பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -61-72–திவ்யார்த்த தீபிகை –

இந்த சம்சார தண்மையை சிந்தித்தே ஆழ்வார் ஆகாசம் நோக்க-
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான் அலப்பாய்
ஆகாயத்தை நோக்கி அழுவன் தொழுவனே -ஆகாசம் அடங்கலும் நஷத்ரங்கள் தென்பட -எதைக் கண்டாலும் பகவத் சம்பந்தம் முன்னிட்டே ஆழ்வார் திரு உள்ளத்துக்கு விஷயம் ஆகுமே-அந்த உத்ப்ரேஷையை வெளி இட்டு அருளுகிறார் இதில்
நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-தூவினது போலே-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61

இறை முறையான்
ஸ்வாமியான முறைமையை-உடைய எம்பெருமான்

சேவடி மேல் –
செவ்விய திருவடிகளின் மேலே

மண்ணளந்த வந்நாள்
உலகு அளந்த அக்காலத்திலே

மறை முறையால் வானாடர் கூடி –
வேதங்களில் சொல்லிய-விதிப்படி-வானுலகத்தில் உள்ள எல்லாரும் கும்பலாகக் கூடி

-முறை முறையின்
முறை முறையாக

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே –
தாதுக்களால் விளங்கா நின்றுள்ள-புஷ்பங்களை தெளித்தால் போல்-உள்ளது அன்றோ

தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
வெளியான ஆகாசத்திலே-விளங்கா நின்ற நஷத்ரங்கள் ஆனவை –

லோக யாத்ரையை அனுசந்திக்கப் புக்காலும் அவனை முன்னிட்டு இல்லது காண மாட்டாமை சொல்கிறது –சிறியாச்சான்-சப்தாதி விஷயங்களிலே நின்றும் நாம் மீள மாட்டாதாப் போலே-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் -என்று பிள்ளைக்குப் பணித்தான்-

——————————————————————–

ரூப அலங்காரத்தால் உலகு அளந்த பெருமானை அனுபவிக்கிறார்
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

மீன் என்னும் கம்பில்
நவ ரத்னங்கள் ஆகிற கம்புகளை உடைத்தும்-ஆகாசம் நஷத்ரங்கள் நிறைந்து
முத்துக்கள் அழுத்தின கம்பு போலே நஷத்ர சமூஹம் தோன்றுமே
குடையில் மேல் துணியைத் தாங்கும் கம்பிகள் –

வெறி என்னும் வெள்ளி வேய்
சந்தரன் ஆகிற வெள்ளிக்-குழையை யுடைத்தும்-வெறி என்று வட்ட வடிவத்துக்கு பெயர்
இலக்கணையால் சந்த்ரனைக் குறிக்கிறது
வான் என்னும்-
ஆகாசம் என்னும் பெயரை உடைத்தும்

கேடிலா வான்குடைக்கு
ஒரு நாளும் அழிவில்லாத-பெரிய குடைக்கு

தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து
ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போலே வளர்ந்து

மண்ணளந்தான் –
உலகு அளந்தவனான பெருமான்

நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்
மேல் உள்ள காலம் எல்லாம்-நம்முடைய சம்சாரம் ஆக்கி வியாதிக்கு-சிறந்த ஔ ஷதம் ஆவான் –இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித்-தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை யானவன்-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

—————————————————————

பூர்வர்கள் மூன்று வகை நிர்வாகம்
காற்று ஓய்ந்த பின் காளமேகம் கடலிலே சாய்ந்தால் போலே-
ஸ்ரீ ராமபிரான் திருவவதார கார்யம் முடிந்த பின்பு-திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுவதை ஒக்கும்-பரன் -உபமேயம்/ வாய்மையன் -உயர் திணையாக -இருக்க வேண்டுமே -வாய்மைத்து உள்ளதே-
இத்தால் பரன் படி என்று சேர்த்து வருவித்து கொண்டு -அர்த்தம்-ஆனால் இல்லாத சொல் சேர்த்தால் அத்யாஹாரம் குற்றம் வாராமல்-நஞ்சீயர் சந்நிதியில் நம்பிள்ளை அருளிச் செய்வர்-கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்

பின் துரக்கும் காற்று இலோந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல்
பின்பு பற்றித் தள்ளுகிற காற்றை இழந்து-கடலிலே போய் சேர்ந்த காளமேகமானது
எப்படி இருக்கிறது என்றால்

பேர்ந்தும் போய்
திருவவதார கார்யத்தை முடித்த பின்பு-மறுபடியும் சென்று

வன்திரைக்கண் சந்து அணைக்கும் வாய்மைத்தே
பெரிய திருப்பாற் கடலிலே-வந்து சேர்ந்த படியை-ஒத்து இருக்கின்றது

அன்று
ஸ்ரீ ராமாவதாரத்திலே

திருச் செய்ய நேமியான்
அழகிய சக்கரத்தை உடையவனும்

தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன்
கொடிய ராஷசியினுடைய -சூர்பணகையின் மூக்கையும்-பருத்த செவிகளையும்
பரிச் செவி-என்றும் பாடபேதம் குதிரை காத்து போன்ற காதுகள் உடையவள் –
அறுத்து ஒழித்தவனுமான-ஸ்ரீ ராம பிரான்-

———————————————————————-

நம் போல்வாரை திருத்திப் பணி கொள்ளவே-திருவவதாரங்கள்-அவஜானந்தி மா மூடா மானுஷம் தனுமாஸ்ரிதம் –

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனாய் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப்  புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழவே கலந்து–64-
பரனாம் அவனாதல்
அவன் பரனாம் ஆதல்-அந்த ஸ்ரீ ராமபிரானும் ஸ்ரீ கண்ண பிரானும்-நம்மைப் போன்ற மனுஷ்யர் அல்லர் -சாஷாத் பரம புருஷரே ஆவார் என்கிற விஷயத்தை-அனுசந்திப்பவர்களை-தேவர்கள் கை எடுத்து தொழுவார்கள்
அன்றிக்கே
தேவர்களே தங்கள் அஹங்காரம் ஒழித்து-கை தொழுவார்கள் என்றுமாம்

பாவிப்பராகில்
அனுசந்திப்பர்களே ஆனால்

உரனாய் ஒரு மூன்று போதும்
தங்களுடைய மனத்தினாலே எப்போதும்
உரஸ் -மார்வுக்கு வாசகம் -நெஞ்சையும் சொல்லும்
உரம் -வலி என்றுமாம் -அத்யாவசாயம் உறுதியாக கொண்டால்

மரம் ஏழு அன்று எய்தானைப்
சுக்ரீவன் உடைய நம்பிக்கைக்காக-சப்த சால வருஷங்களை எய்த ஸ்ரீ ராமபிரான் என்ன

புள்ளின் வாய் கீண்டானையே
பகாசுரன் வாயைக் கிழித்து எறிந்த-ஸ்ரீ கண்ணபிரான் என்ன-இவர்களையே

அமரர் கை தான் தொழவே கலந்து-
தேவர்கள் கைகள் ஓன்று சேர்ந்து-சேவிக்க மாட்டாவோ-

——————————————————————

இது முதல் மூன்று பாசுரங்களால்-திரு உள்ளத்துக்கு நன்மை உபதேசித்து-அருளுகிறார்

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல்மாலை எப்பொழுதும் சூட்டு–65-

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
வாராய் மனமே -நம்முடன் கூடவே இருந்து-ஹிம்சிக்கின்ற கடுமையான துக்கங்களை
துயர்  – துக்கங்களும் காரணமான பாபங்களும் -சொல்லும்-
மலங்க அடித்தல் அசம்பாவிதம் ஆயினும் தோஷத்தைக் காட்ட-அருளிச் செய்கிறார்

மலங்க வடித்து மடிப்பான்
முகம் சிதறப் புடைத்து துரத்த வேண்டில்

விலங்கல் போல்
மலை போன்றவனும்-பாஹ்ய குத்ருஷ்டிகளால் அசைக்க முடியாத ஸ்திரபிரதிஷ்டையாய் இருப்பவன் –நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா வென்று கூவும் -திருவாய் மொழி –

தொல்மாலைக்
அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹம் உடையவனும்-எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய-விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –திருவாய்மொழி

கேசவனை
சிறந்த குழல் கற்றையை உடையவனும்-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன்
குதிரை வடிவம் கொண்ட அசுரனைக் கொன்றவன்

நாரணனை
ஸ்ரீ மண் நாராயணனும்

மாதவனை
திருமகள் கேள்வனுமான-பெருமான் விஷயத்திலே

சொல்மாலை எப்பொழுதும் சூட்டு
பாசுரங்கள் ஆகிற மாலைகளை-சர்வ காலமும் சமர்ப்பிப்பாய்
அடியவர்கள் வாய்ச் சொல்லை பூ போலே தனது தலையிலே சூட்டிக் கொள்பவன்
தலை துலுக்கிக் கொண்டு கொண்டாடுவான் –சூட்டுசூட்டினேன் சொல்மாலை –பொய்கையாழ்வார்-உலகில் மாதர்களுக்கு மலர்களால் அழகு உண்டாவது போலே-பராத்பரனுக்கு அருளிச் செயல்களால் அழகு உண்டாகுமே

————————————————————————–

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

சூட்டாய நேமியான்
சூடு ஆய நேமியான்-திவ்யாயுதமாயும்-திவ்யாபரணமாயும் அலங்காரமாக இருக்கிற
திரு ஆழியை உடையவனும்-வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு

தொல்லரக்கன் இன்னுயிரை
வெகு காலமாக தீமைகளே செய்த-இராவணன் உடைய இனிய உயிரை-

மாட்டே துயர் இழைத்த
அவன் பக்கல் இருந்து கொண்டே துன்பப்படுத்தின-ஸ்மரன் ராகவ பாணா நாம் விவ்யதே ராஷேச்வர -வால்மீகி-ஸ்ரீ ராம பாணங்களை நினைந்தே ராவணன் உரு அழிந்தான் –

மாயவனை –
ஆச்சார பூதனும்

ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை
திரண்ட -ஈண்ட எனபது எதுகைக்காக ஈட்ட -வல் ஒற்று
இது பரிமளத்துக்கும்-துழாய்க்கும் விசேஷணம்-பரிமளம் மிக்க-குளிர்ந்த-திருத் துழாய் மாலை அணிந்த-வைதிகனுமான எம்பெருமானை

நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
நெஞ்சே – அறி கண்டாய் -அது சொன்னேன் -ஒ மனமே -அனுசந்தித்து இரு
ஒருவருக்கும் சொல்ல ஒண்ணாத இந்த விஷயத்தை உனக்குச் சொன்னேன்
என்னுடைய நெஞ்சு என்பதாலும்-உடன்பட்ட நெஞ்சு என்பதாலும்-இது ஒன்றே உணர வேண்டிய பொருள்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –பொய்கையார்
சொன்னேன் இது என்னாமல் அது -என்றது அர்த்த கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்-

————————————————————————–

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

அதுவோ நன்று என்று
இவ்வுலகம் இருப்பை விட-அந்த பரமபத அனுபவம் சிறந்தது என்று கொண்டு

அங்கு அமருலகோ வேண்டில்
அந்த பரம பதத்தை-விரும்புகிற பஷத்தில்-ஒ காரம் – பரமபத வைலஷண்யம் காட்டும்
ஸ்வர்க்க லோகம் விரும்புகிற பஷத்திலும் என்றும் கொள்ளலாம்

அதுவோர் பொருள் இல்லை அன்றே
அதனைக் கொடுப்பது-எம்பெருமானுக்கு ஒரு அசாத்தியமான-கார்யம் அல்லவே -ஒரு சரக்கே அன்று –
அதுவோ பொருள் பாட பேதம்

அது ஒழிந்து
அந்த பரமபத அனுபவத்தை உபேஷித்து விட்டு

மண்ணின் நின்று ஆள்வேன் எனினும்
இந்த மண்ணின் மேல் நின்று-ஐஸ்வர்யத்தை ஆள வேணும் என்று விரும்பினாய் ஆகிலும்-ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர் -மண்ணிலே இருந்து பகவத் விஷயத்தை அனுபவிக்க என்றுமாம்

கூடும்
அதையும் அவன் எளிதிலே அருளக் கூடும்

மட நெஞ்சே

கண்ணன் தாள் –
ஆக-இப்படி உபய விபூதியையும் அளிக்க வல்ல-எம்பெருமானுடைய திருவடிகளை
ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தத்தையும் அளிக்க வல்லவன்

வாழ்த்துவதே கல்
மங்களா சாசனம் பண்ணுவதையே-அப்யசிக்கக் கடவாய்-உபய விபூதியையும் அபேஷியாமல் கண்ணன் கழல் இணை வாழ்த்துவதே -இது ஒன்றிலேயே –
நோக்காக இருக்கக் கடவை-

——————————————————————–

மூன்று பாசுரங்களில் உபதேசித்த ஆழ்வார்-நெஞ்சு உடன்பட்ட பலன்களை
இது முதல் மூன்று பாசுரங்களால்-அருளிச் செய்கிறார் –
எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்துடன்-ஸ்தாவர பிரதிஷ்டையாக திரு உள்ளத்திலே புகுந்து இருக்கும் படியை-அருளிச் செய்கிறார் இதில்

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–68-

கல்லும்
திருவேங்கட மலையும்

கனைகடலும்
கோஷிக்கின்ற திருப்பாற் கடலும்-எம்பெருமான் உறைவதால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக கோஷிக்குமே

வைகுந்த வானாடும்
ஸ்ரீ வைகுண்டம் என்கிற-வானுலகமும்

புல்லென்று ஒழிந்தன கொல்
அல்பமாய் விட்டன போலும்-போக்கு வரத்து அற்ற படியால் புல் மூடிப் போயின இவ்விடங்கள்

ஏ பாவம்
ஐயோ பாவம்-இரக்கம்  தோற்ற அருளிச் செய்கிறார் –

வெல்ல நெடியான்
மிக உயர்ந்தவனும்-நாம் எவ்வளவு முயன்றாலும் எட்டாமல் இருப்பவன் –

நிறம் கரியான்
நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்-வந்து புகுந்ததாக தோற்றம் மட்டும் இல்லை
மெய்யே வந்து புகுந்தான்

உள் புகுந்து
உள்ளே பிரவேசித்து

நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய உள்ளத்தை விட்டு நீங்குகிறான் இல்லை –அகலகில்லேன் இறையும் என்று உருச் சொல்லிக் கொண்டே-ஸ்தாவர பிரதிஷ்டையாக உள்ளான்-
அங்குத்தை வாஸம் உபாயம்-மெய்யடியார் ஹிருதய கமலமே பரம உத்தேச்யம் அவனுக்கு-கல்லும் கனை கடலும் வைகுந்த வானோடும் புல்லென்று ஒழிந்தன கொல்
என்கிற ஈரச் சொல் பாவியேனுடைய நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்பட பெறுவதே
ஆழ்வார்கள் அனுபவம் எங்கே நம்முடைய அனுபவம் எங்கே-ஏதோ பாக்ய விசேஷத்தால் நாமும் சொல்லப் பெற்றோமே-
இரவில் பள்ளி கொள்ளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுசந்திக்க வேண்டிய பாசுரம்

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு -தடவரைவாய் மிளிந்து மின்னும் –
இரண்டு பாசுரங்களும் இதில் இரண்டாம் அடிக்கு எதிர் நில்லா-என்பர் அழகிய மணவாள சீயர்-

——————————————————————-

எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

அகம் சிவந்த கண்ணினராய்
கோபத்தினால் உள்ளே சிவந்த-கண்களை யுடையனவாய்-முன்பு போலே தனிக் கொல் செலுத்த முடியாமையினாலே

வல்வினையாராவார்
கடுமையான பாபங்களானவை-உயர் திணை யாகவும் கண்ணும் மூக்கும் உள்ளன போலும் பேசி-அவற்றின் கொடுமையை விளக்குகிறார்

முகம் சிதைவராம் அன்றே
முகம் வாடி இருக்கின்றன அல்லவோ

முக்கி
வருந்தி-வாய் விட்டு சொல்ல முடியாமல்-வெறுமனே இருக்க முடியாமல் முக்கி

மிகும் திரு மால்
எல்லாரிலும் மேம்பட்ட வனான-திருமாலினுடைய-மிகச் சிறியவனான உள்ள என்னுள்ளும் வந்து இருக்கச் செய்தேயும்-விசாலமான இடங்கள் போலே உடல் பூரிக்கின்ற திருமால்-என்னவுமாம் –
சீர்க்கடலை யுள் பொதிந்த
கல்யாண குணங்கள் ஆகிற-கடலை உள்ளே அடக்க் கொண்ட-அவனது கல்யாண குணங்களை இடைவிடாமல் அனுசந்தித்து

சிந்தனையேன் தன்னை
சிந்தனையை உடையேனான என்னை

ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
செவ்வையாக நெருக்கி-யாரால் உபத்ரவிக்க முடியும்-ஒருவராலும் என்னை திரஸ்கரிக்க முடியாது-

————————————————————–

சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே –இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர்ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதேயினி–70-

அடர் பொன் முடியானை
அடர்ந்த பொன்மயமான திரு அபிஷேகத்தை உடையவனும்-
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திரு ஆழிகளும் கிண்கிணியும்
அரையில் தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்-மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்-என்றபடி அனைத்து திவ்ய பூஷணங்களுக்கும் உப லஷணம்
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே -என்றபடி
அவனுடைய விலஷணமான-திவ்ய ஆயுதங்கள்-திவ்ய ஆபரணங்கள்-திரு நாமங்கள்
இவற்றை சிந்திக்கப் புக்கால்-இதர விஷயங்களைப் பற்றின லாப நஷ்டங்கள் நெஞ்சிலே ஒரு பொருட்டாக படுமோ –

ஆயிரம் பேரானை
சஹச்ர நாமங்களால் பிரதி பாதிக்கப் படுபவனும்

சுடர் கொள் சுடர்ஆழியானை
சந்திர சூர்ய சுடர்களை வென்று-விளங்குகின்ற திரு ஆழியை உடையவனுமான
எம்பெருமானை
திரு ஆழி முன்னால் எல்லா தேஜஸ் பதார்த்தங்களும் இருள் போலே கிடக்குமே
பாநோ பா நோ த்வதீயா ஸ்புரதி-ஸூ தர்சன சதகம் -16- ஸ்லோஹம்

இடர் கடியும் மாதா பிதுவாக எனதுள்ளே வைத்தேன்
துக்கங்களைப் போக்க வல்ல-தாயும் தந்தையுமாக-என்னுடைய ஹிருதயத்திலே நிறுத்தினேன்-
மாதா பிதா-வாக என்று திருத்த வேண்டாம்
பித்ரு -என்பதை பிது என்கிறார்

யாதாகில் யாதேயினி
இனி மேல் எனக்கு-என்ன நேர்ந்தால் என்ன –

—————————————————————-

ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

இனி நின்று நின் பெருமை
இப்படியான பின்பு-உனது மேன்மையை

யான் உரைப்பது என்னே
நான் முயன்று சொல்வது எங்கனே -என்னால் சொல்லப் போகாது -என்கை –

தனி நின்ற
தான் ஒருவனே காரணமாய் நின்றவனும்

சார்விலா
வேறு ஒருவரை தனக்கு-ஆதாரமாக உடைத்தாகாதவனுமான-ஏகோஹைவ நாராயணா ஆஸீத் -தனியனாக இருந்தானே-வேறு ஒருவரையும் சாராமல் –

மூர்த்தி –
எம்பெருமான்

பனி நீர் அகத்துலவு செஞ்சடையான்
அகத்து பனி நீர் உல வு செஞ்சடையான் -உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற
சிவந்த ஜடையை உடையனான சிவன்

ஆகத்தான்-
உனது திரு மேனியை ஆச்ரயித்து வாழ்பவன்-ஒரு சமய விசேஷத்தில் இடம் கொடுத்ததைக் கொண்டு-ஆழ்வார்கள் இதை அடிக்கடி அருளிச் செய்வார்கள்

நான்கு முகத்தான் நின்னுந்தி முதல்
நான் முகக் கடவுள்-உனது திரு நாபி கமலத்தை-மூல காரணமாக உடையவன்
நின் உந்தியை முதல் காரணமாக -அன்மொழித் தொகை-பஹூ வ்ரீஹ சமாசம் அடங்கியது-உந்தியிலே பிறந்து உலகுக்கு எல்லாம் முதல் காரணம் என்றுமாம்

ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும்-கூறாளும் தனிவுடம்பன் –திருவாய்மொழி -என்றும்
அக்கும் புலியனகளும் உடையாரவர் ஒரு பக்கம் நிற்க நின்ற பண்பர் -பெரிய திருமொழி –என்றும்

————————————————————————–

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

முதலாம் திருவுருவம் மூன்று என்பர்
ப்ரஹ்ம விஷ்ணு சிவன் என்று-மூன்று திவ்ய மூர்த்திகள்-தலைவராவர் என்பர் சிலர்
அரி அயன் அரன் மூவரும் சமம் என்பர் பிறர்

ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
மூன்றுக்கும் ஒன்றே முதலாகும் என்பர்-மேல் சொன்ன மூவருக்கும்-வேறு ஒரு மூர்த்தி தலையாக இருக்கும் என்பர் சிலர்-துரீய ப்ரஹ்ம வாதிகள்

முதல்வா
சர்வ காரண பூதனான பெருமானே-ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் தோன்ற முதல்வா என்று விளிக்கிறார்

நிகரிலகு காருருவா
மேகம் என்று சொல்லலாம் படி -அதனோடு ஒத்து விளங்கா நின்ற-திருமேனியை உடையவனே -சேவிக்கும் பொழுதே சகல தாபங்களும் ஆறும்படி
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ ஓன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவம் கண்ட போதே ஓன்று ஆம் சோதி முகில் உருவம் எம்மடிகள் உருவம் தானே -திரு நெடும் தாண்டகம்

நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
தேஜஸ் மிக்கு நின்ற தாமரைப் பூவானது-உன்னிடத்தில் உள்ளது அன்றோ-
திரு நாபி கமலமே உன்னுடைய பரத்வத்தை வெளியிட வல்லது -என்றபடி
சிவன் பிரமன் இடமும் அந்த பிரமன் உன்னிடமும் இருந்து தோன்றி -நீ அன்றோ பராத்பரன் –

பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்
த்ரயோ தேவாஸ் துல்யா த்ரியதயமித மத்வைதம் அதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி
விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா விதி சிவ நிதானம் பகவத்
தத் அந்யத் ப்ருபங்கீ பாவ திதி சித்தாந்தயாதி ந-என்று அருளிச் செய்கிறார்

த்ரயோ தேவாஸ் துல்யா
அரி அயன் அரன் மூன்று தெய்வங்களுக்கும் சாம்யம் சொல்வார்கள் -த்ரி மூர்த்தி சாம்ய வாதம்-வஸ்துக்களின் பேதம் ஒத்துக் கொண்டு அவற்றுக்கு ஏற்ற தாழ்வு இல்லாததை சொல்வது சாம்ய வாதம்
த்ரியதயமிதம் அத்வைதம்-இம் மூன்று தெய்வங்களும்வேறு வேறு அல்ல
ஒன்றே என்பர் சிலர் –ஐக்ய வாதம்
வஸ்துக்களின் பேதத்தையே ஒத்துக் கொள்ளாமை-அதிகம் த்ரிகாதஸ்மாத் தத்வம் பரம் -இம்மூவரில் மேம்பா துரீய ப்ரஹ்மமே பரதத்வம் என்பர்
இதி விதர்க்கான் விகடயன் -விபோர் நாபீ பத்மா இத்யாதி
நாபி பத்மம் முதல் கிழங்காய் இருந்து கொண்டு-சித்தாந்தம் நமக்கு அறிவிக்கின்றது-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: