ஸ்ரீ நரசிம்ஹாஷ்டகம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் அருளிச் செய்த ஸ்லோஹம் –

ஸ்ரீ ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் பிராணிகளைக் கரை மரம் சேர்ப்பதற்கு
உரிய தோணி போன்றதான அழகிய மணவாள சீயர் உடைய
திருவடித் தாமரைகளை
தஞ்சமாக பற்றுகிறேன்
என்றவாறே –

பெருமாள் கோயில் கரிகிரியின் கீழ்க் காட்சி தந்து அருளா நிற்கும்
அழகிய சிங்கர் விஷயம் என்றும்
திரு வல்லிக் கேணி தெள்ளிய சிங்கர் விஷயமாகவும்
பணித்து அருளிய ஸ்லோகம் –

———————————————————————————————————————————————

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம்
தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ—————1-

—————————————-

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி -ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
அழகியவாயும்
களங்கம் அற்றவையுமாயும் உள்ள
பல வாயிரம் பௌர்னமி சந்திரர்களின்
சோபையைத் தாங்குகின்ற
மநோ ஹரமான
உளை மயிர் திரள்களினால் -சடாபடலம் -உளை மயிர்க் கற்றை – களாலே
அழகியவரே -அழகியான் தானே அரி யுருவன் தானே –

பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம் தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ –
கருணைக்கு இருப்பிடமானவரே
ஆசூர வர்க்கங்களுக்கு யமன் போன்ற
அழகிய சிங்கப் பெருமாளே –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ் புக நின்ற செங்கண்மால் -திருவாய் மொழி -3-6-6-
தைத்யவர் -இரணியன் போன்ற ஆசூர பிரக்ருதிகள்
காலன் -மிருத்யு
சம்சாரக் கடலில் வீழ்ந்த
அடியேனை ரஷித்து அருள வேணும் –
நரசிம்ஹ நரசிம்ஹ -இரட்டிடித்துச் சொல்லுகிறது
ஆதார அதிசயத்தினால் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் அடியேனுக்கு
தேவரீர் உடைய திருவருள் அல்லது
வேறு புகல் இல்லை
என்றார் -ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம்
பாதக தவா நல பதத்ரிவரகேதோ
பாவந பராயண பவார்த்தி ஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ–2

—————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம் –
தனது திருவடித் தாமரைகளில்
வணங்கின பாபிஷ்ட ஜனங்களின் உடைய
பாபங்களுக்கு

பாதக தவா நல –
காட்டுத் தீ போன்றவனே

பதத்ரிவரகேதோ –
பஷி ராஜனான பெரிய திருவடியைக்
கொடியாக யுடையவனே –

பாவந பராயண –
தன்னைச் சிந்திப்பார்க்கு
பரகதியாய் யுள்ளவனே -உபாயமும் உபேயமுமாக இருப்பவனே

பவார்த்தி ஹரயா மாம் -பாஹி க்ருபயைவ –
சம்சாரத் துன்பங்களைப்
போக்க வல்ல
உனது
கருணையினாலேயே அடியேனைக் காத்தருள வேணும்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
க்ருபயைவ -என்பதால்
ஏவ காரத்தால்
என் பக்கலில் ஒரு கைம்முதல் எதிர் பார்க்கலாகாது
என்கிறது –

நரசிம்ஹ நரசிம்ஹ
அழகிய சிங்கப் பெருமானே-

——————————————————————————————————————————————————————-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக்
பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர
பண்டித நிதான கமலாலய நமஸ் தே
பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ——3-

———————————

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக் பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர –
நீண்ட திரு வுகிற் வரிசைகளினால் பிளக்கப் பட்டவனான
ஹிரன்யாசூரனுடைய
உதிரக் குழம்பாகிற
புதுமை மாறாத
கும்குமச் சாறு தன்னால் வ்யாப்தமாய் இருக்கிற
அகன்ற திரு மார்பை
யுடையவரே –

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன்
போன்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -என்றும் –

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டிச் செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -என்றும் சொல்லுகிறபடியே

பண்டித நிதான
அறிஞர்கட்கு நிதி போன்றவரே
வைத்த மா நிதி இ றே
நிதியானது உள்ளே பத்தி கிடந்தது
ஒரு கால விசேஷத்திலே
பாக்யவாங்களுக்கு வெளிப்படுமா போலே –

கமலாலய –
பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமானவரே –
கமலை கேழ்வனே-
நரசிங்க வுருக் கொண்ட போது மூவுலகும் அஞ்சிக் கலங்கிப்
போகும்படியான சீற்றம் உண்டானது கண்டு
அதனைத் தணிக்க
ஸ்ரீ மகா லஷ்மி வந்து குடி கொள்ள
லஷ்மி நருசிம்ஹான் ஆண்மை இங்கு நினைக்கத் தக்கது

பங்கஜ நிஷண்ண –
ஆசன பத்மத்திலே எழுந்து அருளி இருப்பவரே –
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -என்றபடி –

நரசிம்ஹ நரசிம்ஹா –

நமஸ் தே
உமக்கு வணக்கமாகுக –

————————————————————————————————————————————————————————–

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்
யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ் ஸூ நிகமா நாம்
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்நி நரசிம்ஹ நரசிம்ஹ—————–4-

————————————————————————————————-

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்-
அமரவராணாம் மௌலிஷூ விபூஷண –
சிறந்த தேவர்களின் முடிகளின் மீதும்
அமரர்கள் சென்னிப் பூ இ றே

யோகி ஹ்ருதயேஷூ –
யோகிகளின் உள்ளத்திலும் –

ச சிரஸ் ஸூ நிகமா நாம் –
வேதாந்தங்களிலும் –
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு

மௌலிஷூ விபூஷண
சிறந்த தொரு பூஷணம் போன்று விளங்குகின்ற –
விபூஷணம் எனபது சப்தம் எந்த பதங்கள் எல்லாவற்றிலும் அந்வயிக்கக் கடவது

ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்நி –
தாமரை போல் அழகிய
தேவரீருடைய திருவடி இணையை
என் சென்னி மீது
வைத்து அருள வேணும் –

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் யாழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்றும்

நரசிம்ஹ நரசிம்ஹ-

——————————————————————————————————————————————————————

வாரிஜ விலோசன மதநதி மதசாயம்
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்ய விஹகா நாம்
நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ———————5-

————————————————

 

வாரிஜ விலோசன –
செந்தாமரைக் கண்ணரே –
கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுத் சிறிதே எம்மேல் விழித்து அருள வேணும்

சரண்ய-
அடியேன் போல்வார்க்குத் தஞ்சமானவரே –

மதநதி மதசாயம் –
என்னுடைய சரம அவஸ்தையிலே

க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம் –
சமஸ்த கரணங்களையும் -செவி வாய் -கண் -முதலான –
க்லேசத்துக்கு வசப்படுதுமதான
அந்த சரம அவஸ்தையிலே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்றும்

மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை யுள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமதாவது -என்றும்

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற -என்றும் –

காஷ்ட பாஷான சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்றும்
ஏஹி ரமயா சஹ விஹகா நாம் நாதமதி ருஹ்ய –
ரமயா சஹ விஹகாநாம் நாதம் அதிருஹ்ய ஏஹி
பிராட்டியோடு கூடப் பெரிய திருவடி மேல் எரிக் கொண்டு
அடியேன் பால் வந்து அருள வேணும் –

பறவை ஏறு பரம் புருடனாய்ப் பிராட்டியோடும் கூட எழுந்தருளி
பாவியேனைக் கை கொண்டு அருள வேணும்
என்று பிரார்த்திக்கிறார்
ஆயிற்று

நரசிம்ஹ நரசிம்ஹ-

————————————————————————————————————————————————————————-

ஹாடக கிரீட வரஹார வநமாலா
தார ரசநா மகர குண்டல ம ணீந்த்ரை
பூஷிதம சேஷ நிலயம் தவ வபுர் மே
சேதசி சகாஸ்து நரசிம்ஹ நரசிம்ஹ–6-

——————————

ஹாடக கிரீட –
பொன்மயமான சிறந்த மகுடம் என்ன

வரஹார வநமாலா –
வைஜயந்தி என்னும் வனமாலை என்ன

தார ரசநா –
முத்து மயமான அரை நாண் என்ன –
தாரம் -என்று முத்துக்குப் பெயர்
நஷத்ரவடம் என்கிற திரு ஆபரணத்தை சொல்லிற்றாகவுமாம்

மகர குண்டல ம ணீந்த்ரை –
திரு மகரக் குழைகள் என்ன –

மணீந்த்ரை –
ரத்னா வாசகமான இந்த சப்தம் லஷண்யா ரத்ன பிரசுர பூஷண வாசகம் ஆகலாம் –

பூஷிதம –
ஆகிய இத் திரு ஆபரணங்களினால்
அலங்கரிக்கப் பட்டதும் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ ஆழிகளும் கிண் கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமான
திரு வாபரனங்கள் அணிந்த திரு மேனியே தமது திரு உள்ளத்தில் திகழ வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

அசேஷ நிலயம் –
எங்கும் வ்யாபித்ததுமான
அசெஷத்தையும் நிலையமாக வுடைத்தான -என்கை
நிலய சப்தம் நித்ய பும்லிங்கம் ஆகையாலே இங்கு பஹூ ரீவ்ஹியாகக் கடவது

தவ வபுர்-
தேவரீர் உடைய திரு மேனி

மே சேதசி சகாஸ்து –
என் நெஞ்சின் உள்ளே விளங்க வேணும்

நரசிம்ஹ நரசிம்ஹ –
அழகிய சிங்கப் பெருமாளே-

———————————————————————————————————————————————————————————–

இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லசத்வர ரதாங்க
ஸூந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்திதித ஸூரேச நரசிம்ஹ நரசிம்ஹ—7-

————————————————

இந்து ரவி பாவக விலோசன –
சந்தரன் சூர்யன் அக்னி
இவர்களை திருக் கண்ணாக
யுடையவரே –
தீப் பொறி பறக்கும் நெற்றிக்கண் உண்டே -அதனால் அக்னியை சேர்த்து அருளுகிறார்

ரமாயா மந்திர –
பெரிய பிராட்டியாருக்கு
திருக் கோயிலாக இருப்பவரே –
அந்த நெற்றிக் கண்ணை அவிப்பதற்காக
பிராட்டி வந்து திரு மேனியில் வீற்று இருந்த படியாலே
ரமாயா மந்திர -என்றார் –

மஹா புஜ லசத்வர ரதாங்க
தடக்கையிலே விளங்கும்
சிறந்த திரு ஆழி ஆழ்வானை யுடையவரே –

மஹா புஜ லசத் தரரதாங்க -என்றும்பாடபேதம்
தரம் -என்று சங்குக்குப் பெயர் ஆதலால்
சங்கு சக்கரம் இரண்டையும் சேரச் சொன்னபடி ஆகவுமாம்

ஸூந்தர –
அழகு பொலிந்தவரே-

சிராய ரமதாம் த்வயி மநோ மே-
அடியேனுடைய மனமானது
தேவரீர் இடத்தில்
நெடும்காலம் உகப்பு கொண்டு இருக்க வேணும்

நந்திதித ஸூரேச –
அமரர் கோணத்த துயர் தீர்த்தவரே –

நரசிம்ஹ நரசிம்ஹ-

———————————————————————————————————————————————————–

மாதவ முகுந்த மது ஸூதன முராரே
வாமன நருசிம்ஹ சரணம் பவ நதா நாம்
காமத கருணின் நிகில காரண நயேயம்
காலமமரேச நரசிம்ஹ நரசிம்ஹ——8-

——————————————————————————————————–

மாதவ –
திருமாலே –

முகுந்த –
முக்தி அளிக்கும் பெருமானே –

மது ஸூதன –
மது கைடபர்களை மாய்த்தவனே

முராரே –
நரகா ஸூ ரவதத்தில் -முரணைக் கொன்றவனே

வாமன-
குறள் கோலப் பெருமானே

நருசிம்ஹ –
நரம் கலந்த சிங்கமே –

சரணம் பவ நதா நாம் –
அடி பணிந்தவர்களுக்குத் தஞ்சமாவாய் –

காமத
அபேஷிதங்களை எல்லாம் அளிப்பவனே –

கருணின் –
தயாளுவே –

நிகில காரண –
சகல காரண பூதனே

காலம் நயேயம் –
யமனையும் அடக்கி யாளக் கடவேன் -பொருள் சிறவாது
உன்னை வாழ்த்தியே வாழ் நாளைப் போக்கக் கடவேன் –

அமரேச –
அமரர் பெருமானே

நரசிம்ஹ நரசிம்ஹ –
இங்கனே உன் திரு நாமங்களை வாயார வாழ்த்திக் கொண்டே
என் வாழ் நாளைப் போக்கக் கடவேன்

க்ரோசன் மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேதி
அனிசமப நேஷ்யாமி திவசான் -பட்டர்

——————————————————————————————————————————————————–

அஷ்டகமிதம் சகல பாதக பயக்தம்
காம தம சேஷ துரி தாம யரி புக்நம்
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே
கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ–9-

——————————————————–

அஷ்டகமிதம் –
எட்டு ஸ்லோகங்களினால் அமைந்த
இந்த ஸ்தோத்ரத்தை –

சகல பாதக பயக்தம் –
சகல பாபங்களையும்
சகல பயன்களையும்
போக்கடிப்பதும்
பாதகம் -மஹா பாதகங்களை -குறிக்கும்

காம தம –
சகல அபேஷிதங்களையும் அளிப்பதும்

சேஷ துரி தாம யரி புக்நம் –
சகல விதமான பாபங்களையும்
பிணிகளையும்
பகைவர்களையும்
நிரசிப்பதுமான –
துரிதம் -உபபாதகன்களை

ய படதி சந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ –
யாவன் ஒருவன் கற்கின்றானோ
அவ்வதிகாரி
அனைவருக்கும் ப்ராப்யமான
தேவரீர் உடைய திவ்ய ஸ்தானத்தை
அடைந்திடுவான்

நரசிம்ஹ நரசிம்ஹ –

இதனால் இந்த ஸ்தோத்ரம் கற்றாருக்கு பலன்சொல்லித் தலைக் கட்டுகிறார்
அநிஷ்ட நிவாரணம்
இஷ்ட ப்ராபணம் ஆகிற இரண்டுக்கும்
கடவதான இந்த ஸ்தோத்ரத்தை
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வர்
என்று பேறு கூறித் தலைக் கட்டினார் ஆயிற்று

தெள்ளிய சிங்க பெருமாள் அக்காராகனி திருவடிகளே சரணம்

————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: