திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்—5-10-

கீழ் திருவாய் மொழியில் திரு வல்ல வாழ் சென்று சேர்ந்து அங்கு உறையும் பெருமாள் உடன் பரிமாற்ற மநோ ரதித்து
கால்நடை தாராமல் நடு வழியில் விழுந்து கிடந்து கூப்பிட்டார்
கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -என்று தரிக்கப் பார்த்தார்
அது தானும் அரிதாய் சைதில்யத்தை விளைப்பிக்க
பிரானே உன்னைப் பிரிந்து நோவு பட்டாலும்
தரித்து நின்று குணாநுபவம் பண்ண வல்லனாம் படி
பண்ணி அருள வேண்டும் என்று அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார் இத் திருவாய் மொழியில்

அர்ச்சாவதாரங்களில் தமது அபேஷிதம் பெற ஆசைப் பட்டவர்
அந்த ஆசை நிறைவேறப் பெறாமையாலே விபவ அவதாரங்களில் செல்லுகிறார்
அர்ச்சாவதாரத்தில் குளிர நோக்குதல் வினவுதல் அணைத்தல்
செய்யலாகாது என்று சங்கல்பித்து இருக்கையாலே
சத்யசங்கல்பன் சங்கல்பம் குலையும்படிஅதிக நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம்
என்று கை ஒழிந்தார்
விபவ அவதாரங்களில் அப்படி ஒரு நிர்பந்தம் இல்லை யாகையாலும்
சம்ப்ருச்ய ஆக்ருஷ்ய ஸ ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -என்கிறபடி
அக்ரூறார் முதலானோர்க்கு சர்வ ஸ்வதானம் பண்ணின படி அனுசந்திக்கையாலும்
அது கால விப்ரக்ருஷ்டம் என்பதிலே புத்தி செலுத்தாமல் அங்கே போகிறார்

ஆழ்வார்கள் எல்லாரும் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டி இருப்பார்கள்
இதுக்கு ஹேது என் என்று பட்டரைக் கேட்க –
ஒருவருக்கு துக்கம் சில நாள் கழிந்தால் பொறுக்கலாம்
அணித்தானால் ஆறி இருக்கப் போகாது இ றே
அப்படியே அல்லாத அவதாரங்களைப் போல் அன்றிக்கே
சமகாலம் ஆகையாலே
ஒரு செவ்வாய் கிழமை முற்பட பெற்றிலோம்
பாவியேன் பல்லிலே பட்டுத் தெறிப்பதே -என்னும் இழவாலே
வயிறு எரித்தலேயாய் இருக்கும் -ஈடு

———————————————————————————————————————————————————————————————————

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-

கை செய்து -சேனைகளை அணி வகுத்து
நிறந்தனூடு புக்கு -நிறம் தன் ஊடு புக்கு -மருமமான ஹ்ருதய பிரதேசத்தின் உள்ளே புகுந்து
தரித்து உன்னை அனுசந்திக்க முடியவில்லையே
பிறந்தவாறும்
கிருபாவச்யனாய் கர்ப்ப வாசம் பண்ணி பிறக்க வேண்டுமா -ஆறு மாசம் மோஹித்தார்
வளர்ந்தவாறும்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்து மகனாய் வளர்ந்தவாறு என்னே
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்தவாறு என்னே –
எதிரிகள் உயிர் நிலைமை காட்டிக் கொடுத்தமை -திறங்கள் காட்டி –

———————————————————————————————————————————————————————————————–

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும்
மதுவையார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது விது வுது வென்னலாவன வல்ல யென்னை யுன் செய்கை நைவிக்கும்
முதுவை முதல்வா உன்னை என்று தலைப் பெய்வனே –5-10-2-

விவாஹ பிரச்தாபத்திலே-தன்னைப் பேணாதே பாய்ந்தபடி
நீ செய்த செயல் -என்னும் அளவே போதுமானது
எல்லாம் யென்னை சிதிலம் ஆக்கா நின்றன
பிரளயத்தில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினால் போலே
யென்னை தரிப்பித்து உன்னை அனுபவிக்க வல்லனாம் படி அருள வேணும்
இங்கிதம் நிமிஷ தஞ்ச தாவகம் ரம்யம் அத்புதம் அதி ப்ரியங்கரம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம்

———————————————————————————————————————————————————————————————

பெய்யும் பூங்குழல் பேய் முலையுண்ட பிள்ளைத் தேற்றமும்
பேர்ந்தோர் சாடிறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யுண் தாமரைக் கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை யுருக்குங்களே–5-10-3-

தாய் போலே வந்த பூதனை முலையைச் சுவைத்து
உண்ட இளமைத் தெளிவும்
அசூராவேசம் கொண்ட
சகடம் பேர்ந்து போம்படி
சிவந்த திருவடி ஒன்றால் -அழுகிற பாவனையாலே
தூக்கின திருவடிகளால் -செய்து அருளின
உன்னுடைய இள வீரமும்
நெய் யுண்ட விஷயம் பிரஸ்தா
வத்திற்கு வந்த அளவில்
தாயானவள் கையிலே கோலை எடுத்துக் கொள்ள
எல்லாரையும் நியமிக்க பிறந்த நீ
திருக்கண்கள் நீர் நிரம்ப
அஞ்சி நடுங்கி நிற்கும் நிலையும்
இப்பது என் நெஞ்சிலே வந்து தோன்றி
என் உள்ளத்தை உருக்குகின்றன-

———————————————————————————————————————————————————————————————-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்தசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட வுபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என்னுயிரை யுருக்கி யுண்ணுமே –5-10-4-

யதாஹி சோரஸ் து ததா ஹி புத்த -ஜாபாலியை நோக்கி பெருமாள் அருளியதை உட்கொண்டு கள்ளவேடம் -என்கிறார்
எம்பெருமான் புத்த முனி வேஷம் அசுரர்கள்
பட்டணங்களில் புகுந்த படியை புரம் புக்கவாறும் -என்கிறார்
அவைதிக மதத்தை உபன்யசித்து வைதிக ஸ்ரத்தையைப் போக்கி
அவ்வழியாலே கொன்று ஒலித்த படியை -கலந்து அசுரரை -இத்யாதி
விஷ்ணுராத்மா பகவதோ பவச்யாமித தேசச -ருத்ரனுக்கும் அந்தராத்மாவாக -புரம் ஒரு மூன்று எரித்து -அருளினான்
அத்தையே -வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் -என்கிறார்

——————————————————————————————————————————————————————————————————-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த வடிசில் உண்டலும்
வண்ண மால் வரையை யெடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள்
எண்ணும் தோறும் என்நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கும் நின்றே –5-10-5-

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் யளருமாகச் சேமித்து வைத்த
அஹம் கோவர்த்தநோச்மி-

———————————————————————————————————————————————————————————————-

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலாவுருவாய் அருவாய் நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்கனம் நினைகிற்பன் பாவியேற்கு
ஓன்று நன்குரையாய் உலகமுண்ட வொண் சுடரே –5-10-6-

லங்கத்வாரத்தில் கையும் வில்லுமாக நின்றவாறும்
வாலிவதம் பண்ணி கையும் வில்லுமாக நின்றவாறும்
திருச் சித்ர கூடத்தில் பர்ணசாலையில் வீற்று இருந்தவாறும்
கடற்கரையில் கிடந்த கிடை

கோவர்த்தனம் எண்ணும் கொற்றக் குடையை யெடுத்து ஏந்தி நின்ற நிலை
ராசக்ரீடைக்கு முன்பாக பெண்கள் உடன் கழகம் இருந்த இருப்பு
ஓரோர் மடிகளிலே சாய்ந்த படி

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பது விண் கிடப்பதும் நற்பெரும் திரைக் கடலுள் -என்றபடி
திருமலையில் நின்றபடியும்
பரம பதத்தில் இருந்தபடியும்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்த படியையும்

நின்ற வெந்தை யூரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணை கிடந்தது

புளிங்குடி கிடந்தது வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று

நின்றும் இருந்தும் கிடந்தும் –என் நெஞ்சு அகலான் –

ஆழ்வார் என்கிற அரையர் இப்பாசுரம் பாடுகையில் -இவை எல்லாம் தொட்டிலிலே செய்து அருளியதாக -எம்பெருமானார் அருளிச் செய்தாராம்
தொட்டில் பழுவைப் பிடித்துக் கொண்டு நின்று
தரிக்க மாட்டாமல் விழுந்து இருந்து
அது தானும் பொறுக்க மாட்டாமல் சாய்ந்து கிடந்த படி

இவை எல்லாம் என்றைக்கோ செய்து அருளி இருந்தாலும் நினைப்பார்க்கு குறை இல்லை
தமக்கு நினைக்கப் போகாமை -நினைப்பு அரியன -என்கிறார்
ஒன்றா இரண்டா
பல்லாயிரம் படிகள் அன்றோ
நெஞ்சு சிதிலமாகாமல் இருந்தால் அன்றோ நினைக்க முடியும்
நீயே உபாயம் சொல்லி அருள வேண்டும் –

——————————————————————————————————————————————————————————————————————-

ஒண் சுடரோடி இருளுமாய் நின்றவாறும் உண்மையோடு இன்மையே வந்து என்
கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என்
கண்கட்குத் திண் கொள்ள வொரு நாள் அருளாய் யுன் திருவுருவே –5-10-7-

ஒண் சுடரோடி இருளுமாய் நின்றவாறும்-உண்மையோடு இன்மையே வந்து-
ஸ்வ விஷயத்திலும் கொள்ளலாம்
ஆஸ்ரித நாஸ்ரித விஷயத்திலும் கொலோளலாம்
ஸ்வ விஷயத்தில் -மானச அனுபவத்தில் உண்மையோடு ஒண் சுடராய்
பாஹ்ய அனுபவத்தில் -இன்மையோடு இருளாய் நிற்கும்
ஆஸ்ரிதர் களுக்கு தன்படிகளில் ஒன்றும் குறையாமல் காட்டிக் கொடுத்து அருளும்
அநாஸ்ரிதர் களுக்கு ஒன்றும் தெரியாதபடி பண்ணும்
உனது வடிவு அழகாய் புஜிக்கத் தந்து அருளின நீ
நான் திடமாக காணலாம் படி கண்களுக்கு உன்னுடைய திரு வுருவை
ஒரு நாளாகிலும் அருள வேணும் –

—————————————————————————————————————————————————————————————————

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல்
திசைமுகன் கருவில் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயகமவை கேட்கும் தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே –5-10-8-

காரணமான ஏகார்ணவ ஜலத்திலே
அழகிய திருமேனி உடன் கண் வளர்ந்து அருளினது -ஸ்ருஷ்டிக்காக
பிறகு அந்த திருமேனியில் உண்டான திரு நாபி கமலத்தில் உண்டான
நான்முகனை அதிஷ்டித்து நின்று சத்வாரமாக சகல சிருஷ்டியும் செய்து அருளின படி
உன்னுடைய பரத்வ பிரகாசமான இவற்றை வேதாந்திகள் சொல்லக் கேட்கும் பொது எல்லாம்
நெஞ்சு கட்டுக் குலைந்து நெகிழ்ந்து நின்று கண்ணீர் அருவியாக பெருக
தரித்து இருக்க மாட்டாத அடியேன் என்ன பண்ணுவேன்-

———————————————————————————————————————————————————————————————————

அடியை மூன்றை யிரந்தவாறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியுமாறவை கேட்கும் தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல் வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே –5-10-9-

நொடிதல் -சொல்லுதல்

——————————————————————————————————————————————————————————————-

கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி யுண்டிடு கின்ற நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே–5-10-10-

மோகினி -ஸ்திரீ வேஷ பரிக்ரஹம் பண்ணிப் போன விஸ்மயநீய ஆகாரமும்
திரு வநந்த ஆழ்வான் உன்னோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணுமா போலே
நான் தரித்து நின்று உன்னைப் பூரணமாக அனுபவிக்கும் விரகு சொல்லி அருள வேணும் –

—————————————————————————————————————————————————————————————–

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று
நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற வந்தாதி ஆயிரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே –5-10-11-

பரமபதத்தில் ப்ரஹ்மானந்த பிராப்தி பலன்
சரணம் புகுந்தவர்களை எம்பெருமானே உபேஷித்தாலும் உபேஷிக்க ஒட்டாதே
விஷயீ கரிக்க பண்ணும் இயல்வினன் திரு வநந்த ஆழ்வான்
அந்த சேஷ சாயீயே நமக்குத் தஞ்சம் ஸ்திரமான அத்யாவசாயம் கொண்ட ஆழ்வார் அருளிச் செய்த
இப்பத்தையும் வல்லார் நெஞ்சம் சிதிலம் அடையாமல்
தரித்து நின்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்
மஹாகம்-பரம ஆகாசம் -மாக -விகாரம் –கம் -ஆகாசம் –

—————————————————————————————————————————————————————————————-

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-10-1-ப்ரா துர்ப்பாவாதி வ்ருத்தை–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்
5-10-2-வருஷ கண தம நாத் -வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
5-10-3-பூதநா சாத நாத்யை -பெய்யும் பூங்குழல் இத்யாதி
5-10-4-மோஹார்த்தம் பௌத்த க்ருதியை -கள்ள வேடத்தைக் கொண்டு போய் -இத்யாதி
5-10-5-கிரிவர பஜன ச்வீக்ருதே -உண்ண வானவர் -இத்யாதி
5-10-6-ஸ்தான பேதை -நின்றவாறும் இருந்தவாறும்
5-10-7-தேஜோ த்வாந்தாதி பாவாத் -ஒண் சுடரோடு இருளுமாய் -இத்யாதி
5-10-8-ஜல நிதி சய நாத் -திருவுருவு கிடந்தவாறும்
5-10-9-த்ரிபத்யா பிஷணாத்யை-அடியை மூன்றை யிரந்தவாரும்
5-10-10-பீயூஷ ஸ்பர்ச நாத்யை -கூடி நீரை -இத்யாதி
சிதிலயதி ஹரி ஸ்ளீய ஹ்ருச் சேத்யதோசே

——————————————————————————————————————————————————————————

இத்தம்
5-1-காருண்ய நிக்னம் -கையார் சக்கரத்தில் காருணிகத்வம்
5-2-துரித ஹர ஜனம் -பொலிக பொலிக பொலிக -ஸ்வ கீய ஜனங்களால் துரிதங்கள் போக்குமவன்
5-3-தீவரம் பிரேம துஹானம் -மாசறு சோதியில் மடல் எடுக்க துணிந்த ப்ரேமம் விளைவித்தவன்
5-4-லோகா நாம் ரஷிதாரம் -ஊரெல்லாம் துஞ்சி -ஜகத் ரஷண ஜரகரூகன்
5-5-ஸ்ம்ருதி விஷயம் எங்கனேயோ -விஸ்லேஷ சமயத்திலும் மறக்க ஒண்ணாமை
5-6-அஹம் பாவநா கோசரம் -கடல் ஞாலம் -அஹம் புத்தியால் அனுபாவ்யன்
5-7- தீ நாநாம் சசரண்யம் -நோற்ற நோன்பில் அசரண்ய சரண்யன்
5-8-ஸ்வ ரச க்ருத நிஜப்ரேஷ்ய தாவாஞ்சம் -ஆராவமுதில் – ஸ்வ ரசமாக தாஸ்ய ரசம் பெருக்குமவன்
5-9-ப்ராப்தம் -மானேய் நோக்கில் பிராப்தன் என்கிறது
5-10-சக்தி ப்ரதம் -பிறந்தவாறு -மன சைதில்யம் போக்கி சக்தி கொடுப்பவன்
ஸ்ரீ பதி விஹ சதகே ச்ரேயஸா மேக ஹேதும்

————————————————————————————————————————————————————————–

அர்ச்சாஞ்ச மௌந நிய தர்ம பஹாய சேளரே
ஆலாபயோக்ய விபவே புன ராகதோ சௌ
சித்தச்ய தத் குணகண ஸ்மரேண நிஜச்ய
சைதில்ய விக் நசமன தமயா சதா ந்த்யே

—————————————————————————————————————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி –

பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேரருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் யுருகும் சீலம் திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய்யென்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு–50

———————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: