திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-நோற்ற நோன்பிலேன்–5-7-

திருமால் போலே அனுகரித்து கொஞ்சம் தரித்தார்
சிறிது ஆர்த்தி உண்டானாலும் கடுக்க வந்து முகம் காட்டி அருளும் ஸ்வ பாவன் தனக்கு
இன்னும் முகம் காட்டாமல் உபேஷையாய் இருக்க ஹேது
கர்ம ஞான பக்தி யோகம் உண்டா என்று பார்த்தோ
அன்றிக்கே
உபாயாந்தரங்களில் அந்வயித்து இருக்கிறார் என்றோ
திரு உள்ளம் என்னது என்று அறியாமல் தடுமாறி
தன்னுடைய அநந்ய உபாயத்வம் முதலானவற்றை விண்ணப்பம் செய்து
வானமா மலைப் பெருமாள் திருவடிகளில் வேர் அற்ற மரம் போலே விழுந்து சரணம் புகுகிறார்
ஸ்ரீவர மங்கை -ஸ்ரீவர மங்கலம் –
வான மா மலையே அடியேன் தொழ வந்து அருளே -எம்பெருமானுக்கே அந்த திரு நாமம்
அத்தை இட்டு திவ்ய தேசத்துக்கும் அதே பெயர்
பாதமே சரணமாக்கும்
ஔதார்யம்
வானமாமலையிலே கொழுந்து விடும் -நாயனார்

—————————————————————————————————————————————————————————————————————

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்ஆகிலும் இனி யுன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை யம்மானே
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்று இருந்த வெந்தாய் உனக்கு மிகையல்லேன் அங்கே–5-7-1-

நோன்பிலேன் -கர்ம யோகம் இல்லை
நோற்ற நோன்பிலேன் -ஒருபடியாலும் கர்ம யோகம் இல்லை -என் கைப்பாடாகச் செய்த தொரு கர்மமும் இல்லை
யாத்ருச்சிகம் ப்ராசங்கிகம் ஆநுஷங்கிகம் -போன்ற சில ஸூக்ருதங்கள் இல்லை என்னப் போமோ
நுண் அறிவிலேன் -ஸ்வ ஸ்வரூபத்தை அறிந்து அதிலும் நுட்பமான பர ஸ்வரூபம் அறிவது நுண் அறிவு -அது இல்லாமையை சொன்னபடி
இவை இரண்டும் சொன்னது பக்தி யோகமும் இல்லாமைக்கு உப லஷணம்
ந தர்ம நிஷ்டோச்மி ந சாத்மவேதீ ந பக்திமான் தவச் சரணாரவிந்தே -ஆளவந்தார் –

இனி
உன்னையும் அறியாதே
என்னையும் அறியாதே
இருந்த அன்று இழந்தது அமையாதோ
உன் நிறைவும் என் குறைவும் அறிந்த இன்றும்
இழக்க வேணுமோ
என் கையிலும் ஓன்று உண்டாய் அது சமையும் தனையும்
ஆறி இருக்கிறேனோ —
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போராதோ
நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேணுமோ –ஈடு

யுன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்-உன்னை
நிர்பந்திப்பதே எனக்கு பணியாகி விட்டது
உன்னை மறந்து பிழைக்க மாட்டிற்று இலேன் –
அரவின் அணை அம்மானே -சென்றால் குடையாம் -அவன் எங்களில் ஒருவனே அன்றோ
அவனைப் போலே என்னையும் அடிமை கொண்டு அருள வேணும்
அரவின் அணை யம்மானே ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்-நான் படுக்கையில் கண் உறங்கப் பெறாதே
உள்ளம் சோர யுகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சரத் துயில் அணை கொள்ளேன் -கிடவா நிற்க
நீ மெல்லிய பஞ்சனை பார்த்து கண் உறங்குவதை காண ஆற்றகில்லேன்
சேற்றுத் தாமரை -இத்யாதி
பரமபதத்தையும் மறக்கும்படி அன்றி இத்தளத்தின் வாய்ப்பு
உனக்கு மிகை அல்லேன் -ரஷ்ய வர்க்க சேதனர்களில் நான் புறம்பு பட்டவன் அல்லேனே

——————————————————————————————————————————————————————————————————————————

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும்அல்லேன் இலங்கை செற்ற வம்மானே
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீ வர மங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே –5-7-2-

நித்ய முக்தர்கள் போலே பலன் கை புகுந்தவன் அல்ல
சாதனானுஷ்டானம் செய்யும் இங்குள்ளோர் போலேவும் அல்ல
மேலும் சாதனானுஷ்டானம் பண்ணும் யோக்யதை உண்டோ என்னில்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும்அல்லேன்-
வடிவு அழகில் ஈடு பட்டு தளர்ந்து கிடக்கிறேன்
இருந்த இடத்தில் கிட்டி அனுபவிக்கிறேன் அல்லேன்
உன்னை மதியாத சம்சாரிகள் திரளில் சேர்ந்தவன் அல்லேன்
உன்னை ஒழியவும் தரித்து இருக்கும் திரளில் சேர்ந்தவன் அல்லேன்
இலங்கையை கிழங்கு எடுத்து அருளிய உன்னால்
என்னை சம்சாரத்தில் இருந்து கிழங்கு எடுத்தல் அரிதோ
துணை அற்ற எனக்கு உறுதுணையாய் இருந்து அருள் செய்து அருள வேணும்

————————————————————————————————————————————————————————————————————————–

கருளப் புட்கொடி சக்கரப்படை வானநாட வெங்கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டே
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீ வர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

அபாதார்த்தமாய் கிடந்த என்னை
ஸ்வ ரூபம் பெற்றவனாம் படி அங்கீகரித்து
திருவாய்மொழி பாடுகை யாகிற இக் கைங்கர்யத்தை
என் பக்கலிலே திரு உள்ளம் பற்றினாய்
இந்த மகா உபகாரகத்துக்கு கைம்மாறு அறியேன் –
கருடபுள்ளைக்-கொடியாகக் கொண்டும் -அடியவர்கள் இடம் சென்று அருளுவாய் -கருட -கருள என்றாயிற்று
கருதுமிடம் பொருது கை வந்த சக்கரத்தன்-போக விட்டு அடியார் வினை கெடுப்பாய்
திரு நாட்டில் சீரிய சிங்காசனத்தில் எழுந்து அருளி நித்ய முக்தர்களை அனுபவிப்பிப்பாய்
எம்போல்வாரை வாழ்விக்க காளமேக திருவுருவைக் காட்டி அருள்வாய்
முதலிலே பிடித்து கைம்முதல் இல்லாமல் கார்யம் செய்து அருளும் உனக்கு இப்போது எதிர்பார்ப்பது தகுதியோ

—————————————————————————————————————————————————————————————————————-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர் க்காய்அன்று மாயப்போர் பண்ணி
நீறு செய்த வெந்தாய் நிலம் கீண்ட வம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீ வர மங்கல நகர்
ஏறி வீற்று இருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே –5-7-4-

உன்னை நான் நிர்பந்திப்பது என்று ஒரு பொருள் உண்டோ –
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய-
மாறு சேர் நூற்றுவர் –
த்விஷதன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜ்யத்
பாண்டவான் த்விஷசே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ –

மாயப்போர் –
ஆச்சர்யமான யுத்தம் -என்னுதல்
வஞ்சகமான யுத்தம் -என்னுதல்
அதாவது -பகலை இரவாக்கியும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
சத்ருக்களுக்கு உயிர் நிலையைக் காட்டிக் கொடுத்தும்
செய்தவை -ஈடு –

நிலம் அபேஷிக்காமல் இருக்க நம் சரக்கை நாம் தான் கொள்ள வேணும் என்று கீடி அருளினாயே
என்னையும் அப்படியே நீக்க வேண்டாவோ –
நீயே விஷயீ கரிக்கும் அத்தனை அல்லது நான் உன்னைப் பெறுகுகைக்கு ஈடான முயற்சி என்னும் பொருள் உண்டோ
நீ கூவுதல்
வருதல்
செய்வது அன்றோ தகுந்தது

——————————————————————————————————————————————————————————————————–

எய்தக் கூவுதலாவதே எனக்கு எவ்வ தெவ்வவத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
கை தொழ விருந்தாய் அது நானும் கண்டேனே –5-7-5–

சேதன லாபம் எம்பெருமானுக்கா
எம்பெருமான் உடைய லாபம் சேதனனுக்கா
சொத்து -ஸ்வாமி-சம்பந்தம் உண்டே –
எவ்வ தெவ்வவத் துளாயுமாய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
தெவ்வம் -சத்ரு சமூஹம்
தெவ்வர் அஞ்ச நெடும் புரிசை யுயர்ந்த பாங்கர் -ஸ்ரீ குலசேகர பெருமாள்
எவ்வ -எப்படிப்பட்ட –

புத்த முனியாய்
அவர்கள் நடுவே புக்கு நின்று
அவர்களுக்கு உண்டான விதிக்க ஸ்ரத்தையை போக்கின்படி -கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே -வசனங்களாலும்
யுக்திகளாலும் க்ருத்ரிமத்தைப் பண்ணி
விதிக்க ஸ்ரத்தையைப் போக்கி
அவ்வளவிலும் கேளாதார்க்கு
வடிவைக் காட்டி வாய் மாளப் பண்ணின படி
தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களை
சவ ப்ராயராக்கி
ஒரு வனம் புக்கிலக்காம் படி பண்ணி வைத்தான் -ஈடு

செய்த வேள்வியர் –
எம்பெருமான் உடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறிந்தவர்கள்
விது க்ருஷ்ணம் பிராமணாஸ் தத் வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சமாப்த

அது நானும் கண்டேனே –
தேவர் செய்து அருளின அம்சம் இவ்வளவு உண்டு
அதில் குறை இல்லை
எனக்கு அவ்வளவால் போராது
திருவடிகளில் கைங்கர்யமே யாத்ரையாகப் பெற வேணும்
என்று வாக்ய சேஷமாகக் கிடக்கிறது -ஈடு

————————————————————————————————————————————————————————————————————-

ஏனமாய் நிலம் கீண்ட வென்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீ வர மங்கல த்தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்து அருளே –5-7-6-

சம்சார வெள்ளத்துக்கு உள்ளே
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க -என்னையும் எடுத்து அருள வேணும் -ஏனமாய் நிலம் கீண்ட வென்னப்பனே-என்கிறார்
கண்ணா –
வம்ச பூமிகளை உத்தரிக்கக் கீழ்க்குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே
என்னையும் உயரத் தூக்கி அருள வேண்டாவோ
நீ பரமபதத்தில் இருந்தும் -என்றும் என்னை யாளுடை
வான நாயகனே-
என்னை ஆட்கொள்ளும் படியை அன்றோ ஆராய்ந்து பொருவது
வானமா மலையே -லஷணையால் மலை போன்ற எம்பெருமானையே குறிக்கும்-

——————————————————————————————————————————————————————————————————

வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே
உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே முழு வேழ் உலகுண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீ வர மங்கல நகர்
அந்தமில் புகழாய் அடியேனை அகற்றேலே -5-7-7-

அடியேன் தொழ வந்தருளே -என்றார்
அர்ச்சா சமாதியைக் குலைத்து திருப் புழி ஆழ்வார் அடியில் வர பிரார்த்தித்தார்
அங்கனம் வரக் காணாமையாலே -பிரானே என்னை உபெஷியாது ஒழிய வேணும் -என்கிறார் இதில்
வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட-வடதடமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே –
பட்டர் ஸ்ரீ புஷ்ப யாகம் அணித்தவாறே
நஞ்சீயரை பல காலும் இயல் கேட்டு அருளுவர்
ஒரு கோடையிலே திரு வீதியிலே நீரை விட்டு எழுந்து அருளி இருந்து
இப்பாட்டை இயல் சொல்லும் என்று ஜீயரை அருளிச் செய்து
தாம் இத்தை அனுசந்தித்து இருந்து
அனந்தரத்தே தாமும் இப்பாட்டை இயல் சொல்லி
யம நியமாதி க்ரமத்தாலே காரண வஸ்துவை மனனம் பண்ணி
புறம்புள்ள பராக்கை அறுத்து அனுசந்திக்கப் புக்காலும்
சுக்கான் பரல் போலே இருக்கக் கடவ நெஞ்சுகள் பதம் செய்யும்படி
தார்மிகராய் இருப்பார் இவை சில ஈரச் சொல்களை பொகட்டுப் போவதே என்று அருளிச் செய்தார்
நஞ்சீயர் இவ்வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர் என்று அருளிச் செய்வர் -ஈடு

வானவர் கொழுந்தே -என்று விளித்து
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட -என்கையாலே
படாத பாடு படுவதே என் நெஞ்சில் இடம் கொள்ள
விஷயங்களை உகந்து போந்த என் நெஞ்சு ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இடமாகப் போவதே என்று தலை சீய்க்கிறார்
பெருமாள் ஸ்ரீ சரபங்க மக ரிஷ்யின் ஆஸ்ரமத்தில்
ஆவாசம் த்வஹம் இச்சாமி பிரதிஷ்டம் இஹ காநனே-என்றால் போலே
ஒரு நாளும் அழியாத மாதா பிதா தனது பேறாகவே ரஷித்து அருளுவான்
செந்தொலழிலவர்-அநந்ய பிரயோஜனர்

———————————————————————————————————————————————————————————————————–

அகற்ற நீ வைத்த மாய வல்லைம் புலன்களாமாவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகற்கதிர் மணி மாட நீடு சிரீ வர மங்கை வாணனே என்றும்
புகற்கரிய வெந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே –5-7-8-

வாணனே -வாழ் நனே வாழுமவனே
அடிமைக்கு விரோதியான சம்சாரத்தில் என்னை வைத்து இருப்பது அகற்றின படி அன்றோ
மமமாயா துரத்யயா-உன்னை உகவாதார் அகன்று போம்படிக்கு ஈடாக நீ வைத்தவை இவை
என்று நீ மயர்வற மதிநலம் அருளின படியால் அழகிதாக அறிந்தேன் –
உன்னால் அல்லது செல்லாதபடியாய் இருக்கும் என்னையும்
உன்பக்கலில் நின்றும் பிரித்து
கால் வாங்க ஒண்ணாத படியான சப்தாதி விஷயங்களில் தள்ளி வைத்து இருக்கின்றாயே
பகர்க்கதிர்-மிக்க ஒளி
பகற்கதிர் -சூர்ய மண்டலத்தளவும் செல்ல உயர்ந்து ஒளியை உடைய மாடங்கள்-

—————————————————————————————————————————————————————————————————

புள்ளின் வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழு அடர்த்த என்
கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீ வர மங்கை
உள்ளிருந்த வெந்தாய் அருளாய் வுய்யுமாறு எனக்கே –5-7-9-

பிரபல விரோதிகள் காரணமாக நீர் அரும் சேற்றில் விழுந்து கிடக்க – அகற்றினீர் என்னலாமோ என்ன
அநாயாசேன விரோதி வர்க்கங்களை அழித்த உனக்கு இது ஒரு வார்த்தையோ
என்ன கள்ளத்தனமான பேச்சு –
திருமேனியை ஆயாசப் படுத்தி செய்த செல்கள் பல பலவே
புள்ளின் வாய் பிளந்து
மருதிடை சென்று
எருது ஏழும் அடர்த்து -போன்ற பலவே
என் வினைகளைப் போக்க ஆயாசப் பட வேண்டாவே -கரு மாணிக்கச் சுடரே –
தெள்ளியார் -அவன் கை பார்த்து மார்பிலே கை வைத்து வாழ்பவர்
உனது திருவடிகளில் கைங்கர்யம் கிட்டும் வகை பண்ணி அருள வேண்டும் –

——————————————————————————————————————————————————————————————————

ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீ வர மங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே –5-7-10-

தமக்குப் பிறந்த அத்யாவசயாத்துக்கு கிருதஜ்ஞதா நுசந்தானம் பண்ணுகிறார்
ஆறு –வழி -உபாயம்
சரணாக -சரண்-உபயம்
எனக்கு நின் பாதமே ஆறு சரணாக தந்து ஒழிந்தாய் என்று அந்வயித்து
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் உன் திருவடி மலர்களே என்று இருக்கும் இந்த அத்யாவசாயத்தை
எனக்கு ஸ்வ பாவமாம் படி தந்து அருளினாய் -பிள்ளான் அருளிச் செய்வர்
பட்டர் -ஆறு -சரண் -இரண்டுமே உபாயம் என்று கொண்டு
அடியேனுக்கு உபாயமோ என்றால் உனது பாதமே உபாயமாக தந்து அருளினாய்
நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி
உபாயாந்தர சூன்யதையை முன்னிட்டுக் கொண்டு
உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திருவாய் மொழி யாகையாலே
அத்தையே நிகமிக்கிறது
அவதாரணத்தாலே ஏக பதத்தையே நினைக்கிறது
ஈஸ்வரனைப் பற்றின ஊற்றத்தினாலே உபாயாந்தரங்களை நெகிழுகை ஒழிய
நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாகும்
ஔஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்திஞ் வாயிலே கை கொடுத்தால் அது நிர்ப்பாதம்
ஔஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் அது மரண ஹேதுவாகும் -ஈடு

சாஸ்த்ரிகள் தெப்பக் கரையாரைப் போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த
சாரஜ்ஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள் –

உனக்கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே –
எத்தனையேனும் அளவுடையார்க்கும்
நிர்வாஹகனாய் இரா நின்றாய்
ஆனபின்பு உனக்கு நான் என்ன பிரத்யுபகாரம் பண்ணுவது
நீயோ கனக்க உபகரித்துக் கொண்டு நின்றாய்
நான் அஜ்ஞ்ஞனாகப் பெற்றிலேன்
இங்கனே யானாலும் நான் சில செய்து தலைக் கட்டினேன் ஆக ஒண்ணாதபடி நீ பரிபூர்ணன் ஆனாய்
உபகாரம் கொள்ளாதார் உண்டு உடுத்து திரியா நின்றார்கள்
அறிவு கேடர் ஆனவர்கள் சில பிரத்யுபகாரம் பண்ணினோம் என்று இரா நின்றார்கள்
நீ அபூர்ணன் ஆகில் இவை எல்லாம் சில செய்ததாக நினைத்து இருக்கல் ஆயிற்றே -நீயோ பூர்ணனாய் இருந்தாய்
ஆனபின்பு ஓன்று செய்து தலைக் கட்டப் போமோ -ஈடு

தெய்வ நாயகனே -இது வானமா மலை எம்பெருமான் உடைய திரு நாமம் —

—————————————————————————————————————————————————————————————————-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசை
கொய்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த வாயிரத்துள் இவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே –5-7-11-

நித்ய சூரிகளுக்கு பரம போக்யராவார் -காலதத்வம் உள்ளதனையும் –

——————————————————————————————————————————————————————————————–

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-7-1-சர்ப்பாதீ சேசயத்வாத் -அரவின் அணை அம்மானே
5-7-2-அரி தர பரணாத்-சங்கு சக்கரத்தாய் -அரி -சக்கரம் -தரம் -சங்கு
5-7-3–ஸாநுகம்பத்வ யோகாத் -அருள் செய்து அங்கு இருந்தாய்
5-7-4-சத் சாஹாய்யாத் -ஐவர் க்காய் அன்று மாயப் போர் பண்ணி
5-7-5-அசேஷாந்தர நிலயதயா-எவ்வ தெவ்வ துளாயுமாய் நின்ற –
5-7-6-பூசமுத் த்ருயுதந்தை -ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே -கண்ணா
5-7-7-சர்வேஷாம் தாத பாவாத் -உலக்குக்கோர் முந்தைத் தாய் தந்தையே-
5-7-8/9/10–இதர ஜன துரா தர்ஷ தாதே – என்றும் புகற்கரிய எந்தாய் -புள்ளின் வாய்பிளந்தானே -ஆதி சப்தம் மற்றை சேஷ்டிதங்கள்

தேவதா சார்வ பௌமம்-தெய்வ நாயகம் –

—————————————————————————————————————————————————————————————————–

நோற்ற நோன்பாதியிலேன் உன்தன்னை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது –47

———————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: