பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -51-60–திவ்யார்த்த தீபிகை –

மாவார் பிளந்தார் மனம்அந்தோ வலிதே கொல்-என்றார் கீழ் பாட்டில்
அவனை நிர்பந்திக்கலாமா-நமது இந்த்ரியங்களை எல்லாம் அவன் பக்கலிலே வைத்து
அவன் திருவடி தாமரைகளை சேவித்து கொண்டே இருப்பது அன்றோ நம் ஸ்வரூபம் –என்கிறார் –

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு –51-

மனமாளும் ஓர் ஐவர்
மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி-ஆளுமையான-ஒப்பற்ற
பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற-எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது
ஆத்மாவுக்கு மனஸ் சேஷப்பட்டது-மனசுக்கு இந்த்ரியங்கள் சேஷப்பட்டன
இந்த முறை மாறி மனசை தமக்கு அடிமை ஆக்கிக் கொண்டனவே
கொடுமையை பற்றிய கோபத்தினால் ஐவர் -உயர் திணை யாக அருளிச் செய்கிறார்
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து போகார் நான்-அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே –திருமங்கை ஆழ்வார்

வன் குறும்பர் தம்மை
பிரபலமான துஷ்டர்களை

சினமாள்வித்து
கோவம் அடையச் செய்து-காமாத் க்ரோதாத் அபிஜாயதே -விஷயங்கள் அல்பம் என்பதால் ஆசை-அடங்காமல் கோபம் உண்டாகும்
பகவத் விஷயம் அள்ள அள்ள கொள்ளக் குறை யற்ற இன்பம் தருவதால்
இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டு போகுமே
பூர்ண திருப்தி உண்டாகும் படி பகவத் விஷயத்தில் பிரவணமாக்கி என்றபடி

ஓர் இடத்தே சேர்த்து –
பகவத் விஷயமாகிய-ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி

புனமேய தண் துழாயான் அடியைத்
தன்நிலத்திலே பொருந்திய-குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்துள்ள
அபெருமானது திருவடிகளை –

தான் காணும் அஃது அன்றே –
சேவித்துக் கொண்டே இருப்பது அன்றோ

வண்டு ழாஞ்சீரார்கு மாண்பு
அழகிய விசாலமான-நற் குணங்களை யுடைய-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு
இங்கன் அன்றி அவன் மனம் கல் எனபது ஸ்வரூபம் அன்று
துழாம்-என்றது துழாவும் -என்றபடி -துழாவுகை –பரம்புகை -விசாலமான என்றபடி
அவன் திரு உள்ளம் ஆனபடி ஆயிடுக என்று இருப்பதே தகுதி -வெறுத்தல் கூடாது என்றவாறு-

———————————————————–

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண்ணவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

————————————————————-

கீழே இந்த்ரியங்களை பேசி-அவை தம்மிடம் ஒன்றி இருப்பதே போதும் என்றார்
இது நித்யமாக செல்லுமா-பரம பதம் கொடுத்து அருளுவோம் என்று அவன் திரு உள்ளமாக-அச்சுவை பெறினும் வேண்டேன் என்கிறார்
உனது குணாநுபவம் காட்டில் ஸ்ரீ வைகுண்டம் போக்யமோ என்கிறார் இதல்

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

ஓன்று உண்டு
ஒரு விஷயம் உண்டு -கலங்கினவனுக்கு தெளிவிக்க வேண்டுமே-
சர்வஞ்ஞனுக்கும் ஓன்று அறிவிக்க வேண்டும்

செங்கண் மால்
அடியார்கள் மேலே வாத்சல்யத்தாலே சிவந்த கண்களை-உடைய திருமாலே
வ்யாமோஹத்தாலே சிவந்து உள்ள திருக் கண்கள்

யான் உரைப்பது-
அடியேன் விண்ணப்பம் செய்வது –

உன் அடியார்க்கு –
உனது அடியவர்களுக்கு

எத்தனை நன்மைகள் செய்து அருளினும் திருப்தி பெறாமல்
நீ
நீயோ வென்றால்

என் செய்வன் என்றே இருத்தி –
இன்னமும் என்ன நன்மைகள் செய்வோம் என்றே-பாரித்து இரா நின்றாய்
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ
உனது திருக் குணங்களிலே ஊன்றி இருக்கப்-பெற்ற-தமது சிந்தையில் காட்டிலும்
நீ-இப்படிப் பாரிக்கின்ற நீ-யவர்க்கு-அவ்வடியார்களுக்கு

வைகுந்தம் என்று அருளும் வான்
ஸ்ரீ வைகுண்டம் என்று சிறப்பித்துச் சொல்லுகின்ற-பரமபதமானது
நீ ஒருவன் தான் வைகுந்தம் வைகுந்தம் என்று சிறப்பாக சொல்லிக் கொண்டு இருக்கிறாய்-பாவோ நான்யத்ர கச்சதி என்று -உள்ளார்கள் இங்கேயே பலர் உண்டே

இப்போது சித்தமான குணாநுபவம்-சித்திக்கப்  போவது ஸ்ரீ வைகுண்டம்
பிரதிபந்தங்கள் மலிந்து கிடக்கும் இங்கே குணாநுபவம்
பிரதி பந்தங்களே இல்லா அங்கே அனுபவிக்கை  ஏற்றமோ

எனக்கு என் செய்வன் என்றே இருத்தி தன்மையில் சொல்லாமல்
அடியார்க்கு அவர்க்கு படர்க்கையாக சொல்லி இருந்தாலும்-தன்மை பொருளே விவஷிதம்
திருப்பாவை -மாற்றமும் தாராயோ வாசல் திறவாதே -முன்னிலையாக சொல்லும் இடத்து படர்க்கை பிரயோகம்

இனி இனி என்று கதறும் ஆழ்வார் இப்படி அருளிச் செய்வது-ஒருவகையான சமத்காரச் சொல்லாகும்-இடம் எதுவாயினும் பகவத் குணாநுபவம் ஒன்றே முக்கியம் என்றதாயிற்று-

—————————————————————-

வைகும் சிந்தை தானே பெரியது என்றார்-பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்ன
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவாறே பிரதி பந்தகங்கள் போன இடம் தெரிய வில்லை -என்கிறார்

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும்  கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

வானோ
ஆகாசமோ-ஆகாசத்தில் மறைந்து போயினவா

மறி கடலோ
மடிந்து மடிந்து அலை எரிகிற-கடலோ-கடலில் ஒளிந்து போயினவா

மாருதமோ
காற்றோ-காற்றில் உரு மாய்ந்து போயினவோ

தீயகமோ
நெருப்போ-நெருப்பிலே விழுந்து நசித்துப் போயினவோ

கானோ
காடோ-வனவாச யாத்ரை போயினவோ-அவை என்னருகில் இல்லை என்றதாயிற்று-இன்ன இடத்தில் மறைந்து போயின என்று தெரியவில்லை

ஒருங்கிற்று
அப்பாபங்கள் மறைந்து போன இடம்
ஒருங்கிற்றும் -பாட பேதம்

ஆ ஈன்ற கன்று
பசுவினால் பெறப்பட்ட வத்சாசுரனை

உயரத் தாம் எறிந்து
விளா மரத்தின் மேலே வீசி எறிந்து

காய் உதிர்த்தார் –
அவ விளா மரத்தின் காய்களை உதிர்த்த-கண்ணபிரான் உடைய

தாள்
திருவடிகளை

பணிந்தோம்
ஆஸ்ரயித்தோம்-அதன் பிறகு-
வன் துயரை
வலிய நம் பாபங்களை

ஆ ஆ ஆல்
ஐயோ பாவம்

மருங்கு கண்டிலம்
சமீபத்தில் காணோம் –

————————————————————————–

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக்கவலை தீர்ப்பார் வரவு –55-

மருங்கோத மோதும்-
சமீபத்திலே கடலை மோதும் படியாகவும்-திருப் பாற் கடலிலே
மணி நாகணையார்
மாணிக்கத்தை உடைய-திரு வநந்த ஆழ்வானை படுக்கையாக உடையவருமான பெருமாள்-தென் திரை வருடத் திருப் பாற் கடலில் திரு வநந்த ஆழ்வான் மேல் திருக் கண் வளருமவர் என்றபடி

மருங்கே வர அரியரேலும்
ஒருவர்க்கும் ஸ்வ பிரயத்னத்தாலே அணுகி வந்து-கிட்ட முடியாதவராயினும்

ஒருங்கே எமக்கு அவரை உள்ளால் எப்பொழுதும்-ஒரே தன்மையாக
நமக்கு-அப்பெருமானை-மனத்தினாலே-எப்போதும் கண்டு அனுபவிக்கக் கூடும்

மனக்கவலை தீர்ப்பார்
நமது மனத்தில் உள்ள துன்பங்களை தொலைப்பவரும்

வரவு
தம்முடைய வருகையினாலே-மூன்றாம் வேற்றுமை உருபு தொங்கி கிடக்கிறது
வரவினால் என்றபடி
அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே-எனது நெஞ்சிலே புகுந்து-எப்பொழுதும் சேவிக்க எளியனாய் இருக்கிறான்-என் உள்ளத்திலே உறையும் அவனைக் காண அருமை உண்டோ –

————————————————————-

அவனுடைய நிர்ஹேதுக கிருபைக்கு அடி அறிய ஒண்ணாதே-காரணம் எதுவாய் இருந்தால் என்ன-வாழ்ச்சி நன்றாக இருக்கிறது அத்தனை-என்கிறார் இதில்-

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

வரவாறு ஓன்று இல்லையால்
இன்ன வழியாக வந்தது என்று தெரியாது

வாழ்வு இனிதால் எல்லே
பலன் போக்யதாய் இரா நின்றது-ஆச்சர்யம்

ஒருவாறு ஒருவன்
எந்த சேதனனும்-எந்த உபாயாந்தரத்திலும்

புகாவாறு
பிரவேசிக்க வேண்டாதபடி

-உருமாறும்
தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் கொள்ளுகிற

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏக்கம் சரணம் வ்ரஜ-அஹம் தவா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச -தானே தலை மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கும் கண்ணபிரான் –

அன்றிக்கே
உருமாறும்-
பரஞ்சோதி உருவை விட்டிட்டு அழுக்கு மானிட உருவை-ஏற்றுக் கொண்ட கோபால கிருஷ்ணன் என்றுமாம்

ஆயவர் தாம்
ஸ்ரீ கிருஷ்ணன் ஆனவனும்

சேயவர் தாம் –
ஆசூர பிரக்ருதிகளுக்கு-எட்ட முடியாதவனும்
பாண்டவர்களுக்கு அணியனாயும் துரியோத நாதிகளுக்கு தூரஸ்தநாயும்
ஒரு கால விசேஷத்திலே அனைவருக்கும் சமீபஸ்ததானாக இருப்பவன் -என்பதை
அன்று உலகம் தாயவர்தாம் – என்கிறது அடுத்து

அன்று உலகம் தாயவர் தாம்
முன்பு ஒரு கால்-உலகங்களைத் தாவி அளந்தவனும்

மாயவர் தாம்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனுமான-எம்பெருமான் –
இப்படி சேயனாயும் அணியனாயும் இருப்பது பற்றி மாயவர் தாம் என்கிறது

காட்டும் வழி
காட்டுகிற உபாயம்-

———————————————————————-

பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப
சமாதானம் படுத்துகிறார் இதில்–கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -பெரியாழ்வார்–வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இ க்கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

வழித்தங்கு வல்வினையை
இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற-பிரதிபந்தகமான வலிய பாபங்களை

மாற்றானோ
போக்கி அருள மாட்டானோ -போக்கியே விடுவன்

நெஞ்சே
நெஞ்சமே

தழீ இ க்கொண்டு
அழுந்தக் கட்டிக் கொண்டு

பேராவுணன் தன்னை
யுத்த பூமியிலே-ஹிரண்யாசுரனை

சுழித்து எங்கும் உகள
கண்டவிடம் எங்கும் சுழுத்திக் கொண்டு-அலை எறிந்து கிளம்பும்படியாக

தாழ்விடங்கள் பற்றி –
பள்ள நிலங்கள் பக்கமாக

புலால் வெள்ளம்
ரத்த பிரவாஹமானது

வாழ்வடங்க
அந்த இரணியன் உடைய வாழ்ச்சி முடியும்படி

மார்விடந்த மால்
அவனது மார்பை பிளந்த பெருமாள் –

————————————————————

கீழே-வழித் தங்கும் வல்வினையை மாற்றானோ நெஞ்சே -என்றார்
எம்பெருமான் உம்மை பரம பதம் கூட்டிச் செல்வேன் என்ன
உன்னை மறவாமையே வேண்டுவது-உன்னுடைய திவ்ய ஆத்மகுணங்களையும்
திவ்ய மங்கள விக்ரஹ குணங்களையும்-இப்போது அனுபவிக்குமாறு அருள் செய்தது போலே-மேலுள்ள காலங்களிலும் அருள் செய்கையாம்-எப்போதும் அனுபவிக்கையாம்-
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

மாலே
திருமாலே

படிச் சோதி மாற்றேல்-
உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ தேஜசை -எனக்கு ஒரு காலும் மாற்றாமல்
நித்ய அனுபவ விஷயம் ஆக்க வேணும்
படி -என்று திரு மேனிக்கு பெயர்
உனது திருமேனி ஒளியை இப்போது அனுபவித்துக் கொண்டு இருப்பது போலே
என்றைக்கும் மாறாமல் அனுபவித்துக் கொண்டே இருக்கும் படி அருள வேணும் –

இனி –
இனிமேல்

உனது-
உன்னுடைய –

பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன்
பால் போல் பரம போக்யமான-திருக் கல்யாண குணங்களிலே-ஆழ்ந்து விட்டேன் –
இத்தால் குணானுபவமே முக்கியமே ஒழிய கைங்கர்யம்-அவ்வளவு முக்கியம் இல்லை என்றபடி

மேலால் –
மேலுள்ள காலத்தில் –

பிறப்பின்மை பெற்று –
வீடு பெற்று

அடிக்கீழ் குற்றேவல்
உனது திருவடி வாரத்திலே-கைங்கர்யம் பண்ணுவது

யான் வேண்டும் மாடு அன்று
நான் அபேஷிக்கும் செல்வம் அன்று

மறப்பின்மை
உன்னை மறவாது இருத்தலே வேண்டுவது
இது ஒன்றே யான் வேண்டும் மாடு
சமத்காரமாக அருளிச் செய்கிறார்
அவி ச்ம்ருதிஸ் தவச் சரணார விந்தே பாவே பாவே மேஸ்து
பவத் பிரசாதாத் -முகுந்த மாலை ஸ்ரீ ஸூக்தியை போலே –

———————————————————————

இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இ றே-பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார் –

மாடே வரப் பெறுவாராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

மாடே வரப் பெறுவாராம் என்றே
இன்னமும் நம்மிடத்திலே-வாழப் பெறலாம் என்ற-எண்ணத்தினாலோ
கீழே மாடு -செல்வம் அர்த்தம் இங்கே பக்கம்-மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு
என்றே சொல் நயத்தால் வாராமை காட்டி அருளுகிறார்
இனி நம்மிடம் வல்வினைகள் தங்க இடம் இல்லை என்றபடி –

வல்வினையார்
கொடிய பாவங்கள்

காடானும் ஆதானும் கைக் கொள்ளார் –
காடுகளிலோ மற்று ஏதேனும் ஓர் இடத்திலோ-போய்ச் சேராமல் இருக்கின்றனவோ
கீழே வானோ மறி கடலோ –என்று அருளிச் செய்த ஆழ்வார்-இப்பொழுதும் மீண்டும் இப்படி அருளிச் செய்யும்படி-இருள் தரும் மா ஞாலத்தின் கொடுமை

பேரோதம் –
விசாலமான கடலிலே

சிந்து திரை ஊடே போய்
சிதறி விழுகின்ற-அலைகளின் உள்ளே சென்று

கண் வளரும் –
திருக் கண் வளர்ந்து அருளா நின்றுள்ள –

பேராளன் –
எம்பெருமானுடைய

பேரோதச் சிந்திக்கப் –
திரு நாமங்களை சிந்திக்க வேணும்-என்று நினைத்த மாத்ரத்திலே

பேர்ந்து
நம்மை விட்டு கிளம்பி –

—————————————————————-

வல்வினைகள் அடர்த்தாலும்-தமது அத்யாவசாயம் குலையாமல் இருப்பதை அருளிச் செய்கிறார் இதில்-நெஞ்சே உனக்கு புதிதாக உபதேசிக்க வேண்டியது இல்லை
அவனை விஸ்வசித்து அவனையே அனுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாய் ஆகில் உகக்கிறேன்
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும்
என்று வெறுத்து இருக்கிறேன் -என்கிறார் –

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60

பேர்ந்து ஓன்று நோக்காது-
வேறு ஒன்றையும் கணிசியாமல்

ஈன் துழாய் மாயனையே பின்னிற்பாய்-
போக்யமான திருத் துழாய் மாலையை-அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி-நின்றாலும் நில்லு

நில்லாப்பாய் –
அப்படிஅவனைப் பற்றாது ஒழியினும் ஒழி-

என்னெஞ்சே

தொல்லை –
அநாதியாய்-பரமபதம் போலே நரகமும் அநாதியே
சுக்ல கிருஷ்ண கதீ ஹ்யதே ஜகதஸ் சாஸ்வதே மதே-இரண்டுமே நித்யமாக சொல்லப் பட்டதே-ஸ்தானம் நித்யம் எனபது இரண்டுக்கும் ஒக்கும்
பரம பதம் சென்றார் நச புன ஆவர்த்ததே எனபது மட்டும் வாசி

மா வெந்நரகில்-
பெரிதாய் கடினமான நகரிலே –

சேராமல்
போய்ப் புகாமல்

காப்பதற்கு
நம்மை ரஷிப்பதற்கு –

-பேர்ந்து எங்கும் இல்லை காண் மற்றோர் இறை
பேர்ந்து மற்று ஓர் இறை எங்கும் இல்லை காண்-வேறு ஒரு ஸ்வாமியும் வேறு இடத்தில் இல்லை காண் –

எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்த்ரனும் மற்றும் ஒருவரும்
இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை -பெரியாழ்வார் திருமொழி
நீளரலைச் சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொன்னரகைப் பற்றிக் கடத்தும் படை -பொய்கையார்-

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: