திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–ஊரெல்லாம் துஞ்சி-5-4-

கீழ்த் திருவாய் மொழியில் மடலூர ஒருப்பட்டாள்
அவகாசம் இல்லாதபடிகங்குல் இருள் வந்து புகுந்தது
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் -ஆழி கொண்டு இரவி மறைப்ப -என்றும் இங்கும் செய்தான் போலும்
அது தான் அந்தியம்போது இல்லாமல் சராசரங்களும் நடுங்கும்படி நடு நிசியாய் இருந்தது
பழி சொல்லுவார்
ஹிதம் சொல்லுவார்
வாசி அற எல்லாரும் உறங்கி உசாத் துணை அற்று இருந்தது
இவ்வளவிலே எம்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை அனுசந்தித்தார்
இவ்வனுசந்தானம் விஸ்லேஷ தசையில்லாதலால் ஆற்றாமைக்கு உறுப்பாயிற்று
அந்த அவசாதம் எல்லாம் நாயகி சமாதியால் கீழ்த் திருவாய் மொழி போலே அருளிச் செய்கிறார்

———————————————————————————————————————————————————————————————-

ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவி காப்பாரினியே –5-4-1-

நீரெல்லாம் தேறி-அலை யடங்க தெளிந்து
எருஇட அவகாசம் இல்லாமல் ஊரெல்லாம் துஞ்ச
திருவடி புகும் பொழுது ராஷசிகள் துஞ்சினால் போலே
இவள் பிறந்தவூர் ஆகையால் இவள் ஆற்றாமை கண்டு கோரை சாய்ந்தால் போலே துஞ்சிற்று
நாகபாசம் பொழுது ஜாம்பவான் திருவடி சிலர் உணர்ந்து இருந்தால் போலே இங்கே யாரும் இலையே
உலகமும் அப்படியே ஆயிற்றே
காள ராத்ரியாய் -தேவர்கள் இரவையும் விஞ்சி நீண்டு இரா நின்றதே
பிரளய ஆபத்தில் வந்து ரஷித்தவனும் வர வில்லையே
தரிக்கும் வகை என்னோ –

————————————————————————————————————————————————————————————-

ஆவிகாப்பார் இனியார் ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கல்லையே –5-4-2-

குரவை கோத்த பொழுது சாதிமிக்கைக்காக மறைந்து பின்பு
தாஸாம் ஆவிரபூத் சௌரி ஸ்மயமா நமுகாம்புஜே
பீதாம்பரதர ஸ்ரக்வீ சாஷான் மன்மத மன்மத -முகம் காட்டுவான் என்று இருந்தாள் -வரவில்லையே
ஆவிகாப்பார் இனியார் –
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே -உசாத் துணை இல்லையே -அதுக்கும் வழி இல்லை
காக்கும் இயல்வினன் கண்ணபிரான் -அவனும் உபேஷிக்க-இனி ஆவி காப்பது எங்கனே –

மா விகாரமாய்-பின்னையும் அவ்வளவில் பர்யவசிப்பதாய் இருக்கிறது இல்லை
மகா விகாரத்தை உடையதாய்
நித்ய விபூதியையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது
விஸ்வ ரூபம் காட்டின சர்வ சக்தி செய்தது எல்லாம்
செய்யா நின்றதே -ஈடு

ஓர் வல்லிரவாய் நீண்டதால்-இருளுக்கும் இரவுக்கும் வாசி இல்லாமல் -பர்யாயம் போலும் இரண்டும்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் -வடிவு அழகைக் காட்டினால் போதுமே
வடமதுரையில் வந்து தோன்றி மறைந்தால் போல் மறைந்தாலும் ஆகிலுமாம்
என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார்-அத்தலையைப் பற்றி இத்தலையை வெறுத்து ஒழித்ததே –

——————————————————————————————————————————————————————————————-

நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழி யாய் நீண்டதால்
காயும் கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை யறியேன் – –5-4-3-

மாயா சிரஸ் காட்டிய பொழுது சாரங்க நாண் ஒலி கேட்டு தரித்தாள்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –
விஷச்ய தாதா ந ஹி மேஸ்தி கச்சித் ஷத்ரச்ய வா வேச்ம நி ராஷச்ய -என்றால் போலே மாயும் வகை அறியேன் என்கிறாள்

வல்வினையேன் பெண் பிறந்தே-
பிறர்க்காக ஜீவிக்க வேண்டும்
பரதந்திர ஜன்மத்தில் பிறக்கைக்கு ஈடான
மகா பாபத்தை பண்ணினேன் -ஈடு

————————————————————————————————————————————————————————————————-

பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம்
மண்ணளந்த கண் பெரிய செவ்வாய் எம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பாரார் என்னையே –5-4-4-

எண் பெரிய -நினைக்கவும் முடியாத
தன் தோற்றரவிலே சகல கிலேசமும் போம்படியான
பிரகாசத்தை உடையவனும் வாராதே மறைந்தான்
வந்திலன்-என்னாதே – ஒளித்தான் என்கிறது
பகவத் ஆஞ்ஞையாலே முப்பது வட்டம் வர வேணுமே
இங்கனே இருக்கிறவன் -ஈஸ்வர ஆஞ்ஞை மறுத்தால் வேணுமாகில்
தலையை அறுத்து வைக்கும் இத்தனை அன்றோ
இக்கொடுமை எண் கண்ணால் காணப் போகாது -என்று
ஈச்வரபடர் தேடி வந்தாலும் காணாதபடி ஒளித்தான் -ஈடு

இனி என் சிந்தை நோய் அனுபவித்தே கழிக்கும் அத்தனை

——————————————————————————————————————————————————————————————————

ஆரென்னை யாராய்வார் அன்னையரும் தோழியரும்
நீரேன்னே யென்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேரேன்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே –5-4-5-

நீரேன்னே யென்னாதே-இப்படியும் ஒரு நீர்மை உண்டாவதே என்று என் திறத்தில் இரங்காமல்
உதவக் கடவனான கண்ணனும் வாரானால்
என்பெயரே மிக்கு இருக்கிறது
உலகை எல்லாம் ஆராயப் பிறந்த ஆழ்வார் -ஆரென்னை யாராய்வார் -என்று
சொல்லிக் கொள்ளும்படியான வி லஷணமான நோய்

நீர் துஞ்சுவர் படர்க்கை துஞ்சுதிர் முன்னிலை பொருளில்
துஞ்சுவர் என்னுமிது துஞ்சுதிரால் என்னும் அர்த்தம்
பெற்றுக் கிடக்கிறது என்று சொல்வாரும் உண்டு -ஈடு
அங்கனம் அன்றிக்கே
துஞ்சுவர் படர்க்கை பொருளில் கொண்டு
நீர் -நீர்மை -இது என்ன ஸ்வ பாவம் என்று ஈடுபட்டு பேசாமல் என்றபடி
நீர் -ஸ்வ பாவம் பொருளில் திருக்குறள்
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதிப் பின்னீர பேதையார் நட்பு –
நீரவர் -நல்ல ஸ்வ பாவம் உடையவர்களினது
கேண்மை -நட்பானது
பிறை -சுக்ல பஷத்து சந்திர கலை போலே
நிறை நீர -நாள் தோறும் நிறைந்து வளர்ந்து செல்லும் தன்மைத்து
பேதையர் நட்பு -மூடர்களின் சினேகமானது
மதி -கிருஷ்ண பஷத்து சந்த்ரகளை போலே
பின்னீர -நாள் தோறும் குறையும் தன்மைத்து –

பேரேன்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே-
ஆழ்வார் உடைய திரு நாமம்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சத்தா ஹேதுவானால் போலே
இவர் தமக்கும் சத்தா ஹேதுவானபடி
அடியுடைய பேராகையாலே
சர்வர்க்கும் தாரகமாய் இருக்கும் இ றே
இதனுடைய அடி யுடைமை இ றே
எல்லாரும் சிரஸா வஹிக்கிறது -ஈடு-

வல்வினையேன் பின் நின்று -என்பதை ஆர் என்னை ஆராய்வார் என்பதுடன் கூட்டி
எனக்குத் துணை நின்று ஆராய்வார் ஆர் -என்பர் பன்னீராயிரப்படி-

————————————————————————————————————————————————————————————————————–

பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழிக் கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே -5-4-6-

முடிந்த பின்னும் செல்லுகிற விஸ்லேஷ வ்யசனம் ஒன்றும் போருக்கலாய் இருக்கிறது இல்லை -ஆராயிரப்படி
பின்நின்றகாதல் -மரணம் அடைந்த பின்பும் நிற்கின்ற காதல் நோய்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்
அதனில் பெரிய அவா
இங்கு எங்கு போனாலும் புக்க இடம் புக்கு பின்னே திரிந்து நலிகின்ற பிரேம வியாதி
நெஞ்சு பெரிதும் அடும் -கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
காதலும் இரவும் கூட்டு சேர்ந்து நலிகின்றன –

கண் புதைய மூடிற்றால் –
உட்கண்ணை காதல் மறையா நின்றது
கட்கண்ணை ராத்ரி மறைத்தது -ஈடு
அவனே எதிரே நின்று சேவை சாதித்தாலும் பார்க்க முடியாதபடி இருள் வந்து நலிகின்றபடி –
மன்னின்ற சக்கரத்து -நிலைத்து நின்ற
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
பாது ப்ரணத ரஷாயாம் -விளம்பம் அசஹ்ஹன்னிவ சதா பஞ்சாயுதீம் பிப்ரத் ச ந ஸ்ரீ ரெங்க நாயக –
இவ் உயிரை முடித்து ரஷிப்பார் யார்
இவ்விடத்தே -சர்வ ரஷகனும் உதவாத இந்நிலைமையிலே

—————————————————————————————————————————————————————————————————

காப்பாரார் இவ்விடத்துக் கங்கிருளின் நுண் துளியாய்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள் என்செய்கேனோ –5-4-7-

சேட்பாலது -மிக நீண்டு இருப்பதான
தூ பால -அழுக்கு அற்ற ஸ்வ பாவத்தை உடைத்தாய்
உறங்காத தெய்வங்களை குறித்து முறையிடுகிறாள்
தானும் உறங்காதவள்
இந்த சாம்யத்தால் –
துயர் உற்ற காலத்தில் அம்மே என்பாரைப் போலே
தெய்வங்காள் என்றதும் ஒரு வார்த்தைப் பாடு –
கங்கிருளின் நுண் துளியாய்-தடித்த இருளும் நுட்பமான பனித்துளியுமாய்
கங்கு எல்லை நிலம் -செறிந்த இருள்

—————————————————————————————————————————————————————————————-

தெய்வங்காள் என்செய்கேன் ஓர் இரவேழ் ஊழி யாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெஞ்சுடரில் தானடுமே–5-4-8-

தை வந்த-தடவுகிறாப் போலே இருக்கின்ற
ஓர் இரவு ஏழு ஊழி யாய் -சௌபரி போகத்துக்கு பல வடிவு கொண்டால் போலே நலிய இது கொண்டபடி
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-இராவணன் இடம் பார்த்து வந்து நலிந்தால் போலே
இதுவும் விரஹ தசை அறிந்து நலிகிறபடி
மோர்க் குழம்பு கொடுத்து தேற்றி
விடுநகம் கட்டி-கிட்டிக் கோல் கட்டி – நலிவாரைப் போலே –
கைவந்த -விதேயமான

——————————————————————————————————————————————————————————————–

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே –5-4-9-

இராவணன் மாரீசன் துணை கொண்டு வந்தால் போலே
இராப் பொழுது நுண்ணிய பனித் துளியை துணை கொண்டு
வெவ்விய நெருப்பைக் காட்டிலும் அதிகமாகவே நலியா நின்றது –
நான் நீர்ப்பண்டமாய் உருகி ஒழியா நின்றேன்

————————————————————————————————————————————————————————————–

நின்று உருகுகின்றேனே போலே நெடு வானம்
சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஓன்று ஒரு கால் சொல்லாது உலகோ உறங்குமே –5-4-10-

தேறுதல் கூற யாருமே இல்லை
எல்லாரும் உறங்க
ஆகாசம் பனித் துளி -திருஷ்டாந்தம் ஆக்குகிறாள்
கீழே வாயும் திரை உகளில் -தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற வானமே –
உலகளந்த வ்ருத்தாந்தம் சொல்லி தரிக்க உசாத் துணையும் இல்லை
அந்த வஞ்சகன் நமக்கும் வஞ்சகனே யாவான் -ஏதேனும் ஒன்றைச் சொல்லலாமே
உலகம் ஒன்றும் சொல்லாமல் உறங்குகிறதே –

——————————————————————————————————————————————————————————————

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த வந்தாதி ஆயிரத்திப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்கனயோ–5-4-11-

நிறம் கிளர்ந்த -பண் விஞ்சின
உலகோ வுறங்குமோ -எம்பெருமான் நான் உறங்குகிறேன் அல்லேன் -ரஷணம் சிந்தையில் யோகு செய்வான் போலே –
இத்தை அறியப் பெற்று ஆழ்வார் தரிக்க
அத்தாலே ஊரும் தரிக்க -சிறந்த பொழில் சூழ் குருகூர்
இப்பத்தால் வைகுந்தம் சேராவாறு-பரமபத ப்ராப்தி தவிராது என்றவாறு –

——————————————————————————————————————————————————————————————

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

5-4-1-ஆபத் பந்துத்வ கீர்த்யா -பாரெல்லாம் வுண்ட நம் பாம்பணையான்
5-4-2-யதுகுல ஜன நாத் -காவிசேர் வண்ணன் என் கண்ணனும்
5-4-3-தீர வீரத்வ கீர்த்யா -காயும் கடுஞ்சிலை நம் காகுத்தன்
5-4-4-லோகாநாம் விக்ரமாச்ச -இம் மண்ணளந்த கண் பெரிய செவ்வாய்
5-4-5-ஆஸ்ரித துரித ஹ்ருதே -காரன்ன மேனி நம் கண்ணன்
5-4-6-அத்புதைச் சேஷ்டிதைச் ச – எம் மாயவனும் வாரானால்
5-4-7-/5-4-8–சக்ராத்யஸ் த்ரான் விதத்வாத் -தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் -கை வந்த சக்கரத்தன்
5-4-9-கமல நயநதா சம்பதா -செஞ்சுடர் தாமரை கட்செல்வன்
5-4-10-வாம நத்வாத் -அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான்
5-4-11-ஷீராப்தௌ சேஷசாயீ -உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் –

————————————————————————————————————————————————————————————–

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்கு லுடன் கூடி நின்று பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்கனேயோ –44

——————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: