திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-எங்கனேயோ வன்னைமீர்காள்–5-5-

கீழ் திருவாய் மொழியில் ஆழ்வார் இருளுக்கும் பனிக்கும் வருந்தின படி சொல்லிற்று
இருள் தரும் மா ஞாலத்தில் தமோ குணம் மேலிட்டதை சொன்னதாகும் ஸ்வாபதேசத்தில்
தமோ குணம் கழிந்து சத்வ குணம் தலை எடுப்பு காணத் தொடங்கிற்று -பகல் காண்கிறது போலே
அத்தால் நெஞ்சு தரிப்புற்று
திருக்குறுங்குடி எம்பெருமான் உடைய
வடிவு அழகையும்
திவ்யாயூத
திவ்ய ஆபரண
சேர்த்தி அழகையும்
வாய் வெருவும்படி யாயிற்று
உரு வெளிப்பாடு -மானஸ சாஷாத்காரம்
பிராட்டி நிலையில் -திருக்குறுங்குடி நம்பியின் வடிவு அழகில் நெஞ்சு பறியுண்டு கிடக்கும் என்னை
அடக்கப் பார்ப்பது முறை அல்ல -என்கிறாள் –

————————————————————————————————————————————————————————————

எங்கனேயோ வன்னைமீர்காள் என்னை முனிவது நீர்
நாங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்னெஞ்சமே –5-5-1-

வைஷ்ணவ வாமனத்தில்
நிறைந்த நீல மேனியின்
ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -நாயனார்
வாமன அவதாரத்தில் தன்னுடைமை பெறுவதற்கு அர்த்தியானால் போலே
அர்த்தியாய் நின்று பாஷ்யகாரர் பக்கலிலே
வேதாந்தார்தம் கேட்டு சிஷ்யனாய்
நாமும் நம் ராமானுசனை யுடையோம் என்கையாலே
ஸ்ரீ வைஷ்ணவ நம்பி என்ற திருநாமமாய் வாமனாவாதார அம்சமாக புராண சித்தராய் இருக்கும் நம்பி உடைய திருப்பது
அன்றிக்கே
அறியக் கற்று வல்லார் வைட்டணவர்-என்கிறபடியே வைஷ்ணவர்கள் உடைய வாமன ஷேத்ரமாய்
]இருக்கிற தேசத்தில் என்னவுமாம் – -மணவாள மா முனிகள்
நம் ஆழ்வார் உடைய திருவவதாரத்துக்கு காரணமாய் இருந்தவரும் இந்த நம்பியே
நேமி –திருச் சக்கரத்தின் உறுப்பு -லஷணையால் திருச் சக்கரத் ஆழ்வானுக்கு வாசகம்

—————————————————————————————————————————————————————————————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே -5-5-2-

என் நெஞ்சை இரவலாகக் கொண்டு சேவித்தீர்கள் ஆகில் என்னை முனிய மாட்டீர்கள்
மேகத்தில் மின்னினால் போல யஞ்ஞோபவீதமும்
பரந்த மின் ஓர் இடத்தில் சுழித்தால் போலே இருக்கிற மகர குண்டலமும்
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருக்கிற திரு மார்பிலே கிடக்கிற ஸ்ரீ வத்சமும்
திரு ஆபரணங்களும்
திருத் தோள்களும் என்னை வந்து நெருக்கா நின்றன
தென்னன் சோலை
தென் நன் சோலை தெற்குத் திக்கில் நல்ல சோலை
தென்னன் பாண்டியன் பெயர் என்னவுமாம் –

—————————————————————————————————————————————————————————————

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே –5-5-3-

வ்ருஷே வ்ருஷே ச பச்யாமி சீரக்ருஷ்ணா ஜி நாம்பரம் -மாரீசன் நிலை போலே
எம்பெருமான் உடைய பஞ்சாயுதன்கள் சூழ்ந்து
ஸ்தம்பித்து அறிவு இழந்து நைந்து உள்ளேன்

—————————————————————————————————————————————————————————————-

நீங்க நில்லா கண்ணநீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே –5-5-4-

ஆஹ்லாத சீத நேத்ராம்பு பூலகீக்ருக காத்ரவான் சதா பரகுணவிஷ்ட த்ரஷ்டவ்யஸ் சர்வதே ஹிபி
சோலைகளில் தேன் வெள்ளம் மாறினாலும் கண்ணநீர் வெள்ளம் மாறாதே
உபயவிபூதி நாதத்வம் தோன்ற செவ்வித் திருத் துழாய் மாலை -திரு அபிஷேகம்
ஏற்ற திவ்ய மங்கள விக்ரஹம்
திருவரை பூத்தால் போலே பாங்கான திருப் பீதாம்பரம்
அதன் மேல் ஆபரணம் விடு நாணும்
என்னருகே நின்று பிரகாசியா நின்றன
உருவெளிப்பாட்டால் ஆனந்தகண்ணீர்
அனுபவிக்கக் கிடையாமல் சோகக் கண்ணீர் -பாவியேன் -என்கிறார்

—————————————————————————————————————————————————————————————–

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே -5-5-5-

அவன் எழுந்து அருள சம்பாவனை உள்ள பங்கங்கள் எல்லாம் நோக்கும்
வரக் காணாமையாலே நையும்
சொன்ன சொன்னது எல்லாம் தரும்டியான கீர்த்தி உடைய நம்பி
அழகே திரண்டு வடிவு கொண்டால் போலே திரு அதரம்
தன கை சார்ங்கம் அதுவே போலே அழகிய நீண்ட திருப்புருவங்கள்
தகுதியாய் திகழும் திருக் கண்களும்
தோல் புரையே போகை அன்றிக்கே உயிர் நிலையிலே நின்று நலியா நின்றன
தாய்மார் கிருஷி பலித்ததே என்று உகக்க வேண்டி இருக்க முனிவதா

——————————————————————————————————————————————————————————–

மேலும் வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காண கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே –5-5-6-

மேலும் வன்பழி -காலம் உள்ளதனையும் பெருத்த பழியாய் இருப்பவள்
திருக்குறுங்குடி நம்பியை காண ஒட்டாமல் இருப்பதே கருமம் என்று இருக்க
தண்ணீர் பெருகிச் சென்றபின் அணை கட்டுவார் போலே

————————————————————————————————————————————————————————————

நிறைந்த வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும்
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நேமி யங்கை யுளதே –5-5-7-

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -பழியையே பரம போக்யமாக கொண்டாள்
பழியே விளை நீராக –ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து –பேரமர் காதல் –

சூழ்ச்சி அகற்றினீர் என்னும் பழி
இணக்கி எங்கனே என்னும் மேல் எழுத்து
முன்னின்றாயிவளை
நீரென்னும் இருபடை மெய்க்காட்டு
நீர் என்னே என்னும் உடன்பாடு
இடையில்லை என்னும் முதறுதல்
இருந்து இருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம்
அவஸ்தா த்ரய வ்ருத்தி–நாயனார்

உபாய அத்யாவசயா தசையில் -அதிபிரவ்ருத்திகள் பழியாய் தோற்றும்
பிராப்ய ருசி தசையில் அதிபிரவ்ருத்திகள் அவர்ஜநீயம் ஆகையாலே உத்தேச்யமாய் இருக்கும் –

————————————————————————————————————————————————————————————-

கையுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே -5-5-8-

செந்தாமரைக் கண்ணும்
அன்நோக்குக்கு தோற்றவர்கள் இளைப்பாறும் அல்குலும்
கீழும் மேலும் கண்டு அனுமானானத்தால் அறிய வேண்டும்படியான இடையையும்
இவற்றுக்கு ஆச்ரயமான வடிவும்
களி வண்டு எங்கும் கலந்தால் போலே
கமழ் பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்ற -என்றபடியே திருக் குழல்கள் அலைய நின்ற திருத் தோள்களும்
முன்னே தோன்றா நின்றனவே
அணைக்குமாறு கைக்கு எட்டாமையாலே
முகத்தை கையிலே வைத்துக் கொண்டு சிந்தை கலங்கி நைந்து இருக்க
மைகொள் மாடம்
உள்ளே உள்ள எம்பெருமான் நிழலீட்டாலே கருமை பூண்ட மாடங்கள் உள்ள திவ்ய தேசம் –

——————————————————————————————————————————————————————————————–

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னி மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பாலமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே -5-5-9-

நாணம் இல்லாமல் பலரும் காண முன் நின்றாய்
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழா ஆழிகளும் கிண்கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும்
மோதிரமும் கிறியும் மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் -எண்ணும்படியான திவ்ய ஆபரணங்கள்
நெஞ்சை ஆக்கிரமித்து இருக்க வெட்கம் நாணம் காத்து இருக்க ஒண்ணாதே

—————————————————————————————————————————————————————————————————

கழிய மிக்கதோர் காதல் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே –5-5-10-

நாள் செல்ல செல்ல ச்நேஹம் உலகில் அபிமத விஷயத்தில் குறைய காண்கிறோம்
இவளுக்கோ மென்மேலும் காதல் பிரிந்த விஷயத்தில் பெருகி மையல் ஏறுகின்றாள்
குறைவற்ற கீர்த்தி உடைய நம்பி இடம் ஈடுபட்டு
நித்ய இந்த்ரிய அபதாதிகம் மகோ யோகிநாம் அபி ஸூ துரகம் திய
அபய நுச்ரவ சிரஸ் ஸூ துர்க்ரஹம் -என்னுமா போலே
யாருக்கும் நிலம் அல்லாத
தேஜோராசிமயமான தோர் திருவுரு என் நெஞ்சுள்ளே திகழா நின்றதே

————————————————————————————————————————————————————————————–

அறிவரிய பிரானை ஆழியங்கையனை யேயலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறிகொள் யாயிரத்துள் இவைபத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –5-5-11-

குறிகொள் -இவை பத்தும்
எம்பெருமான் உடைய திவ்ய அவயவ -திவ்ய ஆயுத -திவ்ய ஆபரண -லாஞ்சனங்களை உடைய இத் திருவாய்மொழியை –
ஸ்ரீ வைஷ்ணவ சார்வ பௌமர்களாய் வீறு பெற்று விளங்குவர் –

நறிய நன்மலர் நாடி-
க்யாதி லாபா பூஜை அற
மலர் நாடி ஆட்செய்ய உய்யக் கொண்டு
ஆரைக் கொண்டு வாளும் வில்லும் கொண்டும்
என்கிற இழவுகள் தீரப் பெற்றது -நாயனார்

நறிய நன்மலர் நாடி என்கிறபடியே
சேஷத்வ பரிமள யுக்தமாய்
ஸ்லாக்யமான ஆத்மபுஷ்பங்களைத் தேடி -என்றும்
சர்வ வ்யாக்யானங்களிலும் பரிமளத்தை உடைத்தாய்
ஸ்லாக்யமான புஷ்பங்களைப் போலே
ஆராய்ந்து சொன்ன ஆயிரம் என்று
பிரபந்த விசேஷணமாய் சொல்லி இருக்கையாலே
இவர்க்கு நினைவு ஆத்மபுஷ்பங்களை தேடி என்கிற
இது என்று கொள்ள வேணும் -மணவாள மா முனிகள்

அறியக்கற்று வல்லார்
ஏடு பார்த்து கற்கை அன்றிக்கே ஆச்சார்யா உச்சாரண அநு உச்சாரண முகேனஅத்யயனம் பண்ணி
உபதேச முகத்தால் அர்த்த ஞானம் பிறந்து
அதற்கு ஏற்றவாறு அனுஷ்டிக்க வல்லார் ஆனால் ஸ்ரீ வைஷ்ணவ சித்தி உண்டாகும்
அதிசய உக்தி -திருவாய் மொழி ஆயிரமும் கற்க வேணும்
சந்தங்கள் ஆயிரமும் அறியக் கற்று வல்லார் ஆனால் வைஷ்ணவத்வ சித்தி -நாயனார்

ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்டணவர்
மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே
நித்ய சூரிகளோடே ஒக்க சொல்லலாம்படி ஆவார்கள்
உகந்து அருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள் -ஈடு –

—————————————————————————————————————————————————————————————————-

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-5-1-சங்கா த்யை-சங்கினோடும் நேமியோடும்
5-5-2-யஜ்ஞ ஸூ த்ராதி பிரபிச -மின்னு நூலும் குண்டலமும்
5-5-3-சாரங்க முக்யை-வென்றி வில்லும் தண்டும் வாளும்
5-5-4-துலச்யா -பூந்தண் மாலைத் தண் துழாயும்
5-5-5-பிம்போஷ்டாத்யை–தொக்க சோதிதி தொண்டை வாயும்
5-5-6-ஸூ நாஸா வ்ரததி-கோல நீள் கொடி மூக்கும்
5-5-7-நிரவதி ஜ்யோதி ரூர்ஜச்வி மூர்த்யா -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும்
5-5-8-நேத்ராப் ஜாத்யை-செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
5-5-9-அசேஷ ஆபரண ஸூ ஷமயா-சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தனன்
5-5-10-ச்வை பக்தை மனோஜ்ஞ-குழுமித் தேவர் குழாங்கள் கை தொழ
தேவ -திருக்குறுங்குடி நம்பி
ஸ்வா நாம் -தம் அடியார்களுக்கு
அஜஸ்ரம்- இடைவிடாமல்
ஸ்ம்ருதி விஷயதயா பாதி -மறக்க ஒண்ணாமல் உரு வெளிப்பாட்டால் திகழ்கிறார்
இதி அப்யதாயி -என்று அருளிச் செய்யப்பட்டது –

——————————————————————————————————————————————————————————————————-

எங்கனே நீர் முனிவது என்னையினி நம்பி யழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதுமவர்க்கு இன்பக் கடல் –45

இத் திருவாய் மொழியால் ஆழ்வாருக்கு இன்பமும் துன்பமும் கலந்து உண்டாயிற்று
ஆழ்வாரை சிந்திப்பார்களுக்கோ என்னில்
ஒருநாளும் துன்பம் உண்டாகப் பிரசக்தி இல்லை
பேரின்பக் கடலில் அழுந்துவார்கள் –

—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: