Archive for October, 2014

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–மாசறு சோதி–5-3-

October 29, 2014

இத் திருவாய் மொழியில் ஆழ்வார் மடலூர ஒருப்படுகிறார்
ஏறாளும் இறையோனும் -திருவாய் மொழியில் உண்டான காதல் மீண்டும் கிளர்ந்து எழுந்து
சம்ச்லேஷிக்க விரும்பி -அது நிறைவேறப் பெறாமையாலே மடலூர ஒருப்படுகிறார் –
அச்சமுறுத்தி கார்யம் கொள்ளப் பார்க்கிறார் –

கீழ்த் திருவாய் மொழியில்
வண்டார் தண்ணம் துழாய் மாதவன் -என்றும்
கரிய முகில் வண்ணன் அம்மான் கடல் வண்ணன் -என்றும்
மறுத் திரு மார்வன் அவன் -என்றும்
எம்பெருமான் உடைய மநோஹர திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்கையாலே
சம்ச்லேஷ அபி நிவேசம் பிறந்து
பெறாமையாலே மடலூர்கிறார் நாயதி சமாதியாலே
சாகரம் சோஷயிஷ்யாமி சாபமானய சௌமித்ரே பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா –
தோழி உலகு தோர் அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே -என்றும்
யாம் மடமின்றி தெருவுதோர் அயல் தையலார் நா மடங்கா பழி தூற்றி
நாடும் இரைக்கவே நாம் மடலூர்ந்தும் நம் ஆழி யங்கைப் பிரான் உடைத்
தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -என்றும்
அச்சம் உறுத்தின மாத்ரமே அன்றி முடிய நடத்தின பாடு இல்லை –
திரு மங்கை ஆழ்வாரும்
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் -என்றும்
உலகு அறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல் –
என்று அச்சம் உறுத்தின அத்தனையே உள்ளது
நாயகி சமாதியிலே பேசும் திருவாய்மொழி
ஸ்வரூபம் அறிந்து ஆறி இல்லாமல் அதி பிரவ்ருத்தி செய்யும் இது
பிரேம பரவஸருக்கு இது அவத்யம் விளைக்கக் கூடியது இலையே
ஞானம் கனிந்த நலம் -பிராப்த அப்ராப்த விவேகம் விரஹத்தால் வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் ஹேயம் இல்லையே
இதுவும் சித்த உபாயனான எம்பெருமான் பண்ணி அருளிய க்ருஷியின் பலனே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -அன்றோ
நம்மை ஆசைப் பட்டு இங்கனம் துடிக்கப் பெறுகிறதே -அவன் திரு முகம் மலர உறுப்பாகுமே
கைங்கரத்துடன் ஒத்து உபேயத்தில் அந்தர்பூதமாயே இருக்கும்

——————————————————————————————————————————————————————————————

மாசறு சோதி என் செய்யவாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறுமூரவர் கவ்வை தோழீ என் செய்யுமே –5-3-1-

அறிவிழந்து எனை நாளையம் -அறிவும் இழக்கப் பெற்று எத்தனை காலம் இருப்போம்
ஸ்வரூப ஞானம் இழந்து எத்தனையோ நாள் ஆயிற்றே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அன்றே
போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு
திர்யக்கின் காலிலே விழுந்து
தூது விட்ட அன்று அது ஞான கார்யம் என்று இருந்தாயோ
இன்று இருந்து கற்பிக்கைக்கு
அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ
தன் பகலிலே கை வைத்தால் மற்று ஓன்று அறியாதபடி பண்ணும் விஷயம் இ றே
பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆரத் தோள் -என்னக் கடவது இ றே
பிராப்தி சமயத்தில் இவ்வருகு உள்ளவற்றை நினையாத படி
பண்ணுகை அன்றிக்கே ஞானம் பிறந்த சமயமே பிடித்தும்
இவ்வருகு உள்ளவற்றை நினையாமே பண்ண வல்ல
விஷயம் அன்றோ
தன்னையும் அனுசந்தித்து லோக யாத்ரையும் அனுசந்திக்கும் படியோ அவன் படி -ஈடு
ஏசறுமூரவர் கவ்வை -ஏசுவதற்கு என்றே அற்றுத் தீர்ந்த ஊராருடைய பழி மொழி
இதுவே நமக்கு தாரகம் அன்றோ
மடல் எடுக்கை மாசு என்கிறாள் தோழி
மடல் எடாது ஒழிகை மாசு என்கிறாள் இவள்
வ்யதிரேகத்தில் இப்படி ஆற்றாமை விளையாதாகில்
நாம் காண்கிற விஷயங்களோ பாதியாமே
வடிவிலே அணைந்தவள் ஆகையாலே
முற்பட வடிவிலே மண்டுகிறாள் -ஈடு
வடிவில் மட்டும் இல்லை -அகவாயில் சீலத்திலும் அகப்பட்டாள்-ஆசறு சீலன்
குற்றம் அற்ற சீலம் -கலக்கும் போது தன் பேறாக கலந்தபடி
பாசறவெய்தி-
பாசறவு -துக்கம் -அத்தை அடைந்து -அன்றிக்கே
பாசு அறவு -பசுமை நிறம் அழிந்து -வைவர்ண்யம் அடைந்து-அன்றிக்கே
பாசு -பாசம் -பந்துக்கள் பக்கல் பாசமின்றி -அன்றிக்கே
அற-முழுவது மிகவும் -அவன் பக்கம் முழுவதும் பாசம் வைத்து

———————————————————————————————————————————————————————————————-

என் செய்யுமூரவர் கவ்வை தோழீ யினி நம்மை
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப் பூர்ந்தவே –5-3-2-

பழி பரிஹரிக்கும் படியான நிலைமை யில் இல்லையே
இனி நம்மை -தனது வடிவைக் காட்டுகிறாள்
இனி என்னை -என்னாது நம்மை -தோழிக்கும் நிற வேறுபாடு உண்டே
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வராலோ –
வாயாலே மடல் எடுக்க வேண்டாம் என்றாலும் அவளுக்கும் இதே நிலைமை உண்டே
குளிர நோக்கி அருளி சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான்
என்னுடைய ஸ்த்ரீத்வத்தை புண்டரீக நயனம் காட்டி கொள்ளை கொண்டு போனான் புருஷோத்தமன்
முந்துற முன்னம் மாமை நிறம் இழந்தேன்
மீண்டு வந்தாலும் ஆஸ்ரயம் இல்லாதபடி மேனி சருகாயிற்றே
கலக்கும் போது இது ஒரு செய்ய வாய் இருந்தபடி என்
இது ஒரு கரும் கண் இருந்தபடி என்
அவன் வாய் வெருவும்படி கேட்டு இருக்கிறபடியால்
அந்த வாயும் கண்ணும் விவர்ணமாகப் பெற்றேன்
இந்த நிலைமைக்கு பின்பு ஊரார் பழி பரிஹரிக்கை என்ற ஒரு பொருள் உண்டோ

—————————————————————————————————————————————————————————————————–

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றி யோர் சொல்லிலேன்
தீர்ந்த வென் தோழீ என் செய்யுமூரவர் கவ்வையே –5-3-3-

அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களில் நெஞ்சை பறி கொடுத்தேன்
இவை எல்லாம் என்னை தனது பக்கல் ஈடுபடுத்த இளம் பிராயத்திலே செய்த செயல்கள் -தானே

இவளுக்கு தனது பக்கல் பிராவண்யத்தை
விளைக்கை
அவனுக்கு சத்தா பிரயுக்தம்
எங்கை -ஈடு

பேய் முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்-
பிள்ளைகள் முலை உண்ணப் புக்கால்
தாய்மார் முலைக்கீழே முழுசினவாறே பாசு சுரக்கும்
பின்னைப் பாலை உண்டு உபகார ச்ம்ருதியாலே முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ணும் யாயிற்று
அப்படியே பூதனையும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே
இவனும் பிள்ளையாகவே முலைக்கு கீழே முழுசி முலை உண்டு
உபகார ச்ம்ருதியால் முகத்தைப் பார்த்து
அதரத்தில் பழுப்பு தோற்ற ஸ்மிதம் பண்ணி யாயிற்று முலை உண்டது -ஈடு –

என்னை நிறை கொண்டான்
ஒரு வ்யாபாரத்தாலே
இரண்டு ஸ்திரீ வதம் பண்ணினான்
தன்னை ஆசைப் பட்டாரில் உகவாதார்கே நன்றாய் யாயிற்று
அவளை நற்கொலையாக கொன்றான்
என்னை உயிர்க் கொலையாக கொல்லா நின்றான் -ஈடு –

இப்படி உயிர் கொலையாக கொள்ளும் விஷயத்தில் ஆசை வைப்பான் என் பெயர்ந்து போனால் ஆகாதோ -என்ன –
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றி யோர் சொல்லிலேன்
வேறு சொல் உடையேன் அல்லேன்
கேட்ட தோழி –
நாம் இவளை சேர்ப்பிக்க பட்ட பாடு சாமான்யம் அன்றே -இப்பொழுது நாமே மறப்பிக்க முயன்றாலும் மறவாதபடி என்னே என்று
உகக்க அத்தைக் கண்டவள் -தீர்ந்த வென் தோழீ-என்கிறாள்
கொண்டாடி அணைக்கிறாள்
பிராட்டி திருவடியை முதலில் இராவணன் விட்ட ஆள் என்று சங்கித்து
பின்பு பெருமாள் பக்கலில் நின்றும் வந்தவன் என்று அறிந்து உகந்தது போலே

——————————————————————————————————————————————————————————————————————-

ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5-3-4–

ஈர நெல் வித்தி –ஆசையாகிய நெல்லை விதைத்து
கடியனே -கடியன் அல்லன்
ஆழ்வார் நெஞ்சு -பெரிய வயல்
பக்தி உழவன் காதல் பயிரை வளர்த்த கிருஷி பலன்
பழி சொல்லாது இருந்தார்களே யாகில் பகவத் விஷயத்தை உபேஷித்து இருப்பாள் போலும்
எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் –
அன்னை ஹித வசனமே தண்ணீர் பாய்ச்சினது போலே
எரு அடியிலே ஒரு கால் இட்டு விடுவது
நீர் மாறாமல் பாய்ச்சப் படுவது
முளைத்த நெஞ்சப் பெரும் செயுள்
முளைப்பித்த -நஞ்சீயர் திரு உள்ளம் -அவன் அருள் இன்றியமையாதது

பெரும் செயுள்
சம்ச்லேஷ விச்லேஷங்களால்
புடை படுத்தி
நித்ய விபூதியோபாதி
பரப்புடைத்தாம் படி
பெருக்கினான் ஆயிற்று -ஈடு

பேரமர்காதல் –
பெரியதாய் அமர்ந்ததான காதல்
அமர் பூசல் பெரியதான பூசலை விளைத்த காதல் என்னவுமாம்

இப்படி செய்து அருளினவனை நிர்த்தயன் என்னலாமோ
பெரும் பாழில் ஷேத்ரஞ்ஞன் பெருஞ்செய் -சூர்ணிகை நாயனார் இந்த பாசுரம் கொண்டே அருளிச் செய்கிறார்
ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந்நோய் -வள்ளுவர்

———————————————————————————————————————————————————————————————————————

கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தான் ஆகிலும்
கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொளிடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே –5-3-5-

குணஹானியையும் என் வாயால் சொல்ல நீ கேளாய் -பீடிகை உடன்
கடியன் -என்கிறாள் கனவேகம் உடையவன் தனது கார்யத்தில்
கொடியன் -நோவே பாராதே பிரியுமவன்
நெடியமால் -மிகவும் பெரியவன் -அளவிட ஒண்ணாதவன் -பிரிந்தால் விலக்க முடியாமல் கூசி நடுங்கி இருக்க வேண்டுமே
உலகம் கொண்ட அடியன் -ஒரு அடியும் சேஷியாமல் பாதாளத்தில் தள்ளுமவன்
அறிவரு மேனி மாயத்தான் -நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு என்ற இவ்வுக்தியை அனுசந்தித்து
அதிலே நெஞ்சு அபஹ்ருதமாய் இருக்க
அவ்வளவிலே கண்ணிலே மணலைத் தூவி அகலுபவன் -ஈடு
குணஹானிகள் சொல்லப் பிறந்த சிசுபாலாதிகளாலும் என்னைப் போலே சொல்லப் போகாதே
கொடிய என்நெஞ்சம்
குணங்கள் கண்டு பற்றுவதும் குணஹானி கண்டு விலகுவதும் நாட்டார்படி
குணஹானி அன்றோ பற்றுவதற்கு எனக்கு ஹேது
அவன் என்றே கிடக்கும்
தத் சம்பந்தமே உபாதேயம்
குணஹானியில் நோக்கின்றி தர்மியான அவன் மேலேயே நோக்கு என்றுமாம்
நிர்விசேஷ சின்மாத்ரம் ப்ரஹ்ம-மாயா வாதிகள் விசேஷணம் அற்ற விசேஷ்ய அம்சத்தை அங்கீ கரிக்குமா போலே
ஸ்ரீ வசன பூஷணம் -பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று -ஸ்வரூப ப்ராப்தம் -என்று
இப்படி கொள்ளாத பொது குணஹீனம் என்று நினைத்த தசையில் பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில் சம்சாரத்தில் பிரவ்ருத்தியும் கூடாது
கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்னா நின்றார்கள் இ றே
குண க்ருத தாஸ்யத்தில் காட்டிலும் ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இ றே பிரதானம் –
அந ஸூ யைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை ஸ்மரிப்பது-
இத்தைக் கேட்ட தோழி நான் விலக்குகிறேன் அல்லேன்
தாயார் வெறுக்கும் என்று சொன்னேன் -என்ன
அன்னை என் செய்யுமே -என்கிறாள் –
உன் வார்த்தை கேளாத நானோ தாயார் வார்த்தை கேட்பேன் –
அந்நிலை கழிந்தது இல்லையோ என்கிறாள் -அன்னை என் செய்யுமே –

————————————————————————————————————————————————————————————————————————

அன்னை என் செய்யிலென் ஊர் என் சொல்லில் என் தோழிமீர்
என்னை யினி யுமக்காசை யில்லை அகப்பட்டேன்
முன்னை யமரர் முதல்வன் வண்துவராபதி மன்னன்
மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே –5-3-6-

அன்னை என் செய்யிலென்-தாயார் முடிவதையும் கணிசியாமல் இவள் நாயகன் உடைய வடிவு அழகிலே ஈடுபட்டாள் என்று
ஊரார் பழி சொன்னால் என்ன ஆகும்
வாசுதேவன் ஆகிற வலையிலே அகப்பட்டேன்
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேன் -ஆண்டாள்
எம்பெருமான் உடைய வலை -திருக் கண்கள் ஆகிற வலை -என்றுமாம் –
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் -என்பர் மேலே

ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் வழியாக அபி நயித்துப் பாடா நிற்க
திருக் கண்களைக் காட்டி அருளினார் எம்பெருமானார்
கார்த் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு -எண்ணக் கடவது இ றே
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன் -ஈடு

————————————————————————————————————————————————————————————————————————————

வலையுள் அகப்படுத்து என்னை நன்னெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடல் பள்ளி யம்மானை ஆழிப்பிரான் தன்னை
கலைகொள் அகலல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவுமாம் கொலோ தையலார் முன்பே –5-3-7-

என்னை தன்னுடைய குண சேஷ்டிதங்களால் வலைப்படுத்திக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டு அருளி இருக்கும் பெருமானை
குணஹானி சொல்லும் இவர்கள் முன்னே
நம் கண்களால் கண்டு தலையாலே வணங்கப் பெறுவோமோ –
ராஜேந்திர சோழன் என்கிற இடத்தில் கூரத் ஆழ்வான் இப்பாசுரத்தை உபன்யாசித்து இருக்கும் பொழுது
ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார் என்று நூறு பிராயம் போந்து இருப்பார் ஒரு பெரியவர்
நடுங்க நடுங்க எழுந்து இருந்து நின்று
ஸ்வாமின் தலை மகள் தலையால் வணங்கப் பெறுமோ -என்று கேட்க
அதற்கு ஆழ்வான் -இதில் என்ன சந்தேஹம்
சிஷ்டாச்சாரம் உண்டே
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் அனுஷ்டித்தாள் காணும் –
கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூ ஷூ வேயம் மனச்வி நீ
தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா சபிவாதய –
திருப்பாதுகை பெருமாளை பிரிந்து ராஜ்யாபிஷேகம் பெற்றது
பிராட்டி பெருமாளைப் பிரிந்து எழுநூறு ராஷசிகள் நடுவில் வருந்த
பத்தினி முறையால் பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா -தந்தையின் கட்டளைப்படி
திருக்கையை பிடித்தால் திருப்பாதுகை பெற்ற சிறப்பு பெற வில்லை என்று ஆராய்ந்து
ஆச்சார்யா முகேன திருவடி சம்பந்தம் பெற சிரஸா சபிவாதய-என்று சொல்லி அனுப்பினாள்
இது தான் பிரணய ரோஷம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ
அபேஷை தொடரச் சொல்லுகிற வார்த்தையோ
என்று தொடங்கி உள்ள ஈட்டு ஸ்ரீ ஸூ கதிகளில் இது விவஷிதம் –

——————————————————————————————————————————————————————————————————–

பேய் முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ
யாமுறு கின்றது தோழீ அன்னையர் நாணவே –5-3-8-

பரோபகார சீலத்வம் ஜன்ம சித்தம் எம்பெருமானுக்கு –

இப்போது அவனை ஸ்பர்சித்து நம் பிரயோஜனம் பெற ஆசைப் படுகிறோம் அல்லோம்
அன்னையர் நாணவே
பிரிந்த அநந்தரம் அவன் தானே வரும் அளவும் ஆறி இருந்திலள்
அவன் தானும் வரவு தாழ்த்தான்
என்று இரண்டு தலைக்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே
நாம் இத்தலை மடல் எடுக்கும் அளவாம்படி பிற்பாடர் ஆனோம் ஆகாதே என்று
ஹ்ரீரேஷாஹி மமாதுலா -என்கிறபடியே
அவன் லஜ்ஜித்து வந்து நிற்கிறபடியைக் கண்டு
இவனையோ நாம் வார்த்தை சொல்லிற்று -என்று
அவர்கள் லஜ்ஜித்து கவிழ் தலை இடும்படியாக -ஈடு

—————————————————————————————————————————————————————————————————————–

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்னெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான் தன்னை
ஆணை யென் தோழீ உலகு தோரலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே –5-3-9-

ஆம் கோணைகள் செய்து-செய்யக் கூடிய மிறுக்குகளைச் செய்து
குதிரியாய் -அடங்காப் பெண்ணாய் -கு ஸ்திரீ –
வாசல் விட்டுப் புறப்படாது இருக்கும் இருப்பு -நாண்
தாய்மாருக்கும் சொல்ல ஒண்ணாக படி இருக்கும் அடக்கம் -நிறை
இவை இரண்டையும் கொள்ளை கொண்டது -அதி மாத்திர ப்ராவண்யம் விளைவித்தான்
நெஞ்சமும் ஸ்வா தீனமாய் இல்லை -அத்தையும் தனது பக்கலிலே நொடித்துக் கொண்டான்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -ஊற்றம் மிக்கு இருப்பதால் நன்னெஞ்சம்
கீழே அலை கடல் பள்ளி அம்மான் -கையும் மடலுமே இவள் வந்து நிற்கக் கூடும் என்று
சேணுயர் வானத்து இருக்கும் தேவபிரான் தன்னை
எட்டாத நிலத்தில் போய் இருக்க
எனக்குச் சென்றால் என்ன
ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்-தப்ப முடியுமோ
ஆணை இட்டுச் சொல்கிறேன்
அவ்வோலக்கமும்
அவனும்
அவ்விருப்பும்
எனது கையிலே படப் புகுகிற பாடு பாராய்

—————————————————————————————————————————————————————————————————

யாமடலூர்ந்தும் எம்மாழி யங்கைப்பிரானுடை
தூமடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடமின்றித் தெருவுதோர் அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே–5-3-10-

யாம் -ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிற படி
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -போன்ற ஸ்வரூபம் ஆக இருக்க வேண்டிய நாண்
ஆறி இருக்க முடியாமல் -யாமடலூர்ந்தும்-

எம்மாழி யங்கைப்பிரானுடை-
அவன் கையும் திரு ஆழியும் போலே அன்றோ
நான் கையும் மடலுமாக புறப்பட்டால் இருப்பது
நான் கையும் மடலுமாக புறப்பட்டால் அஞ்சி எதிரே வந்து
தன் கையில் ஆபரணத்தை வாங்கி
என் கையிலே இட்டு
தன் தோளில் மாலையை வாங்கி
என் தோளில் இட்டான் ஆகில் குடி இருக்கிறான்
இல்லையாகில் எல்லாம் இல்லை யாகிறது -ஈடு

எம்பெருமான் இடம் தாம் பெற நினைப்பது திருத் துழாய் பிரசாதம் ஒன்றே
யாமடம் என்றது ஏதேனும் ஒரு மடப்பம் -பன்னீராயிரப்படி
நா மடங்கா -மடங்குதல் ஓய்தல் -நாக்கு ஓயாதே சொல்லும் பழி மொழி
-நாம் அடங்கா –

————————————————————————————————————————————————————————————————

இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள்பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –5-3-11–

என்னைப் போலே மடலூர வேண்டாதே
தாங்கள் இருக்கும் இடத்தே எம்பெருமான் தானே வந்து
நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவார்
இரைக்கும் கரும் கடல்வண்ணன்
-நிறத்துக்கும் தன்மைக்கும் –
நிறம் -மடலூர்ந்தாலும் பெற வேண்டிய வடிவு அழகு

அனந்தாழ்வான் பணித்தானாக நஞ்சீயர் வந்து பட்டருக்கு சாபமாநய சௌமித்ரே- என்ற போது
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தால் போலே ஆயிற்று
இவள் மடலூர்வன் என்ற துணிவைக் கேட்டு அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கின படி -என்று அருளிச் செய்தார் என்று -ஈடு
இத்தன்மையில் சாம்யம் -என்றதாயிற்று

வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம்
உத்தேச்ய பூமி பரமபதமாகும்
இருந்த இடமே பரமபதம் ஆகும்
நாடறிய மடலூர வேண்டா

———————————————————————————————————————————————————————————————————————

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

பகவான் ஸ்வா நாம் அதி மாத்ரம் ப்ரேமஜ நயதி இதி சடாரி அவாதீத் –
5-3-1-ஜ்யோதீ ரூபாங்க கத்வாத்-மாசறு சோதி
5-3-2-சரசிஜ நயன கத்வாத் -என் செய்ய தாமரைக் கண்ணன்
5-3-3-அநிஷ்ட வித்வம்ச கத்வாத் -ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்
5-3-4-மேகௌக ச்யாமலத்வாத் -காரார் மேனி நம் கண்ணன்
5-3-5-ச்ரித சரச தயா -என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
5-3-6-உத்க்ருஷ்ட சௌலப்ய யோகாத் -வண் துவராபதி மன்னன்
5-3-7-ரஷாயாம் சாவதா நாத் -அலை கடல் பள்ளி யம்மானை
5-3-8- ஸூ பகத நுதய-தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை
5-3-9–சோபகாரத்வாத்-தேவபிரான் தன்னை
5-3-10-அஸ்த்ரவத்வாத் -எம் ஆழி அங்கைப் பிரானுடை

———————————————————————————————————————————————————————————————————————-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உண்ணடுங்கத் தான் பிறந்த ஊர் –43

ஏசவே -என்றும் பாடபேதம்
உள் + நடுங்க- உண்ணடுங்க

—————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–பொலிக பொலிக பொலிக–5-2-

October 28, 2014

ஸ்ரீ வைஷ்ணவ சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார் இத் திருவாய் மொழியில்
சம்சாரம் பரம பதம் வாசி இன்றி ஒன்றும் தேவும் உபதேசத்தால் திருந்தின படி
ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ செய் கண்டு உகக்க நித்ய சூரிகள் இங்கே வர அவர்களுக்கு மங்களா சாசனம் என்பர் –
இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ காண லோகாந்தரத்தில் நின்றும் வந்தவர்கட்கு மங்களா சாசனம் என்பதும் ஒரு நிர்வாஹம்
அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும்
காண லோக -த்வீபாந்தரங்களில் -நின்றும் போந்த
தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு -நாயனார் –

————————————————————————————————————————————————————————————-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்திசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் –5-2-1-

சாபம் -அவசியம் அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாபம்
சித்திர குத்தன் எழுத்தால் தென் புலக்கொன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார் –
புல் எழுந்து ஒழிந்தன
தமிழ் மா முனி திக்குசரண்யம் என்றவர்களாலே — கலியும் கெடும் போலே ஸூ சித்தம் -நாயனார்
இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
கலியும் கெடும் என்று -திருமங்கை ஆழ்வார் உடையவர் போல்வார்
திரு வவதரித்து கலியுக ஸ்வ பாவமும் கலியும் என்று
மேல் வரும் அம்சத்தை தர்சித்து அருளிச் செய்தால் போலே -மணவாள மா முனிகள் –
கண்டு கொண்மின் -அனுபவத்தால் அறியும் இதுக்கு உபதேசம் வேணுமோ
முன்பு பாகவத சஞ்சாரம் இல்லாமையாலே வல்லுயிர் சாபம் நிலை பெற்று
நலியும் நரகமும் மலிந்து
நமனுக்கு விசேஷ விருந்து கிடைத்துக் கொண்டு இருந்தது
இப்போது பாகவத சஞ்சாரம்மிக மிக உண்டான படியால்
கலியும் கெடும் என்று உறுதி பட கூறத் தடை இல்லையே
பூதங்கள் பூ சத்தாயாம்
எம்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை அனுபவித்தே சத்தை பெற்றவர்கள் –

————————————————————————————————————————————————————————————-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே –5-2-2-

பெரு மிடற்றோசை செய்து இனியன பகிர்ந்து உண்ண அழைக்கிறார்
கொடு உலகம் காட்டேல்-அபாகவதர்களைக் கண்ட கசப்பு தீர –
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியைக் கண்ணார காணப் பெற்றோம் –
கண்ணுக்கு இனியன கண்டோம் –
மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே -என்றும்
பேராளான் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -என்றும்
இந்த கோஷ்டியை தொழுகையே பிரயோஜனம்
பிரயோஜனத்துக்கு ஒரு பிரயோஜனம் வேண்டாமே
தொழுது தொழுது நின்று ஆர்த்தும் -ஆரவாரிப்போம் –
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் தண்ணம் துழாய் புனைந்து இருக்கும் அழகையும்
அதிலே வண்டுகள் மதுப்பருக ஆர்ந்து இருக்கும் படியையும்
அவன் திருவின் மணாளனே இருந்து அடியாரை நோக்கிகின்ற படியையும்
நல்ல இசைகளிலேஇட்டுப் பாடி தொண்டர்கள் சம்ப்ரமம் பண்ணா நிற்கும் காட்சியை காண வாருமின் –

——————————————————————————————————————————————————————————————-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்திசை பாடி எங்கும் இடம் கொண்டனவே –5-2-3-

திரியும் கலியுகம் -தர்மங்கள் தலை கீழ் ஆகும்படியான கலியுகம்
ந ஸ்ருண்வந்தி பிது பித்ரா ந ஸ்நுஷா ந சஹோதரா
ந ப்ருத்யயன கலத்ராணி பவிஷ்யத்ய தரோத்தரம்
இரியப் புகுந்து -நல்ல ப்ரீதி கோலாஹலங்கள் உடன் வந்து
இரிதல் -இருந்த இடத்தில் இல்லாமை
நித்ய சூரிகளும்-தேவர்கள் தாமும் புகுந்து – இங்கே அடியிட்டு வந்து சம்சார மண்டலம் ஸ்ரீ வைஷ்ணவ மயமாயிற்றே
பெரிய கித யுகம் -க்ருத யுகம் த்ரேதா யுகம் த்வாபர யுகம் கலியுகம் விச்சேதம் இன்றி ஒரு போகியாக -பெரிய கித யுகம்
பேரின்ப வெள்ளம் பெருக -பரமபத இன்பம் சிற்றின்பம் என்னும்படி
மேகஸ்யாமம் மகா பாஹூம் ஸ்திர சத்வம் த்ருட வ்ரதம் கதா த்ரஷ்யாமஹி ராமம் ஜகதச் சோக நாசனம் -என்று
அயோத்யா வாசிகள் சித்ரகூடம் வாய் வெருவிக் கொண்டு வந்தால் போலே

————————————————————————————————————————————————————————————————–

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே –5-2-4-

சிறந்த வஸ்துக்கள் ச்வல்பம் -உபயோகம் அற்ற வஸ்துகள் அபரிமிதமாய் இருக்குமே
சர்வத கர வீராதீன் ஸூ தே சாகரமேகலா ம்ருத சஞ்சீவி நீ யத்ர ம்ருக்யமாண தசாம் கதா -சங்கல்ப ஸூ ர்யோதயம்
யே கண்டலக்ன துலசீன லினாஷமாலா
யே பாஹூ மூல பரிசிஹ் நித சங்கசக்ரா
யே வா லலாடபலேக லச தூர்த்வ புண்டர
தே வைஷ்ணவ புவனம் ஆசு பவித்ர யந்தி –
போலே என்பான் என் என்னில்
சாத்விகருக்கு பிறரை நலிய வேணும் என்று அபிசந்தி இல்லை இ றே
நெல் செய்ய புல் தேயுமா போலே
இவர்கள் ஊன்ற ஊன்ற
அவை தன்னடையே தேயும் அத்தனை –
எம்பெருமானார் உடைய ஸ்திதி யாதிகளை நாம் கொண்டாடுமா போலேயும்
ஆளவந்தார் நடையை ராஜா கொண்டாடினால் போலேயும்
இவர் கொண்டாடுகிற படி -ஈடு

———————————————————————————————————————————————————————————————————-

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது இவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே –5-2-5-

எங்கு பார்த்தாலும் பகவத் கோஷ்டியே சேவை சாதிக்கின்றதே
தொண்டீர் -இதர விஷயங்களில் சாபல்யமாய் இருப்பவர்களே
மாயம் -ஆச்சர்யமாக எங்கும் புகுந்து இருக்கிறார்கள்
சம்பவாமி ஆத்மமாயயா -போலே இச்சையால் -என்றுமாம்
நித்யமுக்தர்கள் கர்மம் அடியாக நசபுன ஆவர்த்ததே
இச்சையால் வரலாமே
அரக்கர் அசுரர் தொண்டீர்
நீங்களும் எங்கோ இருப்பீர்கள் ஆகில் –உங்களை கொண்டு யுகத்தை மாற்றி விடுவார்கள்
ஊழி பெயர்திடுகை -காலத்தை மாற்றிடுகை –
உங்களுக்கு பிழைக்க வகை இல்லை -இதில் ஐயம் ஒன்றும் இல்லை
வைகுந்தன் பூதங்கள் எங்கும் புகுந்து விட்டார்கள் -இதிலும் ஐயம் ஒன்றும் இல்லை
ஸ்ரீ வானர சேனையின் நடுவே
சுக சாரணர்கள் புகுந்தால் போலே
புகுரப் பார்த்தார் உண்டாகில்
உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை -ஈடு

———————————————————————————————————————————————————————————————————-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பறந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந்நிறுத்தியே –5-2-6-

சகல கிலேசங்களும் தீரும்
யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹா பாகோ மஹீயதே
ந தாத்ரா சஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிஷா தஸ்கரா-
வ்யாதி பஞ்சம் கள்வர் தலை காட்ட நேராதே
திரு ஆழிப்பிரான் பகைவர்க்களைப் படுத்தும் பாடு இவர்களும் படுத்த வல்லார்கள்
அவர்களை துணை கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுமின் –
சிந்தையைச் செந்நிறுத்தியே-சிந்தையை செவ்வையாக நிலை நிறுத்தி
பிரயோஜனாந்தரத்துக்கு மடி ஏற்காதே அநந்ய பிரயோஜனரராய் தொழ வேணும் –

———————————————————————————————————————————————————————————————————————

நிறுத்தி நும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை யுய்யக் கோள்
மறுத்துமவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால்தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் யவர்க்கே இறுமினே –5-2-7-

கால தோஷத்தால் சில அவைஷ்ணவர்களையும் கண்டார்
உபதேசத்தால் திருத்தப் பார்க்கிறார்
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் உய்யக் கொண்டது நாராயணன் அருளே –
இவ்வர்த்தத்துக்கு சாஷி மார்க்கண்டேயன்
அவன் நெடு நாள் தேவனை ஆஸ்ரயிக்க
அவனைப் பார்த்து -நெடு நாள் நம்மை ஆஸ்ரயித்தாய்
இவ் வாஸ்ரயணம் பாழே போக ஒண்ணாது
உன்னோடு என்னோடு வாசி இல்லை
உனக்கு ஒரு புகல் காட்டித் தரப் போரு-என்று
சர்வேஸ்வரன் பக்கலிலே கொண்டு சென்று
அவன் அபேஷிதத்தை தலைக் கட்டிக் கொடுத்தான்
ஆனபின்பு இதில் சாஷி அவனே -ஈடு
உய்யக்கொள் பாடம் தப்பு உய்யக் கோள் -சரியான பாடம்
தேவதாந்தர பஜனம் செய்வார் முகம் இத்தைக் கேட்டு கறுத்து போக
மனமும் கறுத்து முகமும் கறுத்து இருக்க
கறுத்த மனம் வேண்டா -என்கிறார்
சூத்திர தேவதைகள் பக்கல் பரத்வ புத்தி பண்ணி இருக்கும் தண்ணிய நெஞ்சு உங்களுக்கு வேண்டா
இறுப்பது எல்லாம் இடுகிற பூஜை எல்லாம்
நித்ய நைமித்திய காம்ய கர்மங்கள் எல்லாம்
எம்பெருமானே உயிர் அந்தராத்மா
அந்த அந்த தேவதைகள் உடல்
தேவதாந்தரங்கள் எம்பெருமான் உடைய மூர்த்தியாக சரீரமாக உள்ளவர்கள் என்கிற பிரபத்தி உடன் செய்மின் –

—————————————————————————————————————————————————————————————————————–

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன்தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே–5-2-8-

தேவதைகள் ஆஸ்ரிதர்கள் அபெஷிதங்களைக் கொடுக்க சக்தி அளித்தவன் அவனே
கப்பங்கள் வாங்கி செலுத்தும் அதிகாரிகள் போல் –
ஞாலத்து வெறுப்பு இன்றி
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
ஆதலால் பிறவி வேண்டேன்
கொடு வுலகம் காட்டேல்
இப்படி வெறுப்பு தோன்ற பேசுபவர்கள்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
அச்சுவை பெறினும் வேண்டேன் –
என்று சொல்லும்படி இருக்கையாலே ஞாலத்தில் வெறுப்பு இல்லாமையும் உண்டு –

————————————————————————————————————————————————————————————————–

மேவித் தொழுது உய்ம்மினீர்கள் வேதப் புனிதவிருக்கை
நாவில் கொண்டச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கதுலகே –5-2-9-

பகவர் -குணானுபவ நிஷ்டர்கள்
வேதப் புனிதவிருக்கை -வேதங்களில் புனிதமான ருக்குகள் -புருஷ ஸூ க்தம் கொண்டு
நாவில் கொண்டச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
ஞான விதி -பகவத் கீதை சம்ப்ரதாயம்
பகவன் ஞான விதி பணி வகை என்று இவர் அங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம் -நாயனார்
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் -கைங்கர்ய நிஷ்டர்கள்
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்
கிடந்த இடத்தே கிடந்தது குணாநுபவம் பண்ணும்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் போலே
இருப்பாரே யாயிற்று
லோகம் அடைய -ஈடு

———————————————————————————————————————————————————————————————-

மிக்க வுலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
தொக்க வமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்கத் தொழ கிற்றீர் ஆகில் கலியுகம் ஒன்றும் இல்லையே –5-2-10-

நீங்கள் ஆஸ்ரயிக்கும் தேவதைகளும் அவனை ஆஸ்ரயித்தே பதவியை பெற்றார்கள்
தேவதாந்தர சேஷ பூதரான நீங்களும்
அவர்களைப் போலே தொழ வல்லீர்கள் ஆகில்
கலி யுகம் ஒன்றும் இல்லையாம்
அதாவது
உங்கள் தேவதாந்தர பஜனமாகிற நீசத் தனத்துக்கு
ஹேதுவான கலியுக தோஷம் தொலையும் –

————————————————————————————————————————————————————————

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னை
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் யாயிரத்திப் பத்து உள்ளத்தை மாசறுக்குமே –5-2-11

நெஞ்சில் உள்ள சகல வித அழுக்கும்
தேவதாந்தரங்களில் உண்டான பரத்வ ஞானம் ஆகிற அழுக்கையும்
எம்பெருமானை பணிந்தும் அல்ப பிரோஜனாந்தரங்களில் நசை வைத்து இருக்கும் அழுக்கையும்
போன்ற இவை தீரும்
கலௌ க்ருத யுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய க்ருதே யுகே
யஸ்ய சேதசி கோவிந்தோ ஹ்ருதயே யஸ்ய நாச்யுத –
எம்பெருமானை இடைவிடாமல் நெஞ்சிலே கொண்டு இருக்கை க்ருத யுகம்
அப்படி இல்லாமை கலி யுகம்
தன்னை இடைவிடாது சிந்திக்க வல்லராம் படி அனுக்ரஹித்தல்– கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்தல் –

————————————————————————————————————————————————————————————-

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-2-1-பாதோதிப் ப்ரௌடகாந்தௌ-கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
5-2-2- சரச துலசி காலங்க்ருதௌ-வண்டார் தண்ணம் துழாயன் மாதவன் பூதங்கள்
5-2-3-தாத்ருபாவே -கரிய முகில் வண்ணன் எம்மான்
5-2-4-/5-2-4-வைகுண்டத்வே ச -வைகுந்தன் பூதங்களேயாய் -சகாரத்தால் -தடம் கடல் பள்ளிப் பெருமான்
5-2-6-சக்ர ப்ரஹரண வசிதா தேவதா ஸ்தாபநா தௌ -நேமிப்பிரான் தமர் போந்தார் —
5-2-7-மறுத்துவம் அவனோடு கண்டீர் மார்கண்டேயனும் கரியே
5-2-8-நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
ஆதி -சப்தத்தால் -திரு மார்வன் தன –
5-2-9-ஸ்வா நாம் அச்யாவநே -நாவில் கொண்டு அச்சுதன் தன்னை
5-2-10- சகல நியமேன சர்வ கர்மேஜ்யபாவே -மேவிக் கண்ணன் திரு மூர்த்தி நக்க பிரானோடு அயனும் இத்யாதி
நித்யா சக்தை -எப்போதும் ஈடுபடுகின்ற
ஸ்வ பக்தை -ஸ்ரீ வைஷ்ணவர்களால்
ஜகதகசமனம்-உலக துரிதங்கள் தீர்ப்பவனாக
க்ருஷ்ணம் சடாரி ப்ராஹ -எம்பெருமானை ஆழ்வார் அருளிச் செய்தார் –

——————————————————————————————————————————————————————————————-

பொலிக பொலிக என்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டு உகந்து -உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு –42

மனனக மலங்கள் கழிய அருமருந்தாகும் –

————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–கையார் சக்கரத்து–5-1-

October 28, 2014

திருமாலை நினையாமல் இருக்கும் சம்சாரிகள் படுகிற கிலேசங்களை நினைத்து நண்ணாதார் முறுவலிப்ப –
திருவாய் மொழியை அருளி
எம்பெருமான் உடைய பெருமையை உபதேசித்து அருள ஒன்றும் தேவும் -திருவாய்மொழி அருளி
உபதேசம் கெட்டு திருந்தினவர்கள் நிரம்பி இருக்கும் படியைக் கண்டு
பொலிக பொலிக பொலிக மங்களா சாசனம் பண்ணுவதாக இருக்கும் அளவிலே
தம்மைப் பற்றி சிறிது நினைத்துக் கொண்டு
நாமும் சம்சாரத்தில் இவர்களைப் போல் தோள் மாறி கிடவாதே
உபதேசம் பண்ணும்படியாயும் திருத்தும் படியாகவும்
எம்பெருமான் நிர்ஹேதுகமாக அருள் புரிந்தமையை அனுசந்தித்து
உள் குலைந்து அதனைப் பேசி அனுபவிக்கிறார்
சப்தாதி விஷயங்களில் மண்டிக் கிடக்க
பகவத் விஷயத்தையும் வாயால் சொல்லுபவன் போலே பாவனை செய்தேனே யல்லது
உள் கனிந்த ப்ரேமம் சிறிதும் உடையேன் அல்லேன்
அப்படி இருந்தும் க்ரித்ரிமமான அந்த உக்தி தன்னையே பற்றாசக் கொண்டு
எம்பெருமான் என்னை விஷயீ கரித்தவாறு என்னே -என்று ஆச்சர்யப் பட்டு அருளிச் செய்கிறார் –

——————————————————————————————————————————————————————————————–

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பாரார்
ஐயோ கண்ணபிரான் அறையோ வினிப் போனாலே –5-1-1-

சேர்த்தி அழகிலே ஈடுபட்டார் பாவனையில் பல காலும் கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே-சொன்னேன்
விதி வாய்க்கின்று காப்பாரார்
அருள் வெள்ளம் கரை உடைந்து பெருகப் புக்கால்
எம்பெருமான் தன்னாலும் அணை செய்ய முடியாது அன்றோ
உன்னாலும் விட்டுப் பேர முடியாது -வீர வாதம் செய்கிறார் அவன் இடம் நேராக
அறை கூவுதல் நாவலிடுதல்
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன -என்ற உனக்கு என்னை விட்டு போக முடியாதே -இது திண்ணம்
இவன் நடுவே அடியான் என்ன
ஒலைப்படா பிரமாணம் பஷபாதி சாஷி
வன்களவில் அனுபவமாக இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள
காப்பார் அற்று விதி சூழ்ந்தது -நாயனார்
விதி -பகவத் கிருபை -தப்ப ஒண்ணாதது

——————————————————————————————————————————————————————————————————

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன்னமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மா நிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே –5-1-2-

சில பொய்யுரைகளைச் சொல்ல
அவன் எனக்கு விதேயனாகி விட்டான்
அதுக்கும் மேலே
அவன் விபூதிகள் எல்லாம் என்னுள்ளே நடத்தும்படி யாயின –

——————————————————————————————————————————————————————-

உள்ளன மற்றுளவாப் புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே யுன்னையும் வஞ்சிக்கும்
கள்ளமனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத் தணைக் கிடந்தாய் இனி யுன்னை விட்டென் கொள்வனே -5-1-3-

ஔதார்யம் -வடிவு அழகு -குணங்களில் -ஈடுபட்டார் போலே
காலம் எல்லாம் பொய்யே கைம்மை சொல்லி
அது தவிர்ந்து கபடம் அற்ற பக்தி உடன் கூடிய பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேன்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியும் அப்பெருமானையும் வஞ்சிக்கும்படி
கள்ள மனம் கொண்டு இருந்தவன்
கள்ளமனம் தவிரப் பெற்று உஜ்ஜீவிக்க வல்லவன் ஆனேன்
வஞ்சக் கள்வன் மா மாயன் என்ற பிரசித்தி பெற்ற உன்னையும் வஞ்சிக்க வல்லவனாய் -உம்மைத் தொகை –

————————————————————————————————————————————————————————————–

என் கொள்வன் வுன்னை விட்டென்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ணநீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனதாவியை நீக்க கில்லேன்
என் கண் மலினமறுத்து என்னைக் கூவி யருளாய் கண்ணனே –5-1-4-

முன்பு எல்லாம் பொய்யனாக போந்தது பிரகிருதி சம்பந்தத்தால் என்பதால் அத்தை போக்கி அருள வேணும்
அன்றிக்கே
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் -என்றார் அது மானஸ அனுபவம் மாத்ரமாய் இருந்தது
காட்சிக்கு பிறகு சம்ச்லேஷ ருசி பிறந்து கையை நீட்ட
அகப்படாமையாலே தளர்ந்து
இது தேக சம்பந்தம் அடியாக என்று உணர்ந்து
அத்தை நீக்கி உனது திருவடிகளில் அழைத்துக் கொண்டு அருள வேணும் என்கிறார்
அனுதபித்து வன் கள்வனேன் என்கிறார் -அவனுடைய ஆத்மவஸ்து -பிறர் நன் பொருள் திருடினேன்
மலினம் -பிரகிருதி சம்பந்தம் –

என்கொள்வன்-இத்யாதி –
ஸ்வரூப அனுரூபமான பாசுரத்தை வாயாலே சொல்லி நிற்கச் செய்தேயும்
வன் கள்வனேன்
உத்தேச்ய வஸ்துவை கடுக லபிக்க பெறாத இன்னாப்பாலே மகா பாபி என்னுமா போலே சொல்லுகிறார் –
மனத்தை வலித்து -இத்யாதி
பக்தி பாரவச்யத்தாலே சிதிலமாகிற மனசை திண்ணியதாக்கி
தன் கேழில் ஒண் கண்ணநீர் கொண்டாள் -என்கிற கண்னநீரையும் மாற்றி
நின் கண் நெருங்க வைத்தே
காலாழும் நெஞ்சு அழியும் -என்கிறபடியே
உன்னைக் கிட்டினவாறே உடைகுலைப் படுகிற மனஸை தரித்து நின்று
உன்னை அனுசந்திக்கும்படி பண்ணி
இச் சரீரத்தில் நின்றும் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்க ஷமன் ஆகிறிலேன் -ஈடு

—————————————————————————————————————————————————————————————————–

கண்ணபிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை யமுதை
நண்ணியும் நண்ணி கில்லேன் நடுவே யோருடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே –5-1-5-

மலினம் -என்று பிரஸ்தாபிக்க பட்ட பிரகிருதி சம்பந்தம் விளக்கி அருளுகிறார்
அத்தைப் பேசுமுன் நெஞ்சு குளிர பகவத் விஷயத்தை –
விண்ணோர் கரு மாணிக்கத்தை–யமுதை–கண்ணபிரானை என்று பேசுகிறார்
ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
சர்வ போக்யனாம் படி வந்து
ஸ்ரீ வசூதேவ க்ருஹே அவதீர்ணனான உன்னை -ஆராயிரப்படி
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே
ஆங்கு ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து –
விண்ணோர் களை வஞ்சித்து
கண்ணபிரானாக திருவவதரித்து
அதிமாநுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷ சாமான்யகாரமாக காட்டி அருளி
ஆராவமுதமாய் இருக்கும் எம்பிரானை –
ஞான லாபம் பெற்றது -நண்ணியும்
சரீர சம்பந்தம் உடன் இருக்கும் இருப்பை -நண்ண கில்லேன் -நடுவே ஓர் உடம்பில் இட்டு –
நடுவே அழுக்கு உடம்பு அனுபவ விரோதியாய் உள்ளதே –

தோலை மேவி கைப்பாணி இட்டு
மெழுக்கு வாசியாலே பிரமிக்கும்படி பண்ணின இத்தனை ஒழிய
அகவாய் புறவாய்ஆகிற்றாகில் காக்கைநோக்கிப் பணி போரும் இத்தனை –ஈடு

தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையும் வேண்டா நாற்றம் மிகு உடல் -பிள்ளைப் பிள்ளை ஐயங்கார்

எதி நாமச்ய காயஸ்ய யதந்தஸ் தத் பஹிர் பவேத்
தண்டமாதாய லோகோயம் சுன காகாம்ச ச வாரயேத்

———————————————————————————————————————————————————————————————————

புறமறக் கட்டிக் கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டு ஒழிந்தேன்
நிற முடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே –5-1-6-

இழவு தீரும் படி வடிவு அழகைக் காட்டி அருளினான்
இவரை மெய் மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு
தன் உடம்பை மறந்து
மகிழ்ந்து
நிற முடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே
கண்டு கொண்டு ஒழிந்தேன் -என்கிறார்
முந்துற முன்னம் தோள்களால் அணைத்தார் -நிற முடை நால் தடம் தோள்
உடனே சில அமுத மொழிகள் பேசத் தொடங்கினான் -செய்ய வாய்
உடனே குளிரக் கடாஷித்து அருள -செய்ய தாமரைக் கண்
இன்னார் என்று அறியேன் அன்னே யாழியோடும்
பொன்னார் சார்ங்கம் உடைய வடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
மதி மயக்க வல்ல திவ்யாயுதங்களை காட்டி அருளி
திருமேனியை முற்றூட்டாக காட்டி அருள -அற முயலாழி யங்கைக் கரு மேனி யம்மான் தன்னையே-என்கிறார்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கிட செங்கோல் நடாவுதிர் என்கிறபடியே
லோக ரஷணம் தர்மம் நடத்துகையால் அற முயலாழி -என்கிறார் –

———————————————————————————————————————————————————————————————————–

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார்
எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே
மெய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே –5-1-7-

பிற்காலிக்க வேண்டி இருக்கச் செய்தே கிருபைரசம் கரை அழிய பெருகினபடியால் ஒரு நீராய் கலக்க நேரிட்டது –
ஆழிப்பிரான் -திருவாழி திருக்கையில் கொண்ட உபகாரகன்
திருப்பாற் கடல் பள்ளி கொண்ட பிரான்
நிஷர்தாநாம் நேதா கபிகுலபதி காபி சபரி குசேல குப்ஜா சா வ்ரஜ யுவதயோ மால்யக்ருததி
அமீஷாம் நிம்நத்வம் வ்ருஷகிரி பதேருன் நதிமபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரபை மனுகம்பே சமபசி -தயா சதகம்
மேடுபள்ளம் நிரவப் பெறுமே
அரை குலைய தலை குலைய திரு நாட்டில் இருந்து களிறு நீர்ப் புழுவால் வாதிப்புண்டாய்
பெண்ணுலாம் சடையினானும் –ஆனைக்கு அன்று அருளை ஈந்த
ஸ்ரக் பூஷாம் பரம யதாயதம் ததான திங்மாமித் யநு கஜ கர்ஜமாஜா கந்த –
கைம்மா துன்பு ஒழித்தாய் –
நெஞ்சு கனிந்து மெய்யுடையார் சொல்லும் சொல்லை கபட புத்தியுடன் சொல்ல
அதுவே மெய்யான பக்தியாக பரிணமித்து
எம்பெருமான் உடைய விஷயீ காரம் பெற்று விட்டேன்

————————————————————————————————————————————————————————————–

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்தின நாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணி யாரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே யினி யாவாரே –5-1-8-

பரம விலஷணர் தன்னை அனுபவிக்கச் செய்தே -நித்ய சூரிகள் -பிராமணர்
இளைய பெருமாளும் வலக்கை இடக்கை அறியாத குரங்குகளும் ஒக்க
அடிமை செய்தால் போலே இரண்டு விபூதியில் உள்ளாறும் ஒரு மிடறாக சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகன் -ஈடு
மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான் -திருப்பாற் கடலையும் பெரிய பிராட்டியாரையும் விட்டு
நித்ய சம்சாரியான என் நெஞ்சிலே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தனன் –
ப்ராதா பர்த்தா ச பந்துச்ச பிதா ச மம ராகவா -போலே
சகலவித பந்துவும் அவனே
சேலே ய்-செல் மீன் ஏய்ந்த மீன் போன்ற கண்கள் உடைய ஸ்திரீகள்
எம்பெருமானைப் பற்றி நின்று எல்லா வகை இன்பங்களையும் பெற்று நின்றேன்

————————————————————————————————————————————————————————————–

ஆவாரார் துணை என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க
தேவர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆவா வென்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே –5-1-9-

கிலேசங்கள் எல்லாம் தீர அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரகத்தோடே வந்து என்னுடன் கலந்தான்
நாவாய் –கப்பலையும் கப்பலில் உள்ளாரையும்
அழுந்துகின்ற கப்பல் போலே -உணர்வு இல்லாத ஜடம் போலே
தேவர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆவா வென்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே
திவ்ய ஆயுதங்கள் உடன் சேர்ந்தால் போலே
என்னுடன் பொருந்தினான்
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று இவர் அபேஷித்தபடியே
கையும் திருவாழியுமான கோலத்துடன் வந்து கலந்தான் -என்று எம்பெருமானார் நிர்வஹிப்பாராம் –

————————————————————————————————————————————————————————————————–

ஆனானாளுடையான் என்று அக்தே கொண்டு உகந்து வந்து
தானே யின்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்
கானாரேனமுமாய்க் கற்கியாமின்னம் கார் வண்ணனே –5-1-10-

எம்பெருமான் என்னை ஆட்கொண்டான் என்ற அக்தே கொண்டு
அவன் பக்கல் க்ருதஞ்ஞ்ச அனுசந்தானம் பண்ண
அவன் போரத் திரு உள்ளம் உகந்து
அதிகமான சம்ச்லேஷம் என்னிடத்தில் பண்ணி அருளினான்
தனது பேறாக கிருபையைப் பண்ணி அருளி கலந்தான்
என்னை முற்றவும் தானானான்-உள்ளோடு புறம்போடு வாசி அறக் கலந்தான் -அன்றிக்கே
எனக்கு சகல வித போக்யமும் ஆனான்
திருவவதாரங்களைஅருளி செய்து ஆட்கொள்ள வழி வகுத்தவனும் அவனே
இன்னம் கார் வண்ணனே
இன்னும் மேலே மேலே திரு வவதரிக்க திரு உள்ளம் பற்றின படி –

———————————————————————————————————————————————————————————————————-

கார்வண்ணன் கண்ணபிரான் கமலத் தடம் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை யாயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடிக் கீழ் புகுவார் பொலிந்தே –5-1-11-

ஏர்களின் மிகுதியை உடைய அழகிய கழனிகள் உடைய திருநகரி
எம்பெருமானாரைப் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மிக்கவர்களாய் கொண்டு
தாய் நிழலில் ஒதுங்குவாரைப் போலே எம்பெருமான் திருவடிக் கீழ் புகுவர்
ஆர் வண்ணத்தால் -நெஞ்சு கனிந்து –அம்ருத பானம் பண்ணுவாரைப் போலே
ஸூ க்திம் சமக்ரயது —யாம் கண்டூல கர்ண குஹரா -கவயோ -பட்டர் –ஸ்ரீ குணரத்ன கோசம்

———————————————————————————————————————————————————————

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-1-1-சக்ரஸ் பாயாத் கரத்வாத் -கையார் சக்கரத்து
5-1-2-ஸ்வ ஜன வசதயா–தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
5-1-3-ரஷண உத்யுக்த பாவாத் -வெள்ளத் தணைக் கிடந்தாய்
5-1-4-பவ்யத்வாத் -கூவி யருளாய் கண்ணனே
5-1-5-ஸ்வாத் மதா நாத் -கண்ணபிரானை விண்ணோர் கரு மாணிக்கத்தை யமுதை
5-1-6-அமலதநுதயா -கரு மேனி அம்மான் தன்னையே
5-1-7-ஸ்ரீ கஜேந்த்ராவ நாச்ச -கைம்மா துன்பு ஒழித்தாய் என்று
5-1-8-நாநா பந்துத்வ யோகாத் -சேலேய் கண்ணியரும் -இத்யாதி
5-1-9-விபதி சகி தயா -ஆவாரார் துணை- இத்யாதி
5-1-10-வ்யாஜ மாத்ராபி லாஷாத் -ஆனானாளுடையான் என்று அக்தே கொண்டு உகந்து வந்து-

——————————————————————————————————————————————————————————————-

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறனுரைக்கு-மெய்யான
பேற்றை யுபகரித்த பேரருளின் தன்மைதனை
போற்றினனே மாறன் பொலிந்து –51-

புறனுரை வெற்றுரை
புறனுரையே யாயினும் -முதல் திருவந்தாதி – 41
பழிச் சொல் என்றுமாம்
இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன் -பெரிய திருமொழி -6-4-7-

—————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–ஒன்றும் தேவும்–4-10-

October 28, 2014

கீழ் திருவாய் மொழியில் ஆர்த்தி தலை எடுத்து கதற திருநாட்டில் இருக்கும் இருப்பை காட்டி அருள
சமாஹிதர் ஆனார்
ஆழ்வாரைக் கொண்டு உபதேசங்கள் பண்ணுவித்து நாட்டாரை எல்லாரையும் திருத்த திரு உள்ளம் பற்றியதை நினைப்பூட்டி அருளினான்
சம்சாரிகள் பரத்வத்தை அறியாப் பெறாமல் தேவதாந்தர பக்கல் வ்யாமோஹம் கண்டு இருந்தததால்
எம்பெருமான் உடைய பரத்வத்தையும்
இதர தெய்வங்களின் நிஹீனத்வத்தையும்
நன்கு உணர்த்தி உபதேசம் செய்து அருளுகிறார் இதில்
அர்ச்சாவதார பரத்வத்தை இதில் அருளிச் செய்கிறார்
சாஸ்திரங்கள் கொண்டு பரிசீலிக்கும் முன்பே திருமேனி அமைப்பை நோக்கியே அறியலாமே ஜகத் காரண பூதன் இவன் ஒருவனே என்று
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தே அன்றே
புகரிலகு தாமரையின் பூ -பெரிய திருவந்தாதி -72
வேதாந்தம்
சத்
ஆத்மா
ப்ரஹ்ம
சப்தங்களால் சொல்லி நாராயண விசேஷ சப்தத்திலே கீழ் சொன்னவை பர்யவசித்து
சிரமப்பட்டு பரதவ நிர்ணயம் பண்ண வேண்டி இருக்கும்
அர்ச்சயஸ் சர்வ சஹிஷ்ணுஸ் சகபராதீன அகிலாத் மஸ்திதி
இப்படி எளியவனாய் உள்ளவனை பணிந்து உஜ்ஜீவித்து போகாமல் அனர்த்தப் பட்டு போகிறீர்களே

உலகில் பலர் பல சாஸ்திர அர்த்தங்களை கற்று வைத்தும் பரத்வம் இன்னது என்று துணிய மாட்டாமல்
பல தெய்வங்கள் காலிலும் குனிகின்றார்கள்
நம் எம்பெருமான் உடைய திருவடி சம்பந்தம் பெற்றவர்கள் எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாதவர்களாய் இருந்தாலும் கூட
தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக நினைத்து இருப்பார்கள்
இதற்க்கு காரணம் பர காருணிகரான நம் ஆழ்வார் ஒன்றும் தேவும் என்கிற இத் திருவாய் மொழியை
அருளிச் செய்து வைத்ததே யாம்
என்று எம்பார் அருளிச் செய்வாராம்-

——————————————————————————————————————————————————————————————————————————

ஒன்றும் தேவும் வுலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
வன்று நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள்
நின்ற வாதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –4-10-1-

சகல ஜகத் காரணன் எளியனாய் சேவை சாதிக்க அறிவு கெட்டு வேறு தெய்வத்தை நாடி ஓடுகிறீர்களே
ஒன்றும் இல்லாத அன்று
ஒன்றுதல் பொருந்துதல் லயித்தல் என்றுமாம்
சதுர்முகனை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான்
சதுர்முகன் பஞ்ச முகனை சிருஷ்டித்தான்
பஞ்சமுகன் ஷண்முகனை சிருஷ்டித்தான்
ஆக இது தான் பஹூ முகமாயிற்றுக் காணும் -ஈடு
நம்மைக் காண வருவார் ஆரேனும் உண்டோ என்று எளியனாய் இவன்நிற்க –
கேட்டீரே நம்பி மீர்கள் கெருட வாகனும் நிற்க சேட்டை தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே –
வாசூதேவம் பரித்யஜ்ய யோ அன்யம் தேவம் உபாசிதே
த்ருஷிதோ ஜாஹ் நவீதீரே கூபம் கனதி துர்மதி
தாஹித்தவன் அது தீர கங்கை கரையிலே கிணறு வெட்டும் துர்மதிகளே

———————————————————————————————————————————————————————————————————————————-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி யுறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனை
பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே–4-10-2-

கார்ய பூதர்கள் அனைவரும்
நாடுதல் -தேடுதல்
சாஸ்திரம் காரண வஸ்துவை தேடச் சொல்ல அந்தோ நீங்கள் கார்ய வர்க்கங்கள் பின்னே நாடிச் செல்கின்றீர்களே
எம்பெருமான் உங்களை தேடா நிற்க நீங்கள் நீசர்களை தேடி ஓடா நிற்கின்றீர்களே
கள்ளரைத் தேடித் பிடிக்குமா போலே
தேடித் பிடிக்க வேண்டி இருக்கிறபடி
ஆடு திருடின கள்ளர்கள் இ றே இவர்கள் – தாம் -ஈடு
ஜீவா ஹிம்சையை ஆராதனமாகக் கூண்ட சூத்திர தேவதைகளை பற்றி
வீடில் சீர்ப் புகழ் -செல்வம் /குணம் -குறையாத செல்வம் -நித்ய சித்த குணங்கள் –
அவன் மேவி யுறை கோயில்-அவன் பரம பதத்திலே உள் வெதுப்போடே காணும் இருப்பது
சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து
இவை என் படுகிறதோ என்று திரு உள்ளத்தில் வெறுப்போடு யாயிற்று அங்கு இருப்பது -ஈடு
பரம பதத்திலும் சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளத்தில் வெறுப்போடு யாயிற்று
எழுந்து அருளி இருப்பது -என்று பட்டர் அருளிச் செய்ய
ஆச்சானும் பிள்ளை ஆழ்வானும் இத்தைக் கேட்டு
பரம பதத்தில் ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் இருப்பில் இங்கனே கிலேசம் உடன் இருந்தான் என்னில் உசிதமோ என்றார்கள்
என்று பண்டிதர் என்கிறவர் வந்து விண்ணப்பம் செய்ய
வியசனேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம்பவதி துக்கித -என்று
குணா பிரகரணத்திலேயோ தோஷ பிரகரணத்திலேயோ என்று கேட்க மாட்டிற்றிலரோ
இது குணமாகில் குணம் என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஓன்று உண்டோ –என்று அருளிச் செய்தார் –
மேவி உறைதல் -ஆசையுடன் வாழ்தல் –
சமஸ்த கல்யாண குணாம்ருதோததி –
சகஸ்ரநாமம் விகாரத்தா -தமக்காக இன்ப துன்பங்கள் இல்லாமல் இருந்தும்
பிறர் இன்ப துன்பங்களை அனுபவித்தாலும் தாமும் இன்ப துன்பங்களை அனுபவித்து விகாரப் படுகிறவர் –
இந்த விகாரம் பிறர் இடத்தில் அன்பு பற்றி வருவதால் குர்த்ரம் ஆகாது
முதல் பாசுரத்தில் -திருக் குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் -என்றவர்
இங்கே திருக் குருகூர் அதனை பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள் -என்கிறார்
எம்பெருமானைக் காட்டிலும் அவன் உகந்து அருளின இடமே பரம பிராப்யம் –
சென்று செவிப்பதில் காட்டில் வழிப் போக்கு தானே இனிதாகையாலே பாடி ஆடிச் சென்று பரவுமின்களே -என்கிறார்
பரந்தே-பெரிய திரு நாளுக்கு
சர்வதோ திக்கமாக வந்தேறுமா போலே
நாநா திக்கமாக பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் -ஈடு –

—————————————————————————————————————————————————————————————————————————–

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமஅன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே —4-10-3-

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பேரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்டதும்
பிறகு வெளிநாடு காணப் புறப்பட விட்டாலும்
வாமனாவதாரம் பண்ணி மூவடி நீரேற்று அளந்து கொண்டதும்
மகா வராஹமாய் அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொண்டதும்
இவற்றால் இவனே பரதேவதை என்று திண்ணமாய் இருக்க
அந்தோ தெளிய வில்லையே நீங்கள்
நீங்கள் ஆஸ்ரயணீயராக கொள்ளும் அந்த தெய்வங்களும் வந்து தலையால் வணங்கும்படி
பரத்வம் பொலிய நிற்கும் பெருமானுக்கு சரீரம் இல்லாத தெய்வம் மற்று உண்டோ –

——————————————————————————————————————————————————————————————————————————

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேசமா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பாலோர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே –4-10-4-

இலிங்கியர்க்கே -லிங்க பிரமாண வாதிகளுக்கு -லிங்கம் -ஹேது -அனுமானம் –
பேச நின்ற -சிவனுக்கும் பிரமனுக்கும் அடைமொழி
சில மூலைகளில் வசன உக்திகள் இருந்தாலும்
ஸ்ருதஜஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூ ர்ய சமப்ரபம்
நாப்யாம் விநிஸ் ஸ்ருதம் பூர்வம் தத்ரோத்பன்ன பிதாமஹ -என்றும்
யத்தத் பத்மமபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயத ப்ரஹ்மணர் சாபி சம்பூதச் சிவ இத்யவதர்யதாம் -என்றும்
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா ஸ்ரேஷ்டாயா -என்றும்
மகாதேவஸ் சர்வமேதே மகாத்மா ஹூத்வா ஆத்மானம் தேவ தேவோ பபூவ -என்றும்
பல பிரமாணங்கள் நிர்ணயத்தது போலே போலேசிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே என்கிறார்
நீங்கள் ஈச்வரர்களாக சங்கித்தவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டதே
ஒருவன் தலை கெட்டு நின்றான்
ஒருவன் ஓடு கொண்டு பிராயச்சித்தியாய் நின்றான்
ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள்
உங்களிலும் பெரும் குறை வாளரையோ பற்றுவது
பாதகியாய் பிஷை புக்குத் திரிந்தான் என்று நீங்களே சொல்லி வைத்து அவனுக்கு பரத்வத்தை சொல்லவோ
ஒருவனுடைய ஈச்வரத்வம் தலையோடு போயிற்று
மற்றவனுடைய ஈச்வரத்வம் அவன் கை ஓடே என்று காட்டிக் கொடுக்கிறார் கண்டு கொண்மின் –
உந்தம் அகங்களிலே நீங்கள் எழுதி இட்டு வைத்த கிரந்தங்களை பார்த்துக் கொள்ள மாட்டிகோளோ
முன்னே நின்று பிதற்றாதே என்கிறார்-ஈடு
தேஜஸ் நிறைந்த திரு மதிள்களால் சூழப் பட்ட அழகிய திரு நகரியிலே நிற்கிற சர்வேஸ்வரன் பக்கலிலே
குறை கூறும்படியான தௌர்பாக்யம் உண்டாவதே என்று வெறுக்கிறார்

—————————————————————————————————————————————————————————————————————-

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினோ -4-10-5-

புராணங்கள் ராஜஸ தாமஸ சாத்விக -மூன்று வகை உண்டே
அக்நேஸ் சிவஸ்ய மகாத்மயம் தாமசேஷூ பிரகீர்த்திதம்
ராஷசேஷூ சமகாத்ம்யம் அதிகம் ப்ராஹ்மணோவிது
சாத்விகேஷ்வாத கல்பேஷூ மகாத்மியம் அதிகம் ஹரே சங்கீர்னேஷூ சாஸ்வத்யா பித்ரூணாம் ச நிகத்யதே –
ஸ்ரீ விஷ்ணு புராணம் பொதுவிலே ஆரம்பித்து
யன்மயம் ச ஜகத் ப்ரஹ்மன் எதைச் சைதச் சராசரம் லீனமாசீத் யதா யத்ர லயமேஷ்யதி யதா ச -என்று
விஷ்னோஸ் சகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் -ஸ்திதி சம்சய கர்த்தா சௌ ஜகதோச்ய ஜகச் ச ச -என்ற பதில்
இப்படி இல்லாமல் எருமையை யானையாக கவி பாடித் தர வேணும் என்பாரைப் போலே
லிங்கத்துக்கு பெருமை இட்டுச் சொல்ல வேணும் -என்று கேள்வியாய் அதனால் பிறந்த லிங்க புராணம் –
எம்பெருமானே அந்தராத்மா -திரிபுரம் எரித்த வரலாற்றிலே புரியும்
பொலிந்து நின்ற பிரான் -இங்கே தான் திருக் குணங்கள் நன்கு விளங்கப் பெற்று இருக்கும் –

——————————————————————————————————————————————————————————————————————————-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை யின்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக் குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஒடுமினே –4-10-6-

எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே-இதற்க்கு ஆபாத பிரதீதியில் லீலா விபூதி இல்லாமல் போகும்
இப்பொருள் எம்பெருமானுக்கு அவத்யம் விளைவிக்கும்
உலகு -சாஸ்திர மரியாதை -கர்ம அனுகுணமாக -என்பதே பூர்வர்கள் நிர்வாஹம்
மமமாயா துரத்யயா -தப்ப ஒண்ணாத மாயையை அவன் திருவடிகளை கட்டியே தப்பப் பாருங்கோள்-

—————————————————————————————————————————————————————————————————–

ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள்
ஆடு புட்கொடியாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –4-10-7-

மற்றோர் தெய்வம் பாடி ஆடி பணிந்ததற்கு
ஓடி ஓடி பல பிறப்பும் பிறப்பதே -பலனாகும்
ப்ரஹமாணம் சித்தி கண்டம் ச யாச் சான்யா தேவதா ஸ்ம்ருதா பிரதிபுத்தா க சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –
ஆடும் கருடக்கொடி
ஆடி -வெற்றி என்றுமாம்

————————————————————————————————————————————————————————————————–

புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே
கொக்கலர் தடம் தாழை வேலித் திருக் குருகூர் அதனுள்
மிக்க வாதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே –4-10-8-

மிருகண்டு புத்திரன் மார்கண்டேயன்
பித்ரு பக்தோசி விப்ரேஷ -மாஞ்சைவ சரணம் கத -ஸ்ரீ மன் நாராயணனை சரணம் புகுந்தான்
ஆராதயன் ஹ்ருஷீகேசம் ஜிக்யேம்ருத்யம் ஸூ துர்ஜயம் -என்றான்
அன்று உய்யக் கொண்டதும் –
பிரளய தசையிலே பிழைப்பித்து பகவத் பரனாக்கி உஜ்ஜீவித்து -பன்னீராயிரப்படி
நாராயணன் அருளே –
நீ நெடுநாள் பச்சை இட்டு ஆஸ்ரயித்தாய்
அவ்வஸ்ராயணம் வெறுமனே போயிற்றதாக ஒண்ணாது என்று அவனை அழைத்து
நானும் உன்னோபாதி ஒருவனை ஆஸ்ரயித்து காண் இப்பதம் பெற்றது
இனி ஊண் கெடுத்தல் உபதேசம் கொடுத்தல் இ றே என்று சொல்லி அவனைக் கொடு பொய்
சர்வேஸ்வரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தான் ஆயிற்று -ஈடு –

————————————————————————————————————————————————————————————————————

விளம்பும் அறுசமயமும் அவையாகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியனாகிய ஆதிப் பிரான் அமரும்
வளம் கொள் தண் பனை சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–4-10-9-
வேத பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ் தர்க்கங்களால் அழிக்க ஒண்ணாத ஐஸ்வர்யம் உடைய
எம்பெருமான் எழுந்து அருளி
இருக்கும் திரு நகரியை ஆஸ்ரயிங்கோள்
இருவகுப்பினரும் துல்ய யோக ஷேமர்
கானல் நீரை கண்டு மயங்கும் ஒன்றும் வழியிடையிலே கொடிய ஜந்துக்களால் பஷிக்கப் பட
இழிய வேண்டிய துறையில் இழியாமல் துறை தப்பி ஜல ஜந்துவால் பஷிக்கப்பட
விளம்பும் ஆறு சமயம் –சாக்ய-உலுக்ய -அஷபாத- ஷபணi கபில -பதஞ்சலி
சாக்யர் பௌத்தர்–உலுக்யர் சார்வாகர் -ஆஷாபாதர் -கௌதமர் சொல்லி நையாயிக -வைசேஷிகர்களை நினைக்கிறது
ஷபணர் -ஜைனர்
அவியாகிய மற்றும் -அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகள்
அவையாகியும் மற்றும் -பன்னீராயிரப்படி -அவையாகியும் -சபையாக திரண்டாலும்
மற்றும் -குத்ருஷ்டிகள் என்பர்
விளம்பும் -அர்த்தம் இல்லாத வெறும் சொற்களை சொல்லும் இவை இரண்டும்

—————————————————————————————————————————————————————————————————————————-

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்போடு ஓங்கு திருக் குருகூர் அதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே–4-10-10-

ஆட்செவதே உறுவதாகும்
அனைத்தும் அசாதாரண விக்ரஹம் போலே தனக்கு விதேயமாய் இருக்கும்
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாத்மநா ஸ்வார்ததே
நியந்தும்
தாரயிதுஞ்ச
சக்யம்
தத் சேஷைதைக
ஸ்வ ரூபஞ்ச
தத் தஸ்ய சரீரம் -சரீர லஷணம்
மறுவின் மூர்த்தி -மறு -ஸ்ரீ வத்சம் -அதனை உடைய திரு மேனி
அவத்யமாய் -ஹேய ப்ரத்ய நீகன் என்றபடி
செறு-விளை நிலம்

—————————————————————————————————————————————————————————————

ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சியின்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –4-10-11-

ஆட்செய்து -உபதேச முகத்தால் சம்சாரிகளை திருத்தும் முகமாக கைங்கர்யத்தைப் பண்ணி
அழகைக் காட்டி ஆட்கொண்ட உபகாரகன் -ஆழிப் பிரான் –
அடிமை தான் த்ரிவிதம்
மானஸ வாசிக காயிகங்கள்
இவற்றில் மானஸ காயிகங்களுக்கு ஆள் அல்லர் –என்றியவென்னில்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்கையாலே
இனி வாசிகம் ஒன்றுமே யானால் வாசிகமாக திருவாய்மொழி பாடி அடிமை செய்கிறாரோ என்னில் -அன்று
அப்படியாம் அன்று இப்பாசுரம் –
முனியே நான்முகனிலே யாக வேணும்
இல்லையாகில் இவர் வாசிகமாக அடிமை செய்கிற புகழு நல் ஒருவனில் யாகப் பெறில் முக்கியம்
ஆனால் தேவதாந்திர பரதவ நிரசன பூர்வகமாக சர்வேஸ்வரன் உடைய
பரத்வத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ என்னில்
அதுவாகில் முதல் திருவாய்மொழி யிலே அமையும்
பரதவ நிர்ணயத்தில் பரோபதேசம் ஆகையாலே ஆனாலோ என்னில்
அது திண்ணன் வீட்டிலே யாதல் அணைவது அரவணை மேல் ஆதலாக அமையும்
ஆனால் அர்ச்சாவதாரத்தில் பரத்வம் அருளிச் செய்கையாலே யானாலோ என்னில் அதுவும் ஒண்ணாது
அது செய்ய தாமரை கண்ணனிலே யாக அமையும்
பரோபதேசம் பண்ணினதால் சொல்லிற்று ஆனாலோ என்னில் அதுவும் ஒண்ணாது
வீடுமின் தொடங்கி பல இடங்களிலும் பரோபதேசம் பண்ணினார்
அவற்றிலும் ஆகப் பெற்றது இல்லை
ஆனால் ஏதாவது என்னில் -இவ் வொன்றும் தேவிலே
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே என்று
பொலிந்து நின்றபிரானே சர்வ ஸ்மாத் பரன் என்று இவர் அருளிச் செய்யக் கெட்டு
கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்னக் கண்டு ஜகத்தாக திருந்தி ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆயிற்று
இவர் தாம் அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணும் படி இ றே அவர்கள் தாம் திருந்தின படி

பொலிக பொலிக என்று இதுக்கு என்ன ஒரு திருவாய்மொழி நேருகிறார் இ றே
சர்வேஸ்வரன் அவதரித்து திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தின படி
இனி இவர்க்கு தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி –
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைய பூதங்களே யாம்படி
திருத்துகையாலே ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் -என்கிறார் -ஈடு
இந்த நன்மைக்கு அடி
நல்லார் நவில் திருக் குருகூரில் பிறப்பு -வண் குருகூர் நகரான் -` நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன்-பரிமளம் மாறாத மகிழ மாலையை திரு மார்பிலே அணிந்தவரும்
வகுளா பரணர் -வகுள பூஷணர்–மகிழ் மாலை மார்பினர் –
யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாசிதம் சுருதி நாம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாச்மஹி -யதிராஜ சப்ததி
வேட்கையால் சொன்ன பாடல்
பக்தி பலாத்காரத்தாலே பரவசமாக திருவாய் மொழி பணித்தார்
நீர் பால் நெய் அமுதாய்
நிரம்பின ஏரி நெளிக்குமா போலே
பரபக்தியாதிமய ஜ்ஞானம் அம்ருதாப்தி நிமிகிற வாய்கரை மிடைந்து
மொழி பட்டு அவாவில் அந்தாதியாய் பேர் பெற்றது -நாயனார்
வைகுந்த மாநகர் மற்றது
மற்று -அசைச் சொல்லாய் வைகுந்த மா நகர் ஆகிய அவ்விடம்
அன்றிக்கே
வைகுந்த மா நகர் நித்ய விபூதியும்
மற்று லீலா விபூதியும்
உபய விபூதி சாம்ராஜ்யம் உண்டாகும் –

——————————————————————————————————————————————————————————————————————————————–

ஒன்றுமிலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆருமறியவே நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை -40-

———————————————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–நண்ணாதார் முறுவலிப்ப–4-9-

October 27, 2014

கீழ்த் திருவாய்மொழியில் ஆத்மாத்மதீயங்கள் வேண்டாம் என்றார்
பேறு பெறுவதற்கு அவன் கை பார்த்து இருப்பது போலே முடிகைக்கும் அவன் கை பார்த்து இருக்க வேணுமே
எம்பிரானே என்னை நீ தானே முடித்திடாய் என்கிறார் இதில்
ஆர்த்தி பேச்சுக்கு நிலை இல்லாதபடி பெருகினபடி –
ஆர்த்திக்கு மூன்று காரணங்கள் –
1-கலவி பெறாமல் பிரிந்து படும் ஆர்த்தி –இத்தை முன் திருவாய் மொழியில் அருளினார்
2-சம்சாரிகள் சஹவாசம் பொறுக்க முடியாத ஆர்த்தி -இத்தை இத் திருவாய்மொழியில் அருளுகிறார்
3-இந்த்ரியங்கள் விஷயங்களில் கொண்டு போய் மூட்டி அனர்த்தங்களை விளைக்கும் ஆர்த்தி -இத்தை உள் நிலாவிய ஐவரால் -காட்டி அருளுவார்
திருமங்கை ஆழ்வார் -மருவினிய தண்ணார்ந்த கடன்மலை தல சயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -என்றும்
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -என்றும் அருளியபடி –
உத்பபாத கதா பாணி சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -என்றால் போலே –
அதனால் -உனகழற்கே வரும் பரிசு கண்டாய் சாமாறே -என்றும்
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக் கொண்டே -என்றும்
கோட்டையினில் கழித்து என்னைக் உன் கொழும் சோதி உயரத்து கூட்டரிய திருவடிக்கண் எஞ்ஞான்று கூட்டுதியே -என்றும்
அளவற்ற ஆர்த்தி உடன் பேசுகிறார்

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்தார் வ்யவஸ்திதி
சௌரி சிந்தாவிமுக ஜனசம்வாச வைச்சம் –
இத்திருவாய் மொழிக்கு எம்பார் நிர்வாஹம் –
உன்னை ஒழிய புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற கிலேசமானது
உன்னைப் பிரிந்து இருந்து படுகிற கிலேசத்து அளவல்லவே
உன் பிரிவை ஒருவாறு ஆற்றலாம்
இந்த மகா பாபிகளான சம்சாரிகள் இடையிலே இருப்பதாகிற கிலேசம் ஒரு விதத்திலும் ஆற்றப் போகவில்லை –
ஆகையால் இவ்விருப்பைத் தவிர்த்து அருள வேணும் -என்று பிரார்த்திப்பதாக எம்பார் உடைய யோஜனை-
ஆழ்வான் உடைய யோஜனை –
தம்முடைய ஆற்றாமைக்கு கூட்டு சேர்க்க சம்சாரத்தில் கண் வைத்தார்
அவர்கள் சப்தாதி விஷயங்களில் தம்முடைய பகவத் விஷய பிராவண்யத்துக்கு மேலே வைப்பதைக் கண்டார்
சப்தாதி விஷயாந்தரங்களின் இழவால் நோவு படுவதைக் கண்டார்
வாளேறு கண்டவனுக்கு தேளேறு மாய்வது போலே -தமது இழவை மறந்து அவர்கள் இழவில் கண் வைத்தார்
எம்பெருமானை நோக்கி சர்வஞ்ஞன் சர்வசக்தன் நீ தானே இவர்களைக் கரைமரம் சேர்க்க வேணும் என்றார்
இவர்கள் சேதனர்கள் அன்றோ ருசி உண்டாக வேணும் -என்றான்
அசேதன பிராயர்கள் தானே என்றார்
இவர்கள் உண்டியே உடையே உகந்து -நல்லது தீயது ஆராய சக்தி உள்ளவர்களாய் இருக்க
நம்முடைய வாசியை அறியாது இருந்தார்கள் ஆகில் கை விடுவது தானே முறை
இப்பாவிகளுக்காக கவலை படாதீர் -என்றான்
ஆகில் என்னை இவர்கள் நடுவில் விட்டு வைக்காதே -முன்னம் என்னை உன்னிடம் வாங்கிக் கொள் -என்றார்
ஆழ்வார் உம்மை முன்னமே வாங்கி விட்டேனே
இவ்வுலக யாத்ரையை சிந்தித்தனால் உமக்கு உண்டாகும் கிலேசம் தீர
பரமபதத்தில் அயர்வறும் அமரர்கள் அடிமை செய்ய பிராட்டிமாரும் தாமுமாக இருக்கும் இருப்பை காட்டி அருளினான்
உடனே -ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
அடைந்தேன் உன் திருவடியை -என்று
அனுசந்தித்து
தரித்து
க்ருதக்ருதராய்
தலைக்கட்டுகிறார் –
ஐதிகம் -ஆழ்வான் ஓரிடத்தே வழிப் போகா நிற்க
சர்ப்பத்தினால் பிடிக்கப் பட்ட தவளை கூப்பிடா நிற்க
இது ஆர் அறியக் கூப்பிடுகிறதோ -என்று மோஹித்தாராம்
அரவவாய்க் கோட்பட்ட மண்டூக ஒலிகேட்டு மதிஎல்லாம் உள்களங்கி மயங்கி நின்ற பெருமானார் -என்று பின்புள்ளாரும் பேசினார்கள் –

————————————————————————————————————————————————————————————————————————————————————————–

நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன யுலகியற்கை
கண்ணாளா கடல்கடைந்தாய் உனகழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே –4-9-1-

தண்ணாவாது -கால தாமதம் இல்லாமல்
இவ்வார்த்தியைத் தீர்ப்பதோ
அன்றி இவர்கள் இழவை சிந்திக்க ஒண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்து அருள வேணும்
ஒருவனுக்கு ஒரு அநர்த்தம் வந்தவாறே
அற்றைக்கு முன்பு வெற்றிலை தின்று அறியாதர்களே யாகிலும்
அன்றாக ஒரு வெற்றிலை தேடித் தின்பது
ஒரு உடுப்பு வாங்கி உடுப்பது
சிரிப்பதாக -நிற்பார்கள் ஆயிற்றே –ஈடு
எம்பெருமானை பரம பந்துவாகக் கொள்ளாமல் இப்படி ஆபாச பந்துக்களுக்கு வயிறு பிடிப்பதும் பகைமை பாராட்டி முறுவலிப்பதும் ஆழ்வாருக்கு அசஹ்யம்
எண்ணாராத் துயர் விளக்குமே
அவனுக்கு அசுரர்கள் தலைப்பெய்யில் அவம்கொலாம் என்று ஆழும் என்னுயிர் -என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ -என்றும்
மங்களாசாசன பரர்கள் வயிறு பிடிக்க –
இப்படி லோக யாத்ரையை பண்ணி வைப்பாயோ-இவை என்ன உலகு இயற்கை –
கருமம் அடியாக -என்று அவன் சொல்ல
கண்ணாளா -உனக்கு கிருபை உண்டே
கிருபைக்கு இலக்காக்காமல் லீலைக்கு இலக்காக்கவோ
கடல் கடைந்தாய்
உனது வடிவு அழகில் சிறிதும் கண் செலுத்தாமல்
பிரயோஜநான்தரம் கண்ணாய் இருப்பார்களுக்கும்
கார்யம் தலைக் கட்டின பின்பு உன்னுடன் எதிர் அம்பு கொப்பார்களுக்கும்
சாவா மருந்து கொடுக்க
திருமேனி நோவ கடலைக் கடைந்து அருளினாயே
ஆமாம் -அவர்களுக்கு இச்சையாவது இருந்தது -அதுக்கும் என்னை அண்டி கேட்டார்களே என்ன
அது இல்லாதார்கள் இழவை பற்றி நீர் கவலை விடும் என்ன
என்னை உன்னிடம் கால தாமதம் இல்லாமல் சேர்த்து இவர்கள் உடன் இருக்கும் இருப்பை தவிர்த்து அருள்
உன் கழற்கே பரிசு தண்ணாவாது
சாமாறு -சரீர விநியோகம் தான் மோஷம்மற்ற மதச்தார்
கைங்கர்யமே புருஷார்த்தம் உறுதி கொண்ட ஆழ்வார்
இப்போது இக் கொடியவர் நடுவில் இருக்கும் இருப்பை- தவிர்த்து அருளுவதே பிரதானம் என்கிறார் இத்தால் –

———————————————————————————————————————————————————————————————————————————————

சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்தது அலற்றும் இவை என்ன வுலகியற்கை
ஆமாறு ஓன்று அறியேன் நான் அரவணை யாய் அம்மானே
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக் கொண்டே –4-9-2-

தலைத் தலைப் பெய்து -ஒருவருக்கு ஒருவர் மேல் விழுந்து
சாமாறும் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
ராத்ரிர் கமிஷ்யதி பவிஷ்யதி ஸூப்ரபாதம் பாஸ்வா நுதேஷ்யதி ஹவிஷ்யதி பங்கஜ ஸ்ரீ
இத்தம் விசிந்தயதி கோ சகதே த்விரேப ஹா ஹந்த ஹந்த நலிநீம் கஜ உஜ்ஜஹார –
கெடுமாறும் -இவன் அவனைக் கெடுக்க கோலித்து இருக்க வேறு சிலர் இவனை கெடுக்க –
ஆழ்வாருக்கு தமர்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களே
ஆமாறு ஓன்று அறியேன் நான்-இந்த சம்சாரிகளுக்கும் உனக்கும் உறவு முறை குறையற்று இருக்க பிரகிருதி க்கு வசப்பட்டு இப்படி இருப்பதால்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
காற்றத்திடைப் பட்ட கலவர் மனம் போல் ஆற்றத் துளங்கா நிற்பன்
பாம்போடு ஒரு கூரையில் பயின்றால்போல் தான்காதுள்ளம் துக்கும்
இருபாடு எரி கொள்ளியுள் உள் எறும்பே போல் உருகா நிற்கும் என் உள்ளம்
சம்சாரிகளுக்கு ஆமாறு -துயரம் தீர்க்கும் வழி அறியேன் என்னவுமாம்
அரவணையாய்
சென்றால் குடையாம் -ஒருவனையே சகலவித கைங்கர்யங்களையும் கொள்ள நிர்பந்தம் உண்டோ
அடியேன் உளன் –
கூமாறு -அழைத்துக் கொள்ளும்படியாக
இந்த சம்சாரத்தில் கதறுபவன் நான் ஒருவனே
விசேஷித்து திரு உள்ளம் பற்றி அருள வேணும் -அடியேனைக் குறிக் கொண்டே

————————————————————————————————————————————————————————————————————————————————————–

கொண்டாட்டும் குலம் புனைவும் தமருற்றார் விழு நிதியும்
வண்டார் பூம் குழலாளும் மனை யொழிய வுயிர் மாய்தல்
கண்டாற்றேன் உலகு இயற்கை கடல் வண்ணா வடியேனை
பண்டே போல் கருதாது உன்னடிக்கே கூய்ப் பணி கொள்ளே –4-9-3-

நாலுகாசு கைப்படவாறே நாலு பேர்கள் கொண்டாடுவார்களே
இன்ன திரு வம்சம் என்று ஏறிட்டுக் கொள்வார்களே
இவனுடைய தாயாதிகளாக சொல்லிக் கொள்வது ஏற்றம் என்பர்
உறவுக்காரர்கள் மேல் விழுவார்கள்
நினைவின்றிக்கே இருக்கச் செய்தே சருகிலை திரளுமா போலே சிறிய நிதி வந்து கைப்புக்கும்
அதுக்குப் போக்கடி காணாமையாலே செய்வது அறியாமே அத்தை இட்டு ஒரு ஸ்திரீயை சுவீகரிக்கும்
அது தான் வண்டார் பூம் குழலாள் ஆயிற்று
இவள் செவ்வியை வண்டே புஜித்து போம் இத்தனை போக்கி தான் புஜிக்க மாட்டான்
போக யோக்யதை இல்லாத பருவத்திலே யாயிற்று ச்வீகரிப்பது –
விழு நிதியும் -அளவற்ற செல்வமும்
யொழிய வுயிர் மாய்தல்-இவை எல்லாம் தன்னை விட்டு நீங்கி திடீர் என்று இறந்து போவது ஆகிற
நிர்வேதம் கண்டு பொறுக்க ஒண்ணாது இருக்குமே

———————————————————————————————————————————————————————————————————————————-

கொள்ளென்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக
கொள்ளென்று தமமூடும் இவை என்ன உலகியற்கை
வள்ளலே மணி வண்ணா உனகழற்கே வரும் பரிசு
வள்ளல் செய்தடியேனை உனதருளால் வாங்காயே –4-9-4-

ஐஸ்வர்யம் அனர்த்த ஹேது அறிந்தும் மேல் விழா நிற்பார்கள்
பகல் கண்ட குழியிலே இரா விழுவாரைப் போலே
வள்ளலே மணி வண்ணா
உனது திரு மேனி அழகாய் அனுபவிக்க முற்றூட்டாக வழங்குபவனே
மாணிக்கப் பண்டாரத்தை இ றே ஔதார்யம் பண்ணிற்று -ஈடு

——————————————————————————————————————————————————————–

வாங்கு நீர் மலருலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்குயிர்கள் பிறப்பு இறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கி தன் மேல் வெந்நரகம் இவை என்ன உலகியற்கை
வாங்கெனை நீ மணி வண்ணா அடியேனை மறுக்கேலே -4-9-5-

வாங்கு நீர் மலருலகில்-
உலகங்களை எல்லாம் பிறகு தன் பக்கல் சம்ஹரித்து கொள்ள வல்ல நீரிலே -மலர்ந்த -பூமியின் கண் –
நீர் வாங்கு -கடல் சூழ்ந்த
மலர்-விச்தீர்ணமான
காரைப் பொருள் காரண பொருளிலே லயம் என்னுமாம்
அப ஏவ சசர்ஜா தௌ-என்கிறபடி
வாங்கும் நீர் -கார்யப் பொருள்களை தன்னிடம் சுருக்கிக் கொள்ளும் நீரில் நின்று
மலர் -மீண்டும் உத்பத்தி ஆகும் உலகில் என்றுமாம்
இதுக்கு மேலே நரக அனுபவம்
நா மடித்து என்னை அநேகம் தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புக என்று மோதும் போது
நமன் தமர் பற்றி ஏற்றி வைத்த எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவி தழுவென மொழிவதற்கு அஞ்சி –
இத்துன்பம் நடைபெறாத தேசத்தில் என்னை சடக்கென திருவடி சேர்த்துக் கொள்ள அருள வேணும்

———————————————————————————————————————————————————————————————————————–

மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்று உண்பர்
அறப் பொருளை யறிந்து ஓரார் இவை என்ன உலகியற்கை
வெறித் துளப முடியானே வினையேனை யுனக்கடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே–4-9-6-

பரஹிம்சையே போது போக்கான இந்த உலகு மறுக்கி -பயமூட்டி
குமைத்திட்டு உண்பர் -சித்ரவதம் பண்ணி தங்கள் வயற்றை வளர்ப்பர்
தேஹாத்மா விலஷண ஆத்மவஸ்து பற்றி கவலைப் படாமல்
இன்னம் இங்கே என்னை வைத்தாயாகில் நீ அடிமை கொண்டது எல்லாம் பாழ் ஆகி விடும்
விரைந்து திருவடி சேர்த்து கொள்ள வேணும்

—————————————————————————————————————————————————————–

ஆயே இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்றொரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்றிவை ஒழிய
கூயே கொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டலே –4-9-7-

சகல பதார்ந்தங்களும் நீ இட்ட வழக்கு
பேறு உம்மாதான பின்பு நீயே அடியேன் கிட்டி அருள வழி பார்த்து அருள வேணும்
ஆயே
தாயே என்றபடி
அந்தோ என்றபடி
இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே ஆய என்று மேலே கூட்டவுமாம்
முமுஷூ வாக ஆக்கி வைத்த நீ முக்தனாகவும் ஆக்கி அருள வேணும்
கொடுவுலகம் காட்டலே-
இவ்வுலகத்தின் கொடுமையைத் தவிர்த்து
இவிபூதி தன்னையே நித்ய விபூதியாக
காட்டித் தர வல்லையேல் காட்டி அருளுவாயாக –

—————————————————————————————————————————————————————————————-

காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை
கோட்டையினில் கழித்து என்னை யுன் கொழும் சோதி யுயரத்து
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே –4-9-8-

இமையோர் வாழ் தனி முட்டை கோட்டையினில் கழித்து -பிரமாண்டமாகிற கோட்டையினில் நின்றும் என்னை அப்புறப்படுத்தி
பிரமன் முதலிய ஷேத்ரஞ்ஞர்கள் நிரந்த அண்டத்தில் நின்றும் என்றபடி –
சம்சார நாற்றம் தொட்டு அறியாத
சுத்த சத்வமய
நிரவதிக தேஜோ ரூபமாய
பரமபதத்தில் திருவடிகளிலே சேர்த்துக் கொள்வது என்றைக்கோ –
ஸ்ரீ பாரத ஆழ்வானுக்கு நாளிட்டுக் கொடுத்தால் போலே அருள வேணும்
பிள்ளை திருநறையூர் அரையர் ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்க ஒன்கிரதில்லை
ஒரு சர்வ சக்தி கர்ம அனுகூலமாக பிணைத்த பிணையை
அவனைக் கால் கட்டாதே
இவ் வெலி எலும்பனான சம்சாரியாலோ அவிழ்த்துக் கொள்ளப் போமோ -என்று பணிப்பராம்

—————————————————————————————————————————————————————————————————— ——————-

கூட்டிதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழா வகை செய்து
ஆட்டுதி நீ யரவணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே –4-9-9-

ஆழ்வார் ஆர்த்தி தீரும்படியாக
பரமபதத்தில் இருக்கும் இருப்பை காட்டி அருள
எளியனாகவும் -கூட்டுதி -அரியனாகவும் தொழா வைகையும் -இருப்பதை நான் அறிவேன்
என்னை விஷயீ கரிக்கத் திரு உள்ளம் பெற்ற படியால் உனது திருவடிக் கீழ் அடியேனைச் சேர்த்துக் கொண்டாய் இது நான் கண்டேன்
இவ்வுலக ஆசைகள் எல்லாம் த்கவிர்த்து அருளினாய் முதல் முன்னம்
ஸ்ரீ பாரத ஆழ்வானுக்கு மரவடியை உபச் சந்தனம் பண்ணினால் போல் அன்றிக்கே
உனது சாஷாத் திருவடிகளையே என் தலை மீது வைத்து அருளினாய்
இது கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே
நானே அனுபவிக்கப் பெற்றேன் ஆகையாலே அறிந்தேன் –

————————————————————————————————————————————————————————————————————————————————

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட வின்பம்
தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம்
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே -4-9-10-

உகப்பின் மிகுதியால் கீழ் கண்ட அனுபவத்தை பண்ணி பண்ணி அருளுகிறார் ஒண் தொடியாள்-அழகிய கைவளை உடைய -நித்ய அநபாயினி-தொடி -கைவளை
யாமி ந யாமீதி தவே வததி புரஸ்தாத் ஷநேன தன்வங்க்யா
களிதானி புரோ வசயானி அபராணி புனஸ் ததைவ தலிதானி
ந யாமி நான் போகிறது இல்லை உன்னையும் கூட அழைத்துப் போவேன் –
இவருடைய அபிமானத்துக்கு உள்ளே த்ரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்
வாசல் தோறும் ஈச்வரர்கள் இங்கே இ றே -ஈடு
நிலா நிற்ப -அழகுற நிற்ப
கண்டபின்பு விஷய சுகங்களையும்
தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம் -கைவல்யனுபவம்
தெரிவரிய -புலன்களால் அறிய முடியாத
அளவில்லா நித்ய மோஷம்
சிற்றின்பம் -பகவத் அனுபவம் அபேஷித்து இது அல்பம் ஆகையால் –
தவிர்ந்து உன் திருவடிகளை அடையப் பெற்றேன்
வைகுண்டே து பரேலோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆச்தே விஷ்ணு சிந்த்யாத்மா –

——————————————————————————————————————————————————————————————————————————————–

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதிச் செழும் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேலுரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே யடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே –4-9-11-

திருவடிகள் உடன் சேர்த்து விக்கும் -சடக்கென பகவத் பிராப்தியைப் பண்ணுவிக்கும்-
கைங்கர்ய பிராப்தி கிட்டும் –
கேசவன் -கேசாபாசம் -கேசி வதம் -பிரமன் சிவன் இருவருக்கும் நியாமகன்

——————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–ஏறாளும் இறையோனும்–4-8-

October 27, 2014

கீழ்த் திருவாய் மொழியிலே கேட்டார்கள் நீராகும்படி கூப்பிடச் செய்தேயும் எம்பருமான் முகம் காட்டி அருள வில்லை –
அதனால் எம்பெருமான் தம்மை வேண்டா என்று வெறுத்து இருப்பதாக நினைத்து
அவன் வெறுப்புக்கு இலக்கான ஆத்மாத்மீயங்கள் வேண்டாம் என்கிறார் இதில்
ந ஹி மே ஜீவிதே நார்த்த நைவார்த்தைர் ந ச பூஷணை வசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மகா ரதம் -சீதா பிராட்டி வெறுத்தால் போலே
ஸ்தோத்ர ரத்னத்தில் இத் திருவாய் மொழி அர்த்தம் பரிபூர்ணமாக ஆளவந்தார் காட்டி அருளும் ஸ்தோத்ரம் –
ந தேஹம் ந பிராணான் ந ஸூ கம் அசேஷாபிலஷிதம் ந சாத்மானம் தத் சத்யம் மது மதன விஜ்ஞ்ஞாப நமிதம் –
சரீரமாத்யம் கலு தர்ம சாதனம் –இவை எல்லாம் உன்னுடைய சேஷத்வத்துக்கு உப யுக்தம்
பொய்யாகில் மது பட்டது படட்டும்
பகவத் கைங்கர்யத்துக்கு உறுப்பு அல்லாதது த்யாஜ்யம் -சாஸ்தரார்த்தம்
-கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அள்ளித் தீர்வேனே –

என்று அருளிச் செய்கிறார் ஆண்டாள்

நாயகி சமாதியால் அருளிச் செய்த திருவாய் மொழி
மணிமாமை குறைவிலமே
மேகலையால் குறைவிலமே
வரிவளையால் குறைவிலமே
திரு மங்கை ஆழ்வாரும் பெரிய திரு மடலில்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடி மலரின் நன்னறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறுநிலத்து வானாங்குகுத்தது போலே
என்னுடைய பெண்மையும் என்னலனும் மென்முலையும்
மன்னுமலர் மங்கை மைந்தன் கணபுரத்து பொன்மலை போல் நின்றவன் தன பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா வெனக்கே பொறியாகி முன்னிருந்து மூக்கின்று
மூவாமைக் காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே-என்று அருளிச் செய்கிறார் –

—————————————————————————————————————————————————————————————————————-

ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை
நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே–4-8-1-

நிருமித்து -சங்கல்ப்பித்து
சௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான்
தாமஸ தெய்வத்துக்கு எளிதான திருமேனி எனக்கு அரிதாவதே
சிவனோடு பிரமன் வண திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -என்பர் ஒன்பதாம் பத்தில்
வீர குணம் சொல்கிறது மேல்
நிரூபித்து -சங்கல்பத்தால் ஸ்ருஷ்டியாதிகள் செய்து அருளுபவன் படை தொட்டு கண் காண வந்து
ஈஸ்வரன் பண்ணி அருளின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்
சங்கல்ப மாத்ரத்திலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சர்வ சக்தியான சர்வேஸ்வரன்
தன்னை அழிய மாறி இதர சஜாதீயனாய் அவதரித்து
கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபங்களான
அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் பிரஹ்லாதன் மகரிஷிகள் தொடக்கமான

அவ்வவோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் சஹியாமையாலே என்று

ஆப்த தமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் -என்கை -மணவாள மாமுனிகள்
மாறாளன்
ஆஸ்ரித விரோதிகளை தனது விரோதிகளாகக் கொண்டு அவர்களோடு மாறு பட்டு இருப்பவன்
அவன் ஓடி வந்து மேல் விழுந்தால் அன்றோ அழகிய நிறம் உத்தேச்யம்
குறைவு -லஷணையால் அபேஷிதம் என்ற பொருள்
குறைவிலம் -அபேஷை உடையோம் அல்லோம் –

———————————————————————————————————————————————————————————————————————————

மணிமாமை குறைவில்லா மலர் மாதருறை மார்பன்
அணிமானத் தடை வரைத் தோள் அடலாழித் தடக்கையன்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறைவிலமே –4-8-2-

பெரிய பிராட்டியாரும் கூட இருக்கச் செய்தே இழந்தேனே
அஸ்தானே பய சங்கை புரியும் திரு ஆழி வாழ்வான்
இளைய பெருமாளை அடிமை கொண்டால் போல் ஏற்கவே என்னை அடிமை கொண்டவனும்
நீல மணி போன்ற அழகிய வடிவு உடையவன்
விரும்பாத நெஞ்சம் வேண்டாம்
பணிமானம் பிழையாமே-ஐதிகம்
எம்பெருமானார் மடத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க
அவர்களுக்கு தீர்த்தம் பரிமாறும் கிடாம்பி ஆச்சான் நேரே நின்று பரிமாறாமல் பக்கம் நின்று பரிமாற
அத்தைக் கடாஷித்த எம்பெருமானார் ஓடி வந்து முதுகிலே அடித்து
உடோ இப்படியா பரிமாறுவது -நேரே இன்று அன்றோ பரிமாற வேணும் என்று சிஷிக்க –
அப்போது ஆச்சான் -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்டு அருளிற்றே -என்று உகந்தாராம்
ஆழ்வார் தாம் செய்து போருகிற வாசிக கைங்கர்யத்தைப் பற்ற
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -என்கிறார்
கவராத மட நெஞ்சால் குறைவிலமே –
கோவை வாயாள்-என்கிற திருவாய் மொழியில் -பூசும் சாந்து என் நெஞ்சமே என்னும்படி அப்போது அப்படி விரும்பினவன் இன்று இப்படி உபேஷிக்கையாலே
நாயகன் தாமதித்து வந்தான் என்று அவன் முன்னிலையிலே சாந்தை பரணியோடு உடைப்பாரைப் போலே
என் நெஞ்சு எனக்கு வேண்டாள் என்கிறாள் -நஞ்சீயர்

————————————————————————————————————————————————————————————————————————————

மட நெஞ்சால் குறைவில்லா மகள் தாய் செய்தொரு பேய்ச்சி
விட நஞ்சமுலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்தணைக் கிடந்த பருவரைத் தோள் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறை வினால் குறைவிலமே –4-8-3

கண்ணபிரான் விரும்பாத அடக்கம் வேண்டாம் என்கிறாள்
நிறைவு பூர்த்தி
ஸ்த்ரீத்வத்த பூர்த்தியை இங்கே சொல்கிறது
தாய் போலே பரிவுடன் வந்ததால் பூதனைக்கு மட நெஞ்சால் குறை இல்லா -விசேஷணம்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி உண்ட வாயன் -திருமங்கை ஆழ்வார்
மகனாய் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனார உண்பன் என உண்டு மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் -பூதத் தாழ்வார்
விட நஞ்சம் -மீமிசை கொடுமையைக்காட்ட -நாட்டில் விஷங்கள் எல்லாம் அமிர்தம் என்னும்படி
மிகு ஞான சிறு குழவி
நாட்டில் பாகவதர்கள் சிறு மா மனிசர் போலே
வயிறார பாலுண்டதால் படுக்கை தேட்டமாக -பட நாகத்தணைக் கிடந்த –

—————————————————————————————————————————————————————————————————————-

நிறையினால் குறைவில்லா நெடும் பனைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யனைவான் பொருவிடை ஏழு அடர்த்துகந்த
கறையினார் துவருடுக்கைக் கடையாவின் கழி கோல்கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

எம்பெருமான் விரும்பாத செவ்விய நிறம் எனக்கு வேண்டாம் -எருதிகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்ட இத்தை
அவள் முலையாலே பிறந்த விமர்த்தமாக நினைத்து இருந்தான் -ஈடு
கருமாறி பாய்ந்தும் அணைய வேண்டும் யாய்த்து நப்பின்னை பிராட்டியின் வடிவு அழகு –
இடையர் காட்டுக்குப் போம் பொது முள் கிழியாமையைக்கு உடுத்தும் உடைத் தோலைச் சொல்லுகிறது —
காட்டில் பழங்களை பறித்திடுகையாலே கறை மிக்கு இருக்கும்
அத்தாலே கறை மிக்கு துவராயிற்று உடுக்கை
கடையாவோடு சேர்ந்த கழி கோல்
கடையாவும் கழி கோலும்
பால் கறக்க மூங்கில் குழாய் பாத்ரம் கடையா
சறையினார் -இடையர் இடுக்கில் கட்டிக் கொள்ளும் மணி -சறை மணி
இடையர் அரையிலே கோத்துக் கட்டி முன்னே போகா நின்றால்
அந்த த்வனி வழியே பசுக்கள் எல்லாம் ஓடி வரும்படியாய் இருப்பதொன்று -ஈடு
சறை தாழ்வு -இடக்கை வலக்கை அறியாதவர் என்றுமாம்
அல்லாத இடையர் விஷூ அயன சங்க க்ரமணங்களுக்கு உடம்பு இருக்க தலை குளித்தல்
உடம்பிலே துளி நீர் ஏறிட்டு கொள்ளுதல் செய்வார்கள் ஆகில்
இவனுக்கு அது செய்யவும்அவசரம் அற்று இருக்குமாயிற்று பசுக்களின்
பசுக்களின் பின்னே திரிகையாலே ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்காக தன்னைப் பேணாதே

அவ்வடிவை அணைக்கைக்காக ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது –
தீஷிதம் வ்ரத சம்பந்தம் வராஜி நதாம் சுசிம் குரங்கச்சுருங்க பாணிஞ்ச பச்யந்தீ தவா பஜாம்யஹம் –
பட்டாபிஷேக நிமித்தமாக நியமங்கள் உடன் கூடிய பெருமாள் பற்றி பிராட்டிவார்த்தை –

—————————————————————————————————————————————————————————————-

தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாகக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த்துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே –4-8-5-

இராமபிரான் உடைய சேஷத்வத்துக்கு உறுப்பு அல்லாத அறிவு எனக்கு வேண்டாம்
தேவ ஸ்திரீகள் சிறையை விடுவிக்க தானே வலிய சிறை புகுந்தாள்
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ ராமாயனத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
விளப்புற்ற -பிரசித்தி பெற்ற –
இற்பிறப்பு எனபது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் கற்பு எனப் படுவதும் ஒன்றும் -களி நடம் புரியக் கண்டேன் –
மதுரா மதுராலாபா -என்று ராமபிரானும் பேசும்படி கிளி மொழியாள்
நகர் எரித்த –கமழ் முடியன் -இர்ரவனைக் கொன்று விபீஷணனுக்கு முடி சூட்டிய பின்பு இவனுக்கு முடி தரித்த படி
அபிஷிச்ய ச லங்காயாம் ராஷசேந்தரம் விபீஷணம் க்ருத்க்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோதஹா
கடல் ஞாலத்து அளி மிக்கான்-நித்ய விபூதியில் விட இந்த விபூதியிலே வசிப்பதே உகப்பான்
த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கல் திரு உள்ளம் குடி போய்-
இப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத அறிவு எனக்கு எதுக்கு
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –

———————————————————————————————————————————————————————————-

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி
குறிய மாணுருவாகிக் கொடும் கோளால் நிலம் கொண்ட
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே –4-8-6-

பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக
எனக்கு அறிவு இல்லையே என்று குறைபட அறியாதவர்கள் என்றபடி –
நாட்டார் அன்ன பாநாதிகள் எல்லா வற்றாலும் கார்யம் உடையார்களாய் இருப்பார்கள் இ றே
அறிவு ஒன்றிலுமே யாயிற்று குறைவு பட அறியாதது
அரிவாள் கார்யம் இன்றிக்கே இருப்பார் யாயிற்று -ஈடு
கீதோபதேசம் அர்ஜுனன் வ்யாஜ்யமாக அகல் ஞாலத்தாருக்கு அருளிச் செய்தான் ஆயிற்று
கர்ம ஞான பக்தி பிரபத்திகள்
அவதார ரகசியம் புருஷோத்தம வித்யை-உபாயங்கள் எல்லாம் நெறி எல்லாம் உரைத்த –

குறிய மாண் உருவாகி-
உபதேசத்தால் திருந்தாரை வடிவ அழகால் திருத்த கொண்ட குறள் திரு வுருவம்
கொடும் கொள் கடினமான பரதிக்ரஹம்-சிறிர காலைக் காட்டி பெரிய காலால் அளந்து கொண்ட வஞ்சனம்
கஸ்த்வம் ப்ரஹ்மன்–யார்
அபூர்வ -அபூர்வ என்றான் -எல்லாருக்கும் முற்பட்டவன் -முன்பு இரப்பாளனாக வந்தது இல்லை
க்வ ச தவ வஸ்தி-இருப்பிடம் யாது
யாகிலா ப்ரஹ்ம சிருஷ்டி -யாசகன் உலகு எல்லாம் திரிபவன் -கரந்து எங்கும் பரந்து உறை தனி நாயகன்
கஸ் தே த்ராதஸ்தி -யாருடைய சம்ரஷணத்தில் உள்ளாய் –
அநாத-அநாதி -மிக்கார் இல்லாதவன்
க்வ ச தவ ஜனக -தகப்பனார் எங்கே
நைவ தாதம் ஸ்மராமி -நினைவில்லை -இளம் வயதில் தந்தை இழந்தேன் -நானே பிதா
கிம் தே அபீஷ்டம் ததாநி -நீ விரும்பும் பொருள் என்ன
த்ரிபதபரிமிதா பூமி -என்னுடைய பாதத்தால் நான் அளப்ப மூவடி
அத்யல்பமேதத்
த்ரைலோக்யம் பாவகர்ப்பம் பளிமிதி நிகதன் வாமனோ வஸ் ச பாயாத் –
இப்படி வாக் சாதுர்யம் நினைத்து கொடும் கோளால் நிலம் கொண்ட -என்றதாகவுமாம்
கிரி -உபாயம்
பெரும் விரகு அறிந்து வாங்க வல்ல பெரும் விரகன்
இப்படிப்பட்டவன் விரும்பாத லாவண்யத்தில் அபேஷை இல்லை

————————————————————————————————————————————————————————————————————-

கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து
கிளரொளிய விரணியனது அகல் மார்பம் கிழித்துகந்த
வளரொளிய கனலாழி வலம் புரியன் மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறைவிலமே –4-8-7-

ஆஸ்ரித விரோதியான ஹிரண்யனைப் பிளந்து ஒழித்த நரசிம்ஹன் விரும்பாத வளை வேண்டேன் –
சிறுக்கன் உடைய விரோதி தொலையப் பெற்றோம் என்று உகந்தான்
வளரொளிய கனலாழி வலம் புரியன்-திரு உகிருக்கே இறை போராமல் திவ்யாயுதங்களுக்கு கார்யம் இல்லையாயிற்று
இறை கிடைக்காத சீற்றத்தினால் சங்கும் சக்கரமும் கத கத என்று வயிறு எரிகிறபடி
அப்படிப்பட்ட எம்பெருமான் வாங்கித் தன் கையில் இட்டுக் கொள்ளாத வளை வேண்டேன்-

———————————————————————————————————————————————————————————————————————————

வரி வளையால் குறைவில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி யழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவரிய சிவன் பிரமன் அமரர்கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறைவிலமே –4-8-8-

மண்ணின் பாரம் நீக்க வடமதுரை பிறந்து விரோதிகளை தொலைத்து அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விரும்பாத மேகலை வேண்டேன்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தின் மகா கோஷம் -வரிவளையால் குறைவில்லா பெரு முழக்கம்
எரி அழலால்-கிளர்ந்து எழுகிற பயம் ஆகிற அக்னியால்
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச ஜன்யம் -இ றே
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை மகிழ்வித்து சிசுபாலாதிகளை மண் உண்ணப் பண்ணச் செய்த பெரு முழக்கம்
துர்மாநிகளும் துர்மானம் தவிர்ந்து ஏத்தி ஸ்வரூப லாபம் பெறும்படி
எம்பெருமானுக்கும் அத்தாலே சந்தோஷகரம் என்பதால் ஆழ்வார்கள் அத்தை ஒரு பொருளாக அருளிச் செய்வார்கள் –

————————————————————————————————————————————————————————————————————————–

மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற வகலல்குல்
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாகமிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கு ஒடுங்க
யோகணைவான் கவராத உடம்பினால் குறைவிலமே –4-8-9-

வாணன் ஆயிரம் தோள் துணித்த பெருமான் விரும்பாத உடம்பு வேண்டேன்
மேகலையால் குறைவில்லா -உடை அழகினால் குறைவற்ற உஷை
மே கலை -விரும்பத் தக்க வஸ்த்ரம்
மேம்பாடு உடையான கலை -உஷைக்கு கூற்றை உடை அழகியதாம் இருக்கும் போலே கான் -என்பாராம் வங்கி புரத்து நம்பி
அல்குல் மத்திய பிரதேசம் அருளிச் செயலில் -பெண் குறியை குறிக்காது
திரு மலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என் அல்குல் ஏறி -பெரியாழ்வார்
பூந்துகில் சேர் அல்குல் -பெருமாள் திருமொழி

———————————————————————————————————————————————————————————————————————-

உடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்துகந்த
தடம் புனல சடை முடியன் தனியொரு கூறமர்ந்து றையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே –4-8-10-

உடம்பினால் குறைவில்லா -ஊன் மல்கி மோடு பருப்பார் -தேக போஷணத்திலே நோக்குடைய அசுரர்
சபிராணனாய்க் கொண்டு சஞ்சரித்த பர்வதங்கள் இந்த்ரன் கையிலே வஜ்ராயுதத்தால் பல கூறாம்படி
துணியுண்டு கிடந்தால் போலே அசூர வர்க்கத்தை பல கூறாம்படி துணித்தான் ஆயிற்று -ஈடு
சுதர்சன சதகம் -க்ருதசக்ருதாக ஸ்பந்த தான –
சக்திர் யச்யேஷூ தம்ஷ்ட்ரானாக பரசுமுக வியாபி நீ –
திருவாழி ஆள்வான் ஆவேசம் கொண்டே வஜ்ராயுதம் செய்த செயல் என்றபடி
உயிரினால் குறைவிலமே –இந்த ஆத்மா தொலைந்து போகட்டும் என்றபடி
-நித்ய வஸ்து தானே
எம்பெருமான் உடைய விருப்பத்துக்கு உடலாவதே ஆத்மாவின் ஸ்வரூபம் என்று கூட்டின படி –
சேஷத்வ பஹிர்ப்பூத ஜ்ஞானந்த மயனையும் சஹியாதார் த்யாஜ்ய உபாதியை ஆதரியார்களே -நாயனார்
உயிரினால் குறைவிலம் என்கிறபடியே -த்யாஜ்யம் -முமுஷுப்படி –

——————————————————————————————————————————————————————————————————————

உயிரினால் குறைவில்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
தயிர் வெண்ணெய் யுண்டானைத் தடம் குருகூர்ச் சடகோபன்
செயிரில் சொல்லிசை மாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே –4-8-11

பரமபதம் பெறுவார் -பலன் சொல்லி தலைக்கட்டுகிறார் -உயிரினால் குறைவில்லா-ஒரு ஜீவாத்மாவும் தப்பாமல் –
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழிவாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக்கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட -என்றும்
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட –என்றும் -அருளியபடி –
உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி தயிர் வெண்ணெய் யுண்டானை-
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுகிற போது
செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே
அந்ய பாரதிக்கு உடலாக ஒண்ணாதே –என்று
எல்லா லோகங்களுக்கும் வேண்டும் சம்விதானம் தன சங்கல்ப்பத்தாலே செய்து பின்னை யாயிற்று வெண்ணெய் அமுது செய்தது -ஈடு
கர்ப்பிணிகள் வயிற்றில் பிள்ளைக்கு ஈடாக
போஜநாதிகள் பண்ணுமா போலே
உள் விழுங்கின லோகங்களுக்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான்-ஈடு

வயிரம் சேர் பிறப்பு -வேண்டாம் என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற சம்சாரம்
செயரில் -சொல் குற்றம் பொருள் குற்றம் இல்லாத என்றபடி-

————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை—சீலமில்லாச் சிறியனேலும்-4-7-

October 26, 2014

உலர்ந்து தரைப்பட்ட செடியானது மழைத் துளிப்பட்டவாறே செழிப்புறுமா போலே
கீழே மோஹித்து தரைப்பட கிடந்த ஆழ்வார் தோழிமார் வாக்கில் திரு நாமங்களைக் கேட்க்கப் பெற்ற பிரசக்தியாலே
உணர்ந்தார் அத்தனையே ஒழிய சம்ச்லேஷிக்கப் பெற்றிலர்
மோஹித்த நிலையே நன்றாய் இருந்தது
துயரம் தெரியாதே
துடித்துக் கூப்பிடுகிறார் இத் திருவாய் மொழியில்
அவனோ ஆபத்சகத்வன்
ஆபத்துக்கு நிதானம் அறிந்து பரிஹரிக்கவும் வல்லவன்
பிரிந்தால் பொறுத்து இருக்க ஒண்ணாத அழகு படைத்தவன்
சர்வ சக்தன்
இப்படி இருந்தும் ஆற்றாமை தீர்க்க வந்து உதவவில்லையே
என்ற கனத்த ஆர்த்தியுடன்
கேட்டார் எல்லாரும் நீராய்க் கரையும்படி கூப்பிடுகிறார் –

————————————————————————————————————————————————————————————–

சீலமில்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தீ நாராயணா வென்று வென்று
காலம் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்
கோலமேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே–4-7-1-

கைதலை பூசலிட்டால் -கையைத் தலையில் வைத்து கூப்பிட்டால்
மத்தகத்திடை கைகளைக் கூப்பி
சிரஸ் அஞ்சலிமாதாய
ஆற்றாமையால் தலையில் மோதிக் கொள்ளும்படி
சீலமில்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
சீலம் -நல் நடத்தை
பண்ணின பாபத்தைப் பார்த்தவாறே சிதசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும்
விளாக்குலை கொள்ளும்படி பெருத்து இருந்தது
சம்சாரிகளுடைய குற்றங்களைப் பொறுக்கும் ஈஸ்வரனுடைய குணங்களிலும்
அவன் தந்த பக்தி ரூபாபன்ன ஞானத்தில் காட்டிலும் பெரியதாய் யாயிற்று இருக்கிறது -ஈடு
செய் வினையோ -தீயனை செய்தே தலைக்கட்டினேன் -செய்யும் எண்ணம் மட்டும் இல்லை என்கிறார்
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மகதஸ்தி ந சம்சய ஸ்மர்த்தாவபி தௌ யன்மாம் நாவேஷதே பரந்தபௌ
ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் -என்றது சிறிய துஷ்க்ருதம்
அநார்ய கருணாரம்ப ந்ருசம்ச குலபாம்ப்சன —சௌமித்ரே தவ வா பரதச்ய வா -மஹத் துஷ்க்ருதம்
ஞாலம் உண்டாய்
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
பிரளய ஆபத்து வந்தால் தான் ரஷிப்பது என்ற வ்ரதம் உண்டோ
ஞான மூர்த்தி
ஆமாறு ஒன்றும் அறியேன் நான் என்று இருக்கும் அடியேனுக்கு ஆமாறு அறியும் பிரானே -நீ உதவ வேண்டும்
கண்ணும் தெரியாதே காலும் நடையாடாத எனக்கு உதவ வேணும்
நாராயணா
ரஷிக்க பிராப்தியும் உண்டே
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒளியாதே
சரீரத்துக்கு நன்மை சரீரி தானே தேட வேணும்
உடைமையை ரஷிக்க ஸ்வாமி தானே –
என்று என்று
பிரயோஜனத்துக்கு கூப்பிட்டால் வாய் ஓயலாம்
கூப்பிடுகை தானே ஸ்வயம் பிரயோஜனம்
காலம் தோறும் யான் இருந்து
படுவது எல்லாம் பட்டு நூறு பிராயமாக இருக்க வேணுமோ
குணாதிக விஷயத்தை பிரிந்தால் முடிய ஒட்டாது இன்னமும் காணலாமோ என்னும் நசை -ஈடு
கோல மேனி காண வாராய்
பக்தாநாம் -த்வம் பிரகாசசே
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் என்று வயிறு எரிந்து சொல்லும்படி இருப்பது தகுதியோ
பரிமள பிரசுரமான தீர்த்தத்தை சேகரித்து வைத்து விடாய்த்தவருக்கு கொடுக்காமல்
எட்டாத இடத்தில் வைப்பது உண்டோ
காண வர வேண்டாம் கூவிக் கொள்ளாய்
இங்கேயே சேவிக்க ஆசை –

—————————————————————————————————————————————————————————————————————-

கொள்ள மாளா வின்ப வெள்ளம் கோதில தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று
நள்ளிரவும் நன்பகலும் நானிருந்து ஓலமிட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்தீயாயே –4-7-2-

வீற்று இருந்து ஏழு உலகில் -வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்த்தனன்-என்பதை நினைத்து கொள்ளை மாளா இன்பம் கோதில தந்திடும் –
மேல் மேலே பெருகும் இன்ப வல்லம்
கோதில தருகையாவது -அனுபவித்தது போதும் தோற்றாமையும்-வேறு ஒரு இன்பம் தேடாமையும் படி தருகை
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு –அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமே -என்னும்படியாக தந்து அருளினான் என்றபடி –
என் வள்ளலே ஒ -இப்படி கதற விட அப்படி என்னை அனுபவிப்பிக்க வேணுமோ
வையம் கொண்ட வாமனாவோ
திரிவிக்ரமனாக கொண்டாலும் ஆழ்வார் திரு உள்ளம் வாமனனே நிறைந்து உள்ளமை
பிரயோஜனாந்தர பரனுக்கு உன்னை அழிய மாறியும் கார்யம் செய்து அருளினாய்
அநந்ய பிரய்ஜணன் அடியேனுக்கு காடிச் கொடுத்து அருளி செய்யக் கூடாதோ
என்று என்று
இந்த்ரன் போலே பிரயோஜனம் பெற்று மீளுகை அன்றிக்கே
இரவும் பகலும் கூப்பிட
கண்கள் விடாய் தீரும்படி நடை அழகைக் காட்டி என் முன்னே வந்து நிற்கின்றிலையே —

————————————————————————————————————————————————————————————————

ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்
தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா என்று என்று
கூவிக் கூவி நெஞ்சுருகி கண் பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே –4-7-3-

முகத்தை பார்த்து சொன்னால் சேவை கிடைக்குமே
ஆண்டாளும் -மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே -என்றாள்
அவஸ்யம் அனுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் –
நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி —
மதியிலேன் வல்வினையே -மாளாதோ என்கிறார்
தாவி -இத்யாதி
தன்னுருவம் ஆரும் அறியாமல் தான் அங்கோர் மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர் மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால்
யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக்க வென்று வாய் திறப்ப
மற்றவனும் என்னால் தரப்பட்டது என்றலுமே
அத்துணைக் கண் மின்னார் மணி முடி போய் வின் தடவ
மேல் எடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழுலகும் போய்க்கடந்த பரத்வத்தை சொல்லுவேன் –
உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்கத்
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மை யாகிய சௌலப்யத்தை பேசுவேன்
என்னை பாக்யவான் இல்லை பாவி என்று ஏதேனும் சொல்
உனது மிடற்று ஓசை கேட்பதே புருஷார்த்தம்
கண்ணுக்கு தோற்றாதே வந்து மிடற்றோசை காட்டி விட்டாலும் திருப்தி அடியேன்
என் கண்ணுக்கு இலக்காகி வந்து சொல்ல வேணும் –

—————————————————————————————————————————————————————————————

காண வந்து என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று
ஆனம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலட்ருவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடையப்பனையே –4-7-5-

ஆணிசெம்பொன் -மாற்று மிக்க ஸ்ப்ருஹணீயன்-கருமுகில் திரு நிறத்தான்
ஹிரண்ய வர்ணை-பிராட்டி உடைய சேர்த்தியால்
தாமரைக் கண் பிறழ -திருக்கண்கள் விளங்கும்படி என்னைக் கடாஷித்து அருளி –
நீஎசன்
வெட்கம் இன்றி அலற்றி
ஒரு பிரயோஜனமும் இல்லையே

—————————————————————————————————————————————————————————–

அப்பனே அடலாழி யானே ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல் என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே –4-7-5-

நான் அபேஷித்தபடியே வருவாய் -வரும் போதை நடை அழகைக் காண வேணும் -பாரித்து உள்ளேன் -என்ன சாபல்யம் –
அப்பன்
நீ முகம் காட்டாத போதும் உன்னை உபகாரன் என்று கூப்பிடும் படி அருளிய உபகாரனே
அடலாழியானே
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
பாவங்கள் நீக்கி அருளுவான்
சேர்த்தி அழகை காண வேணும் என்னவுமாம்
ஆழ் கடலைக் கடைந்த துப்பனே
பிரயோஜனாந்தர பரர்களுக்கு
துப்பாவது -அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டு உகந்த துப்பு
உன் தோள்கள் நான்கும் கண்டிட
கடைந்த போதை உப்புச்ச் சாற்றை பார்த்தே இருந்த தேவர்கள் போல் அன்றியே
உனது தோள்கள் அழகை கண்டுபல்லாண்டு பாட
ஜாதோசி தேவ தேவேச சங்க சக்ர கதாதர –
உபசம்ஹார விச்வாத்மன் ரூபமேதத் சதுர்ப்புஜம் –
உகந்தாருக்கு காட்டிக் கொடுத்து அருளாய்
கண்ணநீர் கொண்டு
அத்திருவுருவத்தை நினைத்த அளவில் ஆனந்த கண்ணநீர்
நாம் பாரிக்கிறபடி கண்களுக்கு புலப்படவில்லை சோக கண்ணநீர்
இப்பொழுதே வந்திடாய் என்று
தாமதித்து வந்தாய் ஆகில் திருப்புளி ஆழ்வாரைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியது தான்
ஏழையேன் நோக்க்வேனே –
அவஸ்யம் வந்தே விடுவான் -என்று திசையெங்கும் நோக்குகின்றேன்
நீலமேக நிபம் அஞ்ஜன புஞ்சச்யாம குந்தலம் அநந்த சயம் த்வாம்
அப்ஜபாணிபதம் அம்புஜ நேத்ரம் நேத்ர சாத்குரு கரீச சதா மீ –
கூரத் ஆழ்வான் ச்லோஹா ரத்னத்தை திருச் செவி சாத்திய உடையவர்
ஆழ்வான் இப்பாசுரம் கேட்டால் பெருமாள் இரங்காமல் இல்லை
உன் முகத்தைக் காட்டு பார்ப்போம் -என்றாராம்
கனிந்த சொற்களுக்கு எம்பெருமான் காட்சி தந்தே தீருவான் என்பதற்கு ஐதிகம் –

———————————————————————————————————————————————————————————————-

நோக்கி நோக்கியுன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானமில்லை நாள் தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை யறிந்து யறிந்தே –4-7-6-

உன்னைக் காண நாலு பக்கமும் நாக்கை நீட்டி
கன்னலம் கட்டி தன்னை கனியை இன்னமுதம் தன்னை
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே –
விழுமிய முனிவர் விழுங்கும் கோதில் இன்கவியை –
தூய அமுதைப் பருகி பருகி
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேனே
ஞானம் இல்லை
எங்கும் வியாபித்து உள்ளே என்று அறிந்து வைத்தும்
வாசி வல்லீர் –
நீயே காட்டினால் தான் காணலாம் என்று அறிந்து வைத்தும் ஞானம் இல்லாமல் நாக்கை நீட்டினேன்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றும்
அத்யந்த பக்தி யுக்தாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரம
காற்றும் கழியும் கட்டி அழக கொண்ட பத்திமை நூல் வரம்பில்லையே
நீக்கம் இன்றி எங்கும் நிறைந்தாய்
கிழிச் சீரையிலே தனம் கிடக்க புறம் கால் வீன்குவாரைப் போலே காணும் இவர் படி -ஈடு

—————————————————————————————————————————————————————————————–

அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனதாவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்
நறும் துழாயின் கண்ணி யம்மா நானுன்னைக் கண்டு கொண்டே –4-7-7-

ஆழ்வீர் உம்மை நிந்தித்தால் என்னை அன்றோ நிந்தித்தது போலே
உமக்கு எத்தை உபகாரகங்கள் செய்துள்ளேன் என்ன
செய்தவற்றை இதிலும்
இன்னும் செய்ய வேண்டியதை அடுத்த பாசுரத்திலும் அருளுகிறார் –
நான் உன்னைக் கண்டு கொண்டே -இதுவும் மானஸ சாஷாத் காரம் தான்
கமலக் கண்ணன் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற பத்தும் உட் கண்ணாலேயாய் -நாயனார்
அறிந்து அறிந்து -அர்த்த பஞ்சகத்தையும் அறிந்து அதில் ஒவ்வொன்றிலும் தெளிவு பெற்றதை தேறி தேறி –
பர ஸ்வரூப ஞானம் அறிந்து ஆஸ்ரித பாரதந்த்ர்யமே வடிவாக உடையவன் என்று தெளிந்து
சேஷத்வ ஞானம் அறிந்து பாகவத சேஷத்வ பர்யந்தம் தெளிந்து
அவனே உபாயம் என்று அறிந்துசுயகாத ச்வீகாரம் அஹங்கார கர்ப்பம் – பரகத ச்வீகாரமே உபாயம் என்று தெளிந்து
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்வது புருஷார்த்த ஞானம் என்று அறிந்து
கைங்கர்யம் செய்து அவன் அவனை ஆனந்திப்பித்து அது கண்டு ஆனந்திப்பது தான் புருஷார்த்தம் என்று தெளிந்து
அஹங்கார மமகாரங்கள் விரோதி ஸ்வரூபம் என்று அறிந்து
கைங்கர்யம் நான் செய்கிறேன் எனக்காக செய்கிறேன் என்று செய்கை பரம விரோதி என்று உணருகை தெளிந்த நிலை
இப்படி உபாய உபேயங்களை அறிந்தும் தெளிந்தும்
இடறும் -சரியான பாடம் -இடரும்-தப்பு
ஈமின் எமக்கு இரு துற்று என்று இடறுவர்-4-1-7-
பிரஜை தெருவிலே இடறி -ஸ்ரீ வசன பூஷணம்
இடறுதல் -கிலேசப்படுதல்
நறும் துழாயின் கண்ணி யம்மா
இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடி
வைத்த வளையத்தைக் காட்டி
அவ்வடிவிலே குருகுல வாசத்தை பண்ணுவித்து
அறிவு பிறபபித்தாயிற்று
தனக்காக கொண்டது -ஈடு-

—————————————————————————————————————————————————————————————-

கண்டு கொண்டு என் கைகளார நின் திருப் பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி யுகந்து யுகந்து
தொண்டரோங்கள் பாடி யாடச் சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திட கில்லாயே –4-7-8-

இந்த சம்சார நிலம் தன்னிலே உன்னைக் கண்டு எல்லா வித அடிமைகளையும் செய்து உஜ்ஜீவிக்க அருள் புரிய வேண்டும்
கண்கள் பட்டினி தீரும்படி காண வேணும்
கைகளின் விடாய் தீர பூக்களைக் கொண்டு உனது திருவடிகளில் தூவ வேண்டும்
அத்தாலே உனது உகப்பு கண்டு உகந்து ஆடிப்பாட வேண்டும்
இப்பேறு கடல் ஞாலத்துள்ளே ஆகவேணும்
அங்கெ நித்ய சூரிகளுக்கு காட்சி தந்து அருளுவது போலே
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த
தண்ணம் துழாய் உடன் வந்து காட்சி தந்து அருள வேணும் என்கிறார்

——————————————————————————————————————————————————————————————–

இடகிலேன் ஓன்று அட்டகில்லேன் ஐம் புலன் வெல்ல கில்லேன்
கடவனாகிக் காலம் தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன்
மடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே–4-7-9-

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி -பிச்சை இட்டு அறியேன்
அல்லகிள்ளேன் -தாஹித்தவர்களுக்கு தண்ணீர் வார்த்து அறியேன்
கர்ம யோகம் இல்லை என்றவாறு
இந்த்ரியங்கள் பட்டி மேயாது அடக்க வல்ல ஞான யோகமும் அறியேன்
புஷ்பங்கள் சேகரித்து சமர்ப்பித்து பக்தி யோகமும் அறியேன்
கடவனாகி -ஒரு நியமத்தோடு கூடினவனாகி என்றபடி
அகிஞ்சனனாய் இருக்கச் செய்தேயும் நப்பாசையால் சக்கர பாணியை தேடா நின்றேன்
சக்கரத்து அண்ணலையே
யசோதை பிராட்டி கையும் வெண்ணெயுமாக பிடித்துக் கொண்டால் போலே
கையும் நெய்யார் ஆழியுமாக பிடித்துக் கொள்ள வாயிற்று இவர் ஆசைப்படுகிறது -ஈடு

——————————————————————————————————————————————————————-

சக்கரத் அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே –4-7-10-

கைம்முதல் இல்லையே மறப்போம் என்றால்
மறக்க முடியாதபடி மானஸ அனுபவ விஷயமாகி கொண்டு அருளுகிறான்
ஆழ்வாருக்கு ஞானம் பிரேமம் இரண்டும் உண்டே
கண்ணாலே காணப் பெறாமையாலே பிரேமம் கிலேச ஹேதுவாயிற்று
மறந்து பிழைக்கவும் முடியாமல் ஞானமும் கிலேச ஹேதுவாயிற்று
கண்டு தழுவுவனே – கிலேச யுக்தியாகவே பூர்வர்கள் நிர்வாஹம்
அலர்ந்தேன் -பிழையான பாடம்
அலந்தேன் -சரியாக பாடம்
அலந்தேன் வந்து அடைந்தேன் என்பார் திரு மங்கை ஆழ்வாரும் பெரிய திருமொழியில்
அலமந்தேன் -என்றவாறு –

——————————————————————————————————————————————————————————-

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை
குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுவிலாத வொண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்தம் ஏறு வரே –4-7-11

தழுவி நின்ற காதல் -அறியாக் காலத்து அடிமைக் கண் அன்பு செய்வித்து
பகவத் விஷயமான காதல் உடனே அவதரித்த ஆழ்வார்
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதந
சாத்விகஸ்ஸ து விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக –
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணொடும் மறப்பற என்னுள்ளே மன்னினான்
குழுவு மாடத் தென் குருகூர்–சர்வஞ்ச குசலம் க்ருஹே-என்னுமா போலே ஆழ்வாருக்கு ஆர்த்தி மிக மிக
சர்வேஸ்வரன் வரவு தப்பாது என்று
திரு நகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறின படி -ஈடு
பங்க திக்தஸ் து ஜடிலோ பரதஸ் த்வாம் பரதீஷதே பாதுகே தே புரச்க்ருத்ய சர்வஞ்ச குசலம் க்ருஹே–என்று
பரத்வாஜர் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாமே கண்ணநீர் கைகளால் இறைத்து சேற்றிலே அழுந்திக் கிடக்கிறான் பரத ஆழ்வான்
என்றும்
க்ரஹத்தில் எல்லாரும் குசலம் தான் என்றும் -சொன்னால் போலே
மாறன்
சம்சார நிலைக்கு மாறாக இருந்தவர்
சம்சாரத்தை மாற்றினவர்
சார்த்தமாக பாட வல்லார் வைகுந்தம் ஏறுவார்

——————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-தீர்ப்பாரை யாமினி –4-6-

October 25, 2014

இத் திருவாய் மொழிக்கும்
முன்பு ப்ரீதி தலை மண்டி அருளிய திருவாய் மொழிக்கும்
சக்தி என்ன என்று கேட்க
இதுக்கு நான் என் சொல்லுவேன் -அசங்கதிரேவ சங்கதி -என்று கொள்ளுங்கோள்-
என்பாராம் எம்பார்
இது இன்சுவையே வடிவெடுத்த வார்த்தையாம்
சங்கதி சொல்ல முடியாது என்று ஆபாத ப்ரதீதியிலே பொருளாம்
அசங்கதி -அசம்ச்லேஷம் என்றபடியே விச்லேஷத்தைச் சொல்லிற்றே
விச்லேஷம் தான் சங்கதி என்றபடியாகவும் –
மண்ணை இருந்து துழாவி-உண்டான வ்யாமோஹத்தை தணிப்பதற்காக
வந்து கிட்டின வைகுந்த நாதன் மறைய நிற்க -பிருவை ஆற்ற மாட்டாமையால் விஷாதத்திலேயாய்ச் செல்லுகிறது
வெறி விலக்குத் துறையில் அவதரித்தது -தோழியின் பேச்சாக செல்லுகிறது
தேவதாந்தர கட்டுவிச்சி இவள்
இது காண்மின் அன்னைமீர் இக்கட்டுச்சி சொல் கொண்டு நீர் எதுவானும் செய்து
அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின் -என்பாள் இவள்
பிணங்கள் அடு காடதனுள் நடமாடு பிஞ்ஞகனார் குணங்களையே நிச்சலும் கூறி திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ-என்றும்
வெந்தார் என்பும் சுடுநீரும் மெய்யில் பூசி கையகத்தோர் சந்தார் கலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் குணம் பாடி இன்றே திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ-என்றும்
சுடலையில் சுடு நீறன் அமர்ந்தோர் நடலையைப் பாடி எங்கும் திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ-என்றும்
அக்கும் புலியினதளும் உடையாரவர் ஒருவர் பக்கமே சென்று பாரெல்லாம் திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ-என்றும்
ஆறும் பிறையும் அரவமும் அடம்புஞ்சடை மேலணிந்து உடலம் நீரும் பூசி ஏறும் இறையோன் துறையில் படிவேனை யார் இங்கே அழைத்ததூஉ-என்றும்
பாடிக் கொண்டே திரிவள் தேவதாந்தர கட்டுவிச்சி –
பரகால நாயகிக்கு ஸ்ரீ வைஷ்ணவ கட்டு விச்சி
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டியே திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம் மா மாட வேளுக்கை எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
என்று கர்ணாம்ருதமாகப் பாடிக் கொண்டு வீதியார வருவாள் அவள்
தேவதாந்தர சம்பந்தத்த காந்தத்தையும் சஹியாத
ஆழ்வார் உடைய பரம வைஷ்ணத்வம் சொல்லுகிறது
இத் திருவாய்மொழி

———————————————————————————————————————————————————————————————————————————————————————-

தீர்ப்பாரை யாமினி எங்கனம் நாடுதும் அன்னைமீர்
ஒர்ர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோயிது தேறினோம்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த
மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –4-6-1-

தீர்ப்பாரை யாமினி எங்கனம் நாடுதும் அன்னைமீர்
ஆழ்வார் அருகில் வருபவர்களை எல்லாம் இவரோடு ஒப்ப மோஹிப்பர்களே அன்றி
உணர்ந்து இருந்து பரிஹார முறைகளை ஆராய வல்லார் யாரும் இல்லையே
அன்றிக்கே
நோய்க்கு பரிஹாரம் செய்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்து சொல்வதால் அவர்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல என்றுமாம்
அன்றிக்கே
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே-என்கிறபடியே
நோய்கள் அறுக்கும் மருந்தான தா
ஒர்ப்பால் -ஆராய்ந்து பார்த்தால் –
இவ் வொண்ணுதல்
அம்பு பட்ட வாட்டத்தோடு முடிந்தாரையும்
நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ
குணாதிக விஷயத்தை ஆசைப்பட்டு பெறாமையால் உண்டான மோஹம் ஆகையாலே முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டுமபடி யாயிற்று இருக்கிறது -ஈடு –
நல் நோய் -நோற்று பெற வேண்டிய நோய்
வளர வழி தேட வேண்டிய நோய்
பரிஹரிக்க வேண்டாமே
தேறினோம்-தோழி வார்த்தை
முன்பு கலக்கம் -இதுவே இவர்களுக்கு நிதியம்
மக ரிஷிகளின் கோஷ்டியில் கலக்கம் காணக் கிடைக்காது
ஆழ்வார்களின் கோஷ்டியில் தெளிவு காணக் கிடைக்காது -என்பர் நம் முதலிகள்
தர்ம வீர ஞானத்தாலே தெளிந்து ஹிருஷ்டராய் மேலே மேலே தொடுப்பார் போல் அன்றியே
அருளின பக்தியால் உள் கலங்கி
சோகித்து
மூவாறு மாசம் மோஹித்து
வருந்தி
ஏங்கி
தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர் -நாயனார்
பாண்டவ பஷபாதியாய் -ஆஸ்ரித சௌலப்யம் முதலிய
திருக் குணங்களில் ஈடுபட்டதால் உண்டான நோய்
துழாய் -துழாவி-பிரமித்து என்றபடி

——————————————————————————————————————————————————————————————————————————————————

திசைக்கின்றதே யிவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்றிது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றி ராகில் நன்றேயில் பெருமிது காண்மினே –4-6-2-

நோய் இது மிக்க பெரும் தெய்வம்
வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நோய் இது -என்றும்
சின் மொழி நோயோ கழி பெரும் தெய்வம் -என்றும் திருவிருத்த பாசுரங்கள் போல்
இசைப்பின்றி -பொருத்தம் இல்லாமல்
நீங்கள் பண்ணுகிற பரிஹாரத்துக்கும் உங்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லை –
இன் நோய்க்கும் இவளுக்கும் ஒரு சேர்த்தி இல்லை
முதல் தன்னிலே பகவத் விஷயத்திலே கை வைத்தார் கொள்ளுகைக்கு சம்பாவனை உடைய நோய் அன்று இது தான்
ஒரு வழியாலும் சேர்த்தி இல்லை -ஈடு
அணங்கு ஆடுதல் -தெய்வம் ஆவேசித்து ஆடுதல்
திசைப்பின்றியே -மருள் கொள்ளாமல்
எம்பெருமான் உடைய திவ்ய ஆயுதங்களை இவள் செவிப்படவே பிரஸ்தாப்பிபதே நன்று
ஐதிகம் -பட்டர் காலத்தில் ஆய்ச்சிமகன் என்ற பாகவதர் நோவு கண்டு பிரஞ்ஞை அற்று இருக்கும் காலத்தில்
அடியோடு நடமாட முடியாமல் இருப்பதைக் கண்ட பட்டர்
அவர் அழகிய மணவாளன் இடத்தில் மிக்க பக்தி உடையவர் என்பதால்
அவருடைய செவியினில் மெள்ள ஊதினால் போலே
அழகிய மணவாளனே சரணம் என்று ஒதினாராம்
இதனால் உணர்ச்சி உண்டாய் நெடும் போது எல்லாம் அந்த வார்த்தையே சொல்லிக் கொண்டு இருந்து
திரு நாட்டுக்கு நடந்தாராம் –
நன்றே இல் பெரும் -நலமாகவே இவள் இல்லிருப்பு பெரும் படியாகும்
நன்று எயில் பெரும் -நன்றாக வார்த்தை சொல்லப் பெறுவாள்
மயக்கம் நீங்கி உணர்த்தி உண்டாகும் –

——————————————————————————————————————————————————————————————————————————–

இது காண்மின் அன்னைமீர் இக்கட்டு விச்சி சொற்கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே யிவளுற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே –4-6-3-

நீங்கள் பலனை கை மேல் காணலாம் -இது காண்மின் அன்னைமீர்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே
உபசாரம் வேண்டாம் காது கொடுத்து கேட்டால் போதும்
இக்கட்டுவிச்சி
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பெனிலும் வரம் தர மிடிக்கிலாத தேவர் –
நீர்
நீங்களோ மறந்தும் புறம் தொழா குடியிலே பிறந்து வைத்து
ஏதானும் செய்து
வாயால் சொல்லவும் அசஹ்யமாம் படி
ஸ்ரீ வைஷ்ணவ ஹ்ருஹத்தை கெடுக்க வேண்டா
கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை – திருவாசிரியம் –
திருவாய்மொழி பக்தி சாஸ்திரம் மட்டும் இல்லை தர்ம சாஸ்திரமும் கூடவே
ஸ்வரூப அனுரூபமான பரிஹார க்ரமத்தை
தோளிணை மேலும் இத்யாதி தண்ணம் துழாய் உடையவன் திருவடிகளை ஸ்மரித்து
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -பல்லாண்டு பாடும் அளவே போதும் –

—————————————————————————————————————————————————————————————————

மருந்தாகும் என்று அங்கோர் மாயவலவை சொற்கொண்டு நீர்
கரும் சோறும் மற்றைச் செஞ்சோறும் களனி இழைத்து என் பயன்
ஒருங்காகவே யுலகேழும் விழுங்கி யுமிழ்ந்திட்ட
பெரும் தேவன் பேர் சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே–4-6-4-

கண்டபடியே சொல்பவள் அலவை
களனி இழைத்து -நாற்சந்தியிலே இட்டு

————————————————————————————————————————————————————————————–

இவளைப் பெரும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே –4-6-5-

வேலனைக் கொண்டு வெறியாடுகிற இது இவளை பெற ஹேது அன்று
உயிர் மாய்விக்கத் தான் ஹேது
குவளை மலர் போன்ற அழகிய கண்கள் விகாரப் பட்டனவே
கொவ்வைக் கனி போன்ற பழுத்து இருந்த அதரமும் நிறம் வேறுபாடுற்றதே
அவனுடைய வாய் புகு சோறு அன்றோ பறி உண்கிறது
என் மகள் தன் தொண்டை யம் செங்கனி வாய் நுகர்ந்தானை -என்றும்
வண்டார் பூ மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -என்றும்
இவை இ றே அவனுக்கு ஊண்-ஈடு
பின்னைகோல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-இவளும் பிராட்டி அன்றோ
பயந்தனள்– பயப்பு –வைவர்ண்யம் -நிற வேறுபாடு
பரிஹாரம்
கண்ணபிரான் திரு நாமங்களைச் சொல்லி -கண்கள் பயப்பு தீர்த்து –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத ரேணுவை கொண்டு ரஷை இடும் -செவ்வாயின் பயப்பு தீரும்
மாயன் தமரடி நீர் கொண்டு -ஸ்பஷ்டமாக மேல் பாசுரத்தில் அருளுவார் -இங்கு தவளப் பொடி –
சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு -சிறிய திரு மடல்
புழுதி -தெருப் புழுதி
செழும் புழுதி -எம்பெருமான் உடைய திருவடிப் பொடி
சீரார் செழும் புழுதி -பாகவதர்களின் திருவடிப் பொடி
தெய்வத் தண்ணம் துழாய் தாராயினும் தழை யாயினும்
தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -திரு விருத்தம்
திருத் துழாயின் மண் பொடி ஆகவுமாம்

———————————————————————————————————————————————————————————————

தணியும் பொழுது இல்லை நீர் அணங்காடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது வல்லால்
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு
அணிய முயலில் மற்றில்லை கண்டீர் இவ் வணங்குக்கே –4-6–6

மாயன் தமரடி நீறு தன்னைக் கொண்டு வர வேண்டாம்
அத்தை கொண்டு வர வேணும்
இவளுக்கு அத்தை இட வேணும்
என்கிற மநோ ரதமே போரும்
அவ்வளவிலே நோய் தீர்ந்ததாகும்
ஆநு கூலச்ய சங்கல்ப -பிரதி கூலச்ய வர்ஜனம் -போலே -ஈடு
ஐதிகம்
அகளங்க நாட்டாழ்வான் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் ஓர் இடத்து செல்லுகையில் வழியில் ஒரு ஜைன கோயில் தென் பட்டது
அப்போது இராக்காலமாய் இருந்தது
அக்கோயிலிலே சிங்கப் பதுமை இருப்பதைக் காட்டி அவ வாழ்வான் பகவத் சந்நிதி சேவியுங்கோள் என்று வேடிக்கையாக சொல்ல
அவர்களும் மெய்யே என்று சேவித்து பிறகு இது ஜைன கோயில் என்று அறிந்தவாறே மோஹித்து விழுந்தார்கள்
அப்போது அருகே இருந்த பிள்ளை உறங்கா வல்லி தாசர் தம்முடைய ஸ்ரீ பாத தூளியை அவர்களுக்கு இட
மோஹம் தெளிந்து எழுந்தார்களாம்

——————————————————————————————————————————————————————————————————————

அணங்கு க்கு அருமருந்து என்று அங்கோர் ஆடும் கள்ளும் பராய்
சுணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டம் கண்டு என் பயன்
வணங்கீர்கள் மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரையே –4-6-7-

கணங்கை எறிந்து-ஒருவகை கூத்தாடலையும் செய்வித்துக் கொண்டு
கணம் கை எறிந்து -கையைத் தட்டி ஆடிவதொரு கூத்து
துணங்கை கணங்கை பாட பேதம்
சுணங்கை -சுணம் -மஞ்சள் பொடி தூவி ஒருவர் மேல் ஒருவர் எறிதல்
உணங்கல் கெடக்-உலத்தின நெல் பாழாய்ப் போக
பராய் -பராவி என்றபடி -பாரித்தல் -ஒன்பதினாயிரப்படி
நும் தோள் குலைக்கப்படும்
பகவத் விஷயத்தில் பண்ணின அஞ்சலி மாத்ரமும்
சரண்யன் நீர்மையாலே மிகை என்று இருக்கக் கடவ
நீங்கள் படும் எளிவரவே இது -ஈடு
உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டம் கண்டு என் பயன்
சரக்கு நஷ்டம் ஆவது அறியாமல் வேடிக்கை பார்த்து இருப்பது தகுதியோ
ஜீவன சாதனமான நெல் நசித்துப் போம்படிக்கு ஈடாக
அத்தை தின்கிற கழுதையினுடைய உதட்டின் வியாபாரம்
கண்டு இருந்தால் என்ன பிரயோஜனம்
அப்படியே இவளைக் கொண்டு ஜீவிக்கிற நீங்கள் இவள் வினாசத்தை விளைவிப்பதான
தேவதாந்தர ஸ்பர்சம் உடையார் வியாபாரம் கண்டு இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு
பிரயோஜனம் இல்லாமை மட்டும் அன்று விநாசமும் யாயிற்று பலிப்பது — -ஈடு
ஐயன் திருக்குருகை பெருமாள் அரையர் நிர்வாஹம்
உணங்கல் கெடக் -இப் பெண்பிள்ளை உடைய இளைப்பு தீருவதற்காக
கழுதை-பேயினுடைய
யுதடாட்டம் கண்டு என் பயன் -நீங்கள் ஆடும் கள்ளும் பாரித்து கொடுக்க
அத்தை அது விநியோகம் கொள்ளும் போது அதனுடைய உதடு ஆடுமே
அத்தைக் கண்டு கொண்டு இருப்பதனால் என்ன பயன்
கழுது என்று பேய்க்கு பெயர்
காலார் மருதும் காய்சினத்த கழுதும்-என்றும்
வஞ்சப் பகுவாய் கழுதுக்கு இரங்காது -என்றும் திருமங்கை ஆழ்வார்
வேலன் ஆராதிக்கும் தேவதாந்தரம் கழுதாக சொன்னபடி
இறுக்கும் இறை இறுத்து உண்ண எல்லா உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத தெய்வ நாயகன் தானே –
ஸ்ரீ மன் நாராயணனே இவற்றுக்கு உயிர் நிலை என்று உணர்ந்த பரமை காந்திகளை வணங்குமின் –

—————————————————————————————————————————————————————————————————————–

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து இவள் நோயிது தீர்த்துக் கொள்ளாது போய்
ஏதம் பறைந்தல்ல செய்து கள்ளூடு கலாய்த்தூய்
கீழ முழவிட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே –4-6-8-

ஏதம் பறைந்து -இழிவான பேச்சுக்களைப் பேசி
யானைப்பாகன் அனுமதி கொண்டு யானை மேலே ஏறுவார் போல்
ஷத்ர பந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் ஆச்சார்யவத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவான் பவேத் –
சத் சங்காஸ் பவநிஸ் ச்ப்ருஹோ குருமுகாத் ஸ்ரீ சம் பிரபத்யாத்மவான் -நடதூர் அம்மாள் வார்த்தை
சர்வலோக சரண்யாய ராகவாய மகாத்மனே
நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்
சுக்ரீவ மகாராஜரும் திருவடியை முன்னிட்டே பெருமாளை பற்றினார் –
கீழே ஸ்ரீ வைஷ்ணவர்கள் உத்தேச்யர்
இங்கே த்வாரமாக சொல்லுவான் என் என்னில்
நம்பிள்ளை -ஸ்ரீ வைஷ்ணவர்களே ஆஸ்ரயணீயர்
அவர்களை மேற்பட எம்பெருமான் அளவிலே சென்று ஆஸ்ரயிக்க வேண்டியது இல்லை
ஆனாலும் சஜாதியர்கள் இடத்திலே ருசி விச்வாசங்கள் கனக்க உண்டாவது அரிதாகையாலே
அவர்களை பரம சேஷிகளாகக் கொள்ள இசைவு உண்டாகாது ஒழியினும்
அவர்களைப் புருஷாகாரமாகவாவது கொள்ளப் பாருங்கோள் என்று சொல்லுகிறது -என்று அருளிச் செய்வர்
இவள் நோய் இது
இவள் -பகவத் விஷய நோய் தவிர வேறு நோய் புகுற பிரசக்தி அற்றவள்
நோய் இது -வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நன்நோய் இது -என்றபடி
ஏதம் பறைந்து
வெறி ஆடுகிற வேலன் வார்த்தை அனுவதிக்கவும் தகாது -பொதுவிலே சொன்னபடி
அவன் கார்யங்களும் அப்படியே -அல்ல செய்து என்னலாம் படியே
ஸ்வரூபம் அநு ரூபம் அல்லாதவற்றை செய்து
இக்குடிக்கே இழுக்கு என்கிறாள்

———————————————————————————————————————————————————————————————————————————-

கீழ்மையினால் அங்கோர் கீழ் மகனிட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4-6-9

நாழ்மை -தப்பு வார்த்தைகள் -நாழ் -அவத்யம்
ஊழ்மையில்-முறைப்படியே
ரஜோ தமோ குணம் வசப்பட்டு கீழ்மை
சம்பறுத்து ஆர்க்கைக்கு போக வேணுமோ -அதைக் கொண்டே கட்டலாம்
கண்ணன் கழல் தவிர வேறு மருந்து இல்லை என்றவாறு

————————————————————————————————————————————————————————————————-

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால்
நும்மிச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே –4-6-10-

இன்னாருக்கு இன்ன பரிஹாரம் என்று இல்லையோ
அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ
முழம் கால் தகர மூக்கிலே ஈரச் சீலை கட்டுமா போலே அன்றோ நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் -ஈடு
உன்னித்து என்றது
தனது நெஞ்சாலே மதித்து ஒரு காலத்திலும் தேவதாந்தர பஜனம் பண்ணி அறியாள்
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள் -நம்பிள்ளை
முலையோ முழு முற்றும் போந்திலமொய் பூங்குழல் குறிய
கலையோ வரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே -திரு விருத்தம்
அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து -தேவதாந்தர ஸ்பர்சமே புகுர வலி இல்லையே
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் -தோள் அவனை அல்லால் தொழா -என்னும் குடியில் பிறந்து
உங்களுடைய தோளுக்கு இப்படி ஒரு துர்க்கதி உண்டாவதே
தேவதாந்தர நமஸ்காரமே தோள் குலைதல் கெடுதல் தானே
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே
ஏத்தின உடனே உஜ்ஜீவனம்
ஆடும் -நீஞ்சல் தொழுது ஆடுமின் என்றுமாம்
தஷிண த்வாரகை ஸ்ரீ மன்னார்குடி ராஜகோபாலன் திரு நாமத்தை சொல்லி ஏத்துதல் செய்யவே இந்நோய் தீரும்

——————————————————————————————————————————————————————————————————————————–

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத வாயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலமிலர்களே –4-6-11-

விஸ்லேஷ துக்கம் இன்றி வாழப் பெறுவார்கள்
ஆட்செய்து நோய் தீர்ந்த
நோய் தீர்ந்து ஆட்செய்த –
நோய் தீர்ந்து –
தொழுது ஆடிப்பாடி
தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்த வண் குருகூர்ச் சடகோபன் -ஆறாயிரப்படி
தொழுதாடி தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த -அம்மாங்கி அம்மாள் -மோஹித்தவள் அல்பம்
ஆச்வசித்தவாறே மோர்க்குழம்பு குடித்தாள் தரித்தாள் கண் விழித்தாள் வார்த்தை சொன்னால்
என்பார்கள் இ றே
அது போலே காணும் -என்று –
கலவி பெற்று நோய் தீர்ந்ததாகச் சொல்லுகிறது அன்று
பிறந்த உணர்ச்சியைக் கொண்டு நோய் தீர்ந்ததாகச் சொல்லும் அத்தனை
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
இப்பொழுது ஆழ்வாருக்கு வழுவாத புகழ் தேவதாந்தர சம்பந்தத்தை கொஞ்சமும் சஹியாமை
ஒரு வைஷ்ணவன் ஆகையாவது இது –நம்பிள்ளை –

—————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–வீற்றிருந்து ஏழுலகும்–4-5-

October 24, 2014

கீழ் திருவாய் மொழி பெரு விடாயோடே சென்றது
எம்பெருமான் கிருஷி பலன் –
முடிந்த அவா -முனியே நான்முகனே –
தொண்டர்க்கு அமுதுண்ண சொன்மாலைகள் சொன்னேன் –
பகவத் குணரசிகர்களுக்கு தண்ணீர் பந்தல் வைக்க அன்றோ ஆழ்வாரை இங்கே வைத்தது
இத் திருவாய்மொழியில் ஆழ்வாருக்கு ஹர்ஷம் பேச்சுக்கு நிலம் அன்று –
இது என்ன குறை எழுமையுமே –
இனி யாவர் நிகர் அகல் வானத்தே –
பரிபூர்ண அனுபவம் வேறு இல்லை என்னும் படி செல்லும் திருவாய் மொழி
சூழ் விசும்பு அணி முகிலுக்கு அடுத்த திருவாய் மொழியாக இருக்கலாம் -நஞ்சீயர் ரசோக்தியாக அருளிச் செய்வர்
ஒன்றும் குறையாதபடி தன் படிகளை முற்றூட்டாக காட்டி அருளினான் –
ஆழ்வீர் நம் படிகளை எல்லாம் கண்டீரே
நமது இந்த ஐஸ்வர்யம் எல்லாம் நிறம் பெற்றது ஆவது உம்முடிய திரு வாக்காலே ஒழுங்கு படப் பாடினால் ஆயிற்று –
ஆகவே பாடிக் காணீர் என்று
திருக் கையிலே தாளம் கொடுத்து அருள
அவ்விருப்புக்கு பல்லாண்டு பாடி மகிழ்கிறாராய்ச் செல்கிறது இத் திருவாய்மொழி-

—————————————————————————————————————————————————————————————————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீவில் சீர்
ஆற்றல் மிக்காளும் அம்மானை வெம்மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனியென்ன குறை எழுமையுமே –4-5-1-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகமும் அன்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
திருநாட்டு அனுபவத்தை இங்கே பெறப் பெற்ற எனக்கு என்ன குறை
ஆற்றல் மிக்கு -அனுத்ரிக்த ஸ்வ பாவனை -ஆறாயிரப்படி
கிட்ட ஒண்ணாதபடி இருக்கும் இருப்பு இன்றிக்கே சவினயமாக –
ராமோ ராஜ்ய உபாசித்வா -குடிமக்களுக்கு அஞ்சி வர்த்திப்பவன் ஸ்ரீ ராகவன்
ஆறுதல் -ஆற்றல் -சாந்தி மிடுக்கு நிர்வஹிக்க வல்ல சாமர்த்யன்
மிடுக்குக்கு உதாரணம் வெம்மா பிளந்தான் –
இது உப லஷணமாய் இப்படி மிடுக்கு உடையனாம்படி செய்த செயல்கள் எல்லாம் கொள்ளலாம் -பட்டர் நிர்வாஹம்
ஆட்ற்றல் -சாந்தி –
சாந்தியுடன் ஆளும் தன்மை ஸ்ரீ கண்ணபிரான் செவ்வனே காணலாம்
பிறந்த அன்றே கம்சனைக் கொன்று முடிக்க வல்லமை இருந்தும் நெடுநாள் ஒளிந்து வளர்ந்ததும்
அடியவர்களுக்கு இழி தொழில் செய்து திரிந்ததும்
செம்மை காட்டி அருளினான் -அம்மங்கி அம்மாள் நிர்வாஹம்

—————————————————————————————————————————————————————————————————————————–

மைய கண்ணாள் மலர் மேலுறைவாள் உறை மார்பினன்
செய்ய கோலத் தடம் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லாலிசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே –4-5-2-

கீழ் சொன்ன மேன்மைக்கு அடி பிராட்டி சம்பந்தம்
மைய கண்ணாள் -அஸி தேஷணா
இடைவிடாது கண்டு கொண்டே இருப்பதால் கருணை மிக்கு மைய கண்ணாள் ஆனாள்
பெரிய பிராட்டியார் திருக் கண்களால் ஒருகால் கடாஷித்தால் ஒரு பாட்டம் மழை பொழிந்தால் போலே
சர்வேஸ்வரன் திரு மேனி குளிரும்படி யாயிற்று இருப்பது -ஈடு
பூவிலும் கூசி அடியிடுமவள்பொருந்து வாழப்பெற்ற திருமார்பு
மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
பூ மன்னு மாது பொருந்திய மார்பினன்
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் பெருமாளை திருக்கைப் பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலாபுரியை நினையாதாப் போலே
ஸ்ரீ மகா லஷ்மியும் இவன் மார்பு சுவடி அறிந்த பின்பு தாமரைப் பூவை நினையாள் –
பிராட்டி உடைய செய்ய மேனியைக் கடாஷித்து செய்ய கோலத் தடம் கண்ணன்
இவை-திருக் கண் அழகும் -திருச் சேர்த்தி அழகும் காட்டில் எறிந்த நிலா போல் அல்லாமல் நாடாக அனுபவிக்க -விண்ணோர் பெருமான்
இப்படி பட்ட பெருமானை தொடை அழகு கொண்ட சொல்மாலைகளை சாத்தி துதிக்கவே –
உலகிலேயே கரும பந்தங்கள் இல்லையாம்படி
பனை நிழல் போலே என்னை ஒருவனையுமே நோக்கிக் கொள்ளுகை அன்றிக்கே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே யாம்படி நான் இருந்த
விபூதியில் உண்டான கருமங்கள் அடைய நசித்தன -எங்கை -ஈடு

————————————————————————————————————————————————————————————————————————————

வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்த நம்மச்சுதன்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவில் கால்மிசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே –4-5-3-

முதலடி ஆனந்த வல்லி அடி ஒற்றி அருளியது
வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்-

ஆழ்வார் உடைய ஆனந்த வல்லி எம்பெருமான் உடைய ஆனந்த வல்லியை விட மேம்பாடு உடைத்தாம் -இனி இதுக்கு மேல் இல்லை என்னும்படி
வீவு -விச்சேதம்
வீவில் சீரன் -வை லஷண்யம் -நித்ய விபூதி நாதத்வம் -திருக் கல்யாண குணம் உடையவன்
மலர்க்கண்ணன் -வீவில் இன்பம் மிக எல்லை உள்ளவன் என்பதை திருக் கண்கள் கோள் சொல்லித் தரும்

———————————————————————————————————————————————————————————————————————————

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி யம் புள்ளுடையான் அடலாழி யம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்
ஆவி என்னாவியை யானறியேன் செய்தவாற்றையே –4-5-4-

நித்ய விபூதி நாயகனாய் இருந்து வைத்து நித்ய சம்சாரியான எனக்கு பண்ணி அருளிய மகா உபகாரம் தான் என்னே –
பிரணதார்த்தி ஹரன் -தன்னையே விரும்பி தொழுவாருக்கு
அநந்ய பிரயோஜனருக்கு வினைகளை போக்கி அருளுவான் என்று சொல்லவும் வேணுமோ
தூவி அம புள்ளுடையான்
ஆழ்வார் திரு உள்ளத்திலே பெரிய திருவடியின் சிறகே உறைத்து இருக்கும் போலும்
பண் கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து
திண் கொள்ள வொர்க்கும் கிடந்தது என் செவிகளே -என்றார் இ றே கீழே
அம் புள் -எம்பெருமான் திருவடி பட்டு தழும்பு ஏறின அழகு
த்வத் அங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க சோபினா-ஆளவந்தார்
அடலாழி யம்மான் –
அடல் -கொல்லுகை -வலிமை – போர் வெற்றி –
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி
நா புறட்டினது எல்லாம் இசையும் இயலும் ஆயிற்று
முயற்சி இன்றியே நாக்கு இயற்றிற்று எல்லாம் நல்லிசை மாலைகள் ஆனதாம்
ஆவி என்னாவியை யானறியேன் செய்தவாற்றையே
ஆவி -எம்பெருமான்
உலகுக்கு ஒரு உயிர் அவனே
விபுவான தான் அணுவான என்னை தன்னோடு ஒத்த -மேம்பட்ட -ஆனந்தத்தை உடையேனாமபடி பண்ணி அருளியது -என்ன ஆச்சர்யம்

—————————————————————————————————————————————————————————————————————————————-

ஆற்ற நால்வகை காட்டும் அம்மானை அமரர்தம்
ஏற்றி எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வெய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே –4-5-5-

ஆற்ற நல வகை -பொறுக்க பொறுக்க விலஷணமாய் உள்ள
ஞான பக்திகள்
பரபக்தி பரஞான பரம பக்தி பரம்பரைகள் -பிரகாரங்கள் –
மாற்றம் மாலைபுனைந்து -சொல் மாலை தொடுத்து
புணர்தொரும் என்னக் கலந்து பிரிந்து ஆச்சார்ய ஹிருதயம் சூர்ணிகை
கனமான கர்ண பூஷணம் இட நூலிட்டு திரியிட்டு குதம்பையிட்டு காத்து பெருக்குமாபோலே
மாத உபவாசி சோற்றை அரைத்து உடம்பிலே பூசி போரிக் கஞ்சி கொடுத்து
பொரிக் கூழ் கொடுத்து நாளடைவில் போஜனம் தருவார் போலேயும்
இன்னாருக்கு என்று சொல்லாமல் பொதுவாக சொன்னது இத்தனை
ஆழ்வாருக்கு காற்றி அருளி
எல்லாபொருளும் விரித்தாய் -ஜீவ பர பேதம் –ஜீவ பரஸ்பர பேதம் -அசித் சித் வாசி –
ஆத்மாக்களின் நித்யத்வம்
தேஹங்களின் அநித்யத்வம்
நியாமகத்வம்
சௌலப்யத்வம்
அனைவருக்கும் சமன்
அஹன்காரமமகார தோஷம்
இந்த்ரிய பிராபல்யம்
மனஸ் பிரதாந்யம்
நால் வகை ஸூ க்ருதுகள் -அவற்றின் பேதம் –
தேவ அசூர விபாகம்
விபூதி யோகம்
விஸ்வரூப தர்சனம்
சாங்க பத்தி
அங்க பிரபத்தி
ஸ்வ தந்திர பிரபத்தி
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்
இப்படி அறியாதன எல்லாம் அறிவித்த அத்தா

—————————————————————————————————————————————————————————————————————————————————

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும்
பெரிய கோலத் தடம் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே –4-5-6-

திருக் கண்களின் கரிய விழியினுடைய கருத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே
அஞ்சன சூரணத்தை மங்களமாக சிறிது அணிந்து கொள்ளுகிற என்ற படி
வெளியம் -அஞ்சனம் –
கர்ப்பூரா லேபசோபே -தேசிகன் பச்சைக் கர்ப்பூர தூளியை அணிந்து கொண்ட திருமேனி -வெளிய -வெள்ளிய
கரி -அம்மேனி மிசை -வெளிய சிறிதே -நீறிடும் –
குவலயாபீட யானை
கண்ணபிரான் உடைய திரு மேனியிலே
சீறிப் பாய்ந்த அளவிலே
ஷண காலத்துக்குள்
அந்த யானையைப் போடி படுத்தினான்
தமிழர் நிர்வாஹம்
உரிய சொல்லால் -திருவாய்மொழிக்கு ஏற்றம்
அசத் கீர்த்தனம் -பூசல் பட்டோலை போலே இல்லாமல்
திருமாலவன் கவி யாது கற்றேன் -திரு விருத்தம் –

———————————————————————————————————————————————————————————————————————————————-

என்றும் ஒன்றாகி ஒத்தாரும் மிக்கார்களும்
தன் தனக்கின்றி நின்றானை எல்லா வுலகுமுடையான் தன்னை
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொல் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே –4-5-7-

பரத்வாதி சர்வ அவச்தைகளிலும் ஒரே பிரகாரம் உடையனாய்க் கொண்டு
எம்பெருமான் அருளால் தாம் சாத்விக அஹங்காரம் கொள்ளப் பெற்றேன் என்கிறார்
தன் தனக்கு இன்றி நின்றானை -ஆளவந்தார் திருக்குமாரார் சொட்டை நம்பி பணிப்பாராம்
தன் தனக்கு -தானான தனக்கு -என்றபடி
ஒருவகைக்கு ஒப்பின்றிக்கே இருக்கிற பரத்வத்தில் அல்ல
ஆத்மானம் மானுஷ்யம் மன்யே -என்கிறபடியே
அவதரித்து மனிச்சு ஏறிட்டுக் கொண்டு நிற்கிற நிலையிலே -என்று
வசிஷ்ட பகவான் பெருமாளை நோக்கி -ஆத்மானம் நாதி வர்த்தேதோ –
ஆத்மானம் -உயிர் நிலையான ஸ்ரீ பரத ஆழ்வானை மீறாதே என்பர் சிலர்
தன்னை மீறாதே -சப்தார்த்தம்
பட்டர் -தானான தன்மையை மீறாதே என்றபடி என்பாராம்
ஆஸ்ரித பாரதந்த்ர்யம் இழக்காமல்
இத்தால் தெரிய கருத்து
எம்பெருமான் உடைய பரத்வத்துக்கு எல்லை கண்டாலும்
சௌசீல்யத்துக்கு எல்லை காண முடியாது என்றபடி
இப்படி பரிபூர்ண விஷயம் எப்படி பேசுவது என்று
மீளாமல் துணிந்து பேசப் புகுந்த என்னுடைய பாக்யமே பாக்கியம் –

———————————————————————————————————————————————————————————————————————-

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே –4-5-8-

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை
இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது
இன்பனாம் இடத்தில் முற்பாடு இங்கே யாய்ப் பின்பாயிற்று அவளுக்கு ச்நேஹித்து இருப்பது -ஈடு
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை-
இங்கும் ஞாலத்தார் முற்படுகிறார் கள்
மாதா பிதாக்கள் பிரஜைகளில் குறைவாளர் பக்கலிலே இ றே
அத்தாலே சம்சாரிகள் முற்பட வேண்டுகிறது
பாலை வனத்தில் நீர் வார்ப்பது போலே இங்கு
மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலே அங்கே
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச்
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
தண் தாமரை சுமக்கும் பாதன்
சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு
ஆழ்வீர் நம்மைக் குறித்து கவி சொல்லும் என்ன
சடக்கென கவி சொல்லும் வல்லமை உடைய எனக்கு முன்னோர் நிர்வாஹம்
பட்டர் -என்றைக்கும் என்னை ஏழாம் பத்தில் எம்பெருமான் தானே கவி பாடுவதாக சொல்வதால்
திருக் கண்களால் குளிரக் கடாஷித்து நீர் ஒரு கவி சொல்லும் என்றால்
உள்ளெல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -சிதிலர் ஆகாமல் நின்ற வல்லமை
அமைக்க -என்ற சொல் உண்டே
அத்தைக் கொண்டு பட்டர் நிர்வாஹம் –
அமைத்தல் -தரித்தல்

———————————————————————————————————————————————————————————————————————–

வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும்மண்ணின் கீழ்த்
தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றான் தன்னை
கூனற் சங்கத் தடக்கை யவனைக் குடமாடியை
வானக்கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே–4-5-9-

சர்வ வ்யாபகத்வம் சொல்லிற்று முதலில்
பரந்த த ண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன்
வியாபித்து நிற்கிறவன் அடியார் ரஷணத்துக்காக சங்கு சக்கரங்கள் உடன் திருவவதரித்து அருளி என்பதை
கூனல் சங்கத் தடக்கை யவனை
ஜாதோசி தேவ தேவேச சங்க சக்ர கதாதரா –
குடமாடி -கிருஷ்ண சேஷ்டிதம் அனைத்துக்கும் உப லஷணம்
வானவர் கோன் -நாட்டுக்காக தன்னை அனுபவிப்பித்துக் கொண்டு இருப்பவன்
எம்பெருமான் தன்னை கவி சொல்ல என்னோடு ஒக்குமோ சர்வேஸ்வரனான எம்பெருமான் தானும் -ஆறாயிரப்படி –
ஆழ்வார் உடைய வை லஷண்யம் பேசும்
நித்யர் பரத்வம் அல்லது வேறு ஒன்றை அறியார்
பராசரர் வேத வியாசர் கிருஷ்ணாவதாரம் அல்லது வேறு ஒன்றை அறியார்கள்
வால்மீகி பகவான் ஸ்ரீ ராமபிரானை அல்லது வேறு ஓன்று அறியான் –
சனக சனந்தாதிகள் அந்தர்யாமியிலே ஊன்றி இருப்பார்கள்
விசேஷண அம்சங்களில் தனித் தனியே புகுந்து
அவ்வவோ நிலைமைகளிலும் கவி பாடுதல் ஆழ்வார் ஒருவருக்கே யாம் இத்தனை

—————————————————————————————————————————————————————————————————————————–

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும்
கண்டவாற்றால் தனதே யுலகென நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே –4-5-10-

எம்பெருமான் சேஷ்டிதங்களை கங்கா பிரவாஹம் போலே அருளிச் செய்கிறார்
உண்டது பிரளய ஆபத்தில்
உமிழ்ந்தது பிரளய ஆபத்து நீங்கினவாறே
கடந்தது வாமனாவதாரத்தில்
இடந்தது வராஹாவதாரத்தில்
கிடந்தது கடற்கரையிலே -சமுத்திர ராஜனை நோக்கி அஞ்சலி பண்ணிக் கிடந்த கிடக்கை
நின்றது ராவண சம்ஹார அனந்தரம் தேவர்களுக்கு காட்சி கொடுத்து
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தது -பர்ண சாலைகளில் /பட்டாபிஷேகம் பின்பு பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பு
மணம் கூடியது -பூமிப் பிராட்டியை சம்ச்லேஷித்து அருளி
இவற்றைக் கண்டவற்றால் உலகம் எல்லாம் எம்பெருமானுடையது -என்று அறுதி இடக் குறை இல்லை இ றே
திருவாய்மொழி தொண்டர்க்கு ஆனந்தம் பொழியும் மேகம் என்றவாறு
நாயனார் -வீட்டின்ப இன்பப் பாக்களில்
த்ரவ்ய பாஷா நிரூபணம் சமம்
இன்ப மாரியில் ஆராய்ச்சி
இன்ப மாரி -திருவாய் மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார்
இங்கு -அடியார்க்கு இன்ப மாரியாக நான் வண் தமிழ் நூற்க நோற்றேன் -என்னலுமாம்

——————————————————————————————————————————————————————————————-

மாரி மாறாத தண்ணம் மழை வேங்கடத் தண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்
காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத்திப் பத்தால்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே –4-5-11-

திருவாய்மொழி கற்பார் தீ வினைகளை பெரிய பிராட்டியார் தீர்த்து அருளுவார்
புருஷகார க்ருத்யத்தாலே –
அஸ்தி கர்மார்ஹ பலதி பத்யௌ க்ருத்யத்வம் ஸ்ரிய
நிக்ராஹாத் வாரணம் காலே சந்து ஷணம் அனுக்ரஹே -தேசிகன்
சதுச்லோகி வியாக்யானம் –
இதுவே தேசிக சித்தாந்தம்
இதுவே லோகதேசிக சித்தாந்தம்
தர்மியின் ஐ க்யத்தால்-தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்க வந்து அருளும் சீலத்தால் –
திருவாய் மொழியில் அர்ச்சாவதாரத்தில் முழு நோக்கு என்று காட்டி அருளி
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை –சீலத்துக்கு எல்லை நிலமான திருவேங்கடமுடையானை கவி பாடினபடி யாயிற்று –

————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–மண்ணை யிருந்து துழாவி–4-4-

October 24, 2014

ஆழ்வார் உடைய பரம வைலஷண்யத்தை-எம்பெருமான் உடைய சம்பந்தம் பெற்ற பொருள்களையும்
அவனுக்கு போலியான பொருள்களையும் கண்டு அவன் தன்னையே கண்டதாக களிக்கை-
வெளியிடுவதாயிற்று இத் திருவாய்மொழி –
கீழே பிரணயித்வ குணத்தை பேசி மகிழ்ந்தார்
அந்த ஹர்ஷா ரசத்தை அரையாறு படுத்தி சாத்மிக்கைக்காக அந்த சம்ச்லேஷத்தை சிறிது குறைத்து நின்றான்
அதனால் ஆழ்வாருக்கு ஆற்றாமை மீதூர்ந்தது –
பணமுடிப்பைப் போக்கடித்தான் ஒருவன் அத்தோடு போலியான முடிப்புகள் எல்லாவற்றையும் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமா போலே
அவனோடு ஒத்த பதார்த்தங்களையும்
அவனோடு சம்பந்தம் உள்ள பதார்த்தங்களையும்
எல்லாம் அவனாகக் கொண்டு பிரமித்து கிட்டிப் பார்த்து பிச்சேறுகிற படியாய் செல்லுகிறது இத் திருவாய்மொழி –
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து பஞ்சவடியில்
க்வசித் உத்ப்ரமேத வேகாத் க்வசித் விப்ரமதே பலாத் க்வசின் மத்தே இவாபாதி காந்தான் வேஷண தத்பர -என்று
பட்ட பாடுகள் எல்லாம் ஆழ்வார் பட்டார்
பிராட்டியைப் பிரிந்த அனந்தரம் ஆற்றாமையால் மேல் நோக்கிப் பார்த்து விலங்க சஞ்சரிப்பது
அது தானும் மாட்டாது ஒழிவது
ஒரு வ்ருஷத்தில் நின்றும் வ்ருஷாந்தரத்தில் சென்று கிட்டுவது
மைதிலியைக் கண்டிகோளோ என்று கேட்பது
ஆணாறு பெண்ணாறுகள் ஓன்று இன்றிக்கே தேடுவதாய்
அவர் பட்டாப் போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது
இப்படி நோவு படுகிற இவள் தசையை அனுசந்தித்த திருத்தாயார் இவள் படுகிற பாடுகளையும்
இவள் சொல்லுகிற வார்த்தைகளையும் சொல்லி
இது கண்டு தான் பொறுக்க மாட்டாதே நோவு படுகிறபடியையும் சொல்லி
இவள் கை வாங்கும் அளவாக அவன் வந்து முகம் காட்டி ஆச்வசிப்பிக்க தரித்ததாய் தலைக் கட்டுகிறது இத் திருவாய்மொழி -ஈடு-

———————————————————————————————————————————————————————————————————————

மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை யுண்ணீர் மல்க நின்று கடல் வண்ணன் என்னும் அண்ணே என்
பெண்ணைப் பெரு மையல் செய்தார்க்கு என் செய்கேன் பெய் வளையீரே–4-4-1-

உள் நீர் கண்ணை மல்க நின்று
உலகில் மண்ணை மண் என்றே இருப்பார்– ஆழ்வார் அதிலோ பிரதிபத்தி பண்ணுகிறபடி
அயம் சித்தாச்ரமோ நாம –மயாது பக்த்யா தச்யைவ வாமனச்யோப புஜ்யதே -என்று
விஸ்வாமித்ரர் மண்ணை மோந்து கொண்டு நின்றேன் என்று சொன்னானே
கந்தவதீ பிருத்வி -நிலத்துக்கு குணம் மணம்-சர்வ கந்தன் உடைய திருவடி சம்பந்தம் பெற்றது என்று இருக்கிறார் ஆழ்வார்
ஆர்ஷ்டி ஷேனன் ஆஸ்ரமத்தில் நின்று பரமபதம் கண்டார்கள் இ றே சிலர் -ஈடு
மகா பாரதம் வன பருவம் -தர்ம புத்ரர் ஆர்ஷ்டி ஷேனன் என்னும் ராஜ ரிஷி சம்வாதம்
அச்யாதிக்ரம்ய சிகரம் கைலானச்ய யுதிஷ்ட்ர கதி பரம சித்தானாம் தேவர்ஷீணாம் பிரகாசதே -ஸ்லோஹம்-விவஷிதம்
ஹஸ்த சேஷ்டியால் காட்டி
கண்ணால் காணப் பெறாமையால் கண்ணீர் மல்க
கடல் போன்ற திருமேனியைக் காட்டி அருளி இங்கனே வ்யாமோஹிக்கச் செய்து அருளியது என்னும்
அவரை இங்கே வந்து என் பெண்ணுடன் சேரும் படி சொல்வேனா
அவர் வரும்படி ஆறி இருக்கும்படி இவளுக்கு சொல்ல வல்லேனா
ஒன்றும் மாட்டுகிறிலேன்

—————————————————————————————————————————————————————————————————————————–

பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான் கிடக்கும் கடலென்னும்
செய்தோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தி யீதென்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ வுருவில் சிறு மான் செய்கின்றது ஓன்று அறியேனே –4-4-2-

பெய்வளை கைகளை –
பலகாலும் கழன்று பிறகு இடப்படா நிற்கிற வலைகளை உடைய கைகளை
கடல் வண்ணன் என்றவாறே கழன்ற வளைகள் ஒழிய சரிந்த வளைகள் பூரித்தன காணும் -ஈடு
யாமி நயாமீதி தவே வததி பரஸ்தாத் ஷனௌந தன வங்க்யா களிதானி புரோவலயானி அபராணி புநஸ் ததைவ தனிதானி –
பிரான் கிடக்கும் கடல்
பள்ளி கொண்டு அருளும் கடல் –
ஒரு பிராட்டியை பிரிந்து ஸ்ரீ ராமபிரான் கடல் கரையிலே தரைக் கிடந்தானே என்றுமாம்
எம்பெருமானும் பிராட்டியும்
ஆதித்யனும் பிரபையும் போலே இருக்கையாலே
அந்த ஆதித்யனைக் காட்டி
சிரீதரன் மூர்த்தி யீதென்னும் -ஆறாயிரப்படி
அனந்யா ராஹவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா
அனந்யா ஹி சீதா பாஸ்கரேண பிரபா யதா –
பிரபா பிரபாவான்களைக் கண்டவாறே
அவளும் அவனுமாக இருக்கும் இருப்பை நினையா நின்றாள் -ஈடு
ஆதித்யஹிருதயம் -புரவி யேழ் ஒரு காலுடைய தேரில் -சிரீதரன் மூர்த்தி யீதென்னும் -எடுத்து அருளி
த்யேயஸ் சதா சவித்று மண்டல மந்த்யவர்த்தீ நாராயண -என்கிறபடியே
சூர்ய மண்டல மத்யஸ்தன் என்னுமாம் –
ஸ்ரீதரன் புருஷகார பூதையும் இருக்கச் செய்தே இழக்கவோ -நைந்து ஸ்ரீ மன் நாராயணன் சொல்ல மாட்டாமல் நாரணன் என்கிறாள்
இவ்வாறு அனுசந்திக்க நித்ய சூரிகள் புகர் இவளுக்கு பிறக்கின்றமை-தெய்வ வுருவில் சிறு மான் –

————————————————————————————————————————————————————————————————————————————–

அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்
எறியும் தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கைச் சிறுமான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே –4-4-3-

தேஜசாம் ராசிம் ஊர்ஜிதம் -என்றும்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்துன் உள்ளே எழுவதோர் உரு -என்றும்
அக்னியை தழுவினாலும் மெய் வேவாமல்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்
தாதைஷ வக்னி பவ நேரி தோபி ந மாம் தஹதி அதர சமந்த தோஹம்
பச்யாமி பதமாஸ் தாணாஸ் த்ருதானி சீதானி சர்வாணி திசாம் முகாநி
வெறி கொள் துழாய் மலர் நாறும்
பிரிவில் நறுமணம் கமலா பிரசக்தி இல்லையே எனில்
சம்ச்லேஷ தசையில் உண்டான பரிமளம் பத்தெட்டு குளிக்கு நிற்குமே –
அன்றிக்கே எம்பெருமான் காற்றோடு புகுந்து கலவி செய்தான் ஆகவுமாம்
வினையாட்டியேன்
நல்வினை உள்ளுறை பொருள்
நிர்வேத பிரகரணம் ஆகையால் தீ வினை உடையேன் -என்கிறாள்

———————————————————————————————————————————————————————————————————–

ஒன்றிய திங்களைக் காட்டி ஒளி மணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா வென்று கூவும்
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்றாலும்
என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே–4-4-4-

ஒன்றிய -எல்லா கலைகளும் பொருந்திய
சந்த்ரமா மனசோ ஜாத-திரு உள்ளத்தில் இன்றி தோன்றியதால்
காரண வஸ்து -கார்ய வஸ்து சம்பந்தம் உண்டே
குளிர்ந்த திருஉள்ளம் -குளிர்ந்த சந்தரன் என்னக் கடவது இ றே
ஒளி மணி வண்ணனே
விளியாகவும் -இவன் ஒளி மணி வண்ணனே அன்றி வேறு இல்லை என்னவுமாம்
நின்ற குன்றத்தின் உயரம் கண்டு திரி விக்கிரம பகவான் -பிள்ளான்
மலை பெயராமல் நின்று
அடிக்கடி மழை பெய்யப் பெற்று அழுக்குற்று
பசகு பசகு என்று இருக்குமாறு கண்டு
எம்பெருமான் நெடுநாள் உபேஷித்த குற்றவாளி போலே
உள்ளபடியே வந்து நிற்க வெட்கப்பட்டு
பச்சைப் போர்வை இட்டு முக்காடு போட்டு நிற்கிறான்
சுனை கேடனே நீ இங்கனம் வெள்க வேணுமோ -வந்து நில் -நஞ்சீயர்
நின்றதொரு மலையைப் பார்த்து சகல லோகங்களையும்
அளக்கைக்கு வளர்ந்து அருளின எம்பெருமானே என்று கொண்டு
என் ஆர்த்தி தீர வாராய் என்று அழைக்கும்
சாபாராதன் ஆகையாலே கிட்டி வர அஞ்சி நிற்கிறானாக கொண்டு
உன்னுடைய ச்நேஹாதிசயம் அறியோமோ -வாராய் என்று
ஷேப பூர்வகமாக அழைக்கும் என்றுமாம் -ஒன்பதினாயிரப்படி –
நெடுமால் -மால் பெருமை -என்பதில் பிள்ளான் நோக்க வ்யாமோஹம் என்பதில் நஞ்சீயர் நோக்கி அருளுகிறார்
ஒக்கும் அம்மான் உருவம் உள்ளம் குலைந்து நாணாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -என்றபடி
மின்னு மா மழை தவழும் மேக வண்ணன் -என்றும்
கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு மழை கொலோ வருகிறது என்று சொல்லி -என்றும்
மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல் –வித்துவக் கோட்டம்மா -என்றும்
ஆலும் மேகத்தை கண்ட மயில் ஆடுவது போலே ஆடும்
இன மையல்கள் –இப்படிப்பட்ட மயக்கங்கள்
என்று -என்றைக்கு அர்த்தம் அருளினார் பன்னீராயிரப்படியில்

—————————————————————————————————————————————————————————————————–

கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன வென்னும்
போமிள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை யீதென்னும்
ஆமள வொன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே –4-4-5-

ஆன் கன்று பன்னீராயிப்படி பாட பேதம் -ஆன் கன்று பசு ஈன்ற கன்று -வான் கன்று -திவ்யமான கன்று
கோவிந்தன் -பசுகிகளையும் கன்றுகளையும் மேய்த்து ரஷித்து-பெரு மேன்மைக்கு – முடி சூடினவன்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்
கன்றின் கழுத்தைக் கட்டிக் கொண்டவாறே அது துள்ளிப் போகா நிற்குமே
அவன் பரிகரமாயேயாய் இருந்தது -என்னும் -ஈடு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு மாற்றமும் தாரான்
கோமளம் -இளமை -மென்மை-மாணிக்கத்தில் ஒரு வகை
போமிள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை யீதென்னும்
ஐந்து பைந்நாகத் தலை ஆடரவணை மேவி பாற்கடல் யோக நித்தரை செய்த
எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –
அதுவே நினைவு
அவன் கூட தானும் படுக்க ஆசை
மால் செய்கின்ற கூத்து ஆம் அளவு ஓன்று அறியேன் என்னவுமாம்
இப்படியும் ஒரு கூத்து ஆவதே –

—————————————————————————————————————————————————————————————————-

கூத்தர் குடமேடுத்தாடில் கோவிந்தனாம் எனாவோடும்
வாய்த்த குழலோசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெய் யீதென்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே –4-4-6-

சாதாரண கூத்தை பொருள் படுத்தாமல்
குடக்கூத்து ஜீவனத்து பண்ணினால் -குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே என்பாள் –
சீரார் குடமிரண்டு ஏந்தி செழும் தெருவே ஆரார் எனச் சொல்லி ஆடுமது கண்டு –
மாயவன் என்று
மாயவன் கண்ணன் ஊதும் குழலோசை
மாயவனான கண்ணனே என்றுமாம் –
நுடங்கு இசை கேள்வி எங்கோ -இசையே அவன் என்னும்
கோபிகள் உடன் கலந்து பிரிந்தால் பிரணய ரோஷம் தலை எடுத்து இருக்கும்
தாழ்ந்த சொற்களை குழலிலே இட்டுப்பாடி –
பகல் எல்லாம் பசுக்களின் பின்னே போனேன்
தார் தந்தையர்க்கு பரதந்த்ரனாய் இருந்தேன்
பிரிந்தேன்
தரிக்க மாட்டிற்றிலேன்
ஒரு பகல் ஆயிரம் ஊழியாக செல்லா நின்றது
போன்றவற்றை இசைத்துப் பாடுவான் -அது தோன்ற மாயவன் -என்கிறாள்
ஆய்ச்சியர் வெண்ணெய்
பிராமண ஸ்திரீகள் கடைந்து திரட்டிய வெண்ணெய் கண்டால் ஒன்றும் பேசான்
இடைச்சிகள் கையில் முடை நாற்றம் பெற்ற வெண்ணெய் கண்டால் -நம்பிள்ளை
அவனுண்ட வெண்ணெய் உடன் சஜாதீயமான வெண்ணெய்

கோவிந்தன் -மாயவன் -அவன் -வெண்ணெய் உண்ண அவன் பட்ட பாடுகளை உளப்படுத்தியவாறு –
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு –தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆறாத வெண்ணெய் விழுங்கி –

இவள் இப்படி கலங்குகைக்கு நிதானம் என் என்னில்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே-
அவன் முன்பே ஒரு உபகாரத்தைப் பண்ணி வைத்தான்
அதிலே தோற்ற அன்றே தொடங்கி இவள் பிச்சேறத் தொடங்கினாள்
தாயும் கூட உதவாத சமயத்திலே பூதனை வந்து முலை கொடுக்க
அவ்வளவிலே உணர்த்தி உண்டாய் அவளை முடித்து தன்னை நோக்கித் தந்தானே
அவ்வுபகாரத்திலே தோற்று அன்று தொடங்கி இவள் பிச்சேறினாள்
பூத்தரு புணர்ச்சி
புனல் தரு புணர்ச்சி
களிறு தரு புணர்ச்சி
என்றிவை புணர்ச்சிக்கு ஹேது
அதாவது எட்டாத கொம்பிலே நின்றதொரு பூவை ஆசைப்பட்டால்
இவன் தன்னைப் பேணாதே இவள் ஆசையை முடித்துக் கொடுக்க
இவன் தன்னைப் பேணாதே நம் நினைவை முடித்தானே என்று அதுக்காக தன்னைக் கொடுக்கை பூத்தரு புணர்ச்சி
ஆற்றிலே அழுந்துகிறவளை தான் புக்கு ஏறவிட்டு அதுக்காக தன்னைக் கொடுக்கை புனல் தரு புணர்ச்சி
அச்சிந்தமாக ஆனையின் கையில் அகப்பட அகப்பட்டவலை மீட்டுக் கொடுக்க அதுக்காக தன்னைக் கொடுக்கை களிறு தரு புணர்ச்சி
இவை ஒன்றும் அல்ல
அவன் தன்னை நோக்கின இதுக்கு
இவள் தன்னை எழுதிக் கொடுக்கிறாள் -ஈடு

———————————————————————————————————————————————————————————————————————————

ஏறிய பித்தினோடு எல்லா வுலகு கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே யிடக் காணில் நெடுமால் அடியார் என்றோடும்
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி யீதென்னும்
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே யித்திரு–4-4-7-

ஏறின பித்துடனே இருந்தாலும் வேதாந்த வித்துக்கள் போலே
விஷ்னோஸ் சாகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் ஸ்திதி சம்யமகர்த்தா சௌ ஜகதோஸ்ய ஜகச்ச ச -என்ற
பராசர பகவான் போலே வாசனா பலத்தாலே பகவத் விஷயம் அல்லது பேசாள்
த்ரவ்யம் ஏதேனும் ஆகிலும் ஊர்த்தவமாக இடக்காணில் நெடுமால் அடியார் என்றோடும் -ஆறாயிரப்படி
அவர்கள் செவ்வே இடுவார்களோ என்னில்
அதுவும் அன்றிக்கே இதுவும் அன்றிக்கே
மசக பிராயராய் இருப்பார்கள் -இரண்டும் கேட்டான் நிலை -தரிப்பர்கள் இ றே -ஈடு
மாயன் தமரடி நீறு கொண்டு அணிய முயலில் -பாகவதர்கள் திருவடித் துகளும் பொருளாக கொள்ளலாம்
இத்திரு -பராங்குச மாய்கி மகா லஷ்மி அம்சம்
இத்திரு மண்னேர்அன்ன ஒண் நுதல் பின்னை கொல் என்கிற ஒப்பு —நாயனார்

———————————————————————————————————————————————————————————————

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந்தான் என்று துள்ளும்
கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே –4-4-8-

ந விஷ்ணு ப்ருத்வீபதி –
கோவாகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் பூமேவும்
செங்கமல நாவியான் சேவடிக்கே யேழ் பிறப்பும்
தண் கமலம் யேய்ந்தார் தமர் -பூதத்தாழ்வார் –
அரசன் சாமான்யன் தலையில் அடியிட்டு யானை கழுத்திலோ ஏறுவதைக் கண்ட
ஸ்ரீமன் நாத முனிகள் -சர்வாதிகன் ப்ரஹ்மாதிகள் தலையிலே பெரிய திருவடியின் மேல் ஏறும்படி இது அன்றோ -என்று -மோஹித்தாராம்
ஒரு ராஜா பின்னும் போன ஐதிக்யமும் உண்டே
உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந்தான் என்று துள்ளும்
நீலம் குவளை காயா -முதலிய உரு வழகிய பொருள்களைக் கண்டால்
கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல் வண்ணன் கோயிலே என்னும்
கை எடுத்து கும்பிடு போடும் இடம் எல்லாம்
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார கேசவம் பிரதி கச்சதி –
வெருவுதல் -அஞ்சுதல்
வீழ்தல் -மோஹித்தல்

————————————————————————————————————————————————————————————————————–

விரும்பிப் பகைவரைப் காணில் வியலிடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும்
பெரும் புல வானிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே –4-4-9-

பகவர்– பரமைகாந்திகள் -ஞான அனுஷ்டான பரிபூர்ணர் பகவான் சொல்லை இட்டே
ஜ்ஞாநீது ஆத்மைவ மேமதம்
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும்
ராஜெந்த சோழ நகரில் திருவாய்க்குலத்து ஆழ்வார் கார் காலத்தில் பயிர் பார்க்கப் புறப்பட்டு
மேகம் பார்த்து மயங்கி விழ
ஒரு குடிமகன் வந்து இவர் பிரக்ருதியை அறிந்து வைத்தும் இக்காலத்திலே பயிர் பார்க்க இவரை புறப்பட விடுவதே
புலம் -இந்த்ரியங்களை அபஹரிக்கும்படி அழகிய பசுக்கூட்டங்கள்
முன்னணியில் கண்ணனை காணாமல்
பின் சென்று பார்த்து கோஷ்டிகள் சென்று காண பின்னே செல்கிறாள்
ஆழ்வார் திருவவதரித்தது பெரிய தவப்பயன் -அரும் பெறல் பெண்ணினை –
அருவினையேன் நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற -திரு விருத்தம் –

—————————————————————————————————————————————————————————————————————-

அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக் கண் துளும்ப வெவ் வுயிர்க் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா வென்று பேசும் பெருமானே வா வென்று கூவும்
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே –4-4-10-

காதல் கரை அழிந்து கிடக்க
அது தானும் வடிவு கொண்டால் போலே இருக்கும் இவளுக்கு
ஹிதம் சொல்லும்படியான நிலைமை அன்றே
வல்வினையேனே-இப்படி காணும்படி மகா பாபத்தை பண்ணினேன்
ஆழ்வான் திரு நயனங்கள் நோவு பட்ட பின்பு எம்பெருமானார்
திரு உள்ளம் நோவு பட்டால் போலே
திருத்தாயார் திரு உள்ளம் நோவு படுகிறது -ஈடு

———————————————————————————————————————————————————————————————–

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல்வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துளிவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர வெல்லாரும் தொழுது எழ வீ ற்று இருப்பாரே –4-4-11-

நித்ய சூரிகள் ஆதரிக்கும்படி பெருமை பெற்று மகிழ்வர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே
எம்பெருமான் ஓடி வந்து சேவை சாதித்து அருள -வல்வினை தீர்க்கும் கண்ணனை -என்கிறார்
பெற்றவர்கள் கை விட்டால் பிடித்தவர்கள் கை விடார்கள் இ றே -ஈடு
கீழே -மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேன் -என்று கை விட்ட தாயார்
வல்வினை தீர்க்கும் கண்ணன் -பிடித்தவர்கள் கை விடார் -பரகத ச்வீகாரம்
வண் குருகூர்ச் சடகோபன்
வண்மை திருக் குருகூருக்கு -பன்னீராயிரப்படி
மற்றவர்கள் -வண்மை -ஸ்ரீ சடகோபருக்கு
நாமும் கூட பகவத் குண அனுபவம் பண்ணும்படி பாங்கான பாசுரம் அருளிய வண்மை
தொல்வினைதீர –நலனுடை வைகுந்தம் நண்ணி -நலனிடை -நலனுடை -பாட பேதம் ஆனந்த பிரசுரம்

————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.