திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–மாசறு சோதி–5-3-

இத் திருவாய் மொழியில் ஆழ்வார் மடலூர ஒருப்படுகிறார்
ஏறாளும் இறையோனும் -திருவாய் மொழியில் உண்டான காதல் மீண்டும் கிளர்ந்து எழுந்து
சம்ச்லேஷிக்க விரும்பி -அது நிறைவேறப் பெறாமையாலே மடலூர ஒருப்படுகிறார் –
அச்சமுறுத்தி கார்யம் கொள்ளப் பார்க்கிறார் –

கீழ்த் திருவாய் மொழியில்
வண்டார் தண்ணம் துழாய் மாதவன் -என்றும்
கரிய முகில் வண்ணன் அம்மான் கடல் வண்ணன் -என்றும்
மறுத் திரு மார்வன் அவன் -என்றும்
எம்பெருமான் உடைய மநோஹர திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்கையாலே
சம்ச்லேஷ அபி நிவேசம் பிறந்து
பெறாமையாலே மடலூர்கிறார் நாயதி சமாதியாலே
சாகரம் சோஷயிஷ்யாமி சாபமானய சௌமித்ரே பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா –
தோழி உலகு தோர் அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே -என்றும்
யாம் மடமின்றி தெருவுதோர் அயல் தையலார் நா மடங்கா பழி தூற்றி
நாடும் இரைக்கவே நாம் மடலூர்ந்தும் நம் ஆழி யங்கைப் பிரான் உடைத்
தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -என்றும்
அச்சம் உறுத்தின மாத்ரமே அன்றி முடிய நடத்தின பாடு இல்லை –
திரு மங்கை ஆழ்வாரும்
பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல் -என்றும்
உலகு அறிய ஊர்வன் நான் மன்னிய பூம் பெண்ணை மடல் –
என்று அச்சம் உறுத்தின அத்தனையே உள்ளது
நாயகி சமாதியிலே பேசும் திருவாய்மொழி
ஸ்வரூபம் அறிந்து ஆறி இல்லாமல் அதி பிரவ்ருத்தி செய்யும் இது
பிரேம பரவஸருக்கு இது அவத்யம் விளைக்கக் கூடியது இலையே
ஞானம் கனிந்த நலம் -பிராப்த அப்ராப்த விவேகம் விரஹத்தால் வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் ஹேயம் இல்லையே
இதுவும் சித்த உபாயனான எம்பெருமான் பண்ணி அருளிய க்ருஷியின் பலனே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -அன்றோ
நம்மை ஆசைப் பட்டு இங்கனம் துடிக்கப் பெறுகிறதே -அவன் திரு முகம் மலர உறுப்பாகுமே
கைங்கரத்துடன் ஒத்து உபேயத்தில் அந்தர்பூதமாயே இருக்கும்

——————————————————————————————————————————————————————————————

மாசறு சோதி என் செய்யவாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறுமூரவர் கவ்வை தோழீ என் செய்யுமே –5-3-1-

அறிவிழந்து எனை நாளையம் -அறிவும் இழக்கப் பெற்று எத்தனை காலம் இருப்போம்
ஸ்வரூப ஞானம் இழந்து எத்தனையோ நாள் ஆயிற்றே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அன்றே
போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு
திர்யக்கின் காலிலே விழுந்து
தூது விட்ட அன்று அது ஞான கார்யம் என்று இருந்தாயோ
இன்று இருந்து கற்பிக்கைக்கு
அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ
தன் பகலிலே கை வைத்தால் மற்று ஓன்று அறியாதபடி பண்ணும் விஷயம் இ றே
பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆரத் தோள் -என்னக் கடவது இ றே
பிராப்தி சமயத்தில் இவ்வருகு உள்ளவற்றை நினையாத படி
பண்ணுகை அன்றிக்கே ஞானம் பிறந்த சமயமே பிடித்தும்
இவ்வருகு உள்ளவற்றை நினையாமே பண்ண வல்ல
விஷயம் அன்றோ
தன்னையும் அனுசந்தித்து லோக யாத்ரையும் அனுசந்திக்கும் படியோ அவன் படி -ஈடு
ஏசறுமூரவர் கவ்வை -ஏசுவதற்கு என்றே அற்றுத் தீர்ந்த ஊராருடைய பழி மொழி
இதுவே நமக்கு தாரகம் அன்றோ
மடல் எடுக்கை மாசு என்கிறாள் தோழி
மடல் எடாது ஒழிகை மாசு என்கிறாள் இவள்
வ்யதிரேகத்தில் இப்படி ஆற்றாமை விளையாதாகில்
நாம் காண்கிற விஷயங்களோ பாதியாமே
வடிவிலே அணைந்தவள் ஆகையாலே
முற்பட வடிவிலே மண்டுகிறாள் -ஈடு
வடிவில் மட்டும் இல்லை -அகவாயில் சீலத்திலும் அகப்பட்டாள்-ஆசறு சீலன்
குற்றம் அற்ற சீலம் -கலக்கும் போது தன் பேறாக கலந்தபடி
பாசறவெய்தி-
பாசறவு -துக்கம் -அத்தை அடைந்து -அன்றிக்கே
பாசு அறவு -பசுமை நிறம் அழிந்து -வைவர்ண்யம் அடைந்து-அன்றிக்கே
பாசு -பாசம் -பந்துக்கள் பக்கல் பாசமின்றி -அன்றிக்கே
அற-முழுவது மிகவும் -அவன் பக்கம் முழுவதும் பாசம் வைத்து

———————————————————————————————————————————————————————————————-

என் செய்யுமூரவர் கவ்வை தோழீ யினி நம்மை
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப் பூர்ந்தவே –5-3-2-

பழி பரிஹரிக்கும் படியான நிலைமை யில் இல்லையே
இனி நம்மை -தனது வடிவைக் காட்டுகிறாள்
இனி என்னை -என்னாது நம்மை -தோழிக்கும் நிற வேறுபாடு உண்டே
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வராலோ –
வாயாலே மடல் எடுக்க வேண்டாம் என்றாலும் அவளுக்கும் இதே நிலைமை உண்டே
குளிர நோக்கி அருளி சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான்
என்னுடைய ஸ்த்ரீத்வத்தை புண்டரீக நயனம் காட்டி கொள்ளை கொண்டு போனான் புருஷோத்தமன்
முந்துற முன்னம் மாமை நிறம் இழந்தேன்
மீண்டு வந்தாலும் ஆஸ்ரயம் இல்லாதபடி மேனி சருகாயிற்றே
கலக்கும் போது இது ஒரு செய்ய வாய் இருந்தபடி என்
இது ஒரு கரும் கண் இருந்தபடி என்
அவன் வாய் வெருவும்படி கேட்டு இருக்கிறபடியால்
அந்த வாயும் கண்ணும் விவர்ணமாகப் பெற்றேன்
இந்த நிலைமைக்கு பின்பு ஊரார் பழி பரிஹரிக்கை என்ற ஒரு பொருள் உண்டோ

—————————————————————————————————————————————————————————————————–

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றி யோர் சொல்லிலேன்
தீர்ந்த வென் தோழீ என் செய்யுமூரவர் கவ்வையே –5-3-3-

அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களில் நெஞ்சை பறி கொடுத்தேன்
இவை எல்லாம் என்னை தனது பக்கல் ஈடுபடுத்த இளம் பிராயத்திலே செய்த செயல்கள் -தானே

இவளுக்கு தனது பக்கல் பிராவண்யத்தை
விளைக்கை
அவனுக்கு சத்தா பிரயுக்தம்
எங்கை -ஈடு

பேய் முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்-
பிள்ளைகள் முலை உண்ணப் புக்கால்
தாய்மார் முலைக்கீழே முழுசினவாறே பாசு சுரக்கும்
பின்னைப் பாலை உண்டு உபகார ச்ம்ருதியாலே முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ணும் யாயிற்று
அப்படியே பூதனையும் தாயாய் வந்து முலை கொடுக்கையாலே
இவனும் பிள்ளையாகவே முலைக்கு கீழே முழுசி முலை உண்டு
உபகார ச்ம்ருதியால் முகத்தைப் பார்த்து
அதரத்தில் பழுப்பு தோற்ற ஸ்மிதம் பண்ணி யாயிற்று முலை உண்டது -ஈடு –

என்னை நிறை கொண்டான்
ஒரு வ்யாபாரத்தாலே
இரண்டு ஸ்திரீ வதம் பண்ணினான்
தன்னை ஆசைப் பட்டாரில் உகவாதார்கே நன்றாய் யாயிற்று
அவளை நற்கொலையாக கொன்றான்
என்னை உயிர்க் கொலையாக கொல்லா நின்றான் -ஈடு –

இப்படி உயிர் கொலையாக கொள்ளும் விஷயத்தில் ஆசை வைப்பான் என் பெயர்ந்து போனால் ஆகாதோ -என்ன –
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றி யோர் சொல்லிலேன்
வேறு சொல் உடையேன் அல்லேன்
கேட்ட தோழி –
நாம் இவளை சேர்ப்பிக்க பட்ட பாடு சாமான்யம் அன்றே -இப்பொழுது நாமே மறப்பிக்க முயன்றாலும் மறவாதபடி என்னே என்று
உகக்க அத்தைக் கண்டவள் -தீர்ந்த வென் தோழீ-என்கிறாள்
கொண்டாடி அணைக்கிறாள்
பிராட்டி திருவடியை முதலில் இராவணன் விட்ட ஆள் என்று சங்கித்து
பின்பு பெருமாள் பக்கலில் நின்றும் வந்தவன் என்று அறிந்து உகந்தது போலே

——————————————————————————————————————————————————————————————————————-

ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செயுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5-3-4–

ஈர நெல் வித்தி –ஆசையாகிய நெல்லை விதைத்து
கடியனே -கடியன் அல்லன்
ஆழ்வார் நெஞ்சு -பெரிய வயல்
பக்தி உழவன் காதல் பயிரை வளர்த்த கிருஷி பலன்
பழி சொல்லாது இருந்தார்களே யாகில் பகவத் விஷயத்தை உபேஷித்து இருப்பாள் போலும்
எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் –
அன்னை ஹித வசனமே தண்ணீர் பாய்ச்சினது போலே
எரு அடியிலே ஒரு கால் இட்டு விடுவது
நீர் மாறாமல் பாய்ச்சப் படுவது
முளைத்த நெஞ்சப் பெரும் செயுள்
முளைப்பித்த -நஞ்சீயர் திரு உள்ளம் -அவன் அருள் இன்றியமையாதது

பெரும் செயுள்
சம்ச்லேஷ விச்லேஷங்களால்
புடை படுத்தி
நித்ய விபூதியோபாதி
பரப்புடைத்தாம் படி
பெருக்கினான் ஆயிற்று -ஈடு

பேரமர்காதல் –
பெரியதாய் அமர்ந்ததான காதல்
அமர் பூசல் பெரியதான பூசலை விளைத்த காதல் என்னவுமாம்

இப்படி செய்து அருளினவனை நிர்த்தயன் என்னலாமோ
பெரும் பாழில் ஷேத்ரஞ்ஞன் பெருஞ்செய் -சூர்ணிகை நாயனார் இந்த பாசுரம் கொண்டே அருளிச் செய்கிறார்
ஊரவர் கவ்வை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந்நோய் -வள்ளுவர்

———————————————————————————————————————————————————————————————————————

கடியன் கொடியன் நெடியமால் உலகம் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தான் ஆகிலும்
கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொளிடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே –5-3-5-

குணஹானியையும் என் வாயால் சொல்ல நீ கேளாய் -பீடிகை உடன்
கடியன் -என்கிறாள் கனவேகம் உடையவன் தனது கார்யத்தில்
கொடியன் -நோவே பாராதே பிரியுமவன்
நெடியமால் -மிகவும் பெரியவன் -அளவிட ஒண்ணாதவன் -பிரிந்தால் விலக்க முடியாமல் கூசி நடுங்கி இருக்க வேண்டுமே
உலகம் கொண்ட அடியன் -ஒரு அடியும் சேஷியாமல் பாதாளத்தில் தள்ளுமவன்
அறிவரு மேனி மாயத்தான் -நானும் என் உடைமையும் நீ இட்ட வழக்கு என்ற இவ்வுக்தியை அனுசந்தித்து
அதிலே நெஞ்சு அபஹ்ருதமாய் இருக்க
அவ்வளவிலே கண்ணிலே மணலைத் தூவி அகலுபவன் -ஈடு
குணஹானிகள் சொல்லப் பிறந்த சிசுபாலாதிகளாலும் என்னைப் போலே சொல்லப் போகாதே
கொடிய என்நெஞ்சம்
குணங்கள் கண்டு பற்றுவதும் குணஹானி கண்டு விலகுவதும் நாட்டார்படி
குணஹானி அன்றோ பற்றுவதற்கு எனக்கு ஹேது
அவன் என்றே கிடக்கும்
தத் சம்பந்தமே உபாதேயம்
குணஹானியில் நோக்கின்றி தர்மியான அவன் மேலேயே நோக்கு என்றுமாம்
நிர்விசேஷ சின்மாத்ரம் ப்ரஹ்ம-மாயா வாதிகள் விசேஷணம் அற்ற விசேஷ்ய அம்சத்தை அங்கீ கரிக்குமா போலே
ஸ்ரீ வசன பூஷணம் -பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று -ஸ்வரூப ப்ராப்தம் -என்று
இப்படி கொள்ளாத பொது குணஹீனம் என்று நினைத்த தசையில் பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில் சம்சாரத்தில் பிரவ்ருத்தியும் கூடாது
கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்னா நின்றார்கள் இ றே
குண க்ருத தாஸ்யத்தில் காட்டிலும் ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இ றே பிரதானம் –
அந ஸூ யைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை ஸ்மரிப்பது-
இத்தைக் கேட்ட தோழி நான் விலக்குகிறேன் அல்லேன்
தாயார் வெறுக்கும் என்று சொன்னேன் -என்ன
அன்னை என் செய்யுமே -என்கிறாள் –
உன் வார்த்தை கேளாத நானோ தாயார் வார்த்தை கேட்பேன் –
அந்நிலை கழிந்தது இல்லையோ என்கிறாள் -அன்னை என் செய்யுமே –

————————————————————————————————————————————————————————————————————————

அன்னை என் செய்யிலென் ஊர் என் சொல்லில் என் தோழிமீர்
என்னை யினி யுமக்காசை யில்லை அகப்பட்டேன்
முன்னை யமரர் முதல்வன் வண்துவராபதி மன்னன்
மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே –5-3-6-

அன்னை என் செய்யிலென்-தாயார் முடிவதையும் கணிசியாமல் இவள் நாயகன் உடைய வடிவு அழகிலே ஈடுபட்டாள் என்று
ஊரார் பழி சொன்னால் என்ன ஆகும்
வாசுதேவன் ஆகிற வலையிலே அகப்பட்டேன்
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேன் -ஆண்டாள்
எம்பெருமான் உடைய வலை -திருக் கண்கள் ஆகிற வலை -என்றுமாம் –
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் -என்பர் மேலே

ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் வழியாக அபி நயித்துப் பாடா நிற்க
திருக் கண்களைக் காட்டி அருளினார் எம்பெருமானார்
கார்த் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு -எண்ணக் கடவது இ றே
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன் -ஈடு

————————————————————————————————————————————————————————————————————————————

வலையுள் அகப்படுத்து என்னை நன்னெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடல் பள்ளி யம்மானை ஆழிப்பிரான் தன்னை
கலைகொள் அகலல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவுமாம் கொலோ தையலார் முன்பே –5-3-7-

என்னை தன்னுடைய குண சேஷ்டிதங்களால் வலைப்படுத்திக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டு அருளி இருக்கும் பெருமானை
குணஹானி சொல்லும் இவர்கள் முன்னே
நம் கண்களால் கண்டு தலையாலே வணங்கப் பெறுவோமோ –
ராஜேந்திர சோழன் என்கிற இடத்தில் கூரத் ஆழ்வான் இப்பாசுரத்தை உபன்யாசித்து இருக்கும் பொழுது
ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார் என்று நூறு பிராயம் போந்து இருப்பார் ஒரு பெரியவர்
நடுங்க நடுங்க எழுந்து இருந்து நின்று
ஸ்வாமின் தலை மகள் தலையால் வணங்கப் பெறுமோ -என்று கேட்க
அதற்கு ஆழ்வான் -இதில் என்ன சந்தேஹம்
சிஷ்டாச்சாரம் உண்டே
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் அனுஷ்டித்தாள் காணும் –
கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூ ஷூ வேயம் மனச்வி நீ
தம் மமார்த்தே ஸூ கம் ப்ருச்ச சிரஸா சபிவாதய –
திருப்பாதுகை பெருமாளை பிரிந்து ராஜ்யாபிஷேகம் பெற்றது
பிராட்டி பெருமாளைப் பிரிந்து எழுநூறு ராஷசிகள் நடுவில் வருந்த
பத்தினி முறையால் பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா -தந்தையின் கட்டளைப்படி
திருக்கையை பிடித்தால் திருப்பாதுகை பெற்ற சிறப்பு பெற வில்லை என்று ஆராய்ந்து
ஆச்சார்யா முகேன திருவடி சம்பந்தம் பெற சிரஸா சபிவாதய-என்று சொல்லி அனுப்பினாள்
இது தான் பிரணய ரோஷம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ
அபேஷை தொடரச் சொல்லுகிற வார்த்தையோ
என்று தொடங்கி உள்ள ஈட்டு ஸ்ரீ ஸூ கதிகளில் இது விவஷிதம் –

——————————————————————————————————————————————————————————————————–

பேய் முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை எந்நாள் கொலோ
யாமுறு கின்றது தோழீ அன்னையர் நாணவே –5-3-8-

பரோபகார சீலத்வம் ஜன்ம சித்தம் எம்பெருமானுக்கு –

இப்போது அவனை ஸ்பர்சித்து நம் பிரயோஜனம் பெற ஆசைப் படுகிறோம் அல்லோம்
அன்னையர் நாணவே
பிரிந்த அநந்தரம் அவன் தானே வரும் அளவும் ஆறி இருந்திலள்
அவன் தானும் வரவு தாழ்த்தான்
என்று இரண்டு தலைக்கும் பழி சொல்லுகிற தாய்மார் முன்பே
நாம் இத்தலை மடல் எடுக்கும் அளவாம்படி பிற்பாடர் ஆனோம் ஆகாதே என்று
ஹ்ரீரேஷாஹி மமாதுலா -என்கிறபடியே
அவன் லஜ்ஜித்து வந்து நிற்கிறபடியைக் கண்டு
இவனையோ நாம் வார்த்தை சொல்லிற்று -என்று
அவர்கள் லஜ்ஜித்து கவிழ் தலை இடும்படியாக -ஈடு

—————————————————————————————————————————————————————————————————————–

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்னெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவபிரான் தன்னை
ஆணை யென் தோழீ உலகு தோரலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே –5-3-9-

ஆம் கோணைகள் செய்து-செய்யக் கூடிய மிறுக்குகளைச் செய்து
குதிரியாய் -அடங்காப் பெண்ணாய் -கு ஸ்திரீ –
வாசல் விட்டுப் புறப்படாது இருக்கும் இருப்பு -நாண்
தாய்மாருக்கும் சொல்ல ஒண்ணாக படி இருக்கும் அடக்கம் -நிறை
இவை இரண்டையும் கொள்ளை கொண்டது -அதி மாத்திர ப்ராவண்யம் விளைவித்தான்
நெஞ்சமும் ஸ்வா தீனமாய் இல்லை -அத்தையும் தனது பக்கலிலே நொடித்துக் கொண்டான்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -ஊற்றம் மிக்கு இருப்பதால் நன்னெஞ்சம்
கீழே அலை கடல் பள்ளி அம்மான் -கையும் மடலுமே இவள் வந்து நிற்கக் கூடும் என்று
சேணுயர் வானத்து இருக்கும் தேவபிரான் தன்னை
எட்டாத நிலத்தில் போய் இருக்க
எனக்குச் சென்றால் என்ன
ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்-தப்ப முடியுமோ
ஆணை இட்டுச் சொல்கிறேன்
அவ்வோலக்கமும்
அவனும்
அவ்விருப்பும்
எனது கையிலே படப் புகுகிற பாடு பாராய்

—————————————————————————————————————————————————————————————————

யாமடலூர்ந்தும் எம்மாழி யங்கைப்பிரானுடை
தூமடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடமின்றித் தெருவுதோர் அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே–5-3-10-

யாம் -ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிற படி
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -போன்ற ஸ்வரூபம் ஆக இருக்க வேண்டிய நாண்
ஆறி இருக்க முடியாமல் -யாமடலூர்ந்தும்-

எம்மாழி யங்கைப்பிரானுடை-
அவன் கையும் திரு ஆழியும் போலே அன்றோ
நான் கையும் மடலுமாக புறப்பட்டால் இருப்பது
நான் கையும் மடலுமாக புறப்பட்டால் அஞ்சி எதிரே வந்து
தன் கையில் ஆபரணத்தை வாங்கி
என் கையிலே இட்டு
தன் தோளில் மாலையை வாங்கி
என் தோளில் இட்டான் ஆகில் குடி இருக்கிறான்
இல்லையாகில் எல்லாம் இல்லை யாகிறது -ஈடு

எம்பெருமான் இடம் தாம் பெற நினைப்பது திருத் துழாய் பிரசாதம் ஒன்றே
யாமடம் என்றது ஏதேனும் ஒரு மடப்பம் -பன்னீராயிரப்படி
நா மடங்கா -மடங்குதல் ஓய்தல் -நாக்கு ஓயாதே சொல்லும் பழி மொழி
-நாம் அடங்கா –

————————————————————————————————————————————————————————————————

இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள்பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓராயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –5-3-11–

என்னைப் போலே மடலூர வேண்டாதே
தாங்கள் இருக்கும் இடத்தே எம்பெருமான் தானே வந்து
நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவார்
இரைக்கும் கரும் கடல்வண்ணன்
-நிறத்துக்கும் தன்மைக்கும் –
நிறம் -மடலூர்ந்தாலும் பெற வேண்டிய வடிவு அழகு

அனந்தாழ்வான் பணித்தானாக நஞ்சீயர் வந்து பட்டருக்கு சாபமாநய சௌமித்ரே- என்ற போது
கடல் கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தால் போலே ஆயிற்று
இவள் மடலூர்வன் என்ற துணிவைக் கேட்டு அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கின படி -என்று அருளிச் செய்தார் என்று -ஈடு
இத்தன்மையில் சாம்யம் -என்றதாயிற்று

வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம்
உத்தேச்ய பூமி பரமபதமாகும்
இருந்த இடமே பரமபதம் ஆகும்
நாடறிய மடலூர வேண்டா

———————————————————————————————————————————————————————————————————————

த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –

பகவான் ஸ்வா நாம் அதி மாத்ரம் ப்ரேமஜ நயதி இதி சடாரி அவாதீத் –
5-3-1-ஜ்யோதீ ரூபாங்க கத்வாத்-மாசறு சோதி
5-3-2-சரசிஜ நயன கத்வாத் -என் செய்ய தாமரைக் கண்ணன்
5-3-3-அநிஷ்ட வித்வம்ச கத்வாத் -ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்
5-3-4-மேகௌக ச்யாமலத்வாத் -காரார் மேனி நம் கண்ணன்
5-3-5-ச்ரித சரச தயா -என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
5-3-6-உத்க்ருஷ்ட சௌலப்ய யோகாத் -வண் துவராபதி மன்னன்
5-3-7-ரஷாயாம் சாவதா நாத் -அலை கடல் பள்ளி யம்மானை
5-3-8- ஸூ பகத நுதய-தூ முறுவல் தொண்டை வாய்ப்பிரானை
5-3-9–சோபகாரத்வாத்-தேவபிரான் தன்னை
5-3-10-அஸ்த்ரவத்வாத் -எம் ஆழி அங்கைப் பிரானுடை

———————————————————————————————————————————————————————————————————————-

மாசறு சோதிக் கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் -ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உண்ணடுங்கத் தான் பிறந்த ஊர் –43

ஏசவே -என்றும் பாடபேதம்
உள் + நடுங்க- உண்ணடுங்க

—————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: