பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -73-87–திவ்யார்த்த தீபிகை –

நிகரிலகு காருருவா-என்று அனுசந்தித்த அநந்தரம்-போலி கண்டு மேல் விழும்படியான அளவிறந்த அன்பு-தமக்கு அந்த திரு மேனியிலே விளைந்த படியை அருளிச் செய்கிறார்

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

பூக்கின்ற பூவையும் காயாவும் நீலமும்–புஷ்ப்பிக்கின்ற
பூவைப் பூவையும் -காயம் பூவில் அவாந்தர பேதம் பூவைப் பூ –
மல்லிகை வனமாலை மௌவல் மாலை -பெரியாழ்வார் போலே
காயாம்பூவையும்-கரு நெய்தல் பூவையும்

பூக்கின்ற காவி மலர்
புஷ்பிக்கின்ற-செங்கழு நீர் பூவையும்

என்றும் காண் தோறும் –
பார்க்கிற போது எல்லாம்-காண் தோறும் என்னாமல்– என்றும் காண் தோறும் என்றது-
இந்த பிரமம் ஒரு கால் இரு கால் அன்று-பிரமிப்பதும் தெளிவதும் மீண்டும் பிரமிப்பதும் நித்யமாக செல்லும்

பாவியேன் மெல்லாவி
அடியேனுடைய-மிருதுவான உயிரும்-பாக்யவான் -விபரீத லஷணை யால்-இப்படி அன்பு விளைந்த உள்ளம் கொண்டேனே என்றுமாம்

மெய் மிகவே பூரிக்கும்
சரீரமும்-மிகவும் பருத்து ஊருகின்றன

அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று
அந்த அந்த மலர்கள் எல்லாம்-எம்பெருமானுடைய திரு வுருவமே என்று கொண்டு-

————————————————————–

போலி கண்டு மகிழும் படி ஆசை பெருகினாலும்-கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெறாமையாலே வருந்தி-பேரருளாளன் தனது திரு மேனியை காட்டுகிறான் இல்லையே-என்று தளர்ச்சி தோற்ற அருளிச்செய்கிறார்
ஒழிவில் காலம் எல்லாம் அழுது கதறினாலும் -இயற்கையில் அருள் நிறைந்தவர்
ஆ நிரை காத்து அருளிய பிரான் அன்றோ-இது என்ன கொடுமை –

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74

என்றும் ஒரு நாள் ஒழியாமை
என்று ஒரு நாளும் தப்பாமல்

யான் இரந்தால்
அடியேன் பிரார்த்தித்தால்

ஒன்றும் இரங்கார்-
சிறிதும் தயவு செய்கிறார் இல்லை –

உருக்காட்டார் –
தனது திரு மேனியைக் காட்டுகிறார் இல்லை

குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
முன்பு-கோவர்த்தன மலையை ஏந்தி-பசுக்களை ரஷித்த-கோபால கிருஷ்ண பகவான்

நெஞ்சே
ஒ மனமே

புடை தான் பெரிதே புவி
அவருடைய அருள் வெள்ளம் ஏறிப் பாய முடியாத-மிகப் பெரிய மேட்டு நிலமோ –

அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இ றே
அவர் நீர்மை ஏறிப் பாயாத தோர் இடம் தேடி-எங்கே கிடந்தோம்

புடை மேடான இடம்
புடை பெரிது -விசாலமானது-விசாலமான இந்த பூமியிலே அவனது அருள் வெள்ளம் பாய ஒண்ணாத எந்த மூலையிலே கிடந்தோம்-முந்தின  பொருளே சுவை உடைத்து-

—————————————————————–

ஒன்றும் இரங்கார் உருகாட்டார் -என்று வெறுத்து அருளியதும்-ஆழ்வீர்
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்-புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவமே
வெல்ல நெடியான் நிறம் கரியான் என்னுள் புகுந்து நீங்கான்-அடியேன் உள்ளத்தகம் -68-என்று-உம் வாயாலே பேசியதும் மறந்தீரோ
உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்
ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75

புவியும்
இவ்வுலகமும்

இருவிசும்பும்
விசாலமான மேல் உலகமும்

நின்னகத்த
உன்னிடத்தே உள்ளன

நீ
உபய விபூதியையும் உள்ளே-அடக்கிக் கொண்டு இருக்கிற நீ

என்செவியின் வழி புகுந்து
எனது காதின் வழியே புகுந்து

என்னுள்ளே –
என் பக்கல் இரா நின்றாய்

அவிவின்றி
அவிவு இன்றி-ஒரு நாளும் விட்டு நீங்காமல்

ஆனபின்பு

யான் பெரியன்-
நானே பெரியவன்

நீ பெரியை என்பதனை யார் அறிவார்
நீ பெரியவன் என்று அறிவார் உண்டோ

ஊன் பருகு நேமியாய்
அசூர ராஷசர்களின் சரீரத்தில் உள்ள-மாம்சங்களை கவர்கின்ற திருவாழி ஆழ்வானை திருக் கையிலே-ஏந்தி உள்ள பெருமானே

உள்ளு
இத்தை நீயே ஆலோசித்துப் பார் –
யான் பெரியன் -தனி வாக்யமாகவும்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்பதனை தனி வாக்யமாகவும்-கொண்டு உரைக்கப் பட்டது
அங்கனம் அன்றிக்கே இரண்டையும் சேர்த்து-நான் பெரியவனோ நீ பெரியவனோ
இதைப் பிறரால் அறியப் போகாது-நீ தான் ஆராய்ந்து அறிய வேணும் -என்கை-

—————————————————————-

நெஞ்சு பூரித்து தடித்து இருக்கிறபடியைப் பார்த்தால்-ஓங்கி உலகளந்த போலே-தாமும் எங்கும் வியாபித்து இருப்போமோ-என்று அருளிச் செய்கிறார் இதில்
உருவற்ற நெஞ்சு தடிக்குமோ-ச்தூலிப்பது-ஒரு திருப் புளிய மரத்தின் பொந்தின் அடியில் இருந்து-நெஞ்சாலே நினைக்கும் மாத்ரத்திலே-இப்படி பூரித்தோம் ஆகில்
என்னுடைய கரும பாசங்கள் தொலையும்படி-உன்னாலே கடாஷிக்கப் பெற்று
நலமந்தம் இல்லாதோர் நாட்டில் நித்யானுபவம் பண்ணப் பெற்றால்-பின்னை தடிப்பதற்கு இடம் போதாது போலும்-ஸ்வரூபத்தால் நீ வியாபித்து இருப்பது போலே
நானும்-அப்படியே ஸ்வபாவத்தாலே வியாபித்து இருப்பேன் போலும்
என்கிறார்-உலகம் எல்லாம் பூரிக்க வல்லனாம் படி உடல் தடிக்கும் அளவு பேர் ஆனந்தம் அடைவேன் என்கிறார் இதில்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

உள்ளிலும் உள்ளம் தடிக்கும்
உன்னை நெஞ்சிலே அனுசந்தித்த-மாத்ரத்திலே-எனது நெஞ்சானது-சந்தோஷத்தினால் பூரிக்கின்றது

வினைப்படலம் விள்ள
பாபக் கூட்டங்கள்-என்னை விட்டு ஒழிந்து போம்படி

விழித்து
உன்னாலே கடாஷிகப் பெற்று

உன்னை மெய்யுற்றால்
பரம பதத்தில் வந்து-உன்னை உள்ளபடியே-அடைந்து விட்டேனாகில்

உள்ள உலகளவும்
நீ வியாபித்து இருக்கிற உலகு எங்கும்

யானும் உளனாவன்
நானும் வ்யாபித்தேன் ஆவேன்

என்கொலோ உலகளந்த மூர்த்தி உரை
த்ரிவிக்ரம பகவானே-நான் சொல்லும் இது சம்பாவிதம் தானோ-நீ சொல்லு-

—————————————————————-

சகல வித பந்துவும் நீயே காண் என்கிறார் –

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

 

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
ஆராய்ந்து சொல்லி-நீ தவிர-தாயாதிகள் என்றும்-பந்துக்கள் என்றும்-சொல்லக் கூடியவர்கள்-எனக்கு ஆரேனும் உண்டோ
வேறு யாரும் இல்லை நானே உளன் என்று உத்தரம் சொல்லி அருளுவான்  போலும்
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய்
கோஷிக்கின்ற திருப் பாற் கடலிலே-பள்ளி கொண்டு இரா நின்ற-ஸ்வாமி

உரைப்பெல்லாம்
மற்றும் சொல்லப் படுகிற-எல்லா வகையான துணையும்

நின்னன்றி மற்றிலேன் கண்டாய்
உன்னைத் தவிர வேறு ஒருவரையும்-உடையோம் அல்லோம் காண்

எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி யாகும் துணை
எனது ஆத்மாவுக்கு-சர்வ தரமான் பரித்யஜ்ய-என்கிற சரம ஸ்லோஹம் ஆகிற
ஒரே சொல்லே-உதவி செய்யும் துணையாம்
அர்ஜுனனை நோக்கி அருளிய ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோஹம்
விபீஷணனை நோக்கி அருளிய ஸ்ரீ ராமபிரானின் சரம ஸ்லோஹம்
ஸ்ரீ வராஹ நாயனார் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அருளிச் செய்த-ஸ்ரீ வராஹ சரம ஸ்லோஹம்
இதுவே நமக்கு துணை-

——————————————————————-

சம்சாரத்தில் இவை எல்லாம் அனர்த்தமாகவே பர்யவசிக்கும்-ஒரு கால் இன்ப மயமாகவே இருந்தாலும் நெஞ்சே-இந்த அல்ப பலன்களில் கால் தாழ்த்தாது
பகவத் குணானனுபவம் ஒன்றிலேயே கால ஷேபம் மேற் கொள்ளக் கடவை என்று ஹிதம் அருளிச் செய்கிறார்

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை
ச்நேஹிதர்களும்-ஆயுஸ்ஸூ ம்-பிள்ளைகள் பேரன்கள் என்கிற பெரிய சந்தானமும்
பரம்பரையாக சத்குலமும்-பந்துக்களோடு சேர்ந்து இருப்பதும்

நாளும்-
நாள் தோறும் –

இன்புடைத்தா மேலும் –
துக்கத்தை உண்டு பண்ணாமல்-சந்தோஷத்தை உண்டு பண்ணுவன என்று-வைத்துக் கொண்டாலும்

கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன்-அம்புகள் நாணில் நின்றும் ஒரு காலும் மாறாத படி-வீரத் தொழில் செய்து கொண்டே இருக்கிற-வில்லை உடைய ஸ்ரீ இராமபிரான் உடைய

தொல்சீரை-
இயற்கையான நற் குணங்களை

நல் நெஞ்சே

ஓவாத ஊணாக வுண்
நித்ய போகமாக அனுபவிக்கக் கடவாய்

மகா வீரனான ஸ்ரீ ராமபிரான் உடைய சரித்ரமே நித்ய போக்யமாகக் கடவது
சோத்ரைவ ஹந்த ஹனுமான் பரமாம் விமுக்திம் புத்யாவதூய சரிதம் தவ சேவதேசௌ -அதிமாநுஷ ஸ்தவம்-பாவோ நான்யத்ர கச்சதி– திருவடி போலே-

———————————————————————-

பகவானது தொண்டராக இருப்பதே-நித்ய சூரிகள் போலே தேஜஸ் உடையவராக்கும்
அப்படி பட்ட ஜன்மமே சிறந்த ஜன்மம் என்கிறார் இதில்
தொண்டைக் குலமே சிறந்தது என்றதாயிற்று
வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தாராகில்
அவர்களே விண்ணுளாரிலும் சீரியர்
பிறக்கும் ஜாதி அப்ரயோஜனம்-பகவத் சேஷத்வமே பிரயோஜனம்

தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே-ப்ரஹ்ம ஜன்மமும் இழுக்கு என்பார்க்கு பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசு இ றே –ஆச்சார்யஹிருதய ஸ்ரீ ஸூக்தி
எம்பெருமானை கண் எடுத்தும் பாராத பாவிகள் உள்ள இந்த லீலா விபூதி புற நாடு
பகவத் கைங்கர்ய பரர்கள் நெருங்கி உள்ள பரமபதம் உள் நாடு-இழி பிறவியும் சேஷத்வம் இருந்தால் தேஜோ கரம்–அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

உண்ணாட்டுத் தேசன்றே
பரம பதத்தில் உள்ளதேஜஸ் உடையது அன்றோ

ஊழ் வினையை யஞ்சுமே
அநாதியான பாபங்களை-குறித்து அஞ்ச வேணுமோ-சேஷத்வமாகிய ராஜ குல மகாத்ம்யத்தினால்-எவ்வகைப் பட்ட பாவத்துக்கும் அஞ்ச வேண்டியது இல்லை

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-
ஸ்வர்க்க லோகத்தை ஒரு பொருளாக-விரும்பக் கூடுமோ
ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் போன்றவை ஓர் பொருளாக நெஞ்சில் படாதே

-மண்ணாட்டில்
இந்த மண் உலகத்தில்

ஆராகி
எப்பிறவியில் பிறந்தவர் ஆயினும்

எவ்விழி விற்றானாலும்
எவ் இழி விற்று ஆனாலும்-எப்படிப் பட்ட இழி தொழில்களை உடையவர்கள் ஆயினும்

ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு
திரு வாழியை அழகிய திருக் கையிலே உடைய-ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு
அடிமைப் பட்டவர்களாக-பிறக்கும் பிறவியானது –

—————————————————————-

கைவல்யம் மோஷம் பெற்றாலும்-அவனை மறந்து இருப்பது-துக்க கரம் தான்
என்கிறார் –கைங்கர்யம் இல்லாத குறையால் –

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
பிறவியையும்
மரணத்தையும்
கிழத்தனத்தையும்
வியாதிகளையும்
ஒழித்து
அவ்வளவோடல்லாமல்

இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் –
மிகவும் ஆனந்தம் உடைத்தான
கைவல்ய மோஷம்
உண்டாவதானாலும்
இறக்கவும் -மிகவும் -அளவில்லாமல் என்கை –

மறப்பெல்லாம்
மறுப்புக்கள் எல்லாம்

ஏதமே என்றல்லால் எண்ணுவனே –
துன்பம் என்றே எண்ணுவனே ஒழிய-வேறு வகையாக எண்ணுவனோ
மண்ணளந்தான் பாதமே ஏத்தாப் பகல் –
உலகு அளந்த பெருமான் உடைய-திருவடிகளை வாழ்த்தப் பெறாத
காலங்களில் உண்டான –ஜரா மரண மோஷாயா மாமாஸ்ரித்ய யதந்தி யே-கீதை -7-29-

———————————————————————

எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவைமே யார் தெரிந்து–81- 

பகலிரா வென்பதுவும் பாவியாது இரு பொழுதும்
பகல் பொழுது-இராப் பொழுது-என்கிற வாசி இன்றியே எப்போதும்

எம்மை ஆள்வர்
அடியேனை அனுபவியா நின்றான்

இகல் செய்து
வலு கட்டாயப் படுத்தி-
இகல் செய்தல் -யுத்தம் செய்தல்
தம்முடைய குணங்களாலே-எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு-குணத்தாலே ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இ றே

-தகவாத் தொழும்பரிவர்
இவர் தகவாத் தொழும்பர் -இந்த ஆழ்வார் நம்முடைய அருளுக்கு-பாத்ரமாக கடவாத நீசர்-தொழும்பர் -அடிமை செய்பவர்-தகவு -தயவுக்கு பெயர்-தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றபடி

சீர்க்கும் துணை இலர்
சீர்மை பொருந்திய துணையை-உடையரும் அல்லர்
மச் சித்தா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம்-கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச்ச ரமந்திச -கீதை -10-9-

என்று தெரிந்து ஓரார் –
என்பதை ஊன்றி ஆராதவனாய்

செழும் பரவை மேயார் –
அழகிய திரு பாற் கடலிலே-பொருந்திக் கண் வளர்ந்து அருளும் பெருமான்-

———————————————————–

பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் -பொய்கையார்
போலே தாமும் கதறுகிறார்-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-
விவேக உணர்ச்சி-சிறிதும் இல்லாமையினாலே-
1-உணர்வு இன்மையால்
2-உணர்வு ஓன்று இன்மையால்
3-தெரிந்து உணர்வு இன்மையால்
என்று மூன்று படியாக யோஜிக்க வேணும்
தேகாத்மா விவேகம் இல்லாமை -உணர்வு இன்மை
சேஷ வஸ்து ஆத்மா என்று அறியாமை -உணர்வு ஓன்று இன்மை
பாகவத சேஷத்வம் அறியாமை -தெரிந்த உணர்வு இன்மை

தீ வினையேன்
மகா பாபியான நான்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
கீழ்க் கழிந்த நாள்கள் எல்லாம்-வீணாக இருந்து விட்டேன்

கரந்த உருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த
சிறு மான் உருவத்தை மறைத்து கொண்டு வந்த-அந்த மாரீச மானை பொன் தொடர்ந்து கொன்ற-அன்பர்கள் ஏவின கார்யத்தை அன்புடன் ஏற்று செய்ய வல்ல பெருமான்
திருக் கல்யாண குணங்களில் ஈடு படாமல்-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட-நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்த எம்பெருமான் -துதிக்க பெறாமல் காலத்தை வீணாக கழித்தேன்

ஆழியங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து
அறு காழி மோதிரத்தை-அழகிய திருக் கையில் அணிந்து இருந்த-ஸ்ரீ ராமபிரானை
ஸ்தோத்ரம் செய்யாமல்-அறிவு கெட்டு-கைகேயி வரத்தில் அகப்படா விட்டது பெருமாள் திருக்கையில் அறு காழி ஒன்றுமே இ றே –
பெருமான் மாயமானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது-அடிக்கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு-அதன் மேலே எழுந்து அருளினார் என்று
ஒருவன் கவி பாட எம்பெருமானார் கேட்டருளி-மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே -என்று வித்தராய் அருளினார்-

————————————————————–

பகவத் குணாநுபவம் நெஞ்சுக்கு நிலைத்து இருக்கும் படி-ஹித உபதேசம் பண்ணுகிறார் இதில்-யோக்யதை இல்லாத நாம்-நெஞ்சால் நினைப்பதும்-வாயால் துதிப்பதும்-தலையால் வணங்குவதும்-அவத்யம் என்று அயோக்யானுசந்தானம் பண்ணி பின் வாங்கும் வழக்கம் உண்டே திரு உள்ளத்துக்கு-அதனால் ஹித உபதேசம் பண்ணி அருளுகிறார்

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து –83-

அயர்ப்பாய்
எம்பெருமானை மறந்து கெட்டாலும் கேடு

அயயர்ப்பாய் –
மறவாமல் வாழ்ந்தாலும் வாழ்

நெஞ்சமே சொன்னேன்
ஒ மனமே-நான் உனக்கு சொல்ல வேண்டிய ஹிதத்தைச் சொல்லி வைத்தேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய்
உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்

-செயற்பால வல்லவே
செய்யத் தகாத வற்றையே

செய்கிறுதி நெஞ்சமே
செய்ய முயல்வாய் என்று

யஞ்சினேன்
உன்னைப் பற்றிப் பயப்படுகின்றேன்

மல்லர் நாள் வல்வினனை வாழ்த்து
மல்லர்கள் ஆயுளை முடித்த-கண்ணபிரானை-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இரு –

———————————————————————-

அயோக்யா அனுசந்தானம் பண்ணி-பின் வாங்கி-தரித்து இருக்க முடியுமாகில் அப்படியே பின் வாங்கிக் கிட-என்கிறார்
இத்தால் மனம் மொழி மெய் மூன்று கரணங்களாலும்-பகவத் விஷயத்திலே ஊன்றிக் கார்யம் செய்யா விடில்-தாம் தரித்து இருக்க ஒண்ணாமையை வெளிப்படுத்துகிறார்
வாய் கை தலை பெற்ற பயனை அனுபவித்து-எங்கே காண்கிறேன் நம் துழாய் அம்மான் தன்னை யான் –என்று அலற்றி-சத்தை பெற்று உயிர் தரிக்கை-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும்தங்கு–84-

வாழ்த்தி யவனடியைப்
அப்பெருமானுடைய-திருவடியை மங்களா சாசனம்  பண்ணி

பூ புனைந்து
அத்திருவடிகளிலே புஷ்பங்களைச் சாத்தி

நின்தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு
உன் தலையை வணக்கு-இரண்டு கையையும் கொண்டு அஞ்சலி பண்ணு

என்றால்
என்று சொன்னால்

கூப்பாத -பாழ்த்த விதி
அப்படி செய்யாத-பாழும் விதியை உடைய
கூப்பாத -நிகழ காலத்து நிலைமையை சொல்லுகிறது அன்று
எதிர் காலத்தில் நேரக் கூடிய நிலைமையை சங்கித்துச் சொல்லுகிறபடி

எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
என்னுடைய மனமே-அந்த சர்வேஸ்வரனை-எங்கே இருக்கிறாய் என்று சொல்லி அழைத்து-துதியாமல் –

தங்க ஆம் ஏலும்
தரித்து இருக்கக் கூடுமாகில்-தங்க தான் ஆம் ஏலும் -தான் -அசைச்சொல்

தங்கு
தரித்திரு –

——————————————————————–

இடைவிடாமல் பகவத் குணாநுபவம் செய்தாலும்-லௌகிக பதார்த்தங்கள் கண்ணில் படுமே-அப்படி பட்டாலும் ஆழ்வார்-எம்பெருமான் திரு மேனி நிறமாக திரு உள்ளம் பற்றி
ஆக இந்த மேகங்கள் என்ன தவம் எங்கே செய்தனவோ-என்று வியந்து பேசுகிறார்
திருவிருத்தம்–மேகங்களோ உரையீர் -32-பாசுரமும் -கடமாயினகள் கழித்து -38 பாசுரத்திலும்-இது போன்ற அனுசந்தேயம்

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

தங்கா முயற்றியவாய்த்
தங்கா முயற்றிய ஆய்-மாறாத முயற்சியை உடையவனாய்க் கொண்டு

தாழ் விசும்பின் மீது பாய்ந்து
விசாலமான ஆகாசத்தின் மேலே-சஞ்சரித்து

எங்கே புக்கு
எந்த தேசத்திலே போய்

எத்தவம் செய்திட்டன கொல் –
எவ்விதமான தபஸை செய்தனவோ-அறியேன் –

பொங்கோதத்
கிளர்ந்த அலைகளை யுடைத்தாய் –

தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும்-
குளிர்ந்த அழகிய திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம் -அத்தை விட்டு கண்ணபிரானாக வந்து தோன்றினான்

என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார் –
என் கண்ணபிரான் இடத்தில் உள்ள-நல்ல திரு மேனி நிறத்தை கொள்ளை கொண்டு இருக்கிற-மேகங்கள்-

——————————————————————–

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்
என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

கார் கலந்த மேனியான்
மேகத்தோடு ஒத்த திரு மேனியை-யுடையவனும்

கை கலந்த வாழியான்
திருக் கையோடு சேர்ந்த திரு வாழியை-யுடையவனும்

பாரளந்த வல்வயிற்றான்
பிரளய காலத்தில் உலகம் எல்லாம் வந்து சேரப் பெற்ற-வலிய திரு வயிற்றை  யுடையவனும்

பாம்பணையான் –
திரு வநந்த ஆழ்வானைப்-படுக்கையாக யுடையவனுமான-எம்பெருமானுடைய

சீர் கலந்த சொல்-
திருக் குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ஸூ க்திகளை-
ஸ்ரீ ராமாயணம்
மகா பாரதம்
ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ருதிகள்
ஸ்ம்ருதிகள்
அருளிச் செயல்கள்

நினைந்து
அனுசந்தித்து

சூழ் வினையின் ஆழ் துயரை -போக்காரேல்-
கொடிய பாபங்களினால் யுண்டாகும்-மிக்க துன்பங்களை போக்கிக் கொள்ளார்கள் ஆகில்-ஒழியட்டும்

என்னினைந்து போக்குவார் இப்போது
வேறு எதை அனுசந்தித்து இந்தப் போதை-போக்குவார்கள்

————————————————————————–

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என்நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: