பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -31-40–திவ்யார்த்த தீபிகை –

வல்வினையார் – தாம் ஈண்டு அடி எடுப்பதன்றோ அழகு -என்றார்
அப்படி வெளியே புறப்பட உபாயம் என் என்னில்-எம்பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம்-விட்டு நீங்காது அத்தாணிச் சேவகம் செய்யப் பெற்றோம்-
ஆகையாலே கார்யம் கை கூடிற்று –ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

அழகும் அறிவோமாய்
அழகிய உபாயத்தை அறிந்தோமாக-பிரகரண பலத்தால் இங்கு உபாயம் அர்த்தம்

வல்வினையைத் தீர்ப்பான்
வலிய பாபங்களைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக
வல்வினையும் தீர்ப்பான் -பாடபேதம்

நிழலும் அடிதாறும் ஆனோம்-
பாத நிழலாகவும்-பாத ரேகையாகவும்-உடன்பட்டோம் ஆனோம்
நிழல் ஆனோம் என்று முதல் அருளினார்-அதில் திருப்தி அடையவில்லை
உலகில் நிழல் வ்யக்தியை விட்டு தனிப்படவும் காணப்படும்
அப்படி இல்லாமல் உடன் பட்டே காணப்படும் பாதரேகை என்பதால் அதையும் சேர்த்து அருளிச் செய்கிறார்

நம் சம்ப்ரதாயத்தில்
ஸ்ரீ எம்பார் -எம்பெருமானார் உடைய திருவடி நிழல் –ராமானுஜ பதச்சாயா
ஸ்ரீ வானமா மலை சீயர் -மணவாள மா முனி உடைய பாதரேகை -ரம்யஜா மாத்ரு யோகீந்திர பாத ரேகாமயம்
ஸ்ரீ முதலி ஆண்டான் -எம்பெருமானார் பாதுகை –பாதுகே எதிராஜச்ய

குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டு
குடங்களை தலையின் மேலே எடுத்து வைத்துக் கொண்டு –

சுழல ஆடி
ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி

அன்று –
முற்காலத்திலே
அக்குடக் கூத்து ஆடின விடாய் தீருவதற்காக

அத் தடங்கடலை மேயார் தமக்கு –
முதலிலே விட்டு வந்த-அந்த பெரிய திருப் பாற் கடலிலே-போய்ச் சேர்ந்த பெருமானுக்கு-

———————————————————————–

மீண்டும் நைச்யம் பாவிக்க-இந்த இழவுக்கு என் செய்வேன்-இப்படி மீண்டும் மீண்டும் வருதால் யான் செய்வது இவ்விடத்து இங்கு யாது –என்கிறார் –

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது–32-

தமக்கு அடிமை வேண்டுவார்-
தமக்கு அடிமையாய் இருப்பதற்கு ஆசைப் படுமதான

தாமோதரனார் தமக்கு-
தாம்பால் ஆப்புண்ட பெருமானுக்கு

தாம் பிறருக்கு அடிமை செய்ய ஆசைப் படுவான் எம்பெருமான்
தமக்கு அடிமை செய்வார் வேணும்  என்றும் ஆசைப் படுவான் எம்பெருமான்
அடிமை -சேஷத்வம் -சேஷபூதர்-தமக்கு அடிமையை உகக்குமவர் -அது எங்கே கண்டோம் என்னில்
தாமோதரனார் –
அனுகூலையான தாயாருக்கு அடி உண்பது கட்டுண்பது வானவிடத்திலே கண்டோமே
இதனால் எம்பெருமானுக்கு சேஷத்வத்திலே விருப்பமுடைமை அறிகிறோம்
ஐக ஏக  சேஷியாக இருக்க இட்டுப் பிறந்த எம்பெருமானே சேஷத்வத்தில் ஆசை கொள்ளுவதாக இருக்க-
சேஷத்வதுக்கு இட்டுப் பிறந்த என் நெஞ்சானது இதன் ரசம் அறியாதே பிற்காலிக்கிறதே
ஸ்வா தந்த்ர்யம் கொண்டு-
நெடும்காலம் நைச்ச்ய அனுசந்தானம் பண்ணிப் போந்த வாசனையாலே பிற காலிக்க
எம்பெருமானோ மேல் விழுகிறான்-இந்த அவஸ்தையில் என்ன செய்வது -அலைபாய்கிறார்

அடிமை செய் என்றால்-
நெஞ்சே நீ அடிமை செய் என்றால் –

நெஞ்சினார் செய்யாது –
எனது நெஞ்சானது-அப்படியே அடிமை செய்யாது –

எமக்கென்று –
என் வார்த்தை கேளாத ஸ்வா தந்த்ர்யம் பாராட்டி-நெஞ்சினார் என்ற பன்மைக்கு ஏற்ப –எமக்கென்று –

தாம் செய்யும் தீ வினைக்கே –
வெகு காலமாக தாம் செய்து வருகிற-தப்புக் கார்யத்திலே –

தாழ்வுறுவர் –
ஊன்றி இருக்கின்றது

யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது –
இப்படிப் பட்ட நிலையில்-நான் செய்யத் தக்கது என்னோ –

தாம் செய்த பாபங்களை நினைத்து-இப்படி பாபியான நாமோ பகவானை அனுபவிப்பது என்று தாழ்வுறுவர்-நைச்ச்யம் கொண்டாடி –
திருவாய் மொழியில் நைச்ச்யம் பாராட்டி இருந்தாலும் இங்கே அடிக்கடி வருகிறது
அவன் தனது சௌலப்ய குணத்தை எவ்வளவு தான் காட்டினாலும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்-உடையவர்களுக்கு ஸ்வ தோஷமே-நெஞ்சில் பட்டு கூச்சம் உண்டாகும்-என்று காட்டப் படுகிறது-

——————————————————————–

நைச்ச்யம் கொண்டாடி அகலுகிற நெஞ்சுக்கு நன்மை சொல்லுகிறது இந்த பாசுரம்
நெஞ்சு -ஆத்மா -பர்யாய சொற்கள்-ஜ்ஞானானந்த மயஸ்த்வம் ஆத்மா –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
ஞானம் ஆனந்தம் இரண்டும் இருந்தால் பகவத் விஷயம் பற்றியே ஆகவேண்டுமே
அவன் விசுவாசம் உண்டாகும் படி அசுரர்களை துண்டு துண்டமாக்கி பொகட்ட-
யாதாவது -ஆத்மசமர்ப்பணமாவது -செய்து அணுகாமல் இருப்பது என்னோ -கதறுகிறார்-
அவன் திருக் கையில் திரு ஆழி உண்டே-எதுக்கு நைச்யம் பேசிப் பின் வாங்க வேணும்
நைச்ச்யம் கொண்டாடி பின் வாங்கும் காலத்து-அவனுடைய அபார சக்தியை அனுசந்தித்து-அணுக முயல வேண்டும் –
ஆழ்வார் ஸ்வ அனுபவ ரூபத்தால் சாஸ்திர அர்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்-

யாதானும் நேர்ந்து-யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

அணுகா வாறு தான் என் கொலோ-
யாவதாவது சமர்ப்பித்து கிட்டாமல் இருப்பது தான் என்னோ -சிறந்த பெருமானை அயோக்யரான நாம் கிட்டலாமோ என்ன-

யாதானும் ஓன்று அறியில்-
எதையாவது ஒரு வஸ்துவை அறியக் கூடிய-சைதன்யத்தை-யுடைத்தாய் இருந்து வைத்தும்

தன் உகக்கில் –
தான் ஆனந்தப் படும் அத்தன்மையை யுடைத்தாய் இருந்து வைத்தும்

-யாதானும் தேறுமா செய்யா வசுரர்களை-
கொஞ்சமும் விச்வசிக்கும் படியான-செயல்களை-செய்யாதவர்களான அசுரர்களை
எப்போதும் தீங்கையே செய்பவர்களை –

நேமியால் –
திரு ஆழியினாலே-

பாறு பாறாக்கினான் பால் –
துண்டம் துண்டமாக துணித்து-ஒழித்த எம்பெருமான் பக்கலிலே-

————————————————————

நைச்சயம் பாராதே-அணுகி இழிய பார்த்தார் ஆழ்வார்-
அனுபவிக்கத் தொடங்கும் பொது தாம் விகாரமான படியை அருளிச் செய்கிறார்

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

பாலாழி நீ கிடக்கும் பண்பை-
நீ திருப்பாற் கடலிலே-சயனித்து இருக்கும் அழகை  –
ஒரு வெள்ளைக் கடலிலே கரும் கடல் சாய்ந்தால் போலே
நீல மணி வண்ணன்-கிடந்ததோர் கிடைக்கையை
நீலாழி சோதியாய் -பாலாழி நீ கிடக்கும் பண்பை -பரபாக சோபை ரசம் பார்க்க

யாம்-
அடியோம் –

கேட்டேயும் –
காதால் கேட்ட மாத்ரமேயும்-சாஸ்திரம் அறிந்த மகான்கள் சொல்லக் கேட்டேயும்

காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் –
கால்கள் தடுமாறுகின்றன-நெஞ்சு சிதிலமாகா நின்றது-கண்கள் சுழலமிடா நின்றன
கால்நடை தாராமல் ஆழ்ந்து போகவும்-நெஞ்சு நீர்ப்பண்டமாய் கரைந்து அழிந்து போகவும்-கண்கள் ஒரு வஸ்துவையும் கிரஹிக்க முடியாமல் சுழல விடவும்

-நீலாழிச் சோதியாய் –
நீலக் கடல் போன்று நிறத்தை யுடையவனே

ஆதியாய்-
முழு முதல் கடவுளே –

தொல்வினை எம்பால் கடியும் நீதியாய் –
என்னிடத்தில்  உள்ள-பழைய பாபங்களை தொலைக்கும்-இயல்பு யுடையவனே
நைச்ச்யம் கொண்டாடி பிற்காலிக்கும் பழைய பாபம் என்றுமாம்

நின் சார்ந்து நின்று –
உன்னை அணுகி -நின் சார்ந்து -நைச்ச்யம் பார்த்து பின் வாங்குகை  தவிர்ந்து
அணுகினேன்-சரிதை கேட்க ஆசை கொண்டேன்
ஷீராப்தி விருத்தாந்தம் விஷயமாக சிறிது கேட்டேன்
விகாரம் அடைந்தேன்
கேட்டதற்கு இவ்வளவு விகாரம் ஆனால்-கண்ணால் காண பெற்றால் என் படுவேனோ-

———————————————————————

ஆழ்வார் நெஞ்சிலே காதலை மேன்மேலும் வளர்க்க திரு உள்ளம்  பற்றி
நெஞ்சிலே படுகாடு கிடக்கிறான் -அதைப் பேசுகிறார் இதில்
நின்றது எந்தை ஊரகத்து -திரு ஊரகம் போலே ஆழ்வார் நெஞ்சகத்தில் நின்று அருளுகிறான்-

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என்நெஞ்சு அகலான் -அன்று அம்கை
வன்புடையால்  பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
ஆன்புடையன் அன்றே அவன்–35-
நின்றும்
என் நெஞ்சிலே நின்று கொண்டு இருந்தும்-நின்று நின்று திருவடிகள் ஓய்ந்து போனால்
இருந்தும் –
வீற்று இருந்தும்-இருந்தது எந்தை பாடகத்து -போலே
வீற்று இருக்கும் இருப்பில் இளைப்பு உண்டானவாறே
கிடந்தும்-
சயனித்து இருந்தும்-அன்று வெக்கணைக் கிடந்தது
அதிலும் சிரமம் தோன்றினால்
திரி தந்தும்
எழுந்து உலாவியும்

ஒன்றுமோ வாற்றான் –
ஒன்றும் ஒவாற்றான்-கொஞ்சமும் திருப்தி அடைகிறான் இல்லை –
ஒய்வு ஆற்றான் -ஒய்வதை சஹிக்க மாட்டான் -என்றபடி-அதாவது ஓயா மாட்டான் என்றபடி
அன்றிக்கே ஒ ஆற்றான் ஆறி இருக்க மாட்டான்-இன்னும் ஏதாவது செய்ய பாரித்து இருந்தப்படி

இவை எல்லாம் நெஞ்சிலே செய்யப் பட்டமை என்று கொள்ளாமல்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை முதலிய தேசங்களில்
செய்து இருப்பதை சொன்னதாகவுமாம்
இங்கே எல்லாம் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் நடந்ததும் எல்லாம்
என் நெஞ்சை பெற யத்னம் செய்தவை
நெஞ்சை பெற்ற பின்பு-இந்த திருப்பதிகளை மறந்து ஒழிந்து
என் நெஞ்சையே பற்றிக் கிடக்கிறான்
நொடிப் பொழுதும் நீங்காமல் நெஞ்சையே பற்றி இருக்கிறான்
இவ்வளவு செய்து அருளியபின்பும் -ஒன்றுமே செய்யாதவனாக நினைத்து இரா நின்றான்
என்நெஞ்சு அகலான் –
என்னுடைய நெஞ்சை விட்டு நீங்குகிறான் இல்லை-இது புதிதான கார்யம் இல்லையே அவனுக்கு-ஆஸ்ரித வ்யாமுக்தன்

அன்று-
முற்காலத்திலே

ம்கை வன்புடையால்
அழகிய திருக் கையாலே-ஓங்கி அறைந்ததனால்

பொன் பெயரோன் வாய் தகர்த்து
இரணியாசுரனுடைய-ப்ரஹ்லாத ஆழ்வானை அதட்டின-வாயைப் புடைத்து –

மார்விடந்தான்
அந்த இரணியனுடைய மார்பை-கிழித்து எறிந்த பெருமான்

அன்புடையன் அன்றே அவன்
ஆஸ்ரிதர் திறத்தில் மிக்க அன்புடையவன் அன்றோ-

——————————————————————-

பலபடியாக தோற்றும் தோற்றங்களை தொலைத்திட்டு-சௌலப்யம் ஒன்றே அசாதாரணமான வடிவு என்ற தெளிந்த ஞானத்தைப்  பெற்று-
அந்த கண்ணபிரானுக்கே ஆட்பட்டால்-சகலவித பந்துவாய் நின்று எல்லா வித நன்மைகளையும் செய்து அருளுவான் –என்கிறார் –
இவனாம் -என்ற இடத்தில் சந்தேக நிவ்ருதியை சொல்லி சொல்லி அருளுகிறார் -அவன் சுலபனே –திட விசுவாசம்-

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-
அவனாம்
தூரச்தனாய் இருப்பானோ

இவனாம்-
சுலபனாய் இருப்பானோ

உவனாம் –
மத்யச்தனாய் இருப்பானோ

மற்று உம்பர் அவனாம்-
அல்லது மிகவும் உயர்ந்தவனாய்-எட்டாதவனாய் இருப்பானோ

அவன் என்று இராதே –
சர்வேஸ்வரன்-இப்படி என்று என்று எல்லாம் நினைத்து இராதே

அவனாம் அவனே எனத் தெளிந்து
எம்பெருமான் உடைய ஸ்வரூபமே-சௌலப்யம் என்று தெளிந்து கொண்டு
அவன் என்ற சொல்லே சௌலப்யம் ஆழ்வார்கள் படி இதுதானே
ஆம் அவன் நமக்கு கையாளாக இருப்பவன்-பரதந்த்ர்யமே வடிவு என்றபடி

கண்ணனுக்கே தீர்ந்தால் –
அந்த சௌலப்யத்தை-கிருஷ்ணாவதார முகத்தாலே-விளங்கக் காட்டி அருளிய அவனுக்கே ஆட்பட்டால் –

அவனே எவனேலுமாம் –
அப்பெருமானே எல்லா உறவு முறையும் ஆவான்-
யஸ்ய மந்த்ரீச கோப்தாச சூஹ்ருத்சைவ ஜனார்த்தன -அர்ஜுனனுக்கு ஆனால் போலே -ஆஸ்ரயணீயன் சிவனோ ப்ரஹ்மணோ விஷ்ணுவோ இவர்களிலும் மேம்பட்ட தெய்வமோ-என்கிற சங்கை தெளிந்து-வேதாந்தங்களில்  -சொல்லப் பட்ட தெய்வம் கண்ணபிரான் ஒருவனே என்று தெளிந்து பற்றினால்-அந்த அந்த தேவதாந்த்ரங்கள் அளிக்கும் பலன்களையும்-மேலாக கைங்கர்ய சாம்ராஜ்ய பலனையும்-அவனே அளித்து அருளுவான் என்றதாயிற்று-

————————————————————–

கீழ் சௌலப்யம் பேசி-நெஞ்சுக்கு அவன் இன்னருளால் இது உண்டாகப் பெற்றோம்
இனி மேலும் நைச்ச்யம் பாவித்து விலகாமல்-அவனுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு-வாழ்த்துவதே தகும்-என்கிற அத்யாவசியம் திண்ணமாக கொள் -என்று உபதேசிக்கிறார் –

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

ஆமாறு அறிவுடையார் ஆவது –
யுக்தமான அறிவுடையார் ஆவது-சாமான்யமான அறிவு ஆம் அறிவு அல்ல

அரிதன்றே-
உலகில் யாவர்க்கும் அருமை அன்றோ

நாமே யதுவுடையோம் –
நாம் பகவத் கிருபையாலே-அத்தைப் பெற்று இருக்கிறோம்-இது தற் புகழ்ச்சி அல்லவே
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற-அவனது இன்னருள் பெறப் பெற்ற – சந்தோஷ மிகுதியாலே பேசி அருளுகிறார்

ஆகையால் நீ செய்யத் தக்கது என்ன வென்றால்-

நன்னெஞ்சே —
நல்ல மனமே -மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா –
நெஞ்சை பாராட்டி விளிக்கிறார் எப்பொழுதும் நன்மையே புரிவதற்காக

பூ மேய மதுகரமே தண் துழாய் –
பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள-குளிர்ந்த திருத் துழாயை உடையராய் –

மாலாரை-
ஆஸ்ரிதர் திறத்தில் வ்யாமோஹம் யுடையரான-பெருமாளை

வாழ்த்தாம் அது-
வாழ்த்துதல் ஆகிய-அக்கார்யம் ஒன்றினாலாயே –

கரமே அன்பால் அமை –
அன்பால் கரமே அமை-பக்தி உடன் திண்ணமாக ஊன்றி இரு-
கரம் வடசொல் த்ருடம் -பொருள்

கீழே சௌலப்யம் சொல்லி அருளி-இதில் அவனது போக்யதையும் காட்டி அருளுகிறார்
மாலாரை -சீல குணமும் உண்டே-என்றும்    காட்டி அருளுகிறார்-

————————————————————–

அவன் குணங்களை வாழ்த்துவதே பிராப்தம் என்றார்-
சௌலப்யத்தை வாழ்த்துவது அபசாரத்தில் போய் முடியுமே
வெண்ணெய் திருடினான்-இடைச்சி கையில் அகப்பட்டுக் கொண்டான்
தாம்பினால் கட்டுண்டான்-அடி உண்டான்-உரலோடு பிணிப்புண்டான்
அடி உண்டு அலுத்து ஏங்கினான் -இப்படிப் பட்ட கதைகளை சொல்லி வாழ்த்துவது தானே-இவை பேசினால் சிசுபாலநாதி களோடு ஒக்கும் அன்றோ
நெஞ்சு இறாய்க்க சமாதானப் படுத்துகிறார் இதில்
பரத்வம் அனுசந்திக்க -அந்த பெரியவன் எங்கே
நான் நீசன் -நைச்யம் பண்ணி விலகப் பார்க்க
சௌலப்யம் அனுசந்திக்க அபசாரம் ஆகுமே என்று இறாய்க்க
எம்பெருமான் பற்றிய பேச்சு ஏதாகிலும்
ஏத்துதலோ ஏசுதலோ ஏதாயினும் ஆயிடுக
எம்பெருமான் விஷயம் எனபது ஒன்றே போதும் பேசாய் என்கிறார்

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

அமைக்கும் பொழுது உண்டே
வீண் போது போக்க முடியுமோ

ஆராயில் நெஞ்சே
ஒ மனமே ஆராய்ந்து பார்த்தால்

இமைக்கும் பொழுதும் –
ஒரு ஷணம் காலம் ஆகிலும் –ஏகஸ் மின்னப் யதிகிராந்தே முஹூர்த்தே த்யான வர்ஜிதே-தஸ்யபிர் முஷிதே நேவ யுகத மாக்ராந்திதும் ந்ருணாம்
அவனை விட்டு ஒரு நொடிப் பொழுது பிரிந்து இருந்தாலும் கள்ளர் வந்து சர்வ சொத்தையும் அபஹரித்தால் போலே கதற வேண்டும்

இடைச்சி குமைத் திறங்கள்-
யசோதையின் கையிலே அகப்பட்டு-இவன் நலிவு பட்ட பாடுகளை-யசோதை பிராட்டி மாத்ரம்  -அல்லது ஜாதி வசனமாக  எல்லா ஆய்ச்சிகளையும் சொல்லிற்றாகவுமாம்

ஏசியே யாயினும்
பரிஹாச உக்தியாகச் சொல்லியாவது-
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்-காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்பும் உண்டான் -போல்வனவும்
வண்ண கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறும் கையிற்றால் கட்டுண்டான் காணேடி -என்பனவும் போல்வன

ஈன் துழாய் மாயனையே
போக்யமான திருத் துழாய் மாலை சாத்தி உள்ள-அப்பெருமானைப் பற்றியே

பேசியே போக்காய் பிழை
ஏதாவது பேசிக் கொண்டே-உனது பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பாராய்
போக்காய் பிழை
ஈன் துழாய் மாயனை ஏசிப் பேசியே யாகிலும் காலத்தை போக்காயாகில் அது பிழை
பிழை பிசகு
ஏசிப் பேசியே யாகிலும் பிழையைப் போக்கிக் கொள்ளுகிறாய் இல்லை என்றும்
பிழைகளைப் போக்கிக் கொள் என்றும் பொருள் கொள்ளலாம்-

——————————————————————-

அவனை ஏசியே யாயினும் பேசியே போக்காய் பிழை என்றார்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று-முதல் அடியிலே விண்ணப்பம் செய்தபடி
அங்கே சென்று நித்ய கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க பிராப்தமாய் இருக்க
அங்கே செல்லாமல் இங்கேயே திருக் கல்யாண குணங்களை பேசிக் கொண்டே இருப்பது எதற்கு என்று-திரு உள்ளத்தில் பட்டதாக
அதனை அனுவாதம் செய்து அருளுகிறார் இப்பாட்டில் –

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தப்புச் செய்தோமோ -மனமே-நீ சொல்லாய் -குணாநுபவம் இங்கும் அங்கும் ஆக இரண்டுமே உண்டு-தம்முடைய நிஷ்கர்ஷம் துணிந்து செய்ய மாட்டாமல்
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே -என்கிறார் –
பிழைக்க -என்றது பிழை செய்ய -என்றபடி-நாம் தப்பாக செய்கிறோமோ என்கிற ஸ்வர வகையில்-இது தப்பு அல்ல என்றும்-இது தப்பு ஆகலாம் -என்றும் தோற்றுமா நிற்கும்

தழைக்கும் துழாய் மார்வன் தன்னை –
தழைத்து ஓங்குகின்ற திருத் துழாய் மாலையை-திரு மார்விலே உடையனான எம்பெருமானைக் குறித்து -ஒரு வாடல் மாலையை இட்டாலும் அது தன்னிலத்தில் காட்டிலும் அதிகமாக தழைத்து விளங்குவதற்கு இடமான திரு மார்வு –

அழைத்து –
கூப்பிட்டு-கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -ஈன்றாள் போலேகதறி அழுது கூப்பிட்டு –

அங்கும் இங்கும் குணானுபவமே-ஆனால் இங்கு-இருள் தரும் மா ஞாலம் என்பதால்
ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி-பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போலே தாங்காது உள்ளம் -அடிக் கொதித்து அங்கேயே சென்று பண்ணத் தோன்றும்
ஆக இரண்டு வகையாகவும் தோற்றும்

ஒரு கால் –
அவனுக்கு திரு உள்ளமான ஒரு காலத்திலே-
நாம் எவ்வளவு கதறினாலும் பேறு அவன் திரு உள்ளப்படியே தானே

போய் –
பரம பதத்திலே சென்று –

யுபகாரம் பொலியக் –
நன்றாக கைங்கர்யங்கள் செய்கை யாகிற-உபகாரத்தை –

கொள்ளாது –
கொள்ள முயலாமல் –

அவன் புகழே-
அவனது திருக் கல்யாண குணங்களையே –

வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –
வாயாலே சொல்லிக் கொண்டே இருக்கை யாகிற-இந்த நேர்பாடு –

ஜ்ஞானம் பிறந்த பின்பு அடிமைக்கு அனுகூலம் அல்லாத சம்சார சம்பந்தம் விட்டு நீங்குவது எப்போதோ-என்று இந்நிலம் அடிக் கொதித்து
அனுகூலமான பரம பதத்திலே சென்று பரிபூர்ணமாக அனுபவித்து அடிமை செய்து வாழ்வோம் என்று அங்கே போகப் பாரியாமல்
இங்கே குணானுபவ மாத்ரத்திலே திருப்தி பிறந்து இருக்கை யாவது
பகவத் விஷயத்திலே கண் அழிவு அற்ற ருசி இல்லாமை இ றே-என்று தாத்பர்யம் –

—————————————————————–

அவனுடைய திவ்ய சரிதங்களை பேசி மகிழ்கிறார்-
விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்-அவன் தூய்மையையும் நம் வாக்கில் எச்சில் தன்மையையும் நோக்கும் போது-வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன் -இறாய்க்கத் தோன்றுமே
நைச்யம் பாவித்து பேசாமல் இருந்தால் நரகமே கிட்டும்
பூதனை உயிரை முடித்தால் போலே நைச்யத்தையும் முடிக்க வல்லவன்-

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை-
இப்போது நமக்கு வாய்த்து இருக்கிற மாதிரி-மற்று எப்போதும் வாய்க்க மாட்டாது காண்

-வாய்ப்பு -சித்தி சிறப்பு தகுதி நயம் பேறு வளமை

திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே நாமா மிக வுடையோம் நாழ்
இப்படி அடிக்கடி நைச்சயம் பாவித்து வழக்கமாதலால்-இனி மேல் அது வேண்டாம் என்கிறார்-

வா நெஞ்சே –
வாராய் மனமே –

போய்ப் போய்-
மறுபடியும் மறுபடியும்

தேமாங்காய் சீர் -போய்ப் போ ஒய் -என்று அருளிச் செய்கிறார்
போய்ப்போய்-என்றால் தேமா சீர் ஆகுமே-வெண்டளை பிறளாமைக்காக

வெந்நரகில்-
நைச்ச்யம் பேசி பின் வாங்குவதாகிற-கொடிய நரகத்திலே

பூவியேல்-
கொண்டு தள்ளி விடாதே-பூவியேல் -புகுவியேல்-எதிர்மறை வினைமுற்று

-தீப்பால
தீயதான தன்மையை யுடையளான

பேய்த்தாய்
தாய் வடிவு கொண்டு வந்த-பூதனையின் யுடைய

உயிர் கலாய் பாலுண்டு
பிராணனை-அவளது முலைப் பாலோடு கலந்து-அமுது செய்து- களாய் என்பர் அத்யாபகர்கள்

அவள் உயிரை மாய்த்தானை –
அப் பூதனையினுடைய உயிரை முடித்த பெருமானை –

வாழ்த்தே வலி
வாழ்த்துதலே நமக்கு மிடுக்காம்

அவளை முடித்தவனை வாழ்த்துவதே மிடுக்கு
மாய்த்தவனை வாழ்துகையிலே துணிவு கொள்
மாயவனை வலிதாக நன்றாக வாழ்த்துக -என்றுமாம்

யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா-போலே
எம்பெருமானை யேத்துகை ஸ்வர்க்கம் ஏத்தாது இருக்கை நரகம்
நமனும் உத்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி –அனுசந்தேயம்

————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: