அவதாரிகை –
தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த
அக்காரக் காபியை அடைந்து உய்ந்து போனேனே –
சோள சிம்ஹ புரத்தில்-
எழுந்து அருளி இருந்த மகா வித்வச் சிகாமணி
காஞ்சி கருட சேவை சென்று சேவிக்க ஷமர் அன்றிக்கே
அதியூரான் புள்ளை ஊரான் -பாசுரம் சிந்தித்து
வாயார ஏத்தி இருக்கையிலே
பேரருளாளன் இவர் பரம பக்திக்கு உகந்து தக்கான் திருக்குளத்திலே சேவை சாதித்து அருளே
அந்தானுபவ பரீவாஹ ரூபமாக திரு அவதரித்தது
இந்த தேவாதி ராஜ பஞ்சகம் –
ஐந்து ஸ்லோகங்களும் பெரிய திருவடி வாகனத்தின் பெருமை ஒன்றே பேசும் –
———————————————————————-
பிரத்யூஷே வரத பிரசன்ன வதன ப்ராப்த ஆபி முக்யான் ஜனான்
ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான் ஆபாலம் ஆனந்தயத்
மந்த உட்டாயித சாமர மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை
அந்தர் கோபுரம் ஆவிராச பகவான் ஆருட பஷீஸ் வர—1-
பிரத்யூஷே –பின் மாலையிலே
பிரசன்ன வதன -தெளிந்ததான திரு முக மண்டலத்தை யுடைய
வரத -பேர் அருளானான தேவப் பெருமாள்
ப்ராப்த ஆபி முக்யான் ஜனான்–தன்னைக் கண்டு களிக்க எதிர் நோக்கி யுள்ளவர்களாயும்
ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் -தங்கள் தலை மேல் உயர்த்திக் கூப்பிய கைகளையும் யுடையவர்களாயும்
அவிரலான் ஜ நாந் –எண்ணற்ற ஸமூஹமாயுள்ள ஜனங்களை
ஆபாலம் ஆனந்தயத்–பாலர்களை முதல் கொண்டு மகிழ்விக்குமவராய்
ஆருட பஷீஸ் வர–பெரிய திருவடி வாஹனம் மேலே ஏறி இருந்தவராய்
மந்த உட்டாயித சாமர -மெதுவே மேல் தூக்கி வீசப்பட்ட சாமரங்களை யுடையவராய்
மணி மய ஸ்வேத ஆத பத்ர -ரத்ன மணி மயமான வெண் கொற்றக் குடை பிடிக்கப் பட்டவராய்
சனை -மெதுவாக -மெல்ல மெல்ல
அந்தர் கோபுரம் ஆவிராச -ராஜ கோபுரத்தூடே தோன்றி அருளினார் –
பிரத்யூஷே வரத பிரசன்னவதன –வரத-பகவான்-
ஸூ ப்ரபாத காலத்தில்
ஸூ பிரசன்னமான திரு முக மண்டலத்தை யுடைய
பேரருளாள் பெருமாள்
ப்ராப்த ஆபி முக்யான் -ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான்-ஜனான் –
அபி முகர்களாயும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பினவர்கலாயும்
இடைவெளி இல்லாமல் நெருங்கி இருப்பவர்க்களுமாய் உள்ள
ஜனங்களை –
ஆபாலம் ஆனந்தயத் –
சிறுவர் முதல் கொண்டு சந்தோஷப் படுத்துமவராய்
மந்த உட்டாயி தசாமர –
மெதுவாக வீசப் பட்ட சாமரங்களை யுடையவராய்
மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை-
ரத்ன மயமான வெண் கொற்றக் குடைய யுடையவராய் –
அந்தர் கோபுரம் ஆவிராச ஆருட பஷீஸ் வர
பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டவராய்
மெல்ல மெல்ல திருக் கோபுரத்தினுள்
தோன்றி அருளினார்-
தேவப் பெருமாள் உடைய பெரிய திருவடி திரு நாளை
பிரதம பரிச்பந்தமே பிடித்து அனுபவிக்கிறார்
அருணோதய வேளையில்
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தாலே
அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்த ஹாச விலாசத்தோடு
கூடின திரு முக மண்டலம் பொலிந்த தேவப் பெருமாள்
சிரச் அஞ்சலி மாதாய -என்றும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி -என்றும் சொல்லுகிறபடியே
உச்சி மிசைக் கரம் வைத்து தொழும் அவர்களாய்
அஹமஹமிகயா வந்து நெருக்குவார் இடையே
அகப்பட்டுத் துடிப்பவர்களான அடியார்களை
சிறியார் பெரியார் வாசி இன்றிக்கே
ஜநி தர்மாக்களை எல்லாம் உகப்பியா நின்று கொண்டு
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போல் -என்கிறபடியே
பறைவை ஏறு பரம் புருடனாய்
திரு வெண் கொற்றக் குடை பிடிக்கும் அழகும்
சாமரை வீசும் அழகும்
பொழிய
திருக் கோபுர சேவை தந்து அருளுமாறு எழுந்து அருளின அழகு என்னே
என்று ஈடுபடுகிறார்-
—————————————————
முக்தாத பத்ர யுகளே உபய சாமராந்தர்
வித்யோதமான விநத தனய அதிரூடம்
பக்த அபயப்ரத கராம் புஜம் அம்புஜாஷாம்
நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் —-2-
முக்தாத பத்ர யுகளேவ்–வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட இரு குடைகளோடும்
உபய –இரு மருங்கும் இரண்டு
சாமராந்தர்-வீசப்பட்ட சாமரங்களின் இடையே
வித்யோதமான -பொலிந்து நிற்கும்
விநத தனய அதிரூடம்–விநதையினுடைய திருமகனாரன பெரிய திருவடிக்கு மேல் ஏறி அமர்ந்து இருப்பவரும்
பக்த அபய ப்ரத -தன் அடியார்களுக்கு அஞ்சேல் என்று காட்டி அருளும்
கராம் புஜம் -தாமரையை ஒத்த திருக்கைகளை யுடையவரும்
அம்புஜாஷாம்-தாமரையை ஒத்த திருக்கண்களை யுடையவரும்
ரமணீய வேஷம் -பொலிந்து தோன்றும் மனத்தைக் கவரும்படியான அழகிய தோற்றம் யுடையவருமான
நித்யம் நமாமி வரதம் –வரப் பிரதரான பேர் அருளாளனை எப்பொழுதும் இறைஞ்சுகிறேன் –
முக்தாத பத்ர யுகளே –
இரண்டு முத்துக் குடைகள் என்ன –
உபய சாமராந்தர் –
இரண்டு சாமரங்கள் என்ன
இவற்றின் உள்ளே –
வித்யோதமான விந்தா தனய அதிரூடம் –
விளங்கா நின்ற வைனதேயனான
பெரிய திருவடியின் மீது ஏறி
வீற்று இருப்பவனும் –
பக்த அபயப்ரத கராம்புஜம்-
அடியார்களுக்கு அபயம் அளிக்கும்
திருக் கைத் தாமரையை யுடையவனும் –
அம்புஜாஷாம் –
செந்தாமரைக் கண்ணனும் –
நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் –
மநோ ஹராமான திவ்ய அலங்காரங்களை யுடையனுமான
பேரருளாளனை
இடையறாது வணங்குகின்றேன் —
———————————————————–
கேசித் தத்வ விசோதநே பசு பதௌ பாரம்ய மாஹூ பரே
வ்யாஜஹ்ரு கமலாசநே நயவிதாம் அன்யே ஹரௌ சாதரம்
இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி —3-
கேசித் தத்வ விசோதநே -பரதத்வ விஷய விசாரத்தில்
நயவிதாம்-ஸாஸ்த்ர விசார கண்ணோட்டம் யுடையவர்களுக்குள்ளே
கேசித் -சிலர்
பசு பதௌ -பசுபதியான முக்கண்ணன் இடத்தில்
பாரம்ய மாஹூ -பரதத்வத்தைத் தெரிவித்தனர்
பரே-வேறே சிலர்
கமலாசநே-தாமரையில் வீற்று இருப்பவராக நான்முகன் இடத்தில்
(பாரம்யம் )வ்யாஜஹ்ரு -பரதத்வத்தைப் பேசினார்கள்
அன்யே -மற்றும் சிலர்
(பாரம்யம் )ஹரௌ சாதரம் ஆஹு -ஆதாரத்தோடு பாபங்களை நசிக்கிற ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில்
பரதத்வத்தை வெளியிட்டார்கள்
இத்யேவம் சல சேதஸாம் ந்ருணாம்-இப்படியாக சஞ்சல புத்தியுடைய மநுஷ்யர்கள் விஷயத்தில்
ச்ருதீ நாம் நிதி -வேதங்களின் பொக்கிஷம் எனப்படும்
தார்ஷ்ய -பக்ஷி ராஜரான கருடாழ்வார்
சம்பிரதி -இப்பொழுது -இந்த மூன்றாம் நாளிலே
கரத்ருதம் -தம்முடைய உயர்த்திய திருக்கரங்களால் தாங்கப்பட்ட
ஹரே -ஹரியாகிய பரமபுருஷனுடைய
பாதாரவிந்தம்–தாமரை அடிகளை
தத்வம் -பரதத்வமாக –
அஹம் ஏவ பரம் தத்வம் என்று ஆறு வார்த்தைகளால் தாமே அருளிச் செய்தபடியே
தர்சயதீவ த்ருஸ்யதே -புலப்படுத்திக் காட்டுவது போல் சேவை யாகிறது –
கேசித் தத்வ விசோதநே நயவிதாம்-
பரதத்வம் இன்னது என்று
ஆராயும் அளவில்
சாஸ்திரம் அறிந்தவர்களுக்குள்ளே
பசு பதௌ பாரம்யம்-
சில மதஸ்தர்கள்
ருத்ரன் இடத்தில்
பரத்வத்தைக் கூறினார் –
ஆஹூ பரே வ்யாஜஹ்ரு கமலாசநே -பாரம்யம்-
வேறு சிலர் நான் முகக் கடவுளிடத்தில்
பரத்வம் உள்ளதாக பகர்ந்தார்கள் –
அன்யே ஹரௌ சாதரம்-பாரம்யம்-
மற்றையோர்கள் ஆதாரத்தோடு கூட
ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில் பரத்வம்
உள்ளதாக சொன்னார்கள் –
இப்படி பலரும் பலவாறாக சொல்லுகின்றார்களே
ஒரு விதமான நிஷ்கர்ஷம் இல்லையே
என்று தளும்பின நெஞ்சை யுடையரான மனிசர்க்கு
தெள்வு பிறப்பிக்க வேண்டி –
இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி –
வேதங்களுக்கு நிதியான பெரிய திருவடியானவர்
இப்போது
இத் திரு நல நாளிலே
தம்முடைய கைத் தளத்திலே தாங்கப் பட்ட
எம்பெருமான் உடைய திருவடித் தாமரையை
பரதத்துவமாகக் காட்டுகின்றார் போலும்-
வேதாத்மாவான விஹகேச்வரன்
சந்தேக விபர்யாயம் அற
பரதத்வத்தை
ஸ்ரீ மன் நாராயணன் உடைய இந்தத் திருவடித் தாமரையே காணீர் பரதத்வம் -என்று
கரஸ்தமாக்கிக் காட்டுகிறாப் போலே உள்ளது -என்றார் ஆயிற்று
பஷி காட்டி விட்டால் இதையே தத்வமாக விஸ்வசிக்க விரகு உண்டோ
என்கிற சங்கைக்கு இடம் இன்றி –
ச்ருதீ நாம் நிதி -என்று கருத்மானுக்கு விசேஷணம் இட்டார்
வேதாத்மா விஹகேச்வர -என்று ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே –
ஸூபர்ணோசி கருத்மான் த்ரிவ்ருத்தே சிர -இத்யாதி வேத வாக்கியம் உண்டே-
———————————————————-
யத் வேத மௌலி கண வேத்யம் அவேத்யம் அந்யை
யத் ப்ரஹ்ம ருத்ர ஸூ ர நாயக மௌலி வந்த்யம்
தத் பத்ம நாப பத பத்ம மிதம் மனுஷ்யை
சேவ்யம் பவத் பிரிதி தர்சய நீவ தார்ஷ்ய–4-
பத்ம நாப-தாமரை யுந்திப் பெருமானுடையதான
யத் பத பத்மம் -எந்தத் தாமரைத் திருவடியானது
வேத மௌலி கண -வேதாந்த -உபநிஷத் -தொகுப்புக்களாலே –
வேத்யம் -அறியப்பட வேண்டியதும்
அவேத்யம் அந்யை-அவைத்யர்களான மற்றோர்களால் அறியப்பட முடியாததும்
யத் ப்ரஹ்ம ருத்ர ஸூ ர நாயக -ப்ரஹ்மாதிகளும்
மௌலி வந்த்யம்-தங்கள் முடி தாழ்த்தி வணங்கக் கூடியதுமான
தத் இதம் -அப்படிப்பட்டதான இந்த திருவடியே
தத் பத பத்ம மிதம் மனுஷ்யை
சேவ்யம் பவத் பிர் இதி -மனிதர்களான உங்களால் சேவிக்கத் தகுந்தது என்று
தர்சய நீவ தார்ஷ்ய–விநத குமாரனான கருத்மான் காணத் தகுந்ததாகக் காட்டுகிறார் போலே தோற்றம் அளிக்கிறது –
ஒ வைதிக ஜனங்களே
எம்பெருமான் யுடையதான எந்தத் திருவடியானது
வேதாந்தங்களுக்கே அறியக் கூடியதோ
வைதிகர்கள் அல்லாத மற்றியோர்க்கு அறியக் கூடாததோ
யாதொரு திருவடியானது
பிரமன் சிவன் இந்த்ரன் ஆகிய இவர்கள் முடி தாழ்த்தி
வணக்கக் கூடியதோ
அப்படிப் பட்ட இந்தத் திருவடியானது
உங்களால் சேவிக்கத் தகுந்தது
என்று கருத்மான்
கையிலே ஏந்தி காட்டி அருளுகின்றான் போலும் –
———————————
பிரத்யக் கோபுர சம்முகே தின முகே பஷீந்த்ர சம்வாஹிதம்
ந்ருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ர த்வயீ பாஸூரம்
ஸாநந்தம் த்விஜ மண்டலம் விதததம் சந்தாஹ சிஹ்நாரவை
காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே–5-
காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே–திருக்கச்சி திவ்யதேசத்திலே தேவாதி ராஜப்பெருமானின் மூன்றாம் உத்சவத் திருநாள் அன்று
தின முகே-தினத்தின் துவக்கமாக பின் மாலை வேளையிலே
பஷீந்த்ர -பக்ஷி ராஜரான கருடாழ்வாராலே
சம்வாஹிதம்-தனது திருத்தோள்கள் மேல் அமர்த்தப்பட்டு நன்கு தாங்கப்பட்டவரும்
ந்ருத்யச் சாமர கோரகம்-தாமரை மொட்டுக்கள் போலே அசைந்து ஆடுகிற கவரிகளான சாமரங்களால் வீசப் படுபவரும்
நிருபமச் சத்ர த்வயீ -ஒப்பற்ற இரண்டு திருக்குடைகளின் நிழலில்
பாஸூரம்-பொலிந்து இருப்பவரும்
சந் நா ஹ -திரு வீதி உலா புறப் பாட தயார் என்பதைத் தெரிவிக்கின்ற
சிஹ்நாரவை-திருச்சின்னம் என்னும் காகள ஒலியினாலே
த்விஜ மண்டலம் –கோஷ்டியாக எழுந்து அருளி இருக்கும் இருமுறை ஓதும் ஸ்ரீ வைஷ்ணவ அந்தணர் குழாமை
ஸாநந்தம் விதததம் —மகிழ்வு ஊட்டுபவரும்
காந்தம் –பொலிந்த அழகு பொருந்தியவருமான
வரதம் -அபீஷ்ட வரங்களை ஈந்து அருளும் பேர் அருளாளப் பெருமாளை
புண்ய க்ருதோ –புண்யவான்களான பாகவத அடியர்கள்
பிரத்யக் கோபுர சம்முகே -மேல் திசை திருக்கோபுர வாசலிலே
பஜந்தி -போற்றி பாடி வணங்கி வழிபடுகிறார்கள்
பிரத்யக் கோபுர சம்முகே –
மேலைத் திருக் கோபுர வாசலிலே
தின முகே –
ஸூ ப்ரபாத வேளையில் –
பஷீந்த்ர சம்வாஹிதம் –
பெரிய திருவடியினால்
தாங்கப் பட்டவரும்
நருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ரத்வ யீபாஸூரம் –
சாமர முகுளம் வீசப் பெற்றவரும்
ஒப்பற்ற இரண்டு திருக் குடைகளின் இடையே
விளங்கா நிற்பவரும் –
ஸாநந்தம் த்விஜ மண்டலம் வீ தததம் சந்தாஹ சிஹ்நா ரவை –
புறப்பாடு சித்தமாயிற்று என்று
தெரிவிக்கிற திருச் சின்ன ஒலியினால்
காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் –
மறையவர் திரளை மகிழச் செய்பவரும்
மிக அழகு போருந்தியவருமான
பேரருளாள பெருமாளை
பாக்ய சாலிகள் பார்க்கப் பெறுகிறார்கள் –
எங்கே எப்பொழுது என்றால் –
காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே –
திருக் கச்சி மா நகரில்
மூன்றாவது உத்சவ
நல நாளிலே
தன்யா பஸ்யந்தி மே நாதம் -என்று பிராட்டி வருந்தி சொன்னது போலே
இங்கும் புண்ய க்ருதோ பஜந்தி -என்று
தம் இழவு தோற்றச் சொல்லி இருக்கையாலே
இந்த மஹோச்த சேவை
தமக்கு பிராப்தமாக பெறாத காலத்திலே
பணித்தது இந்த ஸ்லோஹ பஞ்சகம் என்று
விளங்குகின்றதே –
————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டயாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply