தீங்கேதும் இல்லாத் தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் -ஓங்காரத்
தேரின் மேல் ஏறிச் செழும் கதிரினூடு போய்ச்
சேருவரே யந்தாமம் தான்—-7-
————————————————————————-
அவதாரிகை –
பல படியாலும் ஆச்சார்யன் பக்கல் பிரேமம் இல்லாதவனுக்கு
அதபதனம் ஒழிய உஜ்ஜீவனம் இல்லை என்று சொல்லா நின்றீர் –
ஆச்சார்யா ப்ரேமம் கனத்து இருக்குமவனுக்கு
உஜ்ஜீவனம் உண்டோ என்ன
தாளிணையை வைத்தவவரை நீதியால் வந்திப்பார்க்கு உண்டு ஆழியான் -என்று
தத்வ தர்சிகளாய் இருப்பாரும் அறுதி இட்டார்கள் ஆகையால்
இப்படி இருக்குமவனுக்கு உஜ்ஜீவனம் யுண்டு என்று சொல்லா நின்று கொண்டு
இப்பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் –
—————————————————————————–
வியாக்யானம் –
தீங்கேதும் இல்லாத் தேசிகன் தன் சிந்தைக்குப்-
தப்பில் குருவருளால் -என்றும்
தாழ்வாதுமில் குரவர்-என்றும்
நாமக்ரோத விவர்ஜிதம் -என்றும்
அநகம்-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வாச்சார்யன் பக்கல் பிரேமம் அற்று இருக்கை யாதல்
தன் பக்கல் சில மினுக்கங்களை நினைத்து இருக்கை யாதல்
சிஷ்யனுக்கு ஞான உபதேசம் பண்ணும் இடத்தில் சாபேஷனாய் இருக்கை யாதல்
கிராம குலாதிகளை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை தாழ நினைக்கை யாதல்
ப்ராபகாந்தரங்களில் அன்வயமாதல்
பிராப்யாந்தரங்களில் ருசி யாதல் –
ஞான அனுஷ்டானங்களில் குறை யாதல்
ஆத்மா குணங்களில் வைகல்யமாதல்
இவை ஆகிற பொல்லாங்கு ஒன்றும் இன்றிக்கே இருப்பானாய்-
தத் சம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிக -என்றும்
தத் ஷம் ப்ராப்தௌ வரவரமுநிர் தேசிக -என்றும் சொல்லுகிறபடி
தன்னைப் போலே அங்குத்தைக்கு புதியர் அன்றிக்கே
தன்னிலமாய் கொண்டு
தன்னை அங்கே சேர்த்து விடக் கடவனாய் இருந்துள்ள
ஸ்வாச்சார்யன் திரு உள்ளத்துக்கு
தீங்கு இல்லாமை யாகிற
ப்ரபாகாந்தரங்களில் அந்வயம் தொடக்கமான பொல்லாங்கு இல்லாமை –
தீங்கு ஏதும் இல்லாமை யாகிறது –
ஸ்வாச்சார்யன் பக்கல் பிரேமம் அற்று இருக்கை தொடக்கமான பொல்லாங்கு இல்லாமை
இத் தீங்கு ஒரு கால விசேஷத்திலே யுண்டாய் கழிந்தது அன்றிக்கே
எதன் நிவ்ருத்தி ஸ்வதஸ் சித்தமாய் காணும் இருப்பது –
தேசிகன் தன் –
ஸ்வத உத்தாரகத்வத்தால் வந்த பிரதாண்யம் இருக்கிறபடி
சிந்தைக்கு பாங்காக நேரே பரிவுடையோர் –
இப்படி மகா உபாகாரகரான ஸ்வாச்சார்யர் திரு உள்ளத்துக்கு அனுகூலமாம் படி
தத்யாத் பக்தித ஆதராத் -என்றும்
ஆசார்யஸ்ய ஸ்திர பிரத்யுபகரண தியா தேவ வத்ச்யா து பாச்ய-என்றும் சொல்லுகிறபடி
நேர் கொடு நேர் கிஞ்சித்கார முகேன
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் -என்கிறபடியே
தனக்கு அனுபாவ்யமான அவன் திரு மேனியைப் பேணிக் கொண்டு
அவன் பக்கலிலே நிரவதிக பிரேமத்தை யுடையவன்
பாங்காக –
சிஷ்யனுக்கு நிக்ரஹ காரணம் த்யாஜ்யம் என்கையாலே
அவனுக்கு ஸ்வரூபம் தத் பிரியம்
நடத்துகை ஒன்றும் போலே காணும் –
நேரே –
ஆள் இட்டு அந்தி தொழ ஒண்ணாத வோபாதியும்
மகிஷி ஸ்வேததுக்கு ஆள் இட ஒண்ணாத வோபாதியும்
தான் செய்ய கடவ அனுகூல வ்ருத்தியை அன்யரை இட்டு செய்விக்க ஒண்ணாது இ றே
பரிவுடையோர்
யஸ்மாத் ததுபதேஷ்டா சௌதஸ் மாத குருத ரோ குரு
அர்ச்சநீயச்ச வந்த்யசச கீர்த்தநீயச சர்வதா
த்யயேஜ்ஜே பேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேத் சதா
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத்
இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம் -இத்யாதிகளாலே
சர்வ கரணங்களாலும்
சர்வ பிரகாரங்களாலும்
சர்வ காலமும்
சர்வம் யதேவ -என்கிறபடியே
ஸ்வாச்சார்யன் தன்னையே எல்லாமாக பிரதிபத்தி பண்ணி
அவன் பக்கல் பிரேம உக்தனாய் இருக்கை ஒன்றுமே
சிஷ்யனுடைய ஞானம் பலம் ஆகிறது என்று சொல்லா நின்றது இ றே-
பரிவுடையோர் –
நிதியுடையோர் என்னுமா போலே
இது தான் பெறாப் பேறாய் இருப்பது ஓன்று இ றே
தத்ர அபி துர்லபம் மன்யே வைகுண்டே பிரியம் தர்சனம் -என்றது இ றே
பரிவுடையோர்
மேல் சொல்லுகிற புருஷார்த்த சித்திக்கு
வேண்டுவது இது ஒன்றுமே ஆய்த்து-
இங்கன் பரிவுடையனான இவனுக்கு
சித்திக்கப் புகுகிற பலம் தான் ஏது என்ன –
ஓங்காரத் தேரின் மேல் ஏறித் -இத்யாதி –
வைகுந்த மா நகர் அன்றோ இவன் கியது -என்கிறார் –
ஓங்காரத் தேரின் மேலேறி –
இப்படி ஸ்வார்ச்சார விசேஷத்திலே பிரேம சாலியான இவன்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்னூடே -என்கிறபடி
இங்கு இருக்கும் நாள் ஸ்வ வ்யாவ்ருத்தி தோற்றவும்
ஸ்வரூப அனுரூபமாகவும்
பரமபதமும் கூட தன சிறுமுறிக்கு செல்லும்படியாகவும்
உபய வேதாந்த கால ஷேப ஸ்ரீ யோடும்
ததீயராதன ஸ்ரீ யுடனும்
உகந்து அருளின நிலங்களில் மங்களா சாசன ஸ்ரீ யுடனும்
தத் கைங்கர்ய ஸ்ரீ யுடனும்
உடையவரைப் போலே நூற்று இருபது ஆண்டு குறைவு நிறைவுகள் இன்றிக்கே இருந்து
சரீர அவசானத்திலே தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்
படியான பரம பக்தி தலை எடுத்து
அந்தமில் பேரின்பத்து அடியோரோடும் கூடி ஒரு கோவையாக இருக்க வேணும் என்னும் பிராப்ய
த்வரை விஞ்சி
ஹார்த்தா நுக்ரஹீதனாய் கொண்டு
ஹிருதய கமலத்தின் நின்றும் புறப்பட்டு
ஸூ ஷூ ம் நை -என்னும் பேரை உடைத்தான மூர்த்த்ணய நாடியாலே
சிர கபாலத்தைப் பேதித்து
ஓங்கார ரதமாருஹ்ய -என்கிறபடியே மனஸ் ஸூ சாரத்தியம் பண்ண
பிரணவம் ஆகிற தேரின் மேல் ஏறி-
செழும் கதிரி னூடு போய்-
அநந்தரம்
அர்ச்சிஷ மேவாபி சம்பவந்தி அர்ச்சிஷோஹா அன்ஹ ஆபூர்யமான பஷம்
ஆபூர்யா மான பஷாத் ஷடுதங் மாசான்
மாசேப்யஸ் சம்வஸ்த்ரம் சவாயுமா கச்சதி -என்கிறபடி முற்பட
அர்ச்சிசைக் கிட்டி
பின்பு அஹஸ்சையும்
சுக்ல பஷ அபிமாநியையும்
உத்தராயண அபிமாநியையும்
சம்வஸ்தர அபிமாநியையும்
வாயுவையும்
சென்று கிட்டி -அவர்கள் பெரிய ப்ரீதி உடன் வழி நடத்துகை முன்னாக
ஸ ஆதித்ய மா கச்சதி -என்றும்
பிரவிசச்ய ஸ சஹாஸ்ராம் ஸூ ம் -என்றும்
தேரார் கதிர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -என்றும் சொல்லுகிறபடி
நெருங்கி இருந்துள்ள கிரணங்களை யுடையனான ஆதித்ய மண்டலத்தை பேதித்து
அவன் சத்கரிக்க அவ்வருகே போய்ச் சென்று-
சேருவரே அந்தாமம் தான் –
அநந்தரம்
ஆதித்யா சந்த்ரமசம்
சந்திர மசோ வித்யுதம்
ஸ வருண லோகம்
ஸ இந்திர லோகம்
ஸ பிரஜாபதி லோகம்
ஸ ஆகச்சதி விரஜா நதீம்
தம் பஞ்ச ஸ தாநப்சரஸாம் பிரதிதாவந்தி
தம் ப்ரஹ்ம அலங்காரேண-என்கிறபடியே
அம்ருதாத்மகனான சந்திரனையும்
ஆதிவாஹிக கோடியிலே பரிகணிதமான அமானவனையும்
சர்வ வ்யாப்கனான வருணனையும்
த்ரைலோக்ய பாலகனான இந்த்ரனையும்
முக்தராய் போருமவர்களை சர்வ பிரகாரத்தாலும் மிகவும் ஸ்லாக்கிக்க கடவனான பிரஜாபதியையும் சென்று கிட்டி
அவர்கள் சத்கரிக்கும் சத்காரம் முன்னாக அவ்வோ லோகங்களையும் கடந்து-
ஈஸ்வரனுக்கு க்ரீடா கந்துக ஸ்தா நீயமான அண்டத்தையும்
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கான ஆவரண சப்தகத்தையும்
முடிவில் பெரும் பாழான மூலப் பிரக்ருதியையும் கடந்து
முன்பு சம்சாரியான நாளில் தான் பட்ட இழவு எல்லாம் தீர
மிகவும் ஸூ கோத்தரமான மார்க்கத்தாலே
தனக்கு உபாயமான பாரளந்த பாத போது போலே
கடுநடை இட்டுப் போய்
அம்ருத வாஹிநியான விரைஜையிலே குடைந்து நீராடி
வன் சேற்று அள்ளலையும்
வாஸநா ரேணுவையும்
விரஜா ஸ்நானத்தாலே கழியப் பெற்று –
அவ்விரஜைக் கரையிலே சங்கு சக்கர கதாதரானாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
அமானவன கர ஸ்பர்சம் முன்னாக
லாவண்ய சௌந்தர்யாதி கல்யாண குண கரமாய் ஸூத்த சத்வமயமான
பகவத் அனுபவ ஏக ப்ரியகரமாய் –
ஒளிக் கொண்ட சோதியான விக்ரஹத்தையும்
ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவத்தையும் பெற்று
பகவத் அனுகூல ஏக போக்யரான நித்ய சித்தறாலே நெருங்கி
அவர்களாலும் அளவிட ஒண்ணாத அளவையும்
ஐஸ்வர்யத்தையும் ஸ்வ பாவத்தையும் யுடைத்தான
திவ்ய தேசத்தை கண்கள் ஆர அளவும் நின்று கண்டு கைகள் கூப்பித் தொழுது
அமாநவ பரிசரத்தில் சங்க காஹள பேரீ ம்ருதங்களின் யுடைய முழக்கத்தைக் கேட்டு
ஓடுவார் விழுவார் போற்றுவார் புகழுவார்
பூ மழை பொழிவார் பாவாடை விரிப்பார்
பாதங்கள் கழுவுவாராயக் கொண்டு
எதிரே திரள் திரளாக புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய ஆனந்த கோலாஹலத்தை அனுபவித்துக் கொண்டு போய்
அவர்கள் எதிர்கொண்டு அலங்கரித்து சத்கரிக்கை முன்னாக
ஸ ப்ரஹ்ம லோக மபிசம்பத்யதே -என்றும்
அந்தாமம் -என்றும்
பொன்னுலகு -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ பிரகாரத்தாலும் ஸ்ப்ருஹணீயமாய்
தன்னுடைய வரவாலே புதுக் கணித்து மிகவும் அழகியதாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு போக ஸ்தானமாயும்
அவனுடைய செங்கோலாலே ஏகாதபத்ரமாய் நடத்தக் கடவதாயும்
அவன் திருவடிகளிலே அசேஷ சேஷ வ்ருத்திகளிலும்
அந்விதமாகைக்கு ஏகாந்தமாய் இருந்துள்ள
ஏர் கொள் வைகுந்த மா நகரத்தைச் சென்று கிட்டி
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்தில் இன்புற்று இருந்து
என்கிறபடியே
அம்ருத சாகர அந்தர் நிமக்ன சர்வாயவனாய்க் கொண்டு
யாவத் காலமும் இருப்பன் –
சேருவரே –
இவ்வர்த்தத்தில் அசிர்ப்புப் பண்ண வேண்டுவது இல்லை –
இது சரதம் என்கிறார்
ந சம்சயோஸ்தி -என்றது இ றே-
அந்தாமம் தான் –
லீலா விபூதியில் காட்டிலும்
நித்ய விபூதிக்கு யுண்டான
ப்ரதான்யம் இருக்கிற படி –
ஆக
இப்பாட்டாலே
சரம பிரகரணத்திலே
ஆச்சார்யா சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் -இத்யாதிகளால் சொல்லுகிற
அர்த்த விசேஷங்களை பிரதிபாதித்து அருளினார் ஆய்த்து –
——————————————————————————–
நிகமம் –
ஆக
இப்பிரபந்தத்தால்
அர்த்த பஞ்சக உபதேஷ்டாவே ஆச்சார்யன் ஆகிறான் –
என்னும் இடத்தையும்
அவன் இடத்தில் பிரேமம் அற்று இருப்பார் ஸ்வாத்மகாதகர்
என்னும் இடத்தையும்
அவர்கள் ஜ்ஞான விசேஷ யுக்தர்களே யாகிலும்
நித்ய சம்சாரிகளாய்ப் போருவர்
என்னும் இடத்தையும்
அதுக்கு க்ருதக்ன்னரான இவர்கள் அதி க்ரூரர்
என்னும் இடத்தையும்
ஸ்வ உத்கர்ஷதையைத் தேடுகை ஆச்சார்யனுக்கு அழுக்கு
என்னும் இடத்தையும்
இவ் வழுக்குக்கு அடியான தோஷத்தை பெரிய பெருமாள் தாமே தமக்கு
போக்கி அருள வேணும் என்னும் இடத்தையும்
ஆச்சார்யன் பக்கல் பிரேம யுக்தனான அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்திலே சென்று
முக்த ஐஸ்வர்யத்தைப் பெற்று கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே
மூர்த்த அபிஷிக்தனாய்க் கொண்டு யாவதாத்மபாவியாக இருப்பன்
என்னும் இடத்தையும்
அருளிச் செய்து நின்றார் ஆய்த்து-
———————————————————————————–
விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply