Archive for August, 2014

ஸப்த காதை —6—அழுக்கு என்று இவை அறிந்தேன்–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 23, 2014

அழுக்கு என்று இவை அறிந்தேன் அம் பொன் அரங்கா
ஒழித்து அருளாய் உள்ளில் வினையை -பழிப்பிலா
என் ஆரியர்க்காக எம்பெருமானார்க்காக
உன் ஆர் அருட்காக வுற்று —-6-

—————————————————————————

அவதாரிகை –

இப்படி ஆத்மா நாசத்தை விளைக்கக் கடவ
இந் நாலுமே யாத்ரையாய் இருக்கிற
இஸ் சம்சாரிகள் நடுவே வர்த்திக்கிற
நீர்
இங்கன் உபதேசிக்கும்படி இவற்றில் அகப்படாதே தப்பி இருந்தீரே -என்று
பெரிய பெருமாள் உகந்து அருளக் கண்டு
இவை
நேரே அழுக்கு என்று அறிந்தேனே யாகிலும் இப்படி
இவ்வறிவை
அடி மண்டியோடேகழிக்க வற்றான என் ஆந்தர தோஷத்தை
எனக்கு அஜஞாதஜஞாபகரான பிள்ளை லோகாச்சார்யரையும்
தேவர்க்கு அபிமதரான எம்பெருமானாரையும்
தேவருடைய பரம கிருபையையும்
கடாஷித்துப்
போக்கி அருள வேணும் -என்று
விண்ணப்பம் செய்கிறார் –

———————————————————————————-

வியாக்யானம் –

அழுக்கு என்று இவை அறிந்தேன் –
இவை அழுக்கு என்று அறிந்தேன் –
கீழ்ச் சொன்னவை அடங்கலும்
தேஜோ த்ரவ்யமான ஆத்மவஸ்துவுக்கு நேரே அவத்யகரம்
என்னும் இடத்தை
நாராயண அபி விக்ருதீம் யாதி குரோ பிரச்யுதச்ய துர்ப்புத்தே -இத்யாதிகளாலும்
என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும் அன்றும் தன் ஆரியன் பால் அன்பு ஒழியில்-
இத்யாதிகளான அருளால பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகளாலும் –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம்
பாகவத அபசாரம் தான் அநேக விதம்
அதிலே ஓன்று அவர்கள் பக்கலில் ஜன்ம நிரூபணம் -இத்யாதியான
பிள்ளை லோகாச்சார்யார் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலும்
வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோநி பரீஷயாஸ் துல்யம் -இத்யாதி வசனங்களாலும்
சம்சய விவர்யயங்கள் அறும்படி
விசதமாகவும்
பர உபதேச ஷம மாகவும் -அறிந்தேன் –

இவற்றின் தோஷப் பரப்பை தனித் தனியே
எடுத்துச் சொல்லப் புக்கால் பணிப்படும் என்று
பிரயோஜனத்திலே இழிகிறார் –
அம் பொன் அரங்கா –
நான் இவ்வறிவைப் பெறும்படி
அழகியதாயும்
மனோஜஞமாயும்
பாவனமாயும்
இருந்துள்ள
திருவரங்கப் பெரு நகரிலே
ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
கிருஷி பண்ணினவர் தேவர் அன்றோ –

அம்பொன் அரங்கா –
நான் இவ்வறிவைப் பெற்ற பின்பு இ றே
துயர் அறு சுடர் அடி -என்னும்படி
தேவர்க்கு
இவ்வழகும்
மனோஜ்ஞமும்
நிறம் பெற்றது
இவர் தாம் திரு வனந்த புரத்திலே எழுந்து அருளி இருந்து
இப்பிரபந்தத்தை இட்டு அருளினார் ஆகிலும்
உருவு வெளிப்பாட்டின் மிகுதியாலே
அம்பொன் அரங்கா -என்று சம்போதிக்கும்படி
பெரிய பெருமாள் இவருக்கு முன்னிலையாகத் தோற்றுகிறார் போலே காணும் –
அம்பொன் அரங்கா ஒழித்து அருளாய் உள்ளில் வினையை —
தேவரீர் உடைய பாவனத்வத்துக்கும்
தேவரீரைப் பற்றிய என்னுடைய அஸூக்திக்கும்
அக்னி சிஞ்சேத் போலே
என்ன சேர்த்தி உண்டு –
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வார் -என்று
தத்வ தர்சிகள் சொன்ன பாசுரம் மத ஏக அவர்ஜமாய் இருப்பது ஒன்றோ –
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மை பெரு வார்த்தை -என்னும்படி
கையும் உழவுகோலும்
பிடித்த சிறுவாய்க் கயிருமான
சாரத்திய வேஷத்தோடு
திருத் தேர் தட்டிலே எழுந்து அருளி இருந்து
ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனனை வ்யாஜி கரித்து
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று தேவர் சொன்ன வார்த்தை
அர்த்த ஸ்பர்சியாய் இருப்பது ஓன்று அன்றோ –
அந்ருதம் நோகத பூர்வம் மே-என்றும்
நமே மோகம் வாசோ பவேத் -என்றும்
தேவர் தாமே அருளிச் செய்கையாலே தேவரீருக்கு அந்ருதத்தில் வ்யுத்பத்தி இல்லை –

ஒழித்து அருளாய் —
இத்தலை அர்த்தியாது இருக்க பூர்வஜராய்க் கொண்டு
செய்யக் கடவ தேவர்க்கு
இத்தலை அர்த்தித்தால் ஆறி இருக்கப் போமோ –

அரங்கா ஒழித்து அருளாய் –
பயிர்த்தலையில் குடியிருப்பரோபாதி
இத்தலையை -காக்கும் இயல்வனராய் –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதிக்கை அன்றிக்கே
நித்ய சந்நிதி பண்ணிக் கொண்டு போருகிற
தேவரீருக்கு இது தகாதது ஒன்றோ –

அருளாய்
நிர்க்க்ருணர் செய்யுமது
அருளாளியான தேவர்க்கு போருமோ

உள்ளில் வினையை –
உண்பார் மிடற்றைப் பிடிக்குமவன் போலே
மனனகமலம் -என்னும்படி
ஞான ப்ரசரண த்வாரத்தைப் பற்றி இ றே
இவ்வினை தான் இருப்பது –

உள்ளில் வினையை –
உள்ளத்தே உறையும் மாலை -என்கிறபடியே
உள்ளே பதி கிடந்தது
சத்தியை நோக்குகிற தேவரீருக்கு
உள்ளில் உண்டான விரோதியைப் போக்குகை பெரும் பணியோ-

ஒழித்து அருளாய் உள்ளில்வினையை –
பாசியானது தெளிந்த ஜலத்திலே எங்கும் ஒக்க வ்யாபரித்தாப் போலே
இப்படிப்புக்குத் திரோதாயகமாய்க் கொண்டு உள்ளே பிணை யுண்டு இருக்கிற
பாபத்தை போக்கி அருளீர்-

நீர் ஒழித்து அருளாய் -என்று இங்கன் உறைப்புத் தோற்றச் சொல்லுகிறது என் கொண்டு என்ன
ப ழிப்பிலா என் ஆரியர்க்காக எம்பெருமானார்க்காக உன் ஆர் அருட்காக வுற்று –
தேவர்க்கு அபிமதராய் இருப்பாரையும்
தேவருடைய தகவையும்
அண்டை கொண்டு காணும்
நான் இவ்வார்த்தை சொல்லுகிறது
என்கிறார் –

பழிப்பிலா என் ஆரியர்க்காக-
கீழ்ச் சொன்ன குற்றங்கள் ஒன்றும் இன்றிக்கே இருந்து வைத்து
ஸ்வ உபதேச முகத்தாலே இவை அடங்கலும் ஆகாது என்னும் அறிவிலனான எனக்கு
அறிவித்த பிள்ளை லோகாச்சார்யருக்காகவும் –
இப் பழிப்பு தான் சில நாள் யுண்டாய் பின்பு கழிந்து இல்லாமையாலே
ததத்யந்தா பாவம் தோற்ற -பழிப்பிலா -என்கிறார்-

என் ஆரியர்க்காக-
குரும் வாயோபி மந்யதே -என்கிற ச்வீகாரம் போன்ற ச்வீகாரம் அன்று –

அவ்வளவேயோ
எம்பெருமானார்க்காக –
அதுக்கு மேல்
அவருக்கு பரம சேஷியாய்
தேவரீர்க்கு அத்யந்த அபிமதராய்
ஆச்சார்யா பதத்துக்கு எல்லை நிலமாய்
சரம அர்த்தத்தை அனைவருக்கும் தூளி தானம் பண்ணி அருளின
எம்பெருமானார்க்காகவும் –

அவ்வளவேயோ –
உன் ஆர் அருட்காக –
அதுக்கு மேலே
தேவரீர்க்கு அசாதாரணமான நிரூபகமாய்
மற்றை குணங்களுக்கு அதிசய ஆதாயகமான அளவிலே
அகஞ்சுரிப்பட்டு இராதே என் அளவிலேயாய்க் கொண்டு
கரை கட்டா காவேரி போலே கரை புரண்டு இருக்கிற
க்ருபா குணத்துக்காகவும் உன் தன் ரஷண சக்தியில் வந்தால்
தேவரையும் விஞ்சிக் காணும் தேவரீருடைய கிருபை இருப்பது –

விரோதியிலே பீதியாலும்
தன் நிவ்ருதியில் யுண்டான த்வரையாலும்
அந்தரங்கரை முன்னிடில் பலம் சடக்கென கை புகுரும்
என்கிற த்வரையாலும்
இங்கன் சொல்லுகிறார் –
வுற்று –
குருவரம் வரதம் விதன்மே -என்றும்
ராமானுஜாங்க்ரி சரணோஸ்மி-என்றும்
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய -என்றும்
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றும்
சொல்லுகிறபடி
ஏவம் பூதரான இவர்களுக்காகவும் அடியேனை அங்கீ கரித்து அருளி
என்னுடைய உள்ளில் வினையை ஒழித்து அருள வேணும்
அல்லாவிடில்
தேவரீர்க்கு
ஆஸ்ரித பாரதந்த்ர்யமும்
க்ருபா பாரதந்தர்யமும்
குலையும் இ றே
என்னைப் பார்த்து செய்து அருளுவதாக நினைத்து இருந்த அன்று இ றே
தேவரீர்க்கு காலக் கழிவு செய்யல் ஆவது –

ஆக
இப்பாட்டால்
பகவன் நிர்ஹேதுக கிருபா பிரபாவ பிரகரணத்தில்
பேற்றுக்கு அடி கிருபை -இத்யாதியாலும்
கிருபை பெருகப் புக்கால் இவருடைய ஸ்வாதந்த்ர்யத்தாலும்
தகைய ஒண்ணாதபடி
இரு கரையும் அழியப் பெருகும் இத்யாதியாலும்
சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அருளிச் செய்தார் ஆய்த்து-

————————————————————————–

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸப்த காதை —5—என் பக்கல் ஓதினார் இன்னார்–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 23, 2014

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயலவும்
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் -மன் பக்கல்
சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும்
ஆவிக்கு நேரே அழுக்கு—-5-

———————————————————————-

அவதாரிகை –

இப்படி உத்தேச்யனான சிஷ்யனுக்கு
ஸ்வாச்சார்யா விஷயத்தில் பிரேமம் அற்று இருக்கை
ஸ்வரூப ஹாநி யானவோபாதி
உபதேஷ்டாவான ஆச்சார்யனுக்கு
தன்னிடத்தில் தன்னை மாறாடி நினைக்கை யாகிற
ஆச்சார்யத்வ பிரதிபத்தியும்
சிஷ்யன் இடத்தில் சிஷ்யனை மாறாடி நினைக்கை யாகிற
ஸ்வ சிஷ்ய பிரதிபத்தியும்
அப்படியே
சஹஜ தாஸ்யத்தை யுடையராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலில்
ஜன்ம நிரூபணமும்
ஸ்வ ஸ்வரூப ஹாநியாய விடும்
என்கிறார் –

—————————————————————————-

வியாக்யானம் –

என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயலவும் –
சிலர் தன பக்கலிலே ஞான உபஜீவனம் பண்ணும் அளவில்
அறிவிலேன் -என்றும்
அஜ்ஞ்ஞோஹம் -என்றும்
அஜ்ஞா நா மக்ர கண்யம் மாம் -என்றும்
சொல்லுகிறபடியே
தன்னை அஜ்ஞ்ஞரில் தலைவனாக நினைத்து
அவர்களும் தானும்
போதயந்த பரஸ்பரம் -பண்ணினார்களாக பிரதி பத்தி பண்ணி இராதே –
என்னிடத்தில் இன்னார் இன்னார் இவர்த்த விசேஷங்களை
அதிகரித்துப் போந்தார்கள் ஆகையாலே
அவர்கள் எனக்கு சிஷ்யர்களாய் இருப்பார்கள்
என்று நினைத்து இருக்கை இ றே
இந்த துஸ் ஸ்வ பாவம் –

அவ்வளவேயோ –
என் பக்கல் நன்மை எனும் இயல்வும் –
அப்படியே
தான் சிலருக்கு ஜ்ஞ்ஞான உபதேசம் பண்ணும் அளவில் –
என் முன் சொல்லும் மூ வுருவா -என்றும்
ஸ்ரோத்ரு ஷூ பிரதம ஸ்வயம் -என்றும் -சொல்லுகிறபடியே
ஸ்வாச்சார்யனை உபதேஷ்டாவாகவும்
ஸ்ரோதகர்களில் தன்னை முந்தின ஸ்ரோத்தாவாகவும்
ஸ்வ உபதேச்யரை தனக்கு ஸ ப்ரஹ்மசாரிகளாகவும்
பிரதி பத்தி பண்ணி இராதே
தன்னை
இவர்களுக்கு உபதேஷ்டாவாகவும்
அவர்கள் தனக்கு உபதேச்யராகவும்
நினைத்து
நான் இன்னார்க்கு இன்னபடி அஜ்ஞ்ஞாதஜ்ஞாபனம் பண்ணிக் கொண்டு போந்தேன்
ஆகையால்
என்னிடத்தில் ஆச்சார்யத்வம் ஆகிற நன்மை இரா நின்றது
என்று நினைத்து இருக்கை யாகிற
இந்த துஸ் ஸ்வ பாவமும் –
இயல்வு -ஸ்வ பாவம் –

அவ்வளவேயோ –
மன் பக்கல் சேவிப்பார்க்கு அன்புடையோர் சன்ம நிரூபணமும் –
அப்படியே
பதிம் விச்வச்ய-என்றும்
ஜகத் பதீம் -என்றும்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்றும்
இறைவா -என்றும்
சொல்லுகிறபடியே
சர்வ ஸ்வாமியான எம்பெருமான் பக்கலிலே
சிநேக பூர்வ அநு த்யானம் பக்திரித்யபி தீயதே
பஜ இத்யேஷ தாதுர் வை சேவாயாம் பரி கீர்த்தித –
என்னும்படியாக சிநேக பூர்வகமாக நித்ய சேவை பண்ணுமவர்களுக்கு
நடையா வுடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் -என்கிறபடியே
பரம ஸ்நேஹிகளாய்க் கொண்டு
அசேஷ சேஷ வ்ருத்திகளிலும் அந்விதராய் சஹஜ தாஸ்யத்தை யுடைய ராய் இருந்துள்ள
ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடத்திலே
வைஷ்ணவோத்பததி சிந்தனம்
மாத்ரு யோநி பரீஷா யாஸ்துல்ய மா ஹூர்மநீஷிண-என்று
மாத்ரு யோநி பரிஷை யோடு ஒக்க சாஸ்த்ரங்களில்
சொல்லப் படுகிற ஜன்ம நிரூபணமும்-

ஜன்ம நிரூபணம் ஆவது –
ஜாதி நிரூபணம்
இது குற்றத்துக்கும் இழவுக்கும் உப லஷணம்-
பகவத் பக்தி தீபாக் நிதக்த துர்ஜாதி கில்பிஷா -இத்யாதி களாலே
தத் ப்ரபாவத்தாலே விச்வாமித்ரனுக்கு ஷத்ரியத்வம் நிவ்ருத்தமானாப் போலே
பகவத் பிரசாதத்தாலே துர்ஜாதி நிவ்ருத்தமாம் என்று சொல்லுகையாலே
அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் -அதஸ்மிம்ச்தத் புத்தியாய் இ றே இருப்பது –

அன்புடையோர்
நிதி யுடையோர் -என்னுமா போலே
இதுக்கு மேற் பட்டு இருப்பதோர் சம்பத்து இல்லையே
அன்புடையோர் சன்ம நிரூபணம் -ஆவிக்கு நேரே அழுக்கு-
மற்றையார் இடத்தில்
ஜன்ம நிரூபணம்
யதா வஸ்த்தித்த வஸ்து விஷயம் ஆகையாலே
அழுக்கு அன்று போலே காணும் –

சன்ம நிரூபணம் ஆவிக்கு நேரே அழுக்கு –
கீழ் சொன்ன இரண்டும்
தேஜோ த்ரவ்யமான ஆத்மவஸ்துக்களுக்கு பாகவத அபசாரத்தில் முற்பட
பரி கணிதமான ஜன்ம நிரூபணமான இது நேரே அழுக்கு –

அன்றியே
ஸ்வாச்சார்யா விஷயத்தில் அன்பு இல்லாமையும்
ஆத்மாஜ்ஞ்ஞான மயோமல-என்கிற ஆத்மவஸ்துக்களுக்கு
இம் மூன்றுமே நேரே அழுக்கு என்னவுமாம் —

அங்கனும் அன்றிக்கே –
அஞ்சு பொருளும் அளித்தவன் பால்
அன்பிலாமை நித்தியமான ஆத்மவஸ்துவுக்கு
நேர் கொடு நேர் நாசகம் ஆனால் போலே
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வு -முதலான இம் மூன்றும்
ஆத்மாவுக்கு நேர் கொடு நேர் நாசகம்-
என்னவுமாம் –

நேரே அழுக்கு
அஹங்கா ரார்த்த காமாதிகளைப் போலே
சத்வாரகம் அன்றியே
அத்வாரமாகவே அழுக்கு –

க்ரூர நிஷித்தம் என்னும்படி இ றே இவற்றின் கொடுமை இருப்பது –

ஆக
இப்பாட்டில் -பூர்வார்த்தத்தாலே
ஆச்சார அனுவர்த்தன பிரகரணத்தில்
தன்னை மாறாடி நினைக்கை யாவது -தன்னை ஆச்சார்யன் -என்று நினைக்கை -இத்யாதியாலும்
மனஸ் ஸூ க்குத் தீமை யாவது
ஸ்வ குணத்தையும்
பாகவத தோஷத்தையும்
நினைக்கை -இத்யாதியாலும்
பாகவத அபசாரம் தான் அநேக விதம்
அதில் ஓன்று அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் -இத்யாதியாலே
கீழ் பிரகரணத்தில் சொன்ன அர்த்த விசேஷங்களை அருளிச் செய்தார் ஆயிற்று –

——————————————————————————–

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸப்த காதை —4–தன்னை யிறையை—பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 23, 2014

தன்னை யிறையைத் தடையைச் சரண் நெறியை
மன்னு பெரு வாழ்வை யொரு மந்த்திரத்தின் இன்னருளால்
அஞ்சிலும் கேடோட வளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சிலும் கேடு என்று இருப்பன் நான்——4-

——————————————————————-

அவதாரிகை –

பின்னையும்
ஹிம்வாஹலோக நியாயேன இரண்டாம் பாட்டைக் கடாஷித்து அருளி
அதிலே நிர்த்தேசித்த அஞ்சு பொருள் தான் இன்னது என்றும்
அதுதான் இவ்விடத்தே பிரதி பாதிக்கப் பட்டது என்று
அருளிச் செய்யா நின்று கொண்டு
ஏவம் பூதமான இவ் வர்த்த பஞ்சகத்தை
தன்னுடைய பரம கிருபையால் உபதேசித்து அருளிய
ஆச்சார்யன் பக்கலிலே பிரேமம் அற்று இருக்குமவன்
விஷத்தில் காட்டிலும் அதி க்ரூரன்
என்கிறார்-

—————————————————————————

வியாக்யானம் –

ஆதரத்தில் பௌனபுந்யம் அலன்க்ருதியாய் இருக்கும் போலே காணும் –
தன்னை இறையை -இத்யாதிகளில்
த்வதீயையை பிரதமை யாக்கி
திரு மந்திர பிரதிபாத்யமாய் இருந்துள்ள
ஸ்வ ஸ்வரூபாதிகள் ஐந்திலும் கேடோடே அளித்தவன் -என்று அன்வயிக்க்கவுமாம்

அன்றிக்கே
மந்திரத்தில் ஐந்திலும் வைத்துக் கொண்டு
தன்னை இறையை
தடையை
சரண் நெறியை
மன்னு பெரு வாழ்வை
கேடோடே அளித்தவன் –
என்றும் அன்வயிக்க்கவுமாம் –

யஸ் யாஸ்மி -இத்யாதிகளில் வைத்துக் கொண்டு
பர ஸ்வரூபம் முன்னாக அர்த்த பஞ்சகத்தை நிர்தேசித்தார்
முதல் பாட்டில்
பிள்ளை அருளிச் செய்த அர்த்த பஞ்சக ரஹச்யத்தை உட்கொண்டு
ஸ்வ ஸ்வரூபம் முன்னாக அர்த்த பஞ்சகத்தை நிர்தேசிகிறார் -இதில் –

தன்னை –
திருமந்த்ரத்தில் பிரதம பதமான பிரணவத்தில் –
பகவத் சேஷத்வ ஆஸ்ரயமாக
மகாரத்தாலே பிரதி பாதிக்கப் படுகிற
தானும்

யிறையைத்-
தனக்கு வகுத்த சேஷியாக பிரதிபாதிக்கப் படுகிற
அகார வாச்யனான
எம்பெருமானும் –

தடையைச் –
தான் அவனைப் பற்றும் இடத்தில் இடைச் சுவராக
த்வதீய பதமான நமஸ் சில்
சஷ்ட்யந்த மகாரோக்தமான
விரோதியும் –

சரண் நெறியை –
அப்படியே தான் அவனைப் பெறுகைக்கு
நிரபாய உபாயமாக
அகண்ட நம பத உக்தமான
சரணா கதியும் –

மன்னு பெரு வாழ்வை -‘-
இச் சரணா கதி லப்தமான
சவிபக்திக நாராயண பதோக்தமான
கைங்கர்யம் ஆகிற நித்ய புருஷார்த்தமும் –

யொரு மந்த்திரத்தின் –
இப்போது படும் துறை இது ஒன்றுமே போலே காணும்
மற்ற வ்யாபக த்வ்யத்துக்கும்
இப் பேறு பாடில்லை இ றே-

ஒரு
இவ்வர்த்த விசேஷங்களை
பிரதிபாதிக்கக் கடவதாயும்
பிரபன்னன் ஆகிற பிரமாதாவுக்கு
அர்ச்சாவதாரம் ஆகிற ப்ரமேயத்தை அறிவிக்கும் பிரமாணமாயும்
சர்வ உபாய ஸூன்யர்க்கு சர்வ ஸ்வம்மாயும்
அந்தனுக்கும் அசக்தனுக்கும் வைத்த தண்ணீர் பந்தலாயும்
சம்சார விஷ தஷ்டனுக்கு சித்த ஔஷதமாயும்
அதனனுக்கு நிதியாயும்
எம்பெருமானைப் பற்றும் அதிகாரிக்கு மங்கள ஸூ த்ரமாயும்
ஒரு பாகவத நியமனத்தை வெறுத்தல் மறுத்தல் செய்யாதே
அது போக்கியம் என்று இருக்கை யாகிற பல ஞானத்தை யுண்டாக்கக் கடவதாயும்
தனக்கு பிராப்தி அணித்தாய் இருக்கும் அளவிலும் பகவத் விஷயத்தில் அபி நிஷ்டரான
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு தத் கிஞ்சித் காரத்துக்கு உறுப்பாக
இங்குத்தை வாசத்திலே ஒருப்படுகை யாகிற
பல யாதாம்ய ஞானத்தை விளைக்கக் கடவதாயும்
ஜ்ஞானப் ப்ரதன் ஆச்சார்யன் -என்னும் நினைவை ஜனிப்பிக்குமதாயும்
ஞான வர்த்தகர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்னும் பிரதிபத்தியை பிறப்பிக்குமதாயும்
ஞான விஷயம் எம்பெருமான் என்னும் உணர்வை யுண்டாக்குமதாயும்
ஜ்ஞான பலம் பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் என்னும் தெளிவைக் கொடுக்குமதாயும்
அக் கைங்கர்யத்துக்கு சரமாவதி பாகவத கைங்கர்யம் என்னும் பிரதிபத்தியை பிறப்பிக்குமதாயும்
போருகையாலே
நமந்திர அஷ்டாஷராத்பர -என்றும்
நாஸ்திசஅஷ்டாஷராத்பர-என்றும்
சொல்லுகிறபடியே வாசகங்களில் தனக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லாதபடி
தனக்குள் நின்ற வஸ்துவைப் போலே அத்விதீயமாய் யாய்த்து
பெரிய திரு மந்த்ரம் தான் இருப்பது –

ஒரு மந்திரத்தின் –
மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
தன்னை அனுசந்திப்பார் ஆரேனும் ஆகவுமாம்
அவர்களுடைய இஷ்ட ப்ராபண பர்யந்தமாயும்
அநிஷ்ட நிவாரண பர்யந்தமாயும் இருந்துள்ள
ரஷணத்தைப் பண்ணுமதாகையாலே
இத்தை மந்த்ரம் -என்கிறது –

இப்படி அர்த்த பஞ்சகத்தை உபதேசித்தது இத்தலையில் ஏதேனும் ஒரு நன்மை கண்டோ என்ன –
இன்னருளால் –
அங்கன் அன்றிக்கே
நிர்ஹேதுகமாக -என்கிறார் –

இன்னருளால் –
பல்லார் அருளும் பழுது -என்னும்படியான
ஈஸ்வரனின் அருளிலும் அதிசயமாய் இ றே இவ்வருள் தான் இருப்பது –
அது -ஸ்வ தந்த்ரமாயும்
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாயும்
இருக்கும்
இவனுடைய அருள்
பரதந்த்ரமாயும்
மோஷைக ஹேது பூதமாயும் இருக்கும் –

இன்னருளால் –
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்கிறபடியே
இத்தலையிலொரு நன்மை அபேஷியாதே
பரம கிருபையாலே-

அஞ்சிலும் கேடோட வளித்தவன் –
இந்த மந்திர பிரதிபாத்யமான
அர்த்த பஞ்சகத்திலும்
அஞ்ஞான
சம்சய
விபர்யயங்கள்
அறும்படி ஞான உபதேசம் பண்ணி அருளின சதாச்சார்யன் பக்கலிலே –

அஞ்சிலும் கேடோட அளிக்கை யாவது –
மகர வாச்யனான சேதன ஸ்வரூபம்
ப்ரக்ருதே பரமாய்
ஜ்ஞானானந்த லஷணமாய்
ஜ்ஞான குணகமாய்
நித்தியமாய்
நிர்விகாரமாய்
அணுவாய்
ஏக ரூபமாய்
பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -இருக்கும் என்றும்-

அகார வாச்யனான பர ஸ்வரூபம் –
லஷ்மி ஸ நாதமாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகமாய்
ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணமாய்
த்ரிவித பரிச்சேத ரஹிதமாய்
உபய விபூதி நிர்வாஹகமாய்
சர்வ அபாஸ்ரயமாய்
சர்வ பிரகாரத்தினாலும் ரஷகனாய்
சேஷியாய்
இருக்கும் என்றும்

ஷஷ்ட்ட்யந்த மகார உக்தம்மான விரோதி ஸ்வரூபம்
தேக ஆத்மா அபிமான ரூபமாய்
தேவதாந்திர பரதவ புத்தி விலஷணமாய்
பர உபகாந்தர உபாயத்வ பிரதிபாத்யாத்மகமாய்
கைங்கர்ய ஸ்வாரத்ததா புத்தி ரூபமாய்
பிராரப்த சரீர சம்பந் தாத்மகமாய் –
சம்சார வர்த்தகமாய்
அஹங்கார மமகார ரூபமாய்
அத்யந்த ஹேயமாய்
த்யாஜ்யமாய்
இருக்கும் என்றும்

அகண்ட நம பத உக்தமான உபாய ஸ்வரூபம்
சித்தமாய்
பரம சேதனமாய்
சர்வஞ்ஞமாய்
சர்வ சக்தியாய்
சஹா யாந்தர நிரபேஷமாய்
சர்வ பல பிரதமாய்
பிராப்தமாய்
வ்யபிசார விளம்ப விதுரமாய்
ச்வீகார விஷய பூதமாய்
இருக்கும் என்றும்

சவிபக்தகமான நாராயண பத உக்தமான புருஷார்த்த ஸ்வரூபம்
அனுபவ ஜனித ப்ரீதி காரிதமாய்
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தா உசிதமாய்
பரம பிராப்யமாய்
பரார்த்த தைக வேஷமாய்
ஸ்வரூப அனுரூபமாய்
ஸ்வர்த்தத்தா கந்த ரஹிதமாய்
நிரதிசய போக்யமாய்
யாவதாத்மா பாவியாய்
இருக்கும் என்று வெளி இட்டுக் கொண்டு-

தேகாத்ம ப்ரமம்
ஸ்வ தந்த்ராத்மா ப்ரமம்
அந்ய சேஷத்வ ப்ரமம்
பகவத் விஷயத்தில் அநீஸ்வர ப்ரமம்
தேவதாந்திர பரதவ ப்ரமம்
தத் சமத்வ ப்ரமம்
அஹங்கார மமகாராத் யுபபாதேயத்வ ப்ரமம்
பிராரப்த சரீரஷ்ய அநிவிர்த்தத்ய ப்ரமம்
தத் அனுபந்தி ஷூ பந்தித்வ ப்ரமம் –
ச்வீகார உபாயத்வ ப்ரமம்
கைங்கர்ய ச்வார்த்தத்ய ப்ரமம்
தத் ச்வீகர்த்ருத்வ ப்ரமம்
ப்ரப்ருதிகமான அஜஞான உதய அஜ்ஞ்ஞானாதிகள் எல்லாம்
வாசனையோடு போம்படி கிருபை பண்ணுகை-

அளித்தவன் பால் அன்பிலார் –
இப்படி உபதேசித்த ச்வாச்சார்யன் விஷயத்திலே
யஸ்ய தேவே பராபக்திர்யதா தேவே ததா குரௌ-என்று
அநச்ய கர்த்தவ்தையா விதிக்கப் பட்ட ப்ரேமம் இன்றிக்கே இருக்குமவர்கள் –

இப்படி -இருந்துள்ள இவர்களை நீர் நினைத்து இருப்பது எங்கனே என்ன
நஞ்சிலும் கேடு என்று இருப்பன் நான் –
நஞ்சு -கேடு
இவர்கள் அதிலும் கேடு
ஹேயமாய் நச்வரமான சரீரத்தை
ஸ்வ பஷணத்தாலே முடிக்க வற்றான விஷத்தில் காட்டிலும்
உபாதேயமாய் நித்தியமான ஆத்மவஸ்துவை முடித்துக் கொள்ளுமவர்கள் ஆகையாலே
நா பக்ராமதி சம்சாராத் சகலு ப்ரஹ்ம ஹா பவேத் -என்று
மகா பாதகியாக
சொல்லப்படுகிற நித்ய சம்சாரி யோபாதி
அதி கிரூரர் என்று அறுதி இட்டாய்த்து நான் இருப்பது
என்கிறார் –

இருப்பன் நான் –
என்று ஸ்வ பிரதிபத்தி விசேஷத்தை அருளிச் செய்கிறார்

இருப்பன்
இவ்விருப்பில் எனக்கு ஒரு சலம் இல்லை
இதுவே யாய்த்த் யாத்ரை –

நான் –
பிள்ளை லோகாச்சார்யர் உடைய விஷயீ காரத்தைப் பெற்ற எனக்கு
இவ்விருப்பு வந்தேறி யாய் இராது இ றே-

——————————————————————————-

ஆக இம் மூன்று பாட்டாலும்
அதிகார நிஷ்டாக்ரம பிரகரணத்தில் –
அசஹ்யாபசாரமாவது -நிர்நிபந்தனமாக பகவத் பாகவத
விஷயம் என்றால் அசஹமாநனாய் இருக்கையும்
ஆசார்ய அபசாரமும் —அவை யுண்டானாலும்
இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமே போரும்
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களாய்-இத்யாதிகளில் சொல்லுகிற
அர்த்த விசேஷங்களை வெளி இட்டு அருளினார் -ஆயிற்று-

—————————————————————————————-

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸப்த காதை —3—பார்த்த குருவின் அளவில்–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 22, 2014

பார்த்த குருவின் அளவில் பரிவின்றி
சீர்த்த மிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் -கார்த்த கடல்
மண்ணின் மேல் துன்புற்று மங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு—————3-

———————————————————————————

அவதாரிகை –

ஸ்வ ஆச்சார்யன் பக்கல் பிரேமம் அற்று இருந்தானே யாகிலும்
அவன் உபதேசத்தாலே அர்த்த பஞ்சகம் முதலாக தாத்பர்யங்கள் ஓடினது
ஞானக் கலைகளான அவ்வவ சாஸ்த்ரங்களை பரக்க கற்று
அத்தாலே பிறந்த ஞான விசேஷத்தாலே
இவனுக்கு ஈடேறக் குறை என்- என்ன
அந்த பிரேமம் அன்றிக்கே உண்டாய் இருக்கிற ஞான விசேஷம் ஆனது
ஸ்ருதம் தஸ்ய சர்வம் குஞ்ஜரசௌ சவத் -என்கிறபடியே
கஜ ஸ்நானத்தோ பாதி
நிரரத்தகமாய் இருப்பது ஓன்று ஆகையாலே
ஆதலால்
நண்ணார் அவர்கள் திருநாடு -என்னும்படி அதபதநம் ஒன்றுமே காணும் -இவர்களுக்கு பலித்து விடுவது -என்கிறார் –

——————————————————————————-

வியாக்யானம் –

பார்த்த குருவின் அளவில்-
எதிர் சூழல் புக்கு திரிகிற
சர்வேஸ்வரனும் கூட ஆந்தனையும் பார்த்து
இனி நம்மால் ஆகாது -என்று கை வாங்கி கண்ண நீர் உடன் மீளும்படியான தன்னை
பலம் ஒன்றும் காணாமை காணும் கருத்தர் -என்கிறபடியே
க்யாதி லாப பூஜைகளில் கண் வையாதே
உஜ்ஜீவன ஹேதுவாய்க் கொண்டு
நிர்ஹேதுகமாக கடாஷித்து அருளி
அஜ்ஞ்ஞா நதி மிராந்தச்ய ஜ்ஞாநாஞ் ஜன சலா கயா-சஷூ ருன்மீலிதம் யேன -என்கிறபடியே
அஜ்ஞ்ஞான அந்தகாரத்தை வாசனையோடு போக்க வற்றான
ஜ்ஞானத்தை உபதேசித்து
இப்புடைகளிலே மகா உபகாரகரான ஆச்சார்யன் பக்கலிலே-

பரிவின்றி –
தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பு ஒன்றிலாதார் -என்கிறபடியே
இம் மகா உபகாரத்துக்குத் தோற்று
உனக்கு என் செய்கேன் -என்று பரிவர் –
கிம் இவ ஸ்ரீ ரீ நிதே வித்யதேமே -என்று சொல்லும்படி
இவ்விஷயத்தில் அகிஞ்சனனான நான் எத்தைச் செய்வேன் -என்று
நெஞ்சாறல் பட்டு கிஞ்சித் காரத்திலே மீளும்படி பண்ணக் கடவதான
பிரேமம் இன்றிக்கே இருப்பான் –
பரிவாவது -பஷபாதம் –
இத்தால் பிரேமத்தை நினைக்கிறது
பூயோ நாதே மமது சததா வர்த்ததா மேஷ பூய -என்று
அளவுடையார் ஆச்சார்ய விஷயத்தில் ஆசாசிக்கிற பிரேமத்தைக்
காணும் இவன் பண்ணாது ஒழிகிறது-

பிரேமம் இன்றியிலே ஒழிந்தாலும் இவன் தன்னுடைய ஞான விசேஷத்தாலே உஜ்ஜீவிக்க குறை என்-என்ன
சீர்த்த மிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் —
தத் ஜ்ஞானம் -என்றும்
தாமரையாள் கேள்வனையே நோக்கும் ஓர் உணர்வு -என்றும்
சொல்லுகிறபடியே
ஸ்ரீ யபதியான சர்வேவரனை உள்ளபடி அறிவிக்கப் பெறுகையாலே
கனத்து இருப்பதாய்
நஹிஜ்ஞ்ஞா நேன சத்ருசம் பவித்ரமிஹ்வித்யதே -என்னும்படியான
ஸ்லாக்கிய தரமாய் இருந்துள்ள ஞானம் எல்லாம்
தன்னுள்ளே கூடு பூரித்துக் கிடந்தாலும்
அர்த்தே நைவ விசேஷோ ஹி நிராகார தயாதியாம் -என்கிறபடியே
தத்தர்த விஷயமான ஞானத்துக்கு –
விஷய பேதா யத்தமான ஸ்வரூப பேதம் யுண்டாகையாலே
ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் -என்கிறார் -‘

சேர்ந்தாலும் -என்று யத்யா லிங்கிதமாக சொல்லுகையாலே
தத் தத் சாஸ்திர ஜன்யமான ஞானமானது
ஆத்மனோ நாத்ம கல்பச்ய ஸ்வாத் மேசா நஸய யோக்யதாம்
க்ருதவந்தம் நயோ வேத்தி கருதக் நோ நாஸ்தி தத் சம -என்னும்படி
ஸ்வ ஆச்சார்ய விஷயத்தில் க்ருதஞ்ஞைதை இன்றிக்கே
க்ருதக்னனான இவனுக்கு ஒரு காலும் யுண்டாகாது
உண்டானாலும் கார்யகரம் அன்று என்னும் இடம் தோற்றுகிறது-
கார்யகரம் ஆகாதபடி எங்கனே -என்ன –
கார்த்த கடல் மண்ணின் மேல் துன்புற்று மங்குமே –
அந்த ஞானத்தைப் பெற்றும்
அவன் அத பதிக்கையாலே -என்கிறார் –

கார்த்த கடல் மண்ணின் மேல் துன்புற்று மங்குமே –
ஏவம் பூதனான இவன்
சாகர மேகலாம் -என்கிறபடியே
நீர்ச் செறிவாலே கார் போலே கறுத்துத் தோற்றுகிற கடலாலே சூழப் பட்ட இந்த பூமியிலே தானே
அத்யுத் கடை புண்ய பாபை ரிஹை வபலம் அஸ்நுதே -என்கிறபடியே
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் -என்கிறதுக்கு எதிர்தட்டாக
ஐ ஹிகத்திலே தானே அனைவரும் நேராகக் காணும்படி
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னும்படி யான
நிரவதிக துக்கத்தை அனுபவித்து
க்லேசாதுத் கிராந்தி மாப் நோதி யாம்ய கிங்கர பீடித -என்கிறபடியே
உத்க்ரமண தசையில் யம தூதராலே இழுப்புண்டு
ம்ருத்யு பரவசனாய் இருக்கும்

கார்த்த கடல் -என்கிற இடத்தில்
த-எனபது சாரியைச் சொல்லாய் -கார்க்கடல் -என்றபடி

துன்புற்று
இவன் அனுபவிக்கிற ஆத்யாத்மிகாதி துக்கங்கள் தான்
எண்ணாராத் துயர் -என்னும்படி
அசங்க்க்யாதங்களாய் இருக்கையாலே அவற்றைத் தனித் தனியே
பரி கணித்துச் சொல்லில் பணிப்படும் என்று
பிரயோ ஜகத்தாலே சொல்லுகிறார் –

மங்குமே -மங்குதல் -நசித்தல்
அவன் நசிப்பானோ நசியானோ என்ற பயம் வேண்டா
நசித்து விடுவேன் -என்கிறார்-

இப்படி ஐ ஹிகத்தில் துக்கித்தானே ஆகிலும் ஆமுஷ்மிகத்தில் ஸூகித்து இருப்பானோ என்னில்
தேங்காமல் நண்ணுமே கீழா நரகு –
ஓர் இடத்திலும் இவன் ஸூக்த்து இரான் -என்கிறார் –

தேங்காமல் நண்ணுமே கீழா நரகு –
இங்கன் மங்கினவன்
யம லோகத்தில் சென்று
யாதனா சரீரத்தை பரிக்ரஹித்து
இன்பமில் வென் நரகாகி -என்கிற படியே
ஸூக மிச்ரமும் இன்றிக்கே
நிஷ்க்ருஷ்ட துக்கமேயான நரகத்தை
சர்வ காலமும் இடைவிடாமல் அனுபவித்துக் கொண்டு போர்க் கடவன் –

அன்றிக்கே
துன்புற்று மங்கின இவனுக்கு கரை ஏற்றம் உண்டோ என்ன
தேங்காமல் நண்ணுமே கீழா நரகு –
ஒரு காலும் சம்சாரம் ஆகிற பெரிய நரகில் நின்றும் -கடலில் நின்றும் கரை ஏற்றம் இல்லை -என்கிறார் –
தேங்காமல் நண்ணுமே கீழா நரகு –
இவன் இப்புடைகளிலே துன்புற்று
மங்கின அநந்தரம் யம லோகத்தில் சென்று
யாதனா சரீரத்தை பரிக்ரஹித்து நரக அனுபவம் பண்ணுவது –
அதை தமே வாத்வானம் புனர் நிவர்த்தந்தே
அதை தமாசாகம் ஆகாசாத் வாயும் வாயூர் பூத்வாதூமோபவதி தூமோபூத்வா அப்ரம்பவதி
அப்ரம் பூத்வா மேகொபவதி மேகோபூத்வா ப்ரவர்ஷதி -இத்யாதியாலே பஞ்சாக்னி விதையில் சொல்லுகிறபடி
இச் சரீரத்தை பொகட்டு சூஷ்ம சரரத்தோடு நிராலம்பமான ஆகாசத்திலே சஞ்சரிப்பது
ஆதித்யன் தன் கிரணங்களாலே உபாத்தமான ஹிமத்தாலே ஆகாசத்திலே மங்கிக் கிடக்கிற தன்னை
மேகத்திலே புகுர விட அது தன்னில் புக்கிருப்பது
அந்த ஜலம் சச்யத்துக்கு ஆதாரமாய் புகும் அளவிலே தத்வார சச்யத்திலே புகுவது
அந்த சஸ்யம் பக்குவமாய் அன்னமாய் பரிணமிக்கும் அளவில் தத் த்வாரா புருஷ சரீரத்திலே புகுவது
பின்பு கர்ப்பமாய் பரிணமிப்பது
அங்கே கிடக்கும் போது மாத்ரு போஜன அந்தர் பூதங்களான
தீஷண உஷ்ண த்ரவ்யங்களாலே தொடர விட்ட ஈயம் போலே துடிப்பது –
இந்தக் கிலேசத்தோடே கர்ப்பதும்பமாகிற பையிலே கட்டுண்டு
அவயவங்களை நீட்டவும் மாட்டாதே கிடப்பது
கிலேசத்தோடே மாத்ரு கர்ப்பத்தில் நின்றும் நிஷ்கிரமிப்பது –
பால்ய தசையில் அசூசி பிரச்தரங்களிலே வசிப்பது
ஸ்வா தந்தர்யேண ஒரு பிரவ்ருத்தியும் பண்ண ஷமன் அன்றிக்கே ஒழிவது
பின்னையும் இவையோடு காலத்தைப் போக்குவது
யௌவனத்தில் நரக ஹேதுவான விஷயாந்தரங்களையே விரும்புவது
கால த்ரயத்திலும் கரண த்ரயங்களாலும் துஷ் கர்மங்களையே ஆசரிப்பது
ஆசாத்ரயத்தாலே அலமாவது
தாப த்ரயத்தாலே தப்தனாவது
ஈஷணா த்ரயத்தாலே ஈடுபடுவது
அபராத த்ரயத்தை ஆர்ஜிப்பது
ஜரையிலே அசக்தனாய்க் கொண்டு மிகவும் தளர்வது
நினைவின்றிக்கே மரணத்தை பிராப்பிப்பது
பின்னை உத்க்ரமண கிலேசத்தை அனுபவிப்பது
புனச்ச மிருத்யு பரவசனாய்க் கொண்டு
மரணம் ஜனனம் ஜன்ம மரணாயைவ கேவலம் -என்கிறபடியே
இப்படி இடை விடாதே நடந்து செல்கிற சம்சாரம் ஆகிற
விடியா வென் நரகிலே அழுந்தி
ஒரு நாளும் கரை ஏற்றம் இன்றிக்கே
நித்ய சம்சாரியாகப் போரக் கடவன் –

கீழாம் நரகு –
நீள் நிரயம் -என்கிறபடியே
ஒரு கால விசேஷத்திலே கரை ஏற்றம் யுடைத்தான யமன் தண்டல் ஆகிற நரகம் போல் அன்றிக்கே
ஒரு கால விசேஷத்திலும் கரை ஏற்றம் இல்லாதபடி
நெடுகச் செல்லா நிற்கிற நரகம் இ றே இஸ் சம்சாரம்

நண்ணாமே கீழாம் நரகு –
ஏவம் பூதமான இந் நரகத்தைக் கடக்கப் பெறாதே
யாவதாத்மபாவியாக
அழுந்தி இருப்பன் –

—————————————————————————–

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸப்த காதை —2–அஞ்சு பொருளும் அளித்தவன் பால்–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 22, 2014

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக் கொடியர் நாம் சொன்னோம் -நஞ்சு தான்
ஊனை முடிக்கும் அது உயிரை முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை –2

——————————————————————————————

அவதாரிகை –

இப்படி ஸ்வ உபதேசத்தாலே அர்த்த பஞ்சக ஞானம் உண்டாகும் படி
விஷயீ கரித்து அருளி
ஏதன் முகேன மகா உபாகரகனான ஸ்வ ஆச்சார்யன் பக்கலிலே –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும்
சொல்லும்படியான உபகார ஸ்ம்ருதியாலே
ததா மந்திர பிரதே குரௌ த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா -என்றும்
மந்த்ரத்திலும்
மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும்
பண்ணக் கடவ பிரேமத்தில் காட்டில்
அதிசயமான பிரேமம் இல்லாதார்
ஸ்வ ஸ்பர்ச மாத்ரத்திலே முடிக்க வற்றதான விஷத்திலும் அதி க்ரூரராய்
அத்தைப் போலே நஸ்வரமான சரீரத்தை நசிப்பித்து விடுகை அன்றிக்கே
நித்தியமான ஆத்மவஸ்துவை நசிப்பித்து விடுமவர்
என்கிறார் —

——————————————————————————————-

வியாக்யானம் –

அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார் –
உய்யும் வகை-என்றும்
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -என்றும்
நன்கு அறிந்தேன் -என்றும்
உணர்வின் உள்ளே -என்றும்
ஆம் பரிசு -என்றும்
அவஸ்ய ஞாதவ்யதயா அறுதி இடப்பட்ட அர்த்த பஞ்சகத்தையும் உபதேசித்த
ஆச்சார்யன் பக்கல் பிரேமம் அற்று இருக்குமவர்கள் –

அஞ்சு பொருளும்
இவ் வர்த்த பஞ்சகத்தில் ஓர் ஒன்றும் உபதேசித்த அளவில்
கை வாங்கி இருந்தானாகில் அன்றோ
இவன் பிரேமம் அற்று இருக்கலாவது –

அஞ்சு பொருளும்-
வதந்தி சகலா வேதா -என்கிறபடியே
வேதைக சமதிகம்யமான அர்த்த பஞ்சகத்தை இ றே இவன் உபதேசிப்பது –

அளித்தவன் –
இவ்வர்த்த பஞ்சகத்தை –
சேவயா உபதேஷ்யந்தி -என்றும்
குருக்களுக்கு அனுகூலராய் -என்றும் சொல்லுகிற படியே
ஸ்வ அனுவ்ருத்தியாலே பிரசன்னனாய்க் கொண்டு உபதேசிக்கை அன்றிக்கே
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்கிறபடியே
இத்தலையில் ஏதேனும் ஒரு நன்மை யாதல்
த்ருஷ்ட பிரயோஜ நத்தை யாதல்
தன்னிடத்தில் ஆச்சார்ய பதத்தை யாதல்
க்யாதி லாப பூஜைகள் ஆதல்
ப்ரப்ரூயாத் -என்று ஒரு விதி பாரதந்த்ரயத்தை யாதல்
கணிசியாதே
க்ருபயா நிஸ் ப்ருஹோ வதேத் -என்கிறபடியே
தங்கள் துர்கதியே பற்றாசாக யுண்டான
பரம கிருபையாலே
நிரபேஷனாய்க் கொண்டு உபதேசித்து அருளினவன் –

அளித்தவன் –
ஸூஸ்ரூ ஷூரஸ் யாதய-என்கிறபடியே
அவஸ்யம் கர்த்தவ்யதயா விஹிதையான ஸூ ஸ் ரூ ஷை முன்னாக
உபதேசித்தவன் ஆகில் இ றே இவனுக்கு பிரேமம் அற்று இருக்கலாவது
இத்தலையில் அர்த்தித்வம் கூட இல்லாது இருக்க
முலைக் கடுப்பாலே பீச்சுவாரைப் போலே
கிருபை வடிம்பிட்டுக் -வரம்பிட்டுக் -கொடுக்க
தத் பரதந்த்ரனாய்க் கொண்டு அளித்தான் ஆயிற்று-

அன்பிலார் –
அங்கீ கரிக்கில்
உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -என்று
தத்வ தர்சிகளால் அவஸ்யம் கர்த்தவ்யதயா அறுதி யிடப் பட்ட பிரேமம் இல்லாதவர்கள்–
ஏவம் பூதரான இவர்கள் படி எங்கனே என்னில் –
நஞ்சில் மிகக் கொடியர் –
நஞ்சு கொடியது
இவர்கள் மிகக் கொடியர்
விஷம் க்ரூரமாய் இருக்கும்
இவர்கள் அதிலும் காட்டில் க்ரூரராய் இருப்பீர்கள்

இவ்வர்த்தத்தை அறியும் படி எங்கனே -என்னில்
நாம் சொன்னோம் –
வேறு ஒரு பிரமாணம் கொண்டு -ஆதல்
உபதேசம் கொண்டாதல்
அறிய வேண்டாதபடி
அவதார விசேஷமான பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளிலே
சிரகாலம் சேவை பண்ணி
தத்வ ஹித புருஷார்த்தங்களை சரம பர்யந்தமாக அருளிச் செய்யக் கேட்டு
தந் நிஷ்டராய் இருக்கிற நாம் சொன்னோம்

நாம் சொன்னோம் –
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளை ஆஸ்ரயித்த
தமக்கு ச ப்ரஹ்மசாரிகளான
கூர குலோத்தம தாசர் தொடக்கமானவர்களைக் கூட்டிக் கொண்டு
நாம் -என்கிறார்
நாம் அறுதி இட்ட அர்த்தம் -என்று லோகம் பரி க்ரஹிக்கும்படியான
பெரு மதிப்பராய்
ஆப்த தமராய்
சர்வஞ்ஞராய்
இருக்கையாலே -நாம் சொன்னோம் -என்கிறார் –

சொன்னோம் –
சொல்லுமவிடு ஸ்ருதியாம் -என்னும்படியான ஏற்றத்தை யுடைத்தாயும்
ரிஷீணாம்பு நராத்யா நாம் வாச மரத்தோ நு தாவதி -என்னும்படி
அர்த்த ஸ்பர்சியுமாய் இ றே
தத்வ தர்சிகளாய் இருப்பார் வார்த்தையும் இருப்பது-

நஞ்சின் கொடுமை எங்கனே
இதன் கொடுமை எங்கனே -என்ன
அவ்விரண்டையும் அடைவே தர்சிப்பிக்கிறார் மேல்
நஞ்சு தான் ஊனை முடிக்கும் அது உயிரை முடிக்கும் –
ஊன் ஆகிறது மாமிசமாய்
ஊனை-என்றது மாம்ச பிரசுரமான சரீரத்தை -என்றபடி
மாம்சத்தை சொன்ன இது
மற்றும் அதல் உண்டான
அசக்ருபூயவிண் மூத்திரஸ் நாயு மஜ்ஜாச்திகளுக்கு எல்லாம் உப லஷணம் –
மாம்சாஸ் ருக்பூய வி ண் மூத்ராஸ் நாயு மஜ்ஜாச்தி சம்ஹதள தேக -என்று
மாம்சாதி மயமாக வி றே இத் தேகத்தை நிரூப்கராய் இருப்பார் நிரூபிப்பது
புண்ணை மறைய வரிந்து -என்கிறபடி தோலை மேவிக் கைபாணி இட்டு
மெழுக்கு வாசியாலே பிரமிக்கும்படி பண்ணி வைக்கையாலே
ஆந்தரமான மாம்சாதிகள் நேராக தோற்றுகிறன வில்லை –
யதி நா மாஸ்ய தேஹச்ய யதந்தஸ் தத் பஹிர் பவேத்
தண்ட மாதாய லோகோ யம் ஸூ ந காகா நிவாரயேத்-என்கிறபடி
அகவாய் புறவாய் ஆனால் காக்கை நோக்கப் பணி போரும்படி இவை நேர் கொடு நேர் தோற்றும் இ றே
ஆனாலும்
மாம்ச பிரசுரம் ஆகையாலே அன்றோ
ஊன் -என்றும்
ஊனில் வாழ் உயிர் -என்றும்
ஊனேய் குரம்பை -என்றும்
ஆழ்வார்கள் நிர்ததேசித்தவோபாதி
இவரும் ஊனை என்று நிர்தேசித்து அருளுகிறார் –
சரீரம் வ்ரணவத் பச்யேத்-என்று சொன்னாரும் உண்டு இ றே-

நஞ்சு தான் ஊனை முடிக்கும்
உப புக்தும் விஷம் ஹந்தி -என்கிறபடி
விஷமானது ஸ்பர்ச மாத்ரத்தாலே
மாம்ச பிரசுரமான சரீரத்தை முடிக்க வற்றை இருக்கும்
முடிக்கையில் அதுக்கு உண்டான பிரதாந்யம் தோற்ற -நஞ்சு தான் -என்கிறார்
முடிக்கும் -என்றது ப்ராயிக அபிப்பிராயம்
மணி மந்த்ராதிகளும் உண்டாம் போது முடிக்க மாட்டாது இ றே

அது உயிரை முடிக்கும் –
என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும் -அன்றும் தன் ஆரியன் பால் அன்பு ஒழியில் -ஞான சாரம் -என்கிறபடியே
ஆச்சார்யன் பக்கல் பிரேமம் இல்லாதவன் –
சர்வ ஸூ கருத்தான ஈஸ்வரனும் கூட ஷிபாமி -ந ஷமாமி -களைப் பண்ணி
கை விடும்படி இலக்காய் இருப்பவன் ஒருவன் ஆகையாலே
ஸ ஆத்மஹா -என்கிறபடியே
இவன் நித்தியமான ஆத்மாவை முடித்துக் கொள்ளுமவன் —

நஞ்சு தான் -இத்யாதி –
விஷமானது –
சரீராக்ருதிபே தாஸ்து பூபைதே கர்மயோ நய -என்னும்படி
வந்தேறியான சரீரத்தை முடித்து
ஆத்மாவினுடைய ஸ்வா பாவிக விகாரத்துக்கு ஓர் இடைச் சுவரைப் போக்கும்
இவன் ஆத்மாவினுடைய ஸ்வா பாவிக ஆகாரத்தை முடித்து
அழுக்கு உடம்பும் இனி யாம் உறாமை -என்னும்படி துஸ்
ஸ்ஹமான
சம்சாரத்தைப் பூண் கட்டிக் கொண்டு நித்ய சம்சாரியாய் இருக்கும் –

நஞ்சின் வியாபாரம்
ஆக்கை விடும் பொழுது எண்ணே -என்றும்
இந்த உடம்போடு இனி இருக்கப் போகாது -என்றும்
சொல்லுகிறபடி
இது த்யாஜ்யம் என்னும் பிரதிபத்தி யுண்டாய்
அத்தை கழித்து கொள்ள வேணும் என்று இருக்கும் ஜ்ஞான விசேஷஞ்ஞ யுகதர்ர்க்கு
இங்கனே யாகிலும் இவ் விரோதி இவனுக்கு கழியப் பெற்றது இ றே -என்று
உகக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு அபிமதமாய் இருக்கும் –

இவன் வியாபாரம்
உயிர் மாய்தல் கண்டு ஆற்றேன் -என்றும்
உலகினது இயலவே -என்றும் சொல்லுகிறபடியே
ஆண்டாளுக்கு வீர ஸூ ந்தர ராயன் செயல் அநபிமதமானவோ பாதி
அவர்கள் நோவுபாட்டுக்கும் ஸ்வ உத்கர்ஷத்துக்கும் வெறுப்புக்கும் உறுப்பாய்க் கொண்டு அ நபிமதமாய் இருக்கும்
ஆச்சார்ய விஷயீ காரத்தைப் பெற்றும் இவன் இப்படி தன்னைத் தானே முடிப்பான் ஒருவன் ஆகையாலே
அசத் ப்ராயன் என்றும்
அத்ரஷ்டவ்யன் -என்றும்
நினைத்துப் படர்க்கையாக -அது -என்கிறார் –

உம்மைப் போல் மற்றை யாராகிலும் இங்கன் சொன்னார் உண்டோ என்ன –
என்று ஈனமிலார் சொன்னார் இவை –
நாமே அன்று-
நமக்கு தேசிகராய் இருப்பாரும் இவ்வர்த்தத்தைச் சொன்னார் -என்கிறார் –
-என்று -இவை -ஈனமிலார் சொன்னார்-
நஞ்சு தான் அநித்தியமான சரீரத்தை முடிக்கும்
ஆச்சார்யன் பக்கல் பிரேமம் இல்லாதவன் நித்தியமான ஆத்மவஸ்துவை முடிக்கும் என்று
இவ்வர்த்தத்தை ஸ்வா சார்யன் பிரேமம் அற்று இருக்கை யாகிற
ஈனம் -இலா -தாழ்வில்லாத –
நம் பூர்வாச்சார்யர்கள்
விஷதா தோப்யதி விஷம கலஇதி நம் ருஷா வதந்தி வித்வாம்ச
யதயம் நரு லத்வேஷீ ஸ குலத்வேஷீ புன பி ஸூ ந -என்று
லௌகிகர் விஷயமாக அபியுக்தர் சொன்னவோபாதி
தம் தம்மைப் பற்றி இருக்குமவர்களை பார்த்து
தாம் தாம் பரோக்திகளாலே விசத தமமாகச் சொல்லி அருளினார்கள் –

ஆச்சர்ய விஷயத்தில் பிரேமம் அற்று இருக்குமத்தில் காட்டில்
நிஹீ நதை இல்லை என்றும்
இதில் இருக்குமத்தில் காட்டில் உத்கர்ஷம் இல்லை என்றும்
திரு உள்ளம் பற்றி
ஈனமிலார் -என்கிறார் காணும்
சொன்னார் –
அவர்கள் கரண த்ரய சாரூப்யம் யுடையராய் இருப்பார் சிலர் இ றே
யத் வசஸ் சகலம் சாஸ்திரம் -என்றும்
க்ரீடார்த்தம் அபியத் ப்ரூ யுஸ் ஸ தர்ம பரமோமத -என்றும்
சொல்லும் படி காணும் அவர்கள் திவ்ய ஸூ க்தியின் மெய்ப்பாடு இருப்பது –

———————————————————————————-

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸப்த காதை —1-அம் பொன் அரங்கர்க்கும்–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 22, 2014

ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் –
பிராப்துச்ச பிரத்யகாத்மன-
ப்ராப்த்யுபாயம் பலம்
ப்ராப்தேச்ததா பிராப்தி விரோதி ஸ
வதந்தி சகலா வேதாஸ் சேதிஹாசபுராணகா
முனயஸ்ஸ மகாத்மா நோ வேத வேதாந்த பாரக -என்கிறபடியே
தத்வ விதேக பிரமாணமான வேதாந்த வாக்யங்களாலும்
தத் சங்க்ரஹமான-ஸ்ரீ திருமந்த்ரத்தில் -பத த்ரயத்தாலும்
தத் அர்த்த நிஷ்டரான ஸ்ரீ ஆழ்வார்கள் பாசுரத்தாலும்
அவஸ்யம் ஜ்ஞாதவ்யதயா அறுதி இடப்பட்ட
அர்த்த பஞ்சகத்தை
நேராக உபதேசித்து அருளுமவனே
ஸ்ரீ சதாச்சார்யன் ஆகிறான் என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார்-

அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–1-

சம்சாரிகள் தங்களையும் ஸ்ரீ ஈஸ்வரனையும் மறந்து -இத்யாதியாலே
அர்த்த பஞ்சகத்தை உபதேசித்து அருளுமவனே ஸ்ரீ ஆச்சார்யன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தார் இறே
இவனும் அத்தை இட்டு அறிவித்து -காட்டும் அவன் அன்றோ ஸ்ரீ ஆச்சார்யன் -என்கிறார்
ஸ்ரீ பிள்ளையை அடி ஒத்துமவர் இவர் ஒருவருமே போலே காணும்
பேசிற்றே பேசும் ஏக கண்டராய் இருக்கும் இருப்பு உள்ளது நம் முதலிகளுக்கே இறே –
உக்தார்த்த விசதீ கார யுக்தார்த்தந்தர போதனம்-மதம் விவரணம் தத்ர-என்கிறபடியே
திருமந்த்ரத்தில் பிரதம பதமாய்
அசம்ஹிதா காரேண பதத் த்ரயாத்மகமாய் இருந்துள்ள
பிரணவத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற அர்த்தங்களுக்கு உப யுக்தங்களாயும்
தத் பிரதி பன்னங்களாயும் இருக்கிற அர்த்த விசேஷங்களுக்கு நேரே பிரகாசகமாய்க் கொண்டு
பத த்வயாத்மகமான மந்திர சேஷம்
பிரணவத்துக்கு விவரணமாய் படி இருக்கிறபடியைத் திரு உள்ளம் பற்றி
முந்துற முன்னம்
தஸ்ய பிரகிருதி லீ நஸய யா பரச்ச மகேஸ்வர -என்றும்
அகாரோ விஷ்ணு வாசக -என்றும்
துளக்கமில் விளக்கமாய் -என்றும்
அவ ரஷணே -என்றும் சொல்லுகிறபடியே –
ஸ்ரீ யபதியான சர்வேச்வரனையும்
அவனுடைய ரஷகத்வ சேஷித்வங்களையும்
சாப்தமாக பிரதிபாதிக்கிற சவிபக்திகமான அகாரத்தின் யுடையவும்
அதிலே அனுக்தங்களாய் ரஷண உபயோகிகளான கல்யாண குணங்களையும் சாப்தமாகச் சொல்லுகையாலே
தத் விவரணமான நாராயண பதத்தின் யுடையவும்
அர்த்தத்தை உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

அம்பொன் அரங்கர்க்கும்-
அழகியதாயும்
பாவனமாயும்
இருந்துள்ள திருவரங்க பெரு நகரத்தை
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே -என்கிறபடி
தமக்கு இருப்பிடமாக யுடையராய்
சர்வ ரஷகராய்
சர்வ சேஷியாய்
அசரண்ய சரண்யத்வாதி கல்யாண குண பூஷிதரான
பெரிய பெருமாளுக்கும்
ஸ்ரீ மதுரையை –
ஸூ பா -என்றும்
பாப ஹரா -என்றும் சொன்னவோபாதி
கோயிலையும்
தென்னரங்கம் என்றும்
பொன்னரங்கம் என்றும்
சொல்லுகையாலே
இது தான் போக்யமாயும் பாவனமாயும் இ றே இருப்பது –
போக்யதைக்கு அடி –
தெழிப்புடைய காவேரி வந்து அடி தொழும் ஸ்ரீ ரெங்கம் -என்றும்
தேன் கொடுத்த மலர்ச் சோலை திருவரங்கம் -என்றும்
இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கம் -என்றும்
சொல்லுகிற
நீர் வாய்ப்பும்
நிழல் வாய்ப்பும்
நில வாய்ப்பும்
ஆகிற இவை —
பாவனத்துக்கு அடி –
திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கம் -என்றும்
செழு மணிகள் விட்டெறிக்கும் திருவரங்கம் -என்றும்
சொல்லுகிறபடி
அஞ்ஞான
அந்தகார
நிரோதித்வமும்
ஸ்வ பிரகாசத்வமும் ஆகிற இவை –
பெரிய பெருமாளுக்கு உள்ள உபய லிங்கத்வமும் இதுக்கும் உண்டு போலே காணும்
தம்மைப் பற்றி இருப்பார்க்குத் தம் படியைக் கொடுக்குமவர் இ றே அவர் தான்

அம்பொன் அரங்கர்க்கும் -என்று
அவரை ஒரு விசேஷ வஸ்துவை இட்டு ஆகாதே நிரூபிக்க வேண்டுவது
திருமால் அடியார்கள் -என்று
அத்தலையாலே இத்தலைக்கு நிரூபணம் ஆனால் போலே காணும்
இத்தலையாலே அத்தலைக்கு நிரூபணம் இருக்கிறபடி –
ராமானுஜம் லஷ்மண பூர்வஜஞ்ச -என்றது இ றே

அம்பொன் அரங்கர்க்கு –
என்னரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் -என்றும்
அரங்கமேய அந்தணனை -என்றும்
சொல்லுகிறபடியே அழகும் பாவனத்வமும் பெரிய பெருமாளுக்கே ஆகவுமாம்-

இத்தால்
சமஸ்த கல்யாண குணாத்மகத்வமும்
அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்
ஆகிற உபய லிங்க தவமும் சொல்லுகிறது
இவ் உபய லிங்கம் பரதவ உத்தம்பகம் ஆகையாலே
இத்தையே இவருக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –
அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய சாஹா மஸ்மி சனாத நீ -என்றும்
இவளோடு கூடியே வஸ்துவினுடைய உண்மை -என்றும் சொல்லுகிற படியே
அரங்கர்க்கு -என்கிற இடத்தில்
பிராட்டியும் பகவத் ஸ்வரூப அந்தர் பூதையாய்க் கொண்டு தோற்றுகையாலே
புருஷகார பிரகரணத்தில்
புருஷகாரமாம் போது
கிருபையும்
பாரதந்த்ர்யமும்
அனந்யார்ஹத்வமும்
வேணும் -இத்யாதிகளாலே சொல்லுகிற புருஷகார வைபவமும்
அம பொன் -என்கிற
விசேஷண த்வயத்தாலே ஸூசிப்பித்து அருளுகிறார் என்று கண்டு கொள்வது-

அன்றிக்கே
அம்பொன் -என்று அழகாலே வந்த ஸ்ப்ருஹணீயதையைச் சொல்லிற்றாகவுமாம் –
ஸ்ப்ருஹணீயதை-காமதம் காமகம் காம்யம் விமானம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கையாலே கோயிலுக்கும்
சகயம் சமஸ்த ஜன சேதசி சாந்த தானம் -என்கையாலே பெரிய பெருமாளுக்கும் யுண்டு இ றே –
ரதிங்க தோயதஸ் தஸ்மாத் ரங்க மித்யுச்ச தேபுதை -என்கிறபடியே
பெரிய பெருமாளுக்கு நிரதிசய ஆனந்த வர்த்தகமாய் இருக்கையாலே
கோயிலை அரங்கம் -என்கிறது-

அம்பொன் அரங்கர்க்கும் –
போய் இந்திர லோகம் ஆளும் -என்கிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்திலே சென்று
விரஜையிலே குடைந்து நீராடி
அமாநவ கர ஸ்பர்சம் முன்னாக
அப்ராக்ருத தேஹத்தை பரிக்ரஹித்து
புகுர வேண்டி இருக்கும் பொன்னுலகு போலேயும்
சம்சார வர்த்தகமாய் இருக்கும் கொடுவுலகம் போலேயும் இருக்கை அன்றிக்கே
இச் சரீரத்தோடு புகுரலாயும்
சம்சார நிவர்த்தகமாயும்
இருக்கையாலே
அரங்க மா நகர் -என்னும்படி
விபூதி த்வயத்துக்கும் புறம்பாய்
அதேவ த்ருதீய விபூதியை இருந்துள்ள -திருவரங்கம் திருப்பதியிலே —
அடியவரை ஆட்கொள்வான் அமருமூர் -என்கிறபடியே
இங்கு உள்ளாரை அடிமை கொள்வதாக
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே
ஸ்தாவர பிரதிஷ்டை யாய்க் கொண்டு
அமர்ந்து எழுந்து அருளி இருக்கிற பெரிய பெருமாளுக்கும் –

முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும்
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -என்றும்
சடகோப வாக்வபுஷி ரெங்க க்ருஹே சயிதம் -என்றும் -சொல்லுகிறபடி இவர் தாம்
பிரமாணம் சடஜித் ஸூ க்தி
பிரமேயம் ரங்க சந்த்ரமா -என்னும்படி
மேய சரமமாய்க் கொண்டு
மான சரமமான திருவாய்மொழிக்கு
நேரே பிரதிபாத்யர் ஆகையாலும்
பதின்மர் பாடும் பெருமாள் ஆகையாலும்
குரு பரம்பரைக்கு முதலடி ஆகையாலும்
மா மலை மற்றும் உகந்து அருளின நிலங்கள் எல்லாவற்றுக்கும் அடித்தலை யாகையாலும்
மற்ற எம்பெருமான்களைச் சொல்லாமல் இவர் தம்மையே பிரதானராக அருளிச் செய்கிறார் –

அம்பொன் அரங்கர்க்கு -என்று விவரண விவரணீய
பாப பன்னங்களான
அகார -நாராயண -பதங்களின் யுடைய அர்த்தத்தையும்
அரங்கர்க்கு -என்கிற விபக்தியாலே லுப்த சதுர்த்தியினுடைய அர்த்தத்தையும்
உட்கொண்டு அருளிச் செய்தாராய்-
மேல் –
மகாரோ ஜீவ வாசக -என்கிறபடியே
இச் சேஷத்வ ஆஸ்ரயமான சேதன வஸ்துவை சாப்தமாக பிரதிபாதிக்கிற
மகாரத்தினுடையவும்
அதில் அனபிஹிதங்களான இச் சேதன வஸ்துவினுடைய
நித்யத்வ ஏகத்வ பஹூத் வாதிகளை
சாப்தமாகச் சொல்லுகையாலே
ஏதத் விவரணமான நார பதத்தினுடைய அர்த்தத்தையும் உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

ஆவிக்கும் –
பிரத்யயங்களுக்கு -பிரக்ருத்யர்தாக ஸ்வார்த்த போதகத்வம் நியதம் ஆகையாலே
லுப்த சதுர்த்யர்த்தமான சேஷத்வம்
பிரக்ருத்யர்த்தமான ஈஸ்வரகதமாக வேண்டி இருக்க
சேதனகதமான படி எங்கனே என்னில்
இங்கு சேஷத்வம் ஆகிறது சம்பந்த விசேஷாத்மகமாய்க் கொண்டு
உபய நிரூப்யம் ஆகையாலே சேதனகதமானாலும் ஈஸ்வரகதம் என்னக் குறை இல்லை இ றே-

ஆவிக்கும் –
அம் பொன் – என்கிற பதங்களை இங்கும் கூட்டிக் கொள்வது
இப்படி நிருபாதிக சேஷியான பெரிய பெருமாளுக்கு சேஷமாய்
பிரக்ருதேபரமாய்
ஜ்ஞானானந்த மயமாய்
ஜ்ஞான குணகமாய்
நிர்விகாரமாய்
ஏகரூபமாய்
பக்த முக்த நித்ய ரூபேண த்ரிவிதமான
ஆத்மவஸ்துவுக்கும்-
பதிம் விச்வச்ய -என்றும்
மூவுலகாளி -என்றும்
என்னை யாளி -என்றும் -இத்யாதியாலே
பெரிய பெருமாளே வகுத்த சேஷியாகவும்
சேதன வர்க்கம் தத் சேஷமாகவும்-சொல்லிற்று இ றே
சர்வம் ஹிதம் பிராணி நாம் வரதம் -என்கையாலே
பிராணன் ஆகிறது பஞ்ச வ்ருத்தி பிராணனே யாகிலும்
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு என்றவோ பாதி
சேதனன் இடத்திலும் பிரயோகிக்கக் காண்கையாலே
அத்தைப் பின் சென்று இவரும் இப்படி அருளிச் செய்கிறார்-

அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் –
அர்த்த பஞ்சகம் தொடக்கமான வற்றிலே
ஸ்வ ஸ்வரூபம் முன்னாக பர ஸ்வரூபம் பின்னே அருளிச் செய்தாரே ஆகிலும்
யச்யாச்மி-இத்யாதி ஸ்ருதிகளிலும்
அவற்றுக்கு அடியான பிரணவத்திலும்
பிராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி வசனங்களிலும்
பர ஸ்வரூபம் முன்னாக ஸ்வ ஸ்வரூபத்தைச் சொல்லுகையாலே
அத்தை அடி ஒற்றி இவரும் இப்படி நிர்தேசிக்கிறார்-

யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற சமுச்சயம் அன்வாசய மானவோபாதி
அரங்கர்க்கும் ஆவிக்கும் -என்கிற இச் சமுச்சயம்
அன்வாசயாம் அத்தனை போக்கி சமசமுச்ச்சயம் அன்று
சேஷ சேஷிகளுக்கு சம பிரதாந்யம் இல்லை இ றே –
போக மாதரம் சாம்யம் லிங்கா ச்ச -என்றும்
ஜகத் வியாபார வர்ஜம்-என்றும் சொல்கையாலே
சேதனனுக்கு ஈஸ்வரனோடே போக மாத்ரத்திலே சாம்யம் ஒழிய
சர்வ பிரகார சாம்யம் இல்லை இ றே
நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்றும்
மம சாதர்ம்யம் ஆகத -என்றும்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் -இத்யாதிகளுக்கும்
இதுவே இ றே ஹிருதயம் –

அநந்தரம்-
அவதாரண மன்யேது மத்ய மாந்தம் வதந்தி ஹி-என்றும்
அஸ்வா தந்தர்யந்து ஜீவ மாதிக்யம் பரமாத்மன
நமஸா ப்ரோச்யதே தஸ்மின் நஹந்தா மம தோஜ்ஜிதா-என்றும் சொல்லுகிற படியே
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பகவத் சேஷத்வங்களை சாப்தமாக பிரதிபாதிக்கிற
உகாரத்தின் யுடையவும்
அதில் அனுக்தங்களான
ஸ்வ அனர்ஹத்வ அசித்வத் பாரதந்த்ர்யாதிகளை சாப்தமாகச் சொல்லுகையாலே
தத் விவரணமான நமஸ் சினுடையவும் அர்த்தத்தை உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

அந்தரங்க சம்பந்தம் காட்டி –
இவ்விருவருக்கும் உண்டான அனன்யார்ஹ சேஷத்வம் ஆகிற
அந்தரங்க சம்பந்தத்தை
ஸ்வ சேஷ நிவ்ருத்தி
அசித்வத பாரதந்த்ர்ய பர்யந்தமாகவும்
தத் பரா காஷ்டையான பாகவத சேஷத்வ பர்யந்தமாகவும்
வெளி இட்டுக் கொடுத்தது இ றே
ஸ விவரணமான உகாரத்துக்கு அர்த்தம்
உகரோ அனந்யார்ஹம் நியமயதி சம்பந்த மனயோ-என்னக் கடவது இ றே
சம்பந்த மாதரம் இதர சேஷத்வோபா மர்தி யல்லாமையாலும்
ஸ்வ விரோத்யதை அசஹ்யம் ஆகையாலும்
அந்தரங்கம் என்றத்தை
இங்கன் விசேஷிக்கிறார் –

ஸ்தான பிரமாணத்தாலே-அவதாராணார்த்தமாக உகாரம் விசேஷண சங்கதம் ஆகையாலே
அயோக்ய அவச்சேத்மாம் இத்தனை போக்கி
அனந்யோகாவ்ய அவச்சேத்ம் ஆனபடி எங்கனே என்னில்
விசேஷண விசேஷ்யங்கள் சாமான விபக்த்யா நிர்திஷ்டங்கள் ஆனவிடத்தில்

அந்நியமம் ஒழிய அசமான விபக்த்யா நிர்திஷ்டங்களான இடத்தில் அந்நியமம் இல்லாமையாலே
இந்த ஏவகாரம் அந்யோக அவச்சேதம் என்னக் குறை இல்லை
தேவதத்தம் ப்ரத்யேவ தண்டனம் -இத்யாதி பிரயோகங்களிலே இவ்வர்த்தம் சம்பிரதி பன்னம் இ றே –

அன்றிக்கே -அந்தரங்க -சம்பந்தம் -ஆகிறது
பிதாச ரஷகஸ் சேஷி பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி
ச்வாம்யாதா ரோமமாத் மாச போக்தா சத்யம நூ தித்த -என்கிறபடியே
திரு மந்த்ரத்தில் பிரகிருதி பிரத்யயதாது பதங்களாலே பிரதி பாதிக்கப் படுகிற
நவ வித சம்பந்தங்கள் ஆகவுமாம்

திருமந்தரம் தான் பிரதம பதமான பிரணவத்தில் வைத்துக் கொண்டு
பிரதம அஷரமான அகாரத்தில் ப்ரக்ருத் அம்சத்தாலே
பிதா நாராயணா -என்றும்
தேவ தேவோ ஹரி பிதா -என்றும்
எம்பிரான் எந்தை -என்றும்
சொல்லுகிறபடியே பிதா புத்திர பாவ சம்பந்தத்தையும் –

அதில் அவ ரஷணே-என்கிற தாத்வ அம்சத்தாலே
கோஹ்யே வான்யாத்க ப்ராண்யாத் -என்றும்
நஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் -என்றும்
கருத்தில் தேவும் எல்லா பொருளும் வருத்தித்த மாயப் பிரானை -என்றும்
சொல்லுகிற படியே ரஷக ரஷ்ய பாவ சம்பந்தத்தையும் –
பிரத்யயமான இதில் லுப்த சதுர்த்தி அம்சத்தாலே
பதிம் பதீ நாம் -என்றும்
ஜகத் பதிம் தேவ நாதம் -என்றும்
அமரர்கள் அதிபதி -என்றும்
சொல்லுகிற படியே சேஷ சேஷி பாவ சம்பந்தத்தையும்

த்விதீய அஷரமான உகாரத்திலே அவதாரணம் ஆகையாலே
பகவத் ஏவ அஹம் -என்றும்
லோக பர்த்தாரம் -என்றும்
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -என்றும்
சொல்லுகிறபடியே பர்த்ரு பார்யா பாவ சம்பந்தத்தையும்

த்ருதீய அஷரமான மகாரத்திலே
மநு-அவ போதனே -என்கிற தாதுவாலே
நித்யாசிதவ்ய -என்றும்
த்யேயோ நாராயணஸ் சதா -என்றும்
உணர்வின் உள்ளே இருத்தினேன் -என்றும்
சொல்லுகிறபடியே ஜ்ஞாத்ரு ஜ்ஞ்ஞேய பாவ சம்பந்தத்தையும் –

த்வதீய பதமான நமஸ் சாலே
ஈசானோ பூத பவ்யச்ய-என்றும்
ஸ்வ த்வமாத்மா நி சஞ்ச்ஞாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
உலகம் மூன்றுடையாய் -என்றும்
சொல்லுகிற படி ஸ்வ சுவாமி பாவ சம்பந்தத்தையும்-

த்ருதீய பதமான நாராயண பதத்தால் நாரம் என்கிற அம்சத்தாலே
யஸ்ய யாத்மா சரீரம் யஸ்ய ப்ப்ருத்வி சரீரம் -என்றும்
ஜகத் சர்வம் சரீரம் தே-என்றும்
உம்முயிர் வீடுடை யானிடை -என்றும்
சொல்லுகிறபடியே சரீர சரீரி பாவ சம்பந்தத்தையும்

அயநம் -என்கிற அம்சத்தாலே
சதா யாத நா-என்றும்
மயி சர்வம் இதம் ப்ரோக்தம் ஸூ த்ரே மணிகணா இவ என்றும் –
மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒளிந்தார் -என்றும் சொல்லுகிறபடியே ஆதார ஆதேய பாவ சம்பந்தத்தையும்

வ்யக்த சதுர்த்திய அம்சத்தாலே
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்றும்
போக்தாரம் யஞ்ஞ தபஸாம் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு -என்றும்
சொல்லுகிறபடியே போக்த்ரு போகய பாவ சம்பந்தத்தையும்

சாப்தமாகச் சொல்லுகையாலே
இது இருவருக்கும் உண்டான நவவித சம்பந்தத்தை பிரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் இ றே-

ஏவம் விதமான சம்பந்தத்தை
அறியாதன அறிவித்த -என்கிறபடியே ஓர் ஆச்சார்யன் அஜஞாதஜஞாபனம் பண்ண
இச் சேதனன் தெளிய அறிந்த பின்பு இ றே இவனுக்கு
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும்
இருக்கை யாகிற ஸ்வரூபத்தில் உணர்த்தியும் –

என் நான் செய்கேன் யாரே களைகண்-என்று இருக்கை யாகிற
ஸ்வ ரஷணத்தில் அசக்தியும் –

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்று இருக்கை யாகிற பிராபகத்தில் அத்யாவச்யமும்

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -என்று இருக்கையாகிற பிராப்யத்தில் த்வரையும்

பாம்போடு ஒரு கூரையில் பயின்றால் போல் -இருக்கை என்கிற விரோதியில் பீதியும்

அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரிய-என்று இருக்கை யாகிற
உத்தேச்ய விஷயத்தில் கௌரவத்தையும்

பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு -என்று இருக்கை யாகிற
உபகார விஷயத்தில் கிருதஞ்ஞதையும் –

ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் -என்று இருக்கை யாகிற
உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியும்-

அவனுடைய நிருபாதிக சேஷித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சேஷத்வத்தையும்
தெளிய அறிகை யாகிற சம்பந்த ஞானமும் –

அவனுடைய நிருபாதிக சரீரித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சரீரத்வத்தையும்
தெளிய அறிகை யாகிற சம்பந்த யாதாம்ய ஞானமும்-

அவனுடைய நிருபாதிக தர்மித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக தர்மத்வத்தையும்
தெளிய அறிகை யாகிற சம்பந்த ஸ்வரூப ஞானமும்-

தர்ம தர்மிகள் உடைய விசேஷ ஐக்யத்தாலே -அவனேயாய் தான் இல்லை என்னலாம் படி இருக்கையைத்
தெளிய அறிகை யாகிற சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானமும்–

பகவத் தாஸ்யத்தையே இட்டு சதாசாரத்தை நெகிழாதே
சப்தாதி விஷயங்களிலே அச்சமும்
கைங்கர்ய அபாவத்தில் ஆர்த்தியும்
விளைகை யாகிற சேஷத்வத்தில் கர்த்ருத்வாதி நிவ்ருத்தியும்
நிஷித்தங்களை விட்டு விஹிதங்களை பற்றினவாறே
நான் ஞாதா வாகையாலே அன்றோ என்னை அவன் அங்கீ கரித்தது -என்று
தன ஞாத்ருத்வத்தை இட்டு இறுமாவாதே இருக்கை யாகிற
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும்
நிஷித்தங்களை விட்டு விஹிதங்களைப் பற்றினவாறே அன்றோ என்னை அவன் அங்கீ கரித்தது -என்று
தன பிரவ்ருத்தி நிவ்ருத்திகளை இட்டு இறுமாவாதே இருக்கை யாகிற
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும்
அவனுக்குத் தான் அடிமை செய்யும் இடத்தில் அது ஸ்வ ரசத்துக்கு உடலாக அன்று இராதே
அவயவ பூதமான இவ்வாத்மவஸ்து அவயவியான எம்பெருமானுக்கு எடுத்துக் கை நீட்டுகை-என்று
இருக்கை யாகிற போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும்
தொடக்கமான ஆகார விசேஷம் உண்டாகிறது –

அந்தரங்க சம்பந்தம் காட்டி –
இஸ் சம்பந்தம் தான்
பிராப்தம் லஷ்மீபதேர் தாஸ்யம் சாஸ்வதம் பரமாத்மன -என்றும்
தாஸ பூதாஸ் ச்வதஸ் ஹ்யாத்மான பரமாத்மன -என்றும்
நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு ஆராயில்
நெஞ்சே அநாதி அன்றோ –
என்றும் சொல்லுகிறபடியே வந்தேறி அன்றிக்கே அநாதி யாய் போருகையாலே
காட்டி -என்கிறார்
முன் கண்டார் இருக்குமது இ றே லோகத்தில் காட்டக் கடவது

இஸ் சம்பந்தத்தை ஒருவன் வெளி இட்டு கொடுக்கப பெறாமையாலே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்கிறபடியே
நெடும்காலம் தன்னை உள்ளபடி அறிய மாட்டாமல்
தேஹாத்மா அபிமானியாய்
மாறி மாறி பலபிறப்பும் பிறந்து -என்றும்
மற்றோர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து -என்றும்
வழி திகைத்து -என்றும்
அசந்நேவ-என்றும்
பொருள் அல்லாத -என்றும்
சொல்லுகிற படியே உரு மாய்ந்து நித்ய சம்சாரியாய் போந்திருந்து
மகாரேண ஸ்வ தந்த்ரஸ் ஸ்யாத் -என்கிறபடியே
பத த்வயாத்மகமான நமஸ் சிலே ஸ்வ ஸ்வாதந்த்ர்யா பிரதிபாதகமான
மகாரத்தின் அர்த்தத்தையும் உட்கொண்டு அருளிச் செய்கிறார்–

-தடை காட்டி –
கீழ்ச் சொன்ன இஸ் சம்பந்த ஞானத்துக்கும் பிரதி சம்பந்தியான
ஈஸ்வரன் இடத்தில் பரதவ பிரதிபத்திக்கும்
சேதனன் இடத்தில் பகவத் அனன்யார்ஹ சேஷத்வ பிரதிபத்திக்கும்
மேல் சொல்லுகிற திவம் என்கிற வாழ்வு ஆகிற கைங்கர்யத்தில் பிராப்யத்வ பிரதிபத்திக்கும்
சேர்ந்த நெறி யாகிற அவன் திருவடிகளிலே பிராபகத்வ பிரதிபத்திக்கும்
விரோதி இன்னது என்னும் இடத்தை வெளி இட்டுக் கொடுத்து
அவ்விரோதி யாகிறது –
அபர வஸ்துக்களில் பரதவ புத்தியும்
அரஷ்யகர் இடத்தில் ரஷகத்வ புத்தியும்
அநீஸ்வரன் இடத்தில் ஈஸ்வரத்வ புத்தியும்
அசேஷிகள் இடத்தில் சேஷித்வ புத்தியும்
அனுபாச்யர் இடத்தில் உபாஸ்ய புத்தியும்
அநாத்மாவில் ஆத்மபுத்தியும்
அச்வதந்த்ரனான தன்னிடத்தில் ஸ்வ தந்திர புத்தியும்
அனுபாயங்களில் உபாயத்வ புத்தியும்
அபந்துக்களில் பந்துத்வ புத்தியும்
அபோக்யங்களில் போக்யதா புத்தியும்
பகவத் கைங்கர்யங்களில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியும்
இவை எல்லா வற்றுக்கும் வேர் பற்றான
அஹங்கார மமகாரங்களும்-

இவ்விரோதி வர்க்கத்தை இ றே
புரத ப்ருஷ்ட தஸ் சைவ ஸ்தான தச்சவிசேஷத நமஸா விஷய தே ராஜன் -என்றும்
ஈஷி தேன புரத பச்சாதபிஸ் தா நதா -என்றும் சொல்லுகிறபடியே
காகாஷி நியாயேன் பிரதம சரம பதங்களோடு அந்விதமாயும்
சவாத ஏவ ஸ்தாநியான நமஸ் சோடே அந்விதமாயும்
இருந்துள்ள சகண்ட நமஸ் சில்
ஷஷ்டைந்தமான மகாரம் காட்டுகிறது

ஏவம் பூதமான இந்த விரோதி வர்க்கத்தைக் காட்டுகை யாவது –
நாராயணம் பரித்யஜ்ய ஹ்ருதிஸ் தம்பதி மீஸ்வரம்
யோனய மர்ச்சயதே தேவம் பரபுத்த்யா சபாபபாக் -என்றும்
ஸ்வாதந்த்ர்யம் அந்ய சேஷத்வம் ஆத்மா அபஹரணம் விது -என்றும்
ஈச அனன்யார்ஹ சேஷத்வம் வருத்தம் த்யாஜ்ய மேவதத் -என்றும்
வாசூதேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாசதே த்ருஷி தோஜாஹ் நவீ தீரே கூபம் நதி துர்மதி -என்றும்
உபாய உபாய சம்யோகே நிஷ்டயாஹீய தே நயா -என்றும்
விஷயாணாந்து சம்யோகாத் யோபி பர்த்தி சுகம் நர
க்ருத்யத பணி நஸ்சாயம் விசரா மாயா ஸ்ரயேதச -என்றும்
அஹங்காரார்த்த நாமேஷூ ப்ரீதி ரத்யை வனச்யது -என்றும்
சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரன் தொடக்கமானர்வர்கள் இடத்தில் பரத்வாதி பிரதிபத்திக்கு விரோதியான
இந்த விபரீத புத்தி த்யாஜ்யம் என்னும் இடத்தை ஸநிதர்சனமாகவும்
சோபபத்திகமான ஸ்வ உபதேசத்தாலே விசத தமமாம்படி வெளி இட்டுக் கொடுக்கை-

அநந்தரம்
சாதனம் நம சாததா-என்றும்
தஸ்மாத் சதுர்த்யா மந்திரஸ்ய ப்ரதம் தாஸ்யம் உச்யதே -என்றும் சொல்லுகிறபடியே
உபாயவாசியான நமஸ் சினுடையவும்
சர்வ தேச சர்வகால சர்வ அவசத உசிதமான கிஞ்சித் காரத்துக்கு பிரகாசகமாய் இருந்துள்ள
வ்யக்த சதுர்த்தியினுடையவும்
அர்த்தத்தை உட்கொண்டு அருளிச் செய்கிறார் –
உம்பர் திவம் என்னும் வாழ்வுக்கு
சேர்ந்த நெறி காட்டுமவன் -என்று
தேவா நாம் பூர யோத்யா-என்றும்
வானவர் நாடும் -என்றும் சொல்லுகிறபடியே
இவ்வருகு இருப்பார்க்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள நித்ய சூரிகளுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹமாய்-
தெளி விசும்பு திரு நாடு -என்றும்
அத்யர்கா நலதீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மகாத்மான -என்றும் சொல்லுகிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்
த்ரிபாதஸ் யாம்ருதம் திவி -என்றும்
த்ரிபாத் விராட் -என்றும் சொல்லுகிறபடி
சர்வேச்வரனுக்கு போகய போக உபகரண போக ஸ்தான ரூபேண
இருந்துள்ள த்ரிபாத் விபூதியிலே
நச புனராவர்த்ததே -என்றும்
அநாவ்ருத்திஸ் சப்தாஸ் -என்றும்
மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் -என்றும்
சொல்லுகிறபடியே புநரா வருத்தி இன்றிக்கே
நித்ய கைங்கர்யத்திலே நிரதராய் இருக்கை யாகிற வாழ்வுக்கு
நேரே அனுரூபமான உபாயத்தை வெளி யீட்டுக் கொடுக்குமவன் –

உம்பர் திவம் –
தேசிகனைப் போலே
தேசத்தையும் ததீயரை இட்டு நிரூபிக்க வேண்டி இருக்கும் போலே காணும்
திவம் -என்று சொன்னதுக்கு அடி பொன்னுலகம் என்னும்படியான நிலம் இது வாய்த்து -என்றும்
இமான் லோகன் காமான் நீகா மரூப்ய நு சஞ்சரன் -என்றும்
ஸ்வர சஞ்சரணம் ஆகையாலே இ றே விரோதி என்றும் –

வாழ்வுக்கு –
நித்ய கைங்கர்யம் என்றும் வாழ்ச்சி என்றும் பர்யாயம் போலே காணும் –
வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இ றே –

சேர்ந்த நெறி –
அனுரூபமான உபாயம் –
வாழ்வுக்குச் சேர்ந்த நெறி என்று
பிராப்ய பிராபகங்களைச் சேர ஒன்றுக்கு ஓன்று சத்ருசமாக
அருளிச் செய்தது
ச்வீகார விஷய பூதன் -பிராபகம் -பரிசார்யா விஷய பூதன்பிராபகம் என்கையாலே
இவ்விரண்டின் உடைய ஐக்யத்தைப் பற்ற –
உபாய பிரகரணத்தில் -இது தன்னைப் பார்த்தால் -இத்யாதிகளில் சொல்லுகிற உபாய வைபவத்தை
சேர்ந்த -என்கிற விசேஷணத்தாலே ஸூசிப்பித்து அருளுகிறார் ஆயிற்று –

சேர்ந்த நெறி -என்கையாலே
சேர்ந்த நெறியும் உண்டாய் இருக்கும் ஆகாதே தான்
பக்த்யா பரம்யாவாபி -என்கிறபடியே
மோஷ சாதனத்வேன வேதாந்தங்களில் விஹிதமாய்த்தல்ல -என்கிறபடியே
விவேகாதி சாதனா சப்தக சாத்தியமாய்
தருவா நு ஸ்ம்ருதி ரூபமாய்
கீழ்ச் சொன்ன பிராப்யத்துக்கு அத்யந்த வி சத்ருசமாய்
விளம்ப்ய பல பிரதமாய் இருக்கும் பக்தி உபாயம்   –
காட்டுமவன் அன்றோ ஆச்சார்யன் –
இப்படி அம பொன் அரங்கர்க்கு -என்று
உபய லிங்கத்வ விசிஷ்டமான பர ஸ்வரூபத்தையும்
ஆவிக்கு -என்று
தத் அநன்யார்ஹ சேஷமான ஸ்வ ஸ்வரூபத்தையும்
தடை -என்று
த்யாஜ்யமான விரோதி ஸ்வரூபத்தையும்
திவம் என்னும் வாழ்வுக்கு -என்று
ஏதன் நிவ்ருத்ய அந்தர்பாவியான புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
சேர்ந்த நெறி -என்று
இப்புருஷார்தத்துக்கு சத்ருச சாதனமான உபாய ஸ்வரூபத்தையும்
திருமந்திர உபதேச முகேன
ஸூ க்ரஹகமாகவும்
ஸூ வ்யக்தமாகவும்
வெளி இட்டு கொடுக்குமவன் அன்றோ
சதாச்சார்யன் -என்கிறார்

இப்படி உபதேசிக்கும் அவனுக்கு இ றே
ஆசிநோ திஹி சாஸ்த்ரார்ததா நாசாரே ஸ்தாப யத்யபி
ஸ்வ யமாசரதே யஸ்து ஸ ஆசார்ய இதீரித-என்று சொல்லுகிற ஆச்சார்ய லஷணம் உள்ளது –

நேரே ஆச்சார்யன் எனபது -சம்சார நிவர்த்தகமான பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவனை -என்கிற
திவ்ய ஸூ க்தியை உட்கொண்டு
காட்டுமவன் அன்றோ ஆச்சார்யன் -என்று
பிரசித்தி தோன்ற அருளிச் செய்கிறார் –

—————————————————————————

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ஸப்த காதை –தனியன் /அவதாரிகை–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 21, 2014

ஸ்ரீ ஸப்த காதை –தனியன்

வாழி நலம் திகழு நாரண நாதன் அருள்
வாழி அவன் அமுத வாய் மொழிகள் -வாழியே
ஏறு திருவுடையான் எந்தை வுலகாரியன் சொல்
தேறு திருவுடையான் சீர்—

————————————————————-

அவதாரிகை-

உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரான ஸ்ரீ திருவரங்கச் செல்வனாருக்கும் கூட
ஜ்ஞாநீத்வாத் மைவமேமதம் -என்கிற திரு முகப்படி
மிகவும் தாரகராய்க் கொண்டு-அனைவரும் உஜ்ஜீவிக்கும்படி
ஸ்ரீ அத்திகிரி அருளாளன் அனுமதி முன்னாக ப்ரபந்தீ கரித்து அருளின
ஸ்ரீ வசன பூஷண-பிரமுக நிகில ரஹஸ்ய கிரந்த முகேன
சரம
பிரமாண
பிரமேய
ப்ரமாத்ரு
வைபவங்களை
ஸ பிரகாரமாகவும் பிரகாசிப்பித்தது அருளின
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து-

அவதார விசேஷமான அவருடைய விசேஷ கடாஷத்தாலே
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலையான ஸ்ரீ திருவாய் மொழியையும்
அதுக்கு அங்க உபாங்களான இரும் தமிழ் நூற் புலவர் பனுவல்களையும் மற்ற எண்மர் நன் மாலைகளையும்
ஸ்ரீ பிள்ளான் முதலானவர் செய்து அருளிய தத் தத் வ்யாக்யானங்களையும்-அவற்றின் தாத்பர்யங்களுக்கும்
சப்த ரச
அர்த்த ரச
பாவ ரசங்களுக்கும்
ஸ்வாபதேசாதிகளுக்கும்
நேர் பிரகாசங்களான விசேஷ ரஹஸ்யங்களையும்
சார்த்தமாக சம்சய விபர்யம் அற-அடைவே அதிகரிக்கப் பெற்று கிருத்தார்த்தராய் –

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசரைப் போலேயும்
ஸ்ரீ நம்பிள்ளைக்கு ஸ்ரீ ஏறு திருவுடையான் தாசரைப் போலேயும்
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டருக்கு ஸ்ரீ பிள்ளை வான மா மலை தாசரைப் போலேயும் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாருக்கு
ஆத்ம சமராயும்
பிராண சமராயும்
திருஷ்டி சமராயும்
பாஹூ சமராயும்
ஆபரண சமராயும்
ஸ்ரீ பாத சமராயும்
ஸ்ரீ பாத ரேகா சமராயும்
ஸ்ரீ பாதச் சாயா சமராயும்
ஸ்ரீ பாதுகா சமராயும்
ஸ்ரீ பாத உபாதான சமராயும் -எழுந்து அருளி இருக்குமவராய்-

ப்ரம்ஸ சம்பாவனை இல்லாத உத்க்ருஷ்ட ஜன்மத்திலே அவதரிக்கப் பெறுகையாலே-சஹஜ தாஸ்யத்தை யுடையராய் –
தீதற்ற ஞானத் திருவாய் மொழிப் பிள்ளை -என்னும்படி சமஸ்த சாஸ்திர பாரங்கதராயும்
சர்வஞ்ஞராயும் பெரு மதிப்பராயும் போருகிற ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையும் கூட
தம்மருகே சென்று சரமார்த்த விசேஷங்களைக் கேட்டுப் போரும்படி மிகவும் சர்வஞ்ஞராய்
வாழு நலம் திகழு நாரண நாதன்-என்று
யாக அனுயாக உத்தர வீதிகளிலே காயான்ன ஸ்தல ஸூத்தி பண்ணின
ஸூத்த வ்ருத்த ஆசாரம் அறியும் பெரியோர்களாலே சர்வ காலமும் போற்றப் படுமவராய் –

ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யர் தம்முடைய சரம தசையிலே
சரீர அவசான காலத்து அளவும் நீர் ஸ்ரீ திருவனந்த புரத்தே இரும் என்று நியமித்து அருளுகையாலே
அவர் நியமித்து அருளின படியே அங்கே சென்று –
நடமினோ நமர்கள் உள்ளீர் -என்கிற ஸ்ரீ ஆழ்வார் உடைய நியமனத்தாலே
அந்தர் பூதரானவர்களில் தாம் பிரதானர் என்னும் வாசி தோற்ற
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் பணிந்து
த்வார த்ரயத்தாலும்
முக -நாபி -பாதங்களை –
முகமாகவும் -ஸ நாபியாகவும் -அடிப்பாடாகவும் -அடைவே அனுபவித்து
வாசம் கமழும் சோலையான புறச் சோலைக்கு விவிக்தமாய் இருப்பதொரு பிரதேச விசேஷத்தில் சென்று-

குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்றும்
விக்ரஹா லோக ந பர -என்றும்
ஸ்ரீ லோகார்யா முகாரவிந்தம் அகில ஸ்ருத்யர்த்த கோசம் சதாம்
தாம் கோஷ்டீஞ்ச ததேக லீன மனசா சஞ் சிந்தயந்தம் சதா -என்றும் சொல்லுகிறபடியே

தேமருவும் செங்கமலத் திருத் தாள்களும்
திகழும் வான் பட்டாடை பதிந்த திரு மருங்கும்
முப்புரி நூலின் தாம மணி வட மமர்ந்த திருமார்பும்
முன்னவர் தந்தருள மொழிகள் நிறைந்த திரு முறுவலும்
கருணை பொழிந்திடும் இணைக் கண்களும்
கன நல சிகை முடியும்
திங்கள் போலும் திரி நுதலும்
பொன் தோளும்
மங்கலமான மலர் மார்பும்
மணி வடமும்
மருங்குதனில் பரியட்டமும்
கமலப் பத யுகமும்
அழகிய பத்மாசனமும்
ஈராறு திரு நாமம் அணிந்த எழிலும்
இனித் திருப்போடு எழில் ஞான முத்ரையும்
தாமுமாக எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை

ஸ்ரீ பாதாதி கேசாந்தமாகவும்
ஸ்ரீ கேசாதி பாதாந்தகமாகவும்
உருவு வெளிப் பாட்டாலே
விசத
விசத தர
விசத தமமாக
த்யானித்துக் கொண்டு –

வார்த்தோஞ்ச வ்ருத்யாபி யதீய கோஷ்ட்யாம் கோஷ்ட்யாந்தரானாம் பிரதமா பவந்தி –என்கிற
வேறுபாட்டை யுடைத்தாய் இருந்துள்ள
ஸ்ரீ நம்பிள்ளை திரு ஓலக்கத்துக்குப் போலியான அவருடைய திரு ஓலக்க வாழ்வை
பாவோ நான்யத்ர கச்சதி -என்னும்படி
அஸ்மத் இதம் அந்ய பாவராய் த்யானித்துக் கொண்டு
தம் திரு மேனியில் சிலந்தி நூல் இழைக்கும் படியாகவும் –
நைவதம்சான் இத்யாதிப்படியே
கடிந்ததும் ஊர்ந்ததும் தெரியாதபடி
நாளாறு நாள் சமாதியில் எழுந்து அருளி இருக்குமவராய்-

வாழி ஏறு திருவுடையான் எந்தை வுலகாரியன் சொல் தேறு திரு வுடையான் சீர் -என்கிறபடியே
ஸ்வ ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய திவ்ய ஸூக்திகளாய் இருந்துள்ள
ஸ்ரீ வசன பூஷணாத்ய அகில ரஹச்ய தாத்பர்ய சார தமார்த்த விசேஷங்களையே
சர்வ காலமும் அனுபவித்துக் கொண்டு போருமவராய்
பாருலகைப் பொன்னுலகாகப் பார்க்கவும் பெற்றோம் -என்று தாமே பேசும்படி
சம்சார பரமபத விபாகம் அற இரண்டையும் ஒரு போகியாக்கிக் கொண்டு போருகிற
ஸ்ரீ விளாஞ்சோலை பிள்ளை –

ஸ்ரீ வகுள பூஷண சாஸ்திர சாரமாய்
ஸ்ரீ சரம ரஹச்யமாய் இருந்துள்ள ஸ்ரீ வசன பூஷண சாஸ்த்ரத்திலே
பரக்கச் சொன்ன விசேஷங்களை எல்லாம் தம்முடைய பரம கிருபையாலே
அனைவருக்கும் ஸூக்ரஹமாம்படி சங்க்ரஹித்து அருளுவதாகத் திரு உள்ளம் பற்றி
ஸ்ரீ கீதைக்கு ஸ்ரீ சரம ஸ்லோகம் பிரதானமாய் இருக்கிறாப் போலே
சரம பிரமாணம் பிரமேய பிரமாதாக்களை சரமமாக
பிரதி பாதிக்கிற
சரம பிரகரணம் ஸ்ரீ வசன பூஷணதுக்காக பிரதானமாய் இருக்கையாலே
இதில் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்களையும்
மற்றைப் பிரகரணங்களில் தத் உபயோகிதயா பரக்கப் பிரதிபாதிக்கிற
அர்த்த விசேஷங்களையும் பரப்பற
ஏழு பாட்டாலே
சங்க்ரஹித்து
வாழி அவன் வாய் அமுத மொழிகள் -என்னும்படி
சர்வ உபபோக்யமாய் இருந்துள்ள
ஸ்ரீ ஸப்த காதை -என்கிற பிரபந்த முகத்தாலே அருளிச் செய்கிறார் –

அது எங்கனே என்னில் –
வேதார்த்தம் அறுதி இடுவது -என்று தொடங்கி-
பிரபத்தி யுபதேசம் பண்ணிற்று இவளுக்காக -என்னும் அளவாக
புருஷார்த்த பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய -இத்யாதி ந்யாயத்தாலே
அம்பொன் அரங்கர்க்கும் -என்கிற இடத்தில் தாத்பர்ய விதியாக ஸூசிப்பிக்கையாலும் –

பிரபத்திக்கு -என்று தொடங்கி -ஏகாந்தீவ்ய பதேஷ்டவ்ய -என்னும் அளவாக உபாய பிரகரணத்தில்
சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
உம்பர் திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி -என்கிற இடத்தில் ஸூசிப்பிக்கையாலும் –

உபாயத்துக்கு -என்று தொடங்கி -உபேய விரோதிகளாய் இருக்கும் -என்னும் அளவாக
அதிகாரி நிஷ்ட க்ரம பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அஞ்சு பொருளும் பார்த்த குருவின் அளவில் தன்னை இறையை -இத்யாதிகளால் ஸூசிப்பிக்கையாலும்-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-என்று தொடங்கி
உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -என்னும் அளவாக
ஆச்சார்ய அனுவர்த்தன பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
என்பக்கல் ஓதினார் -இத்யாதியாலே ஸூசிப்பிக்கையாலும்

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -என்று தொடங்கி
நிவர்தக ஞானம் அபய ஹேது -என்னும் அளவாக –
பகவத் நிர்ஹேதுக கிருபா பிரபாவ பிரகரணத்தில் சொல்லுகிற அர்த்த விசேஷங்களை
அழுக்கு என்று இவை அறிந்தேன் -என்கிற பாட்டில் ஸூசிப்பிக்கையாலும்

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்று தொடங்கி
அநந்தரம் பல பர்யந்தமாக்கும் -என்னும் அளவாக
சரம பிரகரணத்தில் சொல்லும் அர்த்த விசேஷங்களை
முதல் பாட்டு தொடங்கி தீங்கு ஏதும் இல்லா -என்னும் அளவாக சங்க்ரஹித்து
அடைவே
அபிமான வ்ருத்தியாலும்
அந்வய முகத்தாலும்
வ்யதிரேக முகத்தாலும்
பிரகாசிப்பித்தது அருளுகையாலும்
இப்பிரபந்தம் பரம ரஹச்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தங்களுக்கு சங்க்ரஹமாம்-என்னக் குறை இல்லை இறே –

பிரதம பர்வதத்தை
செக்கர் மா முகில் -என்று தொடங்கி –
ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ திரு வாசிரியத்திலே பிரகாசிப்பித்தது அருளினால் போலே
இவரும் சரம பர்வதத்தை
அம் பொன் அரங்கர்க்கும் -என்று தொடங்கி
இப்பிரபந்தம் தன்னிலே ஏழு பாட்டாலே பிரகாசிப்ப்பித்து அருளுகிறார்

இன்னும் அதிலும் இதுக்கும் நெடு வாசி யுண்டு –
அது எங்கனே என்னில்
பாத பிரசாதி நியதி இல்லாத ஆசாரியப்பாவாவாய்க் கொண்டு நடந்து
சம்சார பந்தஸ்திதி மோஷ ஹேது –என்றும்
ஸித்திர் பவதி வாநேதி சம்ஸ யோச்யுத சேவினாம் -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்
மங்க ஒட்டு நின் மா மாயை -என்றும்
சொல்லுகிறபடியே பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான பிரதம பர்வத்தைப் பிரதி பாதிக்கும் அது –

பாத பிரசாதி நியதியை உடைத்தான வெண்பாவாய்க் கொண்டு நடந்து
தம்ஸ பாரம் தர்சயதி ஆச்சார்யா ஸ்துதேக திம் வக்தா -என்றும்
ந சம்சயோ ஸ்திதி தத் பக்த பரிசர்யார தாத்மனாம் -என்றும்
நீதியால் வந்து இப்பார்க்கு உண்டு உழியாவான் -என்றும்
மோஷைக ஹேதுவான சரம பர்வதத்தை சதிராக பிரதிபாதிக்கும் இது-

அன்றிக்கே
ஸ்ரீ ஆண்டாளுடைய திவ்ய ஸூக்தி பிரமாணகமாய்
த்ரயோதச வாக்யார்த்தமாய் இருந்துள்ள வாக்ய குரு பரம்பரையிலே
துரீய வாக்ய சங்க்ரஹமாய்
சப்தாஷரியான பிரதம வாக்யத்தில் பிரதம அஷரத்தை
அம் பொன் அரங்கர்க்கும் -என்று தொடங்கி -முதல் அடியில் முந்துற முன்னம் முதல் பாட்டும்
த்விதீயாஷரத்தை -அஞ்சு பொருளும் அளித்தவன் -என்கிற இடத்தில் இரண்டாம் பாட்டும்
த்ருதீயாஷரத்தை பார்த்த குரு என்கிற இடத்தில் நேராக மூன்றாம் பாட்டும்
துரீயாஷரத்தை ஒரு மந்த்ரத்தில் -என்கிற இடத்தில் நாலாம் பாட்டும்
பஞ்சமாஷரத்தை -என்பக்கல் ஓதினார் -என்கிற இடத்தில் அஞ்சாம் பாட்டும்
ஷஷ்டாஷரத்தை அம் பொன் அரங்கர் என்கிற இடத்தில் நேரே ஆறாம் பாட்டும்
சரமாஷரத்தை -சேருவரே அந்தாமம் தான் – என்கிற இடத்தில் சரம தமமாக ஏழாம் பாட்டும்
அடைவே உட்கொண்டு நடந்த
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரமாய் அவதரித்ததோபாதி
இப்பிரபந்தம் ஏழு பாட்டாய் அவதரித்தது என்னவுமாம் –

ஸ்ரீ மதுர கவிகளும்
ஸ்ரீ வடுக நம்பியும்
சரம பர்வங்களை உக்தி அனுஷ்டானங்களாலே
அடைவே வ்யக்தம் ஆக்கினாப் போலே காணும்
இவரும் இப்புடைகளிலே சரம பர்வதத்தை உக்தி அனுஷ்டானங்களாலே வ்யக்தம் ஆக்கி அருளின படி-

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விளாஞ்சோலை பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -45-60–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 21, 2014

கீழ்
மா காந்த நாரணர் வைகும் வகை -என்று வ்யாப்தியை பிரஸ்தாபித்து
இப்படி சர்வ வ்யாபகனான அவனோடு அநாதியாய் வருகிற சம்பந்தம் யுண்டாய் இருக்க
அத்தை அறியாதே
கீழ் சொன்ன மோஹாந்தரிலே-அந்ய தமராய் இருந்த நான்
ஆச்சார்ய சம்பந்தத்தால் அன்றோ உஜ்ஜீவித்தது என்று
ஸூவ லாபத்தை எப்போதும் அனுசந்தித்துப் போரு என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—45-

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கிறபடியே
அவன் ஸ்ரீ யபதி நாராயணன்
நாம் -நாரம் -என்கிற-இந்த அநாதய அயன சம்பந்தம் நிரூபிக்கில்
மனசே-இன்றாக யுண்டானது அன்றே-அநாதியாக வருகிறது அன்றோ –இப்படியாய் இருக்க
நெடும் காலம் சம்பந்த ஞானம் அன்றிக்கே அசித் பிராயமாய் இழந்து அன்றோ கிடந்தது

இப்போது
தத் சம்பந்தத்தை யுணர்த்தின-ஜ்ஞாநாதி குண பரி பூரணராய் இருக்கிற
ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உஜ்ஜீவித்தது என்று –
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் -என்கிறபடியே
லஜ்ஜை அபிமானங்களை விட்டு சர்வ காலமும் பிரசித்தமாக அனுசந்தித்துக் கொண்டு போரு –

இறையும் உயிரும் -இத்யாதி
ஆத்ம நோஹ்யதி நீசச்ய-

—————————————–

கீழ் ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது -என்கிற
இத்தை விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார் –

திருவாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மைக்
குருவாகி வந்து உய்யக் கொண்டு -பொருவில்
மதிதான் அளித்து அருளும் வாழ்வு அன்றோ நெஞ்சே
எதிராசர்க்கு ஆளானோம் யாம்—46-

பொருவில் -உபமான ரஹிதமான-

தொண்டர்க்கு அமுது உண்ண சொன்ன மாலையான ஸ்ரீ திருவாய் மொழி -என்றபடி
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாக திரு வவதரித்த ஸ்ரீ திருவாய்மொழியில்
அவகாஹித்து -அதில்
சப்த ரசம்
அர்த்த ரசம்
பாவ ரசம்
என்கிற இவற்றை அனுபவித்து-தத் ஏக நிஷ்டராய்
தத் வ்யதிரிக்த சாஸ்த்ரங்களை த்ருணவத் பிரதிபத்தி பண்ணி
ஸ்ரீ திரு வாய் மொழி யோட்டை சம்பந்தத்தையே நிரூபகமாய் யுடைய ராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே சர்வ வித கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரா நிற்கிற
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை
(சடகோபர் தாசர் என்றே இன்றும் அருளப்பாடு உண்டே இவர் வம்சத்தாருக்கு )

ஒப்பிலா தீ வினையேனை உய்யக் கொண்டு -என்கிறபடியே
க்ரூர கர்மாக்களாய் இருக்கிற நம்மை
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி -என்றபடி
ஸ்ரீ ஆச்சார்யராய் திரு வவதரித்து-
நாம் இருந்த இடம் தேடி வந்து உஜ்ஜீவிக்கும்படி அங்கீ கரித்து

சாஸ்திர ஜ்ஞாநாதிகள் போல் அன்றிக்கே
உபமான ரஹிதமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிறக்குமதான ஜ்ஞானத்தை யுபகரித்து அருளும் சம்பத் அன்றோ
மனசே-பிராப்த சேஷியான ஸ்ரீ எம்பெருமானார்க்கு அடிமையானோம் -நாம் –

பத த்ரய அர்த்த நிஷ்டை தான்-ததீய பர்யந்தமாய் அல்லாது இராது-என்று கருத்து –

————————————————

ஸ்ரீ எதிராசர்க்கு ஆளானோம் யாம் -என்ற ப்ரீதி யுத்ததியாலே
கீழே
மா கந்த நாரணானார் -என்றும்
நாராயணன் திருமால் -என்றும் ப்ரஸ்துதமான ஸ்ரீ நாராயண சப்தத்தோடு விகல்பிக்கும் படியாக
அதில்
சதுரையாய் இருப்பதான ஸ்ரீ ராமானுஜ -என்கிற திரு நாம வைபவத்தை வெளி இட வேண்டி அத்தை
வ்யதிரேக முகத்தாலே வெளி இட்டு அருளுகிறார் –

இராமானுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்து
இரா மானுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதும்
இரா மானுசர் அவர்க்கு எல்லா வடிமையும் செய்ய வெண்ணி
இரா மானுசர் தம்மை மானுசராக என் கொல் எண்ணுவதே—–47-

நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் -என்கிறபடியே
ஸ்ரீ ராமானுஜாய நம -என்று திவா ராத்திரி விபாகம் அற அனுசந்திக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாது இருக்கிற
பசு சமரான மனுஷ்யர்கள் வர்த்திக்கிற ஸ்தலம் தன்னிலே ஷண காலமும் துஸ் சஹமாய் வர்த்தியாது இருக்கிற
ஸ்ரீ ஆழ்வான் போல்வாராய்
சாஸ்திர வச்யரான மனுஷ்ய ஜன்மாக்களுக்கு
எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் -என்கிறபடியும்
சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி இருக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாதே இருக்கிற க்ருதக்ன மனுஷ்யர்தங்களை
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் -என்கிறபடியே
பசு சமரான அவர்களை மனுஷ்யராக எப்படி எண்ணுவது
பஸூபிஸ் சமான -என்னும் இத்தனை –

——————————————————————-

கீழ்
எல்லா அடிமையும் செய்ய எண்ணி
ஸ்ரீ இராமானுசாயா -என்கிற பிரசங்கத்திலே
தம்முடைய வாகாதி கரணங்களை இப்படியே அவர்கள் விஷயத்தில் அனந்யார்ஹமாம்படி
ஸ்ரீ பெரிய பெருமாள் பண்ணி யருளின படியை
ப்ரீதியாலே பேசி அருளுகிறார் –

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை யொன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகு அளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை யரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

கலியார் நலிய ஒண்ணாத வண்ணம் -கலியில் உள்ளார் நலியாத படியும் –
கலி புருஷன் நலியாத படியும்
நலம் -சம்பத்து
இங்கே தேக சம்பத்தி இறே-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் -என்கிறபடியே
கலியானது-தன்னுடைய க்ரௌர்யத்தினாலே பாதியாதபடி லோகத்தை ரஷித்தவராய்
பேறு ஒன்றும் மற்று இல்லை -என்கிறபடியே
பிராப்ய பிராபகங்களான எம்பெருமானார் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரியாதவர்களை

நையும் மனம் உன் குணங்களை எண்ணி -இத்யாதியாலும்
நித்யம் யதீந்திர -இத்யாதியாலும் சொல்லுகிறபடியே
தத் விஷயத்திலே பிரவணமான என்னுடைய மனஸ்ஸூ தொடக்கமான கரணங்கள் ஆனவைகள்
ஸ்மரித்தல்
ஸ்துதித்தல்
பஜித்தல்
தர்சித்தல்
ஆகிற ஸ்வ ஸ்வ கார்யங்களை செய்யாது –

சிந்தையினோடு கரணங்களைத் தந்த ஸ்ரீ ரெங்க ராஜரான ஸ்ரீ பெரிய பெருமாள்
அவை அந்ய சேஷம் ஆகாமல் நமக்குச் செய்த நன்மை இவை யாய்த்து –

இசையாது நா –மன பூர்வோ வாகுத்தர -என்கிறபடியே
அதுக்கு அனந்தர பாவிதான நாவுடைய வாயானது
நாவியிலா லிசை மாலைகள் ஏத்தி -என்கிறபடியே
ஸ்துதி ரூபமான சப்த சந்தர்ப்பங்களைப் பண்ண மாட்டாது –

இறைஞ்சாது சென்னி –
ப்ரணமாமி மூர்த்த்னா -என்னுமவருடைய -சென்னி இறே

கண்ணானவை ஒன்றும் காணலுறா –
கண் கருதிடும் காண
ஸ்ரீ மாதவாங்கரி -என்னும்படியான திருஷ்டிகள்-ஏக தேசமும் தர்சிக்க ஆசைப் படாது –

காணல் உறுகின்றேன் -(நான்முகன்-41 )-என்கிற இடத்துக்கு
காண ஆசைப் படுகிறேன் என்று இறே அருளிச் செய்தது –

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -(நான்முகன் -41)-

காணல் உறுகின்றேன் – – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க
வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –

கலியார் -என்கிறது
ஏவினார் கலியார் -என்கிறபடியே-பாதகத்வித்தின் உறைப்பை பற்ற வாய்த்து –

———————————————-

எதிராசன் அடி நண்ணாதவரை எண்ணாது -இத்யாதியாலே
தமக்கு சம்சாரிகள் இடத்தில் யுண்டான வைமுக்யத்தை தர்சிப்பித்து மீள
அவர்கள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்ற மாட்டாதே
அவர்களுக்கு மோஷ உபாயமாக
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஆஸ்ரயணாதிகளை விதிக்கிறார் –

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நா நிலத்தீர்
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றுமவன்
அந்தாதி தன்னை யனுசந்திக்குமவன் தொண்டருடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரு முத்தி பின் சித்திக்குமே–49-

நந்தா நரகத்து அழுந்தா வகை -என்றும்
நரகத்திடை நணுகா வகை -என்றும் சொல்லுகிறபடியே
ஒரு கால் அனுபவித்து முடியாததாய்
மற்றை நரகம் -என்னும்படி
சம்சாரம் ஆகிற நரகத்தில் மக்னர் ஆகாமை அபேஷிதம் ஆகில்

நாலு வகைப் பட்ட பூமியில் உண்டான வர்களே –
எனக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிங்கோள்-
சர்வ காலத்திலும் மோஷைக ஹேதுவாய் இருக்கிற அவர் திரு நாமத்தை
பாட்டுக்கள் தோறும் பிரதிபாதிப்பதாய்-
அதேவ பிரபன்ன ஜன காயத்ரியாய்-
இருக்கிற அவர் விஷயமான ஸ்ரீ நூற்றந்தாதி தன்னை அனுசந்தியுங்கோள்-

உன் தொண்டர்களுக்கே -என்னும்படி
அவர் திருவடிகளிலே சபலராய் தொண்டு பட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன்
தத் இதர சஹவாசத்தால் யுண்டான மநோ துக்கம் எல்லாம் கெட
ஒரு நீராகப் பொருந்தி இருங்கோள்
ஆன பின்பு முக்தி யானது சம்சயம் அற்று சித்திக்கும் –

இத்தால்
இவருடைய ஆஸ்ரயணாதிகளுக்கு தானே
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியைப் பண்ணும்-என்று கருத்து –

—————————————————————-

அவர்கள் ஆஸ்ரயிக்கிறோம் என்று ஆறி இருக்க மீளவும் அவர்களைக் குறித்து
ஏன் காலத்தை வ்யர்த்தமே போக்குகிறீர்கள்
அவர் திரு நாமத்தை ஸ்மரிக்க அதி துர்பலமான பலம் சித்திக்கும் என்கிறார் –

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி யறி வின்மையால் இப்
பவத்தே யுழல்கின்ற பாவியர்கள் பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்களுக்கும் எய்த ஒண்ணாத வந்தத்
திவத்தே யும்மை வைக்கும் சிந்தியும் நீ எதிராசர் என்றே—50

யத்னம் -அல்பம் -பலம் -அதிகம் –

திரு நாமம் அனுசந்திக்கைக்கு யோக்யமாய் இருப்பதான
ஸ்லாக்கியமான காலத்தை வ்யரத்தமே போக்கி
அஜ்ஞ்ஞானத்தாலே சம்சாரத்திலே பரிப்ரமிக்கிற பாபிகளாய் உள்ளவர்களே

சர்வ காலத்திலும் ஒருபடிப் பட நின்று தபஸ்சிலே உத்சாஹிக்குமவர்களாய் இருக்கும் அவர்களுக்கும்
பிராபிக்கப் போகாமல் இருப்பதாய்

தத்ஷரே பரமேவ்யோமான் -என்று சொல்லுகிற ஸ்ருதி பிரசித்தியை உடைத்தாய் இருப்பதான
அந்த ஸ்ரீ பரம பதத்திலே
நித்ய சம்சாரிகளான உங்களை ஏற்றி நித்யர் உடன் ஒரு கோவை யாக்கி வைக்கும்
அதுக்கு உடலாக கீழ்ச் சொன்னவைகள் தான் நேர்த்தி என்னலாம் படி
அதிலும் எளிதாய் இருப்பதான ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தை
ஸ்ரீ எதிராசன் என்று நீங்கள் மனசிலே சிந்தியுங்கோள்

நேர்த்தி அல்பமாய்-பலம் அதிகமாய்-இருக்கும்
நேர்த்தி -யத்னம் –

—————————————————–

இனி
சம்சாரிகள் இழவைத் தான் சொல்ல வேணுமோ –
உம்முடைய நிலை இருந்தபடி என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அவர்களோபாதி அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போய் இருக்க
அதன் இழவு இன்றிக்கே இருக்கிற எனக்கு தேவர் உடைய கிருபை யுண்டான பின்பு
தத் அலாபக் க்லேசம் யுன்டாய்த்து என்று ஸ்வ லாபத்தைப் பேசி அருளுகிறார்
இழவு -அலாப க்லேசம் –

என்றும் உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
அன்று அளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவு இன்றி இருக்கும் என்நெஞ்சம் இரவு பகல்
நின்று தபிக்கும் எதிராசா நீ அருள் செய்த பின்னே –51-

தவிக்கும் -தபிக்கும் -பாட பேதங்கள் –

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை-என்கிறபடியே
ஒழிக்க ஒழியாத-அவிநாபாவ -நித்தியமான சம்பந்தம் உண்டாகையாலே
நியந்தாவான ஈஸ்வரன் என்று தொடங்கி சித்தனாய் இருக்கும் –
அப்படியே ஈசிதவ்யனான ஆத்மாவும்-
ப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே அன்றே உண்டாய் இருக்கும்

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -நான்முகன் திருவந்தாதி-7-

அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை
அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –
என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில்
என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே
அப்படியே-நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்

இப்படி அன்று தொடங்கி
தேவர் விஷயீ காரம் பெற்ற இன்றளவாக யுண்டான என்னுடைய பிரபல கர்மத்தாலே-
சேஷி சேஷ சம்பந்த ஜ்ஞான கார்யமான கைங்கர்யத்துக்கு
அடைத்த இந்த அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போயிற்று என்று
இழந்த காலத்துக்கு அனுதபியாமல் இருந்த என்னுடைய மனசானது
தேவர் விசேஷ கடாஷம் அருளிய பின்பு
திவா ராத்ர விபாகம் அற இதிலே ஒருப்பட்டு நின்று பரிதபியா நிற்கும் –

இது என்ன ஸ்வபாவம்
ஒரு கிருபா பிரபால்யம் இருந்தபடியே-

இருவினை -பெரிய வினைகள் என்றும் -புண்ய பாபங்கள் என்றும் ஆகவுமாம்-

———————————————————

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

தனு -சரீரம்

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-
விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————————————

இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு வந்து திரு முக பிரதானம்
பண்ணும்படியை அனுசந்தித்து
அதுக்கு இடைச் சுவராய் பாபஸ்பத தேகத்துடன் துஸ் சஹமான துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது
ஆகையால் ஹித பிரவர்த்தகரான தேவர் சகல துக்காஸ்பதமான சம்சாரத்தில் நின்றும்
அடியேனை சீக்கிரமாக உத்தரிப்பித்து அருள வேணும் -என்கிறார்

இதத்தாலே தென்னரங்கர் செய்கிறது என்று அறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆவோ வென்னும் இந்தப் பாவ வுடம்புடனே
பல நோவும் அனுபவித்து இப் பவத்து இருக்கப் போமோ
மதத்தாலே வல்வினையின் வழி யுழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை யுனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா என்னை
இனிக் கடுக இப் பவத்தின் நின்றும் எடுத்தருளே –53-

ஆரப் பெரும் துயரே செய்திடினும் -இத்யாதிப்படியே
ஹித புத்யா பெரிய பெருமாள் க்ருபா பலமாக
துக்கங்களை அனுபவிப்பித்து அருளுகிறார் என்று அறிந்தே இருந்தாலும்
அந்த அந்த காலத்தில் யுண்டான வேதனையின் மிகுதியாலே துடித்து
அந்த துஸ் சஹதையால் யுண்டான விஷாதத்தாலே துக்க ஸூசகமான சப்தங்களை சொல்லும்
இந்த பாப சரீரத்தோடு பஹூ துக்கங்களை அனுபவித்து
துக்கா வஹமான இந்த சம்சாரத்தில் இருக்க சக்யமோ –

பாவியேன் செய்து பாவியேன் -என்கிறபடியே தேக மதத்தாலே பிரபல கர்மத்தின் மார்கத்தாலே
அதுவே யாத்ரையாய் வர்த்தித்த மகா பாபியான என்னை
சத்துக்களுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிற தேவர்க்கு
அடிமை யாக்கிக் கொண்டு அருளின ஹிதத்தை நடத்தவும்
மாதாவும் பிதாவுமாய் இருக்கிற தேவர் சம்பந்தத்தை அறிந்த பின்பு
அடியேனை சீக்கிரமாக இந்த சம்சாரத்தில் நின்றும்
மாந்தாரய -என்னும்படி எடுத்துக் கரை ஏற்றி அருள வேணும் –

அவர்ஜ நீய சம்பந்தம் அடியாக இறே உத்தரிப்பித்து அருளுவர்-என்று கருத்து –

———————————————————

இப்படி இவர் அபேஷித்த படியே
ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் அபேஷிதம் எல்லாம் செய்வாராக எண்ணி இருக்க
இவருக்கு அது பற்றாமல்-ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் மீளவும் அவர் தம்மைப் பார்த்து
சர்வவித பந்துவாய் இருக்கிற தேவர்
நான் இந்த தேஹத்தோடே இருந்து துக்கப் படாமல்
என்று தான் நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே சேரும்படி ஏற்றி அருளுவது என்கிறார் –

இன்னும் எத்தனை நாள் இவ் வுடம்புடனே
இருந்து நோவு படக் கடவேனையோ
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்று தான் திரு நாட்டில் ஏற்றுவீர்
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்து அருள் நாதனே
என்னிதத்தை இராப்பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே—–54-

வள்ளல் -பிரத்யுபகார ரஹிதமாக யுபகரிக்கும் உதாரர்-

அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் -என்கிறபடியே
பிரிய ஹிதங்களைப் பண்ணுகிற மாதா பிதாக்களும்
மற்றும் அனுக்தமான அசேஷ பந்துக்களும் எல்லாமுமாய்-என்னை ரஷித்து அருளுகிற நாதனே –
என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே -என்கிறபடியே
என்னுடைய ஹிதத்தை திவா ராத்திரி விபாகம் அற ஒருபடி சிந்திக்கிற பரம உதாரராய்
எதிகளுக்கு நாதர் ஆனவரே

உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்கிறபடியே
தேவர்க்கு சேஷ பூதன் ஆன பின்பு
இன்னம் எத்தனை காலம் இந்த தேஹத்திலே இருந்து வேதனை படக் கடவேன்
ஐயோ-அடியேனை பந்தமான இந்த தேகத்தில் நின்றும் முக்தனாம்படி பண்ணி
என்று தான் திரு நாட்டின் உள்ளே ஏற்றி அருளுவுதீர் –
அந்நாளும் ஒரு நாள் ஆமோ

——————————————

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

உள்ளுதல் -விசாரித்தல் –

தர்சநீயமான ஸ்ரீ கோயிலிலே –
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள் கொள்வாராய்-
அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாள் நிர்ஹேதுக கிருபைக்கு லஷ்யமாகப் பெற்றோம் –

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கத் திருப்பதி -என்றும் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
தலையரங்கம் -என்றும்
சொல்லுகிறபடியே -அகில திவ்ய தேச பிரதானமான
ஸ்ரீ திருவரங்கத் திருப்பதியே நித்ய வாசஸ் ஸ்தானமாகப் பெற்றோம் –

பரபக்தியாதி கல்யாண குணங்கள் பொருந்தி இருக்கிற ஸ்ரீ ஆழ்வாருடைய
தொண்டர்க்கு அமுதான வகுள பூஷண வாக் அம்ருதத்தையே அன்னமாகப் புஜிக்கப் பெற்றோம்-

தேவு மற்று அறியேன் -என்கையாலே அவர்களை சிரித்து இருப்பார் -என்னும்படியான
ஸ்ரீ மதுர கவிகளுடைய திவ்ய ஸூக்திப்படியே
யதீந்திர மேவ நிரந்தரம் சிஷே வேதை வதம்பரம் -என்றும்
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலைமை -என்றும்
நாமும் நம்முடையாரும் பேசும் படியான சரம பர்வ நிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம் –

தத் பிரதிபாதகங்களான நம்முடைய பூர்வாச்சார்யர்கள் உடைய திவ்ய ஸூக்திகளான
ரஹஸ்யங்களை-நெஞ்சு தன்னால் தேறலுமாம் –என்னும்படி
மேல் எழ அன்றிக்கே ஆந்தரமாக அனுசந்திக்கப் பெற்றோம்

அதில் ஆதர அதிசயத்தை உடைய நமக்கு மற்று ஒன்றில் பொழுது போக்காமல்
முழுதும் அவற்றையே கால ஷேபமாகப் பெற்றோம் –
இப்படியான அநந்தரம் தத் இதர கிரந்தங்களில் ஒன்றிலும்-மனஸ்ஸூ சலியாமல்
இதிலியே பிரதிஷ்டிதமாம் படி இருக்கப் பெற்றோம்

இது எல்லாம் ஒரு தட்டும் -தான் ஒரு தட்டுமாய் இருக்குமதாய்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான
பர உச்சாராயம் கண்டால் அசஹிஷ்ணுதை இல்லாத மஹாத்மத்தையும் லபிததோமே-

இது ஒரு மகா லாபம் இருந்தபடியே —

—————————————-

ஸ்ரீ மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -என்று
தம்முடைய நிலையை வெளி இடா நின்று கொண்டு
அதுக்கு அனுரூபமாக அவர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அபேஷிககிறார்-

உன் தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ -அந்தோ
எதிராசா நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத் தாள் தா –56

எதிகளுக்கு நாதர் ஆனவரே -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும்படி
தேவருடைய அபிமானமே இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் என்று
தெளிவுற்ற சிந்தையர் -என்னும்படி-மன பிரசாதம் யுண்டாய்
தன் நிஷ்டராய் இருக்கும்படி பண்ணி -உபகரித்து அருளின தேவர்

ஐயோ
வேதனைகளால் அடியேனை நலக்கேடு பண்ணாமல்
நேமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய -என்றபடி சாமர்த்தியமாக
உன் பாத யுகமாமேர் கொண்ட வீடு -என்கிறபடியே தேவர் திருவடிகளையே பிரசாதித்து அருள வேணும் –

—————————————————

இப்படி நீர் சொல்லுகிற நிர்பந்தங்கள் எல்லாம் கேட்டு நாம் உம கார்யம் செய்கைக்கு
எந்த சம்பந்த பிராபல்யம் கொண்டு தொடருகிறீர்-என்ன
ஸ்ரீ பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே ஒரு வஸ்து என்று அபிமானித்து
அடியேனுடைய அபராதம் பாராத தேவர்
யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீ மன் கிருபயா பரயா தவ -என்கிறபடியே
அடியேனுடைய முக்த ஜல்பிதத்தை செவி தாழ்த்து கேட்டு அருள வேணும் என்கிறார் –

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான
திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே
அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –

———————————————————–

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த்தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவராலே லப்த ஞானனான எனக்கு-த்வத் சம்பந்த ஞானம் இல்லையோ -என்கிறார்-

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
உன் தன உறவை உணர்த்திய பின் -இந்த யுயிர்க்கு
எல்லா வுறவும் நீ என்றே எதிராசா
நில்லாதது வுண்டோ என் நெஞ்சு —-58-

ஸ்ரீ திருமந்தரம் மாதாவும் பிதா ஸ்ரீ ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வார்கள் -என்கிறபடியே
எனக்கு ஜனகரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே
தேவர் திருவடிகளிலே சர்வ வித பந்துத்வத்தையும்-அஜ்ஞ்ஞாதஞாபனம் பண்ணி ரஷித்து அருளின
அநந்ரம்
இப்படி யுண்டான சம்பத்தத்தை அறிந்த இவ்வாத்மாவுக்கு மாத்ரா பிரதிபாத்யமான நவ வித சம்பந்தமும்
தேவர் என்று அத்யவசித்து அதில் நிலை நில்லாதே இருக்குமது உண்டோ -என்னுடைய மனஸ்ஸூ –

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே -என்றும்
அல்லாச் சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது-

————————————–

இப்படி தேவர் திருவடிகளிலே சம்பந்த ஞானத்தை உடைய எனக்கு
ஹித பரரான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு வந்து
முக தர்சனம் யுண்டாக்கி
தாமே மார்க்க சிந்தை பண்ணி
தேக விமோசனம் பண்ணும் கால அவதியை
அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த -சிந்தை செய்து இப்
பொல்லா வுடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ
சொல்லாய் எதிராசா சூழ்ந்து —–59-

எனக்குத் தந்தையும் தாயும் ஆவாராய் ஸ்ரீ கோயிலை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பெருமாள்
அஞ்சிறைப் புள் பாகரான ஆகாரம் தோன்ற
சௌந்தர் யாதிகளால் மிக்கு இருக்கிற ஸ்ரீ பெரிய திருவடி மேல்
கொண்டு எழுந்து அருளி

சரீர வியோக சமயத்திலே
எனக்கு அபேஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும்
நல் கதிர் முத்தம் வெண்ணகை செவ்வாய் -என்று முறுவலை யுடைத்தான
ஒளி மதி சேர் திரு முகத்தையும் காட்டி அனுபவிப்பித்து

அரங்கத்து உறையும் இன் துணைவனான தான் அர்ச்சிராதி மார்க்கத்திலே கொண்டு போய்-
நயாமி -யில் படியே வழி நடத்த மனனம் பண்ணி –
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-என்னும்படியே
அதுக்கு அந்தர பாவியாக வந்த ஹேயமான தேஹம் தன்னை தேவர்க்காகப் போக்கி அருளுவது எந்நாள்
அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து அருளிச் செய்து அருளுவீர்

பூர்ணே சதுர்தசே வர்ஷே -என்று நாள் அவதி இட்டு
பின்பு
ஆருரோ ஹரதம் ஹ்ருஷ்ட -என்று ஹ்ருஷ்ட யுக்தராய் இருந்தால் போலே
அது கொண்டு நான் ஹ்ருஷ்டனாக இருக்கலாய்த்து

அன்றிக்கே
சூழ்ந்து -என்கிறது-
ஸ்ரீ பெரிய பெருமாள் அவா அறச் சூழ்ந்தபடி யாகவுமாம்–

சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து -என்னும் இடத்துக்கு
விசாரித்து -என்று இறே வியாக்யானம் பண்ணி அருளினார்கள்-

—————————————

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-

த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக

தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –

அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -33-44-பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

அவதாரிகை –

கீழே
ப்ராசங்கிகமாய் வந்த மங்களா சாசனத்திலே -மண்டி அனுபவித்து
ப்ரா சாங்கிகம் பரி சமாப்ய பிரகிருதம் அனுசரதி -என்கிறபடியே மீளவும் பிரக்ருதத்திலே இறங்கி
சர்வ லோகத்தில் உண்டான சர்வ துரிதங்களும் போம்படி திரு வவதரித்து ரஷித்து அருளினால் போலே
அடியேனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி அடிமை கொண்ட ஸ்வாமி யானவரே
அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் யுண்டான தேக ஸ்திதி
தத் விமோசன காலாதி நியமங்களை எல்லாம் அறிந்து அருளும் சர்வஜ்ஞ்ஞரான தேவர்
அஜ்ஞ்ஞனான அடியேனை விலஷணமான தேசத்தில் ஆரோஹிப்பித்து அருள
திரு உள்ளமாகில் விஸ்மரித்து இருக்கிறதுக்கு ஹேது ஏது-என்று அவர் தம்மையே கேட்கிறார்-

இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் யான் இருப்பேன்
இன்னபொழுது உடம்பு விடும் இன்னபடி யது தான்
இன்ன விடத்தே எதுவும் என்னும் இவை எல்லாம்
எதிராசா நீ யறிதி யான் இவை யொன்று அறியேன்
என்னை இனி இவ் உடம்பை விடுவித்து உன்னருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறது என் பேசாய்
பேதைமை தீர்த்து எனை யடிமை கொண்ட பெருமானே –33

பேதைமை தீர்த்து-த்வத் சம்பந்த ஜ்ஞான சூன்யத்தை யாகிற மௌக்ர்யத்தைப் போக்கி

சேஷ பூதனான அடியேனை-வினையேனை உனக்கு அடிமை அறக் கொண்டாய் -என்கிறபடியே
சேஷத்வ அனுகுணமான தாஸ்யத்தை கொண்டு அருளின ஸ்வாமி யானவரே
இன்னம் எத்தனை காலாவதி இந்த ஹேயமான தேஹத்தோடே-இதில் பொருத்தம் அற்று இருக்கிற நான் இருப்பேன்
இன்ன காலத்தில் தேஹம் முக்தமாம்-இன்ன பிரகாரத்தில் இந்த தேக விமோசனம் இந்த ஸ்தலத்திலே
என்று சொல்லப் படுகிற இவை எல்லாம்-எதிகளுக்கு நாதரானவரே சர்வஜ்ஞ்ஞரான தேவர் அறிந்து அருள்வீர்
அஜ்ஞ்ஞனான நான் இவற்றில் ஏக தேசமும் அறியேன்-

ஆன பின்பு இத் தேகத்தோடு பொருத்தம் அற்று இருக்கிற என்னை
இனி தேவர் கிருபையாலே-இச் சரீரத்தை விடுவித்து
திவ்ய அலங்கார பரிபூரணமான பரம பதத்தில் ஏற்றத் திரு உள்ளம் உண்டாகில்
அநந்தரம்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்கிறபடியே
த்வரியாமல்-நிருத்யோகராய்-விஸ்மரித்து எழுந்து அருளி இருக்கிறதற்கு ஹேது ஏது
அத்தை அருளிச் செய்து அருளீர் –
தேவர்க்கு கிருபை யுண்டாய் இருக்க-விளம்ப ஹேதுவான சாதனம் இத்தலையில் இல்லையே இருக்க
கால விளம்பம் கார்யம் என் என்று கருத்து –
அமர்ந்து இருக்கிறது என் பேசாய் -என்றும் பாட பேதம்
நினைவுண்டேல் என்று
சித்தவத் கரிக்கறதாகவுமாம்-

—————————————————————

நமக்கு கிருபை யுண்டானாலும்-எத்தனை தயவான்களையும் நிர்க்குருணராம் படி பண்ணுவதான
உம்முடைய பிரபல பிரதி பந்தகங்கள் கிடந்தே என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு நினைவாக
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -என்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் தேவர்க்கு விதேயன் அன்றோ –
ஆகையாலே த்வத் அனந்யனான நான் பாப பலன்களை புஜியாமல் முக்தனாம் படி பண்ண வேணும் -என்கிறார் –

முன்னை வினை பின்னை வினை பிராரத்தம் என்று
மூன்று வகையான வினைத்தொகை யனைத்தும் யானே
என்னை யடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா நீ இட்ட வழக்கன்றோ சொல்லாய்
உன்னை யல்லது அறியாத யான் இந்த வுடம்போடு
உழன்று வினைப்பயன் புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ
என்னுடைய விரு வினையை இறைப் பொழுதின் மாற்றி
ஏராரும் வைகுந்தத்து ஏற்றி விடாய் நீயே —–34-

பூர்வாகம் உத்தராகஞ்ச சமாரப்தமகம்ததா -என்கிறபடியே
பூர்வாகம் உத்தராகம் ஆரப்தம் -என்று சொல்லப் படுகிற வர்க்கத் த்ரயமானபாப சமூஹங்கள்
ஆன எல்லாவற்றையும்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று
சஹாயாந்தர நிரபேஷனாய்க் கொண்டு – சர்வஜ்ஞத்வ சர்வசக்த்வ விசிஷ்டனான நானே
வாத்சல்யாதி குண விசிஷ்டனான என்னை-அநந்ய சரணராய் சரண வரணம் பண்ணின பிரபன்னர் ஆனவர்கள்
தங்களுக்கு அப்படிப் பட்ட அகில பாபங்களையும் சவாசனமாக போக்குவன் என்று அருளிச் செய்த
செம்மை யுடைய திருவரங்கரான ஸ்ரீபெரிய பெருமாள் –
எதிகளுக்கு நாதர் ஆனவரே -வச்யஸ் சதாபவதிதே -என்கிறபடியே த்வத் அதீனர் அன்றோ –
இவ்வர்த்தம் யதார்த்தம் என்னுமது தேவர் தாம் அருளிச் செய்யல் ஆகாதோ
இப்படி ஈஸ்வர வசீகாரத்தை உடைய தேவரை ஒழிய
வேறு ஒரு ரஷகாந்தரம் அறியாதே-அநந்ய கதியாய் இருக்கிற நான்
இந்த தேஹத்தோடே பொருந்தி அதுவே யாத்ரையாக இருந்து
தத் கார்யமான பாப பலங்களை புஜிக்க வேணும் என்ற ஒரு நிர்பந்தம் உண்டோ
பாபங்களுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு-இப்படியான பின்பு என்னாலே அனுபாவ்யமாய் இருக்கிற பிரபல கர்மங்களை
கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -என்கிறபடியே
ஷண காலத்திலே சவாசனமாகப் போக்கி நான் தரைக்கிடை கிடவாமல் ஏர்கொள் ஸ்ரீ வைகுந்த மா நகரத்திலே
த்வத் ஏக பரமாய் அற்ற பின்பு ஏற்றிவிட்டு அருளீர் –

ஏர் -அழகு
ஆர்தல் -மிகுதி-

——————————————-

அடியேனுடைய சகல பிரதிபந்தகங்களைப் போக்கி ரஷித்து அருளுகையில் யத்னம் பண்ணி அருளுகிற தேவர்
கிருபையாலே நித்ய கைங்கர்யம் கொண்டு அருள சங்கல்ப்பித்து இருக்க
அத்தையும் அதிகரித்துப் -அதிகிரமித்து -போவதான என்னுடைய
ருசி விரோதியாய் இருக்கிற இந்த்ரிய வியாபார வஸ்யதைக்கு அடியான பாபங்களைப் போக்கி
த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை யபிமாநித்து அருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீ இருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன்
வல் வினையை மாற்றி யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத் தாழ்வானும் அவர் செல்வத்
திரு மகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளானது இத்தனையும் சேரவுள வென்னைத்
திருத்தி யுயக் கொள்ளும் வகை தேரும் எதிராசா—-35-

கூர நாத பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம் அத்யாப்ய சங்குசிதமேவ -என்கிறபடியே
ஜ்ஞான பரிபூர்ணரான ஸ்ரீ கூரத் ஆழ்வானும்
அவர் திரு வயிற்றிலே அவதரிக்கும் படியான ஸ்ரீயை உடையராய் அது அடியாக ஸ்ரீ ரெங்கராஜ கமலா பதலாளி தத்வம் –
என்னும்படி ஸ்ரீ மத் குமாரரான ஸ்ரீ பெரிய பட்டர் தாமும்
ஸ்வ ஸ்வ நைச்யங்களை – புத்வாசநோச -என்றும் -அதிகிராமன் நாஜ்ஞ்ஞம்-என்றும்
இத்யாதியாலே அருளிச் செய்த பாப சமூஹங்கள் ஆனவை ஓன்று ஒழியாமல் எல்லாம் சேர யுண்டான என்னை
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்னும்படி
திருத்தி உஜ்ஜீவிக்கப் பண்ணி கொண்டு அருளும் பிரகாரம் சிந்தித்து அருளுமவரே –
தேவருடைய கேவல கிருபையாலே
அடியேனை அங்குற்றைக்கு அனன்யார்ஹனாய் ஆகும்படி அபிமானித்து அருளி
நிரந்தரம் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள தேவர் திரு உள்ளம் பற்றி இருக்க
அத்தை அறிய ஒட்டாத அஜ்ஞ்ஞானத்தாலே-சப்தாதி போக ருசிர் அந்வஹமே ததேஹா -என்கிறபடியே
இந்தரிய பரிச்சின்னங்களான விஷய போகங்களில் வாஞ்சையைப் பண்ணும்
என்னுடைய வ நிவர்த்யமான பிரபல கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -என்கிறபடியே
பிராப்த சேஷியானதேவர் விஷயத்தில் மனசை வைக்கும்படி பண்ணி அருள வேணும்
யதான்வயமாக யோஜிக்கவுமாம் –

———————————————————–

மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன் வல்வினையை மாற்றி -என்ற பின்பு
அவை நடையாடக் காண்கையாலே
அத்யந்த ஹேயமாய் இருக்கிற விஷய அனுபவ சுக வாஞ்சையானது
அடியேனுடைய மனசை பலாத்காரத்தோடே தான் மேலிடா நின்றது
அதுக்கு ஹேது வாசன கர்மங்கள் இன்னது என்று அறியேன் -என்கிறார்

வாசனையில் ஊற்றோமோ மாளாத வல்வினையோ
ஏது என்று அறியேன் எதிராசா -தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து—36-

இவ்வாத்மாவுக்கு அத்யந்தம் பொல்லாங்கு தானாய் இருக்கிற ஐங்கருவி கண்ட இன்பம் -என்னும்படி
இந்த்ரிய பரிச்சின்னமான விஷய ஸூகங்களில் அபேஷை–ஹரந்தி பிரசபம் மன -என்கிறபடியே
தேவர் திருவடிகளைப் பற்றி இருக்கிற அடியேனுடைய மனசை மேல் விழுந்து வந்து பலாத்காரத்தோடே
விஷயங்களில் மூட்டுவதாக தான் மேலிடா நின்றது –
இந்த ருசிக்கு ஹேது
துர்வாசநாத் ரடிமதஸ் ஸூ க மிந்த்ரியோத்தமம் ஹாதும் நமே மதிறலாம் வரதாதிராஜா -என்கிறபடி
அநாதி பாப வாசனையிலே பற்றி இருக்கிற தார்ட்ய்யமோ –
அன்றிக்கே
மதியிலேன் வல்வினையே மாளாதோ -என்னும்படி
அதுக்கும் அடியாக அனுபவ விநாச்யம் ஆதல் பிராயச் சித்த விநாச்யம் ஆதல்
அன்றிக்கே
இருப்பதான என்னுடைய பிரபல கர்மமோ-இது ஏது என்று அறிகிறிலேன்-

இதுக்கு நிதானம் ஏது என்று அறிந்து-அத்தை தேவரே நிவர்ப்பித்து அருள வேணும் என்று கருத்து –
அடருகை -மேலிடுகை-

அருளாலே
வாசனை
என்கிற இரண்டு பாட்டாலும் ஐம்புலன் என்று விஷயங்களைச் சொல்லுகிறது –

—————————————————————–

நீர் இந்த்ரியங்கள் உடைய தோஷத்தை அனுசந்தித்து பதறுகிறீர்
நாம் தாமும் அவற்றின் கையில் காட்டிக் கொடோம் காணும்
இப்படி அஞ்சுகிற யும்மை சம்சாரத்திலே வைக்கிறது
ஆர்த்தி -அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்கியம் -என்கிறபடி
இத்தாலே நிறம் பெறுவதான ஆர்த்தி அதிகாரம் பிறக்கும் தனையும் காணும் ஆகையால்
அது பிறந்த பின்பு உம்முடைய அபேஷீதத்தை செய்து தலைக் கட்டுகிறோம் காணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு கருத்தாக
இவ்வளவாக இல்லாத அதிகாரம் இனி மேல் என்ன உண்டாகப் போகிறது
இந்த அதிகார சம்பத்தியும் உண்டாக்கி அபேஷித சம்விதானத்துக்கு விரோதியான பாப சமூஹத்தை சேதித்து
பிராப்ய தேசத்தை பிராப்பியாததுக்கு ஹேது ஏது என்கிறது-

இன்றளவும் இல்லாத வதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம் சொல்லாய் எதிராசா -குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்
தெனைக் கடுக வேற்றாதது என் —37-

இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய் -என்னும்படியான இன்றளவும் இல்லாத அதிகாரம்
இனிமேல் என்று உண்டாவதாம் – இப்போது உண்டாகாததோ இனி மேல் உண்டாகிறது
இத்தை தேவர் அருளிச் செய்ய வேணும்
இப்படி ருசி விரோதியாய்-ஒன்றாலும் நசியாமை இருப்பதான
தொன் மா வல்வினைத் தொடர் -என்னும்படியான
பாப அனுபந்தத்தை சேதித்துப் பொகட்டு-
மேலை வைகுந்தத்து இருத்தும் -என்கிறபடி
சர்வோத்தரமான தேசத்திலே-அதிலே அபேஷை உடைய அடியேனை
அஜ்ஞ்ஞாநாவஹாமான சம்சாரத்திலே நின்றும்-சீக்ரமாக ஆரோபியாததற்கு ஹேது ஏது –
என்னாலே எல்லாம் அசக்யமாய்-தேவராலே எல்லாம் சக்யமாய் இருந்த பின்பு
தாழ்கைக்கு ஒரு ஹேதவாந்தரம் இல்லை என்று கருத்து-

——————————————————-

இன்று அளவும் இல்லாத அதிகாரம் -என்றத்தை
தார்கிக லௌகிக சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு
தத்தேது பூர்வமாக அத்தை அருளிச் செய்கிறார் –

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ எதிராசா -நெஞ்சம்
உன்ன தாள் ஒழிந்த வற்றியே யுகக்க இன்றும்
அனுதாபம் அற்று இருக்கையால் —38-

எதிகளுக்கு நாதர் ஆனவரே
தீ மனம் -என்னும்படி சூத்திர விஷயங்களிலே மண்டி இருக்கிற மனசானது
யாதானும் பற்றி நீங்கும் -என்கிறபடியே
பிராப்த சேஷியான தேவருடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஒழிந்த
அப்ராப்த விஷயங்களையே பற்றி அனுமோதிக்க
இப்படி அப்ராப்த மான விஷயத்தை விரும்புவதே என்று அனுதபிவிக்க வேண்டும்படியான
தசையை பிராப்தமாய் இருக்கிற இன்றும்-அனுதாப சூன்யமாய் இருக்கையாலே
தஸ்மாத் பால்யே விவேகாத்மா -என்கிறபடியே
விவேக அங்குர யோக்யமான பஞ்ச வர்ஷத்தில் அஜ்ஞ்ஞரானவர்கள்
தத் பரிணாம தசையான ஐம்பது வயசிலும் விவேக சூன்யதையாலே
அஜ்ஞ்ஞர் ஆவார்கள் என்று சொல்லுகிற இந்த லௌகிக சப்தம் எனக்கே அம்சமாயிற்றோ-

ஆகையால்
ஸ்வ ஹிதத்தில் அஜ்ஞ்ஞனான எனக்கு சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஒரு போக்கடி கண்டு அருள வேணும் என்று கருத்து –

நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று பாடமான போது
அஞ்சில் அறியாதாரை ஐம்பதிலும் அறியாதார் என் சொல் எனக்கோ
எதிராசா
இன்று அனுதாபம் அற்று இருக்கையாலே நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே யுகக்கும் -என்றும்
இப்படி யோஜிக்கக் கடவது –

————————————

நீர் –
உன் தாள் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று அவர்க்கு அந்யமாய்
அப்ராப்தங்களாய் இருக்குமவற்றையே பற்றினால்
விரசமாய் இருக்கிற யும்மை அவர் எப்படி அங்கீ கரிக்கப் புகுகிறார் என்று
பார்ஸ்வச்தர்க்கு அபிப்பிராயமாக ஆஸ்ரயண தசையில் குண ஹீநனாய்
அத்தாலே விரசனாய் இருக்கிற என்னுடைய தோஷத்தை போக்யமாக விரும்பி
அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார்
என்னை உபேஷித்து அருளார்
என்றுமத்தை ஸ் நிதர்சனமாக -அருளிச் செய்கிறார் —

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் பொகடாதே புசிக்கும் தன்மை போல் -தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழாரே எதிராசர்
அன்று அறிந்து அங்கீ கரிக்கையால்—-39-

வேம்பும் கறியாகுமேன்று–என்கிறபடியே
சரசமாம் அவற்றை உபேஷித்து அத்யந்தம் கைப்பை யுடைத்தாய்
விரசமாய் இருப்பதான வேப்பிலை தொடக்கமாய் உள்ள தத் சம்பந்த பதார்த்தங்களை
சோற்றுக்கு உபதம்சமாக ஆதரித்து புஜிக்குமவர்கள்
அது விரசமாய் கைத்தது என்று அத்தை விரும்பிப் புஜிக்கும் தாங்கள் உபேஷியாதே புஜிக்கும் ஸ்வ பாவம் போலே
அங்கீ கார சமயத்திலே தோஷ யுக்தன் என்று அறிந்து அத்தைப் போக்யமாகக் கொண்டு
அங்கீ கரித்து அருளுகையாலே
ஸ்ரீ எம்பெருமானார்
இப்போது அவன் இவன் தோஷ யுக்தன் என்று உபேஷித்து அருளார் –

நத்யஜேயம் -என்னும்படி
இது ஓர் அங்கீகார த்ராட்யம் இருந்த படி என் என்று கருத்து-

————————————————————

உம்முடைய தோஷம் பாராதே அங்கீ கரித்தோம் ஆகில்
மேல் உள்ளதும் நாமே க்ரமத்திலே செய்கிறோம் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
த்வத் அனுபவ யோக்யமான காலத்தை எல்லாம் வ்யர்த்தமே போக்கி அதுக்கு அசலான சம்சாரத்தில் இல்லாமல்
அனுபவத்துக்கு பாங்கான தேசத்தில் சேர்த்து அதுக்கு இடைச் சுவர் தள்ளிப் பொகட வேணும் என்கிறார்-

அவத்தே பொழுதை யடியேன் கழித்து இப்
பவத்தே இருக்குமது பண்போ -திவத்தே யான்
சேரும் வகை யருளாய் சீரார் எதிராசா
போரும் இனி இவ் வுடம்பைப் போக்கு–40-

தேவர் உடைய அனுபவ கைங்கர்யங்களுக்கு அடைத்த விலஷணமான காலம் எல்லாம்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேன்
அப்படிப் பட்ட அந்த பொழுதைப் பழுதே போக்கி-விரோதியாய் இருக்கிற சம்சாரத்திலே பொருந்தி இருக்கிறது
தேவர் கிருபா ஸ்வ பாவத்துக்குப் போருமோ
ஆகையால்-கைங்கர்ய வர்த்தகமாய் பரம்தாமம் என்னும் திவம் -என்னும்படியான
தேசத்திலே அபேஷை யுடைய நான்
கெடு மரக்கலங்கரை சேர்ந்தால் போல் சேரும் பிரகாரம் இரங்கி அருள வேணும்
சமஸ்த கல்யாண குண பரி பூரணராய் எதிகளுக்கு நாதர் ஆனவரே
சம்சாரத்தில் சிறையிருப்பு போரும் –
இனி பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் விபரீத ஜ்ஞ்ஞாந ஜனனியாய்
ஆத்மாவோடு பொருந்தி இருக்கிற இந்த தேஹத்தை போக்கி அருள வேணும்-இதுவே புருஷார்த்தம் –

பண்பு -ஸ்வ பாவம்
அடியேன் இப்பவத்தோடே இருக்குமது பண்போ -என்று
கீழோடு கூட்டவுமாம் –

——————————————–

ஆனாலும் உம்முடைய தோஷ பூயஸ்வத்தைப் பாராதே அரும் தேவைகளைச் செய்யும்படி
சொல்லக் கூடும் இத்தனையோ-என்னில் –
அசத்ருச அபராதனான அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாக வரும்
அபராதங்கள் எல்லாம் பொறுத்து ரஷிக்குமவரான பின்பு
சகல ஜீவ லோக உஜ்ஜீவன அர்த்தமாக திரு வவதரித்த தேவர்
அதி சபலனான எனக்கு தயை பண்ணி ரஷிக்க வேணும் என்கிறார் –

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் வுண்டோ
உனைப் போல் பொறுக்க வல்லார் யுண்டோ -அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மா முனிவா
ஏழைக்கு இரங்காய் இனி –41-

நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு -என்கிறபடியே-
அபராதம் பண்ணுமவர்களில் வைத்துக் கொண்டு
மாத்ருசா அபராதக்ருத்துக்களாய் இருக்குமவர்கள் இந்த லோகம் எல்லாம் தேடித் பார்த்தாலும் கிட்டுமோ
அருளுக்கும் அக்தே புகல் -என்கிறபடியே
அபராத சஹரில் வைத்துக் கொண்டு தேவரைப் போலே சஹிக்க வல்லார்-உபய விபூதியிலுமுண்டோ –
சகல ஜீவ லோகமும் உஜ்ஜீவித்து வாழும்படியாக திரு வவதரித்து அருளி
அவர்கள் ரஷணத்தில் மனனம் பண்ணி அருளுகிற ஸ்ரீ எம்பெருமானாரே இப்படிக் கை கழிந்த பின்பு
பற்றினத்தை விடாதே சபலனாய் இருக்கிற எனக்கு தயை பண்ணி அருள வேணும் –
ததஹம் த்வத்ரு தேனநா தவான் இத்யாதி –

———————————————–

இப்படி
ஆகிஞ்சன்ய-அநந்ய கதித்வங்களை ஆவிஷ் கரிக்கும் அதிகாரிகளைப் பெற்றோமே
என்று உகந்து எதிராச மா முனியான ஸ்ரீ எம்பெருமானார்
இவருக்கு-இனிப் பெற வேண்டும் பேறுகளை மனனம் பண்ணுவது
இவருடைய பிரேம ஸ்வபாவத்தைக் கடாஷித்துக் கொண்டு இருப்பதாக நிற்க –
அது பற்றாமல்
அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பயக்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம்புலன்கள் மேலிட்டு அரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலமிட்டால்-பின்பவை தாம்
என்னை யடராமல் இரங்காய் எதிராசா
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ—42-

நாராயானா ஒ மணி வண்ணா என்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஓலமிட்டால் போலே
உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி -இத்யாதிப் படியே
பஞ்ச இந்த்ரியங்களும் ஆக்கிரமித்து ஸ்வ கிங்கரனாம்படி ஸ்வ ஸ்வ விஷயங்களை காட்டு காட்டு என்று
தொடர்ந்து பாதிக்கும் தசையிலே
தேவர்க்கு சேஷ பூதனான அடியேன் ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் மடுவின் கரையிலே
க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்று
முழு வலி முதலை நீருக்கு உள்ளே இழுத்துக் கொண்டு நலியும் போது
சிந்தயத்தரிம் என்று சிந்தித்து-நாராயணா ஒ -என்று ஓலமிட்டால் போலே
சகல ஆபன் நிவாரணமான தேவர் திருவடிகளை ஸ்மரித்து -ராமானுஜா ஒ என்று கூப்பிட்டால்

அநந்தரம்
அப்படி பாதங்கள் ஆனவை அடியேனை மேவிவிடாமல் தயை பண்ணி அருள வேண்டும்
எதிகளுக்கு நாதரானவரே தேவரை ஒழிய எனக்கு ரஷகர் ஆவார் யார்
இனி வேறுண்டோ
வேறு ரஷகாந்தகர் இல்லை யாகையாலே தேவரே ரஷித்து அருள வேணும் என்று கருத்து –

உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து
வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்-என்னவுமாம் –

———————————————

இரங்காய் எதிராசா -என்று அவரை வெறுக்கிறது என் –
பிராப்ய பூமியில் பிராவண்யமும்-த்யாஜ்ய பூமியில் ஜூஹுப்ஸ்யையும்
அதிகாரிக்கு அவசியம் அபேஷையாய் இருந்தது –
அவை இரண்டும் இல்லாத நமக்கு
அசத்ருசமமான தேசத்தை அவர் எப்படி தந்து அருளுவர் என்று அதில் நின்றும் நிரசராகிறார் –

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசை இல்லை -இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திரு நாடு உகந்து —43-

கொடு வுலகம் காட்டேல் -என்னும்படியான
இந்த த்யாஜ்ய பூமியில் அடிக் கொதிப்பு அல்பமும் இல்லை –
வான் உலகம் தெளிந்தே என்று எய்வது -என்னும்படியான
அந்த பிராப்ய பூமியை பிராபிக்க வேணும் என்கிற பிராவண்யமும் இல்லை –
இப்படி அபேஷிதங்களாய் இருக்கிற இரண்டிலும் அந்வயம் அற்று இருக்கிற நமக்கு
ஜனகரான ஸ்ரீ எம்பெருமானார் அசத்ருச வைபவத்தை யுதைத்தான
தெளி விசும்பு திரு நாடு -என்கிற திரு நாட்டை உகப்புடன் எப்படித் தான் உபகரித்து அருளுவர் –

————————————————————–

இந்த வுலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த வுலகில் போகை ஆசை இல்லை -என்று அனுசந்தித்தவர்
நம் அளவில் இதுவே இருந்தது –
இனி லௌகிகர் அளவு என் என்றவர்கள் இடத்திலே கண் வைக்க
அவர்கள் படி சாலத் தண்ணியதாய் இருந்தவாறே
இப்படி இருப்பது
இவர்கள் பாபங்களைச் செய்யும் பிரகாரம் என்றதுக்கு நொந்து அருளிச் செய்கிறார் –

மா காந்த நாரணர் வைகும் வகை அறிந்தோருக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயமற்று இருந்து
செய்வர் கடாம் பாவத்திறம்—44-

இதில்
செல்வ நாரணன் -என்கிறபடியே
ஸ்ரீயகாந்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நாராயணத்வ பிரயுக்த சம்பந்தம் அடியாக
சமஸ்த சேதன அசேதனங்களிலும் அந்தர் பஹிர் வியாபித்து இருக்கிறபிரகாரத்தை அறிந்த
ஜ்ஞாதாக்களுக்கு
நாராயண பரோஜ்யோதி என்றும்
அவன் என் இருள் தான் அற வீற்று இருந்தான் -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்-சொல்லுகிறபடியே
எங்கும் உளனாய்-எங்கும் வெளிச் செறிப்பாய் இருக்கையாலே
நிஷித்த பிரவ்ருதிகளுக்கு தேட்டமான இருளும் ஏகாந்தமும் அற்று இருக்கையாலே
அவர்களுக்கு ஒருமை பட்டு வருத்தம் உற்று இருக்கிற ஏகாந்தமும் இல்லை –
தர்சன யோக்யமும் அன்றிக்கே-ஆவரணாகரமாய் ஆவரித்து இருக்கிற அந்தகாரமும் இல்லை
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்ய கச்சத் ரஹஸ் சதா
யஸ் ஸ்வ தார ரதௌ சாபி கோவிந்தம் தா முபாஸ்மஹே –

இவர்கள் படி அன்றிக்கே
மோஹாந்த தமஸா வருதா -என்னும்படி மோஹாந்தராய்
முன்னாடி தோற்றாதே இருக்குமவர்கள்
அந்தர் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீச மந்த புரஸ் ஸ்தித மிவாஹா மவீ ஷமாண -என்கிறபடியே
நிரவதிக தேஜோ மயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் எங்கும் வியாபித்து இருக்கும் பிரகாரத்தை
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காண மாட்டாதே
இவ்விடம் ஒருவரும் இல்லாத ஏகாந்தம்
இவ்விடம் தேஜ பிரகாரம் இல்லாத இருள்-என்று நிர்பயராய் இருந்து –
தச்யர்ந்திகேதவம் வ்ரஜினம் கரோஷி -என்கிறபடியே
பாப சமூஹங்களை அஜ்ஞ்ஞாரான தாங்கள் செய்யா நிற்பார்கள் –

இவர்கள் படி இது வாவதே -என்று கருத்து –

வைகல் -சொல்லலும் -இருத்தலும்
திறம் -சமூஹம்
இப்பாட்டுக்கு அடி உக்த்ய அனுஷ்டங்களாய் இருக்கும்-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -29-32-பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

இனி
தம்முடைய பிராப்தி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ பாஷ்யாதிகளான ஸ்ரீ ஸூக்திகளாலே பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளின
விஜய பரம்பரைகளைச் சொல்லி அத்தால் யுண்டான வீர ஸ்ரீக்கு மங்களா சாசனம்
பண்ணி அருளுகிறார் –

சாறுவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியர் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்து அறமிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாயவாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே—-29–

பிரத்யஷம் ஏகம் சார்வாக
குருமதம் -பிரபாக மதம்
குமாரிலன் மதம்-பர்ட்டமதம்

ப்ரத்யஷம் ஏகம் சார்வாக -என்கிற சார்வாக மதத்தை ஸ்வ ஸூ க்திகளாகிற அக்னி ஜ்வாலையாலே
பச்ம சாத்தாம் படி பண்ணி –
சமணர் ஆகிற செடிக்கு அப்படியே அக்னி ப்ரேஷேபத்தை பண்ணி
சாக்யர் ஆகிற சமுத்திரத்தை ஸ்வ ஸூக்தி கிரணங்களாலே சோஷிப்பித்து
அதிகமாய் இருப்பதான சாங்க்ய கிரியை வாக் வஜ்ரத்தாலே சேதித்திட்டு
பிரதிகோடிகளாய் வாதம் பண்ணுகிற காணாத வாதிகளுடைய வாக்கை ஸ்வ வாக்காலே பக்நமாம் படி பண்ணி –
மிகவும் உத்ததரராய் மேல் வந்த பாசுபதர் பாணாசுர யுத்தத்திலே ருத்ரன் சபரிகரமாய் ஓடினால் போலே
தத் பக்தர்களான இவர்களும் சீறு பாறாக சிதறி யோடும் பிரகாரமாக வாதம் பண்ணி அருளினவராய்
ஏதேனும் ஒன்றை ஜல்ப்பியா நிற்பதாய் பெருத்து இருப்பதான
பிரபாகர மதத்தோடு-யுச்சாரமாய் இருப்பதான பாட்டமதம் என்கிற அவற்றின் மேலே
க்ரூரமாய் இருப்பதான தர்க்க சரத்தை பிரயோகித்த பின்பு
எங்கும் பரந்து இருக்கையாலே
மயிகள் இருந்த இடத்தில் சென்று கிட்டி-வாதில் வென்றான் நம் இராமானுசன் என்கிறபடியே அவர்களை ஜெயிதிட்டு
மிகைத்து வாதத்திலே வருகிற பாஸ்கரன் உடைய மதமாகிற அம்மதத்தை ஒருவரும் நடவாதபடி நிரோதித்து
கழிய மிக்கு இருந்த யாதவ மதத்தை மாண்டு போம்படி பண்ணின
ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இதர தர்சன நிரசனத்தாலே வந்த மகா வீரம்நாள் தோறும் அபி விருத்தமாய் வாழ வேணும் –

கொடி எறிந்து போய் -என்று
அவ்வளவிலே நில்லாதே கை கழிந்து இருக்கிற பாரிப்பே யாகவுமாம்-

வந்த வாதியர் -என்றும் பாட பேதம் சொல்வர் –

—————————————————–

இனி
இதர நிரசனம் பண்ணி அருளின ஸ்ரமம் தீர ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ திருவாய் மொழி
முதலான பகவத் விஷயங்களை வ்யாக்யாநித்துக் கொண்டு எழுந்து அருளிய இருப்பு தமக்கு
ஆகர்ஷகமாய் இருக்கையாலே ஸ்ரீ பாதாதி கேசமாக அனுபவித்து இவை எல்லாம் தனித் தனியே
நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே–30-

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
கல்யாண குணங்களாலே பரிபூரணமான ஸ்ரீ எம்பெருமானார் உடைய பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடித் தாமரைகள் நித்ய மங்களமாய் இருக்க வேணும்

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
கடிப் பிரதேசத்திலே தரித்த ஆதித்யனை பரிவேஷித்தால் போலே மிக்க சிவப்பை யுடைத்தான
காஷாய வஸ்திரம் நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அழகால் நிறைந்த சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹம் சர்வ காலத்திலும்
நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
வைதிகோத்தமர் என்னுமத்தை நிறம் பெறுதுமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படார்ந்தால் போலே
திரு மார்பிலே பிரகாசிக்கிற ப்ரஹ்ம சூத்ரம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இணைத் தோள்கள் வாழி –
பொற் கற்பகத்தின் சாகைகளாய் அதற்கு மேலே மோஷ பிரதான தீஷிதங்களாய்
சம்சார சாகரத்திலே மூழ்கி நோவு படுகிறவர்களை உத்தரிக்கிற சக்தியை யுடைத்தாய்
இப்படிக் கொடுக்கவும் எடுக்கவும் மாம் படியான குணத்தாலே பணைத்து நெடிதாய் இருப்பனவாய்
அதுக்கு மேலே வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற
பாஹு யுகங்கள் ஆனவை நித்ய மங்களமாய் இருக்க வேணும்

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அனுபாவ்யமாய்-பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்
அநாஸ்ரிதர் தர்சனத்தில் அநாயசத்தாலும்-அசங்குசிதமாய் -நிர்மலமாய் சோபாவஹமாய்
இருக்கிற திரு முக ஜ்யோதிஸ் ஆனது நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் –

தூ முறுவல் வாழி
ஆஸ்ரித ரஷணத்தால் உண்டான ஆனந்தத்தாலும்-பகவத் அனுபவ பிரகர்ஷத்தால் உண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிக்கிற
பரிசுத்தமான சிறு நகையும் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும் தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும் எப்போதும் கண்டு களிக்குமதாய்
காருண்ய அம்ருத பிரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற
த்வந்த்வ அரவிந்த சுந்தரமான திருக் கண்கள் அழகு மாறாமல் நித்யமாக இருக்க வேணும்

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
கீழ்ச் சொன்ன எல்லா வற்றையும் நிறம் பெருத்துவனவாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீக்கு வர்த்தகமாய் இருப்பதாய்
பொன் மலையின் பரிசரம் எங்கும் வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே
சிவந்த திருமேனியில் வெள்ளியதான த்வாதச ஊர்த்த்வ புண்ட்ரத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இனி திருப்போடு எழில் ஞான முத்தரை வாழியே
பத்மாஸ்தனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதார்த்த பிரகாசகமாய் இருக்கிற
பரதத்வ போத முத்தரை யானது நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

—–

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி-வாழியே-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப ரூப குணங்களோடு வாசி அற எல்லாவற்றாலும் பரி பூரணராய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானாருடைய
அமரர் சென்னிப் பூ -என்னுமா போலே
இராமானுசன் அடிப் பூ என்று சொல்லப் படுமதாய்-அத ஏவ பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடிப் போதுகள்
போது செய்யாமல் ஏவம் வித ஆகாரத்தோடு நித்தியமாய் செல்ல வேணும் —

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
அதுக்கு மேலே ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் யுண்டாகையாலே –
சீதா காஷாய வாசி நீ-என்னும்படி -பாரதந்த்ர்ய அனந்யார்ஹத்வ ஸூசகமாய்
திருவரை பூத்தால் போலே திருவரைக்கு அலங்காராவஹமாய்
ஆதித்யனைப் பரிவேஷித்தால் போலே திருவரையில் சூழச் சாற்றி
மிக்க சிவப்பை உடைத்தான திருப் பரி வட்டமும் நித்யமாய்ச் செல்ல வேணும்

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர்க்கு ஸூ பாஸ்ரயமாய் சௌந்தர் யாதிகளாலே மிக்கு
புஷ்பஹாச ஸூ குமாரமாய்
ரூபமே வாஸ்யை தன மஹிமான மா சஷ்டே-என்கிறபடியே
பரமாத்மராகம் புறம்பு ஒசிந்தால் போலே சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹமும்
சர்வ காலத்திலும் -நித்யம் நித்யா க்ருதிதரம் -என்னும்படி நித்ய மங்கள மாகச் செல்ல வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
அதுக்கு மேலே வைதிக உத்தமர் என்னுமத்தை நிறம் பெறுத்துமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படர்ந்தால் போலே
திருமார்பிலே பிரகாசிக்குமதாய்
ப்ரஹ்ம ஸூ தர வ்யாக்ருத்வத் யோதகமாய் இருப்பதான
ப்ரஹ்ம ஸூ தரப் புகரோடேநித்தியமாய் இருக்க வேணும் –

இணைத் தோள்கள் வாழி –
அதுக்கு அநந்தரம்-இரண்டு இடத்திலும் அளவாய்
பாஹூக் சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான -என்கிறபடியே
சர்வருக்கும் விஸ்ராந்த சாகியான-பொற் கற்பகத்தின் யுடைய சாகைகளாய்
அத ஏவ
மோஷ பிரதான தீஷிதங்களாய்-விசேஷித்து நிமக்ன உத்தரண சக்தியை யுடைத்தாய்
இப்படி கொடுக்கவும் எடுக்கவும் மாம்படியான குணத்தாலே-பணைத்து-நெடிதாய் இருப்பவனவைகளாய்
தோளார் சுடர்த் திகிரி சங்குடைச் சுந்தரன் -ஞான சாரம் -என்னும்படி
தோர்மூலோல்லாஸி சக்ராம்பு ஜங்களை யுடைத்தாய்
ஆகர்ஷகமான ஆழ்வார்களாலே அங்கிதமாய் இருப்பவனவைகளாய்
அதுக்கு மேலே வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற யுகள பாஹூக்கள் ஆனவை
உக்தமான குணங்களோடு நித்யமாக செல்ல வேணும்-

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அதுக்கு மேலே ப்ரஹ்ம வித சௌம்யதே முகம்பாதி -என்றும்
முகச் சோதி மலர்ந்ததுவோ -என்றும் சொல்லுகிறபடி அனுபாவ்யமாய்
பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்-அநாஸ்ரித்த தர்சனத்தில், அநாயசத்தாலும்
அசங்குசிதமாய்-நிர்மலமாய்-சோபாவஹமாய் இருக்கிற முக ஜ்யோதிஸ் ஸூம் நித்தியமாய் செல்ல வேணும்-

தூ முறுவல் வாழி –
அதுக்கு மேலே-ஸ விலாச ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்னும்படி ஒரு திரு முகமாய் சேர்ந்து
அந்த முக பத்மத்தினுடைய விகாசம் என்னும்படியாய்-
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே
ஆஸ்ரித ரஷணத்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பகவத் அனுபவ பிரகர்ஷ த்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிப்பிக்கிற
சாருஹாசத்தால் யுண்டான சந்த்ரிகையைப் பிரவஹிக்கிற ஸூ ஸ்மிதமும் இப்படியே
என்றும் உளதாய் இருக்க வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
அதுக்கு மேலே ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்-தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும்
எப்போதும் கண்டு களிக்குமதாய்-கருணாம்ருத ப்ரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற தவந்த அரவிந்த சுந்தரமான திருக் கண்கள்
செவ்வி மாறாமல் நித்யமாகச் செல்ல வேணும் —

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி –
கீழே உக்தங்களான இவை எல்லா வற்றையும் நிறம் பெறுத்துமவையாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு வர்த்தகமாய் இருப்பதாய்-பொன் மலையின் பரிசரம் எங்கும்
வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே சிவந்த திரு மேனியில் வெள்ளியதாய்
ஊர்த்த்வ தாஸ்ரயண ஸூசித சக்தியை யுடைத்தான -த்வாதச ஊர்த்த்வ புண்டர தாரணத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்யமாக செல்ல வேணும்-

இனி திருப் போடு எழில் ஞான முத்தரை –
கீழே உக்தமான எல்லாவற்றுக்கும் அதிஷ்டையாய் இருந்த அந்த அதிஷ்டான சக்தியாலே
குத்ருஷ்டிகளாகிற குறும்பர் அறுமபடியாகவும்
ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாயும்-கேவல பகவத் இச்சையாலே
வையம் மன்னி வீற்று இருந்து -என்னும்படி வ்யாவருத்தி தோற்ற
ஹம்ச சமூஹமத்யே ராஜ ஹம்சமானது சாசமாக இருக்குமா போலே
பரம ஹம்சரான தாமும்-சம்சேவிதா -இத்யாதிப் படியே ஸ்ரீ ராமாநுஜார்ய வசகராய்
ஸ்ரீ இராமானுஜனைத் தொழும் பெரியோராய் இருக்கிற முதலிகள் எல்லாரும் சேவித்து இருக்க
இவர்கள் நடுவே
பத்மாசன உபவிஷ்டம் பாத த்வபோத முத்ரம் -என்னும்படி
பத்மாசனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதாந்தார்த்த பிரகாசகமாய்
உன்நித்ர பத்ம ஸூபகமாய் இருக்கிற ஜ்ஞான முத்தரை யானது காதாசித்கம் அன்றிக்கே
சதா தர்சன யோக்யதாம் படி வாழக் கடவதாக வேணும்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -என்னக் கடவது இறே –

தேராருதுய்ய செய்ய முகச் சோதி -என்றும் பாடம் சொல்லுவர்
தோராத –

ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் -என்னுமா போலே
சீராரும் -என்கிறத்தை திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்

ஸ்ரீ எதிராசர் உடைய திருவடிகள் ஆகையாலே
பார்த்திவவய யஜ்ஞாஞான் விதமாய் இறே இருப்பது-

————————————————————————-

அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் ஆகையாலே மீளவும் ஆதர அதிசயத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளினமைக்கும்
மற்றும் லோக உபகாரகங்களாக செய்து அருளினவை எல்லாவற்றுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார்
கீழ் பாட்டு விக்ரஹ பரம்
இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே —31-

சாக்யோ லூக்யா ஷபாத ஷபணக் கபில பதஞ்சலி மத் அனுசாரிண-என்கிறபடியே
பாஹ்ய ஷண் மாதங்கள் ஆகிற மூடிக் கிடக்கிற செடிகளை மூலச் சேதனம்
பண்ணி அருளினவர் நித்யமாக எழுந்து அருள வேணும் –
மேலிட்டு வரும் குத்ருஷ்டிகளை –
நான்மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் -என்கிறபடியே –
சவாசனமாகத் துரத்தி அருளினவர் நித்யமாக வாழ்ந்து அருள வேணும் –
அறு சமயம் போந்தது போன்றி இறந்தது வெங்கலி -என்கிறபடியே
இவை எல்லாத்துக்கும் ஹேதுவாய் லோகம் எங்கும் காடமாய் மூடி வருகிற கலியை
அல்பாவ சேஷமும் இல்லாதபடி முடித்து விட்டவர் வாழ்ந்து அருள வேணும்
அநந்தரம்
ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அனுபத்ரவா அனுதினம் சம்வர்த்தயா-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திருச் செல்வம் எல்லாம் கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் வாழ்ந்து அருள வேணும்
அதுக்கு மேலே
பிரமாணத்தில் வந்தால்
வேதத்தில் விப்ரபத்தி போக்கின அளவன்றிக்கே
வேதாந்த அர்த்தம் எல்லாம் ஸ்ரீ பாஷ்ய ரூபேண அருளிச் செய்தவர் வாழ்ந்து அருள வேணும்
அதுக்கு மேலே ஸ்ரீ ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்ட ஸ்ரீ திருவாய் மொழியை வளர்த்த இதத் தாய் -என்னும்படி
வர்ப்பித்து அருளினவர் வாழ்ந்து அருள வேணும்
அதன் தாத்பர்ய மான சரணாகதி தர்மம் ஜகத்திலே வர்த்திக்க
விலஷணமான ஸ்ரீ பெரும் பூதிரிலே திரு வவதரிதவர் வாழ்ந்து அருள வேணும்
சௌந்தர் யாதிகளாலே பூரணமாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய
சர்வ சரண்யமான சரண யுகங்கள் நித்யமாக வாழ வேணும்

அழகாருகை -அடி இணைகளுக்கு விசேஷணம் ஆன போது
இரண்டு தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போல் இருக்கிற சேர்த்தி அழகையும்
ஸ்வத உண்டான சௌந்தர்யத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம் –

அறமிகு நல் பெரும் பூதூர் -என்றும் பாடம் சொல்வார்
அப்போது -ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்கிற தர்மத்தை அதிகமாக உடைத்து என்னவுமாம்
வாழி -எனபது மங்கள சொல்

——————————————————

கீழ்
நற் பெரும் பூதூர் அவதரித்தார் என்று பிரஸ்துதமான திரு வவதார திரு நஷத்ர வைபவத்தை
ப்ரீதியாலே பேசி அனுபவித்து அருளுகிறார்-

சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி யிங்கினி வீறு நமக்கில்லை என்று மிகத் தளர் நாள்
மேதினி நஞ்சுமை யாறு மெனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மானிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும் பூதூர்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –32-

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மன் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர —

விசேஷணத்தை இல்லை செய்வாரும்-விசேஷ்யத்தை இல்லை செய்வாருமாய்
இப்படி விபாகத் த்வய குத்ருஷ்டிகளாய்க் கொண்டு
வேதார்த்தா பலாபம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே
வைதிக தர்மம் தலை சாயும்படி வந்து கிட்டி இருக்கிற வாதியர்களான
சங்கராதிகள் உடைய மதம் நாசத்தை அடையும் என்று
நாலுவகைப் பட்ட வேதமானது அர்த்த பௌஷ்கல்யத்தை யுடைத்தாய் அபிவிருத்தமாம் திவசம் –

கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லுகிறபடியே
குரூரமான கலியானது இவ் விடத்திலே
இனி நமக்கு சம்சார ராஜ்ஜியம் பண்ண சகயம் அன்று என்று
மிகவும் நிலை குலைந்து இருக்கப் பண்ண வற்றான திரு நஷத்ரம் –
கலியும் கலி கார்யமான குத்ருஷ்டிகளும் போகையாலே-
விஸ்வம் பரா புண்ய வதீ -என்றும்
தவம் தாரணி பெற்றது -என்றும் சொல்லுகிறபடியே
பூமியானது தம் தலை சுமை கழியும் என்று துக்கத்தை விட்டு பிரகாசியா நிற்கிற திரு நஷத்ரம்
இனி பூமியில் உண்டான அர்ச்சா ஸ்தலங்களை ஆதரிக்குமவர்கள் ஆகையாலே
ஸ்ரீ திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்
பராங்குச அபிதேயரான ஸ்ரீ நம் ஆழ்வார்
முதலானவர்களுடைய சம்ருத்தி அங்குரிக்கும் திரு நஷத்ரம்-

அதுக்கு மேலே ஸ்ரீ பெருமாள் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்
அருவி செய்யா நிற்கும் மா மலை -என்று சொல்லப் படுவதான ஸ்ரீ பெரிய திருமலை
மற்றும் உண்டான திவ்ய தேசங்களும்
ஸ்வ ஸ்வ சம்ருதியை அடைவுதோம் என்று ஹர்ஷிக்கும் திரு நஷத்ரம் –
இதுக்கு எல்லாம் அடியாக -அங்கயல் பாய் வயல் -என்னுமா போலே
சிவந்து அழகிய கயல்களை உடைத்தான வாவிகளாலே சூழப் பட்டு இருக்கிற
விளை வயல்களினாலே நித்யமாக யுண்டான நகர் அலங்காரங்களை யுடைத்தான
ஸ்ரீ பெரும் பூதூரை திரு வவதார ஸ்தலமாக யுடைய ஸ்ரீ மானாய்
ஸ்ரீ இளைய ஆழ்வார் என்கிற நிரூபகத்தை உடையரான
எம்பெருமானார் திரு வவதரித்து அருளின திவசம் திருவாதிரை திரு நஷத்ரம் –

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மான் ஆவிர் பூத் பூதௌ ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே

தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -என்கிறதுக்கு
தத்ரச்தரான ஜீவேச்வரர்கள் ஹர்ஷிப்பார்கள் என்றபடி
மன்றல் -பொருந்துதலும்-நிலைப்பாடும்
ஆறுதல் -சமித்தல்
உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்க என்கிறபடியே
இவருக்கு தத் வாசகமான திரு நாமங்கள் தான் அனுபாவ்யமாய் இருக்கையாலே
ஸ்ரீ எதிராசன் என்றும்
ஸ்ரீ இராமானுசன் என்றும்
ஸ்ரீ எம்பெருமானார் என்றும்
ஸ்ரீ இளையாழ்வார் என்றும்–அனுசந்தித்து அருளினார்-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்