பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -11-20–திவ்யார்த்த தீபிகை –

பாசுரம் செய்து அருள- தூண்டி விட்டான்-தமது முயற்சி இல்லாமல் வாய் பேச
தேன வினா த்ருணாக்ரமாபி ந சலகி -அவனை விட்டு துரும்பும் எழுந்து ஆடாது –
இராவணனது உறுதியைக் காட்டிலும் பாடேன் என்ற தமது உறுதியைக் குலைத்ததே அரும் தொழில்-என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறார்-

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

ஆழாதபாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய் நின்ற நீ-நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை-வாழா வகை வலிதல் நின் வலியே-என்று அந்வயம்

நாழால் அமர் முயன்ற –வணங்கா முடித்தனம் ஆகிற அஹங்காரத்தால் யுத்தம் செய்வதில் கை வந்த / வல்லரக்கன்-கொடிய ராவணனுடைய -/ இன்னுயிரை –
இனிமையான பிராணனை -/ வாழா வகை வலிதல் -வாழ்ந்து இருக்க ஒட்டாமல்
கவர்ந்து கொண்டது/ நின் வலியே -உனக்கு ஒரு சூரத் தனமோ –வலியே -ஏகாரம் -வலி அல்ல என்றபடி

ஆழாத பாரு நீ –நீரில் அழுந்தாது இருக்கிற பூமியும் நீயே /வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய்-நீரும் தீயும் காலும் வானும்–ஜல தத்வமும்-தேஜஸ் தத்வமும்-வாயு தத்வமும்-ஆகாச தத்வமும் நீ- / நின்ற நீ -இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாய் நின்ற நீ

விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அனுபவிக்கிற உனக்கு என்னைச் சேர விடுகை ஒரு பணியோ-விபூதி சாமான்யங்களுக்கு நிர்வாஹகனாய்-அவற்றைச் சொல்லும் சப்தங்கள் உன் அளவில் வரும்படி நிற்கிற உனக்கு-உனக்கே அசாதாரணமாய்
உன்னால் அல்லது செல்லாதவர்களை சேர விடுகை ஒரு பணியோ
யஸ்ய பிருத்வி சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -என்று வேதங்கள் சொல்லக் கூடிய உனக்கு
அருமை என்று-சொல்லக் கூடிவது இல்லையே-

———————————————————————

-கீழே-10 பாட்டில்- திருமாலாற்கு யாம் யார் வணக்கம் யார் ஏ பாவம் நன்னெஞ்சே நாமா மிக யுடையோம் நாழ்-என்று-சொல்லி பின் வாங்க நினைத்ததை கொண்டு
ஏகஸ்மின் நப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யாவர்ஜிதே
தஸ்யயிர் முஷிதே நேவாயுக்தமாக் ரந்திதம் ந்ருணாம்-என்று எம்பெருமான் இல்லாமல் ஒரு ஷணம் காலம் கழிந்து போனாலும்-சர்வத்தையும் கள்வர் கவர்ந்தால் போல்
பழுதே பல காலமும் போயின -என்றும்-
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அந்நாள்கள் -என்றும்
அவன் தானே அருள் செய்ய உஜ்ஜீவித்தோம்-அன்றியேல் ஆழ் துயரில் அழுந்தி இருந்து இருப்போம்
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-சாஸ்திரம் சொல்லுவதால்
நெஞ்சுடன் வாதம் பிரதிவாதம்
என்னைத் துன்பக்கடலில் விழுந்தேனாம் படி கொலை செய்த பாவி நீ என்கிறார்
யத் மனஸா த்யாயதி தத் வாசா வததி-என்றும் –மன பூர்வோ வாக்குத்தர-என்றும்
நீ இல்லாமல் வாய் சொல்லுமா-நீராக நன்னெஞ்சே சொன்னீரே -என்ன
முந்துற்ற நெஞ்சே -என்றும் சொன்னீரே-இயற்றுவாய் எம்மோடு நீ கூடி என்று நியமித்து-இப்பொழுது வாய் பேசினால் தடுக்காமல் இருந்தது என்ன என்று கேட்பது என்ன-பகவத் அனுபவ குணத்துக்கு உசாத் துணையாம்படி-இப்படி வாத பிரதிவாதங்கள் நியமித்தேனே ஒழிய-வீண் பேச்சுக்கள் ஒழியட்டும் என்கிறார்
நெஞ்சு விநேதயமாக நின்று  ஸ்வாமி என்ன நியமனம் என்ன-உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய் என்ன-ஷமிக்க வேணும்
அடியேன் கர்த்தவ்யம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்ய வேணும் என்ன
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்-நெஞ்சே
ஒ மனமே-அநாதமான துக்க சாகரத்தில்-என்னைக் கொண்டு போய் தள்ளுவதாக
இடைவிடாமல் நின்று-யத்னம் பண்ணினது நீ அன்றோ

நான் இல்லை நீரே உம்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்-என்று நெஞ்சு பதில் சொல்வதாக கொண்டு-போ என்று சொல்லி என்-மேன்மேலும் நீ ஓன்று நான் ஓன்று
வாத பிரதிவாதங்கள் போலே சொல்லுவதனால் என்ன பயன் / போ-அது கிடக்கட்டும்

உபதேசம் தரினும்-எம்பெருமானுக்கு நம் பக்கல் வாத்சல்யம் உண்டு என்று உனக்கு நான் உபதேசித்தாலும்-
நீ என்றும் காழ்ந்து கைக் கொள்ளாய்-நீ என் மேல் கோபம் கொண்டு-என்றைக்கும்
அந்த உபதேசத்தைக் குறிக் கொள்ளுகிறாய் இல்லை-காழ்த்து-– கோபித்தல் உறைத்து பேசுதல்-த்ருடமாக நான் உபதேசித்தாலும் –

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு -எம்பெருமான் திருவடிகளை-வாழ்த்துவதே நியாயம்-கண்டாய் -முன்னிலை அசை –

————————————————————

வாழ்த்தத் தொடங்கினார்-வாழ்த்த விஷயம் கண்ணுக்கு இலக்காக வேண்டுமே
பிரார்த்திக்கிறார் –

வழக்கொடு மாறுகொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டு இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-
வழக்கொடு மாறுகொள் அன்று-
இப்போது அடியேன் விஞ்ஞாபிக்கிற விஷயம்-நியாயத்தோடு மாறு பட்டது அன்று–அஃது என் என்னில்-அடியார் வேண்ட-மேன்மக்களை நோக்கி கீழோர் ஓன்று பிரார்த்தித்தார்கள் ஆகில் -சேஷ பூதர் சேஷியை அபேஷிக்க-நம் அடியார்கள் அன்றோ /இழக்கவும் காண்டு-மேன்மக்கள் கஷ்டப் பட்டாகிலும் கார்யம் செய்வதை உலகில் காண்கிறோம் -உமக்கு இழப்பு உண்டோ-நீர் மெய்யே அடியரோ -என்ன /இறைவ
ஸ்வாமி -/ இழப்புண்டே–என் வேண்டுகோளை நிறை வேற்றுவதற்காக
நீ கஷ்டப் பட வேண்டியது ஏதேனும் உண்டோ-ஒன்றும் இல்லை –

எம்மாட் கொண்டாகிலும் –
எம்மை அடிமை கொண்டாகிலும்-என்னை அடிமை நீரே கொண்ட பின்
எத்தைக் கொண்டு என்ன / யான் வேண்ட-என்னுடைய வேண்டு கோளுக்காக –
ரஷ்ய அபேஷிதம் ப்ரதீஷதே-வாயாலே ஸ்வாமி இறை என்றேனே-உகந்து உம்முடைய அபேஷிதம் என்ன -என்ன-/ என் கண்கள் தம்மாற் -எனது கண்களுக்கு -கண்கள் தமக்கு /காட்டுன் மேனிச்சாய் -உனது திரு மேனி ஒளியைக் காட்டி அருள வேணும்-

—————————————————————–

காட்டு உன் மேனி சாய் என்று பிரார்த்தவாறே-அவனும் சிறிது காட்டுவதாக திரு உள்ளம் பற்ற-அதற்குள் மீண்டும் நைச்ய அனுசந்தானமே தலை எடுக்க
பண்டு பூதனை அவனை அணுகி கெடுக்கப் பார்த்ததுக்கு ஒக்கும்-அந்த பூதனையோடு உனக்கும் உறவு உண்டு போலும்-என்கிறார் இதில்-ஐந்தாம் பாட்டிலும் பூதனை விருத்தாந்தம் உண்டே

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

சாயல் கரியானை-நிறத்தால் கரியனான கண்ணபிரானை / உள்ளறியாராய்
உள்ளே புகுந்து அனுபவிக்க அறியாதவளாய்-இவன் சாஷாத் பரம புருஷன் நாம் யார் இவனை அழிக்க முயல்வது -உண்மையைத் தெரிந்து கொள்ளாதவளாய் என்றுமாம்

நெஞ்சே –ஒ மனமே -/ பேயார் –மீண்டும் பேயராய்-என்றது ஞான ஹீனராய் –
அறிவு கெட்டவளாய் -பெருமை தோன்ற பேயார்
உவப்பிலும் உயர்விலும் சிறப்பினும் செறலிலும் இழிப்பிலும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூல் சூத்ரம்
கோபத்தினால் இந்த இழிவு செயலை விளக்க ஆழ்வார் உயர் திணையில் அருளிச் செய்கிறார்/முலை கொடுத்தார் –விஷம் தடவின முலையை-உண்ணக் கொடுத்தாள்

பேயராய்--நீ யார் -அவளுக்கு உறவு முறையில் நீ என்ன ஆகவேண்டும்-அவளுக்கு முன் பிறந்தாயோ-பின் பிறந்தாயோ -இப்படி கேட்பது -/ தேம பூண் சுவைத்த-தேம்பு ஊண் சுவைத்து-ஆத்மா கெட்டுப் போம்படியான-சப்தாதி விஷய போகங்களை நீ அனுபவித்து –ஊன் அறிந்து அறிந்தும் –அதனால் ஊனம் அடைந்து இருக்கிறாய்
என்பதை நன்றாக நீ அறிந்து இருந்தும் –போய்த்-தன்னுடைய தாழ்வுக்கு மிகவும் தகாததான சிறந்த-பகவத் விஷயத்தை அனுபவிப்பதே போந்து / தீ வினையாம் பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி –அனர்த்தத்தை விளைக்க வல்ல பாம்பின் வாயிலே
கை நீட்டுவாரைப் போலே-பகவத் அனுபவம் பண்ணி-முடியப் பார்க்கிறாயே
அயோக்யர் நாம் அவனை அனுபவிக்கப் பார்ப்பது அவனுக்கு அவத்யம்
நமக்கும் ஸ்வரூப நாசம் -உணரானால்-அதனால் பூதனைக்கு உறவாக இருக்க வேண்டும் என்கிறார்-பூதனை கார்யத்தால் அவனுக்கு ஒன்றும் ஆகாதது போலே
இதுவும் அதி சங்கை
பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே-பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை -இ றே-உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய சூரிகளோடு ஒக்கும் இ றே
பாம்பின் வாய் என்னாமல் பாம்பர் வாய் -என்றது திணை வழுவமைதி
ஆர் -விகுதி கொடுமையின் கனத்தைக் காட்டும்
பார்த்தி முன்னிலை ஒருமை வினைமுற்று
இரா ஈற்றான இந்த வெண்பா முடிவு சாந்தஸ பிரயோகம் போலே போற்றத் தக்கது-

——————————————————————-

கீழ்ப் பாட்டுக்கு நேர் எதிர் பாசுரம்-இதில் அவன் குணங்களைப் பேசுவதனால் பாபங்கள் போகும் –அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளையாது –என்கிறார் –

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண் வளர்வார் சீர்–15-
ஓதம் ஆர்த்து -தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து-தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை-நெஞ்சே -எதிர் எதிரா பார்த்து ஓர்-படு துயரம் பேர்த்து ஓதப்
பீடு அழிவாம் பேச்சில்லை –என்று அந்வயம்
கங்கையில் நீராடினால்-நாயின் பாபங்கள் தீரும் ஒழிய-கங்கையின் பெருமையில் ஒன்றுமே குறையாதே-அது போலே
உறங்குவான் போலே யோகு செய்த பெருமானை -நம்முடைய ரஷணத்துக்கு சிந்தனை பண்ணிக் கொண்டு இருப்பவனை-அவனுடைய கல்யாண குணங்களை பேசி பாவங்களைப் போற்றிக் கொள்ள வேண்டாவோ-
எதிர் எதிரா பார்த்து -ஓர்-இவ்விஷயத்தை கண் எதிரே நிற்பதாகக் கொண்டு தெரிந்து கொள் –

நெஞ்சே-ஒ மனமே -/ படு துயரம் பேர்த்து ஓதப்-கொடிய துக்கங்கள் தீரும்படி
நாம் பேசுவதனால் -சம்சார துக்கங்களை பேர்த்து உதறி அவனுடைய கல்யாண குணங்களை ஆனந்தமாக பேச-
தீருவதற்காக -என்றுமாம் –பேர்த்து- எச்சம் திரிபாக கொண்டு

பீடு அழிவாம் பேச்சில்லை —அவனுடைய பெருமைக்கு-அழிவு உண்டாய் விடும் எனபது இல்லை -/ ஆர்த்தோதம் தம்மேனி தாள் தடவத் -ஆர்த்து ஓதம் தம்மேனி தாள் தடவ-
பெரிய கோஷத்துடன்-தம்முடிய திரு மேனியையும்-திருவடிகளையும்-அலையாகிற கைகளால் தடவும் படியாக / தாம் கிடந்து-தாம் பள்ளி கொண்டு அருளி –

தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார்-தம்முடைய செந்நிறமான திருக் கண்கள்
வளரப் பெருகின்றவரான-பெருமாளுடைய -/ சீர் –திருக் கல்யாண குணங்களை –

இப்படி எதிர் எதிராக பாசுரங்கள்-நம்முடைய தாழ்ச்சியைப் பார்க்கும் இடத்து அயோக்யானுசந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும்
அவனுடைய விலஷணமான போக்யமான குணங்களை பார்க்கும் இடத்து
நம் வாயாலும் பேசி ஆனந்திப்போம் என்பதும்-மாறி மாறி வரும்-ஒன்றோடு ஓன்று விருத்தம் இல்லை –

————————————————————————

சீர் ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை என்றார் கீழில்-இப்பொழுது சீர் பாடத் தொடங்குகிறார் -ஸ்ரீ வாமனாவதாரத்தில் குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யாசகனாக வர வேண்டுமோ-வாமனன் -குள்ள வடிவு கொண்டு வர வேண்டுமோ-
குள்ளன் என்றே திருநாமம் கொள்ள வேண்டுமோ-ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் போலே
சீராகப் பிறந்து சிறப்பாக வளர்ந்தவன் அன்றோ நீ –

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

சீரால் பிறந்து சிறப்பால் வளராது–
சிறப்புடனே பிறப்பதையும்-சிறப்புடனே வளர்வதையும் செய்யாமல்
சீரும் சிறப்பும் ஒரே பொருள்-சீரால் சிறப்பால் பிறந்து வளராது என்றும் அந்வயம் கொண்டு-மிக்க சீருடன் பிறந்து வளர்ந்து
வளராது -இதில் உள்ள எதிர்மறை பிறந்து என்பதிலும் கொண்டு பிறவாது
சீரால் சிறப்பால் பிறவாமலும் வளராமலும்-வாமனன் ஆக ஆனாயே அப்படி ஆகாமல் போனால் -என்றபடி

பேர் வாமன் ஆக்காக்கால்-
திரு நாமமும் வாமனன் என்று-வைத்து கொள்ளாமல் இருந்தக்கால்
பேர் பெரிய -என்றுமாம்-பெரிய வாமனன் -இதற்க்கு மேற்பட்ட குள்ளன் இல்லை

பேராளா –
1-மஹாநுபாவனான பெருமானே -பெருமை பொருந்தியவனே–2–பல திரு நாமங்களை உடையவனே -என்றுமாம்

மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி-
உன்னாலே மார்பால் அணையப்பட்டும்-வயிற்றிலே வைக்கப்பட்டும்
பின்பு வெளிப்படுத்தப் பட்டும்-இப்படி ஸ்வ அபிமானமாய்  இருந்த
இந்த பூமியானது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி திவ்ய மகிஷி என்பதால் மார்பாரப் புல்கி
மஹா வராஹத்தில் அண்ட பித்தியில் ஒட்டி கிடந்த பூமியை
கோட்டால் குத்தி எடுத்த பொழுது மார்பார புல்கி என்றுமாம்

நீர் ஏற்பு அரிதே-சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –

கூரத் ஆழ்வான் இந்த பாசுரக் கருத்தை ஸ்ரீ ஸூந்தர பாஹூ  ஸ்த்வத்தில்
ஷிதிரியம் ஜனி சம்ஹ்ருதி பாலநை நிகிரண உத்கிரணோத்தரனை ரபி
வநகிரீச தவைவ சதீ கதம் வரத வாமன பிஷண மர்ஹதி -என்று
இந்த பூமியை படைப்பவனும் நீ–துடைப்பவனும் நீ-காப்பவனும் நீ
பிரளயத்தில் திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனும் நீ
பிறகு வெளி நாடு காண புறப்பட விட்டவனும் நீ
ஆகையால் உனக்கே உடைமையாய் இரா நின்ற பூமியை
நீ பெற வேண்டி பிச்சை பெற்றது எங்கனே

உனக்கு திரு நாமங்கள் பலவாக இருக்க-இந்த பெரிய வாமனன் மிகப் பெரிய குள்ளன் திரு நாமம் வைத்துக் கொள்ள வேணுமோ -என்றபடி-

————————————————————–

தாம் அபேஷித்த படியே அடியார்களாக அனைவரும் ஆகிவிட்டால்
லீவா விபூதி ஆள் அற்று போகுமே-இத்தை நோக்குவோம் என்று உகந்து-

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்–17-

எங்கும் சூழ்ந்து-அரக்கன் வாள்வரைகள் போல வன்தலைகள் தாமிடிய
தாள்வரை வில்லேந்தினார் தாம்-சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்
அடியார் -த்வம் மே அஹம் மே -வணங்கா முடி தனத்தால் அநாதரவு காட்டி
தோன்றாது விட்டாலும்-வாழ்ந்திடுவர்-பின்னும் தாம் வாய் திறவாதார் -என்று அந்வயம்

சூழ்ந்து –
இந்த லீலா விபூதியிலே வந்து-வளைத்துக் கொண்டு –

அடியார் வேண்டினக்கால்-
ஒ ஜனங்களே-நீங்கள் அடிமைப்பட வேண்டும் என்று விரும்பினால்

தோன்றாது விட்டாலும் –
ஒரு அடியவனாவது அகப்படாமல்-உபேஷிக்கப் பெற்றாலும் –

வாழ்ந்திடுவர்-
திரு உள்ளத்திலே வெறுப்பு இல்லாமல்-உகப்புடன் இருப்பார் –

பின்னும்-
எக்காலத்திலும்

தாம் வாய் திறவாதார் –
பிராட்டிமார் இடத்திலும்-இந்த மனக் குறையை-வாய் திறந்து சொல்லிக் கொள்ள மாட்டார் –

சூழ்ந்து எங்கும் –
நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு –

அரக்கன்-
ராவணனுடைய

வாள்வரைகள் போல் வன்தலைகள் தாமிடிய-
ஒளி பொருந்திய-மலைகள் போலே வலிதான-தலைகளானவை இற்று விழும்படி

தாள்வரை வில்லேந்தினார் தாம்
காலுரைத்தை உடைத்தாய்-மலை போன்றதான-வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்-

ஸ்ரீ வசன பூஷனத்தில் மூன்றாம் பிரகரணத்தில்
பிராட்டி ராஷசிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதது போலே
தனக்கு பிறர் செய்யும் குற்றங்களை-பகவத் பாகவத் விஷயங்களில் அறிவிக்கக் கடவன் அல்லன் -என்று அருளிச் செய்த பின்
அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே-சர்வஜஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது இ றே -என்று அருளிச் செய்தது இப்பாசுரத்தைக் கொண்டேயாம்
மா முனிகள் வியாக்யானம்
எதிர் சூழல் புக்கு என்றபடியே-தன்னுடைய சீல சௌலப் யாதிகளைக் காட்டி
சம்சாரி சேதனர்களை தப்பாமல் அகப்படுத்திக் கொள்வதாக-வந்து அவதரித்து
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்
நாம் இதற்க்கு உறுப்பாக பெற்றோமே இ றே என்று-அது தானே போக்யமாக விரும்புவர்
அதற்கு மேல்
அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்கள் என்று-அவர்கள் குற்றத்தை பிராட்டிமார்க்கும் தனி இருப்பிலே அருளிச் செய்யார் என்கிற-சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டிலே
சேதனர் செய்த குற்றங்களை தன திரு உள்ளத்தில் உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு
பிராப்தனான சர்வேஸ்வரனும் உட்பட-தன் திருப்பவளம் திறந்து அருளிச் செய்யாதே
தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் அறிய வல்ல சர்வஜ்ஞன் விஷயங்களுக்கும் மறைக்கும் என்று சொல்லா நின்றது இ றே

அன்றிக்கே
அடியார் சூழ்ந்து வேண்டினக்கால்-சூழ்ந்து எங்கும் வாள்வரைகள் போல் அரக்கன் வன்தலைகள் தாமிடியத்-தாள்வரை வில்லேந்தினார் தாம்-தோன்றாது-விடிலும்-அடியார் தாம் வாழ்ந்திடுவர்-என்று அந்வயித்து
அவன் திரு உள்ளமான படி ஆகக்கடவது என்று மகிழ்ந்து இருக்கக் கடவர்கள் அடியார்கள் என்றபடி-
ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும்
எங்களுக்கு சேவை சாதியாமல் இருப்பது என்று ஆஷேபிக்கவும்
வாய் திறக்கக் கடவர் அல்லர்
அபேஷிப்பது மாத்ரமே அடியவர்களின் கடைமையே அன்றி
அவனை எதிர்த்து வாய் திறக்க அதிகாரம் இல்லை -என்றபடி

முந்தின யோஜனையில் எம்பெருமான் உடைய ஸ்வரூபம் சொல்லிற்று
இதில் சேதனர் உடைய ஸ்வரூபம் சொல்லுகிறது-

——————————————————————-

சம்சாரிகள் அலஷியம் செய்தததை சொல்லி-அவ்வளவே அன்றி
பலவகையான துன்பங்களை உண்டு பண்ணினாலும்
தனது கார்யம் விடாமல் செய்து அருளும் மஹா குணத்தை பேசி வித்தகர் ஆகிறார்

தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18

நீராமிது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால்-ஊரார்கள் எல்லாரும் காண யுரலோடு
தீரா வெகுளியாய்ச் சிக்கென ஆர்த்தடிப்ப-ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்
இது அனுகூலர் அன்பினால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு சஹ்யம் –
காளியன் வாலால் கட்டின காய்ப்பு அசஹ்யம்
தாம்பால் ஆப்புண்டாலும் –
யசோதையினால் தாம்பு கொண்டு-அடிக்கப் பெற்றாலும்

அத்தழும்பு தான் இளக-
அத்தாம்பினால் கட்டினத்தால் உண்டான காய்ப்பு-அல்பம் என்னலாம் படி

பாம்பால் ஆப்புண்டு –
காளியன் ஆகிற-பாம்பினால் கட்டப்பட்டு

பாடுற்றாலும் –
கஷ்டங்களை அடைந்தாலும்-சிறிதும்திரு உள்ளம் வருந்தாமல்

சோம்பாது-
ஜகத் சிருஷ்டியிலே சோம்பல் படாமல் -நிக்ரஹிக்க நினையாமல்
சென்று சென்றாகிலும் கண்டு சன்மம் களிப்போம் என்று எண்ணி ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –

இப் பல்லுருவை எல்லாம் –
இவ்வுலகிலே காணப் படுகிற-பல பல பிராணிகளை எல்லாம்

படர்வித்த வித்தா-
விஸ்தாரமாக உண்டாக்கின-ஆதி மூலமே –

உன் தொல்லுருவை யார் அறிவார்
உன்னுடைய ஸ்வரூபத்தை அறிவார் உண்டோ –

சொல்லு –
நீயே சொல்லு
இக்கருத்தை ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில்
சார்வ த்வத்கம் சகல சரிதம் ரங்க தாமன் துராசாபா சேப்யஸ் ச்யான்ன யதி ஜகதாம் சாது மூர்க்கோத்தராணாம்-நிஸ் தந்த்ராளோஸ் தவ நியமதோ நர்த்து லிங்க ப்ராவாஹா
சர்க்கச்தே மப்ர ப்ருதிஷூ சதா ஜாகார ஜாகடீதி-

சேதனர் மேலே நப்பாசை கொண்டு சிருஷ்டித்து அருளுகிறான்-சம்சாரிகள் நன்மையே நாடி இருக்கிற உன்னுடைய ஸ்வ பாவம் யாராலும் நிலை காண ஒண்ணாது –

————————————————————

பஞ்ச பாண்டர்வகள் இடம் பஷ பாதத்தைக் காட்டி அருளி-மெய்யர்க்கே மெய்யனாகும்
அவனை சேவிக்க இதுவே உபாயம் –

சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும்  –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

சூதறியா நெஞ்சமே-
செய்ய வேண்டியது-இன்னது என்று அறியாமல் தளும்புகின்ற-மனமே
சூது -உபாயம்
மெய்யான விருப்பமே என்ற எளிய உபாயம் அறியாத மட நெஞ்சமே

சொல்லில் குறையில்லை-
பகவத் விஷயத்தை பேசினால் பேச்சில் குறை இல்லை –
எவ்வளவு பேசினாலும் சொல்லி முடிக்கும் படி அல்லவே எல்லை இல்லா அவனது கல்யாண குணங்கள்
அல்லது
நமக்கு ஒரு குறை இல்லை -நமது குறைகள் நீங்கி விடுமே பேசத் தொடங்கினாலும்
அப்படி கரை காண முடியாத ஒரு குணத்தை எடுத்துக் காட்டுகிறார்
தொல்லைக் கண்
அநாதியான இப்பூமியிலே

மா தானைக்கு எல்லாம் –
துரியோத நாதிகள் உடைய-பெரிய சேனைகளுக்கு எல்லாம் -மலைபுரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் –

ஓர் ஐவரையே மாறாக –
பஞ்ச பாண்டவர்களே-எதிரிகளாம் படி –

எல்லிப் பகல் என்னாது எப்போதும் –காத்தானைக்
இரவு பகல் என்னாமல்-எக்காலத்திலும்-ரஷித்துக் கொண்டு இருக்கும் பெருமானை –

மெய்யே காண விரும்பினால் –

காண்டும் –
காண்போம் –

நீ காண் –
நீ காணலாம் –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் காத்தானை–எல்லிப் பகல் என்னாது எப்போதும் நீ காண்

————————————————————-

கீழே-அவனை நாம் காண நினைத்தோம் ஆகில் காணலாம் -என்று அருளிச் செய்த ஆழ்வார்-அவனே சுவீகரிக்கும் படி பார்த்து இருக்கை அன்றோ -ஸ்வரூப பிராப்தம் என்று தெளிந்து-இந்த பாசுரம் அருளிச் செய்கிறார் –
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்-அவத்யகரம்
அவனுடைய ச்வீகாரமே ரஷகம் -என்று அருளிச் செய்தார் இ றே பிள்ளை லோகாச்சார்யாரும்-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

காணப் புகில் –
ஆராய்ந்தோம் ஆகில் –

அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-
அறிவை யுடைய நல்ல நெஞ்சே -நான் சொன்னதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாமோ

நாணப்படும் அன்றே –
வெட்கப் பட வேண்டும் அன்றோ –

நாம் பேசில் –
நாம் பேசும் வார்த்தை களுக்கு –

மாணி யுருவாகிக் கொண்டு-
வாமன ரூபியாய் –

உலகம் நீரேற்ற சீரான் –
மாவலியிடம் சென்று-உலகங்களை நீர் ஏற்றுப் பெற்ற-சீர்மை பொருந்திய திருமால்

திருவாகம் தீண்டிற்றுச்-தனது திரு மேனியினாலே-உலகங்களை எல்லாம்-தீண்டினான் என்பதை –

சென்று –
தானே எங்கும் பரவி -நம்மை வந்து தீண்டி கைக் கொள்ளுகைக்கு சித்தமாய் இருக்க –
அபேஷை இல்லாமல் எல்லார் தலையிலும் திருவடியை கொண்டு வைத்தவன் அவனாய் இருக்க-நம்முடைய முயற்சி காணத் தக்கது அன்றோ -என்கிறார்
அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்-நாணப்படும் அன்றே நாம் பேசில்
-மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம்
தானே-சென்று தீண்டிற்று-இப்படி இருக்க-நாம்-காணப் புகில்-நாம் பேசில்
நாணப்படும் அன்றே-என்று அந்வயித்து
மாணியுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்-தானே-சென்று-தன்னுடைய திருவாகத்தால்-உலகத்தை தீண்டின விஷயத்தை காணப் புகில்-ஆராயும் அளவில்
நாம் பேசில்-அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே-என்றும் அந்வயித்து பொருள் கொள்ளலாம்

யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய-தச்யைஷ ஆத்மா வ்ருணுதே தநூம் ஸ்வாம்-ஸ்ருதி

சேதனரான நாம் த்ரிவிக்ரம அவதாரம் அறிந்து இருந்தும்-நான் சென்று நாடி நறையூரிலே கண்டேனே –
கால ஷேபார்த்தம் தான் இவை-அவனுடைய ச்வீகாரமே ரஷகம்-
பிராட்டி அசோகவனத்தில் தரித்து இருக்க-பெருமாள் உடைய திருக் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தது போலே
இந்த சம்சாரத்தில் உள்ளவரையில் பகவத் குணாநுபவம் செய்து பொழுது போக்குவது
அவசியம் ஆதலால் அதற்காக பாசுரங்கள் பேசுவது அயுக்தம் இல்லை-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: