திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–ஒன்றும் தேவும்–4-10-

கீழ் திருவாய் மொழியில் ஆர்த்தி தலை எடுத்து கதற திருநாட்டில் இருக்கும் இருப்பை காட்டி அருள
சமாஹிதர் ஆனார்
ஆழ்வாரைக் கொண்டு உபதேசங்கள் பண்ணுவித்து நாட்டாரை எல்லாரையும் திருத்த திரு உள்ளம் பற்றியதை நினைப்பூட்டி அருளினான்
சம்சாரிகள் பரத்வத்தை அறியாப் பெறாமல் தேவதாந்தர பக்கல் வ்யாமோஹம் கண்டு இருந்தததால்
எம்பெருமான் உடைய பரத்வத்தையும்
இதர தெய்வங்களின் நிஹீனத்வத்தையும்
நன்கு உணர்த்தி உபதேசம் செய்து அருளுகிறார் இதில்
அர்ச்சாவதார பரத்வத்தை இதில் அருளிச் செய்கிறார்
சாஸ்திரங்கள் கொண்டு பரிசீலிக்கும் முன்பே திருமேனி அமைப்பை நோக்கியே அறியலாமே ஜகத் காரண பூதன் இவன் ஒருவனே என்று
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தே அன்றே
புகரிலகு தாமரையின் பூ -பெரிய திருவந்தாதி -72
வேதாந்தம்
சத்
ஆத்மா
ப்ரஹ்ம
சப்தங்களால் சொல்லி நாராயண விசேஷ சப்தத்திலே கீழ் சொன்னவை பர்யவசித்து
சிரமப்பட்டு பரதவ நிர்ணயம் பண்ண வேண்டி இருக்கும்
அர்ச்சயஸ் சர்வ சஹிஷ்ணுஸ் சகபராதீன அகிலாத் மஸ்திதி
இப்படி எளியவனாய் உள்ளவனை பணிந்து உஜ்ஜீவித்து போகாமல் அனர்த்தப் பட்டு போகிறீர்களே

உலகில் பலர் பல சாஸ்திர அர்த்தங்களை கற்று வைத்தும் பரத்வம் இன்னது என்று துணிய மாட்டாமல்
பல தெய்வங்கள் காலிலும் குனிகின்றார்கள்
நம் எம்பெருமான் உடைய திருவடி சம்பந்தம் பெற்றவர்கள் எத்தனையேனும் கல்வி அறிவு இல்லாதவர்களாய் இருந்தாலும் கூட
தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக நினைத்து இருப்பார்கள்
இதற்க்கு காரணம் பர காருணிகரான நம் ஆழ்வார் ஒன்றும் தேவும் என்கிற இத் திருவாய் மொழியை
அருளிச் செய்து வைத்ததே யாம்
என்று எம்பார் அருளிச் செய்வாராம்-

——————————————————————————————————————————————————————————————————————————

ஒன்றும் தேவும் வுலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா
வன்று நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள்
நின்ற வாதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –4-10-1-

சகல ஜகத் காரணன் எளியனாய் சேவை சாதிக்க அறிவு கெட்டு வேறு தெய்வத்தை நாடி ஓடுகிறீர்களே
ஒன்றும் இல்லாத அன்று
ஒன்றுதல் பொருந்துதல் லயித்தல் என்றுமாம்
சதுர்முகனை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான்
சதுர்முகன் பஞ்ச முகனை சிருஷ்டித்தான்
பஞ்சமுகன் ஷண்முகனை சிருஷ்டித்தான்
ஆக இது தான் பஹூ முகமாயிற்றுக் காணும் -ஈடு
நம்மைக் காண வருவார் ஆரேனும் உண்டோ என்று எளியனாய் இவன்நிற்க –
கேட்டீரே நம்பி மீர்கள் கெருட வாகனும் நிற்க சேட்டை தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே –
வாசூதேவம் பரித்யஜ்ய யோ அன்யம் தேவம் உபாசிதே
த்ருஷிதோ ஜாஹ் நவீதீரே கூபம் கனதி துர்மதி
தாஹித்தவன் அது தீர கங்கை கரையிலே கிணறு வெட்டும் துர்மதிகளே

———————————————————————————————————————————————————————————————————————————-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி யுறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனை
பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே–4-10-2-

கார்ய பூதர்கள் அனைவரும்
நாடுதல் -தேடுதல்
சாஸ்திரம் காரண வஸ்துவை தேடச் சொல்ல அந்தோ நீங்கள் கார்ய வர்க்கங்கள் பின்னே நாடிச் செல்கின்றீர்களே
எம்பெருமான் உங்களை தேடா நிற்க நீங்கள் நீசர்களை தேடி ஓடா நிற்கின்றீர்களே
கள்ளரைத் தேடித் பிடிக்குமா போலே
தேடித் பிடிக்க வேண்டி இருக்கிறபடி
ஆடு திருடின கள்ளர்கள் இ றே இவர்கள் – தாம் -ஈடு
ஜீவா ஹிம்சையை ஆராதனமாகக் கூண்ட சூத்திர தேவதைகளை பற்றி
வீடில் சீர்ப் புகழ் -செல்வம் /குணம் -குறையாத செல்வம் -நித்ய சித்த குணங்கள் –
அவன் மேவி யுறை கோயில்-அவன் பரம பதத்திலே உள் வெதுப்போடே காணும் இருப்பது
சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து
இவை என் படுகிறதோ என்று திரு உள்ளத்தில் வெறுப்போடு யாயிற்று அங்கு இருப்பது -ஈடு
பரம பதத்திலும் சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து திரு உள்ளத்தில் வெறுப்போடு யாயிற்று
எழுந்து அருளி இருப்பது -என்று பட்டர் அருளிச் செய்ய
ஆச்சானும் பிள்ளை ஆழ்வானும் இத்தைக் கேட்டு
பரம பதத்தில் ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் இருப்பில் இங்கனே கிலேசம் உடன் இருந்தான் என்னில் உசிதமோ என்றார்கள்
என்று பண்டிதர் என்கிறவர் வந்து விண்ணப்பம் செய்ய
வியசனேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம்பவதி துக்கித -என்று
குணா பிரகரணத்திலேயோ தோஷ பிரகரணத்திலேயோ என்று கேட்க மாட்டிற்றிலரோ
இது குணமாகில் குணம் என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஓன்று உண்டோ –என்று அருளிச் செய்தார் –
மேவி உறைதல் -ஆசையுடன் வாழ்தல் –
சமஸ்த கல்யாண குணாம்ருதோததி –
சகஸ்ரநாமம் விகாரத்தா -தமக்காக இன்ப துன்பங்கள் இல்லாமல் இருந்தும்
பிறர் இன்ப துன்பங்களை அனுபவித்தாலும் தாமும் இன்ப துன்பங்களை அனுபவித்து விகாரப் படுகிறவர் –
இந்த விகாரம் பிறர் இடத்தில் அன்பு பற்றி வருவதால் குர்த்ரம் ஆகாது
முதல் பாசுரத்தில் -திருக் குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் -என்றவர்
இங்கே திருக் குருகூர் அதனை பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள் -என்கிறார்
எம்பெருமானைக் காட்டிலும் அவன் உகந்து அருளின இடமே பரம பிராப்யம் –
சென்று செவிப்பதில் காட்டில் வழிப் போக்கு தானே இனிதாகையாலே பாடி ஆடிச் சென்று பரவுமின்களே -என்கிறார்
பரந்தே-பெரிய திரு நாளுக்கு
சர்வதோ திக்கமாக வந்தேறுமா போலே
நாநா திக்கமாக பாடி யாடிப் பரவிச் சென்மின்கள் -ஈடு –

—————————————————————————————————————————————————————————————————————————–

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக் குருகூர் அதனுள்
பரன் திறமஅன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே —4-10-3-

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பேரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்டதும்
பிறகு வெளிநாடு காணப் புறப்பட விட்டாலும்
வாமனாவதாரம் பண்ணி மூவடி நீரேற்று அளந்து கொண்டதும்
மகா வராஹமாய் அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொண்டதும்
இவற்றால் இவனே பரதேவதை என்று திண்ணமாய் இருக்க
அந்தோ தெளிய வில்லையே நீங்கள்
நீங்கள் ஆஸ்ரயணீயராக கொள்ளும் அந்த தெய்வங்களும் வந்து தலையால் வணங்கும்படி
பரத்வம் பொலிய நிற்கும் பெருமானுக்கு சரீரம் இல்லாத தெய்வம் மற்று உண்டோ –

——————————————————————————————————————————————————————————————————————————

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேசமா மதிள் சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனுள்
ஈசன் பாலோர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே –4-10-4-

இலிங்கியர்க்கே -லிங்க பிரமாண வாதிகளுக்கு -லிங்கம் -ஹேது -அனுமானம் –
பேச நின்ற -சிவனுக்கும் பிரமனுக்கும் அடைமொழி
சில மூலைகளில் வசன உக்திகள் இருந்தாலும்
ஸ்ருதஜஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூ ர்ய சமப்ரபம்
நாப்யாம் விநிஸ் ஸ்ருதம் பூர்வம் தத்ரோத்பன்ன பிதாமஹ -என்றும்
யத்தத் பத்மமபூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யஜாயத ப்ரஹ்மணர் சாபி சம்பூதச் சிவ இத்யவதர்யதாம் -என்றும்
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா ஸ்ரேஷ்டாயா -என்றும்
மகாதேவஸ் சர்வமேதே மகாத்மா ஹூத்வா ஆத்மானம் தேவ தேவோ பபூவ -என்றும்
பல பிரமாணங்கள் நிர்ணயத்தது போலே போலேசிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே என்கிறார்
நீங்கள் ஈச்வரர்களாக சங்கித்தவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டதே
ஒருவன் தலை கெட்டு நின்றான்
ஒருவன் ஓடு கொண்டு பிராயச்சித்தியாய் நின்றான்
ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள்
உங்களிலும் பெரும் குறை வாளரையோ பற்றுவது
பாதகியாய் பிஷை புக்குத் திரிந்தான் என்று நீங்களே சொல்லி வைத்து அவனுக்கு பரத்வத்தை சொல்லவோ
ஒருவனுடைய ஈச்வரத்வம் தலையோடு போயிற்று
மற்றவனுடைய ஈச்வரத்வம் அவன் கை ஓடே என்று காட்டிக் கொடுக்கிறார் கண்டு கொண்மின் –
உந்தம் அகங்களிலே நீங்கள் எழுதி இட்டு வைத்த கிரந்தங்களை பார்த்துக் கொள்ள மாட்டிகோளோ
முன்னே நின்று பிதற்றாதே என்கிறார்-ஈடு
தேஜஸ் நிறைந்த திரு மதிள்களால் சூழப் பட்ட அழகிய திரு நகரியிலே நிற்கிற சர்வேஸ்வரன் பக்கலிலே
குறை கூறும்படியான தௌர்பாக்யம் உண்டாவதே என்று வெறுக்கிறார்

—————————————————————————————————————————————————————————————————————-

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினோ -4-10-5-

புராணங்கள் ராஜஸ தாமஸ சாத்விக -மூன்று வகை உண்டே
அக்நேஸ் சிவஸ்ய மகாத்மயம் தாமசேஷூ பிரகீர்த்திதம்
ராஷசேஷூ சமகாத்ம்யம் அதிகம் ப்ராஹ்மணோவிது
சாத்விகேஷ்வாத கல்பேஷூ மகாத்மியம் அதிகம் ஹரே சங்கீர்னேஷூ சாஸ்வத்யா பித்ரூணாம் ச நிகத்யதே –
ஸ்ரீ விஷ்ணு புராணம் பொதுவிலே ஆரம்பித்து
யன்மயம் ச ஜகத் ப்ரஹ்மன் எதைச் சைதச் சராசரம் லீனமாசீத் யதா யத்ர லயமேஷ்யதி யதா ச -என்று
விஷ்னோஸ் சகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் -ஸ்திதி சம்சய கர்த்தா சௌ ஜகதோச்ய ஜகச் ச ச -என்ற பதில்
இப்படி இல்லாமல் எருமையை யானையாக கவி பாடித் தர வேணும் என்பாரைப் போலே
லிங்கத்துக்கு பெருமை இட்டுச் சொல்ல வேணும் -என்று கேள்வியாய் அதனால் பிறந்த லிங்க புராணம் –
எம்பெருமானே அந்தராத்மா -திரிபுரம் எரித்த வரலாற்றிலே புரியும்
பொலிந்து நின்ற பிரான் -இங்கே தான் திருக் குணங்கள் நன்கு விளங்கப் பெற்று இருக்கும் –

——————————————————————————————————————————————————————————————————————————-

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை யின்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக் குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஒடுமினே –4-10-6-

எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே-இதற்க்கு ஆபாத பிரதீதியில் லீலா விபூதி இல்லாமல் போகும்
இப்பொருள் எம்பெருமானுக்கு அவத்யம் விளைவிக்கும்
உலகு -சாஸ்திர மரியாதை -கர்ம அனுகுணமாக -என்பதே பூர்வர்கள் நிர்வாஹம்
மமமாயா துரத்யயா -தப்ப ஒண்ணாத மாயையை அவன் திருவடிகளை கட்டியே தப்பப் பாருங்கோள்-

—————————————————————————————————————————————————————————————————–

ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூர் அதனுள்
ஆடு புட்கொடியாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –4-10-7-

மற்றோர் தெய்வம் பாடி ஆடி பணிந்ததற்கு
ஓடி ஓடி பல பிறப்பும் பிறப்பதே -பலனாகும்
ப்ரஹமாணம் சித்தி கண்டம் ச யாச் சான்யா தேவதா ஸ்ம்ருதா பிரதிபுத்தா க சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –
ஆடும் கருடக்கொடி
ஆடி -வெற்றி என்றுமாம்

————————————————————————————————————————————————————————————————–

புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே
கொக்கலர் தடம் தாழை வேலித் திருக் குருகூர் அதனுள்
மிக்க வாதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே –4-10-8-

மிருகண்டு புத்திரன் மார்கண்டேயன்
பித்ரு பக்தோசி விப்ரேஷ -மாஞ்சைவ சரணம் கத -ஸ்ரீ மன் நாராயணனை சரணம் புகுந்தான்
ஆராதயன் ஹ்ருஷீகேசம் ஜிக்யேம்ருத்யம் ஸூ துர்ஜயம் -என்றான்
அன்று உய்யக் கொண்டதும் –
பிரளய தசையிலே பிழைப்பித்து பகவத் பரனாக்கி உஜ்ஜீவித்து -பன்னீராயிரப்படி
நாராயணன் அருளே –
நீ நெடுநாள் பச்சை இட்டு ஆஸ்ரயித்தாய்
அவ்வஸ்ராயணம் வெறுமனே போயிற்றதாக ஒண்ணாது என்று அவனை அழைத்து
நானும் உன்னோபாதி ஒருவனை ஆஸ்ரயித்து காண் இப்பதம் பெற்றது
இனி ஊண் கெடுத்தல் உபதேசம் கொடுத்தல் இ றே என்று சொல்லி அவனைக் கொடு பொய்
சர்வேஸ்வரன் பக்கலிலே காட்டிக் கொடுத்தான் ஆயிற்று -ஈடு –

————————————————————————————————————————————————————————————————————

விளம்பும் அறுசமயமும் அவையாகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியனாகிய ஆதிப் பிரான் அமரும்
வளம் கொள் தண் பனை சூழ்ந்து அழகாய திருக் குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–4-10-9-
வேத பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ் தர்க்கங்களால் அழிக்க ஒண்ணாத ஐஸ்வர்யம் உடைய
எம்பெருமான் எழுந்து அருளி
இருக்கும் திரு நகரியை ஆஸ்ரயிங்கோள்
இருவகுப்பினரும் துல்ய யோக ஷேமர்
கானல் நீரை கண்டு மயங்கும் ஒன்றும் வழியிடையிலே கொடிய ஜந்துக்களால் பஷிக்கப் பட
இழிய வேண்டிய துறையில் இழியாமல் துறை தப்பி ஜல ஜந்துவால் பஷிக்கப்பட
விளம்பும் ஆறு சமயம் –சாக்ய-உலுக்ய -அஷபாத- ஷபணi கபில -பதஞ்சலி
சாக்யர் பௌத்தர்–உலுக்யர் சார்வாகர் -ஆஷாபாதர் -கௌதமர் சொல்லி நையாயிக -வைசேஷிகர்களை நினைக்கிறது
ஷபணர் -ஜைனர்
அவியாகிய மற்றும் -அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகள்
அவையாகியும் மற்றும் -பன்னீராயிரப்படி -அவையாகியும் -சபையாக திரண்டாலும்
மற்றும் -குத்ருஷ்டிகள் என்பர்
விளம்பும் -அர்த்தம் இல்லாத வெறும் சொற்களை சொல்லும் இவை இரண்டும்

—————————————————————————————————————————————————————————————————————————-

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவில் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்போடு ஓங்கு திருக் குருகூர் அதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே–4-10-10-

ஆட்செவதே உறுவதாகும்
அனைத்தும் அசாதாரண விக்ரஹம் போலே தனக்கு விதேயமாய் இருக்கும்
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாத்மநா ஸ்வார்ததே
நியந்தும்
தாரயிதுஞ்ச
சக்யம்
தத் சேஷைதைக
ஸ்வ ரூபஞ்ச
தத் தஸ்ய சரீரம் -சரீர லஷணம்
மறுவின் மூர்த்தி -மறு -ஸ்ரீ வத்சம் -அதனை உடைய திரு மேனி
அவத்யமாய் -ஹேய ப்ரத்ய நீகன் என்றபடி
செறு-விளை நிலம்

—————————————————————————————————————————————————————————————

ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சியின்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –4-10-11-

ஆட்செய்து -உபதேச முகத்தால் சம்சாரிகளை திருத்தும் முகமாக கைங்கர்யத்தைப் பண்ணி
அழகைக் காட்டி ஆட்கொண்ட உபகாரகன் -ஆழிப் பிரான் –
அடிமை தான் த்ரிவிதம்
மானஸ வாசிக காயிகங்கள்
இவற்றில் மானஸ காயிகங்களுக்கு ஆள் அல்லர் –என்றியவென்னில்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்கையாலே
இனி வாசிகம் ஒன்றுமே யானால் வாசிகமாக திருவாய்மொழி பாடி அடிமை செய்கிறாரோ என்னில் -அன்று
அப்படியாம் அன்று இப்பாசுரம் –
முனியே நான்முகனிலே யாக வேணும்
இல்லையாகில் இவர் வாசிகமாக அடிமை செய்கிற புகழு நல் ஒருவனில் யாகப் பெறில் முக்கியம்
ஆனால் தேவதாந்திர பரதவ நிரசன பூர்வகமாக சர்வேஸ்வரன் உடைய
பரத்வத்தை அருளிச்செய்கையாலே ஆனாலோ என்னில்
அதுவாகில் முதல் திருவாய்மொழி யிலே அமையும்
பரதவ நிர்ணயத்தில் பரோபதேசம் ஆகையாலே ஆனாலோ என்னில்
அது திண்ணன் வீட்டிலே யாதல் அணைவது அரவணை மேல் ஆதலாக அமையும்
ஆனால் அர்ச்சாவதாரத்தில் பரத்வம் அருளிச் செய்கையாலே யானாலோ என்னில் அதுவும் ஒண்ணாது
அது செய்ய தாமரை கண்ணனிலே யாக அமையும்
பரோபதேசம் பண்ணினதால் சொல்லிற்று ஆனாலோ என்னில் அதுவும் ஒண்ணாது
வீடுமின் தொடங்கி பல இடங்களிலும் பரோபதேசம் பண்ணினார்
அவற்றிலும் ஆகப் பெற்றது இல்லை
ஆனால் ஏதாவது என்னில் -இவ் வொன்றும் தேவிலே
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே என்று
பொலிந்து நின்றபிரானே சர்வ ஸ்மாத் பரன் என்று இவர் அருளிச் செய்யக் கெட்டு
கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் -என்னக் கண்டு ஜகத்தாக திருந்தி ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆயிற்று
இவர் தாம் அவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணும் படி இ றே அவர்கள் தாம் திருந்தின படி

பொலிக பொலிக என்று இதுக்கு என்ன ஒரு திருவாய்மொழி நேருகிறார் இ றே
சர்வேஸ்வரன் அவதரித்து திருத்தப் பார்த்த இடத்தும் திருந்தாத சம்சாரத்திலே இவர் திருத்தத் திருந்தின படி
இனி இவர்க்கு தத்வ நிர்ணயம் பண்ண வேண்டாதபடி –
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைய பூதங்களே யாம்படி
திருத்துகையாலே ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன் -என்கிறார் -ஈடு
இந்த நன்மைக்கு அடி
நல்லார் நவில் திருக் குருகூரில் பிறப்பு -வண் குருகூர் நகரான் -` நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன்-பரிமளம் மாறாத மகிழ மாலையை திரு மார்பிலே அணிந்தவரும்
வகுளா பரணர் -வகுள பூஷணர்–மகிழ் மாலை மார்பினர் –
யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாசிதம் சுருதி நாம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாச்மஹி -யதிராஜ சப்ததி
வேட்கையால் சொன்ன பாடல்
பக்தி பலாத்காரத்தாலே பரவசமாக திருவாய் மொழி பணித்தார்
நீர் பால் நெய் அமுதாய்
நிரம்பின ஏரி நெளிக்குமா போலே
பரபக்தியாதிமய ஜ்ஞானம் அம்ருதாப்தி நிமிகிற வாய்கரை மிடைந்து
மொழி பட்டு அவாவில் அந்தாதியாய் பேர் பெற்றது -நாயனார்
வைகுந்த மாநகர் மற்றது
மற்று -அசைச் சொல்லாய் வைகுந்த மா நகர் ஆகிய அவ்விடம்
அன்றிக்கே
வைகுந்த மா நகர் நித்ய விபூதியும்
மற்று லீலா விபூதியும்
உபய விபூதி சாம்ராஜ்யம் உண்டாகும் –

——————————————————————————————————————————————————————————————————————————————–

ஒன்றுமிலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆருமறியவே நன்றாக
மூதலித்துப் பேசி யருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை -40-

———————————————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: