ஸ்ரீ ராமானுஜ சதுச்ச்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகம்-

திருமலைக்கு நித்ய புஷ்ப கைங்கர்யம் செய்து
அனந்தாண் பிள்ளை என்கிற விருதும் பெற்று
எம்பெருமானார் உடைய விச்லேஷம் பொறுக்க மாட்டாமல்
அருளிச் செய்த ஸ்லோகங்கள் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் ஆகிய
நான்கு திருப்பதிகளிலும் எம்பெருமானார் உடைய வெற்றிக்கு பல்லாண்டு பாடுவான இவை-

—————————————————————————————————————————————–

அநிசம் பஜதாம நன்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம்
விதரன் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமாநுஜ ரங்க தாம்நி நித்யம்–1-

ஹே ராமாநுஜ –
எம்பெருமானாரே
உமது

 அநிசம் பஜதாம நன்ய பாஜாம்-சரணாம் போருஹ மாதரேண
சரணாம் போருஹம் ஆதரேண அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம்
திருவடித் தாமரையை அன்போடு
எப்போதும்
ஆஸ்ரயித்து இருக்கின்ற
அநந்ய கதிகளான அடியார்களுக்கு –
தேவு மற்று அறியேன் -போல்வாருக்கு

பும்ஸாம் இஷ்டாம் விபூதிம் நியதம் விதரன் சந ரங்க தாம்நி நித்யம் ஜய –
எந்த விபூதி இஷ்டமோ
அந்த விபூதியை திண்ணமாக அளித்துக் கொண்டு
பொன் உலகம் ஆளீரோ-என்றாப் போலே
திருஷ்ட அத்ருஷ்டங்களில் எதை வேண்டினாலும்
அதை அளித்துக் கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே
எஞ்ஞான்றும் வாழக் கடவீர் –
தந்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்ஷீ –நயாச திலகம் -தேசிகன் படியே
ஸ்வாமி நியமனம் இருந்தால் ஒழிய எம்பெருமான் முக்தி அளிக்க வல்லன் அல்லனே-

—————————————————————————————————————————————-

புவி நோ விமதான் த்வதீய ஸூக்தி
குலசீ பூய குத்ருஷ்டிபிஸ் சமேதான்
சகலீ குருதே விபச்சி தீட்யா
ஜய ராமாநுஜ சேஷ சைலச்ருங்கே–2-

ஹே ராமா நுஜ –
எம்பெருமானாரே –

விபச்சித் ஈட்யா த்வதீய ஸூக்தி –
வித்வான்கள் போற்றத் தக்க தேவரீரது ஸ்ரீ ஸூக்தி யானது

குலிசீ பூய குத்ருஷ்டிபி சமேதான் ந விமதான் சகலீ குருதே –
வஜ்ராயுதம் போன்று இப் பூமியில் உள்ள
குத்ருஷ்டிகளுட்பட
நமது பிரதி பஷிகள் யாவரையும் பொடி படுத்துகின்றது
பாஹ்யா குத்ருஷ்த்யா இதி த்விதயேபி-ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
இருவகைப் பட்ட விபர்ஷர்களையும் தமது திவ்ய
ஸூக்தி களால் கண்டித்து ஒழித்து அருளா நின்ற ஸ்வாமி

சேஷ சைல ச்ருங்கே ஜய –
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ ஸூக்திகளை அருளிய தேவரீர்
திருவேங்கட மலை யுச்சியில் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக
பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து  அருள வேணும் –

—————————————————————————————————————————————–

ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ பிரமாண தந்த்வம்
க்ருபயா லோகய விசுத்ததயா ஹி புத்த்யா
அக்ருதாஸ் ச்வத ஏவ பாஷ்யரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்திதாம்நி நித்யம்–3-

ஹே ராமானுஜ –
எம்பெருமானாரே –

ஸ்வத ஏவ க்ருபயா –
நிர் ஹேதுக கிருபையினாலே –

விசுத்தயா புத்த்யா ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ -பிரமாண தத்தவம் ஆலோக்ய பாஷ்ய ரத்னம் அக்ருதா –
சுருதி ஸ்ம்ருதி பிரமாண
உண்மையை யாராய்ந்து
மாசற்ற மதியினால்
மிகச் சிறந்த ஸ்ரீ பாஷ்யத்தை
அனுக்ரஹித்து அருளிற்று –

நித்யம் ஹஸ்திதாம்நி ஜய –
இப்படிப் பட்ட தேவரீர் ஸ்ரீ ஹஸ்திகிரியில்
நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
தென் அத்தியூர் கழலிணைக் கீழ்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்கி அருள வேணும்
என்றார் ஆயிற்று-

—————————————————————————————————————————————–

ஜய மாயிம தாந்த காரபாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீக்ருசாநோ
ஜய சம்ச்ரித்த சிந்து சீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ச்ருங்கே –4-

மாயிமத அந்தகார பா நோ –
மாயா வாதிகளின் மாதங்கள் ஆகிற
இருளுக்கு இரவி போன்றவரே

பாஹ்ய பிரமுக அட்வீ க்ருசாநோ –
பாஹ்யர்கள் முதலானவர்கள் ஆகிற
காட்டுக்குத் தீ போன்றவரே –

ஸம்ச்ரித சிந்து சீத பாநோ –
அடியார்கள் ஆகிற கடலுக்கு
சந்தரன் போன்றவரே –
கடல் சந்த்ரனைக் கண்டு பொங்குவது போலே
அடியார்களும் ஸ்வாமியை சேவித்தவாறே
வருத்தம் எல்லாம் தீர்ந்து மகிழ்ந்திடுவார்கள்

ராமானுஜ –
எம்பெருமானாரே –

யாதவாத்ரி ச்ருங்கே ஜய ஜய ஜய ஜய –
தேவரீர் யாதவாத்ரியில்
நித்ய ஸ்ரீ யாக
நீடூழி விளங்க வேணும்-

—————————————————————————————————————————————–

ராமாநுஜ சதுச்ச்லோகீம் யா படேன் நியதஸ் சதா
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதி ராஜ பதாப் ஜயோ-

நித்ய அனுசந்தேயமாக நிருமிக்கப் பட்ட
இந்த ராமாநுஜ சதுச் ச்லோகியையை
நியமத்துடன் நித்ய அனுசந்தானம் பண்ணுவார்க்கு
எம்பெருமானாரது திருவடித் தாமரைகளிலே
பக்தி மிகுதியே
கை கண்ட பலனாம் என்று
பயன் உரைத்துத்
தலைக் கட்டினார் ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: