கீழ்
உணர்ந்து பார் -என்கிற சம்பந்தம் தான் ஏது
நீர் அவர்ஜநீயர் ஆகைக்கு ஹேது ஏது என்று அவருக்குக் கருத்தாக
அத்தை நிதர்சன முகத்தாலே வெளியிடா நின்று கொண்டு
தேவர்க்கு அவர்ஜநீயன் – என்கிறார்-
தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு எதிராசா -உன் புதல்வன்
அன்றோ யான் உரையாய் யாதலால் உன் போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் —-5-
உறுதல் -கிட்டுதல்
அப்படி இராததாகையால் அடியேனையும் அருளிப் பாடிட்டு
அழைத்துக் கொண்டு அருள வேணும் -என்கிறார்
தன் பிரிய புத்ரனானவன் சங்கதன் ஆகாமல் தேசாந்தரஸ்தனாய் இருக்க
அவனை ஒழிய தானே ஏகனாய் புஜிக்கும் ஐஸ்வர்யாதி போகத்தாலே
அந்த பிதாவானவன் அப்படி புஜிக்கும் அந்த போகத்தாலே ஸூகத்தை அடையுமோ
எதிகளுக்கு நாதரானவரே
அப்படியே அடியேனும் –
கரீயான் ப்ரஹ்ம தாபிதா -என்னும்படியான
தேவர்க்கும் அவர்ஜநீயனான புத்திரன் அன்றோ –
இதில் சந்தேஹம் இல்லை என்பதை தேவரீரே அருளிச் செய்து அருளீர்
இப்படி சம்பந்தம் அவர்ஜநீயம் ஆகையாலே
கட்டெழில் வானவர் போகம் -என்கிற தேவரீர் உடைய போகம்
அடியேனை ஒழிந்த திவசம் ச ரசமாய் இருந்ததோ –
அப்படி இராது ஆகையாலே
அடியேனையும் அருளப் பாடிட்டு அழைத்துக் கொண்டு அருள வேணும் –
யத் விநா பாரதம் த்வாஞ்ச சௌமித்ரே புஜ்யதே ஸூகம் -என்னக் கடவது இறே
———————————————–
உன் போகம் நன்றோ எனை ஒழிந்த நாள் என்று நம் பேரிலே பழி இடா நின்றீர் –
கால க்ரமத்திலே அதுக்கீடான பாகம் விளைந்தவாறே
அப்படியே செய்கிறோம் என்று திரு உள்ளக் கருத்தாக
அது அனுகூலர்க்கு அன்றோ அப்படியாம்
பிரதிகூலனான எனக்கு
அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை
தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –
வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் –ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா விவ் வுடலைத்
தீர்க்கவே யான வழி செய்—6-
ஆம் பரிசால் -ஸ்வரூப சத்தை யுண்டாம் பிரகாரத்திலே
ச ரசமான கரும்பாகில் இறே-நாள் தோறும் முற்ற முற்ற ரசம் ஏறி வருவது
வி ரசமான வேம்பு முற்ற முற்ற நாள் தோறும்
அந்த விரசமான கைப்பே விஞ்சி வருமா போலே
என்னுடைய தேஹமானது கால க்ரமத்திலே பக்வம் ஆகும் காட்டில்
க்ரூர கர்மாவாய் இருக்கிற என்னுடைய ஹேய குணமே அதிகமாம்
ஆகையால்
இது ஸ்வரூப சத்தை யுண்டாம் பிரகாரத்தில் முற்கோலிச் சிந்தித்து –
எதிகளுக்கு நாதரானவரே
இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயம் செய்து அருள வேணும் –
வழி -உபாயம்
எதிராசா -என்று அடியிலே சம்போதிக்கவுமாம் –
——————————————————-
உம்முடைய தோஷத்தை ஏற்கவே முற்கோலி நாம் போக்குகைக்கு பிராப்தி ஏது –
நீர் தான் ஸ்வ கார்யத்தில் அஜ்ஞராய் அசக்தராய் இருந்தீரோ என்ன
ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்
ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-
அன்னை குடி நீர் அருந்தி முலை யுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ–என்னே
எனக்கா எதிராசா வெல்லா நீ செய்தால்
உனக்கு அது தாழ்வோ வுரை—7
பிரஜையினிடத்தில் அத்யந்த வாத்சல்ய யுக்தையான மாதாவானவள்
ஔஷத சேவைக்கும் ஷமம் அன்றிக்கே
அத்யந்தம் சைசவ யுக்தமாய்-ஸ்வ போஷ்யமாய்
இருக்கிற ஸ்தநந்த்ய பிரஜைக்கும் ஏதேனும் ஒரு அனுக்கம் உண்டானால்
இது நம் குறையாலே வந்தது என்று தான் குடி நீர் முதலான
ஔஷத சேவை பண்ணி அதனுடைய அனுக்கத்தைத் தவிர்க்குமே –
அப்படியே மாத்ரு வத்சலரான தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யனாய் இருக்கும் அடியேனுக்காக
எதிகளுக்கு நாதரானவரே
அடியேனால் அனுஷ்டேய அம்ஸமாய் இருப்பனவைகள்
எல்லாத்தையும் அனுஷ்டித்து ரஷித்தால் தேவர்க்கு அவத்யம் அன்றே –
தேஜஸ் கரமாய் இருப்பது ஓன்று அன்றோ –
இவ் வர்த்தத்தை அஜ்ஞனான என்னைக் கொண்டு பேசுவிக்க வேணுமோ
சர்வஞ்ஞரான தேவர் அருளிச் செய்யல் ஆகாதோ
இது என்ன ஆச்சர்யம்
அருந்துதல் -உண்டல் –
ஆச்சார்ய அபிமானம் ஆவது
இவை ஒன்றுக்கும் சக்தி இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்
இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் தன் குறையாக நினைத்துத் தான்
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல பரம தயாளுவான-மகா பாகவத அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்கு ஆக்குகை-என்னும் அளவாக
அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை யாய்த்து
இவர் இப்படி அருளிச் செய்தது
—————————————————–
கீழ்
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமம் அன்றிக்கே இருக்கிற ஸ்த நந்த்ய பிரஜையை
மாதா ரஷிக்குமா போலே
உம்மையும் ரஷிக்க வேணும் என்று -பிராப்தி சொல்லா நின்றீர் –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமராய்
சத் கர்மங்களின் உடைய நிவ்ருத்தியிலும்
அசத் கர்மங்களின் உடைய பிரவ்ருத்தியிலும் நிரதராய்
ஸ்வ -விநாசத்தை-விளைத்துக் கொள்ளுகிற உம்மை நம்மால் ரஷிக்கப் போமோ -என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு திரு உள்ளமாக கருதி
அப்படியானாலும் அடியேனைக் காத்து ரஷியாது போது தேவர்க்கே அவத்யமாம் -என்னுமத்தை
ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் கண்டு இருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் -நன்கு உணரில்
என்னாலே என்னாகும் எதிராசா
உன்னாலே யாம் உறவையோர் —–8-
அஞ்சு வயசுக்கு உட்பட்ட பிரஜையினுடைய துர் மரணம் எல்லாம்
மாதாவினுடைய அந்தவநத்தாலே வந்ததாக அவளுக்கு சாஸ்திரம் விதிக்கையாலே
அப்படி வாராமல் கண்ணில் வெண்ணெய் இட்டு நோக்க வேணும் இறே மாதாவுக்கு –
ஆகையாலே தன்னுடைய முக்த பிரஜையானது தனக்கு நாச கரம் என்று அறியாமல்
தன் அளவன்றிக்கே
ஆழத்தாலும் அகத்தாலும் பெருத்து இருப்பதான கிணற்றை ஆசன்னமாக இருக்கக் கண்டு
அத்தை பிரதிஷேதியாமல் உபேஷித்து இருந்தாள் என்கிற மாத்ரம் கொண்டு அன்றோ
அந்த மாதாவானவள் அபவாதம் பிராப்தை யாகா நின்றாள் –
அப்படியே -நன்றாக நிரூபிக்கில்
பாபங்கள் ஆகிற படு குழியை கிட்டி நின்ற என்னாலே
ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனே யாகிலும்
அத்தை நிஷேதித்து ரஷிக்க வேணும்படி
எதிகளுக்கு நாதரான தேவராலே யுண்டாம் சம்பந்தத்தை திரு உள்ளம் பற்ற வேணும் –
இத்தால்
சம்பந்தம் அடியாக சர்வ தசையிலும் ரஷிக்க வேணும் -என்று கருத்து –
இதத்தாய் இராமானுசன் -என்கிற திவ்ய ஸூக்தியையும்
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால்
தாயே தள்ளினாள் என்னக் கடவது – இறே -என்கிற திவ்ய ஸூக்தியும்-ஆயத்து இதுக்காகும் –
—————————————————–
நோற்றேன் பல் பிறவி -என்கிறபடியே
நீர் நும்முடைய துஷ் கர்மத்தாலே
இஜ் ஜன்மமே அன்றிக்கே இன்னம் பல ஜன்மமும் எடுக்க வேண்டும்படியாய்
இப்படி கை கழிந்து இருக்கிற யுமக்கு
ஸ்ரீ எம்பெருமானாராலே செய்து தலைக் கட்டலாவதே -என்று பார்ஸ்வஸ்தருக்கு கருத்தாக
அப்படி யானாலும்
அடியேனுக்காக இன்னமும் அவதரித்து ரஷித்து அருளுவர் என்கிறார் –
கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —9-
கிணற்றில் விழுந்த பின்பு அன்றிக்கே சற்றும் தாழாமல் நின்று
பேதைக் குழவி -என்னும்படியான முக்த பிரஜை யுடனே கூடக் குதித்து எடுத்து
அதின் அநவதாநத்தாலே வந்த ஆபத்தைப் போக்கி ரஷிக்கும்
ஸ்நேஹ புக்தையான அந்த மாதாவைப் போலே
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்கிறபடியே
ஏதச் சரீர அவசா நத்திலே மோஷமாம் படியான பிரபத்தி வைபவத்தையும் அழித்து
நான் பண்ணின பாபத்தாலே இன்னமும் சில
ஜன்மங்களை எடுக்கும் படி ஆனேனே ஆகிலும்
இனி இப்படி கை கழிந்த பின்பு
எனக்கு ஜனகராய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
நான் பிறந்த ஜென்மத்துக்கு ஈடாக தாமும் என்னை உத்தரிப்பதாக
எதிர் சூழல் புக்கு அவதரித்து அருளுவார் –
ஆகையால் அதில் எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை —
உடைமைக்கு ஒரு முழுக்கு
உடையவனுக்கு உடமை பெறும் தனையும்
முழுக்க வேண்டி இறே இருப்பது –
————————————
எம்பெருமானார் திருவடிகளை அகன்று அந்ய மனஸ்தராய் இருக்கையாலே
அன்றோ ஜென்மத்துக்கு அடியான கர்மம் புகுகிறது
இனி அந்தப் பிரசங்கம் இல்லாதபடி அவர் திருவடிகளை பொருந்தி வாழ்
என்று திரு உள்ளத்தை குறித்து அருளுகிறார்-
பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் -தே மலர்தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் ——10-
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -இத்யாதிப் படியே
புஷ்பத்திலே பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நிரதிசய போக்யமான
பூவார் கழல்களுக்கு –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று ஸ்ரீ சடகோபனாய்-
இப்படி முகில் வண்ணன் அடியை அடைந்து – அத்தாலே
உற்றேன் உகந்து பணி செய்து -என்னும்படி
தாம் ஹர்ஷிக்கும் சாத்விக ஜன சம்பத்தான ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய வகுளாபிராமமாய்
மனுஸ்பந்தியான புஷ்பம் என்றலாம் படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு ஸ்வரூப பிராப்தமாய் இருக்கையாலே அனுரூபமாய்
மேவினேன் அவன் பொன்னடி -என்னும்படி பொருந்தி
அத்யந்த அபிமதமான திருவடி நிலைகளாய்
என்னுடைய ஸ்வரூப சத்திக்கு காரண பூதராய்
ஸ்ரீ இராமானுஜன் என்று நிரூபகத்தை யுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி நெஞ்சே வாழ -என்கிறபடி
எனக்கு பவ்யமான மனசே
அநந்ய பிரயோஜனதையாலே பாத ரேகை போலே கிட்டி இந்த சம்பத்தை பெற்று வாழ் –
இத்தால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யத்துக்கு எல்லை நிலம் இவர் ஆகையாலே
அவர் திருவடி நிலைகளுக்கும்
ஸ்ரீ யதீந்திர பிரவணர் என்று நிரூபக மாக வேணும் இறே-
செல்வச் சடகோபர் -என்கிறதுக்கு
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிற செல்வத்தை பெற்றவர் ஆகவுமாம் –
ஏய்கை-பொருந்துகை
வாய்கை -கீட்டுகை-
—————————————-
நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும் பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் வாழும் அவர்கள்
பேற்றைப் பெற வேணும் என்று அபேஷியா நின்றீர் –
அது நமக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ வடுக நம்பி போல்வாருக்கு அன்றோ சித்திப்பது
என்று திரு உள்ளக் கருத்தாக
அப்படியே த்வத்தந்ய தேவரான ஸ்ரீ வடுக நம்பி நிஷ்டையை அடியேனுக்கும் உண்டாக்கி
யாவதாத்மபாவி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி –தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும்
உன் தனக்கே ஆட்கொள்ளு உகந்து—-11-
எதிகளுக்கு நாதர் ஆனவரே –
தேவரை ஒழிய-தேவர்க்கு தேஸ்யரான ஸ்ரீ பெரிய பெருமாளையும்
த்வத் அனுபவ கைங்கர்யாதிகளுக்கு நித்ய சத்ருவாகக் கருதி
தேவரை ஒழிய வேறு ஒரு பர தேவதையும் அறியாது இருப்பாராய்
அத்தாலே ஸ்வரூப அனுரூபமான யசஸ்சை பிராப்தராய்-இரு கரையர் அன்றிக்கே
பெரு மதிப்பராய் இருக்கிற ஸ்ரீ வடுக நம்பி
தம்முடைய சரம பர்வ நிஷ்டையை அதிலே அபேஷை யுடைய அடியேனுக்கு பிரசாதித்து அருளி
எனக்கே ஆட் செய் எக் காலத்தும் -என்கிறபடியே
தேவர்க்கே ரசவஹமாம்படி
சர்வ காலத்திலும் உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும்
அங்கே போகிலும் அவர் உகந்த அடிமையேயாக வேணும் என்று கருத்து –
மன்னு நிலை சேர் வடுக நம்பி என்று பாடமான போது
பொருந்தி இருக்கிற சரம பர்வ நிஷ்டை ஆகவுமாம் –
———————————————–
நீர் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் நாம் செய்கைக்கு அடியான உறவு உண்டோ
என்று அவருக்குக் கருத்தாக உண்டு என்று
ஸ்ரீ பிள்ளை திருவடிகளிலே சம்பந்தம் பெற்ற பிரகாரத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார்-
தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் ——12-
ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-அவர் அடி பணிந்து உய்ந்த தேவருடையவும்
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
ஜ்ஞான பக்தி விரக்தியாதி களாலும் பூரணராய்
அத்தாலே
திருவுடை மன்னரில் தேசுடையார் -என்று பேசும்படியான
பெருமையை யுடையவர் ஆகையாலே
திக் தேசங்களில் எல்லாம் பிரகாசிக்கும் படியான பிரபாவத்தை யுடையராய்
ஸ்ரீ திருவாய் மொழியோட்டை சம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக யுடையராய்
தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டு கொள்ளுகை முதலான
க்ரூர நிஷிதமான மாசு இன்றிக்கே இருப்பராய் இருக்கிற
ஸ்ரீ சைல நாதன்
தம்முடைய தயா பாத்ரமான என்னை
கருணா பரிணாம ரூப ஸ்நேஹத்தாலே
இவன் எப்படி யானால் ஜீவிக்கும் என்று விசாரித்து
பிராப்த சேஷியான தேவர் திருவடிகளிலே சேர்த்து அருளினார்
அப்படியே தேவரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply