திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–குரவை யாய்ச்சியரோடு கோத்ததும்–6-4-

கீழ் பிறந்தவாறும் -எம்பெருமான் உடைய சேஷ்டித விசேஷங்களை சிந்தித்து உருகி உள் குழைந்து தளர்ந்து பேசினார்
அந்த குறை தீருகிறது இதில்
பகவான் சேஷ்டிதங்களைப் பேசியும்
தமக்கு உண்டான ஹர்ஷ விசேஷங்களையும் பேசியும் அருளுகிறார்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று நைச்சாயானுசந்தானத்தில் பரம காஷ்டையில் நின்று பேசினவர்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
எனக்கார் பிறர் நாயகரே -என்றும்
மாறுளதோ இம்மண்ணின் மிசையே -என்றும்
ஆவலிப்புடைமை தோற்ற -சாத்விக அஹங்கார ரீதியிலே
எனக்கு தேனே பாலே கன்னலே யமுதே -என்ற பரம விலஷண மதுவை பானம் பண்ணி பேசி அருளுகிறார்
இதில் கிருஷ்ணானுபவ தத் ஏக பிரவணராய் இருந்தாலும்
அகல்கொள் வையம் அளந்த மாயன் -என்றும்
மாணியாய் நிலம் கொண்ட மாயன் -என்றும்
த்ரிவிக்ரம பிரஸ்தாபமும் உண்டு
அந்த திருவவதார சேஷ்டிதமும் கிருஷ்ணாவதார சேஷ்டிதங்கள் உடன் ஒக்கும் இ றே
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்று கேள் -என்றும்
வருக வருக வருக வாமன நம்பீ வருக இங்கே -என்றும் அருளிச் செய்தது அனுசந்தேயம் –

இத் திருவாய் மொழியில் ஆழ்வார் ஸ்ரீ வால்மீகி பகவானோடு ஒப்பார்
அவனும் ராமபிரான் அல்லது போக்கி அறியான்
அவனுடைய பிரபந்தமும் அப்படியே
இவனும் கிருஷ்ணாவதாரம் அல்லது அறியார்
இத் திருவாய்மொழி கிருஷ்ண வ்ருத்தாந்தம் ஒழிய வேறு ஒன்றைச் சொல்லாது
பாவோ நான்யத்ர கச்சதி -என்று கொண்டு பர தசையும் கூட வேண்டா என்ற
திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்றை அறியாதபடி —
பிறந்த வாற்றில் இவர்க்கு உண்டான இழவு எல்லாம் தீரும்படி
ஸ்ரீ பிருந்தாவன வ்ருத்தாந்தத்தைக் காட்டிக் கொடுக்க
கண்டு -அது பூத காலமாய்த் தோற்றுகை அன்றிக்கே
சமகாலம் போலே கிட்டி நின்று அனுபவிக்கிறார் -ஈடு-

————————————————————————————————————————————————————————————————–

குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஓன்று ஏந்தியதும்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல
அரவில் பள்ளிப்பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவு நன்பகலும் தவிர்கிலம் என்ன குறை நமக்கே –6-4-1-

அங்கநாம் அங்கநாம் அந்தரே மாதவ
மாதவம் மாதவஞ்ச அந்தரேணாம் அங்கநா-
முதலிலே குரவைக் கூத்து பேசுவான் என் –
மின்னிடை மடவாரில் உண்டான தம்முடைய ப்ரணய ரோஷத்தைப் போக்கி
தம்மைச் சேர விட்டுக் கொண்டபடி
திருக் குரவையிலே பெண்களோடு கலந்து அவர்களை அனுபவித்தால் போலே இருக்கையாலே
அது முன்னாகப் பேசுகிறார்
தான் அனுசந்திக்கில் இ றே ஓர் அடைவாக இழிவது
அவன் அனுபவிப்பித்த படியே பேசுகிறார் –
திருக் குரவையில் பெண்கள் உடன் உண்டான கலவியை யாயிற்று
இவருக்கு முதலில் காட்டிக் கொடுத்தது
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் எல்லாரோடும் கலந்த ப்ரீதி உண்டாயிற்று
இவர் ஒருவர் உடன் கலந்த பிரீதி-ஈடு

குரவை கூத்திலே சௌலப்ய சௌசீல்யம் காட்டி அருளி
பரத்வம் உள்ள இடத்தில் தானே இவை நிறம் பெறுவது
அந்த பரத்வம் காட்டி அருள கோவர்த்தன உத்தரணம்
குன்றம் ஓன்று ஏந்தி குளிர் மழை காத்தவன்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாஹதோ மதுராம் புரீம்
தவிர்கிலன் என்ன குறை எனக்கே
தவிர்கிலம் என்ன குறை நமக்கே -பாட பேதங்கள்-

—————————————————————————————————————————————————————————————–

கேயத் தீங்குழலூதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை யொண் கண்கள்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போதுஎனக்கு எவ்வுலகம் நிகரே –6-4-2-

வேணுகான சிறப்பு –நாவலம் பெரிய தீவினில் வாழும் -பெரியாழ்வார் திருமொழி
பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம் -சைலாக் நிச் ச ஜலாம்பபூவ -ஸ்லோகத்தில்
த்வம் தேஷு அந்யத மாம் பபூவித பவத் வேணுக் வணோந மாதேன -என்று
வேணு கானம் கெட்டு விகாரம் பெற்றவர்களில் கண்ணபிரானும் ஒருவன் –
நிரைமேய்த்ததும்
அறியாதார்க்கு ஆனாயனாய் போய்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –
ஐந்தாம் வேற்றுமை உருபு எலாம் வேற்றுமை உருபு
அங்கும் இங்குள்ள வாசனையால் டீயோ டீயோ என்று வாய் வெருவிக் கொண்டு இருக்கிறபடி
பின்னை தோள்கள் மணந்தது
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒரு மகனாய் ஒளித்து வளர்ந்து
இரண்டு குலத்திலும் இரண்டு பிரதான திவ்ய மகிஷிகள்
மாயா -சங்கல்ப ஞானம் ஆச்சர்யம் க்ருத்ரிமம்
எவ்வுலகம் நிகரே -அங்கு பரதவ அனுபவம் ஒன்றே -நீர்மைக்கு நிலம் அன்றே-

———————————————————————————————————————————————————————————-

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கை
சிகர மா களிறட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப்பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே –6-4-3-

மல்லர் சாணூர முஷ்டிகர்
பாண்டவ தூதன் பாடகம் –பாடு- பெருமை -அது தோன்ற எழுந்து அருளி இருக்கும் அகம் –
நீள் நெடுங்கை சிகர மா களிறட்டதும்-குவலயாபீடம் முடித்து
வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து
புகர்கொள் சோதிப்பிரான்-மல்லர்களை செற்று களிறு அட்டதும் பிறந்த புகர்
சக்ய பஸ்யதக்ருஷ்ணச்ய முகமத்யருணே ஷணம்
கஜ யுத்த க்ருதாயாச ஸ்வேதாம் புகணி காசிதம் -என்று பெண்கள் பேசிக் கொண்டவாறு
என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன்-நாடோறும் புஜித்துக் கொண்டு காலம் கழியப் பெற்றேன்
அன்றிக்கே
அனுபவிக்கப் போரும்படி காலம் நெடுகப் பெற்றேன்-

———————————————————————————————————————————————————————————————-

நோவ யாய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணை
சாவப் பாலுண்டதும் ஊர்ச் சகடமிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே -6-4-4-

ஜீயர் இப்பாட்டை இயல் அருளிச் செய்யப் புக்கால்
நோவ -என்று அருளிச் செய்யும் அழகு காணும்
ஆழ்வார் திரு மேனியிலே கயிறு உறுத்தினால் போலே -ஈடு
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்பவள் நோவும் படி செய்ய மாட்டாள் இ றே
அனுசந்திக்குமவர் உள்ளம் நோவ -என்றபடி
பிரேம்ணாத தாம பரிணாம ஜூஷா பபந்த தாத்ருங் ந தே சரிதம் ஆர்ய ஜநாஸ் சஹந்தே -அதிமாநுஷ ஸ்தவம்
உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –
உரலோடு கட்டுவதால் கண்ணனுக்கு சந்தோஷமே
திருவிருத்தம் -86- வெண்ணெய் க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை-நஞ்சீயர் -அலர்ந்தானை
ஜீயா -இது ஆழ்வார் திரு உள்ளத்துக்கு மிகவும் பொருத்தம் போலே தோன்றுகிறது -பட்டர்
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று அலர்ந்தான்
அப்படி இருக்க இரங்கிற்றும் -இங்கே எதுக்கு
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்து திரிவதையே பொழுது போக்காக கொண்டவன்
தீம்புகள் செய்ய அவகாசம் இல்லாதபடி என்கிற சங்கடமே அல்லது வேறில்லை –
ஊர் சகடம் –ஊருகின்ற சகடம் -மழை போலூடும் சகடத்தை -திருமங்கை ஆழ்வார்
இப்படி சேஷ்டிதங்களை அனுசந்தித்து
அகவாய் உடைகுலைப்பட்டு
அநந்ய பிரயோஜனனாய் காலம் போக்கப் பெற்று
அவாப்த சமஸ்த காமன் ஆனேன்-

————————————————————————————————————————————————————————————————-

வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே –6-4-5-

தேவர் இரக்க வந்து பிறந்தது -சங்கல்ப்பத்தால் முடிக்காமல்
வேண்டி -தானே விரும்பி -வந்து பிறந்தது -வடிவு அழகை-பேச்சின் இனிமை காட்டி சாதுக்களை வாழ்விக்க
பரித்ராணாயா சாது நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாப நார்த்தாயா சம்பவாமி யுகே யுகே –
மழுங்காத வை நுதிய சக்கர நல்வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே -3-1-9-
கூராழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய்
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே
உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் -என்கிற அடியார்களுக்காக
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் என்னார் இடரை நீக்காய்
கரச்த கமலான் ஏவ பாதையோ ரர்ப்பிதம் தவ –
புடைவை சுரந்தும் -நாதி ஸ்வஸ்த மநா யயௌ-மனக்குறை உடன் எழுந்தி அருளினான்
இது தோன்றவே -வேண்டி -முற்பட அருளச் செய்தது
வீங்கு இருள் வாய் வந்து பிறந்ததும்
வீங்கு இருள் வாய் ஆய்க்குலம் புக்கதும்
பூண்டு அன்று அன்னை புலம்ப
பிறந்தவன்றே தேவகியார்
முன்பே ஆறு பிள்ளைகளை இழக்கையாலும்
புத்திர வாத்சல்யத்தாலும்
கம்ச பயத்தாலும்
திருவடிகளைக் கட்டிக் கொண்டு கதற -இருபத்தினாலாயிரப்படி
காஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்து
அந்த வஞ்சக நினைவை அவனோடு போக்கினான் ஆயிற்று
இகல் -துக்கம் விரோதி குறை

—————————————————————————————————————————————————————————————————

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும்பல
அகல்கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே –6-4-6-

சபஷ கைலாச நிபச்ய கோபா பகஸ்ய பஷான் அபிதோ பபந்து வனே
தத் அந்யா நபி கோர வ்ருத்தீன் ஷேப்தும் ப்ரவ்ருத்தா இவ கேது மாலா -யாத்வாப்யூத காவ்யம்
சிறகு முளைத்த கைலாச மலை போலே கொக்கு –

அகல் கொள் வையம் அளந்ததும் -சொல்ல வில்லையே
எம்பெருமானுக்கு விசேஷணமாக அகல் கொள் வையம் அளந்த மாயன் -என்றது
கிருஷ்ண ஏக அனுபவமான திருவாய் மொழி ஆனபடியால் –

————————————————————————————————————————————————————————————————–

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே –6-4-7-

ஒரு சரித்ரத்தை எடுத்து உரைக்காமல் சமுதாய ரூபேண அருளிச் செய்கிறார்
சம்சாரிகள் விஷயமாக உள்ளம் தளர்ச்சி உடன் வந்தருளி –
சீற்றத்தை முடிக்கும் -உயிரான வாசகம்
காருண்யமே வடிவாய் கொண்ட எம்பெருமான் -சீற்றம் கொள்வது ஆஸ்ரித விரோதிகள் பக்கலிலே
ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம்
இதற்கு மணவாள மா முனிகள்

-பாகவத அபசாரம் பண்ணினால் ஈஸ்வரன் அசஹமானனாய் உசித தண்டம் பண்ணும் என்னுமத்தை ஆப்த வசனத்தால் அருளிச் செய்கிறார் –
என்று தொடங்கி–அதாவது -சங்கல்ப மாத்ரத்தாலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சர்வ சக்தியான சர்வேஸ்வரன்
தன்னை அழிய மாறி இதர சஜாதீயனாய் அவதரித்து கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூப அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம்

ப்ரஹ்லாதன் மகரிஷிகள் தொடக்கமான அவ்வவோ பாகவத விஷயங்களிலே அவ்வவர் பண்ணின அபசாரம் சஹியாமையாலே என்று
ஆப்ததமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் -என்கை
மனப்பரிப்போடே -பக்தர்கள் படும் கஷ்டங்களை பொறுத்து இருக்க மாட்டாத தயாளு த்வத்தினால் என்றபடி –
அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து-
நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்கும் தான்
கிடீர் அழுக்கு மானிட சாதியில் வந்து பிறந்தான் —
இவர்கள் பிறக்கைக்கு அடி கர்மம் –
பண்ணி வைத்தவரும் கூட அருவருக்கும் ஜன்மத்திலே கிடீர் அகர்ம வச்யனான தான் பிறந்தது
இதுக்கடி காருண்யம் -இ றே-ஈடு
சம்பவாமி ஆத்மமாயயா -ஆத்மேச்சயா -என்றபடி
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹே –
மாயா -இச்சா ரூபமான ஞானம்
தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -ஆஸ்ரித விரோதி போக்கினானாய் இருக்காய் அன்றிக்கே
தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை-
மாதாவானவள் பிரஜையை நலிந்தவர்களை
தான் நலிந்து தன் சினம் தீருமா போலே -ஈடு
புனத்துழாய் முடி மாலை மார்பன்-ஆஸ்ரித விரோதிகளை நலிந்து தன் சினம் தீர்ந்தவாறே துழாய் மாலை நல் தரிக்குமாறு
உள் வெதுப்புடன் இருக்கும் காலத்தில் புஷ்ப சந்த நாதி போகய வஸ்துக்களில் நெஞ்சு செல்லாது இ றே-

———————————————————————————————————————————————————————————————————————————————————

நீள் நிலத்தோடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும்பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே –6-4-8-

சாஷாத் கரிக்க வல்லேனாய்
இனி ஒருவித கலக்கமும் இன்றி உள்ளேன்-

——————————————————————————————————————————————————————————————————-

கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல
வலக்கை யாழி இடக்கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே –6-4-9-

கழியக் கடாய்-அண்ட கடாஹத்துக்கு அப்பால் போம்படியாக
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும்-முடியச் சென்ற ஆச்சரியமும்
வைதிகன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்த சரித்ரம்
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே -பராங்குசன்
பரனுக்கும் அங்குசன்
பர சமயத்தார்க்கு அங்குசன்

—————————————————————————————————————————————————————————————————–

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே –6-4-10

நூற்றிட்டுப் போய்-சங்கல்ப்பித்து முடித்து
மாயங்கள் செய்து –
பகலை இரவாக்குவது
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுப்பது
எதிரியினுடைய மர்மத்தைக் காட்டிக் கொடுப்பது
தொடக்கமானவற்றைச் செய்து -ஈடு
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி-க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருதுலோசன மோஹயித்வா
ஜகத் சர்வம் கத ஸ்வம் ஸ்தானம் உத்தமம் -மகா பாரத ச்லோஹம் –
ஐதிஹ்யம் -நம்பெருமாள் சந்நிதியில் ஒரு பிரம்மோத்சவம் முடிந்த அன்று ஆண்டானும் எம்பாரும் சந்தித்து
அஹங்கார மமகார தூஷிதராய் இருப்பார் பத்து கோடி பேர் நடுவே
அதி ஸூ குமாரமான திரு மேனியைக் கொண்டு
பத்து நாள் எழுந்து அருளி அபாயம் ஒன்றும் இன்றியே உத்சவ சமாப்தி யாகக் காணப் பெற்றோமே
என்று சொல்லி ஒருவரை ஒருவர் தெண்டன் இட்டு தழுவிக் கொண்டார்களாம்
அத்தை நஞ்சீயர் கண்டு இருந்து வெளியிட்டு அருளினார் -ஈடு-

———————————————————————————————————————————————————————————————————————–

நாயகன் முழு ஏழ் வுலகுக்குமாய் முழு ஏழ் வுலகும் தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்தவையாய் அவை யல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய யாயிரத்து இப்பத்தால் பத்தராவார் துவளின்ற்றியே –6-4-11-

தம்மைப் போல் கிருஷ்ண பக்தர்கள் ஆவார்கள் –
கீழ் இரண்டு திருவாய் மொழியாலும் சொன்ன அர்த்தத்தை நிகமிக்கிறது
தூய யாயிரத்து
ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி
கங்கா காங்கேய சம்பவாதி அசத் கீர்த்தகம் பண்ணின
எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் –நாயனார்
வேத வியாச பகவானும் -நாராயண கதாம் இமாம் என்று தொடங்கி பூசல் பட்டோலை
அசத் கீர்த்தனா காந்தார பரிவர்த்தன பாம் ஸூ லாம் வாசம் சௌரி கதா லாப கங்கயைவ புநீ மஹே-
பகவத் கதா கீர்த்தன கங்கையினாலே சுத்தி பண்ணினால் போலே வேண்டாதே
திருமாலவன் கவி -என்று தொடங்கி -சர்வேச்வரனுக்கு வாய்த்த திருவாய் மொழி
வேதங்களில் புருஷ ஸூ க்தம் போலேயும்
தர்ம சாஸ்த்ரங்களில் மனு ச்ம்ருதியைப் போலேயும்
மகா பாரதத்தில் ஸ்ரீ மத பகவத் கீதை போலேயும்
புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் போலேயும்
திவ்ய பிரபந்தங்களுக்குள் சாரம்
பத்தராவார் துவளின்ற்றியே –
துவளாவது குற்றம் –
அதாவது அவதாரங்களில் போகாதே
கிருஷ்ண விருத்தாந்தத்திலே கால் தாழ்வார் -ஈடு
தொண்டர் அடிப் போடி ஆழ்வார் திருவரங்கன் மேலே இருந்தால் போலே
பரமை காந்திகளாவார் –

———————————————————————————————————————————————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி –

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் -பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் –54

இங்கு மணவாள மா முனிகள் பராங்குசன் என்றது
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்று அருளிச் செய்ததைப் பற்றி –

———————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: