திருப்பாவை -பாசுரங்கள் – 16-20-திவ்யார்த்த தீபிகை சாரம்–

16-நாயகனாய் நின்ற
சாஸ்திர விதிகளும் பாகவத அனுஷ்டானத்தை பின் செல்லும்
செய்யாதன செய்யோம் கோல் விழுக்காட்டாலே இவர்கள் அனுஷ்டானம் ஆகிறது
அவனைப் பெறுமிடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்கிறது இப்பாட்டாலே
நாயகன் நந்தகோபருக்கும் கோயில் காப்பானுக்கும்
கடகர் இ றே நாயகர்
ஆளவந்தார் நாத முனிகள் ஆச்சார்யர்களை துதித்து இழிந்தால் போலே
சீற ஒண்ணாதபடி புருஷாகாரமாக
நாயகன் முழு ஏழ் உலகுக்கும் -என்றும்
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும்
நம்முடை நாயகனே -என்றும்
இருந்தாலும்
உந்தம் அடிகள் முனிவர் -அந்த கண்ணபிரானுக்கும் நாயகர் நந்தகோபர் என்றது இ றே
கண்ணபிரான் கோயில் காப்பானே என்னாமல் நந்தகோபர் கோயில் காப்பானே
பரமபதத்தில் ஸ்வ தந்த்ரனாய் பட்ட பாடு தீர
நந்த கோபர்க்கு பிள்ளையாய் பிறந்து பாரதந்த்ரம் பேணினான்
ஒரு தலையில் குலம் தரு மாசில் குடிப் பழி என்று பதியாக
கோயிலில் வாழும் என்பார்கள்
இரண்டும் ஒருவரையே சொல்லிற்றாம்
கோயில் காப்பானே என்று ஷேத்ராபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியை சொல்லிற்றாகவுமாம்
ஆராலே விக்நம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலில் விழச் சொல்ல வேணுமோ
கொடித் தோன்றும்
நந்த கோபர் திரு மாளிகை எடுத்துக் காட்ட
பெருமாளைக் காணப் பெறாதே ஆர்தனான ஸ்ரீ பரத ஆழ்வான்
ராமாச்ரம சூசகம் கண்டு தரித்தால் போலே
கொடியையும் தோரணத்தையும் கண்டு இவர்கள் தரிக்கைக்கு யாயிற்று கட்டி வைத்தது
யுகம் த்ரேதா யுகமாய் காலம் நல்லடிக் காலமாய்
தமப்பனார் சம்பராந்தகனாய் பிள்ளைகளும் தாங்களும் ஆண் புலிகளாய்
அவர்கள் தாம் வழியே போய் வழியே வருமவர்களாய்
ஊரும் திரு அயோத்யையுமாய்
இருக்கையாலே ராமாவதாரத்தில் அச்சம் இல்லாமல் இருந்தது
இப்போது அங்கன் அஞ்ச வேண்டாதே பாலிலே உண்டு பனியிலே கிடக்கிறதோ
காலம் கலிக்கு தோள் தீண்டியாய் த்வாபர அந்தமாய்
தமப்பனார் பசும் புல்சாவ மிதியாத பரம சாதுவான நந்த கோபராய்
பிள்ளைகள் சிறுவராய் பின்னையும் தீம்பரிலே தலைவராய்
இருப்பிடம் இடைச் சேரியாய் அது தான் கம்சனுடைய ராஜ்யத்துக்கு மிகவும் அணித்தாய்
அவனுக்கு இறை இறுக்குமூராய்
அவன் தான் பரம சத்ருவாய்
எழும் பூண்டு எல்லாம் அசூர மயமாய் இருக்க
அச்சம் கெட்டு இருக்க இடம் இது ஆவது எங்கனே -என்ன
நாங்கள் பெண் பிள்ளைகள்
சூர்பணகை
இடைப் பெண்கள்
பூதனை
ஆயர் சிறுமியரோம்

மாயன்
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று கையை காலை பிடித்து பரிமாறின படி
மணி வண்ணன்
தாழ நில்லாதே காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவழகை உடையவன்
இவர்களை கிடந்த இடத்தே கிடக்க ஒட்டாதே இப்படிப் படுத்துகிற வடிவழகு
தூயோமாய் வந்தோம்
பல்லாண்டு பாடுகையே பரம பிரயோஜனம் -புருஷார்த்தம்
தமது ரஷணத்துக்கு அவனே கடவன் என்கிற அத்யாவசாயம் கொண்டவர்கள்
பிரயோஜனாந்த பரர் இ றே ஓலக்கத்தில் புகுவார்
அநந்ய பிரயோஜனர் இ றே கண் வளரும் இடத்திலே புகுரப் பெறுவார் –
ஒரு வாய்ச் சொல்லாலே தண்ணீர் பந்தல் வைக்கலாய் இருக்க ஏதுக்காக இழக்கிறாய்
நேச நிலைக்கதவம்
கம்சன் பரிகரம் அடைய பிரதிகூலமாய் இருக்கிறாப் போலே
திரு ஆய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியே
எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே போலே நிலையம் கதவுமாய் நின்று உன்னைக் காண்பேனே –
அணைய ஊர புனைய
அடியும் பொடியும் பட
பர்வத பவனங்களில் எதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள்
நேசமுடைய நிலையையும் கதவையும்
நிலை நேசம் கதவம் -நிலையோடு பொருத்தம் உடைய கதவம்-

————————————————————————————————–

17-அம்பரமே
பர்த்தாவினுடைய படுக்கையையும் பிரஜையினுடைய தொட்டிலையும் விடாத மாதாவை போலே
ஸ்ரீ நந்த கோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதை பிராட்டி போலே
கண்ணனை ஆய்ச்சியர் களவு காண்பர் கோல் என்னும் அச்சத்தினால் முதலில் ஸ்ரீ நந்தகோபர் கட்டில்
உள்ளுக் கிடக்கிறது வைத்த மா நிதியுமாய்
தாம் எடுத்த பேராளனுமானால் நோக்காது இரார் இ றே
அறம் செய்யும் -புகழை பயனாக கருதாமல் -கொடுத்து அல்லது தரிக்க மாட்டாதராய்
அம்பரமே இத்யாதி அவதாரணத்தாலே ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கக் கற்றது என்னும்படி இருக்கையும்
அது தானே புஷ்கலமாய் கொடுக்கையும் தோன்றும்
எம்பெருமான் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -அவனை தந்து எங்கள் சத்தியை நோக்கும்
கண்ணால் காண்பதற்கு மேற்பட ஒன்றும் அறியாத இடைப் பெண்கள் என்பதால் யசோதை பிராட்டியை
முதலில் பள்ளி உணர்த்த வில்லை
யசோதை அறியவே அமையும் பின்பு தங்களுக்கு ஒரு குறை இல்லை -என்று இருக்கிறார்கள்
உகவாதார் தலையிலும் திருவடி வைத்த நீபிரார்த்திக்கும் எங்களை கடாஷிக வேண்டாமா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய விட்டு பிறந்த சீமானே
அவனுக்கு படுக்கையான நீயும் எங்களுக்கு படுக்கையான அவனும் உறங்காது உணர வேணும்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனுக்கு படுக்கை
கண்ணபிரான் பிரணயத்தாலே இவர்களுக்கு படுக்கை
அம்பரம் -ஆடை ஆகாசம்

——————————————————————————————————

18-உந்து
பிராட்டிக்கு வேற புருஷகாரம் வேண்டாமே
அவளுடைய கருணையே
வெந்நீரை ஆற்ற தானே தண்ணீர் வேணும்
பரதசையில் நாய்ச்சியார் மூவரையும்
வ்யூஹ தசையில் இருவரையும்
ஸ்ரீ ராமாவதாரத்தில் பெரிய பிராட்டியார் ஒருவரையும்
ஸ்ரீ வரஹாவதாரத்தில் ஸ்ரீ பூமி பிராட்டி ஒருவரையும்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை பிராட்டியையும்
,முன்னிடிவது சம்ப்ரதாயம்
நந்தகோபன் குமரன் போல் இவளுக்கும் அவனை இட்டே
உந்து மத களிற்றன் தன்னால்வென்று தள்ளப் படுகிற
மதம் உந்து களிற்றன் — களிறு போன்றவன் களிறுகளை உடையவன் என்றுமாம்
ஸ்ரீ வசூதேவரும் இவரும் ஒரு மிடறு
அங்கு இருக்கும் களிறுகள் இங்கே இருக்க தட்டில்லை
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
ஓடாத -அஞ்சி ஓடாத -நடையாடாத -கம்சன் நேராக வர முடியாத தோள் வலிமை
கண்ணன் தீம்புகளை நினைத்து அஞ்சும் ஆய்சிகள் இவன் தோள் வலிமை கண்டு அச்சம் தீருவர்
திருவாய்ப்பாடியில் கிருஷ்ணன் பிறந்த பின் கம்பும் காற்றையும் ஒழிந்தார்இந்த பிராப்தி
நந்த கோபன் மருமகள் -இல்லாதார் உண்டோ -பஞ்ச லஷம் குடிப் பெண்களுக்கும் சாதாரணம் அன்றோ
நமக்கு விசேஷம் என் என்று பேசாதே கிடந்தால்
நப்பின்னாய் -என்கிறார்கள்
கம்பு -கொம்பு வளைந்து நிற்க ஒண்ணாத தடி
கற்றை -கதிர் மயிர் தொகுதி வளைந்து நிற்கக் கூடிய பொருள்கள்
இவற்றால் முரட்டு ஆண்களும் கில நாரிகளும் சூசிக்கப் படுகிறார்கள்
குழலின் கந்தம் கடுக வந்து மறு மொழி தர -கந்தம் கமழும் குழலீ-என்கிறார்கள்
நாங்களும் கண்ணன் என்னும் சென்னிப் பூவை சூடுமாறு கதவை திற என்கிறார்கள்
கோழி கூவு என்னுமால் என்று உனக்கு வயிறு எரிகைக்கு உடல் அல்லாமையாலே தெரியாதே -என்கிறார்கள்
கோழி கூவும் என்னுமால் தோழி மார் யான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்று கோழி கூவும் என்னுமால்
மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
கொத்தலர் கோவின் மணித்தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை யல்லால் கைம்மாறு இலேனே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் –
பந்தார்விரலி -நாங்களும் அசேதன வஸ்துவாக இருந்தோம் ஆகில் உன் திருக்கையில் இருந்து இருப்போமே
மைத்துனன் பேர் பாட இன்னாளின் அடியான் போல்வன
சீரார் வளை
சீர்மை கையிலே கழலாமல் இருக்கை
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் எம் கையில் சங்கம் எனது இழையீர்-என்றும்
என்னுடைய கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே -என்றும்
வந்து திறவாய் மகிழ்ந்து
பெரிய நம்பி திரு கிரஹம் -எம்பெருமானார் உகந்த திருப்பாவை

—————————————————————————————————-

19-குத்து விளக்கு
இத்தால் ஆஸ்ரிதர்க்கு மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் பரிந்து நோக்குகையாலே
நமக்கு தஞ்சமாய் இருப்பதொரு மிதுனம் உண்டு என்கிறது –
தனித் தனியே பற்றுமவர்கள் தங்கையும் தமையனும் பட்ட பாடு படுவார்கள்
மெத்தென்ன பஞ்ச சயனம் -அழகு குளிர்ந்தி மென்மை பரிமளம் வெண்மை
மென்மை விசேஷித்து
துளிர் மலர் பஞ்சு மெல்லிய கம்பளம் பட்டு -இவற்றால் என்றுமாம்
பஞ்சால் ஆன என்றுமாம்
கொங்கை மேல் வைத்து கிடந்த -அவளை இழுத்து தன மேல் கொண்ட அவதாரிகை படி
மலர் மார்பா -மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது -இது ஸ்வரூபம் பற்றி –
அபிமத ஜன லாபத்தாலே அவிகாராயா இருப்பவனும் விகாரம்
யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தன பந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ
அடைக்கலத்து ஓங்கும் –புடைகலர்ந்தானை –திருவிருத்தம்
-புடைக்க அலர்ந்தானை -அலந்தானை இல்லை –
எழுந்து வாராய் சொல்லாமல் வாய் திறவாய் என்கிறார்கள்
பிரிக்க ஒண்ணாது இ றே -மிடற்று ஓசையே வாழ்விக்குமே
உன்னால் அல்லாது செல்லாது இருக்க எங்களுக்கு
ஒரு வார்த்தையும் அரிதாம் படி பேசாதே கிடக்கிறது என்
திறக்கிறவர்களையும் திறக்க ஒட்டாதே
நீயும் முலைக்கு கீழே அமுக்குண்டால்
கிடந்த இடத்தே கிடந்து- மாசுசா என்னவும் அரிதோ
உன் மார்பை நப்பின்னைக்கு தந்தாய் ஆகிலும் வாயையாகிலும் எங்களுக்கு தரலாகாதோ
நாங்களும் உன்னைப் போலே மைத் தடம் கண்ணிகளாக வேண்டாவோ
உன் மணாளனை
பொதுவாக உண்பதனை நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
சம்போக வ்ய்சதமாக கட்டின கை நெகிழ்கிலும் உடம்பு வெளுப்புதீ
கலவிக்கு உடலான வியாபாரத்தையும் பிரிவுக்கு உடல் என்று பிழைக்க மாட்டாய்
புணர்ச்சிக்காக பிரியிலும் தடுப்பது வளைப்பது ஆவுதி
தத்துவம் அன்று தகவு
தத்துவம் -நாங்கள் சொன்னது ஆற்றாமையால் கண்ணாம் சுழலை இட்டு சொன்னது அன்று உண்மையே சொன்னோம் இத்தனை காண்
அன்று தகவு -எங்கள் பக்கலிலும் நீ இங்கன் உபேஷை தோற்ற இருப்பது தருமம் அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்று தகவு -உனக்கு நீர்மை உண்டு எனபது உண்மை அன்று
அன்றிக்கே
தத்துவம் அன்றி தகவும் அன்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை-

————————————————————————————————-

20-முப்பத்து மூவர்
பிரயோஜனாந்த பரர்களுக்கு கார்யம் செய்து
அநந்ய பிரயோஜனரான எங்களை உபேஷித்து
முன் சென்று கோஷ்டியில் முன் இல்லை துன்பம் வரும் முன் காலத்திலே
கம்பம் கப்பம் நடுக்கம் தவிர்த்து
இறை ராவணாதிகளுக்கு பணிப்பூ விட்டு திரியாமல்
தவிர்க்க வல்ல கலி வலிமை உடையாய்
கலி என்று மிகுதியாய் சகல தேவதைகளையும் ரஷிக்கையாலே சர்வாதிகநானவனே -என்றுமாம்
செப்பம் உடையார்
ஆஸ்ரித விரோதிகளை நிரசிக்கும் பொழுது தனக்கு ஒன்றும் நேராமல்
ஆர்ஜவம் -நினைவு சொல் செயல் ஒருபடிப்பட்டு
மணாளனை நீராட்டு
மணளனோடு -மணாளனையும் எம்மையும் சம்ச்லேஷிக்கச் செய்
எம்மை விரஹம் தின்ற உடம்பை காட்டி –

—————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: