Archive for September, 2014

திருப்பாவை -பாசுரங்கள் – 11-15-திவ்யார்த்த தீபிகை சாரம்–

September 27, 2014

11-கற்றுக் கறவை –
கறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே
கன்று நாகாய் இருக்கை
முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் வருஷம் கீழ் நோக்கி வயசு புகுமா போலே
இவையும் இளகிப் பதித்து இருக்கும்
அவர்கள் பரதவ அனுசந்தானாத்தாலே
இவை மனுஷ்யத்வே பரனான கிருஷ்ணன் உடைய கர ஸ்பர்சத்தாலே
செற்றார்
எம்பெருமான் மேன்மையை பொறாதார் எம்பெருமான் அடியார்க்கு பகைவர்
எம்பெருமானின் அடியாரின் மேன்மையை பொறாதார் எம்பெருமானுக்கு பகைவர்
தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையான்
சாது சனத்தை நலியும் கஞ்சனை
இருவகை பகைமையும் உண்டே
புற்று அரவு அல்குல்
பெண்கள் அல்குலை வர்ணித்தது ஆண்மையை நெஞ்சில் பூண்டு
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -கம்பர்
வாராக வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால்
மன்மதனும் மடவாராக ஆதரம் செய்வன் -திரு வரங்கத்து அந்தாதி
பெருமாள் ஆண்களையும் பெண்ணுரு உடுக்கப் பண்ணுமா போலே
பெண்களை ஆண்களாக்குகிறது இவளுடைய அல்குல் –
பொற்கொடியே புனமயிலே -சமுதாய சோபை
புற்றரவல்குல் -என்பதால் அவயவ சோபை
புன மயிலே போதராய் -இந்த ஸ்திரீ வனத்தை சிறப்பிக்க வாராய்

————————————————————————————————

12-கனைத்து இளம் கற்று எருமை
இளைய பெருமாளை போன்ற பாகவர் தங்கை
கை வழியுமாகவும் இன்றி கன்றின் வாய் வழியுமாகவும் இன்றி முலை வழியா பால் சொரியா நிற்கும்
கறக்க வேண்டும் போதிலே இவற்றைக் கறவாதே காற்கடைக்
கொள்ளுவான் என் என்னில்
இளைய பெருமாளுக்கு அக்னி கார்யத்தில் அந்வயம் உண்டாம் அன்று இவனுக்கு இவற்றின் உடைய ரஷணத்தில் அந்வயம் உள்ளது
இளைய பெருமாளுக்கு பெருமாளை பிரிய மாட்டாமையாலே
இவன் கிருஷ்ணனைப் பிரிய மாட்டாமையாலே
இப்படி பகவத் விஷயத்திலே பிரேமத்தால் பிரிய அவசரம் இல்லாமே
ஸ்வ தர்மத்தை அனுஷ்டியாது ஒழிகை -விடுகை யாவது
அல்லது ஆலச்யத்தாலே விடுமது விடுகை அன்று
தொழில் எனக்கு தொல்லை தன நாமம் ஏத்த பொழுது எனக்கு மற்றதுவே போதும் -என்னும்படியே
நற்செல்வன்
உன்னுடன் பிறந்தவன் ரஷ்ய வர்க்கங்களை நோக்கினால் அன்றோ நீயும் ரஷ்ய வர்க்கங்களை நோக்கப் போகிறாய்
மனத்துக்கு இனியானே
வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே-
இனித் தான் எழுந்திராய்
பகவத் விஷயம் ரஹச்யமாக அனுபவிக்கும் இத்தனை
புறம்பு இதுக்கு ஆளுண்டோ -என்று
கிடக்கிறாய் ஆகில் பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய பிரசித்தமாயிற்று என்றுமாம்
எம்பெருமானார் திருவவதாரித்தால் போலே காணும் இப் பெண்பிள்ளை திரு வவதரித்த படியும்

ஸ்வா பதேசம்
பாகவாத அபிமானத்தில் ஊற்றம் உடையாரை உணர்த்துதல்-

————————————————————————————————

13-புள்ளின் வாய் கீண்டானை
போதரிக் கண்ணினாய் –
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்று இவர்கள் சொன்ன பாசுரத்தை அசல் திரு மாளிகையிலே கேட்டுக் கிடப்பாள் ஒருத்தி
நம் அபராதம் தீர இவர்களுக்கு வார்த்தை சொல்லுவோம் என்று
பெண்காள் இங்கே ராம விருந்தாந்தம் சொன்னார் உண்டோ -என்ன
ராம விருத்தாந்தமும் சொன்னோம் கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும் பாரதமும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்பட சொன்னோம் என்கிறார்கள்
வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்து -பாஞ்சராத்ரம்
பாஞ்ச ராத்ரத்தில் வியூஹத்தில் நோக்கு
பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய்
ஆகமூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாக செய்தார் என்னும் -ஆச்சர்ய ஹிருதயம்
பள்ளமடையான கிருஷ்ணாவதாரமும்
தன்னைப் போலே பிராட்டி பட்ட பாடு பொறுக்க மாட்டாத படியால் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தான்
என்று ராமாவதாரமும்
வாய் கொண்டு சொல்ல முடியாதகுற்றமஎன்பதால் பொல்லா அரக்கன் –
பொல்லா அரக்கரை பாடம் -தண்ணிய பையல்கள் அளவிலே பர்யவசித்த படி
கீர்த்திமை பாடிப் போய் பாதேயம் -விரஹத்தாலே துர்பலைகளுக்கு
ஆறாம் பாட்டில்
புள்ளும் சிலம்பின என்றது -கூட்டில் நின்றும் சிலம்பின படி
இங்கு இரை தேடப் போன இடங்களில் எல்லாம் ஆஹாரார்த்தமாக சிதறினபடி
போதரிக் கண்ணினாய்
உலவுகின்ற மானினுடைய கண் போன்று
குவளைப் பூவையும் மான் கண்ணையும் ஒத்த
பூவில் படிந்த வண்டு -அரி-வண்டு
புஷ்பத்தின் அழகுக்கு சத்ருவான கண் அரி சத்ரு –
புஷ்பத்தின் அழகை ஹரிக்கிற கண் என்ன வேண்டுமானால் போதரி கண்ணினாய் பாடமாக வேணும்
குள்ளக் குளிர
ஆதித்ய கிரணம் பட்டு கொதிப்பதற்கு முன்பே ஆழ முழுகினாலும் விரஹ தாபம் அங்கும் புகுந்து சுடும் என்னும் இடம் அறியார்களே
நன்னாளால்
இனி சற்று போது கழிந்தால் எங்களைத் தான் உன் வாசலில் நிற்க ஓட்டுவார்களோ
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டார் இசைந்து
கிருஷ்ணன் திரு முகத்திலே விழிக்கப் புகுகிற நாள் அன்றோ ஆறி இருக்கிறது என்

ஸ்வா பதேசம்
ஸ்வரூப ஞானம் முற்று பெற்று
நாமே எழுந்து செல்லுகை பொருந்தாது என்று இருக்கும் பாகவதரை உணர்த்தும் பாசுரம் இது
போதரிக் கண்ணினாய் -ஞானம் உடைமையை கூறினவாறு
புள்ளின் வாய் கீண்டான்
கருடன்வேதமையன் -வேதத்தின் வாய் கீண்டானை உள்ளே புகுந்து தாத்பர்யமாய் இருக்கிறவனை
பொல்லா அரக்கனை
மமஹாரம் அஹங்காரங்கள் ஒழித்து
பவைக்களம்–பாகவதர் திரள்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
பரிசுத்தமான சாத்விக ஞானம் தலை எடுத்து தாமஸ ஞானம் தலை எடுத்து
புள்ளும் சிலம்பின வைதிகர் அத்யயனம் உபக்ரமிக்க வேத கோஷம் செவிப்படா நின்றது
குள்ளக் குளிர
தனியாக பகவத் அனுபவம் செய்யலாமோ இனியது தனி அருந்தேல்

———————————————————————————————-

14-உங்கள் புழக்கடை
நங்கள் சொல்லாமல் உங்கள் -உறவு அறுத்து பேச
செங்கல் பொடிக் கூறை
தாமஸ பிரக்ருதிகள் என்பார் எம்பார்
சத்வ நிஷ்டர் என்பார் திருமலை நம்பி
செங்கல் பொடிக் கூறை — வம்பற்ற அத்தவர் -பரகால ஜீயர்
சம்சாரத்தை விட்ட –
விதண்டா வாதம் ஞானப் பிரான் பிள்ளை பணிக்கும்
நா வுடையாய்
பாம்பணை யாருக்கும் தனது பாம்பு போலே நா வும் இரண்டு உளவாயிற்று-நீயும் அங்கனே
அன்றிக்கே
உன் பேச்சின் இனிமை கேட்க வந்தோம்
நா வீறுடைமை-பெருமாள் திருவடியை புகழ்ந்தால் போலே
திவ்ய ஆயுதங்களை கண்ணபிரான் மறைத்தது உகவாதர்களுக்கே
நெய்த்தலை சங்கும் நேமியும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே

ஸ்வா பதேசம்
பாகவத சமுதாயத்துக்கு எல்லாம் தாமே கடவராய்
அவர்களுக்கு எல்லாம் பகவத் சம்பந்த கடகர் தாமேயாம்படி
ஞான பக்தி விரக்திகளால் பூரணரான பாகவதரை எழுப்புதல் –

———————————————————————————————————

15-எல்லே இளம் கிளியே
திருப்பாவை ஆகிறது இப்பாட்டு இ றே
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் -சிற்றம் சிறு காலையிலே -சொல்லுகிறது
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது –
நானே தான் ஆயிடுக
இளம் கிளி– கிளி போன்றவளே இல்லை முற்று உவமை
தாவி வையம் கொண்ட தாமரைகட்கே-போல
மன்னு பெரும் -பாட்டில் இளம் குயிலே வால்மீகி
இங்கு சுகர்
போதர்கின்றேன் சரியான பாடம் -நாவலிட்டு உழி தர்கின்றோம் போல்
போதருகின்றேன் வெண்டளை பிரளும்
நானே தான் ஆயிடுக
மத்பாவமே என்றான் இ றே ஸ்ரீ பரத ஆழ்வான் -பிறர் குற்றத்தையும் தன குற்றமாக இசைந்தான் இ றே
இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்றால்
இல்லை செய்யாதே இசைகை இ றே வைஷ்ணவ லஷணம்
உனக்கு என்ன வேறு உடையை -சரியான பாடம்
வேறு உடைமை தப்பான பாடம்
நீ என்ன வேறுடையை என்ன வேண்டாமோ என்னில்
தமிழ் பிரயோக முறைமைகள் அறியாதார் பேச்சு
திரு விருத்தம் -மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் –
உங்களுக்கு சித்திக்கும் படி நீங்கள் எவ்வாறு பெற்றீர்
பெரிய திருமொழி -துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு
உனது அருள் அல்லது தாரகமாக எனக்கு துணிய மாட்டேன் –
இங்கும் உனக்கு என்ன வேறு உடையை
உனக்கு அசாதாரணமான வேறு என்ன அதிசயத்தை நீ உடைத்தாய் இரா நின்றாய் –
தனித் தனியே அனைவரையும் காண பெறுதல்
பேர் சொல்லப் பெறுதல்
விரல் தொட்டு எண்ணப் பெறுதல்
ஸ்பர்ச சுகம் அனுபவிக்கப் பெறுதல்
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் ஆகையாலே
எண்ணி முடிக்கும் அளவும் அவளை பிரியாதே காணப் பெறுதல்
முதலிய பல பேறுகளை பெறுதல்

மாணிக்க வாசகர் திருவாசகம் 4 பாசுரம் இதை ஒட்டி –
ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுவோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உண்ணெக்கு நின்று உருக யா மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையிற்று யிலேலோரேம்பாவாய் –

————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை -பாசுரங்கள் – 6-10-திவ்யார்த்த தீபிகை சாரம்–

September 26, 2014

6-புள்ளும் சிலம்பின காண்
அனுபோக்தாக்களை குறித்து திருப் பள்ளி எழுச்சி
துணைத்தேட்டம்
இழிந்தாரை குமிழ் நீரூட்ட வல்ல ஆழியான் என்னும் ஆழ மோழையிலே இழியுமவர்கள்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின்
இன் கனி தனி யருந்தான்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து
கண்ணபிரானது திவ்ய சேஷடிதங்களும் கல்யாண குணங்களும் நெஞ்சுப்டாரைப் போலே மயங்கப் பண்ணுமே
இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் துடிக்கப் பண்ணும்
அவாவில் குறை இல்லாமல் தூங்கிக் கொண்டு இருக்க வில்லை
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற
திரு அயோத்யை போலே திரு ஆய்ப்பாடியிலும் கோயில் உண்டே
புள்ளரையன் -பெரிய திருவடி
கண்ணபிரான் என்றுமாம் -பெரியதிருவடி இட்டே அவனை நிரூபிக்க
புள்ளின் பின் போன தனி நெஞ்சமே-என்று இருப்பவர்கள் இ றே
பகவத் விஷயம் அறிந்து பாகவத விஷயம் அறியாத பிள்ளாய்
அடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
பேராளும் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே
பூதனை கள்ளசகடம் சொல்லி என்ன வருகிறதோ ஓடி வருவாளே -பெரியாழ்வார் குணம் உண்டே
முனிவர்களும் யோகிகளும்
மனந சீலர் -குணாநுபவம் /கைங்கர்ய நிஷ்டர்கள்
ஸ்ரீ பரத ஆழ்வானும் இளைய பெருமாளும் போலே
பரமபதத்திலும் -வைகுந்த்தத்து அமரரும் முனிவரும் -என்று இரண்டு கோடியாய் இ றே இருப்பது
திருவாய்ப்பாடியிலும் அவர்கள் உண்டோ என்னில்
கிருஷ்ணன் இங்கே திருவவதரிக்கையாலே ஊரில் பசு நிரைக் கொட்டில்களிலே படுகாடு கிடப்பார்கள்
பாண்டவர்கள் வர்த்திக்கிற பனிக் கொட்டில்களிலும் இடைச்சேரியிலும் கிருஷ்ணன் படுகாடு கிடக்குமா போலே

ஸ்வா பதேசம்
சேர்ப்பார்களை பஷிகள் ஆக்கி ஜ்ஞான கர்மாக்களை சிறகு என்று
சிலம்பின
வர்ணாஸ்ரம நித்ய கர்மங்களை அனுஷ்டிக்க எழுந்து புறப்படமை
புள்ளரையன்
பெரிய திருவடிக்கு அரையனான எம்பெருமானுக்கு கோயில் திரு மந்த்ரம்
சங்கு வலம்புரியோடு ஒத்த பிரணவத்தை
வெள்ளை பாவனத்வம்
விளி -பகவத் விஷய ஜ்ஞாபகத்வம்

—————————————————————————————

7-கீசு கீசு
பகவத் விஷயத்தில் நெடு நாள் ஆழ்ந்து இருந்தாலும் புதுமை பாவிக்கும்
ஆட்கொண்ட வில்லி ஜீயர் -நஞ்சீயர் இடம் பகவத் விஷய ஞானம் மெய்யே எனக்கு பிறக்க வில்லை காணும் -என்ன
உம்மைப் போலே மகானுபாவர்கள் உண்டோ -இங்கனே அருளிச் செய்வான் என் -என்ன
பாகவதர்கள் சமூஹம் கண்டு மிக உகக்கை அன்றோபகவத் விஷயத்தில் ருசி மெய்யே பிறக்கை யாவது
அஃது இல்லாமையைப் பற்றிச் சொன்னேன் காணும் -என்று அருளிச் செய்த ஐதிகம்
ஆனைச் சாத்தம் ஆனைச் சாத்தன் -பரத்வாஜ பஷி -வலியன் -செம்போத்து
காம்யத்தில் இல்லையாகில் தவிரலாம்
நித்ய கர்மம் அவசியம் அனுஷ்டித்தே அற வேணும்
அனுஷ்டானத்துக்கு பலம் இல்லை
அகரேண பிரத்யவாயம் உண்டு
அப்படியே ஜாதி உசிதமான நித்ய அனுஷ்டானம் அன்றோ இவர்களுக்கு தயிர் கடைகை
இது விடிவுக்கு போராதோ என்கிறார்கள்
மயிர் முடி கட்டு நெகிழ்ந்து முடை நாற்றம் மறைக்க -வாச நறும் குழல் ஆய்ச்சியர் என்கிறார்கள்
தயிர் கடையும் போது கண்ணபிரானை பாடுவார்களோ என்னில்
தயிர் பால் விற்கும் பெண் கோவிந்தன் வாங்கலையோ கிருஷ்ணன் வாங்கலையோ மாதவன் வாங்கலையோ –
நாயகப் பெண் பிள்ளாய் -நாங்கள் சொல்லுவதற்கு எல்லாம் அந்யதாசித்தி சொல்லும் பெண்ணே
உனது வீறு உடைமையாலோ அன்றோ
பேய்ப்பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய்
ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்
தாழச் சொன்ன போதும் உயரச் சொன்ன போதுமே இ றே இருப்பது
அகவையில் பாவம் ஒன்றாகையாலே வாசி இல்லை இ றே
எம்பெருமான் விஜய அனுசந்தானத்தாலே வடிவில் தோன்றி உள்ள புகரைக் கண்டு தேசமுடையாய் -என்கிறார்கள்

———————————————————————————————-

8- கீழ் வானம்
கோதுகலம் உடையாய் -அந்தரங்க வல்லபை
எருமை சிறு வீடு -பனிப்புல் மேய
தப்பாக எருமை சிறை வீடு -தொழுவத்தின் நின்றும் விடுபட்டு
போவான் போகின்றாரை அர்ச்சிராதி கதி போலே போகையேபிரயோஜனம்
கோதுகுலமுடைய தப்பான பாடம்
தேவாதிதேவன்
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும் ஆம் கடவுள் நீ -திருவரங்க கலம்பகம்

ஸ்வா பதேசம்
கீழ் வானம் வெள்ளென்று -சத்வகுண ப்ராசுர்யம்
எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன -தமோ குண பஹிஷ்காரமும்
கூறப்பட்டன

—————————————————–

9-தூ மணி மாடத்து
துவளில் மா மணி இல்லையே இது -துவள் -தோஷம்
முக்தர் நித்யர் போலே இதுவும்
மாமன் மகளே -திருவாய்ப்பாடியில் ஒரு பிரகிருதி சம்பந்தம்
தனக்கு உஜ்ஜீவன ஹேதுவாக ஆண்டாள் ஆசைப் பட்டபடி
மாமீர்
மாணிக்கக் குப்பியிலே அகவாயில் உள்ளது நிழல் இட்டு தோற்றுமா போலே
தூ மணி மாடம் ஆகையாலே உள் எரிகிற விளக்கு தோற்றும் இ றே
துயிலணை -மென்மலர் பள்ளி வெம்பள்ளியாலோ -நாங்கள் இருக்க
கண் வளரும் கௌரவ வார்த்தை
ஊமைக்கும் கேட்டு வந்து துறக்கலாம் அதுக்கு மேல் செவியிலும் துளை இல்லையோ
பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
பெய்யும் மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க
உன்முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –
மா மாயன் -அபலைகளை வசப் படுத்தும்
மாதவன் பெரிய பிராட்டியாரையும்
வைகுந்தன் -நித்யர்களையும் ஒரு நாடாக வசப்படுத்தும்
என்று என்று இதுபோல் பலவும்
நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ –

ஸ்வா பதேசம்
தூ மணி மாடம்
அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் மயமான திவ்ய மங்கள விக்ரஹம்
சுற்றும் விளக்கு-சர்வதோமுகமாக ஞான விளக்கு ஒளி விட
தூபம் கமழ ஞானம் பரிமளிக்க -ஞானத்தை அனுஷ்டான பர்யந்தம் ஆக்குகை
துயில் அணை மேல் கண் வளரும்
சுய பிரதானம் ஒன்றும் இன்றி அவனையே பற்றுகை
ஸ்வ பிரயத்ன சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான
பகவத் ஏக உபாய அத்யாவசாயத்தை
மார்பிலே கை வைத்து உறங்குகை என்பார்களே
மாமன் மகளே
மாமான் அம்மான் -ஸ்வாமி வாசகம்
எம்பெருமானால் பிள்ளையாக பாவிக்கப் பெற்ற அனன்யார்ஹரான பாகவதரே
மணிக் கதவம் தாள் திறவாய்
தேக ஆத்மாக்கள் இரண்டிலும் உண்டாய்
உனது அனுபவத்துக்கு விரோதியான மமகாரத்தை நீக்க வேணும் என்றபடி-

——————————————————————————————-

10-நோற்றுச் சுவர்க்கம்
சாதனத்தில் கை புகாமல் சாத்தியத்தில் நேரே
கிருஷ்ணன் திருமாளிகை பக்கம் உள்ள
ஒரு போகியாக தண்ணீர் துரும்பற்று படுக்கையிலே கிடந்து அனுபவிக்கும் ஆய்ச்சி
ஏசி பேசுகிறார்கள் என்றுமாம்
தனியே நோற்று சுகம் அனுபவிக்கிறாயே என்றுமாம்
கூடி இருப்பது ச்வர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை ராமன் –
உன் உடம்பை கிருஷ்ணனுக்குத் தந்தால் உன் பேச்சை எங்களுக்கு தரலாகாதோ
மாற்றமும் தாராயோ வாசல் திறவாதே முன்னிலை சொல்லாமல் படர்க்கையாக சொல்லி
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணையாவார் என்றே -அங்கும் இப்படியே
புகுகின்ற அம்மனாய் -அம்மனார் தப்பான பாடம்
ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே
நீயும் கும்பகர்ணனை வென்று நித்ரையை வாங்கிக் கொண்டாயோ
அவனளவோ உன்னுடைய நித்தரை அவனதோ துயில் உன்னதோ பெரும் துயில்
அவனுக்கு ஆறுமாசம் உறங்குகை ஆறு மாசம் உணர்ந்து இருக்கை அவஸ்தை உண்டே
அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு
கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ
அரை ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாக தோற்றுகிறது இவர்களுக்கு
அவன் ஒருத்தியினுடைய பிரிவுக்கு ஹேது பூதனான் அத்தனை இ றே
நீ ஒரு ஊராக பிரிகைக்கு ஹேது பூதையாய் உறங்குகிறாய் இ றே
தேற்றமாய் வந்து திறவாய்
ஊராக திரண்டு கிடக்கிறது
அவர்களில் உன்னையும் நியமிக்க வல்லார் உண்டு
அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்த படி வாராதே
உன்னைப் பேணிக் கொண்டு சதஸ்தையாய் வந்து திற

ஸ்வா பதேசம்
சித்த சாதன ச்வீகாரம் பண்ணி
உபாய அத்யாவசாயத்திலே நிறைந்த ஊற்றமுடைய
மகானுபாவரை உணர்த்துதல்

————————————————————————————————–
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவை -பாசுரங்கள் – 1-5-திவ்யார்த்த தீபிகை சாரம்–

September 26, 2014

நீளா துங்கச்த நகிரி தடீஸூ ப்தம்-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன்
பஹூ குடும்பிகளாய் இருப்பவர்கள் ஒரு மலை அடியைப் பற்றி ஜீவிப்பது போலே
சர்வலோக குடும்பியான சர்வேஸ்வரன் நப்பின்னை பிராட்டியின் திருமுலை தடத்தை பற்றி கிடக்கும்படி –
நிறைவினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலையணைவான் பொருவிடை யேழ் அடர்த்து உகந்த –
அவனை திருப்பள்ளி உணர்த்தி
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் –
உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
சூடிக் கொடுத்த மாலையாகிற விலங்கிட்டு
வேறிடம் தேடி ஓட ஒண்ணாதபடி வளைத்து
அணைத்து
அனுபவித்தவாறே

நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய
பல முறை தொழவா-நமஸ்காரம் பல தடவை செய்வது சித்தாந்தமா
கைகளால் ஆரத் தொழுது தொழுது
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும்
இது பூர்வ பஷம்
இனி சித்தாந்தம்
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை
நம-இரண்டு அஷரம் பொறுக்க ஒண்ணா சுமை
தண்டம் கீழே விழுந்தால் அது தானாகவே எழுந்து இருக்க மாட்டாத வாறே -தண்டம் சமர்ப்பிக்க வேணும் –
பிரதஷிணம் பிரணாமம் சேர்ந்தே செய்ய இரட்டையாக செய்ய வேண்டும் பிரமாணம்
அனன்யார்ஹ சேஷ பூதன் ஆகாரம் காட்ட ஒரு தடவை நமஸ்காரமே முறை
தொழக் கருதுவதே துணிவது சூதே
மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
தேவதாந்த்ரங்கள் போலே அன்றிக்கே ஒருகால் வணங்கினார்க்கும் எல்லா பேறும் அளிக்க வல்லவன்
நமஸ்காரத்தின் ஸ்வரூபம் ஆராய்ந்தால் அது சக்ருத் கார்யம் என்றே தேறா நின்றது

ஆண்டாள்
அனைத்துலகத்துக்கும் அன்னையாய்
அவற்றை ஆண்டு வருகிற ஸ்ரீ லஷ்மி திருவவதார விசேஷம்
அன்றிக்கே
ஆழ்ந்தாள் மருவி ஆண்டாள் என்னுமாம்
திருப்பாவை பாடி அருளியது கண்ணனுக்கா அரங்கனுக்கா
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந்து இருக்கவே யாங்கவளைக் கைபிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –அண்டர் கோன் அணி அரங்கன் –
தர்மியின் ஒற்றுமை கூறப் பட்டமையால் விரோதம் இல்லை

ஆண்டாள் எம்பெருமானுக்கு இரண்டு மாலைகள் ஈந்தனள்
ஓன்று பாக்களால் ஆனது
மற்று ஓன்று பூக்களால் ஆனது
ஒன்றைப் பாடித் தந்தாள்
மற்று ஒன்றைச் சூடித் தந்தாள்
பா மாலையில் சந்தம் பொலியும்
பூ மாலையில் கந்தம் பொலியும்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி -ஆண்டாளுக்கு நிரூபகம்
வாசூதேவ தருவை அணைந்து அன்றி தரிக்கிலாள் ஆதலால் -கொடி
அச்யுத பானுவை அகலாத அஞ்சுடர்

மடல் எடுக்காமல் நோன்பில் இழிவான் என்
போகத்தை ச்வார்த்தமாக இரப்பது மடல் எடுக்கை
நோன்பு -காத்யாய நீ வ்ரதம் என்பதால் வ்யபிசாரம் -அளவற்ற அவத்யம் எதிர்தலைக்கு விளைவிக்கும்
கண்ணபிரான் இராமபிரானைப் போலே சுணை யுடையவன் அல்லன்
தானும் மடல் எடுக்கப் புகுவான்

எம்பெருமானுக்கு ஆட்செய்கையே பரம புருஷார்த்தம் -என்று அறுதியிடுதல் இப்பிரபந்தத்தின் உள்ளுறை –

————————————————————————————————–

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் குன்றாத
வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளராய்
பெரியாழ்வார் பெண்பிள்ளை ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து

வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப் பூரம் மேன்மேலும் விளங்கவிட்டுசித்தன்
தூய திருமகளாய் வந்து அரங்கனார்க்குத் துழாய் மாலை குடி சூடிக் கொடுத்த மாதே
நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறு ஐந்து நீ யுரைத்த தையொரு திங்கள் பா மாலை
ஆய புகழ் நூற்று நாற்பத்து மூன்றும் அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே

திருத்துழாய் முளைக்கும் பொழுதே மணத்துடன் இருக்குமா போலே ஆண்டாள் ஆராத காதல் கொண்டு
பள்ள மடை யாய் –
அநுகாரம் முற்றி –
இடை நடையும் இடை முடியும் இடைப் பேச்சும் முடை நாற்றமுமாய் -தன்மயமாயினாள் –

——————————————————————————————————

மார்கழி திங்கள் –மதி நிறைந்த நன்னாள்
ஊராரே கிருஷ்ண சம்ச்லேஷத்துக்கு இசைந்து நின்றதால் இருளை வெறுத்து நிலவைக் கொண்டாடுகிறாள்
நந்தகோபன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுத்திடுமின் -என்று
நள்ளிருளை வேண்டுவார்கள் அவர்கள் விரோதிக்கும் காலத்தில்
கீழ்க் கழிந்தவை தீயவை -இன்று நன்னாள் என்கிறாள்
ஆசார்யன் அருள் அடியாக ஸ்வரூப உணர்ச்சி பெற்று விஷயீ காரம் பேறும் நன்னாள் -சத்வ குணம் நிறம் பெறும் கால விசேஷம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் –
நீராட -கண்ணபிரான் உடன் கலவி செய்ய -சுனைநீராடல்-புனலாடல்
பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள் பேர்பாடித் தண் குடந்தை நகரும்பாடித்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொருவற்றாள் என்மகள் உம் பொன்னும் அக்தே -திருமங்கை ஆழ்வார்
நீராடப் போதுவீர்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே
போதுவீர் போதுமினோ பகவத் சங்கத்துக்கு இச்சா மாத்ரமே போதுமே
விளித்த உடனே உவப்பினால் திருமேனி ஆபரணம் பூண்டால் போலே நேரிழையீர்
அவன் நம்மை எப்பொழுது அனைத்து கொள்ள வருவானோ என்று சித்தமாக பூண்டு என்னுமாம்
ஞான பக்தி வைராக்யாதிகள் -என்னுமாம்
சீர்மல்கும் ஆய்ப்பாடி
பரத்வம் மட்டும் பொலிய நிற்கும் பரமபதம் போல் அன்றி சௌசீல்யாதி சகல குணங்களும் சாள விளங்கும் சீர் இங்கு தானே
அயோத்யா விடவும் சீர் என்றுமாம் பரதன் பேச்சுக்கு ராமன் உடன்படாத குற்றம் உண்டு அதுக்கு
சிறுமீர்காள்
அந்ய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் இல்லாதாரை
ஏரார்ந்த கண்ணி யசோதை
அழுகையும் அஞ்சு நோக்கும் –தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் இ றே
திருமந்தரம் தாய் -கண் ஞானம் -எம்பெருமானை கருவிலே வைத்து பிரகாசிக்கும் பெரிய திருமந்தரம்
நாராயணன் வகுத்த நாயகன்
நாராயணனே நமக்கே பிரிநிலை ஏகாரம்
பறை நாட்டாருக்கு ஒரு வியாஜ்யம் கைங்கர்ய பிராதனையே
பறை தருவான்
ஏவ மற்றமரர் ஆட்செய்வார்
காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் ஸ்தப்தராய் கிடக்கும் பாகவதர்களை எழுப்ப வேண்டுமே
கதிர் மதியம் போல் -ஆஸ்ரியர் அணுகும் படியும் நாஸ்திகர் ஒழியும் படியும் –

ஏலோரெம்பாவாய்
சொல் தொடர் என்றே கொள்ள வேண்டும் தடம் பொங்கத் தம் போங்கோ போலே
ஏல் –எமது கிரிசைகளை ஏற்றுக் கொள்
ஓர் –பேறு பெருவிக்கும் வகையை ஆராய்வாக
பாவாய் -எங்கள் விரதமே -நோன்பே -பாவாய் என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-நாயனார்
காம சமாஸ்ரயணம் அடுத்து செய்வதால்

—————————————————————————————————

2- வையத்து வாழ்வீர்காள்
செய்யும் கிரிசைகள் -மூன்று செய்பவனவும் ஆறு விடப்படுமவையும்
ஒத்த பருவ பெண்கள் ஆய்ப்பாடியில் கண்ணபிரான் திருவவதரித்த காலம் என்பதால் வாழ்வீர் –
நாமும் -உம்மைத் தொகை -பேற்றுக்கு பிரவ்ருத்தி பண்ண உரிமை அற்றதாய் இருக்க
ருசி தூண்ட பதறி செய்யும் கார்யம்
அப்ராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய பிரவணனுக்கு சொல்ல வேண்டா இ றே
அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்
குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இ றே
ஜ்ஞான விபாக கார்யமான அஜஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது
நம் பாவைக்கு இந்த்ரஜித் யாகம் போலே இல்லையே
கேளீர் -இவ்வாய்பாடியில் இச் சேர்த்தியா இத்தனை திரளா
என்று ஸ்தப்தராய் அந்ய பரதையாய் -இருப்பாரை துடை தட்டி கேளீர் என்கிறாள்
பரமன் அடி பாடி
கிருஷ்ணன் அடி பாடி என்றால் ஊரார் சீறி அழிக்கலாம் என்று
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -பிரமாணம் இடையர் அறியார் போலும்
உண்ணோம் உண்டார்க்கு உண்ண வேண்டாவே
கண்டு அறியாதவர்கள் ஆதலால் பால் குடியோம் சொல்லாமல் உண்ணோம்
அடிபாடி நெய் உண்ணோம் -பாடுவதற்கு முன்பு இவை தாரகம் பாடப் பெற்ற பின் எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள்
தீக்குறளை சென்றோதோம்
பேய்ப்பெண்ணே என்று வையவும் கடவோம்
நாயகப் பெண் பிள்ளாய் என்று காலிலே விழவும் கடவோம்
அவன் செவிப்படுத்தோம்
பத்து மாசம் ராஷசிகள் ஏகாந்தத்திலும் பெருமாள் இடம் விண்ணப்பம் செய்யாத பிராட்டி போலே

தீக்குறளைச் சென்றோதோம் -தப்பான பாடம் –
குறள் என்னும் சொல்லிளில் இரண்டாம் உறுப்பு ஏறிற்றாகில் சரியாகும்
இங்கு குறளை- கோள் சொல்லுதல்

ஸ்வா பதேசம்
நெய் உண்ணோம் -எம்பெருமானே போக்யம்
வர்ணாஸ்ரம கர்மங்கள் விடாமல் அனுஷ்டிக்க நாட்காலே நீராடி
மை கண்ணுக்கு – பிரகாசகம் -ஆத்மயாதாத்மிய ஞான யோகம் அன்வயிக்கலாகாது –
ஐஸ்வர்ய ஆசை ஒழிந்தோம் என்றுமாம்
மலரிட்டு முடிகை பக்தியோகம்
கைவல்யாசை ஒழிந்தோம்
நாம் முடியோம் -அவனே ஞானபக்த்யாதிகள் அருளி
ஐயம் பகவத் வைபவம்
பிச்சை பாகவத் வைபவம்
யதாசக்தி கூற வேண்டும்

—————————————————————————————————-

3-ஓங்கி
நோன்பு நோற்க அனுமதிதவர்களுக்கு சில பலன்களை ஆசாசிக்கிறார்கள்
ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே
பணிபட்டு சாய்ந்த மூங்கில் போலே குன்றி
அம் மூங்கில் ஆதித்யன் கதிர் பட்டு கிளம்புமாறு போலே
இவனும் மாவலி நீர் பட்டு ஓங்கினான்
அன்று மங்களா சாசனம் பண்ணாத குறை நீங்க உத்தமன் பேர் பாடி என்கிறார்கள்
ஓங்கு பெரு உயர்த்தியும் பணைக்கும் செந்நெல்
ஊடு கயல் உகள உகளுதல் செருக்காலே களித்து மேல் நோக்கி பாய்தல்

ஸ்வா பதேசம்
தேஹாத்மாபிமானம் தோஷம் இன்றி ஒழியும்
மும்மாரி அனன்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் அநந்ய போக்யத்வம் -ஆகார த்ரய ஞானம்
ஞானிகள் உடைய போதில் கமல வன்னெஞ்சினுள்
தெய்வ வண்டு எனப்படும் எம்பெருமான் வந்து புகுந்து கண் வளர்ந்து அருளுகிறான்
சிஷ்யர் ஆச்சார்யரை பிரார்த்திக்க அவிச்சின்னமான சம்பத் மல்கும் படி சொல்லிற்று

———————————————————————————————————-

4-ஆழி மழைக் கண்ணா
பர்ஜன்யன் மழைக்கு நிர்வாஹகன் -மேகம் கூட வந்து கிஞ்சித் கரித்த படி
ஆழி கடல் காம்பீர்யம் இடம்
ஆழி -மண்டலம் மண்டல வர்ஷம் -சுழித்து சுழித்து மழை பெய்கை
கண்ணா நிர்வாஹகனே
சாமரம் வீசுவான் திருச் சின்னமூதுவான் போலே கைங்கர்யம் இட்டே விளிச் சொல்
ஆர்த்து முழக்கம் வானர வீரர்கள் மதுவன ஆர்த்தி போலே
ஏறி முகம் காட்டி கார்யம் செய்தல் -விண்ணீல மேலாப்பு விரித்தால் போல்
உருவம் போல் மெய் கறுத்து அகவாய் தண்ணளி கொள்ள முடியா விட்டாலும்
நாச்சியார் விளி விழிக்க ஒண்ணாதா போலே-உன்னால் ஆகாதே -சரியான பாடம் – நிறத்தை மாத்ரம் ஏறிட்டு கொள்ளலாம்
பாழி அம் தோள் -வலிமையையும் அழகும் -ரஷகத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே
நின்று அதிர்ந்து -பாரத போர் போலே ஊதி விடாமல் அதிர்ந்து கொண்டே
நாங்கள் மனம் மகிழும் படி நின்று முழங்க வேண்டும்
சர மழை போல் வாழ உலகினில் தாழாதே -விளம்பம் இன்றி -சார்ங்கம் ராவணாதிகளை முடித்தாள் போலே இல்லாமல்

ஸ்வா பதேசம்
முதலாழ்வார் திருமழிசை பிரான் திருமங்கை ஆழ்வார் எம்பெருமான் -மேகம்
கருணா ரச வர்ஷிகள்
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும்
திருமால் சீர்க்கடலை உட்பொதிந்த சிந்தனையேன்
கல்யாண குணங்களை பருகி
திருமால் திருமேனி ஒக்கும்
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
தீர்த்தகரராமின் திரிந்து
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து
தீங்கின்றி அநர்த்த கந்தமும் இல்லாமல்
இன்னமும் உபகரிக்கப் பெற்றிலோமே என்று வெள்கி
சிஷ்யர்கள் உஜ்ஜீவனம் தங்கள் பேறாக நினைத்து இருக்கும்
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் ஆகிய முதல் ஆழ்வார்கள்
உருவின வாளை உறையில் இடாது அடியிடைமுடிகளில்
தேவதாந்திர அப்ரத்வத்தையும்
பகவத் பரத்வத்தையும் உபபாதிக்கும் திரு மழிசை பிரானும்
காரார் புயல் கை கலிகன்றி -அருள் மாரி ஔதார்யத்தில்
மேகத்தை ஒத்து கருணையை வர்ஷிக்கும் திருமங்கை ஆழ்வார்
குணம் திகழ் கொண்டல் எம்பெருமானார்
ஏறி ஆச்சார்யா பதவியிலே ஏறி
வலம்புரி போல் பிரணவம் போல்
நின்று அதிர்ந்து வெளியிட்டு அருளி-

———————————————————————————————-

5-மாயனை
தூய பெருநீர்
பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி நின்ற கோதாவரி போல் அன்றியே
கம்சன்மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படி
தூய்மையாவது பகவத் ஸ்பர்சம் இ றே
கிருஷ்ணனும் பெண்களும் ஜலக்ரீடை பண்ணி ஒருவருக்கு ஒருவர்
கொப்பளித்ததால் வந்த சுத்தி ஆகவுமாம்
கவி பாட ஊர் பேர் ஆறு சொல்வாரை போலே
ஊர் -வடமதுரை மைந்தனை
பேர் -தாமோதனரை
ஆறு -யமுனைத் துறைவனை -முத்து படும் துறை போலே பெண்கள் படும் துறை
தோன்றும் -பிறந்த என்னாதது சுருதி சாயலில்
ஆதித்யன் கிழக்கு திக்கு பற்று உண்டாகாதது போல்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -பிறந்தவாறும்
பன்னிரு திங்கள் வயிற்றினில் கொண்ட அப்பாங்கினால்
கட்டவும் அடிக்கவும்படி எளியனாக்கி காட்டினதால்
முலைப்பால் குடித்து அழுத இடம் பிறந்த யுடம் -வடமதுரை பிறந்த என்னாமல் ஆயர் குலத்தினில் பிறந்த
ஆயர்குலத்தினில் தோன்றும் அணி விளக்கு என்பதால்
மணி விளக்கு பாடம் மோனைக்கு சேராது
தொழுது பாடி சிந்திக்க முக் கரண வியாபாரங்களும்
தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
ஆற்றாமை மிக்கு க்ரமம் மாறி
பாடுகைக்கும் தொழுவதற்கும் முன்பே சிந்திக்க வேண்டுமே-

———————————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருமாலை -திவ்யார்த்த தீபிகை சாரம்–

September 26, 2014

ஸ்ரீ விஷ்ணு தர்மம் சாரம் என்பர் –

சதீநாகன் -பாண்டவ ராஜ குலம் நான்கு ஐந்து தலை முறைக்கு பின்பு
ஸ்ரீ சௌவனபகவான் இடம் சென்று சம்சாரிகளுக்கு உஜ்ஜீவனமான
சர்வாதிகாரமான பகவன் நாம சங்கீர்த்தனமே ஆத்மாக்களுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று அருளிச் செய்ததே ஸ்ரீ விஷ்ணு தர்மம்
திருமாலை அறியாதார் திருமாலை அறியாதவர் ஆவர்
கலியுகம் -289-பிரபவ சம்வச்தரம் -மார்கழி -கிருஷ்ண பஷ சதுர்த்தசி -செவ்வாய் கிளைமை -கேட்டை நஷத்ரம்
வைஜயந்தி வனமாலை அம்சம்
திரு மண்டங்குடி திருவவதாரம்
விப்ர நாராயணர் -தேவதவி –

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர்
என் இதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் துன்னு புகழ்
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்-

——————————————————————–

அடியார்களைக் காத்தருளும் திறம் நன்கு விளங்கும்படி கோயிலில் கண் வளர்ந்தருளும் பெருமானே!
உன் திருநாமத்தை நான் கற்றதனால் பெற்றபேற்றின் கனத்தைக் கண்டாயோ?
அஹஹ! என்னைத் தீவழியில் செலுத்தி உனக்கு விலக்காக்கின பஞ்சேந்திரியங்களை
அவற்றின் ஸ்வாதந்திரியம் ஒன்றும் ஓங்க வொண்ணாதபடி அமுக்கி
இத்தனை நாளாக இவற்றை அமுக்கி,
ஆளமுடியாதபடி தடையாய்க் கிடந்த பாபங்களையும் உதறிவிட்டு,
நரக பாதையில் நின்றும் பயம் தவிர்ந்து யமகிங்கரர் தலைமேல் அடியிட்டுத் திரியாநின்றேன்;
எனது செருக்கு எப்படிப்பட்டது! பாராய் என்கிறார்–

காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே–1-

பதவுரை

மூ உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–(ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த–(பிரளயம் நீங்கினபிறகு அவற்றை வெளிப்படுத்திய
முதல்வ–ஜகத்காரணபூதனே!
அரங்கமாநகரளானே!
நின் நாமம் கற்ற–உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான
ஆவலிப்புடைமை–செருக்கினாலே
புலனை–பஞ்சேந்திரியங்களையும்
காவலில் வைத்து–(வெளியில் ஓடாதபடி) சிறையில் அடைத்து
கலிதன்னை–பாபராசியை
கடக்க பாய்ந்து–வெகுதூரம் உதறித் தள்ளி
நாவலிட்டு-ஜயகோஷம் செய்து
நமன்தமர் தலைகள் மீதே-யமபடர்களின் தலைமேல்
உழி தருகின்றோம்–அடியிட்டுத் திரிகின்றோம்.
(கண்டாய்-முன்னிலை அசைச்சொல்)

(காவலில் புலனை வைத்து)
முன்பு என்னைச் சிறையில் வைத்த இந்திரியங்களை இன்று நான் சிறையில் வைத்தேனென்கிறார்.
இராவணன் போர்க் களத்திலே இராமபிரானது அம்புகட்கு இலக்காகிப் பட்டுப் போனவாறே மந்தோதரி புலம்புகிறாள் –
“இந்த்ரியாணி புராஜித்வா ஜிதம் த்ரி புவநம் த்வயா-ஸ்மரத்பிரிவ தத்வைரமத்ய தைரேவ நிர்ஜித; என்றாள்;
அதாவது-இராவணனே! நீ முன்பு இந்திரியங்களை யெல்லாம் வென்று அதனால் மூவுலகையும் வென்றாய்;
(இந்திரியங்களை நிக்ரஹித்துக் கொடுந்தவம் புரிந்து வரம் பெற்றமையால் மூவுலகும் வென்றனனாதலால் இங்ஙன் கூறப்பட்டது.)

அந்த இந்திரியங்கள் “இப்பாவி நம்மை இப்படி தலையெடுக்கவொட்டாமல் பண்ணிவிட்டானே;
ஆகட்டும் தக்க சமயம் பார்த்து இவனைத் தலையமுக்குவோம்” என்று
நெஞ்சில் பகை வைத்துக் கொண்டிருந்து இப்போது உனக்கு பிரதிக்ரியை செய்துவிட்டன எனறாள்.

(இந்திரியங்களை அடக்காமல் அவற்றுக்குப் பரவசப்பட்டு ஸீதையைக் கவர்ந்ததனால் உனக்கு இக்கேடு விளைந்ததென்றபடி.)

அப்படி இராவணனிடத்தில் இந்திரியங்கள் முதலில் பரிபவப்பட்டு.
பிறகு அவனைத் தாம் பரிபவப்படுத்தியவாறு போல இவ்வாழ்வார்;
முதலில் தாம் இந்திரியங்களால் பரிபவப்பட்டுப் பொன்வட்டில் நிமித்தமாகச் சிறைபட்டிருந்த சினத்தை
நெஞ்சில் வைத்துக்கொணடிருந்து ஸமயம்
பார்த்து அவற்றைத் தாம் சிறைப்படுத்தினர் என்ற விசேஷார்த்தம் இங்கு உய்த்துணரத்தக்கது.

கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து-
கலி என்று கலியுகத்தைச சொல்லிற்றாய்
“இவன் க்ருதயுக புருஷர்களில் ஒருவன்” என்று பலருஞ்சொல்லும்படி கலியைக் கெடுத்தேனென்றுமாம்.

நாவலிடுதல்-
தோற்றவர் முன்னே ஜயித்தவர்கள் தமது வெற்றியைக் கூறிக் கோஷித்தல்.

“உழிதருகின்றேன்” என்று ஒருமையாகக் கூறாமல் பன்மையாகக் கூறியவித்தால்-
ஒரு புண்ணியசாலியின் ஸம்பந்தத்தாலே பல பாபிகளும் பேறு பெறுவர்களென்னும் சாஸ்த்ரார்த்தம் வெளியாம்;
அதாவது-நான் ஒருவன் நின்நாமம் கற்க அந்த ராஜகுல மாஹாத்மியத்தால்
என்னைச் சேர்ந்தவர்களும் நமன்றமர் தலைகள் மீது அடியிடும்படியானமை பாரீர் என்கை.

வாலியின் பெயர் செவிப்பட்ட வளவில்தானே அஞ்சிச் சுரமடைந்துகிடந்த ஸுக்ரிவ மஹாராஜர்
இராமபிரானை அண்டை கொண்ட பலத்தாலே கிஷ்கிந்தாத் வாரத்திலே சென்று அறைகூவினாற்போல
இவரும் கீழெல்லாம் நமன்தமர்க்கு அஞ்சிக்கிடந்து
இன்று திருநாமத்தை அண்டை கொண்ட பலத்தாலே அவர்கள் தலைகளிலே ஸபரிகரராய் அடியிட்டுத் துவைக்கிறார்.

காவலில் புலனை வைத்து
இந்த்ரியங்களை சிறை வித்து
அன்றிக்கே
காவல் இல்லாத படி இந்த்ரியங்களை வைத்து என்றுமாம்
திருநாம வைபவ அதிசயம் சொல்ல
அர்த்த கௌரவத்தாலே சப்தத்தை நியமித்து சொல்லுகிறோம் என்பர் பெரிய வாச்சான் பிள்ளை
அன்றிக்கே
காவல் -எம்பெருமான் என்று கொண்டு -அனைத்துக்கும் அவன் காவலாளன் என்பதால்
பகவத் விஷயத்திலே மீட்டு என்றுமாம்
கலி தன்னைக் கடக்க பாய்ந்து
இவன் க்ருத யுக புருஷன் என்று சொல்லும் படி

உழி தருகின்றோம் பன்மை சம்பந்திகள் அனைவரும் சேர்த்து
ராஜகுல மகாத்ம்யத்தால்
நமன் தமர் தலைகள் மீதே -பன்மைக்கு இணங்க சஞ்சாரம் ஸ்தலம் போருகைகாக
மூ உலகம் உண்டு உமிழ்ந்தமுதல்வா -பரத்வம்
அரங்க மா நகர் உளானே -சௌலப்யம்

இந்த பாசுரம் கொண்டு தேசிகன் யதிராஜ சப்ததியில்–41-
யதீஸ்வர சரஸ்வதீ ஸூ ரபித ஆசயா நாம் சதாம் வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலி நா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம் சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்

ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு
தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் –
யதிராஜ திவ்ய ஸூக்திகளின் வாசனை கமழும் மனத்தினரான மஹான்களுடைய திருவடித் தாமரைகளை
சென்னிக்கு அணியாகக் கொண்ட அடியேன் எம்பெருமானார் தரிசனத்துக்குப் புறம்பான மதங்களில்
துர்மானத்தால் மனதை வைத்துள்ள புறச் சமயிகள் தலைகளை எண் இடதுகாலால் மிதிக்கிறேன் –
யாவரும் காண்க என்று வீர வாதம் பண்ணுகிறார் –

—————————————————–

இப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரிய பெருமாள்
“ஆழ்வீர்! நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு; அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன;
இவ்வுலகத்திலிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு
பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது;
அது எனக்கு வேண்டா என்கிறார்.

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே–2-

பதவுரை

அரங்கமா நகருளானே!-;
பச்சை மா மலை போல் மேனி-பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்
பவளம் வாய்-பவளம் போன்ற சிவந்த திருவாயையும்
செம் கமலம் கண்–செந்தாமரை மலர்போன்ற திருக் கண்களையுமுடைய
அச்சுதா-அச்சுதனே!
அமரர்ஏறே-நித்யஸுரிகளுக்குத் தலைவனே!
ஆயர்தம் கொழுந்தே-இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே
என்னும்-என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற
இச்சுவை-இந்த அநுபவ ருசியை
தவிர-விட்டுவிடும்படி
யான் போய்-யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று
இந்திர லோகம் ஆளும்-(அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற
அச்சுவை-அந்த அநுபவ ருசியை
பெறினும்-அடைவதாயிருந்தாலும்
வேண்டேன்-(அதனை) விரும்பமாட்டேன்.

பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குப் பச்சைமாமலையை உவமை கூறினார்.
ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும்
முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால் ‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.

‘அச்யுதன்’ என்னும் திருநாமம்-
தான் என்றும் நழுவாதவன் என்றும்
(தன் அடி பணிந்தோரை) நழுவவிடாதவன் என்றும் பொருள்படும்.

என்னுமிச்சுவை என்றதனால்,
எம்பெருமானது குணங்களை அநுபவிக்க வேண்டியதில்லை;
அவனுடைய திருநாமங்களைக் கூறுதல் மாத்திரமே சுவை தருதற்குப் போதுமென்பது பெறப்படும்.

யான்-
திருநாமஞ் சொல்லுகைக்குப் பாங்கான நாவையுடைய நான் என்றபடி.
வேறொரு தேசத்தேறப்போய் அநுபவிக்குமளவும் விளம்பத்தைப் பொறுக்கமாட்டாத
மிகுந்த அபிநிவேசமுடைய நான் என்றுமாம்.

போய் என்பதனால்
போவதிலுள்ள அருமைப்பாட்டையும்
இப்போது பயன் எளிதிற் கைப்பட்டிருத்தலையும் குறிப்பித்தனர்.
“ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே.”

இந்திரன் முதலிய சொற்களெல்லாம் முக்கிய வ்ருத்தியாகப் பரமாத்மாவையே குறிக்குமென்பதும்
மற்றைத் தேவர்களைக் குறிப்பது இலக்கணையாலென்பதும் வேதாந்திகளின் கொள்கையாதலால்
‘இந்திரலோக’ மென்பது ஸ்வர்க்க லோகத்தைக் குறியாமல் எம்பெருமானுக்கே உரிய பரமபதத்தைக் குறித்தது.

“இந்திரலோகமாளுமச்சுவை இனிதன்று” என்னாமல்
“அச்சுவைபெறினும் வேண்டேன்” என்றது-
தாம் பரமபதாநுபத்தைப் பழித்தவராகாமல் திருநாம ஸங்கீர்த்தனத்தில் தமக்குள்ள ஆதராதிசயத்தை விளக்குதற் பொருட்டாம்.
பரமபதாநுப மென்கிற பதார்த்தமே கிடையாதென்றும் சாஸ்த்ர மரியாதைக்காக அது உண்டென்று
ஒருகால் இசைந்தாலும் அது சுவையற்றதாமென்றும் உபந்யஸிக்கிற ஆழ்வாரொருவர் உளரிறே;
திருமங்கையாழ்வார் திருமடல்களை நோக்குக.

“அரங்கமாநகருளானே! அச்சுவை பெறினும் வேண்டேன்”என்றது
பரமபதத்திலிருக்கிறதைவிட்டு இவ்வழகையும் சீலத்தையும் இங்குள்ளார்க்கு முற்றூட்டாக
அநுபவிக்கக் கொடுக்க வந்து கிடக்கிற இது போதாதோ?
தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கிற நீர்மையை அநுபவிக்கைக்கு அங்குள்ளாரும் இங்கே வராநிற்க
என்னை அங்கே போகவிடப்பார்ப்பதென்? என்ற கருத்துத் தோன்றும்.

பச்சை மா மலை போல் மேனி
ச்நேஹோ மே பாமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திச்ச நியதா வீர பாவோ நான்யத்ர கச்சதி –
சத்யம் சபே வாரண சைல நாத வைகுண்ட வாசேபி ந மேபிலாஷ-தேசிகம்
அமரர் ஏறு ஆயர் கொழுந்து என்னும் இச்சுவை -திரு நாமங்கள் கூறுதல் மாத்ரமே போதும்
போய் -யான் -விளம்பம் பொறாத யான் -ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
அரங்கமா நகர் உளானே அச்சுவை பெறினும் வேண்டேன் –
அங்குள்ளார் சீலம் முற்றூட்டாக அனுபவிப்பதை-நீர்மையை – பார்க்க வர
என்னை அங்கே போக விடப் பார்ப்பது என்
பெறினும் -அருமையைச் சொன்னபடி-

——————————————————

உலகத்தில் மானிடப்பிறவி யென்பது ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே பெறக்கூடியது;
அதனை வருந்திப் பெற்றாலும், கர்ப்பத்திலேயும், பிறந்தவுடனும் நாலு நாள் கழித்தும் சில மாதங்கள் கழித்தும்
சில வருடங்கள் கழித்தும் இறக்கக் கூடியவர்கள் பெரும்பான்மையரேயன்றி,
வேத சாஸ்த்ரத்தில் “தாயுர்வை புரு‘” (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று கூறியுள்ளபடி
தீர்க்காயுஸ்ஸாக வாழக்கூடியவர் மிகச் சிறுபான்மையரே;
விதிவசத்தால் சிலர்நூறு பிராயம் புக்கு வாழப்பெற்றாலும் அவரது வாழ்நாள் கழியும் வகையை ஆராய்ந்தால்
ஒரு நொடிப்பொழுதாவது நற்போதாகக் கழிய வழியில்லை.
ஸூர்யன் அஸ்தமித்து மீண்டும் உதிக்குமளவும் உறங்குவது ஒரு நியமமாக வந்துவிட்டபடியால்
அஹோராத்ரமாகிய ஒரு திநத்துக்கு உள்ள அறுபது நாழிகையில் முப்பது நாழிகை உறக்கத்தில் கழிகிற
கணக்கில் பாதி ஆயுஸ்ஸாகிய ஐம்பது வருஷம் உறக்கத்தால் கழிந்ததாகிறது;
மற்ற பாதிவாழ்நாளில்-தன்னுடைய ஹிதாஹிதம் தாயின் அதீனமாயிருக்கும் சிசுத்வாவஸ்தையாய்ச் சிலகாலமும்,
எத்தனை தீம்புகள் செய்தாலும் சீறவொண்ணாதபடி செல்வப்பிள்ளை பருவமாய்ச் சிலகாலமும்,
பிறகு யௌவநம் வந்து புகுந்து விஷயாந்தரங்களிலே மண்டித்திரியும் பருவமாய்ச் சிலகாலமும்,
இங்ஙனே இந்திரியச் சிறையிலே அகப்பட்டுத் தடுமாறாநிற்க இடிவிழுந்தாற்போலே வந்து புகுகிற கிழத்தனமாய்ச்
சிலகாலமும் “அத்யுத்கடை; புண்யபாபைரிஹைவ பலமச்நுதே”
(வரம்புகடந்த புண்யபாபங்களின் பலனை இப்பிறவியிலேயே அநுபவிக்கிறான்)என்றபடி –
யௌவநத்திற் செய்த எல்லை கடந்த குறும்புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் வருந்துவதாய்ச் சிலகாலமும்,
பசியினால் ஒன்றும் தோன்றாதபடி இடர்படுவதாய்ச் சிலகாலமும்,
ஒருபக்கத்தில் பிள்ளை செத்தான் என்று கேட்டு அழுவதும்,
மற்றொரு பக்கத்தில் மனைவி செத்தாள் என்று கேட்டு அழுவதுமாய் இப்படி
ஸம்ஸாரத் துன்பங்களில் ஆழ்ந்து செல்லும் நாளாய்ச் சிலகாலமும் கழிவதால்
இத்துன்பங்களை அநுபவிப்பதற்கு இன்னும் சிறிது ஆயுஸ் கடன் வாங்கிக் கொள்ள வேண்டியதாமேயன்றி
உள்ள வாழ்நாளில் ஆத்மாவைப்பற்றிச் சிறிதாகிலுஞ்சிந்திக்கப் பொழுது கிடைப்பரிது;
ஆதலால் இப்பிறவி எனக்கு வேண்டா என்கிறார்–

கீழ்ப்பாட்டில் ‘பரம பதம் எனக்கு வேண்டா’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர் உமக்குப் பரமபதம்; வேண்டாவாகில் கோயிலோடே தோள் தீண்டியான ஸம்ஸாரத் திலேயிருந்து
திருநாமத்தை அநுபவியும் “ என்றருளிச்செய்ய;
“அது தன்னையும் நிரூபித்தவாறே திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் அரிதாம்படி துக்கப் பரம்பரையேயா யிருந்தது ;
ஆகையாலே எனக்கு ஸம்ஸாரத்திலிருப்பும் வேண்டா “ என்று ஆழ்வார் கூற
‘திருநாமம் சொல்லுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸம்ஸாரத்திற்கு நீர் சொல்லுகிற குறை என்?’ என்று எம்பெருமான் கேட்டருள,
ஸம்ஸாரத்தினுடைய தோஷங்களை இப்பாட்டால் உபபாதிக்கிறாரென்க.

“இத்தால், பழகிப்போருகிற ஸம்ஸார யாத்ரையிலும் ஜுகுப்ஸை பிறக்கும்படி
திருநாமம் இனிதென்று அம்முகத்தாலே
திருநாமத்தினுடைய போக்யதா ப்ரகர்ஷத்தைச் சொல்லுகிறது” என்பர் பெரியவாச்சான் பிள்ளை.

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.–3-

பதவுரை

அரங்கமாநகருளானே!
மனிசர் தாம்–மநுஷ்யர்கள்
வேதம் நூல்–வேத சாஸ்திரத்திற்படியே
நூறு பிராயம் புகுவரேலும்–நூறு பிராயம் வாழ்ந்திருப்பர்களே யானாலும்
பாதியும்–அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
உறங்கி போகும்–உறக்கத்தாலே கழியும்;
நின்ற இப்பதினையாண்டு–மிகுந்த ஐம்பது வருஷம்
பேதை–சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
பாலகன்-‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும்
அது ஆகும்–நெஞ்சால் நினைக்கவும் தகாத யௌவநாவஸ்தையாயும்
பிணி–வியாதி மயமாயும்
பசி–ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
மூப்பு–கிழத்தனமாயும்
துன்பம்–மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
ஆதலால்–இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
பிறவி–ஜந்மத்தை
வேண்டேன்–விரும்புகிறேனில்லை.

வேதநூல்-வேதமென்கிற சாஸ்த்ரம்;
அன்றியே, வேதமும் மற்றுமுள்ள சாஸ்த்ரங்களுமென்றுமாம்.

உறங்கி – உறங்க என்றவாறு, எச்சத்திரிபு.

பதினையாண்டு – பத்தாலே பெருக்கப்பட்ட ஐயாண்டு – ஐம்பது வருஷமென்றபடி.
“நின்றதிற் பதினையாண்டு” என்றும் சிலர் ஓதுவர்.

பேதை பாலகன் என்ற அடைவின் படியே யௌவந பருவத்தையும் வாய் விட்டுச் சொல்லாதொழிந்தது –
அப்பருவத்தின் மிக்க கொடுமையை விளக்குதற்காம்.
துஷ்டன் பெயரை நாக்கொண்டு கூறக் கூசுமவர்‘அந்தப்பயல்’ என்றே சொல்லுமாபோலே.
அப்பருவத்தின் கொடுமையை இவ்வாழ்வார் நன்கு கைகண்டவடராதலால் அதனை நினைத்தவாறே
அஞ்சி நடுங்கி அதாகும் என்கிறார்.
‘பேதை தனமே நன்று’ என்னும்படியன்றோ இப்பருவத்தின் அறிவு கேடு இருப்பது.

இப்படி “பிறவி வேண்டேன்’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று பரமபதமும் வேண்டா என்கிறீர்;
‘பிறவி வேண்டேன்’ என்று ஸம்ஸாரமும் வேண்டா என்கிறீர்;
நம் கையிருள்ளது இவ்விரண்டு விபூதியேயன்றோ? இரண்டுக்கும் குறை கூறா நின்றீர்;
‘நின்றால் ஆணை, இருந்தால் ஆணை, கிடந்தால் ஆணை’ என்பாரைப் போலே நீர்படுத்துகிறபாடு என்!”
என்று முட்டிக்கொள்ள அரங்கமாநகரளானே!’ என்கிறார்;
கீழ்க்கூறிய இரண்டு விபூதிக்கும் மேற்பட்டு மூன்றாவது விபூதி யென்னும்படியான கோயிலிலே
எனக்கு ஓர் இருப்பு அமைக்கலாகாதோ? என்பது உட்கருத்து.

கோயிலில் குடிவாழ்ந்தால் பேதைப் பருவத்திலே அந்ந ப்ராகத்துக் கென்றாகிலும் ஸந்நிதிக்குள் கொண்டு புகுவார்கள்;
பாலயாவஸ்தையில் விளையாடும்போதும் பெருமாள் புறப்பாடு அருளிப்பாடு முதலியவற்றை அநுகரிக்கும்படியாயிருக்கும்
யௌவநம் வந்தால், தான் விரும்பின விஷயாந்தரங்களைக் காணவேண்டியாகிலும் ஸந்நிதிக்குள்ளே புகலாயிருக்கும்;
மூப்படைந்து உள்ளே புகமாட்டாத நாளைக்கு நம்பெருமாள் இவன் வாசலிலே வந்து நிற்கலாயிருக்கும்;

ஆக இப்படிகளாலே கனவிலும் காண்பது பெருமாள் வடிவழகேயாயிருக்குமாகையாலே
கோயில் வாஸம் அடிக்கழஞ்சு பெற்றுச் செல்லா நிற்குமென்றருளிச் செய்வர்.

3-வேத நூல்
கீழ்ப்பாட்டில் பரமபதம் எனக்கு வேண்டா என்ற ஆழ்வாரை நோக்கி
ஆழ்வீர்-உமக்கு பரமபதம் வேண்டாவாகில் கோயிலோடு தோள் தீண்டியான சம்சாரத்திலே இருந்து
திரு நாமத்தை அனுபவியும் என்று அருளிச் செய்ய
அது தன்னையும் நிரூபித்தவாறே திரு நாமம் சொல்லுகைக்கு அவகாசம் அரிதாம்படி
துக்க பரம்பரை யாயே இருந்ததே ஆகையால் எனக்கு சம்சாரத்தில் இருப்பும் வேண்டா –என்ன
சம்சாரத்தில் நீர் சொல்லும் குறை என்ன என்று அவன் திரு உள்ளமாக
சம்சாரத்தின் தோஷங்களை இதில் அருளுகிறார்

இத்தால்
பழகிப் போருகிற சம்சார யாத்ரையிலும் ஜூகுப்சை பிறக்கும்படி திரு நாமம் இனிது என்று
அம்முகத்தாலே திரு நாமத்தின் உடைய போக்யதா பிரகர்ஷத்தை சொல்லுகிறது -பெரியவாச்சான்பிள்ளை

அரங்க மா நகர் உளானே -மூன்றாவது விபூதி உண்டே உனக்கு என்கிறார்
கோயில் வாஸம் அடிக்கழஞ்சு பெற்று செல்லா நிற்குமே

யௌவனம் -அதாகும்-

———————————————————————–

இப்பாட்டு முதல், பதினான்காம் பாட்டளவும்
பகவத் விஷயத்திலே தம்மைப் போல் ஆழங்காற்படாமல் உடலுக்கே கரைந்து நைந்து திரியும் ஸம்ஸாரிகளின்
இழவைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தளர்ந்து ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும், ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும்,
மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும் இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக்கொண்டும் பேசுகிறார்.

பகவதநுபவத்திலே ஊன்றி உகப்பேயாய்ச் செல்லுமிவர் ஸம்ஸாரிப் பாவிகளைப் பற்றிக் கரைந்து வருந்துவானேன்? என்னில்;
இப்பாவிகள் அநியாயமாய் வகுத்த விஷயத்தை இழந்து படுகின்றனரே என்னும் துக்கம் பொறுக்கமாட்டாமையாலும்,
பகவத் விஷயம் பலர் கூடித் திரண்டு அநுபவிக்க வேண்டிய இனிய விஷயமாதலாலும்,
“ஏக; ஸ்வாது ந புஞ்ஜீத” (இன்கனி தனி யருந்தான்) என்றபடி
இனிய விஷயத்தைத் தனியராய் அநுபவித்து ஸாத்மிப்பித்துக்கொள்ள வல்ல தன்மையரல்லராதலாலும்
துணை கூட்டிக்கொள்ளத் தேடுகிறாரென்க.

‘கொடும்பாவிகளான எங்களுக்கு எம்பிரான் திருநாமங்களை உச்சரிப்பதற்கு யோக்யதை உண்டோ?
தேவனேசமான புரொடானத்திலே நாய் வாய்வைக்கக்கடவதோ?’ என்று சில ஸம்ஸாரிகள்
அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்க்க, அவர்களை நோக்கி,
‘ஆதர்காள்! நன்கு சொன்னீர்கள் க்ஷத்ர பந்து என்வனிற்காட்டிலும் வேறொரு கொடிய பாபிஷ்டன்
இவ்வுலகில் உளனென்று நீங்கள் கேட்டதுண்டோ!
அவனுடைய கொடுமையை நீங்கள் புராணத்திலே விரிவாகக் கேட்டிருக்கலாமோ
அப்படிப்பட்ட பாவியுமன்றோ கோவிந்த நாமத்தை உச்சரித்து நற்கதி நண்ணினன்.
அன்றியும், பொய்யான அன்பை அபநயித்துக் காட்டுவார் பக்கலிலும் பிச்சேறி மேல் விழுந்து
பற்றுவானாயிருந்தான் எம்பெருமான்
இவற்றை யெல்லாம் நீங்கள் அறிந்து வைத்தும் படு குழியில் வீழ்ந்து படுவதே! இஃது என்ன கொடுமை!’ என வியக்கிறார்.

மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே–4-

பதவுரை

மொய்த்த–அடர்ந்து கிடக்கிற
வல் வினையுள் நின்று–கொடிய பாபராசியினுள்ளே நின்று
மூன்று எழுத்து உடைய பேரால்–கோவிந்த நாமத்தாலே
கத்திரபந்தும் அன்றே–க்ஷத்ர பந்துவமன்றோ
பராங்கதி–சிறந்த பதவியை
கண்டு கொண்டான்–கண்டு அநுபவிக்கப் பெற்றான்;
இத்தனை அடியர் ஆனார்க்கு–இவ்வளவு ஆநுகூல்யம் உடையவர்கட்கும்
இரங்கும்-அருள் புரிகின்ற
நம் அரங்கன் ஆய பித்தனை–நம் அழகியமணவாளனாகிற ஆச்ரித வியாமுக்தனை
பெற்றும்–சேஷியாகப் பெற்று வைத்தும்
பிறவியுள்–ஸம்ஸாரத்திலகப்பட்டு
பிணங்கும் ஆறே–வருந்துகிற விதம் என்னே!
அந்தோ–ஐயோ!

மொய்த்த வல்வினை –
பாபராசிகள் கோடிக்கணக்காகச் சேர்த்து ‘நான் முன்னே நான் முன்னே’ என்று மேல் விழுந்து
மொய்த்துக் கொண்டு கிடக்கிறபடி
தேன் கூட்டை ஈ மொய்த்துக் கொள்ளுமாபோலே
“நெய்க்குடத்தைப் பற்றி ஏறு மெறும்புகள் போல் நிருந்து, எங்குங்கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்”
என்ற பெரியாழ்வார் திருமொழியையும் நோக்குக.

மொய்த்த வல்வினையுள் நின்று –
மஹாபாபிஷ்டனாயிருந்துவைத்து என்றபடி.

மூன்றெழுத்துடைய பேரால்-
இன்ன திருநாமமென்னாதே ரஹஸ்யமாய்ச் சொல்லிற்று-
ருசி பிறந்த பின்பு ‘அந்தத் திருநாமம் ஏன்?’ என்று விரும்பிக் கேட்டால் அப்போதைக்கு உபதேசிப்போமென்றாம்.
“மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்” என்று பெரியாழ்வார் மறைத்தாற்போல.

கத்திரபந்து-
பிராமணர்களுள் அதமனை ‘ப்ரஹ்மபந்து’ என்கிறாப்போலே
க்ஷத்ரியர்களுள் அதமனை ‘க்ஷத்ரபந்து’ என்கிறது.
“நம்முதலிகள் கோஷ்டியில் ‘நாலூரான்’ என்றாற்போலே
ரிஷிகள் கோஷ்டியில் ‘க்ஷத்ரபந்து’ என்றால் செவி புதைக்கும் படியாய்த்திருப்பது” என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
நாலூரானுடைய கொடுமை கூரத்தாழ்வான் சரிதத்தில் காணத் தகும்.

பராங்கதி-பரகதி என்றவாறு அதாவது பரமபத ப்ராப்தி.
கோவிந்த நாம ஸங்கீர்த்தநத்தால் பர பராசியில் நின்றும் விடுபட்டவளவே யன்றி,
ஐச்வர்யம் கைவல்யம் முதலிய க்ஷுத்ர பலங்களைப் பெற்றொழியாதவளவேயுமன்றி
நித்ய ஸூரிகளுடைய நித்யாநுபவத்தை யன்றோ பெற்றது.

கத்திரபந்துமன்றே-க்ஷத்ரபந்துவின் உபாக்கியானம் ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில்
தொண்ணூற்றேழாவது அத்யாயத்தில் பரக்கக்கூறப்பட்டுள்ளது;
அதன் சுருக்கம் வருமாறு;-

மிகக் கொடிய நடத்தைகளையுடையவனாய், பல்வகைப் பாவங்களும் உருவெடுத்து வந்தனவென்னும்படி
மஹாபாபியான க்ஷத்ரபந்து என்பானொருவன் இருந்தான்; அவன் தனது கொடுமையினால் தாய் தந்தை மக்கள் மித்திரர்
அனைவராலும் கைவிடப்பட்டவனாய் காட்டிலே திரிந்து கொண்டு ஜீவஹிம்ஸையினால் வயிறு வளர்த்து வந்தான்.
இங்ஙனம் நெடுநாள் சென்றவளவில், ஒருநாள் ஒரு மாமுனிவர் கொடிய வெய்யில் வேளையில்
வழிபோகா நிற்கையில் வழிதப்பி, இப்பாவி திரியுங் கானகத்திலே புகுந்து இவனது கண்ணுக்கு இலக்காயினர்.
அவரைக் கண்டதும் அவருடைய பரிதாபத்தைக் கண்ட இவனுக்குத் தன்னையுமறியாமல்
அம்முனிவர் விஷயத்திற் காருண்யமுண்டாகி, ‘மாமுனிவரே! இஃது உம்முடைய வழியன்றே, வழி தப்பிவந்தீர் போலும்.
உற்றுநோக்கிப் பாரும்’ என்று முனிவரை நோக்கிக்கூற,
அவரும் உணர்ந்து, பொறுக்கமுடியாத தாஹத்தையுடையராய் ஒரு தடாகத்தைத் தேடிச் செல்லுகையில்
அருகே ஒரு அழகிய பொய்கையைக் கண்டு, தாப மிகுதியால் சடக்கென அக்குளத்திற்போய் விழுந்திட்டார்.

அப்போது அருகிருந்த க்ஷத்ரபந்து தனது கையிலிருந்த வில்லையும் அம்புகளையும் எறிந்துவிட்டு,
அம்முனிவரைப் பிடித்துத் தூக்கித் தேற்றித் தாமரைக் கிழங்குகளை உணவாகக் கொடுத்து விடாயைப் போக்கி மகிழ்வித்தான்.
பிறகு அவர் கரைமீதேறி ஒரு மரத்தடியில் உட்கார, அவரது கால்களின் நோவு தீர நன்றாகப் பிடித்து உபசாரங்களைச் செய்த
க்ஷத்ரபந்துவை நோக்கி அம்முனிவர்,
‘பேருபகாரம் புரிந்த பெரியோனே! யாருடைய சிறந்த குலத்திற் பிறந்தவன் நீ?
உனது வரலாறுகளைக் கேட்க விரும்புகிறேன்’ என்ன!
அது கேட்ட அவனும் ‘முனிவர் கோமானே! நான் ஸூர்யவம்ஸத்தில் விஸ்வரதன் என்பவற்கு மகனாய்த் தோன்றியவன்’
என்று தொடங்கித் தனது கொடுமைகளையெல்லாம் ஒன்றும் ஒளிக்காமல் உள்ளபடி சொல்ல
அவற்றைச் செவியுற்ற முனிவர் இவனை நல்வழியிற் செலுத்தவேணுமென்ற கருத்துகொண்டு

‘அப்பா! இத்தீய குணங்களையெல்லாம் விட்டிட்டு ஜூவ காருண்யத்தையே பரம தர்மமாகக் கடைபிடிக்க உன்னாலாகாதோ?’
என்று கேட்க அதற்கு அவன் ‘காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்னும் தீக்குணங்கட்குப்
பிறப்பிடமான நான் அவற்றை விட்டுப்பிரிந்து ஒரு க்ஷணகாலமும் இருக்ககில்லேன்; என் மனம் என் வசமன்று;
இது தவிர வேறு நியமநமுண்டாகில் சிரமேற் கொள்ளக் காத்திருக்கிறேன்’ என்ன;
எப்படியாவது இவனை வழிபடுத்த வேணுமென்னும் பேரவாக்கொண்ட முனிவர்
‘இது மாட்டாயாகில், எப்போதும் கோவிந்த! கோவிந்த! என்று சொல்லிக் கொண்டிருக்கவாவது உன்னால் முடியுமோ?
இருமினாலும் தும்மினாலும் கோவிந்த! என்றே சொல்லிக் கொண்டிருப்பாயாகில் உனக்கு மிக்க நன்மையுண்டாம்’
என்று சொல்லி விட்டுப் போயினர்;

அது முதலாக க்ஷத்ரபந்து கோவிந்த நாமத்தை இடைவிடாது ஸங்கீர்த்தநம் பண்ணிக் கொண்டிருந்தான்.
சிலகாலங் கழித்து அவன் மரணமடைந்து அந்தணர் குலத்தில் பூர்வ ஜந்ம ஸ்மரணத்துடன் பிறந்தான்.
உடனே அவனுக்கு இக்கொடிய ஸம்ஸாரத்தில் மிக்க நிர்வேதம் உண்டாயிற்று.
இப்படிப்பட்ட உத்தமோத்தமமான ப்ராஹ்மண குலத்தில் எனக்குப் பிறவிட நேர்ந்ததும் பூர்வ ஜக்ம ஸ்மரணமுண்டானதும்
நான் முன்பு பண்ணின கோவிந்தநாம ஸங்கீர்த்தகத்தின் பயனன்றோ?
ஆகவே எனக்கு மேலான நன்மையை விளைத்த அந்த கோவிந்தனையே நான் ஆராதனஞ்செய்து,
தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயநரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றமிகு முடலைவிட்டு
மாய வன் சேற்றள்ளற் பொய்நிலத்தைக் கண்டது நலமந்தமில்லாதோர் நாடாகிய பரம பதத்தை அடையக் கடவேன்
என்பதாகத் துணிந்து அங்ஙனமே செய்து பரம பாகவதனாகி விடுபெற்றனன் என்பதாம்.

இத்தனை யடியரானார்க்கு –
க்ஷத்ர பந்துவைப் போல ஸ்வல்பம் ஆநுகூல்ய முடையவர்கட்கு என்றும்
ஈஸ்வரன் போ, நீ மேஷன் என்று ஒருவர் சொன்னால் ஆ! அப்படியா!’ என்று மார்பு தட்டி மறுப்பதற்கு முன்
வர மாட்டாத அத்வேஷமுடையார்க்கும் என்றும் இரண்டு வகையாகப் பொருள் கூறுப.

பித்தன்-
இது செய்யத்தகும், இது செய்யத்தகாது என்ற விவேகமற்றவன் பேயனெனப் படுவான்
எம் பெருமானும் அடியார் திறத்திலுள்ள வ்யாமோஹாதிசயத்தினால் பரிமாறும் முறையில் அடைவு கெட்டு
முறைமாறுபவனாதலால் பித்தனெனப்பட்டது.
பகவத் விஷயத்திலே உங்மஸ்தமாக ஆழுமவர்களைப் பேயர் என்னுமா போலே,
பாகவத விஷயத்திலே உங்மஸ்தகமாகப் பரிமாறுபவனைப் பித்தனென்னக் குறையில்லையே.

4-மொய்த்த வல்வினை –
இது முதல் 14 பாட்டு அளவும்
சம்சாரிகள் கண்டு தளர்ந்து -பகவத் விஷயம் இழந்து தவிக்கின்றார்களே
இனியது தனி அருந்தேல்
துணை தேட்டமாக இருக்குமே -அவர்களை கண்டு
ஆச்சர்யம்
வருத்தம்
வெறுப்பு
நிந்தனை
செய்து அருளுகிறார்
மொய்த்த வல்வினை
நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கிற நோய்காள் -பெரியாழ்வார்
மூன்று எழுத்துடைய பேரால்
ருசி பிறந்தால் சொல்லலாமே
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் –
ஷத்ரபந்து வியாக்யானம் விஷ்ணு தர்மம் -97 அத்யாயம்
சூர்ய வம்சம் விஸ்வநாதன் மகன்
கோவிந்த நாம சங்கீர்த்தனம்
அந்தணர் குலம் பிறந்து
மேலும் ஸ்ரீ கோவிந்தனை ஆராதனம் செய்து
இத்தனை அடியரானார்க்கு -ஆனுகூல்யலேசம்-உள்ளார்

———————————————————————————-

பெண்களோடு அணைந்து சுகத்தை அநுபவிக்க விரும்பதல்
தீயோடு அணைந்து விடாய் தீர நினைப்பதையும்,
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி சுகம் பெற நினைப்பதையு மொக்குமென்பார்-
பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபண்டு என்கிறார்.
ஐயோ துக்கத்திற்கு ஸாதமானவற்றையே சுகத்திற்கு ஸாதனமாக நினைப்பதே
இப்படியுமொரு மயக்கமுண்டோ
பிழைக்கவேணுமென்று நினைப்பாரும் விஷத்தையுண்பரோ ?

பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்குமாறே–5-

பதவுரை

பெண்டிரால்–மனைவியரால்
சுகங்கள்–ஸகல ஸூகங்களையும்
உய்ப்பான்–அநுபவிப்பதாகக் கருதி
பெரியது ஓர் இடும்பை–மிகப் பெரிதான துயரங்களை
பூண்டு–மேற்கொண்டு
இரா–இராப் பொழுதிலே
உண்டு–புஜித்து
கிடக்கும் போதும்–படுக்கையிலே சாயும் போதும்
உடலுக்கே கரைத்து–சரீரத்திற்காகவே கவலைப்பட்டு
நைந்து–நெஞ்சு உளையப் பெற்று,
தண் துழாம் மாலை மார்பன் தமர்கள் ஆய்-குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமனது அடியாராய்
பாடி-(அவன் குணங்களை வாயாரப்) பாடி
ஆடி-(பரவசமாய்க்)கூத்தாடி
தொண்டு பூண்டு -(இவ்வகைகளாலே)சேஷ வ்ருத்தியை மேற்கொண்டு
அமுதம் உண்ணா தொழும்பர்–(பகவத் குணானுபவமாகிற) அமுதத்தை புஜிக்கப் பெறாத நீர்
சோறு உகக்கும் ஆறே-சோற்றை விரும்பும் வகை என்னோ!

பெரியதோ ரிடும்பை பூண்டு-
ஸூக ஸாதநமாக நினைத்துத் தாம் கொண்ட பெண்டிரை உகப்பிப்பதற்காக
ம்ருத்யு தாநம் வாங்க வேணும், பரஹிம்ஸை பண்ணவேணும், பொற்களவு செய்யவேணும்,
ராஜ தண்டனைகளை அனுபவிக்க வேணும், ஐயோ!
இப்படிகளாலே பெருப் பெருத்த துக்கங்களை ஏறிட்டுக் கொள்ளுகிறார்களே!
முதலிலே பெண்டிரைக் கொள்வதற்கு ஸாதகமாகச் செய்யம் செயல்களும்
துக்க ருபம் கொண்ட பெண்டிரைப் பாதுகாப்பதற்காகச் செய்யும் செயல்களும் துக்க ரூபம்;
இவ்வளவேயு மன்றி அப் பெண்டிரால் இவன் அடைவதும் பூர்ண துக்கமே,
“ஈசிபோமின் ஈங்கிரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளங்கூசியிட்டீர்”என்று கதவடைத்துக் காற்குடைக் கொள்ளுவர்களே.

“பெரியதோரிடும்பை எய்தி “ என்னாமல் பூண்டு என்ற சொல் நயத்தால்
கழுத்திலே மாட்டிக் கொண்ட வாயோடுபோலே பிறகு தன்னாலும் கழற்றிக் கொள்ள முடியாமை விளங்கும்.

உண்டிரா-
தாம் கொண்ட பெண்டிரை உகப்பிப் பதற்காகப் பகலெல்லாம் சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடிசைந்து
போது போக்க வேண்டியிருப்பதால் ஒரு பிடி சோறு உண்பதற்கும் அவகாசம் அரிதாய் விடும்;
பின்னை இரவிலே யாய்த்து உண்பதற்குச் சிறிது அவகாசம் பெறுவது,
பகலெல்லாம் அலைந்து ஒருபிடி சோறு உண்டவாறே உடம்பு பரவசமாய் விழுந்து விடுமாதலால் “கிடக்கும் போதும்” என்கிறார்.

அப்போதாகிலும் ஆத்மாவைப்பற்றிச் சிறிது கரையக் கூடுமோ என்று பார்த்தால் இல்லை
(உடலுக்கே கரைந்து நைந்து)
பொழுது விடிந்தவாறே எங்கே சூதாடப் போகலாம், எங்கே களவாடப் போகலாம் என்றாற்போலே
மீண்டும் தேஹ யாத்ரையைப் பற்றின சிந்தையே யாய்த்து நிகழ்வது.

கரைந்து நைந்து-
பகவத் விஷயத்திலே ஆழ்ந்தவர்கள் “நினை தொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்” என்றபடி
படும் பாடுகளை யெல்லாம் அந்தோ! இவன் விஷயாந்தரங்களிற்படுவதே! என்று வயிறெரிகிறார்.

எவ்வளவோ பாவங்கள் செய்து பணங்களைத் திரட்டிக் கொணர்ந்து கொடுத்து ஆராதித்தாலும்
முகஞ்சிதறப் புடைக்கிற மாதர்களின் முன்றானையையே பின்பற்றி ஓடுகின்றனரே யன்றி
ஸுலபமாய் ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைச் சிந்தித்து மகிழ்வாரில்லையே என்கிறார்.
(தண்டுழாய் மாலை இத்யாதி.)
‘எனக்கு ஆடு பலிகொடுக்கவேண்டா; ஊன்வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலிற் பிரியாப்
புலனைந்தும நொந்துவாடத் தவஞ்செய்யவேண்டா;
நீயும் நானும் ஒன்று, என்று இத்தனை உறவு பண்ணிக்கொண்டு வந்தால் போதும், அவர்களை நான் விடமாட்டேன்’
என்ற கருத்துத் தோன்றத் திருத்துழாய மாலையணிந்து நிற்கிற பிரானைப் பற்றுவாரில்லையே!

தமர்களாய்-
‘எம்பெருமானுடைய கோஷ்டியிற் சேர்ந்தவர்கள் நாங்கள்’ என்றிவ்வளவே யன்றோ அவர்கள் காட்ட வேண்டியது.
இவ்வளவு ஸ்வரூப ஜ்ஞாநம் வாய்ந்தவாறே பின்னை அவர்கள் வெறுமனிருக்க முடியுமோ?
பாடியாடும்படியாகும்.
பிறகு “உனக்கே நாமாட் செய்வோம்” என்று அத்தாணிச் சேவகத்திற்கு அணுகலாகும்;
அதிலே ஸகல ரஸங்களும் காணலாகும்.
இவ்வளவும் பெற்று மகிழவேண்டியவர்கள் “இப்படிப்பட்ட ரஸமொன்று உண்டு” என்றும்
நினையாமல் விஷயாந்தரங்களை விரும்பிப் பாழாய்ப் போவதே!

தொண்டுபூண்டு அமுதமுண்ணா-
“ஹஸ்த்யத்ரிநாத! தவ தாஸ்யமஹாரஸஜ்ஞ;” என்று அறிவுடையார் எம்பெருமானுடைய அடிமையையே
ஆராவமுதமாக அறுதியிட்டிருக்க, எச்சில் வாயிலே அமுதமுண்டென்று மயங்கி ஓடுவாரும் சிலரே.

தொழும்பர்-
‘இவனுக்குமேல் நீசனில்லை, என்னும்படி முதல் வகுப்பில் தேறினவர் ;
பரம நீசர்.
‘தொழும்பர்’ என்று அடியவர்க்கும் பெயர்.

“சோறு உகக்குமாறே.)
மண்ணிற்காட்டில் சோற்றுக்கு வாசியறிந்து ஜீவிக்கிறபடி எங்ஙனே!
நித்யமான ஆத்ம வஸ்த்துவுக்கு பகவத் சேஷத்வமே தாரகமென்று அறியாதவன்
அநித்யமான தேஹத்திற்குச் சோறு தராகமென்று அறிந்து ஜீவிக்கிறானோ?
பித்ராதிகள் ஜீவிக்கக் காண்கிற வாஸனை கொண்டு ஜீவிக்கிறானித்தனையிறே
வாசியறியுமவனாகில் ஆத்மாவுக்கு நன்மை யெண்ணானோ?
ஒன்றிலே விசேஷிஜ்ஞாநமுண்டாகில் மற்றையதிலும் அறிவு உண்டாகாதோ?” என்ற வியாக்கியான
ஸ்ரீ ஸூக்திகளின் போக்யதையைச் சிறிது அநுபிக்க.

“கரைந்து நைந்து அமுதமுண்ணா” என இயையும்.

5-பெண்டிரால்
கரைந்து நைந்து
பகவத் விஷயத்தில் ஆழ்ந்தவர்கள்
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்று படும் பாடுகளை
விஷயாந்தரங்களில் படுவதே
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா -ஹச்த்யத்ரி நாத தவ தாஸ்ய மகா ரசஜ்ஞ-என்று
அறிவுடையார் அடிமையை ஆராவமுதமாக அறுதியிட்டு இருக்க
எச்சில் வாயில் அமுதம் உண்டு என்று மயங்கி ஓடுவாரும் சிலரே
சோறு உகக்குமாறே
மண்ணில் காட்டில் சோற்றுக்கு வாசி அறிந்து ஜீவிக்கிறபடி எங்கனே
நித்தியமான ஆத்மவஸ்துவுக்கு பகவத் சேஷத்வமே தாரகம் என்று அறியாதவன்
அநித்தியமான தேஹத்துக்கு சோறு தாரகம் என்று அறிந்து ஜீவிக்கிறானோ
பித்ராதிகள் ஜீவிக்கிற காண்கிற வாசனை கொண்டு ஜீவிக்கிறான் இத்தனை இறே
வாசி அறியுமவன் ஆகில் ஆத்மாவுக்கு நன்மை எண்ணானோ
ஒன்றிலே விசேஷ ஞானம் உண்டாகில் மற்றையதிலும் அறிவு உண்டாகாதோ
கரைந்து நைந்து அமுதம் உண்ணா -என இயையும்-

———————————————————————————

விஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர்
“விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பல தோஷங்களுள்ளன வாயினும் அவற்றை நாங்கள்
விடவேணுமென்ற நியதி யில்லை; ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோமாயினும்
விஷயங்கள் பல உளவாகையால் ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு
அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல,
“அப்படியே யானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக் கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்க வேணுமே
அவ் விஷயங்களைப் போலவே போக்தாவும் அஸ்திரன் கிடீர்” என்கிறார் இப் பாட்டால்–

மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே–6-

பதவுரை

மறம் சுவர்–கொடுமையாகிற சுவரை
மதிள் எடுத்து–மதிளாக எழுப்பியும்
மறுமைக்கு–ஆமுஷ்மிக பலத்திற்கு
வெறுமை பூண்டு–ஏழ்மையை மேற் கொண்டும் இருக்கிற நீங்கள்
புறம் சுவர்–வெளிச் சுவராய்
ஓட்டை–அநித்யமான
மாடம்–சரீரமானது
புரளும் போது–தரையில் விழும் காலத்தை
அறிய மாட்டீர்–அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற–தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற
அரங்கனார்க்கு–அழகிய மணவாளனுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
புறம் சுவர்–வெளிச் சுவரான உடம்பை
கோலம் செய்து-அலங்கரித்து
புள் கவ்வ–பறவைகள் கவ்விக் கொள்ளும் படி
கிடக்கின்றீரே–கிடக்கின்றீர்களே.

இவன் ‘தீவழியிற் சென்று அநியாயமாய்க் கெட்டுப் போகிறானே!
இவனுக்கு உரிய ஹிதங்களைச் சொல்லி இவனை மீட்போம்’ என்று ஸஹஜ காருண்யலிகளான
சில மஹாநுபாவர் இதஞ்செய்வதற்குக் கிட்ட வந்தால் அவர்களை அபதார்த்தமாக நினைத்துத் துச்சமாகப்
பேசும்படியான கொடுமையை மறம் என்கிறது.

ஹிதஞ்சொல்லவந்த விபீஷணாழ்வானை “த்வாம் துதிக் குலபாம்ஸநம்” என்றிகழ்ந்த ராவணனோடொத்த
குணசாலிகளாய்த்து மறஞ்சுவர் மதிளெடுப்பார்.
அமாநித்வம் முதலிய ஆத்மகுணங்களைத் தனக்கு அரணாகக் கொள்ள வேண்டியது போய்,
கொடுமையை அரணாகக் கொள்ள வேண்டும் படி யாய்த்தே உங்கள் பாவம்! என்கிறார்.

“பூத பவ்ய பவந்நாத; கேசவ: கேசிஸூதந; -ப்ராகாரஸ் ஸர்வ வ்ருஷ்ணீநாமா பந்நாபயதோஹரி; (பாரதம்-ஸபாபர்வம்)
என்று அடியவர்க்கு மதிளாகக் சொல்லப்பட்ட எம்பெருமானை விட்டு மறஞ்சுவரை நீங்கள் மதிளாகப் பற்றினபடி மிகவுமழகியதே!

இப்படி கொடுமையையே காப்பாகக் கொண்டால் அதனால் பலிப்பது ஆமுஷ்மிகத்திற்கு
ஒரு கைம் முதலில்லாமையே யன்றோ; அதனைச் சொல்லுகிறது –
மறுமைக்கே வெறுமை பூண்டு என்று சரீரத்திற்கு தாரகமாயிருப்பதைத் தேடுகிறாற்போல்
ஆத்மாவுக்குத் தாரகமாயிருப்பதையும சிறிது தேடியிருப்பானானால் ஆமுஷ்மிக பலத்திற்கு அது ஒரு பற்றாசாகும்;
அங்ஙனன்றி யொழிந்தமையால் இவனுடைய வியாபாரம் ஆமுஷ்மிகத்திற்கு தாரித்ரியத்தை விளைத்து விட்டதென்க.

புறஞ்சுவர் என்கிறது-தேகத்தை;
சுவராவது உள்ளே கிடக்கிற வஸ்துவைக் காக்குமது;
ஆத்மாவுக்குரிய நன்மைகளை உண்டாக்கி அதனைக் காபபாற்றுதற் பொருட்டு எம்பெருமானால் தரப்பட்ட
(சுவரென்னும்) சரீரத்தைக் கொண்டு அக் காரியத்தைச் செய்யாமல் புறம்பே வியாபரித்தபடியால
புறஞ்சுவர் என்ன வேண்டிற்று.
ஓட்டை மாடம் என்றும் இச்சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்.
ஒரு ஓட்டை வீடானது ‘அப்போது விழுந்தது, இப்போது விழுந்தது’ என்னும்படி
அஸ்திரமாயிருக்குமாபோலே இச் சரீரமும் ‘இப்போதோ அப்போதோ’ என்னும்படி நச்வரமாயிருக்குமாறு காண்க.

புரளும்போது அறியமாட்டீர்-
இத்தகைய சரீரம் எப்போது கீழே விழப்போகிறதென்று கேட்டால் அந்த ஸமயத்தை நீங்கள் அறிந்து சொல்ல வல்லீரல்லீர் ;
இன்று விழுந்தாலும் விழும்; நாளைக்கு விழுந்தாலும் விழும்;
ஆகையாலே இந்த சரீரத்தை போக்தாவாக மாறுபட நினைத்து நீங்கள் பரக்க வியாபாரங்கள் செய்தாலும்,
இது மின்னின்னிலையில தாதலால் இதை நம்பி ஒன்றுஞ் செய்யக் கூடியதாயில்லையே என்கை.
அன்றியே,
இச்சரீரம் புரளுங்காலத்திலே உங்களுக்கு அறிவு நடையாடாதாகையால்
“ப்ராண ப்ரயாண ஸமையே கபவாதபித்தை: கண்டாவரோதநவி தௌஸ்மரணம் குதஸ்தே” (முகந்தமாலை)
என்றபடி அப்போது உங்களால் ஒன்றும் நன்மை தேடிக் கொள்ள முடியாது;
“அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்” என்றபடி செய்யுங்கள் என்று உபதேசிக்கிறாரென்றுங் கொள்ளலாம்.

அறஞ்சுவராகி நின்ற –
தர்மமாகிற சுவர் வடிவெடுத்து வந்தாற்போலிரா நின்ற;
“தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்ற வாயோலைப் படியே
தர்மத்திற்குச் சுவராய் (ரக்ஷகராய்) நின்ற என்றுமாம்.

புறஞ்சுவர் கோலஞ்செய்து-
“அஸந்நேவ ஸ பதி, அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்” என்ற சுருதிப்படி ஆத்மாவானது பாழ்த்துக் கிடக்க,
அவ்வாத்மாவை “ஸந்தமேநம் ததோ விது:” என்னும்படி ஸத்தாக்குகிற வழியிலே ஒரு முயற்சி செய்யாமல்
இன்னடிசிலுண்பதும் பொன்னுடைமை பூண்பதும் பூந்துகில் சாத்துவதுமாய்
நீங்கள் சரீரத்திற்குச் செய்கிற கோலங்கள் சவாலங்காரத்தோடும் விதவாலங்காரத்தோடும் ஒக்குமென்றவாறு.

“புள் உண்ணக் கிடக்கின்றீரே” என்னாமல் “கவ்வ” என்றதன் கருத்து –
நன்றியறிவற்றவனுடைய மாமிசத்தைப் பறவைகளும் திண்ணமாட்டா என்பது ஸித்தாந்தமாதலால்,
மஹோபகாரகனான எம்பெருமானிடத்து நன்றி யறிவற்ற உங்களுடைய மாமிசத்தைப் பறவைகளும் தின்னமாட்டா;
கவ்வின உடனே ‘இது க்ருதக்ந மாம்ஸம்’ என்று எறிந்து விடுமென்பதாம்

6-மறம் சுவர்
விஷயங்களை போலே
போக்தாவும் அஸ்தரம்
மறம் சுவர் மதிள் எடுப்பார்
ஹிதம் சொல்ல வந்த விபீஷண ஆழ்வானை-த்வாம் து திக் குலபாம்சனம் -என்று சொல்லும் ராவணாதிகள் போல்வார்
பூத பவ்ய கேசவ கேசி ஸூ தன பிரகாராஸ் சர்வ வ்ருஷ்ணீ நாமா பன்நாப யதோஹரி -என்று
அடியாருக்கு மதிளாக சொல்லப் பட்ட எம்பெருமானை விட்டு
மறம் சுவரை பற்றி அநர்த்தம் படுகிறார்களே

புரளும் போது அறிய மாட்டீர்
பிராண பிரயாண சமயே கபலாதபித்தை கண்டாவரோதன விதௌ ஸ்மரணம் குத்ஸ் தே-முகுந்தமாலை
அப்போது உங்களால் ஒன்றும் நன்மை தேடிக் கொள்ள முடியாதே
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்று உபதேசிக்கிறார் என்றுமாம்

அறம் சுவராகி நின்ற
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -தர்மத்துக்கு ரஷகர்
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத்-ஆத்மவஸ்து பாழ்த்துக் கிடக்க
சந்தமேனம் ததோ வித்து -சத்தாக்காமல்
புத்தகங்களை-புதிய வீடுகளை – அகவாய்ப் பெருச்சாளி அறுத்துக் கிடக்க
தெருவு பாட்டை தூலும் துரும்பும் வைத்து அலங்கரிக்குமா போலே ஆய்த்து உடம்பை பேணுகை -பெரியவாச்சான் பிள்ளை

———————————————————————

‘தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும்,
“புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும் எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்?
ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிரா நின்றது;
அன்றியும்
“தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவதுதென்று தெரியவில்லை;
நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்; எங்கள் மீது குற்றமென்?” என்று
சில ஸம்ஸாரிகள் கூற, அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார்,
தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித்தருகிறார்–

புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான்–7–

பதவுரை

கலை–சாஸ்திரங்களை
அற கற்ற மாந்தர்–நன்றாக ஓதின மனிதர்
புலை அறம் ஆகி நின்ற–நீச தர்மமாயிரா நின்ற
புத்தொடு சமணம்–பௌத்த மதம் க்ஷபண மதம் முதலிய
எல்லாம்–எல்லா மதங்களையம்
காண்பரோ–நெஞ்சாலே தான் ஆராய்வார்களோ?
கேட்பரோ–காது கொடுத்துத் தான் கேட்பார்களோ?
(அதுநிற்க)
தலை அறுப்புண்டும்–என் தலையானது அறுக்கப் பட்டாலும்
சாகேன்–நான் சாக மாட்டேன்;
சத்தியம்-இது சத்தியம் ;
ஐயா–ஸ்வாமிகளே!
காண்மின்–(ப்ரத்யக்ஷமாகக் காட்டுகிறேன்) பாருங்கள்;
சிலையினால்–வில்லாலே
இலங்கை செற்ற–இலங்கையை நாசஞ்செய்த
தேவனே–எம்பெருமானே
தேவன் ஆவான்–ஸர்வேச்வரனெனப்படுவான் .

புத்தொடு – புத்தமென்ற வடசொல் புத்து எனத் திரிந்தது.
சமணம் -க்ஷபணகருடைய மதம்.
கலையறக்கற்ற மாந்தராவார் -கூரத்தாழ்வான் போல்வார் .
“ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸங்களில் நிலை நின்றவர்களாய் வேத தாத்பர்யம் கைப்பட்டவர்கள்;
அவர்களாகிறார்- கூரத்தாழ்வான் போல்வாரிறே”! என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

“காண்பரோ கேட்பரோதான்” என்றவிடத்தில் ஓர் ஐதிஹ்யம் அருளிச் செய்வர்;-
கூரத்தாழ்வான் “இஸ்டஸித்தி” என்கிற ஒரு புறமதச்சுவடி வாசித்துக் கொண்டிருந்த சிலரோடே கூடிச்
சிறிது போதுபோக்கி எம்பெருமானார் ஸந்நிதிக்கு விளம்பித்து வர,
“ஏன் இத்தனை விளம்பம்?” என்று உடையவர் கேட்டருள,
ஆழ்வானும் காரணத்தை உள்ளபடியே உரைக்க,
உடையவர் “ ஹா ஹா!‘கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோதான்’ என்ற அருளிச் செயல் என்னாயிற்று?”
என்று புநஸ் ஸ்நாநம் செய்வித் தருளி ஸ்ரீபாத தூளியும் இடுவித்தருளினாராம்.

தலையறுப்புண்டும் –
ஸத்யமான வார்த்தையை நான் சொல்லிக் கொண்டே கழுத்தில் கத்தியை எரிந்தேனாகில்
தலை அறுபடமாட்டாது ஸத்யம் ;
ஒருகால் தலை அறுப்புண்டாலும் உயிர் போகாதென்பது புநஸ்ஸத்யம் .

சாவேன், சாகேன் என்பன பாட பேதங்கள்.

புலையறம் ஆகி நின்ற
வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகர்ப்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவையவை தோறு
அணங்கும் பலபலவாக்கி -திருவிருத்தம்
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும் நிற்க

———————————————————————–

வெறுப்போடு-ஒரு காரணத்தை முன்னிட்டன்றியே நிஷ்காரணமாக எம்பெருமானுடைய பெருமை என்றால்
சிவீலென்று திரஸ்கரிக்கையாகிற வெறுப்போடு கூடிய புறச்சமயிகள்,
ஸாத்விகர் காது கொடுத்துத் கேட்கப்பெறாத உன் விஷயமான தூஷணங்களைப் பேசும் போது
அப் பேச்சுக்கள் ஒரு ஸாத்விகன் காதில் விழுந்தால், அவன்றான் மெய்யே ஸாத்விகனாகில்
அந்த் க்ஷணத்திலேயே தன்னடையே உயிர் துறக்க வேணும் என்கிறார்-
முன்னிரண்டடிகளால்.
உயிர்துறப்பதறகு நோய் முதலிய சில வியாஜங்கள் நேர வேண்டுமே என்று சிலர் நினைக்கக் கூடுமென்றெண்ணி
“போவதே நோயதாகி” என்கிறார்.
பகவந் நிந்தையைக் கேட்பதற்கு மேற்பட்ட நோய் கூட உலகத்திலுண்டோ? என்பது கருத்து–

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே–8-

பதவுரை

அரங்கமாநகருளானே!-;
வெறுப்பொடு–(பகவத் விஷயத்தைகு கேட்கவும் பொறாத) வெறுப்போடு கூடிய
சமணர்–க்ஷபணர்களும்
முண்டர்–சைவர்களும்
விதிஇல்–பாக்கிய ஹீனரான
சாக்கியர்கள்–பௌத்தர்களும்
நின்பால்–உன் விஷயத்திலே
பொறுப்பு அரியனகள்–பொறுக்க முடியாத சில வார்த்தைகளை
பேசில்–சொல்லுவார்களாகில்
அதுவே நோய் ஆகி–அந்த நிந்தைகளைக் கேட்டதே வியாதியாய்
போவது–முடிந்து போவது (உத்தமம் அங்ஙனன்றியே)
எனக்கு–(பகவத் விரோதிகளின் ஸத்தையையும் பொறாத) எனக்கு
குறிப்பு அடையும் ஆகில்–இலக்கு வாய்க்குமாகில் (அதற்கு மேல்)
கூடுமேல்–(எனக்கு சக்தியும்) கூடுமாகில்
ஆங்கே–உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே
தலையை அறுப்பதே–அவன் தலையை அறுத்துத் தள்ளுகையே
கருமம் கண்டாய்–செய்யத் தக்கது காண்

விஷ்ணுத்வேஷிகள் சொல்லுகிற தூஷணங்களை அநுவதிக்க வேண்டுமானால்
அவற்றைத் தாம் முன்னம் நெஞ்சால் நினைத்தாக வேண்டு மாதலால்
அங்ஙன் நினைப்பதையும் கொடிய பாவமாகக் கருதி “பொறுப்பரியனகள்” என்று ஸமுதாயமாகச் சொல்லுகிறார்.

“சமணர்முண்டர்” – சமணராகிய முண்டர் என்றும் உரைப்ப.

விதியில்-
“தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்த்ரீ நியதிர் விதி:” என்ற அமர கோஸத்தின் படி-
விதியாவது-பாக்யம், –

அத்ருஷ்டம் “அன்பாக்கியேத்தி அடிமைப்பட்டேனுனக்கு, என்பாக்கியத்தாலினி” என்றபடி
எம்பெருமான் பெருமையைப் பேணுவதற்கு எவ்வளவோ அத்ருஷ்டம் வேண்டுமாதலால்
அப்படிப்பட்ட அத்ருஷ்டமற்றவர்கள் சாக்கியர் என்கிறார்.

“போவதே நோயதாகி” என்பதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறலாம்.
“குரோர்யத்ர பரிவாதோ நிந்தாவாபி ப்ரவர்த்ததே, கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோந்யத; “
(பெரியோரைப்பற்றி நிந்தை நடக்குமிடத்தில் காதுகளை மூடிக் கொள்வதாவது, சடக்கென அப்பால் செல்வதாவது செய்யவேணும்)
என்ற சாஸ்திரப்படி விலகிச் செல்வது நன்று என்கிறாராகவுமாம்.

தூஷணை கேட்கப் பொறாமல் முடிந்து போனாலும் விலகிப் போனாலும் தூஷித்தவனுக்கு என்ன
பிராயச் சித்தம் செய்தாயிற்றென்று ஒரு கேழ்வி பிறக்கக் கூடுமாதலால்,
அவ் விஷயத்தில் தம் ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார்-குறிப்பெனக்கு இத்யாதியால்.

குறிப்பு-லக்ஷ்யம் அதாவது தூஷித்த பேர்வழி- அவன் தூஷித்து விட்டு ஓடிப் போய் விடாமல்
என் முன்னே நிற்பானாகில் என்றபடி.
கூடுமேல்-அவன் முன்னே நின்று கொண்டிருந்தாலும் அவனை அஞ்சாது கொலை செய்யும்படியான வல்லமை தனக்கு வேணுமே;
தாம் ஒருவனைக் கொல்ல முயன்று அவனால் தாம் கொலையுண்பாருமுண்டே;
அங்ஙனன்றி, நினைத்தபடி செய்து நிறைவேற்ற வல்ல வல்லமையும் வாய்க்குமாகில் என்றபடி.

மரணதண்டனையானது ஒரு கொலை செய்தவர்களுக்குக் சிக்ஷையாக அரசாங்கத்தாரால்
விதிக்கப்பட்டிருக்கிதே யொழிய, பகவந் நிந்தை பண்ணினவர்களுக்குக் கொலையை ஸிக்ஷையாக எங்கும் விதித்ததில்லை;
காமகாரத்தாலே விதியை மீறிக் கொலை செய்யில் தமக்கு அநர்த்தமே யன்றோ பலிக்கக் கூடுமென்று ஸங்கித்துக் கூடுமேல் என்கிறார்;
அதாவது-அரசாங்கத்தாரும் நமது ஸித்தாந்தத்திற்கு உடன்படக் கூடுமேல் என்றபடி என்பதாக இக் காலத்தோர் பொருள் கூறுப.

வெறுப்பொடு
விதி
தைவம் நிஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்திரீ நியதிர் விதி அமர கோசம்
விதி -பாக்யம்–அத்ருஷ்டம் இங்கு
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என் பாக்யத்தால் இனி –
அப்படிப் பட்ட அத்ருஷ்டம் இல்லாதவர்கள் சாக்கியர்
அதுவே நோயாகிப் போவது -எம்பெருமானுக்கு அவத்யம் உண்டானால் உயிர் மாய்த்து கொள்ளுவதற்கு
ஈடான உறுதி பிள்ளை திரு நறையூர் அரையர் போல்வார் போல்
போவதே நோயதாகி
முடிந்தோ விலகியோ போதல்

——————————————————————

பல தேவரையும் பற்றிக் கூறுகிற வேதத்தின் உட்பொருளை நுட்பமாக ஆராய்ந்து
அறியுந் திறமையில்லாமையால் நீங்கள் தேவதாந்தரங்களைப் பற்றுகின்றீர்கள்;
‘ஒரு குறையும் வாராமல் உன்னைப் பாதுகாக்கிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணி
பாணாஸுரனது வாசலிலே பரிவாரத்தோடு பாதுகாவாலாயிருந்த சிவன் அந்த வாணாசுரனை எதிர்த்து வந்த
ஸ்ரீ கிருஷ்ணனோடு போர் செய்யமாட்டாமல் தோற்று ஓடின போது அந்தச் சிவனுடைய வலியின்மையை
அந்த வாணன் கண்டறிந்ததுபோல, நீங்களும் ஸரணமாகப் பற்றியிருக்கிற தேவதாந்தரங்களுக்கு
ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் தான் அத்தெய்வங்களின் பலஹீநத்வத்தைக் கண்டறிவீர்கள்;
நீங்கள் இப்படி பரமாத்மாவைத் தவிர்த்து இதர தேவதைகளைப் பற்றுவதற்குக் காரணம்
நுமக்குப் பகுத்தறிவு இல்லாமையே.
உண்மையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வையே சரணமாகப் பற்றுங்களென்று உபதேசிக்கின்றனரென்க–

மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே–9-

பதவுரை

மதி இலா–தத்துவ ஞானமில்லாத
மானிடங்காள்–மனிதர்களே
மற்றும்-(நான் சொல்லுகிறவனைத்) தவிரவும்
ஓர் தெய்வம்–(சரணமாக அடையக் கூடிய வேறு) ஒரு தெய்வம்
உண்டே-உண்டோ? (இல்லை)
நீங்கள்-நீங்கள்
உற்ற போது அன்றி-(சரணமடைந்த அந்த க்ஷுத்ரதேவர்கட்கு)
ஒரு ஆபத்து நேர்ந்த காலத்திலல்லாமல் (மற்றைக் காலத்தில்)
ஒருவன் என்று-(நான் சொல்லுகிற இவன்) ஒருவனே கடவுள் என்பதை
உணர மாட்டீர்–அறிய மாட்டீர்கள்
(நீங்கள் இப்படி அறியாமைக்குக் காரணமென்னவெனில்; வேதத்திலே)
மேல்-(பதப் பொருளுக்கு) மேற்பட்ட
அற்றம்-மறைபொருளை (தாத்பரியத்தை)
ஒன்று அறியீர்–சிறிதும் அறிய மாட்டீர்கள்;
(இனி முடிவுப் பொருளை நீங்கள் உணருமாறு கூறுவேன்;)
அவன் அல்லால்–அந்த எம்பெருமான் தவிர
தெய்வம் இல்லை-(சரணமடையக்கூடிய) தெய்வம் (வேறொன்று) இல்லை; (ஆகையால்)
கன்று இனம் மேய்த்த எந்தை-கன்றுகளின் கூட்டங்களை (மிக்க உகப்போடு),
மேய்த்து வந்த எமது ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய
கழல் இணை–இரண்டு திருவடிகளையும்
நீர் பணிமின்–நீங்கள் சரணமாகப் பற்றுங்கள்.

பெறுதற்கரிய மநுஷ்ய ஜன்மத்தைப் பெற்றிருந்தும் ஈடேறுதற்கு உரியதான பரமாத்மாவைப் பற்றிய
தத்துவ ஞானம் இல்லாமையால் எடுத்த ஜந்மமே வீணாய் விட்டதென்று குறிப்பிக்கும்படி
“மதியிலாமானிடங்காள்” என்றார்.

“ஒண்டாமைரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்றபடி பரமாத்மாவைப் பற்றிய அறிவே
அறிவெனப்படுமாதலால் மற்றை உலகறிவு இருந்தும் பரமாத்மாவைப் பற்றிய அறிவைப் பெறாத இவர்கள்
மதியிலா மானிடங்களாயினர்;
இது பற்றியே “மானிடர்காள்!” என உயர் திணைவாய் பாட்டாற் கூறாது
“மானிடங்காள்” என அஃறிணை வாய்பாட்டாற் கூறியதும்.
இது – இழிப்பினால் உயர் திணையில் அஃறிணை வந்த திணை வழுவமைதி.

உற்றபோதன்றி உணரமாட்டீர்-
உற்றபோதே நீங்கள் அவனொருவனே தெய்வமென்று உணர்வீர் என இரண்டு எதிர்மறைகள்
ஒருடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தின;
“அவனல்லால் தெய்வ மில்லை” என்றவிடத்தும் இப்படியே.

அற்றமேலொன்றறியீர்-
வேதத்திற் பலவிடங்களிலும் தேவதாந்தரங்களைப் பற்றி (எம்பெருமானைப் போலவே) சிறப்பித்துக்
கூறியிருப்பது கண்டு அவற்றிற்கு ஆபாத ப்ரதீதியில் (மேல் நோக்கில்) தோன்றுகிற பொருளையே கருத்தாக எண்ணி
“நாராயண பரா வேதா:” என்றபடி வேதங்கள் முழுவதும் ஸ்ரீமந் நாராயணையே பரம் பொருளாகக் கருத்துப் பொருளால்
கூறுவன என்பதை உய்த்துணராமலிருக்கின்றீ ரென்றவாறு.

அற்றம்-மறை பொருள்; உட்கருத்து; அறு-பகுதி.
“அவனல்லால் தெய்வமில்லை” என்று- தேவதாந்தரங்கள் இல்லை என மறுக்கின்றாரல்லர்;
எம்பெருமானுக்கு ஸரீரமாகக் பல தேவதைகள் உள என்பதில் ஆக்ஷேபமில்லை;
சரணமாகப் பற்றத்தக்க தெய்வம் வேறில்லை என்றாய்த்துச் சொல்லுவது.

“கற்றினம்மேய்த்த” என்ற அடைமொழியினால்
எம்பெருமானது ஸௌலப்யத்தை வெளியிட்டவாறு.
எந்தை – பரமஸ்வாமி.
கழல்-வீரர்காலில் அணியும் வடம்;
தானியாகுபெயராய்ப் பாதத்தை உணர்த்திற்று.

9-மற்றுமோர் தெய்வம்
ராமவதாரம் பர தசை போலே கற்றினம் மேய்த்த எந்தை உண்டே
மானிடர்காள் உயர்திணையாக சொல்லாமல்
மாநிடங்காள் -என்றது ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு இல்லாததால்
உற்ற போது அன்றி உணர மாட்டீர்
அவன் அல்லால் தெய்வம் இல்லை
இரண்டு எதிர்மறை பிரயோகம் -உடன்பாட்டு பொருளை வற்புறுத்திச் சொல்வது

—————————————————————–

நீர் சொல்லுகிற எம்பெருமானொழிய வேறொரு தேவதையும் புகலன்றாகில், உலகில் பல பல தேவதைகள்
அவ்வவர்களால் கொண்டாடப்படுவதற்கும், அக்கொண்டாட்டத்திற்கு ஏற்ப
அத்தேவதைகள் பயன் அளித்து வருவதற்கும் என்ன காரணம்?
பயன் கொடுக்கிற சக்தி வாய்ந்த தேவதைகளைப் பற்றுவதால் என்ன பாதகம் விளையும்?
என்று சில மாந்தர் கேட்க; அவர்களுக்கு விடை அளிக்கிற பாட்டு இது–

நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே–10-

பதவுரை

எங்கும்–எல்லா விடங்களிலும்
தெய்வம்–(அம்மன் பிடாரி முதலான தாமஸ) தேவதைகளை
நாட்டினான்–(ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் ஆச்ரயிக்கலாம்படி எம்பெருமான்) நிலை நிறுத்தி யிருக்கிறான்
உய்பவர்க்கு–உஜ்ஜீவிக்க விரும்புமவர்கட்கு
உய்யும் வண்ணம்–உஜ்ஜீவிக்கலாம்படி
நல்லது ஓர் அருள் தன்னாலே–தனது ஒப்பற்றதொரு க்ருபையினால்
திரு அரங்கம்–அரங்கமாநகரை
காட்டினான்–காண்பித்தருளினான்
நம்பிமீர்காள்–‘நமக்கு ஒன்றாலும் குறையில்லை’ என்று நினைந்திருப்பவர்களே!
கேட்டிரே–(நான் சொல்வதைக்) கேட்டீர்களா?
கெருட வாகனன் நிற்கவும்–கருடனை வாஹநமாகவுடைய பெருமான் விளங்கா நிற்கச் செய்தேயும்
(தேவதாந்தரங்களைப் பற்றுகிற நீங்கள்)
சேட்டை தன் மடியகத்து–மூதேவியிடத்தினின்றும்
செல்வம் பார்த்து இருக்கின்றீர்–ஐச்வர்யம் பெற நினைத்திருக்கிறீர்கள் போலும்

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் அமைந்த சேதநர்கட்கெல்லாம்
அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி காரியஞ்செய்பவன் எம்பெருமானாதலால்
ராஜஸருடையவும் தாமஸருடையவும் ருசிக்கு ஏற்ப
அக்குணங்களுள்ள அம்மன் பிடாரி முதலிய க்ஷுத்ரதேவதைகளை எம்பெருமான்றானே ஒவ்வொரு பேரிட்டு நாட்டினான்.

“யே ஹ்யந்யதேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயான்விதா:-தேபி மாமேவ கௌந்தேய! யஜந்த்யவிதிபூர்வகம்”
என்ற கீதையின்படியும்,
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் – ஸர்வ தேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி’ என்ற வசநப்படியும்
அந்த க்ஷூத்ரதேவதைகளைக் குறித்துச் செய்யும் வணக்க வழிபாடுகள் யாவும்
அத்தேவதைகட்கும் ஆத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடத்திற் போய்ச் சேர்ந்து விடுமே யன்றி அவர்களுக்கே உரியனவாகமாட்டா.
ராஜப்பிரதிநிதிகள் ஒவ்வோரிடங்களிலும் ப்ரஜைகளிடத்தில் பணங்களை (கப்பம்) வசூல் செய்து
அவற்றைப் பிரதாந ராஜனிடத்தில் சேர்ப்பது போல வாய்த்து இத்தேவதைகளின் தொழிலும் .
“இறுக்குமிறை யிறுத்துண்ண எவ்வுலகுக்கும் தன்மூர்த்தி, நிறுத்தினான்
தெய்வங்களாக அத்தெய்வநாயகன்றானே” என்றும்
“ அவரவர் விதிவழி யடைய நின்றனரே” என்றும் நம்மாழ்வாரு மருளிச்செய்தார்.

நல்லதோரருள்தன்னாலே” என்பதை “நாட்டினான்” என்ற வினைமுற்றோடே கூட்டி அந்வயிக்கவுமாம்.
சாஸ்த்ர விச்வாஸத்துக்கு இசையாதவர்களை வேதமானது அவர்களுடைய ருசிக்கீடாக
அபிசாரம் முதலிய ஹிம்ஸைசளையும் கூறிப் படிப்படியாக நல்வழி சேர்த்துக் கொள்ளுமாறு போல,
எம்பெருமானும் அந்ய சேஷத்வத்துக்கு இசையாத ராஜஸ தாமஸ ப்ரக்ருதிகளை
அவர்களுடைய குணாநுகுணமாகப் பணியும்படி ராஜஸதாமஸ தேவதைகளைப் பரமக்ருபையாலே ஆங்காங்கு நாட்டி,
பிறகு காலகதியிலே ஸத்வம் தலையெடுத்து உஜ்ஜீவிக்கும் விரகு தேடுவார்க்கு
உஜ்ஜீவநோபாயமாகத் தான் திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து சாய்ந்தருளினன் என்கிறார்.

அந்த க்ஷூத்ர தேவதைகள் க்ஷுத்ரமான பலன்களைக் கொடுக்க வல்லனவே யன்றி,
மோக்ஷமாகிய உத்தம புருஷார்த்தத்தைக் கொடுக்க அவற்றுக்கு சக்தி இல்லை;
அது உள்ளது எம்பெருமானொ ருவனுக்கேயாம்;
இந்த தத்துவமறியாமல் முமுக்ஷுக்களாயிருப்பார் ஸ்ரீமந்நாராயணனைத் தவிர்த்து இதர தேவதைகளை ஆச்ரயிப்பது
எங்ஙனே சொல்லலாயிருந்ததெனில்;
ஐச்வர்யத்தைப் பெறா விரும்பின ஒருவன் அதனைத் தரவல்ல மஹாலக்ஷ்மியை உபாஸனை செய்ய வேண்டியிருக்க,
அவளது திருவடிகளிற் புகாமல், உள்ள செல்வத்தையும் துடைக்கவல்ல மூதேவியைப் பற்றிப்
பணியும் மூடனது செயலோடு ஒப்பிடலாமாயிருந்தது என்கிறார்.

இங்கு உபமேயமான அம்சத்தையும் உபமாநமான அம்சத்தையும் தனித்துச் சொல்லாமல்
ஒரு போக்காகச் சொன்னது முற்றுவமை:
தேவதாந்தரங்கள் பக்கல் பரமபுருஷார்த்தத்தைப் பெற நினைக்கை,
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கை என்று இரண்டு பொருளில்லை;
இதுவே அது, அதுவே இது என்ற கருத்துத் தோன்றும்.

சேட்டை-மூத்தவள் என்னும் பொருளதான ‘ஜ்யேஷ்டா’ என்ற வட சொல்விகாரம்.
மூதேவி யென்பவள் பிராட்டிக்கு முற்பிறந்தவள்.
தாரித்திரியம, துரத்ருஷ்டம், உறக்கம், சோம்பல், மூடத்தனம் முதலியவை உள்ளவனை ‘மூதேவி’ என்று நிந்திப்பது ப்ரஸித்தம்.
ஆகையாலே மூதேவி யென்பவள் ஸகல அச்லீலங்களுக்கும் மூல ஸ்தாநம்.

10-நாட்டினான் தெய்வம் எங்கும்
இருக்கும் இறை இருத்துண்ண எவ்வுலகுக்கும் தன மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே
அவரவர் விதி வழி அடைய நின்றனரே
தேவதாந்தரங்கள் பக்கல் பரம புருஷார்த்தம் பெற நினைக்கை
சேட்டை தன மடியகத்து செல்வம் பார்த்து இருப்பதுக்கு ஒக்கும்
நம்பிமீர்காள் -பரிஹாச உக்தி
கேட்டீரே அந்ய பரரை துடை தட்டி உணர்த்திக் கூறுகிறபடி

—————————————————————

இராமபிரானும் கண்ணபிரானுமாய் அவதரித்த பெருமான்றானே திருவரங்கம் பெரிய கோயிலில்
கண் வளர்ந்தருளுகிறான்;
ஜாயமாநகால கடாக்ஷமில்லாமையா லன்றோ நீங்கள் இழக்கிறது! என்று க்ஷேபித்துக் கூறுவது இப்பாட்டு–

ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே–11-

பதவுரை

ஒரு வில்லால்–சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே
ஓங்கு முந்நீர் அடைத்து–கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி
உலகங்கள் உய்ய–லோகமெல்லாம் வாழும்படி
செருவிலே–போர்க் களத்திலே
அரக்கர் கோனை–இராவணனை
செற்ற–முடித்தருளின
நம் சேவகனார்–நமக்குத் தலைவரும் மஹாவீரருமான பெருமாள்
மருவிய–பொருந்தி வாழ்வதற்கு இடமான
பெரிய கோயில்–பெருமை தங்கிய கோயிலாவது
மதிள் திருஅரங்கம்–ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்கக்ஷேத்ரம்
என்னா–என்று சொல்ல மாட்டாத
கருவிலே திரு இலாதீர்–கர்ப்ப நிர்ப் பாக்யர்களே!
காலத்தை–(பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை
கழிக்கின்றீர்–பாழே போக்குகிறீர்களே!

இராமபிரான் ஸமுத்ர ராஜனை அடைக்கலம்பற்றி வழிவிட வேணுமென்று வேண்டிக் கொண்டவிடத்தும்
அவன் வந்து முகங்காட்டாதொழிய,
“ஒரு மீன்படுகுட்டம் நம்மை அஸமர்த்தராக நினைத்துவிட்டது; இனி ஒரு கைபார்க்குமத்தனை” என்று துணிந்து
இளையபெருமாளை நோக்கி “வில்லைக்கொண்டுவா” என்று நியமித்தருளின பின்பு
ஸமுத்ரராஜன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து முதுகைக் காட்டித் தன் மீது அணை கட்டிப் போகும்படி அமைந்தனனாதலால்,
ஒரு வில்லாலோங்கு முந்நீரடைத்து என்கிறார்.

ஓங்கு என்றது-
கடலின் இயற்கையான கொந்தளிப்பைக் கூறுகிறபடி யன்று;
இராமபிரான் சீற்றத்தாலே கையும் வில்லுமாய் நின்ற வீரவுறப்பைக் கண்டு
கீழ் மண் கொண்டு மேல் மண்ணெறிந்து காலிலே விழுமாபோலே திருவடிகளளவும் வந்து வெள்ளங் கோத்தபடியைக் கூறுவதாம்.

உலகங்களை யெல்லாம் வாழ்விக்கக் கருதிய பெருமாள் தனித்தனியாக ஒவ்வொருவருடைய
இருப்பிடத்திற்குஞ் சென்று அவர்களை வாழ்விப்பது அரிய காரிமென்றெண்ணி ஸதுபாயம் சிந்தித்து
இராவணனொருவனைக் கொன்று விட்டால் உலகங்களை யெல்லாம் வாழ்வித்தவாறாம் என்று அறுதியிட்டு
ராவண ஸம்ஹாரம் செய்தருளினனென்ற கருத்துத்தோன்ற
“உலகங்களுய்யச் செருவிலே அரக்கர்கோனைச் செற்ற” என்கிறார்.

பல்லாயிரம் பசுக்களை மேய்ப்பவனான கண்ணபிரான் ஒவ்வொரு பசுவுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக்
காப்பாற்ற வேண்டிய அருமையை நோக்கி ப்ருந்தாவனத்தைப் பசும்புற்காடாக ஸங்கல்பித்து
அவ்வரிய காரியத்தை எளிதில் நிறைவேற்றிக் கொண்டாற்போலவும்–
நம்மாழ்வாரொருவரை அவதரிப்பித்து நாட்டை யடங்கலும் எளிதில் திருத்தினாற் போலவும்
இராவணனொருவனைக் கொன்று உலகங்களை யெல்லாம் எளிதில் வாழ்வித்தானாய்த்து.

நம் சேவகனார் மருவிய பெரியகோவில்-
ராவண வதம் பண்ணி வினையற்ற பின்பும் அப்போதை யநுபவத்தை இழந்த பிற்பாடர்க்கும் உதவுகைக்காக
வன்றோ கோவிலிலே வந்து கண் வளர்ந்தருளுகிறது.
“ மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே! அரங்கத்தம்மா” என்ற
ஒற்றுமை நயமும் நோக்கத்தக்கது.

மதிள் திருவரங்கம்-
ராமாவதாரத்திற்போலே இங்கும் சில ஆபத்து விளையுமோ என்றஞ்சித் திருமங்கையாழ்வார்
போல்வாரான மங்களாசாஸந பரர்கள் காப்பாக இட்ட மதிளையுடைய ஸ்ரீரங்கம்.

கருவிலே திருவிலாதீர்-
ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யத் மதுஸூதந:-ஸாத்விகஸ் ஸது விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்தசிந்தக:”
என்றபடி கர்ப்ப வாஸ ஸமயத்தில் எம்பெருமான் ஸத்வ குணத்தைச் செழிப்பிப்பதற்காகச் குளிர நோக்குவதொரு நோக்குண்டு;
அதனைப் பெறாதவர்களன்றோ நீங்கள்;
பெற்றிருந்தீர்களாகில் இத்தகைய விசிகித்ஸைகள் உங்களுக்குப் பிறவாவே.

காலத்தைக் கழிக்கின்றீரே–
“பழுதே பல பகலும் போயின வென்றஞ்சியழுதேன்” என்று ஞானிகள் கதறியிருப்பதைக்
கேட்டுவைத்தும் நீங்கள் காலத்தைப்பாழே போக்குறீர்களே பாவகாள்! என்று வயிறெரிகிறார்.

11-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர்
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் -எண்ணா நிற்க இவர் ஒரு வில்லால்
ஓங்கு -இயற்கையான கடலின் கொந்தளிப்பு அல்ல
கையும் வில்லுமாக வீர வரப்பைக் கண்டு கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்து காலிலே விழுமா போலே
திருவடிகள் அளவும் வெள்ளம் கொத்தபடி
உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற
ஒரு பிருந்தாவனம் கொண்டு ஆநிரைகள் புல்லும் தண்ணீரும் பெற்றால் போலே
ஒரு நம் ஆழ்வார் கொண்டு உலகை திருத்தினால் போலே
ராவணன் ஒருவனை முடித்து உலகத்தை வாழ்வித்து அருளினான்

நம் சேவகனார் -அஞ்சலி ஒன்றுக்கே சேவகத் தொழில் செய்யுமவன் – இன்னார் தூதன் என நின்றான்
நம் சேவகனார் மருவியபெரிய கோயில் –
மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய யடுதிறல் அயோத்தி எம்மரசே அரங்கத்தம்மா –
ராவணவதம் பண்ணி வினையற்ற பின்பும் பிற்பாடர் இழவாமைக்கு இங்கே வந்து சாய்ந்து அருளினான்
காலத்தை கழிக்கின்றீரே-பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன் என்று
ஞானிகள் அழுகையைக் கேட்டும் பாவிகாள் -காலத்தை கழிக்கின்றீரே-என்கிறார்-

————————————————————————–

திருநாமத்தின் பெருமையை நான் அறியாதிருந்தேனாகில் ஸம்ஸாரிகளைப் பற்றிக் கவலைப் படமாட்டேன்
மநுஷ்ய ஜந்மம் எளிதிற் பெறக்கூடுமாயின் நான் கவலைப்படமாட்டேன்;
இவர்கள் உஜ்ஜீவநத்திற்காகச் செய்ய வேண்டிய காரியம் மிகப் பெரியதாயின் கவலைப்பட மாட்டேன்.
திருநாமங்களின் மேன்மையோ சொல்லுந்திரமல்ல
பெறுதற்கு அரிதான மானிட ஜந்மத்தையோ இவர்கள் பெற்றிருக்கிறார்கள்;
இவர்கள் செய்யவேண்டிய காரியமோ மிக அற்புதமானது-
‘எம்பெருமான் ஊர் திருவரங்கம்’ என்றிவ்வளவே சொல்லவேண்டுமத்தனை
இங்ஙனிருக்கவும் இவர்கள். விஷயாந்தரப் படுகுழியிலே தலை கீழாக விழுந்து வருந்துவர்களாகில்
நான் எங்ஙனே கவலைப்படாதிருக்கமுடியும்?
இவர்கள் சிறிது திருந்தினராகில் என் அநுபவத்திற்கு எவ்வளவோ துணையாகுமே! என்கிறார்–

நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே–12-

பதவுரை

நமனும்–யம தர்ம ராஜாவும்
முற்கலனும்–முத்கல பகவானும் ஒருவர்க்கொருவர்
பேச–வார்த்தையாடிக் கொண்டிருக்க
நரகில் நின்றார்கள் கேட்க–அந்த வார்த்தை நரகத்திலே பாப பலன்களை அனுபவிக்கிற பாவிகளின் காதில் பட்டவளவிலே
நரகமே–அந்த நரகந்தானே
சுவர்க்கம் ஆகும்-ஸ்வர்க்க லோகமாய்விட்டது என்று சொல்லுதற்கீடான மேன்மை வாய்ந்த
நாமங்கள் உடைய–திருநாமங்களை யுடைய
நம்பி அவனது–பரிபூரண எம்பெருமானுடைய
ஊர்–திவ்யதேசம்
அரங்கம் என்னாது–திருவரங்கமாகும் என்று சொல்லாமல்
அளிய மாந்தர்–அருமந்த மனுஷ்யர்கள்
அயர்ந்து–(ஸ்வரூபத்தை) மறந்து
வீழ்ந்து–(விஷயாந்தரப் படு குழியிலே) விழுந்து
கவலையுள் படுகின்றார் என்று–துக்கத்திலே அகப்படுகிறார்களேயன்று
அதனுக்கே–அதற்காகவே
கவல்கின்றேன்–நான் கவலைப்படா நின்றேன்.

முத்கலோ பாக்கியாநம் ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலே தொண்ணூறாவது அத்யாயத்திற் கூறப்பட்டுள்ளது.
அதன் சுருக்கம் வருமாறு:-
முத்கலனென்பவன் பெரும்பாவிகளில் தலைவன்;
அவன் ஒருநாள் கோதாநம் பண்ணும் போது ‘க்ருஷ்ணாய’ என்று சொல்லி தாநஞ்செய்தான்.
பின்பு அவன் மாண்டபிறகு யமகிங்கரர் வந்து நெருங்கி அவனை யமன் பக்கலிலே கொண்டு செல்ல,
யமன் இவனை எதிர்கொண்டு ஸம்பாவனை செய்தான்; அது கண்ட முத்கலன்,
“உன்னுடைய படர்கள் என்னை நெருங்கிக் கொண்டு வாராநிற்க, நீ என்னை கௌரவிப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்க
“உன்னுடைய மேன்மையை அவர்களும் அறிந்திலர், நீயும் அறிந்திலை,-
க்ருஷ்ண நாமத்தை நீ ஒருநாள் சொன்னாய் காண்!” என்று யமன் அதனைப் புகழ்ந்துகூற,
இப்படி ப்ரஸக்தாநுப்ரஸக்தமான இந்த ஸம்வாதம் நரகாநுபவம் பண்ணுகிறவர்களுடைய காதிலே விழுந்தவாறே
அந்த நரகந்தானே துக்காநுபவ நிலமாயிருக்க நிலைமாறி ஆநந்தாநுபவ நிலமாய் விட்டதென்றால்
இத் திருநாமத்தின் வைபவம் எப்படிப்பட்ட தாயிருக்கவேணும்?

“என்னை நீ ஸத்கரிப்பதற்குக் காரணமென்ன?” என்று முத்கலன் கேட்க,
“முன்பு நீ க்ருஷ்ணநாமம் சொன்னாய்” என்று யமன் உத்தரமுரைத்த இவ்வளவேயாய்த்துப் பிறந்தது;
யமன் தனக்குப் பாவநமாக அத் திருநாமத்தை உச்சரித்தவனல்லன்;
முற்கலன் ப்ரார்த்திக்க அவனுக்கு உபதேசித்தவனுமல்லன்;
நரகாநுபவம் செய்கிறவர்களின் காதிலே இது விழுந்து அவர்கள் உய்வு பெற வேணுமென்று நினைத்துச் சொன்னவனுமல்லன்;
இனி இதனைக் கேட்டவர்களோ பாபம் பண்ணுகிற ஸமயத்திலே அநுதபித்து மீண்டு
பிராயச்சித்தம் செய்து கொள்ளக் கூடிய காலத்திலே கேட்டவர்களல்லர்;
பாபத்தினுடைய பலன்களை அநுபவிக்கும் போதாயிற்றுக் கேட்டது.
அப்போது தானும் இச்சையோடு கேட்டாருமல்லர்; யாத்ருச்சிகமாகத் திருநாமம் செவிப்பட்டவித்தனையே:
இப்படிப்பட்ட திரு நாமமே இவ்வளவு பெருமையுடைத்தானால், பின்னை என் சொல்ல வேண்டும்?

பாபபலாநுபவம் பண்ணும் போது யாத்ருச்சிகமாகத் திரு நாமம் செவிப்பட்டாற் போலே
பாபம் செய்யும் போது ஒரு தடவையாவது திருநாமம் செவிப்பட்டிராதா?
அது கொண்டு அவன் நற்கதிபெறலாமன்றோ என்னில்;
அப்போது விஷய ப்ராவண்யத்தால் வந்த செருக்காலே இவை யொன்றும் செவிப்படா
துக்காநுபவம் பண்ணும் மையத்தில் தான்
“நல்வார்த்தை சொல்வார் ஆரேனும் கிடைப்பாரோ?” என்று எதிர்பார்க்கிறவர்களாகையாலே செவிப்படும் என்ப.

நரகமே சுவர்க்கமாகும்-
நரகத்தையே ஸ்வர்க்கமாக்கவல்ல என்றபடி.
பாபஸ்தாநம் புண்யஸ்தாநமாக உடனே மாறிவிடக் கூடுமோவென்று சங்கிக்க வேண்டர்,
இராவணன் கையைவிட்டு நீங்கி விபீஷ ணாழ்வான் கையில் வந்தவாறே லங்கை
‘தாமஸபுரி’ என்னும் பெயர் நீங்கி ‘ஸாத்விகபுரி ‘என்று புகழ்பெறவில்லையோ?

“ஒருவனுடைய அந்திம ஸமயத்திலே திருமந்த்ரத்தை உபதேசித்து ‘இத்தைச் சொல்லாய்’ என்ன;
அவனும் ‘ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன், ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன்’ என்று இத்தை
அநேகமுறைச் சொல்லித் திருமந்த்ரந்தன்னைச் சொல்லாதே செத்துப்போனான்;
“ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன்” என்பதும் (மெய்யெழுத்து நீக்கி) எட்டெழுத்து,
திருமந்த்ரமும் எட்டெழுத்து என்க.
இரண்டும் அஹரமொத்திருக்கச் செய்தே சொல்ல வொட்டிற்றில்லையிறே பாப பலம்!“ என்ற
வியாக்யாந ஸூக்தியை நோக்குக.

அளிய மாந்தர் –
திருநாமம் சொல்லுகைக்கு உரிய நாக்குப் படைத்த அருமருந்தன்ன மநுஷ்யர்கள்.

அதனுக்கே கவல்கின்றேனே-
என் குடும்பத்தைப்பற்றி நான் கரைகின்றேனில்லை:
என்னதும் பிறரதுமான குடும்பத்தைப்பற்றியும் கரைகின்றேனில்லை;
பிறர் குடும்பம் கெட்டுப் போகிறதே! என்பதற்காகவே கரைகின்றேனென்றார்.

12-நமனும் முற்கலனும் பேச
முத்கல உபாக்யானம் ஸ்ரீ விஷ்ணு தர்மம் -90 அத்யாயம்
க்ருஷ்ணாயா சொல்லி பசு தானம் செய்தான்
யாத்ருச்சிகமாக திரு நாமம் செவிப்பட்டதுக்கே இத்தனை
நரகமே ச்வர்க்கமாகும் ராவணன் இருக்கும் வரை தாமஸ புரி விபீஷணன் அரசாண்டதும் சாத்விக புரி யானதே
ஒருவனுடைய அந்திம சமயத்திலே திருமந்த்ரத்தை உபதேசித்து
இத்தைச் சொல்லாய் என்ன
அவனும் ஆமாகில் சொல்லிப் பார்க்கிறேன் -இத்தையே அநேக உரு சொல்லி
திருமந்தரம் சொல்லாதே செத்துப் போனான்
இரண்டும் அஷரம் ஒத்து இருக்கச் செய்தே சொல்ல ஒட்டிற்று இல்லை இ றே
மெய் எழுத்து நீக்கி எட்டு எழுத்து
அழிய மாந்தர்
திரு நாமம் சொல்ல நாக்கு படைத்த மாந்தர்கள்
தாமுளரே தம்முள்ளம் உள்உளதே தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
அதனுக்கே கரைகின்றேன்
எனக்கு இல்லை எனக்கும் பிறர்க்கும் இல்லை பிறருக்கே -கரைகின்றேன்

—————————————————————

கீழெல்லாம் பிறருடைய துயரத்தைக்கண்டு தாம் பொறுக்க மாட்டாமல் கவல்கிறபடியை வாய்விட்டுச் சொன்னார்;
ஒன்றும் பயன்படவில்லை; இனி பரோபதேசத்தில் நின்றும் மீண்டுவிடுவோம் என்று பார்த்தார்;
பிறர்க்கென்றே அவதரித்த இவர் எங்ஙனே சடக்கென மீளக் கூடும்?
தீய குணம் நிறைந்த பிள்ளையைப் பற்றி ஒன்றும் கவனிக்கக் கூடாதென்று தகப்பன் மீள நினைத்தாலும்
அந் நினைவின்படி உடனே மீளமுடியுமோ?
அப்படியே இவ்வாழ்வாரும் பிறருடைய துயரத்தைப்பற்றிக் கவலைப்படுவதினின்றும்
உடனே மீளமாட்டாமல் அவர்களை நோக்கிக் கூறுகிற முறையை மாத்திரம் விட்டிட்டு,
தம் நெஞ்சோடு தாமே வருந்துகின்றார், இப்பாட்டில்–

எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே–13-

பதவுரை

எறியும் நீர் வெறி கொள் வேலை–அலைகள் வீசுகின்ற தண்ணீரையும் (புலாலின்) நாற்றத்தையும் கொண்டிருக்கிற கடலினாற் சூழப்பட்ட
மா நிலத்து–பெரிய இந்தப் பூலோகத்திலுள்ள
உயிர்கள் எல்லாம்–ஆத்மாக்கள் யாவும்
வெறிகொள் பூ துளபம் மாலை–நல்ல பரிமளமுடைய அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள
விண்ணவர் கோனை–தேவாதி தேவனான திருமலை
ஏத்த–தோத்திரம் பண்ணுவதற்காகவே (ஏற்பட்டிருக்கின்றன)
(அவ்வாறு துதிப்பது அற்பஞானமுடையார்க்கு முடியாவிடினும்)
அறிவு இலா மனிதர் எல்லாம்–தத்வ ஜ்ஞானம் நிரம்பாத அந்த மனிதர் யாவரும்
அரங்கம் என்று அழைப்பர் ஆகில்–அபுத்தி புர்வமாகவாகது ஸ்ரீரங்கமென்று சொல்லுவர்களானால்
(அம்மாத்திரத்தாலேயே)
பொறியின் வாழ்–பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு வாழ்கின்ற
நரகம் எல்லாம்–(ஞானிகளுக்கு நரகமாகிய ) இப்பிரபஞ்சம் முழுதும்
புல் எழுந்து–புல் முளைத்து
ஒழியும் அன்றே-பாழாய்ப் போய் விடுமென்றோ.

மூலப்ரக்ருதியிலே அழுந்தி ஒளி மழுங்கிக் கிடந்த ஆத்மாக்களை யெல்லாம்
எம்பெருமான் தனது இன்னருளால் உஜ்ஜீவிப்பிக்க விரும்பித் தன்னை அடையுமாறு
கர சரணம் முதலிய அவயவங்களையும் சாஸ்திரங்களையும் காட்டிக் கொடுத்தான் என்ற நூற்கொள்கை,
முன் இரண்டடிகளிற் குறிப்பிடப்பட்டது.

அதற்கு ஏற்ப, கடவுளை யடைந்து ஈடேறுவது தத்வ ஞானத்தின் காரியமாதலால் அறிவிலா மனிசர்க்கு
அது கைகூடா விடினும், அவர்கள் யாவரும் அபுத்தி பூர்வமாகவாவது எம்பெருமான் நித்ய வாஸஞ் செய்கின்ற
திருவரங்கம் பெரிய கோயிலை ஒரு தரமாவது வாய் விட்டுச் சொன்னாரானாலும்,
அவனது ஊரைச் சொன்னதன் பயனாக அவ் வெம்பெருமானால் கடாக்ஷிக்கப் பெற்று மோக்ஷத்தை யடையத் தட்டில்லை;
பின்பு பாபத்தின் பயனாக வாழ்கின்ற பிராணி ஒன்றும் இங்கு இருக்கக் காரணமில்லாமையால்
இந்தப் பூலோகம் முழவதும் புல் முளைத்துப் பாழாய்விடும்;

இத்துணை எளிய வழியையும் மேற்கொள்ளாமற் கை விட்டு இவ் உலகத்தவர் அறிவு கேடராயிருக்கின்றார்களே!
என்று பின்னிரண்டடிகளால் இரங்குகின்றனரென்க.

நலமந்தமில்லதோர் நாடாகிய பரமபதத்தை அடைந்து அங்கு ‘ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:’ என்கிற
எம்பெருமானுடைய திருத்துழாய் நறுமணத்தை அநுபவித்துக் கொண்டு
அப்பிரானை ஏத்தி இனிதாக இருக்கவேண்டிய சேதநர்கள்
”வெள்ளத்திடைப்பட்ட நரியினம்போலே” என்றபடி கலங்கிப் புலால் நாற்றம் வீசுகிற கடல் வெள்ளத்துக்கு
உட்பட்ட இப் பூமியிலே கிடந்து வருந்துகின்றார்களே! என்ற இரக்கப் பொருள் தோன்ற
“ எறியுநீர் வெறி கொள் வேலை மாநிலத் துயிர்கள்” என்கிறார்.
மாநிலம் -ஐம்பது கோடி விஸ்தீர்ணையான பூமி.

அழைப்பாராகில் என்றது –
பெரும்பாவிகளான இவர்கட்குக் கடுஞ்சொற்களைச் சொல்வது எளிதேயன்றி,
அரங்கமென்று வாயாற்சொல்லுவதும் அருமை என்பது தோன்ற.

யந்திரம்போல எல்லா அவஸ்தையிலும் தப்பாதபடி தன்பக்களிலே அகப்படுத்திக் கொள்ளவற்றாகையாலே
பொறி என்று இந்திரியங்களைச் சொல்லுகிறது.
“இருள் தருமா ஞாலத்து ளினிப்பிறவி யான்வேண்டேன்” என்னும் ஆழ்வார் போன்ற
அறிவுடையார்க்கு இந்த உலகவாழ்வு நரகம் போலத் தோன்றுமாதலால், இந்த ஸம்ஸாரத்தை நரகம் என்றே கூறினார்.

இவ்வுலகத்திலுள்ளோர் யாவரும் எம்பெருமானுடைய திருப்பதியின் திருநாமத்தைச் சொன்னாராகில்
அதுவே காரணமாகப் பரமபதத்தை அடைவராதலால் அப்போது நரகத்திற்குச் செல்வார் ஒருவருமில்லாமற்போக,
அந்நரகம் புல்லெழுந்தொழியும் என்று உரைப்பாருமுண்டு;
இப் பொருளில், பொறி இல் என்று பிரித்து ‘அழகு இல்லாத’ எனப் பொருள் கொள்க.

வாழ்-அசை.

13-எறியும் நீர்
தம் நெஞ்சோடு தாமே வருந்துகின்றார்
வெள்ளத்தில் இடைப்பட்ட நரியினம் போலே
பொறியின் வாழ்-பொறி இந்த்ரியங்கள்
பொறி இல் அழகு இல்லாத
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே தேற்றி வைத்தது
எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே -திருவாய்மொழி

————————————————————————————

இதுவரை பகவத்விசய விரோதிகளான பாவிகளை நினைத்ததற்கும்
அவர்களோடு ஸம்பாசனை செய்ததற்கும் ப்ராயஸ்சித்தமாக “வண்டினமுரலுஞ் சோலை” இத்யாதியைப்
பரம போக்யமாகத் தாம் அநுஸந்திக்கச் செய்தேயும்,
மீண்டும் “திருவரங்கமென்னாமிண்டர்”என்று அப்பாவிகளையே நினைக்கிறார்.
அவர்களையொழிய இவர்க்கு ஒருக்ஷணமும் செல்லாது போலே.
ஸம்ஸாரத்திலேயே நெடுநாள் ஊன்றினவன் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவரோடுண்டான
பற்றை அறுத்துக்கொண்டு பகவத்விஷய சிந்தையினாலேயே போதுபோக்குவேணுமென்று
பெருமுயற்சி செய்தாலும் பழையதான வாஸநையின் கணத்தினால் அந்த ஸம்ஸாரப்பற்றை
விரைவில் அறுத்துக்கொள்ள முடியாமல் “அங்குற்றேனல்லே னிங்குற்றேனல்லேன்” என்றாற்போல
இருகரையனாய்த் தடுமாறுமா போலே பராங்முகரையும் சீர் திருத்தி மங்களாபாஸநத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்காகப்
பாடுபடுகையாகிற ஒரு விலக்ஷண ஸம்ஸாரத்திலே நெடுநாளாக ஊன்றின இவ்வாழ்வார்,
மநோரதம் நிறைவேறப்பெறாத வருத்தத்தினால் அப்பாவிகளின் பற்றை அறுத்துக் கொள்ளவேணுமென்று
பெருக்க முயன்றாலும் அது இவர்க்கு விரைவில் கைகூடுகிறதில்லை.
மங்களாஸாஸணத்திற்கு ஆள் சேர்க்கப் படுகிறபாட்டின் உறைப்பு என்னே–

வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே–14-

பதவுரை

வண்டு இனம் முரலும் சோலை–வண்டுகளின் கூட்டங்களானவை காநம் செய்யா நிற்கப்பெற்ற சோலைகளை யுடையதும்,
மயில் இனம் ஆலும் சோலை–மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
கொண்டல் மீது அணவும் சோலை–மேகங்களானவை மேலே வந்து படியா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்
குயில் இனம் கூவும் சோலை–குயில்களின் கூட்டங்கள் ஒன்றை யொன்று அழையா நிற்கப் பெற்ற சோலைகளை யுடையதும்,
அண்டர் கோன் அமரும் சோலை-தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சோலைகளை
அணி-ஆபரணமாகவுடையதுமான
திரு அரங்கம் என்னா–ஸ்ரீரங்கம் என்று சொல்ல மாட்டாத
மிண்டர்–நன்றி யறிவில்லாத மூர்க்கர்கள்
பாய்ந்து உண்ணும் சோற்றை–மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை
விலக்கி-(அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து
நீர் நாய்க்கு இடுமின்–நீங்கள் (அந்தச்சோற்றை) நாய்க்கு இடுங்கள்.

திருவரங்கமென்னாமிண்டர்-
அவன் தங்களுக்காக வந்து கிடவாநிற்க, அவனுடைய தேசத்தை வாயாலே சொல்லவுங்கூடமாட்டாத மூர்க்கர்.
நரகவாஸம், கர்ப்பவாஸம் முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க,
கேவலம் தேக போஷணத்திலேயே ஊன்றிக் கிடக்கிறவர்களுக்கு மேற்பட்ட மூர்க்கரும் உண்டோ?

(“மிண்டர் பாய்ந்துண்ணுஞ் சோற்றைவிலக்கி நாய்க்கிடுமிளீரே.”)
“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை
வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;
இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.
தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற
ஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை
நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.

நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ
அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று
அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;
இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.

அண்டர்– இடையர்க்கும் தேவர்க்கும் பெயர்.

14-வண்டினம் முரலும் சோலை
சம்சாரிகளை பார்த்து பேசினதுக்கு பிராயச் சித்தமாக போக்யமான சோலை அனுபவிக்கச் செய்தேயும்
மீண்டும் திருவரங்கம் என்னா மிண்டர் -என்கிறார்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் இரு கரையரைப் போலே
மங்களா சாசனத்து ஆள்தேடும் உறைப்பு
திருவரங்கம் என்னா மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலிநெஞ்சுடை பூமி பாரங்கள் உண்ணும்
சோற்றினை வாங்கி புல்லைத் திணி மினே -பெரியாழ்வார்
இவர் நாய்க்கு இடும் என்கிறார்
யோ சாதுப்யோர்த்த மாதாயா சாதுப்யஸ்சம்ப்ரயச்சதி கல்பகோடி சஹஸ்ராணி சயாதி ஸ்ரேயசாம் பதம்
அசத்துக்களின் பொருளைப் பறித்து சாதுக்களுக்கு இடும்படி சாஸ்திரம்
திருமங்கை ஆழ்வார் அனுஷ்டான பர்யந்தம் வெளிக் காட்டி அருளினார்
அண்டர் -இடையருக்கும் தேவர்க்கு பெயர்

—————————————————————

தம் உபதேசத்தை மதியாத ஸம்ஸாரிகளைக் குறித்து ஹிதம் கூறுவதில் நின்றும் கால் வாங்கின ஆழ்வார் –
‘ இந்த ஸம்ஸாரிகளுக்குள்ளே ஒருவனான என்னைப் பரோபதேசம் பண்ண வல்லேனாம்படி
எம்பெருமான் தன் விஷயத்தில் படிப்படியாகப் பரமபக்தியளவான ஊற்றத்தைப் பிறப்பித்து
இப்படி நிர்ஹேதுகமாகக் கடாக்ஷித்தவாறு என்னே!’ என்று தமது நன்றியறிவு தோன்றக் கொண்டாடுகிறார்;
இதுவன்றோ அறிவுடையாருடைய செயல்.

‘தெய்வம் உண்டு’ என்று ஆதரவோடு அங்கீகரியாவிடினும் ‘தெய்வம் உண்டு’ என்று ஒருவன் சொன்னால்
அதில் ஆக்ஷேபாதிகளாலே பகைமை பாராட்டாதிருக்கும் நிலை – அத்வேஸமெனப்படும்:
இதுவே பரமபக்திக்கு முதற்படி எனப்படும்.
ஒருவஸ்துவில் ஒருவனுக்கு த்வேஷம் குடிகொண்டிருந்தால் அவன் அவ்வஸ்துவைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது:
அன்றி, ‘நேசமுமில்லை, த்வேசமுமில்லை’ என்கிற நிலைமையிலிருந்தால்
அவன் நாளடைவில் அவ்வஸ்துவிடத்தில் பரமபக்திபர்யந்தமான அன்பைப் பெற்றுவிடக்கூடும் என்பது
அனைவர்க்கு அநுபவம் ஸித்தமான விஷயம்.
ஆனதுபற்றியே அத்வேஷமென்பது பரமப்ரீதிக்கு முதற்படியாகக் கொள்ளப்புட்டிருக்கின்றதென்க.

இத்தகைய அத்வேஷமுடையார்க்குத் தனது ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுத்தும்,
அவ்வாறன்றிப் பகைமை கொண்டிருக்கும் நாஸ்திகர்க்குத் தனது ஸ்வருபத்தைக் காட்டித் தராமலும் இருப்பவனான எம்பெருமான்,
‘தெய்வம் ஒன்று உண்டு’ என்று மாத்திரம் கருதுபவரான அந்த ஆஸ்திகர்க்கு
‘நாம் அடைய வேண்டிய அக்கடவுள்தான் யாவன்?
அக்கடவுளை நாம் அடையுமிடத்து நமக்கு நேரக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்போன் யாவன்?’
என்று இவை முதலாகத் தோன்றுகிற ஸந்தேககங்களையெல்லாம் தனது வடிவழகு முதலியவற்றால் போக்குவான்:
அப்படிப்பட்டவன் நித்ய வாஸம் செய்யுமிடம் திருவரங்கம் என்பது இப்பாட்டின் கருத்து.
எம்பெருமானுடைய இத்தகைய தன்மையை இவர் தம் அநுபவத்தாலே உணர்ந்து கூறினராதலால்
தம்முடைய குருதஜ்ஞதையை வெளியிடுவது இப்பாட்டு என உரைக்கப்பட்டதென்க.

மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே–15-

பதவுரை

புள் கொடி உடைய கோமான்–கருடனைக் கொடியாகவுடைய ஸ்வாமியான திருமால்
விதி இலா என்னை போல-(நெடுங்காலம் எம்பெருமானது அருளைப் பெறுதற்கு ஏற்ற) நல்வினை இல்லாதிருந்த என்னைப்போல
மெய்யர்க்கு–அத்வேஸமாத்திரமுடையவர்க்கு
மெய்யன் ஆகும்–(தன் ஸ்வரூபத்தை) உள்ளபடி காட்டித் தருவன்;
பொய்யர்க்கு–(எம்பெருமான் விஷயத்தில்) அத்வேஸத்தைப் பெற்றிராதவர்க்கு (எம்பெருமான் விஷயத்திலே பகைமை கொண்டிருப்பவர்க்கு)
பொய்யன் ஆகும்–(தனது ஸ்வரூபத்தைக் காட்டித் தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்;
உய்யபோம் உணர்வினார்கட்கு–உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு)
ஒருவன் என்று உணர்ந்த பின்னை–‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு
ஐயப்பாடு அறுத்து–பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி
தோன்றும்–ஸேவை ஸாதிக்கிற
அழகன்–அழகை யுடைய அந்த எம்பெருமானது
ஊர்–இருப்பிடம்
ஆரங்கம்–திருவரங்கமாகும்;
(அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்)

‘மெய்யர்க்கு’ என்பதற்கு ‘தத்வஜ்ஞானமுடையவர்கட்கு’ என்று பொருள் கூறவேண்டியதாயிருக்க
அங்ஙன்கூறாது ‘அத்வேஷமுடையார்க்கு ‘என்று கூறியது எங்ஙனே?
இது ஸப்தார்த்தமாகுமோ? என்று ஸங்கிக்கக்கூடும்; கேண்மின்;-
‘தத்துவ ஞானிகட்கு எம்பெருமான்தான் மெய்யனாவான்;’ என்று கூறினால்
அதனால் எம்பெருமானுக்கு ஒரு சிறப்புத் தோன்றாதாகையாலும்,
எம்பெருமானது சிறப்பைக் கூற வேண்டியது இங்கு அவசியமாகையாலும் இங்ஙனே பொருள் கூறவேண்டியதாயிற்று.

மெய்யாவது – ஆஸ்திகபுத்தி,
பொய்யாவது – நாஸ்திகபுத்தி;
அதாவது – ‘கடவுளுண்டு’ என்பதை அங்கீகரியாமல் தாம் கண்ணாற் காண்கின்ற பொருளையே நம்புகின்ற ஞானம்;
ஆகவே இப்பாட்டில் மெய்யர் என்பது ஆஸ்திகரையும்,
பொய்யர் என்பது நாஸ்திகரைச்ஸ்யும் குறிக்குமென்க.

விதியிலா வென்னைப்போல என்பது மத்திமதீபமாக
(மத்திமதீபமாவது – ஒரு மாளிகையின் நடுவிலே வைக்கப்பட்ட விளக்கு முன்னும் பின்னும் வெளிச்சம் தருவதுபோல,
நடுநின்ற சொல்லாவது சொற்றொடராவது முன்னும் பின்னும் சென்று இயைவது.)
மெய்யர்க்கு மெய்யனாவதற்கும் பொய்யார்க்குப் பொய்யனாவதற்கும் உவமையாம்.
எங்ஙனேயெனில்;
நான் நாஸ்திக புத்திகொண்டு கடவுளின் உண்மையை மறுத்து உலகத்துப் பொருள்களிடத்துப்
பற்றுக் கொண்டு திரிந்த கீழ்நாள்களிலெல்லாம் அவ்வெம்பெருமானும் என்னைக்கீட்டாமல்,
தான் ஒருவன் உளன் என்றும் தோன்றாதபடி உபேக்ஷித்திருந்தான்;
எனக்கு ஆஸ்தீக புத்தியால் தான் எம்பெருமானிடத்து அத்வேசம் தோன்றிய இப்போதோ
அவ்வெம்பெருமான் தனது ஸ்வரூபமெல்லாம் நன்கு தோன்றுமாறு விசேஸஜ்ஞானத்தைப் பிறப்பித்தானெனக் காண்க.

ஞானம் பிறந்தபின்பு இவ்வாழ்வார் தம்மைக்குறித்து “ விதியிலாவென்னை” என்று வெறுத்துக்கூறுவது –
முன்னமே எம்பெருமானைக் கிட்டித்தாம் ஈடேற வேண்டியிருக்க அங்ஙணமில்லாமல் நெடுநாள் அ
வனை யிழந்துகிடந்த தமது தெளர்ப்பாக்யத்தை நினைப்பதனாலாம்.
“பழுதேபலபகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்றார் பொய்கையாழ்வாரும்.

இப்படி ஆஸ்திகபுத்தி மாத்திரத்தையே வியாஜமாகக்கொண்டு தத்வஜ்ஞானம் நிரம்பாத உயிர்களையும்
எம்பெருமான் காத்தருள்வதற்குக் காரணம் – அவர்கட்கெல்லாம் தாம் ஸ்வாமியாயிருப்பதே என்பது
தோன்றக் கோமான் என்றார்.
“ ஸம்பந்நராயிருக்குமவர்களே யாகிலும் ஒருகாசு விழுந்தவிடத்தே போய்த் தேடா நிற்பந்தங்களாய்
தந்தாம் வஸ்துவை விடமாட்டாமையாலே” என்ற வியாக்யாந ஸூக்தியை நோக்குக.

ஒருவனென்றுணர்ந்தபின்னை-கேவலம் தேகமே அன்று உள்ளது ;
தேஹாதிரிக்தமாயிருப்பதொரு ஆத்மா உண்டு;
அவனுக்கு ஸ்வாமியாயிருப்பானொரு எம்பெருமானுமுண்டு, என்னும் அறிவு பிறந்தபின்பு என்றபடி.

ஐயப்பாடு-ஐயம், படு என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்டு
ஐயப்பாடு என்று முதனிலையாகி அது ஐயப்பாடு எனத்திரிந்தது; முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.

15-மெய்யர்க்கே
நன்றி உணர்வு தோன்ற கொண்டாடுகிறார்
ஐயப்பாடு அறுத்த- அழகு -அழகன் இடம் வைக்க கூடாது
அத்வேஷம் முதல்படி
அத்வேஷம் உடையாருக்கு ஸ்வரூபத்தை காட்டிக் கொடுத்தான்
மெய்யர்- தத்வ ஞானம் உடையார்க்கு எண்ணாமல் அத்வேஷம் உடையார்
அர்த்த சுவாரஸ்யத்துக்காக சப்தம் நெருக்கி உரைப்பது சாஸ்திர சம்மதம்
மெய்யாவது ஆஸ்திக புத்தி பொய்யாவது நாஸ்திக புத்தி
விதியிலா என்னைப் போலே -மத்திம தீபமாக
மெய்யர்க்கும் பொய்யர்க்கும்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுத பொய்கையாரை போலே
விதியிலா என்னைப் போலே என்கிறார் முன்புத்தை நிலைமையால
கோமான் ஸ்வாமி
சம்பன்னராய் இருக்குமவர்களே யாகிலும் ஒரு காசு விழுந்தவிடத்தே போய் தேடா நிற்பார்கள் ஆய்த்து
தம்தாம் வஸ்துவை விட மாட்டாமையாலே –
உய்யப்போம் உணர்வு
ஆஸ்திக புத்தி
யாத்ருச்சிக ஸூ க்ருதமடியாக நாம் யார் நாம் நின்ற நிலை என் நமக்கு போக்கடி எது -ஆராயும் உணர்வு

————————————————————————-

எம்பெருமானால் தாம் பெற்றபேற்றை மற்றொருவகையாகப் பேசுகிறார்.
முன்னிரண்டடிகளால்-தாம் முன்பு நின்றநிலையைக் கூறி, பின்னடிகளால்-இப்போது பெற்ற நன்மையைக் கூறுகிறார்.

சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்துதன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூ ரரங்க மன்றே–16-

பதவுரை

சூதன் ஆய்–(முதலில்) சூதிலே ஊன்றினவனாய்
கள்வன் ஆகி–(பிறகு) களவிலே ஆழ்ந்தவனாய்
தூர்த்தரோடு இசைந்த காலம்–விஷயாந்தர ப்ரவணரோடே பொருந்தியிருந்த காலத்திலே
மாதரார்–ஸ்திரீகளுடைய
கயல் கண் என்னும்–கயல் போன்ற கண்களாகிற
வலையுள் பட்டு–வலையினுள்ளே அகப்பட்டு
அழுந்துவேனை–அழுந்திக்கிடக்கிற என்னை
போதர் என்று சொல்லி–‘அடா! இப்படிவா’ என்று அருளிச் செய்து
புந்தியில் புகந்து–என் மணஸிலே வந்து புகந்து
தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன்–தன்னிடத்திலே அன்பை வளரச் செய்த அழகையுடைய எம்பெருமானது
ஊர்–இருப்பிடம்
அரங்கம்–திருவரங்கமாகும்.
(அன்றே-ஈற்றசை; தேற்றமுமாம்)

ஒருவன் விஷயாந்தரங்களிலே அகப்பட்டால் அந்த ஸப்தாதி விஷயங்களை இஷ்டப்படி அநுபவிப்பதற்குப்
பொருள் விஸேஷமாக வேண்டுமாதலால் எவ்வழியிலாவது அது திரட்ட வேண்டிச் சூதாடுவதிலும் களவு செய்வதிலும் இறங்குவான்;
சூதாவது-பச்யதோஹரத்வம்; அதாவது-ப்ரத்யக்ஷக்களவு;
‘ கன்னக்களவன்று’ என்கிற மாத்திரமேயொழிய, களவு என்பதில் தட்டில்லை;
சூதாடுகிறவன் முதலில் விஸேஷலாபம் வரக்கண்டு மேன்மேலும் அதிலே முயல்வான்;
அடைவிலே, சூதில்பெற்ற பொருளையும் இழந்து ஏற்கனவே கையிலுள்ளதையுமிழந்து
அனைத்தையும் கொதுகைவைத்துக் தோற்கும்படியான நிலைமைக்கு வருவான்;
இதில் இவ்வளவு தன்மையானவாறே பிறகு கன்னக்கனவிலே கைவைப்பான்.
அதிலே ஏகாகியாகத் திருடுவது சிலநாள் வரையில்; தேர்ச்சி பெற்றவாறே தீவட்டிக் கொள்ளையிலிறங்குவான்;
அது ஒருவனாய்ச் செய்யக்கூடிய காரியமன்றாகையால் பலரையும் துணை கூட்டிக்கொள்வான்.
நாலு தூர்த்தரோடு நெருங்கினவாறே அவர்கள் மாதரார்கயற்கணெனனும் வலையில் பட்டழுந்தும்படி செய்வார்கள்.
அதற்கு மேற்பட்ட ஆபத்து வேறொன்று சொல்லவேண்டா. இத்தனையும் தமக்கு உண்டானதாகச் சொல்லுகிறார் இவ்வாழ்வார்.

இப்படிப்பட்ட துஸ்சரிதங்களாலே எம்பெருமானுடைய அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாமல் நெடுந்தூரஞ்சென்ற என்னை
அவ்வெம்பெருமானுடைய அழகானது
‘பயலே இங்குவா’என்றழைக்க அதை நான் செவியிலேற்றுக் கொள்ளாமற்போக,
பின்னையும் அவ்வழகு என்னை விடமாட்டாதே என் நெஞ்சினுள்ளே வந்து சிக்கனப்புகுந்து ஸ்திரமாகக் குடியிருந்து
எம்பெருமான் பக்கலில் நான் மிக்கு ஆதரம் வைக்கும்படி செய்த விசித்திரம் என்னே! என்று சிந்தித்து உருகுகின்றனர்-பின்னடிகளில்.

இங்கு முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயம்;-
“தன்பால் ஆதரம் பெருகவைத்த”என்ற அடைமொழியை அழகனிடத்திலே அந்வயிக்காமல் அழகிலே அந்வயிக்க வேண்டும்:-
எம் பெருமான் ஓர் அழகு உடையவன்; அவ்வழகு எப்படிப்பட்டதென்றால், சூதனாய்க் கள்வனாகி
வலையுள்பட்டழுந்து வேனைப் போதரேயென்று சொல்லிப் புந்தியிற் புகந்து தன்பால் ஆதரம் பெருகவைத்து-என்றிங்ஙனே உய்த்துணர்க.
தன்பால்-எம்பெருமானிடத்திலே என்றபடி.

16 சூதனாகி
ஆதரம் பெருக வைத்த அழகு -அழகன் இடம் வைக்க கூடாது
பக்தி வர்த்தகமான கர்ம ஞானத்திலே நிற்கிறது ஆய்த்து
இவருக்கு வடிவு அழகு
இவருக்கு சம்சயத்தை அறுக்கைக்கும்
ஆதாரத்தை பெருக்குகைக்கும்
சாமக்ரி ஒன்றே யாய்த்து
ஸ்வாபதேசத்தில்
சூதாவது -ஈஸ்வர சேஷன் ஆத்மா உண்டு சர்வ சேஷி அவன் உண்டு பரமபதம் ஒண்டு சாஸ்திரம் உண்டு
என்றால்ஒன்றும் இல்லை என்று
சொன்னவனை மயக்கி நாஸ்திகன் ஆக்குபவன்
கள்வன் -கௌஸ்துப ஸ்தாநீயனான ஆத்மாவை தன்னது என்கை

————————————————————————————-

தரித்ரனுக்கு நித்யபாயஸம் கிடைத்தாற்போலே, ஒருவகை யோக்யதையுமில்லாத கல்நெஞ்சனான எனக்கு
அழகிய மணவாளன் ஸேவை ஸாதிக்கப் பெற்ற பாக்கியத்தை
நான் என்னவென்று சொல்லுவேன் என்று தடுமாறுகின்றனர்.

விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே–17-

பதவுரை

விரும்பி நின்று–ஆதாரத்தோடே ஒருபடிப்பட நின்று
ஏத்த மாட்டேன்–ஸ்தோத்ரம் பண்ணமாட்டா தவனாயிராநின்றேன்;
விதி இலேன்–(கைகூப்புதல் முதலிய) காயிக வ்யாபாரங்களும் செய்யப் பெறாதவனாயிரா நின்றேன்,
மதி ஒன்று இல்லை–(‘ஈச்வரன் ஒருவன் உண்டு என்கிற) ஒரு அறிவும் (எனக்கு) இல்லை;
(இப்படிப்பட்ட என்னுடைய)
இரும்புபோல் வலிய நெஞ்சம்–இரும்பைப்போல் கடினமான கல்நெஞ்சானது
இறை இறை உருகும் வண்ணம்–கொஞ்சம் கொஞ்சமாக உருகும்படி;
சுரும்பு அமர்–வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த–சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்–மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட–இருப்பிடமாகத் திருவுள்ளம்பற்றின
கரும்பினை–பரம யோக்யனான எம்பெருமானை
என் கண் இணை–எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு–பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ–மகிழ்ச்சியடைகிற விதம் என்னே?
(என்று ஆச்சர்யப்படுகிறபடி.)

மனஸ்ஸு, வாக்கு, காயம் என்ற மூன்றுவகை யுறுப்புகளில் ஒன்றினாலும் நான் பகவத் விசயத்தில் அந்வயிக்கப்பெறவில்லை;
சிறிது காலமாகிலும் ஒருபடிப்பட நிலைத்துநின்று உண்மையான அன்புடன் ஸ்தோத்ரஞ் செய்யுமவனல்லேனாதலால்
வாய் படைத்த பயன் பெற்றிலேன்;
(“நின் தலையைத் தாழ்த்து இருகைகூப்பென்றால் கூப்பாது பாழ்த்தவிதி” என்றபடி)
ஒரு அஞ்சலியும் நேராகச் செய்யமாட்டாதவனாகையால் காயம் படைத்த பயனும் பெற்றிலேன்;
எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றி விஸேஷமாகச் சிந்திக்க மாட்டாமற் போனாலும்
‘எம் பெருமான் ஒருவன் உண்டு’ என்று அவனுடைய ஸத்தையையாகிலும் சிந்திக்கலாமே;
அதுவும் சிந்தித்திலேனாதலால் மனம் படைத்த பயனும் பெற்றிலேன்.
இனி மேலாவது மநஸ்ஸைத் திருத்திக்கொள்ளக்கூடுமோ வென்று பார்த்தாலும்
அதற்கும் யோக்யதையில்லாதபடி மனம் கல்லாய்க்கிடக்கிறது.

(“இரும்புபோல் நெஞ்சம்” என்னுமளவே போதுமாயிருக்க, ‘வலிய’ என்று விபேஷித்ததற்குக் கருத்து யாதெனில்;
“இரும்புபோல்”என்று சொன்னவுடனே நமது நெஞ்சுக்கு இரும்பை உவமை கூறியது ஒக்குமாவென்று ஆராய்ந்தார்;
இரும்பை நெருப்பிலே காய்ச்சி நிமிர்த்துக் கொள்ளலாம்;
நமது நெஞ்சு ஒருபடியாலும் ஸர்வசக்தனாலும் நிமிர்த்த முடியாதிருத்தலால் இவ்வுபமாநம் ஒவ்வாது
வேறு எவ்வுபமாநமும் எலாது என்றெண்ணி, வலிய என்றார்.
ஸாமாந்யமாக, ‘கடினமான நெஞ்சு’ என்னலாமேயொழிய, இன்னதுபோல் கடினமானதென்று சொல்ல முடியாதென்க.)

இத்தகைய கல்நெஞ்சம் கரையும்படியாயன்றோ எம்பெருமான் கோயிலிலே கண்வளர்ந்தருள்வது!.
சோலை வாய்ப்பு அமைந்த அரங்கமாநகரில் அமர்ந்த நாதனை
என் கண்கள் கண்டுகளிக்கும் விதத்திற்கு நான் என்ன பாசுரமிடுவேனென்கிறார்.

உபநிஷத்திலே “ ரஸோ வை ஸ:” என்று எம்பெருமானை ரஸமயனாக ஓதியிருப்பதால்
இவரும் (‘கரும்பு போன்றவனை’ என்னாமல்) கரும்பினை என்று ஸாக்ஷாத் கரும்பாகவே கூறுகின்றார்.

உருகும் வண்ணம் என்பது –
கோயில் கொண்ட என்பதனொடு அந்வயிக்கும் ;
கண்டு கொண்டு என்பதனோடு இசையுமென்பாருமுளர்.

17-விரும்பி
மூன்று கரணங்களும் விமுகராய் இருக்க
இரும்பு போல் நெஞ்சம் -இல்லை-இரும்பு போல் வலிய நெஞ்சம் –
சர்வசக்தனாலும் நிமிர்த்த முடியாத நெஞ்சு
இரும்பை உருக்கி நிமிர வைக்கலாமே
சர்வரச என்பதால் கரும்பினை என்கிறார் கரும்பு போன்றவன் எண்ணாமல்
என் கண்ணினைகள் களிக்குமாறு சதா பச்யந்தி கூட இடத்துக்கு ஒப்பு அன்று
உருகும் வண்ணம் -கோயில் கொண்ட என்பதுடனும் கண்டு கொண்டு என்பதுடனும் இயையும்

———————————————————————————

எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் ,
கண்களினுடைய களிப்புக்குப் போக்குவீடான ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ!
இக் கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்கவொட்டாமல்
துடைச்சுவராய்த் தடை செய்கின்றவே !
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான்
இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார்–

இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே–18-

பதவுரை

திரை திவலை–அலைகளிலுண்டான திவலைகளானவை
இனிதுமோத–இனிதாக அடிக்க (வீச)
எறியும்–கொந்தளிக்கிற
தண்-குளிர்ந்த
பரவை மீது–கடல் போன்ற திருக் காவேரியிலே
தனி கிடந்து–தனியே வந்து கண் வளர்ந்தருளி
அரசு செய்யும்–செங்கோல் செலுத்துகிற
தாமரை கண்ணன்–புண்டரீகாக்ஷனாய்
எம்மான்–எமக்கு தலைவனாய்
கனி இருந்தனைய செம் வாய் கண்ணனை–கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடையனான கண்ணபிரானை
கண்ட கண்கள்–ஸேவிக்கப்பெற்ற (எனது) கண்களில் நின்றும்
பனி அரும்பு–குளிர்ந்த கண்ணநீர்த் துளிகள்
உதிரும்–பெருகா நின்றன,
பாவியேன்–(கண்ணாரக் கண்டு களிக்கைக்குப்) பாக்கியமில்லாத நான்
என் செய்தேன்–ஏது செய்வேன்?

பரவை என்று கடலுக்குப் பெயர் ; திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன் திருக்காவிரியிடையிலே வந்து
கண் வளர்ந்தருள்வதாக அதுஸந்திக்கிறர் என்னலாம்:
அன்றியே,
காவேரி தான் ஒரு பெருங்கடல் பெருகுமாபோலே பெருங்வெள்ளங் கோத்துப் புரளுகையாலே
காவேரியையே கடலாகச் சொல்லிற்றாகவுமாம் முற்றுவமை.

தனி கிடந்து –
பிராட்டிமாருமில்லாமல் பரதேஸியாய்க் கிடக்கிறானென்றபடி யன்று;
நினைவறிந்து பரிமாறும் நித்யமுக்தாதிகளை ஒருநாடாகவுடையவன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டு,
ஸம்ஸாரிகள் பக்கல் நசையாலே “ஒருவனாகிலும் கிடைக்கக்கூடுமோ?” என்று வந்து கிடக்கும்படியைச் சொல்லுகிறது.

தனி-ஒப்பில்லாதபடி என்றுமாம்.

அரசு செய்கையாவது –விரோதி நிரஸநம் செய்கை அதாவது –
‘அஹம்-யம’ என்றிருக்கும் ஸம்ஸாரிகளின் பாழான நிலைமையைக் குலைத்து
‘நம:’ என்னும்படி செய்து கொள்ளுகை.
“அரசு செய்யுந் தாமரைக் கண்ணன் “என்ற சொற்போக்கால் எம்பெருமான் தனது
திருக்கண்ணழகால் அனைவரையும் அகப்படுத்திக் கொள்ளுகிறான் என் விளங்கும்.

பெரியபெருமாளை ஸேவித்தால், அவதாரத்திற் பிற்பட்டவர்கட்கும் உதவுகைக்காகக் கண்ணபிரான்
தான் வந்து கண் வளர்ந்தருளுகிறானென்று ஸ்மரிக்கலாம்படி யிருக்குமாதலால்
கண்ணனை என்கிறார்:
“ கோவலனாய் வெண்ணெயுண்டவாயன்– அண்டர்கோ னணிய ரங்கன் திருப்பாணாழ்வாரும்.

இவ்விடத்திலே பட்டர் அருளிச்செய்யும்படி;
“யசோதைப்பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கைவளரும்படி வளர்த்த மொசுமொசுப் பெல்லாம்
பெரியபெருமாள் பக்கலில் தோற்றியிருக்கும்:
வஸிஷ்டாதிகளாலே ஸுஸிகத ராய் வார்ந்து
வடிந்த விநயமெல்லாம் தோற்றும்படியான சக்ரவர்த்தி திருமகளை ஸ்மரிக்கலாம் படியிருக்கும் –
நம்பெருமானைக் கண்டால்” என்று.

இனிது + திரை-இனிதிரை; கடைக்குறை.
இருந்தனைய –இருந்தாலனைய; இருந்தாற் போன்ற என்றபடி.
ஆல் ஓ – வியப்பிடைச் சொற்கள்;;
இரக்கமும் கூப்பீடும் தோற்றுகிற குறிப்பிட்டைச் சொற்களுமாம்.

18-இனித்திரை திவலை மோத
பறவை திருப் பாற் கடல் அனுபவம்
காவேரி வெள்ளம் கடல் போலே என்னவுமாம்
தனி கிடந்து –
ஒருவாராகிலும் கிடைப்பாரோ என்று அலமாந்து கிடக்கிறான்
தனி -ஒப்பில்லாமையும்
அரசு செய்யும் தாமரைக் கண்ணன்
கண் அழகாலே -அஹம் மம -என்பவர்களை தனக்காக்குகை அரசன் வேலை
தாசோஹம் என்னப் பண்ண வல்ல அழகு
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் -இறே
இப் ப்ரஹ்மாச்த்ரத்துக்கு அகப்பட்டார் ஆர் என்னில்
நான் தோற்று என்னை எழுதிக் கொடுத்தேன்
சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னை தோற்ப்பித்த
கண்களுக்கு இனி வெல்ல ஒண்ணாத நிலம் உண்டோ –
கண்ணனை
கொண்டல் வண்ணனை — கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
பட்டர் -யசோதை பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும்படி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம்
பெரிய பெருமாள் பக்கலிலே தோற்றி இருக்கும்
வசிஷ்டாதிகளால் ஸூ ஷிதராய் வார்த்து வடிந்த விநயம் எல்லாம்
தோற்றும்படியான சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம்படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்பர்-

—————————————————————

கண் முதலிய அவயவங்களுக்கு உண்டாகிற விகாரமேயல்லாமல்
அவற்றுக்கு ஆஸ்ரய மாய் அவயவியான ஸரீரமும் கட்டழியாநின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார்.
அழகிய மணவாளன் நான்கு திக்குக்களுக்கும் தன் ஸம்பந்தமுண்டாம்படி ஸேஷஸயநனாய்
யோக நித்திரை செய்தருள்வதை ஸேவித்துத் தமது ஸரீரம் நீராய்க் கரைந்து உருகிச்
செயலற்றிருத்தலை உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றனரென்க–

பூமியின் ஸ்ருஷ்டி – மநுஷ்யதிர்யக்ஸ் தாவரங்களான பொருள்கள் வாழ்தற்காக என்றும்
ஆகாஸத்தின் ஸ்ருஷ்டி – தேவர்கள் வாழ்தற்காக என்றும் ஏற்பட்டிருக்கிறது;
திக்குக்களின் ஸ்ருஷ்டி வ்யர்த்தம் என்று நினைக்கவேண்டா;
சேதநர்க்கு தன்மீது அன்பைக் யுண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளி கொள்வதற்காகவே
திக்குக்களை ஸ்ருஷ்டித்ததும் என்று இப்பாட்டால் கூறுவதாக விஸேஷார்த்த முரைப்பார்-

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே–19-

பதவுரை

உலகத்தீரே–உலகத்திலுள்ளவர்களே!
கடல் நிறம் கடவுள்–கடல் போன்ற கருநிறத்தை யுடைய கடவுளான
எந்தை–எம்பெருமான்
குடதிசை–மேற்கு திக்கில்
முடியை வைத்து–திருமுடியை வைத்தருளியும்
குணதிசை–கிழக்குத் திக்கில்
பாதம் நீட்டி–திருவடிகளை நீட்டியும்
வடதிசை–வடக்குத் திக்கிலே
பின்பு காட்டி–(தனது) பின்புறத்தைக் காட்டியும்
தென்திசை–தெற்குத் திக்கில்
இலங்கை–(விபீஷணன் வாழுமிடமான) லங்கையை
நோக்கி–(அன்போடு) பார்த்துக் கொண்டும்
அரவும் அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையில்
துயிலும் ஆ–யோக நித்திரை செய்யுந் தன்மையை
கண்டு–காண்பதனால்
எனக்கு உடல் உருகும்-;
ஆலோ–ஐயோ
என் செய்வேன்–(நான்) என்ன செய்ய மாட்டுவேன்.

மேலைத்திக்கு – உபயவிபூதிக்கும் தலைமை வஹித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின
திருவபிஷேகத்தையுடைய திருமுடியை வைப்பதனாலும்
கீழைத்திக்கு – ஸகலலோகமும் உஜ்ஜீவிக்கும்படி ஸரணமடைந்தற்குரிய தனது திருவடிகளை நீட்டுவதனாலும்,
வடக்குத்திக்கு முரட்டு ஸம்ஸ்க்ருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச்சொல் நடையாடாத
தேசமாகையாலே அத்திக்கிலுள்ளாரெல்லாரும் ஈடேறுதற்கு ஏற்படவேண்டிய பின்னழகையெல்லாம் காட்டுவதனாலும்,
தெற்குத்திக்கு -தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது திருக்கண்களை வைத்து
அன்போடு நோக்குவதனாலும்
என இவ்வாறு நான்கு திக்குக்களும் பயன் பெறுமென்க.
விபீஷணாழ்வான் சிரஞ்ஜீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றானென்பது நூற்கொள்கை.

இப்படி நாற்றிசையிலுள்ளாரும் பயன்பெற வேண்டுமென்று ஒரு வ்யாஜம் வைத்து
எம் பெருமான் பள்ளி கொண்டதும் ஆழ்வார் பொருட்டாகவே யாயிற்றென்ற கருத்து
மூன்றாமடியில் தோன்றும். (எந்தை)

உடல் உருகும் –
உணர்வுடைய ஜீவன் உருகுவதன்றி ஜடபதார்த்தமான உடம்பும் உருகு மென்றபடி.
(”எனக்கு உடலுருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே”:) –
ஆற்றுப் பெருக்கிலே அருகிலுள்ள கரைகள் உடைந்தால் கரையைப் பாதுகாப்பவர்கள் கை விட்டுக்
கடக்க நின்று கூப்பிடுமா போலே கூப்பிடுகிறார்.
பெரியபெருமா ளழகைக் கண்டுவைத்துக் குறியழியாதே புறப்படுகிற ஸ்ம்ஸாரிகளைப் பார்த்து
உங்களைப்போலே உடல் உருகாதே கல்லாயிருப்பதற்கு ஒரு உபாயம் சொல்லமாட்டீர்களோ? என்கிறார்.

19-குடதிசை முடியை வைத்து
கண் –அவயவ விகாரமே அன்றி ஆஸ்ரயமான உடலே உருகுகிறதே
திக்குகள் சிருஷ்டி பலன் உண்டே -இப்பாசுரத்தால் காட்டி அருளுகிறார்
உடல் நெக்கு உருகுமாலோ பாட பேதம் -நெக்கு கரைந்து

————————————————————-

கீழ் “பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே” என்றும்,
“உடலெனக் குருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே” என்றும் கதறின ஆழ்வாரை நோக்கிச் சில ஸம்ஸாரிகள்
“ஓய்! பகவத் விஷயத்திலே அகப்பட்டு ஏன் இங்ஙன கதறுகிறீர்?
அதில் ஊற்றத்தை விட்டு எங்களோடே கூடினீராகில் என் செய்கேன்! என் செய்வேன்!! என்று
வாய் வெருவ வேண்டாதபடி தரித்து ஸுகமே வாழலாமே!
உம்முடைய ஸ்வயம் க்குருதாநத்தம் மிகவ மழகிறது! என்றாற்போலே சில சொல்ல;
அது கேட்ட ஆழ்வார்,
‘ பாவிகாள்! கண்வளர்ந் தருளுகிற அழகைக் கண்டு வைத்து இவ்வழகெல்லாம் நமக்காகவாயிற்று? என்று
களிக்கும் படியான ஸ்வரூப ஜ்ஞாநமுடைய:எங்களுக்கு,
“அஹம்-மம” என்றிருக்கிற உங்களைப் போல் அகலமடியுமோ? என்கிறார்.

பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே–20-

பதவுரை

பாயும் நீர்–பாயா நின்றுள்ள காவிரி சூழ்ந்த
அரங்கம் தன்னுள்–கோயிலிலே
பாம்பு அணை–சேஷ சயநத்திலே
பள்ளிகொண்ட–கண் வளர்ந்தருளாநின்ற
மரகதம் உருவும்–மரகத மணி போன்ற திருமேனி நிறமும்
தோளும்–திரு தோள்களும்
தூய தாமரை கண்களும்–பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்களும்
துவர் இதழ்–சிவந்த அதரமும்
பவளம் வாயும்–பவளம் போன்ற வாயும்
மாயனார்–ஆச்சரிய சக்தி வாய்ந்த எம் பெருமானது
திருநல் மார்வும்–பிராட்டி வாழ்கின்ற விலக்ஷணமான மார்பும்.
ஆய சீர் முடியும்–வேலைப்பாடுள்ள அழகிய திருமுடியும்
தேசும்–(இவற்றாலுண்டான) தேஜஸ்ஸும்.
அடியரோர்க்கு–ஸ்வர்ரூபஜ்ஞான முடைய தாஸர்களுக்கு
அகலலாமோ–இழக்கத் தகுமோ?

எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே
பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான்மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி
ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக்
காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலகமடியுமோ? என்க.

20-பாயும் நீர்
அஹம் மம உங்களை போலே அகல முடியுமோ இந்த அழகைக் கண்டபின்
ஒலைப்புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே
தன தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி –
சௌந்தர்ய சாகரம் -திவ்ய தேஜஸ் கண்டும் விலக முடியுமோ
மாயனார்
தனது நெடும் கைக்கும் எட்டாதபடி ஓடினேன் ஓடி -என்னையும் பிடித்து இழுத்துக் கொண்டவனுடைய சக்தி மாயமே
தூய அடை மொழி கண்ணுக்கு
ஸ்ரமணீ விதுர ருஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீகாஷன் நெடு நோக்கு சாபம் இழிந்து என்னப் பண்ணும் இறே –

———————————————————————-

“கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும்,
“அரவணைத் துயிலுமா கண்டு” என்றும்
அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையாலன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்;
அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காண வேண்டா;
ஒரு மூலை யிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர் சொல்ல
அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் –
அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.

பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே–21-

பதவுரை

பவளம் வாய்–பவளம் போன்ற அதரத்தை யுடைய
அரங்கனார்க்கு–அழகிய மணவாளன் விஷயத்திலே
பணிவினால்–கைங்கர்ய ருசியால்
மனம் அது ஒன்றி–கருத்தைப் பொருந்த வைத்து
துணிவினால்–துணிவுடன்
வாழ மாட்டா–வாழ மாட்டாத
தொல்லை நெஞ்சே–கிழத்தனமுள்ள மநஸ்ஸே!
அணியின் ஆர்–அழகினாலே பூர்ணமாய்
செம் பொன் ஆய அருவரை அணைய–செவ்விய பொன்னாலே செய்யப்பட்ட சிறந்த மேரு பர்வதத்தை யொத்த
கோயில்–கோயிலிலே
மணி அனார்–நீலமணி போன்ற எம்பெருமான்
கிடந்த ஆற்றை–கண் வளர்ந்தருளுகிற படியை
மனத்தினால்–நெஞ்சினால்
நினைத்தல் ஆமே–(அளவிட்டு அறியக் கூடுமோ?
நீ சொல்லாய்–நீயே சொல்லிக்காண்.

நெஞ்சால் நினைக்க முடியா தென்பதை உபபாதிப்பன-முன் இரண்டடிகள்.
நெஞ்சே! நீ வெகு காலத்தைப் பாழே கழித்தவனல்லையோ? நீ அநுகூலப்பட்டிருந்தா யாகில் முன்னமே
உஜ்ஜீவித்திருக்கலாமன்றோ அதற்காக நீ செய்திருக்கவேண்டிய காரியமும் அதிகமொன்றுமில்லை;
உன்னுடைய சிந்தனையை எம்பெருமான் விஷயத்திலே செலுத்தி அவனை பணிவாக நிலைநிறுத்தி,
‘இனி நாம் பணியவேண்டிய வ்யக்தி வேறில்லை’ என்று திண்ணிதாக அத்யவஸாயங் கொண்டிருந்தால்
இவ்வளவே போதும் உஜ்ஜீவநத்திற்கு;
வெகுகாலமாக இப்படிப்பட்ட பணிவும் அத்யவஸாயமும் இல்லாமல் நெடுநாளாகப் பாழாய்போனவனன்றோ நீ;
இப்படி சிறிது காலம் ஒரு விஷயத்திலே நிலைநிற்கமாட்டாத நீ எம்பெருமான் அரவணைமேல் சாய்ந்தருளும்படியை
நினைப்பதென்றால் இது கூடுமான காரியமா என்பதை நீயே ஆராய்ந்து பார் என்கிறார் என்னவுமாம்.

(பணிவினால் மனமது ஒன்றி)
இங்கு மனம் என்று மநோ வ்ருத்தியாகிய சிந்தனையைச் சொல்லுகிறது.

ஒன்றி-பிறவினைப் பொருளில் வந்த தன்வினை; ஒன்றுவித்தது என்றபடி.

சிந்தனையைப் பணிவினால் ஒன்றுவித்தலாவது எம்பெருமானைப் பணிவதாக முயற்சி செய்தல்,

“இதர விஷயங்களிலேயே போகிற நெஞ்சை அவற்றில் நின்றும் மீட்டு ப்ராப்த விஷயத்திலே
ப்ரவணமாக்குவோ மென்னும் உத்யோக மாத்ரமே யாய்த்து இவ்விஷயத்திற்கு வேண்டுவது” என்பர் பெரியவாச்சான்பிள்ளையும்.

துணிவினால் – த்ருடாத்யவஸாயத்தினால் என்றபடி.

வாழமாட்டா என்று- இத்தனை காலமாக வாழா தொழிந்தமையைக் கூறியவாறு

(தொல்லை நெஞ்சே) இழவிலே உள்ள தொன்மையை (அநாதித்வத்தை) நெஞ்சினிலே ஏறிட்டுக் கூறுகிறபடி;
அநாதிகாலம் வாழ்ச்சியை இழந்தொழிந்த நெஞ்சே! என்றவாறு.

(அணியினார் இத்யாதி) மஹாமேருவைப் புடைப்படத் துளைத்து அது விம்மும்படி அதிலே
ஒரு நீல ரத்நத்தை அழுத்தினாற் போலாய்த்துக் கோயிலாழ்வார்க்குள்ளே பெரியபெருமாள் கண் வளர்ந்தருளுகிறபடி.

மணி அனார்- ‘அன்னார்’ என்பது அனார் எனத் தொக்கிக் கிடக்கிறது.

21-பணிவினால் மனமது ஒன்றி
மனம் மநோ வ்யாவருத்தி சிந்தனை
ஒன்றி ஒன்றிவித்து
எம்பெருமானை பணிவதாக முயற்சி செய்தல்
இதர விஷயங்களில் போகிற நெஞ்சை
அவற்றில் நின்றும் மீட்டு
பிராப்த விஷயத்தில் பிரவணம் ஆக்குவோம் என்னும்
உத்யோக மாத்ரமே யாய்த்து இவ்விஷயத்துக்கு வேண்டுவது –
தொழக் கருதுவதே துணிவது சூதே -திருவாய்மொழி
அணியினர்
மகா மேருவை புடைபடத் துளைத்து அது விம்மும் படி அதிலே ஒரு நீல ரத்னத்தை
அழுத்தினால் போலே யாய்த்து கோயில் ஆழ்வாருக்கு உள்ளே பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுகிறபடி –
ஸ்ரீ ரெங்காந்தர் மந்திரம் தீப்ர சேஷம் ஸ்ரீ பூமி தத்ரம்யா ஜாமாத்ரு கர்ப்பம்
பச்யேம ஸ்ரீ திவ்ய மாணிக்ய பூஷா மஞ்ஜூஷா யாஸ்துல்ய முன்மீலிதாயா-பட்டர்-

—————————————————————————

நினைக்க முடியாதாகில் வாய்விட்டுப் பேசினாலோவென்ன
“மந: பூர்வோ வாகுத்தர:” என்றன்றோ சொல்லியிருப்பது;
மநஸ்ஸாலே பரிச்சேதிக்க வொண்ணாத விஷயத்தை பாசுரமிட்டு முடிக்கப் போமோ என்கிறார்–

பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்–22-

பதவுரை

பேதை நெஞ்சே–விவேகமற்ற மனமே
பேசிற்றே–(வேதங்களும் வைதிக புருஷர்களும்) பேசின பேச்சுக்களையே
பேசல் அல்லால்–(நாமும்) பேசுவதேயல்லாமல்
பெருமை-(எம்பெருமானது) மேன்மையிலே
மாசு அற்றார் மனத்து உளானை–குற்றமற்ற பெரியோர்களின் நெஞ்சில் நித்யவாஸம் செய்யுமவனே
நாம் வணங்கி இருப்பது அல்லால்–நாம் வணங்கிக் கொண்டு காலங்கழிக்கலா மத்தனையொழிய
ஒன்று–ஏக தேசமும்
உணரல் ஆகாது–அறிய முடியாது;
ஆசு அற்றார் தங்கட்கு அல்லால்–உபாயாந்தரப் பற்றாகிற குற்ற மற்றவர்களுக்கு தவிர (மற்றையோர்க்கு)
அறியல் ஆவானும் அல்லன்–அறிய முடியாதவனாயு மிரா நின்றான் (அவன்;)
பேச தான் ஆவது உண்டோ–(அவன் பெருமைக் கீடாகப்) பாசுரமிட்டுப் பேசும் படியா யிராநின்றதோ? நீ சொல்லாய்

பேசமுடியாதென்றால் பேசுவதைவிட்டு விலகி வாய்மூட வேண்டாவோ?
பின்னையும் பேசிக் கொண்டே இருக்கிறதென்? என்ன;
ஊமையாகப் பிறவாமல் நாலாறு வார்த்தைகள் சொல்லும்படியாகப் பிறந்தோமாதலால்,
வேதங்களும் வைதிகோத்தமர்களும் சொல்லிப் போன பேச்சுக்களில் ஏதோ சிலவற்றைச் சொல்லி கொண்டிருக்கிறோமே யொழிய,
எம்பெருமானுடைய பெருமைகளை யெல்லாம் அறிந்து பேசுகிறபடியன்று என்கிறார் முதலடியில்:

“நிற முயர் கோலமும் பேருமுருவு மிவையிவை யென்று, அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலு மங்கங்கெல்லாம்,
உறவுயர் ஞானச்சுடர்விளக்காய் நின்றதன்றி யொன்றும், பெறமுயன்றா ரில்லையால் எம்பிரான் பெருமையையே” என்ற
திருவிருத்தத்தை ஒரு புடை ஒத்திருக்கும் இது.

அன்றியே; ”யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று வேதம் பேசினபடியே நாமும்
“எம்பெருமானுடைய பெருமையைப் பேசமுடியாது” என்று பேசுமத்தனையல்லது
பெருமை அறியமுடியாது என்றும் பொருள்படும்.

22-பேசிற்றே
நிறமுயர் கோலமும் பேரும் உருவும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையையே -திருவிருத்தம்
யதோ வாசோ நிவர்த்தந்தே –
ஆசற்றார் நம் ஆழ்வார் போல்வார்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று ஏக சிந்தையராய் இருக்கும் சித்தோபாய விசுவாசிகள்
மாசற்றார் பெரியாழ்வார் போல்வார்
வடதடமும் வைகுந்தமும் மதிள் த்வாராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பாள் இடவகை கொண்டனையே -என்றபடி
நித்யவாசம் செய்து அருளுபவன்
என்று சொல்லிக் கொண்டு வணங்கினால் நமக்குள்ளும் நித்ய வாஸம் செய்து அருளுவான்

——————————————————————————–

உபய காவேரி மத்தியிலே ஸ்ரீரங்கத்தில் அழகிய மணவாளனது சயந திருக்கோலத்தை ஸேவிக்கப்பெற்ற பின்பு,
யான் அந்தக் கிடையழகிலே மனம் ஈடுபட்டுப்புறம்பே செல்ல மாட்டாது தவித்து வருந்துதலையொழிய
அதனை மறந்து தரித்திருக்க உபாயமுண்டோ என்று –
தாம் எம்பெருமானது கிடையழகில் ஈடுபட்டமையை இதனால் கூறுகின்றனரென்க–

கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே–23-

பதவுரை

ஏழையேன்-(எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்) பேதைமைக் குணத்தையுடைய நான்
கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு–கங்காநதியிற் காட்டிலும் பரிசுத்தியுடையதாகிய காவேரிநதியினது நடுவிடத்திலே
பொங்கு நீர்–பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந்நதியின்) நீர்ப் பெருக்கு
பரந்து பாயும்–எங்கும் பரவிப்பாய்தற்கிட மானதும்
பூ பொழில்–அழகிய சோலைகளையுடையது மாகிய
அரங்கம் தன்னுள்-கோயிலிலே
எங்கள் மால்–(அடியவரான) எங்களிடத்தில் பேரன்பு உடையவனும்
இறைவன்-ஸர்வஸ்வாமியும்
ஈசன்-ஸர்வநியாமகனுமாகிய ஸ்ரீ ரங்கநாதன்
கிடந்தது ஒர் கிடக்கை-சயனித்திருப்பதாகிய ஒப்பற்ற பள்ளிகொண்ட திருக்கோலத்தை
கண்டும்-ஸேவிக்கப்பெற்ற பின்பும்
மறந்து-(அந்தகிடையழகை) மறந்து போய்
எங்ஙனம் வாழ்கேன்–எவ்வாறு தரித்திருப்பேன் யான்?
ஏழையனே-ஒன்றுஞ் செய்யமாட்டாது திகைத்தவனாகவே நிற்பேன்.

கங்காநதியானது விஷ்ணுபாத்தில் நின்றும் தோன்றியதலால் பரிசுத்தமானது; என்றாலும்,
சிவனுடைய சடை முடியில் தங்கியதனால் ‘ரெளத்ரம்’ (ருத்ரஸம்பந்தமுள்ளது- சடைச்சாறு) என்று
சொல்லுகிற ஒரு குறைவை அடைந்திட்டது;
இந்தக் காவேரியோ அங்ஙனம் குறைபாடு ஒன்றுமில்லாததோடு அந்தக் கங்கையைத் தனது திருவடியில்
நின்று முண்டாக்கின பெருமான் தான் மிக்க அன்பு பூண்டு தன் நடுவிற் பள்ளிக் கொள்ளும் பாக்யமும் பெற்றது பற்றி,
அந்த கங்கையை பார்க்கிலும் இது ஏற்றம் பெற்றதாகுமென்பர் –

பேநைர் ஹஸந்தீவ த்த்கங்காம் விஷ்ணுபதித்துவ மாத்ரமுகராம் ஹேமாபகா ஹந்த்வகம் என்று
பட்டரும் அருளிச் செய்தது காண்க.

(பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம்)
கோயிலைக் கிட்டுகின்றோமென்கிற குதூஹத்தினால் பெரிய கிளர்த்திகொண்டு தனது பெருமகிழ்ச்சியெல்லாம்
தோற்றுமாறு எங்கும் காவேரிநதி பாய்வதனால் எப்போதும் மலர்கள் மாறாத சோலைகள் சூழ்ந்த
பெரிய பெருமாளது ஸெளகுமார்யத்துக்கு அநுகூலமான நீர்வளத்தையும்
எப்போதும் இளவேனிற் பருவம்போலத் தோன்றுகிற பூஞ்சோலைகளையுமுடைய ஸ்ரீரங்கம்:
இதனால் அத்தேசத்தினது தூய்மையும் .இனிமையும் வெளியாமென்க.

இறைவன் என்பது -அவன் ஸகல பதார்த்தங்களுக்கும் தலைவன் என்பதையும்;

ஈசன் என்பது –தனது தலைமைக்குத் தகும்படி ஆளவல்ல திறமையுடையவ னென்பதையும் தெரிவிக்கு மென்ப.

கண்டும் மறந்து எங்ஙனம் வாழ்கேன்-
இவ் விஷயத்தைக் கண்டு அநுபவிப்பதற்கு முன்பாகில் மறந்தாலும் மறக்கலாம்;
கண்டு அநுபவித்த பின்பு மறக்கும் வழி தெரியவில்லையே! மறக்க மருந்துண்டாகில் கொடுங்கள் என்கிறார்.

கவேரனுடைய மகள் என்னும் பொருளதான காவேரீ என்ற வடசொல் காவிரி எனத் திரிந்தது.
நடுவு பாட்டு –ஏழனுருபு: இடத்திலே.
எங்கள்- தம்மை போன்ற அடி யாரையும் உளப் படுத்திய தன்மைப் பன்மை.
மால் –அன்பு;அதனை யுடையவனுக்கு ஆகுபெயர்.
ஏழையேன் – “நுண்ணுணர்வின்மை வறுமை” என்றபடி ‘அறிவில்லாதவன்’ என்றவாறு.

23-கங்கையில் புனிதமாய
பே நைர் ஹசந்தீவ தத் கங்காம் விஷ்ணுபதீத்வ மாத்ரமுகராம் ஹேமாபகா ஹந்த்வகம்-பட்டர்
அழகை கண்டபின் மறக்க மருந்துண்டா சம்சாரிகளே

————————————————————————–

எம்பெருமான் பரமபதத்தில் நித்யஸூரிகளோடு பரிமாறுவதை விட்டுவிட்டு இங்கே வந்து கண்வளர்ந்தருளுவது-
உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவராகிய ஸம்ஸாரிகளை வசப்படுத்திக் கொள்வதற்காக
வலை வீககிறபடியாதலால் கள்வனார் எனப்பட்டது.
வேசியைக் கண்டு பேச விரும்பியும், சோறு வாங்கி உண்ணக்கருதியும், திருவிழாக்களிலே திரண்டவர்கள் ஏமாந்திருக்கையில்
கொள்ளை கொள்ளக் கருதியும் இவ்வாறு பலவகை எண்ணங்களோடே கோவிலுக்குள்ளே புகுந்தவர்களை,
வடிவழகு முதலியவற்றைக் காட்டி நாளடைவில், தனக்கு அற்றுத்தீர்ந்த அடியவராம்படி, ஆக்கிக் கொள்ளுகிற
எம்பொருமானைக் கள்ளனென்னத் தடையுண்டோ?
“செஞ்சொற் கவிகாள்! உயிர் காத்து ஆட்செய்மின் திருமாலிருஞ்சோலை, வஞ்சக் கள்வன் மாமாயன்” என்றாரே நம்மாழ்வாரும்–

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே–24-

பதவுரை

வெள்ளம் நீர்–பெருக்கை யுடைய காவேரி யானது
பரந்து பாயும்–எங்கும் பரவிப் பாய்தற்கு இடமானதும்
விரி பொழில்–விசாலாமான சோலைகளை யுடையதுமான
அரங்கம் தன்னுள்–கோயிலிலே,
கள்வனார்–அடியவர்களைக் கொள்ளை கொள்ளுமவனான அழகிய மணவாளன
கிடந்து ஆறும்–பள்ளிக் கொள்ளும்படியையும்
கமலம் நல் முகமும்–தாமரை மலர் போல் அழகிய திருமுகத்தையும்
கண்டும்–ஸேவிக்கப்பெற்ற பின்பும்
உள்ளமே–ஓ நெஞ்சே!
வலியை போலும்–நீ கல்லாகிராநின்றாய் போலும்!
ஒருவன் என்று–அவன் ஒப்பற்றவனென்று
உணரமாட்டாய்–அறியமாட்டாய் (இவ்விஷயத்தில்)
கள்ளம் காதலே செய்து–கபடமான பக்தியையே செய்து கொண்டு
உன் கள்ளத்தே–உனது கபடச் செய்கையிலேயே
கழிக்கின்றாயே–காலத்தை கழிக்கிறாயே!

தன் உடைமையப் பெறுதற்கு இங்ஙனே வந்துகிடக்கிற கிடையையும்,
தாய்க்கொலை செய்பவனும் மயங்கி நிற்கும்படியான அழகுவாய்ந்த திருமுக மண்டலத்தையும் ஸேவிக்கப் பெற்ற பின்பு
நெஞ்சே! சிறிதுகூட விகாரப்படாமல் கல்போலத் திண்ணிதாயிருக்கின்றாயே! என்கிறார்.

“கீழ்ப்பிறந்த விகாரமெல்லாம் விஷய வைலக்ஷண்யத்தைப் பற்ற
அஸத் ஸமமாயிருக்கிற தாய்த்து இவர்க்கு” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.

‘இப்போது எனக்கு வந்த வன்மை என்ன?’ என்று நெஞ்சானது கேட்க;
ஒருவனென் றுணரமாட்டாய் என்கிறார்: உண்டு உறங்கும் ஸாமந்யரைப் போலே இவனையும் நினைத்திருக்கிறாயே யொழிய
‘இஃது ஒரு விலக்ஷண வஸ்து’ என்று விவேகிக்க மாட்டுகிறிலையே!
அப்படி விவேகித்திருப்பாயாகில் அவ்விஷயத்திற்குத் தகுதியாக விடாய் பிறந்திருக்க வேணுமே;
அது பிறநவாமையாலே உன்னைக் கல் என்னத் தட்டென்? என்கிறார்.

கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே-
நெஞ்சே! ப்ராக்ருத விஷயங்களை விரும்பிப் போக வாஸநை இவ் விஷயத்திலும் தொடர்ந்து மாத்திரமே யொழிய,
இதன் வைலக்ஷண்யத்துக்குத் தகுதியாக நீ காதல் கொண்டாயில்லை;
கபடமான காதல்கிடாய் உன்னது. என்கை.

24-வெள்ள நீர்
கள்வனார்
உண்டியே உடையே என்று உகந்தோடும் சம்சாரிகளையும்
வசப்படுத்திக் கொள்ள வலை வீசுவதால்
கள்வனார் என்கிறார்
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் –
கள்வன் என்னாதே கள்வனார் பெரிய தீவட்டி திருடன்
திருடனை பிடிக்க திருடன் வேண்டுமே
ஆத்மாபஹாரி நம் போல்வாரை பிடிக்க கள்வனார் வேண்டுமே
ருஜுவாக வந்தால் கிடைப்பவர்கள் அன்றே
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் எதிரம்பு கோத்தவர்கள் இறே இவர்கள்
தனது உடைமையை பெற வந்து கிடக்கிற கிடையையும்
தாய் கொலை செய்பவனையும் மயங்கப் பண்ணும் அழகு வாய்ந்த திரு முக மண்டலத்தையும்
சேவித்தும் விகாரப் படாமல் தின்னியதாக இருக்கும் நெஞ்சே என்கிறார்
கீழ்ப் பிறந்த விகாரம் எல்லாம்
விஷய வை லஷணயத்தை பற்ற
அசத் சமமாய் இருக்கிறது யாய்த்து இவருக்கு –
இந்த வை லஷன்யத்துக்கு தக்க காதல் கொண்டாய் அல்லை
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே-கபடமான காதல் கிடாய் என்கிறார்

————————————————————————–

கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் என்று சாஸ்த்தரங்களில் உபாயமாகக் கூறப்பட்டவற்றை
அநுஷ்டிப்பதற்கு ஏற்ற ப்ராஹ்மண்யமிருந்தும் ஐயோ!;
எனக்கு ஒன்றிலும் யோக்யதை இல்லையே என்று தமது வறுமையைக் கூறுகின்றார்–25-

குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா. கதறு கின்றேன்
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே–25-

பதவுரை

அரங்கமாநகருளானே
குளித்து-ஸ்நாநம் பண்ணி
மூன்று அனலை-மூன்று அக்நிகளை
ஓம்பும்-வளர்ப்பதற்குரிய யோக்யதையைத் தருவதும்
குறி கொள்–கஷ்டப்பட்டுக் காப்பாற்றத் தக்கதுமான
அந்தணமை தன்னை–ப்ராஹ்மண்யத்தை
ஒரித்திட்டேன்–பாழாக்கி விட்டேன்;
என் கண் இல்லை–(ஆத்ம விஷய ஜ்ஞானம்) என் பக்கல் இல்லை;
என் கண் பத்தலும் அல்லேது-உன் விஷயமான பக்தியும் உடையவனல்லேன் நான்; (இப்படியிருக்க)
கடல் வண்ணா–நம்பீ–;
என் கொண்டு களிப்பது–(நான்) எத்தைக் கொண்டு ஆநந்த்தமடைவேன்
கதறுகின்றேன்–(துக்கத்துக்குப் போக்குவீடாக) வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன் (ஆதலால்)
எனக்கு-என் விஷயத்தில்
அளித்து அருள் செய்–மிகவும் கிருபை செய்தருள வேணும்.

அக்நிஹோத்ரம் முதலிய தீத்தொழில்களைக் செய்வதற்கு யோக்யதையைக் கொடுப்பது
ப்ராஹ்மண்யம் என்பது முதலடைமொழியால் விளங்கும்,

குறிகொள் என்பதனால் –
இந்த ப்ராஹ்மண்யம் மிக வருந்திக் காப்பாற்ற வேண்டிய தென்பது போதரும்.
ப்ராஹ்மண யோநியிற் பிறந்தவன் எவ்வளவு அக்ருத்யங்கள் செய்தாலும் ப்ராஹ்மணனாகவே இருக்கிறான்
என்பது கிடையாதாகையாலும், சாஸ்த்தரங்களிலே பாபங்களைக் கூறும் போது ஜாதிப்ரம்சாபாதக பாபங்கள்
(அதாவது ஜாதியில் நின்றும் நழுவச் செய்ய வல்ல பாவங்கள்) என்று சில பாதகங்கள் கூறப்பட்டிருத்தலாலும்
அப்படிப்பட்ட பாவங்களுக்கு ஆளாகாதபடி ஒழுங்காக இருந்தாலன்றி
ப்ராஹ்மண்யம் நிலைத்து நிற்கமாட்டாதாகையால், குறிகொள் எனப்பட்டதென்க.

மூன்றனல் – திரேதாக்னி அதாவது கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி,
ஒம்புதல் – ஆராதித்தல்.

“அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்”-
நான் ஒருவன் வரம்பு கடந்து காபேயமாகத் திரிந்தவளவால் ப்ராஹ்மண்யமென்பதே
ஒன்று உலகில் கிடையாதெனறு சொல்லும்படியாய் விட்டதென்கை.

ஆக, ‘ஒளித்திட்டேன்’ என்னுமளவால்
கர்மயோகத்தில் தமக்குச் சிறிதும் அந்வயமில்லாமையை அருளிச்செய்து
“என்கணில்லை” என்பதால் ஜ்ஞாந யோகமில்லாமையைக் கூறி
“நின்கணும் பத்தனல்லேன்” என்பதால் பக்தியோகமு மில்லாமையைக் கூறுகின்றார்.

இப்படி உன்னைப் பெறும் வழிகளிலே ஒன்றிலும் எனக்கு அந்வயமில்லாமையாலே
நான் எதைப் பற்றாசாகக் கொண்டு களித்திருப்பேன்;
எதாவது ஸ்வல்பம் கைம்முதலாவது என்னிடத்தில் இருக்குமாகில் ‘பேற்றில் நமக்கு அதிகாரமுண்டு’ என்று
நினைத்து ஆறியிருக்கலாம்.
அங்ஙன் ஆறியிருக்க விரகில்லாமையால் ஐயோ! ஐயோ!! என்று கதறா நின்றேனென்கிறார் மூன்றாமடியால்.

உம்மை நான் ரக்ஷிப்பதற்கு உறுப்பாக உம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்லை என்பது திண்ணமான பின்பு கதறிப் பயனென்?
என்னை என் செய்யச் சொல்லுகிறீர்?’ என்று எம் பெருமான் திருவுள்ளமாக;
ஒரு கைம் முதலுள்ளவர்களைத் தான் ரக்ஷிப்பதென்று உனக்கு நியதியுண்டாகில் கோயிலிலே வந்து சாய்ந்தருள்வானேன்?
உன்னுடைய ஒப்புயர்வற்ற கருணைக்கு என்னைத் தவிர வேறு விஷயமுண்டோவென்னும் கருத்தை நான்காமடியில் வெளியிடுகிறார்.

25-குளித்து
அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்
ப்ராஹ்மன்யம் என்பதே உலகில் கிடையாது என்று சொல்லும்படி
சிஷ்டராய் இருப்பார் கண்டால் இன்னான் அதிகரித்த வர்ணத்திலே சிலர் அன்றோ என்று கொண்டு
அவர்களுக்கும் அவத்யமாம்படி திரிந்தேன்
ஒளித்திட்டேன் -கர்ம யோகம் இல்லை
என் கண் இல்லை ஞான யோகம் இல்லை
நின் கணும் பக்தன் அல்லேன் -பக்தி யோகம் இல்லாமை
ஆறி இருக்காமல் கதறுகிறேன்
கைம்முதல் இல்லாரை ரஷிக்க அன்றோ கோயிலில் கிடைக்கை
ஒப்பற்ற கருணைக்கு என்னை விட நீசர் இல்லையே

——————————————————————

“கடல்வண்ணா! கடல்வண்ணா!!” என்று கதறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,
‘த்ரைவர்ணிகாதிகாரமான உபாயங்களில் உமக்கு அந்வயமில்லையென்றீர்; இருக்கட்டும்;
ஸர்வாதிகாரமான அர்ச்சகம், ஸ்தோத்ரம் முதலியவற்றில் எதாவது அந்வயமுண்டோ? என்று கேட்க,
ஐயோ! ஒன்றிலும் அந்வயமில்லையே! என்று கையை விரிக்கிறார்–

போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே–26-

பதவுரை

போது எல்லாம்–எல்லாக் காலங்களிலும்
போது கொண்டு–பூக்களைக் கொண்டு
உன் பொன்அடி புனைய மாட்டேன்–உன்னுடைய அழகிய திருவடிகளிலே ஸமர்ப்பிக்க மாட்டுவேனல்லேன்;
தீது இலாமொழிகள் கொண்டு–குற்றமற்ற சொற்களினால்
உன் திருக்குணம் செப்பமாட்டேன்–உன்னுடைய நற்குணங்களைக் கீர்த்தநம் செய்யமாட்டுவேனல்லேன்;
காதலால் அன்பு–உண்மையான பக்தியால் உண்டாகிற அபிநிவேசத்தை
நெஞ்சம்-நெஞ்சிலே
கலந்திலேன்-வைத்துக் கொண்டிருக்கின்றேனில்லை;
அது தன்னாலே-ஆதலால்
அரங்கர்க்கு-அழகிய மணவாளனாகிய தேவரீர்க்கு
ஏதிலேன்-ஒரு காரணத்தாலும் ஸ்பர்சிக்கப் பெற்றவனல்லேன்;
(இப்படிப்பட்ட நான்)
என் செய்வான் தோன்றினேனே-எதற்காகப் பிறந்தேனோ (அறியேன்)
எல்லே–ஐயோ!

“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்,
புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே” என்றபடி
கண்ணிற்கண்ட பூக்களைக் கொணர்த்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்பிக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க,
அது செய்யமாட்டுகிறிலேன்;

இவ்வளவு கஷ்டமும் வேணடா; வாயில் வந்த நாலு சொற்களைச் சொல்லி ஸ்தோத்ரமானது செய்யலாமே;
அதுவும் செய்யப் பெற்றிலேன்;

அவ்வளவு சிரமமும் வேண்டா; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேஹம் வஹிக்கலாமே; அதுவும் பெற்றிலேன்;

இப்படி ஒருவிதத்தாலும் எப்பெருமான் விஷயத்திலே தான் கிஞ்சித் கரிக்கப் பெறாதவனான பின்பு
ஆட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் ஒரு வாசியில்லை;
என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!! என்கிறார்

26-போதெல்லாம்
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தன் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே
ஆட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் வாசி இல்லை
காதலால் நெஞ்சு அன்பு கலந்திலேன்
கபடமான அன்பு என்று காட்ட காதலால் அடை மொழி
அங்கும் கவர்ந்து கொள்ளை கொள்வதற்காக வஞ்சனையான அன்பு
இப்படி கபடமான அன்பை அங்கு இருந்து மாற்றி உன்னிடத்தில் செய்வதில் என்ன பலன் என்கிறார்

————————————————————————–

மநுஷ்யனாய்ப் பிறந்தவன் செய்யக்கூடிய கிஞ்சித்காரங்களில் மாத்திரமே யன்று
எனக்கு அந்வயமில்லையென்பது;
ஸாமந்யமான திர்யக்குகள் செய்யக்கூடிய கிஞ்சித்காரமம் பாவியேன் செய்யப் பெற்றிலேன் என்று
வருந்துகின்றார்–

குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே–27-

பதவுரை

குரங்குகள்–வாநரவீரர்கள் (கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறுவதற்கு)
மலையை நூக்க–மலைகளைத் தள்ளிக் கொண்டுவர
குளித்து புரண்டிட்டு ஓடி–நீரிலே முழுகி (கரையிலுள்ள உலர்ந்த மணலிலே) புரண்டு ஓடி
தரங்கம் நீர் அடைக்கல் உற்ற–அலைக்கிளர்ச்சியை யுடைய கடலைத் தூர்க்கையிலே ஒருப்பட்ட
சலம் இலா–கபடமற்ற
அணிலும் போலேன்–அணில்களையும் ஒத்திருக்கின்றேனில்லை;
மரங்கள் போல் வலிய நெஞ்சம்–மரங்களைப்போலே கடிநமான நெஞ்சையுடையனாய்
வஞ்சனேன்–வஞ்சநையையே தொழிலாக யுடையனாய்
அளியத்தேன்–அருமந்த மநுஷ்யனான நான்
அரங்கனார்க்கு–அழகியமணவாளனுக்கு
நெஞ்சு தன்னால்–பாவநா வ்ருத்தியாலுங்கூட
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
அயர்க்கின்றேன்–அநர்த்தப்படா நின்றேன்.

ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது
வாநரவீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைக் கண்ட அணிற்பிள்ளைகள்
‘இவ்வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே கிஞ்சித்கரித்தால்
நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறது கிஞ்சித்கரிப்போம்’. என்றெண்ணி,
எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது,
உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலே கொண்டு உதறுவதாய்
இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு;
அதனை அருளிச்செய்கிறார் முன் இரண்டடிகளில்.

வாநரங்கள் போலவும் அணிற்பிள்ளைகள் போலவும் சரீர ச்ரமப்பட்டு ஒருகைங்கரியமும் செய்யமுடியாமற் போயினும்,
நெஞ்சாலேயாவது எம்பெருமானை நினைத்து அவ்வழியாலே பகவத் கைங்கர்யபரர்களில் ஒருவனாக நிற்கலாமே;
அதுவுமில்லாமல் என் அருமருந்தன்ன மானிடப் பிறவியைப் பாழே போக்கினேனே! என்று கதறுகின்றார் பின்னடிகளில்.

27-குரங்குகள்
குரங்குகள் பன்மை – மலையை – ஒருமை -நூக்க
மலைகளால் கடலைத் தூர்கிற இடத்திலே மலைகளுக்கு தொகை உண்டாய்
ஸ்ரீ வானர வீரர்களுக்கு தொகை இல்லாமையாலே
ஒரு மலையை அநேகர் கூடத் தொட்டுக் கொண்டு வருவார்கள் யாய்த்து
ஒரு மலை ஒருவருக்கு பாத்தம் போராதபடி பெரு மிடுக்கராய் இருக்கச் செய்தேயும்
உபாத்யாய ருசி போலே எல்லாரும் கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் நிறம் பெற வேணும் என்று இருக்குமவர்கள் ஆகையால்
இப்படிச் செய்கிறார்கள் ஆய்த்து
ஸ்வரூப ஞானம் உடையாரோடு இல்லாதாரோடு வாசி அற
துரும்பு எழுந்து ஆடும் படி இறே
அடிமை கொள்ளுகிறவர் கையும் வில்லுமாய் நின்ற நிலை –
நெஞ்சாலும் நினைக்க வில்லை
அருமருந்தன்ன மானிடப் பிறவியை பாழே போக்கினேன்
குரங்குகள் அணில்கள் கைங்கர்யம் ஆழ்வார்களுக்கு காட்டிக் கொடுத்து அருளினான்

———————————————————————-

மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான்
“நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே அரைகுலையத் தலைகுலைய
மடுவின்கரையிலே ஓடிவந்தவனன்றோ எம்பெருமான்;
இப்படி ஆச்ரித ஸுலபனாய் ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல்
நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ?
ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரமநிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்;
இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்;
‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப் பெறாத பாவியேன் ஏதுக்காக
ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி –28-

உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே–28-

பதவுரை

உம்பரால் அறியல் ஆகா ஒளி உளார்–தேவர்களாலும் (இவ்வகை யென்று பரிச்சேதித்து) அறிய முடியாத
தேஜோ மயமான பரமபதத்தை விபூதியாகவுடைய எம்பெருமான்
ஆனைக்காகி–கஜேந்திராழ்வானுக்காக
செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி–சிவந்த மாம்ஸத்தை புஜித்து வாழ்கிற முதலையின் மேலே சீற்றங்கொண்டு
வந்தார்–(மடுவின் கரையிலே) எழுந்தருளினார்.
(இப்படி ஆச்ரித பக்ஷபாதியாய் ரக்ஷிக்குமவனிருக்க;)
நம்பரம் ஆயது உண்டே–(நம்முடைய ரக்ஷணத்தில்) நமக்கொரு பளுவுண்டோ?
நாய்களோம் சிறுமை ஓரா–நாய்போல் நிக்ருஷ்டரான நம்முடைய தண்மையை ஆராயாதவரான
எம்பிராற்கு–எம்பெருமானுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யப்பெறாமல் (இருக்கிற நான்)
என் செய்வான் தோன்றினேன்–எதுக்காக பிறந்தேன்!

பரமபதத்தை ஒளி என்ற சொல்லாற் கூறியது வடமொழி வேதப்ரக்ரியையை அடியொற்றியாம்.

“செம்புலாலுண்டு வாழும்” என்று
முதலைக்கு இட்ட அடைமொழியின் கருத்து என்னென்னில்;
“திர்யக்ஷு நைவஹி விபக்ஷதயோபசார:” (அதிமாநுஷஸ்தவம்) என்றபடி
எதிரியாக நினைக்கவும் தகாத ஒரு ஹீநஜந்துவை எதிரியாக்கி அதன் மேல் கோபங்கொண்டது
ஆச்ரித பக்ஷபாதத்தலான்றோ என்னுங் கருத்து வெளிவரும்.

நம்பரம் – பளுவு என்னும் பொருளதான பர: என்ற வடசொல் பரமெனத் திரிந்தது.
“ந்யஸ்ய த்வத் பாதபத்மே வரத நிஜபரம் நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மீ” என்று அநுஸந்திப்பது
அறிவுடையார் செயலாதலால் நமக்குப் பரமான தொன்றுமில்லை யென்க.

28-உம்பரால்
ஆஸ்ரித சுலபன்
ஆஸ்ரித பஷபாதன்
செம்புலால் உண்டு வாழும்-நீர் புழு – ஹீன ஜந்துவை எதிரியாக்கி

——————————————————————-

தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து விசாரமற்றிருப்பதற்கு
இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது–29-

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே–29-

பதவுரை

பாரில்–இந்தப் பூமியிலே
ஊர் இலேன்–தேவரீர் உகந்திருக்கும் திருப்பதிகளிலே பிறக்கப் பெற்றிலேன்;
காணி இல்லை–(திருப்பல்லாண்டு பாடுகை முதலானவற்றுக்காக விடப்பட்ட) காணியாட்சியும் எனக்கில்லை;
உறவு இல்லை–பந்துக்களுமில்லை;
மற்று ஒருவர் இல்லை–தோழன்மார் முதலானவர்களும் ஒருவருமில்லை.
நின் பாதம் மூலம்–தேவரீருடைய திருவடிகளையும்
பற்றிலேன்–(தஞ்சமாகப்) பற்றாதவனா யிராநின்றேன்;
பரமமூர்த்தி–மிகச் சிறந்தவனே!
கார் ஒளி வண்ணனே–மேகத்தின் காந்திபோன்ற மேனி நிறமுடையவனே!
கண்ணனே–ஸ்ரீ க்ருஷ்ணனே!
கதறுகின்றேன்–(வேறு புகலற்று உன்னையே) கூப்பிடா நின்றேன்;
அம்மா–ஸ்வாமிந்!
அரங்கமா நகருளானே!-;
களை கண் ஆர் உளர்–(உன்னை யொழிய வேறு ரக்ஷகர் யார் இருக்கிறார்!

ஊரிலேன் –
வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில்
முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.
அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!

காணி யில்லை.–
திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதர போஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால்
அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்ய தேவ ஸேவை கிடைக்கக்கூடும்
அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.

இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில்
பந்துக் ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப் போகவும் அதடியாக பகவத் ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு;
அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.
ஆன பின்பு ஒரு வழியிலும் உன்னைப் பெற உபாயமில்லாமையாலே
“ நின்பாத மூலம் பற்றிலேன்” என்கிறார்.

இப்படி ஒரு கைம்முதலுமில்லாதவனென்ற காரணத்தினால் என்னை நீ விடலாகாது;
கெட்டுப் போன உடைமையைப் பெறுவதற்கு உடையவன் முயற்சி செய்யுமா போலே கெட்டுப்போன
அடியேனைப் பெறுவதற்கு நீர் முயல வேண்டும்படியான இங்கொழிக்கவொழியாத உறவு இருப்பதை
நோக்கவேணுமென்கிறார், பரமமூர்த்தி என்று தொடங்கி.

29-ஊரிலேன்
திவ்ய தேச ஜன்மமும் இல்லை
யாத்ருசிகமாக திவ்ய தேச சேவை பெற காணியும் இல்லை
உறவுகளும் இல்லை
உன்னைப் பற்றினேன் நீ பரம மூர்த்தி
ஒழிக்க ஒழியாத உறவு உண்டே

—————————————————————————–

“குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே
தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும்,
ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்;
அப்படி உண்டோ?” என்று கேட்க;
நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே
என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை!
எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார்–

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே–30-

பதவுரை

புனம் துழாய் மாலையானே–தண்ணிலததிலே வளர்ந்து செவ்விதான திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே!
பொன்னி சூழ் திரு அரங்கா–காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள் பவனே!
என்னை ஆள் உடைய கோவே–அடியேனே அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே!
மனத்தில்–(என்) மநஸ்ஸிலே
ஓர் தூய்மை இல்லை–தெளிவு கொஞ்சமும் இல்லை;
வாயில் ஓர் இன் சொல் இல்லை–வாயிலே ஒரு நற்சொல்லும் கிடையாது;
வாளா–நிஷ்காரணமாக
சினத்தினால்–கோபத்தாலே
செற்றம் நோக்கி–பகைமை தோற்றப் பார்த்து
தீ விளி விளிவன்–மிகக் கொடுமையாக வார்த்தை சொல்லா நிற்பேன்;
எனக்கு–இப்படிப்பட்ட துர்க் குணங்கள் நிறைந்த எனக்கு
இனி கதி என் சொல்லாய்–இனி மேல் என்ன கதி? அருளிச் செய்ய வேணும்.

மனத்தில் ஓர் தூய்மை இல்லை —
காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும் பல துர்க்குணங்களில்
ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்த சுத்தி ஏற்படும்,
அப்படியுமில்லை யென்கை.

நெஞ்சு பூர்ணமாகக் கெட்டுப் போயிருந்தாலும் வாயில் நாலு நல்ல சொற்கள் வந்தாலாவது நாலுபேர் பார்த்து
‘இவன் நல்லவன்’ என்று சொல்லக்கூடும், இப்படியுமில்லை;
தப்பிப் போயும் ஒரு நல்ல வார்த்தை வாயில் வருவதில்லை.
ஒருவன் நல்லாடை யுடுத்து நால்வர்க்கு நல்லனாகத் திரிந்தானாகில் அவனுடைய அந்த மேன்மையைப்
பொறுக்க மாட்டாமல் நிஷ்காரணமாக நான் அவர்களைப் பழித்துக் கூறும் சொற்களுக்கு எல்லையேயில்லை.

இப்படி தமது தீமைகளைப் பரக்க உரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! பேற்றுக்கு ப்ரதிபந்தகம் எவ்வளவு வேணுமோ அவ்வளவும் உம்மிடத்தில் இருப்பதாகக் கூறுகின்றீர்;
இப்படிப்பட்ட உம்மை நான் என் செய்ய வல்லேன். உம்முடைய கரும பலனை நீர் அநுபவிக்கக் கடவீர்!” என்று
உபேக்ஷை தோற்ற அருளிச் செய்ய,

அதற்கு உத்தரமாகப் “புனத்துழாய் மாலை யானே” என்கிறார்;
நம்முடைய குறைகளைப் பார்த்து அகல வொண்ணாதபடி, ஒழிக்க வொழியாத உறவே
ஹேதுவாகக் கைப்பற்றக் கடவோமென்று காக்கு மியல்வினனாயிருக்கு மிருப்புத் தோற்றத்
தனி மாலை யிட்டிருப்பவரன்றோ தேவரீர்;
நாங்கள் கரும பலனை அனுபவிப்பதற்கு நீர் தனி மாலை யிட்டுக் கொண்டிருப்பானேன்? என்கை.

30-மனத்திலோர்
ந நிந்திதம் கர்த தஸ்தி லோகே சஹச்ர சோயன் நமயா வ்யதாயி –ஆளவந்தார்
எல்லா தீமைகளும் என்னிடம் உள்ளன என்கிறார் இது முதல் ஐந்து பாசுரங்களால்
சினத்தினால் செற்றம் நோக்கி
ஓராளும் ஓர் நோக்கும் நேராக வாய்த்து பார்ப்பது
க்ரூரமாய் பார்க்கும் பார்வை
புனத் துழாய் மாலையானே
என்னைப் போல்வாரை ரஷிக்க தானே தனி மாலை சாத்தி உள்ளீர்

————————————————————————————

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே–31-

பதவுரை

அரங்கமா நகருளானே!–;
தவத்துளார் தம்மில் அல்லேன்–தபஸ்ஸை அனுஷ்டித்தவர்களில்
தனம் படைத்தாரில் அல்லேன்-(ததீயாராதனம் முதலியவற்றுக்காகப்) பொருள் ஸம்பாதித்தவர்களிலும் சேர்ந்தவனல்லேன்;
என்றன் உற்றவர்க்கு–என்னைச் சேர்ந்தவர்களுக்கு
உவர்த்த நீர் போல–உப்புத் தண்ணீர் போல
ஒன்றும் அல்லேன்–ஒன்றுக்கும் உதவாதவனாயிரா நின்றேன்.
துவர்த்த செவ்வாயினார்க்கே–பழுப்பேறின அதரத்தையுடைய மாதர்கட்கும்
துவக்கு அற–ஸம்பந்தம் அற்றுப் போம்படி
துரிசன் ஆனேன்–கள்ளனாயினேன்
(இப்படிப்பட்ட எனக்கு)
பிறவி அவத்தமே தந்தாய்–ஐந்மத்தை வ்யர்த்தமாகவே கொடுத்தாய்

தவமாவது – சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்;
முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம் புரிவர்கள்;
புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்;
நான் ஒருவிதமான தவமும் செய்திலேன்.

ஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார் ‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால்.
“பொருள் கை யுண்டாய்ச் சொல்லக் காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி – கூ- க-ங) என்றபடி
கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற கருத்துடன்
இரண்டாமடி அருளிச்செய்கிறார்.
உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக் கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி
கரிக்குமாபோலே என்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.

இப்பாசுரத்திற்கு உள்ளுறை பொருள் :-
(தவத்துளார் இத்யாதி)
உன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு விரோதியாக நான் ஒரு ஸ்வ ப்ரவ்ருத்தியும் செய்யவில்லை:
கையில் காசுள்ளவனாயிருந்தேனாகில் ஆகிஞ்சந்யத்தில் குறையுடையேனாவேன்; அங்ஙனுமில்லை;
அகிஞ்சநர்களில் தலைவனாயிராநின்றேன்.
கொண்டபெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவர் என்ற ஆபாஸபந்துக்களோடே போதுபோக்காநின்றேனாகில்
“சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்னும்
நிலைவாய்ந்த பிறகு நாம் கைப்பற்றுவோமென்று நீ ஆறியிருக்கலாம்; அங்ஙனுமில்லை:
பந்துக்களுக்கு என்னால் ஆகக் கூடிய நன்மை ஒன்றுமில்லாமையாலே அவர்கள் என்னை விட்டொழிந்தனர்;
சேலேய்கண்ணி யரிடத்தும் நான் கள்ளனாய்ப் போந்தபடியாலே அவர்களும் என்னைத் துரத்திவிட்டனர்.
இனி உன்னுடைய விஷயீகாரம் இடையூறின்றி உள்புகுரலாமென்றவாறு.

இந்த உள்ளுறை பொருளுக்கு நான்காமடியோடே ஸங்கதி எங்ஙனேயென்னில்:
இப்படி உன் விஷயீகாரத்திற்கு நான் உசிதனுயிருக்கச் செய்தேயும் என்னை நீ உபேக்ஷிப்பதால்
என்னை நீ வீணே படைத்தாயிறே என்கிறார்.
அவத்தம் -அவத்யம் என்ற வடசொல் விகாரம்.

31-தவத்துளார்
தனம் படைத்தாரில் அல்லேன்
களவு கண்ட பணத்தால் பகவத் ஆராதனம் செய்தேன் அல்லேன்
தண்மைக்கு எல்லையான ஸ்திரீகளுக்கும் ஆகாதே
அவர்களாலும் பஹிஷ்கரிக்கப் பட்டேன்
நான் ஒருவனே என்கிறார் –
உன்னுடைய விஷயீ காரம் இடையின்றி உள்புகலாமே என்கிறார்

——————————————————————-

எம்பெருமான் ஆழ்வாரைநோக்கி “ஸம்ஸாரிகளுக்குங்கூட ஆகாதபடி அஸாரமான நீர்
என்னிடத்தில் வந்து நிற்பதேன்?” என்று கேட்க;
என்னுடைய மூர்க்கத் தனத்தாலே வந்து நின்றேன் காண் என்கிறார்–

ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கமொன் றறிய மாட்டா மனிசரில் துரிச னாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே-32-

பதவுரை

வண்டு ஆர்த்து அலம்பும் சோலை அணி–வண்டுகள் ஆரவாரம் செய்துகொண்டு அலைந்துகொண்டிராநின்ற சோலைகளாலே அழகு பெற்றிருக்கிற
திருஅரங்கம் தன்னுள்–ஸ்ரீரங்கத்திலே (பள்ளி கொண்டருளாநின்ற)
கார்திரள் அனைய மேனி கண்ணனே–மேகஸமூஹத்தை ஒத்த திருமேனியையுடைய பெருமானே!
உன்னை காணும் மார்க்கம் ஒன்று அறியமாட்டா–உன்னை ஸாக்ஷாத்தரிக்கக் கூடிய உபாயமொன்றையும் அறியமாட்டாதவனாய்
மனிசரில்–மனிதர்களுக்குள்
துரிசன் ஆய–கள்ளனாய்,
மூர்க்கனேன்–பிடித்தது விடமாட்டாத மூடனாகிய அடியேன்
வந்து நின்றேன்–(வேறு புகலற்று, தேவர் திருமுன்பே) வந்து நின்றேன்;
மூர்க்கனேன் மூர்க்கனேன்–என்னுடைய தண்மையை நன்றாகக் கடாக்ஷித்தருள வேணுமென்றபடி.

வண்டுகள் பலவகைப்பட்ட மலர்களிற் பெருகும் தேனைப் பருகுவதற்காகப் பேராரவாரம் செய்து கொண்டு
அலையா நிற்கப் பெற்ற சோலைகள் சூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலில்
காளமேகங்களெல்லாம்கூடி இங்ஙனே ஒரு உருவெடுத்துக்கிடக்கின்றனகொல் என்று சங்கிக்கும்படியாகப்
பரம போக்யமாய்ப் பள்ளிகொண்டருளாநின்ற பெருமானே!
தேவரீரை ஸாக்ஷாத்கரிக்கப் பெறும் உபாயம் இன்னதென்று அறியமாட்டாதவர்களில் பெருங்கள்ளனாகிய அடியேன்
என் நிலைமையை நினைத்துப் பார்த்தால் தேவர் திருமுன்பே வந்து நிற்கைக்கு யோக்யதையே இல்லை;
ஆயிருக்கச்செய்தேயும் யுக்தாயுக்தம் ஆராய மாட்டாத மூர்க்கனாகையாலே லஜ்ஜாபயங்களற்று வந்து நின்றேனென்கை.

அவனைக் காணும் மார்க்கங்களாவன :-
கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம், அவதாரஹஸ்யஜ்ஞானம், புருஷோத்தமவித்யை,
புண்யக்ஷேத்ரவாஸம், திருநாமஸங்கீர்த்தனம் முதலிய உபாயங்கள்.

32-ஆர்த்து வண்டு
கார்த்திரள் அனைய மேனி
தேன் வெள்ளத்தை கண்டு கடல் என்று மயங்கிய மேகம் பள்ளி கொண்டால் போல்
கண்ணனே
மேகத்தை விட வ்யாவ்ருத்தி
ஜலத்தை உதறிவிட்டு போகுமே மேகம்
சஜாதீயனாய் வந்து கிட்டி உபகரிக்குமவன்

அவனைக் காணும் மார்க்கங்கள்
கர்ம யோகம் ஞான யோகம் பக்தி யோகம்
அவதார ரஹச்யம் புருஷோத்தம வித்யை
புண்ய ஷேத்திர வாஸம் திருநாம சங்கீர்த்தனம் போல்வன

——————————————————————

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி கதறி தேவரீர் உடைய கருணை யொன்றைய
எதிர்பார்திருப்பவனடியேன் என்கிறார்–

மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே–33-

பதவுரை

மெய்எல்லாம்–மெய்யான (நினைவு, சொலவு, செயல் ஆகிய ) எல்லாவற்றையும்
போகவிட்டு–நீக்கிவிட்டு
விரி குழலாரில் பட்டு–விரிந்த கூந்தலையுடைய மாதர் திறத்தில் ஆழங்காற்பட்டு (அகப்பட்டு)
பொய் எல்லாம்–எல்லாவிதமான பொய்களையும்
பொதிந்து கொண்ட–நிறைத்துக் கொண்டிருக்கிற
போழ்க்கனேன்–க்ருத்ரிமனான அடியேன்
ஐயனே–ஸ்வாமின்!!
அரங்கனே!-;
உன் அருள் என்னும் ஆசை தன்னால்–தேவரீருடைய க்ருபையிலேயுண்டான ஆசையினாலே
வந்து நின்றேன்-;(நான் எப்படிப்பட்டவனென்றால்)
பொய்யனேன் பொய்யனேன் பொய்யனேன்–மனமொழி மெய்களாகிற மூன்று கரணங்களிலும் பொய்யன்;
வந்து நின்றேன்–(தேவர் திருமுன்பே வெட்க மற்று) வந்துநின்றேன்.

மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப்பெற்ற உத்தமாதிகாரியாய்
இருக்க முடியாமற்போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்;
அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை;
விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிரா நின்றேன்.
ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற
விச்வாஸமொன்று மாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால் அக்கருணையிலுள்ள நசையாலே,
வெட்கமும் அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார்.

போழ்க்கன் – முறைகேடன், வழிதப்பினவன். ‘போட்கன்’ என்றலுமுண்டு

33-மெய்யெல்லாம்
விசுவாசம் உள்ளதால்
வெட்கமும் அச்சமும் இன்றி
திருமுன்பே வந்து நின்றேன்

——————————————————————-

உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே–34-

பதவுரை

உள்ளத்தே உறையும் மாலை–நெஞ்சினுள்ளே வாஸஞ்செய்கிற எம்பெருமானாகிய உன்னை
கள்ளத்தேன் நானும்–கள்ளனாகிய அடியேனும்
தொண்டுஆய்–(உன்) அடிமையிலேயே அந்வயித்தவனாய்
தொண்டுக்கே கோலம் பூண்டு–அவ்வடிமைக்கு உரிய வேஷங்களை அணிந்து
(இருந்தபோதிலும்)
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்–சிந்திப்பவர்கள் சிந்திப்பதெல்லாவற்றையும்
உள்ளுவான்உணர்வு ஒன்று இல்லா–சிந்திப்பதற்குறுப்பான அறிவு சிறிதும் இல்லாத
உடன் இருந்து அறிதி என்று–நீ கூடவேயிருந்து அறிகின்றாரென்று
(நான் உணர்ந்து)
நான்–நான்
என் உள்ளே–எனக்குள்ளே
வெள்கிப்போய்–மிகவும் வெட்கப்பட்டடு
விலவு அற சிரித்திட்டேன்–விலாப்பக்கத்து எலும்பு முறியும்படி சிரித்தேன்.
தொண்டுக்கே கோலம் பூண்டு–வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேன் என்று அந்வயம்.

நாம் ஓரிடம்தேடி ஓடவேண்டாதபடி நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து நெருங்கியிருக்கிற
உன்னைச் சிந்தைசெய்வதற்கு ஏற்ற அறிவு இல்லாத ஆத்மாபஹாரக் கள்ளனாகிய அடியேன் உனக்கு
அடிமை செய்பவன்போலத் தோன்றி “இவன் பரமபாகவதன், பரமபக்தன்” என்று கண்டாரடங்கலும் புகழும்படியாக
“தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி
கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்தபோதிலும்

“இன்னாரின்னார் இன்னது நினைக்கிறார்கள்” என்று எல்லாருடைய நினைவையும் நீ நெஞ்சினுள்ளேயே
இருந்துகொண்டு அறிகின்றாயென்று உனது ஸர்வஜ்ஞத்வத்தை நான் அநுஸந்தித்தவாறே
‘ஐயோ! நமது கள்ளவேஷம் வெளிப்படையாயிற்றே!’ என்று வெட்கமடைந்து எனக்குள்ளேயே
நான் சிரித்துக்கொண்டேனென்கிறார். –

ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே” என்ற கருத்து ஈற்றடியில் உறையும்.
விலவறச் சிரித்திட்டேன் என்றது – எல்லை கடந்து சிரித்தமையைக் கூறியவாறு.

34-உள்ளத்தே
தொண்டுக்கே கோலம் பூண்டு வெள்கிப் போய் என்னுள்ளே விலவறச் சிரித்திட்டேனே
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி
வேஷ தாரி தொண்டன் தொண்டுக்கே கோலம் பூண்டேன்

————————————————————————-

கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி,
“இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க
ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது
அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று
தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமைகொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை
இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய;
அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச்செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி,
“பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக்கூறி,
எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை நினைத்தலும் தொழுதலும் செய்யாத
தமது தன்மையை வெளியிடுகின்றனர்–35-

தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே–35-

பதவுரை

அன்று–அக்காலத்தில் (த்ரிவிக்ரமாவதாரத்தில்)
உலகம் எல்லாம் தாவி–எல்லா உலகங்களையும் கடந்து
தலைவிளாக்கொண்ட எந்தாய்–(திருவடியினால்) வியாபரித்த எமது ஸ்வாமியே!
செங்கண்மாலே–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே!
ஆவியே-(எனது உயிர்தரித்திருப்பதற்குக் காரணமான) பஞ்சப்ராணவாயுவானவனே!
அமுதே-அம்ருதம் போன்றவனே!
என்தன் ஆர் உயிர் அனைய எந்தாய்-(என்னை நல்வழியிற்செல்வித்த எனது அருமையான ஆத்மாவைப் போன்ற எனது தலைவனே!
பாவியேன்-பாவியாகி யான்
சிக்கென-உறுதியாக (எப்போதும் விடாமல்)
உன்னை அல்லால் சேவியேன்–உன்னைத்தவிர (மற்றையோரை) வணங்கமாட்டேன்;
(உன்னையல்லாது வேறொருவரை)
பாவியேன்
நினைக்கவும் மாட்டேன்
பாவியேனே-நான் பாவியனேயாவேன்.

35-தாவி யன்று –
சிக்கென கொண்டார்
பாவியேன் -விலகி போனேனே வெறுத்துக் கொண்டு
உன்னை விடேன் என்றதும் செங்கண் மால் ஆனான்

————————————————————————————-

பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரைபுரண்டு பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார்

மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதேஉன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே–36-

பதவுரை

அன்று-(இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடா மழை பெய்வித்த) அக்காலத்திலே
முன்-(பசு முதலியவை மழையினால் கஷ்டமடைவதற்கு) முன்பாகவே
மழைக்கு-மழையைத் தடுப்பதற்காக
வரை ஏந்தும் மைந்தனே–கோவர்த்தன பர்வதத்தை (கையில் குடையாக) ஏந்திய மிடுக்கை யுடையவனே!
மதுர ஆறே–இனிய ஆறுபோல் எல்லார்க்கும் விடாயைத் தீர்ப்பவனே!
உழை கன்றுபோலநோக்கம் உடையவர்–மான் குட்டியின் விழிபோன்ற விழியையுடைய மாதர்களின்
வலையுள்–(அந்த நோக்காகிற) வலையினுள்ளே
பட்டு–அகப்பட்டு
உழைக்கின்றேற்கு என்னை–துடிக்கிற என்னை
நோக்கா தொழிவதே-கடாக்ஷியாம லிருப்பதும் தகுதியோ?
ஆதி மூர்த்தி–முழுமுதற் கடவுளே!
அரங்கமா நகருளானே!-;
உன்னை அன்றே-தேவரீரை நோக்கியன்றோ
அழைக்கின்றேன்–நான் கூப்பிடாநின்றேன்.

இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழுநாள் விடாமழை பெய்வித்து வருத்தப்படுத்தின காலத்தில்
கோவர்த்தநகிரியைக் கொற்றக்குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ;
அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் என்ன குணம் கண்டுபிடித்தாய்?
அவ்விடையருடைய கோஷ்டியிலாவது பசுக்களின் திரளிலாவது அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா?
என்னும் இரக்கப்பொருள் தோன்ற மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார்.

மதுர ஆறே! –
ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்த போதிலும் உன்னைவிட முடியவில்லையே! என்பது கருத்து.
ஆறானது ஏரி, குளம் முதலியவைபோலே ஒரிடத்திலேயே இராமல் நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல்
எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம் போய் ஸேவை ஸாதிததருள்கின்ற ஸௌலப்யமும்
இந்த முற்றுவமையால் தோற்று மென்க.

“உன்னையன்றே யழைக்கின்றேன்” என்றவாறே எம்பெருமான்
“ஆழ்வீர்! நீர் அழைத்தவுடனே நான் ‘ஏன்?’ என்ன வேணுமோ? என்ன ஆவச்யகதை? என்று கேட்க,
ஆதிமூர்த்தி என்கிறார் –
இவ்வுலகம் உருமாய்ந்துகிடந்த காலத்திலே ஒருவருடைய அபேக்ஷையும் எதிர்பாராமல்
இவற்றை உண்டாக்கின உனக்கு இவற்றின் ரக்ஷணம் அவச்ய கர்த்தவ்யமன்றோ என்கை.

36-மழைக்கு அன்று
பேற்றுக்கு துடித்து கதறுகிறார்
ஆநிரை இடையரில் ஒருவன் போலே கொள்ளாய்
மதுரவாறு சௌலப்ய நதி அடியார்கள் இடம் தேடி பெருகி
ரஷிக்கா விடிலும் விட ஒண்ணாத மதுரம் உண்டே
ஆதி மூர்த்தி
உழைகின்றேற்கு-துடிக்கிற என்னை

——————————————————————————————

தாம் இப்படி கதறாநிற்கச் செய்தேயும் பெரியபெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே,
தம்மையொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ?
ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ? ‘
நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமாயிருக்க
இவ்வளவுகூட அபிமாநியாமல் கூக்குரல் கேட்டுக்கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே!
இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார்–

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே–37-

பதவுரை

தெளிவு இலா கலங்கல் நீர் சூழ்–(ஒரு காலும்) தெளிவில்லாமல் கலக்கம் மாறாதிருக்கிற காவேரியாலே சூழப்பெற்ற
திரு அரங்கத்துள்–கோயிலிலே
ஓங்கும்–விஞ்சியிருக்கிற
ஒளி உளார் தாமே அன்றே–தேஜஸ்ஸை உடையவரான அழகிய மணவாளனொருனே யன்றே
தந்தையும் தாயும் ஆவார்-(நமக்குத்) தகப்பனும் தாயுமாயிருப்பர்;
என் திறத்து–(அவர்) என் விஷயத்தில் (செய்தருள வேண்டுவது)
எளியது ஓர் அருளும் அன்றே–ஸாமான்யமான ஒரு க்ருபா மாத்திரமேயன்றே?
எம்பிரானார்–எனக்கு உபகாரகரான அவர்
நம் பையல் அளியன் என்னார்-“நம்முடைய பையலான இவன் நமது கருணைக்கு உரியன்” என்று திருவுள்ளம் பற்றுகிறாரில்லை;
அம்ம ஓ கொடிய ஆறே–கொடுமையா யிராநின்ற தீ!

காவேரிக்குத் தெளிவில்லாமை-
மேன்மேலும் பெருக்கு மிக்கிருக்கையாலே.
இத்தெளிவில்லாமையை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஒரு சமத்காரம் தோற்ற வருணிக்கிறார் –
“துக்தாப்திர்ஜநகோ ஜந்ந்யஹமியம்” இத்யாதி ச்லோகத்தால் .
அதன் கருத்து-பாற்கடல் தகப்பனார்; பொன்னி என்ற நான் தாய் ; ஸ்ரீரங்கநாய்ச்சியார் பெண்;
பெரிய பெருமாள் மணவாளன்; இந்த விஷயத்திலே பெரிய பெருமாளுக்கும் பெரியபிராட்டியார்க்கும் தகுதியாக
நான் என்ன பண்ணப்போகிறேன்? என்று கலங்கினாற்போல,
சாமரம், கருப்பூரம், சந்தநவ்ருக்ஷங்கள், சிறந்த ரத்நங்கள், முத்துக்கள் முதலியவற்றை
அலைகளாகிற கைகாலே உந்தா நின்று கொண்டு ஆழ்ந்து வருகிற காவேரியைப் பற்றுங்கள் என்பதாம்.

திருவரங்கத்துள் ஓங்குமொளியுளார் என்றது –
பரமபதம் முதலிய இடங்கில் எழுந்தருளியிருக்கு மிருப்பைக்காட்டிலும்
கோயிலிலே எழுந்தருளியிருக்கு மிருப்பிலே உள்ள அதிசயம் தோற்ற.

விபீஷணாதிகிளை ரக்ஷித்தாற்போலே வில்லும் கோலுமெடுத்து ரக்ஷிக்க வேண்டியதில்லை;
குளிர ஒருகால் நோக்கியருளினால் என்தாபம் தீரும் என்ற கருத்துப்பட அருளிச் செய்கிறார்
எளியதோரருளுமன்றே என்திறத்து என்று.

எம்பெருமான் சோதி வாய் திறந்து ‘ ஆழ்வீர்’ என்றழைக்க வேணுமென்று இவர் ஆசைப்படுகின்றாரில்லை,
‘அடே பையா’ என்று ஒரு இன்சொல் சொல்லக் கேட்க விரும்புகின்றாரித்தனை.

37-தெளிவிலாக் கலங்கல் நீர்
துக்தாபிர் ஜனகோ ஜனன் யஹமியம் -பட்டர்
கலக்கம் மாறாத காவேரி
திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுளார்
பரமபதத்தில் ஒளி பகல் விளக்கு என்னும் படி யாய்த்து
அந்தகாரத்தில் தீபம் போலே குறைவாளரான சம்சாரிகளுக்கு
உதவப் பெற்ற பின் ஒளி மிக்கு இருக்கிறபடி
நித்ய ஸூரிகளின் நடுவே இருக்கிறபோது ஆதித்யர்கள் நடுவே ஆதித்யன் இருக்குமா போலே யாய்த்து
இங்கு ஆர்த்தர் மிகவும் உண்டாகையாலே
தத் ரஷணம் பண்ணி ஒளியும் மிகா நிற்கும் அத்தனை
ஓங்கும் –ஓங்கிய ஓங்குகின்ற ஓங்கி கொண்டே இருக்கின்ற –
விபீஷணாதிகளை ரஷித்தால் போலே வில்லும் கோலும் எடுக்க வேண்டியது இல்லையே
குளிர ஒருகால் நோக்கி அருளினால் போதுமே
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து
குறையை முறையிடும் போது நிந்திக்காமல் எம்பிரானார் என்றது
நன்றி பாராட்டி -முறையை -ஸ்வரூபம் உபாய உபேயங்கள் -உணர்த்தி ருசி உண்டாக்கி
கூப்பீடு கேட்க அவகாசம் கொடுத்து அருளும் உபகாரகன் இல்லையா
அடே பையா ஒரு சொல் போதுமே அளியல் நம் பையல் –

———————————————–

“அளியனம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே
“இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும்
அதற்காக நம் கைபார்த்திருப்பதும்
அதுக்குமேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறதே!
இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று
பெரியபெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய்,
அந்த ப்ரஸாதமெல்லாம் திருமுகத்திலே தோற்றும்படி யிருக்கக்கண்ட ஆழ்வார்,
“பெருமானே! தேவரீரைக்கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வபாரங்களையும் ஸமர்பித்து
நிச்சிந்தையாயிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று
பெரியபெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்–

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்துவாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே–38-

பதவுரை

புனல் சூழ் அரங்கத்தானே–காவிரி சூழ்ந்த கோயிலிலே கண்வளர்ந்தருளுமவனே!
மேம்பொருள்–(ப்ராக்ருத ஜநங்கள்) விரும்புகிற லெளகிக பதார்த்தங்களை
போக விட்டு–வாஸகையோடு விட்டிட்டு
மெய்ம்மையை–ஆத்மஸ்வரூபத்தை
மிக உணர்ந்து–உள்ளபடி அறிந்து
ஆம் பரிசு–ஸ்வரூபாநுரூபமான ஸமாசாரங்களையும்
தெரிந்துகொண்டு–அறிந்துகொண்டு
ஐம்புலன்–ஐந்து இந்திரியங்களையும்
அகத்து அடக்கி–(விஷயாந்தரங்களில் போக வொட்டாமல்) தம்முள்ளே பதிய அடக்கி,
காம்பு அற–அடியோடே
தலை சிரைத்து–தன் தலையிலுள்ள சுமையைத் தொலைத்து
உன் தலைக்கடை இருந்து–உனது திருவாசலிலே (காவலாளராக) வாஸஞ்செய்து
வாழும்–உஜ்ஜீவிக்கின்ற
சோம்பரை–(தம்முடைய ஹிதத்தில்) சோம்பியிருக்குமவர்களை
உகத்திபோலும்–உகக்குமவனல்லையோ நீ.

மேம்பொருள் என்பதற்கு
மேலெழுந்த பொருளென்றும், மேவின பொருளென்றும், மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும்,
மூன்றுபடியாக நிர்வாஹம்;
கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே விட்டகலும்படியாயிருக்கும் பொருள்-
மேலெழுந்த பொருள் எனப்படும். அதாவது ஸம்ஸாரஸம்பந்தம்.

மேவின பொருளாவது-
சிக்கன ஒட்டிக்கொண்டிருக்கும் பொருள்; சேதநனால் பிரிக்கவெண்ணாதபடியிருக்கை. அதாவது
தேஹஸம்பந்தம், அவித்யா ஸம்பந்தம். மேம்பாட்டை விளைக்கையாவது- தன்னைப் பற்றினாரை
ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.
அப்படிப்பட்ட பொருளாவது-
ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்; ஆகிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.
தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதாபுத்தி
தேஹத்திற்காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரியபுத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.

அதற்குமேல் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி உணரவேணும்:
அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன், நித்யன், உணர்வைக் குணமாகவுடையவன்: அணுபரிமாணன்,
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன், அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன்
என்றிங்ஙனே விரிவாக உணருகை.

ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த பிறகு பின்னையும்
ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது -கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை.

ஐம்புலனகத்தடக்குகையாவது-
எம்பெருமானுக்குப் பண்ணும் கைங்கரியத்தில் ஸ்வப்ரயோஜநத்வபுத்தி பிறவாதபடி நோக்குகை.
“தனக்கேயாக எனைக்கொள்ளுமீதே” என்றபடி.
எம்பெருமானுக்கே இனிதாகப் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஸூக்ஷ்மார்த்தம் இங்கு உணரத்தக்கது.

காம்பு அறத் தலைசிரைத்து –
உபாயாந்தரங்களில் தனக்குள்ள பற்று அறும்படி தன் தலையிலுண்டான துரிதங்களைப்போக்கி.
அதாவது பேற்றுக்கு எம்பெருமான் ஸாதநமே யொழிய நாம் செய்யும் க்ரியாகலாபங்களொன்றும் ஸாதநமல்ல என்று
உறுதியான அத்யவஸாயம் வஹித்து என்றபடி. அஹங்கார கர்ப்பமான உபாயாந்தரங்களின் விடுகையைச் சொன்னபடி.

இப்படி பரமைகாந்திகளாய் எப்போதும் உன் திருவாசலையே பற்றிக்கிடந்து வாழுஞ் சோம்பராகிய
பரமபாகவதர்கள் விஷயத்திலே தேவரீர் திருவுள்ளம் உப்ந்திருக்கும்படியே! என்று வியக்கிறபடி.

வாழும் சோம்பர் என்றது
கெடுஞ்சோம்பரை வ்யாவர்த்திக்கிறது.
கெடுஞ்சோம்பராவார் ஈச்வரனில்லை, சாஸ்த்ரமில்லை, பரலோகமில்லை என்றாற்போலே
எல்லாவற்றையும் இல்லை செய்து விஹிதகர்மங்களை அநுஷ்டியாமல் தோன்றிற்றுச் செய்து சோம்பேறிகளாய்த் திரிவார்.
வாழுஞ் சோம்பராவார்-
சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய்க் கர்த்தவ்யங்களை விடுகையன்றிக்கே ஆஸ்திகசிகாமணிகளாய் ஸித்தோபாயமான
எம்பெருமானை ஸ்வீகரித்து அவ்வெம்பெருமானுடைய அநுபவமே காலக்ஷேபமாய்த்
தமது ஹிதத்தைத் தாமே தேடிக்கொள்ளுவதில் சோம்பியிருப்பவர்கள்.

உகத்தி- முன்னிலையொருமை வினைமுற்று

38-மேம்பொருள்
மேல் எழுந்த பொருள் -கர்மம் அடியாக வந்தது -பகவத் விஷயீ காரம் வந்ததும் விலகும் சம்சார சம்பந்தம்
மேவின பொருள் -ஒட்டிக் கொண்டு -செதனனால் பிரிக்க ஒண்ணாத -தேக சம்பந்தம் அவித்யா சம்பந்தம்
மேம்பாட்டை விளைக்கும் பொருள் -தன்னை பற்றினாரை சர்வஞ்ஞராக அபிமானிக்க பண்ணும் -பிரகிருதி பிராக்ருத பதார்த்த சம்பந்தம்
மூன்று வகை நிர்வாஹம்
தேகாத்மா விவேகம் பிறந்து
மமதா புத்தி விட்டு ஒளிந்து
ஸ்வா தந்த்ர்ய புத்தி ஒழிகை
அடுத்து

ஆம்பரிசு அறிந்து கொள்ளுகை
ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்து ஸுயம் பிரகாசன் -நித்யன் -உணர்வை குணமாக கொள்பவன் -அணு –
அனன்யார்ஹ சேஷபூதன்-கைங்கர்யமே புருஷார்த்தன் என்று அறிகை
ஆத்மா அபிமான அனுரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது
தன்னை திர்யக்காக அபிமானித்த போது த்ருண சமூஹமாயிற்று வ்ருத்தி ஹேதுவாகக் கடவது
மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது அன்னம் வ்ருத்தி ஹேதுவாகக் கடவது
தேவோஹம் என்ற போது அம்ருதம் வ்ருத்தி ஹேதுவாகக் கடவது
தாசோஹம் என்ற போது கைங்கர்யம் வ்ருத்தி ஹேதுவாகக் கடவது
ஐம்புலன் அகத்தடுக்குகை இங்கு மற்றை நம் காமங்கள் மாற்று போலே
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
ஸ்வ பிரயோஜன புத்தி பிரவாதபடி நோக்குகை

காம்பற தலை சிரைத்து உபயாந்தரங்கள் கலசாத படி அஹங்கார கர்ப்பம் நீக்குகி
இப்படி வாழும் சோம்பர் கிடைத்ததும் மகிழ்ந்து உகக்கும் அவாப்த சமஸ்த காமன்
திருக்கண்ண மங்கை ஆண்டான்
தன நாயைக் கொன்றவனை கொன்று தானும் குத்தி மாய்ந்ததை கண்டு
ஒரு தேஹாத்மா அபிமானியான மனுஷ்யன்
இந்த நாய் நம் வாசலை பற்றிக் கிடந்தது என்ற காரணத்தாலேயே
அதன் மேல் இவ்வளவு பரிந்தால்
நாம் பரம சேதனான எம்பெருமான் வாசலைப் பற்றிக் கிடந்தால் யமாதிகள் கையில் நம்மை விட்டுக் கொடான் –
பத்தராவிப் பெருமாள் கோயில் வாசலிலே ஸ்வ வியாபாரங்களை எல்லாம் விட்டு சாய்ந்து அருளினார்

————————————————————————–

இனிமேல், கீழ்ப்பாட்டில் சொன்ன ஞானமுடைய பாகவதர்களின் வைபவம் கூறுகிறது.
எம்பெருமான் தன் திருவடித்தாமரைகளில் பக்திசெய்யாதவர்கள் உயர்குலத்திற் பிறந்தவர்களாயிருந்த போதிலும்
அவர்களை ஒருபதார்த்தமாகவும் நினையாமல் உபேஷித்துவிட்டு,
தனது திருவடிகளில் பகதி செய்பவர் மிகவும் இழிகுலத்தவராயினும் அவரையே விரும்புவன் என்கிறது இப்பாட்டில்–

அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே–39-

பதவுரை

முடியினில் துளபம் வைத்தாய்–திருமுடியிலே திருத்துழாய் மாலையை அணிந்தவனே
அரங்கம் மாநகர் உளானே!-:
அடிமையில்–(உனக்குக்) கைங்கரியம் செய்வதில்
குடிமை இல்லா–உயிர்குடிப் பிறப்பிற்கு ஏற்ற ஒழுக்கமில்லாத
அயல்-(அடிமைக்கு) அயலான
சதுப்பேதிமாரில்-நான்கு வேதங்களையு மோதின அந்தணர்களைக் காட்டிலும்.
குடிமையில் கடைமைபட்ட–குடிப்பிறப்பினால் இழிவடைந்த இழிமுலத்திற் (பிறந்த மிகவும்)
குக்கரில்-பரமசண்டாள ஜாதியில்
பிறப்பர் ஏனும்-பிறப்பர்களானாலும்
மொய் கழற்கு-(உனது) நெருங்கிய திருவடிகளிடத்து
அன்பு செய்யும்-பக்தி செய்கின்ற
அடியரை-அடியார்களையே
உகத்தி போலும்-நீ விரும்புவாய் போலும்

மேன்மைக்குக் காரணம் –
எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று.
அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்; இழிகுலப்பிறப்பு அன்று,
ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க.

குடிமை-குடிப்பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம்.
அயலாதலாவது ‘எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை.
அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள்
நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.

சதுப்பேதிமார் -சதுர் வேதிமார்;
இருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களை ஓதினவர்களென்கை.

குக்கர் – மிகவும் தாழ்ந்தவர் என்பது பொருள் (க்ஷுத்ர) என்ற வடசொல் குக்கர் எனத்திரிந்தது.
ஏனும்-எனினும் என்பதன் மரூஉ.

39-அடிமையில் பாகவத வைபவம் சொல்லும் இது முதல் மேல் பாட்டுக்களில்
தொண்டு பூண்டு ஒழுகுவதே மேன்மைக்கு காரணம்
அத்யயனத்துக்கு பலன் வேதத்தின் பொருள் உள்ளபடி அறிந்து நடப்பது தான் என்று
உணராதவர்கள் நான்கு வேதங்களிலும் வல்லராயினும் பலன் இல்லை
குக்கர் ஷூத்ரர்

———————————————————————————

தாழ்ந்த வகுப்பில் பிறப்பேயன்றி நீசமான அநுஷ்டாநமு முடையரேயாயினும்
“மேம் பொருள் போகவிட்டு” என்ற பாட்டிற்கூறிய அதிகாரத்திலே நிஷ்டையுடையராகில்
அவர்களுக்கு அந்தக் கருமங்களின் பலன் அநுபவிக்கக் கடவதல்ல என்கிறது, இப்பாட்டு–

திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே–40-

பதவுரை

திருமறு மார்ப–பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையும் திருமார்பிலே அணிந்துள்ளவனே
அரங்கமா நகருளானே!-;
மாநிலத்து உயிர்கள் எல்லாம்-(இந்தப்) பெரிய பூமண்டலத்திலே உள்ள ஜீவராசிகளெல்லாம்
வெருவு உற-(ஜகத் தெல்லாம்) நடுங்கும்படி
கொன்று சுட்டிட்டு-பரஹிம்ஸைபண்ணி
ஈட்டிய வினையர் எலும்–விசேஷமாக ஸம்பாதிக்ப்பட்ட பாவங்களையுடைய வர்களானாலும்
நின்னை சிந்தையில் திகழவைத்து-உன்னை (தங்கள்) நெஞ்சில் விளங்கும்படிவைத்து
மருவிய மனத்தர் ஆகில்-த்ருடமான அத்யவஸா யத்தை உடையராயிருப்பரேயானால் (அவர்கள்)
அருவினை பயன் அது உய்யார்–(தாங்கள் செய்த) மஹாபாதகங்களினுடைய பலனை அநுபவிக்கமாட்டார்கள்.

திருமகள் கொழுநனான எம்பெருமானே! என்னை இடைவிடாது நெஞ்சிலே அநுஸந்தித்திருப்பராகில்
அந்த ப்ரபாவத்தாலே அவர்களுடைய பரஹிம்ஸை முதலிய கொடியபாவங்களும்
தீயிலிட்ட தூசுபோல் உருமாய்ந்தொழியு மாதலால் அவர்கள் நரகங்களிலே புக்கு
அக்கருமங்களின் பலன்களான தண்டனைகளை அநுபவிக்கவேண்டிய ப்ரஸக்தியே யில்லை என்றவாறு.

40-திருமறுமார்பா –
நின்னை சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தராகில்
உபாயந்தரங்களை பற்றாமல்
பிரயோஜனாந்தரங்களில் பற்று இல்லாமல்
உபாயமும் உபேயமும் அவனே என்று இருக்காய்
மா நிலத்து உயிர் கள் எல்லாம் -இவ்விஷயத்துக்கு அதிகாரி நியமம் இல்லை ஜாதி நியமம் இல்லை

——————————————————————————

பகவத் ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு நீஹீந ஜந்மத்தாலும் நிஹீன அநுஷ்டாநத்தாலும்
ஒரு குறையுமில்லை யென்பது மாத்திரமேயல்ல;
அவர்கள் தங்களுடைய உச்சிஷ்டாந்நத்தாலே ஸம்ஸாரிகளையெல்லாம் பரிசுத்தராக்கும் படியான
பெருமை பொருந்தியவர்கள் என்பது இப்பாட்டு–

வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில்
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில்
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே–41-

பதவுரை

ஊனம் ஆயினகள் செய்யும்-தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும்.
ஊன காரகர்கள் ஏனும்-பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும்.
வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில்–மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாததேவனே, என்று அநுஸந்திப்பராகில்.
தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில்–‘தேன் பெருகா நின்ற திருத்துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்
(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்)
போனகம் செய்த சேடம்-தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை
தருவர் ஏல் அன்றே–அநுக்ரஹிப்பாரானால் அப்போதே
புனிதம்–(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.

தேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர்களுக்கு எம்பெருமானுடைய
ஸ்வரூபம் ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது.
“நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம். கடவர்களாயிருக்கிறோம்”
என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால்,
“அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை
அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க.

இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல்,
அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும்,
தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும்
அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி
இழி தொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள்.
அவ்வளவேயுமன்று; அவர்கள் தாங்கள முதுசெய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால்
அதனைப் பெற்று மற்றையோர் தூய்மை பெறலாம்படி அத்தனை பெருமை பொருந்தியவர்கள் காண் என்கிறது

41-வானுளார் அறியலாகா
உச்சிஷ்ட அன்னத்தாலே -அமுது செய்து கை வாங்கின கலத்தில் பிரசாதம் -சம்சாரிகளை பரிசுத்தராக்கும்
அறிவது அரியான்
அகிஞ்சனன் அநந்ய கதி
ஆச்சார்யா விஷயம் அன்ன சேஷம்
சேடம் -எச்சில் பண்ணி மிகுந்த பிரசாதம் ஆச்சார்யர் பக்கல் மட்டுமே

———————————————————————————-

உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே
ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார்நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி எம் பெருமான் கூறின வார்த்தை;-
‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப்போலே, ப்ரஹ்மாதொடங்கி நெடுகிவருகிற வம்சப்ரவாஹத்திலே பிறந்து
சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது;
எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழவேணும்;
பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக்கொள்ளலாம். விசேஷமாகச் சொல்வதேன்?
என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ, அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்”
என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே
“பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி
“தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ச்லோகங்களை நோக்குக–

பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே–42-

பதவுரை

மதில் திருவரங்கத்தானே!-;
ஒழுகல் ஆறு–பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில்
பழுது இலா–ஒருகுற்றமு மற்றிருக்குமவர்களாய்
பல சதுப்பேதிமார்கள்–நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே!
எம் அடியார்கள் ஆகில்-“நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்)
இழி குலத்தவர்களேனும்–தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும்
நீர்-நீங்கள்
தொழுமின்-(அவர்களைத்) தொழுங்கள்;
கொடுமின்-(உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்;
கொள்மின்-(அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள்
என்று-என்று உபதேசித்தருளி
நின்னோடும் ஒக்க-உனக்கு ஸமமாக
வழிபட-அவர்களை ஆராதிக்கும்படி
அருளினாய்-உரைத்தருளினாய்
(போல்-அசை).

ஆசார்ய ஹ்ருதயத்தில் -“ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவுக் கொடுத்துக்
குலதைவத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்”, என்னும்
ஸ்ரீஸூக்தியும் அதன் வ்யாக்யாந ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கக்கடவன

42-பழுதிலா
ஒழுகல் ஆறு பழுதிலா பல சதுப் பேதிமார்கள்
பிரமன் முதல் தங்கள் வரையில் நீண்டு வரும் பரம்பரையில்
ஒரு குற்றமும் அற்று இருக்குமவர்களாய்
நான்கு வேதங்களையும் ஒதினவர்களாயும் இருக்குமவர்களே
சதுப் பேதிமார்கள் -விளி சொல் இது எம்பெருமான் விளி
மேலே அரங்கத்தம்மானே ஆழ்வார் விளி
பரஸ்பரம் ஞானம் கொடுத்துக் கொண்டு
என்னைப் போல் கொண்டு ஆராதனம் செய்ய வேண்டும் என்கிறான் இவர்களை பார்த்து
மிலேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து
குலதைவத்தொடு ஒக்க பூஜை கொண்டு பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற
திருமுகப் படியும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி

——————————————————————————————

அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே–43-

பதவுரை

அரங்கமா நகருளானே!-;
ஓர் அங்கம் ஆறும்-(வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
ஓர் வேதம் நான்கும்–நான்கு வேதங்களையும்
அமர ஓதி-நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
தமர்களில் தலைவர் ஆய–பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
சாதி அந்தணர்களேனும்–ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
நுமர்களை–தேவரீருடைய ஜந்மத்தைப் பழிப்பர் ஆகில்
(அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
நொடிப்பது ஓர் அளவில்-ஒரு நிமிஷகாலத்துக்குள்ளே
அவர்கள் தாம்–அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
ஆங்கே–அப்போதே
புலையர்-சண்டாளராவர்கள்
(போலும்-வாக்யாலங்காரம்.)

ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு;
சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு;
இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து,
அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும் சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும்
அவர்கள், கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய
ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை) அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து
தூஷிப்பார்களானால் தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள்.
இப்படி போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.

43-அமர ஓர் அங்கம் ஆறும்
நுமர்களை பழிப்பர் ஆகில்
அவர்கள் தாம் ஆங்கே புலையர் சண்டாளர் ஆவர்
ஜன்மாந்தரத்தில் இல்லை
ஜென்மத்தை பார்த்து தூஷிப்பர் ஆகில்
நொடிப் பது ஓர் அளவில் -ஒரு நிமிஷ காலத்துக்குள் அந்த ஷணமே

——————————————————————————————

கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக
ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்;
சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்று
நெடுங்காலம் தவம்புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கிநிற்க்கும்படியாயிற்று;
கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.
அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது.
ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம்.

பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறாஉன்னை யென்னோ களைகணாக் கருது மாறே–44-

பதவுரை

பெண் உலாம் சடையினானும்–கங்காநதி உலாவுகின்ற சடையையுடையனான சிவனும்
பிரமனும்-நான் முகக்கடவுளும்
உன்னை காண்பான்-உன்னைக் காண்பதற்காக
எண் இலா ஊழி ஊழி-எண்ணமுடியாத நெடுங்காலமாக
தவம் செய்தார்–தவம் புரிந்தவர்களாய் (அவ்வளவிலும் காணப் பெறாமையாலே)
வெள்கி நிற்ப–வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருக்க
அன்று–அக்காலத்திலே
ஆனைக்கு-(முதலைவாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
வந்து–(மடுவின் கரையில்) எழுந்தருளி
விண் உளார் வியப்ப அருளை ஈந்த–நித்யஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரமக்ருபையைச் செய்தருளிய
கண்ணறாய்–(என்னிடத்து அருள் செய்யாமையாலெ) தயவில்லாதவனே!
உன்னை–உன்னை
களைகணா–தஞ்சமாக
கருதும் ஆறு என்னோ–நினைக்கலாகுமோ?

வெள்கிநிற்ப-
தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து தரையைக்கீறி நிற்கையில் என்கை.
அன்றியே,
வெள்கி நிற்ப-
வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம்.
ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.

அவர்களுக்கு வெட்கமாவது- ஐயோ! முதலையின் வாயிலே அகப்படாமல் தபஸ்ஸிலே இழிந்து என்ன காரியஞ்செய்தோம்!
என்றுபடும் லஜ்ஜை. அப்படி அவர்கள் லஜ்ஜைப்படும்படியாகவும் விண்ணுவார் ஆச்சரியப்படும்படியாகவும் வந்து என்க.

வியப்ப –
பரஹ்மாதிகள் நெடுங்காலமாக எதிர்பாராநிற்க அவர்களையும் எங்களையும் அநாதரித்து
ஒரு திர்யக்ஜந்துவின் காற்கடையிலே அரைகுலையத் தலைகுலைய ஓடிப்போய்விழுவதே! என்று
நித்யஸுரிகள் வியப்ப கண்ணறாய் ஸ்ரீ கண்ணறை யென்பதன் விளி.

“உன்னையென்னோ களைகணாக் கருதுமாறே” ஆச்ரிதபக்ஷபாதியான உன்னை ஜகத்துக்குப் பொதுவான
ரக்ஷகனென்று சொல்லுமவர்கள் மதிகேடரென்றுகிறார் (தேவாரம் தாநவா நாஞ்ச ஸாமாந்ய மதிதைவதம்’ என்கிற
பந்தம் கிடக்க சிலர்க்காகச் சிலரை அழிக்கிற இவனை ஸர்வரக்ஷகனென்று நினைக்கலாமோ?”
என்பது வ்யாக்யாநஸுக்தி.
களைகண்-ரக்ஷகம்

44-பெண்ணுலாம்
நீசமான திர்யக் ஜாதி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
விஷயீ காரத்துக்கு பாத்ரம் ஆனதே
ப்ரஹ்மாதிகள் நெடும் காலமாக எதிர்பாரா நிற்க
அவர்களையும் எங்களையும் -நித்ய சூரிகள் -அநாதரித்து
ஒரு திர்யக் ஜந்துவின் கால் கடையிலே
அரை குலைய தலை குலைய ஓடிப் போய் விடுவதே
என்று நித்ய சூரிகள் வியக்கும்படி
கண்ணறா உன்னை– கண்ணுறா உன்னை -இரண்டு பாட பேதம்
கண் தயவு அறா அது நித்யமாக பெற்ற உன்னை
தயவில்லா உன்னை பிந்தியபாடம்
அவன் உபகரித்த தசையிலே கண்ணுறா என்கிறது ப்ரீதி தலை மண்டை இட்டுச் சொல்லுகிற வார்த்தை -பெரியவாச்சான் பிள்ளை
முந்தின பாடம் வியாக்யானத்துக்கு சேராது
ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணுறா அத்யாபகர் -இதுசம்போதனமாய் இருக்கும்
கண்ணுறா உன்னை என்னோ நான்காம் அடி உடன் சேர்த்து
கண்ணறாய்-பிழை அற்ற பாடம் சிதைந்து கண்ணறா கண்ணுறா ஆயிற்று
உன்னை என்னோ களை கணா கருதுமாறே
ஆஸ்ரித பஷபாதியான உன்னை ஜகத்துக்கு பொதுவான ரஷகன் என்பர் மதிகேடர்கள்
தேவா நாம் தானவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிற பந்தம் கிடக்க
சிலர்க்காக சிலரை அழிக்கிற இவனை சர்வ ரஷகன் என்று நினைக்கலாமோ
களைகண் -ரஷகம்

——————————————————————

விசேஷ உணவுகளை யுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும் கம்ஸனது யானையை
ஒழித்தருளினாற்போலே தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து
பெரியபெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் —

வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே–45-

பதவுரை

வளம் எழும் தவளம் மாடம்-அழகு விஞ்சியிருப்பதும் வெண்ணிறமுடையதுமான மாடங்களையுடைய
மா மதுரைநகரம் தன்னுள்-பெருமை தங்கிய வடமதுரையில்
கவளம் மால் யானை கொன்ற-கவளங் கொண்டிருப்பதும் பெருத்ததுமான (குவலயாபீடமென்னும் கம்ஸனுடைய) யானையைக் கொலைசெய்தருளின
கண்ணனை-ஸ்ரீ க்ருஷ்ணனாகிய
அரங்கம் மாலை-கோயிலிலே (கண்வளரும்) எம்பெருமானைக் குறித்து
துளபம் தொண்டு ஆய–திருத்துழாய்க் கைங்கர்ய நிஷ்டரும்
தொல் சீர்-இயற்கையான சேஷத்வத்திலே நிலை நின்றவருமான
தொண்டரடிப் பொடி-தொண்டரடிப்பொடியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்-திருமாலையாகிய இத்திருமொழி
இளைய புன் கவிதை ஏலும்–மிகவும் குற்றங்குறைகளை யுடைய கவித்வமாயிருந்த போதிலும்
எம்பிராற்கு–பெரிய பெருமாளுக்கு
இனிதே ஆறே-பரமபோக்யமாயிருந்தபடி யென்! என்று ஈடுபடுகிறார்.)

கவளம் என்று யானையுணவுக்குப் பெர். “களவமால்யானை” என்றும் பாடமுண்டு.
அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம் ஒரு பருவத்தில் பெருத்தயானை யென்றபடி.

இளைய புன் என்பவை -சப்தத்தில் இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும்.

எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும்,
எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.

“இப் பிரபந்தம் கற்றார்க்குப் பலஞ்சொல்லா தொழிந்தது-
இவ்வுகப்புத்தானே அவர்களுக்குப் பலமாகையாலே” என்ற வ்யாக்யாநஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

அடிவரவு:-
காவல் பச்சை வேதம் மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்பு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு
மெய் சூது விரும்பி இனிது குட பாய் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது குரங்கு உம்பரால்
ஊர் மனம் தவமார்த்து மெய்யுள்ளம் தாவி மழை தெளி மேம்பொருளடிமை திரு வான் பழுதில் அமரப் பெண் வளவெழும் கதிர்.

45-வளம் எழும்
கவள மால் யானை -களவ மால் யானை பாட பேதம்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே
இப்பிரபந்தம் கற்றார்க்கு பலம் சொல்லாது ஒழிந்தது
இவ்வுகப்பு தானே அவர்களுக்கு பலமாகையாலே -பெரியவாச்சான் பிள்ளை-

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-91-100–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஊனக் குரம்பையினுள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும்-ஏனத்து
உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்–91-

—————————————————————–

ஊனக் குரம்பையினுள் புக்கு
மாம்சத்தினால் ஆகிய
சரீரம் ஆகிற குடிசையில்
உள்ளே பிரவேசித்து
அதாவது
சரீரத்தின் தோஷம் எல்லாம் மனத்தில் படியும்படி
அதை நன்றாக ஆராய்ந்து
தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும்வேண்டா நாற்றமிகு உடல் –

இருள் நீக்கி
சரீரம் போக்கியம் என்று நினைக்கிற
அஞ்ஞானம் ஆகிற இருட்டைப் போக்கி

ஞானச் சுடர் கொளீஇ
தத்வ ஞானம் ஆகிற விளக்கை ஏற்றி
சுடர் கொளுவி
நாடோறும்-
நாள் தோறும்

ஏனத்து உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம்
வராஹ ரூபியாகி
பிரளயம் கொண்ட பூமியைக் குத்தி
எடுத்துக் கொணர்ந்த
எம்பெருமான் உடைய திருவடிகளை
யுகாந்த காலத்திலும் சத்தை அழியாமல் பாதுகாத்து கொண்டு இருந்தான் என்பதால் -ஊழியான்-

மருவாதார்க்கு உண்டாமோ வான்
சேவியாதவர்களுக்கு பரமபதம் கிடைக்குமோ
கிடைக்க மாட்டாது

ஆக
சரீரம் பற்றிய அஞ்ஞானம் தொலைந்து
ஆத்மாவைப் பற்றின சத்ஞானம் திகழ்ந்து
ஞானப் பிரானது திருவடிகளை அடைந்து
வாழுமவர்கட்கே வானுலம் சித்திக்கும் என்றதாயிற்று –

——————————————————————————————————————————————————————————–

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே -ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு–92-

—————————————————————————————-

வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
ஆகாசமாகியும்
அக்னியாகியும்
அலை எரிகிற கடலாகியும்
காற்றாகியும்
பஞ்ச பூதங்கள் ஐந்துக்கும் உப லஷணம்
இவற்றால் சமைத்த அண்டங்களுக்கு நிர்வாஹகன் என்றபடி

தேனாகிப் பாலாம் திருமாலே –
தேன் போன்றும்
பால் போன்றும்
பரம போக்யனான
எம்பெருமானே
பரம போக்யனான உன்னை ஞானிகள் உட்கொள்ள கருதா நிற்க
நீ வேறு ஒரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்வது என்னோ -என்றபடி

ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே
இடைக்குலத்தில் பிறந்தவளான
யசோதை என்னும் இடைச்சி கடைந்து வைத்த வெண்ணெயை
அள்ளி அமுது செய்ததினால் நிறைந்து விடுமோ
நிறைய மாட்டாது
உலகமுண்ட பெருவாயனான உனக்கு –

முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு
பிரளயம் நீங்கின காலத்தில்
பிரளய காலத்தில் உட்கொண்டு இருந்த இவ்வண்டத்தை
உள்ளே கிடந்து தளர்ந்து போகாதபடி
வெளியிட்ட உன் வயிறானது

அவாப்த சமஸ்த காமன் -உனக்கு பசி இல்லை
வெண்ணெய் உண்டது பசி நீங்க இல்லையே
ஆஸ்ரித ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவில் உட்கொண்டால் அல்லது தரிக்க மாட்டாமை

உண்டாய் உலகு ஏழு முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசருவ வலையாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே -திருவாய்மொழி

ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாத படியான வ்யாமோஹத்தாலே
அமுது செய்தான் அத்தனை அன்றோ -அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி

தாழ் குலத்தார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு
இவ் ஏழ் உலகும் உண்டும் இடமுடைத்தால் சாழலே -என்றும்
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறிநீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே -என்றும்
திரு மங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகள்-

————————————————————————————————————————————————————————————————

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ -பொறி யுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா நின்
சேவடி மேல் ஈடழியச் செற்று–93-

——————————————————————————————————-

வயிறு அழல
என்ன தீங்கு நேருமோ என்று அனுகூலர்
வயிறு எரியும்படி

வாளுருவி வந்தானை யஞ்ச
வாளை உருவிக் கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அவன் உன் வடிவைக் கண்டு
நடுங்கும்படி

எயிறு இலக வாய் மடுத்தது என் நீ –
பற்கள் வெளித் தெரியும்படி
நீ வாயை மடித்துக் கொண்டு இருந்தது எதுக்காக

பொறி யுகிரால்
நாநா வர்ண நகங்களால்

பூவடியை யீடழித்த
புஷ்பத்தின் சுகுமாரத் தன்மையை
அடியோடு போக்கிய
மிகவும் ஸூ குமாரமான

பொன்னாழிக் கையா
அழகிய திரு ஆழியைக் கொண்ட
திருக் கையை உடையவனே –

பொன்னாழிக் கையால் -பாட பேதம்

நின் சேவடி மேல்-
உனது திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு

ஈடழியச் செற்று
கட்டுக் குலைந்து போம் படி கொன்று
பின்னையும் சீற்றம் மாறாமையால்

ஆஸ்ரிதற்கு பிராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக் கொண்டு
ஆஸ்ரித விரோதிகளின் மீது கொள்ளும் கோபமே நமக்குத் தஞ்சம்
கொடியவாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஓன்று உண்டு ஓன்று உளது அறிந்து
உன்னடியனேனும் வந்து அடியிணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -திருமங்கை ஆழ்வார்
அவ்விடத்து வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி
தரித்ரனானவன் தனிகனை அடையுமா போலே சீற்றம் உண்டு என்று ஆயத்து இவர் பற்றுகிறது —
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இ றே சீற்றம் -பெரியவாச்சான் பிள்ளை
அளவு கடந்த சீற்றமே தஞ்சம் என்று ஆஸ்ரிதர்களுக்கு காட்டத் தானே
எயிறு இலக வாய் மடித்தது-

—————————————————————————————————————————————————————————————————————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து -முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா–94

——————————————————————————

செற்று எழுந்து தீ விழித்துச் சென்ற விந்த வேழ் உலகும்
எழுந்து தீ விழுத்து இந்த ஏழ் உலகும் செற்று
அநியாயம் மேலிட்ட படியால்
எழுந்து
லௌகிக பதார்த்தங்களை எல்லாம்
அடியோடு அழிக்க பெரு முயற்சியோடு கிளம்பி
தீ விழித்து
உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி
நெருப்பு எழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும் செற்று
இந்த உலகங்களை எல்லாம் அழித்து
யுகாந்த காலத்தில் அக்கிரமம் விஞ்சி அதனால் எம்பெருமான் உக்ரம் கொண்டு
உலகங்கள் அழித்து தன்னிடம் அடக்கிக் கொள்வான் –

மற்றிவை
பின்பு
பிரளயத்தில் அழிந்த இப்பதார்த்தங்கள்

சென்ற
என்னிடத்து அடங்கிக் கிடக்கின்றன என்று சொல்லி

யா வென்று வாய் அங்காந்து
ஆ என்று வாயைத் திறந்து

-முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்
சகல ஜகாத்தையும்
வைதிகனான மார்கண்டேய மகரிஷிக்கு
முன்பு போலவே இருப்பதைக் காட்டி அருளிய
ஆச்சர்ய சக்தி உக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
காலகதியைக் கடந்துஎன்றும் பதினாறாக நீடூழி வாழ
பத்ர நதிக் கரையிலே தவம் புரிந்த மார்கண்டேயர்
நர நாராயணன் சேவை பெற்று
பின்பு பிரளயம் வந்தவாறே
ஆலிலை குழந்தை வயிற்றுக்குள் தன்னையும் உலகங்கள் எல்லாம் கண்டார்
எய்த்த மார்க்கண்டன் கண்டிட வமலைக்கும் உலகு அழியாது உள்ளிருந்தது என்னே -என்றும்
ஆலத்திலை சேர்ந்து அழி உலகை உட்புகுந்த காலத்தில்
எவ்வகை நீ காட்டினாய் –வேதியர்க்கு மீண்டு -என்றும்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் -அருளுகிறார்

வேறு ஒருவனை
இறையேனும் ஏத்தாது என் நா
எனது நா வானது சிறிதும் துதிக்க மாட்டாது –

——————————————————————————————————————————————————————————————

நா வாயில் உண்டே நமோ நாராயணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே –மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே என்னொருவர்
தீக்கதிக் கண் செல்லும் திறம்–95-

—————————————————————————————–

நா வாயில் உண்டே
ஸ்தோத்ரம் பண்ண கருவியான நாக்கு
ஸ்ரமம் பட்டு தேட வேண்டாதபடி
ஒவ்வொருவர் வாயிலும் படைக்கப்பட்டு இருக்கின்றதே

நமோ நாராயணாய வென்று ஓவாது உரைக்கும் உரை உண்டே –
சஹஸ்ரநாம மந்த்ரம் போலே இடை இடையே
விட்டு விட்டு சொல்ல வேண்டாமல்
எளிதாக ஒரே மூச்சிலே சொல்லக் கூடிய
திரு அஷ்டாஷர மந்த்ரம் சித்தமாய் இருக்கின்றதே
நமோ நாரணா வென்று -பிழையான பாடம்

-மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகையுண்டே
கிழத் தன்மை அற்ற -திரும்பி வருதல் அல்லாத
பரமபிராப்யமான மோஷத்தில்
சென்று சேருவதற்கு ஏற்ற உபாயம் உண்டே

இப்படி இருக்கவும் உஜ்ஜீவியாமல்

என்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம்
சிலர்
விநாசத்துக்கு காரணமான கெட்ட வழிகளிலே
போய் விழுகிற படி என்னோ

உபயோகம் அற்ற விஷயங்களை சொல்ல நாவைப் பயன்படுத்தி அனர்த்தப் படுகிறார்களே
நாராயாணா ஆதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த் நீதி
ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம் -சாஸ்திர வாக்கியம்
தாமுளரே தம்முள்ளம் உள்ளுள்ளதே தாமரையின்
பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே வாமன்
திருமருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது -இரண்டாம் திருவந்தாதி பாசுரம்

—————————————————————————————————————————————————————————–

திறம்பாது என்னெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் – புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கட் பிடி –96-

—————————————————————————–

திறம்பாது பிடி
தவறாமல் உறுதியாக கொள்

என்னெஞ்சமே

செங்கண் மால் கண்டாய்
புண்டரீ காஷனான எம்பெருமானே ஆவான்
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் –
புண்ணியம் பாவம் எனப்படும்
இருவகைக் கர்மங்களுக்கும் நிர்வாஹகன்
எந்த ஆத்மாவை நல்ல கதி பண்ணுவிக்க கருதுகின்றானோ அவனைக் கொண்டு நல் வினையைச் செய்விக்கின்றான்
எந்த ஆத்மாவை அதோகதி அடைவிக்கக் கருதுகின்றானோ
அவனைக் கொண்டு தீ வினையை செய்விக்கின்றான்
என்ற வேத வக்யத்தின் படியே -அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான் -என்று அருளிச் செய்கிறார்

புறம் தான் இம் மண் தான் மறிகடல் தான் மாருதம் தான்வான் தானே
இந்த பூமியும்
அலை எறிகிற கடலும்
வாயுவும்
ஆகாசமும்
இவை தவிர உள்ள மகான் முதலிய தத்தவங்களும்
அந்த திருமாலே யாவான்

கண்டாய் கடைக்கண்
முடிவாக ஆராய்ந்து பார்க்கும் அளவில்
இதுவே உண்மை என்பதை
திறம்பாமல் பிடி – தவறாமல் உறுதியாக கொள்

சம்சாரிகள் எந்த வழியில் போனாலும் போகட்டும்
நெஞ்சே நீ மாத்ரம்
சர்வ நிர்வாஹகன் அவனே என்பதில் விப்ரதிபத்தி பண்ணாமல்
இதுவே பரமார்த்தம் என்று உறுதி கொண்டு இரு-

—————————————————————————————————————————————————————————————————-

பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே -பொடி சேர்
அனல் கங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப்பொன் –97-

———————————————————————————

கீழில்
அறம் பாவம் இரண்டும் அவன் இட்ட வழக்கு என்றார் அதன் விவரணம் இதில்
விஷய பிரவணமாய் திரிந்து கொண்டு இருந்த யானைக்கும் அருளினான்

ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ -திருச் சந்த விருத்தம் -94-
பஞ்ச கவ்யமும் அதன் பரி சுத்தமும் நீ என்றார் திரு மழிசை பிரான்
பிடி சேர் களிறு அளித்த பேராளா
பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆகிற
ஆண் யானையை
காத்து அருளின மஹானுபாவனே

உன்தன்அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே
உன்னுடைய திருவடிகளைக் கிட்டி
பாபிகளை பரிசுத்தன் ஆக்கும் படி
உன்னுடைய திருவருளைப் பெற்றாள் அன்றோ

-பொடி சேர் –
தான் பண்ணின பாபத்துக்கு பிராயச் சித்தமாக
பஸ்மத்திலே சாயுமவனாகி

அனல் கங்கை ஏற்றான்
அனற்கு அங்கை ஏற்றான்
அக்னிக்கு தனது அழகிய கையை ஏற்ற பாதகியான
ருத்ரனுடைய
அவிர் சடை மேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப்பொன்
ஒளி பொருந்திய ஜடையின் மேலே
அவனுடைய சுத்தியின் பொருட்டு வந்து குதித்த
ஜலமயமான
கங்கை என்னும் பெயர் பூண்டுள்ள
சிறந்த பெண்
பெயர்ப்பொன்-தவறான பாடம்- மோனை இன்பம் குறையும்-

—————————————————————————————————————————————————————————————-

பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடு மாலும் -என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்–98-

———————————————————————

பொன் திகழும் மேனிப்
பொன் போலே விளங்குகின்ற உடலையும்

புரி சடை அம் புண்ணியனும்
பின்னிய சடை முடியை உடையனாய்
அழகிய சாதனா அனுஷ்டானம் ஆகிற
புண்ணியத்தை உடையனான ருத்ரனும்

நின்று உலகம் தாய நெடு மாலும் –
நின்று உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட சர்வேஸ்வரனும்

என்றும்
எக்காலத்திலும்

இருவர் அங்கத்தால் திரிவரேலும்
இருவாராக வெவ்வேற வடிவத்தோடு
இருந்தார்களே யாகிலும்

ஒருவன்
சடை புனைந்து
சாதனா அனுஷ்டானம் பண்ணும்
ஒருவனாகிய சிவன்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
நெடுமாலான மற்று ஒருவனுடைய
சரீரத்திலே
எப்போதும் சத்தை பெற்று இருப்பன் –
அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமான் உடைய சரீர பூதன் ஆகையாலே தானே –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை பேசுமினே -நம் ஆழ்வார்
புரிசடை புண்ணியன் -அவன் வேஷமே ஈஸ்வரன் அல்லன் என்பதைக் காட்டுமே
நின்று உலகம் தாய நெடுமால் -ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசி அற திருவடியை
நீட்டி தானே சர்வேஸ்வரன் என்று காட்டி அருளினான்

ஒருவன் அங்கத்து என்றும் உளன்
வலத்தனன் திரிபுரம் எரித்தனன்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய அங்கத்தில் ஏக தேசத்தில் என்றும்
சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்ளலாம்-

—————————————————————————————————————————————————————————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –99-

———————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான்
காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான்
காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன்
காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று
தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத்தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

—————————————————————————————————————————————————————————-

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்னெஞ்சே–ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை –100-

—————————————————————————————
-ஓரடியில் தாயவனைக் கேசவனைத்
தனது ஒப்பற்ற அடி வைப்பினாலே
லோகங்களை எல்லாம் அளந்து கொண்டவனும்
கேசி என்னும் அசுரனைக் கொன்றவனும்

தண் துழாய் மாலை சேர்
குளிர்ந்த திருத் துழாய் மாலை உடன் சேர்ந்தவனுமான

மாயவனையே மனத்து வை
எம்பெருமானையே
மனத்தில் உறுதியாக கொள்வாயாக
இப்படி அவனே உபாயம் என்று உறுதி கொண்டால்

ஓரடியும்
உலகங்களை எல்லாம்
அளந்து கொண்ட ஒரு திருவடியும்

சாடுதைத்த ஒண் மலர் சேவடியும்
சகடம் முறிந்து விழும்படி உதைத்த
பூ போன்ற திருவடியும்
ஆகிய

ஈரடியும் காணலாம் என்னெஞ்சே-
இரண்டு திருவடிகளையும்
சேவிக்கப் பெறலாம் காண்

மாயவனை மனத்து வைத்தால் -உபாயமாக கொண்டால்
ஈரடியையும் சேவிக்கப் பெறுவது எளிதாகும்
சாடுதைத்த திருவடி –அநிஷ்ட நிவ்ருத்தி
உலகளந்த திருவடி– இஷ்ட பிராப்தி

திரிவிக்ரமாவதாரமும்
கிருஷ்ணாவதாரமும்
இவ் வாழ்வார் ஈடுபட்ட துறைகள்
அதனால் இத்தை பேசி தனது திவ்ய பிரபந்தத்தை முடித்து அருளுகிறார்
மீண்டும் தாயவனைக் கேசவனை என்பதும் இதே நோக்கம்

உபாயமும் உபேயமும் எம்பெருமானே
சைதன்ய கார்யமான இந்த அத்யாவசியம் ஒன்றே நமக்கு வேண்டியது
என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்-

————————————————————————————————————————————————————————————————

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று -1-

—————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-81-90–திவ்யார்த்த தீபிகை —

September 25, 2014

ஆளமர் வென்றி யடுகளத்துள் அந்நான்று
வாளமர் வேண்டி வரை நட்டு -நீளரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொன்னரகைப்
பற்றிக் கடத்தும் படை –81-

—————————————————————————————–

ஆளமர்
யுத்த வீரர்கள் நெருங்கி
இருக்கப் பெற்றதும்
கடல் கடையும் காலம் தேவாசுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியும் காலம்
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரர் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்

வென்றி
ஜெயத்தை உடையதுமான

யடுகளத்துள்
எதிர்த்தவரை கொல்லுகின்ற
யுத்த களத்திலே

அந்நான்று
அசுரர்களை தேவர்கள் மேல் விழுந்து நலிந்த
அக்காலத்திலே

வாளமர் வேண்டி
அனுகூலரான தேவர்கட்கு வெற்றி
உண்டாகும் படி
மதிப்புடைய யுத்தத்தை விரும்பி

அதற்கு ஏற்ப

வரை நட்டு –
தண்ணீரிலே அமிழக் கூடிய
மந்த்ர பார்வத்தை மத்தாக நாட்டி

நீளரவைச்சுற்றிக் கடைந்தான்-
உடல் நீண்ட வாசூகி நாகத்தை
கடை கயிறாக சுற்றி
அமுதம் உண்டாகும் படி திருப் பாற் கடலை கடைந்தவன் உடைய

பெயரன்றே தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை
திரு நாமம் எப்படிப் பட்டது என்றால்
சம்சாரிகளை வாரிப் பற்றாக
பிடித்துக் கொண்டு போய்
பழைமையாய் இருக்கிற சம்சாரம் என்னும் நகரத்து
தாண்டுவிக்கின்ற சாதனம்
நரகு -சம்சாரம்

பிரயோஜனாந்தர பரர்களுக்கும்
தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அருளிய அவன் திரு நாமமே உத்தாரகம்-

——————————————————————————————————————————————————————–

படையாரும் வாள் கண்ணார் பாரசிநாள் பைம்பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் -இடையிடையின்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேலோருநாள்
மானமாய வெய்தான் வரை –82-

——————————————————————————-

படையாரும் வாள் கண்ணார் –
வேலாயுதம் போன்ற ஒளி பொருந்திய
கண்களை உடைய பெண்கள்
அறிவு ஒன்றும் இல்லாத பெண்களும் ஆஸ்ரயிக்கும் படி

பாரசிநாள்-
த்வாதசி அன்று –
சத்வோத்தரமான நாள்

பைம்பூம் தொடையலோடு ஏந்திய தூபம் –
வாடாத மலர்களைக் கொண்டு
தொடுத்த மாலையோடு கூட
திரு வேங்கடமுடையானுக்கு
சமர்ப்பிக்கும் படி ஏந்தி உள்ள
தூபமானது
தூபத்தின் கமழ்ச்சியே திருமலை எங்கும் பரவிக் கிடக்கிறது –

இடையிடையின் மீன் மாய
ஆகாசத்தில் நடுவே நடுவே தோன்றுகின்ற
நஷத்ரங்கள் மறையும்படி

மாசூணும்
மாசு ஏறும்படி பண்ணா நிற்கும்

வேங்கடமே
திருமலையே யாகும்

மேலோருநாள் மானமாய வெய்தான் வரை
முன் ஒரு காலத்திலே
ஸ்ரீ ராமாவதாரத்திலே
மாரீசன் ஆகிய மாய மான் இறந்து விடும்படி
அம்பு தொடுத்து விட்ட ராமபிரான்
நித்ய வாசம் செய்கின்ற மலை யாவது

———————————————————————————————————————————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -உரவுடைய
நீராழி உள்கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

———————————————————————

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து
ஒருவராலும் அசைக்க முடியாத
கோவர்த்தன மலையே குடையாகவும்
தனது திருத் தோளே அந்தக் குடைக்கு காம்பாகவும் ஆக்கி
பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து

ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே
ஆயர்கள் வைத்திருந்த திரண்ட
ரிஷபங்கள் ஏழையும்
முடித்த விதம்
எங்கனே

-உரவுடைய நீராழி உள்கிடந்து-
மிடுக்கை உடைத்தான நீரை உடைய திருப் பாற் கடலிலே
திருக் கண் வளர்ந்து

நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான்
எதிரியாக வந்த
மதுகைடபர் முதலிய ராஷசர்களின் மீது
அவர்கள் நீறாகும்படி
பெரிய சக்ராயுதத்தை திருக் கையிலே கொண்டு இருக்கிற உபகாரகனே
நிராசரர் -இரவில் திரிகின்றவர்கள் –

இப்படி கருதும் இடம் சென்று பொருது கை நிற்க வல்ல
திரு ஆழியான் திருக்கையிலே இருக்கச் செய்தேயும்
அவனைக் கொண்டு கார்யம் கொள்ளாமல்
உடம்பு நோவ கார்யம் செய்து அருளியது
ஆஸ்ரித பாரதந்த்ரயத்தாலே
பெறாப் பேறாக நினைத்து —
மழுங்காத வை நுதிய சக்கர நல்வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே -திருவாய்மொழி -3-1-9-

——————————————————————————————————————————————————————————–

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராய் யுலகளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதாவாறு என் கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

————————————————————————

பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உபகாரகனே
உனது பெருமையை அறிவார் யாரும் இல்லை
சர்வஞ்ஞனான உன்னால் தான் அறிய முடியுமோ
உன்னால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்போல்வாரால் ஒருக்கால் அறியப் போகலாமே ஒழிய
சுய யத்னத்தால் உணர விரும்புவார்க்கு ஒருநாளும் காண முடியாதே

உராய் யுலகளந்த நான்று
எங்கும் சஞ்சரித்த படி அளந்த காலத்திலே
உராய் -உலாவி என்றபடி
சிறிதும் சிரமம் இன்றி -பட்டர் உடைய கருத்து
உராய் – உரசிக் கொண்டு -எல்லாரையும் தீண்டிக் கொண்டு
உரையாய் -மருவி உராய் சொல்லு என்றுமாம் –

வராகத்துஎயிற்று அளவு போதாவாறு என் கொலோ
வராஹ ரூபியான உன்னுடைய
திரு எயிற்றின் ஏக தேச அளவும்
போதாதாக இருந்த விதம்
எங்கனேயோ

எந்தை அடிக்களவு போந்த படி
எனது ஸ்வாமியான உன்னுடைய
திருவடிகட்கே அளப்பதற்குப் போந்திருந்த
பூமியானது-

——————————————————————————————————————————————————————————————————

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ —85-

———————————————————————————

படி கண்டு அறிதியே –
அவனது திருமேனியை
சேவித்து
அனுபவித்து அறிந்து இருக்கிறாயோ

பாம்பணையினான்
சேஷசாயி யான பெருமானுடைய

புட்கொடி கண்டு அறிதியே கூறாய்
கருடப் பறவை யாகிற த்வஜத்தை
சேவித்து
அனுபவித்து
அறிந்து இருக்கிறாயோ
சொல்லு –

வடிவில் பொறி ஐந்தும் உள்ளடக்கிக் போதொடு நீர் ஏந்தி
பஞ்ச இந்த்ரியங்களையும்
சரீரத்துக்கு உள்ளே அடங்கி இருக்கச் செய்து
திருவாராதன சாமக்ரியான
புஷ்பங்களையும்
தீர்த்தத்தையும்
தரித்துக் கொண்டு

நெறி நின்ற நெஞ்சமே நீ –
ஆஸ்ரயிக்கும் மார்க்கத்திலே
நிலைத்து நிற்கும் மனமே

இத்தால்
எம்பெருமான் கருடாரூடனாய் சேவை சாதிக்கும் நிலையில்
சேவிக்கப் பெறுதலிலும்
சேஷசாயியாய் சேவை சாதிக்கும் நிலையிலும்
சேவிக்கப் பெறுதலிலும்
தமக்கு ஆசை கொண்டு இருக்கும் படியை வெளியிட்டு அருளுகிறார்-

—————————————————————————————————————————————————

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா -வாசல்
கடை கழியா வுள்புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றியினி–86-

———————————————————————

குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –
கோவர்த்தன மலையை
வேரோடு பிடுங்கி எடுத்து
மேலே வந்து சொரிகிற மழையை
மேலே விழாமல் தடுத்த
குணசாலியே
பனி மறைத்த -என்றும் பாட பேதம்

கழியா வுள்புகாக்
வெளிப் பட்டு போகாமலும்
உள்ளே புகாமலும்

காமர் பூங்கோவல்
விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரிலே

வாசல் கடை
திரு வாசலுக்கு வெளியிலே

இடை கழியே
நடுக் கட்டான
இடை கழியிடத்தையே
ரேழி-வெளியிலே சம்சாரிகளும்
உள்ளே உபாசகனான ரிஷியும்
அநந்ய பிரயோஜனரான மூவர் நின்ற இடமே உகந்து சேரும் இடமாக பற்றினான்

பொய்கை பூதம் பேயாழ்வார் நாங்கள் மூவரும் தங்கி இருந்ததனால்

பற்றி
விரும்பிய இடமாகக் கொண்டு

நீயும் திருமகளும்
நீயும் பிராட்டியுமாக

இனி

நின்றாயால்
நின்று அருளினாய் -ஆச்சர்யம் –

பாவரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனை தொழுத நன்னாடு –
இவ்வரலாற்றுக்கு மூலமாய் இருக்கும் இப்பாட்டு
இஃது என்ன திருவருள்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய நீல மேக ச்யாமளமான திருமேனியையும்
மின்னல்கொடி பரந்தால் போன்ற திருமகளாரையும்
நெஞ்சு என்னும் உட்க் கண்ணால் கண்டு
அனுபவித்த படியை
இத்தால் வெளியிட்டு அருளினார் ஆயிற்று
இடையரோடும் பசுக்களோடும் நெருக்கி நின்றால் போலே ஆயிற்று இங்கு மூவரையும் நெருக்கி நின்று அருளினான்

கீழ் பாட்டில் நெஞ்சமே நீ அவனைசாஷாத் கரித்து அனுபவிக்கப் பெற்றாய் இல்லை -என்றாரே
அப்படி சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவர் இருந்த இடம் தேடி பிராட்டியுடன் வந்து கலந்தான்
இவர் தம்முடைய திரு உள்ளத்தை குறித்து
சாஷாத் கரிதில்லை -என்னத் தரியான் இ றே-பெரியவாச்சான் பிள்ளை –
முன்னே நடந்த திருக்கோவல் இடை கழி நெருக்கத்தை
மீண்டும் அனுபவிப்பித்து அருளினான் போலும்-

————————————————————————————————————————————————————————————————–

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் -கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு –87-

—————————————————————————————-

இனியார் புகுவார் எழு நரக வாசல்
ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனிமேல் யாவர் பிரவேசிப்பார்
ஒருவரும் இல்லை ஒ யம கிங்கர்களே
ஏழு நரகங்கள் -கொடிய நரகங்கள்
பெரும் களிற்று வட்டம் /பெரு மணல் வட்டம் /எரியின் வட்டம்
புகையின் வட்டம் /இருளின் வட்டம் /பெரும் கீழ் வட்டம் /அரிபடை வட்டம்
என்று ஓர் இடத்திலும்
கூட சாலம் கும்பீ பாகம் அள்ளல் அதோகதி யார்வம்பூ செந்து என்ற ஏழும் தீ நரகப் பெயர்
என்று ஓர் இடத்திலும்
ரௌரவம் /மகா ரௌரவம் /தமஸ் /நிக்ருந்தனம் /அப்ரதிஷ்டம் /அசிபத்ரம் /தப்த கும்பம்
என்றும் வேறு வகையாக கூறுவார்
அன்றிக்கே
எழு நரகம்
சம்சாரிகள் அடங்கலும் சென்று புகுகிற நரகம்
கிளர்த்தியை உடைய நரகம் என்றுமாம்

முனியாது மூரித்தாள் கோமின்
உங்கள் ஸ்தானத்துக்கு
அழிவு உண்டாவதாகச் சொல்லும் என் மேல்
கோபம் கொள்ளாமல்
இனி ஒருக்காலும் திறக்க முடியாத படி
பெரிய தாழ்பாளை போட்டுப்
பூட்டுங்கோள்

-கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே
காண்பதற்கு
விளாம் பழம் உதிர்ந்து விழும்படி
வத்சாசூரனை
எறி தடியாக எடுத்து எறிந்து
இரண்டு அசுரரையும் முடித்த
திருத் தோள்களை உடையனான
சர்வேஸ்வரன் உடைய
ஆபரண த்வனியை உடைய திருவடிகளை
சேவிப்பதற்கு சாதனம்
ஆபரண த்வனியில் ஈடுபட்டு கனை கழல் என்கிறார்

அவன் உகந்து வாழ்கிற திருக் கோவலூர் க்கு சமீபமான
இடத்தில் வசிப்பது தான் என்று

நன்கறிந்த நாவல் அம் சூழ் நாடு
நன்றாக
அழகிய ஐம்பூ என்று பேர் படைத்த பரந்த
த்வீபத்தில் உள்ள பிராணிகள் அறிந்து விட்டன –
அறிந்த -அறிந்தன –விரைவில் பகவத் ஞானம் உண்டாகி விடும்
எதிர் கால செய்தியை இறந்த காலமாகவே அருளிச் செய்கிறார்

ஆழ்வார் திரு உள்ளம் ஆனந்த்தின் எல்லை கண்டது
நெருக்குண்டு இருக்கும் நிலைமை தாம் அனுசந்தித்தார்
உலகோரை உபதேசத்தாலே திருத்தி பணி கொண்டதும்
பாவனா பிரகர்ஷத்தாலே
அனைவரும் அவனுக்கு ஆட்பட்டதாக கருதி
கம்பீரமாக அருளிச் செய்கிறார்
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் நடமாடும் ஜம்பூத்வீபமே நாடு மற்றவை காடு
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை போலே –

————————————————————————————————————————————————————————————–

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் -சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு–88-

———————————————————————

நாடிலும் நின்னடியே நாடுவன்
மனத்தினால் தேடும் பொழுது
உனது திருவடிகளையே தேடுவேன்

நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் –
எப்பொழுதுவாய் விட்டு ஏதாவது
சொல்லும் போதும்
உனது புகழ்களையே பாடுவேன்

சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
ஏதாவது ஒன்றைத் தலையிலே
அணிவதாய் இருந்தாலும்
அழகிய திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உன்னுடைய அழகிய திரு வடிகளையே
சிரோ பூஷணமாக கொள்பவனான

என்னாகில் என்னே எனக்கு
எனக்கு
எது எப்படி யானால் என்ன

உண்டியே உடையே உகந்தோடும் மண்டலத்தவர்கள்
அநாதி கால துர்வாசனையை எளிதில் அகற்றப் போமோ
தம்மைப் பார்த்தார்
நல்லபடியாக ஈடேறப் பெற்றோமே
நாடிலும் நின்னடியே நாடுவன்-மநோ வ்ருத்தியையும்
நாடோறும்பாடிலும் நின் புகழே பாடுவன் -வாக் வ்ருத்தியையும்
சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு -சரீர வ்ருத்தியையும்
சொல்லி மூன்றும் பகவத் விஷயத்தில் அவஹாஹித்த படியை அருளிச் செய்தார் ஆயிற்று
என் ஆகில் என்
இங்கு இருந்தால் என்ன
பரம பதத்தில் இருந்தால் என்ன என்றுமாம்-

——————————————————————————————————————————————————————

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் -புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம்–89-

————————————————-

எனக்கு
எம்பெருமான் நிர்ஹேதுக கடாஷத்துக்கு
பாத்ரபூதனான எனக்கு

ஆவார் ஆர் ஒருவரே
ஒப்பு ஆகுவார் எவர் ஒருவர் இருக்கின்றார்
யாரும் இல்லை

எம்பெருமான்
அந்த சர்வேஸ்வரனும்

தனக்காவான் தானே மற்றல்லால் –
தானே தனக்கு ஆவான் அல்லால் -மற்று
தானே தனக்கு ஒப்பாவானே அல்லாமல்
அவன் தானும்
எனக்கு ஒப்பாக வல்லானோ –
இப்படி சொல்லும்படி உமக்கு வந்த ஏற்றம் என் என்ன

புனக்காயாம் பூ மேனி
தனக்கு உரிய நிலத்திலே தோன்றின
காயம் பூ வின் நிறமும்

காணப் பொதியவிழும் பூவைப் பூ
காணக் காண கட்டவிழா நிற்கும்
பூவைப் பூவின் நிறமும்

மா மேனி காட்டும் வரம்
வரம் -சிறந்ததான
அவனது கரிய திருமேனியை எனக்கு காட்டா நிற்கும்

ஆகையாலே போலியான பொருள்களைக் கண்டும் அவனை கண்டதாகவே நினைத்து மகிழ்கிற எனக்கு
ஒருவரும் ஒப்பாகார் என்றபடி

இதுவும் கீழ்ப் பாட்டின் சேஷம்
ஹர்ஷப் பெருக்கால் அருளிச் செய்கிறார்
அவன் அடிமையில் ஈடுபட்டு அதன் மூலமாக செருக்கு கொள்ளுதல்
அடிக் கழஞ்சு பெறுதலால்
எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மற்றையோரும் அருளிச் செய்தவை
இது ஹேயம் அன்று உபாதேயம்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும்
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று –
பெரிய திருவந்தாதி பாசுரம் இங்கே அனுசந்தேயம்-

———————————————————————————————————————————————————————————————–

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே -உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை
ஒரரியாய் நீ இடந்த தூன்–90-

—————————————————————————————-

வரத்தால் வலி நினைந்து
ப்ரஹ்மாதிகள் கொடுத்த வரத்தினால்
தனக்கு உண்டான பலத்தை பெரிதாக மதித்து
வரம் கொடுத்தவர்கள் ஸ்ரீ மன் நாராயணன் ஆதீனம் என்று உணர வில்லையே –

மாதவ
திருமாலே

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே
உனது திருவடிகளை தனது தலையினாலே
வணங்காமல் இருந்தான் என்ற காரணத்தினாலோ
இல்லையே
பக்தனான பிரஹ்லாதனை நலிந்தான்
என்ற காரணத்தினாலே அன்றோ

-உரத்தினால்
உனது மிடுக்கினாலே

ஈரரியாய்
இரண்டு கூறாக கிழித்துப் போட வேண்டிய
சத்ருவாகி
பெரிய சத்ரு என்றுமாம்

நேர் வலியோனாய
எதிர்த்து நின்று போர் செய்யும் வலியை உடையனாகிய

விரணியனை
ஹிரண்யாசூரனை

ஒரரியாய் நீ இடந்த தூன்
ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாகி
நீ உனது நகங்களால் குத்தி கீண்டதானது
சரீரத்தை
ஓரரி – ஓர்தல் த்யாநித்தல் -த்யானிக்கப் படுகிற நரசிங்கம்

விமுகனாய் இருந்த காரணம் இல்லையே
ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம்
பாகவத அபசாரம் பொறாமை என்று சீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-பெருமாள் அருளினாரே
தனக்கு உயிர் நிலையான பாகவதர்களுக்கு தீங்கு என்றால் கொண்ட சீற்றம் உண்டே
கோபமாஹாரயத் தீவரம்
ததோ ராமோ மஹாதேஜா ராவனேண க்ருதவ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபச்ய வசமே யிவான்
பள்ளியில் ஓதி வந்த தன சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகிப்
பிள்ளையை சீறி வெகுண்டு நலிந்தான் என்றவாறே
நம்மளவில் எத்தனை தீம்பனாய் இருந்தாலும் பொறுத்து இருப்போம்
நம்முடைய சிருக்கனை நலிந்த பின் பொறுத்து இருக்கவோ –
கேள்வி மட்டும் இங்கே
உத்தரம் அருளிச் செய்ய வில்லை
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் -68 ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார்
இது போலே
பெரிய திருவந்தாதி பாசுரத்தில்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாக்கால் பேராளா
மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து –
இதற்கு அதிமாநுஷ ஸ்தவத்தில்
த்வன் நிர்மிதா ஜடரகாச தவ த்ரீலோகீ கிம் பிஷனாதியம்ருதே பவதா துராபா -என்று அனுவதித்து
மத்யே கதாது ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதமிவ ஸ்ருதிரஞ்சித ஸ்யாத்-என்று உத்தரம் அருளிச் செய்தார்
இது போலே ஆழ்வார் வெளிப்படையாக அருளிச் செய்த
மழுங்காத –சுடர் சோதி மறையாதே -என்பதற்கும் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் சூத்ரம் இயற்றி அருளினார் –
—————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-71-80–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று  நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —71-

——————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
பிணி மூப்பு
வியாதியையும் கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி
மரணத்துக்கும் உப லஷணம்
ஜரா மரணம் மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை
நன்றாக அடியோடு தொலைந்து ஒழியும்படி விட்டும்
கை வலய மோஷத்தைப் பெற்றாலும்
நான்கூழி
நான்கு யுகங்களில் உள்ள -காலதத்வம் உள்ள வரையிலும் –

நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் –
ஸ்திரமாக நின்று
பூமி தொடங்கி ப்ரஹ்ம லோகம் வரையிலும்
ஸ்வா தீனமாக நிர்வஹிக்கப் பெற்றாலும்
பரமைச்வர்யம் கிடைத்தாலும்
உம்மை தொகை அதில் தமக்கு விருப்பம் இல்லாமை காட்டி அருளி

என்றும் விடலாழி நெஞ்சமே
என்றுமே விடாமல் இரு
ஆழி நெஞ்சே -நீயே பகவத் விஷயத்தில் ஆழ்ந்து உள்ளேயே
நான் பிரார்த்திக்க வேண்டியது இல்லை
ஏதோ சொல்லி வைத்தேன்

வேண்டினேன் கண்டாய்
உன்னைப் பிரார்த்திக்கிறேன் காண்
பகவத் விஷயம் அறிந்த நெஞ்சுக்கு உபதேசிக்கிறார்
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப் போலே

அடலாழி கொண்டான் மாட்டன்பு
தீஷணமான திரு வாழியைக் கையில் ஏந்திய –
கை கழலா நேமியான் –
பெருமான் இடத்தில்
ப்ரீதியை-

————————————————————————————————————————————————————

அன்பு ஆழியானை யணுகு என்னும் நா வவன்தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் -முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ்–72-

————————————————————————————

ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது
கரணங்கள் தனித் தனியாக ஆசார்ய பதம் வகித்து
உபதேசிக்க முற்படுகிற படியை பேசி அருளுகிறார் இதில்

அன்பு ஆழியானை யணுகு என்னும்
பகவத் பக்தியே வடிவு எடுத்தது போன்று
இருக்கிற என் நெஞ்சானது
சர்வேஸ்வரனை கிட்டி அனுபவி என்று
எனக்கு உபதேசிக்கிறது –
அன்பு ஒரு வஸ்து நெஞ்சு வேற வஸ்து இல்லாமல்
அன்பு தானே நெஞ்சாக
அறிவுக்கு ஆஸ்ரயமான ஆத்மாவை விஞ்ஞான சப்தம் சொல்வது போலே

நா வவன்தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் –
வாக்கானது அவனது சௌந்தர்ய சாகரமான
திருத் தோள்களைப் பேசி துதி என்று
உபதேசிக்கின்றது
பண்பு ஆழி -அழகுக்கு கடல் போன்ற
பண் பாழி -அழகையும் வலிமையையும் உடைய தோள் என்றவாறு

முன்பூழி காணானைக் காண் என்னும் கண்
கண்களானவை
நாம் அவனை வந்து ஆஸ்ரயிப்பதற்கு முன்புஇருந்த
காலத்தில் உள்ள
வைமுக்யத்தை நிலைமையை
நெஞ்சாலும் எண்ணாத பெருமானை சேவி
என்று உபதேசிக்கின்றன
மகா பாதகன் -அபராதகன் -இன்று ஆஸ்ரயித்தால் நேற்று வரையில் எப்படி இருந்தான்
முற்கால பாபங்களை சிறிதும் ஆராயதவன் -காணான்
எம்பெருமான் -என்றவாறு –

செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
காதுகள் ஆபரணமான ஹாரம் முதலியவற்றை
அணிந்து கொண்டு இருக்கிற
அப்பெருமான் உடைய திருக் கல்யாண குணங்களை கேள்
என்று தூண்டுகின்றன –

————————————————————————————————————————————————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான்–73-

———————————————————-

புகழ்வாய் பழிப்பாய் நீ
ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு
அன்றியே
நிந்திப்பதனாலும் நிந்தி
சிசுபாலாதிகளைப் போலே

பூந்துழாயானை –

அன்றிக்கே
இகழ்வாய்-
அநாதாரித்தாலும் அநாதரி
அன்றிக்கே
கருதுவாய்-
ஆதரித்தாலும் ஆதரி
உனக்கு இஷ்டப் பட்டபடி செய்
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்கு ஒரு குறையும் வாராது காண்

நெஞ்சே
சஞ்சலம் ஹி மன கிருஷ்ண
நின்றவா நில்லா நெஞ்சு
கருதுவாய் என் நெஞ்சே என்றும் பாட பேதம்

-திகழ் நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான்
விளங்குகின்ற ஜல பூர்த்தியை உடைய சமுத்ரமும்
பர்வதங்களும்
பரம்பிய ஆகாசமும்
வாயுவும்
தேவாதி சரீரங்களும்
அந்தந்த சரீரங்களில் உள்ள பிராணன் களும்
ஆகிய இவற்றை எல்லாம்
தரித்து கொண்டு இருப்பவன் அவ்வெம்பெருமானே காண்
தான் என்ற சொல்லுக்குள் அடங்கும்படி எல்லா வற்றையும் தனக்கு விசேஷணம் ஆகக் கொண்டு உள்ளான் என்றுமாம்
சர்வ தாரகத்வத்தை சொல்லி
நம்முடைய புகழ்வு இகழ்வு எல்லாம் அவனுக்கு அப்பிரயோஜகம் –

——————————————————————————————————————————————————————————–

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் -கூற்றொருபால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு –74-

—————————————————————————————–

ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரத்வத்தையும்
ருத்ரனின் அபரத்வத்தையும் சொல்லி
சிவனும் எம்பெருமான் உடைய ரஷணத்தில் அடங்கினவன் என்கிறார்

ஏற்றான்
ரிஷபத்தை வாகனமாக உடையவனும்
தமோ குணமே வடிவு எடுத்ததாயும்
மூடர்களுக்கு உவமையாக சொல்லத் தக்கதாயும்

புள்ளூர்ந்தான்
கருடனை வாகனமாக உடையவனும்
வேத ஸ்வரூபி

எயில் எரித்தான்
திரிபுர சம்ஹாரம் பண்ணினவனும்
தன்னை ஆஸ்ரயித்தவர்களின் குடி இருப்பை எரித்தவன்

மார்விடந்தான்
இரணியனது மார்பை பிளந்தவனும்
ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதன் விரோதியை மார்பை பிளந்து ஒழித்தவன்

நீற்றான்
சாம்பலை பூசிக் கொண்டு இருப்பவனும்
தான் பிராயச் சித்தி என்று தோன்றும்படி
நீறு பூசின சர்வாங்கம் உடையவன்

நிழல் மணி வண்ணத்தான் –
நீல ரத்னம் போலே குளிர்ந்த வடிவை உடையவனும்
ஸ்ரமஹரமான குளிர்ந்த வடிவை உடையவன்

கூற்றொருபால்மங்கையான்
தனது ஒரு பக்கத்தில்
பார்வதியை தரித்துக் கொண்டு இருப்பவனும்
உடலின் பாதி பாகத்தை ஸ்திரீ ரூபம் ஆக்கிக் கொண்டவன்

பூ மகளான்
பெரிய பிராட்டியை திவ்ய மகிஷியாக உடையவனும்
உலகுக்கு எல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாக கொண்டவன்

வார் சடையான்
நீண்ட ஜடையைத் தரித்து உள்ளவனும்
சாதனா அனுஷ்டானம் பண்ணுவது உலகோருக்கு தெரியும் வண்ணம் சடை புனைந்தவன்

நீண் முடியான்
நீண்ட கிரீடத்தை அணிந்து உள்ளவனும்
சர்வேஸ்வரத்வ ஸூசகம்

கங்கையான்
ஜடை முடியில் கங்கையை தரித்து கொண்டு இருக்கும் ருத்ரன்
பரிசுத்தன் ஆவதற்காக கங்கையை தரித்தவன்

நீள் கழலான் காப்பு
நீண்ட திருவடிகளையும் உடையவனான
சர்வேஸ்வரன் உடைய
ரஷணத்தில் அடங்கினவன்
அந்த கங்கைக்கு உத்பத்தி ஸ்தானமான திருவடியை உடையவன்

மாறி மாறி சொல்லி அருளியது வாசி நன்றாக விளங்குவதற்காக-

———————————————————————————————————————————————————————

காப்பு உன்னை உன்னக் கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் -மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி–75-

—————————————————————————————————–

திருமாலே
உன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
பிரதிபந்தகங்கள் நீங்கப் பெற்று
பிரகிருதி சம்பந்தமும் நீங்கி
திவ்ய லோக பிராப்தியும்
வாய்க்கப் பெறுவார்கள் -என்கிறார் இதில்
கர்மவச்யர் ஆகார் -பரம சாம்யா பத்தியை பெறுவார் என்றவாறு

காப்பு உன்னை உன்னக் கழியும்
பிரதிபந்தங்கள்
பரம புருஷனான உன்னை
ரஷகனாக அனுசந்திக்கும் அளவில்
விட்டு நீங்கும் –
காப்பு -பிரதிபந்தகம்-தடை
பாப சாஷியாக பதினால்வர் நியமிக்கப் பட்டு
சூர்யன்/சந்தரன்/வாயு /அக்னி /த்யுலோகம் /பூமி /ஜலம்
ஹ்ருதயம் /யமன் /அஹஸ் /ராத்திரி /இரண்டு சந்த்யைகள்/தர்ம தேவதை
இப்படிப் பட்ட கர்ம சாஷிகளும் ஆராயக் கடவர் அல்லர் -என்றபடி

அருவினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும்
போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
உன்னை நினைக்கும் அளவில்
அவிழ்ந்து போம்
ஆப்பு -யாப்பு -கட்டு -கரும பந்தம்

-மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை
உன்னை த்யானிப்பவர்களுக்கு
கிழத் தனம் முதலிய ஷட்பாப விகாரங்களும் இல்லை யாம்
உளதாகை/பிறக்கை/மாறுகை/வளர்க்கை/மூப்பு-குறுகை/அழிகை-ஆகிய ஷட் பாவங்களும் இல்லை

திருமாலே
ஸ்ரீ யபதியே

நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள்
அர்ச்சிராதி மார்க்கத்தை -வழி காண்பர் –
கண்டு அனுபவிக்கப் பெறுவார்கள்-

——————————————————————————————————————————————————————————————–

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்தியரே யாவர் -பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76

——————————————————————————

வழி நின்று நின்னைத் தொழுவார்
பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
உன்னை ஆஸ்ரயிக்குமவர்கள்

வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் –
உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற
ஸ்வரூப ஆவிர்பாவத்தை
உடையராகவே ஆவார்கள்
வழுவா மொழி -வேதம்
அதில் சொல்லப் பட்ட மூர்த்தி யாவது -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம்
ஞ்ஞாநாநந்த விகாசம்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் -திருமங்கை ஆழ்வார் –

பழுதொன்றும்வாராத வண்ணமே
ஒரு குறையும் இல்லாதபடி

விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம்
உலகளந்த மகானுபாவன் எழுந்து அருளி இருக்கிற
திருமலையே
ஆஸ்ரிதர்களுக்கு மோஷம் அளிக்கக் காண்கிறோம் அன்றோ
கைமுதிக நியாயம்
அவன் எழுந்து அருளி இருக்கும் திரு மலையே கொடுக்க வல்லது என்றால்
அவன் கொடுத்து அளிப்பான் என்பது சித்தமே

எம்பார் நாள்தோறும் சிற்றம் சிறு காலையில்ஓவாதே இந்த பாசுரம் அனுசந்திப்பாராம் -பெரியவாச்சான் பிள்ளை –

—————————————————————————————————————————————————————————-

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்–77-

————————————————————————

எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்து அருளி
இருக்கும் படிகளை நாம் அனுசந்தித்தால்
நமது இடர் எல்லாம் நீங்கி விடும் -என்கிறார் இதில்
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதும் ஆனபடிகளை நாம் சொல்ல
நாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்கள் எல்லாம் தன்னடையே போம்

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும்
திருமலையும்
வைகுண்ட மா நகரும்
திரு வெஃகாவும்

அஃகாத பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்
பூ மாறாத நீர் நிலைகளை உடைய
சிறந்த திருக் கோவலூர் என்கிற
திவ்ய தேசமும்

ஆகிய
நான்கு இடத்தும்
நான்கு திருப்பதிகளிலும்
வரிசை கிரமமாக

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால்
எம்பெருமான்
நிற்பதும்
வீற்று இருப்பதும்
பள்ளி கொண்டு இருப்பதும்
நடப்பதுமாய்
இருக்கிறான் என்று அனுசந்தித்தால்

கெடுமாம் இடர்
துக்கங்கள் எல்லாம்
விட்டோடிப் போய் விடும்
விண்ணகர் பரமேஸ்வர விண்ணகர் வீற்று இருந்த திருக் கோலம் என்பதால்
அத்தை சொன்னதாகவும் கொள்ளக் குறை இல்லை-

—————————————————————————————————————————————————————————

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த -படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு –78-

———————————————————————-

இடரார் படுவார்
அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்
துக்கத்தை அனுபவிக்க யாரால் முடியும்
என்னால் முடியாது -என்கிறார்

எழு நெஞ்சே
எழுந்திரு

வேழம் தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை விழுங்குவதாக
தொடர்ந்து வந்த
பெரிய நெஞ்சில் இரக்கம் இன்றியே
கொடுமை பூண்ட முதலையை
தப்பிப் போகாதபடி எண்ணிக் கொன்றவனும்

-படமுடைய பைந்நாகப் பள்ளியான் –
படத்தையும்
பசுமை நிறத்தையும் உடைய
திரு வநந்த ஆழ்வானை
திருப் பள்ளி மெத்தையாக உடையவனுமான எம்பெருமான் உடைய

பாதமே கை தொழுதும்
திருவடிகளை தொழுவோம்

கொய்ந்நாகப் பூம் போது கொண்டு
கொய்யப்பட்ட புன்னையின்
அழகிய மலர்களைக் கொண்டு

நாம் அவனை ஆஸ்ரயிக்கவே துக்கங்கள் எல்லாம் போம்
துக்கப் படுக்கைக்கு ஆள் இல்லை
ஒருகால் துக்கம் வந்தாலும் அது முதலை பட்டது படும்-

—————————————————————————————————————————————————————–

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
மண் தா என இரந்து மா வலியை-ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து –79-

————————————————————————————

எம்பெருமான் தனது ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டாவது கார்யம் செய்து அருளுபவன்
என்று மூதலிக்க வேண்டி இருக்க
சம்சாரத்தில் அவனை கொண்டாடுபவர் இல்லையே
வஞ்சகன்/ சர்வஸ்பஹாரி /தனக்கு தானம் கொடுத்தவனை பாதாளத்தில் தள்ளினவன் என்பரே
மகாபலியை அஹங்காரி/ ஆசூர பிரகிருதி என்று நினைக்காமல்
ஔதார்ய குணம் ஒன்றாலே கொல்லாமல் விட்டு அருளினானே

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பர்
தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானை
பழிக்கிறார்களே அன்றி
தன்னது அல்லாததை தன்னதாக அபிமானித்துக் கொடுத்த
அந்த மாவலியை
பழிப்பவர்கள் யாரும் இல்லையே
இஃது என்ன அநியாயம் –

மண் தா என இரந்து மா வலியை-
மாவடி நிலத்தை எனக்குத் தா என்று
மாவலி இடத்தில் யாசித்து

ஒண் தாரை நீர் அங்கை தோய
அழகிய நீர் தாரை
தனது அழகிய திருக் கையிலே
வந்து விழுந்ததும்

வடுத்து நிமிர்ந்திலையே
கடுக ஓங்கி வளரவில்லையோ
மாவலி தாரை வார்த்த உதகமும்
ப்ரஹ்மாதிகள் திருவடி விளக்கின உதகமும்
ஏகோதகம் என்னலாம் படி அத்தனை விரைவாக நீ வளர வில்லையோ –

நீள் விசும்பில் ஆரங்கை தோய
பரம்பின மேல் உலகில்
வாழ்கின்ற ப்ரஹ்மாதிகள் உடைய
அழகிய கைகள் ஸ்பர்சித்து
திருவடி விளக்கும்படி –

நீள் விசும்பிலார் அங்கை தோய
விசும்பில் உள்ள தேவர்கள் உனது திருத் தோளில் வந்து அணையும்படியாகவும்

நீள் விசும்பில் ஆரம் கை தோய –
பரந்த விசும்பில் உனது திரு மார்பில் அணிந்திருந்த
முத்தா ஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி
ஓங்கி -என்றுமாம் –

——————————————————————————————————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த -விடத்தரவை
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள் –80-

————————————————————————–

அடுத்த கடும் பகைஞற்கு
நெருங்கிய கொடிய சத்துருவான
கருடனுக்கு

ஆற்றேன் என்று ஓடி
நேரே நின்று பிழைத்து இருக்கத் தக்க
வல்லமை உடையேன் அல்லேன் என்று
சொல்லிக் கொண்டு
விரைந்து ஓடிப்போய்

படுத்த பெரும் பாழி
எம்பெருமான் பள்ளி கொள்ளுமாறு
விரித்த
பெருமை பெற்ற
படுக்கை யாகிற சேஷனை

சூழ்ந்த –
சுற்றிக் கொண்ட

விடத்தரவை
விஷத்தை உடைய ஸூ முகன்
என்கிற சர்ப்பத்தை
தேவேந்தரன் சாரதி மாதலி தனது புத்திரி குணகேசி என்பவளுக்கு வரம் தேடி
நாரத மகரிஷி உடன் புறப்பட்டு
பாதள லோகம் போகவதி நகரம் அடைந்து
ஐராவத குலத்தில்-ஆர்யகன் பௌத்ரன் -வாமனன் தௌஹித்ரன் -சிக்ரன் புத்திரன் -ஸூ முகன் நாக புத்ரன்
ஆர்யகன் இவனை கருடன் பஷித்து இவன் தந்தையை யும் ஒரு மாதத்தில் பஷிப்பதாக கருடன் சொல்லி இருப்பதை சொல்ல
மாதலி அந்த சுமுகனைஉபேந்திர மூர்த்தி உடன் இருந்த தேவேந்தரன் இடம் கூட்டிச் செல்ல
உபேந்த்ரன் இவனுக்கு அமிர்தம் தரலாம் இஷ்ட பூர்த்தி உண்டாகும் சொல்ல
வலது திருக்கை பாரம் கூட தாங்க முடிய வில்லை கருடனுக்கு
அபராத ஷாமணம் செய்து கொள்ள

வல்லாளன் கைக்கொடுத்த
வலிமை உடைய கருடன் கையிலே
அடைக்கலப் பொருளாக
தந்து ரஷித்த
கருடா சுகமா சொல்லி
குசலப் பிரச்னம் பண்ணுவான் ஆயினான்

மாமேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்
சிறந்த திருமேனி உடைய
எம்பெருமானுக்குத் தவிர
மற்ற தேவதாந்தரங்கட்கு
அடிமை ஆவாரோ –

————————————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-61-70–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கரும் கடலும் வெற்பும் -உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு –61-

—————————————————————————————

உலகு இறந்த ஊழியும் அழிந்து கிடந்த பிரளய காலத்திலும்

புந்தியிலாய-சங்கல்ப ஞானத்தினால் படைக்கப் பட்ட

புணர்ப்பு -படைப்புகளாம்

ரக்த சம்பந்தமே யாகும்
பெற்றவனை ஒழிய வளர்ப்பவன் இல்லை என்றது ஆயிற்று
இவை அறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே
இப்போது உபாயம் அறிவானும் அவனே என்று
கீழ்ப் பாசுரத்துடன் சேர்த்து பொருள் –

————————————————————————————————————————————————

புணர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மணமருவ மால் விடை ஏழ் செற்று–கணம் வெருவ
ஏ ழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-

———————————————————————————
ஸ்ருஷ்டித்து தூரச்தனாய் நில்லாமல்
களைகளைப் பிடுங்கி ரஷிப்பவனும் அவனே
தோள் என்றது கை
தவழ்ந்து போய் மருதம் முறித்ததால் கைகளின் மேல் ஏறிட்டு கூறுகிறார்

கணம் கூட்டம் -வேறுபாடி இன்றி அனைவரும் வெருவ

சூழ் அரவப் பொங்கணையான் தோள்
பரிமளம் குளிர்த்தி -பொருந்திய திரு அரவப் படுக்கையும் பொறாத சௌகுமார்யம்
இப்படி அல்லாடி திரிகிறான் -வயிறு எரிகிறார்-பொங்கும் பரிவு
எல்லா செயல்களையும் தோளின் மேல் ஏறிட்டு அருளுகிறார்-

——————————————————————————————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேளவனது இன்மொழியே கேட்டு இருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்–63-

————————————————————————————-

தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்

கேளவனது –
சகல வித பந்துவான அப்பெருமான்
விஷயமாகவே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே –

இன்மொழியே கேட்டு இருக்கும்
நா நாளும்
கோள் நாகணையான்-
மிடுக்கை உடைய திருவநந்த ஆழ்வானை படுக்கையாக
உடைய அப்பெருமானது

குரை கழலே
ஒலிக்கின்ற வீரக் கழலை அணிந்த திருவடிகளையே

கூறுவதே

நாணாமை நள்ளேன் நயம்
சப்தாதி விஷயங்களை வெட்க்கப் படாமல்
விரும்புவாரைப் போல் நான் விரும்ப மாட்டேன்
நயம் -நயக்கப் படுவது நயம் -ஆசைப் படத் தக்க விஷயாந்தரங்கள்
நயந்தரு பேரின்பம் எல்லாம் -இராமானுச நூற்றந்தாதி
எல்லா இந்த்ரியங்களும் அவன் மேல் ஊன்ற பட்ட படியை
ஹர்ஷத்துடன் அருளிச் செய்கிறார்
ஒரே உறுதியாக இருக்கவே நானும் நாமம் கொண்டு இதர விஷயங்களை காறி உமிழ்ந்தேன்-

——————————————————————————————————————————————————–

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் -வியவேன்
திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என்மேல் வினை–64-

————————————————————————

விஷயாந்தரங்கள் துர்வாசனையால்
தம்மை இழுக்க மாட்டாது என்கிறார் இதில்
அவன் அனுக்ரஹத்தை பூரணமாக பெற்று இருக்கிறேன் –
நயவேன் பிறர் பொருளை
பரமபுருஷன் உடைய ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று விருமப மாட்டேன்
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத -என்பதால் எம்பெருமானை- பிறர்- என்கிறார்
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -கண்ணி நுண் சிறுத் தாம்பு
கௌஸ்துப ஸ்தானமான ஆத்மவஸ்துவை -என்னது -என்று அபிமானித்ததால்
இராவணன் செயல் உடன் ஒக்கும்

நள்ளேன் கீழாரோடு
சம்சாரிகளோடே ச்நேஹம் கொள்ள மாட்டேன்
மாரீசன் போல்வார் உடன் ச்நேஹம் கொள்ள மாட்டேன்

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் –
சரிந்த ஸ்ரீ வைஷ்ணவர்களோடு அல்லால்
மற்றவர்கள் உடன் கால ஷேபம் செய்ய மாட்டேன்
உய்வேன் -உசாவேன் என்றபடி வார்த்தையாடி போது போக்குதல்
உசாத்துணை -ஸ்ரீ வைஷ்ணவர்களே

திருமாலை அல்லால் தெய்வம் என்று ஏத்தேன்
ஸ்ரீ யபதியை தவிர வேறு தேவதாந்தரங்களை
தெய்வமாக கொண்டு துதிக்க மாட்டேன்

வியவேன்
இப்படி இருக்க ஹேதுவான சத்வ குணம் என்னிடம் தான் உள்ளது
என்று அஹங்கரித்து என்னைப் பற்றி
நானே ஆச்சர்யம் பட மாட்டேன்

திருமாலை அல்லது வியவேன் -என்றுமாம்

வருமாறு என் என்மேல் வினை
இப்படியானபின்பு
அவன் அனுக்ரஹத்துக்கு இலக்கான என்மேல்
அவன் நிக்ரஹ ரூபமான பாபம்
வரும் விதம் எது -வர மாட்டா -என்றபடி
அவசியம் அனுபோக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் -சாஸ்திர வாக்கியம்
வருமாறு என் நம் மேல் வினை -என்றும் பாடம்
தம்முடன் சம்பந்தித்ததவர்களையும் கூட்டிக் கொண்டு அருளுகிறார்
ஒருமையில் பன்மை வந்த வழு வமைதி-

———————————————————————————————————————————————————-

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிகட் செல்லார் -நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்
கரியானை கை தொழுதக் கால்–66-

—————————————————————————————-

ஆழ்வார் தாம் ஒருங்கு பட்ட நிலையை அருளிச் செய்த அநந்தரம்
நாமும் அந்த நிலை பெற இலகுவான உபாயம் காட்டி அருளுகிறார்

வினையால் அடர்ப்படார்
நல்வினை தீ வினை இரண்டாலும்
நெருக்குப் பட மாட்டார்கள்
பொன் விலங்கு புண்யம் இரும்பு விலங்கு பாபம்

வெந்நரகில் சேரார்
கொடிய சம்சாரம் ஆகிய நரகத்திலே மீண்டும் சென்று
சேர மாட்டார்கள்
அவன் உடன் கூடி இருத்தல் ஸ்வர்க்கம் பிரிந்தால் நரகம் -சீதை –

தினையேனும் தீக்கதிகட் செல்லார் –
சிறிதேனும் கெட்ட வழியிலே போக மாட்டார்கள்
தர்ம புத்திரன் நரக தர்சனம் பண்ணினவோபாதியும் கூடாது இவர்களுக்கு
அஸ்வத்தாமா ஹத குஜ்ஞ்ஞர

நினைதற்கு அரியானை
ஸ்வ பிரயத்தனத்தால்
நினைக்க கூடாதவனும்

சேயானை
நெஞ்சுக்கு விஷயமாகாத படி
தூரச்தனாக இருப்பவனும்

ஆயிரம் பேர்
ஆயிரம் திரு நாமங்களை உடையவனும்

செங்கண் கரியானை கை தொழுதக் கால்
சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவையும் உடையவனுமான பெருமானைக் குறித்து
அஞ்சலி பண்ணினால்

————————————————————————————————————————————————————————————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் -வேலைக்கண்
ஓராழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்–66-

——————————————————————————–

காலை எழுந்து உலகம் கற்பனவும்
உயர்ந்தவர்கள் சத்வம் வளரக் கூடிய விடியல் காலையில் துயில் எழுந்து அப்யசிப்பனவும்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே

கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும்
படித்து அறிவு நிரம்பிய
வைதிகோத்தமார்கள்
சாஷாத் கரிக்க ஆசைப்படுவனவும்
கீழ் வேதம் -கர்ம காண்டம்
மேல் வேதம் -ப்ரஹ்ம காண்டம் உபநிஷத்
மேலைத் தலை மறையோர் -வேதாந்திகள் என்றபடி

எவை என்றால் –

வேலைக்கண் ஓராழியான் அடியே
திருப் பாற் கடலிலே
ஒப்பற்ற திரு வாழியை உடையவனாய்
பள்ளி கொண்டு இருக்கும் பெருமான் உடைய
திருவடிகளேயாம்

ஓதுவதும்
மகான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்

ஒர்ப்பனவும்
மனனம் பண்ணப் பெறுவனவும்
எவை என்றால்

பேராழி கொண்டான் பெயர்
பெரிய கடல் போன்ற திரு மேனியைக் கொண்ட
அப்பெருமான் உடைய
திரு நாமங்களே யாம்-

—————————————————————————————————————————————————————————————

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனையே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு–67-

—————————————————————————–

பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு
பொங்கிக் கிளறுகின்ற மகா சமுத்ரம் நோக்கியே
ஆறுகளானவை செல்லும்

ஒண் பூ உயரும் கதிரவனையே நோக்கும்
அழகிய தாமரைப் பூவானது
உக்கத ஸ்தானத்தில் ஆகாசத்தில்
இருக்கிற சூரியனைக் கண்டே மலரும்

-உயிரும் தருமனையே நோக்கும்
பிராணனும் யமதர்ம ராஜனையே
சென்று சேரும்
இவை போலவே

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
ஞானமானது
அழகிய தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு
வல்லபனான பெருமான் ஒருவனையே சென்று பற்றும்
பகவத் விஷயம் அல்லாத ஞானம் செருப்பு குத்த கற்றது போலேயாம்

தொக்கிலங்கி யாரு எல்லாம் பறந்தோடி தொடு கடலே
புக்கன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கிலங்கு முகில் நிறத்தாய் வித்துவக் கோட்டு அம்மா உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே -பெருமாள் திருமொழி

முமுஷுப்படி திரு மந்திர பிரகரணம் -73-இத்தால் தாமரையாள் கேள்வன் ஒருவனையே
நோக்கும் உணர்வு என்றதாயிற்று
இதற்கு மா முனிகள் உணர்வு -ஞான மாயனான ஆத்மா
திருமாலுக்கு அனன்யார்ஹ சேஷ பூதன் -என்பதை இப்பாட்டு உணர்த்தும் என்று காட்டி அருளுகிறார்

ஆக
எம்பெருமானைப் பற்றிய ஞானமே ஞானம்
ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்
மிதுன சேஷத்வமே ஜீவாத்மா லஷணம் -தாமரையாள் கேள்வன் என்பதால்

ஸ்ரீ வைஷ்ணவ பிராணன் யமனை கிட்டி சேராதே சங்கை உண்டே
உயிரும்-பகவத்பரர் அல்லாத நாட்டில் பிராணிகள் அடங்கலும் -அப்பிள்ளை உரை
ஆத்மா வேறு பிராணன் வேறு -சித்தாந்தம்
ஸ்ரீ வைஷ்ணவ ஆத்மா எம்பெருமானைச் சேர்ந்தாலும்
பிராணன் யமனைச் சென்று சேரும் என்பர் சிலர்
மற்றும் சிலர்
யாமோ வைவஸ்வதோ ராஜா யச்தவைஷா ஹ்ருதி ஸ்தித -என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம் -என்றும்
எம்பெருமானையே யமனாகவும் தருமனாகவும் சொல்லி இருப்பதாலே
அங்கு எம்பெருமானே பொருள் என்பர் சிலர்-

————————————————————————————————————————————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்–68-

—————————————————————————————

உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி தோரூழி
இப்படிப் பட்ட உன்னுடைய பெருமையை
காலதத்வம் உள்ளதனையும் இருந்து ஆராய்ந்தாலும்
அறியக் கூடியவர் ஆர்

உணர்வார் ஆர் உன்னுருவம் தன்னை -உணர்வாரார்
உனது திவ்யாத்மா ஸ்வரூபத்தை
தான் அறியக் கூடியவர் ஆர்

விண்ணகத்தாய்
பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவனே

மண்ணகத்தாய்-
இந்த மண்ணுலகில் திரு வவதரிப்பவனே

வேங்கடத்தாய்-
திருமலையில் நின்று அருளுபவனே

நால் வேதப் பண்ணகத்தாய்
பண் நால் வேதத்து அகத்தாய்
ஸ்வர பிரதானமான நான்கு வேதங்களாலும்
அறியப் படுபவனே

நீ கிடந்த பால்
ஆர்த்த ரஷணத்துக்காக
நீ பள்ளி கொண்டு இருக்கப் பெற்ற திருப் பாற் கடலை தான்
உணர்வார் ஆர்

யாரும் இல்லை
சர்வஞ்ஞன் உன்னாலும் உணர முடியாதே
தனக்கும் தன் தன்மை அறிவரியான்-

——————————————————————————————————————————————————————–

பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர் -ஆல்அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல் –69-

——————————————————————————–

சமத்காரமான கேள்வி
எத்திறம் என்று நினைந்து ஈடுபடும்படியான
ஏழு பிராயத்தில் கோவர்த்தனம் குடையாக பிடித்த
செயலை விட ஆச்சர்யமான
அகடிதகட நா சாமர்த்தியமான செயல்
பாலன் தனது உருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்தது மெய் என்பர்-

வேலை நீருள்ளதோ
பிரளய சமுத்ரத்தில் தோன்றிய ஆலம் தளிரா

விண்ணதோ
பிடிப்பு ஒன்றும் இல்லாத ஆகாசத்தில் தோன்றியதா
மண்ணதோ
பிரளயத்தில் கரைந்து போன மண்ணில் நின்றும் தோற்றியதா

சர்வஞ்ஞன் உன்னாலும் கண்டு பிடித்து சொல்ல முடியாத கேள்வி
அதிமாநுஷ சே ஷ்டிதங்களில் குதர்க்கம் பண்ணுதல் தகாது
அல்பபுத்திக்கு அசம்பாவிதமாக தோற்றினாலும்
விசித்திர சக்தனான
அவன் செயல்களில் துராபேஷங்கள் செய்ய அதிகாரம் இல்லை-

———————————————————————————————————————————————————————————-

சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை-நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று –70-

————————————————————————————-

சொல்லும் தனையும்
சொல்லக் கூடிய சக்தி உள்ள வரையிலும்

தாமத்தால்
மந்த்ரம் இல்லாத கிரியைகளாலும்

தவறாமல் சரிந்தே போகக் கூடியது உடல்
இதம் சரீரம் பரிணாம பேதலம் பதத்யவச்யம் ச்லதசந்தி ஜர்ஜரம்
அப்படி உடலால் செய்ய முடியாவிடில் வாயாலே திரு நாமங்களை சொல்லலாமே

தொழுவதற்கு சக்தி இல்லா விடில்
திருநாமங்கள் சொல்லும் சக்தி உள்ள வரையில்
புகழ்ந்தீர்கள் ஆகில் அது மிகவும் நன்று

————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-51-60–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே -களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான் திருநாமம் எண் –51-
களியில்-அஹங்காரத்தால்

—————————————————————————————————–

எம்பெருமான் உடைய திரு நாமங்களை
பரம போக்யமாக வாயாலே சொல்லவே
அப்பெருமான்
ப்ரஹ்லாதன் உடைய விரோதிகளைப் போக்கி
தன்னைக் கொடுத்தால் போலே
நமக்கும் விரோதியைப் போக்கி
தன்னையும் தந்து அருள்வான்
நெஞ்சமே
நீ திருவடி இணையை சேவித்து அனுபவிப்பதற்கு
தெளிவு கொண்டு இருந்தால்
அவன் பிரசன்னனாய் அருள் புரிவான்
நீ தெளி வுற்று இருக்கிறாய் எனபது
நன்கு விளங்குமாறு ஸ்ரீ நரசின்ஹா மூர்த்தியின் திரு நாமங்களை
எண்ணிக் கொண்டு இரு –

——————————————————————————————————————————————————

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் -நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கை தொழுவர் சென்று –52-

ஒரு மாலையால் ஒப்பற்ற புருஷ ஸூ கத மாலை கொண்டு

——————————————————————————————

அஹங்காரம் கொண்ட
முப்பத்து மூவர் அமரர்களும்
எம்பெருமானை அடி பணிந்தே சிறப்பு உற்று இருக்கின்றனர்
முப்பத்து மூவரை எடுத்துக் காட்டினது
முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரையும்
எடுத்துக் காட்டினதுக்கு பர்யாயம்
பெரிய திருவந்தாதியில்
இருநால்வர்
ஈரைந்தின் மேல் ஒருவர்
எட்டோடு ஒரு நால்வர்
ஓர் இருவர் -என்று நம் ஆள்வார் அருளிச் செய்கிறார்-

————————————————————————————————————————————————-

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –53-

————————————————————————————

திருவனந்தாழ்வான் போலே
எல்லா கைங்கர்யங்களையும் எல்லா காலங்களிலும் செய்ய
திரு உள்ளம் கொண்ட ஆள்வார்
அவன் செய்யும் அடிமைகளை எடுத்து காட்டுகிறார்
சென்றால் குடையாம்
அவன் உலாவி அருளும் போது
மழை வெய்யில் படாதபடி
குடையாக வடிவு எடுப்பான் –

இருந்தால் சிங்காசனமாம்
எழுந்து அருளி இருந்த காலத்தில்
திவ்ய சிம்ஹாசன ஸ்வரூபியாய் இருப்பான்

நின்றால் மரவடியாம்
நின்று கொண்டு இருந்தால் பாதுகையாய் இருப்பான்

நீள் கடலுள் என்றும் புணையாம்-
திருப் பாற் கடலில் திருக் கண் வளர்ந்து அருளும் போது
மெத்தையாய் இருப்பான்

புணையாம் -திருப் பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவான்

அணி விளக்காம் –
ஏதேனும் ஒன்றை விளக்கு கொண்டு காண அவன் விரும்பும் பொழுது விளக்கும் ஆவான்

மணி விளக்காம் என்றுமாம்

பூம் பட்டாம்-
சாத்திக் கொள்ளும்படி திரு பரியட்டத்தை அவன் விரும்பும் பொழுது அதுவும் ஆவான்

புல்கும் அணையாம்
சாய்ந்து அருளும் போது தழுவிக் கொள்ளுவதற்கு
உரிய உபாதாநமும் ஆவான்

பிரணய கலஹத்தினில் விரஹ துக்கம் தோன்றாதபடி அணைத்துக் கொள்வானாம் என்றுமாம்

ஆளவந்தார் -செய்யா ஆசனம் இத்யாதி
சென்றால் குடையாம் கடல் புணையாம் திருத் தீவிகையாம்
நின்றால் இரு திருப் பாதுகையாம் நித்திரைக்கு அணையாம்
குன்றா மணி ஒளி ஆசனமாம் புணை கோசிகையாம்
அன்று ஆலிலையில் துயில் அரங்கேசர்க்கு அரவரசே -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -திருவரங்கத்து மாலை

———————————————————————————————————————————————————————

அரவம் அடல் வேழம் மான் குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மல் குன்றம் -காவின்றி
விட்டிறுத்து மேய்தொசித்து கீண்டு கூத்தாடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன்–54-

—————————————————————————–

திருப் படுக்கையிலும் பொருந்த மாட்டாமல்
லீலி விபூதியில் பிறந்து
களை பிடுங்கி
விபூதியை பாது காத்து அருளும் திவ்ய சேஷ்டிதங்களை
அனுசந்திக்கிறார்
முறை நிரைநிரை அணி அலங்காரம்

அரவம் விட்டு -காளியனை கொள்ளாமல் விட்டு அடித்ததும்
அடல் வேழம் இறுத்து -பொருவதாக வந்த குவலயா பீடம் தந்தம் முறித்து உயிர் தொலைத்தும்
ஆன் மேய்த்து -பசுக்களை வயிறு நிரம்ப மேய்த்ததும்
குருந்தம் ஒசித்து -அசூராவேசமுடைய குருந்த மரத்தை ஒடித்துப் பொகட்டும்
புள்வாய் கிண்டும் -பகாசுரன் வாயைக் கிழித்தும்
குரவை கோத்தும் -ராசக்ரீடையை இடைப் பெண்கள் உடன் கை கோத்து ஆடியும்
குடம் ஆடி -குடங்களைக் கொண்டு ஆடியும்
முலை உண்டு -பூதனை முலையை உயிர் உடன் உறிஞ்சி உண்டும்
மல் அட்டும் -கம்சனால் ஏவப்பட்ட மல்லர்களை கொன்றும்
குன்றம் எடுத்தும் -கோவர்த்தன மலையை குடையாக எடுத்தும்
இவை அனைத்தும் தாமரைக் கண்ணன் அவன் திவ்ய சேஷ்டிதங்கள்-

—————————————————————————————————————————————————————————–

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் –55-

———————————————————————————

பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்
இடைத்தனத்தில் குறைவின்றி பூரணமாய் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
அன்றிக்கே
ஒரு பாகவதன் பேரை அபாகாவதன் தரிப்பது
அவனையும் யம கோஷ்டியில் பட்டோலை பார்க்கப் பெறாது
ஒரே சொல்லாக கொண்டு நாயனார் ஆழி மழைக் கண்ணா-திருப்பாவை வ்யாக்யானத்தில் அருளிச் செய்தபடி

யமபடர்கள் பாகவதர்கள் இடம் அஞ்சி இருக்கும் படியை அருளிச் செய்கிறார்
குணாகுணங்களை ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள்
அவர்களை கண்டால் அனுவர்தித்து இருங்கள் என்று நியமித்தான்
பிராட்டியே சிதைகுரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்வார் என்னுமவன்

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்கு ஆட்பட்டார் பேர்–நான் முகன் திருவந்தாதி

கெடுமிடராய வெல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினையும் செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் -திருவாய்மொழி

வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -திருச் சந்த விருத்தம்

ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூல
பரிஹர மதுசூதன பிரபன்னான் ப்ரபுரஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்

————————————————————————————————————————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை
ஆரே அறிவார் அது நிற்க -நேரே
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன்–56-

———————————————————————————-

பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை ஆரே அறிவார் அது நிற்க –
எம்பெருமான் பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டு அறிய முடியாதது
அவன் திரு நாமங்களை வாயில் வந்தபடி எல்லாம் சொல்லி கூப்பிடுமது செய்யலாம் அத்தனை ஒழிய
ப்ரஹ்ம ஞானி ப்ரஹ்ம வித் -என்றது எல்லாம் அளவிட்டு அறிந்தமையை சொன்னது அன்று
கன்றுக் குட்டி அம்மே -சப்தம் செவிப்பட்டதும் தாய் பசு இரங்கி நிற்பது போலே
திருநாமத்தை வாய் விட்டு பிதற்றினால் அவன் வந்து அருள் புரிவான்
பெம்மான் -பெருமான் மருவி
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன்

—————————————————————————————————————————————————————————————–

அயனின்ற வல்வினையை யஞ்சினேன் யஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் -நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது –57-

——————————————————————————–

திருமந்த்ரத்தின் பொருளை விவரிக்கும் இப்பாசுரம் பாடினதால்
அஞ்சின அச்சம் தீர்ந்து உஜ்ஜீவனம் பெற்றேன்

நயம் நின்ற
திருமந்த்ரார்த்தை நயப்பித்தலில் நோக்கமாய் உள்ள -என்றுமாம்
எம்பெருமான் உடைய ஸ்வரூபம்
ஜீவாத்மாவின் ஸ்வரூபம்
அடைவதற்கு உபாயம்
அடைந்து பெற வேண்டிய பேறு
விரோதி ஸ்வரூபம்
ஆகிய அர்த்த பஞ்சக அர்த்தங்களும் திருமந்த்ரார்த்தம்
இதுவே இந்த பிரபந்தத்தாலும் விவரிக்கப் படுகின்றன-

————————————————————————————————————————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே -பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை அடை–58-

———————————————————————————-

தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும்
புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டு
தூபத்தை ஏந்திக் கொண்டு
எம்பெருமானை வணங்கி
உஜ்ஜீவிப்பொம்

எழு
நீ புறப்பட்டு

வாழி நெஞ்சே –
உனக்கு இந்த ஸ்வ பாவம் நித்யம் ஆயிடுக –

நாம் இப்படி சொல்ல காரணம் என்ன வென்றால்

பழுதின்றி
முறைப்படி
குருகுல வாசம் செய்து
ஆச்சார்யர் மூலமாகவே கற்று

மந்திரங்கள் கற்பனவும்
பகவத் மந்த்ரங்களை அப்யசிக்கின்றனவும்

மாலடியே கை தொழுவான்
சர்வேஸ்வரன் திருவடிகளை
தொழுவதற்க்கே யாம் –

ஆனபின்பு

அந்தரம் ஒன்றில்லை அடை
நாம் ஆறி இருக்க அவகாசம் இல்லை
அப் பெருமானை விரைவிலே சென்று கிட்டு
திரு உள்ளத்தை த்வரைப் படுத்துகிறார்
நெஞ்சு உடனே அனுகூலிக்கவே வாழி நெஞ்சே என்கிறார்

———————————————————————————————————————————————————————————–

அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் –59-

————————————————————————————

அடைந்த
அடியே பிடித்து பற்றிக் கிடக்கிற

அருவினையோடு
போக்குவதற்கு அருமையான பழ வினைகளும்

அல்லல்
அந்த பழ வினைகளின் பயனாக வரும் மனத் துன்பங்களும்

நோய்
சரீர வியாதிகளும்

பாவம்
இப்போது செய்கிற பாவங்களும்

மிடைந்தவை-
இப்படி பலவகையாக ஆத்மாவை தெரியாதபடி
மூடிக் கிடகின்றவை

மீண்டு ஒழிய வேண்டில்-
வாசனையோடு விட்டு நீங்க வேண்டுமானால்

நுடங்கிடையை
மெல்லிய இடையை உடைய பிராட்டியை
நமஸ் சிறையில் வைத்து நநமேயம் என்று இருந்த

முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய
முன் இரு காலத்தில்
இலங்கா புரியில் சிறை வைத்த இராவணன்
உடைய மிடுக்கு அழியும்படி

முன்னொரு நாள் தன் விலங்கை வைத்தான் சரண்
முன்பு ஒரு காலத்தில் ஸ்ரீ ராமனாக திருஅவதரித்து
திருக்கையிலே எடுத்து பிடித்தவனான
பெருமானே உபாயமாவான் –

இத்தால்
எம்பெருமானுக்கு போக்யமாய் உள்ள ஆத்மவஸ்துவை
என்னுடையது என்று செருக்கு உற்று இருக்குமவர்கள்
ராவணன் பட்ட பாடு படுவார்கள்
என்னும் இடமும்
ஆத்மவஸ்து அவனுடையது என்று அனுகூலித்து இருக்குமவர்களுக்கு வரும் விரோதிகளை
பிராட்டியின் துயரத்தை பரிஹரித்து அருளினது போலே
பரிஹரித்து அருளுவான் என்னும் இடமும் தெரிவிக்கப் பட்டன-

—————————————————————————————————————————————————————————–

சரணாம் மறை பயந்த தாமரை யானோடும்
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த உலகு –60-

—————————————————————————–

சரணாம் மறை
சரண் ஆம் மறை –
எல்லார்க்கும் ஹிதம் உரைக்கும் வேதத்தை

பயந்த தாமரை யானோடும்
எம்பெருமான் இடத்தில் நின்றும் தான் அடைந்து
நாட்டில் உள்ளவர்களுக்காக வெளிப்படுத்தின
பிரமனோடு கூட

மரணாய மன்னுயிர்கட்கெல்லாம்-
மரணம் அடையும் தன்மையை உடைய
நித்தியமான ஸ்வரூபத்தை உடைய
ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும்

அரணாய
அரண் ஆய -ரஷகமான விதங்களை

பேராழி கொண்ட பிரான் அன்றி
பெரிய திரு ஆழியை திருக்கையில் கொண்ட
எம்பெருமான் அறிவனே அல்லது

மற்று அறியாது ஓராழி சூழ்ந்த உலகு
அவனிலும் வேறான
கடல் சூழ்ந்த இவ் உலகில் உள்ளார்
அறியமாட்டார்கள் –

பலனை அனுபவிப்பனும் எம்பெருமானே
அதற்கு உபாய அனுஷ்டானம் செய்பவனும் அவனே
ஸ்வாமியின் கார்யமே ஒழிய சொத்தின் கார்யம் அல்லவே
பரம புருஷ ஜ்ஞாநினம் லப்த்வா -ஸ்ரீ பாஷ்யம்
இந்த அர்த்தம் வேதாந்த சித்தம் என்று காட்டி அருள சரணா மறை பயந்த -என்கிறார்

அரணாய -சிலர் தப்பாக எம்பெருமானுக்கு விசேஷணம் என்பர்
இது அரணானவற்றை இரண்டாம் வேற்றுமை தொகை-

ஆழி சூழ்ந்த உலகமானது மன்னுயிர்க்கு எல்லாம் அரணாய் இருக்கிற
பேராழி கொண்ட பிரானை அன்றி மற்றது ஒன்றையும் அறியாது -என்றும் பொருள் சொல்லலாமே என்றாராம் ஒருவர்
உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்து இருப்பதால்
இப்பொருள் இணங்காது என்று கொண்டு
நஞ்சீயர் -உலகம் எனபது உயந்தோர் மாட்டே என்பதால்
சிறந்த மகா ஞானிகள் என்று கொண்டு இந்த அர்த்தத்தை இசைந்தாராம்
இதைக் கேட்ட பட்டர்
இங்கு ஓராழி சூழ்ந்த விசேஷணம் இருப்பதால்
கடலால் சூழப் பட்ட மகான்கள் என்று சொல்லப் போகாது
அதனால்
கடல் சூழ்ந்த இவ் உலகமானது தனக்கு அரணானவற்றை அறிய மாட்டாது
பேராழி கொண்ட பிரானே அறிவான் என்றே பொருள் கொள்ள வேணும் என்று
உபபாதித்து உரைத்து அருளினாராம்
இங்கனே நிர்வஹித்து பட்டர் அருளிச் செய்த போது
நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டு இருந்தார்கள்
ஆனாலும் ஒரு கால் இதனை நஞ்சீயர் மறந்து விட
நம்பிள்ளை நினைவு படுத்தி அருளினார் -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்து உள்ளார்-

———————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

 

 

முதல் திரு வந்தாதி -பாசுரங்கள்-41-50–திவ்யார்த்த தீபிகை —

September 24, 2014

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு –41-

—————————————————————————–

எம்பெருமான் உடைய வாத்சல்ய குணத்தில் ஈடுபட்டு பேசுகிறார்

என்னெஞ்சே -என்றும்
எனது மனமே எப்போதும்
புறனுரையே யாயினும் –
மேலுக்கு சொல்லுகிற வார்த்தையாய் இருந்தாலும்
மித்ர பாவேனசம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –
நமது ஆபி முக்யத்தை மாத்ரமே பார்த்து
உறங்குகிற குழந்தையை அனைத்துக் கொண்டு கிடக்கும் தாயை போலே
தான் அறிந்த சம்பந்தமே காரணமாக
நம்மை விடாமல்
சத்தையை நோக்கிக் கொண்டு துணையாக போருமவன்
நன்மை என்று பேரிடலாவது தீமை உண்டா என்று பார்த்து
ஸூ க்ருதங்களை ஏறிட்டு
மடிமாங்காய் இட்டு கார்யம் செய்பவன்

பொன்னாழிக் கையான் திறனுரையே சிந்தித்து இரு
சக்கரபாணி எம்பெருமான் விஷயமாக
பேசும் பேச்சையே
அனுசந்தித்துக் கொண்டு இரு

அப்படி இருந்தால்

இன்று முதலாக
இன்று தொடங்கி

குன்றனைய குற்றம் செய்யினும்
மலை போன்ற பெருத்த குற்றங்களைச் செய்தாலும்

குணம் கொள்ளும்
அவற்றை எல்லாம் எம்பெருமான் குணமாகவே
திரு உள்ளம் பற்றுவன்

என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார்
அக்ருத ஸூ க்ருதகஸ் ஸூ துஷ்க்ருதா சுபகுண லவலேச தேசாதிக
அசுபகுண பரஸ் சஹஸ்ரா வ்ருத வரதமுருதயம் கதிம் த்வாம் வ்ருனே -ஸ்ரீ வராத ராஜ சத்வம் -92-
குற்றங்களை குணமாக கொண்டால் பிராந்தன்
பிரேமத்தின் கனத்தால் வரும் பிரமை எல்லாம் அடிக் கழஞ்சு பெருமே
ஜ்ஞானி து ஆத்மைவ மே மதம் -என்றானே
நோன்பு நோற்கை
காமன் காலில் விழுதல்
மடலூர்கை
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு
அன்பு கடந்த பிரேமம்
தோஷம் காணாது இருப்பதே அஞ்ஞானம்
கண்டு குணமாக கொள்வது வாத்சல்யம்
பக்த வத்சலன் -பட்டர் பாஷ்யம் -ஓர் அடியான் கிடைக்கப் பெற்ற பெருமையினால்
மற்றது ஒன்றிலும் ஆசை கொள்ளாது எல்லாவற்றையும் மறந்து இருக்கை –
சஹாஸ்ராம்சு -சர்வதோமுகமான ஞானம் உடையவன்
அவிஞ்ஞாதா -அடியார்கள் குற்றங்களை அறியாதவன்
தோஷ அதர்சித்வம் -ப்ரீதியின் பிரதம பர்வம்
தோஷ போக்யத்வம் -ப்ரீதியின் சரம பர்வம்
தோஷங்களை காணா விடில் ஷமிக்க பிரசக்தி தானும் இல்லை இ றே
எம்பெருமான் உடைய பிரணய ரசம் இருகரையையும் அழியப் புக்கால்
அணையிட்டும்
ஆணையிட்டும்
தடுக்க வல்லார் இல்லை கிடீர்
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தட்டும்
அவனுடைய கல்யாண குணபிரசரம் ஒரு தட்டுமாய் இருக்கும் -என்று பிள்ளான் அருளிச் செய்யும்

தோஷ போக்யத்வத்தை மங்க ஒட்டு உன் மா மாயை

தன் கன்றின் உடம்பில் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ –
எம்பெருமான் உடைய தோஷ போக்யத்வ குணத்தை சாக்ரஹமாக இல்லை செய்யுமவர்கள்
நிர்க்குண ப்ரஹ்மவாதி கோடியிலே அந்தர்பவிக்கை அழகிது
என்று எண்ணுவார் இடரைக் களைவான் -பிள்ளை பணிக்கும் –

————————————————————————————————————————————————————————————-

திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் -திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

————————————————————————————

 

திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
மூவருடன் கலந்து பரிமாறும் போது
குற்றங்களை குணமாக கொள்ளுவதற்கு அடி சொல்லிற்று இத்தால் –

பாலோதம் சிந்தப்
திருப்பாற் கடலிலே
சிறு திவலைகள் ஆனவை சிதறி
விழுந்து ஸூ கப்படுத்த

பட நாகணைக் கிடந்த
படம் எடுத்த பாம்பணையில் பள்ளி கொண்ட

மாலோத வண்ணர் மனம்
பெரிய கடல் போன்ற வடிவை உடையனான
எம்பெருமானது

திருமகள் மேல்
பெரிய பிராட்டியார் மேல்
காதல் கொண்ட திரு உள்ளமானது

திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
பெரிய பிராட்டி ஒருத்தியின் மேலே
அற்றுத் தீர்ந்து இருக்கிற விதம் என்னோ

தீர்ந்தவாறு என் கொல் -மூவரிடம் அன்வயித்து
திரு மகட்கே தீர்ந்தவாறு என்கொல் –
மண் மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
ஆய மகட்கே தீர்ந்தவாறு என்கொல்
திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பாராம்

சௌபரி-மாந்தாதா உடைய 50 பெண்கள் உடன் பரிமாரினது போலே
பட்டர் நிர்வாஹம்
திருமகள் உடன் கலந்து பரிமாறும் பொழுது
மற்ற பிராட்டிமார்கள் போகத்துக்கு உபகரணமாய் இருப்பார்கள்
பெரிய பிராட்டியார் அவர்களை தம்முடைய அவயவங்களாகக் கொண்டு -தோள்கள் முலைகள் போலே -ரமிப்பிபார்

அற்றுத் தீருகை ஒன்றிலே ஆழம் கால் பட்டு இருக்கை
தாமரைக் கண்களுக்கே அற்றுத் தீர்ந்தும் -திருவாய்மொழி-

————————————————————————————————————————————————————————————————————-

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கைகூடும் -புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாந்தொழா நிற்பார் தமர்–43-

————————————————————–

பிராட்டிமார்கள் புருஷகார பலத்தால்
குற்றங்களை குணமாக கொள்வான்
ஸ்வரூபத்துக்கு சேர கிஞ்சித்கார கைங்கர்யங்களில் அன்வயிக்கலாம்
அப்படி அன்வயிக்கவே
மனமாசு தீரும் அருவினையும் சாரா
தீமைகள் தொலைந்து
மனஸை பற்றிய அஜ்ஞ்ஞானம் விஷய ராகம்
தோஷங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுப் போம்
இவற்றுக்கு மூல காரணமான துஷ் கருமங்களும் கிட்டாதபடி தொலைந்து போம்

தனமாய தானே கைகூடும்
நன்மைகள் கைகூடும்
ஸ்வரூப அனுரூபமான செல்வம் ஆகிய
பரமபக்தி போல்வன தனக்குத் தானே வந்து கைபுகுரும்
நின்னையே தாள் வேண்டி நீள் செல்வம் வேண்டாத அடியவர்கள் –

புனமேய பூந்துழாயான்-
சர்வ ரஷகன் -தனிமாலை இட்டு

அடிக்கே போதொடு நீரேந்தி தாந்தொழா நிற்பார் தமர்
திருவடிகளிலே
திருவாராதன உபகரணங்கள் கொண்டு பணிமாற-

—————————————————————————————————————————————————————————

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் -தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்–44-

—————————————————————————————

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே  தமருகந்தது எப்பேர் மற்றப்பேர் –
ஆஸ்ரிதர் உகந்த ரூப
நாமங்களையே கொண்டு தன்னை அமைத்து
அர்ச்சாவதார ரூபியாய் அடிமை கொள்வான்
தமருகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே  அவ்வண்ணம் ஆழியானாம

தமருகந்தது எவ்வண்ணம் தப்பான பாடம்

எந்த குணங்களையோ -சேஷ்டிதங்களையோ

அனுசந்தித்து அநவரத பாவனை பண்ணுகிறார்களோ
அவற்றையே கொண்டு இருப்பான்
அர்ச்சாவதார சௌலப்யம் காட்டி அருளுகிறார் –
எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்தி அருளா நிற்க
சில பிள்ளைகள் காலாலே மணலிலே கீறி உம்முடைய பெருமாள் என்று காட்ட
பாத்தரத்தை வைத்து தண்டனிட்டு அருளினார்
கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள்
திருவீதியில் இருந்து
பெருமாளும் நாய்ச்சிமாரும் பெரிய திரு மண்டபமும் கற்பித்து
பெரிய திருப் பாவாடையும் அமுது செய்வித்து
எம்பெருமானார் பிரசாதப்படும் -என்று மணலைக் கையாலே முகந்து எடுக்க
தத்காலத்திலே மாதுகரத்துக்கு எழுந்து அருளிய உடையவர்
அவ்விடத்திலே அது கேட்டருளி
தெண்டனிட்டு
அவர்களுடைய பிரசாதத்தை பாத்ரத்தில் ஏற்றார் -என்று ஜீயர் அருளிச் செய்தார்

எங்கள் ஆழ்வான் – திருக் குருகைப் பிரான் பிள்ளான் சிஷ்யர் –
அவர் பாடே ஆயர் தேவு சென்று நாவற் பழம் வேண்ட
நீ யார் என்று அவர் கேட்க
ஜீயர் மகனான ஆயர் தேவு என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை எங்களை குடி இருக்க ஓட்டுகிறிலன் என்றார்
நஞ்சீயர் திரு வாராதன பெருமாள்- ஆயர் தேவு-சலங்கை  அழகியார்

——————————————————————————————————————————————————————————-

ஆமே யமரர்க்கு அறிய அது நிற்க
நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

——————————————————————————————–

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான்
அந்த எம்பெருமான் உடைய குணங்களை
தேவர்களால் அறிய முடியாது
எம்பெருமான் திருவருளால் தெளியக் காண வல்ல
நாமே அறிய வல்லோம்
அன்றிக்கே
தேவர்களாலும் அறிய மாட்டாத பொழுது
நாமோ அறியக் கடவோம்
என்று நைச்யம் பாராட்டி அருளிச் செய்கிறார் என்றுமாம்-

ஆய்ந்த வருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்த்த குழவியாய் வாளரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் –மூன்றாம் திருவந்தாதி -77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்டவரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போம் குமரருள்ளீர் புரிந்து -நான்முகன் திருவந்தாதி -44-

இக்கதை இதிஹாச புராணங்களில் இருப்பதாக தெரியவில்லை
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி
சக்கரத்தால் தலை கொண்டாய் -என்றும்
எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –
இவையும் ஆழ்வார்களால் மாத்ரம் அருளிச் செய்யப் படுபவை-

———————————————————————————————————————————————————————–

பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர -புண் புரிந்த
வாகத்தான் தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46

————————————————————————————————

பிரமனுக்கு அருள் புரிந்தமை கீழே சொல்லி
இதில் ருத்ரனுக்கு அருள் புரிந்து அருளியதை காட்டி அருளுகிறார்
பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர
-புண் புரிந்த வாகத்தான்
தனது நகத்தால் கீறி புண் படுத்திக் கொண்டவன்
தாள் பணிவர் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார்
தாள் பணிபவர் உபய விபூதியையும் ஆள்வார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்ணூடே -திருவாய்மொழி பாசுரம் போலே

————————————————————————————————————————————————————————————–

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் –47-

——————————————————————————————–

எம்பெருமான் தாள் பணிதல்
யாருக்கு கைகூடும் என்ன
இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவர்களுக்கே என்கிறார்
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
அடக்கி ஆளுதல் அறிய விஷயம் காட்ட
மதக் களிறு என்கிறார்
யானை நீர் நிலைகளில் புக்கு முதலை வாயில் அகப்படுமே
விஷயாந்தரங்கள் -நீர் நிலைகள்
வாரி –நீர்
நீர் விடாயை பிறப்பிப்பது போலே
விஷயாந்தரங்களும் விடாயை பிறப்பிக்கும்

மீண்டும் சேரி திரியாமல் செந்நிறீஇ -என்றது
பலாத் காரம் செய்தாகிலும் அடக்கி ஆள வேணும்

கூரியமெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் போல்வாரே
திருவடிகளை காண்பர்-

———————————————————————————————————————————————————–

கழல் ஓன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும்
செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்–48-

————————————————————————–

கழல் ஓன்று எடுத்து
ஒரு சேவடியை மேல் உலகங்களிலே
செல்ல நீட்டி

ஒரு கை சுற்றி
ஒரு திருக்கையாலே நமுசி பிரக்ருதிகளை
சுழற்றி எரிந்து
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே –

ஓர் கை மேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச -அழலும் செருவாழி ஏந்தினான்
மற்றொரு திருக்கையிலே
இவனுக்கு என்ன நேரிடுமோ என்று தவிக்கிற தேவர்களும்
பிரதிகூலரான அசுரர்களும் அஞ்சும்படியாக
எதிரிகள் மேலே அழலை உமிழ்கின்ற யுத்த
சாதனமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமான் உடைய

சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ்
திருவடிகளில் சென்று கிட்டும்படியாக
பொருந்துவாயாக
இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்-

—————————————————————————————————————————————————————————————–

மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் -முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49-

——————————————————————————————

மகிழ் அலகு ஒன்றே போல்
மகிழம் விதையே
காணி ஸ்தானத்திலும்
கோடி ஸ்தானத்திலும்
மாறி மாறி நிற்பது போலே

மாறும் பல் யாக்கை
மாறி மாறி பல வகையான சரீரங்கள்

நெகிழ
தன்னடையே விட்டு நீங்கும்படி

முயல்கிற்பார்க்கு அல்லால் –
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது –
கூடாத கார்யம்

————————————————————————————————————————————————————-

அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் -பெரியனாய்
மாற்றாது வீற்று இருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது –50-

—————————————————————————————–

விஷயாந்தரங்களில் பற்று அற்று
அன்புடன் அவனை ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு
அவனை காண்பதில் அருமை இல்லை என்கிறார்
ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும்
விஷயாந்தரங்களில் போக ஒண்ணாத படி அடக்கி
பகவத் ஆராதனைக்கு உரிய நல்ல மலர்களை சேகரித்து கொண்டு
மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால்
மாவலியின் மதம் ஒழித்த பெருமானை
கண்டு அனுபவிப்பது எளிதாகும்

———————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ  P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பொய்கை  ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்