திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–கடல் ஞாலம் செய்தேனும்—5-6-

ஸ்ரீ யபதியை பிரிந்து தரிக்க அனுகரித்து அருளுகிறார்
திரு கோபிமார்கள் திருக்குரவை கோத்த அன்று அனுகரித்தது ஸ்ரீ விஷ்ணு புராண சித்தம் -5-13-23-
ஆண்டாளும் நோன்பு நோற்பதாக அனுகரித்து அருளிச் செய்கிறார்
அநுகார பிரகாரங்கள் உபநிஷத்திலும் காணலாம்
பராங்குச நாயகி ஞான முத்ரையும் தானுமாய்
கடல் ஞாலம் செய்தேனும் யானே -என்றும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்றும்
மலை எடுத்தேனும் யானே -என்றும்
இனத் தேவர் தலைவனும் யானே -என்றும்
சொல்லக் கேட்ட திருத் தாயார் அநு கரித்து தரிக்கிறாள் என்று அறியாமல் கலங்கி கிடக்க
வந்த பந்துக்கள் இது என்ன என்று வினவ
சர்வேஸ்வரன் இவள் பக்கல் ஆவேசித்தான் போல் இருக்கிறது
என்று விடை கூரும்படியாய் செல்கிறது இத்திருவாய்மொழி –

——————————————————————————————————————————————————————————

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ
கடல் ஞாலத்தீர்க்கிவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே–5-6-1-

யானே -ஏவகாரத்தால் மூன்றுவகை காரணமும் யானே
அநு பிரவேசமும் செய்து அருளுவதால் ஆவேனும் யானே
சம்சாரத்திலே வைத்து
நித்ய சூரிகள் யாத்ரையாய் செல்லுகிற என் மகள் படியை
நித்ய சம்சாரிகளாய்
பகவத் விஷயம் கனவிலும் கண்டு அறியாத உங்களுக்கு என் சொல்வேன்

———————————————————————————————————————————————————————–

கற்கும் கல்விக்கு எல்லையிலேனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்வி சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்தேறக் கொலோ
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே –5-6-2-

எலை இல்லா நூல்களையும் சாந்தீபன் இடம் 64 நாள்களில் கற்றான்
வேதங்களுக்கு எல்லை இல்லை என்றுமாம்
சகல வேத ஸ்வரூபி
தீர்க்கி தீர்மாநிக்கை அர்த்த நிர்ணயம் அருளிச் செய்யும் ஆச்சார்யர்களும் அவனே
சம்ஹார காலத்தில் திரு உள்ளத்தில் கொண்டதாகவும் கொள்ளலாம்
சாரம் -திருமந்தரம் போல்வன
மந்திர ஸ்வரூபி

—————————————————————————————————————————————————————-

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் வந்தேறக் கொலோ
காண்கின்ற வுலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே –5-6-3-

பகவத் விஷயத்தை உள்ளபடி காணும் என் காரிகை –
பிறரால் காண முடியாதவற்றையும் காண்கிறாள்
எண்ணா தன்கள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப -என்றபடி
நீங்களும் என்னோடு ஒக்க காணா நின்றி கோளில்
உங்களுக்கு நான் என்ன பாசுரம் இட்டு சொல்வது
உங்களோடு என்னோடு வாசி உண்டோ சொல்ல ஒன்ன்பாமைக்கு -ஈடு
லோகம் ஒழிய அறியாத உங்களுக்கு என் என்பதாக சொல்லுவேன் -பன்னீராயிரப்படி

———————————————————————————————————————————————————————

செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வாநின்றனகளும் யானே என்னும்
செய்து முன்னிறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ
செய்ய வுலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
செய்ய கனிவாய் இளமான் திறத்தே -5-6-4-

முக்காலத்தில் நடப்பன அவன் இட்ட வழக்கே
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா
செய்கைப்பயன் -செய்கைகளின் பயன்
செய்கையும் பயனும் என்றுமாம் -செய்கையாகிற கிரியையும் அவற்றின் பலனும் நான் இட்ட வழக்கு
செய்ய -கபடம் அறியாமல் ருஜூ வான

——————————————————————————————————————————————————————————

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறம் காட்டி யன்று ஐவரைக் காத்தேனே எண்ணு
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ
திறம்பாத வுலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
திறம்பாது என் திருமகள் எய்தினவே –5-6-5-

நீதி தவறாமல் காக்கின்றேன்
சலியாதபடி கோவர்த்தன மலையை எடுத்தேன்
கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில -வடிவேறு திருவுகிர் நொந்துமில –
தப்பாதபடி அசுரர்களை கொன்றேன்
க்ருஷ்ணாஸ்ரய க்ருஷ்ணபலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ
அபாயம் ஒன்றும் இல்லாமல் கடல் கடைந்தேன்
மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் எம்பெருமான் –
அடியார்களை நோக்குவதில் சலியாத கடல் வண்ணன்
அவசியம் அறிந்து கொள்ள ஸ்திரமாக உள்ள உலகத்தீர்க்கு
ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாத என் திருமகள்

ஆழம் காலிலே இழிந்தார் படியை
கரையிலே நின்றாராலே சொல்லப் போமோ -ஈடு

————————————————————————————————————————————————————————————-

இனவேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்
இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இனவா நிரை காத்தேனும் யானே என்னும்
இனவாயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக் கொலோ
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்
இன வேற் கண்ணி என் மகள் உற்றனவே –5-6-6-

அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரம-மீண்டும் மீண்டும் கோவர்த்தன உத்தரண லீலை
கன்று மேய்த்து விளையாட வல்லான் -பெரிய திருமொழி 2-5-3-
விளையாட வேண்டிய வல்லமை என்ன
வரை மீ கானில் தடம் பருகு கரு முகிலை –
முதுகிலே கையைக் கட்டி கவிழ்ந்து நின்று தண்ணீர் அமுது செய்து காட்டும் வல்லமைஇவனுக்கு உண்டே -பட்டர்
இனவாயர் தலைவன் -தன்னேராயிரம் பிள்ளைகளும் தானுமாய் தீமை செய்தாலும் தீம்பிலே தலைவன்

———————————————————————————————————————————————————————————————

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை யழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்
உற்றென்னுடைப் பேதை வுரைக்கின்றவே –5-6-7-

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும்
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய-சர்வ சாதாரணன்
சம்பந்தம் அறிந்து நேசிப்பார் இல்லை -அத்யந்த யுகத ஞானி துர்லபம் –
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
கீழே இல்லை என்றது அவர்கள் கருத்தாலே இங்கு எம்பெருமான் கருத்தாலே
இராமடம் ஊட்டுவாரைப் போலே உள்ளே பத்தி கிடந்தது
சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போரும் -என்றும்
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று
கண்ணுக்கு தோற்றாதபடி நின்று
சத்தையை நோக்கி உடன்கேடாய் -போருமே
உற்றார்களை யழிப்பேனும் யானே -அல்ப பலன் கேட்பாருக்கு கொடுத்து அகற்றுவதும் நானே
முதலி ஆண்டான் -பணிக்கும்
சௌந்தர்யத்தில் ஈடுபடுத்து -நினைத்து நைந்து கரைந்து உருகி அழிக்கும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் -அநந்ய பிரயோஜனர்களுக்கு எல்லா உறவும் நானே
உற்றார்களைச் செய்வேனும் யானே-மடி மாங்காய் இட்டு அபிமுகர்கலாம்படி பண்ணி
உற்றார்களுக்கு உற்றேனும் யானே-எல்லாருமாக பற்றுவாரை நானும் எல்லாருமாக பற்றுவேன்

—————————————————————————————————————————————————————————————————————

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற வமரரும் யானே என்னும்
உரைக்கின்ற வமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ
உரைக்கின்ற வுலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
உரைக்கின்ற வென் கோமள வொண் கொடிக்கே –5-6-8

அத்வைத வாதம் பண்ண வில்லை
அனைவரையும் நிர்வஹிப்பவன் யானே என்கிறாள்
உரைக்கின்ற முகில் வண்ணன்–வார்த்தை சொல்லுவதொரு மேகம் போன்றவன்
உரைக்கின்ற மேகத்துக்கும் விசேஷணம் ஆக்கலாம்

—————————————————————————————————————————————————————————————————————

கொடியவினை யாதுமிலனே என்னும்
கொடிய வினை யாவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ
கொடிய வுலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே –5-6-9-

தோஷம் தட்டாதவன்
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனில் கூடல் அவனையும் கூடலாமே
ஜீவாத்மாவுக்கு சரீர விபாகங்கள் வந்தது இல்லை யாகிலும்
சரீர சம்பந்த நிபந்தனமாக துக்க அஜஞாநாதிகள் வருகிறவோபாதி
சரீர பூதமான இவற்றோடு சம்பந்தத்தாலே இவனுக்கும் இங்கனே தோஷங்கள் வாராதோ என்னில் வாராது
அதுக்கடி பிரவேச ஹேது விஷயம்
இவனைப் போலே கர்மம் அடியாக அன்றிக்கே
அனுக்ரஹம் அடியாக இ றே
அவனுக்கு இவற்றில் பிரவேசம் இருப்பது -மணவாள மா முனிகள் தத்வ த்ரய வியாக்யானம்
கர்மங்கள் யாவும் அவன் இட்ட வழக்கு -கொடிய வினை ஆவேனும் யானே
ஆஸ்ரிதர்களுக்கு கொடிய வினை தீர்த்தல் விரோதிகளுக்கு கொடிய வினை செய்தல்
இலங்கை செற்றேனே -தலைமகள் சொல்லையும்
கொடியோன் -சேர்த்து திருத் தாயார் வார்த்தை என்பர் நஞ்சீயர்
எம்பெருமான் வார்த்தை -அல்பனான இராவணனை கொடியோன் என்ன மாட்டான் இ றே
கோலம் -அழகிய தன்மை
கோலுதல் முயற்சி

——————————————————————————————————————————————————————————————————————–

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொள் உயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனி முதல் யானே என்னும்
கோலங்கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ
கோலங்கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே -5-6-10-

உலகத்தார் உடைய கருத்தால் கோலங்கொள் சுவர்க்கம் என்கிறாள்
அறத்தின் வழி முயன்ற அன்னவர் தம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் -பெரிய திருமொழி
அனைத்தும் எம்பெருமான் இட்ட வழக்கு
கோலங்கொள் தனி முதல் -மூலப் பிரகிருதி /சங்கல்ப ரூபஞானம் -என்னவுமாம்

—————————————————————————————————————————————————————————-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச்
சடபோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையுமோர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்த்
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே –5-6-11-

ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவார்கள்
ஜன்மாந்தர சஹச்ர ஸூ க்ருதம் பயனாக பெற வேண்டியதை இத் திருவாய் மொழி வல்லார் பெறுவார்
பிராட்டி உபதேசத்தால் எம்பெருமானையும் செதனர்களையும் திருத்தப் பார்ப்பாள்
உபதேசத்தால் முடியாத போலே அவனை அழகாலே திருத்தும்
இவர்களை அருளாலே திருத்தும்
அழகாலே ஈஸ்வரனைத் திருத்தும் போதைக்கு முதல் சாமக்ரி கூந்தல்
நப்பின்னைபிராட்டி -குலவாயர் கொழுந்து

———————————————————————————————————————————————————————————–

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

அஹம் புத்தி போத்ய அன்வபாவி -யானே யானே என்ற அநு கார முகத்தாலே
5-6-1-ஜகத்யா ஸ்ரஷ்டருத்வாத்யை -கடல் ஞாலம் செய்தேனும்
5-6-2-சகல வித கலா வர்த்தகத்வேன-கற்கும் கல்விக்கு
5-6-3-பூத அந்தர்யாமித்வேன–காண்கின்ற நிலம் எல்லாம்
5-6-4-க்ருத் யுத்தரண பரதயா-செய்கின்ற கிதி
5-6-5-பூ பார பாக்ரு தேச்ச – திறம்பாமல் மண் காக்கின்றேன் –
5-6-6-சைலேந்தர உத்தாரணாத்யை-இன வேய் மலை ஏந்தினேன்
5-6-7-ஸ்வ ஜன ஹித தயா -உற்றார்கள் எனக்கு
5-6-8-பிரம்மா ருத்ர இந்திர பாலாத் -உரைக்கின்ற முக்கட்பிரான்
5-6-9/10/11–துஷ்கர்ம உன்மூல நாத்யை-கொடிய வினை-கொடிய வினைகளை களைதல் -ஆத்ய சப்தத்தால் –கோலங்கொள் -இத்யாதி

———————————————————————————————————————————————————————————————

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்க லுற்றுத் திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறனுரை யதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய நோற்றார் –46

ஆட்செய்ய பாடத்தில் தளை பிறழும் ஆட்செய சரியான பாடம்

———————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: