திருப்பாவை -பாசுரங்கள் – 26-30-திவ்யார்த்த தீபிகை சாரம்–

26-மாலே மணி வண்ணா
தங்கள் வ்யாமோஹம்-மிக சிறிது அத்வேஷம் என்னலாம் படி
அவன் வ்யாமோஹம் கடல் போலே
வடிவில் இருந்த பொலிவு கண்டு மாலே நீர்மையே பிரகிருதி
பெருமாளுக்கு பிரதான குணத்தை சரணாகத வத்சலர்-என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு
உள்ளீடாக வெளியிட்டு அருளினால் சீதா பிராட்டி
அப்படியே ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிரதான குணமாய்
மகா பாரதத்துக்கு உள்ளீடான
ஆஸ்ரித வ்யாமோஹத்தை மாலே என்கிற சம்புத்தியாலே
வெளியிடுகிறார்கள் இடைப்பென்கள்
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்
யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ
சாஸ்திரம் விதித்ததே யாகிலும் சிஷ்டானுஷ்டானம் இல்லா இடத்தில்
தவிரக் கண்டறியாயோ
கேட்டியேல்
அவன் பஞ்ச லஷம் குடிப் பெண்கள்
கண்ணிலும்
முலையிலும்
வடிவிலும்
இடையிலும்
துவக்குண்டு அந்ய பரனாய் இருந்தமையாலே தட்டி உணர்த்துகிறபடி
போய்ப்பாடுடையன சங்கங்களுக்கு அடை மொழியாக்கி
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே
உபகரணங்கள் கேட்டு
ஆலின் இலையாய்
சக்தி இராமை இல்லை
வேண்டி இராது ஒழியில் செய்யலாவது இல்லை
தரில் அரியது இல்லை
தராது ஒழியில் வளைப்பிட ஒண்ணாது

—————————————————————————————-

27-கூடாரை
சங்கங்கள் கேட்டர்கள்
பாஞ்ச ஜன்யம்
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கு
பறை ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றின பறை
பெரும் பறை இலங்கை பாழாளாக நம் ஜெயம் சாற்றின பறை
சாலப் பெரும் பறை
நாம் பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க குடம் ஆடின போது அரையிலே கட்டின பறை உண்டு
பல்லாண்டு பாட பெரியாழ்வாரையும் பொலிக பொலிக நம் ஆழ்வாரையும் தருகிறேன்
கோல விளக்கு நப்பின்னை பிராட்டி
கொடி கருளக் கொடி ஓன்று உடையீர்
மதுரையில் இருந்து இச் சேரி வரும் பொழுது அனந்தன் தொடுத்த மேல்விதானம்
நோன்பு தலைக் கட்டின பின்பு வேண்டிய பஹூமானங்கள்
மழலை சொல்லுக்கு தோற்று கொடுத்தால்–வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே
கூடுவாரை சீலத்தாலே வெல்லும்
கூடாதாவரை சௌர்யத்தாலே வெல்லும்
சௌர்யம் அம்புக்கு இலக்காகும்
சீலம் அழகுக்கு இலக்காகும்
அம்புக்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்
சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்
ஈர்க்கும் குணங்கள் தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ
அம்பு தோல் புரையே போம்
அழகு உயிர் கொலையாக்கும்
கோவிந்தா
கூட மாட்டோம் என்னும் அபிசந்தி இல்லாத அளவே அன்றிக்கே –
கூடுவோம் என்னவும் அறியாத அசேதனங்களையும் காத்து அருள்பவனே
உண்ணாமல் நோன்பு நூற்றதால் கண்ணபிரானும் உண்ணாமையால் ஊரில் நெய் பால் அளவற்று கிடந்து
பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழியார
கூடியிருந்து குளிர்ந்து
பசி தீர உண்ணுவது அன்றிக்கே பிரிந்து பட்ட விசனம் எல்லாம் தீர கூடி களித்து இருக்கை உத்தேச்யம்
கூடி இருந்து குளிர்ந்து –பல்கலனும் அணிவோம் ஆடை உடுப்போம்-

————————————————————————————————

28-கறவைகள்
போற்றியாம் வந்தோம் –எம்மேல் விழியாவோ –உன்னை அருத்தித்து வந்தோம் இத்யாதியால்
பிராப்ய ருசியை வெளியிட்டு அருளி
அத்தை பெருகைக்கு உடலாக தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும் அவனுடைய உபாயத்வத்தையும் வெளியிடுகின்றனர்
இரங்கு அருள் என்று அபேஷித்த அருளுக்கு பிரதிபந்தகமாக எங்கள் திறத்தில் சாதனாம்சம் ஒன்றும் இல்லை சர்வஞ்ஞன் அறிய அறிவிக்கிறார்கள்
சித்த உபாய அதிகாரிக்கு
1-நல்ல கர்மம் இல்லை என்கை -கன்றுகளின் பின் கானகம் சென்று உண்போம்
2-யோக்யதை ஒன்றும் இல்லை -அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம்
3-ஈஸ்வரன் உடைய குண பூர்த்தியை அனுசந்திக்கை -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
4-சம்பந்தம் உணருதல் -உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது
5-பூர்வ அபராதங்களுக்கு ஷாபணம் -சீறி அருளாதே
6-உபேயத்தை அபேஷிக்கையும்-இறைவா நீ தாராய் –
இவை ஆறும் அதிகாரி அங்கங்கள்
சாங்கமாக
வேதங்களை ஓதி
வேதப் பொருளை உணர்ந்து
விஹித கர்மங்களை அனுஷ்டித்து
பிராப்ய விரோதியான பாப ராசியை பறக்கடித்து
அந்தரங்க சுத்தி பெற்று
இந்த்ரியங்களை வென்று
விஷயாந்தரங்களில் நின்றும் மீட்கப் பட்ட நெஞ்சை ஆத்மா பிரவணம் ஆக்கி
ஆத்மயோக சித்தி பெற்று
அந்தர்யாமி அளவும் சென்று
அவனுடைய ஸ்வரூபாதிகளை-ஸ்ரவண மனனம் பண்ணி
அர்ச்சனா பிரணாமாதி ரூபகமான
நிரந்தர த்யானத்தை பண்ணி
இப்படி திரண்ட ஸூ க்ருதத்தாலே ஈஸ்வரனை பெறுவதாக வேதங்கள் சொல்லுமே
கறவைகள் பின்னே குருகுல வாஸம்
கானம் சேர்வோம் ஷேத்திர வாசமும் இல்லை
தண்டகாரண்யம் நைமிசாரண்யம் இல்லை
எவ்வுஞ்சிலை வேடர் -நெரிஞ்சிக் காடு
வர்ண தர்மம் பசு மேய்த்தல் -கர்ம அனுஷ்டானமோ என்ன உண்போம்
சேர்ந்து உண்போம் -காட்டில் புழுதியும் வேர்வையும் போக குளித்து உண்போம் இல்லை
அருகில் இருந்தார்க்கு கையிலே பிடி இட்டும் அறியோம்
நானும் காலிப்பின்னே போனேனே
காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றேனே
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் என்கிறார்கள்
ஆனால் சாஷாத் புண்ணியத்தை பாலும் சோறும் இட்டு வளர்த்தோமே
உந்தன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் உடையோம் -பெறுகைக்குதக்க பாக்யம்
குறை ஒன்றும் இலாத கோவிந்தா
நித்ய சூரிகள் ஓலக்கத்தில் அவாப்த சமஸ்த காமனாய் இருப்பைத் தவிர்ந்து
இடைச் சேரியில் பசு மேய்க்கப் பிறந்தது குறைவாளரான எங்களை வாழ்விக்கத் தானே
ஸ்வா தந்த்ர்யம் உள்ளவன் அன்றோ என்ன
உறவினர் பக்கல் ஸ்வா தந்த்ர்யம் காட்டுவார் உண்டோ
ஒரு நீர்க்குடம் உடைத்தால் கழிய வல்ல உறவோ
குணியை விட்டு குணம் பிரியாதது போலே
நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலேன்
ஒழிக்க ஒழியாது
உன்னால் ஒழிக்க ஒண்ணாது
எங்களால் ஒழிக்க ஒண்ணாது
உன்னுடைய பந்துக்களால் ஒழிக்க ஒண்ணாது
எங்கள் பந்துக்களால் ஒழிக்க ஒண்ணாது
ஊராக சங்கே தித்தாலும் ஒழிக்க ஒண்ணாது
இப்போது தானே கோவிந்தா முன்பு நாராயணா என்றீர்களே
சுலபனாய் சுசீலனாய் வத்சலனாய் எம்மோடு சஜாதீயனாய் -உன்னை பிரேமத்தால் நாராயணா என்றோம்
கோபாலன் கோவிந்தன் பெயர்கள் இருக்க சிறு பேரால் அழைத்த குற்றம் பொறுக்க வேணும்
அறியாத பிள்ளைகளோம் -அறிவின்மை பிள்ளைமை அன்புடைமை மூன்றும்
பித்தர் சொல்லிற்றும் பேதையர் சொல்லிற்றும் பத்தர் சொல்லிற்றும் பன்னப் பெறுபவோ
இந்த்ரன் கோவிந்தாபிஷேகம் செய்த பின்னும் நாராயணன் என்னுதல் குற்றம் தானே
ஒருவன் முடி சூடப் பெற்ற பின் முன்னை பெயர் இட்டு அழைக்கை குற்றம் தானே
அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்கை குற்றம் இ றே
ஊடினால் சொல்லுமத்தை படுக்கைத் தலத்தில் சொல்லலாமோ
அந்தப்புர வாசலில் படுகாடு கிடப்பாரை நாட்டுக்கு கடவன் என்கிறது பிரணயி இல்லை என்கை இ றே
இவன் உபய விபூதிக்கும் முடி கவித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்குமவன் என்று சிறிது ஞானம் உண்டாய்
இருக்கச் செய்தே இ றே இந்த்ரன் வந்து -பசு மேய்ப்பான்-என்று முடி சூட்டிற்று
உபய விபூதிக்கும் முடி சூடினதுக்கு அவ்வருகே ஒரு ஐஸ்வர்யம் இ றே
சிறு பேர் அழைத்தன
நாராயணன் என்று ஒரு கால் சொல்லி நிற்காமல்
நாராயணனே நமக்கே பறை தருவான்
நாற்றத் துழாய் முடி நாராயணன்
நாராயணன் மூர்த்தி –
இப்படி பலகால் சொன்னமையால் பன்மையாக கூறப்பட்டது
உன்தன்னை அழைத்தனவும்
உம்மை தொகை -நாங்கள் எங்களுக்கு உள்ளே சிநேக பாரவச்யத்தாலே
பேய்ப்பெண்ணே -ஊமையோ-செவிடோ -நாணாதாய் -பண்டே உன் வாய் அறிதும் –
பலவாறாக சொல்லிக் கொண்டதையும் பொறுத்துக் கொள்ள வேணும்
நாட்டாருக்கு சொல்லிக் கொள்ள ஏதாவது ஆலம்பனம் வேண்டுமே என்ன
இறைவா -என்கிறார்கள்
எதிர்தலையில் ஒன்றையும் எதிர்பாராமல் கார்யம் செய்தால் உன்னை விலக்குகைக்கு உறியார் உண்டோ –

—————————————————————————————————-

29-சிற்றம்
பறை என்றது வியாஜ்யம் உனது திருவடிகளில் நித்ய கைங்கர்யம் ஒன்றே வேண்டுவது
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் போலே
காலை வந்து
சிறுகாலை வந்து
சிற்றம் சிறு காலை வந்து
பருவம் ஆராய்ந்து ஆற்றாமை கனத்தை உணர்வாய்
கைங்கர்யம் கொள்ளாமல் இருந்தால் உன் பிறவி பயன் அற்றதாகுமே
பெற்றம் மேய்த்து உண்ணும்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமா
பரமபதத்திலே வந்தோமோ என்றபடி
பிறவிக்கு போர பயப்பட்டு உன்னையே கால் கட்டுவார் உள்ள இடத்தே -பாற் கடல் -வந்தோமோ
பிறவா நிற்கச் செய்தே ஆசார பிரதானர் புகுந்து நியமிக்கும் ராஜகுலத்தில் -இஷ்வாகு குலம் பிறவியில் -வந்தோமோ
வாலால் உழக்குக்கு பசு மேய்த்து வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ
மேய்த்த பசுக்களை நிறுத்தி வாலுக்கு உழக்கு நெல் என்கை
கணக்கிட்டு சொல்ல வல்லார்கள் இல்லையே
அறியாதார்க்காக ஆனாயனாகிப் போய் -பெரிய திருமொழி
மனுஷ்யத்வே பரத்வம் என்று அறியாதவர்
அறிவு கேட்டுக்கு நிலமாய் இருப்பதொரு குடியிலே பிறக்க வேணும் என்று சங்கல்பித்துக் கொண்டவன்
அதற்கு எல்லை நிலமான இடைக் குலத்திலே பிறக்க வேணுமோ தான்
கள்ளர் பள்ளர் என்னும் குலங்களில் பிறந்தால் ஆகாதோ -பட்டர் நிர்வாஹம்
அறியாதாரிலும் கேடுகெட்ட இடையனாய் -என்றபடி
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் –
இற்றைப்பறை கொள்வான் அன்று
நீ இப்போது எடுத்துக் கொடுக்கும் பறை வேண்டாம்
எங்களை நீ கொள்ளும் அத்தனை ஒழிய
நாங்கள் உன் பக்கலிலே உன்னை ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ
கோவிந்தா
பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தை யின் கறுத்து தெரியாது இ றே
பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானமே இ றே உள்ளது
நாலு நாள் எங்களை விட்டு கெட்ட கேடு -என்றான்
எம்பருமான் உடன் ஒக்க பிறக்கும் பிராட்டி போலே தாங்களும் ஒக்கப் பிறந்து ஆட்செய்ய -எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் என்கிறார்கள்
மற்றை நம் காமங்கள் மாற்று
கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன புத்தி தவிருகை
பிராப்ய விரோதி கழிகை யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று என்று இருக்கை முமுஷுப்படி

———————————————————————————————————-

30– வங்க கடல்
சமகாலத்திலே அனுஷ்டித்தாரோபாதியும்
அனந்தர காலத்திலே அனுகரித்தாளோபாதியும்
பிற்பட்ட காலத்திலே கற்றார்க்கு பலிக்கும் என்கை
கன்று இழந்த தலை நாகு
தோல் கன்றை மடுக்க அதுக்கு இரங்குமா போலே
ச்நேஹிகள் சொன்ன இப்பாசுரம் கொண்டு புகவே
அது இல்லாத நமக்கும் பலிக்கும் -என்று பட்டர்
பிரயோஜனாந்தபரர்களுக்கு செய்து அருளியவன்
பிராட்டி பெற கார்யம் செய்து அருளியவன் நம்மை ரஷியாது ஒழியான்
அலை சுழன்று மரக்கலங்கள் போலே தோற்றம் வங்கக் கடல் கடைந்த
திங்கள் திருமுகம் சகலகலா பூர்த்தி
சேயிழையார் ஞான விரக்தி பூஷணம்
சூடகமே பாடகமே என்று தாங்கள் பிரார்த்தித்தபடி
கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணங்களை உடையவர்கள்
அங்கு
திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே

பட்டர் பிரான்
அந்தணர்க்கு உபகாரகன் -பரதவ நிர்ணயம் செய்து அருளி –
அன்றியே
மறை நான்கு முன்பு ஓதிய பட்டன் -திருமங்கை
கோதா தேவி கொடுத்து அவனுக்கு உபகாரகன் என்றுமாம்
விடிந்தவாறே எழுந்து இருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்றிலன் ஆகில் -சிற்றம் சிறுகாலை -பாசுரத்தை அனுசந்தித்தல்
அதுவும் மாட்டிற்றிலன் ஆகில்நாம் இருந்த இருப்பை -நம் பூர்வர்கள் அனுசந்தித்து இருந்த இருப்பை -நினைப்பது -என்று பட்டர்

—————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: