ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -தனியன் /அவதாரிகை – /பாசுரம் 1-4–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்
தன் பரம பத்தி தலை யெடுத்து மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்
மணவாள மா முனிவன் வந்து

—————————————————-

வம்பவிழ் தார் வண்மை மணவாள மா முனிகள்
அம் புவியில் கால் பொருந்தா வார்த்தியினால் -உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள்
நண்ணி யுரைத்தார் நமக்கு

———————————————————-

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்
பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்
அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே
வம்பவிழும் தாரான் -என்றும்
தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று

—————–

லோகாச்சார்ய முநிம் வந்தே தீசமாதி குணார்ணவம்
தம் சடாரி குரோ ச சிஷ்ய மார்த்தி வ்யாக்யாம் கரோதிய

ஆர்த்தி வ்யாக்யாம் வர வர முனே ரார்த்த பந்தோர் மநோஞ்ஞாம்
லோகாச்சார்யோ முநி ரக்ருத சல்லோக மாஹ்லாத
ஆச்சார்யாணாம் சடரி புக்ரு தேரர்த்த நிர்வாஹ சக்தௌ
ப்ராசாம் பச்சாத்புவி ஸூ மதயோயாம் வதந்தி பிரகல்பம்

காந்தோ பயந்தருயமி நோ ஜகதார்யா யோகீ
வ்யாக்யாத் க்ருபா ரச நிதி கருதி மார்த்த்ய பிக்யாம்
யம்பூதலே நிகைய சீர்ஷே வயதோ வதந்தி
காந்தோ பயந்தரு யமி நோ வதாரம் த்வீதீயம்

———————————————————-

அவதாரிகை –

ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் திருமால் அடியார்கள் என்று ததேக நிரூபணீயரான தன் அடியார்க்கு
ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பது
பிராப்ய ருசியைப் பிறப்பித்து அருளிய பின்பு ஆயிற்று —

அந்த பிராப்ய ருசி தான்
பரபக்தி பரஞான பரம பக்தி ரூபாயாய் இறே பரிணமிப்பது –
அப்படிப் பட்ட பக்தியை இறே ஆழ்வாருக்கு திரு மேனியோடு உண்டாக்கி அங்கீ கரித்தது –

அத்தைப் பற்ற
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும் அருளிச் செய்தார் –

அது தான் இவர் சம்பந்தம் அடியாக
எல்லாருக்கும் பிராப்திக்கு முன்னே சித்திக்கும் படியாய் இருக்கும்

தத் சித்யர்த்தமாக
பகவன் பக்தி மபிப்ரயச்சமே -என்றும்
பர பக்தி உக்தம் மாம் குருஷ்வ -என்றும் இறே ஆச்சார்யர்கள் அர்த்தித்து அருளிற்று –

அப்படி ஸ்வ அபி லஷிதத்தை அர்த்தித்து பெற்று க்ருதார்த்தராய்
கரை கண்டோர் -என்று முக்தராய் சொல்லப்படுகிற
ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பரகாலாதிகளோடு ஒரு கோவையாக எழுந்து அருளி இருப்பாராய்
பின்பும் ருசி உடையோர்க்கு எல்லாம் ஆஸ்ரயணீயர் ஆகைக்காக
ஸ்வ அவதார ஸ்தலாதிகளிலும் அர்ச்சா ரூபியாய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை எப்படி என்னை அங்குத்தைக்கு அனந்யார்ஹராம்படி
அறவிலை செய்து கொடுத்து–
தத் விஷய ப்ராவண்யத்தையும் ஜனிப்பித்து அருளினாரோ

தாமும் அப்படியே நிரவதிக வ்யாமோஹத்தை யுடையராய்
ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -என்னுமா போலே
ஸ்ரீ யதீந்திர பிரவணர்-என்று-
ததேக நிரூபணீயராம் படியான ஸ்ரீ ஜீயரும்

பாலே போல் சீரில் பழித்து ஒழிந்தேன் -என்றும்
நையும் மனமும் உன் குணங்களை உன்னி -என்றும்
அவருடைய கல்யாண குணங்களிலே பரிபக்குவ ஸ்வ பாவராய்–
அத்தாலே பிராப்த சேஷியாய்
சரம பர்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை

மெய் கொள் காண வேணும் -என்கிற அபி நிவேச அதிசயத்தால் மெய் வெளுத்து
தத் கார்யமான பிராப்தி தசையை பிராப்தராய்
இப்படி கரை புரண்ட ஆற்றாமையை யுடையராய் இருக்கிற தாம்
ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே
தமக்குப் பிறந்த பரம் பக்தி தசையைப் பேசி அனுபவித்து அருளுகிற முகத்தாலே
சரம பர்வ நிஷ்டராய் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
பிராவண்யத்தை யுடையராய் இருக்கும் சரம அதிகாரிகள் எல்லாருக்கும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி
இப் பிரபந்த முகேன அவற்றை வெளி இட்டு அருளுகிறார்

பக்தி எல்லாம் தங்கியது என்ன -என்னும்படி இறே இவருக்கு
ஸ்ரீ எதிராசன் சேவடி மேல் தான் பரம பத்தி தலை எடுத்தது

பரமாபத மாபன்ன -என்னும்படியும்
முடிந்த அவா -என்னும்படியும்-சொல்லும் படியான பரம பக்தியை பிராப்தராய்
அந்த தசையைப் பேசின பாசுரம் ஆகையாலே
ஆர்த்தி -என்று இதுக்கு நிரூபக திரு நாமமே இருப்பது

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்
பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்
அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே
வம்பவிழும் தாரான் -என்றும்
தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று

அப்படியே இவர்க்கும் ஆகார த்வயம் நடவா நின்றதே யாகிலும்
அதில் அனுபவ அலாபத்தால் உண்டான ஆர்த்தி இறே பிரசுர்யேண் இப் பிரபந்தத்தில் நடந்து செல்கிறது –

இவர் தாம்
சம காலத்தில் போல் ஸ்ரீ ஆழ்வான் முதலான அனைத்து முதலிகளோடே
தழுவி முழுசி பரிமாறி
ராமா நுஜபோஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அன்வயித்து வாழ வேணும் என்று மநோ ரதித்தவர்க்கு
அது மானச அனுபவ மாத்ரமாய்
அதீத காலம் ஆகையாலே பிரத்யஷ யோக்கியம் அன்றிக்கே ஒழிகையாலும்

இனி
இவர் தேச விசேஷத்திலே நித்ய கைங்கர்ய நிரதராய் இருக்கிற படியை அனுசந்தித்து
அவர் விஷயத்திலே தாமும் அப்படியே வழு விலா அடிமை செய்து வாழ வேணும் என்று
அவர் திருவடிகளிலே இத்தை பிரார்த்தித்து அருளுகிறார் –

ஆகை இறே –
வடுக நம்பி தன்னிலையை என் தனக்கு நீ தந்து எதிராசா
எந்நாளும் உந்தனக்கே ஆட்கொள்ளு உகந்து -என்று அருளிச் செய்து அருளிற்று –

அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
ஸ்ரீ இளைய பெருமாள் நிலை ஸ்ரீ எம்பெருமானாரது
சத்ருக்னோ நித்ய சத்ருகன -என்று
பேசும்படியான அவர் நிலை யாய்த்து இவரது

இனி –
ஆ முதல்வன் -என்னும்படி
அவதார விசேஷமாய் இருந்துள்ள வ்யக்தி விசேஷங்கள்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து உய்ந்த ஸ்ரீ ஆழ்வாரும்
அந்த ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்த ஸ்ரீ எம்பெருமானாரும்
அவர் திருவடிகளிலே அநந்ய சரண்யரான ஸ்ரீ ஜீயருமாய் -இறே உள்ளது-

இப்படி இவர்களோடு ஒரு கோவையான வைபவத்தை யுடைய இவர்
ஸ்ரீ ஆழ்வாருடையவும் ஸ்ரீ உடையவருடையவும் வைபவத்தை
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி யாலும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலையாலும்
ஸ்ரீ யதிராஜ விம்சதியாலும் -அருளிச் செய்து-

அதிலும் தம் அபி நிவேசம் எல்லாம் தோற்ற –
பராங்குச பாத பத்தாம் -என்றும்
சடகோபன் தேன் மலர் தாட்கே ஏய்ந்து இனிய பாதகமாம் எந்தை இராமானுசன் -என்றும்
முடிந்த நிலமாகச் சொல்லப்படுகிற சரம பர்வமே சரமாவதி என்று
இச் சரம அர்த்தத்தை
சரம காலத்தில்
சரம பிரபந்த ரூபேண இதிலே யாய்த்து வெளி இட்டு அருளிற்று –

அதில்
ஸ்ரீ யதிராஜ விம்சதி
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று தொடங்கி
தஸ்மாத் அநந்ய சரணோ பவ தீதிமத்வா -என்று தலைக் கட்டுகையாலே
பிராபக பரமாய் இருக்கும் –

இங்கு -வாழி எதிராசா -என்று தொடங்கி
இந்த அரங்கத்து இனிது இரு நீ -என்று தலைக் கட்டுகையாலே
இது பிராப்ய பரமாய் இருக்கும்

பிராப்ய த்வர அனுசந்தான பரமாய் இருக்கும் உத்தர வாக்கியம்
அதில் தாத்பர்யமாய் இருக்கும் இது –
பிராப்யத்தில் முடிந்த நிலம் இறே ததீய கைங்கர்யம்

இனி அந்த கைங்கர்ய வேஷத்தை
ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து அறிய வேண்டும் அத்தனை இறே உள்ளது

இவருக்கு இப்பிரபந்தத்தில் ஓடுகிற தசை தான் அநேக பாவ வ்ருத்திகளை யுடைத்தாய்
இது தான் ஒரு சந்தஸ்சில் அடங்காமல்-பல சந்தஸ் ஸூக்களிலும்
அவற்றை அருளிச் செய்கிறார் –

—————————————————–

இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும்
அன்பராய் அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –

தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே –

தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –

விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –

——————————————————

அவதாரிகை –

அடியிலே–தொழுது எழு மனனே -என்று அனுசந்தித்த ஸ்ரீ ஆழ்வார்
பஜன ஆலம்பனமான திரு நாமத்தை
இரண்டாம் திருவாய் மொழியிலே – வண் புகழ் நாரணன் -என்று வெளியிட்டால் போலே

இவரும்-இப்பாட்டில் அத்தோடு விகல்பிக்கலாம்படியான
ஸ்ரீ இராமானுசன் -என்கிற திரு நாமத்தை வெளி இடா நின்று கொண்டு

கீழில் பாட்டில்-
அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை
இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை
எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

இராமானுசாய நம வென்று சிந்தித்து
இரா மானுசரோடு இறைப் போழ்து -இரா மாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு—2-

இராமானுஜாய நம என்று
சர்வ காலத்திலும்-இம் மந்த்ரத்தை மனனம் பண்ணி இருக்கை பிராப்தமாய் இருக்க

இப்படி சதா ஜப்யமான இத்தைச் செய்யாதே
நித்ய ஜீவனத்தை இட்டு சத்தை அன்றிக்கே அசத்துக்களாய்
பஸூ ப்ராயரான மனுஷ்யர்கள் ப்ரதிகூலர் ஆகையாலே
அவர்களுடைய சஹ வாசமும் துஸ் சஹமுமாய்
அவர்களுடன் ஷண காலமும் வசியாத பிரகாரம் சிந்தித்து இருக்கும்
அனுகூலர் ஆனவர்களுடைய திருவடிகளே
தங்களுக்கு அபாஸ்ரயமாக ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய திருவடிகளில்
ஸ்துத்ய அபிவாதனம் பண்ணுமவர்கள்
அரும் பேறு வானத்தவர்க்கு -என்னும்படியே
நித்ய ஸூரிகளுக்கு நித்ய சம்பத் ஆவார்கள்-

——————————————-

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலும்
வாழி -என்றும்
நம -என்றும்
அத்தலையில் அதிசயங்களை உப பாதித்துக் கொண்டு

இனி
இப்பாட்டு தொடங்கி –
மேல் எல்லாம் ஸ்வ அபேஷிதங்களை விண்ணப்பம் செய்கிறார் –

இதில்
அடியேனுக்கு சர்வவித பந்துவும்–தேவரீராய் இருக்க
ஏதன் நிஷ்டைக்கு விரோதியான இத் தேஹத்தை சேதித்து அருளாததற்கு ஹேது ஏது-என்கிறார்-

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம்
என் தனக்கு நீயே எதிராசா -இந்த நிலைக்கு
ஏராத இவ் வுடலை இன்றே அறுத்தருள
பாராதது என்னோ பகர்—-3-

எதிகளுக்கு நாதரானவரே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே -என்றும்
த்வமேவ மாதாச -இத்யாதி யாலும் -சொல்லுகிறபடியே
ஹித பரனான பிதாவும்
பிரிய பரையான மாதாவும்
போக்யையான ஸ்திரீயும்
நிரய நிஸ்தாகரான புத்ரரும்
மற்றும் சகலவித புருஷார்த்த சாதனமான மஹத் ஐஸ்வர்யமும்
எல்லாம்
தேவர்க்கு ஸ்ரீ யபதியான பெரிய பெருமாளே ஆகிறாப் போலே –
மாதா பிதா யுவதயா -இத்யாதிப் படியே அடியேனுக்கு இவை எல்லாம் தேவரீரே –

வஸ்து ஸ்திதி இதுவாய் இருக்க
இந் நிஷ்டைக்கு அனுரூபம் இன்றியே விரோதியாய் இருக்கிற இந்த தேஹத்தை
காலாந்தரே கழிக்கிறோம் என்னாமல்
விபரீத அஞ்ஞான ஜனகம் ஆகையாலே இத்தைக் கழிக்க வேணும் என்று அபேஷிக்கிற
இந்த திவசத்திலே தானே சேதித்து அருள திரு உள்ளத்தாலே போக்கடி காணாது
இருக்கிறதுக்கு ஹேது ஏது
அத்தை சர்வஞ்ஞரான தேவரே அருளிச் செய்ய வேணும்
அது வருத்தமாய் இருந்ததோ அதுக்கும் ஒருகால் சிந்தனை செய்யும் அத்தனை அன்றோ உள்ளது –

நல் -என்கிற இத்தை எல்லாத்திலும் கூட்டிக் கொள்ளவுமாம்

—————————————-

அவதாரிகை –

கீழே விரோதியாக அருளிச் செய்த தேஹம் தன்னையே
ஆத்மாவுக்கு சிறைக் கூடமாக அனுசந்தித்து –
தத் விமோசகரும் அவரே என்று அவர் பக்கலிலே அத்தை பிராரத்து அருளுகிறார் –

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யான் ஏகி
அந்தமில் பேரின்பத்துக்கு ஆளாகுவேன்-அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரம் காண் உனக்கு உணர்ந்து பார் –4

இதம் சரீரம் என்னும்படி பராகர்த்தமாய்
இந்த உடல் சிறை -என்று ஆத்மாவுக்கு காரா க்ருஹம் போலே
பந்தகமாய் இருக்கிற தேக பந்தம் முக்தமாய்
எப்போது தான் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு ஒரு கோவையாய்
நிரதிசய ஆனந்த ஜனகமானவர்கள் பரிஷத் அந்தர் பாவத்தை யுடையனாய்
சம்சார வெக்காயம் தட்டாதபடியாகக் கடவேன் –

ஐயோ –
எதிகளுக்கு நாதரான நீர்
அகதிகளுக்கும் இரங்கி அருள வேண்டாவோ

ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -ஷிபாமி -என்று கை விட்டவரை
சிறையான அடியேனை
இனி உஜ்ஜீவிப்பித்து ரஷிக்கை
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் அவதரித்த தேவர்க்கே பரம் காணும்
இவ்வர்த்தத்தை திரு உள்ளம் பற்றிப் பார்த்து அருளீர் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: