின்னை கொல் நிலா மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே –6-5-10-

ஸ்ரீ கிருஷ்ணாவதார ஈடுபாட்டை நோக்கும் கால் -பின்னை கொல் -சாஷாத் நப்பின்னை பிராட்டியோ -என்னப் பண்ணும் –
ஸ்ரீ வராஹ பெருமாள் உள்ள ஈடுபாட்டை நோக்கும் கால் -நில மா மகள் கொல் –சாஷாத் ஸ்ரீ பூமிப் பிராட்டி -என்னப் பண்ணும்
ஸ்ரீ ராமபிரான் மேல் உள்ள ஈடுபாட்டை நோக்கும் கால் திருமகள் கொல் -ஸ்ரீ சீதா பிராட்டியோ -என்னப் பண்ணும் –
பின்னை கொல் –
எருது ஏழ் தழீஇக் கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
தாளிணை மேலணி தண்ணம்துழாய் என்றே நாளு நாள் நைகின்றதே -என்ற நைந்து
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல் கைச்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே -என்று
கண்ணபிரான் விரும்பாத நிறம் வேண்டா என்பதால் சாஷாத் நப்பின்னையா இவள் –
நிலமா மகள் கொல் –
ஆதியம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம் பொன் துழாய் என்றே ஒதுமால் எய்தினள் -என்று
பலகாலும் சொல்லி பிச்சேறியும் –
மண்புரை வையம் இடந்த வராகற்கு என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்று ஆசைப்பட்டு அறிவிழந்து
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப்புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ – என்றும்
ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போலே விண்டு கள்வாரும் மலருளவோ நும் வியலிடத்தே –
திருமகள் கொல்
தென்பால் இலங்கை வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே -என்றும்
வாழா நெடும் துன்பத்தால் என்று இரங்கார் அம்மனோ இலங்கை
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே -என்றும்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் -என்றும்
இலங்கை நகர் அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி வம்பவிழ் தண்ணம் துழாய் மலர்க்கே யிவள் நம்பும் -என்றும்
தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ -என்றும்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்றும்
கிளர் அரக்கன் நகர் எரித்த களிர் மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் —கவராத அறிவினால் குறைவிலம் -என்றும்
காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
என்னாருயிர் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் சிறு கிளிப் பைதலே இன்குரல் நீ மிழற்றேல் -என்றும்
மூன்று திவ்ய மகிஷிகள் உடன் சாம்யம் சொல்லலாம் படி
அன்றிக்கே
பின்னைகோல் நிலமா மகள் கொல் திருமகள் கொள் அன்றியே பிறந்திட்டாள் கொல்
தனிப்பட யோஜோத்து
அவர்களுக்கு இவள் படி இல்லாமையாலே
அவர்கள் ஒப்பன்று
லோகம் எல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி பிறந்தாளோ என்றுமாம் -ஈடு
என்ன மாயம் கொலோ
பகவத் விபூதியில் கூடாதது ஓன்று இல்லையே
இது என்ன ஆச்சர்யம் தான் என்கிறாள்
இவள் நெடுமாலே என்று கூவுமால் –
என்ன வ்யாமோஹம் என்று அவனுடைய வ்யாமோஹத்தின் நெடுமையை சொல்லிக் கூப்பிடுகின்றாள்
கொண்ட வென் காதல் உரைக்கில் தோழீ மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்ற
தன் வ்யாமோஹத்தை மறந்து அவன் வ்யாமோஹத்தை பேசினபடி
முன்னி வந்து
இவள் தன்னுடைய வ்யாமோஹத்துக்காக கிருஷி பன்னுகைக்காக முற்பட வந்து –

————————————————————————————————————————————————————————————————

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன்
முந்தை யாயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திரு மாலுக்கே -6-5-11-

கைங்கர்ய சாம்ராஜ்யம் ஆகிற மகா பலனை பெறுவார்
முந்தை ஆயிரம் -அநாதியான ஆயிரம்
ஆழ்வார் திரு வாக்கில் திருவவதரித்த இது அநாதி யோ சங்கைக்கு
வேத நூல் -இரும் தமிழ் நூல்
ஆஞ்ஞை ஆணை வசையில்
ஏதமில் சுருதி செவிக்கினிய
ஒதுகின்றதுண்மை பொய்யில் பாடல்
பண்டை நிற்கும் முந்தை யழிவில்லா
வென்னும் லஷணங்கள் ஒக்கும் -நாயனார்
சொல்லப்பட்ட என்றவிதில்
கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போல –
வேதத்துக்கு கர்த்தா இல்லை இதுக்கு குருகூர்ச் சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம் -ஸ்பஷ்டமாக உள்ளதே என்னில்
அநாதி நித நா ஹ்யேஷா வாக் உத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -வேதத்தை ப்ரஹ்மா சிருஷ்டித்தான் என்னுமா போலே-

——————————————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி நூற்றந்தாதி –

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால் –55-

————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: