வைகல் பூங்கழி வாயில் தூது விட்டு தாமதித்து வந்ததால்
பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடி
ஊடலுக்கு பின் கூடல் என்பதை நின்றிலங்கு முடியினாய் -பாசுரத்தால் ஸூ சகமாக அருளினார்
எவ்விதமும் கூடேன் ஏற்றாரை கூட வைத்து அருளி இவனுடைய வலிமை என்னே
என்று விஸ்மயபட்டு இருந்த ஆழ்வாருக்கு
தன்னுடைய அகடிதகட நா சாமர்த்தியத்தை நன்கு காட்டிக் கொடுத்து
அத்தன்மையனான தான் திரு விண்ணகரிலே நித்ய சந்நிதி
பண்ணி அருளுவதையும் காட்டிக் கொடுக்க
அது தன்னைப் பேசி இனியராகிறார் இத் திருவாய் மொழியிலே —
—————————————————————————————————————————————————————
நல்குரவும் செல்வமும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை யாள்வானை
செல்வம் மல்குத் திரு விண்ணகர்க் கண்டேனே –6-3-1-
ஏழ்மையும் ஐஸ்வர்யமும் உண்டு பண்ணுவனாகை-குசேலர் –
கண்டா கர்ணனை ச்நேஹன் ஆக்கிக் கொண்டான்
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு
அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
வெல்பகை
சமாதானத்தாலே மீளுமது அன்றியிலே
வென்றே விட வேண்டும் பகை -ஈடு
அரணுக்கு விஷமும் அமரர்களுக்கு அமுதமும் அளித்தாய்
இத்தால் விபூதி விஸ்தாரம் காட்டி அருளினார்
யாவராய் நிற்கின்றது எல்லாம் நெடுமாம் என்று ஓராதார் கற்கின்றது எல்லாம் கடை -திரு மழிசைப் பிரான்
சர்வம் விஷ்ணு மயம்ஜகத் -என்று இருப்பார்க்கு
நல்குரவு விடம் வெல்பகை தாழ்வு என்றும்
செல்வம் சுவர்க்கம் அமுதம் உயர்வு என்றும் நினையார்
எல்லாம் ஒரு நிகராகவே தோன்றும்
தன்னொப்பாரிலப்பன்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா -திருமங்கை ஆழ்வார்-
——————————————————————————————————————————————————————–
கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண்டிரைப் புனல் சூழ் திரு விண்ணகர் நன்னகரே –6-3-2-
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வசூந்தரே
ஷிபாம்ய ஜஸ்ரம சுபான் ஆசூரீஷ்வேவ யோ நிஷூ
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் –
ஒன்றே என்னின் ஒன்றேயாம் பலவென்று உரைக்கில் பலவேயாம் –நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா -கம்பர்
——————————————————————————————————————————————————————————-
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புகர்கொள் கீர்த்தி யல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே –6-3-3-
விருத்த விபூதிகன்
திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய
நிரவதிக காருண்யம் அல்லது -மற்று உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று -தமக்கு உஜ்ஜீவன
உபாயமான காருண்ய குணத்தை அனுபவிக்கிறார் -ஆறாயிரப்படி
கீர்த்தி -சாமான்ய சப்தத்தை விசேஷித்து உரைத்து அருளினபடி
புகர்கொள் –பரமபதத்தில் போல் இங்கு இங்கே நிறம் பெறுமே
விஷய நியமம் ஆவது
குண பூர்த்தி உள்ள இடமே விஷயமாகை
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே -ஸ்ரீ வசன பூஷணம்-
——————————————————————————————————————————————————————————————-
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையே
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொள்மின்கள் கைதவமே –6-3-4-
ஏஷ ஏவசாது கர்ம காரயதி யமேப்யோ லோகேப்ய உன்நீஷதி
ஏஷ ஏவ அசாது கர்மகாரயதி யமதொ நிநீஷதி
எல்லாம் இவன் இட்ட வழக்கு
சகல பதார்த்த அந்தர்யாமிதயா
வ்யாப்தனாய் இருந்து வைத்தே
தத்கத தோஷை அசம்ச்ப்ருஷ்டனாய் -ஆறாயிரப்படி
இன்னருளே -புண்ய பாபாதிகளாய்க் கொண்டு
அவனுக்கு விபூதியாய் தோற்றுகிறவை எல்லாம்
அவனுடைய கிருபையாலே உண்டாயிற்று -ஈடு
கைதவமே -ஏகாரம் எதிர்மறையில் -கைதவம் அன்று -சத்யமான விஷயம் என்கை
அன்றிக்கே -கைதவம் க்ருதகம் என்றபடியே
பண்ணப் பட்டவை அடங்கலும் அவனுடைய
நிர்ஹேதுக விஷயீ காரத்தாலே -ஈடு-
————————————————————————————————————————————————————————-
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்
செய் திண் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவுடை மூவுலகே –6-3-5-
கைதவம் -வக்ரத்வம் -செம்மை -ருஜூ
பாண்ட விவரே ஹஸ்தம் கிமர்த்தம் நயதா-வெண்ணெய் குடத்தில் ஏன் கை விட்டாய்
மாதா கஞ்சன வத்சகம் ம்ருகயிதும் -அம்மா கன்று குட்டி சிதறி ஓடிப் போயிற்று- இங்கே இருக்கிரதி தேட கை விட்டேன் –
சூர்பணகை இடம் பெருமாள் ருஜூ புத்திதயா சர்வம் ஆக்க்யாதுமுபசக்கரமே –
கருமை வெளுமை
கண்ணன் கரிய கோலத் திருவுரு
நம்பி மூத்தபிரான் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனி
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
பின்னர்த் தொடர்ந்தோர் கருமலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது –
மெய் பொய்
சத்யேன லோகன் ஜயதி -சத்யம் வீறு பெற ஒரு திருவவதாரம்
பொய்ந்நம்பி புல்லுவன் கள்வம் பொதியறை
பொய்யா யுன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள் கேட்டேன் -அசத்தியம் வீறு பெற ஒரு திருவவதாரம்
பொய்யர்க்கே பொய்யனாகும் –மெய்யர்க்கே மெய்யனாகும்
இளமை முதுமை
பேதைக் குழவி
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை
புதுமை பழைமை
பழைய அனுபவமாய் இருந்தும்
எப்பொழுதும் நாள் திங்கள் –ஆராவமுதமே
அப்போதப்போது புதுமைக்கும் குறை இல்லாமல் இருக்குமே
பெய்த காவு கண்டீர் பெரும் தேவுடை மூவுலகே-ப்ரஹ்மாதிகள் முதல் பீபீலிகை வரை அவனுடைய ரஷ்ய வர்க்கம் –
————————————————————————————————————————————————————————————————–
மூ வுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய் தௌவையாய்ப் புகழாய்ப் பழியாய்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே –6-3-6-
தௌவை–மூதேவி என்கிற அலஷ்மி -சேட்டை தம்மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே
அவன் மாயையால் தேவதாந்தர பஜனம் பண்ணி கெட்டு போவார்களும் உண்டே
பக்தர்களால் புகழப் பெறுவதும் சிசுபாலாதிகளால் பழிக்கப் பருவத்தும் உண்டே
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்
காடுவாழ் சாதியையும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் –
பாவியேன்
நித்ய சூரிகள் தன பக்கலிலே வந்து மேல் விழ
அத்தைத் தள்ளி
தான் என் பக்கலிலே வந்து மேல் விழா நிற்கக் கிடீர்
நான் அல்லேன் என்றது -ஈடு
பிரணய ரோஷத்தால் கதவடைத்து தள்ளி திரஸ்கரித்த பாவியேன் -என்கிறார்
—————————————————————————————————————————————————————————————————————-
பரஞ்சுடருடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்
வரங்கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே –6-3-7-
அப்ராக்ருத அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹம்
ஜகத் சர்வம் சரீரம் தே
கரந்தும் -இரா மடம் ஊட்டுவாரைப் போலே
உள்ளே பதி கிடந்தது சத்தையைப் பிடித்து
நோக்கிக் கொண்டு போரும் -என்றும்
கண் காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவார்கள்
என்று கண்ணுக்கு தோற்றாத படி நின்றும்
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பார்க்கு ராம கிருஷ்ணாதி அவதாரங்களை செய்து அருளியும்
கைதவம் -க்ருத்ரிமம்
அவதரித்து நிற்கச் செய்தே
தன் படிகள் சிசுபாலாதிகளுக்கு தோற்றாத படி பண்ணியும்
ஆஸ்ரிதர்க்கு தோற்றும் படி பண்ணியும் -ஈடு
ப்ரஹ்மாதிகள் தலை பெற்ற பயன் பெற வணங்கி
வரங்கொள் பாதம்-
வரங்களை இரந்து பெற்றுக் கொள்ளும்படியான திருவடிகள்
வரம் -ஸ்ரேஷ்டம் ஸ்ரேஷ்டத் தன்மை கொண்டு இருக்கும் திருவடிகள் என்னவுமாம்
யாவர்க்கும்
எத்தனையேனும் கிழாய் கிழா யார்க்கும் -ஈடு
பெரும் பெருத்தவர்களுக்கும் என்றபடி
வன் சரணே
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது
திண் கழலாய் இருக்கும் -முமுஷூப்படி-
—————————————————————————————————————————————————————————————————
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்ற முமாய்
தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என் அப்பனே -6-3-8
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே -தன்னை அம்புக்கு இலக்காகி ரஷிப்பவன்
தேவானாம் தாநவாநாஞ்ச ச சாமான்யம் அதி தைவதம் -என்றும்
சமோஹம் சர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோச்தி ந ப்ரிய -என்றும்
விட்டில் பூச்சி போலே விளக்கில் விழுவார்களே
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழல் இல்லை நீர் இல்லை
உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர் ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் –
சகல தாபங்களும் தீரும்படி நிழல் கொடுத்து அருளும்
தென் திசைக்கு திலதமான திரு விண்ணகர்
சர்வாத்மனா புகல்-சரண்யன் -விதேயன் -அடிமை கொண்ட உபகாரகன் –
————————————————————————————————————————————————————————————–
என்னப்பன் எனக்கு ஆய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த வப்பன்
தன் ஒப்பார் இல்லப்பன் தந்தனன் தன் தாள் நிழலே –6-3-9-
ஆய் இகுளாய் -செவிலித் தாயாய் -தாய்க்கு தோழி
இகுளை என்று தோழிக்கு பெயராய் அத்தை குறைத்து இகுள் என்று கிடக்கிறது -ஈடு
வாசூதேவ தருச்சாயா நாதி சீதா நகர்மிதா நரகாங்காரசம நீ சா கிமர்த்தம் ந சேவ்யதே-
தானே தனது திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரகன் –
ப்ராப்தா நாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயா ச்சாயயா தாபஹ்ருத் வ -ஸூ தர்சன சதகம்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினை -என்றும்
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே –
ஒப்பிலியப்பன் –
—————————————————————————————————————————————————————————————-
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் யவையல்லனுமாய்
மழலைவாய் வண்டு வாழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே–6-3-10-
பாட்டுக்கு கிரியையும்
பத்துக்கு கருத்தும் போலே
நூற்றுக்கு உபதேசப் பத்து -இத் திருவாய் மொழி உபதேசபரம்
மற்றோர் களைகண் இலம் காண்மின்களே-என்று அருளிச் செய்கையாலே
உபதேசித்து முடிக்கிறார் -பன்னீராயிரப்படி
காண்மின்களே -இத்தை நீங்களும் நிரூபித்து கொள்மின்
————————————————————————————————————————————————————————–
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை யாயிரத்துத் திரு விண்ணகரப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே –6-3-11-
ஆணை யாயிரம் -பவத் ஆஞ்ஞா ரூபமான ஆயிரம் -ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா
கோணை இன்றி -மிறுக்கு இல்லாமல்
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன்-என்று
தன்னைக் குறித்து அருளிச் செய்ததாகும்
மா வலியை வடிவு அழகாலும் பேச்சின் இனிமையாலும் மயக்கினது போலே
ஊடலில் நின்ற ஆழ்வாரை மயக்கி தனது கார்யம் சாதித்து கொண்டவன்
நித்ய சூரிகளுக்கு குரவர்கள் ஆவார்கள் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
சம்சாரத்தே இருந்து வைத்தே
நம்படி ஒருவனுக்கு உண்டாவதே என்று
நித்ய சூரிகள் கொண்டாடி இருப்பார்கள் -ஈடு
—————————————————————————————————————————————————————–
திருவாய்மொழி நூற்றந்தாதி –
நல்ல வலத்தால்நம்மைச் சேர்த்தான் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று எல்லை யறத்
தானிருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் –53
———————————————————————————————————————————————————–
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.