ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே-
————————————————————————————————————————————————————–
சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வினயச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்——————-1-
——————————————————————————————————————
சப்த பிரகார மத்யே –
மாட மாளிகை சூழ் திரு வீதியும்
மன்னு சேர் திரி விக்ரமன் வீதியும்
ஆடல் மாறன் அளகங்கன் வீதியும்
ஆழி நாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல் வாழ் குலசேகரன் வீதியும்
குலவு ராச மகேந்தரன் வீதியும்
தேடு தன்மைவன் மாலவன் வீதியும்
தென்னரங்கர் திரு வாவரணமே
சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே –
தாமரை முகுளம் போல் விளங்குகின்ற பிரணவாகார ஸ்ரீ ரெங்க விமானத்திலே
காவேரி மத்யதேச –
கங்கையில் புனிதமாய காவிரி நடுபாட்டில்
ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே –
அரவரசப் பெரும் சோதி அனந்தன் என்னுமணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி –
நித்ரா முத்ரா பிராமம் –
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் –
ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற –
கடி நிகட சிர பார்ச்வ வினயச்த ஹஸ்தம் –
அழகு பொலிந்தவரும் திருவரை அருகில் ஒரு திருக் கையும்
திரு முடி அருகில் மற்றொரு திருக்கையும் வைத்து இருப்பவரும் –
திரு அபிஷேகத்தைத் தொட்டுக் காட்டி அருளி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஈஸ்வரன் இவனே என்று காட்டி அருளி
வலத் திருக்கை பரத்வத்தைக் காட்டி அருளி
திரு முழம் தாள் அளவும் நீட்டிய திருக்கை
இத் திருவடி இணையே தாழ்ந்தார்க்கு புகலிடம் என்று காட்டி அருளி
இடைத் திருக் கை சௌலப்யம் காட்டி அருளி-
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்-
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசின் வீற்று இருக்கும் நீர் பூத்த திரு மகளும் மகளும்
அடி வருடப் பள்ளி கொள்ளும் பரமனைத் தாம் இடை வீடின்றிப் பாவனை செய்யும் பரிசை இதனால்
அருளிச் செய்தார் ஆயிற்று –
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையெனும் பிடிக்க
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
-என்ற அபிசந்தி விசேஷத்தினால் இந்த விசேஷணம் இட்டு அருளின படி –
ரங்கராஜம் பஜேஹம்-
ஸ்ரீ ரெங்க நாதரை நான் சேவிக்கின்றேன்-
————————————————————————————————————————————————————————-
கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முகதஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருச பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம்—–2
—————————————————————————————————
கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் –
கஸ்தூரிக் காப்பினால் அமைந்த திவ்ய ஊர்த்வ புண்டர திலகம் உயையதும்
கர்ணாந்த லோலேஷணம் –
திருச் செவியின் அளவும் சுழலமிடா நின்ற திருக் கண்களை யுடையதும் –
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய திருக்கண்கள் -யுடையதும்
முகதஸ் மேரம நோஹரா தரதளம்-
வ்யாமோஹமே வடிவெடுத்தும் புன்முறுவல் செய்து கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்ற திரு வதரத்தை யுடையதும் –
அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி–அவ்யக்த மதுர மந்தஹாச விலாசம் விளங்கும் திரு அதரம்
முக்தா க்ரீடோஜ்ஜ்வலம் –
முத்துக் க்ரீடத்தினால் ஒளி பெற்று விளங்குவதும் –
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருச –
கண்டார் நெஞ்சைக் கவரும் அழகு வாய்ந்த –
பர்யாய பங்கே ருஹம் –
தாமரையே என்னலாம் படி யுள்ளதுமான –
ஸ்ரீ ரங்காதீபதே கதா நுவதநம் சேவேய பூயோப் யஹம் –
திரு முக மண்டலத்தை
அடியேன் மறுபடியும் என்று சேவிப்பேன் –
அந்தோ என் விடாய் தீருவது என்றைக்கு –
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக் கண் வளரும்
கடல் வண்ணர் க்கமலக் கண்ணும் ஒளிமதிசேர் திரு முகமும் கண்டு
என்னுள்ளம் மிக என்று கொலோ வுருகு நாளே -குலசேகரர்
குளிர்ந்த திரு முகத்தையும் திரு நாமத் தழும்பையும் முறுவலையும் இழக்க வென்றால் அடியேன் அஞ்ச மாட்டேனோ
அங்கே போனால் ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகமும் நம் பெருமாள் திரு முக மண்டலம் போலே குளிர்ந்து
இருந்தது இல்லை யாகில் முறிச்சுக் கொண்டு வருவதாக நினைத்து இருந்தேன் –
சொட்டை நம்பியும் அருளினாரே-
———————————————————————————————————————————————————————————————————–
கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப நேஷ்யாமி திவசான்—-3-
—————————————————————————————————–
கதாஹம்
காவேரி தட பரிசரே ரங்க நகரே
திருக் காவிரிக் கரை யருகில்
திரு வரங்க மா நகரில்
சயானம் போகீந்த்ரே –
திரு வநந்த வாழ்வான் மீது பள்ளி கொண்டு அருளா நின்ற
சதமகமணி ச்யாமல ருசிம் –
சதமகன் -இந்த்ரன்
மணி -ரத்னம்
இந்திர நீல ரத்னம் போன்று ச்யாமளமான காந்தியை யுடைய
பச்சை மா மலை போல் மேனி
பச்சை நீலம் கருமை -கவி சரணியில் பர்யாயம்-
உபாசீன க்ரோசன்
மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேத்ய
நிசமப நேஷ்யாமி திவசான்
பெரிய பெருமாளை பணிந்து
திரு நாமங்களை இடைவிடாது சொல்லிக் கதறி
அடியேன் எப்போது
ஜீவித சேஷமான நாட்களை எல்லாம் போக்குவேன்-
—————————————————————————————————————————————————————————
கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம்————————4-
———————————————————————————————————–
கதாஹம் காவேரி விமல சலிலே
திருக் காவேரியில் நிர்மலமான தீர்த்தத்திலே குடைந்தாடி –
தெண்ணீர் பொன்னி –
தெளிவிலாக் கலங்கள் நீர் சூழ் –
ஆறுகளுக்கு கலக்கமும் தேவும் சம்பாவிதமே
விமல சலிலே –என்று -தெளிவையே அனுபவிக்கிறார் இங்கே –
வீத கலுஷ –
சகல கல்மஷங்களும் அற்றவனாக –
விரஜா நதி ஸ்நானத்தாலே போக்க வேண்டிய கல்மஷமும் இங்கே தொலையும் -என்க-
பவேயம் தத்தீரே -சரம முஷி வசேயம் கநவநே –
விடாய் தீர்க்கும் சோலைகளிலே
எப்போது வசிக்கப் பெறுவேன் —
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை –
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம் –
மிகப் புனிதமும்
பெருமை தன்கியதுமான
மணல் குன்றிலே -ஸ்ரீ ரங்கத்திலே-
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –
அரவணை மேல் பள்ளி கொண்டு அருளா நிற்றவரும்
தாமரை போன்ற திருக் கண்களை யுடையவரும்
கல்யாண குணநிதியுமான
ஸ்ரீ ரெங்க நாதரை
எப்போது சேவிக்கப் பெறுவேன்-
——————————————————————————————————————————————————————–
பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிகத நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் ந–5-
———————————————————————————————-
பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிகத நீ ர –
பாக்கு மரங்களின் கழுத்து அளவாக பெருகுகின்றதும் –
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் இ றே
உப கண்டாம் ஆவீர்மோத ஸ்திமித சகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம்-
தேனோடு கூடினதும்
சிநேக யுக்தமுமான
தீர்த்தத்தை சமீபத்திலே யுடையதாய்
மகிழ்ச்சி யுண்டாக்கி
ச்திமிதமாய் இருக்கின்ற பறைவைகளினால்
அநு வாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை யுடையதாய் –
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம் பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம்ந
வழி நடப்பவர்களின் கூட்டங்களினால்
வழிகள் தோறும் திரட்டி எடுத்துக் கொள்ளப் படுகிற
மோஷத்தை யுடையதான –
முக்தி கரஸ்தம் -என்றபடி
கோயில் வாசமே மோஷம் என்பார்களே-
——————————————————————————————————————————————————————————
ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் —6-
———————————————————————————————————
ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம்
ஸ்ரீ ரெங்க நாதனே
தேவேந்த்ரனது சோலைப் புறங்களிலே அம்ருத பானம் பண்ணி மயங்கிக் கிடக்கிற
அமரர்களுள் ஒருவனாக ஒருகாலும் ஆகக்
கடவேன் அல்லேன்
பின்னியோ என்னில்
தேவரீர் யுடைய ஸ்ரீ ரெங்க நகரியைப் பற்றி வாழ்கிற
திரு வீதி நாய்களுள்
ஒரு நாயாகப் பிறக்கக் கடவேன் –
இந்திர லோகம் ஆலும் அச்சுவை பெறினும் வேந்தன்
மறு பிறவி அநிஷ்டம் இல்லை –
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்
திவ்ய தேச வாசத்துக்கு அனுகூலங்களாக பெறப் பெறில் குறை இல்லை –
வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாரி யுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தாய் -என்னக் கடவது இ றே-
———————————————————————————————————————————————————————————
அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி————————-7-
——————————————————————————————————————————–
ஸ்ரீ ரெங்க நாதரே
உண்மையில் உமது அருகில் வராத ஒரு நாயின் சம்பந்தமான பொய்யான அபவாதத்தினால்
சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
அந்த நாயினும் கடை கெட்டவனான அடியேன் வெகு சமீபத்தில் வந்திருக்கும் போது
என்ன சாந்தி செய்வீர்
நாயினும் கடை கெட்ட அடியேன் -நைச்ச்ய பாவம் -ஐதிகம்-
—————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி————————8-
————————————————————————————————————————————
எம்பெருமானார் யுடைய திவ்ய தேச யாத்ரையைப் பற்றி
நித்யானுசந்தானம் செய்வதற்காக
பட்டர் அருளிச் செய்து இருக்கிற முக்த ஸ்லோஹம் இது –
தென்திருவரங்கம்
கரிசைலம் என்கிற -திருவாத்தி மா மலை
அஞ்சன கிரி என்கிற திருவேங்கட மலை
கருடாசலம் என்கிற திரு நாராயணபுரம்
சிம்ஹாசலம்
ஸ்ரீ கூர்மம்
புருஷோத்தமம் என்கிற ஜகந்நாதம்
ஸ்ரீ பத்ரிகாச்ரமம்
நைமிசாரண்யம்
த்வாரகை
பிரயாகை
வடமதுரை
அயோதியை
கயை
புஷ்கரம்
சாளக்ராமம் –
இந்த திவ்ய தேசங்களில்
எம்பெருமானார் உகந்து வர்த்தித்த படியை அருளிச் செய்கிறார்-
——————————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ பராசுர பட்டர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply