திருப்பாவை -பாசுரங்கள் – 21-25-திவ்யார்த்த தீபிகை சாரம்–

21-ஏற்ற கலங்கள்
நப்பின்னை உட்பட சேர்ந்து கண்ணபிரான் வீரம் சொல்லி உணர்த்தும் பாசுரம்
17/18 நந்தகோபன் அற நெறியும் தோள் வலியும் பேசி
இதில் கறவை செல்வ சிறப்பு
பலகாலும் நந்தகோபன் மகனே -பரமபதத்தில் இருந்து இங்கே வந்தது உறங்கவோ
இட்ட கலங்கள் நிரம்பின இனி கலம் இடுவார் இல்லை
முலைக்கடுப்பினால் மேன்மேலும் பீச்சும்
மகனே அறிவுரை -செல்வா செருக்காலே உறங்கலாம்
மகனாய் ஆவிர்பவித்து இங்கு வந்து இருப்பதை நினைந்தால் கடுக அறிவுற பிராப்தமாகும்
அறிவுறாய்
சர்வஞ்ஞனையும் உணர்த்த வேண்டும் படி இ றே உள்ளுச் செல்லுகிறபடி
கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி
கைபடாதவர்களை கை படுத்துவதற்காக வுண்டான உபாய அந்ய பரதையாலே எழுப்புகிறார்கள்
ஊற்றமுடையாய்
திண்மை
திண்மையான வேத பிரதிபாத்யனே
அடியார்களை ரஷிப்பதில் தீஷை கொண்டு இருப்பவனே என்றுமாம்
பெரியாய்
ஒலைப்புறத்தில் கேட்டுப் போகாமல் இருக்க
உலகில் தோற்றமாக நின்ற சுடரே
பிறந்து பிறந்து ஒளி கூடின சுடரே
இன்னார் தூதன் என நின்றான் -ஆஸ்ரித பாரதந்த்ர்ய ஒளி உடையவனே
சத்ருக்களை திருஷ்டாந்தமாக சொல்லுகிறது என் என்னில்
சர்வஞ்ஞனாலும் நோக்க ஒண்ணாத படி அநாதி காலம்
கை கழிந்த படி சொல்கிறது
அம்புக்கு தோற்று அவை பிடரியை தள்ள தள்ள வந்தால் போலே
உன்னுடைய சௌந்தர்ய சௌசீல்யாதி குணங்கள் பிடித்து இழுக்க வந்தோம்
யாம் வந்தோம்
நீ வந்து -ரஷிக்க வேண்டி இருக்க ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல்
பரகத ச்வீகாரம்- ஸ்வகத ச்வீகாரம் –
போற்றி– புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரை போலே யும் வந்தோம்
அல்லாதாரைப் போலேயும்-சத்ருக்களைப் போலேயும் – வந்தோம்
நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்
நீ பெறினும் பேறு இழக்கிலும் இழ -என்றபடி-

—————————————————————————————————-

22-அங்கண் மா ஞாலத்து அரசர்
ஸ்த்ரீத்வ அபிமானம் தவிர்த்து வந்தோம்
அனன்யார்ஹை தாங்கள் என்கிறார்கள்
பள்ளிக்கட்டில் கீழ் –

மீண்டும் ராஜ்ஜியம் போனால் யாராவது கிரீடம் தலையில் வைத்து மீண்டும் அஹங்காரம் கொள்ளுவோம் என்று

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு வந்த நிலைமை வரக் கூடாதே
இளைய பெருமாள் போல் பிரியாமல் நிழலும் அடி தாறுமாக
சிறுச் சிறிதே கிண் கிணி
குற்றம் குறைகள் நினைத்து பாதி மூடியும்
கூக்குரலை கேட்டு பாதி திறந்தும் –
பூர்ண கடாஷம் தாங்கப் போகாதே என்றுமாம்
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ
கிரீஷ்ம ருதுவில் தபித்த
சாபம் அனுபவித்தே தீர வேண்டிய துக்கம் படி-

————————————————————————————————–

23-மாரி மலை
எங்கள் மநோ ரதம் ஓலக்கத்தில் பெரிய கோஷ்டியாக
எழுந்து அருளி கேட்க வேண்டியது ஒழிய
ரஹச்யமாக
பிரார்த்திக்கக் கூடியது இல்லை -என்கிறார்கள்
சிங்கம் மலை முழைஞ்சில் கிடந்து உறங்குவது போலே
இந்த யசோதை இளம் சிங்கம்
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்கிறபடி
சீரிய சிங்கம் பிறக்கும் பொழுதே சிங்கம் பெயர் பெற்ற சீர்மை
சிற்றாயர் சிங்கம் யசோதை இளம் சிங்கம்
வேரி மயிர் ஜாதிக்கு ஏற்ற பரிமளம்
கோப்புடைய
உபய விபூதியிலும் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை
தர்ம ஜ்ஞானாதிகளாலும் அதர்ம அஜ்ஞ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் என்றுமாம்
தர்மம் அதர்மம் ஞானம் அஞ்ஞானம் வைராக்கியம் அவைராக்யம் ஐஸ்வர்யம் அனைச்வர்யம் எட்டுக்கால்கள்
யாம் வந்த கார்யம் சொல்லாமல் -சிற்றம் சிறுகாலையில் சொல்லுவதாக விட்டார்கள்
ஆராய்ந்து அருள்
பெண்காள் ஒருவரை ஒருவர் எழுப்பி
எல்லாரும் திரண்டு
நம் வாசல் காப்பானையும் எழுப்பி
ஐயரை எழுப்பி
ஆய்ச்சியை எழுப்பி
நம்மை எழுப்பி
அண்ணரை எழுப்பி
மீளவும் நம்மை எழுப்பி
போர வ்யசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி
கிருபை பண்ணி அருள வேணும் -என்பதாம்

———————————————————————————————–

24-அன்று இவ்வுலகம்
தங்கள் மநோ ரதங்களை மறந்து
தண்ட காரண்ய வாசிகள் போலே
அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்
ஸ்ரீ கௌ சல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்
வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட
மங்களா சாசனத்தின் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
பிராட்டிமாரும் பிடிக்க கூசும்படி புஷ்பஹாசமான சுகுமாரமான திருவடிகள்
உடையும் கடியன ஊன்று வெம் பரல்கள் உடை கடிய வெம் கான் இடங்கள் எங்கே
தாளால் உலகம் அளந்த அசைவு தீர பல்லாண்டு
முள்ளைக் கொண்டு முள்ளை களைவது போலே
விளைவை இலக்காக குறித்து
கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போது
குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலையும்
அகவாயில் சிகப்பையும் கண்டு காபபிடுகிறார்கள்
அடி போற்றி கழல் போற்றி
நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்
இந்த்ரன் உணவை கொள்ள கொண்ட நாம் அவன் உயிரை கொள்ள கொள்ளக் கூடாது என்ற குணத்துக்கும் பல்லாண்டு
வென்று பகை கெடுக்கும் வேல்
தசரத சக்ரவர்த்தி பெருமாள் இருவரும் வில் பிடித்தது போல்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபரும் கிருஷ்ணனும் வேல் பிடிக்க
வேலைப் பிடித்து என் அன்னைமார்கள் -இடையர் வேல் பிடிப்பார்கள் இ றே
அடி போற்றி
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி
குணம் போற்றி
வேல் போற்றி
இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி
பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்றது
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாய் உனக்கே நாம் ஆட்செய்ய வந்தோம் -என்றபடி
யாம் வந்தோம் இரங்கு
பரகத ச்வீகாரமே ஸ்வரூபம்
ஸ்வகத ச்வீகாரம் ஸ்வரூப விருத்தம்
என்று துணிந்து இருக்கும் நாங்கள்
ஆற்றாமை மிக்கு வந்தோம்
பொறுத்து அருள்

———————————————————————————————————-

25-ஒருத்தி மகனாய்
பறை வியாஜ்யம் -உன்னையே பெற வந்தோம்
கண்ணனை பெற்ற பாக்யவது தேவகி
கண்ணனை வளர்த்த பாக்யவதி யசோதை
பிறந்த இடத்தில் ஓர் இரவும் வசிக்கப் பெற்றது இல்லை இ றே சம்சாரிகள் கீழே
நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்கா தாப் போலே
சம்சாரிகள் தண்மை கர்ப்ப க்ரஹத்தில் ஓர் இரா தங்க ஒட்டிற்று இல்லை
அழுது முலைப்பால் குடித்த இடமே பிறந்த இடம்
திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்
ஜீரணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்
ஒளித்து வளர -வானிடைத் தெய்வங்கள் காண அந்தியம் போது அங்கு நில்லேல் -என்றும்
அசுரர்கள் தலைப்பெய்யில் யவம்கொலாம் என்று ஆழும் என்னாருயிர் ஆனபின் போகல் -என்றும்
கண்ணா நீ நாளைத் தொட்டு கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -என்றும்
தீங்கு நினைந்த
சகடம்
கொக்கு
கன்று
கழுதை
குதிரை
விளா மரம்
குருந்த மரம்
அசுரர்களை ஆவேசிப்பித்தும்
பூதனையை அனுப்பியும்
வில் விழவு வ்யாஜ்யத்தில் குவலயா பீடம் நிறுத்தியும்
மல்லர்களை நிறுத்தியும்
நினைத்த தீங்குகள் பல பல
அவன் நினைவை அவனோடு போக்கி
பிழைப்பித்தல் பிழையை உடையதாக்கி -பாழாக்கி
நெருப்பன்ன நின்ற நெடுமால்
கண்ணன் சேஷ்டிதங்களை நினைந்து வயிறு எரிந்து ஆய்ப்பெண்கள்-அந்த நெருப்பை வைத்தான்
உன்னை அருத்தித்து வந்தோம்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
எங்களுக்கு நீ பிறந்து காட்ட வேண்டாம்
வளர்ந்து காட்டவும் வேண்டா
கொன்று காட்டவும் வேண்டா
உன்னைக் காட்டினால் போதும்
பறை தருதியாகில்
சேதனன் க்ருத்யம் ஒன்றும் பல சாதக்னம் ஆக மாட்டாது
அவன் நினைவே பல சாதனம்
இவன் எல்லாம் செய்தாலும்
அவன் அல்லேன் என்ற வன்று ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
ஆகையால் தருதியாகில் -என்கிறார்கள்
எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இ றே சொல்வது
சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து
மகிழ்ந்து
உன்னை அருத்தித்து வந்தோம் -என்று அந்வயம் மகிழ்ந்திடுவோம் என்றது ஆயிற்று-

———————————————————————————————–

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: