திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-மின்னிடை மடவார் நின்னருள்–6-2-

ஆழ்வார் உடைய படி பலவகைப் பட்டு இருக்கும்
இதில் பரம விலஷணமாய் இருக்கும்
என்றும் ஒருநாள் அழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -என்றும்
ஒரு நாள் காண வாராய் -என்றும்
பல காலும் கூப்பிட்ட ஆழ்வார்
இதில் எம்பெருமான் வந்து நிற்க -இங்கே ஏதுக்கு வந்தாய் -என்று கதவடைத்து -பிரணய கலஹம் -நடத்துவார் இதில் –
பிதா ச ரஷகச் சேஷி பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ச்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா ச ஆத்யம நூதித
நவவித சம்பந்தங்களும் உண்டே
பர்த்ரு பார்யா சம்பந்தத்தால் பிரணய கலஹம்
கீழே தூது விட
அரை குலைய தலை குலைய எம்பெருமான் ஓடிவர
ஆழ்வார் பிரணய ரோஷம் தலை எடுத்து
கதவடைத்து தள்ளுகிறார்
காதில்கடிப்பிட்டு
ஏர்மலர்ப் பூங்குழல்
இதே நடையில் அவதரித்த அருளிச் செயல்கள் –

——————————————————————————————————————————————————————————-

மின்னிடை மடவார் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாதவனே
உன்னுடைய சுண்டாயம் நானறிவேன் இனியது கொண்டு செய்வதென்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ–6-2-1-

பந்தே நாயகி பேசாவிட்டாலும் நீயாவது பேசுவாய் அன்றோ
கழலே -நாயகி கிடைக்கா விட்டாலும் நீயாவது கிடைத்தாயே
வ்யாமோஹ அதிசயத்தை வெளிக்காட்ட பேசத் தொடங்குகிறாள்
முன்பு மின்னிடை அழகு இருந்த படி என்று சொல்லுவனே
சீறி மின்னிடை மடவார் நான் அல்லேன்
நின்னருள் சூடும் மின்னிடை மடவார் வேறே யுண்டு -என்கிறாள் –
முன்பு நான் அது அஞ்சுவன் –
நீ இங்கே வந்து செய்கின்ற பிரணய விலாச சேஷ்டிதங்கள்
உன்னுடைய இப்போது மின்னிட மடவார்கள் அறிய வந்தால்
உன்னை மாத்ரம் இல்லாமல் என்னையும் சேர்த்து தண்டிப்பார்கள் -என்று அஞ்சுகிறேன் –
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாதவனே -மாயவனே உயரான விளி
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற போது-என்று
பெண் பிறந்தார் சொல்லும்படி சீதா பிராட்டிக்காக நீ செய்த செயலும் -வலையில் விழ வைக்கவே
ஒரு துறையிலே மெய் பரிமாறா விடில்
நமக்கு மேல் உள்ளது எல்லாம் ஒரு தொகையிலே அகப்படாது என்று செய்தாய்
அத்தனை அன்றோ
அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்ட வழி அன்றோ -ஈடு
உன்னுடைய சுண்டாயம் நானறிவேன்-சுண்டாயம் -ஸ்வார்த்தபரத்வம்
இனியது கொண்டு செய்வதென் -உன்னுடன் உறவு கொள்வேன் அல்லேன்
புறப்பட -போகட்டும் என்று இருப்பவள் அல்லவே
கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
வார்த்தைபாடு வளர்க்க -என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ-என்கிறாள்
பிணக்கு செய்ய இடம் தந்தபடி

————————————————————————————————————————————————————————————————

போகு நம்பீ யுன் தாமரை புரை கண்ணினையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமேயாம் –
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ
ஆ கள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6-2-2-

கீழே போகு என்னவும் போகாதே சில பிணக்கு செய்து அணுகி வந்தான்
என் பந்தும் கழலும் என்றாயே ஸ்திரீ ஸ்வா தந்த்ர்யம் கொண்டு பேசலாமோ
என் கண் இணையில் எனக்கு உனது மேல் உள்ள அன்பு தெரிய வில்லையா
என்றவாறு பேசி புன்முறுவல் செய்து அருகே வந்தான் –
போகு நம்பீ யுன் தாமரை புரை கண்ணினையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய அழிதற்கே
இந்த அழகை காட்டி என்னை அழிக்கிறாய்
அழிவதற்கு பெண்ணாக பிறந்தோமே அல்லது அனுபவிக்க இல்லையே என்கிறாள்
முகம் காட்டாமல் திருக்க குழல் கற்றை அழகு இருந்தபடி என் என்ன
வேணு கானம் செய்தும் வசப்படுத்த தொடங்க
அப்பா நான் அல்ல கூந்தல் அழகி
உனது திரு அருளுக்கு பாத்திர பூதைகள் கூந்தல் அழகிகள் பலர் உண்டே
அங்கே சென்று பசுக்களை மேயவிட்டு வேணு கானத்தை செய்தாய் ஆகில் அவர்கள் உகப்பார்
அங்கே சென்று ஊதப் பாராய் -என்கிறாள் –

————————————————————————————————————————————————————————————————-

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்யவாய்
இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்
வேயிருந்த தடம் தோளினார் இத்திருவருள் பெறுவார் யவர்கொல்
மாயிரும் கடலைக் கடைந்த பெருமானாலே –6-2-3-

காதலி இருந்த இடத்தில் அன்றோ குழல் ஊதுவது -போன்ற வார்த்தைகளை சொல்லி நெருங்கி வர
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ-என்கிறாள்
உனது பொய் என் பக்கல் விலை செல்லாது
அது கேட்ட அவன்
உனது வாயமுதம் பருக எண் செய்ய வாய் துடிக்கிறது கண்டாயே
அதி கிடைக்கா விடிலும் கண்கள் ஆர நின்று காண கண்கள் துடிக்கின்றன பாராய் -சொல்ல
நோக்கினாள்
முந்தையைக் காட்டிலும் பரம விலஷணமாக இருக்கவே
நின் செய்யவாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் –
விபரீதம் -மாறுபட்டு இருந்தன -விலஷணமாய் பரம போக்யமாய் இருக்கின்றன
உன்னுடைய திருக் கண்களினுடையவும்
திருப் பவளத்தினுடையவும் அழகு இருந்த படி என்
கண்டும் கேட்டும் அறியாத ஒரு படியான இவ்வழகு
திருப்பாற் கடலிலே அம்ருத மதன சமயத்திலே
அவதீர்ணையான –பெரிய பிராட்டியாரோடு
அன்று கலந்த கலவியாலும் பிறந்தது இல்லை
இப்படி பெரிய பிராட்டியாரில் காட்டிலும் உனக்கு
அபிமதைகளாய்
உன்னைப் புஜிக்க பிறந்தவர்கள் யாரோ -என்கிறாள் -ஆறாயிரப்படி
இந்த பரிபூர்ண அனுபவம் நமக்கு கிடைக்க பெற வில்லையே
கிடைக்கப் பெரும் புண்ணியவதிகள் யாரோ
என்று உள்ளுக்குள்ளே விஸ்மயப் படுகின்றபடி
மாயிரும் கடலைக் கடைந்த பெருமானாலே–பெரிய பிராட்டியாரைப் பெற பெரிய கார்யம் செய்தானே -அவளும் ஒரு பாக்யவதியே

———————————————————————————————————————————————————————————————————-

ஆலி நீளிலை யேழுலகுமுண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் இனி எம்பரமே
வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே–6-2-3-

விபரீதமோ மாயமோ என்னிடம் இல்லை உங்கள் இடம் தான் என்றான்
ஆலி நீளிலை யேழுலகுமுண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார் இனி எம்பரமே-என்கிறாள்
பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின் மேலன்று நீ வளர்ந்த மெய் என்பர்
ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு –
உன் மாயத்தை நீயே அறிய வேண்டும் என்கிறாள்
தாமதமாக வந்தேன் என்று இப்படியா
தாய் தந்தைக்கு பரதந்த்ரன் அன்றோ என்ன
வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய்
வ்யாஜ்யமாக கண் அழகிகள் விளையாடும் இடங்களில் திருவது அன்றோ உன் பணி
உள்ளபடி அறிந்தார்களே
வருந்தி அர்த்தம் இல்லா வார்த்தைகளை சொல்ல
எம்மை நீ கழறேலே
நீ மேலிட்டு வார்த்தை சொல்லும் இடம் இது வன்று
வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று சொல்லாய் -என்றபடி-

——————————————————————————————————————————————————————————————————–

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கறியும் திண் சக்கர
நிழறு தொல் படையாய் உனக்கு ஓன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க
எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே –6-2-4-

நீ வஞ்சகம் செய்வது விண்ணுலகிலும் பிரசித்தம் அன்றோ
சூட்டு நன் மாலைகள் -இத்யாதி
உன் கையிலே சாஷி உண்டே
ஆயுதம் எடேன் – எடுத்தும் /பகலை இரவாக்கியும் -திண் சக்கர
நிழறு தொல் படையாய்
கவிழ் தலை இட்டு இருக்க
சர்வஞ்ஞனுக்கும் ஓன்று உணர்த்துவதாக சொல்ல
உங்கள் மொழி சாமான்யம் இல்லை தேன் போலே உள்ளதே என்றானாம்
நாங்கள் அல்ல -மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார்-வேறு சிலர் உண்டு -சொல்லி மறைய நிற்க
பூவைகள் கிளிகள் உடன் லீலாரசம் அனுபவிகிக்க
எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே-
அவர்கள் மனம் வாடுவார்கள் -நீ இங்கனம் குழக வேண்டாம்
பூவை -புஷ்பம் -பஷி விசேஷம்
பூவைப் பூ வண்ணா
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
நீ யலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
பூவை பைங்கிளிகள்
பூவைகள்காள் குயில்காள் மயில்காள் –

—————————————————————————————————————————————————————————————

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை
பழகியாம் இருப்போம் பரமேயித்திருவருள்கள்
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்
கழகமேறேல் நம்பீ உனக்கும் இளைதே கன்மமே –6-2-5-

குழமணன் -மரப்பாச்சி
விலாச சேஷ்டிதங்கள் பல செய்தான்
கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
பந்து பறித்து துகில் பற்றி கீறிப் படிரன்படிறு செய்யும் -போன்ற கேட்பார் அற்ற செயல்களை செய்யவே
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை-என்கிறார்கள்
கோ இன்மை -அராஜகமான செய்கை
கன்மம் ஒன்றும் இல்லை -லாபம் ஒன்றும் இல்லை -நிறக்கேடாகும்
வெட்டி வார்த்தை சொல்லுவதா நீங்கள் அல்லால் நான் இல்லையே என்ன
பழகியாம் இருப்போம்
கேட்டதும் என் குறும்புகள் உங்களுக்கு பரம போக்கியம் தானே
மிகைத்து அல்லல் படுத்த – பரமேயித்திருவருள்கள் -என்கிறார்கள்
குறும்பு செயல்களையே -திருவருள்கள் -என்கிறார்கள்
என் கொல் அம்மான் திருவருள்கள் -பத்தாம் பத்திலும் வரும்
இவை எங்களால் பொறுக்க முடியாது
த்ரிலோக சுந்தரிகள் என்று பலர் உண்டே
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர் -திருமங்கை ஆழ்வார்
நீங்கள் தான் எனக்கு ஏற்ற தேவிமார்கள் ஆணை இட்டு சொல்லுகிறேன் என்று சொல்லி அணுக
கழகமேறேல் நம்பீ என்கிறார்கள்
மேல் விழுந்து தீண்டாதே -கழகம் -கோஷ்டி –

இவ்விடத்தே பட்டர் அருளிச் செய்வதொரு வார்த்தை உண்டு
சமஸ்த கல்யாண குணாத்மாகனாய்-உபய விபூதி உக்தனாய் -சர்வாதிகனாய்- சர்வ நியந்தாவாய் இருக்கிற
சர்வேஸ்வரன்
நாலிடைப் பெண்கள் இருந்த விடத்தே புக்க அல்லது
நிற்க மாட்டாத செல்லாமை விளைய
அவர்கள் நீ இங்குப் புகுராதே கொள் என்ன
விலங்கிட்டால் போலே பேரவும் திரிய மாட்டாதே
தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம்
தங்களையும் இவர்களையும் ஒழிய ஆர் அறிந்து கொண்டாட
வ்யாசாதிகள் எழுதி இட்டு வைத்துப் போனார்களா -என்று அருளிச் செய்வர்
சர்வ நியந்தா வானவர் சிலருக்கு நியமிக்கலாம் படி
எளியன் ஆனான் என்றால்
இது மெய்யென்று கைக் கொள்ளுவாரைக் கிடையாது இ றே
சாஸ்திரங்கள் எல்லாம் ஈசேசிதவ்யம் விபாகம் பண்ணி ஒருங்க விடா நிற்க
அத்தலை இத்தலையாக சொல்லுகிறது இ றே இது -ஈடு

கழகமேறேல் நம்பீ -என்றால் நம்புவானோ மேன் மேலும் உட்புகுந்து தீம்பு செய்ய வன்றோ இவர்கள் ஆசைப்படுகிறார்கள்
என்பதை அறிவான் அன்றோ
உனக்கும் இளைதே கன்மமே–என்கிறார்கள்
அநீதியான செயல் நீசத் தனம் என்று நாங்கள் சொல்ல வேண்டுமா
உன் திரு உள்ளத்துக்கும் தெரியுமே -என்றபடி

—————————————————————————————————————————————————————————————————————————————

 

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அதுகேட்கில் என் ஐமார்
தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –6-2-6-

மேல் மேலும் பிணக்குக்கு இடம் கொடுக்க அல்ப வஸ்துக்கள் என்றும் பாராமல்
கையில் உள்ள லீலா உபகரணங்களை வலிய பிடித்து கொண்டு செல்ல
இது கன்மம் அன்று -செய்ய தகுந்த கார்யம் இல்லை என்னும் பொருளில் சொல்ல
உன்னால் முடிந்தால் பார் -என்றதாக கொண்டு
எனக்கு அசக்யமானது ஓன்று உண்டோ
பாலகன் என்று பரிபவம் செய்யேல்
பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் -என்று
தாய் பலகால் சொல்ல கேட்கவில்லையா
அப்பா உனக்கு அசக்யம் ஒன்றும் இல்லை அறிவோம்
கடல் ஞாலம் உண்டிட்டவனும் நீயே
நிர்மலன் -நெடியாய் -நீ
இச்ச்செயல்கள் செய்வது உனக்கு பிழை என்றோம் -உனக்கேலும் பிழை பிழையே -என்ன
இங்கனம் மேலும் இவர்கள் உத்தரம் உரைக்கும் பாடி காதிலே வந்து காகா குர் -போன்ற மர்மமான வார்த்தைகளை சொன்னான்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி-என்றார்கள்
தப்பாக சொல்ல வில்லையே -உரக்க சொல்ல யத்தனித்தான்
உடனே அது -வாயால் சொல்லாமல் சுட்டு-அது கேட்கில் என் ஐ மார் தன்மம் பாவம் என்னார் -என்றார்கள்
பேதை பாலகன் அதாகும் -போல
தன்மம் -தர்மம்
ஆளுக்கு ஒரு தடி கொண்டு வந்து தகர்ப்பார்கள் –
குத்தும் பூசலுமாய் அன்றோ தலைக்கட்டும் -என்றபடி-

———————————————————————————————————————————————————————————————

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அதுகேட்கில் என் ஐமார்
தன்மம் பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே –6-2-7-

மேல் மேலும் பிணக்குக்கு இடம் கொடுக்க அல்ப வஸ்துக்கள் என்றும் பாராமல்
கையில் உள்ள லீலா உபகரணங்களை வலிய பிடித்து கொண்டு செல்ல
இது கன்மம் அன்று -செய்ய தகுந்த கார்யம் இல்லை என்னும் பொருளில் சொல்ல
உன்னால் முடிந்தால் பார் -என்றதாக கொண்டு
எனக்கு அசக்யமானது ஓன்று உண்டோ
பாலகன் என்று பரிபவம் செய்யேல்
பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன் -என்று
தாய் பலகால் சொல்ல கேட்கவில்லையா
அப்பா உனக்கு அசக்யம் ஒன்றும் இல்லை அறிவோம்
கடல் ஞாலம் உண்டிட்டவனும் நீயே
நிர்மலன் -நெடியாய் -நீ
இச்ச்செயல்கள் செய்வது உனக்கு பிழை என்றோம் -உனக்கேலும் பிழை பிழையே -என்ன
இங்கனம் மேலும் இவர்கள் உத்தரம் உரைக்கும் பாடி காதிலே வந்து காகா குர் -போன்ற மர்மமான வார்த்தைகளை சொன்னான்
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி-என்றார்கள்
தப்பாக சொல்ல வில்லையே -உரக்க சொல்ல யத்தனித்தான்
உடனே அது -வாயால் சொல்லாமல் சுட்டு-அது கேட்கில் என் ஐ மார் தன்மம் பாவம் என்னார் -என்றார்கள்
பேதை பாலகன் அதாகும் -போல
தன்மம் -தர்மம்
ஆளுக்கு ஒரு தடி கொண்டு வந்து தகர்ப்பார்கள் –
குத்தும் பூசலுமாய் அன்றோ தலைக்கட்டும் -என்றபடி-

————————————————————————————————————————————————————————————————————————————-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததோர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்
இணக்கி எம்மை எந்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதாரே –6-2-8-

மல்லரை மாட்டிய தேவாதி தேவன்
என் சரக்கை காட்டித் தீருவேன்
நாங்கள் அறிவோம் என்ன
சொல்லீர் பார்ப்போம்
உ ன் மூல கந்தமே அறிவோம்
சகல சேதன அசேதனங்களையும் நாம ரூப விபாக ரஹிதமாம் படி கலசி-சம்ஹரித்து –
சிருஷ்டி சமயத்தில் ஒருவர் கருமம் மற்று ஒருவருக்கு தட்டாதபடி பிரித்து -பிழையாமல் –
பலவகைப்பட்ட சிருஷ்டி உண்டே -பேதித்தும்
தனக்கு ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கிற தனி ஒரு மூர்த்தி என்று அறிவோம் -பேதியாதோர்கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் –என்றார்கள்
சோகாமயாத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி சதா போதப்யத சதபச்தப்த்வா இதம் சர்வம் ஸ்ருஜத யதிதம் கிஞ்ச –

நாங்களாக வரவில்லை தோழி மார் விளையாட கூப்பிட வந்தோம்
பந்தும் கழலும் கொண்டு விளையாட வந்தோம்
உனது விளையாட்டு -அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –
நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும்
உமக்கும் எங்களுக்கும் என்ன சேர்த்தி உண்டு -உம் கார்யம் நீர் பாரும் -பாராமுகம் காட்ட
வழி மடக்கி குறுக்கே படுக்க
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதாரே-
இது ரசமே வடிவெடுத்த பேச்சு
உன்னை உகந்து இருக்கும் எங்களுக்கு இவ்வளைப்பு பரம போக்யமே –
இதற்கு எங்கள் உள்ளம் மெய்யே குழைகின்றது காண்
உகவாத பாவிகள் இத்தைக் கண்டால்
அது கண்டு இவ் ஊர் ஓன்று புணர்க்கின்றதே -என்னுமா போலே
ஏதேனும் தொடுப்பார்கள் என்று அஞ்சுகிறோம் –

—————————————————————————————————————————————————————————————————————————

உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப்படுப்பான் அழித்தாய் யுன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே –6-2-9-

அவன் வளைத்தாலும் அந்ய பறைகலாய் அவனை நோக்காமல் சிற்றில் இழைத்து சிறு சோறு அட்டி விளையாடி இருக்க
இவர்கள் கடாஷமே தாரகம் என்று இருப்பான் ஆகையால் திருவடிகளால் உதைக்க
உன்பக்கல் பிரேம விசேஷத்தால் அழித்தாய்
கால் படைத்த பிரயோஜனம்பெற்றாய்
கண் படைத்த பிரயோஜனம் பெறவில்லையே
நாங்கள் சிற்றில் இட்டு விளையாடும் கோலம் காண பெறவில்லையே
அந்ய பரராய் உண்டு உடுத்து உகந்து திரிந்தாலும் திருவடி பலத்தால் பகவத் விஷயீ கரம் பெறுவது உள்ளுறை பொருள்
ஊடல் முடிந்து கூடல் அணித்தாகையாலே அழித்தாய் உன் திருவடியால் -என்பதற்கு
சிற்றிலை அழித்தாய் எனபது பொருள் அன்று
உன்னுடன் கூடம் என்று இருக்கும் அத்யாவசியம் அழித்தாய்
கூடாரை வெல்லும் கோவிந்தா -என்கிறார்கள் -சேதன லாபம் ஈஸ்வரனுக்கு -என்றதால் –முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே-
நம்மை அகப்படுத்திக் கொள்ள இரண்டு வலைகள் உண்டே
மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு –
உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலை-இங்கு
அகவலை என்பதால் இது அந்தரங்க வலை
அது பஹிரங்க வலை –

————————————————————————————————————————————————————————————————————————————-

நின்றிலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசுகளை கட்ட
வென்றி நீண் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே –6-2-10-

காலால் அழித்தது சிற்றிலை அன்றே
இவர்கள் நெஞ்சில் மறத்தை இ றே
அந்த மறம் போனவாறே மேல் நோக்கி
பாதாதி கேசமாகப் பார்த்தார்கள்
தங்களை ஜெயிக்கையால் உண்டான ஹர்ஷம்
வடிவிலே தோற்றும்படி நின்றான்
அவ்வடிவில் பிறந்த வேறு பாட்டைச் சொல்கிறார்கள் -ஈடு

ஜய ஸூ சகம் -நின்றிலங்கு முடியினாய் -முன்பு வெறும் தலைச்சுமை -இன்று அணிவது தான் ஏற்றம் -எங்கள் மறத்தை போக்கிய பின்பு
மிடுக்கரான ராஜாக்களை வென்ற உனக்கு அபலைகளான எங்களை வென்றது ஒரு பணியோ
வியன் ஞாலம் முன் படைத்தாய் -பிரளயம் கொண்ட பூமியை உண்டாக்கினால் போலே
பிரணய ரோஷத்தால் அழிந்த எங்களை உண்டாக்கி
விரஹ பிரளயம் கொண்ட எங்களை உத்தாரணம் செய்து அருளினாய்
பழைய புராணம் எதுக்கு
எங்களை அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண் -என்னும்படி
சகுடும்பமாய் உஜ்ஜீவனப் படுத்தி அருள
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒழித்து வளர்ந்து –
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் -என்கிறார்கள்
உன்னைப் பிரிந்து நாங்கள் பட்ட பாடு அறிவோம்
உன்னோடு கூடுவது மறுபடியும் பிரிந்து துக்கப் படவே என்று அறிவோம்
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே-என்கிறார்கள்
துக்கத்தை சஹித்துக் கொண்டு கூடுகிறோம் –

————————————————————————————————————————————————————————————————————————————

ஆய்ச்சியாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு
கூத்தவப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையுமோர் பத்திசையொடும்
நாத்தன்னால் நவில வுரைப்பார்க்கு இல்லை நல்குரவே –6-2-11-

பிரணய ரோஷத்தால் கண்ணனுக்கு உண்டான துக்கம்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கின படிக்கு -ஒக்கும்
அன்று யசோதை பிராட்டி அழப் பண்ணினது அதி சிநேக கார்யம்
இன்று காதலிகள் அழப் பண்ணினது அதி பிரணய கார்யம்
ஊரிலே வெண்ணெய் களவு போயிற்று என்றார்கள்
அவ்வளவிலே நாம் இ றே இதுக்கு இலக்கு என்று அழப் புக்கான்
மடம் மெழுகுவார் ஆர் என்ன அச்ரோத்ரியன் -என்றார்கள்
இப்பரப்பு எல்லாம் என்னால் மெழுகப் போமோ -என்றான் அது போலே -ஈடு
வெண்ணெய் களவு பிரசங்க மாதரத்தில் அழுத கண்ணன்
தன்னுடைய களவை தானே வெளியிட்டுக் கொண்டான்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையுமோர் பத்திசையொடும்
ஊடுதலும் ஏத்துவதில் ஒரு பிரகாரம் தானே
பக்தியானது பிரணயமாக மாறி பிரணயத்தின் பரிவாஹா ரூபம் இது
நல்குரவு -தாரித்ரியம்
சோறு கூறைகள் எல்லாம் சம்ருதியாக கிடைக்கும்
உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் -பகவத் அனுபவம் குறைபாடின்றி பூரணமாக கிட்டும்

————————————————————————————————————————————————————————————————————-

திருவாய்மொழி நூற்றந்தாதி –

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய் பெண்ணிலையாய்த் தான் தள்ளி உன்னுடனே
கூடன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு –52

———————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: