பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –பாசுரங்கள் -21-30–திவ்யார்த்த தீபிகை –

எம்பெருமானுடைய-உலகளந்த திருவடி-தானாகவே ஆழ்வார் திரு உள்ளத்திலே
வந்து சேர்ந்தன -என்று அருளிச் செய்கிறார்-எதற்காக என்றால்-அங்கு வெந்நரகில் சென்று சேராமல் காப்பதற்காக –

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப-ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து-
எண் மதியும் கடந்து அண்டமீது போகி-இரு விசும்பினூடு போய் எழுந்து
மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை –
சிறியேனுடைச் சிந்தைக்குள்-எல்லா உலகும் அளந்த திருவடிகள் அடங்க போதுமான இடம் அன்றாகிலும்-நெருக்குப் பட்டாலும் ஆழ்வார் திரு உள்ளத்துக்குள் இருந்திட வேண்டும் என்கிற சங்கல்பம் கொண்டு-வந்து நிற்கிறான் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவே இவ்வளவும் செய்து அருளினான் –

யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிர்யோ யஸ் த்வயா வினா-கூடி இருக்கை ஸ்வர்க்கம்
அவனை விட்டு பிரிந்து இருந்தால் நரகம் -திருவடிகளை என்  நெஞ்சினுள் அமைத்தான்
என்னவுமாம்

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-
சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
அங்கு வெந்நரகில்-சென்று சேராமல்-காப்பதற்கு-என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு –

இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -இப்போது-இவ்விடத்திலே-என்னெஞ்சிலே-நெருக்குப் பட்டு கிடக்கின்றன
அன்று விஸ்தார இடங்களிலே சுகமாக வளர்ந்து விளங்கின அத்திருவடிகள்
இன்று இவ்விடத்திலே இந்த சிறிய நெஞ்சினால் இடுக்கப் பட்டன –

அன்று-
முன்பு மகா பலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்குப்
அந்த மகாபலியின் யாகபூமியிலே சென்று
பாருருவும்
பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீருருவும்
அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற-ஜலவஸ்துவும்

கண் புதைய
மறையும்படி
காருருவன் தான் நிமிர்த்த கால்
காளமேகத் திருவுருவனான எம்பெருமான்-நிமிர்த்து அருளிய திருவடிகள்-

—————————————————————

திருவடிகள் வந்த சேர்ந்ததை முன்பு அருளி-அவயவம் உடன் அவயவி
திருமால் -மாலார் வந்து புகுந்தார்-வ்யக்தமாக அருளிச் செய்து
முன்பு நித்ய வாசம் செய்து செங்கோல் செலுத்திய வல்வினைகள்
இடம் இல்லாமையாலே எங்கே சென்று குடி இருக்கலாம் என்று திரிந்து வருந்துகின்றன-

காலே பொதத்திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-
காலே பொதத்திரிந்து –
கால் நோவத் திரிந்து-அலைந்ததினால்-பொலிக பொலிக பொலிக -போயிற்று வல்லுயிர் சாபம்—கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று எங்கும் இருப்பதால்

கத்துவராம்-
கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும் –

இன நாள் –
இப்போது –
இந்நாள் -என்றும் பாடபேதம்

மாலார் குடி புகுந்தார்-
திருமால் வந்து சேர்ந்து விட்டார்
அடியவர்கள் இடம் வ்யாமோஹம் கொண்ட எம்பெருமான்-இன்று என் நெஞ்சிலே குடி புகுந்தார்-இருள் மூடி கிடந்த இடத்திலே பிரகாசம் வந்து சேர்ந்தால் போலே –

என் மனத்தே –

-மேலால் –
முன்பு எல்லாம்-இனி மேல்- இதற்கு முன்பு -இரண்டும் பொருள் உண்டே
இதுவரையில் நெருக்கிக் கொண்டு இருந்த இவை-இப்படியே இருக்க இடம் கிடைக்காமல்-இனிமேல் ஹிம்சித்துக் கொண்டு இடம் காணாமல் -என்றபடி –

தருக்கும்-
என்னைத் துன்பம் படுத்திக் கொண்டு இருந்த –

இடம் -பாட்டினொடும்-பெருமையோடு –
இடம்பாடு -பெருமை –

வல்வினையார் தாம் –
இதுவரையில் இங்கே குடியிருந்தகொடிய பாபங்கள் –

வீற்று இருக்குமிடம் காணாது –
இனி மேலும் அதிகாரம் செலுத்திக் கொண்டு-தங்கி இருக்க இடம் காணாமல் –
வீற்று இருத்தல் வீறு தோற்ற இருத்தல்-விழுந்து கிடக்க இடம் இல்லாமல் என்பதை மாற்றி அருளுகிறார்

இளைத்து –
வருத்தமுற்று –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற -என்பதால்-அவற்றுக்கு இடம் கிட்டாதே-என் செய்வோம் என்று கத்துகின்றன –
சீற்றமும் இழிவும் தோற்ற வல்வினையார் -உயர்திணையாக
துஷ்டர்களைக் கண்டால் ஸ்வாமி எழுந்து அருளினார் என்னுமா போலே –

————————————————————

எம்பெருமான் தனது பேர் அருளை சில சமயம் பிரகாசப்படுத்துவன்
சில சமயம் உதா சீனரைப் போலே உபேஷையாய் இருந்திடுவன்
எப்படி இருந்தாலும் நமது அத்யவசாயம் மாறக் கூடாது
சகலவித பந்துவாக எப்பொழுதும் கருதி விச்வசித்து இருக்க வேண்டும் என்கிற சாஸ்திர அர்த்தம் அருளிச் செய்கிறார் –

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே-
ஒ மனமே-இனி நீஅனர்த்தப் பட்டாலும் படு-சுகப்பட்டாலும் படு –
இந்த அத்யாவசாயம் குலையாது இருந்தால் நீ தளராமல் இருக்கலாம்-குலைந்தால் தளர்வடைவாய்-உள்ள விஷயம் உனக்கு சொல்லி விட்டேன்
இனி நீ தளர்ந்தாலும் தளர்-தளராமல் ஒழிந்தாலும் ஒழி-என்கிறார் –

சொன்னேன் –
இந்த உண்மையை உனக்குச் சொல்லி விட்டேன் –

இளைக்க நமன் தமர்கள் பற்றி –
நமன் தமர்கள் இளைக்கப் பற்றி-யமபடர்கள்-பிடிக்கும் பிடியிலே நாம் துடிக்கும் பற்றி
நம்மை பிடித்து –
காவலில் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –

இளைப்பெய்த –
அதுக்கு மேலும் அதிகமாக துடிக்கும் படி –

நாய் தந்து மோதாமல்-
நாய்களை ஏவி நலியாமற்படி –

நல்குவான் நல்காப்பான் –
எம்பெருமான் நமக்கு அருள் செய்தாலும் சரி-அருள் செய்யா விட்டாலும் சரி
நல்குதல் -அருள் புரிதல்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
என்று இருப்பதே நமக்கு ஸ்வ ரூபம் –என்கிறார்

தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான்
அந்த எம்பெருமான் தான்-எல்லா பிராணிகளுக்கும்-தாயும் தகப்பனும்  ஆவான் –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-

——————————————————–

மற்ற தேவதாந்தரங்களும் உள்ளனவே என்பாரைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

தானே தனித் தோன்றல்
அவ் வெம்பெருமான் ஒருவனே-புருஷோத்தமன் –
தோன்றல்
ஆண் மகன் -அரசன் -பெருமையில் சிறந்தவன் -வெளிப்படுவதற்கும் பெயர்
கருமத்தால் அன்று ஸுய இச்சையால்
அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீர பரிஜாநந்தி யோநிம்
நிர்ஹேதுக கிருபையாலே அவதரித்து அருளுபவன்
அன்றிக்கே
தானே தனித் தோன்றல்
விருப்பம் இருந்தால் மட்டும் சேவை சாதிப்பவன்

தன் அளப்பு ஓன்று இல்லாதான்
அவனே ஒப்பற்றவன் –
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா என்கின்றாளால்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -உலகம் முழுவதும் இவன் ஒருவனாலே என்னும் பொழுது யார் ஒப்பார் உளர்

தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –
அவனே மற்று எல்லா பொருள்களிலும்-வியாபித்து இருப்பவன் –
அந்தர்யாமியாய் இருந்து சத்தையை நோக்குபவன்
கருதரிய யுயிருக்கு யுயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம்

தானே –
இப்படிப் பட்ட-எம்பெருமான் தானே –

இளைக்கில்-
ரஷிக்கும் தொழிலில் சளைத்து நிற்கும் பஷத்தில்

பார் கீழ் மேலாம் –
இவ்வுலகம் தலை கீழாய்-விபரீதமாகி விடும் –

மீண்டு அமைப்பான் ஆனால்-
இப்படி தலை கீழான அவற்றை-சரிப்படுத்த புகுந்தால்-அமைத்தல் ஒழுங்கு பட நியமித்தல்
ஈண்டு -இவ்வண்ணம்-இவ்வுடன் –சீக்கிரம் என்றுமாம்
மோனைக்கு சேரும்-பொருள் சுவை கருதி மீண்டு -பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்

அளக்கிற்பார் பாரின் மேலார்
இந்த பூமியில் யார் தான்-அவனுடைய ரஷகத்வத்தை-அளவிட வுரியர் –
அவனுடைய ரஷண சாமர்த்தியமே அளவிட ஒருவராலும் இயலாத பொழுது
வேறு ரஷகர் இல்லை எனபது சொல்லவும் வேணுமோ –

————————————————————-

கருவிலே திருவிலாதார் காலத்தை கழிக்கின்றீரே -ஜாயமான கடாஷம் இல்லாதார் பலர் திருந்தி வரக் கண்டிலர் -சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன் -கெஞ்சி உபதேசித்த இடத்திலும்-யானைக்கு கோமணம் கட்ட யாரால் முடியும்-ஆன அளவு சொல்லிப் பார்ப்போம் திருந்துபவர்கள் திருந்தட்டும்-வெறுத்து அருளிச் செய்கிறார்-
கள்வர் நிறைந்த காட்டில் கைப்பொருள் ஒன்றும் பறி கொடாமல் தப்பிப் போன ஒருவர்
தைவா தீனமாக தப்பினோம் என்று உகப்பது போலே-இருள் தரும் மா ஞாலத்திலே தாம் தப்பினோமே என்று உகக்குகிறார் –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான் —25-

ஆரானும் ஆதானும் செய்ய –
யாராவது–எதையாவது செய்து கொள்ளட்டும் -கற்றவர்கள் உடன் கல்லாதவர்கள் உடன் வாசி அற-தேவதாந்தர பஜனம் என்ன-உபாயாந்தரங்களை அனுஷ்டிப்பார் என்ன
பிரயோஜனாந்தரங்களை நச்சுவார் என்ன -எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று வெறுக்கும் தந்தை போலே அருளிச் செய்கிறார்-

அகலிடத்தை ஆராய்ந்து –
விசாலமான இப் பூமியை ஆராய்ந்து

அது திருத்தல் ஆவதே –
அவர் அவர்கள் கார்யங்களை திருத்தல்
நம்மால் ஆகுமோ –

சீரார் மனத்தலை –
எனது சிறந்த மனத்தில் உள்ள -திருந்தப் பெற்ற மனம் ஆதாலால் சீரார் மனம் –என்கிறார்

வன்துன்பத்தை –
வலிய துன்பங்களை –

மாற்றினேன் –
நீக்கிக் கொண்டேன் –

வானோர் இனத்தலைவன் கண்ணனால்-
நித்ய சூரிகள் திரளுக்கு தலைவனான-கண்ணபிரானால் –

யான் –
யானோ என்றால் -துன்பங்களுக்கு நிலமான இந்த விபூதியிலே-யான் ஒருவன் ஆகிலும் இன்பம் பெற நேர்ந்ததே என்று-ஆனந்திக்கிறார் –
வானோர் இனத் தலைவன் -பரத்வம்
கண்ணபிரான் -சௌலப்யம் –

—————————————————————

கீழ் பாட்டில்–யான் வன்துன்பத்தை மாற்றினேன்-என்று-தானே போக்கிக் கொண்டதாக அருளிச் செய்தார் -ஆராய்ந்து பார்த்த அளவில்-எம்பெருமான் உடைய திரு வருளுக்கே கர்த்தவ்யம் தோன்றும் படி-ஸ்வரூப அனுரூபமாக-கீழ் பாட்டில் அருளிச் செய்த அர்த்தத்தையே-பிரக்ரியா பேதத்தாலும்-சப்த பேதத்தாலும்-அருளிச் செய்கிறார்

யானும் என்நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம்மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

யானும் என்நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் –
நானும்-என் மனமும் ஆகிற-இருவருமே இசைந்து நின்றோம் –உடன் பட்டு இருந்ததே கர்த்தவ்யம்-வேறு ஒன்றும் இல்லை –

வல்வினையைக் -கானும் மலையும் புகக் –
அவை காடுகளிலும் மலைகளிலும் சென்று-புகும்படி -உருத் தெரியாத அதருஷ்ட ரூபமான வஸ்து-எம்பெருமான் உடைய நிக்ரஹம் ஒழிந்தமை சமத்காரமாக கவிகள் பேசுவர்-பெரியாழ்வார் நெய்க்குடத்தை பற்றி -திரு மொழியில் இங்கனம் பன்னி உறைத்து அருளிச் செய்கிறார்

கடிவான் –
துரத்துவதர்க்காக –

தானோர் -இருளன்ன மா மேனி –
இருள் தானே வடிவு கொண்டால் போலே-இருக்கிற விலஷணமான-திருமேனியை உடைய -கண்டவர்கள் நெஞ்சை குளிரச் செய்ய வல்ல-ஸ்ரமஹரமான திரு மேனி

எம்மிறையார் –
எம்பெருமான் –

தந்த அருள் என்னும் தண்டால்-
கிருபையாகிற தடியினாலே –நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி எறிந்தேன் -திரு மங்கை ஆழ்வார்

அடித்து –
புடைத்து –

அவன் அனுக்ரஹிக்க மேல் விழுந்த பொழுது இறாய்த்து பின் வாங்காமல் அனுமதி பண்ணி இருந்தேன் -என்கை –

—————————————————————-

த்வம் மே அஹம் மே -என்கிற சம்சாரத்தில்-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-கேட்டதும் மகிழ்ந்த எம்பெருமான் அவனை-ஞானக் கண்ணால் கண்ட ஆழ்வார்-இந்த ஆனந்தம் பண்டு உலகு அளந்த ஆனந்தத்துடன் ஒக்குமோ
அன்றி-அதிலும் மேற்பட்டதா -என்கிறார் போலும்

அடியால் படிகடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

அடியால் படிகடந்த முத்தோ –திருவடியால் பூமி முழுவதும்-அளந்து கொண்டதால் உண்டான-சந்தோஷமா -/ அது அன்றேல் –அல்லது –

முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியால் மேல் உலகத்தை எல்லாம்-அளந்து கொண்ட சந்தோஷமா –
முத் ப்ரீதி ப்ரமதோ ஹர்ஷ -அமரகோசம் –முத் -சந்தோஷம் அதுவே தமிழ் முத்து என்கிறார்/முத்து -அழகு-இந்த செயல் அழகா அந்த செயல் அழகா என்றுமாம்
இரண்டுமே சந்தோஷம் அழகு என்பதால் –
அன்றிக்கே
நவரத்னங்களில் சேர்ந்த முத்து என்றுமாம்/திருவடியில் வீரக் கழலில் சாத்திய முத்துக்களா–திரு முடியில் கிரீடத்தில் உள்ள முத்துக்களா எவை அளந்தன என்றுமாம்
பரம போக்யமாக இருப்பதால் -அவயவங்கள் கண்ணுக்கு தோற்றாமல் முத்துக்களே தோன்றியதால் என்னவுமாம்

ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி-திருமங்கை ஆழ்வார்-
மா முதலடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முகுதும் அகப்படுத்தி
ஒண் சுடர்ப் போது ஓன்று விண் செலீஇ -என்றும் இவரே அருளிச் செய்தபடி
ஒரு திருவடியே மேல் உலகங்களையும் அளந்தாய் இருக்க
முடியால்விசும்பு அளந்த என்றது-திருவடி உடன் திரு முடியும் ஓங்கி வளர்ந்த படியாலும்
எல்லா செயல்களுக்கும் திருவடியைச் சொன்னால் கண் எச்சில் படும் என்பதாலும்
நெடியாய் –
பகவானே –

நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் –
செறிந்த வீரக் கழலை அணிந்த-திருவடிகளை நீட்டி-செரி கழல்கள் தாள் -என்றும் பாட பேதம்-நெறி கழல் கோள் தாள்-என்பதே சிறக்கும் என்பர் அழகிய மணவாள சீயர்
சென்று உலகம் எல்லாம் நீ யளந்த யன்று –
உலகம் எல்லாம் சென்று நீ யளந்த யன்று -கீழ் உலகம் மேல் உலகம் எங்கும் வியாபித்து
அளந்த காலமாகிய-திருவிக்கிரம அவதாரத்திலே -/ அறிகிலமால்-
இந்த இரண்டில் எந்த சந்தோஷம் உனது நெஞ்சில் ஓடுகிறது-என்பதை அறிகிறோம் இல்லை –

——————————————————————-

பரம பக்தி தலை எடுத்தால் அன்றி-கீழே பிரச்துதமான அந்த விலஷணமான -திருமேனியை-சேவிக்க பெறாதே-தம்மில் தாமே சமாதானப் படுத்திக் கொள்கிறார்
ந மாம்ஸ சஷூர் அபி வீஷதே தம் -என்றும்
ந சஷூஷா பஸ்யதி கச்ச நைனம் -என்றும் சொல்லுகிறபடியே-புறக் கண்ணால் காண்கைக்கு என்ன ப்ரசக்தி –கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்-என் கண்ணனை நான் கண்டேனே -தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும் -மானஸ சாஷாத்காரமே அருளிச் செய்கிறார்-கமலக் கண் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற பத்தும் உட் கண்ணாலேயே -ஆச்சார்ய ஹிருதயம்-அகக் கண் விகசிக்கப் பெற்றவர்கள் புறக்கண்ணாலும் காணப் பெறுவார் என்பர் சிலர்-அங்கன் அன்றி-அவன் பரிஹ்ரஹித்து கொள்ளும் திவ்ய மங்கள விக்ரஹம் மாத்ரம்  பரம பக்தர்களுக்கு புலப்படுமே அன்றி-திவ்யாத்ம ஸ்வரூபம் புறக் கண்ணுக்கு புலப்படாது என்பர் பெரியோர்-அகக்கண் கொண்டு திவ்யாத்மா ஸ்வரூபத்தை சாஷாத் கரிக்கப் பெற்றோம் ஆகில்-புறக்கண் கொண்டு திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்கப் பெறுவோம் என்பதே கருத்து –

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

அன்றே –
அப்பொழுதே –

நம் கண் காணும் –
நமது புறக் கண்ணும் காணப் பெறும்

ஆழியான் காருருவம் –
திரு ஆழியை நிரூபகமாக வுடையனான-எம்பெருமான் உடைய கரிய திரு மேனியை -இன்றே நாம் காணாது இருப்பதுவும் -நாம் அவ்வுருவத்தைக் காணாமல்-வருந்திக் கிடப்பது-அகக் கண் மலராத இப்போது மாத்ரமே

என்றேனும் –
எக்காலத்திலும்

கட் கண்ணால் –
வெளிக் கண்ணாலே

காணாத வவ் வுருவை –
காணக் கூடாத-அப்படிப் பட்ட விலஷணமான திரு வுருவத்தை –

நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து –
நெஞ்ஜாகிற அகக்கண் விகசித்து-சாஷாத் கரிக்குமாகில்-

——————————————————————-

இன்றே நாம் காணாது இருப்பதுவும்-என்ற ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தி செவிப்பட்டதும் –
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கும்
ஆழ்வார் இவ்வார்த்தை சொல்லும்படி ஆகலாமோ-ஆழ்வாருக்கு நாம் எளிமைப் பட்டு காட்டிக் கொடுக்க வேண்டாமோ-தனது சௌலப்ய குணத்தை நெஞ்சிலே பிரகாசப் படுத்த-அனுபவித்து பேசுகிறார் இதில்

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே –
தாமாகவே முயற்சி செய்பவர்களில்-ஒருவர்க்காவது-நேராக-அறியக் கூடுவனோ
அன்பு அற்றவர்க்கு ருஜூ வாக அறியக் கூட அரியவன் என்றபடி
பக்தி இல்லாத அளவில் எவ்வளவு கற்றவர்களுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாகாதே
யே து த்வன்க்ரி சரசீருஹ பக்தி ஹீன தேஷாம் அமிபிரபி நைவ யதார்த்த போத
பித்தக்ன மஞ்ஞா மநாப்ஷி ஜாது நேத்ரே நைவ ப்ரபாபிரவி சங்கசி தத்வ புத்தி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

இணரும் துழாய் அலங்கல் எந்தை –
திரு மேனியின் சம்பந்தத்தாலே-மேன்மேலும் தழைத்து ஓங்குகின்ற-திருத் துழாய் மாலையை யுடைய எம்பெருமான் –
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடிமேலும்
தாளிணை மேலும் புனைந்த த ண் அம் துழாய் உடை அம்மான்
தன்னிலத்தில் காட்டிலும் இவன் தோளில் விகசியா நிற்கும்-தேவர்கள் தோளில் மாலை வாடாது-சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்
இணர்தல்-கொத்து கொத்தாக அலர்தல் –

ஒருவருக்கும் அறியக் கூடுபவன் அல்லன் ஆயினும் -உணரத்-தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவர் ஆனால்-தமக்கு எளியர்-தமக்கு அடிமைப் பட்டவர்கள் -எளியவர் -சேஷ பூதர் என்றபடி-எவ்வளவர்-தன் மேல் எவ்வளவு அன்பு உடையவரோ-அவ்வளவர்
அவர்களுக்கு தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் திருமால் ஆகையினாலே –பேசுவர் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாயான் வடிவு -பேயாழ்வார்

ஆனால் இங்கு
அதனாலே இவ்விடத்திலே

எனக்கு உணர எளியன் எம்பெருமான்
எம்பெருமான் என்னால் அறிந்து கொள்ளக் கூடியவர்-என்னுடைய அன்புக்கு தக்கபடி எளியனாக காட்டிக் கொடுப்பதில் தட்டில்லையே –

————————————————————————–

எனக்கு எளிய எம்பெருமானுக்கு -என்று அனுசந்தித்த-அநந்தரம்-அவன் சௌலப்ய குணானுபவமே விஞ்சி நிற்க-பாபங்கள் வேறு இடம் நோக்கி போய் விடுமே –

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

இங்கு இல்லை பண்டு போல்
என்னுடைய இந்த நெஞ்சில்-இத்தனை நாளும் போலே-

வீற்று இருத்தல் –
பாபங்கள் தங்கி இருக்க முடியாது -உயர்வற உயர் நலம் உடையவன் எவனவன் -கல்யாண குணங்களுக்கே நெஞ்சில் இடம் அல்பமாய் இருக்குமே
என்னுடைய செங்கண் மால்
என் மேல் வாத்சல்யத்தாலே-சிவந்த திருக் கண்களை உடைய பெருமான் உடைய

சீர்க்கும் –
கல்யாண குணங்களுக்கே-

சிறிது உள்ளம் –
உள்ளம் சிறிது-என் நெஞ்சம் இடம் போராததாய் இருக்கின்றது

அங்கே
முன்பு விசாலமான வாழ்ந்த இடத்திலே

மடி யடக்கி நிற்பதனில் –
துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக இருப்பதை விட-ஒரு மூலையில் மழைக்கு ஒதுங்கி நிற்பாரைப்  போலே

வல்வினையார் தாம்
கொடிய பாபங்கள் –வல்வினைகாள்-முன்னிலையாக முன்பு அருளிச் செய்து இங்கு வல்வினையார் -படர்க்கையாக அருளிச் செய்கிறார்
கோபமும் த்வேஷமும் நன்கு விளங்கும்-முகம் நோக்கி வார்த்தை சொல்லக் கூசுகிறபடி

ஈண்டு –
இவ்விடத்தில் நின்றும்-சீக்கிரமாகவும் என்றுமாம்
மீண்டு -என்றும் பாடம் –

அடி எடுப்பதன்றோ அழகு –
கால் பேர்ந்து வெளிக் கிளம்பி போவது அன்றோ அழகியது-

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: