திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-ஆராவமுதே–5-8–

கீழ் திருவாய் மொழியில் மிக பெரிய ஆர்த்தி உடன் வானமா மலை எம்பெருமான் திருவடிகளில் வேர் அற்ற மரம் போல்
சரணம் புகுந்தார்
திரு முகம் காட்டிற்றிலன்
இன்னார்க்கு இன்ன இடத்தில் முகம் காட்ட திரு உள்ள கொண்டு இருப்பானே
திருக் குடந்தையில் முகம் காட்டுவதாக அவன் நினைப்பு இருக்கக் கூடுமே
ஆழ்வாரும் அப்படியே கருதினார்
கனக்க பாரித்து திருக் குடந்தையிலே சென்று புகுந்தார்
சித்ரகூட மலைச் சாரலில் ஸ்ரீ பரத ஆழ்வான் நினைத்தபடி பரிமாற்றம் பெறாதாப் போலே

ஆழ்வாரும் புக்க இடத்தில் திருக் கண்களை அலர விழித்து குளிர நோக்கி அருளுதல்
திருப் பவளத்தை திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்தல்
அணைத்தல்
ஒன்றும் செய்யக் கண்டிலர்
அக்ரூரர் மாம் அக்ரூரேதி வஷ்யதி -என்று பாரித்து மனோரதித்த படியே பெற்றார் இ றே
அப்படி பெறாமையாலே வருந்தி தளர்ந்து
ஸ்த நந்த்ய பிரஜை தாய் பக்கலில் கிட்டி முகம் பெறாமல் அலமந்து நோவு படுமா போலே
அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்தது கூப்பிட்டு
இன்னும் எத்தனை திரு வாசல் தட்டித் திரியக் கடவேன் -என்னும் ஆர்த்தி உடன் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————————————————————————————————————————–

ஆராவமுதே யடியேன் உடலம் நின்பால் அன்பாய
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –5-8-1-

இத் திருவாய் மொழியில் நம் பூர்வர்கள் போரவும் ஈடுபட்டு இருப்பார்கள் –
உத்தர பூமியிலே லோக சாரங்க மகா முனிகள் வர்த்தியா நிற்க
இங்குத்தையான் ஒருவன் அங்கு ஏறச் செல்ல
பிள்ளாய் –தஷிண பூமியில் விசேஷம் என் -என்று கேட்க –
திருவாய் மொழி என்கிற பிரபந்தம் அவதரித்து
சிஷ்டர்கள் பரிக்ரஹித்து
போரக் கொண்டாடி கொடு போரா நின்றார்கள் -என்ன
அதிலே உனக்கு போவதொரு சந்தை சொல்லிக் காண் என்ன
ஆராவமுதே -என்கிற இத்தனையும் எனக்குப் போம் என்ன
நாராயணாதி நாமங்கள் கிடக்க இங்கனே ஒரு நிர்த்தேசம் உண்டாவதே –
இச்சொல் நடையாடுகிற தேசத்தே ஏறப் போவோம் என்று அப்போதே புறப்பட்டுப் போந்தார் –ஈடு –

யடியேன் உடலம் நின்பால் அன்பாய-அடியேன் என்றது தம்முடைய ஸ்வ ரூபம் உள்ளபடியை நினைத்து சொல்லுகிறது அன்று
ஆராவமுதே -என்று பேசி அனுபவித்த போக்யதைக்கு தோற்று –
உடலம் அன்பாய்
அசேதன சரீரம் பகவத் விஷய அன்பே கொண்டு வடிவு எடுத்தால் போலே
உடலகம் ஆத்மதர்மம் கொள்ள -என்கிறார் நாயனார் இப்பாசுரம் கொண்டே
நீராய் அலைந்து
உடலம் அன்பாகி -அன்பு நீராகி அலையா நின்றது
இப்படி செய்து அருளின எம்பெருமான் நிலைமை என்என்னில் -நெடுமாலே
ஆழ்வார் உடைய வ்யாமோஹம் அல்பம் என்னும்படி அவனுடைய வ்யாமோஹம் -பெரிய பித்துக் கொள்ளி -ஆனானே –

சீரார் செந்நெல்
நெல்லுக்கு சீர்மை -ஆராவமுத ஆழ்வாருக்கு அமுதுபடி யாகிற சீர்மை -நம்பிள்ளை

ஏரார் கோலம் திகழ –
நாட்டார் உலாவித் திரியும் போது அவயவங்களில் உண்டான பொல்லாங்குகள் மறைந்து ஓன்று போலே இருக்கும்
ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே வைரூப்யம் தோற்றி
கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி இருப்பார்கள்
இங்கு அங்கன் இன்றிக்கே கிடந்த கிடைக்கு ஆலத்தி வலிக்க வேண்டும் படி இருக்கை-
இவன் உணரில் செய்வது என் என்று வயிறு பிடிக்க வேண்டும் படி இருக்காய் -ஈடு –

——————————————————————————————————————————————————————————————————————

எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை யாள்வானே
எம்மா வுருவம் வேண்டுமாற்றால் ஆவா யெழில் ஏறே
செம்மா கமலம் செழு நீர் மிசை கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே –5-8-2-

கண்டேன் எம்மானே -என்றார்
உலகோர் காணுவது போல காண வில்லை
எனக்காக எழுந்து இருத்தல்
உலாவுதல்
குசலப்ரசனம் பண்ணி அருளுதல்
அணைத்தல் –
செய்து அருள வேண்டாவோ என்று கேட்பதாம்
அசையாது கிடந்தது இருக்க மீண்டும் கூப்பிடுகிறார் –
உபகாரமே வடிவாய் இருந்து அருளுகிற நீ
திருக் கண்களை திறந்து கடாஷித்து அருளுதல் போருமே
போலியான கமலங்கள் மலர்ந்து இருக்க -செம்மா கமலம் செழு நீர் மிசை கண் மலரும் திருக் குடந்தை –
வன் காற்றறைய ஒருங்கே மருந்து கிடந்தது அலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்த எம்பிரான் தடம் கண்கள்
இப்படி மலர வேண்டாவோ என்று துடிக்கிறேனே –
இந்த துடிப்பைத் தவிர்க்க வேண்டாவோ
என் வெள்ளை மூர்த்தி ஸ்வரூப ஸ்வ பாவங்களை காட்டி அருளினாய்
என்னை ஆள்வானே -அஞ்சிறைய மட நாராய் தொடங்கி ஆற்றாமைகளை போக்கி அருளினவனே
எம்மா வுருவம் வேண்டுமாற்றால் ஆவாய்-திரு உள்ளம் ஆனபடியே எப்படிப் பட்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே
இச்சா க்ருஹீத அபிமத ஒரு தேஹ
எழில் ஏறே -நம்மைப் போல் கர்மம் அடியாக இல்லையே
கருணை அடியாகஎன்பதால் ஒளி மல்கி பெருகும்படி
என்னான் செய்கேன்
திருக் கண்கள் மலர்ந்தால் அன்றி தரிக்க கில்லாத அடியேன்
இப்படியே பட்டினி கிடந்தது போக வேண்டியது தானோ –

———————————————————————————————————————————————————————————————————————-

என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடைந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ் நாள்
சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே–5-8-3-

என் தலையில் ஏதேனும் கார்யம் எறிடுவதாக எண்ணி இருக்கிறாயோ
பிறரை ரஷகராக தேடி ஓடும்படி செய்ய நினைத்து இருக்கிறாயோ
நீயே செய்வதாக நினைத்து இருக்கிறாயோ -நீ உன்னைத் தரப் பார்த்தாயா
அன்றி உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா
என் நான் செய்கேன் -எந்நாள் ஒன்றும் செய்ய முடியாதே கையை விரிக்கிறார்

என்னான் செய்கேன் என்ற இடத்தில் இம் மூன்றும் உண்டு -ஸ்ரீ வசன பூஷணம்
எம்பெருமான் தம்முடைய ஆர்த்தியைக் கண்டு இரங்கக் காணாமையாலே
தன்னைப் பெறும் இடத்தில் சில சாதனானுஷ்டானம் பண்ண வேணும் என்று
இருந்தானாகக் கொண்டு உபாயாந்தர அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாத படி
அஜ்ஞ்ஞனான நான் என் செய்கேன் –
ஜ்ஞானம் தந்தோமே என்னில்
நீ தந்த ஜ்ஞானத்தாலே ஸ்வரூப பார தந்த்ர்யத்தை உணர்ந்து
சாதனானுஷ்டானம் அபிராப்தம் என்று இருக்கிற நான் என் செய்கேன்
ஸ்வரூபத்துக்கு சேராதது ஆகிலும் உன்னைப் பெறலாம் ஆகில் அது தன்னை அனுஷ்டிக்கலாம் இ றே
ஜ்ஞானம் மாத்ரத்தையும் தந்தாய் ஆகில்
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தைத்தி தருகையாலே ஒன்றையும் அடைவு பட அனுஷ்டிக்க
ஷமன் இல்லாதபடி
பக்தி பரவசனான நான் என் செய்கேன் –
என்று இம் மூன்றும் ஆழ்வாருக்கு விவஷிதம் -மணவாள மா முனிகள்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
உபாயமும் உபேயமும் ஒன்றாய் இருக்கை
யாவையாலும் என்னாதே யாவராலும் என்கிறது
உபாய பாவம் ஒரு சேதனனாலே என்று இருக்கையாலே
எந்த க்ரியா கலாபமும் உபாயமாக வேண்டிற்று இல்லை

கன்னார் மதிள் -பரிவுடையார் அஞ்ச வேண்டாதபடி
அடியேன் அரு -உருவம் இல்லாததால் -அடியேனாகிய ஆத்மா வஸ்து என்றபடி
சென்னாள் எந்நாள் அந்நாள் -யாவதாத்மபாவி – -நித்யமாக ஆத்மாவுக்கு அழிவு இல்லாமையால் –

———————————————————————————————————————————————————————————————————————

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பிலானே எல்லா வுலகுமுடைய வொரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தை கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே –5-8-4-

தமக்கு உதவாமையாலே நீ படைத்த புகழ் எல்லாம் பாழாக போகிறதே -வயிறு பிடிக்கிறார்
கரை கட்டா காவேரி போலே பெருகிச் செல்லும் கீர்த்தி உண்டே
உலப்பு -முடிவு
கீர்த்தி -விக்ரஹம் –திவ்ய மங்கள -வடிவு அழகை எல்லா பிராணிகளையும் ஈடுபடுத்திக் கொள்ள வல்லவனே
கீர்த்தி – -ஐஸ்வர்யம் -என்றுமாம் -சகல லோகங்களையும் நிர்வஹிப்பவனே
நலத்தால் மிக்கார் -இத்யாதி
ஸ்ரீ வைகுண்டத்தில் காண ஆசைப்படுகிறேனா
திருப் பாற்கடலில் காண ஆசைப்படுகிறேனா
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் காண ஆசைப்படுகிறேனா
அன்பர்களை விட மாட்டாத திருக் குடந்தையில் அன்றோ ஆசைப் படுகிறேன்
கிடையாமை அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுது தொழுது
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினது போலே வருவாய் நப்பாசை
சிறுவர்கள் போலே அழுது
பெரியவர்கள் போலே தொழுது
காண்கை இவருக்கு நம்மைப் போலே அல்லவே
குளிர நோக்குதல்
வினவுதல்
தழுவுதல்
எல்லாம் செய்யப் பெறுகையே காண்கை இவருக்கு –

———————————————————————————————————————————————————————————————-

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி யலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்து இருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை யுனதாள் சேரும் வகையே சூழ் கண்டாய் –5-8-5-

சிறுவர் அழுகையால் சாதிப்பார்
அறிவுடையார் தொழுகையால் சாதிப்பார்
இருவர் படியும் ஏறிட்டுக் கொண்டேன்
இத்தனை சோறிடுகிறோம் ஆடு என்பரே -ஆடியும் பார்த்தேன்
சித்த பிரமம் கொண்டவன் ஆடியும் பாடியும் அலற்றுவதும் செய்வதுபோலே அவற்றையும் செய்யா நின்றேன்
தழு வல்வினை -தழுவி விடாதே நிற்கும் காதல் -வல்வினை இங்கே காதலை சொல்கிறது
நீ வருவாய் என்று பக்கங்களை பார்த்து வராமையால் லஜ்ஜித்து தலை கவிழ்ந்து நிற்பன்
எனக்கு ஜீவனமான திருக் கண்கள் கொண்டவனே
புறம்பு புகல் அற்று உன்ன்பால் அல்லால் செல்லாதபடி அருளிய நீ
உனது திருவடிகளைக் கிட்ட விரகு ஆலோசித்து அருள வேணும் –

———————————————————————————————————————————————————————————–

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை யறுத்து உன்னடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழினிசையே யமுதே அறிவின் பயனே அரியேறே–5-8-6-

கரும பந்தங்கள் கழியப் பெற்றவர்கள் வாழும் திருக்குடந்தை –
இங்கு இருந்தும் அந்த கீர்த்தியை எனக்கு விளைக்காது ஒழியத் தகுமோ
வானோர் கோமானே -நித்ய முக்தர் போலே அடிமை அடியேனையும் கொள்ள வேண்டாமோ
யாழின் இசையே அமுதே -உன்னுடைய போக்யதையை அறியப் பெறாது இருந்தால் துடிப்பேனோ
நீயே என்னுடைய அமுதம்
அறிவின் பயனே -ந போதாத் அபாரம ஸூ கம் -ஸூ கமே வடிவுடையவனே
அரி ஏறே -சிங்கம் ரிஷபம் -சிறப்புக்கு வாசகங்கள் இரண்டும் –
புருஷ சிம்ஹம் புருஷ ரிஷபம் –

———————————————————————————————————————————————————————————-

அரியேறே என்னம் பொற்சுடரே செங்கண் கரு முகிலே
எரியே பவளக் குன்றே நால் தோள் எந்தாய் யுனதருளே
பிரியா வடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி யுன் சரணம் தந்து என் சன்மம் களையாயே –5-8-7-

எரியே பவளக் குன்றே-எரி ஏய் பவளக் குன்றே -நஷத்ர மண்டலத்து அளவும் ஓங்கின பவள மலை போன்றவனே
உகவாதாருக்கு அனுபவிக்க ஒண்ணாமை
உகந்தார்க்கு பரம போக்கின் என்றவாறு
செங்கண் கரு முகிலே-வாத்சல்யம் ஆகிற அமிர்தம் வர்ஷிக்கும் திருக் கண்கள்
நால் தோள் எந்தாய்-கற்பக தரு பணைத்தால் போல்
அருமறை துணிந்த பொருள் முடிவையின் சொல் அமுது ஒழுகுகின்ற தமிழினில் விளம்பி அருளிய
சடகோபர் சொல் பெற்று உயர்ந்தன அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே -திருவரங்க கலம்பகம்
திரு வாக்கில் வந்து விலஷணமான பெருமை பெறும்
தரியேன் இனிதிருமாலே –
இந்த சேர்த்தி அழகைக் கண்ட பின் ஆறி இருக்க விரகு உண்டோ
மாதா பிதாக்கள் அருகே இருக்க
அவர்கள் ஸ்ரீ மான்களும்
உதாரருமாய் இருக்க
பிரஜை பசித்து தனித்து இருக்க முடியுமோ
யுன் சரணம் தந்து என் சன்மம் களையாயே -பிரஜைகளின்
வாயிலே முலையைக் கொடுத்து சிகித்சை பண்ணுமா போலே
முன்னம் திருவடிகளைத் தந்து
பின்பு ஜன்ம சம்பந்தம் அறுக்க வேணும் -என்கிறார் போலும்

———————————————————————————————————————————————————————————————

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிபடையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா வுடலம் எனதாவி சரிந்து போம் போது
இளையாதுன தாள் ஒருங்கப் பிடித்துப் போத விசை நீயே –5-8-8-

ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -இரண்டும் குலையாமல் இருக்க வேண்டுமே
திண்ணிய அத்யாவசியம் -ரஷித்த போதொடும் ரஷியாத போதொடும் வாசி அற
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்றி பிரதிஞ்ஞை செய்தபடி செய்தாலும் இல்லாவிடிலும்
வளைவாய் நேமிபடையாய்-
நம் மேல் வினை கடிவான் -கை கழலா நேமியான் -என்றன்றோ நம் போல்வார் உடைய உறுதி
உன் கையில் திவ்யாயுதம் இருந்தும் களையாது இருத்தல் தகுமோ
குடந்தைக் கிடந்த மா மாயா
ஆச்சர்யமான அழகோடு கிடக்கை எதற்காக
தளரா வுடலம் -தளர்ந்து என்றபடி
கட்டுக் குலைந்து பிராணன் முடிந்து போம் அளவு ஆயிற்று
உனது திருவடிகளை நெகிழாமல் பண்ணி அருள வேணும்
ஒருங்க -நிரந்தரமாக -என்றபடி

—————————————————————————————————————————————————————————————————-

இசைவித்து யென்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –5-8-9-

கண்ணாலே காணலாம் படி வர வேணும் என்கிறார் –
மதியால் இசைந்தோம் என்னும்
அனுமதி இச்சைகள் இருத்துவம் என்னாத யென்னை
இசைவித்து என் இசைவினது –நாயனார் –
வைத்தேன் மதியாதே எனது உள்ளகத்தே -அனுமதி இருப்பதாக சொல்லி இருக்கும்இந்த -அனுமதியும் –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்கிற இசைவும்
பகவத் விஷயீ காரத்தைக் குறித்து ஹேதுவானாலோ என்னில் -ஆகாது
அவையும் எம்பெருமான் உடைய கிருஷி பலம்
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -என்றும்
இசைவித்து யென்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -என்றும்
என்னிசைவினை -என்றும் அருளும் அருளிச் செயல்களாலே விளங்கும்
இசைவித்து -வருத்தி இசைவித்தமை ஸ்பஷ்டம்
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை-திரு மழிசை ஆழ்வார் போல்வாரைச் சொளிகிறது -என்று சம்ப்ரதாயம்
திசைகள் தோறும் பரந்த புகழை யுடைய மகா ஜஞாதாக்கள் சேரும் இடம்
ஆராவமுதாழ்வார்-திருமழிசைப் பிரான் போல்வார்
புருஷ ரத்னங்கள் சேரும் திருக் குடந்தை என்று
நிர்வஹிப்பர்கள் -ஈடு-

———————————————————————————————————————————————————————————————————

வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆராவமுதாய் யடியேனாவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர வென்னை யாண்டாய் திருக் குடந்தை
யூரா உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-

வாரா அருவாய் வரும் –
கண்ணுக்கு விஷயமாகாதே அரூபி த்ரவ்யமாய் வருகிறவனே-
மறந்து பிழைக்கவும் ஒண்ணாத படி அந்தரங்கத்தில் அரூபியாக கொண்டு பிரகாசிக்கும் ஆச்சர்ய பூதனே
மாயா மூர்த்தியாய் -கருமம் அடியாக இல்லாமல் அனுக்ரஹ அடியாக விளையும் விகாரம் சாஸ்திர வரம்புக்கு கட்டுப் பட்டது அன்றே
ஆராவமுதாய் யடியேனாவி அகமே தித்திப்பாய் -எல்லார் வாயாலும் வருகிறாப் போலேயோ
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள்ளூறிய தேனை -என்று
அந்தரங்கம் அகப்பட தித்திக்குமே
இன்னும் எத்தனை திருப்பதிகள் தட்டித் திரிய கடவேனாக திரு உள்ளம்-

———————————————————————————————————————————————————————————————————

உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிருண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் றாயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே –5-8-11-

உழலை யென்பின்-உழல் தடி போன்ற எலும்புகளை உடைய
மழலை தீர -தமது அறியாமை தொலையும்படி
காமிநிகளுக்கு காமுகர் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் ஆவார்
தூரா குழி தூரத்து எனை நாள் அகன்று இருப்பன் -என்றவர் இத்தை உவமையாக காட்டி அருளினது இத்தனை
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே -முற்று உவமை
அன்றிக்கே
திரு நாட்டில் அப்சரஸ் ஸூ க்களால் விரும்பி ஆதரிக்கப் படுவர் -என்றுமாம் —

—————————————————————————————————————————————————————————————————–

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-8-1-நிஸ் சௌஹித்ய அம்ருதத்வாத் -ஆராவமுதே
5-8-2-ஸ்வ வாச ஜனி தயா -எம்மா வுருவும் வேண்டுமாற்றாலாவாய் –
5-8-3- அநந்ய பாவ பிரதாநாத் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
5-8-4-மர்யாதா தீத கீர்த்யா -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
5-8-5-நளின நயன தா -செந்தாமரைக் கண்ணா
5-8-6-ஸூ ராணாம் நாயகத்வாத் -வானோர் கோமானே
5-8-7-சர்வஸ்ரைஷ்ட்யாதி யோகாத் -அரி ஏறே -ஆதி சப்தம் -அம்பொற்சுடர்
5-8-8–அநிதர கதிதா த்யாவஹா சன்ன பாவாத் -களைவாய் துன்பம் -அநந்ய கதித்வம்
5-8-9-ஆதி -சப்தத்தால் – இசைவித்து தாளிணைக் கீழ் இருத்துகை
5-8-10-ஆசந்த பாவாத் -திருக்குடந்தையூராய்

——————————————————————————————————————————————————————————————————-

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்
தாராமையாலே தளர்ந்து மிகத் -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் -48

ஆராவமது -ஆழ்வார் ஆதரித்த பேறுகளை தாராமையாலே -என்று தப்பாக சிலர் பிரிப்பர்
ஆராவமுதாழ்வார் -என்றே சம்ப்ரதாய திரு நாமம் –

————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: